வாழ்க்கை என்பது ஒரு தவம். அதில் கல்வி என்பது ஒரு வரம். – எனக்குத் தெரிந்த நியாயம் : சஹாப்தீன் நாநா

Fishermen_Kurunagarகடந்த நாலு வாரமாக கேபி அண்ணாவின் பேட்டிகளைப் பார்த்து தலை சுத்தோ சுத்தென சுத்துகின்றது. எனக்கென்னவோ அண்ணா செய்வார். ஆனா செய்ய மாட்டார் என்பது போல்தான் தெரிகின்றது. கழுவுற மீனுல நழுவுற மீனாகத்தான் பதில்கள் இருக்கின்றதே தவிர. நொட் ஸ்ரோங். இரண்டாயிரத்து ரெண்டுல என்ன விலக்கிட்டாங்க, நான் பிள்ளையும் குட்டியுமா வாழ்ந்திட்டிருந்தன், அப்புறம் ரெண்டாயிரத்து எட்டுல கூப்பிட்டாங்க. ஆனா எனக்கு காஸ்ட்ரோ அண்ணாவும் உதவல. நெடியவன் தம்பியும் உதவல. நான் ரொம்ப நொந்து போனன். அதனால போராட்டம் தெச மாறிப் போச்சென்கிறார். அப்ப தலைவருக்கு பவர் இருக்கலயா ? அவர்ர வொய்ஸ ஏற்கனவே யுரோப்பிய புத்திஜீவிகள் அமுக்கிட்டாங்களா? அப்ப மகின்த சகோதரர்கள் முள்ளிவாய்க்காலில் அமுக்கிய அந்த நபர் யார் என்ற சங்கதியையும் சொல்லிடுங்கோ.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவின் அலுவலகத்துக்கு தான் ரொம்ப பயந்து கொண்டு போனதாகவும், அங்கு சிரித்த புத்தர் சிலையை கண்டு தன் மனம் ஆறுதல் அடைந்ததாகவும் சொல்லுகின்றார். அதற்கு முதல் 25 வருடம் மக்களை மாக்களாக நினைத்துக் கொண்டு, சூரசம்ஹாரமாடிய ஒரு கூட்டத்துக்கு ஆயுத சப்ளை செய்த போது, பௌத்த நாடான பெங்கொக்கிலும், கம்போடியாவிலும் புத்தர் சிலைகள் என்ன ரத்தம் கக்கிக்கொண்டா இருந்தது. எனக்கு இது நியாயமா படல்.

வெள்ளயன்கள் ஒரு பழமொழி சொல்வார்கள். நண்பர்கள் எப்போதும் நெருக்கமாக இருப்பார்களாம். எதிரிகள் இன்னும் மிக, மிக நெருக்கமாக இருப்பார்களாம். அந்த தலைவனுடன் இறுதிவரையும், மிக மிக நெருக்கமாக இருப்பதாக காட்டிக்கொண்டிருந்த யுரோப்பிய புத்திஜிவிகள் எல்லாம்? பரமண்டலத்தில் இருக்கும் பிதாவே உன் நாமமும், எங்கள் நாமமும் பரிசுத்தமடைவதாக. ஆனால் ஒரே ஒரு விடயத்தில் நாம் எப்போதும் அந்த மறவனுக்கு ஸலாம் போட்டுக்கொண்டே இருப்போம். ஆம் இறுதிவரையும், இறுதிவரையும் இந்த புலம் பெயர் புண்ணாக்குகள் போலல்லாது, இறுதிவரையும் மக்களுடன் இருந்து மரணித்தவன். இறந்த வேலுப்பிள்ளையருக்கும், நோயுடனிருக்கும் அந்த தாய், பார்வதியம்மாளுக்கும் ஒரு சல்யூட் அடித்துத்தான் ஆக வேண்டும்.

கேபி அண்ணா, இப்ப யூரோப்புல இருக்கிற நம்மவன்கள் எல்லாம் முன்னமாதிரி இல்ல. முதல்ல, ஒரு ஓடர், ஒரு தலைவர், ஒரு எச்சரிக்கை. இப்போ எல்லோரும் தண்டல்காறர்கள். மனதுக்குள்ளால கேள்வி கேட்டவன்கள் எல்லாம், இப்ப வாயத் தொறந்து கேட்கத் தொடங்கிட்டான். இது ஒரு பெரிய முன்னேற்றமண்ணா.

வாயத்தொறந்து எப்ப எதிர் கேள்வி கேட்கத் தொடங்குகின்றானோ! அவ்விடத்தில் இருந்துதான் ஊற்றுக்கள் தொடங்கும் என்கின்றார் விரைவில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக வரயிருக்கும் ஐயா ரத்னஜீவன் ஹூல். எதிர்க் கேள்வி கேள், புரியலயா விவாதம் செய், உனக்கு ஆங்கிலம் தெரியலயா? தெரிந்ததை சொல்லிக்கொடு. இப்ப உள்ள, இந்த ஜெனரேசன் மாணவன் புரிந்து கொள்வான் அல்லது புரிய முயற்சி செய்வான் என்கின்றார்.
என்ன ஒரு சிம்பிளிசிற்றி, எத்தனையோ டிகிரிகளையும், உள்ளக்கிடக்கைகளையும், ஆதங்கங்களையும் அடக்கிக் கொண்டு, சின்னப்பிள்ளத்தனமா கருத்துக்களை முன் வைக்கின்றார். வெல்டன், வெல்டன். இப்படி ஒரு நாலு பேர் இப்போது சிறிலங்காவுக்கு தேவை.

அன்னதானம் செய்தால் பசியோடிருந்த ஒரு வயிறுக்கு சோறூட்டிய சந்தோசம் ஏற்படுமாம், இரத்ததானம் செய்தால் ஒரு உயிருக்கு உயிர் கொடுத்த சந்தோசம் ஏற்படுமாம், கண்தானம் செய்தால் இருட்டுக்குள் இருக்கும் ஒருவனுக்கு, இந்த உலகத்தை காட்டிய சந்தோசம் ஏற்படுமாம், உறுப்பு தானம் செய்தால் மரணத்தின் விளிம்புக்கே சென்ற ஒருவனுக்கு மறுவாழ்வு கொடுத்த சந்தோசம் ஏற்படுமாம், ஆனால் கல்விதானம் செய்தால், ஒருத்தனை அல்ல ஒரு தலைமுறையையே தூக்கிவிட்ட சந்தோசம் ஏற்படுமாம். அதை நான் செய்கின்றேன், செய்யப் போகின்றேன், அந்த சந்தோசத்தை பெற நீங்களும் என்னுடன் கைகோருங்கள் என்கின்றார். ரொம்ப நியாயமான, ஆரோக்கியமான சந்தோசம்.

நாம் கனிகளை மட்டுமே உண்ணப்பழகிவிட்டோம். அதனால் நமக்கு வேர்களின் வேதனை தெரிவதே இல்லை. எல்லாக் கசமாலங்களையும் உட்டுப் போட்டு, கொஞ்ச நாளைக்காவது வேர்களுக்கு தண்ணி பாய்ச்சுவோம். தகப்பனை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த தாய்மார்கள், அண்ணனை இழந்த தங்கைகள், தங்கைகளை தொலைத்த இளைஞர்கள், அவயங்களை தொலைத்த மனிதர்கள் என சிறிலங்கா முழுதும் புரையோடிப் போயுள்ள வேர்களுக்கு நீர் பாய்ச்சுவோம். அதற்கு கல்வி ஒரு திறவுகோல்.

இல்ல, எங்கள் முயற்சி மகின்தவை, சிங்கள அரசுகளை பழிவாங்குவதுதான் என்றால் அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. உன் முயற்சி, மலையைத் தோண்டி எலியை பிடித்ததாக இருக்கக் கூடாது. மலையைத் தோண்டி, தங்கச் சுரங்கங்களை கண்டு பிடித்ததாக இருக்க வேண்டும் என்பார்கள். நாம் நிறைய மலைகளைத் தோண்டி, தாண்டியும் வந்துவிட்டோம். ஒரு பூச்சி, பூரானைக் கூட எம்மால் பிடிக்க முடியல. ஆனால் மனதுக்குள்ளால் சிறிலங்கா சோனிகளின் முன்னேற்றம் பற்றி ஒரு ஆய்வு செய்து கொண்டிருக்கின்றோம்.

