”வெளியே போங்கடா சக்கிளிய நாயலே” வவுனியா நகரசபைத் தலைவரின் கூற்றும் இன்னமும் வீச்சுடன் இருக்கும் சாதிய மனோநிலையும்

Vavunia_Bus_Strandதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் உள்ள வவுனியா நகரசபை நிர்வாகச் சீர்கேடு ஊழல் மோசடி போன்ற விடயங்களினால் அவப்பெயரைச் சம்பாதித்து உள்ளது. இதன் காரணமாக இந்நகரசபையின் தலைமைக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர்கள் உட்பட 8 நகரசபை உறுப்பினர்கள் நகரசபைத் தலைமைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.

இதற்கு முன்னதாக நகரசபையின் நகர சுத்தித் தொழிலாளர்கள் நகரசபைத் தலைவரும் (எஸ் என் ஜி நாதன்) நகரசபையின் சிற்றூழியரும் (ரி மரியதாஸ்) தங்களை சாதியின் அடிப்படையில் அவமானப்படுத்தி முறைகேடாக நடந்து கொண்டாதாக ஒரு கடிதத்தை தங்கள் கையொப்பங்களுடன் வவுனியா நகரின் உயர் மட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். அத்துடன் தங்களது கோரிக்கையை வைத்து வேலை நிறுத்தத்தையும் மேற்கொண்டு இருந்தனர்.

கடந்த 30 ஆண்டுகால தமிழீழ விடுதலைப் போராட்டம் இன விடுதலையை முதலில் வென்றெடுப்போம் சாதிய பிரதேச பெண் ஒடுக்குமுறையை அதன் பின்னர் பார்க்கலாம் என்ற மனப்பான்மையுடன் அவற்றைக் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டிருந்தனர். ஆனால் விடுதலைப் போராட்டம் தடம்புரண்டு அதிகாரத்திற்கான போராட்டமாகி ஏனைய அனைத்து ஒடுக்குமுறைகளும் விடுதலையின் பெயரில் அமுக்கி வைக்கப்பட்டது. இவ்வாறு அமுக்கப்பட்டு இருந்த பிரதேச சாதிய பெண் ஒடுக்குமுறைகள் காலத்திற்குக் காலம் தலைகாட்டவே செய்கின்றன.

தமிழ் மக்களைப் பன்மைத்துவ சமூகமாக ஏற்றுக்கொள்ளாமல் அதனை ஒற்றைப்பரிமான சமூகமாகக் கொண்டு தமிழரசுக்கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் தமிழ் தேசியம் அதன் மோசமான சாதியம் பிரதேசவாதம் பெண் ஒடுக்குமுறை என்பனவற்றை எப்போதும் தன்னுள்ளே அடைகாத்து வருகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைபின் தலைமைகள் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலையில் உள்ள நகரசுத்தித் தொழிலாளர்களை அன்றைய தமிழ் அரசர்கள் போல் இன்றும் அடிமைக் குடிகளாகவே நடாத்தும் மனப்பான்மையைக் கொண்டுள்ளனர். வரலாற்றை புரட்டி தமிழ் மன்னர்களின் ஆட்சிக்காலத்தை பொற்காலமாகக் கற்பிக்க முற்படுகின்றனர் சிலர். அன்று இந்த நகர சுத்தி தொழிலாளர்கள் இரவிலேயே சுத்திகரிக்கப் பணிக்கப்பட்டனர். அவர்கள் பகலில் நகரத்தில் நடமாடவே தடைவிதிக்கப்பட்டனர். அவர்கள் நகரின் ஒதுக்குப் புறத்திலேயே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இன்று பல நூற்றாண்டுகள் உருண்டோடிய பின்னரும் நகரசபை ஊழியர்களை ”வெளியே போங்கடா சக்கிளிய நாயலே” என்று பேசுகின்ற உரிமையை தமிழ் தேசியக் கூட்டமைபின் நகரசபைத் தலைவருக்கு யார் வழங்கியது. இதுவரை இத்தலைவருக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை என்ன நடவடிக்கையை எடுத்தது?

இன்று இலங்கை அரசாங்கித்தின் இனவாதப் போக்கினை மிகச் சரியாக மிக நியாயமாகக் கண்டிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமைகள் எமது சமூகத்தின் மற்றுமொரு பகுதியை தீண்டத்தகாதவர்களாக இரண்டாம்தரப் பிரஜைகளாக நடத்துவதற்கு மெளனமாக அங்கிகாரம் வழங்குகின்றதா?

._._._._._.

இதுவே வவுனியா நகர சுத்தித் தொழிலாளர்கள் தங்கள் மனக்குறையை எழுத்தில் வடித்த கடிதம்.

வவுனியா நகரசபை சுகாதார ஊழியர் சங்கம்    

ஆளுனர்
வடக்கு மாகாணம்
திகதி: 23.07.2010

வவுனியா நகரசபை சுகாதார ஊழியர்கள்.

Vavunia_UC_Letter01ஜயா!

வவுனியா நகரசபை ஊழியர்கள் ஆகிய நாங்கள் தங்களிடம் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்வது.

22.07.2010ம் திகதியன்று எங்களது ஊழியர் ஒருவர் ஓய்வு பெறுகின்றார். இவர் எங்களுக்கு சிறு நிகழ்வு நடத்துவதற்கு ஏற்ப்பாடு செய்தார். இந் நிலையில் எங்களன் நிகழ்வை நடத்துவதற்கு ஓர் இடம் அல்லது மண்டபத்தில் சிறு இடம் ஒதுக்கி தருமாறு தலைவரிடம் கேட்டபோது அவர் அனுமதி வழங்கினார். ஆனால் இச்சபையில் சேவை நீடிப்பில் இருக்கும் திரு மரியதாஸ் என்பவர் சிற்றுஊழியர். அவர் எங்களுக்கு இடம் தரமுடியாது என்று கூறி சாதியை இழுத்து கெட்ட வார்த்ததைகளால் ஏசினார். எங்களை மரியாதை குறைவாக நடாத்தினார். இன்ந் நிலையில் மீண்டும் தலைவரை அணுகினோம் அவரும் எங்களை வெளியே போங்கடா சக்கிலிய நாய்களே என்று விரட்டினார். அதற்கு பிறகு நாங்கள் சபையின் முன் முற்றத்தில் எங்கள் நிகழ்வை நடாத்தினோம்.

ஆகையால் எங்கள் ஊழியர்களை தரக்குகறைவாக மனித உரிமை மீறும் அளவுக்கு அவமானப்படுத்திய நகரசபைத் தலைவர் அவர்களையும் சேவை நீடிப்பில் இருக்கும் திரு மரியதாஸ் அவரின் மீதும் பகிரங்கமான விசாரணை நடாத்தி ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்குமாறு இச்சபையின் ஊழியர்களுக்கு உரிய உரிமையையும் இட வசதிகளையும் உறுதிப்படுத்தி தருமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

குறிப்பு: தாங்கள் இதில் தலையிட்டு தீர்த்து தரும் வரையில் எங்கள் வேலை நிறுத்தம் தொடரும்.

பிரதி:
1.உள்ளூராட்ச்சி ஆணையாளர் திருகோணமலை
2.செயலாளர் நகரசபை வவுனியா
3.உள்ளூராட்ச்சி உதவி ஆணையாளர் வவுனியா
4.அரசாங்க அதிபர் வவுனியா
5.மனித உரிமை ஆணைக்குழு வவுனியா
6.உதவி ஆணையாளர் தொழில் அலுவலகம் வவுனியா
7.தலைவர் வர்த்தக சங்கம் வவுனியா

Vavunia_UC_Letter02உண்மையுள்ள
சுகாதார தொழிலாளர்கள்
(64 கையெழுத்துக்கள்)

Show More
Leave a Reply to proffessor Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

86 Comments

  • T Sothilingam
    T Sothilingam

    தமிழ் பேசும் மக்களது உரிமைப் போராட்டம் என்பது என்ன? விடுதலை என்பது என்ன? யாரிடமிருந்து யார் விடுதலை அடைவது? மக்கள் மக்களின் உரிமைகள் என்ன? போன்றவற்றின் சரியான விளக்கங்களை பெறாமலே ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்து 30 வருடமாக போராட்டம் நடைபெற்று அந்த போராட்டம் தோல்வியில் முடிவுற்றுள்ள நிலையில் எமது தமிழ் இனத்திற்குள் ஒரு சாதிப் பிரிவினர் தமது உரிமைக்கான போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். இந்த தொழிலாளிகள் தமது சாதாரண உரிமைகளைக் கூட பெற முடியாத நிலையில் இருக்கின்றார்கள்.

    இதில் உள்ள மிக முக்கியமான விடயம் என்னவென்றால் ஈழப் போராட்டத்திற்கு வித்திட்ட தமிழ் பேசும் மக்களால் தலைவர்கள், பொறுப்பு வாய்ந்த கட்சியினர் என்றெல்லாம் கூறப்பட்ட தமிழரசுக் கட்சியினர் தான் இந்த வவுனியா நகரசபையின் ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர். அந்த ஆட்சி அதிகாரத்தில் உள்ள இந்த தமிழரசுக் கட்சியினரின் உறுப்பினரே இந்த தொழிலாளிகளை இப்படி சாதியின் பெயரால் திட்டியும் விரட்டப்பட்டும் உள்ளனர் இதன் காரணமாக இந்த ஊழியர்களால் ஒரு வேலை நிறுத்தப்போராட்டமும் நடைபெற்றுள்ளது.

    நாம் தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை கடந்த 30 வருடங்களாக நடாத்தியிருந்தால் இன்று இந்த மக்களுக்கு இந்த நிலை நடந்திருக்குமா? இன்றும் இந்த மக்களுக்காக இந்த தரங்கெட்ட வார்த்தைகளால் தனது தமிழ் சமூகத்தின் இன்னோர் சாதிப்பிரிவினரை பேசியுள்ளனர் என்றால் நாம் கடந்த 30 வருடங்களாக நடாத்தியது தான் என்ன?

    எமது தமிழ் பேசும் மக்களின் தலைவர்கள் என தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் யார் இவர்கள் யாருக்காக இந்த தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளனர் இவர்களின் பொறுப்பான நடத்தைகள் தான் என்ன? மீண்டும் தமிழ் மக்கள் இவர்களை நம்பித்தான் உள்ளனரா?

    எமது இனத்தின் இன்னோர் பிரிவு மக்களை தரக்குறைவாக நடத்துவதும் அவர்களது குறைந்த பட்ச மனித உரிமைகளை மதியாமையும் மிகவும் கேவலமானது.

    Reply
  • Rajasingham
    Rajasingham

    ‘Casteism’ appears to be an incurable cancer in the Tamil body-politic. The LTTE had claimed in had eradicated this scourge and I was under the impression this was its only achievement, until I saw the situation prevailing in the north. The disease that was dormant under LTTE dictats, has apparently reasserted itself! What a shame!

    I have seen the living condition of these long down-trodden people in the peninsula. No attempt has been made to provide them electricity and other basic amenities yet. Most are living as badly as their fore-fathers did, in the past. I am not surprised at what is happening in Vavuniya.

    While we vocally condemn supposed Sinhala majoritarianism, oppression and chauvinism, there is worse going on within the Tamil community. The so-called high caste Tamils have not yet realized, they are a minority, riding rough shod over a aggrieved majority – an apartheid of sorts. Unless, there is a social reformation movement and immediate reform, within the Tamils to eradicate the scourges of caste-based oppression and poverty, led by enlightened persons at all levels of society, even the ‘Gods’ we worship will not show mercy on us. It is sad, we have yet not learned the right lessons from the three decade long suffering, blood letting and brutality!

    (I have written this comment in English, because I cannot type in Tamil)
    Dr. Rajasingham Narendran

    Reply
  • P.V.Sri Rangan
    P.V.Sri Rangan

    இதை வன்மையாகக் கண்டித்தே ஆகணும்.தலித் மேம்பாட்டமைப்பின் (பாரிஸ்)தேவதாசன் கடந்த காலத்தில் யாழ்ப்பாணஞ் சென்று திரும்பியவுடன் கூறிய கருத்துக்களை நான் மிகைப்படுத்தலெனப் புரிந்துகொண்டேன். இப்போது அவரது கருத்துக்களை உறுதிப்படுத்தும் இந்தச் செயல் அதிகார வர்க்கத்தின் மொழி இதுதாம் எப்போதுமெனப் புரிந்து கொள்கிறேன். இதைத் துப்பாக்கியால் போக்க முடியாது என தேசத்திலொரு அருமையான கட்டுரை வாசித்தேன். துப்பாக்கி நிழலில் உறங்கும் சாதியம்…

    Reply
  • thalaphathy
    thalaphathy

    இப்பெல்லாம் யார் சாதி பாக்கினம்!

    இது எல்லாம், தங்களுக்கு விடுதலை வேண்டும், இன்னும் விடுதலை வேண்டும் என்று மேடைக்கு மேடை கத்தி, பாமர மக்களை இனவாத உசுப்பேத்தி, அவர்களை ஆயுததாரிகளாக்கி, அவர்களை விடுதலைப்போர் என்று படுகொலை செய்து போட்டு எச்சசொச்சத்தையெல்லாம் தமதாக்கிக்கொள்ளலாம் என்று துடிக்கும், சாதி, இனவெறியர்களான, சிலரின் அரசியல் விளையாட்டு!

    இந்த சொல்லை வைத்துக்கொண்டுதானே ஐரோப்பியர்கள் எங்களையெல்லாம் காலா காலமாக காலணித்துவம் செய்துகொண்டிருக்கிறார்கள், ஆனால் ஐரோப்பாவில் மட்டும் இந்த சாதி இல்லை. இப்ப ஐரோப்பா பல்கலைக்கழகங்களில் தமது ஆய்வுகளை செய்துகொண்டிருக்கும் இந்த காலணித்துவ நாடுகளில் பிறந்தவர்கள், இதைப்பற்றி ஏதாவது ஆய்வுகள் செய்வார்களேயானால், அவர்களுக்கு நோபல் பரிசிற்கு சிபார்சு செய்யலாம்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இன்று உலகத்தில் முக்கிய செய்தி என்னவென்றால் பதினெட்டு வயது பெண்மணியின் மூக்கையும் காதையும் அறுக்க “தலிபான்நீதிமன்றம்” உத்தரவிட்டு அவரின் கையால் நிறைவேற்றப் பட்ட கோலத்தை இணையத்தளங்கள் பிரசுரித்திருக்கின்றன
    இப்படியான காட்சிகள் அமெரிக்க ஆளுமை அதிகாரங்களுக்கு தேவையானவை தான். இதை உலகமக்களுக்கு இந்த காது மூக்குயறுபட்ட செய்தியை வைத்து தமது ஆதாய அரசியலுக்கு லாபம் தேட முடியும். இது இப்படியிருக்க தலிபானின் கொள்கையில் அல்லது பழையசமூகத்தின் நாம் எவ்வளவோ மாறியிருந்தாலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு அதை பின் தொடருகிறது. தமிழ்மக்களை “விரும்தோம்பிகள்” களை ஒரு பயங்கரவாத அமைப்பாக வெளிக்கொண்டு வந்தவர்கள் தமிழ்மக்களின் மேல்லடுக்கில் இருக்கிற- தம்மை படிப்பாளியாக காட்டி கொண்டிருக்கிறவர்கள். அதில் முதாலிளித்துவத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட இந்த வக்கீல்வாதிகளே. இந்தவாதிகள் வாதிகளின் வாதங்கள் இன்று செல்லாகாசாகி போய்விட்ட வேளையிலும் அதன் எஞ்சிப்போன நஞ்சாகவே இந்த கூத்தமைப்பை காணவேண்டியுள்ளது தமிழ்மக்களை மீண்டும் ஒரு சிக்கலில் மாட்டிவிடுவதற்கு அல்லல் பட்டு திரிபவர்கள். இதில் பிரதான பங்கு விகிப்பவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

    Reply
  • thurai
    thurai

    இந்தச் சம்பவம் தமிழினம் முழுவதற்குமே அவமானத்தை தேடித்தந்துள்ளது. உலகமுழுவதும் தமிழர் மத்தியில் கலந்துள்ள கொடிய நோய் இதுவாகும்.

    இதிலிருந்து தெரிவதென்ன? தமிழரின் விடுதலைப்போராட்டம் என்பது ஓர் தனிப்பட்ட சமூகத்தினரின் நலன் கருதியே முன்னெடுக்கப்பட்டதாக முடிவாகின்றது.

    சிங்களவர் மட்டும் தமிழரின் உரிமைகளை பறிக்கவில்லை, தமிழரின் உரிமைகளை தமிழரே பறிக்கின்றனர். இந்தியாவோ, உலகநாடுகளொ இலங்கைத் தமிழரிற்கு அநீதி செய்வதாக இணையத் தளங்களிலும், வானொலி, தொலக்காட்சிகளிலும் சொல்லும் தமிழ் தேசியவாதிகளிற்கு
    இப்படியான அருவருக்கத்தக்க விடயங்கள் காதில் விழுவதில்லையா?

    துரை

    Reply
  • PALLI
    PALLI

    இது உன்மையாயின் மிக கடுமையாக இவர்களை கண்டிப்பது மட்டும் இல்லாமல் முடிந்தவரை இவர்கள் முகங்கள் வேண்டும், தயவுசெய்து யாருக்காவது இவர்கள் யார் என்பதை அறியபடுத்துங்கள். பல்லியும் என் பங்குக்கு இவர்களை தேசமூலம் இனம் காட்டுகிறேன்;
    தொடரும் பல்லி;;;;

    Reply
  • singam
    singam

    செல்லன் கந்தையனுக்கும் இதுவே நடந்தது. அவரை காலால் உதைத்தவர் இன்னமும் தமிழர் விடுதலைக் கூட்டனியின் மத்திய குழு உறுப்பினர் என்ற லேபிலுடன் லண்டனில் வதிகிறார். அவரது பேட்டிகூட தேசம் நெற்றில் வெளிவந்திருந்தது.

