டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெறும் முரளி 800 விக்கெட் வீழ்த்தி சாதனை – புன்னியாமீன்

murali-800-w.jpgஇலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி பெரும் சாதனை படைத்துள்ளார். இந்தச் சாதனையை இந்திய வீரர் பி.பி.ஓஜாவின் விக்கெட்டை வீழ்த்தி இவர் படைத்துள்ளார். இது அவரது 133 ஆவது டெஸ்ட் போட்டியாகும். இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தம் எட்டு விக்கெட்டுக்களை இவர் கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் ரெஸ்ட் போட்டிகளில் உலகிலேயே 800 விக்கெட்டுக்களை பெற்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்

முரளிதரன் நிகழ்த்திய உலக சாதனையை அவரது மனைவி மதிமலர், அவரது குடும்பத்தினர், மகன் உள்ளிட்டோர் நேரில் கண்டு குதூகளித்தனர். 800வது விக்கெட்டை முரளிதரன் வீழ்த்தியதும், ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் குதித்தனர். மைதானத்தில் விழாக்கோலம் காணப்பட்டது.

முரளியின் இச்சாதனை இலங்கைக்கு மட்டுமல்ல, டெஸ்ட் உலகிலே மகத்தானது. 800 டெஸ்ட் விக்கட்டுக்கள் என்பது இலகுவான இலக்கல்ல. இச்சாதனை முறியடிக்கப்பட இன்னும் பல வருடங்கள் காத்திருக்க வேண்டும். தற்போது டெஸ்ட் அரங்கை எடுத்துநோக்குமிடத்து முரளியின் சாதனையை ஹர்பஜங்சிங் எட்டுவார் என முரளியே குறிப்பிட்டிருந்தாலும்கூட, முரளியின் சாதனையில் அனைத்தையும் எட்டுவதென்பது மிகக் கடினமான விடயமே.

இலங்கை அணிக்காக 1992 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொழும்பு பிரேமதாச விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 28ம் திகதி தனது முதலாவது ரெஸ்ட் போட்டியில் முத்தையா முரளீதரன் விளையாடினார். தனது முதல் ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட போட்டியை ஆகஸ்டு 12, 1993 இல் இந்திய அணிக்கு எதிராக கொழும்பு பிரேமதாச அரங்கில் விளையாடியமையும் குறிப்பிடத்தக்கது.

இன்று டெஸ்ட் உலகிலிருந்து ஓய்வுபெறும் முரளி தனது இறுதி நேரத்தில் 800 விக்கட் என்ற இலக்கை எட்டி டெஸ்ட் வரலாற்றில் இலகுவாக மாற்றியமைக்க முடியாத இலக்கை அடைந்தமைக்கு தேசம்நெற் இன் வாழ்த்துக்கள்.

murali.jpgமுத்தையா முரளீதரன் இதுவரை 133 டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் விளையாடி 800 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன், 337 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 515 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார். கண்டி புனித அந்தோனியார் கல்லூரி அணி மற்றும் தமிழ் யூனியன் கழகம் ஆகியவற்றின் ஊடாக முரளீதரன் முதல் முதலில் கிரிக்கட் உலகிற்கு அறிமுகமானார்.

1972ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் திகதி கண்டியில் பிறந்த முத்தையா முரளீதரன், இலங்கை தேசிய அணி, ஆசிய அணி, சென்னை சுப்பர் கிங்ஸ், மத்திய மாகாண அணி, கென்ட், லாங்ஷெயர், ஐ.சீ.சீ. பதினொருவர் அணி, தமி;ழ் யூனியன் ஆகிய அணிகளின் சார்பில் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

1992 ஆகஸ்ட் 28 ஆம் திகதி தனது 20 ஆவது வயதில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் நடைபெற்றது. முதரளிதரனின் அறிமுக டெஸ்ட் போட்டி இதுவாகும். அப்போட்டியில் “கிரெய்க் மெக்டர்மட்” இன் விக்கட்டே முரளிதரன் கைப்பற்றிய முதலாவது டெஸ்ட் விக்கெட் ஆகும். அப் போட்டியில் முரளி 141 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

அப்போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் டொம் மூடியின் விக்கெட்டை முரளிதரன் கைப்பற்றினார். மூடியை ஆட்டமிழக்கச் செய்ய முரளி வீசிய பந்து ஓப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்து சுமார் 2 அடி தூரம் சுழன்று லெக் ஸ்டம்பை வீழ்த்தியது. அந்த பந்தின் மூலம் கிரிக்கெட் உலகுக்கு திறமையான ஒப் ஸ்பின் பந்து வீச்சாளரின் வருகையை முரளி உணர்த்தினார். பின்னாளில் டொம் மூடி இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. அன்று முதல் முரளிதரன் பந்து வீச்சு திறமை ஒவ்வொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் பரிணமித்தது.

