கிளிநொச்சியில் யாழ். பல்கலையின் பொறியியல், விவசாய பீடங்கள்

sb.jpgயாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தையும் விவசாய பீடத்தையும் நவீன வசதிகளுடன் கிளிநொச்சியில் விரைவில் நிறுவவுள்ளதாக உயர் கல்வியமைச்சர் எஸ். பி. திசாநாயக்க தெரிவித்தார். இதற்கான முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர்; அடுத்த ஆண்டு முதல் ஆங்கில மொழியை ஒரு போதனா மொழியாகப் பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்துவதுடன் இதற்கிணங்க எமது விரிவுரையாளர்களை இந்தியாவிற்கு பயிற்சிக்காக அனுப்பத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க நேற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து இங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டதுடன் பல்கலைக்கழகத்தின் குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பில் பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுடன் கலந்துரையாடினார்.

இதன்போது, பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்களில் நிலவும் விரிவுரையாளர் வெற்றிடங்கள், கட்டிட நெரிசல்கள், உடற்பயிற்சிப் பீடத்தின் குறைபாடுகள் சம்பந்தமாக அமைச்சருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. இதனைச் செவிமடுத்த அமைச்சர்; இக்குறைபாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்திற்கு கட்டிடங்களைப் பெற்றுக்கொடுக்கும் அதேவேளை; போதனாசிரியர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கவும் உயர் கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்கும் என குறிப்பிட்ட அமைச்சர், இதன் மூலம் அவர்களின் திறமைகள் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். பல்கலைக்கழக பீடங்களின் பிரிவுகளை ஒரே இடத்தில் நிர்மாணிக்காது காணி வசதிகளைக் கொண்ட பகுதிகளில் அவற்றை பரவலாக அமைக்க முடியுமெனவும் இதற்கென பெறப்படும் அரச காணிகளில் மாணவர்களுக்கான விடுதிகளையும் அமைக்க முடியுமெனவும் பல்கலைக்கழக மகளிர் அபிவிருத்தி நிதியப் பணிப்பாளர் திருமதி சரோஜா சிவச்சந்திரன் இதன்போது அமைச்சருக்கு ஆலோசனை வழங்கினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • Nihal Rajendra
    Nihal Rajendra

    Has the management of the UOJ developed a strategic plan to incoprorate the new faculty of Engineering into the system?

    I doubt whether the proposed faculty will fit with the already established system of the UOJ. The system should be allowed to take care of its self without giving room for a pandemonium type of thing or situation. If you are going to disregard that development is part and parcel of the administration and are going to introduce an alien type of managment strategy – that will not be good a all.

    Reply
  • Sivamathy
    Sivamathy

    சண்முகலிங்கன் குழு ஏற்கனவே திருநெல்வேலியில் வைத்து யாழ் பல்கலைக்கழகத்தை சீர்குலைத்தது போதாதென்று – பல்கலைக்கழகத்தின் பகுதியை கிளிநொச்சிக்கும் கொண்டு போய் குழப்பப் போகிறார்களா?

    பொறியியல் பீடம் என்கின்ற ஒன்றுக்கு capital allocation ஒன்றுமே இல்லாத போது… “கற்பனையில் வெறுமனே கதைகளை இட்டுக் கட்டி – பொறியியல் பீடம் என்று சொல்லி ஏமாற்றல்”… சிறுபிள்ளைகளுக்கு மிட்டய் காட்டும் வித்தையாக அல்லவா தென்படுகின்றது. ஏற்கனவே இருக்கின்ற பீடங்கள், வளாகங்கள் சீர்குலைந்து போய்க்கொண்டே இருக்கும் போது… இன்னுமொரு புதுப் பீடமா? இது தாங்காது. சகிக்கவே முடியவில்லை.

    Reply
  • மாயா
    மாயா

    நாடு முழுவதும் கலாசாலைகளும், பல்கலைக் கழக கிளைகளும் வியாபித்தல் வேண்டும். இலங்கை புதிய கல்வி முறைகளை கொண்டு வர தீர்மானித்துள்ளது. அனைவருக்கும் கட்டாய ஆங்கிலக் கல்வி, 10ம் வகுப்பில் சித்தி பெறாவிட்டாலும் தொடர்ந்து திறமையுள்ள துறைகளில் பயிலும் முறை. இவை இனவாதத்தை மட்டுமல்ல , அறியாமையையும் அகற்றும். எதிர்கால இலங்கை சமுதாயம் முன்னேற இதுவும் ஒரு வழி முறையாக இருக்கும்……. நல்லவைகளை இனியாவது வரவேற்போம்.

    Reply
  • யோகநாதன்
    யோகநாதன்

    ஒரு விதமான தரமுமில்லாத நடவடிக்கைகள்…

    ஆராய்ச்சி மாநாடு என்கின்ற பெயரில்… ஏதோ பெயருக்கு ஒரு மேடையில் கூடி ஒலிவாங்கிக்குப் பின் நின்று சில மேடைப்பேச்சுக்கள்…

    வவுனியா வளாகத்தின் அதி தரக்குறைவான பட்டக்கற்கை நெறிகள்…

    மூளைசாலிகளை வலுக்கட்டயமாகத் துரத்திவிட்டு – கதிரைகளைப் பற்றிப் பிடித்திருபவர்கள்…

    கொழும்புவில் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் குழுவினரிடம் தம் தேவைகள் என்ன என்று சொல்லி, தமது முன்னேற்றத்துக்காக குரல் கொடுக்க முடியாத… பரமார்த்தகுருத்தனமான பேராசிரியர்கள்…

    இவையனைத்தும் நிறைந்துள்ள யாழ் பல்கலை பொறியியல் துறையிலும் கால்பதித்தால்…. அது பொறியியல் விஞ்ஞானத்துக்கும் மாபெரும் சீர்கேடுதான்.
    சண்முகலிங்கன் தனது ஆடைகள், அலங்காரம் பற்றிச் யோசிப்பதில் வீணடிக்கின்ற நேரத்தில் கொஞ்சமாவது யாழ் பல்கலையின் நிர்வாகம் பற்றிச் சிந்திக்க முயற்சித்தால் எவ்வளவோ நன்மைகள் நடக்கும்.

    பேராசிரியர் ஹூல் யாழ் வந்திறங்கினால் அவருக்கு பல பல நம்பமுடியாத அதிசயங்கள் ‘பிறழ்வுகளின் வடிவில்’ காத்திருக்கின்றன… பேராசிரியர் ஹூல் யாழ் மண்ணுக்கு வந்தால் அவருக்கு மிஞ்சப்போவது ஏமாற்றமும் கசப்புணர்வும் மட்டும்தான். வருந்தமாக இருக்கிறது.

    தரமான பொறியியல் துறை விரிவுரையாளர்கள் யாழ் பல்கலையின் நிர்வாகத்தை நம்பி, தமது சேவைகளை கிளிநொச்சி பொறியியல் பீடத்துக்கு தர முன்வருவார்களா? அதைப் பற்றியும் யோசிக்க வேண்டும். அந்த அளவிற்கு யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் கெட்ட பெயர் வாங்கியுள்ளது.

    கடைசியில் எல்லாமே குழப்பமான நிலைகள்தான்.

    Reply