உண்ணாவிரதத்தில் மக்டோனால்ட் சாப்பிடவில்லை என்பதை பரமேஸ்வரன் நீதிமன்றத்தில் நிரூபித்தார்.

Parameswaran_Subramaniyam_judgementபிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பரமேஸ்வரன் சுப்பிரமணியம் மக்டோனால்ட் பேகர் சாப்பிட்டார் என்று செய்தி வெளியிட்ட டெய்லி மெயில் மற்றும் சண் பத்திரிகைகள் ஆதாரம் இன்றி செய்தி வெளியிட்டதை ஒப்புக் கொண்டுள்ளன. இப்பத்திரிகைகளுக்கு எதிராக பரமேஸ்வரன் சுப்பிரமணியம் தொடுத்த வழக்கின் தீர்ப்பு (July 29 2010) பரமேஸ்வரனுக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டதுடன் சம்பந்தப்பட்ட பத்திரிகைகள் 77500 பவுண்கள் நட்டஈடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

கடந்த எட்டு மாதங்களாக தான் மிகுந்த அவமானங்களை சந்தித்ததாகவும் இந்த நிலையில் இன்று வந்துள்ள தீர்ப்பு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் பரமேஸ்வரன் பிபிசி தமிழோசைக்கு இன்று தெரிவித்துள்ளார். தனது சட்ட நடவடிக்கைக்கு தமிழ் அமைப்புகள் ஆதரவுதர முன்வரவில்லையென்றும் No Win No Fee என்ற அடிப்படையிலேயே தான் வழக்கைத் தொடுத்ததாகவும் பரமேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

என்மேல் குற்றம் என்று நிரூபித்தால் தீக்குளிக்கவும் தயார்: பரமேஸ்வரன்

உண்ணாவிரதி பரமேஸ்வரனின் 7.1 மில்லியன் பவுண் மக்டோனால் பேகர் : த ஜெயபாலன்

75 நாட்கள் கவன ஈர்ப்புப் போராட்டம்!!! : த ஜெயபாலன்

Show More
Leave a Reply to BC Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

89 Comments

  • Jeyabalan T
    Jeyabalan T

    இப்பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில் பரமேஸ்வரன் உண்ணாவிரத நேரத்தில் உணவருந்தினார் என்பதை நானும் நம்பியிருந்தேன். அதற்காக எனது மனவருத்தத்தை பரமேஸ்வரனுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.

    த ஜெயபாலன்

    Reply
  • rohan
    rohan

    இந்தச் செய்தியை ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் பார்த்தவுடன் இந்தத் தேசம்நெற்றின் பின்னோட்டகாரர்கள் என்ன செய்வார்கள் என்று தான் உடனே யோசித்தேன். செய்தியுடன் சேர்த்துக் கருத்து எழுதி ஜெயபாலன் தனது மாண்பை வெளிப்படுத்தியுள்ளார்.

    புதிய தொழில்நுட்பம், சட்ட ஆலோசனை எல்லாம் இல்லாது இந்தப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கா என்றும் தைரியம் இருந்தால் பரமேஸ்வரன் வழக்குப் போட்டுப் பார்க்கட்டும் என்றும் பலர் சவால் விட்டிருந்தனர். Now that Parameswaran has put the money where his mouth was, வாய் விட்டவர்கள் எல்லாம் வந்து வருத்தம் தெரிவிக்க வேண்டும்!

    Reply
  • Kamal
    Kamal

    இவர் பேகர் சாப்பிட்டதற்கான ஆதாரங்கள் செய்தி வெளியிட்ட பத்திரிகைகளிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இவரின் வழக்கிற்கு தமிழ் ஆதரவு அமைப்புக்கள் ஆதரவு கொடுக்காதது கைவிட்டதில் இருந்து உறுதியாகிறது இவர் நிச்சயம் பேகர் சாப்பிட்டிருக்கறார் என்று.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ஜெயபாலன்,
    உங்கள் உடனடியான மனவருத்தமான கருத்துக்கு நன்றிகள்.

    நீங்கள் மன்னிப்புக்கேட்டிருப்பது பரமேஸ்வரனிடம் ஆனால் ஒரிஜினல் கட்டுரையில்/பின்னூட்டத்தில் தாக்கியது அன்றைய தமிழர்களின் போராட்டத்தை.
    அதன் நியாயத்தன்மையை கேள்வி எழுப்பி ஒட்டுமொத்த போராட்டத்தையும் மட்டுமல்லாது ஈழத்தில் நடந்த போராட்டங்களைக்கூட கொச்சைப்படுத்தி இருந்தீர்கள். அத்துடன் நிற்காது பின்னூட்டங்களுக்க்கான பதிலில் கூட அதையே செய்தீர்கள். சொல்லப்போனால் பிரிட்டிஷ் பொலிசார்/ஸ்ரீலங்கா அரசு என்ன விளைவுகளை எதிர்பார்த்தனரோ அதனைச் செய்ய நீங்களும் துணைபோனீர்கள்.

    மேலும் வீடியோ ஒளிப்பதிவு எங்கே என ஒருவர்கேட்ட கேள்விக்கு தமிழர்களின் வாக்குவங்கியில் ‘அடைவு’ வைக்கப்பட்டிருக்கும் என்கின்ற பாணியில் பதில் வேறுத்துடன் நிற்காமல் ‘உள்வீட்டு’ லீக்குகள் என வேறு சொல்லாடல்கள்!

    உங்கள் செய்தி/பின்னூட்டங்களில்
    1) பரமேஸ்வரன்
    2) அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்
    3) உண்ணாவிரத ஆதரவாளர்கள்
    4) தமிழ் அமைப்புகள்
    5) முன்னைய உண்ணாவிரதிகள் (தயா இடைக்காடரில் இருந்து திலீபன் வரை)
    6) பிரித்தானியத் தமிழர்களின் போராட்ட அணுகுமுறை
    7) புலம்பெயர்வாழ் தமிழ் மக்களின் போராட்ட ’அகிம்சைப்போராட்ட’ அணுகுமுறை (நானும் இவ்வகையான ‘அகிம்சை’ போராட்டத்தில் நாட்டமற்றவன் என்பதனையும் சொல்லி இருந்தேன்)
    8)ஈழப்போராளிகளின் போராட்ட அணுகுமுறை.
    போன்றவற்றை கொச்சைப்படுத்த வழி சமைத்தும் கொடுத்திருந்தீர்கள்.

    இவ்விடயத்தை நான் கேள்விப்பட்டபோது எனது நண்பர்கள் ஆணித்தரமாக மறுத்திருந்தனர். நான் அவர்களைக்கூட நம்பாமல் தேசத்தையும் , ஜெயபாலனையும் நம்பினேன்!

    Reply
  • proffessor
    proffessor

    7. பரமேஸ்வரன் இப்பொது அடித்த ஸ்ரண்டில் கருணாநிதியை மிஞ்சிவிட்டார்.

    8. உண்மையிலேயே பரமேஸ்வரனின் நிலையையிட்டு எனக்கு மனவருத்தமே. அவர் தமிழ் மக்கள் மீது பற்றுக்கொண்டே இப்போராட்டத்தை நடத்தினார். தனது சுயநலனுக்காக அவர் போராடவில்லை. ஆனால் அவருக்கு முரண்பட்ட விருப்பங்கள் இருந்தது. புலிகளா தமிழ் மக்களா என்று வரும்போது அவர் புலிகளை காப்பதையே முதல் விருப்பமாகக் கொண்டிருந்தார்.

    9. அதனால் அவர் போராட இறங்கினார் தப்பில்லை. ஆனால் தன்னால் இயலாது என்ற நிலை வரும்போது அவர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டிருக்க வேண்டும். சூழற்சி முறையில் உண்ணாவிரத்ததை தொடர்ந்திருக்கலாம். ஆனால் தன்னை நம்பிய மக்களுக்கு பொய் சொன்னதே அவருடைய குற்றம். அது இப்போது பாரதுரமான எதிர்விளைவை ஏற்படுத்தி உள்ளது.

    10. எப்போதும் எதனையும் உண்மைகளுடன் எதிர்கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். மிகைப்படுத்தல்களும் சிறுமைப்படுத்தல்களும் பிற்காலத்தில் எதிர்விளைவையே ஏற்படுத்தும்.

    Jஎயபலன் T
    பரமேஸ்வரனைப் பொறுத்தவரை மேற்குறிப்பிட்ட செய்தி தவறானது என்றால் அதற்கு சவால் விட்டு தனது நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்காக்ன வாய்ப்பு அவருக்கு உள்ளது. அவர் அச்செய்தி உண்மையிலேயே திட்டமிட்ட செய்தி எனக் கருதினால் அவரை சட்டரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தவும் அதற்கான பொருளாதாரச் செலவை ஏற்றுக்கொள்பவர்களையும் அவருக்கு என்னால் அறிமுகப்படுத்த முடியும். இச்செய்தியின் பின்னூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ள ஜிகே எனும் நண்பர் இது தொடர்பான உறுதிமொழியை தந்துள்ளார்.

    த ஜெயபாலன்.

    சென்ட்கில் ஒன் ஓச்டொபெர் 12, 2009 8:07 அம்

    இச்செய்தி முற்றிலும் தவறானதாக இருந்தால் பிரஸ் கொம்பிளெயின்ற் கொமிசனுக்கு அதனைத் தெரியப்படுத்தி சண் டெய்லிமெயில் பத்திரிகைகளுக்கு எதிராக வழக்குத் தொடரமுடியும். மேலும் இதனால் ஏற்பட்ட அவமானத்திற்காக நஸ்ட ஈடும் பெறமுடியும். இன்று லண்டனில் தமிழ் தேசியத்தை து}க்கிப் பிடிக்கின்ற 200 வரையான தமிழ் சட்டநிறுவனங்கள் இயங்குகின்றன. ஏன் அதற்கான சட்ட நடவடிக்கையை எடுக்க முடியாது. அவ்வாறு எடுத்து இச்செய்தி தவறானது என நிரூபிக்கப்படாதவரை அச்செய்தி உண்மையானது எனவே கொள்ளப்படும்.

    பரமேஸ்வரனைப் பொறுத்தவரை மேற்குறிப்பிட்ட செய்தி தவறானது என்றால் அதற்கு சவால் விட்டு தனது நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்காக்ன வாய்ப்பு அவருக்கு உள்ளது. அவர் அச்செய்தி உண்மையிலேயே திட்டமிட்ட செய்தி எனக் கருதினால் அவரை சட்டரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தவும் அதற்கான பொருளாதாரச் செலவை ஏற்றுக்கொள்பவர்களையும் அவருக்கு என்னால் அறிமுகப்படுத்த முடியும். இச்செய்தியின் பின்னூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ள ஜிகே எனும் நண்பர் இது தொடர்பான உறுதிமொழியை தந்துள்ளார்.

    த ஜெயபாலன்…….இந்த செய்தியை பிரசுரித்த எல்லா பத்திரிகைகளிடம்,நட்ட ஈடாக தலா(ஒவொரு பத்திரிகையிடமும்) 7.1 மில்லியன் பவுண்ஸ் கோரி அதனை வன்னியில் நிர்க்கதியாகவுள்ள மக்களுக்கு வழங்க பரமேஸ் தயாரா? முடிந்தால் பரமேஸ்வரனுக்கு இதனை தெரியப்படுத்தி தமிழரின் ஒட்டுமொத்த கெளரவத்தையும் காப்பாற்றிய பெருமையை இதன் மூலம் பரமேஸ் பெறலாம். என்ன முடியுமா?
    T ஸொட்கிலின்கம் ஒன் ஓச்டொபெர் 9, 2009 9:14 ப்ம்

    தமிழீழப் போராட்டம் புலிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டது இறுதியாக சத்தியாக்கிரகப் போராட்டத்தையும் காட்டிக்கொடுத்துள்ளனர்.அந்த காட்டிக் கொடுப்பை சர்வதேச அரங்கில் புலிகள் நடத்தியுள்ளனர்.தமிழ்மொழிபேசும் மக்களுக்கு ஒரு வெட்கம் கெட்ட செயலாகியுள்ளது இந்த வெட்கக் கேடான செயலுக்கு இந்த செயலை ஊக்குவித்த வானொலிகள் ரிவிக்கள் இதை கண்டிப்பார்களா?

    சர்வதேசத்தில் தமிழர்களை கேவலப்படுத்தியதையும் சர்வதேச சமூகம் மதித்த ஒரு அமைதி வழிப்போராட்ட்ததை கேவலப்படுத்தியது இனிமேல் பல்வேறு போராட்டங்களையும் இதே போன்ற சந்தேகக் கண்ணுடன் பார்க்கவே இந்த மக்டோனால் பேகர் போராட்டம் உதவி செய்துள்ளது.

    சர்வதேசரீயாக தமிழர் சம்பந்தப்பட்ட கருத்துக்களையும் கேவலப்படுத்தினர் இந்த விடயங்களை தனியாக ஒரு பரமேஸ்வரன் என்று பார்க்கத் தேவையில்லை இது ஒரு புலிகளினால் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டவடிவம் புலிகளின் கடந்தகால சத்தியாக்கிரகப் போராட்டங்கள் எப்படி நடாத்தப்பட்டுள்ளது அல்லது நடாத்தப்பட்டிருக்கும் என்பதற்கு இது ஒரு சரியான உதாரணமாகும்.

    தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தில் உளப் பூர்வமாக புலிகளும் புலிகளின் ஆதவாளர்களும் செயற்ப்படவில்லை என்பதற்கு இன்னுமொரு உதாரணம் இது.

    முக்கியமாக சோதிலிங்கம் மனிப்பு கேட்க வேண்டும்

    Reply
  • babu
    babu

    இந்த உண்ணாவிரதிகள் வைத்த கோரிக்கைகள்
    1. உடனடியான நிரந்தர யுத்த நிறுத்தம்
    2. உணவு மற்றும் மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்லும் வணங்கா மண் கப்பலை உடனடியாக சர்வதேச கண்காணிப்பாளர்களுடன் பொதுமக்களை அடையச் செய்ய வேண்டும்.
    3. ஐ நா பொதுச்செயலாளர் பான்கி மூன் பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுணை எமது பிரதிநிதிகள் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
    4. தமிழீழ விடுதலைப் புலிகளே எங்களது ஏக பிரதிநிதிகள். பிரித்தானியாவில் உள்ள அவர்கள் மீதான தடை நீக்கப்பட வேண்டும்.
    5. தமிழர்கள் தனிநாடாகப் பிரிந்துபோக விரும்புகிறார்களா? அல்லது இலங்கையின் பகுதியாக இருக்க விரும்புகிறார்களா? என்பதை அறிய ஐக்கிய நாடுகள் சபை தமிழ் மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

    Reply
  • ravana
    ravana

    //உண்ணாவிரதி பரமேஸ்வரனின் 7.1 மில்லியன் பவுண் மக்டோனால் பேகர் ://என்ற தலைப்பில் ஜெயபாலன எழுதிய போதே இது குறித்து நான் தேசம் நெற்றின் ஊடகவியல் மற்றும் உண்மைத் தன்மை நேர்மை என்பவை குறித்துக் கேள்வி எழுப்பியிருந்தேன்.

    ஜெயபாலனுக்கு புலிகள் மீதுள்ள வெறுப்பு அல்லது கோபம் கண்ணை மறைத்து ஊடகவியலின் அறத்திற்குப் புறம்பாகச் செயற்பட வைத்திருக்கிறது. விளைவாக இலங்கை அரசாங்கத்தினதும் பிரித்தானிய அரசாங்கத்தினதும் குரலில் ஜெயபாலன் பேசுகிறார். மக்களுடைய குரலில் அல்ல என்றும் சுட்டிக்காட்டியிருந்தேன்.

    இப்போது ஜெயபாலன் அதற்காக மனவருத்தத்தை தெரிவித்துக்கொள்ள வேண்டியதாயிற்று. பரமேஸ்வரனின் புண்ணியத்தில் – அவர் சண்> டெய்லி மெயிலோடு சேர்த்து தேசம் நெற் மீது வழக்குப் போடாததால் – ஜெயபாலன் தப்பி விட்டார்.

    அண்மைய இரண்டு வழக்குகளின் தீர்ப்புக்கள் புலம் பெயர்ந்த தேசத்தில் ஊடகங்கள் எவ்வாறு பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதற்கு வழிகாட்டியுள்ளன.

    முதலாவது ஏசியன் ரிபியூன் இணையத்தளத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

    விசாரணையின் போது இலங்கை அரசாங்கம் தந்த தகவல்களையே தான் எழுதியதாக ஏசியன் ரிபியூன் ஆசிரியர் தெரிவித்திருந்தது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. அதில் ஏசியன் ரிபியூன் மன்னிப்புக் கேட்டு நட்ட ஈடும் செலுத்த வேண்டியதாயிற்று.

    இரண்டாவது பரமேஸ்வரனின் உண்ணாவிரதம்.

    இந்த இரண்டிலுமே ஒரு அவதானிக்கத் தக்க உண்மை என்னவென்றால் இவ்விரண்டு செய்திகளும் இலங்கை அரசுக்கு சாதகமானதாகவும் இலங்கை அரசின் மூலங்களை அடிப்படையாகக் கொண்டதாகவுமே இருப்பது தான். அதாவது நான் முன்னரே சுட்டிக்காட்டியது போல அதிகாரத்தின் குரலாக ஒலிப்பது. மக்களின் நலன்களும் அதிகாரத்தின் நலன்களும் ஒரு போதும் சமாந்தரமானவை அல்லவே.

    Reply
  • thurai
    thurai

    செய்திகளை தவறாக வெளியிட்டமைக்காக நஸ்டஈடுகழும் கொடுத்து மன்னிப்பும் கேட்கின்றார்கள். இதில் விசாரணையின்றி மரணதண்டனை புலிகள் கொடுக்கும் போது வாய்பொத்தி, கண், காதுகளை மூடிக்கொண்டிருந்தவர்களிற்கே இந்த நஸ்ட ஈடுகள் கிடைத்துள்ளன.

    புலிக்காக கொலைகளைச் செய்தவர்கள் கூட பத்திரிகைத்தர்மம் பற்றி இங்கு எழுதவும் கூடும்.

    துரை

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    அனைத்துக் கருத்தாளர்களுக்கும் நன்றி. இச்செய்தி பற்றி வரும் பின்னூட்டங்கள் பிரித்தானிய நீதிமன்றம் ஒட்டுமொத்தமாக பரமேஸ்வரன் உட்பட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் நடாத்தப்பட்ட ஒட்டு மொத்த போராட்டத்தையும் அதிகாரரத்தின் நலன்களில் நின்று அல்லாமல் மக்களின் நலனில் நின்று பிரித்தானிய நீதிமன்றம் அங்கிகரித்துள்ளது என்ற பாணியில் எழுதப்படுகின்றது. பிரித்தானிய நீதிமன்றம் அதிகாரத்தின் பக்கம் நின்றோ அன்றி மக்களின் பக்கம் நின்றோ தீர்ப்பை வழங்கவில்லை. வழங்கப்பட்ட சாட்சியங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் டெய்லி மெயில் சண் ஆகிய பத்திரிகைகள் தங்கள் செய்திக்கான ஆதாரத்தை வழங்கவில்லை. அல்லது வழங்க முடியவில்லை என்ற அடிப்படையில் தீர்ப்பு அளித்துள்ளது.

    இதே பிரித்தானிய நீதிமன்றங்கள் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை அவர்கள் தங்கள் நாட்டிலேயே பாதுகாப்பாக வாழலாம் என்ற அடிப்படையில் பலரை இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளது. உடனே அவர்கள் அதிகாரத்தின் பக்கம் நீதி சாய்ந்துவிட்டது என்று குரல் எழுப்புவோம். இந்த இரு விடயமும் ஒரே நீதிமன்றத்திலேயே நடைபெறுகிறது. ஆகவே நீதிமன்றம் மக்கள் பக்கம் நின்று தீர்ப்பு வழங்கியது அல்லது போராட்டத்தை நியாயப்படுத்தி உள்ளது என்பது அர்த்தமற்ற வாதம்.

    பரமேஸ்வரன் உட்பட புலிகளின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் மக்களை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படவில்லை என்பதை மக்டொனால்ட் பேகர் பிரச்சினைக்கு முன்பும் குறிப்பிட்டு உள்ளேன் இப்போதும் குறிப்பிடுகிறேன்.

    வன்னியில் புலிகள் மக்களை வேள்விக்கு அனுப்பியதை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொண்டு நடத்திய இப்போராட்டங்களை அரசியல் ரீதியாகச் சரியா பிழையா என்ற அடிப்படையிலேயே முடிவெடுத்தனரே அன்றி படுகொலைக்கு உள்ளாகிக் கொண்டிருந்த மக்களின் அழிவைத் தடுப்பதற்கான வழிவகைகள் பற்றி இடதுசாரிச் சிந்தனையாளர்களும் அடக்கியே வாசித்தனர். மே 19ற்குப் பின்னரே அவர்கள் புலிகள் விழித்தெழுந்து புலிகளின் தோல்விக்கான ஆய்வுக் கட்டுரைகளை எழுதிக்கொண்டனர்.

    இன்றைய நீதிமன்றத் தீர்ப்பு பரமேஸ்வரன் என்பவர் உண்ணாவிரதத்தின் போது பேகர் சாப்பிட்டாரா இல்லையா என்பதையே சட்டரீதியாக தெளிவு படுத்தி உள்ளது. அதில் பரமேஸ்வரன் தன்மீதான குற்றச்சாட்டைத் தவறு என்று நிரூபித்துள்ளார். அத்தீர்ப்பை நம்பகமானதாக ஏற்றுக்கொள்வதே பொறுப்பான நடவடிக்கை. ஆனால் அதனை வைத்து புலிகளின் தலைமைகளால் வன்னிமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நாசகார வேலைகளை நியாயப்படுத்தம் போராட்டங்களை நியாயப்படுத்த முடியாது. அதற்கு இத்தீர்ப்பைப் பயன்படுத்தவது மோசமானதாகவே அமையும்.

    த ஜெயபாலன்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…அத்தீர்ப்பை நம்பகமானதாக ஏற்றுக்கொள்வதே பொறுப்பான நடவடிக்கை. ஆனால் அதனை வைத்து புலிகளின் தலைமைகளால் வன்னிமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நாசகார வேலைகளை நியாயப்படுத்தம் போராட்டங்களை நியாயப்படுத்த முடியாது. அதற்கு இத்தீர்ப்பைப் பயன்படுத்தவது மோசமானதாகவே அமையும். த ஜெயபாலன்….//

    ஆம். அதேபோல பரமேஸ்வரன் ஹம்பேகர் ‘சாப்பிட்ட’ நிகழ்வை வைத்து அப்போராட்டத்தின் ஆதரவாளர்களையும் ஈழத்தில் நடக்கும்/நடைபெற்ற போராட்டங்களையும் அதன் ஆதரவாளர்களையும் சீர்தூக்கிப்பார்த்தலும் தவிர்த்திருக்கப்பட வேண்டும். இல்லையா ஜெயபாலன்?

    Reply
  • Kusumpu
    Kusumpu

    சாட்சி இல்லாமல் பலகொலைகள் நடந்திருக்கின்றன. இதைப் புலிகள் மட்டுமல்ல அரசும் சாட்சியில்லால் செய்த வரலாறுகள் உண்டு. சாட்சியில்லாமல் செய்யும் கொலைகள் சட்டத்துக்கு இருட்டடிக்கலாம். அதற்காக கொலைகள் கொலைகள் இல்லை என்றாகாது. சாட்சியின்றிச் சாப்பிட்ட பேகர் மனச்சாட்சிக்குத் தெரியும். 21 நாட்கள்களின் பின் கொடுத்த பேட்டியில் பார்த்தீர்கள் என்றால் தெரியும் உங்கள் கண்ணே உங்களுக்குப் பதில் சொல்லும். அவர் எவ்வளவோ தென்புடன் முகத்தில் கூடப் பெரிய மாற்றம் இன்று பேசுவதைக் காணலாம். முக்கியமாக தமிழை சரியாக உச்சரிப்பது முக்கியம். ஜி.ரிவியில் இவருடைய பேச்சைகேட்டால் தமிழ் தடக்குப்படுகிறது. பசியிலும் தமிழ் தடக்கியது. வழக்கு வெற்றியிலும் தமிழ் தடக்குகிறது. பிரபாகரனின் கொலை கூட இன்னும் சாட்சியற்றே இருக்கிறது. அரசோ இராணுவமோ பிரபாவைக் கொலைசெய்யாமல் பொட்டோ பக்கத்தில் நின்ற சிட்டோ கொன்றிருக்கலாம். இப்படித்தான் பேகர் வழக்கும்.