1993 ஆகஸ்ட்டில் மொரட்டுவையில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முரளிதரன் 104 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்களை முரளி கைப்பற்றியமை அது முதலாவது தடவையாகும். அந்த டெஸ்ட் போட்டியில் முரளி கைப்பற்றிய 5 விக்கெட்டுக்கள் கெப்லர் வெஸல்ஸ், ஹன்ஸி குரோஞ்ஞே, ஜொன்டிரோட்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளும் உள்ளடங்கியிருந்தது.

முரளிதரன் அவுஸ்திரேலிய அணியின் கிரேக் மெக்மெட்டை எல்பி. டபிள்யூ. முறையில் ஆட்டமிழக்கச் செய்ததால் தனது கன்னி விக் கெட்டைக் கைப்பற்றினார்.  50 வது விக்கெட்டுக்காக சித்து வையும், 100 வது விக்கெட்டுக்காக ஸ்டீபன் பிளமிங்கையும், 150 வது விக்கெட்டுக்காக கை விட்டலையும் 200 வது விக்கெட்டாக பென் ஹொலி ஹொக்கையும், 250 விக்கெட்டுக்காக நவிட் அஷ்ரப்பையும் 300 வது விக்கெட்டுக்காக ஷோன் பொலக்கையும் 350 விக்கெட்டாக முகம்மட் சரீப்பையும், 400 வது விக் கெட்டாக ஹென்ரி ஒலங்காவையும் 450 விக்கெட்டாக டரல் டபியையும் 500 வது விக்கெட்டாக மிச்சல் கஷ்பரொவிச்சையும் 550 விக்கெட் டாக காலிட் மசுட்டையும் 600 வது விக்கெட்டாக காலிட் மசுட்டையும் 650 விக்கெட்டாக மக்காயா நிட்டி னியையும் 700 வது விக்கெட்டாக செய்யட் ரஷலையும், முரளிதரனின் 709 வது விக்கெட்டாக போல் கொலிங்வூட்டை வீழ்த்தியதன் மூலம் ஷேன் வோனின் 708 விக்கெட் சாதனையை முறியடித்தார். 750 விக்கெட்டாக கங்குலியையும் 800 விக்கெட்டாக பிராக் கன் ஒஜா வையும் வீழ்த்தியே இச் சாதனைக்கு சொந்தக்காரராக மாறினார்.

டெஸ்ட் போட்டியொன்றின் இன்னிங்ஸில் அதிக தடவைகள் ஐந்து விக்கட்டுகளை வீழ்த்தியமை (67 தடவைகள்) டெஸ்ட் போட்டியொன்றில் அதிக தடவைகள் பத்து விக்கட்டுகளை வீழ்த்தியமை (22 தடவைகள்) உள்ளிட்ட பல்வேறு உலக சாதனைகளை முரளீதரன் படைத்துள்ளார். முரளிதரனுக்கு அடுத்தபடியாக வோர்ன் (அவுஸ்திரேலியா), 145 டெஸ்டில் 708 விக்கெட்களை கைப்பற்றி 2 வது இடத்தில் உள்ளார். கும்ளே (இந்தியா) 619 விக்கட்களும், மெக்ராத் (அவுஸ்திரேலியா) 563 விக்கெட்களும், வோல்ஸ் (மே. தீவு) 434 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.

முத்தையா முரளீதரனின் சாதனைகளைப் போலவே 1995ம் ஆண்டு முதல் பந்து வீச்சு பாணி தொடர்பிலான சர்ச்சைகளும் பிரல்யமானவை. அவுஸ்திரேலியர்கள் குறிப்பாக நடுவர் டெரல் ஹெயார், ரொஸ் எமர்சன் மற்றும் அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஜோன் ஹோவார்ட் போன்றவர்கள் முரளீதரன் பந்தை வீசி எறிவதாக விமர்சித்திருந்தனர். இறுதியின் இந்த சர்ச்சைக்கு சர்வதேச கிரிக்கட் பேரவை தீர்வினை முன்வைக்கும் முகமாக சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்தது.