    தற்போது யாழ் மாநகர உதவி மேயர் றேகனுக்கும் இதுவே நடந்தது. யாழ் மாநகரசபை கூட்டத்தில் ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தில் அவர் தூற்றப்பட்டு பின்னர் அவருக்கெதிராக மொட்டைக்கடிதம் போடப்பட்டு அவர் சிறையிலடைக்கப்பட்டார்.

    தமிழ் ஈழம் வாழ்க !

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இப்படியான கேடுகெட்ட செயல்களுக்கு கூத்தமைப்பினர் என்ன சொல்லப் போகின்றனர். மனிதனை மனிதனாக மதிக்கத் தெரியாதவர்கள் எப்படி தமிழரி்ன் பிரைச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள். தமிழரின் பிரைச்சினையே இந்தக் கூத்தமைப்பினர் தான் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

    Reply
  • தர்ஷன்
    தர்ஷன்

    சிங்கம் அவர்களே றேகன் சாதிய அடிப்படையில் சிறையில் அடைக்கப்படவில்லை. நீதவான் வீட்டுக்கு துவக்கு கொண்டு போன படியால் தான் சிறையில் அடைக்கப்பட்டார். இல்லாவிடில் ஈ.பி.டி.பி என்ன ஏதோ அமைதிச் சங்கமா? ஆயினும் நாதன் அவர்கள் அவ்வாறு கூறியிருந்தால் அது கண்டிக்கத்தக்கதே.ஆயினும் செத்துப்போன சாதியத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க முயற்சிக்காதீர்கள். இன்று தமிழருக்குள்ள ஒரே பலம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பே. வெளிநாடுகளிலிருந்து கொண்டு இங்கத்தையான் யதார்த்தம் புரியாமல் பேசக்கூடாது. போன தேர்தலில் சும்மா இருந்த கஜேந்திரனை உசுப்பி விட்டு கடைசியில் மூக்குடைந்தது பத்தாதா? -தர்ஷன், யாழ்ப்பாணம்

    Reply
  • thurai
    thurai

    //இது உன்மையாயின் மிக கடுமையாக இவர்களை கண்டிப்பது மட்டும் இல்லாமல் முடிந்தவரை இவர்கள் முகங்கள் வேண்டும்//பல்லி

    இது உலகில் அன்றாடம் தமிழர் மத்தியில் நடக்கும் அருவருப்பான விடயங்களில் ஒன்று மட்டுமே.

    அண்மையில் சுவிஸ்நாட்டில் நடந்த சம்பாசனை:
    எங்கள் பெண்பிள்ளைகள் சுவிஸ் நாட்டுக்காரனுடன் திரிந்து என்ன செய்தாலும் பரவாயில்லை , ஆனால் சாதியில் குறைந்தவர்கழுடன் பழகவிடக்கூடாதாம்.

    தமிழர் பண்பு,கலாச்சாரம் இவற்ரிலும் பார்க்க சாதியமைப்பை காப்பதில் மட்டுமே சில் சமூகத்தினர் கண்ணும் கருத்துமாயிருக்கின்றனர்.

    தமிழினம் அவர்களின் உருமை என்பது பற்ரி பேசுவதென்றால் பேசுவோர், சாதி, சமயத்தை கடந்தவர்களாக இருக்க வேண்டும். அவர்களால் அது முடியாவிட்டால் தமிழினம் என்று பேசுவதிலிருந்து ஒதுங்குவதே நல்லது.

    துரை

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    //செத்துப்போன சாதியத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க முயற்சிக்காதீர்கள்.இன்று தமிழருக்குள்ள ஒரே பலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. வெளிநாடுகளிலிருந்து கொண்டு இங்கத்தையான் யதார்த்தம் புரியாமல் பேசக்கூடாது.// தர்சன்

    எத்தினை நாளைக்கு இதையே சொல்வீங்கள். கையெழுத்திட்டுள்ள 64 பேரும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அல்ல. தங்கள் கடிதத்தை ரைப்ரைற்றிரிலோ அல்லது கணணியிலோ கூட பதிவு செய்ய வசதியற்று கையாலேயே எழுதி அதற்கு கையொப்பமும் இட்டுள்ளனர். யதார்த்தம் உங்களுக்கு புரியவில்லையா அல்லது கையெழுத்திட்ட நகரசுத்தித் தொழிலாளருக்கு தெரியவில்லையா?

    ஒரே பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் உடன்கட்டை ஏறவா முடியும். அந்த ஒரே பலமான தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏன் இதுவரை வவுனியா நகரசபை விடயத்தில் தலையிடவில்லை? தமிழ் தேசியக் கூட்டமைப்பு நகரசபை உறுப்பினர்களே தங்கள் தலைமைக்கு எதிராக கையொப்பம் இட்டு அறிக்கை விட்டுள்ளனர். வாக்குக் கேட்டு வவுனியா வந்த சம்பந்தன் ஐயா எங்கே?

    Reply
  • padamman
    padamman

    வாக்குக் கேட்டு வவுனியா வந்த சம்பந்தன் ஐயா எங்கே?
    அவர் இப்போது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றர் அடுத்த தேர்தல் வரை

    Reply
  • thalaphathy
    thalaphathy

    தர்ஷன், யாழ்ப்பாணம் on August 7, 2010 6:09 pm

    //வெளிநாடுகளிலிருந்து கொண்டு இங்கத்தையான் யதார்த்தம் புரியாமல் பேசக்கூடாது.//

    குண்டுச்சட்டிக்கை இருந்து கொண்டு குதிரை றேஸ் செய்யிற கூத்தமைப்புக்கு, நம்ம தேசத்தின் பின்னூட்டங்கள் இப்ப நல்லா சுடுகுது போல. நாங்கள் வெளிநாட்டில இருக்கிறபடியாத்தானே உங்களுக்கு, இந்த உலக யதார்த்ததை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் என்னடாவெண்டால், இந்த சின்ன கிணற்றுக்குள்ள சுற்றி சுற்றி நிண்டுகொண்டு, மாரிப்பேத்தை மாதிரி திரும்ப திரும்ப ஒரேமாதிரி கத்திக்கத்தியே சாவுறியள். இப்ப உங்கட பருப்பு, படிப்பெல்லாம் வெளிநாட்டுத் தண்ணியில வேகாது எண்டு தெரிஞ்சவுடன, வெளிநாட்டுக்காறரை ஒரு கை பார்ப்பம்மெண்டு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிக்கிட்டிருக்கிறியள். என்ன நம்மட டமில் உங்கட தமிழ்த்தேசியத்துக்கு விளங்குதோ?

    Reply
  • palli
    palli

    தேசம்னெற் கூட்டமைப்பை இது சார்பாய் விளக்கம் கேக்கலாம் என நினைக்கிறேன்; அவர்கள் சரியான விளக்கம் தர மறுக்கும் போது அவர்களை நாம் விமர்சிப்பது தவிர்க்க முடியாது, கூட்டமைப்பு கூத்தமைப்பாகி இப்போது கூழமைப்பாகி விடும்போல் இருக்கிறது, என்னதான் பிரச்சனையாக இருந்தாலும் சாதி சொல்லிபேசியா அந்த நபர் இனி சமூகசேவையில் இருக்கபடாது; அப்படி அவர் மீது நடவெடிக்கை எடுக்காத பட்சத்தில் அந்த அமைப்பே சமூகத்தை விட்டு வெளியேற நேரிடலாம் என்பதை எச்சரிக்கையாகவே சொல்லலாம்;
    தொடரும் பல்லி;;;;

    Reply
  • palli
    palli

    // சம்பந்தன் ஐயா எங்கே??//
    எதுக்கு இந்த ஜயா சம்பந்தன் எங்கே என கேழுங்கள் தப்பில்லை; இந்த விடயத்துக்கு அவர் எடுக்கும் நடவடிக்கையில்தான் அவர் எதிர்கால
    அரசியல் உள்ளது;

    Reply
  • T sothilingam
    T sothilingam

    நண்பர்களே அடுத்த தேர்தல் என்ன? இன்றே இந்த அநீதிக்க தமிழ் அரசியல் கட்சிகள் இயக்கங்கள் பதில் சொல்லியே தீர வேண்டும் -கூட்டணி சலூனில் மயிர் வெட்டுவது போன்று படம்போட்டனர் பின்னர் சாதி காரணமாகவே உட்பூசல்கள் இருந்தன என அன்று கூட்டணியுடன் ஒட்டி உறவாடியவர்கள் இன்றும் பேசுகிறார்கள்

    இதன் பின்னால் வந்த இயக்கங்கள் இந்த சாதிய அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பதை உரத்து பேசினர் சாதி வேறுபாடுகள் அற்று இயக்கத்துக்கு ஆட்கள் சேர்த்தனர் சேர்தவர்களை கொலை செய்தனர் கொலை செய்வித்தனர் இன்று அவர்களையே இப்படி தரக்குறைவாக பேசினர் அன்று இயக்கங்களுக்கு இளைஞர்கள் வரும்போது இந்த சமூகத்தில் மாற்றம் வரும் என்று நம்பியே தமது உயிர்களை போராட்டத்தில் கொடுத்தனர் ஆனால் இன்று…

    சாதியம் பற்றி உரத்து பேசிய ஈபிஆர்எல்எப் சுரேஸ் பிரேமச்சந்திரன் ரிஎன்ஏ பிரதிநிதி தானே!!!

    ரெலோ பிரதிநிதி செல்வம் எங்கே??

    Reply
  • thurai
    thurai

    தமிழரின் உருமைப்போராட்டத்தை முள்ளிவாய்க்காலில் புலியின் பெயரால் தகனம் செய்து ஈமக்கிருகை செய்ய வைத்த காரணங்களில் சாதித்துவேசமும் ஒன்றாகும். ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் சாதியில் குறைந்தோரின் கைகளில் ஆயுதம் தாங்கிய தலைமை வரக்கூடாதென்று அரும்பாடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள்.

    சாதிகளை ஒழிப்பதோ,அன்றி மறைப்பதோ முக்கியமல்ல. மனிதனை மனிதன் மதிக்கும் பழக்கத்தை பழகாதவர்களிற்கு தெரியாதவர்களிற்கு தமிழர் என்று சொல்லவோ அல்ல்து தமிழரின் பெயரால் அரசியல் நடத்தவோ அனுமதிபதே நாம் விடும் பெரும் தவறு.

    துரை

    Reply
  • thurai
    thurai

    //சிங்கம் அவர்களே றேகன் சாதிய அடிப்படையில் சிறையில் அடைக்கப்படவில்லை. நீதவான் வீட்டுக்கு துவக்கு கொண்டு போன படியால் தான் சிறையில் அடைக்கப்பட்டார்//தர்சன்

    நீதவானை கொலை செய்ய முயற்சிக்கவில்லை. ஆனால் தற்பாதுகாப்பிற்கே அவரிடம் துப்பாக்கி இருந்ததென்பது யாவரிற்கும் தெரியும்தானே? உயிரிற்கு பாதுகாப்பில்லாமல் வாழுமொருவர் துப்பாகியுடன் சென்றதில் தவறில்லை. நீதிவானின் வீட்டு வாசலில் யாராவது துப்பாக்கியை கேட்டார்களா? எப்படி உள்ளே அனுமதித்தார்கள்?

    சிங்கள இராணுவத்திற்கு றீகனின் துப்பாக்கி ஒன்றும் செய்யாது. ஆனால் நீதாவானிற்கே பிரச்சினையாகியுள்ளது? நீதிவான் தமிழரா? அல்லது சிங்களவரா?

    துரை

    Reply
  • proffessor
    proffessor

    நடராஜா சேதுரூபன் என்பவரால்நோர்வேயில் இருந்து இயக்கப்படும் தமிழ்நியூஸ் வெப் தளத்தில் தனக்கு எதிரானவர்கள் எல்லோரையும் சம்பந்தப்பட்டவர்களின் பெயருக்கு பதிலாக சாதியை சொல்லியே செய்திகளை இணைத்து வருவதை எவரும் கவனிக்கவில்லையா? சேது தான் உயர்சாதியை சேர்ந்தவன் என்பதை வெளிக்காட்டவே இப்படி செய்கிறார். இதை புலத்தில் உள்ளவர்கள் எப்படி எதிர்க்கப்போகிறீர்கள்.

    ஆனால் இந்த சாதி வெறிபிடித்த சேதுரூபனின் செய்திகளை தேசம் முன்னுரிமை கொடுத்ததையும் பார்த்தேன்.

    இனவெறிக்கு எதிராக போராடுபவர்கள் வழக்கு போடுபவர்கள்.இந்த சாதி வெறிக்கு எதிராக வழக்கு போட புலத்தில் சட்டம் இடம்கொடுக்கிறதா என்று விபரம் தெரிந்தவர்கள் சொல்லவும்.

    Reply
  • பல்லி
    பல்லி

    சோதிலிங்கம் நான் பல மாதங்களுக்கு முன்பு கூட்டணி பற்றிய (சாதி) ஒருகட்டுரைக்கு பின்னோட்டம் எழுதும்போது சொன்னேன் அன்று கூட்டணியினர் சமபந்தி போஸனத்துக்கு எம்மில் பலர் காணி வித்து பந்தி வைத்தனர், அழகான பாய்போட்டு அதிலே புது துணிவிரித்து தலைவாழை இலையிலே அருமையான சாப்பாடுதான் சமபந்தி போஸனமாம்; ஆனால் அதன்பின் ஆறுமாதத்துக்கு இவனுக்கு பனம்களிதான் உணவு என்பது கூட புரியாத மனிதர்கள்தான் அன்றய மக்கள் நலன் விரும்பிகளும் அரசியல்வாதிகளும்; இதில் எனது கவலை மிக பெரும்பாணமை வாக்குகளுடன் கூட்டணி சார்பாய் மக்களவை (பாராளமன்றம்) சென்ற இராசலிங்கம்(தலித்) கூட கூட்டணியின் ஊதுகுழலாய்தான் செயல்பட்டார் என்பது அன்றே எமக்கு வருத்தம் கிராமத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலை கொடுத்தால் போதும் என்பது போலேயே அவரது அரசியல் இருந்தது, இத்தனைக்கும் அவர் மிகபெரிய கல்வியாளன் என்பது குறிப்பிடத்தக்கது, இதை ஏன் இங்கு எழுதுகிறேன் எனில் சமபந்தி போஸனத்தில் நானும் பொருளாதார ரீதியாக பாதிக்கபட்டேன், அந்த வலி இன்றும் உண்டு,

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    வவுனியா நகரசபைத் தலைவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். இவர்கள் எல்லா மக்களினதும், எல்லா நகர சபைபிரதேசங்களில் உள்ளவர்களினதும் நகரசபை ஊழியர்களுக்கும் பொறுப்பானவர்கள். இவர்களால் இந்த சாதீய அவதூறு நடைபெற்றுள்ளது நகராட்சிக்குட்பட்ட ஒவ்வொரு மக்களையும் சமமாக நடாத்தப்பட வேண்டியவர்கள் தவறு செய்துள்ளார்கள் என்பதை புரோபசர் கவனத்தில் கொள்ளவும்.
    சாதி வேறுபாடுகளை கடந்து செயலாற்ற வேண்டியவர்கள் இந்த ரிஎன்ஏ யினர் என்பதை மறந்துவிட்டீர்களா?

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    புரொபெசர் இடையால் சைக்கிள் விடுவது எங்களுக்கு புரிகிறது. தேசம்நெற் யாருக்கும் முன்னுரிமை வழங்குவதில்லை. சேதுவிற்கும் முன்னுரிமை வழங்கவில்லை. செய்திகளுக்கே முன்னுரிமை வழங்குகிறது.

    நாய் மனிதனைக் கடித்தால் அது செய்தியாகாது. ஆனால் மாறி மனிதன் நாயைக் கடித்தால். அது செய்தியாகும்.

    மேலும் வன்னி நகரசபையின் செய்தியை சேதுவினுடைய செய்தியோடு ஒப்பிட முடியாது. நான் அறிந்தவரை சேதுரூபனை நோர்வேயில் யாரும் மக்கள் பிரதிநிதியாகத் தெரிவு செய்யவில்லை.

    Reply
  • nantha
    nantha

    வவுனியா நகர் என்பது இப்போது “வந்தேறுகுடிகளின்” நகர். அவர்களோடு இந்த சாதியும் வந்தது புதினமல்ல. ஆயினும் அதனை மக்கள் பிரதிநிதிகள் என்பவர்கள் பகிரங்கமாக சொல்வது கேவலம். மக்கள் செலவில் வயிறு கழுவும் கும்பல் மக்களின் ஒரு பகுதியினரை கேவலப்படுத்தியுள்ளனர். தமிழ் என்று சொல்லி விடுதலை கோஷம் போடுபவர்கள் இதற்கு என்ன மருந்து கொடுக்கப் போகிறார்கள்?

    Reply
  • சங்கரன்
    சங்கரன்

    சிங்களவன் செய்வது 100 மடங்கு சரியானது. தமிழனை நாட்டை விட்டே துரத்த வேண்டும்.

    Reply
  • BC
    BC

    எந்த காரணம் கொண்டும் இப்படி ஏசுவதை ஏற்க முடியாது.தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கும் ஆபத்தாக மாறிவிடும் என்று கூறி அமுக்கும் முயற்ச்சி தான் நடக்கும்.