    Reply
  • sam
    sam

    இவர் தனது போராட்டத்தை எந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டதற்காக நிறுத்தினார்?

    Reply
  • kumaran
    kumaran

    That is good news Jeyapalan! A good examble is the best sermon!
    போராட்டத்தின் போது பல தமிழ் அமைப்புக்கள் பங்கேற்றாலும் தனக்கு தனிப்பட்ட முறையில் அவை உதவ முன்வரவில்லை என்றும், வெற்றிபெற்றால் வக்கீல் சன்மானம் என்ற அடிப்படையிலேயே தான் வழக்கறிஞரை அமர்த்தி இந்த வழக்கை எதிர்கொண்டதாகவும் அவர் கூறினார்
    Lankasri!

    Reply
  • kunam
    kunam

    பரமேஸ்வரன் பேகர் சாப்பிட்டார் என்று எழுதியதற்குரிய ஆதாரத்தை வழங்க சம்பந்தப்பட்ட பத்திரிகைகள் தவறியுள்ளன என்றே தீர்ப்பு கூறியுள்ளன. எனவே இதன் அர்த்தம் அவர் சாப்பிடவில்லை என்று அல்ல. இங்கு ஆதாரம் இல்லாமல் எதற்காக இந்த செய்தி வெளியிடப்பட்டது என்ற நோக்கம் வெளிப்படுத்த நீதிமன்றம் தவறிவிட்டதாக நான் உணருகிறேன். மேலும் நீதிமன்றம் இருக்கின்ற சட்டத்தின் அடிப்படையிலே தீர்ப்பு வழங்குகின்றனவேயொழிய உண்மையாக நீதியின் அடிப்படையில் அல்ல என்பதையும் நாம் கண்டுகொள்ள வேண்டும். இந்த அரசுகள் பொலிஸ் இராணுவம் மட்டுமல்ல சட்டம் நீதிமன்றம் என்பன மூலமும் மக்களை அடக்கி ஆள்கின்றன என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    முதலாளி ஒரு தொழிலாளியின் கூலியை சட்டத்தின் பெயரால் சுரண்ட முடியும். ஆனால் அதே தொழிலாளி முதலாளியின் ஒரு சதத்தை எடுத்தாலும் உடனே திருட்டு என சட்டத்தின் பேரால் தண்டிக்கப்படுவான். இது தான் இன்றைய சட்டத்தின்கோலம். இங்கு சட்டம் நீதி எல்லாம் யாருக்காக யாரால் நடத்தப்படுகிறது என்பதை நன்கு இனங்கான முடியும்.

    22 நாள் உண்ணாவிரதம் இருப்பவர் எப்படி உற்சாகமாக பேசுகிறார் என எல்லோரும் அதிசயமாக பார்த்தனர். இந் நிலையில் பேகர் செய்தி வந்தபோது அது நம்பவேண்டியதாக அமைந்தது. உண்ணாவிரதம் இருந்தபோதும் சரி பின் அதனை முடித்தபோதும் சரி சம்பந்தப்பட்ட நபர் வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை. பல மர்மங்களுக்கு இடங்கொடுத்தார். எனவே இச் செய்தி வருவதற்கு அவரும் ஒரு வகையில் காரணமாகிறார்.

    /படுகொலைக்கு உள்ளாகிக் கொண்டிருந்த மக்களின் அழிவைத் தடுப்பதற்கான வழிவகைகள் பற்றி இடதுசாரிச் சிந்தனையாளர்களும் அடக்கியே வாசித்தனர்./
    புலிகளின் போராட்டம் வெற்றி அளிக்காது என்று இடதுசாரிகள் அப்பவே சொன்னார்கள் என்று எழுதும் ஜெயபாலன் இங்கு அதற்கு முரணாக இடதுசாரிகள் சிந்தனையாளர்களும் அடக்கியே வாசித்தனர் என்று எழுதுவது ஏன்?

    Reply
  • Ajith
    Ajith

    The matter of the fact is Jeyapalan lost credidibilty as a journalist. However he maintains his loyalty to his sponsors. His journalism is similar to what the Asian Tribune KTR.

    Reply
  • kunam
    kunam

    அஜித்! பரமேஸ்வரன் பேகர் சாப்பிட்டார் என சில ஆங்கில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. அதை ஜெயபாலன் மறு பிரசுரம் செய்தார். இதில் ஊடகவியலாளன் என்ற அளவில் ஜெயபாலன் என்ன தவறு விட்டதாக நீங்கள் காண்கிறீர்கள்? மேலும் அவர் தான் இந்த செய்தியை கண்டு பிடித்து எழுதுவதாக எந்த இடத்திலுமே குறிப்பிடவில்லையே. மாறாக இது ஆங்கில பத்திரிகையில் வந்த செய்தி என்பதை தெளிவாகவே குறிப்பிட்டிருந்தார். எனவே இங்கு அவர் என்ன தவறு விட்டிருப்பதாக நீங்கள் உணருகிறீர்கள்.

    ஆங்கிலப் பத்திரிகைகள் என்ன நோக்கத்திற்காக இவ்வாறான செய்தியை பிரசுரம் செய்தனவோ அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வண்ணம் ஜெயபாலன் அதை மீள்பிரசுரம் செய்திருப்பதாக நீங்கள் கருதுவீர்களாயின் முதலில் ஆங்கிலப் பத்திரிகைகள் என்ன நோக்கத்திற்காக இந்த செய்தியை வெளியிட்டன என்பதை வெளிப்படுத்தவேண்டும். அதன் பின்னரே அதற்கு ஜெயபாலன் துணை போனார் என்பதை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் அவரை இன்னொரு ஊடகவியலாளருடன் ஒப்பிடுவதற்கு உங்களுக்கு அருகதை இல்லை என்பதே என் கருத்தாகும்.

    Reply
  • கந்தையா
    கந்தையா

    செய்தி பார்த்ததும் தேசம் பின்னூட்டக்காரர்தான் றோகனுக்கு உடன் ஞாபகத்திற்கு வருகின்றதென்பது தேசம் பின்னூட்டக்காரருக்குக் கிடைத்த வெற்றியே.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    இந்த லண்டன் பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில் பரமேஸ்வரன் உண்ணாவிரத நேரத்தில் உணவருந்தினார் என்பதை நானும் நம்பியிருந்தேன். தற்போது வெளிவந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.

    நான் இலங்கையில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருமுறை இருந்துள்ளேன். முதலாவது எம்மை விடுதலை செய் அல்லது விசாரணைசெய் எனக்கோரி இந்த உண்ணாவிரத்தில் 15 நாட்கள் உண்ணாவிரதம் இருந்துள்ளேன் நானும் என்னுடன் உண்ணாவிரதம் இருந்த நண்பர் சுமித்திரன் இங்கு லண்டனில் உள்ளார் எனக்கு முன்னபாகவே 30 நாள் உண்ணாவிரதம் இருந்த சோமசுந்தரம் லண்டனில் உள்ளார்

    இவர்களில் சோமசுந்தரம் பரமேஸ்வரனின் உண்ணாவிரத இடத்திற்கு போயிருந்தார் இவர்களோடு பேசியதிலிருந்தும் அந்த இடத்திற்கு போய்வந்த வேறு சிலரின் கருத்துக்களிலிருந்தும் நான் பரமேஸ்வரன் ஏதோ சாப்பிட்டுள்ளார் என்ற கருத்துக்கு நான் வந்தேன்

    இவர்களில் பலர் அன்று பரமேஸ்வரன் ஏதோ சாப்பிட்டு விட்டார் என்ற கருத்துடன் உடன்பட்டனர்.

    எனது இரண்டாவது சாகும்வரை உண்ணாவிரதம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை உடனடியாக அமுல்படுத்தக்கோரி மேற்கொள்ளப்பட்டது. இதில் சோமசுந்தரம் மற்றும் ஈரோஸ் கமலி என்பவரும் இருந்தோம். எனக்கு உண்ணாவிரதம் இருப்பவர்களின் உடல்நிலை மாற்றங்கள் அதில் ஏற்படக்கூடிய இளைப்பு களைப்பு பற்றிய அனுபவம் நிறையவே உண்டு. அதன் அடிப்படையிலேயே பேகர் சாப்பிட்டது பற்றிய எனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தேன்.

    இந்தக்காலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றி எந்தவித அக்கறையும் இல்லாமலே நடைபெற்ற போராட்டம் இருந்துள்ளதை மறந்துவிடக்கூடாது.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    ஜெயபாலன் மற்றும் கருத்தாளர்கள்!
    இது கோட்டுக்குப்போய் வாதாடி வென்ற வழக்கல்ல. சாட்சிகள் தடம்புரண்டதாலோ அன்றி சாட்சிகளை முன்வைக்க முடியாததாலோ பத்திரிகைகள் சன்மானத்துடன் சமாதானமாகப் போனார்கள் என்பது தான் உண்மை. ஒன்றுமில்லாத ஒன்றை பத்திரிகைகள் சிருஸ்டித்து இருக்க இயலாது. ஏதோ ஒரு துரும்பாவது யாரோ கொடுத்தே இருக்கவேண்டும். முக்கியமாக தகவல் தந்தவர்களை காக்க வேண்டிய பொறுப்பு பத்திரிகைகளுக்கு உண்டு: பொலிஸ்தான் தகவல் கொடுத்து இருக்க வேண்டும் என்று இல்லை. நான் அறிந்த மட்டில் இவருடன் நின்றவர்களே படம் எடுத்ததாக அறியப்படுகிறது. வழமையாக வீடியோப்படங்களைக் கூடச் சாட்சியாக ஏற்பதில்லை.

    சரி இந்த பரமேஸ்வரன் என்ற நீதவானின் எந்தக் கோரிக்கைகள் நிறைவேறியதால் உண்ணாவிரத்தை முடித்தார்? சொல்லமுடியாத இரகசியம் என்றால் என்ன இராணுவ இரகசியமா? பிரபாகனே சகல ரகசியங்களையும் கோத்தபாயாவுக்குச் சொல்லிப்போட்டுத்தான் செத்தவராம்..? வழக்கில் வென்றாயிறே அது என்ன இரகசியம்? இவரது நண்பர் உபாமாவைப் பார்ப்பதற்காக உண்ணாவிரதத்தை முடித்தார். இவர் எதற்கு முடித்தார். பூக்குத்த வெளிக்கிடாதீர்கள். சட்டம் என்றும் சரியான தீர்ப்பைத்தான் வளங்கும் என்று சொல்ல இயலாது. சந்தர்பம் சூழ்நிலை சாட்சிகளை வைத்தே அதுவும் மனிதர்களால் கொடுக்கப்படுவதே தீர்ப்பு. இங்கு வழக்கே நடக்கவில்லை. சமாதானமாக இருபகுதியும் போகிறார்கள் என்பதை கோட்டு மூலம் அறிவிக்கப்பட்டது. இப்படியாகப் பலவழக்குகள் செலவுகளைக் குறைக்கவும் காலத்தை இழுத்தடிக்காமல் இருப்பதற்கும் ஒரு நடுமையால் தரகு நடத்தப்பட்டு சமாதானமாகத் தீர்க்கப்படுவது நான் வாழும் நாட்டிலும் உள்ளது. பரமேஸ்வரனுடைய வழக்குக்குத் தீர்ப்பு போதிய அல்லது தகுந்த சாட்சியங்களை சமர்ப்பிக்க முடியாத காரணத்தினால் பத்திரிகைகள் இதுவரை நடந்த செயற்பாடுகளுக்கான செலவையும் சிறுதொகை பணத்தையும் பரமேஸ்வரனுக்குக் கொடுத்து சமாதானமாகப் போகிறார்கள் என்பதே ஆகும். எதிர்பக்கத்த்துக்கு சாட்சி இல்லை அல்லது சாட்சியை நிறுத்த முடியவில்லை. சாட்சியின்றிச் கொலைகள் சட்டத்துக்கு சரியாக இருக்கலாம். மக்களுக்கு சரியாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.

    Reply
  • mani
    mani

    பேகர் சாப்பிடவில்லை. may be sandwich?

    Reply
  • Kusumpu
    Kusumpu

    இங்கே பலபின்னோட்டுக்காரர்களின் கருத்தைப்பார்த்தால் ஜெயபாலன்தான் கட்டுரை எழுதியதாகவும் தேசத்தின் உண்மை நிலைபற்றியும் ஆராய்கிறார்கள். கட்டுரையை சரியா தமிழில் தெரிந்தால் தமிழில் வாசிக்கவும். ஜெயபாலன் தன்கட்டுரை எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை மிகத்தெளிவாக எழுதியிருந்தார். பின்னோட்டங்கள் அவலை நினைத்து உரலை இடிப்பதுபோலவும், ஏன் புலிகளின் போராட்டம் போலவும் காழ்புணர்வில் கத்துகிறது. பரமேஸ்வரன் பேகர் திண்டாரா என்பதற்கு சரியான சாட்சி மலசலகூடம்தான். அது சாட்சிக்கு வராது என்பது யாவரும் அறிந்ததே. பின்னென்ன வழக்கை உயர்நீதிமன்றத்தில் என்ன கடவுளிடமே போடலாம்.

    Reply
  • padamman
    padamman

    பேகர் சாப்பிட்டது உண்மைதான் இப்ப வழக்கில் வென்றவுடன் தான் சாப்பிடவில்லை என்று இல்லை

    Reply
  • rohan
    rohan

    “பரமேஸ்வரன் பேகர் சாப்பிட்டார் என்று எழுதியதற்குரிய ஆதாரத்தை வழங்க சம்பந்தப்பட்ட பத்திரிகைகள் தவறியுள்ளன என்றே தீர்ப்பு கூறியுள்ளன. எனவே இதன் அர்த்தம் அவர் சாப்பிடவில்லை என்று அல்ல.” என்பார் ஒருவர்.

    “இது கோட்டுக்குப்போய் வாதாடி வென்ற வழக்கல்ல. சாட்சிகள் தடம்புரண்டதாலோ அன்றி சாட்சிகளை முன்வைக்க முடியாததாலோ பத்திரிகைகள் சன்மானத்துடன் சமாதானமாகப் போனார்கள் என்பது தான் உண்மை. ஒன்றுமில்லாத ஒன்றை பத்திரிகைகள் சிருஸ்டித்து இருக்க இயலாது.” என்பார் இன்னொருவர்.

    “Put up or Shut up” என்று ஆங்கிலத்தில் சொல்வது போல, ஆதாரம் இருந்தால் முன்னே வருவோம் – இல்லை என்றால் பேசாதிருப்போம்.

    “செய்தி பார்த்ததும் தேசம் பின்னூட்டக்காரர்தான் றோகனுக்கு உடன் ஞாபகத்திற்கு வருகின்றதென்பது தேசம் பின்னூட்டக்காரருக்குக் கிடைத்த வெற்றியே.” என்று கந்தையா சொல்வது வேடிக்கை. சில பின்னூட்டக்காரர்களில் எனக்கு நல்ல மதிப்பு உள்ளது. பலரில் பரிதாபமும் உள்ளது. உணவை வீணடிக்கும் போது எனக்குப் பிச்சைக்காரர்கள் நினைவுக்கு வருவதுண்டு. அது பிச்சைக்காரர்களுக்குக் கிடைத்த வெற்றியாகுமோ என்று இப்போது எண்ண வைத்திருக்கிறீர்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சந்தடி சாக்கில் சாந்தன் மற்றையவர்களின் காதில் பூ வைக்கப் பார்க்கின்றார். 23 நாட்கள் உண்ணாவிரதமிருந்த பரமேஸ்வரன் எப்படி தொடர்ந்து எந்தவித களைப்போ சோர்வோ இல்லாமல் இருநதார்? இது நடைமுறைக்குச் சாத்தியமா என்பதை சாந்தனால் விளக்க முடியுமா?? அதுபோல் தயா இடைக்காடர் ஒரு சலரோக நோயாளி. சாதாரணமாகவே சலரோக நோயாளிகள் சாதாரணமானவர்களை விட ஒரு நாளைக்கு 5 முதல் 6 தடைவைகள் குறைந்தது உணவு உட்கொள்வார்கள் என்பது பலர் அறிந்ததே. இந்த நிலையில் தயா இடைக்காடரால் உண்ணாவிரதமிருக்க முடியுமா என்பதையும் சாந்தன் விளக்கினால் நன்று.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    மக்டொலாஸ்சும் அரசியல் விவாதங்களில் ஈர்கப்பட்டது. பல கோடி செலவழித்து இப்படியான விளம்பரங்கங்கள் வருவது லொத்தர்-சீட்டிலுப்பில் வருவது மாதிரியே. அவர்கள் அதிரஸ்டத்தை அவர்களே அனுபவித்துக் கொள்ளட்டும். ஒரு சாதரணமனிதன் மூன்று நாளைக்கோ ஐந்து நாளைக்கோ உணவில்லாமல் இருந்தால் எப்படியிருப்பான்?
    இருபது நாட்களுக்கு மேல் உணவில்லாமல் லண்டண் மாநகரத்தில் ஒருவன் இருப்பான்என்றால் அவனது முகத்தோற்றம் எப்படியிருக்கும்?. பரமேஸ்வரன் அப்படியான பாதிப்புக்குள்ளானவரா? இது பரமகம்ஸ நித்தியானந்தரின் தோற்றம் அல்லவா? நீதி சட்டம் ஒழுங்குமுறை வழக்கு தீர்ப்பு இதுபற்றி கதைப்பதாக இருந்தால் குணத்தின் பின்னோட்டம் போதுமானவையே!. அதன் வழியே!! நாமும்.
    இதில் ஜெயபாலன் மன்னிப்பு கேட்டது கவலை அளிக்கிறது. சிலவேளைகளில் ஊடகதுறையில் இருக்கிற சட்டதிட்டங்கள் ஒழுங்குமுறைகள் போலும்?.

    Reply
  • BC
    BC

    அவர்களுக்கு சார்பான அமைப்புகளும் பரமேஸ்வரனுக்கு உதவ முன்வரவில்லை. அவர்களுக்கு உண்மை தெரியும். இப்போ குசும்பு சொன்ன மாதிரி கிடைக்க பெற்ற தகவல்களை வெளியிட முடியாத நிலை சன்னுக்கும் டெய்லி மெயிலுக்கும். அதனால் நட்ட ஈடாக பணம் கொடுக்கிறார்கள். சமீபத்தில் செய்தி வாசித்தேன். வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற தமிழர் தினக்குரல் பத்திரிகை நடத்துபவரோடு கதைத்த போது தாங்கள் புலிகள் செய்த அராஜகச் செயல்களை எல்லாம் பயத்தினால் மறைத்து தான் செய்திகள் வெளியிட்டதை ஒப்புக் கொண்டாராம். இங்கு சிலர் தேசம்நெற்றும் அது மாதிரி அடக்க ஒடுக்கமாக நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். சன், டெய்லி மெயில் செய்தி தேசம்நெற்றில் வந்ததால் இப்போ அதை பிடித்துக் கொண்டார்கள்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    kunam
    //…அஜித்! பரமேஸ்வரன் பேகர் சாப்பிட்டார் என சில ஆங்கில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. அதை ஜெயபாலன் மறு பிரசுரம் செய்தார். இதில் ஊடகவியலாளன் என்ற அளவில் ஜெயபாலன் என்ன தவறு விட்டதாக நீங்கள் காண்கிறீர்கள்?…//
    அவர் மறுபிரசுரம் மட்டும் செய்யவில்ல. அதற்கும் மேலாக பல படிகள் சென்று ஈழத்தமிழர் போராட்டத்தினை தனது கொள்கைகளுக்குள் ‘பொருத்தி’ மறுபரிசீலனை செய்ய பயன்படுத்தினார். கட்டுரையைப் படித்துப்பாருங்கள் தெரியும்.

    //… மேலும் அவர் தான் இந்த செய்தியை கண்டு பிடித்து எழுதுவதாக எந்த இடத்திலுமே குறிப்பிடவில்லையே….//
    கண்டுபிடித்து எழுதவில்லைத்தான். ஆனால் பல ‘கண்டுபிடிப்புகளை’ நிகழ்த்த வழிசமைத்தார். சப்போட்டுக்கு சிலர் தமக்கு ‘உள்வீட்டு’ விடயங்களை வழங்கியதாகவும் சொன்னார்.

    //… நோக்கத்தை நிறைவேற்றும் வண்ணம் ஜெயபாலன் அதை மீள்பிரசுரம் செய்திருப்பதாக நீங்கள் கருதுவீர்களாயின் முதலில் ஆங்கிலப் பத்திரிகைகள் என்ன நோக்கத்திற்காக இந்த செய்தியை வெளியிட்டன என்பதை வெளிப்படுத்தவேண்டும்….//

    ஆங்கிலப்பத்திரிகைகளின் நோக்கம் என்ன என்பதல்ல கேள்வி. ஆனால் ஒரு செய்தியை எடுத்து தனது நோக்கம் நிறைவேற புத்திசாலித்தனமாக அல்லது தனக்கு இருக்கும் அதிகாரங்களை பயன்படுத்திச் அதனைச் செய்தார். அதுவே என் குற்றச்சாட்டு!

    சோதிலிங்கம்.
    நீங்களும் உண்ணாவிரதம் இருந்தீர்கள் என அறியவரும் போது மகிழ்ச்சியே. ஆனால் உங்களின் உண்ணாவிரதத்தையும் ஸ்ரீலங்கா அரசைச் சார்ந்தவர்கள் கொச்சைப்படுத்தியதை நான் அறிவேன் (ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நல்லூர் அமைப்பாளர் ஒருவர், இப்போ கனடாவில் இருக்கிறார்) அவர் சொன்னார் ”உங்களுக்குத் தெரியாதடாப்ப்பா, தமிழ் எம்.பிமாரோட ‘பிளான்’ போட்டுத்தான் இது நடக்குது. தமிழ் ஜெயில் காட் மூலம் சாப்பாடு போகுது. அரசாங்கத்துக்கு இது நல்லாத்தெரியும். அவங்கள் சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறாங்கள். எங்களுக்கே மானம் போகுது” என. ஆனால் நாங்களும் சேர்ந்து சிரிக்கவில்லை சோதிலிங்கம். உங்களுக்காக வருந்தினோம்.

    அதேபோல இலங்கை-இந்திய ஒப்பந்த உண்ணாவிரதிகளும் நீங்கள் தான் என அறிந்து மகிழ்ச்சியே!
    அப்போதும் என்ன கதை வந்தது தெரியும்தானே? இதெல்லாம் இந்தியாக்காரன் செற்றப் என பலர் கதைத்ததை நான் கேட்டேன். பின்னர் இந்திய ராணுவம் புறப்பட்டபோது நிகழ்ந்தவையை மக்கள் இந்த ‘உண்ணாவிரதத்தை நாடகம் என நிரூபிப்பவையாக இருந்தன எனவும் சொன்னார்கள்.

