கிளிநொச்சி நகரில் வியாபார நிலையங்கள் அதிகரித்து வருகின்ற போதும் அவற்றில் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை.

Murukandi_Kovilகிளிநொச்சி நகரில் பலதரப்பட்ட வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்ற போதும் எதிர்பார்த்த அளவிற்கு வியபாரம் நடைபெறவில்லை என வியாபாரிகள்  தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி நகரில் ஏற்கனவே வியாபாரம் செய்த வர்த்தகர்கள் மட்டுமல்லாது தென்னிலங்கையிலுள்ள புதிய வர்த்தகர்களும் வந்து வியாபார நிலையங்களை ஆரம்பித்துள்ளனர். கொழும்பிலுள்ள பெரிய வியாபார நிறுவனங்களும் அவற்றின் கிளைகளை கிளிநொச்சியில் ஆரம்பித்துள்ளன.

Murukandi_Kovil மக்கள் கட்டம் கட்டமா மீள் குடியமர்த்தப்பட்டு வருகின்ற போதும், அவர்களின் வீடுகள் அழிவடைந்த நிலையில் கூடாரங்கள் அமைத்தே வசித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் வீடுகளை அமைத்து இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பும் போதே அவர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்யக் கூடியதாக இருக்கும். எனவே, அதுவரை வியாபார நிலையங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Show More
Leave a Reply to chandran.raja Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • chandran.raja
    chandran.raja

    கிளிநொச்சியே வடமகாணத்தின் தலைநகராக மாறக்கூடிய சாத்திய கூறுகள் எழுபது எண்பது காலப்பகுதியில் காணப்பட்டது. நடந்து முடிந்த உள்நாட்டு யுத்தத்தால் எல்லாமுமே தலைகீழ் மாறியது. வியாபாரிகள் மக்களை நம்பித்தானே வாழ்வு நடத்துகிறார்கள். இன்னும் சில மாதங்களில் முடிந்தால் ஒருவருடக் கணக்கில் வழமைக்கு திரும்பி விடும். இதை வியாபாரிகள் தன்நம்பிக்கையுடன் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு தம்மை வழியமைத்துக் கொள்ள வேண்டும்.

    Reply