    Reply
  • PALLI
    PALLI

    இங்கே நாம் பேசுவது சாதிபற்றியதல்ல, ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் ஒருவரின் அடவாடிதனம் பற்றியது, இதன் பின்னும் இவர் பதவியில் இருப்பாரேயானால் கூட்டமைப்பின் ஆயுள்காலம் குறைவாகவே அமையும்; எமது பேனாக்கள் உங்களை கண்டிக்கும் வல்லமை இல்லாவிட்டாலும் உங்கள் நாத்தங்களை உலகம் அறிய செய்யும் என்பது கடந்த காலங்களில் பல அரசியல் பிரமுகர்கள் அறிந்த விடயம் என்பது கூட்டமைப்புக்கும் தெரியும்; ஆகவே இந்த விடயம் உன்மையெனில் எந்தவித விசாரனையும் இன்றி அந்த பெருமகனை பதவி நீக்கம் செய்வதே கூட்டமைப்புக்கு நன்று:

    Reply
  • proffessor
    proffessor

    ஜெயபாலன்,
    ஒரு நாட்டின் ஜனாதிபதியிலிருந்து கிராமசேவகர் வரை மக்கள் தான் தெரிவு செய்கிறார்கள். அதே மக்கள் கூட்டத்தில் தான் இந்த சாதிய பிரிவுகளும்; ஏற்றத்தாழ்வுகளும் உள்ளது. வெளிப்படையாக கூறினால் வெள்ளாளர் தனக்கு கீழான சாதியென கருதுபவர்களை மதிப்பதில்லை. நான் கூறிய கீழ் சாதியென சமூகத்தில் தரப்படுத்தப்பட்ட இன்னொரு சாதி ஏனைய சாதிகளை மதிப்பதில்லை. இங்கு சாதிகளிலும் ஏறுமுகம் இறங்குமுகமாக அதே மக்கள்தான் பிரித்தாளுகின்றனர்.

    இங்கு சேதுரூபன் மக்கள் பிரதி நிதியில்லைதான். ஆனால் தன்னை ஊடகவியலாளன் எனக்கூறிக்கொள்பவர் மக்களுக்கு நல்ல கருத்தை முற்போக்காக சொல்லவேண்டியவரே சாதி பிரிவினையை புலத்தில் இருந்துகொண்டு செய்கிறார். அதற்கு நீங்கள் மக்கள் பிரதிநிதி என்றும் நகரசபை என்றும் சொல்லி சேதுவுக்கு வக்காலத்து வாங்குவது மாதிரி தெரிகிறது. நான் சேதுரூபன் என்ற ஒரு தனிப்பட்ட நபர் பற்றிக் கதைக்கவில்லை. அதேபோல் இன்று சேது புலிக்கு எதிராக எழுதுவதால் இந்த விடயத்தை கதைக்கவில்லையோ என்றும் சிந்திக்கவேண்டியுள்ளது.

    2009 மே மாதத்துக்கு முன்னர் சேது எழுதியிருந்தால் புலியின் பினாமி சேதுவும் சாதிய மனோ நிலையும் என்று தலைப்பு வைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அப்போது சேதுவும் மக்களின் பிரதிநிதியாக தெரிந்திருப்பார்.

    நான் வவுனியா நகரசபையில் நடப்பதையும் யாழ் பல்கலைகழக நியமனத்தில் கூட சாதி பார்க்கப்படுவதையும் கூட எதிர்ப்பவன். இங்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட இதில் விதிவிலக்கில்லை. வவுனியாவில் சக்கிலியன் என்று சொன்னாலும் ரொறன்டோவில் சக்கிலியன் என்று சொன்னாலும் வேறுவேறில்லை. எல்லாம் பொதுவில் ஒன்றுதான்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    இவ்விடயம் வன்மையாகக் கண்டிக்கப்படுவதோடு நிறுத்தப்படாமல், குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் குற்றவாளிகள் பதவியில் இருந்து தூக்கி எறியப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. என்னைக்கேட்டால் ‘மரணதண்டனை’ கூடக் கொடுக்கலாம் எனச்சொல்வேன். ஆனால் ஜனநாயகக்காரர் எனக்கு சாயம் பூசுவார்களே! இன்னும் ஏன் தமிழ்தேசியக்கூட்டமைப்பு இதையிட்டு ‘மெளனம்’ சாதிக்கிறதோ தெரியவில்லை!

    இவ்விடயத்தை வைத்து புரொபெசர் மட்டுமல்ல பலர் இடையால் சைக்கிள் விடுகிறார்கள். இது அவர்களுக்கே தெரியும். மேலும் இவ்விடயத்தில் திரு.சோதிலிங்கத்தின் கேள்வி நியாயமானது. அதேபோல யுத்தம் முடிவடைந்துவிட்டது எனச் சொல்லப்பட்ட காலத்தில் டக்ளஸ் தேவானநதா அவர்களைப்பாராட்டி கோவில் ஐயர்மார் நடத்திய கூட்டம் ஒன்றில் தமக்கு அகதிமுகாம்களில் தனி இடம் ஒதுக்கித்தந்ததற்கு நன்றி சொல்லியதை ஈ.பி.டி.பி இணையத்தளம் ’பெருமையுடன்’ வெளியிட்டிருந்தது . மேலும் இதே டக்ளஸ் தேவானந்தா தேர்தலுக்கு முன்னர் யாழ்நகர் சிகைஅலங்காரத் தொழிலாளர்களைத் தனியே அழைத்து பேசி இருந்தார். யுத்தம் முடிந்தபின் தனது அரசியல் நோக்கத்துக்காக டக்ளஸ் ஆரம்பித்து வைத்ததை கூட்டமைப்பு தொடர்கிறதோ எனவும் ஐயப்பட வேண்டியுள்ளது.

    இந்த ஒரு நடவடிக்கையை வைத்து ஒட்டுமொத்த ஈழத்தமிழனுக்கும் அவமானம் எனச் சொல்லியோர் அண்மையில் வேறோர் விடயத்தில் தனிமனிதனின்/குழுவின் செயல்கள் ஒட்டுமொத்த சமூகத்தையும் பிரதிபலிக்காது என வக்காலத்து வாங்கியதையும் படித்தேன்.

    சிலர் சொல்கின்றனர் ஒட்டுமொத்த தமிழனையும் துரத்த வேண்டும் என. நல்ல ஐடியாதான் ஆனால் மாற்ருக்கருத்து, மாற்று இயக்க தோழ்ர்களையும் நாம் ‘இழக்க’ வேண்டி வருவதையிட்டு வேதனைதான். இவ்வாறே புலிகளும் 100% முஸ்லிம்களையும் வெளியேற்றினர் என்பதனையும் கவனந்த்தில் கொள்தல் நல்லது.

    அண்மையில் தேசத்தில் பலத்த விவாதத்துக்குள்ளான திரு.ஹூல் அவர்களின் நியமனம் தேசம் வாசகர்களின் ஞாபகத்தில் இருக்கும். பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சகல தகுதிகளும் உள்ளவர் என அறியப்பட்ட திரு.ஹூல் இனவாதம் பற்றிச் சொல்லும் போது ……….

    “ அமெரிக்கர்களுக்கு எனது கருத்துப் பிடிக்காமல் இருக்கலாம்.ஆனால் நான் நினைக்கிறேன் இன அடையாளத்தில் இணைவது (racial affinity) என்பது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கம். அதனுடன் வாழப்பழகிக்கொள்ள வேண்டும். அமெரிக்கர்கள் அது தொலைந்துபோகவேண்டும் என விரும்புகின்றார்கள். அது ஒருபோதும் இல்லாமல் போகாது”
    எனச் சொல்கிறார். பல்லினமக்கள் குடியேற்ரவாசிகளாக வந்து வாழும் அமெரிக்காவில்கூட இன அடையாலம் தொலைந்து போகாது என கருதும் திரு. ஹூலின் கருத்துடன் பார்க்கும்போது தமிழ்ச்சமூகத்துடன் பல்லாண்டுகாலம் ஒட்டிக்கொண்டுவரும் சாதியம் எனப்படும் இச்சாபக்கேடு தொலைவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையோ என கவலையுடன் ஐயப்படவேண்டி இருக்கிறது.

    மேலும் இச்சாபக்கேட்டினை இல்லாதொழிக்க துணிச்சலான நடவடிக்கை எடுத்தவர்கள் ஈழத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் மட்டுமே என்பது எனது கருத்து! பலர் இங்கே வந்து ஆதாரமில்லாமல் அங்கே கேள்விப்பட்டேன் இங்கே கேள்விப்பட்டேன் என பல கதைகள் விடலாம். ஆனால் புலிகள் செய்து காட்டி இருக்ன்றனர். ஆனால் யுத்தம் முடிவடைந்த உடன் அகதி முகாமிலேயே ஐயர்களுக்கு தனி இடம் அமைத்துக்கொடுத்து பழைய பல்லவியைத் தனது அரசியலுக்காக ஆரம்பித்து வைத்தவர் யாரென மேலே சொல்லி இருக்கிறேன்.

    சில சொல்கிறார்கள் வெளிநாடுகளில் வாழ்வோர் எங்கள் பெண்பிள்ளைகள் சுவிஸ் நாட்டுக்காரனுடன் திரிந்து என்ன செய்தாலும் பரவாயில்லை ஆனால் சாதிகுறந்தவனுடன் பழகக்கூடாது எனச் சொல்வதாகவும் ஒட்டுமொத்த ஈழத்தமிழருக்குமே அவமானம் என்றும். அதேபோல எனது நண்பனின் தாய் “தம்பி எவளை வேணுமெண்டாலும் கொண்டுவா ஆனால் வெள்ளைக்காரி வேண்டாம்” எனச் சொல்லியதை பற்றி எனது சக-முற்போக்கு நண்பர் சொன்னார், பாரடா இந்த ஈழத்தமிழ்ச் சனம் இன்னும் இனவாதிகள் என. வெளிநாட்டுக்காரரை கலியானம் கட்டினால் சாதிக்காரன் கட்டாவிட்டால் யாழ்மையவாதி, இனவாதி.!!!

    இவ்வாறான ‘இடையால் சைக்கிள் விடுவோர்’ எங்கும் உள்ளனர். ஆனால் தேசத்தில் கொஞ்சம் அதிகம்.

    Reply
  • Vijayan
    Vijayan

    பல்லி 0n august 8 2010 10:39 am
    மிக பெரும்பாணமை வாக்குகளுடன் கூட்டணி சார்பாய் மக்களவை (பாராளமன்றம்) சென்ற இராசலிங்கம்(தலித்) கூட கூட்டணியின் ஊதுகுழலாய்தான் செயல்பட்டார் என்பது அன்றே எமக்கு வருத்தம் கிராமத்தில்…..

    பல்லி
    திரு.இராசலிங்கம் ஒரு தலித் அல்ல.பள்ளன்.ஆம்.மள்ளன்.ஆம் அவர் மிகபெரிய கல்வியாளன். பள்ளர்/மள்ளர் தமிழ்நாட்டில் தேவேந்திரகுலத்தார் தேவேந்திரகுல வேளாளர் என்றே அழைக்கப்படுகீறார்கள்.
    devendrakulam.org/
    சக்கிலியர் பறையர் இன்னோர்தான் தங்களை தலித் என வெளிப்படையாக அழைத்துக்கொள்கிறார்கள்.பள்ளர்/மள்ளர் தலித் அல்ல. தமிழர் போராட்டம் ஆயிரக்கணக்கில் எமது (பள்ளர்/மள்ளர்) இளையவர்களையும் பலிகொண்டுவிட்டது. இனி யாரையும் நம்புவதற்கு நாம் தயாரில்லை. நாம் அரசகுலத்தவர்களாக இருந்து காட்டிக்கொடுப்புக்களாலும் துரோகங்களாலும் வீழ்த்தப்பட்டவர்கள். அதற்கான ஆதாரங்களை முன்பு நுhற்றுக்கணக்கில் தேசம்நெற் ஊடாக தெரியப்படுத்தியுள்ளோம்.

    பள்ளர் மன்னர் மரபினர் என்று கொள்வதற்கு மன்னர்க்கு ஏற்பட்டிருந்த உரிமைகளில் சிலவாவது இவர்களுக்கு வளங்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு மன்னர்க்குரிய உரிமைகள் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளனவா? நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்கா கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டில் (கல்வெட்டு இலக்கம். 432/1914) பாணடியன் உக்கிரப் பெருவழுதி இம்மரபினர்க்கு வெள்ளை யானை வண்வட்டக் குடை கெராடி பகற்பந்தம் பாவாடை இரட்டைச்சிலம்பு இரட்டைக்கொடுக்கு நன்மைக்குப் பதினாறு கால்பந்தல் துண்மைக்கு இரண்டு தேர் பஞ்சவன்(பாண்டியன்) விருது பதினெட்டு மேளம் வளங்கி அன்றுதொட்டு இம்மரபினர் அவற்றை அனுபவித்து வந்துள்ளனர்.
    குறிப்பு:
    தெய்வேநதிர குலத்தார்க்கு ( மள்ளர் / பள்ளர்) வளங்கப்பட்ட மேலே கூறிய உரிமைகள் தமிழகத்தில் பிராமணர் உட்பட இன்று உயர்சாதியெனப் பாராட்டும் வகுப்புகள் ஒன்றிற்க்காவது வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Reply
  • nantha
    nantha

    இலங்கையில் நகரசுத்தித் தொழிலாளிகள் “கீழ் சாதிகள்”. ஆனால் டொராண்டோவில் “கக்கூஸ்” கழுவும் உயர்வேளாண் குலதிலகங்களை எப்படி அழைப்பது?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….செல்லன் கந்தையனுக்கும் இதுவே நடந்தது. அவரை காலால் உதைத்தவர் இன்னமும் தமிழர் விடுதலைக் கூட்டனியின் மத்திய குழு உறுப்பினர் என்ற லேபிலுடன் லண்டனில் வதிகிறார். அவரது பேட்டிகூட தேசம் நெற்றில் வெளிவந்திருந்தது…..//
    தேசம்நெற் அல்லது கருத்தாளர் சிங்கம் அந்த சுட்டியை (லிங்க்) தர இயலுமா?

    Reply
  • PALLI
    PALLI

    விஜயன் உங்கள் வாதம் தலித்தை சொல்லி அரசியல் செய்வோரை மகிழ்ச்சியடைய செய்யலாமே தவிர பல்லியின் வாதத்துக்கு பதில் அல்ல; எனது வாதம் சாதியின் அடிபடையில் அல்ல அல்ல: நிர்வாகம் பதவி அது எந்த கொம்பனாயும் இருந்தாலும் சரிதான்; சாந்தன் வாதத்திலும் நியாயம் இருக்குதானே, சாவகசேரி மாணவன் கொலை குற்றவாளி தான் தப்பிக்க சாதியை உதவுக்கு சேர்த்துள்ளான் என்பதில் எனக்கும் சந்தேகம் உள்ளது; தமிழில் உள்ள 256 எழுத்துக்களைவிட ஈழத்தில் சாதி கூட இருப்பதால் இராசலிங்கம் என்ன சாதி என என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை என நீங்கள் எடுத்துகொள்ளலாம்; ஆனால் யாராக இருந்தாலும் நிர்வாக சீர்கேடு செய்வார்களேயானால் பல்லியின் எதிர்ப்பு கண்டிப்பாக உண்டு; என்னை பொறுத்த மட்டில் இன மத சமயத்துக்கு அப்பாற் பட்டவன்; இந்த மூன்றுமே ஒரு மனிதனின் தன்நம்பிக்கைக்கு எதிரிகள் என்பது என் கருத்து;

    //பள்ளர் மன்னர் மரபினர் என்று கொள்வதற்கு மன்னர்க்கு ஏற்பட்டிருந்த உரிமைகளில் சிலவாவது இவர்களுக்கு வளங்கப்பட்டிருக்க வேண்டும். //
    இது மாறி தம்பி நீங்கள் அகதி விசாவா? அல்லது வேலைக்கான விசாவா? அல்லது விசாவே இல்லையா;? இல்லாது போனால் நீங்க குடியுரிமை பெற்று(இலங்கையற்ற) விட்டீர்களா. ,,?? இது அன்றாட வாழ்க்கை முதல் திருமண பேச்சுவரை தொடர்கிறது; ஆக காலம் மாறுகிறது; அதேபோல் அவஸ்த்தைகளும் மாறுகிறது; ஆகவேதான் என்றுமே மாறாத நிர்வாகி மீதும் பதவிகள் மீதும் என் கவனம் தொடர்கிறது;;
    தொடரும் பல்லி;;

    Reply
  • BC
    BC

    //நந்தா – இலங்கையில் நகரசுத்தித் தொழிலாளிகள் “கீழ் சாதிகள்”. ஆனால் டொராண்டோவில் “கக்கூஸ்” கழுவும் உயர்வேளாண் குலதிலகங்களை எப்படி அழைப்பது?//
    ஏன் நந்தா இந்த இந்தியா மாதிரியே எங்கள் இலங்கையிலும் கல்வி கற்பிக்கபடும் முறையிலும் மிக பாரிய குறைபாடுகள் இருக்குமோ? அது தான் இதற்க்கு காரணமாக இருக்குமோ?