    மேலும் திலீபன் உண்ணாவிரதம் இருந்தபோது இந்திய அரசு/ஆதரவாளர்கள் திலீபனின் கல்லீரல் கெட்டுப்போய் விட்டதாகவும் எப்படியும் ஒரு வருடத்துக்குள் இறக்கத்தான் போகிறார். அவரை புலிகள் உண்ண்ணாவிரதத்தில் ‘தள்ளி’ விட்டனர் எனச் சொல்லவும் கேட்டேன். ஏன் இன்னும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

    உண்ணாவிரதிகளின் உடல் நிலை பலவாறாக வேறுபடும். சிலர் ஒருநாளிலேயே மயக்கம் அடைவார்கள். சிலர் 25 நாளுக்கும் நின்று பிடிப்பார்கள். மேலும் அன்றைய ஸ்ரீலங்காவின் மருத்துவ/உணவு/போசாக்கு நிலை வேறு இன்றைய இங்கிலாந்தில் அது வேறு நிலையில் மனிதனை வைத்திருக்கும்.இற்றைக்கு இரண்டு வருடங்களின் முன்னர் வாரக்கணக்கில் பனிச்சரிவுக்குள் உணவு/சரியான உடைகள் இல்லாமல் மாட்டியவர் ஒருவரை காப்பாற்றி ஸ்ரெச்சரில் வைத்து தள்ளிக்கொண்டு சென்றபோது அவர் நன்றாக பேசியதை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன்
    உண்ணாவிரதிகளின் உடல் நிலை பலவாறாக வேறுபடும். சிலர் ஒருநாளிலேயே மயக்கம் அடைவார்கள். சிலர் 25 நாளுக்கும் நின்று பிடிப்பார்கள்.

    //…இந்தக்காலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றி எந்தவித அக்கறையும் இல்லாமலே நடைபெற்ற போராட்டம் இருந்துள்ளதை மறந்துவிடக்கூடாது…//
    அதனை பலதளங்களில் விவாதித்துள்ளோமே. இங்கே விவாதம் கம்பேர்கர் சாப்பிட்டதாக வந்த செய்தியை தமது ‘நோக்கங்களுக்காக’ பலர் ஸ்பின் (சுத்துதல்/திரித்தல்) பண்ணியது!

    Reply
  • வேங்கை
    வேங்கை

    ஆதாரம் இருந்தால் முன்னே வருவோம் – இல்லை என்றால் பேசாதிருப்போம்.// Rohan
    வெள்ளைக் கொடி பிடித்துக்கொண்டு எமது தலைவர் சரணடைந்தவர் என்று எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு எழுதினீர்கள்.

    Reply
  • ragunathan
    ragunathan

    இற்றைக்கு இரண்டு வருடங்களின் முன்னர் வாரக்கணக்கில் பனிச்சரிவுக்குள் உணவு/சரியான உடைகள் இல்லாமல் மாட்டியவர் ஒருவரை காப்பாற்றி ஸ்ரெச்சரில் வைத்து தள்ளிக்கொண்டு சென்றபோது அவர் நன்றாக பேசியதை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன்// சாந்தன் தயவுசெய்து இதைப்பற்றிய விபரத்தை தாருங்கள். நாமும் பார்ப்பதற்காக.

    Reply
  • BC
    BC

    //தமிழ் ஜெயில் காட் மூலம் சாப்பாடு போகுது அரசாங்கத்துக்கு இது நல்லாத்தெரியும்.//
    இப்படி சாப்பாடு போகுது என்று சொல்லி ஒரு சிறு குழந்தைக்கு மட்டும் தான் ஏமாற்ற முடியும். வெலிக்கடைச் சிறைச்சாலையில் பெரும்பான்மையாக தமிழ் ஜெயில் காவலர்கள் இருந்தால் மட்டுமே இப்படி பொய்க்கு என்றாலும் சொல்வது பொருந்தும்.

    Reply
  • Mohamed Nisthar
    Mohamed Nisthar

    BREAKING NEWS!!

    A world class commentator(?)known as “Ajith” has(padaatha paadu pattu)found out that journalist Mr. Jayapalan lost his credibility, therefore his work in reporting the alleged incident of “eating burger whilst performing a hunger strike” is a sort of scam.

    It appears, however, that Mr. Ajith has never missed and won’t miss to browse the Thesamnet everyday for his intellectual thirst(?). Thus he proves that Thesamnet is a reliable source for information. Well done Ajith, what a wonderful finding(??)

    Reply
  • kunam
    kunam

    சாந்தன் நீங்கள் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். அவர் உண்ணாவிரதம் இருந்தபோது ஏதோ சாப்பிடுகிறார் என்ற சந்தேகம் புலி எதிர்ப்பாளர்களுக்கு மட்டுமல்ல பல புலி ஆதரவாளர்களுக்கும்கூட இருந்தது. ஆனாலும் இவர்கள் யாரும் அப்போது இதனை எழுதவில்லை. மாறாக ஆங்கிலப் பத்திரிகைகளில் செய்தி வந்த பின்பே அதனை பிரசுரித்து தங்கள் கருத்துக்களை எழுதினார்கள். எனவே நீங்கள் உண்மையிலே இதில் ஏதும் கண்டுபிடிக்க விரும்பினால் இந்த ஆங்கில பத்திரிகைகள் உண்ணாவிரதம் இருந்தபோது இதனை எழுதாமல் அது முடிந்த பின்னர் திடீரென வெளியிட்டார்கள்? இது குறித்து ஏன் நீங்கள் பேச மறுக்கிறீர்கள்? உங்கள் வாதப்படி பார்த்தால் ஆங்கிலப் பத்திரிகையில் வந்த செய்தியை ஜெயபாலன் மறு பிரசுரம் செய்தது தவறு அல்ல மாறாக இதனை உண்ணாவிரதம் இருந்தபோதே எழுதியிருக்க வேண்டும் என்று கோருவது போல் உள்ளது. அது சரி நீங்கள் புலி ஆதரவாளரா? அல்லது புலிக்குள்ளே இருந்து அதற்கு எதிராக சேம்சைட் கோல் போடும் ஆளா?

    பலரும் கருத்து எழுத ஜெயபாலன் வழி சமைத்தார் என்று குற்றம் சாட்டியுள்ளீர்கள். அதற்குத்தானே அவர் தேசம்நெட் நடத்துகிறார். அவர் அப்படி செய்யிறபடியால்தானே நீங்களும் கருத்து எழுத முடிகிறது! இன்னும் சொல்லப்போனால் உங்கள் போன்ற புலி ஆதரவாளர்களுக்கு இடம் கொடுக்கிறார் என்று மாற்றுக் கருத்தாளர்கள் அவர் மீது கோபம் கொள்கின்றனர். ஆனால் நீங்களோ அவர் புலி எதிர்ப்பாளர்களுக்கு எழுத இடங்கொடுத்துவிட்டார் என்று குற்றம் சாட்டுகிறீர்கள். இவ்வாறு அவருக்கு இரண்டு பக்கமும் அடி விழுவதைப் பாரத்தால் உண்மையிலே அவர் நடுநிலையாக நடக்கிறார் போல இருக்கு என எண்ணத் தோன்றுகிறது.

    Reply
  • கந்தையா
    கந்தையா

    //உணவை வீணடிக்கும் போது எனக்குப் பிச்சைக்காரர்கள் நினைவுக்கு வருவதுண்டு. //
    இதுபோதும் உங்கள் உள்ளக்கிடக்கை வெளிக்காட்ட.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…..தயவுசெய்து இதைப்பற்றிய விபரத்தை தாருங்கள். நாமும் பார்ப்பதற்காக….//ragunathan
    கூகிளில் தேடிப்பார்த்தால் கிடைக்கலாம். ஆனாலும் இதனை ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிறுவனம் என்ன என்பது கூட ஞாபகமில்லை. சீ.என்.என் ஆக இருக்கலாம்.
    அத்துடன் அண்மையில் பூமிஅதிர்வின் போது 180 மணித்தியாலங்களின் பின்னர் மீட்டெடுக்கப்பட்ட ஒருவரைப்பற்றியும் படித்தேன். தண்ணீர்கூட இல்லாமல் இருந்தார். http://news.bbc.co.uk/2/hi/europe/428264.stm

    மேலும் அவுஸ்திரேலிய பாலைவனத்தில் அமெரிக்க மீனவர் ஒருவர் 1999 ஆண்டளவில் 12 நாட்கள் அளவில் நீரில்லாமலும் 35 நாட்கள் உணவில்லாமலும் ததளித்தார்.

    அண்மையில் ஹெயிற்றி நாட்டில் நடந்த பூமி அதிர்வில் ஒருவர் 28 நாட்கள் கழித்து மீட்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த சிங்களஅமெரிக்க வைத்தியர் ஜெயவீராகூட ஆச்சரியப்பட்டார். கீழே வீடியோவும் செய்தியும்.

    http://www.france24.com/en/20100209-haitian-man-rubble-haiti-earthquake-survivor-health-hospital

    //..இப்படி சாப்பாடு போகுது என்று சொல்லி ஒரு சிறு குழந்தைக்கு மட்டும் தான் ஏமாற்ற முடியும். வெலிக்கடைச் சிறைச்சாலையில் பெரும்பான்மையாக தமிழ் ஜெயில் காவலர்கள் இருந்தால் மட்டுமே இப்படி பொய்க்கு என்றாலும் சொல்வது பொருந்தும்…..//BC
    குழந்தையை மட்டும்தான் ஏமாற்ர முடியும் அதனால் தான் நாம் ஏமாறாமல், இவ்வாறு எமது மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறார்களே என வருத்தமடைந்தோம்.

    kunam
    //…சாந்தன் நீங்கள் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். அவர் உண்ணாவிரதம் இருந்தபோது ஏதோ சாப்பிடுகிறார் என்ற சந்தேகம் புலி எதிர்ப்பாளர்களுக்கு மட்டுமல்ல பல புலி ஆதரவாளர்களுக்கும்கூட இருந்தது. …///
    சந்தேகம் யாருக்கும் இருக்கலாம். கடவுள் இருக்கிறாரா என்கின்ற சந்தேகம் கடவுள் நம்பிக்கை உள்ளோருக்கும் வருவது இயற்கை. அதிலென்ன தப்பு. ஆனால் பிள்ளையார் பால்குடிக்கிறார், மேரியின் கைகளில் இருந்து இரத்தம் வடிகிறது, சாய்பாபா படத்தில் விபூதி என ஒருவர் சொன்னதை பத்திரிகையில் எழுதி அதற்கு ஸ்கொட்லண்ட்யாட் இடம் ‘ நுணுக்கமான கமராக்கள் மூலம் பதிவாக்கி உள்ளனர்’ என எழுதி அதனையும் பெரியாரின் கடவுள் மறுப்பு போராட்டத்தையும் இணைக்கக்கூடாதல்லவா?

    //….ஆனாலும் இவர்கள் யாரும் அப்போது இதனை எழுதவில்லை. மாறாக ஆங்கிலப் பத்திரிகைகளில் செய்தி வந்த பின்பே அதனை பிரசுரித்து தங்கள் கருத்துக்களை எழுதினார்கள்….//
    இதனையே பரமேஸ்வரனும் நீதிமன்றில் சொல்லி இருக்கிறர். அதாவது தமிழ்மக்களிடையே ஸ்கொட்லண்ட் யாட், லண்டன் பத்திரிகைகளுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது அதனை இலகுவில் நம்பிவிடுவார்கள்.
    “Many Tamils place faith and belief in what they read in the English newspapers.[..] Scotland Yard has a reputation in Sri Lanka as being the best and most trustworthy police force in the world. Tamil readers (and quite possibly others) believe the allegations have been made by Scotland Yard and therefore they must be true. My denials of the allegations have appeared hollow given the alleged police evidence to the contrary”, Parameswaran commented in the press release.

    //… எனவே நீங்கள் உண்மையிலே இதில் ஏதும் கண்டுபிடிக்க விரும்பினால் இந்த ஆங்கில பத்திரிகைகள் உண்ணாவிரதம் இருந்தபோது இதனை எழுதாமல் அது முடிந்த பின்னர் திடீரென வெளியிட்டார்கள்? இது குறித்து ஏன் நீங்கள் பேச மறுக்கிறீர்கள்? உங்கள் வாதப்படி பார்த்தால் ஆங்கிலப் பத்திரிகையில் வந்த செய்தியை ஜெயபாலன் மறு பிரசுரம் செய்தது தவறு அல்ல மாறாக இதனை உண்ணாவிரதம் இருந்தபோதே எழுதியிருக்க வேண்டும் என்று கோருவது போல் உள்ளது….//
    நான் அவ்வாறு சொல்லவில்லை. ஆங்கிலப்பத்திரிகைகளில் வந்த செதியை மறுபிரசுரம் செய்யலாம். ஆனால் அச்செய்தியை மேலும் சுய விருப்பு வெறுப்புகளை போட்டு ‘மெருகூட்டக்கூடாது’. இச்செய்தியை வெளியிட்ட லண்டன் டெய்லி மெயில், சன் பத்திரிகைகளில் தமிழர்போராட்டம் கொச்சைப்படுத்தப்பட்டுவிட்டது, இவர்கள் புலிவால்கள் இப்படித்தான் செய்வார்கள் போன்ற கருத்துக்கள் சேர்க்கப்படவில்லை. ஜெயபாலனின் கட்டுரை ஆங்கிலப்பத்திரிகைகளை மேற்கோள் காட்டி ‘மெருகூட்டப்பட்ட’ கட்டுரை. பின்னூட்டங்கள் வேறுவகைக்குள் அடங்கும்!

    //…அது சரி நீங்கள் புலி ஆதரவாளரா? அல்லது புலிக்குள்ளே இருந்து அதற்கு எதிராக சேம்சைட் கோல் போடும் ஆளா?…//
    அதைப்பற்றி உங்களுக்கென்ன கவலை. கட்டுரையை கவனியுங்கள்.

    //….பலரும் கருத்து எழுத ஜெயபாலன் வழி சமைத்தார் என்று குற்றம் சாட்டியுள்ளீர்கள். அதற்குத்தானே அவர் தேசம்நெட் நடத்துகிறார்….//
    சுயாதீனமாக கருத்தெழுத வழிசமைப்பது வேறு, தும்பு எடுத்துக்கொடுப்பது வேறு!

    //..அவர் அப்படி செய்யிறபடியால்தானே நீங்களும் கருத்து எழுத முடிகிறது! இன்னும் சொல்லப்போனால் உங்கள் போன்ற புலி ஆதரவாளர்களுக்கு இடம் கொடுக்கிறார் என்று மாற்றுக் கருத்தாளர்கள் அவர் மீது கோபம் கொள்கின்றனர். ஆனால் நீங்களோ அவர் புலி எதிர்ப்பாளர்களுக்கு எழுத இடங்கொடுத்துவிட்டார் என்று குற்றம் சாட்டுகிறீர்கள்….//
    ”…10. எப்போதும் எதனையும் உண்மைகளுடன் எதிர்கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். மிகைப்படுத்தல்களும் சிறுமைப்படுத்தல்களும் பிற்காலத்தில் எதிர்விளைவையே ஏற்படுத்தும்…ஜெயபாலன் T on October 10, 2009 5:05 pm எழுதிய அட்வைசையும் அவரே படிக்கவில்லை போலும்

    //… இவ்வாறு அவருக்கு இரண்டு பக்கமும் அடி விழுவதைப் பாரத்தால் உண்மையிலே அவர் நடுநிலையாக நடக்கிறார் போல இருக்கு என எண்ணத் தோன்றுகிறது…//
    இருக்கலாம். மற்றைய தளங்களான தேனீ, புளொட், ஈ.பி.டி.பி போலல்லாது பினூட்டம் எழுத இடம் கொடுப்பது வரவேற்க்கத்தக்கது, நன்றிக்குரியது!

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    வெலிக்கடை தமிழ்வாட்டில் 300 பேர் வரையிலான தமிழ் அரசியல் கைதிகள் இருந்தனர். உள்ளமைப்பில் 4 பிரிவாக வாட்க்களும் ஒரு பிரிவாக செல்களும் இருந்தன.

    சிறைச்சாலைக்கு உணவு மூன்று வேளையும் வருவது வழமை.

    காலையில் பாணும் சம்பலும் தேனீருடன் (இந்த தேனீருக்கு இனிப்பூட்ட சக்ரைக்கட்டி தரப்பட்டது இந்த சக்கரைக்கட்டி போதாமையால் இந்த சக்கரைக்கட்டியை இரணடாக தரும்படி போராட்டம் செய்தே பெறப்பட்டது) மத்தியானம் இரண்டு அல்லது மூன்று கறிகளுடன் சோறு தாராளமாக தரப்பட்டது. மாலையில் மீண்டும் இரண்டு கறிகளுடன் சோறு தரப்படும். சிறைச்சாலையும் அரசும் இந்த விடயத்தில் தவறுவிடவில்லை. இதே போன்று இன்றுள்ள புலிகளின் போராட்டவாதிகளை கவனிக்கிறார்கள்.

    சிறைச்சாலையில் தமிழ்ஜெயில்காட் என்று யாரும் இருந்ததில்லை.

    உண்ணாவிரதிகளை கவனிக்க ஒரு திடமான குழு இருந்தது அந்த குழுவில் அநேகமாக எல்லா இயக்க உறுப்பினர்களும் இருந்தனர் புலிகளைத்தவிர. (புலிகள் தமக்கு சாத்வீகப் போராட்டத்தில் நம்பிக்கையில்லை என்று விலகியே இருப்பார்கள்)

    அங்கு சாத்வீகப் போராட்டம் என்று ஒத்துழையாமை போராட்டம் நடக்கும் அதாவது ஜெயிலர்கள் எமது எண்ணிக்கையை ஒவ்வொரு நாளும் காலையிலும் இரவிலும் எடுப்பது வழக்கம் அதை எடுக்கவிடாது தடுப்பது.

    ஒவ்வொரு பிரிவாக இருந்த வாட்டிலும் ஒவ்வொரு பொதுச்சபை இருந்தது அந்த சபையின் பொது முடிவின்படியே தான் ஒவ்வொரு விடயமும் நடந்தேறியது. அந்தந்த வாட்டுக்களில் அவர்கள் எல்லோரும் கூடி பொது முடிவு எடுப்பது வழக்கம்.

    இந்த உண்ணாவிரதிகளின் நடவடிக்கைகளை கவனிக்க ஒரு குழுவும் உண்ணாவிரதப்போராட்டம் பற்றிய பிரச்சார அரச அலுவல்களை கவனிக்க இன்னுமொரு குழுவும் இருந்தது. அந்த குழுவில் அங்கம் பெற்ற மும் மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற அப்துல்ஜபார் காதர் மலையகத்தை சார்ந்தவர் (ஈரோசின் இருபதாம் நுhற்றாண்டின் நவீன அடிமைத்தனம் புத்தகம் எழுதியவர்) அதைவிட மும் மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற டாக்கடர் நேதாஜி (இவர் ERCP இயக்கத்தை சார்ந்தவர்). இதைவிட இப்போராட்த்தில் பங்குபற்றிய அத்தனை இயக்கத்தவர்களையும் சார்ந்த பேராளிகள் எமக்கு பக்க பலமாக இருந்தனர். போராட்டங்களின் போது முடிவு எடுக்கும்போது உண்ணா விரதிகளின் முடிவுகளும் எடுக்கப்படும். அதன்போது பொதுச்சபைகளில் பலமான விவாதங்கள் நடைபெற்றே முடிவுகள் எடுக்கப்பட்டது.

    உண்ணாவிரதிகளை ஒரு வாட்டிக்கு இடமாற்றம் செய்து அங்குள்ள மற்ற அரசியல் கைதிகளுடன் சேர்த்ததே இருந்தனர் .

    உண்ணாவிரதம் இருக்கும் காலங்களில் சிறைஅதிகாரிகளுக்கு அறிவிப்பதும் அவர்கள் வந்து பார்ப்பதும் வழமை. சிலவேளை சிறைச்சாலை ஆணையாளரும் வந்துள்ளார். ஆனால் எமது போராட்டங்களில் அரசு கவனம் எடுத்ததா என்பதை சரியாக சொல்லமுடியாது? பத்திரகைகள் எல்லாம் தணிக்கை செய்தே தரப்பட்டன!

    எந்த தமிழ் அரசியல்வாதிகளும் எந்த தமிழ் இயக்கங்களும் எமக்காக எந்த குரலும் கொடுக்கவில்லை அவர்கள் புலிகளிடமிருந்து தம்மை பாதுகாப்பதிலே மிகவும் அக்கறையுடன் இருக்க வேணடியிருந்தது தெரிந்ததே!

    போராட்ட நடவடிக்கைகளை வெளிநாடுகள் வரையும் வெளிநாட்டு தூதுவராலயங்கள் வரை கொண்டுவர உதவியது LSSP யை சேர்ந்த ஜெயில்காட் தான்.

    Reply
  • BC
    BC

    //இதுபோதும் உங்கள் உள்ளக்கிடக்கை வெளிக்காட்ட.//
    தமிழில் ஒரு பொன் மொழி உண்டு.சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    திரு சோதிலிங்கம்.
    //…சிறைச்சாலையில் தமிழ்ஜெயில்காட் என்று யாரும் இருந்ததில்லை….//

    இங்கே விடயம் அதுவல்ல. எஸ்.எல்.எஃப்.பியின் நல்லூர் தொகுதி அமைப்பாளர் ஒருவரின் கொச்சைப்படுத்தல் பேச்சு! அப்பேச்சை நாம் நம்பவில்லை. நாமும் சேர்ந்து உண்ணாவிரதிகளைக் கிண்டல் செய்யவில்லை. இன்றைய பின்னூட்டங்கள் போல அப்போது விட முடியாது சேர்ந்து நக்கல் அடிக்கலாம். அதை நாம் செய்யவில்லை.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    எந்தவொரு ஊடகமும் செய்தியை வெளியிடும் பொழுது இச்செய்தி நம்பகமான தகவல் மூலங்களில் இருந்து பெறப்பட்ட உண்மையான தகவல் என்பதன் அடிப்படையிலேயே வெளியிடப்படுகின்றது. செய்தியை உறுதிப்படுத்த முற்படும் எவரும் தகவல் மூலத்தினை அடிப்படையாகக் கொண்டே அச்செய்தியை உறுதிப்படுத்துகின்றனர். அந்த வகையில் டெய்லி மெயில் சண் ஆகிய பத்திரிகைகளை நம்பகமான தகவல் மூலமாகக் கொள்வதில் எவ்வித தவறும் இல்லை. தகவல் மூலமாகப் பயன்படுத்துவதால் தகவல் மூலத்தின் அரசியலை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்பதுமல்ல.

    சண் டெய்லி மெயில் டெய்லி ரெலிகிறாப் ரைம்ஸ் போன்ற பத்திரிகைகள் வலதுசாரி போக்கைக் கொண்டிருந்த போதும் அவர்கள் ஊழல்களை வெளிக்கொண்டுவருவதில் முன்னின்றுள்ளனர். அண்மைய உதாரணம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எக்ஸ்பென்சஸ் கிளைம்.

    பரமேஸ்வரனின் மக்டோனால்ட் விவகாரத்திற்கு முன்பாகவே இப்போராட்டங்களின் தவறான நோக்கம் தவறான தலைமை வன்னி மக்களின் நலன்களுக்கு எதிரான இப்போராட்டத் தலைமைகளின் போக்கு என்பன பற்றி கடுமையான விமர்சனத்தை நான் வைத்துள்ளேன். பரமேஸ்வரன் மக்டோனால்ட் சாப்பிட்டால் என்ன சாப்பிடவிட்டால் என்ன என்னுடைய விமர்சனத்தில் மாற்றம் இருக்கவில்லை. பரமேஸ்வரனுடைய பேகர் விவகாரம் அவர் சாப்பிட்டாரா இல்லையா என்பது, பரமேஸ்வரனுக்கு தனக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்க மட்டுமே உதவும். அந்த வகையில் நான் பரமேஸ்வரனுக்கு தனிப்பட்ட முறையில் எனது மனவருத்தத்தை தெரிவித்துள்ளேன். ஒரு ஊடகவியலாளனாக நீதிமன்றம் வழங்குகின்ற தகவல் உண்மையானதாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது பொதுவிதி. அதன் பின்னால் உள்ள அரசியலுடன் நாம் உடன்பட வேண்டிய அவசியம் இல்லை.