எப்படி சிறிலங்கா முஸ்லீம்கள் காய்களை நகர்த்துகின்றார்கள். வெரி சிம்பிள். வளைந்து கொடு நிமிர்ந்து நிற்கலாம் என்ற ஒரு சிம்பள் தத்துவம். சிறிலங்கா ஒரு நாடு. அதில் மூவின மக்கள் வாழ்கின்றார்கள். சிங்களவர்கள் பெரும் பான்மை, அடுத்து தமிழர், அடுத்து முஸ்லீம்களும், பறங்கியரும் ஒரு சொட்டுண்ணு இருக்கின்றோம். இது நாம் ஆள வந்த நாடில்லை. வாழ வந்த நாடு. அதனால் ரொம்ப அமைதி. தருவதை பெற்றுக் கொண்டு, அவர்கள் தர மறுப்பதை நாங்களாகவே தேடிக்கொண்டு வாழ்கின்றோம். வாழப்பழகி விட்டோம். தொப்பிகள் மாற்றப்படுகின்றன, அல்லது தொப்பிகள் புரட்டப்படுகின்றன. முந்தா நாள் கூட காக்கா ரவூப் ஹக்கீம் தொப்பி புரட்டியுள்ளார். அதில் எந்த தப்பும் இருப்பதாக தெரியலயே. நியாயமாத்தான் தெரியுது.

தானும் முன்னேறிக்கொண்டு (ரவுப் ஹக்கீம் சகோதரயா மீண்டும் ஒரு ஐஸ்கிறீம் கம்பனி திறக்கப் போகின்றார் போல் தெரிகின்றது), தனது தொகுதியையும் முன்னேற்றி, தனது சமூகமும் முன்னேற, வேறு என்ன வழியிருக்கின்றது. இல்ல தொப்பி மாற்றக் கூடாது, அரசுடன் மல்லுக்கு நிற்க வேண்டும் என்றால், சிறிலங்காவில் சோனிக்காக்காமார் என்ற சமூகம் வாழ்ந்த தடமே இருக்காது. இன்னேரம் புல்லு மொளைச்சிருக்கும். கம்பளையில் 1957ல் எங்களுக்கு முதல் அடி விழுந்த போது நாங்க ஆயுதம் தூக்கியிருப்போம். தூக்கல, தூக்க விடல. எங்களுக்கு யாவாரம் சொல்லிக் கொடுத்த வாப்பாமாரும் சரி, எங்களுக்கு பொது அறிவு சொல்லிக் கொடுத்த வாத்திமாரும் சரி ஆயுத தர்பார் பற்றி சொல்லித் தரல. நல்லகாலம் அந்தக் காலங்களில் எங்களிடம் லோயர்கள் இருக்கல.

ஆனால், 2009 நவம்பர் 13, 14 திகதிகளில் நமது ஜனாதிபதி கிட்டத்தட்ட 157, வெளிநாட்டுவாழ் சிறிலங்கா பிரஜைகளை அழைத்து, ஜனாதிபதி செயலகம், கோள்பேஸ் ஹோட்டல், ஜனாதிபதி மாளிகை ஆகிய இடங்களில் கலந்துரையாடல்களையும் நடாத்தி, மூக்கு முட்ட, முட்ட சாப்பாடும் தந்தார்கள். வியாபார நோக்கமாக, முதலிட வாங்கோ என அழைக்கப்பட்ட இந்த கலந்துரையாடல்களுக்கு, முக்காலே மூணுவீசம் பேர் அரசியல் காய்களை நகர்த்துபவர்கள்தான் வந்திருந்தார்கள். மீதி ஒரு வீசம் வியாபார நோக்கம் உள்ளவர்கள்.

இங்கு கனடாவில் இருந்து வந்த ஒரு புத்த பிக்குவை சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. என்னுடன் ஈபிடிபியைச் சேர்ந்த ஒரு பிரதிநிதியும் (லண்டனில் வாழ்ந்து, இப்போது கொழும்பில் தொழிலை தொடங்கியுள்ளவர்), புளட் அமைப்பின் நோர்வே பிரதிநிதி ஒருவரும், அமெரிக்கா லாஸ்ஏன்ஜலீஸ்சில் இருந்து வந்த ஒரு புத்தி ஜீவியும் இருந்தார்கள். சிறிலங்கா முஸ்லீம்களின் ஒவ்வொரு முன்னேற்றம் பற்றியும் விபரித்த அந்த புத்த பிக்கு, நாம் இங்கு அடிபட்டுக் கொண்டு அனைத்தையும் இழந்து நிற்கின்றோம், இவர்கள் வேகமாக முன்னேறிக் கொண்டு வருகின்றார்கள் என்பதில் தொடங்கி, புள்ளி விபரங்களுடன் கதைகள் பல சொன்னதுடன், நாளை மறுதினம், நான் கல்முனை சென்று சிங்களவர்களை எப்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் குடியேற்றுவது என மூன்று மாதம் வேலை செய்யப் போகின்றேன் என அழுத்தம் திருத்தமாக சொன்னார். ஒரு மணிநேரத்துக்கு பிறகு, மற்றவர்கள் நான் ஒரு முஸ்லீம் என்று கூறியதும்: அவர் தனது பேச்சை வேறுதிசைக்கு திருப்பிவிட்டார். இதுதான் இன்றைய முஸ்லீம்களின் நிலமை.

அவர்கள் சொல்வதில் எனக்கு எந்த தப்பும் தெரியவில்லை. ஆனால் சிங்களவர்கள் இன்னும் முஸ்லீம்களை மதித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். நம்மவர்களோ கூட்டம் கூட்டமாக சுட்டுக் கொன்றும், நாடுகடத்தியுமல்லவா விட்டார்கள். குடிக்கத் தண்ணியுமில்லாம நாங்க இருக்கோம், நீங்க என்னடா என்றால், நிலாவில இருந்து நாங்க தண்ணி கொண்டாறம் என்ற கதையை சொல்லி, வன்னிச் சனத்தயும் ஏமாற்றி, புலம் பெயர் நல்ல உள்ளங்களையும் ஏமாற்றி,
ஒன்றாக, ஒரு தாய் பிள்ளைகளாக வாழ்ந்த எங்களையுமல்லவா புரட்டி எடுத்து விட்டீர்கள்.

இனி நம்முட வித்துவ திறமையை காட்டுவோம். சிறிலங்காவில் எங்க வாயத் தொறந்தாலும், யாழ்ப்பாணம் போகலயா, இன்க இருந்து உழைக்க முடியாது. யாழ்ப்பாணம்தான் இன்றைய வியாபார இலக்கு எனச்சொல்லிக்கொண்டு ஒவ்வொரு சிங்களவனும், சோனியும் ஆலாய் பறந்து கொண்டிருக்கின்றார்கள். கொழும்பில் 170 ரூபாய்க்கு சேர்ட்டுகளை வாங்கி மலையகத்தில் 225 ரூபாய்க்கு வித்துக் கொண்டிருந்த ஒரு மூணாங்கிளாஸ் காக்கா, இப்ப என்னடா என்றால் அதே சேர்ட்டை யாழ்ப்பாணத்தில் 450 ரூபாவுக்கு விற்றுக் கொண்டிருக்கின்றார். நாலு மாதத்துக்கு முன் அவர்ர கெப்பிட்டல் ஆறாயிரம் ரூபா, இப்ப பதினெட்டாயிரம் ரூபா.