    Reply
  • nantha
    nantha

    வன்னியில் அமைக்கப்பட்ட அகதி முகாம்களுக்குள் அரச செல்வாக்குடன் முதலில் நுழைந்த மதவாதிகள் “கத்தோலிக்கர்களே”. அதற்கு அவர்கள் சொன்ன காரணம் “ஆன்மீக வழிகாட்டல்”(Spritual Guidence). 90 % இந்து தமிழர்களைக் கொண்ட அகதி முகாம்களில் ஐந்து சிங்கள பாதிரிகளும், புலிப்பாதிரியான மன்னர் யோசேப்பு ராயப்புவும் ஆன்மீக வழி காட்டலுக்குச் சென்றார்கள். ஆனால் அந்த பாதிரிகள் சென்றது புலிக் கிரிமினல்களோடு சேர்ந்து பிள்ளை பிடிப்பில் ஈடுபட்ட பல கத்தோலிக்கர்களைக் காப்பாற்ற என்பது பின்னர் வெளிவந்த தகவல். பாதிரி ஜேம்ஸ் பத்திநாதன் பற்றி அகதி மக்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் அந்த பாதிரியும் வேறு பல கத்தோலிக்கர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு “விசேட” கவனிப்பு கொடுக்க வேண்டும் என்று கோரவே இந்த பாதிரி கூட்டம் அங்கு போனது.

    ஐயர்மாருக்கு விசேட கவனிப்பு என்று கூறும் சாந்தன் போன்றவர்கள் சாதிப்பிரச்சனையை புலிகள் தீர்க்க கண்டு பிடித்த மார்க்கம் ஐயர்மாரைக் கொலை செய்வது என்று சொன்னால் நல்லது. ஐயர்மாரைக் கொன்று தீர்ப்பது புலிகள் சாதிப் பிரச்னையை தீர்க்க எடுத்த “துணிச்சலான” நடவடிக்கையோ?எட்டு ஐயர்மாரைக் கொலை செய்த புலிகள் இந்து மத விரோதிகளும் அந்நியன் தலைமையில் உள்ள கத்தோலிக்கர்களின் ஆட்களுமே ஆவர்.

    புலிகளோடு சேர்ந்து பாதிரிகள் தமிழர்களைக் கொள்ளையடித்தவர்களே ஒழிய சாதிப் பிரச்சனை தீர்க்கப் போனவர்கள் அல்ல. இன்னமும் இந்துக்கள் தங்கள் கோவில்களை புதுப்பிக்க வழியில்லாது அல்லல் படும்போது உருத்திரபுரத்தில் கத்தோலிக்க கோவில் லட்சக் கணக்கில் செலவு செய்து புதுப்பித்து கடடப்படுள்ளது. விமரிசையாக திறப்பு விழாவும் கொண்டாடப் பட்டுள்ளது. அந்தப் பணத்தைப் பாதிரிகள் “அகதிகளுக்குச் ” செலவு செய்யாத மர்மம் என்னவோ?

    இந்த பிரச்சனையில் ஒரு “மரியதாசும்” சம்பந்தப்பட்டுள்ளது சாந்தனின் கண்ணுக்குப் புலப்படவில்லையோ? அந்த மரியதாசுக்கு “ஆன்மீக வழிகாட்டலை” எந்த பாதிரியும் கொடுக்கவில்லைப் போலிருக்கிறது.

    டக்லஸ் தேவானந்தாவுக்கு எதிராகப் புலிகளின் கத்தல் “சாதி” அடிப்படையில் அமைந்த விஷயமே ஒழிய வேறொன்றுமில்லை. யாழ்ப்பணத்தில் “தாழ்த்தப்பட்ட” மக்கள் டக்ளசுக்கு வழங்கும் அமோக ஆதரவு புலிக் கும்பல்களுக்கும் பாதிரிகளுக்கும் பெரும் பிரச்சனை.

    இன்று டக்ளசுக்கு எதிராக குதிப்பவர்கள் “தாழ்த்தப்பட்ட” தமிழர்கள் அல்ல.

    Reply
  • karuna
    karuna

    சாதியரீதியான ஒடுக்கத்திற்கு எதிராக புலிகள் மிகக் கடுமையாக இருந்தார்கள்.

    எனக்கு தெரிந்து..ஒருமுறை..என் ஊரிலே….னளவன் என்று சொன்னதற்காக கடுமையான தண்டனையும் கொடுத்து மன்னிப்பும் கேட்க வைத்தார்கள்.

    சிறீதேவி வில்லிசைக்குழுவினர் பிரேமதாசவினை வண்ணான் என்று அழைத்ததற்காக மேடையை விட்டு உடனேயே இற்க்கி அதற்குரிய தண்டனை கொடுத்தார்கள்.

    புலிகளின் பிரச்சாரம் மக்களினை மனமாற்றம் செய்யும் அளவு போதியதில்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், சட்டரீதியாக செய்தார்கள்.

    புலிகளின் தலைவர்களில் பெரும்பாலனோர்கள் தாழ்த்தபட்டவரே!

    பிரபாகரன்-மீனவர்
    தமிழ்ச்செல்வன்-முடிதிருத்துபவர்
    பொட்டம்மான்-சிவியார்
    பாப்பா, இளம் பரிதி- கோவியர்
    புதுவை இரத்தினதுரை- தச்சர்
    செங்கதிர்- நளவர்
    பானு-சிவியார்

    பெண்களுக்கும் சமஉரிமை கொடுத்தவர்கள் புலிகளே!

    ஏகப்பிரநிதிதுவம், கருதுச் சுதந்திரமின்மை, கட்டாய ஆட்சேர்ப்பு போன்ற பல பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் இதில் அவர்கள் முன்னோடிகளே!

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    இலங்கைத் தமிழர்கள் மத்தியில் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டுடிருக்கும் ஒரு பெரும் பிரச்சினையிது. புலிகளின் துப்பாக்கிகளின் நிழலில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த சாதியம் தற்போது வீச்சுப்பெறத் தொடங்கியுள்ளது.

    1. எஸ்என்ஜி நாதன் – வவுனியா நகரசபைத் தலைவரது நடவடிக்கையை பற்றிய செய்தி வந்தவுடன் செல்லன் கந்தையா றேகன் சேது ஆகியோர் தொடர்பான விடயங்களை முன்னிறுத்துவது ஒருவகையில் எஸ்என்ஜி நாதனின் சாதியத் திமிரை நியாயப்படுத்துவதற்கே உதவுகின்றது. மற்றைய சம்பவங்களைப் பற்றி விவாதிப்பதற்கு தேசம்நெற்றில் எப்போதும் தடையிருக்கவில்லை. ஆனால் வவுனியா நகரசபைச் சம்பவத்திற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் அதனைப் பயன்படுத்துவதே தவறானது.

    2. தமிழ் மக்கள் மத்தியில் சாதிய ஒடுக்குமுறை மேலோங்கி இருப்பதால் சிங்கள பேரினவாதத்தின் ஒடுக்குமுறைக்கு பணிந்து செல்ல வேண்டும் என்பது அநியாயமானது. ஆனால் தன்னுள்ளே ஒடுக்குமுறையைக் கொண்டுள்ள இனம் இன்னுமொரு ஒடுக்குமுறையில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வது சாத்தியமானதல்ல. அல்லது மிகவும் கடினமானது. ஏனெனில் அவர்களும் ஒடுக்குமுறையை ஏதோ ஒரு வகையில் கடைப்பிடிப்பவர்களாகவே உள்ளனர்.

    3. கூட்டணியில் இராசலிங்கம் நிறுத்தப்பட்டதற்குக் காரணம் வடக்கில் சாதிய எதிர்ப்புப் போராட்டங்களால் இடதுசாரிகளின் கை ஓங்கி இருந்தமையால் அதனை எதிர்கொள்வதற்காக இராசலிங்கம் நிறுத்தப்பட்டார். அதே போன்றது தான் புலிகளின் நியமனங்களும். இராசலிங்கம் முதல் பிரபாகரன் வரை அவர்கள் உயர்சாதி கெளரவத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இவர்கள் சாதியத்தை எதிர்த்து சாதித்தனர் என்பது அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக்கப்பட்டதால் இனவாதம் களையப்பட்டதாகக் கூறுவதற்கு ஒப்பானது.

    3. யாழ்ப்பாணத்தில் ஈபிடிபியின் வளர்ச்சி என்பது மட்டுப்படுத்தப்பட்டது. ‘ஈழத்துப் பள்ளர் கட்சி’ ‘பனை ஏறுபவர்களின் கட்சி’ என்றெல்லாம் அடைமொழிப்படுத்தப்படும் இக்கட்சி ஐயர்களுக்கு தனியிடம் ஒதுக்கிக் கொடுத்து வெற்றிபெற முடியாது. வீணையில் கள்ளு முட்டியை தொங்கவிட்டு அழகு பார்க்கும் அரசியல் சிந்தனை உள்ளவரை – யாழ்ப்பாணச் சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்படாதவரை ஒடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் இருக்காது. அல்லது மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும்.

    4. இன அடையாளத்தையும் சாதிய அடையாளத்தையும் ஒரே தளத்தில் பார்க்க முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் 1983 இனக்கலவரம் பற்றிய செய்தியை யாழ்ப்பாணம் கன்பொல்ல கிராமவாசி தமிழனுக்கும் சிங்களவனுக்கும் பிரச்சினையாம் என்று அப்பகுதியைச் சேர்ந்த தோழர் பாலன் என்பவர் தேசம் சஞ்சிகையில் எழுதி இருந்தார். மேலும் அன்றைய காலத்தில் ஒடுக்கப்ட்ட மக்கள் பிரிவினர் சிறுபான்மையினர் (சிறுபான்மைத் தமிழர்) என்ற அடிப்படையிலேயே அழைக்கப்பட்டனர்.

    5. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக புலிகள் போராடினர் புலிகளின் காலத்தில் சாதிய ஒடுக்குமுறை பெண் ஒடுக்குமுறை இருக்கவில்லை என்பதெல்லாம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்கள். போராட்டம் என்ற வேள்விக்குப் பலி கொடுக்க ஆயிரக்க கணக்காணவர்கள் தேவைப்பட்டனர். அதனால் சாதி பிரதேச பால் வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் இயக்கத்தில் இணைக்கப்பட்டனர். அப்படி இணைக்கப்பட்டவர்களில் விசுவாசத்தின் அடிப்படையில் சிலருக்கு உயர் பதவிகள் வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்டதும் சாதிய வட்டத்திற்குள்ளேயே அவை நின்று கொண்டன. விடுதலைப் புலிகளின் தலைமை வல்வெட்டித்துறையைச் சுற்றிய ஒரு சமூகத்தின் கட்டுப்பாட்டிலேயே இலங்கையிலும் வெளிநாடுகளிலும் இயங்கியது.

    மேலும் விடுதலைப் புலிகளின் சாதனை படைத்த ஒரு போராளி மாவீரரான போராளியின் குடும்பத்தின் உதாரணம். அப்போராளியின் சகோதரி அவரும் ஒரு போராளி. அவருக்குப் பழக்கமான மற்றுமொரு போராளி ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். மணம் முடித்தனர். அப்போராளி தனது மனப்பூர்வமாக அத்திருமணத்தை ஆதரித்தார். ஆனால் இந்த திருமணத்தை அப்போராளியின் குடும்பம் முற்றாக நிராகரித்தனர். சகோதரி மணம் முடித்ததையே அக்குடும்பம் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் இன்றும் அவர்களுடன் உறவை முறித்தே வாழ்கின்றனர்.

    6. இவ்வாறான விடயங்களுக்கெல்லாம் மரண தண்டனைதான் தீர்வு என்றால் இலங்கையில் உள்ள ஒடுக்கும் சாதியினர் பெரும்பாலானவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு இருக்க வேண்டும். தனிமனித, அரசியல் படுகொலை தான் தீர்வு என்ற வகையில் தமிழ் விடுதலை இயக்கங்கள், குறிப்பாக விடுதலைப் புலிகள் எண்ணற்ற படுகொலைகளை மேற்கொண்டனர். இறுதியில் அதே படுகொலைக்கே அவர்களும் ஆளாகினர். ஆனால் இன்றும் தனிமனித அரசியல் படுகொலைகளில் காதல் கொண்டவர்கள் எம்மத்தியில் சைக்கிள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

    Reply
  • S.Jeyakkumar
    S.Jeyakkumar

    புலிகளின் தலைவர்களில் பெரும்பாலனோர்கள் தாழ்த்தபட்டவரே!

    பிரபாகரன்-மீனவர்
    தமிழ்ச்செல்வன்-முடிதிருத்துபவர்
    பொட்டம்மான்-சிவியார்
    பாப்பா, இளம் பரிதி- கோவியர்
    புதுவை இரத்தினதுரை- தச்சர்
    செங்கதிர்- நளவர்
    பானு-சிவியார்

    பெண்களுக்கும் சமஉரிமை கொடுத்தவர்கள் புலிகளே….
    பிரபாகரன்-மீனவர் சமுகத்தைச் சார்ந்தவரல்ல. குருகுல மேலோங்கி கரையார் வகுப்பைச்சேரந்தவர். முடிதிருத்துபவர் என்றொரு சாதிப்பிரிவு இல்லை. அம்பட்டர் சாதிப்பிரிவு தான் உண்டு. உள்ளதை உள்ளபடி எழுதுவதற்கு நேர்மை வேண்டும்.

    Reply
  • BC
    BC

    //பெண்களுக்கும் சமஉரிமை கொடுத்தவர்கள் புலிகளே…//
    இது ஓவராக உங்களுக்கே தெரியவில்லையா? பெண்கள் தாங்கள் விரும்பிய உடையை அணிவதை அவர்கள் ஆபாசமாக உடையணிவதை புலி தடை செய்துவிட்டது என்று புலி ஆட்கள் புலத்தில் பெருமையாக கூறித்திரிந்தனர். பெண்பிள்ளைகளை கட்டாய ஆட்சேர்ப்புக்கு பிடிக்கும் போது ஆண்கள் மாதிரி தலைமயிர் வெட்டி சமஉரிமை கொடுத்தவர்கள் தான்.

    Reply
  • palli
    palli

    //இவர்கள் சாதியத்தை எதிர்த்து சாதித்தனர் என்பது அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக்கப்பட்டதால் இனவாதம் களையப்பட்டதாகக் கூறுவதற்கு ஒப்பானது. //
    யெயபாலன் உங்கள் பின்னோட்டத்தை படித்த பின் மிகபெரிய ஒரு பின்னோட்டம் எழுத ணணினேன்; ஆனால் மேலே குறிப்பிட்ட விடயம் குறள் போல் மிக தெளிவாக இருந்ததால் அதன்பின் என்னால் தங்கள் கருத்துக்கு மறுப்புக்கு பதில்தர முடியவில்லை; ஆனாலும் உங்கள் குறளுக்கும் பின்னோட்டத்துக்கும் சற்று முரன்பாடு உண்டு அதை கவனத்தில் எடுக்கவும்;
    தொடரும் பல்லி;;;

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    ஒருதலைப்படசமான அறிக்கையை வைத்து, கதைப்பவற்கு!
    வெளிப்படையான நிறவெறியை, நிறுவ முடியாத சாதீயத்துடன் ஒப்பு நோக்கல் மோடைத்தனமானது. நீங்கள்தான் வர்ணாச்சிர தர்மத்தின் வன்புணர்வாளர்கள். பிரபாகரனை ‘குருகுல மேலோங்கி கரையார்’ வகுப்பைச் சேரந்தவராகவும், ‘மலையாளி’யாகவும் குறிசுடும் இவர்கள் எந்த சாதி? நாதனையும், மரியதாசையும் உயர்சாதியாக்கியது எந்தச் ‘சக்கிலியர்கள்’? ஒரு போராட்டக் கருவை, அரச இயந்திரத்திடமும், வர்த்தக சங்கத்திடமும் அடகு வைத்தவர்களுக்கு, ஒரு முற்போக்கு அமைப்பு தன்னும் இவர்கள் கண்களில் ஏன்படவில்லை? உள்முரண்பாடுகளை வளர்த்து சிங்கள பவுத்த பேரினவாதத்திற்கு தீனி போடுபவர்கள், கோவில்களைத் தகர்க்க முடியாதவர்கள், சாதீயம் பேசி சதிராடாதீர்கள்.
    ஆயிரம் மலர்கள் மலரட்டும், ஆனால் துப்பாக்கியிலிருந்துதான் புரட்சி பூவாகும்.

    Reply
  • nantha
    nantha

    பிரபாகரனின் தந்தையும், பாட்டனும் கேரளாவிலிருந்து வந்தவர்கள். மீனவர்கள் அல்ல. பிரபாகரனின் தாய் பருத்தித்துறை நாகலிங்க முதலி பரம்பரை. அவர்களும் மீனவர்கள் அல்ல. அப்படியிருக்க “வல்வெட்டித்துறை”யில் குடியிருந்த காரணத்துக்காக பிரபாகரன் மீனவர் சமூகம் என்று எழுதுவது சுத்த அபத்தம். பிரபாகரன் கலியாணம் கட்டியதும் மீனவர் சமூகத்தில் அல்ல. அவர் எப்படி “மீனவர் சமூக” சாதியாகினர்? மற்றவர்களின் சாதிகள் சரிஆனவையே! ஆயினும் எல்லா சாதிகளிலும் “கிரிமினல்களும்”, கொலைகாரர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

    இந்திய அமைதிப்படை காலத்தில் ஈ பி ஆர் எல் எப் இயக்கம் புலிகளால் “கீழ்’ சாதிகளின் இயக்கம் என்று அழைக்கப்பட்டது. இப்போது புலிகள் “சாதி”க்கு எதிர் என்று யாருக்குக் காது குத்துகிறார்கள்?