    நான் ஊடகத்தை ஆரம்பித்த நாட்களில் பிரபல தமிழ் வர்த்தகப் புள்ளியால் பாதிக்கப்பட்ட இருவர் வந்து என்னிடம் முறையிட்டு தங்கள் இழப்புப் பற்றி தெரிவித்தனர். அவர்களின் வாக்கு மூலத்தை ஏற்றுக்கொண்ட நான் ஆதாரத்தையும் கேட்டேன். கொண்டு வந்து தருவதாக உறுதி அளித்தனர். அவர்களின் தகவலின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தினாலும் ஆதாரம் எனது கைக்கு வராமலே பத்திரிகையைப் பதிப்புக்கு அனுப்பி விட்டேன். பத்திரிகை வெளிவந்து விநியோகிக்கப்பட்டும் ஆகிவிட்டது. உறுதிப்படுத்தியபடி ஆதாரம் வரவில்லை.

    சம்மந்தப்பட்ட வர்த்தகப் புள்ளி பத்திரிகைக்கு போன்பண்ணி சட்ட நடவடிக்கைக்கு தயார் என்று சவால் விட்டார். பத்திரிகை ஆசிரியர் நிலைமை அறிந்து ஆதாரம் கையில் இல்லாததால் செய்தி தவறு என்று மன்னிப்புக் கேட்பதைவிட வேறுவழியில்லை இல்லையேல் மிகுந்த நட்டம் ஏற்படும் என்றார். எனக்கு இரண்டும் கெட்டான் நிலை. செய்தி உண்மை ஆனால் அதனை நிரூபிக்க வழங்கப்பட வேண்டிய ஆதாரம் இல்லாம் செய்தி பிரசுரிக்கப்பட்டு விட்டது. ஊடகவிதிப்படி மிகத் தவறான விடயம்.

    சம்பந்தப்பட்ட வர்த்தகப் புள்ளிக்கு போன் செய்து ‘நீங்கள் என்ன நடவடிக்கையும் எடுக்கலாம். எமக்கு பிரச்சினையில்லை. எம்மிடம் சகல ஆதாரங்களும் இருக்கின்றது. நாங்கள் ஆதாரத்தை நீதிமன்றில் சமர்ப்பிப்போம் என்று கூறி ஒரு மணிநேரத்திற்கு மேல் வாதிட்டேன்.’ சம்பந்தப்பட்ட புள்ளி ஒரு சில வாரத்திலேயே பாதிக்கப்பட்ட இருவருக்கும் ஏற்பட்ட இழப்பில் 50 வீதத்தை (10000 பவுண்களை வழங்கினார்.)

    இதில் நான் சட்டப்படி தவறாக நடந்து இருந்தாலும் எனது உள்ளுணர்வில் மிகச்சரியாகவே செயற்பட்டேன்.

    ஆகவே சிலசமயங்களில் சட்டத்திற்கும் உள்ளுணர்விற்கும் இடையே நாம் முரண்படுவது தவிர்க்க முடியாதது.

    த ஜெயபாலன்.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    //10. எப்போதும் எதனையும் உண்மைகளுடன் எதிர்கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். மிகைப்படுத்தல்களும் சிறுமைப்படுத்தல்களும் பிற்காலத்தில் எதிர்விளைவையே ஏற்படுத்தும்…ஜெயபாலன் எழுதிய அட்வைசையும் அவரே படிக்கவில்லை போலும்//

    //இப்பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில் பரமேஸ்வரன் உண்ணாவிரத நேரத்தில் உணவருந்தினார் என்பதை நானும் நம்பியிருந்தேன். அதற்காக எனது மனவருத்தத்தை பரமேஸ்வரனுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.– த ஜெயபாலன்//

    நாங்கள் வானத்தில் இருந்து வந்ததேவர்கள் அல்ல. எனக்குத் தான் தெரியும் நான் தான் படைப்பேன் என்று நான் எங்கும் சொல்வில்லை. உண்மையை எதிர்கொள்ள எப்பவும் தயாராக இருக்கிறேன். அந்த பலம் தான் என்னை ஊடகத்துறையில் இன்றும் தக்க வைத்துள்ளது. என்று உண்மையை எதிர்கொள்ளத் தயங்குகிறேனோ அன்று நான் காணாமல் போய்விடுவேன்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…உண்மையை எதிர்கொள்ள எப்பவும் தயாராக இருக்கிறேன். அந்த பலம் தான் என்னை ஊடகத்துறையில் இன்றும் தக்க வைத்துள்ளது…//
    உண்மையை எதிர்கொள்ள நீங்கள் தயங்குவதில்லை. அதனால் தான் வருத்தமும் தெரிவித்திருந்தீர்கள். ஆனால் உங்களின் அட்வைசில் ‘சிறுமைப்படுத்தலும்’ என ஒன்றிருக்கிறதே. அங்கேதான் கேள்வி வருகிறது. நீங்கள் ‘ஹம்பேர்கர் சாப்பிட்டார்’ என்ற செய்தியை ஈழத்தமிழர் போராட்டத்தை ‘சிறுமைப்படுத்த’ உபயோகித்தீர்களா இல்லையா? ஆம் என்றால் சொல்லி விடுங்கள். பிரச்சினை இல்லை. இல்லை என்றால் எவ்வாறு என விளக்குங்கள். நான் இதனை முன்னரே சொன்னேன் எனும் பாணீயிலான விளக்கம் அவசியமில்லை. லண்டன் பத்திரிகைகளில் வந்த செய்தியை உங்களின் கருத்துகளை உரமாக்குவதற்கு பாவித்தீர்களா? இல்லையா?

    Reply
  • rohan
    rohan

    கந்தையா, பிசி தயவுசெய்து இரண்டு பேரில் ஒருவராவது நீங்கள் சொல்ல வருவதை விளங்கத்தக்க தமிழில் சொன்னால் நன்றி உடையவனாவேன்.

    உணவு வீணாகும் போது உண்ண வழி இல்லாதவர்களை நினைத்துக் கொள்வது குற்றம் என்று இது நாள் வரை எனக்குத் தெரியாது.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    சாந்தன் இலங்கையில் விடுதலைப் புலிகள் முன்னெடுத்த போராட்டமும் சரி புலம்பெயர்ந்த நாடுகளில் புலிகளுக்கு ஆதரவானவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமும் சரி சிறுமைத்தனமாகவும் கொச்சைத்தனமாகவுமே மேற்கொள்ளப்பட்டது. இவை எப்போதும் பாதிக்கப்பட்ட வன்னி மக்களை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படவில்லை. வன்னி மக்களைப் பணயம் வைத்து புலித்தலைமைகளை காக்கவே போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

    இதில் பரமேஸ்வரன் பேகர் சாப்பிட்டார் என்று சொன்னதால் தான் தமிழரின் போராட்ட மானம் போய்விட்டது என்று காதில் பூச்சுற்ற வேண்டாம். பரமேஸ்வரன் பேகர் சாப்பிட்டாலும் சாப்பிட விட்டாலும் புலிகளாலும் அதன் ஆதரவுத் தலைமைகளாலும் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் சிறுமைத்தனமானது கொச்சைத்தனமானது. இவை வன்னி மக்களைப் பணயம் வைத்து மேற்கொள்ளப்பட்ட சதிகாரப் போராட்டங்களே.

    வழக்கின் முடிவு இதில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. வழக்கின் முடிவு பரமேஸ்வரன் பேகர் சாப்பிட்டதாக முடிவாகி இருந்திருந்தால் புலிகளும் அதன் ஆதரவுத் தலைமையும் முழுப் பழியையும் பரமேஸ்வரன் மீது போட்டுவிட்டு பரமேஸ்வரனினால் தான் தங்கள் போராட்டமே தோல்வியடைந்தது என்று கதைவிட்டு இருப்பார்கள். இன்னுமொருபடி மேலே சென்று இலங்கை அரசு பரமேஸ்வரனுக்கு பணம்கொடுத்து உண்ணாவிரதம் இருக்கச் செய்து பின் அவரைச் சாப்பிடவும் செய்து போராட்டத்தை அழித்தது என்று சொல்லியிருப்பர்.

    சாந்தன் நீங்கள் விரும்புகின்ற பதிலை என்னால் தர முடியாமைக்கு வருந்துகிறேன்.

    Reply
  • ragunathan
    ragunathan

    சாந்தன் தயவுசெய்து எனக்கு நீங்கள் முதலில் குறிப்பிட்ட சம்பவத்துச் செய்தியை எங்கு பார்க்கலாம் என அறியத் தாருங்கள். அதில் ஒரு தேவை உள்ளதால் கேட்கிறேன். கூகிளில் தேடி கண்டறிய முடியவில்லை.

    Reply
  • Information
    Information

    Parameswaran Subramanyam
    An article (9 October 2009), ‘Hunger striker’s £7m Big Mac’, reported claims that Mr Subramanyam was caught secretly eating burgers while on hunger strike during the Tamil protest in London, wasting significant police costs. We now accept that there was no truth in these allegations and we and other media have agreed to pay him damages and have apologised to Mr Subramanyam for the distress and embarrassment caused.

    Read more: http://www.dailymail.co.uk/home/article-1298683/Parameswaran-Subramanyam.html#ixzz0vGJpx0P9

    Parameswaran Subramanyam – Apology

    Published: 29 Jul 2010
    OUR article of 9 October 2009 falsely alleged that throughout a 23 day hunger strike, Mr Parameswaran Subramanyam secretly ate takeaway burgers when dishonestly claiming he was on hunger strike in support of Sri Lankan Tamils, in a campaign which was policed at considerable expense and caused the police to waste public money.
    We now accept that these allegations are totally untrue. Mr Subramanyam, whose sole aim has always been to promote the Tamil cause, did not eat any food at all during his hunger strike.

    We apologise to Mr Subramanyam and his family for any upset and embarrassment caused and are paying him a substantial sum in damages.

    Read more: http://www.thesun.co.uk/sol/homepage/news/3073797/Mr-Parameswaran-Subramanyam-Apology.html#ixzz0vGKcBgjo

    Reply
  • Ambalavanar
    Ambalavanar

    இவ்வழக்கு நீதிமன்றத்தில் நடத்தப்படவில்லை. வழக்கு குறிக்கப்பட்ட திகதியில் வாபஸ்பெறப்பட்டது.

    பொலிஸ் infra-red கமராவினால் பதிவு செய்த தகவல்களை ஊடகங்களுக்கு கொடுக்க மாட்டார்கள் காரனம் இது பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைமீறலாக பயன்படுத்தப்பட வாய்ப்புண்டு. எனவே பொலிஸார் அந்த பதிவுகளை வெளியிட விரும்பினாலும் வெளியிட முடியாது.
    பத்திரிகைகளுக்கு பொலிஸாரிடம் இருந்து வீடியோப் பதிவை பெற முடியாதததால் நீதிமன்றத்திற்கு வெளியே இரு தரப்பும் உடன்பாட்டுக்கு வந்தன.

    உண்ணாவிரதம் இருந்தவர்கள் 23 நாட்கள் தேக ஆரோக்கியத்தோடு இருப்பதென்பது சாத்தியமில்லை. உண்ணாவிரதிகளைப் பார்வையிட்ட டொக்டர்கள் அவர்களுக்கு குளுக்கொஸ் கலந்த நீர் கொடுத்ததாக எனது நண்பர்களிடம் கூறியுள்ளனர். உண்ணாவிரதிகளை பலியிடுவதற்கல்ல, அவங்களைக் காப்பாற்றவே தாம் நியமிக்கப்பட்டதாக டொக்டர்கள் கூறியுள்ளனர்.

    நாடுகடந்த தமிழீழப் பாராளுமன்றத்திற்கு போட்டிபோட்ட தீவிர புலி ஆதரவாளர் ஒருவர் சொன்னார், உண்ணாவிரதத்தில் இடம்பெற்ற கூத்துகளாலேயே தமிழர்கள் யாரும் இந்த வழக்கை நடத்த முன்வரவில்லை என. மேலும் உண்ணாவிரதம் இருந்தவர்கள் உணவு உட்கொண்டவர்கள்தான் ஆனால் அதை நிரூபிக்க ஆதாரங்கள் இல்லை என்றும் கூறினார்

    இந்தவழக்கில் பரமேஸ்வரன் தப்பித்தது நல்லது.. போராட்டமே தவறானபோது பரமேஸ்வரன் பேகர் சாப்பிட்டார் என்று சொல்லி பழியை ஒரு தனிமனிதர் மீது போடமுடியாது

    Reply
  • thurai
    thurai

    இந்த நீதிமன்றத் தீர்ப்பை நாம் எல்லோரும் ஏற்றுள்ளோம், ஏற்கின்றோம். இதேபோல புலிகள் பயங்கரவாதிகள் என முழு உலகமும் சொல்லியும் அதனை ஏற்காதவர்கழும் இங்கு வந்து எழுதுகின்றனர். உலகம் சொல்லும் முன்பே இணையத்தளங்களில் எழுதியவர்கழும், எழுத அனுமதித்த தேசம் ஆசிரியர் குழுவும், பரமேஸ்வரனிற்கு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றத்திலும் பார்க்க தமிழர்களிடம் முன்னோடிகள்தான்.

    துரை

    Reply
  • Ajith
    Ajith

    Dear Mohamed Nisthar,
    During the period of hunger strike period some elements sponsored by Sinhala regime tried to infiltrate inside the tent as supporters with alcohol and food to descredit this campagin. Like that several times they made their attempt to descredit this campagin. It is an pen fact that Rajapakse regime and the elements who are working in UK tirelessly involved in this effort. In today’s business world, it is posssible to buy politicians and journalists simply for money.

    Reply
  • palli
    palli

    என்னடா தமிழா இது? நான் உன்ணாவிரதத்தில் சாப்பிடவில்லை என கோட்டில்தான் நிருபிக்க வேண்டிய நிலை, அதுக்காக பரமேஸ்வரன் சந்தோசபட முடியாது, காரணம் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு இந்தபட்டிணி போராட்டமும் ஒரு காரனம்தானே,

    Reply
  • thurai
    thurai

    பல்லி, கோட்டில் நிரூபித்ததுமில்லை நஸ்ட ஈடும் கிடைத்துள்ளது. போராட்டத்தை நடத்தியதாகச் சொல்லி புலிக்காக வேலை செய்தவர்கழும் தேடியது பணம்.போராட்டம் தோற்று விட்டதே தமிழரை உண்ணாவிரதம் இருந்தாவது காப்போமென செயற்பட்டவரிற்கும் கிடைத்தது பணம். இருபகுதியாலும் ஈழத் தமிழரின் அழிவைக்காக்க முடியவில்லை. எனவே புலிகள் ஆயுதமெடுத்தாலும் பணம், உண்ணாவிரதமிருந்தாலும் பணம். இப்போ ஒருவர் நடைபயணம் செய்கின்றார் அவரைப் பார்ப்போம்.

    அவர் நடக்கும்போது அவரிற்குத் தாகமில்லை. ஆனால் புலிகளின் தமிழீழ தாகம் போய்விட்டதுபோலும். அவர் கூறுகின்றார் தமிழர்களின் தாகம் தமிழீழதாயகமென்று.

    துரை

    Reply
  • thurai
    thurai

    இன்றைய உலகில் பணத்திற்கு யாரையும் வாங்கலாம் என்பது அஜீத்தின் கருத்து அதுவும் உண்மைதான். ஆனால் அரசியல் அறிவோ, சரித்திர உண்மைகளோ தெரியாமல் வாழும் புலம் பெயர் தமிழினத்தை, சிங்கள்வர்களிற்கு எதிரான துவேசத்தை வளர்த்து, தமிழீழ விடுதலை என்னும் வெறியூட்டி வீதியில் இற்க்கியது சரியான செயலா?

    இந்தச் செயல்களினால் ஈழத்தமிழினம் சிங்களவரின் பகைமையை மட்டுமல்ல உலக மக்களின் பகைமையையும் தேடியுள்ளதென்பதை யாரும் மறுக்க முடியுமா? இதற்கெல்லாம் யார் பொறுப்பேற்க வேண்டும். இவர்கள் இனியாவது திருந்துவார்களா?

    துரை

    Reply
  • Anonymous
    Anonymous

    Dear all writers, i am very much proud all of you.you people never appriciate any person, what he trying to do or his intention,In our community habbit never change, sinalese still victory from veerapandian to untill VP. who else in future we donot know when you all going correct support good things dear writers

    Reply
  • Ajith
    Ajith

    Dear Palli/Thurai,
    It is not only Parameswaran but all tamils including you, me and Jeyapalan & others cannot be happy because all are responsible for the 1958 masscre to mullivaygal massacre or even for the establishment of “Thampan pola Patna” village which is just 9km from Keerimaliby Sinhala buddhist fundamentalism.
    What you all are trying to do is just put the whole blame on Pirabakaran and trying to escape from your responsibilty. If Pirabakarn can take through to the current stage where were you all until now to stop him. If you all are the alternatives to Pirabkaran why couldn’t unite the tamils under your leadership to stop Pirabakaran. LTTE was not the major force when he started his movement compared to other movements in terms of numbers, weapons, public support and even the support of Indian establishment. You all had the backing of Sinhala nation, and the great India nation. It is no excuse for you all to say that this and that for your inability and your failure to convince people because of your opportunistic politics. First analyse yourself why are wrong and what contributed to your mistakes. Your sarcastic comments and personal anger aganst LTTE or Pirabakaran does not going to benefit any one else other than the Sinhala fundamentalism.

    Reply
  • பல்லி
    பல்லி

    //இப்பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில் பரமேஸ்வரன் உண்ணாவிரத நேரத்தில் உணவருந்தினார் என்பதை நானும் நம்பியிருந்தேன். அதற்காக எனது மனவருத்தத்தை பரமேஸ்வரனுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.– த ஜெயபாலன்//

    இதில் வருத்தம் கொள்ளும் அளவுக்கு எதுவும் இல்லை; காரனம் தேசம் சார்பாய்தான் பல்லி அன்று கருத்து எழுதினேன்; அதில் மிக நிதானமான கருதாளருக்கு எதிராகவே என் கருத்துக்கள் இருந்தது, அதில் பல்லி என்ன புலியா? என கூட கேலிகூட வந்தது, இருப்பினும் ஒரு செய்தி வருகிறபோது அதை விமர்சிப்பது நாம் இந்த சமூகத்துக்கு ஒரு தெளிவை கொடுப்பதாகவே இருக்கிறது;

    //கூகிளில் தேடிப்பார்த்தால் கிடைக்கலாம். //
    உன்மைதான் சாந்தன் இப்படி பல கருத்துக்களை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தாருங்கள். அதுகூட பல்லி போன்ற உலகத்தை புரிந்துகொள்ள ஆசைபடுபவர்களுக்கு உதவும்; இதில் சந்திரராஜா, பார்த்திபன் போல் சாந்தனும் பலதகவலை தருவதில் தேர்ச்சி உள்ளவர்; ஆனால் அதை உங்கள் வாதத்துக்கு சாட்சியாக இல்லாமல் இந்த சமூகத்துக்கு உதவவும் வகையில் தரலாம் என்பது பல்லியின் நட்பான வேண்டுகோள்;

    //அவர்களுக்கு சார்பான அமைப்புகளும் பரமேஸ்வரனுக்கு உதவ முன்வரவில்லை//
    பி சி இதில் நாம் ஆச்சரியபட என்ன இருக்கிறது ஓடும் குதிரைமீது பணம் செலுத்துபவர்கள், ஓடாது என தெரிந்த பின் இப்படி கிறுக்குதனம் செய்வார்கள், ஆனால் அரசியலில் அதுவும் தமிழர் அரசியலில் பல குதிரைகளை நாம் அடையாளபடுத்தி இருக்கிறோம்; ஆனாலும் எமது சமூகம் ஓடாத கொதிரைமீதுதான் ஆசை கொள்கிறது, அந்த நிலை இன்று சிறிது மாறி வருவதாகவே நான் கருதுகிறேன்;

    //இந்தவழக்கில் பரமேஸ்வரன் தப்பித்தது நல்லது.. போராட்டமே தவறானபோது பரமேஸ்வரன் பேகர் சாப்பிட்டார் என்று சொல்லி பழியை ஒரு தனிமனிதர் மீது போடமுடியாது//
    இதுவே என் கருத்தும்; காரனம் தனிமனிதர் துதி பாடல் விலக்கபடவேண்டும், அது தலமையாக இருந்தாலும் சரி சமூகமாக இருந்தாலும் சரிதான்; நாம் ஒரு சமூகம் பற்றியே சிந்திப்போமானால் பல பரமேஸ்வரங்கள், பிரபாக்கள் காணாமால் போய்விடுவார்கள்? இதுக்கு பல உவமைகளை சொல்லலாம், அதுபற்றி பேசும்போது பார்க்கலாம்;

    //நீங்கள் ‘ஹம்பேர்கர் சாப்பிட்டார்’ என்ற செய்தியை ஈழத்தமிழர் போராட்டத்தை ‘சிறுமைப்படுத்த’ உபயோகித்தீர்களா இல்லையா? //
    சாந்தன் ஒரு கட்டுரை என்பது சில நம்பதகமான தகவலுடன்தான் இங்கே வருகிறது, அதன்பின் அதன் விமர்சனமே அதை தெளிவு படுத்துகிறது, இதில் எப்படி ஒரு தனிமனிதர் மூலம் பிழை சொல்லமுடியும்; ஜெயபாலன் ஒரு பிரபல்யமான பத்திரிகை செய்தியுடந்தான் இந்த கட்டுரையை தந்தார், ஆனால் ஒரு சமூக பிரதனிதியாக போராட்டத்தில் குதித்த பரமேஸ்வரன் இன்று தனது சுய அந்தஸ்த்துக்காய்தான் கோட்டில் வழக்கு நடத்தினார் என்பது அவரது பக்கவாதம், ஆக அதன்பின் அவர் இந்த சமூகத்தை மறந்து விட்டார் என்பது மறுக்க முடியாது, அவர் தன் வழக்கில் எடுத்த கவனம் மே 18க்கு பின் தமிழ் சமூகம்மீது இல்லை, நான் சாப்பிடவில்லை என்பதை நிருபிக்க பரமேஸ்வரன் முயன்று வெற்றி பெற்றார், ஆனால் அவரை போன்றோரால் எத்தனை ஆயிரம் உயிரை பலி கொடுத்தும் எம் சமூகத்துக்கு இன்றுவரை எதுவுமே இல்லை என்பதை என்றாவது பரமேஸ்வரன் சிந்திப்பாரா?? அவர் சாப்பிடார் என்பதைவிட அவரது போராட்டமே தவறானது என்பதை ஏன் தாங்கள் புரிந்துகொள்ள மறுக்கிறியள்,

    இப்படியான போராட்டங்கள் சர்தேச சமூகத்தை எம்பக்கம் திரும்பி பார்க்கவே மேற்கொள்ளலாம்; ஆனால் சர்வதேசத்துக்கே அனைத்தும் தெரிந்து ஒரு அமைப்பை தடைசெய்ய பின் அதை காப்பாற்ற அகிம்சையில் போராடுவது கூட நாகரிகமான செயலாக எனக்கு படவில்லை, இப்போது பாருங்கள் ஒருவர் வேலை எதுவும் இல்லாமல் நடக்க ஆரம்பித்து விட்டார், இவர் ஜெனிவாவுக்கு போய் புதிதாய் எதை சொல்ல இந்த கிறுக்குதனம்; நாளை ஒருவரும் யாராவது தன்னை வந்து எழுப்பி தமிழருக்கு என்ன பிரச்சனை என எழுப்பும்வரை நான் தூங்கும் போராட்டத்தை தொடங்குகிறேன் என சொல்லி அதை நாலுபேர் ஜி ரி வியில் ஓகோ என புகழ்ந்து ஒரு சோம்பேறி தனமாக புறப்பட்டால் இதுவரை இறந்துபோன (போராடி) உயிர்களின் மதிப்புதான் என்ன, சர்வதேசம் எதை சொன்னாலும் நாம் கேக்க மாட்டோம் ஆனால் நாம் சொல்லுவதை சர்வதேசம் கேக்க வேண்டும் என நாம் எப்படி சொன்னாலும் அது சரியானதல்ல, தமிழர் தலைகுனிவு இன்று அல்ல, அது நடந்து வருடம் பல கடந்து விட்டது;

    //இவ்விடயத்தை நான் கேள்விப்பட்டபோது எனது நண்பர்கள் ஆணித்தரமாக மறுத்திருந்தனர். நான் அவர்களைக்கூட நம்பாமல் தேசத்தையும் , ஜெயபாலனையும் நம்பினேன்!//
    சாந்தன் ஒரு வழக்கு என்று வந்து விட்டால் அதைவெற்றி தோல்வி நிர்னெயிப்பது நீதிதேவி என்பது போல் உங்கள் கருத்து அமைகிறது, இது தப்பு, அங்கு வாதம் இருதரப்பு வக்கில்களின் வாதமுமே முடிவு செய்கிறது, உலகத்தில் 80வீதமான குற்றவாளிகள் நிரபராதிகள் என வழக்கு முடிகிறது என்பது தாங்கள் அறியாததா? புலிகள் அமைப்பால்கூட பரமேஸ்வரன் ஒதுக்க பட்டுவிட்டார் என்பதுதானே உன்மை சாபாட்டு வழக்கில் பரமேஸ்வரனுக்கு வெற்றி; போராட்ட வழக்கில் தமிழர்க்கு அவரால் தோல்வி; சாந்தன் சேது கூட வழக்கில் வெற்றி பெற்றதை பல்லி உங்களுக்கு நினைவுபடுதுகிறேன்;
    தொடரும் பல்லி;;;;

    Reply
  • thurai
    thurai

    அஜீத், புலிகள் மாற்று இயக்ககங்ளை அழிக்கும் போது இலங்கை அரசு யாருக்குமுதவி செய்யவில்லை. ஆனால் இந்தியாவுடன் புலிகள் போரிடும் போது, புலிகளிற்கே இலங்கை அரசு உதவியது ,புலிகள் இலங்கை அரசிடம் உதவிகள் பெற்றனர். 25 வருடங்களிற்கு முன்பே புலிகளின் இந்தச்
    செயல் தமிழர்களின் எதிகாலத்துக்கு உகந்ததல்ல என் குரல் கொடுத்தவ்ர்கள் தாம் இங்கு அநேகர்.