விஸ்டன் கிரிக்கட் வீரர் உள்ளிட்ட உலக அளவிலான மிக முக்கியமான கிரிக்கட் விருதுகளை முரளீதரன் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் டுவன்ரி 20 போட்டிகளில் பங்கேற்பது தெடார்பில் ஆராய்ந்து வருவதாக முரளீதரன் தெரிவித்துள்ளார். உலக நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முரளீதரன் ஓய்வு இலங்கை அணிக்கு மட்டுமன்றி உலக சுழற் பந்து ரசிகர்களுக்கும் பெரும் இழப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

முத்தையா முரளீதரன் டி-20 அறிமுகம் 22 டிச. 2006
முத்தையா முரளீதரன் ஐ.பி.எல் அறிமுகம் 19 ஏப். 2008

முரளீதரனின் சாதனையை முறியடிப்பதென்பது ஹிமாலய சவாலாக அமையும் – மற்றமொரு உலக நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன்

முரளீதரன் பந்தை வீசி எறிவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித நியாயமும் கிடையாதென அவர் குறிப்பிட்டுள்ளார். முரளீதரனின் பந்து வீச்சுப் பாணி தொடர்பில் விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், முரளீதரனை பின்பற்றி பந்து வீசும் இளம் தலைமுறையினர் சில வேலைகளில் பந்தை வீசி எறியக் கூடிய அபாயம் காணப்படுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிறவியிலேயே முரளீதரனின் கைகளில் காணப்படும் வளைவு காரணமாக பந்தை வீசி எறிவது போன்று தோற்றமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முரளீதரன் சவால்களை அதிகம் விரும்புவதாகவும், அவரது அபார திறமை பாரட்டுக்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார். முரளீதரனின் சாதனையை முறியடிப்பதென்பது ஹிமாலய சவாலாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முத்தையா முரளீதரனின் டெஸ்ட் பந்து வீச்சு சாதனையை எவரும் முறியடிப்பார்கள் என தாம் கருதவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

murali-800-w2.jpg 

முரளிக்கு விசேட விருது

இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் ரெஸ்ட் போட்டிகளில் உலகிலேயே 800 விக்கெட்டுக்களை பெற்றவுள்ள நிலையில் பகல் போசன இடைவேளையின் போது காலி விளையாட்டரங்கிற்கு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் முத்தையா முரளிதரனுக்கு விசேட விருது ஒன்றை வழங்கி கௌரவித்தார்.

மண்ணின் மைந்தனால் இலங்கைக்கு பெருமை – ஜனாதிபதி

உலகளாவிய கிரிக்கெட் வீரர்களிடையே மிகுந்த கெளரவத்தை பெறும் வகையில் ஒரு சாதனை மிகு பந்து வீச்சாளராக உயர்ந்த ஸ்தானத்தை எட்டியுள்ள எமது மண்ணின் மைந்தனான முத்தையா முரளிதரனால் இலங்கை பெருமை கொள்கிறது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முரளிதரனுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

133 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 800 விக்கெட்டுக்களை கைப்பற்றி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ள முரளிதரன் 18 வருட காலம் கிரிக்கெட் விளையாடிய பின் இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். அத்துடன் இதுவரை 337 ஒரு நாள் போட்டிகளில் 515 விக்கெட்டுக் களையும் கைப்பற்றியுள்ளார். முரளி என்று நாம் அனைவரும் அழைக்கும் முத்தையா முரளிதரன் கிரிக்கெட் உலகில் ஒரு அலங்கார ஆபரணத்தைப் போல் இருந்து வந்துள்ளார்.

மிகவும் சிரமமான பல சவால்களுக்கு முகம் கொடுத்து ஒரு சுழல் பந்து வீச்சாளராக சாதனை படைத்துள்ள அவர் தனக்கும் தனது அணிக்கும் தனது நாட்டுக்கும் வெற்றியை தேடித்தந்திருக்கிறார். இந்த மண்ணின் மைந்தனால் இலங்கை பெருமை கொள்கிறது என்று ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறப் பட்டுள்ளது.