    கோவியர், சிவியார், தச்சர் ஆகிய சாதிகள் தங்களைத் தாழ்ந்த சாதிகள் என்று கூறுவது கிடையாது. ஆனால் அவர்கள் உயர் சாதிகள் அல்ல. 1970 களில் நடந்த சாதி எதிர்ப்பு, ஆலயப் பிரவேசம் போன்ற போராட்டங்களினை எதிர்த்தவர்கள் “கோவியர்கள்”. கோவியர்களால் பல நளவர், பள்ளர் இனத்து மக்கள் தாக்கப்பட்டும் கொலையும் செய்யப்பட்டனர். கோவியர், நளவர், சாண்டார் என்கிற சாதிகள் தமிழ் நாட்டில் கிடயாது என்பதும் அவர்கள் அனைவரும் “சிங்களவர்களாக” இருந்தவர்கள் மாத்திரமின்றி தமிழ் அரசர்களின் படையெடுப்புக்களை அடுத்து அடிமைகளாக்கப்பட்டு “தமிழ்” பேசுபவர்களாக மாற்றமடைந்தவர்கள். மேலும் இப்பொழுது கோவியர்கள் தங்களை “வெள்ளாளர்’ என்று கூசாமல் அடையாளப்படுத்துவதையும் அவதானிக்கலாம்!

    எனவே இந்த “சாதிப்பிரச்சனை”யை புலிகள் தீர்க்கவில்லை மாறாக உரமேற்றிவிட்டுத் தொலைந்து போயிருக்கிறார்கள். புலிகள் தாங்கள் “உயர்ந்தவர்கள்” என்ற ரீதியில் மற்றவர்களை வதைத்த்தார்களே ஒழிய எந்தக் காலத்திலும் “சாதிப்” பிரச்சனை நீங்க வேண்டும் என்று கூறியதாகத் தெரியவில்லை!

    சாதிக்கு எதிராக காத்திரமான கொள்கையையும் போராட்டத்தையும் முன்னெடுத்தவர்கள் இடதுசாரிகள் என்பதும் அந்த இடது சாரிகளில் பலர் புலிகளால் கொல்லப்பட்டனர் என்பது இன்னமும் மோசமான உண்மை.

    நிலைமை இவ்வாறிருக்க புலிகளின் வால்களும், புலிப் பினாமிகளான கூத்தமைபினரும் “சாதி ஒழிப்பு” தங்களுடைய கைவரிசை என்று சவடால் விட்டு யாரை ஏமாற்ற நினைக்கிறார்கள்?

    புலிகள் இந்திய சமாதனாப்படை வெளியேறிய பின்னர் மூன்று பெண் புலிகளை வல்வெட்டித்துறையில் வைத்துப் பகிரங்கமாகக் கொன்றனர். காரணம் புலிகளல்லாத ஆண்களோடு உடலுறவு கொண்டார்கள் என்பதே ஆகும். புலிகள் பிடித்துச் செல்லும் பெண்கள் புலிகளின் “போகப் பொருட்களே”. புலிகளுடன் மாத்திரமே என்பதும் கட்டளை. இது என்ன பெண் விடுதலையோ?

    பிரபாகரனின் குடும்பத்துக் கோவிலில் இன்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது என்பதனை அறிந்தவர்கள் எத்தனை பேர்? புலிகள் எசமான்- குடியானவன் உறவைப் பேணினார்களே ஒழிய சமத்துவத்தை பின்பற்றியது கிடையாது.

    Reply
  • nantha
    nantha

    ஜெயபாலன்:
    வீணையில் கள்ளு முட்டியா தொங்குகிறது? புரியவில்லையே? விளங்கப்படுத்துவீர்களா?

    Reply
  • thurai
    thurai

    மேல்சாதியினர் எனப்பட்டோர் போரை நடத்தவும், அரசியல் தலைவர்களாக விளங்கவும் மட்டுமே விரும்புகின்றார்களா?

    துரை

    Reply
  • S.Jeyakkumar
    S.Jeyakkumar

    “”பிரபாகரனின் தாய் பருத்தித்துறை நாகலிங்க முதலி பரம்பரை. அவர்களும் மீனவர்கள் அல்ல. /
    “பறையர் சிலரும் முதலி பட்டம் தரித்திருந்திருக்கிறார்கள்.அதற்குச் சரித்திர ஆதாரம் உண்டு. அவர்களும் மீனவர்கள் அல்ல.

    திருகோணமலை சார்ள்ஸ் அந்தோனி உரும்பிராய் மள்ளர் குல(பள்ளர்) தாய் தந்தைக்குப்பிறந்தவர். அவர்களும் மீனவர்கள் அல்ல.

    “கோவியர் சிவியார் தச்சர் ஆகிய சாதிகள் தங்களைத் தாழ்ந்த சாதிகள் என்று கூறுவது கிடையாது./
    அதேபோல ஏனையவர்களும் தங்களைத் தாழ்ந்த சாதிகள் என்று கூறுவது கிடையாது. பிறர்தான் அப்படி எண்ணுகிறார்கள்.

    கள்ளு முட்டி முதலில் ஏந்தியவர்கள் இன்றைய வெள்ளாளர்களில் சில பிரிவினரும் சாண்டாரும்தானே? ஆதாரம்: யாழ்ப்பாணச் சரித்திரப் புத்தகங்கள்.

    “கோவியர் நளவர் சாண்டார் என்கிற சாதிகள் தமிழ் நாட்டில் கிடயாது./
    சாண்டார் சிங்களவர்தான்.சாண்டார் (சான்றார்/சாணார் இப்பொழுது நாடார்) தமிழ்நாட்டில் அதிகளவில் மரமேறுகிறார்கள். கோவியர் சவம் காவுவதற்கு ஆந்திரக்காரர்ளால் கொண்டு வரப்பட்டவர்கள்.

    சோழமன்னன் இலங்கையை வெற்றி கொண்டபோது 12000 சாண்டார்களைச் சிறைப்பிடித்து அவர்களைக்கொண்டு தமிழ்நாட்டில் காவிரி அணையைச் செப்பனிட்டான்.

    “1970 களில் நடந்த சாதி எதிர்ப்பு ஆலயப் பிரவேசம் போன்ற போராட்டங்களினை எதிர்த்தவர்கள் “கோவியர்கள்”./
    அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் இதுபோன்ற பொய்யையே வெட்கமில்லாமல் அன்று பாராளுமன்றத்தில் சொல்லியிருந்தார்.

    “கோவியர்களால் பல நளவர், பள்ளர் இனத்து மக்கள் தாக்கப்பட்டும் கொலையும் செய்யப்பட்டனர்./
    சங்கானையில் (நிற்சாமத்தில்)பள்ளர்களால் கோவியர் மற்றும் வெள்ளாளர் கொலை செய்யப்பட்டனர். இதனைப்பற்றி நந்தா ஏன் எழுதவில்லை?

    Reply
  • thurai
    thurai

    இங்கு பின்னோட்டங்கள் எழுதும்போது சரித்திர சம்பந்தமான உண்மைகளைக் கூறுவது வரவேற்கத்தக்கது. தமிழரிடம் உண்மைகள் மறைக்கப்பட்டு சகோதரர்களையே பகைமையாக்கியுள்ளன பல இயக்கங்கள்.

    இதேபோலவே தமிழரிடம் சாதியமைப்பும். எனவே தற்பெருமைகளையும் வீண் விவாதஙகையும் தவிர்த்து உண்மையை அறிய யாவரும் முன் வருவது முன்னேற்றகரமாக இருக்கும் என நான் கருதுகின்றேன்.

    துரை

    Reply
  • PALLI
    PALLI

    ஜெகுமார் நந்தா அனைவரும் ஏதோ ஒரு காரணத்தால் இலங்கைக்கு அழைத்தோ அல்லது இழுத்தோ வரபட்டுதான் உள்ளனர் என உங்கள் இருவரது வரலாறும் சொல்லுகிறது; அப்படியானால் உன்மையில் தமிழரில் மனிதரே இல்லையா? அப்படி இருந்தால் அவர்கள் யார்??
    அச்சுவேலி;ஆவரங்கால்; நீர்வேலி; புத்தூர், சிறுப்பிட்டி, மீசாலை ;எழுதுமட்டுவாள்? குடமியன்; துன்னாலை; கப்பூது; வரணி, மந்துவில்; இவைகளுடன் தனங்களப்பு, மறுவன்புல ஆகிய இடங்களில் பலதடவை போர் நடந்தது; இந்த போர் ராமனுக்கும் ராவணனுக்கும் நடந்ததல்ல அயல் அயல் வீடுகளான தமிழரின் சாக்கடை சாதியால் நடந்தவை, ஆகவே அந்த அருவெருப்பான விடயத்துக்கு ஆதாரம் தேடாமல் அடுத்த நேர சாப்பாட்டுக்கு ஏங்கும் மனிதர்களுக்கு ஏதாவது செய்யலாமே; நடந்த தவறை கிளறுவதை விட நடக்க இருக்கும் தவறை தடுப்பது மேல்;
    தொடரும் பல்லி,,,,,,

    Reply
  • nantha
    nantha

    ஜெயக்குமார் எங்கு சரித்திரம் படித்தாரோ தெரியவில்லை. “முதலி” என்று பட்டங்கள் கொடுக்கப்படுவதில்லை. முதலியார் என்ற பட்டம் பிரிட்டிஷ் காலத்தில் பட்டமாக்கப்பட்டு கொடுக்கப்படுள்ளது. முதலி என்பது பல்லவ என்று அர்த்தம். இதனை தமிழ்-சம்ஸ்கிருத அறிவுள்ளவர்களிடம் அறிந்து கொள்ளலாம். யாழ்ப்பாணத்துக் கடைசி அரசு வாரிசின் பெயர் “பரநிருபசிங்க முதலி” என்பதை அறிந்து கொண்டால் நல்லது.

    மள்ளர் என்பது தமிழ் நாட்டில் “அகம்படியார்” என்கிற சாதியினரிடையே காணப்படும் குலப் பெயர். மழவராயர் என்பவர்கள் வேளாளர்கள். தமிழில் வரும் எதுகை மோனைகளை வைத்து மள்ளரும் பள்ளரும் ஒன்று என்று வாதிடுவது பைத்தியக்காரத்தனம்.

    சாண்டார் என்பவர்கள் சண்டாளர் என்ற சிங்கள வகுப்பினர். தமிழர்களே அல்ல. அவர்கள் மரம் ஏறும் சங்கதி எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் எந்த தொழிலையும் செய்யத் தயாரானவர்கள் என்பது மட்டும் தெரியாது.

    கோவியர்கள் ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்டமைக்குச் சான்று எதுவும் கிடையாது. கொவியர்களின் குடியிருப்புக்கள், காணிப் பெயர்கள், ஊர்ப் பெயர்கள் இன்றும் சிங்களமாக உள்ளன என்பது உண்மை. இந்தியாவில் கோவியர் என்ற சாதியே கிடையாது.

    12000 இலங்கையர்களைக் கொண்டு சென்றான் என்று கதை உள்ளதே தவிர வேறு சான்றுகள் கிடையாது. அவர்கள் “சாண்டார்கள்” என்பதற்கு எதுவித ஆதாரமும் கிடையாது.

    தமிழரசுக் கட்சி மகாத்மா காந்தியை பின்பற்றுகிறோம் என்று சிங்களவர்களுக்கு ரீல் விட்டுக் கொண்டு யாழ்ப்பாணத்தில் வெள்ளாளத் தமிழரசுக் கட்சியினர் மகாத்மா காந்தியால் “ஹரிஜன்” (கடவுளின் குழந்தைகள்) என்பவர்கள் மீது கொலை வெறியுடன் பாய்ந்து கையாட்களான கோவியர்களுக்கு ஆயுதம் கொடுத்து தாக்குதலில் ஈடுபட்டு நிட்சாமத்தில் வாங்கிக் கட்டிக் கொண்டனர். அமிர்தலிங்கம் “வியட்னாம்” பிரச்சனை என்று பாராளுமன்றத்தில் நக்கலடித்தார். அதற்குப் பரிதாபம் காட்ட முடியாது.

    துட்ட கைமுனுவின் மகன் சாலியா சண்டாள(චණ්ඩාල) பெண் மீது காதல் கொண்டதும் பின்னர் மணம் முடித்ததும் அதனால் துட்டகைமுனு “சண்டாள” என்பவர்களை அனுராதபுரியிலிருந்து துரத்தியதாகவும் மகா வம்சம் கூறுகிறது. அந்த சண்டாளர்கள் வளமில்லாத வடக்கு நோக்கி வந்து குடியேறியிருக்கலாம் என்பதே தற்போதுள்ள அனுமானம். அவர்களில் பலரைப் பிடித்து விவசாய அடிமைகளாக தமிழர்கள் ஆக்கி அவர்களைக் கோவியர்கள் என்று அழைத்திருப்பார்கள் என்றே நம்புகிறேன் . சிங்களத்தில் GOVI என்பது விவசாயத்தைக் குறிப்பிடும் சொல்லாகும். சிங்களவர்களிடையே உள்ள GOVIGAMA (ගොවිගම) என்ற சாதிப் பெயரைக் கவனிப்பது நல்லது. சிங்களவர்களின் வாரிசுகள் என்ற உண்மையை உணர்ந்துள்ள சில கோவியர்கள் தாங்கள் சிங்கள உயர் சாதியினர் என்றும் தற்போது கூறிக் கொள்ளுகின்றனர்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //.இவ்விடயம் வன்மையாகக் கண்டிக்கப்படுவதோடு நிறுத்தப்படாமல், குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் குற்றவாளிகள் பதவியில் இருந்து தூக்கி எறியப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. என்னைக்கேட்டால் ‘மரணதண்டனை’ கூடக் கொடுக்கலாம் எனச்சொல்வேன். ஆனால் ஜனநாயகக்காரர் எனக்கு சாயம் பூசுவார்களே!…//santhan

    //…இவ்வாறான விடயங்களுக்கெல்லாம் மரண தண்டனைதான் தீர்வு என்றால் இலங்கையில் உள்ள ஒடுக்கும் சாதியினர் பெரும்பாலானவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு இருக்க வேண்டும்…..// Jeyabalan

    ஒடுக்கும் சாதியினருக்கு கொடுக்கலாம்தான். ஆனால் நான் இங்கே சொன்னது ‘பதவியில்’ இருப்போரைப் பற்றியே ஜெயபாலன்.

    Reply
  • BC
    BC

    அரசன் பலரை சிறைபிடித்ததான், கொண்டுவந்தான், அடிமைபடுத்தினான், அணை கட்டுவித்தான் என்பதை எல்லாம் பார்க்கும் போது கடந்த 30 வருடம் மட்டுமல்ல சோழன், அரசர்களின் காலங்களும் இருண்ட காலங்களாக இருந்ததை விளங்கி கொள்ள முடிகிறது.

    Reply
  • S.Jeyakkumar
    S.Jeyakkumar

    nantha on August 11, 2010 7:03 pm
    ஜெயக்குமார் எங்கு சரித்திரம் படித்தாரோ தெரியவில்லை. “முதலி” என்று பட்டங்கள் கொடுக்கப்படுவதில்லை. /
    நந்தா முதலில் உங்கள் குழப்பமான விளக்கங்களைத் தவிர்ப்பது நல்லது.

    “”யாழ்ப்பாணத்துக் கடைசி அரசு வாரிசின் பெயர் “பரநிருபசிங்க முதலி” என்பதை அறிந்து கொண்டால் நல்லது./
    இப்பொழுது “முதலி” பட்டம் எங்கிருந்து வந்தது?

    கோவியர்கள் ஆந்திராவில் இருந்து பிறங்கைக் கட்டுக்களுடன் கொண்டு வரப்பட்டமைக்குச் சான்று யாழ்ப்பாணச் சரித்திரப் புத்தககங்களில் உண்டு தயவு செய்து படிக்கவும்.

    “”மள்ளர் என்பது தமிழ் நாட்டில் “அகம்படியார்” என்கிற சாதியினரிடையே காணப்படும் குலப் பெயர். மழவராயர் என்பவர்கள் வேளாளர்கள். தமிழில் வரும் எதுகை மோனைகளை வைத்து மள்ளரும் பள்ளரும் ஒன்று என்று வாதிடுவது பைத்தியக்காரத்தனம்.

    “மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கு ஓர் பள்ளக்கணவனாய்…(முக்குடற் பள்ளு இலக்கியம்.)

    அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
    வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்
    – என்று திவாகர நிகண்டும்.

    செருமலை வீரரும் திண்ணியோரும்
    மருத நில மக்களும் மள்ளர் என்ப
    – என்று பிங்கல நிகண்டும் கூறுகின்றன

    Reply
  • thurai
    thurai

    தமிழரில் வடுகர் என்னும் வார்த்தை பழக்கத்தில் உள்ளது. இது எந்த சாதியையும் குறிப்பிடுவதாக எனக்குத் தெரியவில்லை. இப்போ துரோகிகள் என்னும் வார்த்தை போல்தான் வடுகர் என்ற வார்த்தையும் இருக்குமா என்பது பற்ரி யாரவது கூறுவீர்களா?

    துரை

    Reply
  • nantha
    nantha

    ஜெயக்குமார்:
    குழப்பமான தகவல்களை விஷயம் தெரியாமல் பிரசுரித்து பயன் கிடையாது.
    முதலி என்பது பட்டமல்ல. சத்திரியர்களான பல்லவர்களின் சாதிப் பெயர்.
    முதலி = முதல் + இலை என்பதாகும்.
    பல்லவ = pallav =पल्लव = முதல் இலை = தாவரத்தின் முதல் இலை.

    பல்லவர்களே முதலில் “அரசு’ என்பதனை தமிழ் நாட்டில் ஸ்தாபித்தவர்கள். பல்லவ என்பதன் நேரடி மொழிபெயர்ப்புத்தான் “முதலி” என்பதாகும். சமஸ்கிருதம், தமிழ் இலக்கணம் தெரிந்தவர்களிடம் விசாரித்துவிட்டு இந்த விஷயத்தை எழுத முயற்சிக்கவும்.

    பல்லவ அரச வம்சத்தினர் “முதலி” என்ற தமிழ் சொல்லைத் தங்கள் பெயர்களுடன் சேர்த்துக் கொள்வது வழக்கம்!