    தற்போதுள்ள நிலமையென்ன? புலிகளின் பொருளதார வளம், தமிழ் மக்களின் அழிவில் தேடிய பணமும் அதற்கு உரியவர்கழுமெங்கே? இலங்கை அரசுடன் பேரம் பேச எங்களிடம் அரசியல் தலைமையில்லை அழித்தவர் யார்?

    58 ல் நடந்ததும் அதனதை தொடர்ந்ததும் புலிகளின் வளர்ச்சிக்கு வழிகாட்டினவே தவிர தமிழர்களிற்கல்ல. இப்போ நடப்பது அதிகார மோகம் கொண்ட இராசபக்சவுடன் தமிழர்களின் உயிர்களையும், பொருளாதர வளத்தையும் சூறையாடிய புலிகளின் கூட்டாட்சியே.

    இவர்களை எங்களால் எதிர்க்க போதிய பலமில்லை. எதிர்காலமே பதில் சொல்லும். அதற்கு சிங்கள தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளே அவசியம். தமிழர் என்று கோசம் போட்டால் இன்னும் தொடரும் தமிழரின் அழிவுகளே.

    துரை

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…அதில் ஒரு தேவை உள்ளதால் கேட்கிறேன். கூகிளில் தேடி கண்டறிய முடியவில்லை…//ragunathan
    நானும் தேடினேன். பல குறிச்சொற்களில் தேடினேன், இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட சுட்டிகள் இருக்கின்றன அவற்றுக்குள் இதைத்தேடிப்பிடிப்பது கடினமாக இருக்கிறது. தொலக்காட்சி நிலையங்களுக்கு மின்மடல் அனுப்பலாமா என யோசிக்கிறேன். சாதகமான பதில் கிடைத்தால் அனேகமாக ஒளிப்படப்பிரதிக்கு பணம் கேட்பார்கள் என நினைக்கிறேன். பார்க்கலாம்.

    //…ஆனால் அதை உங்கள் வாதத்துக்கு சாட்சியாக இல்லாமல் இந்த சமூகத்துக்கு உதவவும் வகையில் தரலாம் என்பது பல்லியின் நட்பான வேண்டுகோள்;….//
    சமூகத்துக்கு உதவும் வகையில் தேவையானதை சொன்னால் ‘எவ்வாறு அது உதவும்’ என வாதம் செய்யவேண்டுமல்லவா? அதற்கு சாட்சியாக மேலும் சான்றுகள் தரவேண்டுமல்லவா? அதுதான்! ”எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு”

    //….ஒரு கட்டுரை என்பது சில நம்பதகமான தகவலுடன்தான் இங்கே வருகிறது, அதன்பின் அதன் விமர்சனமே அதை தெளிவு படுத்துகிறது, இதில் எப்படி ஒரு தனிமனிதர் மூலம் பிழை சொல்லமுடியும்; ஜெயபாலன் ஒரு பிரபல்யமான பத்திரிகை செய்தியுடந்தான் இந்த கட்டுரையை தந்தார்,…./
    பல்லி நான் முன்னரே பின்னூட்டத்தில் சொல்லி இருப்பதைப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இங்கே ஜெயபாலனின் செய்தி அல்ல பிரச்சினை. அதை அவர் ’மெருகூட்டிய’ விதம்தான் பிரச்சினையே. மேலும் கட்டுரையுடன் நிற்காமல் பின்னூட்டத்திலும் தனது ‘மெருகூட்டலை’ தொடர்ந்தது. ஆனால் ஒரிஜினல் செய்தியில் அம்மெருகூட்டல்கள் இல்லை!

    //…ஆனால் ஒரு சமூக பிரதனிதியாக போராட்டத்தில் குதித்த பரமேஸ்வரன் இன்று தனது சுய அந்தஸ்த்துக்காய்தான் கோட்டில் வழக்கு நடத்தினார் என்பது அவரது பக்கவாதம்,…//
    ஆதாரமில்லாத செய்தியை கைகால் வைத்து ‘மெருகூட்டி’ துணைக்கு ‘உள்வீடு’, ‘நுணிக்கமான கமரா’க்கள் என செக்ஸ்-அப் பண்ணி போடுவார்கள். ஆளாளுக்கு வந்து தர்ம அடி பின்னூட்டங்கள் போடுவார்கள். ஆனால் பாதிக்கப்பட்டவன் வழக்குப்போட்டால் அதிலும் நளினம்! கடைசியில் அவன் வென்றுவிட்டால் ‘சுய அந்தஸ்த்து’ ! நல்ல வேடிக்கை.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    நான் சோதிலிங்கத்தின் கருத்துடன் உடன்படும் வேளை இன்னுமொரு கருத்தை முன்வைக்க விரும்புகிறேன். பரமேஸ்வரனும் கொம்பனியும் போரை நிறுத்து என்றும் தமிழ்மக்களுக்காகவே போராடுகிறோம் என்றும் நீலிக்கண்ணீர் வடித்தவார்கள் அதே மக்களை புலிகள் பயணக்ககைதிகளாக்கி கொலையும் செய்தபோது அதற்கெதிராக யாராவது ஒருவர் ஒரு கோரிக்கையை வைத்தார்களா? உண்ணாவிரதம் கம்பேகர் சாப்பிட்டாவது இருந்தீர்களா? மக்கள் விரோதிகளே! மக்களைச்சாட்டி வயிறு வளக்கும் நச்சுப்பூச்சிகள் தான் பரமேஸ்வரனும் கொம்பனியும்: இப்போ ராஜபக்ச பரமேஸ்வரனை கூப்பிட்டு நல்ல பதவிதருகிறேன் என்றால் தான் கம்பேகர் சாப்பிட்டு விசயத்தை பரமேஸ்வரன் சொல்லாமலா விடுவார். குத்துக்கரணம் அடிக்கிறார்கள் குட்டிப்புழுகர்கள்.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    முக்கியமான ஒரு விடயத்தை யாரும் மறந்து விடக்கூடாது. பரமேஸ்வரன் யாருடன் போட்டியிட்டு வென்றார் என்று யாராவது சொல்ல முடியுமா? உண்மையில் பரமேஸ்வரன் தோற்றார் என்பதுதான் உண்மை. காரணம். இவ்வழக்குக் கோட்டுக்குப் போயிருந்தால் அங்கு பரமேஸ்வரன் வென்றிருந்தால் இதைவிடப் பன்மடங்கு பணம் கிடைக்கப் பெற்றிருக்கும். இதில் நட்டப்படுவது இருபத்திரிகைகளாக இருந்திருக்கும். பரமேஸ்வரன் தோற்றிருந்தால் பரமேஸ்வரனிடம் எடுப்பதற்கு ஒன்றும் இல்லை. அப்போதும் பணவிழப்பு பத்திரிகைகளுக்குத்தான். காரணம் நீதிமன்றம்; வழக்கறிஞர் செலவு எனப் பல. இதைவிட காலம்> நேரம் என்று பத்திரிகை ஏராளமாக இழந்திருக்கும். எம்மை ஆண்ட வெள்ளையன் வெறும் முட்டாளில்லை. பரமேஸ்வரன் வென்றாலும் சரி தோற்றாலும் சரி இழப்பு பத்திரிகைகளுக்குத்தான் என்பதை பத்திரிகைகள் உணர்ந்திருந்தன. அத்துடன் பொலிஸ் தமது ஆய்வுக்கு என்று எடுத்த படங்களை ஒருபத்திரிகையின் தேவைக்குக் கொடுக்காது. இதுவும் பத்திரிகைக்குத் தெரியும். பரமேஸ்வரனின் வழக்கை எடுத்தவர் சம்பளம் வாங்காத சட்டத்தரணி. பத்திரிகையைப் பொறுத்தமட்டில் இத்துடன் முடிந்தது அவர்களுக்கு வெற்றியே. இதைத்தனது வெற்றி என்று தம்பட்டம் அடிப்பது முட்டாள் தனமானது.

    மற்றும் மக்களுக்காகப் போராடுகிறேன் என்று எழுந்து> விழுந்து கதைத்த பரமேஸ்வன் பிரபாகரன் போனதின் பின் எங்கு போனார். இது பரமனுக்குத்தான் வெளிச்சம். மக்களுக்காகப் போராடினேன் என்பவர் அதன்பின் தமிழ்மக்களின் அவலநிலை துடைக்க என்ன செய்தார்?

    தன்மேலுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் தீக்குளிப்பேன் என்று பகிரங்க அறிக்கைவிட்டது சட்டவிரோதமானது என்பது உமக்குத் தெரியாதா? உள்ளுக்குத் தள்ளக் கனநேரமாகாது. அதுமட்டுமல்ல தற்கொலை செய்வதற்கும்: தம்மைத்தாமே தீவைப்பதற்கும் இவர் போன்றவர்கள் தான் காரணம். இளைஞர்களைத் தூண்டிவிடுகிறார்கள் என்றும் வழக்குப் போடலாம்.

    மொத்தத்தில் வழக்கை நடத்தி பணம் செலவளிப்பதை விட தூசுக் காசை எறிந்துவிட்டுப் விட்டார்கள் என்பதே சரியானது. இனிச் சொல்லுங்கள் வென்றது பத்திரிகையா? பரமேஸ்வரனா? இதில் சம்பாதித்தது பத்திரிகையும்தான் என்பதை யாரும் மறக்கக் கூடாது. கம்பேகர் பரமேஸ்வரன் விடயத்தைப் பார்க்க குறைந்தது எத்தனை தமிழர்கள்: வெள்ளையர்கள் இப்பத்திரிகையை அதிகமாக வாங்கியிருப்பார்கள். அதில் கிடைத்த தொகையை வைத்துப் பார்த்தாலும் பத்திரிகைக்கு இலாபமே தவிர நட்டமல்ல. ஆனால் இத்துடன் முடிந்து விட்டது என்று பரமேஸ்வரன் நினைக்கக் கூடாது. நாளை பொலிஸ் பிரச்சனை அப்படி இப்படி தமிழர் பிரச்சனை என்று வரும்போது பொலிஸ் எடுத்து படங்களை வெளியில் போடவோ எதிராகப் பாவிக்கவோ தயங்காது. தொலை உருப்பெக்குக் கண்ணாடிகளைப் பாவித்துத் துல்லிதமாகப் பொலிஸ் நிச்சயமாக படம் எடுத்திருப்பார்கள். இதில் சந்தேகமே இல்லை. இந்த வழக்கினூடு பரமேஸ்வரன் தனக்குத்தானே ஆயுள்தண்டனை விதித்திருக்கிறார் என்பதுதான் சரியானது. கூட்டிக்கழித்துப் பார்த்தால் இறுதியில் வென்றது பத்திரிகைகளே.

    Reply
  • Siva
    Siva

    //இதில் சம்பாதித்தது பத்திரிகையும்தான் என்பதை யாரும் மறக்கக் கூடாது. கம்பேகர் பரமேஸ்வரன் விடயத்தைப் பார்க்க குறைந்தது எத்தனை தமிழர்கள்: வெள்ளையர்கள் இப்பத்திரிகையை அதிகமாக வாங்கியிருப்பார்கள்//குசும்பு
    நீங்கள் சொல்வது சரி அந்த போராட்டகாலங்களில் பிபிசி ரேடியோ 4 ல் நடைபெற்ற சம்பாசனைகளை கேட்டிருந்தால் பரமேஸ்வரன் தனக்கு தானே ஏதம் செய்திருப்பார்
    வெளிநாட்டுகாரர்கள் எமக்கு கொடுக்கும் தொல்லைகள் பற்றியும் பாராளுமன்ற சதுக்கத்தில் ஊத்தை பொடுவது பற்றியும் பொலீஸ் பண விரயம் பற்றியும் தமிழர்கள் செய்த அரச உதவிப்பண மோசடி கொலைகள் களவில் தமிழர்கள் இளைஞர்கள் கோஸ்டி மோதல்கள் அதைவிட பாரிய கிரடிற்காட் மோசடிகள் போன்றவைகள் பற்றியும் இதற்கும் புலிகளின் ஆதரவாளர்களுக்கு இருந்த தொடர்புகள் பற்றியும் பலவாறு பேசப்பட்டு இவர்களுக்கு அடித்து துடைத்து எறிய வேண்டும் என பல பிரித்தானியர்கள் கருத்து தெரிவித்திருந்தனர் இதைவிட புலிகளை தடைசெய்யப்ட்ட இயக்கம் பயங்கரவாதிகள் என்றும் இவர்கள் மீது ஈவு இரக்கம்காட்டக்கூடாது என்றும் இவர்கள் தலிபானுடன் ஒப்பிட்டு இங்கும் பெண்களையும் குழந்தைகளையும் பொலீஸ் தடப்புக்களின் முன்பாக பணயம் வைக்கும் நாகரீகம் அற்றவர்கள் என்நறல்லாம் பேசப்பட்டடிருந்தது

    Reply
  • PALLI
    PALLI

    //பாதிக்கப்பட்டவன் வழக்குப்போட்டால் அதிலும் நளினம்! கடைசியில் அவன் வென்றுவிட்டால் ‘சுய அந்தஸ்த்து’ ! நல்ல வேடிக்கை.//
    எது வேடிக்கை?? பரமேஸ்வரன் எப்படி பாதிக்கபட்டார், அவரது ஏதோ ஒருசெயல் ஒரு ஊடகத்துக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது என்பது யார் செய்த தவறு?? யார் இந்த பரமேஸ்வரன்?? இவர் உண்ணாவிரதம் இருக்க காரணம் உன்மையில் ஈழதமிழர் அவலமா? அப்படியாயின் இன்று இவரது செயல்பாடு என்ன? யார் வேண்டுமானாலும் பேசலாம் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்னும் விபரீதபுத்திதானே இந்த பட்டினிபோர், அதன் தொடர்ச்சி வருடம் ஒன்று தாண்டி ஒருவர் தெரு தெருவாய் நடக்க ஆரம்பிக்கிறார், (கவனிக்கவும் குலனின் கட்டுரையை)

    ஏன் இவர்கள் தமது சொத்துக்களை அனைத்தையும் இழந்த எம்மவர்க்காக நான் தியாகம் செய்கிறேன் என ஒரு போராட்டத்தை செய்தால் அதை பலர் பின்பற்றினால் அந்த மக்கள் வாழ்வுக்கு வழி கிடைக்குமே, அதை விட்டு திருப்பதியில் முடியை காணிக்கை செய்வது போல் தேவையற்றதை செய்வதால் குலன் சொல்லுவது போல் அவர்கள் மட்டுமல்ல நாமும் குறுக வேண்டிய நிலை வரும், லண்டனில் இருந்து ஜெனிவா நடைபயணம் இடையில் பாரிஸ்க்கும் செல்வார் என்ன இது சின்ன பிள்ளைதனம்; தெரு தெருவாய் தேர் இழுப்பதுக்கும் இதுக்கும் என்ன வேறுபாடு, தேருக்கு தேங்காயை உடைக்கிறார்கள்? இவருக்கு ஜி ரி வியில் மட்டையை உடைக்கிறார்கள்? இப்படியான திருவிழா கோலத்தால்தான் இன்று அசின் கூட ஈழதமிழர் அரசியலில் கவர்ச்சி அரசியல் செய்கிறார், இவரது நடை பயனத்தால் எந்த ஒரு பயனும் அவதிபடும் தமிழனுக்கு கிடைக்காது, அவருக்கு கொழுப்பு சத்தோ அல்லது இரத்த அழுத்த வியாதியோ இருந்தால் அது குணம் அடையும் என்பது உன்மை உன்மை;
    தொடரும் பல்லி,,,

    Reply
  • BC
    BC

    //சிவா- இவர்கள் தலிபானுடன் ஒப்பிட்டு இங்கும் பெண்களையும் குழந்தைகளையும் பொலீஸ் தடப்புக்களின் முன்பாக பணயம் வைக்கும் நாகரீகம் அற்றவர்கள் என்றெல்லாம் பேசப்பட்டடிருந்தது//
    அவர்கள் அப்படி பேசியதில் எந்த தவறும் கிடையாது .போராட்டங்களில் பங்கு பற்றியவர்கள் அந்த மாதிரி புலி ஆதரவு தொலைகாட்சிகளினால் திட்டமிட்டு உருவாக்கபட்டார்கள். மற்றும் திருவிழா, கானிவேல் மாதிரி நினைத்து கலந்து கொண்டோரும் உள்ளனர்.

    //அசின் கூட ஈழதமிழர் அரசியலில் கவர்ச்சி அரசியல் செய்கிறார்//
    அசின் செய்த கவர்ச்சி அரசியலினால் 300 இலங்கை தமிழர்கள் கண் அறுவைசிகிச்சை பெற்றனர், 150 யாரும் அற்ற பெண்கள் தத்தெடுக்கப்பட்டனர், சிவந்தன் நடப்பதால் இலங்கை தமிழர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்? வெளிநாட்டில் மானம் தான் போகுது.

    Reply
  • Kulan
    Kulan

    பரமேஸ்வரன் உண்ணாவிரதம் இருந்ததையோ: சிவந்தன் நடப்ப தையோ நான் குறை கூறவில்லை. அதை சரியான முறையில் எட்டவேண்டிய தளங்களுக்கு எட்டுமாறும்: ஒரு தாக்கத்தை: எமது நோக்கத்தை ஆழமாக உலகமக்களின் மனங்களில் பதியுமாறும் நடவடிக்கைகள் அமைவது முக்கியம்.உ+ம்: உண்ணாவிரப்போராட்டுங்கள் நாம் வாழும் நாட்டுமக்களுடன் அவர்களையும் தயார்படுத்தி இணைத்துப் போராடும் போது அதன் தாக்கம் மிக அதிகம். இன்னொருநாட்டில் தெருக்களை தடைசெய்து மனிதமந்தைகள் போன்று அந்த நாட்டு மக்களுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தும் போது எமது போராட்டத்தின் மீது பரிதாபம் பற்று ஏற்படுவதற்குப் பதிலாக வெறுப்பே ஏற்படும்: எங்களுக்குத் தெரியும் நீங்கள் போராடுகிறீர்கள் என்று. ஆனால் தெரியப்படுத்த வேண்டியவர்களுக்கு ஆணித்தரமாகச் சொல்லுங்கள் என்றுதான் சொல்கிறோம்: எமக்குத் தெரிந்து ஆகப்போவது ஒன்றுமில்லை. எம்மக்களிடம் பணம்பறிப்பதைத் தவிர. அதனால்தான் பிரித்தானியர்கள் புலிகளை அவமதித்து எழுதினார்கள்: போராட்டத்தின் நோக்கம் இங்கு திசைமாறி ஏற்படும் எதிர்விளைவுகளைப் பார்த்தீர்களா?
    பல்லி! உண்மையிலே எம்தமிழ் மக்களின் மதிநுட்பமற்ற செயல்களால் நாம் கூனிக்குறுகித்தான் போகிறோம்:தமக்குக் கிடைக்கும் சமிஞ்ஞைகளைக் கூடக் கிரகிக்க முடியாதவர்களாக இருக்கிறார்களே
    சிவா! நன்றி…வெள்ளையர்களின் பின்நோட்டங்களில் இருந்தே நாம் ஒன்றைப் புரிந்து கொண்டிருக்கவேண்டும் பரமேஸ்வரனின் கம்பேகர் செய்தி வெளிவந்தநாள் பத்திரிகைகள் வளமையை விட அதிகமாகவே சம்பாதித்திருப்பார்கள். இந்தவளக்கில் வரும் பணம் எவ்வளவு பரமேஸ்வரனைச் சென்றடையப்போகிறது என்பதுதான் கேள்வி. என்மதிப்பீட்டில் மொத்தக் கணக்கில் பரமேஸ்வரன் தோல்வியாளனே.

    Reply
  • PALLI
    PALLI

    //அசின் செய்த கவர்ச்சி அரசியலினால் 300 இலங்கை தமிழர்கள் கண் அறுவைசிகிச்சை பெற்றனர், 150 யாரும் அற்ற பெண்கள் தத்தெடுக்கப்பட்டனர், சிவந்தன் நடப்பதால் இலங்கை தமிழர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்? வெளிநாட்டில் மானம் தான் போகுது.//
    பி சி இது தவறென நான் சொல்லவில்லை, ஆனால் அந்த நிலைக்கு இப்படியான சதிராட்டங்கள் எம் சமூகத்தை கொண்டுவந்து விட்டது என்பதுதான் என் கருத்து; மற்றபட அசின் செய்த நல்லவைகளுக்கு பல்லி அன்றே அடக்கத்துடன் நன்றி தெரிவித்தேன்;

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    குசும்பு. //…..அத்துடன் பொலிஸ் தமது ஆய்வுக்கு என்று எடுத்த படங்களை ஒருபத்திரிகையின் தேவைக்குக் கொடுக்காது. இதுவும் பத்திரிகைக்குத் தெரியும். ….//
    என்னது? ஆய்வுக்கு எடுத்தார்களா? இப்படியும் ஒரு ஸ்பின்னிங் இருக்குதா? இங்கே நடந்த விடயம் லண்டன் மக்களின் வரிப்பனம் 7 மில்லியனுக்கு மேல் செலவு, மக்களுக்கு இடைஞ்சல் எனப்பல இருப்பதாக சொன்னார்கள். கடைசியாக நீதிமன்றம்வரை வந்து நின்றது. இதில் மக்களுக்காக செய்தி வெளியிடும் பத்திரிகைக்காரர்கள் வேறு சம்பந்தம். பத்திரிகைச்சுதந்திரம் வேறு! நீங்கள் என்னடா என்றால் ‘ஆய்வு’ என்கிறீர்கள். பொதுமக்கள்/ பத்திரிகைகள் போன்றவை நீதிமன்றில் நிறுத்தப்படும் போது அவர்களுக்கு சார்பான (குற்றமற்ற தன்மையை நிரூபிக்கும் வகையில்) ஆவணங்கள்/ ஆதாரங்கள் அரசிடம் இருக்குமாயின் அதை தமக்குச் சார்பாக வாதிட அரசிடம் கேட்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. நீதிபதி செய்ய வேண்டியதெல்லாம் பொலிசிடம் ஆவணத்தை இன்ன திகதிக்குள் நீதிமன்றில் சமர்ப்பிக்க கோரவேண்டியதே! அவ்வாறு அவர்கள் தவறும் பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்குள்ளாக வேண்டி வருவதோடல்லாமல் மனுதாரர் சார்பாக தீர்ப்பும் வழங்கப்படும். (மேலதிக விபரங்கள் தேவை எனில் சொல்லுங்கள் எனக்குத் தெரிந்தவர் இவ்வாறான வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்டிருக்கிறார். நீதிபதி பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்து இரண்டு முறை பொலிசார் தவணை வாங்கி இருக்கிறார்கள், கடைசி முறை என்கின்ற எச்சரிக்கையுடன்)//

    /…மக்களுக்காகப் போராடினேன் என்பவர் அதன்பின் தமிழ்மக்களின் அவலநிலை துடைக்க என்ன செய்தார்?….//
    கம்பேர்கர் தின்றான் எனக்குற்றம் சாட்டுவீர்கள். அவன் கோட்டுக்குப் போனான் என்றால் நளினம் விடுவீர்கள். பின்னர் வென்றவுடன் தமிழ்மக்களுக்கு என்ன செய்தான் எனக்கேள்வி கேட்பீர்கள். கோட்டுக்குப் போகவில்லை என்றால் அதைவைத்தே காலத்தை/ கருத்தை ஓட்டலாம் எனக்கனவு கண்டவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லைப் போல் இருக்கிறது!