ஒரு காலத்தில் மொத்த சிறிலங்கா மக்களின் மீன் தேவையையும் பூர்த்தி செய்த வட, கிழக்கு இப்போதுதான் மீண்டும் தலைநிமிரத் தொடங்கியிருக்கின்றது. ஆனால் அவர்கள் இன்னும் பழைய மீன்பிடி உபகரணங்களையும், முறைகளையும்தான் பயன் படுத்துகின்றார்கள். பழைய மரத்தோணி, அது ஓட்டையானால் குங்கிலியத்தை அரைத்து, கொஞ்ஞம் கிசிள் (கறுப்புத்தார்)யும் எடுத்து ஒட்டுவது, அதே சம்மட்டியார், ஓட்டையான வலைகளை 2ம், 3ம், 4ம் நம்பர் நைலோன் நூல்களை, நாலுகால் பாய்ச்சலில் இருந்து பொத்துவது ( இது மீனவர் பாஷை.பொருத்துவது எனவும் சொல்லலாம் ), அதே தூண்டில், 2ம் நம்பர் தொடக்கம் 23ம் நம்பர்வரை, அந்த தூண்டில்களில் இரையை ( புழு, பூச்சி, குட்டி மீன்) குத்துவது, எட்டு முழ வீச்சு வலை, முறுக்காத்தி, குறுலொன் கயிறு, ஈயம், மாயவலை, கடல் வலை என கொழும்பில் செட்டியார்தெரு ஜெபி பெர்னான்டோ புள்ளெ, மாழுகடை இப்றாகீம் அன் சன்ஸ், வெல்லம்பிட்டிய ஜபர்ஜீ பிறதர்ஸ் போன்றவற்றில், காசுகளை தண்ணியாக இறைத்து, வரவு எட்டணா செலவு ஏழணா என கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

பைபர் கிளாஸ் போர்ட் வந்துவிட்டது. முன்னர் அதை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோம். இப்போது நம்மவர்களே நீர்கொழும்பிலும், பேருவளையிலும் செய்யத் தொடங்கிவிட்டார்கள். விலை 20 லட்சத்தை தொடும். பேரம் பேசினால் இன்சோல்மென்ட்டுக்கு நம்ம வீட்டுக்கதவை வந்து தட்டுவார்கள். மீன்பிடிவலைகள் கொரியாவில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றது. இந்திய வலைகள் ஸ்ரோங் பத்தாது. அறுக்குளா, தளப்பத்து, சுறா போன்ற பாரிய மீன்கள் பிடிப்பதற்கு இந்திய வலைகள் நல்லது. காரணம் விலை குறைவு. கூனி இறால், இறால், நெத்தலி, விரால், கெழுத்தி போன்ற ஆற்று மீன், களப்பு மீன்கள் பிடிப்பதற்கு கொரியா இஸ் பெற்றர். இந்தியாவை பகைத்துக் கொள்ளக்கூடாது என்று எல்லோருமே இப்போது சொல்லத் தொடங்கிவிட்டார்கள். நாம் எப்பவுமே பகைக்கல. எங்களையும் கொஞ்சம் யாவாரம் செய்ய உடுங்கப்பா என்றுதான் சொல்லுறோம்.

வலைகளை மணந்து பார்த்துவிட்டே நம்ம மூத்தப்பாமார் சொல்வார்கள். இது எந்த நாட்டு வலை என்ற சூட்சுமத்தை. கொரியன்ட வலையில ஒரு சூப்பர் பெற்றள்ற வாசனை வரும். இந்தியாட வலையில மெட்ராஸ் கூவம் மணக்கும். ஆனால் ஒரு காலத்தில் வெல்லம்பிட்டியில் பாக்கிஸ்தானிய மோறா முஸ்லீம்களின் வலை பெக்டரியே சிறிலங்காவின் மொத்த மீன்பிடித் தொழிலையும் தீர்மானித்தது. அப்புறம் என்எம் பெரேரா வந்து, சிறிமாவோ அம்மையார் புகுந்து, குண்டன்மால்ஸ், ஹைதராமணிகளை கழுவிலேற்றிய போது ( ஜனவசம, உசவசம) : இந்த பெக்டரி உரிமையாளர்களும், தொழிலாளர்களும் சோபை இழந்தார்கள். அதற்குப் பின் உருவானதுதான் குருநகர் வலை உற்பத்தி தொழிற்சாலை.

வாப்பாவின் அதட்டலையும் மீறி, பத்துவயதில் வாப்பாவின் கையை பிடித்துக் கொண்டு, எனக்கு எழுத்தறிவித்த தமிழாசிரியரின் துணையுடன்: 350 மைல் கடந்து, யாழ் பஸ் நிலையம் வந்து, காலையில், வாப்பாவின் முன்னாள் கொழுத்த பணக்காற நன்பரின் வீட்டுக்கு சென்று உட்கார்ந்தவுடன் : எனக்கும் வாப்பாவுக்கும் வெள்ளித் தாம்பாளத்தில் ரீயும், எனது ஆசானுக்கு, நிற்க வைத்து, ஏதோ ஒரு தகரப் பேணியில் தேனீரும் வளங்கப்பட்ட போதுதான், யாழ் ஜாதி வெறியின் மகத்துவம் தெரிந்தது. ஒரு வெறிபிடித்தது.

2ம் நம்பர் 90 வளையம் தொடக்கம் 110 வளையம் உள்ள வலைகளைக் கொண்டு பிடிக்கப்படும் இறால்களையும், நெத்தோலி மீன்களையும் பிடித்து உடனடியாக விற்பதில்தான் எம்மவர்கள் கவனம் செலுத்துகின்றார்கள். வறுமை இதற்கொரு காரணமாக அமையலாம். இனி அதுமாறும். மாறணும். பேங்கொக்கிலும், இந்தியாவில் தூத்துக்குடி போன்ற இடங்களிலும், சிறு மீன்பிடித் தொழிலாளர்கள் இதை பதப்படுத்தி பல லட்சம் ரூபா உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இறாலை உரித்து காயவைத்து பவுடராக மாற்றுகின்றனர். அதே போல் நெத்தோலி மீனையும் தலையையும், வாலையும் வெட்டி விட்டு, காய வைத்து பவுடராக மாற்றுகின்றனர். காயவைப்பதற்கு இடமில்லாதவர்கள் புறுட் றையரை (பழங்களை காயவைக்கும் இயந்திரம்) உபயோகப்படுத்துகின்றார்கள். இந்த இயந்திரம் 20 நிமிடத்துக்கு 5 கிலோ இறாலை உலரப்பண்ணும். விலையும் குறைவு. மின்சாரம் 6 வோல்ட் மட்டுமே.

வெட்டி வீசும் மீன் தலைகளையும், வால்களையும் உலரவைத்து கோழித்தீன், ஆட்டுத்தீன் உற்பத்தியாளர்களுக்கு விற்றுக் கொண்டிருக்கின்றார்கள். ஒரே கல்லில் இருமாங்காய் பிளஸ் மும்மடங்கு இலாபம். மேலும் அரசு இன்னும் ஆழ் கடல் மீன் பிடிக்க அனுமதி தரல என்ற வாதம் எல்லாம் இனி வேண்டாம். அவர்கள் ஆறுதலா அனுமதி தரட்டும். அதுவரை நம்ம வயிறு பொறுக்காதே. ஆம் இதற்கு நோர்வேயிலும், ஜப்பானிலும் இருக்கும் நம்மவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். பிஸ் பைன்டர் ( எங்க மீன் இருக்கு என்று கண்டு பிடிக்கும் கருவி), பிஸ் மியூசிக் என இரு கருவிகள் வந்து இந்நாடுகளில் கொட்டை போடு போட்டுக் கொண்டிருக்கின்றது.

ஜஸ்ட் பன்ரெண்டு டாலர். 100 கடல் மைல் தூரம், 150 கடல் மைல் தூரம் எல்லாம் இப்போதைக்கு ஓட வேண்டியதில்லை. ஒரு பிஸ்பைன்டர், எட்டுமுழ வலை ( 1200 ரூபா), இரண்டு கிலோ ஈயம், 4 மில்லிமீற்றர் குறுலோன் கயிறு எட்டு முழம், 18ம் நம்பர் நைலோன் நூல் 100 கிராம் இருந்தால், மீன் தேடி ஆழ்கடலுக்கு போக வேண்டிய அவசியம் இல்லை. மீன் வேலணைக்கோ, மயிலிட்டிக்கோ உங்கள் வீடு தேடி வரும்.

கொழும்பு காக்காமார் பெரியகடை மீன்சந்தையில் மீன் செதில்களை அள்ளுவதை போனமாதம் கண்டேன். அங்கு வேகவேகமாக மீன்களை கூறு போட்டு வெட்டி, ஒரு மீன் வெட்ட பத்து ரூபா கூலி வேண்டும் அந்த சகோதரர்களுக்கு ஒரு செய்தி அனுப்புங்கள். நீங்கள் வெட்டி வீசும் மீன்செதில்கள் உலக சந்தையில் தங்கத்தின் விலை. அது உங்கள் மண். உங்களுக்கு அந்த வருமானம் வரவேண்டும். யாரோ நீர்கொழும்பு காக்கா வந்து அள்ளிக்குப்போறான். சாக்கிரதை. சிங்கள இளைஞர்கள் சத்தமில்லாமல் எமென் ( அரபு நாடு ) சென்று கடற்கரை ஓரங்களில் உட்கார்ந்து, கொட்டிலும் அமைத்து பாரிய அறுக்குளா, தளப்பத்து மீன்களை இலவசமாக அள்ளுகின்றனர்.

