யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிதிநிறுவனம் ஒன்று மக்களின் பணத்துடன் தலைமறைவு!

யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிதி நிறுவனம் ஒன்று பொது மக்களிடமும் அதன் பணியாளர்களிடமும் சுமார் 75 இலட்சம் ரூபா வரை மோசடி செய்துள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது அதன் உரிமையாளர் தலைமறைவாகி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். கஸ்தூரியார் வீதியில் மாடிக்கட்டடம் ஒன்றில் இவ்வருட ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட  இந்நிதி நிறுவனம் கடந்த 25 நாட்களுக்கு முன்னர் மூடப்பட்டுள்ளதோடு அதன் உரிமையாளரும் தலைமறைவாகியுள்ளார்.

இந்த நிறுவனத்தில் பணியாற்ற தெரிவு செய்யப்பட்டவர்களிடம் ஒரு லட்சம், ஐம்பதினாயிரம் என பணம் பெறப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் வாடிக்கையாளர்களாக இணைகின்றவர்களுக்கு பல கவர்ச்சிகரமான  சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதன் காரணமாக குறுகிய காலத்தில் 3500 வரையிலான வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்டனர். தற்போது  இதன் வாடிக்கையாளர்கள் தாங்கள் எமாற்றப்பட்டமை குறித்து பொலஸில் முறையிட்டு வருகின்றனர்.

யாழ் மாவட்டத்தில் நிதி நிறுவனங்களின் நிதி மோசடி இது முதற் தடவையல்ல. யாழ் உதயன் பத்திரிகையின் நிறுவனர் சரவணபவனின் நிதி நிறுவனமான சப்ரா பினான்ஸ் லிமிடடில் வைப்பிட்ட பலரும் தங்கள் சேமிப்பை இழந்தனர். சிலர் தற்கொலைக்கும் முயற்சித்து இருந்தனர். இன்று சரவணபவன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply to Vishva Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • BC
    BC

    யாழ்ப்பாணத்தில் நிதி நிறுவன மோசடி செய்தியில் முன்பு நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரவணபவனின் மோசடியை குறிப்பிடுவது மிக அவசியமானது. எங்கள் பலருக்கு ஞாபக மறதி நோய். சிலருக்கு புலி இல்லாத படியால் இப்போ கூட்டமைப்பு சுத்தமாகிவிட்டது என்ற நினைப்பு. விஸ்வா, தேசம்நெற்றின் பொறுப்புணர்வை பாராட்டுகிறேன்.

    Reply
  • கந்தையா
    கந்தையா

    யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட……
    இந்த வருட ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட……..
    கவர்ச்சிகரமான சலுகைகள்……. எனறதை வாசித்ததும் வெளிநாடுகளில் வாழ்ந்துவிட்டு இப்போது படைஎடுத்து ஊர் போன நம்மவர்கள்தான் ஞாபகத்திற்கு வருகின்றது. ஒரு சந்தேகம்தான்..

    Reply
  • Vishva
    Vishva

    நிதிநிறுவனம் தொடர்பான குறிப்பு.

    குறிப்பிட்ட நிதி நிறுவனம் கடந்த ஏபரல் மாதம் 2ம் திகதி யாழப்பாணத்தில் கஸ்தூரியார் வீதி கட்டடத்தின் மேல்மாடி ஒன்றில் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 25 நாட்களுக்கு முன்னர் அதன் செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டதாக அந்நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களால் தினக்குரல் பத்திரிகைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் பெயரை தினக்குரல் பத்திரிகையிலிருந்து பெறமுடியாமலுள்ளது. இச்செய்தி குடாநாட்டிலிருந்து வெளியாகும் வேறு பத்திரிகைகளில் வெளியாகியிருக்கவில்லை. 30-06-2010 தினக்குரல் பத்திரிகையில் முன்பக்கத்தில் இச்செய்தி பிரதான செய்தியாக பிரசுரமாகியிருந்தது. இந்நிறுவனத்தில் பணியாற்றிய ஒருவரே இத்தகவலை தினக்குரல் பத்திரிகைக்கு மிக விரிவாக வெளிப்படுத்தியிருந்தார். இந்நிறுவனத்திற்கு கொழும்பில் தலைமைக் காரியாலயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் ஏன் முறைப்பாடு கொடுக்க வில்லை என கேட்டபோதுஇ அதன் பணிப்பாளர்இ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்தால் தான் சிறைலிருந்து விட்டு சில நாட்களில் திரும்பிவந்து விடுவேன். ஆனால் உங்களது பணம் கிடைக்காது என பணியாளரிடம் தெரிவித்ததாகவும் தினக்குரல் செய்தியில் தெரிவிக்கபட்டுள்ளது.

    நான் இது தொடர்பாக தகவல்களை அறியச் சென்றேன். யாழ். கஸ்தூரியார் வீதியில் ராஜா தியேட்டருக்கு அருகிலுள்ள நான்கு மாடிக் கட்டடத்திலேயே அந்நிறுவனம் இருந்துள்ளது. அதன் பெயர்ப்ப லகைகள் அகற்றப்பட்டுள்ளன.

    அக்கடத்திலுள்ளவர்களிடம் விசாரித்தபோது அந்நிறுவனத்தின் பெயர் ‘மார்க்கற்றிங் பிறைவேற் லிமிட்டட்’ எனத் தெரிய வருகின்றது.

    Reply