    இது புரியாமல் “வேறு பல சாதிகள்” தற்போது “முதலியார்” என்று சேர்த்துக்கொண்டு தங்களை உயர் சாதி என்று கூறுகிறார்கள்!

    வடுகர்கள் என்பவர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள். தமிழ்நாட்டில் தெலுங்கர்களைக் குறிப்பிடுவார்கள். இலங்கையிலும் வடக்கிலிருந்து வந்த தமிழர்களை வடக்கத்தையார் என்றுதான் குறிப்பிடுகிறார்கள்

    Reply
  • S.Jeyakkumar
    S.Jeyakkumar

    நந்தா
    எனது அறிவு கடுகளவெனினும் அதனைச் சொந்தமாக வைத்துக்கொண்டுதான் எழுதத் தொடங்கினேன். அரைகுறை சமஸ்கிருதம் தமிழ் இலக்கணம் தெரிந்தவர்களிடம் ஆலோசனை கேட்கவேண்டிய அவசியம் எனக்கில்லை. பல வரலாற்று மேதைகள் தங்கள் ஆய்வுப்புத்தகங்கள் ஊடாக எனக்கு உதவுகிறார்கள்.

    (முதலி. வெள்ளாளர்)பற்றி வரலாற்றறிஞர் Edgar Thurston”The Title Mudali is used chiefly by the offspring of of Devadasis,Kaikolars and Vellalas “(castes and tribes of South india Page 84)முதலி என்ற பட்டத்தை தேவதாசி வழி மரபினரும் கைக்கோளரும் வெள்ளாளரும் தரித்துவருவதாக இயம்புகிறார்..

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இறந்தகால வரலாறுகள் நிகழ்காலநடப்பு முறைக்கும் எதிர்கால வாழ்வுமுறைக்கும் மானிடத்திற்கு பயன்படவேண்டும். இதுவே! வரலாற்றை புரிந்து கொள்வதற்கான அர்த்தம் என நினைக்கிறேன்.
    மதம் எங்கிருந்து தோற்றம் பெற்றது?. சாதி எங்கிருந்து தோற்றம் பெற்றது?. இனங்கள் எங்கிருந்து தோற்றம் பெற்றது?. இப்படியான கேள்விகள் மனுநீதியைத் தேடுபவர்களுக்கு அடிக்கடி எழக்கூடியதே!
    இந்த விவாதத்தில் கலந்து கொள்ளுபவர்கள் உங்களையும் அறியாமலேயே உங்களின் ஒரு அடையாளத்தை பிரதிபலிக்கிறீர்கள். அது தமிழன் முஸ்லீம் அல்லது சாதி அடையாளங்கள்(?) போன்று தெரிகின்றன. குறைகண்டு பிடிப்பது இலகுவானது. நான் அதற்கு முயலவில்லை. அந்த நோக்கமும் எனக்கில்லை. இந்த ஆய்வில் களம்கட்டி நிற்கும் நீங்கள் ஒரு முடிவுக்கு வரவேண்டிய தேவையும் இருக்கிறது.
    எமக்கு தேவையானது. ஏதாவது ஒரு ஒருமதத்தையோ!ஒரு இனத்தையோ!! ஒரு சாதியையோ!!! முன்னிலைப்படுத்தி உங்கள் ஆய்வுகளை முடிக்க முடியுமா? என்பதே. இல்லை என்பதும் உங்களுக்கு தெரியும். அப்படியானால் யாருக்கு இந்த கீழ்தரமான விவாதங்களை நடத்துகிறீர்கள்? யாராவது டாக்டர் “பட்டம்”தருவார்கள் என எதிர்பார்த்தா?
    இது புலிகள் முப்பதுவருடங்களுக்கு மேல் செய்த அக்கிரமங்களுக்கு குறைந்ததில்லை. அவர்கள் தமது பண-ஆயுதவலிமையால் செய்து முடித்து மாண்டு போனார்கள். நீங்கள் பண்டிதத்தனமான கருத்துக்களைக் கொண்டு நிறுவ முயற்படுகிறீர்கள். சாதிஅடையாளங்களை எப்படி? முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பதை ஆய்வு செய்வதே அர்த்தபுஷ்ரியாக இருக்கமென கருதுகிறேன்.

    Reply
  • thurai
    thurai

    //இது புரியாமல் “வேறு பல சாதிகள்” தற்போது “முதலியார்” என்று சேர்த்துக்கொண்டு தங்களை உயர் சாதி என்று கூறுகிறார்கள்!//நந்தா

    எனக்குத்தெரிய யாழ்ப்பாணத்தில் முதலியார் என்னும் பட்டம் சில உயர்சாதியெனப்படுவோர்க்கும், தாழ்த்தப்பட்ட சமூகத்தினரிற்கும் வழங்கப்பட்டுள்ளது.

    //வடுகர்கள் என்பவர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள். தமிழ்நாட்டில் தெலுங்கர்களைக் குறிப்பிடுவார்கள். இலங்கையிலும் வடக்கிலிருந்து வந்த தமிழர்களை வடக்கத்தையார் என்றுதான் குறிப்பிடுகிறார்கள்//நந்தா

    யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் உயர்சாதிகாரர் சிலரையே வடுகர் என அழைப்பதைப் பார்த்திருக்கின்றேன். வடக்கத்தையார் ,கள்ளத்தோணி என தென் இந்தியத்தமிழரையே யாழ் வாசிகள் அழைத்தனர்.

    (தகவலிற்கு மட்டுமே என் விவாதமல்ல)

    துரை

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //3. கூட்டணியில் இராசலிங்கம் நிறுத்தப்பட்டதற்குக் காரணம் வடக்கில் சாதிய எதிர்ப்புப் போராட்டங்களால் இடதுசாரிகளின் கை ஓங்கி இருந்தமையால் அதனை எதிர்கொள்வதற்காக இராசலிங்கம் நிறுத்தப்பட்டார். அதே போன்றது தான் புலிகளின் நியமனங்களும். இராசலிங்கம் முதல் பிரபாகரன் வரை அவர்கள் உயர்சாதி கெளரவத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இவர்கள் சாதியத்தை எதிர்த்து சாதித்தனர் என்பது அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக்கப்பட்டதால் இனவாதம் களையப்பட்டதாகக் கூறுவதற்கு ஒப்பானது.//ஜெயபாலன்

    //….கூட்டணியில் இராசலிங்கம் நிறுத்தப்பட்டதற்குக் காரணம் வடக்கில் சாதிய எதிர்ப்புப் போராட்டங்களால் இடதுசாரிகளின் கை ஓங்கி இருந்தமையால் அதனை எதிர்கொள்வதற்காக இராசலிங்கம் நிறுத்தப்பட்டார். அதே போன்றது தான் புலிகளின் நியமனங்களும்….//
    ஜெயபாலன், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். பிரபாகரன் தாழ்த்தப்பட்டவர்கள் எனச் சொல்லப்படுவோரை பதவியில் அமர்த்தியத்தியது எந்த இடதுசாரிகள் அல்லது மாற்று இயக்கத்தவர்களின் ‘கை ஓங்கி’ இருந்ததனால் எனச் சொல்ல முடியுமா?

    //…இராசலிங்கம் முதல் பிரபாகரன் வரை அவர்கள் உயர்சாதி கெளரவத்தை ஏற்றுக்கொண்டனர்…..//
    இதேபோலத்தான் புலிகளும் சொல்கிறார்கள். இந்த மாற்றுக்கருத்து மனித உரிமை ஜனநாயக புத்திஜீவிகளும் ஐ.நா, அமெரிக்கா போன்றவர்களின் கெளரவத்தை ஏற்றுக்கொள்ள துடியாய் துடிக்கிறார்கள். அதனாலேயே தம்மைக் கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள் என.

    //…அவர்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இவர்கள் சாதியத்தை எதிர்த்து சாதித்தனர் என்பது அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக்கப்பட்டதால் இனவாதம் களையப்பட்டதாகக் கூறுவதற்கு ஒப்பானது…..//

    ஆனால் ஒபாமா தெரிவுசெய்யப்பட்டதானது சமூகமாற்றம் ஒன்று தேவை என அமெரிக்க மக்கள் நினைப்பதனை செயலில் காட்டவேண்டும் என்பதன் வெளிப்பாடாக இருக்கிறது என்பதே உண்மை. சும்மா கதை விட்டுக்கொண்டிருக்காமல் எங்கேயாவது ஆரம்பிக்கவேண்டும். உங்கள் வாதம் 99.99% வீதம் வெள்ளை அங்கத்தினர், ஆதரவாளர்கள், காங்கிரஸ் பிரதி நிதிகள், செனட்டர்கலைக்கொண்ட குடியரசுக்கட்சி கடந்த தேர்தலின் போது உங்களைப்போலவே பிரச்சாரம் செய்தனர். ஒபாமா வென்றால் இனவாதம் அழிந்துவிடுமா எனக் கேட்டனர். ஆனால் அவர்களின் கட்சியில் ஒரு கறுப்பினத்தவர்கூட ‘அதிகாரம் மிக்க’ பதவியில் இல்லை என்ற உண்மையை ஏற்றுக் கொள்கிறார்களில்லை.
    மேலும் அமெரிக்கர்கள் யாருமே இனவாதம் அழிந்து விட்டது எனக்கூறவில்லை. அதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம் எனவே சொல்வார்கள். ஸ்ரீலங்காக்காரர் போல் முரளிதரனுக்கு முத்திரை அடிக்கிறோம் எனவே இனஒடுக்குமுறை இல்லை….அல்லது சிறுபான்மை என்று ஒன்று இல்லவே இல்லை என ஒபாமா கதை விடுவதில்லையே? அண்மையில் விவசாய திணைக்கள கறுப்பின பெண் அதிகாரி வேலைநீக்கம் தொடர்ந்த வெள்ளை மாளிகையின் மன்னிப்புகோரல் போன்றனவற்றை அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

    எல்லாவற்றுக்கும் மேலாக இனங்களிடையான பிணைவு (racial integration)என்பதனை வெற்றிகரமாக அமெரிக்காவில் நடாத்திக்காட்டியவர்கள் அமெரிக்க ராணுவத்தினர் என்கின்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் என எண்ணுகின்றேன்.

    Reply
  • pandithar
    pandithar

    எச்சாமம் வந்து
    எதிரி அழைத்தாலும்
    நிச்சாம கண்கள்
    நெருப்பெறிந்து நீளும்!…..

    கவிஞர் சுபத்திரன் அவர்கள் 69 இல் எழுதிய அந்த கவிதையை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். சாதியம் உதிர்ந்து உலர வேண்டிய சூழலில் விளைந்து கொழுந்து விட்டு வளர்வது நல்லதல்ல.

    வேண்டாம்…. வேண்டாம்….
    இனியும் சாதிச்சண்டை…

    Reply
  • S.Jeyakkumar
    S.Jeyakkumar

    chandran.raja on August 12, 2010 1:07 pm
    இறந்தகால வரலாறுகள் நிகழ்காலநடப்பு முறைக்கும் எதிர்கால வாழ்வுமுறைக்கும் மானிடத்திற்கு பயன்படவேண்டும். இதுவே! வரலாற்றை புரிந்து கொள்வதற்கான அர்த்தம் என நினைக்கிறேன்.

    chandran.raja உஙகள் கருத்துக்களை வரவேற்கின்றேன். ஆனால் கீழ்தரமான விவாதங்கள் அல்ல இவைகள்.வேலை வினைக்கெட்டு எவரும் இங்கு எழுதுவதுமில்லை.வரலாற்றிலுள்ள தவறுகள் சாதிய ஊழல்கள் மோசடிகளை அம்பலப்படுத்துவது மிக அருமையான வேலைத்திட்டம்.தேசம் நெற் ஊடாகப்பறக்கும் இப் பொறிகள் கண்டு பலர் கலங்குகிறார்கள். இவை இக்கட்டுரைக்கு வெற்றி தானே? நோகுது என்னை விட்டுவிடுங்கோ என்பது போராட்டமாகாது.

    Reply
  • palli
    palli

    //இது புலிகள் முப்பதுவருடங்களுக்கு மேல் செய்த அக்கிரமங்களுக்கு குறைந்ததில்லை//
    சந்திரராஜாவும் உங்களைபோல் பல புத்தகங்களையும் உலக நடப்புகளையும் தெரிந்த ஒருவர் என்பது பலர் அறிந்த விடயம்; அதனால் பல்லிதான் பாவியாய் சொல்லுகிறேன் என ஏப்பம் விட்டது போல் இல்லாமல் இனியாவது ஒரு முடிவுக்கு வாங்கபா;;

    //வடுகர்கள் என்பவர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள். தமிழ்நாட்டில் தெலுங்கர்களைக் குறிப்பிடுவார்கள். இலங்கையிலும் வடக்கிலிருந்து வந்த தமிழர்களை வடக்கத்தையார் என்றுதான் குறிப்பிடுகிறார்கள்//
    நந்தா வடுகர் என்பது கோவியரின் செல்ல பெயர்; இதுகூட தெரியாமல்தான் இத்தனை நீட்டி முழக்கமா? போற போக்கில் அமிதாபக்ஸ்சனின் சின்னயா மகந்தான் செல்லப்பா என கதை விடுவீர்கள் போல் உள்ளது;

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //எமக்கு தேவையானது. ஏதாவது ஒரு ஒருமதத்தையோ!ஒரு இனத்தையோ!! ஒரு சாதியையோ!!! முன்னிலைப்படுத்தி உங்கள் ஆய்வுகளை முடிக்க முடியுமா? என்பதே. இல்லை என்பதும் உங்களுக்கு தெரியும். அப்படியானால் யாருக்கு இந்த கீழ்தரமான விவாதங்களை நடத்துகிறீர்கள்? யாராவது டாக்டர் “பட்டம்”தருவார்கள் என எதிர்பார்த்தா?
    இது புலிகள் முப்பதுவருடங்களுக்கு மேல் செய்த அக்கிரமங்களுக்கு குறைந்ததில்லை. //

    இங்கு கூட்டமைப்பினர் மேலுள்ள குற்றச்சாட்டினை அவரவர் வசதிக்கேற்ப புலிகளின் தலையில் போடுகின்றனர். புலிகள் இருந்தபோது யாரும் அவர்கள் மேல் சாதிபற்றிக்குற்ரம் சொல்லவில்லை. ஒருவேளை பயம் காரணமாக எனில் குற்றம் சொல்லுவோர் இன்று கூட்டமைப்பின் சில அங்கத்தினர் மேல் குற்றம் சொல்லும் போது புலிகளின் சாதி அக்கிரமங்களையும் சொல்லி இருப்பார்கள். அது அவர்களுக்கு சில ‘சலுகைகலையும்’ கொடுத்திருக்கும். ஆனால் அவர்கள் அவ்வாறு ‘வசதியான உண்மை’ சொல்லவில்லையே.
    ஆகவே இவ்விவாதத்தில் புலிகளை இழுத்து சைக்கிள் ஓடவேண்டாம்!

    Reply
  • nantha
    nantha

    EDGAR THURSTAN புத்தகம் எழுத முதலே யாழ்ப்பாணத்துக் கடைசி அரசு வாரிசின் பெயர் பரநிருபசிங்க முதலி என்று எழுதப்பட்டுள்ளது. தவிர எட்கார் தேர்ஸ்டன் ஒன்றும் வரலாற்று ஆசிரியர் அல்ல. அவரை ‘மேதை: என்று புகழ்ந்து பயனில்லை. தமிழ் தெரியாத எட்கார் தேர்ஸ்டன் போன்றவர்கள் தமிழர்களின் வரலாறுகளை எழுதினார்கள் என்றால் அதனை நம்ப வேண்டும் என்று புலம்புவது வெள்ளையனுக்கு தமிழனை விடத் தமிழன் பற்றி தெரியும் என்று எண்ணும பாமரத்தனமாகும்!

    சாதிகள் பற்றிய பல தகவல்கள் அந்த புத்தகத்தில் கிடையாது. யாழ்ப்பாணத்தில் நட்டுவர்கள் கைக்கோளர்கள் என்று இரு சாதிகள் உண்டு. ஆனால் தமிழ் நாட்டில் நட்டுவர்கள் தங்களை “கைக்கோளர்கள்’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். தற்போது அவர்கள் தங்களை “இசை வேளாளர்கள்’ என்று குறிப்பிடத் தொடங்கியிருக்கிறார்கள்.

    நீலகண்ட சாஸ்த்திரி போன்ற வரலாற்று ஆசிரியர்களின் புத்தகங்களைப் படிப்பது நல்லது. அவரின் “சோழர்கள்” என்ற நூலில் “தெரிந்த கைக்கோளர் படை” என்பது பற்றிப் படிக்கவும்! நீலகண்ட சாஸ்திரிகள் போன்றவர்கள் எட்கார் தேர்ஸ்டன் போன்றவர்களின் விளக்கங்களை மேட்கோளுக்குத் தன்னும் உபயோகித்தது கிடையாது.

    தற்போது தமிழ் நாட்டில் அந்தக் கைகோளர்கள் “நெசவாளர்கள்” ஆக உள்ளனர். பல்லவர்களின் தலை நகரான காஞ்சியில் “பட்டு” ஆடைகள் அவர்களின் தயாரிப்புக்களே! அந்த கைக்கோளர்கள் “செங்குந்தர்” என்றும் தங்களை அழைக்கிறார்கள்.