சாதிக்க முடியாத சாதனை: முரளிக்கு அரசு பாராட்டு

கிரிக்கெட் வரலாற்றில் எவராலும் சாதிக்க முடியாத சாதனையை நிலைநாட்டிவிட்டு ஓய்வு பெற்றுள்ள சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு அரசாங்கம் சார்பாக வாழ்த்துத் தெரிவிப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, முத்தையா முரளிதரன் குறித்து பெருமை அடைவதாகவும் உரிய காலத்தில் ஓய்வுபெற்றுள்ள அவர் அனைவருக்கும் முன்மாதிரியாக செயற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்

Show More
Leave a Reply to பல்லி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

25 Comments

  • hyuu
    hyuu

    வாழ்த்துகள் முரளி

    Reply
  • THAMILMARAN
    THAMILMARAN

    HISTORY OF SRILANKAN CRICKET WILL REMEMEMBER MURALITHARAN NAME.

    Reply
  • thurai
    thurai

    முரளிக்குப் பெருமை, அவரின் குடும்பத்திற்குப் பெருமை, அவர் சார்ந்த இனத்திற்குப் பெருமை, இலங்கைக்குப் பெருமை.

    ஒரு தனிமனிதனின் ஆற்றலே ஓர் இனத்திற்கும், அவன் பிறந்தநாட்டிற்கும் பெருமை தேடிக்கொடுக்கின்றது.

    எனது வாழ்த்துக்கள்.

    துரை

    Reply
  • accu
    accu

    ஒரு இலங்கை வீரனின் உலகசாதனை அனைத்து இலங்கை மக்களுக்கும் பெருமை சேர்க்கிறது. வாழ்த்துக்கள் முரளி!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அடுத்தடுத்து பல சாதனைகளைப் படைத்த முரளிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். துடுப்பாட்ட வரலாற்றில் பொன் எழுத்துகளால் தன்னைப் பதித்து விட்ட நாயகன் முரளி.

    Reply
  • shan
    shan

    முரளி உங்கள் திறமையின்மூலம் நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் பெருமையைத் தேடித்தந்துள்ளீர்கள். வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகுக.

    Reply
  • maran
    maran

    ஹர்பஜங்சிங் தற்சமயம் 355 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். சராசரி ஒரு டெஸ்ட்டுக்கு 4.22 விக்கெட்டுக்கள் (84 ஆட்டங்கள்)இன்னமும் 50 ஆட்ட்ங்கள் ஹர்பஜங்சிங் ஆடினால் ஒரு ஆட்டத்தில் 8.9 விக்கெட்டுக்கள் வீழ்த்தினாலே இது சாத்தியம். ஒரு நாள் ஆட்டத்தில் இன்னமும் 272 விக்கெட்டுக்களை வீழ்த்தினாலே 515 அடையமுடியும்.
    World records and achievements

    Muttiah Muralitharan holds a number of world records, and several firsts:

    * The most Test wickets (800 wickets as of 22 July 2010).[92]
    * The most One-Day International wickets (515 wickets as of 22 July 2010).[93]
    * The highest number of international wickets in Tests, ODIs and T20s combined (1320 wickets as of 22 July 2010).[93]
    * The most 5-wicket hauls in an innings at Test level (67).[62]
    * The most 10-wicket hauls in a match at Test level (22). He is the only player to take 10 wickets/match against every Test playing nation.[94]
    * Fastest to 350,[95] 400,[96] 450,[97] 500,[98] 550,[99] 600,[100] 650,[101] 700,[102] 750[103] and 800 Test wickets, in terms of matches played (indeed the only bowler to exceed 708 wickets).
    * Only player to take 10 wickets in a Test in four consecutive matches. He has achieved this feat twice.[104]
    * Only player to take 50 or more wickets against every Test playing nation.[105]
    * Muralitharan and Jim Laker (England), are the only bowlers to have taken 9 wickets in a Test innings twice.
    * 7 wickets in an innings against the most countries (5).[106]
    * Most Test wickets taken bowled (157),[107] stumped (41)[108] and caught & bowled (31).[109] Bowled by Muralitharan (b Muralitharan) is the most common dismissal in Test cricket (excluding run out).[110]
    * Most successful bowler/fielder (non-wicket keeper) combination – c. Mahela Jayawardene b. Muttiah Muralitharan (67).[111]
    * Most Man of the Series awards in Test cricket (11).[112]
    * One of only six bowlers who have dismissed all the eleven batsmen in a Test match. Jim Laker, Srinivasaraghavan Venkataraghavan, Geoff Dymock, Abdul Qadir and Waqar Younis are the others.[113]
    * Most Test wickets in a single ground. Muralitharan is the only bowler to capture 100-plus Test wickets at three venues, the Sinhalese Sports Club Ground in Colombo, the Asgiriya Stadium in Kandy and the Galle International Stadium in Galle.[114]
    * The only bowler to take 75 or more wickets in a calendar year on three occasions, achieving it in 2000, 2001 and 2006.
    * Most ducks (dismissals for zero) ever in international cricket (Tests+ODI’s+Twenty20): 59 ducks total.[115]