எப்படி.. இப்போது உலக சந்தையில் மீன் செட்டைக்குத்தான் மதிப்பு. பிஸ் சூப் தயாரிக்க அதை வெட்டி எடுத்துவிட்டு, எமென் வியாபாரிகள் மீனின் நடுப்பாகத்தை அள்ளி வீசுகின்றனர். அதை சேகரித்து, பிளந்து, அதற்குள் உப்பை அரைத்து போட்டு, இருபது நாளில் அறுக்குளா கருவாடு, தளப்பத்து கருவாடு என சிறிலங்காவுக்கு அனுப்பி கொள்ளை லாபம் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். கிலோ 1400 ரூபா சில்லறை விலை. ஹோள்சேல் 1000ரூபா. அங்கு வேலை செய்பவன் நம்ம தமிழன். பத்தாயிரம் ரூபா சம்பளத்துக்கு. உப்புகாற்றில் கரைந்து கொண்டிருக்கின்றான். யுத்தம் தந்த வடு. 18, 20, 22 வயது பால்குடி மாறா இளைஞர்கள். சண்டிலிப்பாய், பளை, காங்கேசன்துறை இளைஞர்கள்.

ஆற்று மீன்களை நீர்த் தொட்டிகளிலும், வீட்டில் தொட்டில் அமைத்து வளர்த்தும், புத்தளத்திலும், பொலன்னறுவையிலும் சிங்கள, முஸ்லீம் இளைஞர்கள் பணத்தை அள்ளிக் கொண்டிருக்கின்றார்கள். சிறிலங்கா அரசே ஆறு, குளங்களில் மீன்கள் குறைந்து விட்டது, எங்களுக்கு மீன் தாங்கோ என இவர்களிடம் வாங்கி, நீர்நிலைகளில் விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அந்தக்காலத்திலேயே தனது வீட்டுக்குள்ளும், தனது தோட்டத்திலும் விழும் குப்பைகளை சேர்த்து செயற்கை உரம் தயாரித்த வடக்கு மக்களை கண்டிருக்கின்றேன். அவனுக்கு, அவன்ட பரம்பரைக்கு இப்போது இவைகளை சொல்லிக் கொடுத்தாலே போதும். அவன் ரோட்டு போடுவான். போட வேண்டும்.

( அனுபவமும், அட்வைசும் தொடரும்………)

1-9-2010

எச்சரிக்கை.

இல்மனைட். திருகோணமலை, புல்மோட்டை கடற்கரையில் நிரம்பிவழியும் இல்மனைட்டுக்காகத்தான் யுத்தமே நடக்கின்றது என ஒரு காலத்தில் மக்கள் பேசியது உண்டு. ஆனால் யாருக்குமே இல்லாமல் அந்த இல்மனைட் இப்போது தனியாருக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கடந்த மாதம் ஏலம் விடப்பட்டு: மெட்டிக் தொன் 64 யுஎஸ் டொலர் என இரண்டு காக்காமார் ஏலம் எடுத்துள்ளனர். ஒன்று கொழும்பு தொப்பி புரட்டி, மற்றது ( ஹி, ஹி, ஹி) இன்னொரு தொப்பி புரட்டி. அந்த இல்மனைட்டின் இன்றைய மார்கட் விலை 213 யுஎஸ் டாலர். வெட்கத்தைவிட்டு வேதனையுடன் சொல்லுகின்றேன். இந்த ஏலத்தில் நம்மவங்க யாரும் கலந்து கொள்ளல. எல்லோரும் உண்டியல் குலுக்குறதிலேயே கவனமாக இருக்கினம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 Comments

  • Kusumpu
    Kusumpu

    சஹாப்தீன் நாநா! உண்மையில் உங்கள் எழுத்து நடை என்னைக் கவர்ந்தது. இந்தக் கல்வி மறுப்பால்தானே வேறுபாடுகளும் பிரிவுகளும் உலகம் முழுவதும் புரையோடிப்போய் கிடக்கிறது. கல்வியும் பொருளாதாரமுமே எமது மக்களை மீட்டெடுப்பதற்கு ஒரே ஒரு வழி. ஆயுதமும் ஆத்திரமும் அழிவைத் தேடித்தந்தது என்பதை இன்னும் உணராமல் இருந்தார். தலையைச் சிதறுதேங்காய் அடிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

    நல்லவிசயம் சொல்லியிருந்தீர்கள் சஹாப்தீன் நாநா. நீங்கள் கூறிய அனைத்துடனும் எனக்கு உடன்பாடு இருந்தாலும் ஒரு விசயத்தில் மட்டும் ஒத்துப்போக முடியவில்லை. காக்கீமைப்பற்றி சொன்னது. இ.இ.காங்கிரஸ்ரை நம்பித்தானே ஐ.தே.க சேர்த்தது. இறுதியாக சோதனை மிகுந்த காலத்தில் கையைக்கழுவி விட்ட விசயத்தை எப்படி ஏற்பது.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    சஹாப்தீன் நாநா, உங்களுக்கு வியாபாரம் அதிகம் தெரிந்திருக்கிறது. இது பற்றியும் தெரிந்தால் சொல்லுங்கள். தமிழகத்தின் கடற்கரையில், மீன்பிடிப்பவன் மட்டும்தான் தமிழன், அதை வாங்கி ஏற்றுமதி செய்பவர்கள் எல்லோருமே மலையாளிகள். சீனா, கொரியாவிலிருந்து அந்தகாலத்தில் வலைகள் வாங்கி இந்தியாவில் விற்கும் மோனாபொலியும் மலையாளிகளுடையதுதான், தெலுங்கனோ, கர்னாடககாரனோ மராட்டியனோ அல்ல?. இலங்கையில் வன்னியில் மே 18-09ல் முடிந்த யுத்தத்தில் சிதறி விழுந்த உலோகங்கள் அனைத்தும், குறிப்பாக பித்தளை, தாமிரம் முஸ்லீம்களால் சேகரிக்கப்பட்டு, கொழும்பு உலையில் ராஜஸ்தான் மார்வாடியால் உருக்கப்பட்டு ஏற்கனவே(கேபி யின் ஆயுதங்கள்) இந்தியாவில் பொருள்களாக மாறிவிட்டன. இதில் ஒரு பைசா கூட எந்த தமிழனின் கையிலும் படவில்லை. நீங்கள் வியாபாரம் பேசுகிறமாதிரி, அரசியல்தான் பேசுகிறீர்கள். இலங்கை தமிழரிடையே அடித்துது கொண்டிருக்கும் “இந்திய எதிர்ப்புத் தீ” அவர்களுக்கு வியாபாரம் சொல்லித் தருகிறேன் என்று “விசிறி விடப்படுகிறது”. இந்த சுய முன்னேற்ற உசுப்பலினால், உணர்ச்சி கொந்தளிப்பும் தளர்ச்சியும் ஏற்படாமல், மறுமலர்ச்சி ஏற்படும் என்று நிரூபித்தால் சந்தோஷமே!. நான் ஒரு வரலாற்று “கோன்ஸ்பைரசியை” சந்தேகப்படுகிறேன் அதை பாதிக்கப்படுகிறவர்களின் கோணத்திலிருந்து, கஷ்டப்படுகிறவர்கள்தான் கூறவேண்டும்!.

    Reply
  • மாயா
    மாயா

    சஹாப்தீன் நாநா, நல்லாத்தான் எழுதியிருக்கிறீங்கள். உண்மையும் அதுதான். நான் இந்த முறை கொழும்புக்கு போன போது எல்லா இடங்களிலும் சோனகர் முக்கியமாக இருக்கதை பார்க்க முடிந்தது. முட்டாக்கு போட்ட , முகம் மறைத்த சோனக சகோதரிகள் டெலிபோன் சம்பாசனையிலும், வரவேற்பு மேசைகளிலும் காண முடிந்தது. இந்த யுத்தம் சோனகர்களுக்கு முன்னேற்ற வழி அமைத்திருக்கிறது. இதை நீங்க மறுக்க மாட்டீர்கள் சஹாப்தீன் நாநா? இந்த யுத்தம் இப்படி முடிஞ்சு போச்சுதே என்று வருத்தப்படுறதில சோனகர் முதலிடம்? இதுவரை கிடைத்த முதலிடம் பிந்திப் போன வருத்தம்தான்? என்ன செய்ய தமிழரும் இனி வாழ வேணும் , சிங்களவரும் வாழவேணும்,…… இல்லையா?