    //…தன்மேலுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் தீக்குளிப்பேன் என்று பகிரங்க அறிக்கைவிட்டது சட்டவிரோதமானது என்பது உமக்குத் தெரியாதா? உள்ளுக்குத் தள்ளக் கனநேரமாகாது. …//
    நீங்கள் ஒரு பொதுமக்கள் பாதுகாப்பு வழக்கைப்போட்டு அவரை உள்ளே தள்ளுங்கள் பார்க்கலாம்? அவர் என்ன சொன்னார்? தன்னில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் எனத்தானே? நிரூபிக்கப்பட்டதா? இல்லையே? மேலும் அவர் தன்னை தீமூட்டப் போவதாகச் சொன்னால் அவரை ‘தற்கொலை அவதானிப்பில்’ வைத்தியசாலையில் வைப்பார்களே ஒழிய உள்ளே போடமாட்டார்கள்? ஒருவேளை ஸ்ரீலங்காவில் அவ்வாறோ?

    //…மொத்தத்தில் வழக்கை நடத்தி பணம் செலவளிப்பதை விட தூசுக் காசை எறிந்துவிட்டுப் விட்டார்கள் என்பதே சரியானது….//
    3ம் வகுப்பில் ஒரு கதை…நரி….திராட்சை…சீ…சீ…இந்தப்பழம் புளிக்கும்! ஞபகம் வந்து தொலைக்கிறது!

    ///…தொலை உருப்பெக்குக் கண்ணாடிகளைப் பாவித்துத் துல்லிதமாகப் பொலிஸ் நிச்சயமாக படம் எடுத்திருப்பார்கள். இதில் சந்தேகமே இல்லை. இந்த வழக்கினூடு பரமேஸ்வரன் தனக்குத்தானே ஆயுள்தண்டனை விதித்திருக்கிறார் என்பதுதான் சரியானது…//
    ஒரு சுதந்திர நாட்டில் ஒரு மனிதன் என்ன வேண்டும் என்றாலும் ஆசைப்பட உரிமை உண்டு! அதை நான் ஏன் தடுக்க வேண்டும்?
    ——————–

    பல்லி அவர்களே!
    //…எது வேடிக்கை?? பரமேஸ்வரன் எப்படி பாதிக்கபட்டார், அவரது ஏதோ ஒருசெயல் ஒரு ஊடகத்துக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது என்பது யார் செய்த தவறு?? ….//
    ஒரு ஊடகத்துக்கு சந்தேகத்தை ஏற்படுத்தினால் தனிமனிதனில் தவறா? நீங்கள் அதிககாலம் ஸ்ரீலங்காவின் ஆதரவுப் பத்திரிகைகளையே படிக்கிறீர்கள் போல் இருக்கிறது! சரி அவ்வாறு சந்தேகம் வருகிறது என வைத்துக்க்கொண்டாலும் அதற்கு சான்றுகள் தேடி அச்சான்றுகளின் அடிப்படையில் செய்தி வெளியிடல் வேண்டும். அவ்வாறு வெளியிடும் பட்சத்தில் வழக்கு என்று வந்தால் சான்றுகளை வழங்கி அவ்வழக்கை சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். சான்றுகள் எவ்வாறு தமக்கு கிடைத்தது எனச்சொல்லதேவை இல்லை.

    //.. யார் வேண்டுமானாலும் பேசலாம் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்னும் விபரீதபுத்திதானே இந்த பட்டினிபோர்,…..//
    அதே விபரீத புத்தியால்தான் இந்த ‘ஹம்பேகர்’ கதை தொடர்ந்த பத்திரிகைச்செய்தி. அதைவைத்து தேசம் கட்டுரை….நக்கல் நளினப் பின்னூட்டங்கள்…வழக்கு.. நஷ்ட ஈடு. …என வந்து நிற்பது கண்னுக்கு தெரியவில்லையா?

    //…அதன் தொடர்ச்சி வருடம் ஒன்று தாண்டி ஒருவர் தெரு தெருவாய் நடக்க ஆரம்பிக்கிறார், (கவனிக்கவும் குலனின் கட்டுரையை….//
    அதனால் உங்களுக்கு என்ன நட்டம்? ஐ.நா உங்களுக்குச் சொன்னதா இவரால் உங்களுக்கு ‘குறுகல்’ என? போராட்டங்கள் பலவடிவங்களில் இருக்கும் என இங்கே காலம்காலமாய் கதையெல்லாம் வெறும் அளப்புதானா?
    உங்களை யாராவது ‘குறுக்கினால்’ கிளர்ந்தெளுந்து போராடமல் ஐயையோ எங்கட மானத்தை வாங்கிவிட்டான் என ஏன் சொல்லவேண்டும்? ஒருவன் நடக்கிறானாம் இங்கே மானம்போகுதாம்? இதுபோலத்தான் காந்தியின் போராட்டத்தைக் இங்கிலாந்து அரசு (வின்ஸ்ரன் சேர்ச்சில்) கிண்டல் செய்தபோது அங்கே வாழ்ந்துவந்த மேல்தட்டு இந்தியர்களும் சொன்னார்கள்! இந்தாள் உடுப்பில்லாமல் வந்திருக்குது வெள்ளைக்காரன் ‘அரை நிர்வாணப் பக்கிரி’ எனச் சொல்லி மானத்தை வாங்குகிறான் என! (அதற்காக எனக்கு அகிம்சைப்போராட்டத்தில் நம்பிக்கை இருக்கிறது என நினைத்துவிட வேண்டாம்).
    யாழ்பல்கலைக்கழத்தில் உண்ணாவிரதம் இருந்தோரைக் கடத்தியபோது நான் புளொட் ஆதரவாளன் ஆக இருந்தேன். அப்போது நான் உண்ணாவிரத ஆதரவாலன் அல்ல, ஆனால் புலிகள் ‘அகிம்சைப் போராட்டம் கையுடைந்தவனது ஆயுதம்’ என துண்டுப்பிரசுரம் வெளியிட்டபோது அதை எதிர்த்தும் குரல் கொடுத்தேன்!

    //..லண்டனில் இருந்து ஜெனிவா நடைபயணம் இடையில் பாரிஸ்க்கும் செல்வார் என்ன இது சின்ன பிள்ளைதனம்; தெரு தெருவாய் தேர் இழுப்பதுக்கும் இதுக்கும் என்ன வேறுபாடு, //
    போகவேண்டிய பாதை அப்போராட்டத்தில் தாக்கத்தைக் கொடுக்கும் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளைத் தாண்டிச் செல்வது வழமை. அதுவே காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்திலும் நிகழ்ந்தது. காந்தி ‘உப்பை அள்ள’ ஏன் ஊருக்குள்ளால் போகிறார் கடற்கரையால் போனால் கூடிய அளவு உப்பை அள்ளலாமே? என எள்ளி நகையாடியோரும் இருந்தனர். கூகிளில் தேடினால் காந்தி நடந்து சென்றபாதையின் படம் இருக்கிறது.

    பார்த்தீர்களா என் நிலமையை எனது கருத்துகளை நியாயப்படுத்த எனக்கு உவப்பில்லாத போராட்ட முறைகளைக்கூட உதாரணமாகக்காட்ட வேண்டி உள்ளது. (சும்மா ஜோக்தான்)

    Reply
  • Siva
    Siva

    போகவேண்டிய பாதை அப்போராட்டத்தில் தாக்கத்தைக் கொடுக்கும் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளைத் தாண்டிச் செல்வது வழமை. // லண்டனில் மக்கள் செறிவாய்த்தானே இருக்கினம். ஆனால் அது ஒரு தாக்கத்தையும் கொடுக்கவில்லையே….

    கம்பேர்கர் தின்றான் எனக்குற்றம் சாட்டுவீர்கள்.//
    ஒருத்தரும் குற்றம் சாட்டவில்லை. அவர் திண்டவர்தான். பத்திரிகைச் செய்தி உண்மை என எல்லாருக்கும் தெரியும். ஆனால் ஆதாரத்தை வைக்காதபடியால் சட்டப்படி தப்பிவிட்டார். மற்றப்படி பேகர் பரமேஸ்வரன்தான். அவருக்கு வாழ்நாள் பூரா பேகர் புகழ் தொடரத்தான் போகுது.

    அடுத்தவர் போகும் பாதை தெரியாமலே நடக்கிறார் நடக்கத் தொடங்கமுதல் கூகிளில் பாதையை பார்த்திட்டு நடக்கத் தொடங்கியிருக்கலாமே

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ஒருத்தரும் குற்றம் சாட்டவில்லை. அவர் திண்டவர்தான். பத்திரிகைச் செய்தி உண்மை என எல்லாருக்கும் தெரியும். ஆனால் ஆதாரத்தை வைக்காதபடியால் சட்டப்படி தப்பிவிட்டார். மற்றப்படி பேகர் பரமேஸ்வரன்தான். அவருக்கு வாழ்நாள் பூரா பேகர் புகழ் தொடரத்தான் போகுது….//
    உங்கள் ஆசைக்கு குறுக்காக நான் நிற்கமாட்டேன்!

    //….அடுத்தவர் போகும் பாதை தெரியாமலே நடக்கிறார் நடக்கத் தொடங்கமுதல் கூகிளில் பாதையை பார்த்திட்டு நடக்கத் தொடங்கியிருக்கலாமே…//
    உங்களுக்கு லண்டனில் இருந்து ஜெனீவா போகும் சரியான பாதை தெரிந்தால் சொல்லலாம் அல்லவா? ஒன்றும் செய்ய மாட்டீர்கள் யாரும் செய்தால் என்ன வழியில் பிழை பிடிக்கலாம் என வருவீர்கள் இல்லையா சிவா?

    Reply
  • PALLI
    PALLI

    //உங்களுக்கு லண்டனில் இருந்து ஜெனீவா போகும் சரியான பாதை தெரிந்தால் சொல்லலாம் அல்லவா? ஒன்றும் செய்ய மாட்டீர்கள் யாரும் செய்தால் என்ன வழியில் பிழை பிடிக்கலாம் என வருவீர்கள் இல்லையா சிவா?//
    நாம் சொல்ல எப்போதும் தயார்தான், வாய்கிழிய சொல்லியும் வருகிறோம், உங்க தலமை அன்றும் அதன் தொண்டர்கள் இன்றும் அடம்பிடித்தால் நாம் என்ன செய்ய முடியும்; எப்படி சொல்ல எதை சொல்ல, அதுசரி இவர் கால்கடுக்க நடந்து போய் எதை சொல்ல போகிறார், அதையாவது
    தாங்கள் சொல்லலாமே, ஜி ரிவியில் ஜெகன் அண்ணா கவலைபட்டார் எல்லோரும் விடுமுறையில் இலங்கை சென்று விட்டனராம், அதனால் நடைபயணத்துக்கு கூட்டம் சற்று குறைவுதானாம்;

    //போகவேண்டிய பாதை அப்போராட்டத்தில் தாக்கத்தைக் கொடுக்கும் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளைத் தாண்டிச் செல்வது வழமை. //
    அதுதான் முள்ளிவாய்க்கால் வரை போயாச்சே பின்பு எதுக்கு இந்த ஓட்டமும் நடையும்;

    //அதுவே காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்திலும் நிகழ்ந்தது. காந்தி ‘உப்பை அள்ள’ ஏன் ஊருக்குள்ளால் போகிறார் கடற்கரையால் போனால் கூடிய அளவு உப்பை அள்ளலாமே? என எள்ளி நகையாடியோரும் இருந்தனர்//
    உன்மைதான் நானும் கேள்விபட்டேன்; ஆனால் திலீபனை அதே உண்ணாவிரதத்தில் மடியவிட்டு இந்தியா (காந்திஸம்) வேடிக்கை பார்த்த போதுதான் எல்லாமே சிரிப்புதான் என புரிந்து கொண்டேன்; அதையும்விட காந்தி கேட்டது அயல் நாட்டவனிடம் தம் நாட்டை, ஆனால் நாம் கேப்பது எம் நாட்டிடம் எம் நாட்டை, அதாவது பங்காளி சண்டை எனலாம்;

    //அதனால் உங்களுக்கு என்ன நட்டம்? //
    ரஜீவ்காந்தியை புலி கொன்றபோதுகூட இதே கேள்வியை ஒரு புலி அறிவுமான் என்னிடம் கேட்டார், நன்றி அதை நினைவூட்டியதுக்கு,

    //பத்திரிகைச்செய்தி. அதைவைத்து தேசம் கட்டுரை….நக்கல் நளினப் பின்னூட்டங்கள்…வழக்கு.. நஷ்ட ஈடு. …என வந்து நிற்பது கண்னுக்கு தெரியவில்லையா?//
    இதெல்லாம் பார்த்தால் பின்னோட்டம் எழுத முடியுமா?? அதுவும் பல்லி எழுத முடியுமா?? சாந்தன் முன்பே சொன்னேன்; சேதுகூட வழக்கில் வெற்றி பெற்றாராமே; இதில் கூட சற்று மிரட்டல் தெரிகிறது; சாந்தன் அப்படி செய்ய மாட்டார் என நம்புவோமாக;

    //யாழ்பல்கலைக்கழத்தில் உண்ணாவிரதம் இருந்தோரைக் கடத்தியபோது நான் புளொட் ஆதரவாளன் ஆக இருந்தேன். அப்போது நான் உண்ணாவிரத ஆதரவாலன் அல்ல, ஆனால் புலிகள் ‘அகிம்சைப் போராட்டம் கையுடைந்தவனது ஆயுதம்’ என துண்டுப்பிரசுரம் வெளியிட்டபோது அதை எதிர்த்தும் குரல் கொடுத்தேன்!//
    வன்முறை ஒன்று, அகிம்ஸ்சையை கடத்தி சென்று கட்டாய கலபடம் செய்யதால் ;வன்முறைக்கு துணைவியானார் உண்ணாவிரத போராளி; இதெல்லாம் ஒரு உதாரனமா??
    //நீங்கள் அதிககாலம் ஸ்ரீலங்காவின் ஆதரவுப் பத்திரிகைகளையே படிக்கிறீர்கள் போல் இருக்கிறது!//
    இல்லை நான் எழுதுபவை அனைத்தும் என் எண்ணங்களே; ஆனாலும் தங்களை போல் என்னயும் படித்ததையோ அல்லது சொன்னதையோ எழுதுபவனாக எண்ணியதுக்கு நன்றி,
    பல்லி என்றுமே மனிதன் மட்டுமே;
    தாங்களோ;;
    அன்று;;;;;கழகம்;
    பின்பு,,,,புலிஅல்லது ஆதரவாளன்;
    இன்று ,,,தெரியவில்லை; ஆனாலும் புலிதான்;

    //பார்த்தீர்களா என் நிலமையை எனது கருத்துகளை நியாயப்படுத்த எனக்கு உவப்பில்லாத போராட்ட முறைகளைக்கூட உதாரணமாகக்காட்ட வேண்டி உள்ளது. (சும்மா ஜோக்தான்)
    ஜோக்கல்ல உன்மைதான் உவமைகளுக்கு கூட நாதியில்லா போராட்டத்தைதான் நாம் சுட்டி காட்டுகிறோம்(இது ஜோக்கல்ல)

    தொடரும் பல்லி,,,,,

    Reply
  • Siva
    Siva

    உங்கள் ஆசைக்கு குறுக்காக நான் நிற்கமாட்டேன்!//சாந்தன்
    நான் எனதுஆசை என்று எழுதவில்லை. அதுதான் உண்மை என்றே குறிப்பிட்டேன். திரும்ப வாசித்துப் பார்க்கவும்.

    //….அடுத்தவர் போகும் பாதை தெரியாமலே நடக்கிறார் நடக்கத் தொடங்கமுதல் கூகிளில் பாதையை பார்த்திட்டு நடக்கத் தொடங்கியிருக்கலாமே…/ நான் எழுதியது.

    /உங்களுக்கு லண்டனில் இருந்து ஜெனீவா போகும் சரியான பாதை தெரிந்தால் சொல்லலாம் அல்லவா?//சாந்தன்/
    அதைத்தான் கூகிளில் பார்க்கச் கொல்கிறேன்

    /ஒன்றும் செய்ய மாட்டீர்கள் யாரும் செய்தால் என்ன வழியில் பிழை பிடிக்கலாம் என வருவீர்கள் இல்லையா சிவா?/
    என்னைத் தெரியாமலே நான் ஒன்றும் வெய்யவில்லை என எப்படிச் சொல்வீர்கள். மற்றும் நான் பிழை பிடிக்கவில்லை. போறவர்தான் பிழையான பாதையில் போனார்.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    சாந்தன்:- இந்தவழக்கோ கம்பேகர் தின்றவிசயமே பொலிஸ் கேஸ் அல்ல. இதனால் பொலிஸ் தனக்காக எடுத்த ஒளிநாடாவை கடசிவரையும் மற்ற அமைப்புக்குக் கொடுக்காது என்பதை அறிக. ஏதற்காகக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? ஆனால் பொலிஸ் ஒளிப்பதிவு செய்யாது இருந்தால்தான் ஆச்சரியத்துக்குரியது. பொலிஸ் தனது ஆதாரங்களைப் பத்திரிகைக்கு கொடுப்பதற்கு பொலிஸ் ஒரு வியாபார நிறுவனமும் அல்ல. இந்தச்சூட்சுமத்தை வழக்கறிஞ்ஞர்கள் அறிவார்கள் இதுவே பரமேஸ்வரனுக்குச் சாதகமாக அமைந்தது.
    இவர் கம்பேகர் சாப்பிடும் வேளை ஒருவர் பரமேஸ்வரனுக்கு அடித்து அது பொலிஸ் வழக்காகும் போது நீதிபதியின் வேண்டுதலுக்கமைய ஒளிநாடா சமர்ப்பிக்கப்படலாம். அரசிடம் கேட்கும் உரிமை உண்டு என்கிறீர்கள் இது ஒரு அரசவழக்கல்லவே. மேலும் நாட்டுக்கு நாடு சட்டம் வித்தியாசம் என்பதையும் அறிக. இங்கே பொலிஸ் யாருக்கம் சாட்சியுமல்ல இது அரச அல்லது பொலிஸ் வழக்குமல்ல.

    / கருத்தை ஓட்டலாம் எனக்கனவு கண்டவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லைப் போல் இருக்கிறது!/
    இதில் சாந்தன் கனவு காணாது இருப்பது முக்கியம். தான் சாப்பிடவில்லை என்பது தனிமனிதவழக்கே தவிர பொதுமக்களுக்கான போராட்டம் சார்ந்த வழக்கல்ல. எமது போராட்டத்தை பத்திரிகைகள் மானபங்கப்படுத்தினார்கள் என்று வழக்குப்போட்டிருந்தால் அது போராட்டத்துக்கான வழக்குத்தான். சாந்தன் நீர் பல இங்களில் மொட்டந்தலைக்கும் முளங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறீர்.

    /நீங்கள் ஒரு பொதுமக்கள் பாதுகாப்பு வழக்கைப்போட்டு அவரை உள்ளே தள்ளுங்கள் பார்க்கலாம்? அவர் என்ன சொன்னார்? தன்னில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் எனத்தானே? நிரூபிக்கப்பட்டதா? இல்லையே/
    நான் என்ன காதில் பூவைத்துக் கொண்டா திரிகிறேன்? எடுப்பதற்கு எதுவுமில்லாத ஆள் என்றுதானே பத்திரிகைகள் பரமேஸ்வரனை விட்டார்கள் இதை மேலே எழுதியிருக்கிறேன். உங்களைப் போன்றவர்களால் தான் புலிகள் வெறும் கையால் முளம் போட்டார்கள். உங்களுடைய முகாமைகளை நிறுத்தினால் அங்குள்ள தமிழர்களாவது மகிழ்சியாய் வாழலாம்.

    /நிரூபிக்கப்பட்டால் எனத்தானே? நிரூபிக்கப்பட்டதா?// நிரூபிப்பதற்குப் பலவழிகள் உண்டு. வெள்ளைக்காரன் போல் வழக்கு நடத்த முயன்றால் இலாபத்தைப் பார்த்து பரமேஸ்வரன் போன்றவர்களை தப்ப விடலாம். பலவழிகளில் கிறிமினல் மைன்டில் பலாற்காரமும் ஒன்று. தேசம் எனது பெயரை வெளிவிடமாட்டேன் என்று உறுதியழித்தால் நான் எழுதத்தயார். அதனால் வரும் விளைவுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டும். தயாரா?

    /3ம் வகுப்பில் ஒரு கதை…நரி….திராட்சை…சீ…சீ…இந்தப்பழம் புளிக்கும்! ஞபகம் வந்து தொலைக்கிறது/
    நீங்கள் என்னும் மூன்றாம் வகுப்பை இன்னும் தாண்டவே இல்லயா? பத்திரிகை வியாபராத்துக்காக நடப்பது. அது தன் வருமானத்தையும் முதலீடுகளிலும் மிக அக்கறையாக இருக்கும் என்பதை அறியாது நரிக்கதை சொல்கிறீர் . உந்தக் கதையை நாம் அரிவெரியில் படித்துவிட்டோம். உது எமக்குப் புளித்துப்போன கதைதான். உங்களுக்குப் புதிதாக இருக்கலாம்:

    /ஒரு சுதந்திர நாட்டில் ஒரு மனிதன் என்ன வேண்டும் என்றாலும் ஆசைப்பட உரிமை உண்டு! அதை நான் ஏன் தடுக்க வேண்டும்/
    அப்படியான ஒரு சுதந்திரநாட்டைக் காட்டுங்கள் பார்க்கலாம். அதனால்தான் பரமேஸ்வரன் உண்ணாவிரத்தில் கம்பேகர் சாப்பிட்டாரா? நீங்கள் சொல்வதுபோல் ஆசைப்பட உரிமையுண்டு அமுல்படுத்த முடியுமா? பாலியல் திருவிழாவை நடுரோட்டில் நின்று செய்துபாருங்கள் அல்லது பொலிஸ் நிலையத்தின் முன்னால் நின்று சிறுநீர் கழித்துப் பாருங்கள். அப்ப தெரியும் உங்கள் ஆசையின் பலாபலன்கள். ஆசைப்பட்டதை எல்லாம் செய்ய இயலாது. அது காட்டு மிருகங்களுக்குச் சிலவேளை சரியாக இருக்கலாம். நாட்டு மனிதருக்குப் பொருந்தாது. சட்டம் என்பதே மனிதனின் ஆசைக்கு அமைக்கப்பட்டு சிறையாகும்.

