உண்ணாவிரதப் போராட்டத்தை விமல் வீரவன்ஸ முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதியிடம் 4 கோரிக்கைகள்.

ww-pr.jpgதேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸவின் நான்கு கோரிக்கைகள் நிறைவேற்றுவார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உறுதிமொழி வழங்கியதையடுத்தே சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை விமல் வீரவன்ஸ முடிவுக்கு கொண்டு வந்திருக்கின்றார். இத்தகவலை தேசிய சுதந்திர முன்னணி உறுதிப்படுத்தி உள்ளது.

அந்த நிபந்தனைகள் வருமாறு:-

1. ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவை எக்காரணத்தை கொண்டும் இலங்கைக்குள் அனுமதிக்கக் கூடாது.

2. ஐ.நா நிபுணர் குழு சம்பந்தமாக விசாரணை நடத்த உள்நாட்டு நிபுணர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும்.

3. ஐ.நாவின் எந்த நிபந்தனைகளுக்கும் உடன்பட்டு ஐ.நா நிபுணர் குழுவை விசாரணை மேற்கொள்ள அனுமதிக்க கூடாது.

4. ஐக்கிய நாடுகள் சபையுடன் பேசி, நிபுணர்கள் குழுவை நீக்க வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

2 Comments

 • Anonymous
  Anonymous

  OH DEAR WHY NOT CHECK BEFORE START THIS BIG STATE DRAMA BY GOSL, EVEN ORDINARY SRI LANKAN KNEW THIS WILL HAPPEN

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //..1. ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவை எக்காரணத்தை கொண்டும் இலங்கைக்குள் அனுமதிக்கக் கூடாது…//
  அதுதான் விசா கொடுக்கமுடியாது எனச் சொல்லியாச்சே, பின்னர் ஏன் இந்தக் கோரிக்கை?

  //….2. ஐ.நா நிபுணர் குழு சம்பந்தமாக விசாரணை நடத்த உள்நாட்டு நிபுணர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும்….//
  நியமிதால் போச்சு, அவர்களின் பின்னணியை விசாரிக்கப்போகிறீர்களா? அதற்குப்பின் என்ன செய்ய?

  //…3. ஐ.நாவின் எந்த நிபந்தனைகளுக்கும் உடன்பட்டு ஐ.நா நிபுணர் குழுவை விசாரணை மேற்கொள்ள அனுமதிக்க கூடாது…//
  முதலாவது கேள்வியை திரும்பவும் படிக்கவும்!

  //..4. ஐக்கிய நாடுகள் சபையுடன் பேசி, நிபுணர்கள் குழுவை நீக்க வேண்டும்…//
  எக்காரணம், எந்த நிபந்தனை, விசாரணை என கொண்டிசன் போட்டுவிட்டு பேச்சுவார்த்தை என கோரிக்கை வேறா? சும்மா சொல்லக்கூடாது துணிச்சல்தான்!

  Reply