    Reply
  • thiruparan
    thiruparan

    முரளி சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளார். அதற்காக எனது வாழ்த்துக்கள். கடைசிப் போட்டியைத்தவிர அண்மைய ஆட்டங்களில் முரளியால் சரியாக சோபிக்க முடிந்திருக்கவில்லை.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    முத்தையா முரளீரனுக்கு அனைத்து புலம்பெயர்ந்த தமிழர்சார்பில் வாழ்த்துகிறேன். இவனும் ஒரு தமிழ்மகன் திறமையானவன் உலகம் சாதனை வென்றவன் என்று நாம் பெருமை கொள்கிறோம். அதேபோன்று இவன் ஒரு இலங்கையன் என்று மகிந்தா பெருமை கொள்ளும் வேளை இதயத்தின் மறுபக்கத்தில் ஒரு ஈட்டி ஒன்றல்லவா இடித்துக் கொண்டிருக்கிறது. முத்தையா முரளீரன் போன்ற அவரை விடச் திறமையாக வரக்கூடிய எத்தனை தமிழ் உறவுகள் இருந்த இடம் தெரியாது அழிக்கப்பட்டார்கள். இதையிட்டு வன்னியை வென்றேன் என்று மகிந்த பெருமை கொண்டார்தானே. புலிகளால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் மட்டுமல்ல ஏதுமறியாமல் அப்பாவிகளாய் எத்தனை முத்தையா முரளீரன்களை இந்த மகிந்தவின் இராணுவம் கொன்று தள்ளியிருக்கும். முத்தையா முரளீதரனுக்கு வாழ்த்துக் கூறி மகிழும் வேளை என்னடிமனம் மரணித்துப்போன முத்தையா முரளீதன்களின் ஆத்மாக்களுக்கு சாந்தி வேண்டி இரங்குகிறது

    Reply
  • nantha
    nantha

    முரளிதரனின் உலக சாதனை இலங்கை மண்ணை நேசிக்கும் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் சாதனையாகும்.

    Reply
  • itam
    itam

    கடைசி ஆட்டத்தில் வெற்றியோடு ஓய்வுபெறும் வாய்ப்பு கிரிக்கெட்டில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த எல்லோருக்கும் கிடைத்ததில்லை. ஆனால் அந்தப் பெருமை சுழற்பந்து ஜாம்பவான் முரளீதரனுக்கு கிடைத்தது பெருமைக்குரியது

    Reply
  • BC
    BC

    இலங்கையர்களை பெருமைபட வைத்த முரளிக்கு வாழ்த்துக்கள்.

    Reply
  • கந்தையா
    கந்தையா

    குசும்பு /முத்தையா முரளீரன் போன்ற அவரை விடச் திறமையாக வரக்கூடிய எத்தனை தமிழ் உறவுகள் இருந்த இடம் தெரியாது அழிக்கப்பட்டார்கள். இதையிட்டு வன்னியை வென்றேன் என்று மகிந்த பெருமை கொண்டார்தானே./

    மகிந்த மட்டுமா அழித்தார் சகோதரப் படுகொலையில் இருந்து அரசியல் படுகொலைகள் ஈறாக பிணங்கள் தொகையாக காட்டினால் சர்வதேசம் எங்கட சொல்லுக் கேட்கும் என்று புலி கொன்று குவித்த சனங்களுள் எத்தனை முரளிதரன்கள் இருப்பார்கள். அவர்களின் ஆத்மசாந்திக்காகவும் இரங்குங்கோ குசும்பு.

    /புலிகளால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் மட்டுமல்ல/
    ஒரு திருத்தம்; புலிகளால் வேள்விக்கு வளர்க்கப்பட்ட பிள்ளைகள்.