    பரமேஸ்வரனுக்கு வக்காளத்து வாங்கும் நீங்கள் ஒருவிசயத்தை அறிந்த கொள்வது அவசியம். தற்கொலை செய்வதும் தற்கொலை செய்வேன் என்று கூறுவதும் சர்வதேசக்குற்றம்.. தற்கொலை என்பது புலிகளுக்கு சர்வசாதாரணமானதே. இதை பரமேஸ்வன் சொன்னதோ நீங்கள் வக்காளத்து வாங்குவதே அதிசயம் இல்லை. புலிகள் தன் அங்கத்தவர்களுக்கு சயனைட்டுக் கட்டிவிடுவதே சர்வதேச அத்துமீறல் இதைச் செய்து கொண்டு சர்வதேசத்திடம் நீதியா கேட்கிறீர்கள்? நீதியைப் பற்றி உச்சரிப்பதற்கு ஒரு தகுதி தேவை. தற்கொலை என்ற பேடித்தனம் வாழவியலாது என்ற எண்ணமே.

    /ஒருத்தரும் குற்றம் சாட்டவில்லை. அவர் திண்டவர்தான். பத்திரிகைச் செய்தி உண்மை என எல்லாருக்கும் தெரியும். ஆனால் ஆதாரத்தை வைக்காதபடியால் சட்டப்படி தப்பிவிட்டார். மற்றப்படி பேகர் பரமேஸ்வரன்தான். அவருக்கு வாழ்நாள் பூரா பேகர் புகழ் தொடரத்தான் போகுது….//
    உங்கள் ஆசைக்கு குறுக்காக நான் நிற்கமாட்டேன்!
    சாந்தன் மேலுள்ள வார்த்தைகளினூடாக சிவாவின் அறிக்கையை ஏற்றுக் கொள்கிறீரா? என்ன கடசிநேரத்தில் புலம்பெயர் புலிப்பினாமிகள் போல் நடுத்தெருவில் நீரும் பரமேஸ்வரனைக் கைவிட்டு விட்டீர்கள். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது தானே.

    Reply
  • sumi
    sumi

    Kusumpu on August 1, 2010 7:46 pm
    //முக்கியமான ஒரு விடயத்தை யாரும் மறந்து விடக்கூடாது. பரமேஸ்வரன் யாருடன் போட்டியிட்டு வென்றார் என்று யாராவது சொல்ல முடியுமா? உண்மையில் பரமேஸ்வரன் தோற்றார் என்பதுதான் உண்மை. காரணம்.//

    தோற்ற பரமேஸ்வரனுக்கு இத்தனை பின்னூட்டங்களா?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    /…., அதுசரி இவர் கால்கடுக்க நடந்து போய் எதை சொல்ல போகிறார், அதையாவது தாங்கள் சொல்லலாமே,…./palli
    அவர் எதைவேண்டுமானாலும் சொல்லட்டும். ஆனால் உங்களால் என்ன செய்ய முடியும்? அதுவே என் கேள்வி. நீங்கள் கூறிவரும் இனவெறி சிங்கள அரசுக்கு எதிராக என்ன செய்யப்போகிறீர்கள்?

    முள்ளிவாய்க்கால் வரை போனது ’கண்மூடித்தனமானது’ என நீங்கள் எல்லோரும் அடைமொழி வைக்கும் ‘ஆயுதப்போராட்டம்’ அல்லவா? அதை எங்கள் இந்த மாற்றுப்போராட்டத்துடன் ஒப்பிடலாமா?

    //…. சேதுகூட வழக்கில் வெற்றி பெற்றாராமே; இதில் கூட சற்று மிரட்டல் தெரிகிறது; சாந்தன் அப்படி செய்ய மாட்டார் என நம்புவோமாக;…//
    நான் எங்கே மிரட்டல் விட்டேன்? சேது வென்றார் என்பது உண்மைதானே, இல்லையா?

    தாங்களோ;; அன்று;;;;;கழகம்;பின்பு,,,,புலிஅல்லது ஆதரவாளன்; இன்று ,,,தெரியவில்லை; ஆனாலும் புலிதான்;….//
    எவ்வாறிருந்தாலும் அரச ஆதரவாளன் அல்ல என்பது உறுதியாகக் கூறுவேன்.

    /உங்கள் ஆசைக்கு குறுக்காக நான் நிற்கமாட்டேன்!//சாந்தன்
    நான் எனதுஆசை என்று எழுதவில்லை. அதுதான் உண்மை என்றே குறிப்பிட்டேன். திரும்ப வாசித்துப் பார்க்கவும்…..//siva
    எதையும் ஆதாரமில்லாமல் உண்மை எனச்சொல்வதும் உங்கள் ஆசைதான்.ஏனெனில் ’ஒருவன் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை அவன் சுற்றவாளி’ எனக்கூறும் சட்டம் உள்ள நாட்டில் நான் வாழ்கிறேன்!

    Reply
  • BC
    BC

    //ஒருவன் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை அவன் சுற்றவாளி’ எனக்கூறும் சட்டம் உள்ள நாட்டில் நான் வாழ்கிறேன்!//
    புலி ஆதரவாளர்கள் எவ்வளவு அதிஷ்டசாலிகள். ஆனால் கொடூர புலிகள் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்ததவர்கள் தான் பாவிகள்.

    Reply
  • Siva
    Siva

    /…. அதுசரி இவர் கால்கடுக்க நடந்து போய் எதை சொல்ல போகிறார் அதையாவது தாங்கள் சொல்லலாமே…./palli
    அவர் எதைவேண்டுமானாலும் சொல்லட்டும். / santhan

    அவர் என்னத்தை வேண்டுமானாலும் சொல்லட்டும் என்பதுதான் ஆயுதப்போராட்டதிற்கான உங்கள் மாற்றுப் பேராட்டம்!! நல்லது.
    புலிகளின் போராட்டம் என்பது மக்கள் நலன், மக்கள் விருப்பு பற்றி கவலைப்படாது, கணக்கிலெடுக்காது தன்னிச்சையாக இவரின் நடைப்பயணம் மாதிரித்தான் நடந்தது.

    Reply
  • பல்லி
    பல்லி

    // அரச ஆதரவாளன் அல்ல என்பது உறுதியாகக் கூறுவேன். //
    மகிழ்ச்சி சாந்தன் உங்கள் உன்மையான செய்திக்கு, பல்லியின் கனிப்பு சரிதான்;

    சாந்தனிடம் பத்து கேள்வியுடன் பல்லி;;

    (1)சாந்தன் நீங்க எந்த கொள்கை அடிப்படையில் கழகத்தில் இனைந்தீர்கள்,,,?

    (2)அதேபோல் பின்பு என்ன கொள்கை வேறுபாட்டால் கழகத்தை விட்டு விலகினீர்கள்??

    (3)பிரிந்த பின்பு தவறு பற்றி உங்கள் விமர்சன செயல்பாடுதான் என்ன??

    (4)சாந்தன் தாங்கள் புலியுடன் இனையவோ அல்லது ஆதரவு கரம் நீட்டவோ புலியிடம் தங்களை கவர்ந்த கொள்கைதான் என்ன??

    (5)உன்மையில் தேசிய தலைவர் ஈழ தமிழருக்கு ஒரு சரியான தலைவர் என்பது உங்க கடந்தகால அனுபவமா??

    (6) சாந்தன் இதுவரை நீங்கள் புலியின் தவறேதாவை விமர்சித்ததுண்டா?? அப்படியாயின் அதை சுட்டிகாட்டவும்; அல்லது புலிகள் உத்தமர்களா??

    (7)சாந்தன் ஈழதமிழரின் இன்றய இந்த எம் நிலைக்கு புலிகளே அதிகளவு பொறுப்பு என்பதை மறுக்கிறியளா??

    (8)30 வருட போராட்டத்தில் ஆயிரகணக்கான உயிர்சேதம், பொருள் சேதம் இத்தனைக்கு பின்னும் இந்த நாடு கடந்தஈழம் என்னும் தீர்வு சாத்தியபடுமா?? அதில் உங்கள் நிலைபாடுதான் என்ன??

    (9)சாந்தன் உங்கள் வாதபடி ஏதோ ஒரு வழியில் புலி மட்டுமே ஈழத்தை ஆழ வேண்டும் என நீங்கள் கருதுவது ஏன்??

    (10) இறுதி போரில் முள்ளிவாய்க்கால் முடிவுக்கு புலிகளின் பலவீனமா? அல்லது அரசின் மதிநுட்ப்பமா?? அல்லது கருனாவின் பிரிவா?? ராணுவபலமா? காரனம் என தாங்கள் நினைக்கிறியள்,,??
    தொடரும் பல்லி,,,,,

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…..சாந்தன்:- இந்தவழக்கோ கம்பேகர் தின்றவிசயமே பொலிஸ் கேஸ் அல்ல. இதனால் பொலிஸ் தனக்காக எடுத்த ஒளிநாடாவை கடசிவரையும் மற்ற அமைப்புக்குக் கொடுக்காது என்பதை அறிக. ஏதற்காகக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?…//
    //…ஆனால் பொலிஸ் ஒளிப்பதிவு செய்யாது இருந்தால்தான் ஆச்சரியத்துக்குரியது. பொலிஸ் தனது ஆதாரங்களைப் பத்திரிகைக்கு கொடுப்பதற்கு பொலிஸ் ஒரு வியாபார நிறுவனமும் அல்ல. இந்தச்சூட்சுமத்தை வழக்கறிஞ்ஞர்கள் அறிவார்கள்…//

    ஆம் பொலிஸ் ஒரு வியாபார அமைப்பல்ல. மாறாக மக்களின் (பத்திரிகை நிறுவனத்தின் வரி உட்பட) வரிப்பனத்தில் இயங்கும் மக்களுக்கான் அமைப்பு. அம்மக்களின்முன் உண்மையை எடுத்துச்செல்ல பத்திரிகைத்துறைக்கு உதவிசெய்ய வேண்டிய பொறுப்பு பொலிசுக்கு உண்டு என்கின்ற ‘சூட்சுமம்’ பத்திரிகைக்காரரின் சட்டத்தரணிகளுக்குத் தெரியாமல் போனது மிக ஆச்சரியம்!

    //….ஒளிநாடா சமர்ப்பிக்கப்படலாம். அரசிடம் கேட்கும் உரிமை உண்டு என்கிறீர்கள் இது ஒரு அரசவழக்கல்லவே. மேலும் நாட்டுக்கு நாடு சட்டம் வித்தியாசம் என்பதையும் அறிக. ..//
    நாட்டுக்கு நாடு சட்டம் வேறுபடும். ஆனால் பத்திரிகைச் செய்தி ‘ஸ்கொட்லண்ட் யாட்’ பொலிஸ் நுணுக்கமான கமராக்களைப்பாவித்து பதிவு செய்தனர் என இருப்பதால் இங்கே பொலிஸ் சம்பந்தப்படுத்தப்பட்டு விட்ட்து. எனவே பொலிசைக்கோரும் அதிகாரம் நீதிமன்றுக்கு உண்டு. அவ்வாறு சொல்லப்படாவிட்டாலும் பொலிசிடம் ஆதாரம் இருந்தால் அதை அவர்கள் பத்திரிகை/பொதுமக்கள் நீதிமன்றத்தின் தண்டனையில் இருந்து காப்பதற்கு கொடுக்கதான் வேண்டும்!
    அண்மையில் ஈராக்கில் அபு-கிரெய்ப் சிரைச்சாலையில் மனித உரிமை மீறல்கள் நடந்தன எனப்பத்திரிகைகளுக்கு தெரிய வந்தபோது அந்த படங்களையும் வீடியோக்களையும் தமக்கு தருமாறு அமெரிக்க அரச்சார்பற்ற நிருவனம் ஒன்று வழக்குப்போட்ட போது நீதிமன்றத்தீர்ப்பு அமெரிக்க அரசுக்கு எதிராக இருந்தது. இங்கே பிரதிவாதிகள் பொலிசார் இல்லை மாறாக ‘இராணுவ ரகசிய காப்பு’ பின்னால் நன்றாக ஒழியக்கூடிய ராணுவம் மற்றும் சீ.ஐ.ஏ! லண்டன் பொலிசாரிடம் வீடியோ இருந்தால் அதனை கோட்டில் சமர்ப்பிகக்கோரி பிரதிவாதி நியாயம் கேட்க அவருக்கு உரிமை உண்டு! (மேலதிக தகவல்: அமெரிக்க வழக்கில் ஈடுபட்ட நிறுவனத்தினர் இவ்வருடம் சிறந்த மனித உரிமை வழக்கறிஞராக கெளரவிக்கப்போவது ஈழத்தமிழ் வழித்தோன்றல் வழக்கறிஞர் ஒருவரை. இவரும் இவர் குடும்பத்தினரும் முழுமையான ஈழத்தமிழர் போராட்ட ஆதரவாளர்கள் – transcurrents.com/tc/2010/07/aila_presents_aclu_attorney_ah.html#more)

    //… தான் சாப்பிடவில்லை என்பது தனிமனிதவழக்கே தவிர பொதுமக்களுக்கான போராட்டம் சார்ந்த வழக்கல்ல…//
    ஆம். பிரச்சினையும் அதுதான். இவ்வழக்கில் ஒரிஜினல் செய்தி வெளியிட்ட சன் மற்றும் டெய்லி மெயில் போன்ற பத்திரிகைகள் அவரின் போராட்டத்தை ஈழத்தமிழர் போராட்டத்துடன் முடிச்சுப்போடவில்லை. மாறாக முடிச்சுப்போட்டது தேசம்நெற், செய்தியாலர், பின்னூட்டக்கார்ர்கள் போன்றோரே! அதனால் தான் தேசம் ஆசிரியரும் இச்செய்தியாளரும் பரமேஸ்வரனிடம் தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்தார்கள். நீங்களே வழக்குப்போடமுடியுமா எனக்கேட்டு தேசத்துக்கெதிராக தடி எடுத்துக்கொடுப்பீர்கள் போல் இருக்கிறதே! ஏற்கனவே கே.ரி.ராஜசிங்கத்துக்கு எதிராக தடி எடுத்து கொடுத்து அந்தாளை வம்பில் மாட்டிவிட்டார்கள். இப்போது நீங்களா?

    //….எமது போராட்டத்தை பத்திரிகைகள் மானபங்கப்படுத்தினார்கள் என்று வழக்குப்போட்டிருந்தால் அது போராட்டத்துக்கான வழக்குத்தான். சாந்தன் நீர் பல இங்களில் மொட்டந்தலைக்கும் முளங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறீர்….//
    நான் எங்கே சொன்னே இது போராட்ட்த்துக்கான வழக்கு என்று. முடிச்சுப்போட்ட்து நானல்ல.எனது முன்னைய கருத்தைப் பார்க்கவும்!
    //….நான் என்ன காதில் பூவைத்துக் கொண்டா திரிகிறேன்? எடுப்பதற்கு எதுவுமில்லாத ஆள் என்றுதானே பத்திரிகைகள் பரமேஸ்வரனை விட்டார்கள் இதை மேலே எழுதியிருக்கிறேன்…..//
    நீங்கள் காதில் பூவைக்கவில்லை. ஆனால் மற்றவர் காதில் வைக்க திரிகிறீர்கள். எடுப்பதற்கு எதுவுமில்லாத ஆள் என்று சும்மா விட்டால் கூட பரவாயில்லை 70,000 பவுணும் வழிச்செலவுக்கு கொடுத்து விட்டிருக்கிறார்களே? அப்பப்பா லண்டன் பத்திரிகை நிறுவனங்கள். என்னே மனிதாபிமானம். கவனிக்கவில்லையா குசும்பு!

    //…. பலவழிகளில் கிறிமினல் மைன்டில் பலாற்காரமும் ஒன்று. தேசம் எனது பெயரை வெளிவிடமாட்டேன் என்று உறுதியழித்தால் நான் எழுதத்தயார். அதனால் வரும் விளைவுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டும். தயாரா? ….//
    தேசம் எனது பெயரை வெளியிடாமல் விட்டால் நானும் உலகத்தில் இருப்பவனை எல்லாம் கிறிமில், பலாத்காரவாதி என எழுத முடியும்! என்னது நீங்கள் உங்கள் பாட்டுக்கு எழுதுவீர்கள் நான் பொறுப்பேற்க வேண்டுமா? எப்போது நீங்கள் உங்கள் செய்கைக்கு பொறுப்பேற்கப்போகிறீர்கள்? அதுதான் உங்கள் அகராதியில் இல்லையே!

    //….அதனால்தான் பரமேஸ்வரன் உண்ணாவிரத்தில் கம்பேகர் சாப்பிட்டாரா? நீங்கள் சொல்வதுபோல் ஆசைப்பட உரிமையுண்டு அமுல்படுத்த முடியுமா?..// அதுதான் சொன்னேனே. சன், டெய்லி மெயில், ஆசைப்பட்டு அமுல்படுத்தி இப்போ 70,000 பவுண் கட்டி நேரில் வருத்தம் தெரிவித்து நிற்கிறார்கள். சேம் சைற் கோல் போடுகிறீர்களே குசும்பு!

    //….. தற்கொலை செய்வதும் தற்கொலை செய்வேன் என்று கூறுவதும் சர்வதேசக்குற்றம்..///
    ஏன் சர்வதேசத்துக்கு எல்லாம் போகிறீர்கள். இந்த நிகழ்வு நடந்த இங்கிலாந்தில் 1961ம் ஆண்டு இயற்ரப்பட்ட சட்டப்பிரிவு 9 & 10 Eliz.2 c.60 இங்கிலாந்தில் தற்கொலை செய்வது பற்றி என்ன சொல்கிறது என்பதனை ‘சூட்சுமம்’ அறிந்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள். அதன் பின்னர் ஆறுதலாக சர்வதேசத்தில் வரும் அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, அமெரிக்க தற்கொலைச் சட்டங்கள் என்ன சொல்கிறது எனப்பர்க்கலாம். (நீங்கள் தானே நாட்டுக்கு நாடு சட்டம் வேறுபடும் எனவும் சொல்லியது. இல்லையா குசும்பு)

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…சாந்தனிடம் பத்து கேள்வியுடன் பல்லி;;…//

    பல்லி, இந்த விவாத இழை (discussion thread)பரமேஸ்வரன்/ஹம்பேகர்/சன்/டெய்லிமெயில்/தேசம்நெற்/ஈழத்தமிழர்/புலிகள் போராட்ட முடிச்சு(சிலர் சொல்லாடலில் பினாமிகள், புண்ணாக்குகள்) / 70,000 பவுண்நட்ட ஈடு/பத்திரிகை வருத்தம் தெரிவிப்பு போன்றது பற்றியதன்றி சாந்தன் என்கினற தனிமனிதனது கொள்கைகள்/நம்பிக்கைகள் பறறியதல்ல. ஆனாலும் நான் என்னை நோக்கி கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பழகியவன் என்கின்ற முறையில்……

    (1)சாந்தன் நீங்க எந்த கொள்கை அடிப்படையில் கழகத்தில் இனைந்தீர்கள்,,,?

    ஸ்ரீலங்கா அரசு ஒரு இனவாத அரசு . சோசலிச தமிழீழம்தான் ஈழத்தமிழர்களுக்கு ஒரே தீர்வு, அதற்கு ஆயுதப்போராட்டமே ஒரே வழி!

    (2)அதேபோல் பின்பு என்ன கொள்கை வேறுபாட்டால் கழகத்தை விட்டு விலகினீர்கள்??

    முன்னைய பதிலில் இருக்கும் கொள்கையை விட்டு விலகி கொலை, உட்கொலை, கொள்ளை, கடத்தல், வீண்பழி, …என இன்னோரன்ன செயற்பாடுகள்.

    (3)பிரிந்த பின்பு தவறு பற்றி உங்கள் விமர்சன செயல்பாடுதான் என்ன??

    முதலில் நம்ப மறுத்தமை, நண்பர்கலுடன் விமர்சனம். உண்மை அறிந்தபின் பின்னர் வேதனையுடன் விலகி இருத்தல். காரணம் எனது இயலாமை. எனது சக்திக்கப்பாற்பட்டு கடந்து சென்று விட்டது கழகம். ஆனாலும் எனது பழைய தோழர்களுக்காக சித்தார்த்தன் போன்றவர்களுடன் கூட சிக்கல் படுதல் போன்றவை.

    (4)சாந்தன் தாங்கள் புலியுடன் இனையவோ அல்லது ஆதரவு கரம் நீட்டவோ புலியிடம் தங்களை கவர்ந்த கொள்கைதான் என்ன??

    முதலாவது கேள்விக்கு அளித்த அதே பதில். ஆனால் சோசலிசம் அவுட்!
    (அதற்குக் காரணம்சொசலிசம் பேசியோரே முதலாளித்துவ முலைகளில் டொலர்/பவுண்/யூரோ பால்குடித்து அவர்களின் தொட்டில்களில் சோசலிச ஆராரோ பாடுவது!)

    (5)உன்மையில் தேசிய தலைவர் ஈழ தமிழருக்கு ஒரு சரியான தலைவர் என்பது உங்க கடந்தகால அனுபவமா??

    ஆம். நிகழ்கால அனுபவம் கூட. ஏன் எதிர்காலத்திலும் உண்மையாக இருக்கலாம்.

    (6) சாந்தன் இதுவரை நீங்கள் புலியின் தவறேதாவை விமர்சித்ததுண்டா?? அப்படியாயின் அதை சுட்டிகாட்டவும்; அல்லது புலிகள் உத்தமர்களா??

    விமர்சித்தேன், பலமுறை. ஒரு சிறு உதாரணமும் தந்திருக்கிறேன். படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ”கட்டாய கலப்படம்” என நளின நக்கல் கதை சொல்லி இருந்தீர்களே? உங்களுக்கே நினைவில்லையா? (சாந்தன் on August 2, 2010 8:00 pm அன்று உங்களுக்கு எழுதிய பதிலில்)

    (7)சாந்தன் ஈழதமிழரின் இன்றய இந்த எம் நிலைக்கு புலிகளே அதிகளவு பொறுப்பு என்பதை மறுக்கிறியளா??

    ஆம், மறுக்கிறேன்.

    (8)30 வருட போராட்டத்தில் ஆயிரகணக்கான உயிர்சேதம், பொருள் சேதம் இத்தனைக்கு பின்னும் இந்த நாடு கடந்தஈழம் என்னும் தீர்வு சாத்தியபடுமா?? அதில் உங்கள் நிலைபாடுதான் என்ன??

    நாடுகடந்த தமிழீழம் என்பது தீர்வல்ல மாறாக தீர்வை அடைய முயலும் ஒரு வழி. நாடுகடந்த தமிழீழம் என்றால் என்ன என்று அறிய முயலுங்கள். கட்டாய கலப்படம் போன்ற நக்கல் நளினக்கதைகள் சொல்வதில் காலம் செலவு செய்யாதீர்கள். இது ஒரு பல்லிக்கு நட்பு ரீதியான ஆலோசனையன்றி எதிர் நளினம் அல்ல.

    (9)சாந்தன் உங்கள் வாதபடி ஏதோ ஒரு வழியில் புலி மட்டுமே ஈழத்தை ஆழ வேண்டும் என நீங்கள் கருதுவது ஏன்??
    நான் கருதுகிறேன் என எங்கே சொன்னேன்?
    ஈழத்தை ஆளுவதற்கு முன்னர் அதனை விடுவிக்க புலிகள் தவிர்ந்த யார் இறுதிவரை போராடினார்கள்? ஆள்வது யார் என்பதனை மக்கள் தீர்மானிப்பார்கள். அண்மைய தேர்தல்கள் காட்டி நிற்கும் முடிவுகள் அறிந்திருப்பீர்களே!