    Reply
  • BC
    BC

    சஹாப்தீன் நாநா, நீங்கள் நல்ல சுவாரசியமாக எழுதுகிறீர்கள். மீன் பிடிப்பதில் இவ்வளவு விடயங்கள் இருப்பதை இப்போ அறிகிறேன். தொடர்ந்து எழுதுங்கள். மற்றது கேபி பற்றி நீங்கள் சொன்னது சரி. ஆனால் நாடு கடந்த தமிழீழ அழிவுக் குழுவோடு ஒப்பிடும் போது இவர் கொஞ்சம் பரவாயில்லை என்று நினைக்கிறேன்.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    மாயா உண்மையை நேரடியாக வைத்துள்ளீர்கள் நன்றி. முஸ்லீம் பெண்கள் வேலைக்கு வெளிக்கிட்டதற்குக் காரணம் முன்னேற்றம் மட்டுமல்ல பொருளாதார நெருக்கடியும்தான். இப்படியாவது இப்பெண்கள் வெளியுலகிற்கு வருகிறார்களே என்பதில் சந்தோசம் தான். சொந்தக்காலில் நிற்க வெளிக்கிடுவதே குலன் சொன்னது போன்று நாளை புரட்சியாகவும் இருக்கலாம்.

    Reply
  • nantha
    nantha

    சனத்தொகை பெருகுவதனால் உணவுத் தட்டுப்பாடும் கூடவே வளர்கிறது. குழந்தைகளுக்கு “புரதம்” குறையும் பிரச்சனையும் புரிகிறது.

    கடலுணவு மூலம் அந்தப் புரத தேவையை பூர்த்தி செய்வது முக்கியமாக உள்ளது. சஹாப்தீன் நாநாவின் “மீன்பிடி” பற்றிய பிரச்சனையை சுற்றிவரக் கடலை வைத்துக் கொண்டு இன்னமும் மீனையும், கருவாட்டையும் இறக்குமதி செய்யும் நாம் சிந்தனை செய்வது காலத்தின் கட்டாயம் என்றே எண்ணுகிறேன்.

    Reply
  • Thinaharan
    Thinaharan

    வடபிரதேச மக்களின் உண்மையான பிரதிநிதிகள்

    02.08.2010 – வியாழக்கிழமை

    ஒப்பீட்டளவில் வடபகுதி இன்று மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். அபிவிருத்தியில் பின்னடைவு. இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றத்தில் பின்னடைவு. நிர்வாகக் கட்டமைப்பிலும் பின்னடைவு. அண்மைக்கால யுத்தமே இந்த நிலைக்குக் காரணம் என்று பொதுவாகக் கூறப்படுகின்றபோதிலும் இப்பிரதேசத்திலிருந்து காலத்துக்குக் காலம் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைமைகளின் தூர நோக்கற்ற செயற்பாடுகளே பிரதான காரணம்.

    மற்றைய மாகாணங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் தத்தமது பிரதேசத்தின் அபிவிருத்தியில் காட்டிய அக்கறையின் மிகச் சிறு பகுதியையாவது வட பிரதேச அரசியல் தலைவர்கள் காட்டவில்லை. அபிவிருத்தியில் வடக்கு பின்னடைவு கண்டதற்கு இது பிரதான காரணம்.

    ஒரு பிரதேசத்தின் வளர்ச்சியில் அப் பிரதேச மக்கள் நே டியாகச் சம்பந்தப்படக் கூடியதான நிர்வாகக் கட்டமைப்பு பிரதான பங்களிப்புச் செய்யக்கூடியதாகும்.

    மற்றைய மாகாணங்களில் இயங்கும் மாகாண சபைகள் இத்தேவையைப் பூர்த்தி செய்கின்றன. வடபகுதி அரசியல் தலைவர்கள் இத் தேவைக்கு முக்கியத்துவம் அளித்துச் செயற்படாததால் மக்கள் நேரடியாகச் சம்பந்தப்படும் நிர்வாகக் கட்டமைப்பு அங்கு இல்லாமற் போனது. மாகாண சபை நிர்வாகத்தை நிராகரித்ததன் பாரதூரமான விளைவை இப்போதாவது அத் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    எவ்வாறாயினும் இன்று சில முன்னேற்றமான காரியங்கள் இடம்பெறுகின்றன. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் வட பிரதேசத்தின் பாரம்பரிய வளங்களை மையமாகக் கொண்ட அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதேநேரம் உட்கட்டமைப்பு அபிவிருத்தியும் பெருந்தொகைப் பணச் செலவில் இடம்பெறுகின்றது. இடம்பெயர்ந்தவர்களின் மீள் குடியேற்றத்திலும் அரசாங்கம் அக்கறை செலுத்துகின்றது.

    இவை வட பிரதேச மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு எனக் கூறுவதற்கில்லை. ஆனால், வட பிரதேசத்தில் அத்தியாவசியமாக இடம்பெற வேண்டிய செயற்பாடுகள் என்பதில் யாரும் சந்தேகம் தெரிவிக்க முடியாது. இப்பிரதேச மக்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் இச் செயற்பாடுகளை வரவேற்பதுடன் ஊக்கமும் ஒத்துழைப்பும் அளிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

    எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் அபி விருத்திச் செயற்பாடுகளின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ளாததாலோ அல்லது அகவய காழ்ப்புணர்வு காரணமாகவோ கண்டும் காணாதவர் போல் இருக்கின்றனர். குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதுடன் மக்கள் சார்ந்த தங்கள் கடப்பாடு நிறைவுறுகின்றது என்று இவர்கள் கருதுகின்றார்கள் போல் தெரிகின்றது.

    வடபகுதி மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பான குறைபாடுகள் இல்லையென யாரும் கூற முடியாது. அக்குறைபாடுகளை வெளிப்படுத்தும் உரிமை மக்களின் பிரதிநிதிகளுக்கு இருப்பதை எவரும் மறுதலிக்கவும் முடியாது.

    ஆனால் குறைபாடுகள் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதால் மாத்திரம் அவை தீரப்போவதில்லை. சரியான வழிமுறையைப் பின்பற்றித் தீர்வுக்காக முயற்சிக்கவும் வேண்டும். முன்னேற்றகரமான செயற்பாடுகள் இடம்பெறும்போது அவற்றுக்கு ஒத்துழைப்பு நல்கவும் வேண்டும்.

    வடக்கின் வளர்ச்சிக்கும் அம் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளின் தீர்வுக்கும் உரிய வகையில் செயற்படுபவர்களே வட பிரதேச மக்களின் உண்மையான பிரதிநிதிகளாவர்.

    நன்றி – தினகரன்

    Reply
  • sahabdeen nana
    sahabdeen nana

    காக்கீமைப்பற்றி சொன்னது. இ.இ.காங்கிரஸ்ரை நம்பித்தானே ஐ.தே.க சேர்த்தது. இறுதியாக சோதனை மிகுந்த காலத்தில் கையைக்கழுவி விட்ட விசயத்தை எப்படி ஏற்பது/குசும்பு.
    ஆனானாப்பட்ட, கல்தோன்றி, மண்தோன்றாக்காலத்துக்கு முன்தோன்றிய கே.பி.அண்ணாவே தொப்பி மாத்தும் போது, முந்தா நாளுக்கு முதல் நாள் கள்ளத் தோணியில் சிறிலங்கா வந்து, முந்தா நாள் அரசியலுக்கு வந்து, நேற்று தொப்பி மாற்றிய அந்த ரவூப் ஹக்கீம் என்ன மகாத்மாவா. ஜஸ்ட் மனிதன். ஆனால் மாறும், மாறும் எல்லாமே மாறும். நமது கண்ணுக்கு முன்னேயே நிலமைகள் மாறியுள்ளதை பார்த்தீர்களா, சிங்கள அரசுகளிடம் பேரம் பேசிய தமிழனும், முஸ்லீம்களும் இப்போ மகின்த பிரதர்சிடம் விழுந்து கிடப்பதை பார்த்தீர்களா.