    Reply
  • Arun
    Arun

    he big name for srilanka and Tamil I hope no one will beat him,,,,I would like thanks to muralitharan

    may god bless you

    Reply
  • chandran.raja
    chandran.raja

    தமிழனின் சாதனை என்று பார்த்தால் இரண்டு சகாப்தகாலத்திற்கு மேலாக பங்கருக்குள் உயிர்வாழ்ந்த பெருசாளிக்குத்தான் “மனிதப்பெருச்சாளி” என்ற விருது கொடுப்பேன்.
    விருது கொடுக்காமல் எத்தனையோ தமிழர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை உரியவர்கள் கவனத்தில் எடுக்கவேண்டும். இது முரளீதரன் சாதனையை விட……!!!.

    Reply
  • Kumar
    Kumar

    இவ்வளவு சாதனை படைத்தும் அவருக்கு இலங்கை அணிக்கு தலைமை தாங்க முடியவிலை! அது ஏன் என்று நாம் சிந்தித்தோமா?

    Reply
  • Waakir Hussain
    Waakir Hussain

    Murali……all time champion… a legend from sri lanka…we are really proud of you.

    Reply
  • rohan
    rohan

    “இவ்வளவு சாதனை படைத்தும் அவருக்கு இலங்கை அணிக்கு தலைமை தாங்க முடியவிலை! அது ஏன் என்று நாம் சிந்தித்தோமா?” என்று கேட்கும் குமாரின் கேள்வியின் தாத்பரியம் எனக்குத் தெரியவில்லை.

    தலைமை தாங்குவது என்பது ஒரு தனி வல்லமை. சச்சின் தென்டுல்கார் கூட முயற்சித்து விட்ட பொறுப்பு அது.

    பொதுவாகவே பந்து வீச்சாளர்கள் அணித் தலைமையை எடுக்கக் கூடாது என்று நான் கருதுகிறேன். இம்ரான் கான் மட்டுமே என்னைப் பொறுத்தளவில் பந்து வீச்சாளர் அணித் தலைமையை எடுத்துச் சமாளித்த ஒரே சரித்திரம். அவுஸ்திரேலியாவின் றிச்சி பெனோட் துடுப்பு வீச்சு கொண்ட ஓல் றவுண்டர்.

    முத்தையரின் மகன் தான் விளையாடிய தமிழ் யூனியன் அணிக்குத் தலைமை தாங்கியதே அபூர்வம்.

    இலங்கை கிறிக்கெற் சபையின் கூத்துகள் அதிகம். ஒரு முறை இலங்கை அணி 8 – 9 கிறிஸ்தவ வீரர்களைக் கொண்டிருந்த போது சிலர் துடித்த துடிப்பு இருக்கிறதே! சமிந்த வாஸ் தலைமைப் பதவிக்கு வராதமைக்கும் சமயம் தான் காரணம். அவருக்கு அந்த வாய்ப்பு தரப்பட்டபோது அவர் திணறியதும் உண்மைதானே?

    முரளிக்குத் தலைமைப் பதவி தரப்படாமைக்கு இனவாதம் ஒரு முக்கிய காரணம் இல்லை என்று கொள்ளலாம்.

    Reply
  • Kamal
    Kamal

    இந்தத் தலைமை தாங்கவேணும் என்ற உந்துதல் இருக்கே… அதுதான் தமிழனுக்க ஒண்டுமில்லாத நிலையை உருவாக்கியது குமார்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //பல சாதனைகளைப் படைத்த முரளிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.//

    பல்லி குடும்பம்;

    Reply
  • kadavul
    kadavul

    சர்வதேச தரத்தில் துடுப்பெடுத்தாடிய தமிழர்கள் மிகக்குறைவே. ஆனலட் (இவர் சிறப்பாக விளையாடியிருப்பின் சங்கக்காராவின் இடத்தில் அணித் தலைவராக இருந்திருப்பார்) வினோதன் ஜோன் சிறிதரன் ஜெகனாதன் மற்றும் வில்லவராயன் (இவர் இங்கிலாந்து சென்ற அணியில் இடம் பெற்றிருந்தார். ஒரு சர்வதேச போட்டிகளிலும் விளையாடவில்லை) டில்சன் இவரது தாயார் தமிழர். இவரது தம்பி சமபத். இவரும் ஒரு கழக வீரர். ஜெயபிரகாஸ்சந்திரன் ஒரு சர்வதேச போட்டியில் விளையாடியுள்ளார்.தொடர்ந்து தமிழ் யூனியனுக்கு விளையாடுகின்றார். தமிழ் யூனியனில் விளையாடும் ஒரே தமிழர் இவர் தான். வாசின் பெற்றோர் (முன்னோர்) தூத்துக் குடியில் இருந்து புலம் பெயர்ந்தோர்.