    (10) இறுதி போரில் முள்ளிவாய்க்கால் முடிவுக்கு புலிகளின் பலவீனமா? அல்லது அரசின் மதிநுட்பமா?? அல்லது கருனாவின் பிரிவா?? ராணுவபலமா? காரனம் என தாங்கள் நினைக்கிறியள்,,??
    இவை அனைத்தும் அல்ல. மாறாக மாற்றுக்கருத்து, மாற்றுக்கொள்கை என சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள். அவர்களை உலகம் நன்றாக பயன்படுத்திக்கொண்டு விட்டது. இப்போ அவர்கள் அம்போ என அசினுடன் பிசினாக நிற்கிறார்கள்! ஆனால் மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்!

    Reply
  • santhanam
    santhanam

    பல்லி எல்லாமே இந்தியாவின் மதிநுட்பம். பிரபாகரன் தனக்குதானே சிறைவைத்து வாழ்ந்தவர். வாறவன் போறவனின் கதைகேட்டு இயக்கம் நடத்தியவர். உலக அரசியல் சைபர் நிலை.

    Reply
  • PALLI
    PALLI

    சாந்தன் கம்பேக்கர் வழக்கில் எதுக்கு சாந்தனிடம் கேள்வி என நீங்கள் கேப்பது நியாயமாக இருந்தாலும் எனது பக்க நியாயத்தையும் நான் சொல்ல வேண்டுமல்லவா?
    கம்பேக்கர் என்பதுக்கு மேலும் கீழும் உள்ள பண்போல் இந்த கேள்வி பதில் இந்த வாதத்தில் உதவும் தொடருங்கள். அத்துடன் என் கேள்விகளுக்கு தவிர்க்காமல் பதில் தந்ததுக்கு பல்லியின் நன்றிகள்;

    //சாந்தன் என்கினற தனிமனிதனது கொள்கைகள்/நம்பிக்கைகள் பறறியதல்ல.//
    பரமேஸ்வரன் கூட ஒரு தனிமனிதந்தான் என்பதை தாங்கள் ஏற்று கொள்ளலாமே

    Reply
  • Kusumpu
    Kusumpu

    சுமி /தோற்ற பரமேஸ்வரனுக்கு இத்தனை பின்னூட்டங்களா?/ தோல்வி என்பது வேறு தோல்வியை ஒப்புக் கொள்ளாது நெஞ்சை நிமித்திச் சண்டிதனம் விடுவது வேறு. அதனால் தான் இந்தளவு பின்நோட்டங்கள்.

    நந்தகுமார்-மனோவியாதியற்ற நீங்கள் ஒரு உருப்படியான செயத்திட்டத்தை முன்மொழியலாமே.

    Reply
  • thurai
    thurai

    //7)சாந்தன் ஈழதமிழரின் இன்றய இந்த எம் நிலைக்கு புலிகளே அதிகளவு பொறுப்பு என்பதை மறுக்கிறியளா??
    ஆம், மறுக்கிறேன்.//சாந்தன்

    அப்போ கே.பி. மற்றும் அரசுடன் சேர்ந்துள்ள புலிகளெல்லாம் எந்த அமைப்பிலிருந்தவர்கள். இவர்கள் செய்வதெல்லாம் சரிதான் என்று ஏற்கின்றீரா. அல்லது புலி வேறு கே.பி வேறு அவர் வேறு இவர் வேறு என்று சொல்கின்றீரா?

    விடுதைப்புலிகான வரைவுலக்கணம் மரணித்த போராளிகள் மட்டுமே. தலைவரும், தளபதிகழும், புலத்தின் முகவர்கழும் தமிழரின் அழிவில் உல்லாச வாழ்வு வாழ்ந்தவர்கள். இவர்களில் பலர் எதிர்கால சந்ததிகளிற்கு புலத்திலும் இலங்கையிலும் போதுமான சொத்துக்களை தேடிவிட்டனர். எனவே புலிகளினால் புலிகளிற்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை, பாதிப்பு ஈழத்தமிழர்களிற்கே.

    துரை

    Reply
  • PALLI
    PALLI

    //ஸ்ரீலங்கா அரசு ஒரு இனவாத அரசு. சோசலிச தமிழீழம்தான் ஈழத்தமிழர்களுக்கு ஒரே தீர்வு, அதற்கு ஆயுதப்போராட்டமே ஒரே வழி!//
    மிக அருமையான கொள்கை இதனால்தான் தாங்கள் கழகத்துக்கு போனீர்கள். ஆனால் இன்று பட்டிணி போர்; நடைபயணத்தில் நம்பிக்கை வைக்கிறியள், அதுவும் 30 வருடம் கழித்து, இதை நான் சொன்னால் நக்கல் நழினமா?

    //கொள்கையை விட்டு விலகி கொலை, உட்கொலை, கொள்ளை, கடத்தல், வீண்பழி, …என இன்னோரன்ன செயற்பாடுகள்.//
    இங்கே சாந்தனை பாராட்டலாம்; ஆனால் இன்று சாந்தனிடம் இவை அனைத்தும் தொலைந்து விட்டதே என்பது பல்லியின் கவலை;

    //முதலில் நம்ப மறுத்தமை, நண்பர்கலுடன் விமர்சனம். உண்மை அறிந்தபின் பின்னர் வேதனையுடன் விலகி இருத்தல். காரணம் எனது இயலாமை. எனது சக்திக்கப்பாற்பட்டு கடந்து சென்று விட்டது கழகம். ஆனாலும் எனது பழைய தோழர்களுக்காக சித்தார்த்தன் போன்றவர்களுடன் கூட சிக்கல்படுதல் போன்றவை//
    பிரபாகரனை தலைவனாக ஏற்று கொண்டு மேலே சொன்னவை சாத்தியமா? இதில் நீங்கள் நக்கல் செய்வதாக இல்லையா?

    // ஆனால் சோசலிசம் அவுட்!(அதற்குக் காரணம்சொசலிசம் பேசியோரே முதலாளித்துவ முலைகளில் டொலர்/பவுண்/யூரோ பால்குடித்து அவர்களின் தொட்டில்களில் சோசலிச ஆராரோ பாடுவது!)//
    இது பாலா அண்ணாவின் ஆலோசனை குரல் போன்றது;

    // தேசிய தலைவர் ஈழ தமிழருக்கு ஒரு சரியான தலைவர் என்பது உங்க கடந்தகால அனுபவமா??
    ஆம். நிகழ்கால அனுபவம் கூட. ஏன் எதிர்காலத்திலும் உண்மையாக இருக்கலாம்//.

    உங்கள் விசுவாசம் பொட்டர் கிட்டரை தாண்டி விட்டது;

    //விமர்சித்தேன், பலமுறை. ஒரு சிறு உதாரணமும் தந்திருக்கிறேன்//
    பல்லிக்கு எதிராகவா அல்லது புலிக்கு எதிராகவா என படித்த பின் பதில் தருகிறேன்,

    //நாடுகடந்த தமிழீழம் என்பது தீர்வல்ல மாறாக தீர்வை அடைய முயலும் ஒரு வழி. நாடுகடந்த தமிழீழம் என்றால் என்ன என்று அறிய முயலுங்கள். கட்டாய கலப்படம் போன்ற நக்கல் நளினக்கதைகள் சொல்வதில் காலம் செலவு செய்யாதீர்கள். இது ஒரு பல்லிக்கு நட்பு ரீதியான ஆலோசனையன்றி எதிர் நளினம் அல்ல.//
    உங்கள் ஆலோசனைக்கு நன்றி ,ஆனால் கொடுமை என்ன எனில் இப்படியான பல வழிகளை பலர் 1980லேயே ஊரில் காட்டி விட்டதால் உங்கள் பதில் எனக்கு போதை தரவில்லை;

    //நான் கருதுகிறேன் என எங்கே சொன்னேன்?
    ஈழத்தை ஆளுவதற்கு முன்னர் அதனை விடுவிக்க புலிகள் தவிர்ந்த யார் இறுதிவரை போராடினார்கள்? //
    யார் சொன்னதாக வினாவும் சாந்தனே அவர்களை விட்டால் வேறுயாரால்?? எனவும் கேட்ட்டு விட்டு பல்லியை நக்கல் நளின வாத்தியாய் கணக்கு பண்ணலாமா?

    //இவை அனைத்தும் அல்ல. மாறாக மாற்றுக்கருத்து, மாற்றுக்கொள்கை என சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள். அவர்களை உலகம் நன்றாக பயன்படுத்திக்கொண்டு விட்டது. இப்போ அவர்கள் அம்போ என அசினுடன் பிசினாக நிற்கிறார்கள்! ஆனால் மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்//
    முப்படையும் அதனுடன் கொலைபடையும் வைத்து நேரடி வழிநடத்திய புலிகளே சீமானுடன் நிற்கும் போது ஏதோ போராட புறப்பட்டு புலிகளால் விரட்டபட்ட பின்னும் இன்றுவரை அத்தனை அமைப்பும் பேர் சொல்லும் தலமையுடன் இயங்குகிறது; அவர்கள் அசினிடம் போராட கேக்கவில்லை. எமது மக்களுக்காய் உதவி கேட்டுள்ளனர், புலிகளின் செல்ல குழந்தைகளாய் வலம்வந்த கனிமொழி, திருமாவாளன் கூட மகிந்தா வீட்டில் விருந்துண்ட சம்பவங்கள் உங்களுக்கு தெரியாதா,?
    தொடரும் பல்லி,,,

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…தொடரும் பல்லி,,…//
    உங்களுக்கு விவாதத்தை திசைதிருப்ப வசதியாக பதில்கள் கிடைத்து விட்டதல்லவா? நல்லது. வேறோர் பொருத்தமான விவாத இழையில் உங்களின் ‘பதிலுக்கான’ பதிலை வைத்துக்கொள்ளலாமே!

    மீண்டும் பரமேஸ்வரன் விடயத்தில் தொடருங்கள் அதுதான் விவாததுக்கும் விவாதிப்போருக்கும் அழகு! செய்வீர்கள் என நினைக்கிறேன். நன்றி

    Reply
  • பல்லி
    பல்லி

    சாந்தன் நான் உங்களை வம்புக்கு இழுக்கவில்லை; அப்படி இழுப்பதாய் நீங்கள் நினைத்தால் பல்லியை தாங்கள் மன்னிக்கலாம் தப்பில்லை; சாந்தன் பரமேஸ்வரன் ஒரு தனிமனிதர்தான்; எமக்கு எங்கெல்லாம் எம் சமூகம் அல்லது நடந்து முடிந்த அவலம் பற்றி வாதம்செய்ய முடிகிறதோ அப்பெல்லாம் நாம் விவாதிப்பது நல்லதுதான், நான் உங்களை கேள்வி கேட்டதே இந்த சாப்பாட்டு விடயத்தை விட்டு எம் சமூகம் பற்றி பேசலாமே எனதான், ஆனால் அதிலும் கட்டுரையை விட்டு விலகாமல் அதனுடன் சேர்ந்தே எனது வாதம் தொடரும் தாங்கள் விரும்பினால்;

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…பரமேஸ்வரன் கூட ஒரு தனிமனிதந்தான் என்பதை தாங்கள் ஏற்று கொள்ளலாமே…//
    அதனை ஈழத்தமிழர் போராட்டத்துடன் முடிச்சு போட்டது நானல்ல. மேலும் எனது பின்னூட்டங்களில் அதையே வலியுறுத்தியும் வந்தேன்.

    //… ஆனால் இன்று பட்டிணி போர்; நடைபயணத்தில் நம்பிக்கை வைக்கிறியள், அதுவும் 30 வருடம் கழித்து, இதை நான் சொன்னால் நக்கல் நழினமா?…//பரமேஸ்வரன் உண்னாவிரதம் பற்றிய ஒரிஜினல் பதிவில் நான் எனது அகிம்சைப்போராட்ட ஆதரவு எப்படிப்பட்டது என பின்னூட்டமிட்டிருக்கிறேன். அதையும் தயவு செய்து ஒருமுறை படித்தபின் பின்னூட்டமிட்டிருந்தால் நல்லது! உங்கள் வசதிக்காக கீழே மீண்டும் ஒருமுறை தருகிறேன். திகதியையும் கவனிக்கவும்.
    ——
    சாந்தன் on October 11, 2009 7:26 pm
    மேலே ஜெயபாலன் சொன்ன உண்ணாவிரதம், போராட்டமுறைகள் பற்றிய கருத்துகள் மிகச்சரியானவை. என்னையும் ஒரு இடத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அழைத்தனர். நான் போகவில்லை காரணம் எனக்கு அகிம்சைபோராட்டத்தில் எள்ளளவும் நம்பிக்கை கிடையாது என்பதனை நான் பலமுறை கூறியிருக்கிறேன். அவ்வாறு நம்பிக்கையற்ற ஒரு போராட்ட வழிமுறைக்கு சாட்சியாக நின்று என்னையும் உண்ணாவிரதப் போராட்டக்காரர்களையும் கொச்சைப்படுத்த நான் விரும்பவில்லை.
    ஆனால் “…….உண்மையில் பரமேஸ்வரனை இந்த வழியில் வழிநடத்திய ரிவைஓ பிரிஎப் மற்றும் அவரைச் சுற்றி இருந்தவர்களே இதற்கு முக்கிய காரணம். ”.. எனச் சொல்வது எந்தவகையில் நியாயம் என்று எனக்குப் புரியவில்லை
    ——————–

    //…..இங்கே சாந்தனை பாராட்டலாம்; ஆனால் இன்று சாந்தனிடம் இவை அனைத்தும் தொலைந்து விட்டதே என்பது பல்லியின் கவலை…//
    தொலையவில்லை. கழகம் தம்மால் இயலாத ஆனால் கள்ளத்தனமான முறையில் அவர்களும் அதனைச் செய்து கொண்டிருந்தனர். ஆனால் என்ன புலிகளின் மீதே ‘கறைபடியாக் கரங்கள்’ லெவலுக்கு குற்றம் சொன்னார்கள். இவர்களுக்கு போராடும் புலிகள் எவ்வளவோ மேல் என்கின்ற நிலை மேலானது எனும் கருத்து!

    //பிரபாகரனை தலைவனாக ஏற்று கொண்டு மேலே சொன்னவை சாத்தியமா? இதில் நீங்கள் நக்கல் செய்வதாக இல்லையா?…//
    அப்போ பிரபாகரனை தலைவனாக ஏற்றுக்கொண்டவர்கள் முன்னைய ‘தலைவர்களை’ என் தோழர்கள் சார்பாக கேள்வி கேட்க முடியாதா? அதனை அப்படியே தலைகீழாக திருப்பிப் போட்டுப்பாருங்கள் உங்களுக்கும் பொருந்துமல்லவா? தொண்டனே கேள்விகேட்க முடியாதென்கிறீர்கள். தலைவர்களே புலிகளை கேள்விகேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இங்கே யார் கேட்கிறார்கள் என்பதல்ல பிரச்சினை. கழகத்தை நோக்கிய என்கேள்விகள் சரியானதா பிழையானதா என்பதே முக்கியம்!

    உங்கள் விசுவாசம் பொட்டர் கிட்டரை தாண்டி விட்டது;…//
    விசுவாசம் அல்ல. நிதர்சனமான உண்மை. நிகழ்வுகள் அதையே காட்டி நிற்கின்றன!

    ஈழத்தை ஆளுவதற்கு முன்னர் அதனை விடுவிக்க புலிகள் தவிர்ந்த யார் இறுதிவரை போராடினார்கள்? //
    யார் சொன்னதாக வினாவும் சாந்தனே அவர்களை விட்டால் வேறுயாரால்?? எனவும் கேட்ட்டு விட்டு பல்லியை நக்கல் நளின வாத்தியாய் கணக்கு பண்ணலாமா?…//

    யார் போராடினார்கள் எனக்கேட்டிருந்தேன். அதை வசதியாக ‘அவர்களை விட்டால் வேறுயார்’ என உங்கள் இஷ்டப்படி மாற்றி இருக்கிறீர்கள். அட்டகாச ஆள் நீங்கள்! மேலும் ”ஆள்வது யார் என்பதனை மக்கள் தீர்மானிப்பார்கள். அண்மைய தேர்தல்கள் காட்டி நிற்கும் முடிவுகள் அறிந்திருப்பீர்களே” எனவேறு சொல்லி இருந்தேனே கவனிக்கவில்லையா?

    Reply
  • பல்லி
    பல்லி

    //அண்மைய தேர்தல்கள் காட்டி நிற்கும் முடிவுகள் அறிந்திருப்பீர்களே” //
    உன்மைதான் ஆனால் தேர்தலுக்கு முன்பு புலிசார்ந்த யாருக்கும் கூட்டமைப்பில் இடம் கிடையாது என சம்பந்தர் சொன்னாராமே? அப்படியாயின் உங்கள் கணக்கு தவறாகுதே சாந்தன்,

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….கூட்டமைப்பில் இடம் கிடையாது என சம்பந்தர் சொன்னாராமே? அப்படியாயின் உங்கள் கணக்கு தவறாகுதே சாந்தன்….//
    எவ்வாறு தவறாகும்? நான் புலிகள் தான் ஆளவேண்டும் எனச்சொல்லவில்லையே. மாறாக மக்கள் தீர்மானிப்பார்கள் எனச்சொல்லி இருந்தேனே. .

    Reply
  • Kusumpu
    Kusumpu

    சாந்தன் /ஆம் பொலிஸ் ஒரு வியாபார அமைப்பல்ல. மாறாக மக்களின் (பத்திரிகை நிறுவனத்தின் வரி உட்பட) வரிப்பனத்தில் இயங்கும் மக்களுக்கான் அமைப்பு. அம்மக்களின்முன் உண்மையை எடுத்துச்செல்ல பத்திரிகைத்துறைக்கு உதவிசெய்ய வேண்டிய பொறுப்பு பொலிசுக்கு உண்டு என்கின்ற ‘சூட்சுமம்’ பத்திரிகைக்காரரின் சட்டத்தரணிகளுக்குத் தெரியாமல் போனது மிக ஆச்சரியம்!/

    இது என்ன உங்கள் சர்வாதிகாரத்துல் இருக்கும் நாடா? வரிப்பணத்தில்தான் பல அரசபரம்பரைகளே வாழுகின்றனர். சட்டம் எப்படி வரையறுக்கப்பட்டுள்ளது என்பதை வைத்தே நடவடிக்கைகள் அமையும் என்பதை நீங்கள் அறியாமல் இருப்பதுதான் அதிசயம். பத்திரிகைக்கு உதவி செய்யவேண்டிய அவசியம் பொலிசுக்கு இல்லை. அதே ஒளிநாடாவை பத்திரிகை தன் சுயலாபத்துக்காகப் பொலிசை நோக்கியும் திருப்பலாம். எழுதமுன் அதைப்பற்றி சிந்திப்பதது அவசியம் சாந்தன்:
    /பதிவு செய்தனர் என இருப்பதால் இங்கே பொலிஸ் சம்பந்தப்படுத்தப்பட்டு விட்டது. எனவே பொலிசைக்கோரும் அதிகாரம் நீதிமன்றுக்கு உண்டு. அவ்வாறு சொல்லப்படாவிட்டாலும் பொலிசிடம் ஆதாரம் இருந்தால் அதை அவர்கள் பத்திரிகை/பொதுமக்கள் நீதிமன்றத்தின் தண்டனையில் இருந்து காப்பதற்கு கொடுக்கதான் வேண்டும்!/ இது உமது வாதமே ஒழிய சட்டம் இதுவல்ல/ஸ்கொட்லண்ட் யாட்’ பொலிஸ் நுணுக்கமான கமராக்களைப் பாவித்து பதிவு செய்தனர் என இருப்பதால் இங்கே பொலிஸ் சம்பந்தப்படுத்தப்பட்டு விட்ட்து. /
    சாந்தன் பரமேஸ்வரன் பொலிசுக்கு எதிராக வழக்குப் போட்டாரா? நீங்களும் பரமேஸ்வரனும் சேர்ந்து உபாமாவுக்கு எதிராகவும் கம்பேகர் விசயமாக வழக்குப் போடுவீர்கள் போல் இருக்கிறது. ஸ்கொட்டலன் யாட் தகவல் கொடுக்கவில்லை என்றால் அவர்களும் பத்திரிகைகளுக்கு எதிராக வழக்குப் போட்டிருக்கலாமே.?? இங்கே இடிப்பது தெரியவில்லையா? தயவு செய்து இலண்டனில் சட்டம் என்பது மட்டுமல்ல பொலிசின் கடமை என்ன என்பதையும் ஆராயுங்கள். கோட்டுக்குப் போகும் அனைவருக்கும் படமெடுத்துக் கொடுப்பது பொலிசின் வேலையல்ல. வரிப்பணத்தைப்பற்றி இங்கே கதைப்பது மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போடுவதாகும்.

    Reply
  • thurai
    thurai

    //எவ்வாறு தவறாகும்? நான் புலிகள் தான் ஆளவேண்டும் எனச்சொல்லவில்லையே. மாறாக மக்கள் தீர்மானிப்பார்கள் எனச்சொல்லி இருந்தேனே. .//சாந்தன்
    மக்கள் தான் புலிகள், புலிகள் தான் மக்கள் என்றது இப்பவும் காதிலை கேட்குது. இப்ப உள்ள பிரச்சினை யார் தமிழரில் புலிகள் என்பதேயாகும்.

    புலம்பெயர் சமூகத்தை நம்பி ஆயுதமேந்தி அழிந்தவர்களும், சிறையில் இருப்போருமே அரசாங்கத்தால் புலிகளாகக் கணிக்கப்படுகின்றார்கள். இவர்கள்தான் நாட்டுக்கு ஆபத்தானவர்களென்பதே அரச கருத்து.

    புலிகளின் புலத்துப் பிரமுகர்கள் அரசுடன் சேர்ந்தவுடன் புலிச்சாயம் போய்விடுகின்றது துரோகிப்பட்டம் கொடுக்கப்படுகின்றது. பரவாயில்லை அவர்களிற்கு போதிய திருட்டுப் பணங்களும் அரச ஆதரவுமுண்டு.

    இந்த நிலமையில் மக்களிற்கு புலி யாரென்று யாராலும் காட்ட முடியுமா? புலி எங்கே? புலி அரசுடனுமிருக்கும், அரச எதிர்ப்புடனும் இருக்கும்.

    ஈழத்தமிழர் அரசியல் அநாதைகள். அரசியலை அழித்தவர்கள் புலிகள். திரும்ப சரியான அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு புலியின் எதிப்பாளர்களுடையது. இதனைத் தடுப்பதே அரசின் நோக்கம், இதற்கு திரும்பவும் உதவுபவர்கள் புலிகளே. தமிழரை திரும்பவும் அழிவிற்குள் சிக்கவைப்பவர்கள் புலிகளேயாகும். தமிழ் மக்களின் முதலெதிரியாக திரும்பவும் புலிகளே அரசுடன் இணைந்துள்ளார்கள்.

    துரை

    Reply
  • Ajith
    Ajith

    தமிழ் மக்களின் முதலெதிரியாக திரும்பவும் புலிகளே அரசுடன் இணைந்துள்ளார்கள். Thurai

    Mr Thurai,
    You are again accepting the fact that anti LTTE slogan is not going to help your group. You thought that pro Sinhala propaganda by your group will give the opportunity to work along with the Rajapakse regime.You went to the extreme to support Rajapkase governments unlawful murders and human rights but Rajapakse would have thought differently.

    Reply
  • thalaphathy
    thalaphathy

    தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வுகளையும், கடந்த 1987 ம் ஆண்டிற்கு பின்னரான யுத்ததையும் ஆய்வுகளுக்கு உட்படுத்தும் போது, புலிகளும்- இலங்கை அரசும் இணைந்தே இந்த தமிழ் மக்களின் உயிர்களையும், உடைமைகளையும் திட்டமிட்டு நாசம் செய்தவர்கள் போல் அடியேன் உணர்விற்கு படுகிறது.

    Reply