    டெமாக்கரசி,
    நீங்கள் தமிழக கடற்கரை என்று எதை சொல்கின்றீர்கள் என்று எனக்கு புரியவில்லை. அது மெரினா பீச்சை அண்டிய குப்பம்களை சொல்லுகின்றீர்கள் என நினைக்கின்றேன். ஒரு நடை பட்டுக்கோட்டை தொடக்கம் வேதாராண்யம், ராமேசுவரம், கன்னியா குமாரி, மெட்ராஸ் பைபாஸ் ரோட் சென்னை ரூ ஆந்திரா நெல்லிக்குப்பம், சாத்தான் குப்பம், பக்கத்திலே கேரளா திருவனந்தபுரம் (பீமா மசூதி பகுதி), காலிகட் தொடக்கம் கன்னனூர்வரை சகல மொத்த வியாபாரிகளும், ஏற்றுமதியாளர்களும் தமிழர்களே, தமிழர்களே, தமிழர்களே. இது எனது சொந்த அனுபவம் டெமாக்கரசி.

    தெலுங்கானா, மராட்டியர்களின் வீட்டு குசினிக்குள்ளே போய் பார்த்திருக்கின்றீர்களா, முக்கால்வாசிப்பேர் சுத்த சைவம். அதனால் மச்சம் அங்கே விலக்கப்பட்டுள்ளது. அதனால் நோ வியாபாரம்.

    யாழ்ப்பாணத்தில் இருந்து இதுவரை 53 லொறி இரும்புதான் கொழும்புக்கு வந்துள்ளது. ஒரு லொறியில் இருபத்திரண்ணடாயிரம் கிலோ இரும்பு ஏற்றலாம். அப்படி கொண்டுவந்த இரும்பு, அரசின் முக்கிய ஒரு அமைச்சரின் மச்சானின், கண்டியில் உள்ள இரும்பு பெக்டரியில் இரும்பாக உருக்கப்பட்டு கொண்டு இருக்கின்றது. நீங்கள் சொல்லும் ராஜஸ்தான் வியாபாரி அங்கு கிடையாது. பாகிஸ்தான்காரன் வத்தளையில் வைத்துள்ள இரும்பாலை மூடிக்கிடக்கின்றது. விரைவில் அதை பஞ்சாப்காரன் வாங்க உள்ளார்.

    யாழ்ப்பாணத்தில் ஒருலட்சத்தி ஐம்பதினாயிரம் கிலோ பழைய இரும்பு தேங்கி கிடப்பதாக நம்ம முஸ்லீம்களின் புள்ளி விபரம் சொல்லுது. அந்த இரும்புகளை ஓமந்தை சாவடிவரை எவ்வித தடங்கலும் இல்லாமல் கொண்டுவரலாம். அதன் பின் கொண்டு வர எம்ஓடி என்கின்ற இராணுவ அனுமதி வேண்டும். அந்த அனுமதிக்காக பல போட்டிகள் நடந்து, ரேசுல நம்ம குதிரைதான் ஜெயிச்சிருக்கு.

    செம்பு, பித்தளை அது விற்கப்படக்கூடாது. நிறைய பேர் அரிய பொருட்களை விற்றுக்கொண்டிருக்கின்றார்கள். அது தடுக்கப்பட வேண்டும். ஏன் இந்த இரும்பு வியாபாரத்தை தமிழ் பேசும் தமிழ் மக்கள் செய்யவில்லை என்பதிலிருந்து, யாழ். இல் ஒரு இரும்பாலை 8 கோடி ரூபா செலவில் ( மனுவல்) திறந்தால், நிறைய பேருக்கும் வேலை வளங்கலாமே என்றெல்லாம் எனக்குள் பல கேள்விகள் இருக்கின்றன. நடக்கும், நடக்கும் அந்த மண்ணில் இனி நல்லதுகள் நடக்கும்.

    மாயா, அடியுங்கள், அடியுங்கள், அடி மேல் அடியும், இடியும் விழுந்தால் நுங்கிணிக்கு கூட ஒரு ரோஷம் வரும். வந்தது. சிறிலங்கா முஸ்லீம்களுக்கு அது வந்தது. வந்ததின் உச்சம்தான் முஸ்லீம்பெண்கள்வரை அது பரவியுள்ளமைக்கு காரணம். இதற்காக எல்லா முஸ்லீம்களும் கூடி, அமைப்புக்கட்டி, பயிற்சி அளித்து, ஆழையாள் கொன்று, அந்த குறூப்பை இந்த குறூப் கொன்று, அடுத்த வீட்டுக்காரனை இவன் கொன்று, இவனை அவன் கொன்று, அண்ணனை தம்பி கொன்று, தம்பியை அண்ணன் கொன்று….. நெவர். ஒவ்வொரு முஸ்லீம்களும் தனித்தனியாக வீட்டுக்குள் முக்காடு போட்டுக் கொண்டழுது, வெம்பி வெடித்து, பல்லைகடித்து, வெட்கத்தைவிட்டு, ரொம்ப வேதனைகளுடன் வெளியே வந்து முன்னேறியுள்ளார்கள்.

    நீங்கள் கொழும்புல ரிசப்சனிஸ்டாகத்தான் கண்டீர்கள், கொழும்பு ஹைகோட்டுல அவர்களை பார்க்வில்லையா, கொழும்பு பல்கலைக்கழகத்துல முகாமைத்துவத்துக்கு வரைவிலக்கணம் சொல்லிக் கொண்டிருப்பதை காணவில்லையா, கட்டுகஸ்தொட்டையில் இருந்து கொண்டு கனடாவுக்கு தைத்த ஆடைகள் அனுப்பிக் கொண்டிருப்பதை கேட்கவில்லையா…..இன்னும் நிறைய.

    யுத்தம் தந்த வடு. முஸ்லீம்களுக்கு ஏற்றம் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். அதற்காக மற்ற இனத்தை காறிஉமிழும் முஸ்லீம்கள் அல்ல நாம். அதனால்தான், நம்ம வீழ்ச்சியில் இவர்கள் உயர்ச்சி காண்கிறார்களே என எவரும், எந்த ஜீவனும் நினைக்க கூடாது என்பதற்காகத்தான், நாங்கள் எப்படி இருந்தோம், எப்படி வீழ்ந்தோம், எப்படி எழும்புகிறோம் என எழுதிக் கொண்டிருக்கின்றேன். நாங்கள் மானுடத்தை நேசிக்கிறோம். கிராமங்களை சுவாசிக்கிறோம்.

    பிசி அவர்களே, கேபி அண்ணாவை நாம் எப்போதும் கோபித்தது கிடையாது. அவரது வேகம் வேகமாகத் தெரியவில்லை. அது விவேகமாக மாறவேணும் என்பதுதான் என்வாதம். பணமனுப்புங்கோ, பணமனுப்புங்கோ என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இது பழைய பல்லவியல்லவா,

    இப்படி செய்யுங்கோ, அப்படி செய்யுங்கோ என ஒரு ஆலோசனையும் செய்வதாக காணோம். முடிந்தால், உலகம் முழுக்க உள்ள சிறிலங்கா தூதுவராலயங்களில் உள்ள கொமர்சியல் டிவிஷன்களை (வர்த்தக பிரிவு) தனியாருக்கு குத்தகைக்கு விடுமாறு அரசிடம் ஒரு கோரிக்கை விடச் சொல்லுங்கள். மற்றத நம்மவன் பார்த்துக் கொள்வான்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    All laws require mechanisms that allow for the fructification of the law. Yet, the mechanisms serving the purpose of the law, are not in them self THE LAW!
    Since gravity is a physical law, and all physical laws operate according to physical principles (mechanisms), than it’s clear that gravity cannot be responsible for the whole creation of the universe itself.

    It seems to me that Hawking has replaced GOD by gravity (gravity in this perspective can’t not longer be seen as a bold physical force, but get all the characteristics of being some kind of COSMIC MIND).