    ஒரு கேள்விக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை. ஏன் முரளிக்கு அணித் தலைமை கொடுக்கப்படவில்லை என்பது? பல சந்தரப்பங்கள் கிடைத்தும் தவறவிடப்பட்டுள்ளது. அணிக்கும் வரும் புதிய வீரர்களை உற்சாகப்படுத்தி உணவகத்துக்கு அழைத்துச் செல்லும் முதல் வீரர் இவர் தான்

    Reply
  • kadavul
    kadavul

    Tamil Union Cricket and Athletic Club KD Gunawardene SI Fernando SMA Priyanjan U Peirisc SC Serasinghe BMAJ Mendis M Pushpakumara GT de Silva† NKM Perera SDC Malinga RAS Lakmal

    Full name Pradeep Sri Jeyaprakashdaran
    Born January 13, 1984, Colombo
    Current age 26 years 196 days
    Major teams Sri Lanka, Badureliya Sports Club, Sri Lanka A, Tamil Union Cricket and Athletic Club
    Height 6 ft 2 in
    Education Royal College, Colombo
    ______________

    Full name Mario Suresh Villavarayan
    Born August 22, 1973, Colombo
    Current age 36 years 340 days

    Major teams Bloomfield Cricket and Athletic Club, Colombo Cricket Club, Tamil Union Cricket and Athletic Club
    He was consistently picked to play for Sri Lanka A both home and away, and also toured England with the Sri Lanka team in 1998. In afirst-class career which spanned for 12 years, Villavarayan took 378 wickets with career best figures of 9 for 15 for Bloomfield against Police in 1996-97

    Reply
  • Loven
    Loven

    Do you think he would have got the same amount of wickets had his hand is straight?

    His degree is acceptable that is why he had those wickets and in condusive srilankan and sub continent area.

    Congratulations to him but he never wanted to be Tamil.

    Please visit howstat.com an Australian website to look at how these people are realy worth.
    Most of the sorry lankan players are flat pitch masters and they hate indian players but their away stats and against good team is complete rubbish. they are good in sub continent only.

    Please include his stats Murali gave the highest runs in oneday.

    Reply
  • maran
    maran

    இங்கு நாங்கள் தமிழர்கள் என்ற வரையறையை எப்படி தீர்மானிக்கின்றோம். முஸ்லீம்கள் இப்பட்டியலில் இல்லை. தற்சமயம் விளையாடிக் கொண்டிருக்கும் அணியில் உள்ள அஞ்சலோ மத்தியூஸ் ஒரு தமிழர்.

    Reply
  • rohan
    rohan

    கடவுள் இலங்கை அணியில் உள்ள தமிழ்ப் பின்னணி கொணட வீரர்களை அட்டவணைப் படுத்தியிருந்தார். அதில் அவர்ட் அஞ்சலோ மத்தியூஸ் பெயரைத் தவற விட்ட போதிலும் அதை மாறன் சுட்டிக் காட்டியிருந்தார். கடவுளின் பட்டியலில் டில்ஷான் குறித்த தகவல் தவறு என்று நினைக்கிறேன். இவர் முஸ்லிம் (மலே?) – சிங்கள குடும்பம் ஒன்றிலிருந்து வந்தவர் என்பது எனது நினைவு. Tuwan Mohammad Dilshan என்ற பெயரை Tillakaratne Mudiyanselage Dilshan என்று மாறிக் கொண்டார் – initials சரியாகவே வருமாறும் பார்த்துக் கொணடது சாதுரியம்! இவரது திருமணம் சைவ முறைப்படி இந்தியாவில் நடந்ததாகவும் எஙோ வாசித்த நினைவு!

    இந்தப் பட்டியல்களில் தவற விடப்பட்ட இன்னொரு பெயர் றசல் பிறேமகுமாரன் ஆணோல்ட். மேலும் ரவி ரத்னாயக்கவின் தாயார் தமிழர் என்று நினைக்கிறேன்.

    Reply