    Reply
  • nantha
    nantha

    துரை:
    யாழ்ப்பாண அரசர்கள் காலத்தில் தமிழ் நாட்டில் தெலுங்கு நாயக்கர்களின் ஆட்சி நடைபெற்றது. அந்தக் காலத்தில் நாயக்கர்களின் ஆதரவு யாழ்ப்பாண மன்னர்களுக்கிருந்ததும் பல தெலுங்கர்கள் வர்த்தகம் போன்றவற்றுக்கு வந்து யாழ்ப்பாணத்தில் தங்கினார்கள் என்பதற்கும் ஆதாரங்கள் உண்டு. அவர்களை “வடுகர்கள்” என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். கால ஓட்டத்தில் அவர்கள் “உயர் சாதிகளாக” பரிணாமம் அடைந்திருக்கலாம்!

    Reply
  • nantha
    nantha

    “எல்லாவற்றுக்கும் மேலாக இனங்களிடையான பிணைவு (racial integration)என்பதனை வெற்றிகரமாக அமெரிக்காவில் நடாத்திக்காட்டியவர்கள் அமெரிக்க ராணுவத்தினர் என்கின்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் என எண்ணுகின்றேன்”

    இது என்ன தகராறு? ஒபாமாவின் தாய், தகப்பன் அமெரிக்க இராணுவத்தில் இருந்ததாகத் தெரியவில்லையே!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    நட்புடன் திரு.ஜெயக்குமார் அவர்களுக்கு! நீங்கள் எப்படி விவாதித்தாலும் எம்மை பொறுத்த வரை இவைகள் கீழ்தரமான விவாதங்களே!
    சாதியின் பெயரில் சங்கம் வைப்பதும் கட்சிநடத்துவதும் அவர்களுக்கு நிரந்தரமாக சாதிப்பெயரை உடம்பில் பச்சை குத்திவிடுவதற்கு ஒப்பாதனதாகும். மானிட ஜென்மங்களை கல்வியறிவூட்டாமல்… கல்வியறிவூட்டுவது சமூகத்தின் கடமை என உணராமல் சாதியின் பலபக்க கூறுகளை எடுத்து விவாதிப்பது முதல் முதாலிளித்துவ கல்வி முறை என்பதை தாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இப்படியான ஆய்வுமுறைகள் மனிதன் தோளுக்குமேல் மனிதன் நுகதடிபூட்டி மனிதனை இழுக்குமஇந்த முதாலித்துவ அமைப்பு முறைக்கு கல்லூரிகளுக்கு பல்களைக்கழகங்களுக்கு தேவைப்படலாம். ஆனால் மானிடத்தை நேசிப்பவர்களுக்கு தேவையில்லை.
    இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதஜீவனும் மற்றவனுக்குரிய அந்தஸ்தை அவனும் பெற்றாகவேண்டும். இதுதான் நவீனஉலகம் வற்புறுத்துகிறது. நிர்ப்பந்திக்கிறது. காலம்காலமாக சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள். உழைப்பாளி தொழிலாளி என்பதாகவே வரையறை செய்யவேண்டும். அடிமைத்தனத்தில் இருந்து சாதி உருவாகியது என்பதை புரியவைக்க எனக்கு வேறு வழிதெரியவில்லை.

    Reply
  • S.Jeyakkumar
    S.Jeyakkumar

    தவிர எட்கார் தேர்ஸ்டன் ஒன்றும் வரலாற்று ஆசிரியர் அல்ல…. //
    நந்தா, நீங்கள் நீலகண்ட சாஸ்த்திரி போன்ற வரலாற்று ஆசிரியர்களின் புத்தகங்களைப் படிப்பது சந்தோசம். எல்லாம் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டியவையே.

    கோவணம் கட்டித்திரிந்த பக்கிரிகளுக்கு under wearம் நீளக்காற்சட்டையும் மேலங்கிகளும் அறிமுகம் செய்தவர்கள் வெள்ளையர்கள். வெள்ளையர்கள் ஒவ்வொரு துறையிலும் மிகப்பெரிய மேதைகள் என்பதனை உலகம் அறியும். மோசமானவர்களும்தான். அதேவேளை இரக்கம் மிகுந்தவர்கள். வெள்ளையன் போட்ட பிச்சையில்தான் (குடியுரிமை போன்ற மிக மேலான சலுகைகள்) இலஙகைத் தமிழர்கள் அநேகர் மிக வசதியாகச் சுவாசிக்கின்றார்கள். மிக வசதியாக ஆட்டம் போடுகிறார்கள்.

    சேர் இசாக் நியுற்றன் என்ற வெள்ளைக்காரர் அப்பிள் ஒன்று மரத்திலிருந்து விழுந்தபொழுது புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். இக் கண்டுபிடிப்புக் காலத்திற்கு முன்பே யாழ்ப்பாணத்திலும் தமிழ் நாட்டிலும் பனைமரத்திலிருந்து பனம் பழம் விழுந்து கொண்டுதானிருந்தது. மண்ணின் மேதைகள் ஏன் ஒன்றையும் கண்டுபிடிக்கவில்லை?

    சகலதும் சகலதும் வெள்ளையனின் கண்டுபிடிப்புக்களே. கான மயிலாட அதாவது வெள்ளையர்கள் ஆட கண்டிருந்த வான்கோழிகள் அதாவது கண்டிருந்த ஆசியக்கோழிகள் வெள்ளையனின் கண்டுபிடிப்புக்களைக் காப்பியடிக்க….

    முள்ளி வாய்க்கால் முடிவுக்கு சில வெள்ளையர்களும் காரணமென்று கேள்வி.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    நந்தா …நான் சொல்ல வந்தது ‘நிறுவன ரீதியான’ பிணைவு. நான் பதில் எழுதியது புலிகள் அமைப்பில் உயர்பதவிகள் பற்றிய கருத்தோட்டத்தில்.

    Reply
  • thurai
    thurai

    //இக் கண்டுபிடிப்புக் காலத்திற்கு முன்பே யாழ்ப்பாணத்திலும் தமிழ் நாட்டிலும் பனைமரத்திலிருந்து பனம் பழம் விழுந்து கொண்டுதானிருந்தது. மண்ணின் மேதைகள் ஏன் ஒன்றையும் கண்டுபிடிக்கவில்லை?//ஜெயகுமார்

    தமிழர் கண்ட உண்மைகள் பல மறைக்கப்பட்டுள்ளன. மருத்துவ குறிப்பேடுகள் கூட இந்தியாவில் இருந்து களவாடப்பட்டு மேல்நாடுகளில் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஜீன்ஸ் காற்சட்டை நீல்நிறம் கூட இந்தியாவில் இருந்து வந்ததாக அறிகின்றேன். கட்டுமரம் என்பது ஆங்கிலத்திலும் ஜேர்மன் மொழியிலும் கட்டு மறொங் என்றே உள்ளது. கட்டு மரத்தை கண்டு பிடிக்காமல் கப்பல் கட்டியிருப்பார்களா?கப்பல் கட்டிநாடுகளைப் பிடித்த பின்னர்தான் கட்டுமரத்தை கண்டு பிடித்தார்களா?

    துரை

    Reply
  • S.Jeyakkumar
    S.Jeyakkumar

    துரை அவர்கள்
    நீங்கள் கூறிய எதனையும் நான் மறுதலிக்கவில்லை.

    எட்கார் தேர்ஸ்டன் ஒன்றும் வரலாற்று ஆசிரியர் அல்ல என நந்தா எழுதியதற்காகத்தான் அப்படி எழுதினேன். உண்மையில் எட்கார் தேர்ஸ்டன் மிகப் பெரிய வரலாற்று மேதை. பெரும்பாலும் இலங்கை இந்திய வரலாற்றாசிரியர்கள் இவரையே பின்பற்றுகிறார்கள்.

    Reply
  • nantha
    nantha

    எட்கார் தேர்ஸ்டன் சரித்திரம் எழுதவில்லை. அந்த காலத்தில் கிடைத்த சில தகவல்களைத் திரட்டியிருக்கிறார். சரித்திரம், வரலாறு என்பதற்கும் எட்கார் தேர்ஸ்டன் திரட்டிய தகவல்களுக்கும் சம்பந்தமே கிடையாது. அதுவே அரைகுறை. அதனித் தூக்கித் தீர்த்தமாடப் புறப்பட்டால் “இந்தியாவில்” முஸ்லிம்கள்” மாத்திரமே மன்னர்கள் என்று அழ வேண்டியிருக்கும். ஏனென்றால் வெள்ளைகள் இந்தியாவுக்கு வந்த பொழுது முஸ்லிம்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தனர்.

    நீளக் கால்சட்டைகள் (SPLITTED PANTS) பற்றிய வரலாற்றில் அது சீனர்களினால் அணியப்பட்டது என்று “வெள்ளைகளே” எழுதி வைத்துள்ளது ஜெயகுமாருக்குத் தெரியாது போலிருக்கிறது.

    கோவணம் எங்கள் கண்டு பிடிப்பு என்பதில் என்றும் பெருமையுண்டு. சிலவேளைகளில் அதுவும் வெள்ளைகளின் கண்டு பிடிப்பு என்று சொல்லக் கூடும். பட்டு என்பது இன்றும் பெருமை வாய்ந்ததுதான். அதனை இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில் அறிமுகம் செய்தவர்கள் பல்லவர்கள் என்பதும் பின்னாளில் அரபியர்களும், கிரேக்கர்களும் அதன் உபயோகத்தை வெள்ளைகளுக்கு அறிமுகம் செய்துள்ளனர் என்பது வெள்ளைகளே சொல்லும் உண்மை. சிலவேளைகளில் இவர்கள் வெள்ளையன் இல்லாவிட்டால் எங்களுக்கு அரிசி கூட கிடைக்காது என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதட்கில்லை.

    தற்போதுள்ள “இலக்கங்கள்”(NUMERALS – 1,2,3,4,5,6,7,8,9,0) இந்துக்களினால் கண்டுபிடிக்கப்பட்டவை என்பதும் அவை இன்றும் HINDU NUMERALS என்றுதான் டொரோண்டோ பல்கலைக்கழகத்தின் கணிதப் பிரிவில் சொல்லுகிறார்கள்.

    ஆக மொத்தத்தில் அரை குறையாக படித்துவிட்டு கோவணக் கதைகள் எழுதி எங்கள் மூதாதையர்களின் பெயர்களை தாரை வார்க்காமல் இருந்தால் நல்லது. வெள்ளையர்களுக்குக் கும்பிடு போட்டு வயிறு கழுவுவது அவரவர் இஷ்டம்!

    Reply
  • BC
    BC

    //ஜெயக்குமார்- துரை அவர்கள் நீங்கள் கூறிய எதனையும் நான் மறுதலிக்கவில்லை. //

    அப்போ பனைமரத்திலிருந்து பனம் பழம் விழுந்த போது தமிழன் கண்டுபிடித்த ஈர்ப்பு விசையை நியூட்டன் கடத்தி மேற்கு நாடுகளுக்கு கொண்டு போனார் என்று எடுத்துக் கொள்ளலாமா!

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    சாதிப்பிரச்சினையை தீர்ப்பதற்கு உள்ள வழி வகைகளைப்பற்றியும் ஆராய்தல் நல்லது. இங்கே குறிப்பிட்டு பேசியது போன்று இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்ளவோ அல்லது சாதிகள் அற்ற சமூகத்தை உருவாக்குவது பற்றிய கருத்துக்களை இங்கே பதிவிடவும்

    Reply
  • PALLI
    PALLI

    //சாதிகள் அற்ற சமூகத்தை உருவாக்குவது பற்றிய கருத்துக்களை இங்கே பதிவிடவும்//
    என் அனுபவத்தில் சொல்லுகிறேன் நம்பிக்கை தன்நம்பிக்கை இருந்து விட்டால் சாதியல்ல சகலததையும் நாம் வென்று நல்ல ஒரு சமூகத்தை உருவாக்க முடியும்; தவறான பாததையில் இந்த சமூகம் பயணிக்குதெனில் நாம் சரியான பாதையை தெரிவு செய்யலாம் எம் பின் இந்த சமூகம் பயணிக்க நாம் ஒரு சரியான சமூகத்தை உருவாக்க நம்பிக்கை உள்ள சமூகத்தை உருவாக்க ஒவ்வொருவரும் மற்றவர்களை குறை சொல்வதோடு நில்லாமல் நாம் விடும் தவறுகளையும் சோம்பேறிதனத்தையும் அகற்றவேண்டும்; சோதிக்கு நான் யார் என்பது தெரியாது ,நந்தா யார் என்பது பல்லிக்கு தெரியாது ஆனாலும் பல விவாதத்தில் பங்குகொள்கிறோம். அதில் பலர் கருத்தை பலர் ஏற்று கொள்கிறோம்; இது முகம் தெரியாத தளம் என்பதில் அது சாத்தியம் என சிலர் சொல்லலாம், உன்மைதான் அந்த முகதிரையை அல்லது மாயையை அகற்றி மனிதரை மனிதராய் பார்க்க எப்போது நாம் தயாராக போகிறோம் என்னும் கேள்வியுடன்…
    பல்லி தொடரும்??

    Reply
  • BC
    BC

    //என் அனுபவத்தில் சொல்லுகிறேன் நம்பிக்கை தன்நம்பிக்கை இருந்து விட்டால் சாதியல்ல சகலததையும் நாம் வென்று நல்ல ஒரு சமூகத்தை உருவாக்க முடியும்;//
    தன்நம்பிக்கை இருந்தால் உங்கள் தனிபட்ட வாழ்க்கையில் பலவற்றை வெல்ல முடிந்தது. முடியும். ஆனால் சாதிகள் என்பது சமூகத்தை பற்றியுள்ள மூடநம்பிக்கை இதில் தன் நம்பிக்கையால் எப்படி வெற்றி பெற முடியும்? இருந்தாலும் பல்லியின் நல்ல நோக்கத்திற்கு எனது வாழ்த்துக்கள்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    பல்லி,
    சாதிகள் பற்றியும் அவை எவ்வாறு தமிழ்ச்சமூகத்தில் சாபக்கேடாக இருக்கிறது என்பதனைப்பற்றியும் கேட்டால் தன்னம்பிக்கை உயர்வு தரும் என சொல்கிறீர்கள். நல்லது. ஆனால் இது ஒரு வகையான தப்பியோடல் எனவே நான் நினைக்கிறேன். தொழிலாளி கூலியைக் கூட்டிக்கேட்டால் நீ முற்பிறப்பில் செய்த பாவம் என்பது, நன்றாக உழை முன்னேறலாம் என்பது, கோவிலுக்குள் விடக்கேட்டால் காசுதருகிறேன் நல்ல கோவிலாக கட்டிக்கொள்ளுங்கள் என்பது போன்றது. இதையே யாழ்மையவாத சைவவேளாள சிந்தனை எனச் சொல்வோரும் உள்ளனர்.

    Reply
  • PALLI
    PALLI

    சாந்தன் பி சி உங்கள் வாதம் சரியென வைத்து கொள்ளுங்கள். ஆனால் முன்பே சொல்லி விட்டேன் இது எனது அனுபவம்தான், என்னால் உறுதியாக சொல்லமுடியும் பல்லி குடும்பம் போல் இங்கே எழுதும் யாரும் சாதியால் பாதித்திருக்க மாட்டார்கள். பல தலைமுறை சாதியால் பாதிக்கபட்ட எம் குடும்பத்தில் எனது சகோதரர் அதில் இருந்து விடுபட்டு எமக்கான வாழ்வுதேடி தன்னம்பிக்கையுடன் செயல்பட்டார், அந்த தேடலே எமக்கு பல அனுபவத்தை கொடுத்தத்து, அப்போது எனது மூதோரின் ஏலாமையை நினைத்து பரிதாபபடதான் முடிந்தது, நான் புலம்பெயர் தேசம் வரும்போது எனக்கு உறவோ அல்லது ஊரவரோ இருக்கவில்லை; எனது முயற்சியால் சிலரை நட்பாக்கி அவர்களுடந்தான் இருந்தேன்; அப்போது அவர்கள் யார் என்ன சாதி என கேக்கவில்லை, அவர்களும் என்ன கேக்கவில்லை; ஆனால் இன்றுவரை அந்த நட்பு பொய்யில்லாமல் தொடர்கிறது, இது பல்லிக்கு மட்டுமல்ல பலருக்கு நடந்த உன்மைகள்.

    என்னுடைய வாதம் மதித்தால் மதிப்போம்; இல்லையேல் ஒதுங்க வேண்டாம் விலகி செல்வோம்; இந்த ஒதுங்குதல் விலகுதல் இரண்டுக்கும் என்ன வேறுபாடு சாந்தன் நீங்கள் கேக்கலாம், விலகுதல் மற்றவர்கள் எம்மை அடிமையாக்க முடியாது, ஒதுங்குதல் நம்மை நாமே அடிமையாக்கி விடுவோம்; அன்று பிடித்து கரைசேர பலருக்கு துடுப்பு எதுவும் இல்லை; இன்றோ எங்கு பார்த்தாலும் துடுப்புக்கள் தயார் நிலையில் உள்ளன, நான் சாந்தனை சாந்தனாக பார்த்தால் பிரச்சனை இல்லை ஆனால் சாந்தன் யார் அவரது மூலம் என்ன என பார்க்கும்போது பிரச்சனை வருகிறது,

    //தன்நம்பிக்கை இருந்தால் உங்கள் தனிபட்ட வாழ்க்கையில் பலவற்றை வெல்ல முடிந்தது. முடியும்.//
    பி சி இதே பதிலை நான் உங்களுக்கு எழுதுகிறேன் பாருங்கள்? (பி சி தன் நம்பிக்கை இருந்ததால் உங்கள் தனிப்பட்டவாழ்வு பலவற்றை வெல்ல முடிந்தது;) பி சி நானும் நீங்களும்தானே சமூகம், அதை பல்லியாலும் பிசியாலும் ஒரு சமூகத்தை உருவாக்க முடியாதுதான் ஆனால் இந்த சமூகத்துக்கு ஒரு முற்போக்குவாதிகளாக இருக்க முடியும் என்பதே தன் நம்பிக்கை,

    // சாதிகள் என்பது சமூகத்தை பற்றியுள்ள மூடநம்பிக்கை இதில் தன் நம்பிக்கையால் எப்படி வெற்றி பெற முடியும்?//
    உங்களால் உங்கள் உறவுகளால் இதில் இருந்து வெளிவர முடியாதா?? முடியாது என சொன்னால் பல்லியின் நம்பிக்கை சரியல்ல முடியுமாயின் அதுவே இந்த சமூக மாற்றத்துக்கு ஒரு புள்ளி;

    //இருந்தாலும் பல்லியின் நல்ல நோக்கத்திற்கு எனது வாழ்த்துக்கள்.// இதுவே என் நம்பிக்கைக்கு ஒரு வெற்றிதானே பி சி ;

    //சாதிகள் பற்றியும் அவை எவ்வாறு தமிழ்ச்சமூகத்தில் சாபக்கேடாக இருக்கிறது என்பதனைப்பற்றியும் கேட்டால் தன்னம்பிக்கை உயர்வு தரும் என சொல்கிறீர்கள்.//
    சாந்தன் அது பற்றியே பேசாமல் இதை சரிசெய்யவும் எழுதுங்கள் என சோதி எழுதினாரே கவனிக்கவில்லையா??