    To me it seems that hawking has used a simply trick to increase his selling’s.
    It is not the science that is bad…it is the scientists. Many push these high end S.W.A.G.S. as near fact. They spend their whole lives, and our money in one limited area and wouldn’t you know it, they solved the secret in science….they can not prove it by creating the same effect in a lab……but they have a computer model that can show it ( after a few tweaks in the program)…..you just have to trust them.
    We live in the world of Newtonian physics . It works very well through observation. But most of the theories put forth at the astrological and quantum levels are just SWAGS…..maybe they are right but most likely they are not. They are good vehicles to make a career out of as a professor at a pretregious university but they do not fair well in proven results. It takes “faith” to believe in them….hmm— ONE COMMENT.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    சஹாப்தீன் நாநா, மாபெரும் விஞ்ஞானி திரு.அப்துல்கலாம் அவர்கள் போல ,பிரபஞ்சத்தின் “இயற்பியல் விதியின் கீழ்(STEPHEN HAWKING)” மெலத்தமிழினி சாகும் என்ற, இயங்கியல் சக்கரத்தை தன் “மரக்காயர் தோலின்” வலிமையினால், தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார் வாழ்த்துக்கள்!.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    சஹாப்தீன் நாநா! நல்லாச் சொன்னீயள் கேபி பற்றி கேபி யேபி (சமாதான நீதவான்) ஆக மாறுமுன்னரே மாறிவிட்டார் நாநா. இனம் இனத்தை நாடுவது போல் மதம் மதத்துடன் சேர்ந்து கொண்டது. மகாத்மாவை ஏன் இழுக்கிறீர்கள் அவருக்கும் ஒரு ஜின்னா அலி தொப்பி பிரட்டினார். மாறி மாறிப் பிரட்டுங்கோ பறுவாயில்லை மக்களை விட்டு விடுங்கோ பாவங்கள்.
    டெமோகிரசி!/மெலத்தமிழினி சாகும் என்ற/ வெளிநாட்டுக்கு வந்த எமது பிள்ளைகளில் தமிழ் செத்துப்போச்சு. இந்தியாவில் இங்கிலிசு தமிழாகிறது. முஸ்லீங்களின் தமிழ் அன்று பிடித்த பொல்லை இன்றும் எறிவதாய் இல்லை. மகிந்த கொம்பனியுடன் இலங்கைததமிழும் சரி. என்ன சொல்லுறியள் மெல்லச்சாகும் என்று. சொல்லச்சாகும் அல்லது கொல்லச்சாகும் என்று சொல்லுங்கோ.

    Reply
  • மாயா
    மாயா

    //மாயா, அடியுங்கள், அடியுங்கள், அடி மேல் அடியும், இடியும் விழுந்தால் நுங்கிணிக்கு கூட ஒரு ரோஷம் வரும். வந்தது. சிறிலங்கா முஸ்லீம்களுக்கு அது வந்தது. வந்ததின் உச்சம்தான் முஸ்லீம்பெண்கள்வரை அது பரவியுள்ளமைக்கு காரணம். இதற்காக எல்லா முஸ்லீம்களும் கூடி, அமைப்புக்கட்டி, பயிற்சி அளித்து, ஆழையாள் கொன்று, அந்த குறூப்பை இந்த குறூப் கொன்று, அடுத்த வீட்டுக்காரனை இவன் கொன்று, இவனை அவன் கொன்று, அண்ணனை தம்பி கொன்று, தம்பியை அண்ணன் கொன்று….. நெவர். ஒவ்வொரு முஸ்லீம்களும் தனித்தனியாக வீட்டுக்குள் முக்காடு போட்டுக் கொண்டழுது, வெம்பி வெடித்து, பல்லைகடித்து, வெட்கத்தைவிட்டு, ரொம்ப வேதனைகளுடன் வெளியே வந்து முன்னேறியுள்ளார்கள்.//

    மனிதர்கள் முன்னேறுவதில் மகிழ்பவன் நான் சஹாப்தீன் நாநா. இருந்தாலும் , கொழும்புக்கும் , புத்தளத்துக்கும் போன போது சில முஸ்லீம் நண்பர்கள் கதைக்கும் போது சொன்னார்கள் ” இன்னம் கொஞ்ச காலம் இந்த புலிச் சண்டை இருந்திருந்தா , நம்மட சனம் கொடி கட்டிப் பறந்திருக்கும். மகிந்த சண்டையை முடிச்சிட்டான். இதுவரைக்கும் தமிழர் கிட்டயும் , சிங்களவன் கிட்டயும் எதையும் செய்தவன் எங்கட முஸ்லீம்தான். இன்னைக்கு நிலைமை தலை கீழ ஆகிட்டுது. எங்கட இடத்தை திரும்ப தமிழன் பிடிச்சிட்டான். இனி பழைய நிலமை…..” என்றார்கள்.

    இவர்கள் சாதாரண முஸ்லீம் நண்பர்களில்லை. நல்லா படிச்ச நண்பர்கள். யுத்தம் முடிஞ்சதும் ஒரு தமிழர் சொன்னார் “தமிழர் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். சிங்களவர் ஆனந்தப்படுகிறார்கள். முஸ்லீம்கள், புலிகள் என்ன காரியம் செய்துட்டாங்க என வேதனைப்படுகிறார்கள்” என்றார். அந்த வேதனையை என்னால் இலங்கை போன போது உண்மையாக உணர முடிந்தது. மானுடத்தை நேசிக்கலாம். கிராமத்தை சுவாசிக்கலாம். அதில் தப்பேயில்லை சஹாப்தீன் நாநா. அடுத்தவன் சாவில் யாரும் சந்தோசப்படலாகாது. அது எந்த இனத்தவனாக இருந்தாலும் சரி. மனிதன் வாழ்வதற்காகவே இறைவனால் உருவாக்கப்பட்டவன். அவன் அடுத்தவனால் சாவதற்கோ, சுரண்டப்படுவதற்கோ இல்லை.

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    வளைந்து கொடு நிமிர்ந்து நிற்கலாம் என்ற ஒரு சிம்பிள் தத்துவத்தை ஸ்பார்ட்டகஷுக்கு(Spartacus) சஹாப்தீன் நாநா சொல்லியிருக்கலாம்.
    அவரைப் பற்றி தெரிந்திருக்க நமக்கு நிலைமை வந்திருக்காது. இந்த லெனின், மாவோ, ஷே, காஷ்ரோக்களுக்கு முன்னெ தெரிந்திருந்தா இந்தத் தத்துவம், அவர்களும் சும்மா தொப்பி பிரட்டியிருக்க மாட்டார்கள்.

    இது தெரியாமத்தான் பின்லாடனும், சதாமும், அரபாத்தும் “எலியை(?) கில்லி மலையை பிடித்தார்கள்” மிடில் ஈஷ்டிலை இது தெரிந்திருந்தால், யூதர்களுக்கு கல்லுடைத்து முஸ்லீம்கள் காலத்தை ஓட்டலாமல்லவா.

    பிற்குறிப்பு:எம்முன்னே சிங்கள பெளத்த பேரினவாதம் நடத்திய கோரமெதுவும் உங்கள் கண்களிலே படாமல், நையாண்டித்தனம் பண்ணுவது, பாதிக்கப்பட்டவனுக்கு வலிக்கும் என்பதுதான் என் எழுத்து

    Reply
  • மாயா
    மாயா

    //கேபி அண்ணாவை நாம் எப்போதும் கோபித்தது கிடையாது. அவரது வேகம் வேகமாகத் தெரியவில்லை. அது விவேகமாக மாறவேணும் என்பதுதான் என்வாதம். பணமனுப்புங்கோ, பணமனுப்புங்கோ என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இது பழைய பல்லவியல்லவா,…. – சஹாப்தீன் நாநா//

    கேபீ குழுவினர் முன்னாள் போராளிகளை சந்தித்த போது……. வீடியோக்கள்.

    http://www.youtube.com/watch?v=RmocO4pZLQA&feature=player_embedded

    http://www.youtube.com/watch?v=NeXgne2voTY&feature=related

    http://www.youtube.com/watch?v=6yZgNLK0h94&feature=related

    http://www.youtube.com/watch?v=Ta7EfFhze14&feature=related

    அரைவாசிக்கு மேல் தமிழரை அழித்த பின் வந்த ஞானம்? போன உயிர்கள் வருமா? இழந்தவை மீண்டும் கிடைக்குமா? இனியும் இவை வேண்டாம்.

    Reply
  • sahabdeen nana
    sahabdeen nana

    டெமாக்கரசி, நீங்கள் சொல்லும் மரைக்காயர் ரத்தம் எங்களிடம் ஓடவில்லை. அது கச்சி மரைக்கார், வாய்ப்புச்சி மரைக்கார் போன்றவர்கள், போர்த்துக்கேய, ,ஆங்கிலேயருடன் மல்லுக்கு நிற்கும் போது ஓடி விட்டது. எங்களது ரத்தத்தில் ஓடுவது தமிழ் ரத்தம்.அது கன்னியாகுமரியில் இருந்து மன்னார் வழியாக வட்டுக்கோட்டை வந்ததாக இருக்கலாம் அல்லது, எங்கள் மூதாதைகள் யாரையோ, யாழ்.மேல்வர்க்கம் சாதி சொல்லி மிரட்டியதால் வந்த மனமாற்றம், மதமாமாற்றமாக மாறியிருக்கலாம். இது எனது தனிப்பட்ட கருத்து. இல்லாவிட்டால் எங்களுக்குள் எப்படி இந்த தமிழ் ஊற்றெடுக்கின்றது. சம்திங் எல்ஸ்.
    முஸ்லீம், முஸ்லீம் என்று சொல்லிக்கொண்டு இன்னும் நாங்கள் தமிழில்தானே சிந்திக்கின்றோம்.

    குசும்பு, உங்கள் வாதம் எனக்கு சரியாப்படல. தமிழ் மெல்ல சாகுமா. நீங்கள் ஒருவாட்டி கண்டிக்கும், அத்துருகிரிய என்கின்ற சிங்கள கிராமங்களுக்கும் சென்று பாருங்கள். இராணுவ வீரர்களின் குழந்தைகள் தமிழ் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். தேவையானால் இதை நிரூபிக்கலாம். நாம் ஐரோப்பாவில் தமிழை சாகடித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் சிறிலங்காவில் அது ஏதோ ஒரு தேவைக்காக அரசால் வளர்க்கப்படுகின்றது.

    மாயா, நீங்கள் சொல்வது நூறு வீதம் சரி. அடுத்தவர் சாவில் சில முஸ்லீம்கள் இன்னும் குளிர்காய்கின்றார்கள். இதை நான் வணங்கும் இறைவன் கூட பொறுக்க மாட்டான். அந்த முஸ்லீம்களின் கருத்துக்காக, நான் ஆயிரம் முறை மன்னிப்பு கேட்க தயாராக உள்ளேன்.

    நான் யாழ்ப்பாணத்தில் பல பத்தினிகளை நேரில் கண்டவன். என்ர நேர்த்தி செய்த ஆட்டை அறுத்துத் தின்டுட்டான்களே கடவுளே. அவனுகள் நாசமாக போகவேணும் கடவுளே என கத்திய தாயையும். அவள் சாபமிட்டு 24 மணிநேரத்தில் ஆட்டை வெட்டி திண்டவன் செத்து விழுந்ததையும் கண்டிருக்கின்றேன் சகோதரனே. எந்த ஒரு முஸ்லீம் உங்கள் இனத்தை, மதத்தை தவறாக நினைப்பானோ நிச்சயம் அவன் ஒரு ஒரிஜினல் முஸ்லீமாக இருக்க மாட்டான் நண்பரே.

    //எம்முன்னே சிங்கள பெளத்த பேரினவாதம் நடத்திய கோரமெதுவும் உங்கள் கண்களிலே படாமல், நையாண்டித்தனம் பண்ணுவது, பாதிக்கப்பட்டவனுக்கு வலிக்கும் என்பதுதான் என் எழுத்து//தமிழ்வாதம்.
    தமிழ்வாதம் அவர்களே உங்கள் வாதம் சரி. அதற்கு இது நியாயமான தருணமல்ல. அதை தொடங்கினால், நான் அரைக்கால்சட்டை போட்ட
    காலத்துல தீப்பொறி, ஒரு தீப்பொறி (ம.க.அந்தனிசில்), சுதத்திரன், சரிநிகர், அப்புறம் நிகரி போன்ற பத்திரிகைகளில் நான் எழுதிய கட்டுரைகளை மறு பிரசுரம் செய்ய வேண்டிவரும். அப்புறம் அவரா இவர் என்ற வம்பு வழக்கெல்லாம் வந்துடும். இப்போதைக்கு அரசியல் தொடாம, கொஞ்சம் தடவிக்கொண்டு வியாபாரம் செய்வோம். அதுதான் அரசியல் வியாபாரம்.

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    மாயாவால் விடுபட்ட பதிவு.
    http://www.youtube.com/watch?v=850IssXFswQ&feature=related

    இந்தப் பதிவின் போது கையேந்தி நிற்பவர்களிடம் ஒரு கேள்வி.

    உங்களுடைய சமுதாய செய்தி என்ன?(1.36-1.59)
    ……ஒற்றுமையா வாழோணும்,ஒரு கொடியின் கீழ் வாழோணும்…….

    நாநா!
    தொப்பி பிரட்டிக்கு யாருமே உரிமை கொண்டாட முடியாது.

    “….இன்னைக்கு நிலைமை தலை கீழ ஆகிட்டுது. எங்கட இடத்தை திரும்ப தமிழன் பிடிச்சிட்டான்.”…மாயா on September 3, 2010 9:43 pm

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    சஹாப்தீன் நாநா!
    எங்களை போராட விடாம புலி மறிச்ச கதை பேசினோம். இண்டைக்கு ஒரு பெரிய வெளி. இதில அரசியல் வியாபாரமா செய்வது என்பதுதான் இன்றைக்குப் பலரது ஐயம். நினைத்துப் பாருங்கள். போலிக்காகவேனும் சர்வதேசம் ஒரு நீதி, நியாய வரம்பமைத்து ஆட்சியாடிப் போகிறார்கள். இவர்களிடம் எங்கள் கூக்குரல் சரியாக ஒலிக்கப் படவில்லை, என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எங்களிடம் இருக்கிற ஆயுதங்களை, நாங்கள் இன்னமும் சரியாகப் பாவிக்கவில்லை என்பதுதான் வெளிப்படை. ஒடுக்கப்பட்ட இனத்தின் போராட்டத்தை, வெளிநாட்டிலிருந்த பகுதி நேரப் போராடிகள் நாசமறுத்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இவர்களைப் பார்த்தபடி, உங்களுக்கு ஏற்படுகிற வெப்பியாரத்தில் ஒரு இனத்தையே ‘மல்லாக்கப் போட்டு மண்டையில் கொத்துகிற’ வேலையை செய்யாதீர்கள். சாதி, மத, பிரதேச வேறுபாடுகளை, வீழ்ந்து கிடக்கிறவனிடம் கூறுவது ஆரோக்கியமானதா? சிந்தித்துப் பாருங்கள். அடிமைகளால் எல்லைக்குட்பட்டு வாழுதல்தான் மார்க்கம், என்பது ஒடுக்குமுறையாளனின் அதிகாரம். சம உரிமை இல்லையெனில் பிரிவு என்பது, குடும்ப வாழ்க்கையைக் குதுகலிக்க வைக்கிறது என்கிற நினைவிருந்தால் நல்லது.

    Reply
  • மாயா
    மாயா

    புத்தளம் நுரைச்சோலை , ஆலங்குடா மற்றும் மதுரங்குளி போன்ற இடங்களில் புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லீம்களைப் பார்க்க போன போது , அவர்கள் சொன்னவை மனதை தைத்தது. இது புலிகளது தவறு. இவற்றிற்கு மன்னிப்பே கிடையாது. இருந்தாலும். இன்று யாழ் மற்றும் மன்னார் பகுதிகளில் பலர் மீண்டும் குடியேறியுள்ளனர். இருந்தாலும் புத்தளம் பகுதியையும் விட்டு அவர்கள் செல்லவில்லை. மீண்டும் குடியேறியுள்ள அங்கும் உதவிகளை பெற்று , நிலம் பெற்று ஒரு வீட்டை உருவாக்கி சிலரை தங்க வைத்துள்ளனர். புத்தளம் பகுதிக்கு வந்து நின்ற இடத்திலும் தாம் பெற்ற இடங்களை விட்டு வெளியேறாது இருக்கின்றனர். காலா காலமாக புத்தளம் பகுதியில் வாழ்ந்தோரை விட அகதியாக வந்த பலர் பொருளாதார ரீதியாக முன்னேறி உள்ளனர்.

    பாவம் , அந்த வன்னி மக்கள், இருந்த இடமும் இல்லாமல் , தொழில் வாய்ப்புகளும் இல்லாமல், அன்று நிமிர்ந்து நின்றவர்கள் , இன்று அனைத்தையும் இழந்து குறுகிப் போயுள்ளனர். தமிழருக்கு வழி காட்டாத தலைமைகளால் மயானத்தை மட்டுமே காட்ட முடிந்தது. மாவீரர் துயிலும் இல்லங்கள். அவையும் இன்று இல்லை? இனி அவை வேண்டவே வேண்டாம். மன நோயளர்கள் மரணித்ததோடு அந்த நினைவுகளும் போய்த் தொலையட்டும்.

    Reply