    //ஆனால் இது ஒரு வகையான தப்பியோடல் எனவே நான் நினைக்கிறேன். //
    இருக்கட்டுமே புலியை கண்டு தப்பியோடினோம்; அதனால் இன்று ஆபத்தில் மாட்டியது புலிதானே தவிர நாமல்ல; புலி இடத்தில் வைக்க வேண்டியவர்களை வைத்து பார்க்கவும் எனது பார்வை சரியாக இருக்கலாம்,

    //தொழிலாளி கூலியைக் கூட்டிக்கேட்டால் நீ முற்பிறப்பில் செய்த பாவம் என்பது,//
    இது சரியான வாதம் அல்ல; இருந்தாலும் அந்த தொழிலாளி முயற்சித்தால் முதலாளியை மாற்றலாம் என்பதே தன் நம்பிக்கை,

    //நன்றாக உழை முன்னேறலாம் என்பது, //
    இதை முதலாளி சொல்ல முன்பே நாம் முடிவு செய்ய வேண்டும், இது புலம் பெயர் தமிழருக்கு அனுவம்; சாந்தனுக்கும் இருக்கலாம்; முதலாளியாக அல்ல தொழிலாளியாக,

    // கோவிலுக்குள் விடக்கேட்டால் காசுதருகிறேன் நல்ல கோவிலாக கட்டிக்கொள்ளுங்கள் என்பது போன்றது//
    இதுக்கு என்னால் சரியான பதில்தர முடியாது ஆனால் நான் அடிக்கடி பெரியாரின் சிந்தனைகள் பற்றி தமிழிச்சி இனையதளத்தில் படிப்பேன்; அதன்படி பார்த்தால் நம்மை மதிக்காத கடவுள் நமக்கு எதுக்கு இதுகூட தன் நம்பிக்கைதான்;

    //. இதையே யாழ்மையவாத சைவவேளாள சிந்தனை எனச் சொல்வோரும் உள்ளனர்.//
    இது பல்லிக்கு பொருந்தாது; ஏனென்றால் நான் அவன் இல்லை; ஆனால் உங்க சிந்தனை வேப்பமரத்தில் பேய் என்பது போன்ற பயமூட்டலே; அது நிஜமல்ல நிழல் என்பதுதான் என் நம்பிக்கை அதுவே தன் நம்பிக்கை;
    தொடருவேன் பல்லி;;;;

    Reply
  • தர்சன்
    தர்சன்

    வவுனியா நகரசபை விவகாரம் இப்ப எங்கயோ விட்டிட்டு ஆராய்ச்சி நடக்குது. டக்ளஸ்க்கு தாழ்த்தப்பட்ட சாதியினர் கூடுதலாக ஆதரவளிக்கின்றனர் என்பது உண்மை தான். பச்சையாக வெட்கம் விட்டு கூறுவதானால் நான் EPDP க்கு வோட்டு போடாதத்துக்கு அவர்கள் எம்மை விட தாழ்த்தப்பட்ட சாதியினருக்கே முன்னுரிமை வழங்குகிறார்கள் என்ற எரிச்சல்தான் காரணம் என இப்ப நினைக்கிறன். ஆனால் தமிழ்க்கூட்டமைப்பும் வெள்ளாளருக்கு இங்க ஒன்றும் வெட்டி விழுத்தவில்லை. ஆனாலும் அவர்கள் மீது எரிச்சல் வராதது ஆச்சரியமே. மற்றவர்கள் கருத்து எப்படியோ நான் கல்யாணம் தவிர வேறு எந்த விடயங்களுக்கும் சாதி பார்ப்பது இல்லை. பார்ப்பதும் கூடாது. பார்க்கவும் மாட்டேன்.-தர்சன், யாழ்ப்பாணம்

    Reply
  • palli
    palli

    தர்சன் உங்க திருவிளையாடல் நாம் 1979முன்பே பார்த்துவிட்டோம்; அதன்பின் பாரிஸ் மகாநாட்டிலும் பார்த்து விட்டோம்; இந்த பக்கத்து இலைக்கு பருப்பு சமாசாரத்தை நிறுத்துவதே நல்லது, வேடிக்கை பார்ப்பது சுலபம் வேதனை என்பதை அறியாதவர்களுக்கு,

    Reply
  • Rajasingham
    Rajasingham

    I have read the comments on this report with interest, in order to get an insight into current Tamil thought on the caste issue. while the discussion on the historical aspects of the caste system in Jaffna, was interesting from an academic point of view, the inability of the commentators to express their horror and condemnation at a gross insult to human dignity was disappointing.

    We are free to make our choice of friends to associate and others to shun. We also free to choose whom we want to marry. This is a choice we are free to make as individuals based on our predilections. However, as a society, no section of it, however they may grade themselves, has a right to insult, discriminate and marginalize any other. I hope a Tamil lawyer will take up the case of the ‘insulted humans’ in Vavuniya and file action in the courts against the ‘ insulting humans(assuming they are humans!)in the Vavuniya Council.

    I strongly believe that an entrenched caste system has no place in Tamil society and has to be flushed down the toilet of history. Let us reform ourselves, before we demand reform of the Sri Lankan polity. The caste system cannot be justified in this day and age, among any people. There will always be class differences in society, dictated by wealth and cultural norms. This is natural. However, to classify persons into higher and lower castes, because of an accident of birth, justified by calling it ‘Karma’, has to be condemned outright.

    How can a person who does not actively engage in farming be a ‘Vallala’? How can a person who does not climb trees to tap toddy,continue to be called a ‘Nallawan’? How could a person who is not an agricultural labourer anymore, be called a ‘Pallan’? We are all ‘Sudras’ and belong to the lowest in the Hindu caste system! How can a society that worships Nandanar and Kannappa Nayanar, so-called low caste saints, be so schizophrenic?

    Dr.Rajasingham Narendran

    Reply
  • thurai
    thurai

    தொழிலாளர்களிற்கு மதிப்பளிக்கத் தவறியமையே சாதியத்தின் வளர்ச்சிக்குக் காரணமென நான் கருதுகின்றேன்.

    மரமேறுபவர் எல்லோரும் நளவரென்றோ கடலோரம் வசிப்போரெல்லாம் மீன் பிடிக்கும் கரையாரென்றோ கூறமுடியுமா? தென்னிந்திய பெண்ணை மணமுடித்தால் இந்தியாக்காரியாகவும், மலையகத்தமிழ் பெண்ணை மணந்தால் தோட்டக்காரியாகவும், புகழ் பெற்ற நடிகையை மணமுடித்தால் சினிமாக்காரியாகவும் ஓர் தமிழ் பேசும் பெண் அழைககப்படுகின்றாள்.

    இதேபோல்தான் சாதிகழும் தமிழரிடையே உருவானதென்பதே என் கருத்து. காலமாற்றத்தால் புலிகள் இராசபகச்வுடனும் புலி எதிப்பாளர்கள் இராசபகசவின் வீட்டு வாசலிலும் நிற்பதே இதற்கு உதாரணம்.

    அரச பதவிகளில் முன்னுருமை பெறவும், சமூகத்தில் மேம்படவும் தமிழரிடம் ஏற்பட்ட போட்டி பொறாமைகளே அன்று முதல் இன்று வரை தமிழரிடம் சாதிகளையும். வேற்றுமைகளையும் வளர்த்து வருகின்றது.

    துரை

    Reply
  • BC
    BC

    //துரை-தொழிலாளர்களிற்கு மதிப்பளிக்கத் தவறியமையே சாதியத்தின் வளர்ச்சிக்குக் காரணமென நான் கருதுகின்றேன்.//
    அப்படி தான் நானும் நினைக்கிறேன்.
    மலையகத்தை சேர்ந்த இந்திய பெண்ணை மணந்தால் தோட்டக்காரி என்று இளக்கம். ரம்பாவை மணந்தால் பெருமை. ஆச்சரியமாக தான் இருக்கிறது. ஆனால் உண்மை.

    Reply
  • nantha
    nantha

    யாழ்ப்பாணத்தில் தொழிலாளர் என்ற பதத்தை உபயோகிப்பதையே பலர் வெறுத்தனர். அரை பரப்புக் காணிக்குள் இருந்து கொண்டு பத்தாம் வகுப்பு படித்தவுடன் கொழும்பு, உத்தியோகம் என்ற கனாக்களில் மிதந்தவர்கள் அதிகம். அவர்கள் (எந்த சாதியாயினும்) தங்களை ஒரு “முதலாளி”யாகவே சிந்திக்கப் பயிற்றப்பட்டனர். சமூக சீர்திருத்தப் போராட்டங்கள், லஞ்ச, மோசடி ஒழிப்பு போராட்டங்கள் என்பன யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டது கிடையாது. மாறாக கள்ளக் கடத்தல், சகல விதமான மோசடிகள் செய்பவர்கள் “சமூக” அந்தஸ்த்துப் பெற்றனர். லஞ்சம் கொடுத்து அல்லது வாங்கி வாழ்வது அந்தஸ்தாகக் கருதப்பட்டது.

    அப்படியான சமூகத்தில் இருந்து முளைத்த இயக்கங்களும் அதே மோசடித்தனங்களை ஆதரித்தன. இந்த நிலையில் அந்த சமூகம் எப்படி திடீரென்று “சுத்தமான” ஆத்மாக்களாக மாறுவது?

    வெளிநாட்டுக்கு அனுப்புகிறேன் என்று கோடிக்கணக்கில் மோசடி செய்த எவனையும் இந்த இயக்கங்கள் சந்தியில் கட்டி வைத்து சுடவில்லை. லஞ்சம் வாங்கியவனை குறைந்த பட்சம் சந்தியில் மேர்வின் சில்வா கட்டி வைத்தது போலக் கட்டி வைத்து ஒரு எச்சரிக்கை கூட விடப்படவில்லை. ஆனால் ஆடு திருடியவன், மாடு திருடியனுக்கெல்லாம் “மரண தண்டனை” வழங்கப்பட்டது.

    கொள்ளை லாபம் பெற்றவர்கள், கள்ளக் கடத்தல்காரர்கள், லஞ்சப் பேர்வழிகள், வெளிநாட்டு ஏஜண்டுகள் போன்ற சமூக விரோதிகளே இயக்கங்களின் கூட்டாளிகளாகினார்கள். இந்த லட்சணத்தில் “சாதி எதிர்ப்பு” அல்லது “சமத்துவம்” யாரிடமிருந்து வரும்?

    பணம்/வசதிகள் கிடைத்தவுடன் தங்களை “உயர் சாதிகள்” என்று காட்டத் தொடங்கிவிடுவார்கள். தாழ்த்தப்பட்டவர்களும் இதே கூத்தையே செய்தார்கள்/ செய்கிறார்கள் .

    வெள்ளாமையே செய்யாதவர்கள் “வெள்ளாளர்” ஆகிய கதைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. அதாவது “உயர்சாதி” என்ற வகுப்புக்குள் பலர் தாங்களாகவே போகத் தொடங்கியுள்ளனர்.

    சித்தார்த்தனின் கட்சி “சகல” அடக்கு முறைகளையும் உடைத்தெறிவோம் என்று கடித தலைப்பில் வைத்துக் கொண்டு இதுவரையில் வவுனியா நகரில் அந்த நகரசபைத் தலைவருக்கெதிராக “மக்கள் போராட்டம்” எதனையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. மற்ற கட்சிகள், இயக்கங்கள் ஆகியவற்றுக்கும் இது பொருந்தும்.

    வடமாகாண ஆளுநரைக் கொண்டு அவரை பதவியிறக்க முடியும். ஆனால் அதற்கான எதையும் சம்பந்தப்பட்டவர்கள் வவுனியாவில் செய்தமைக்கு சான்றுகள் வெளி வரவில்லை!

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….வெளிநாட்டுக்கு அனுப்புகிறேன் என்று கோடிக்கணக்கில் மோசடி செய்த எவனையும் இந்த இயக்கங்கள் சந்தியில் கட்டி வைத்து சுடவில்லை. லஞ்சம் வாங்கியவனை குறைந்த பட்சம்….//
    வெளிநாட்டுக்குப் போகிறவன், லஞ்சம் கொடுத்தவன் எல்லோரும் செய்தது சட்டவிரோத வேலை நந்தா. பெரிய லெவலுக்கு சட்டம் பேசும் நீங்கள் அடுத்தவனிடம் மாடுதிருடியவனையும் தானாக வலிந்து சென்று லஞ்சம் கொடுத்தவனையும் ஒன்றாக நிறுத்திப்பார்ப்பது வேடிக்கை.

    //…. சந்தியில் மேர்வின் சில்வா கட்டி வைத்தது போலக் கட்டி வைத்து ஒரு எச்சரிக்கை கூட விடப்படவில்லை. ..//
    தான் அவ்வாறு செய்யவில்லை. கட்டிவைக்கப்பட்டவனே தனது குற்றத்தை உணர்ந்து தண்டனையாக தன்னைத்தானே மரத்தில் கட்டினான் என மேர்வின் சொல்யுள்ளார். தான் கட்டவில்லையாம் அவிழ்த்து விட்டாராம். அந்த ஆளே வந்து ஒரு கடிதம் தந்திருக்கிறான் என வேறு சொன்னார். மேலும் கடிதம் எழுதிய ஊழியர் தான் ஒரு முன்னுதாரணமாக திகழும் நோக்கிலேயே தன்னைத்தானே மரத்தில் கட்டினார் எனச் சொல்லி இருப்பதாகவும் கூறினார்.
    (http://www.adaderana.lk/news.php?nid=9241 செய்தியும் வீட்யோவும் உள்ளன. எனக்கு சிங்களம் தெரியாது ஆனால் ஆங்கிலச்செய்தியில் விபரம் உள்ளது) அப்போ ஏன் அவரை மஹிந்தா நீக்கினாராம்? அல்லது மேர்வின் ஜோக் அடிக்கிறாரா?

    Reply
  • nantha
    nantha

    // லெவலுக்கு சட்டம் பேசும் நீங்கள் அடுத்தவனிடம் மாடுதிருடியவனையும் தானாக வலிந்து சென்று லஞ்சம் கொடுத்தவனையும் ஒன்றாக நிறுத்திப்பார்ப்பது வேடிக்கை//
    சமூக விரோதம் என்பது ஒன்றுதான். அடுத்தது “கட்டி வைத்து கொலை செய்தவர்களை ஆதரிக்கும் சாந்தனுக்கு, கட்டி வைத்து சுடாமல் விட்ட மேர்வின் சில்வாவைப் பற்றிக் கதைக்க எந்த உரிமையும் கிடையாது!

    Reply
  • BC
    BC

    நந்தா கூறியது வெளிநாட்டுக்கு அனுப்புகிறேன் என்று கோடிக்கணக்கில் மோசடி செய்த எவரையும் இயக்கங்கள் சந்தியில் கட்டி வைத்து சுடவில்லை, லஞ்சம் வாங்கியவனை குறைந்த பட்சம் சந்தியில் மேர்வின் சில்வா கட்டி வைத்தது போலக் கட்டி வைத்து ஒரு எச்சரிக்கை கூட விடப்படவில்லை என்று தான். அதை மாற்றி வெளிநாட்டுக்குப் போகிறவன், இலஞ்சம் கொடுத்தவன் எல்லோரும் செய்தது சட்டவிரோத வேலை என்று சொல்வது தான் வேடிக்கையாக இருக்கிறது. மேர்வின் சமூர்த்தி அதிகாரியை மரத்தில் கட்டிய செய்தி வீடியோ காட்சிகளுடன் புலி இணைய தளங்களில் வந்ததே!

    Reply
  • nantha
    nantha

    நன்றி BC.
    மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்களிடம் கொஞ்சிக் குலாவிய இயக்கங்கள் அல்லது அவற்றுக்கு இன்னமும் துதிபாடுபவர்கள் “சமூக நீதி” பற்றி பேசுவது பெரிய கேலிக்கூத்தாகும்! இருநூறு ரூபா பெறுமதியான மாட்டைத் திருடியவனுக்கு மரணதண்டனை கொடுத்த மேதாவிகள் ஒரு லட்சம் மோசடி செய்த எஜண்டுகளோடு கொஞ்சிக் குலாவி அவர்களை பாதுகாப்பதிலும் முன் நின்றனர். சமூக விரோதிகளுக்கு பாதுகாப்பு கொடுத்தவர்கள் இலங்கை அரசு பற்றி வரிந்து கட்டி வாதாடுவது படு போக்கிரித்தனம்!

    Reply