கற்றுக்கொண்ட அனுபவங்கள் புதிய வரலாற்றை பெற்றுத்தரும்! : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Minister_with_Peopleதமிழ் மக்கள் நடைமுறைச் சாத்தியமான தீர்வினையே எதிர்பார்த்து நிற்கின்றனர். அவர்கள் சந்திரனையோ சூரியனையோ கேட்கவில்லை என அமைச்சரும் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தள்ளார். நேற்று நடைபெற்ற படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நீண்ட நேரம் சாட்சியமளித்த அவர் இலங்கையர் என்பதற்காக தமிழர் என்பதையோ, தமிழர் என்பதற்காக இலங்கையர் என்பதையோ விட்டுக்கொடுக்க தாம் தயாராக இல்லை எனவும் தெரிவித்தார்.

இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் இன்று இரு வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். ஒன்று அரசியல் உரிமைப்பிரச்சனை. இதுவரை காலமும் இது முழுமையாக தீர்க்கப்படாமல் உள்ளது. ஆனால், அதற்கான முன்நகர்வு நடந்து வருகின்றமை குறித்து நாம் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம்.

அடுத்தது, இந்நாட்டில் யுத்தம் ஆரம்பித்து அது அழிவு யுத்தமாக மாறியதால் அதனை வெற்றிகொள்ள வேண்டிய கட்டாயத்தின் போது எமது மக்கள் எதிர்கொண்ட அவலங்கள் பிரச்சினைகள் எனபனவும் இதுவரை அழியாத அவலங்களாகவுள்ளன. ஆகவே, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சகலருக்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியது உடனடிக் கடமையாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

._._._._._.

ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் முன்பாக 03.09.2010 வழங்கிய சாட்சியம்.

இதுவரை கால மனித குல வரலாறு என்பது அதிசயிக்கத்தக்க மாற்றங்களைக் கண்டு வந்திருக்கின்றது. மாற்றம் ஒன்றைத் தவிர இங்கு மாறாதிருப்பது எதுவுமேயில்லை. மாறி வரும் உலகில் மாற்றங்கள் நிகழும் என்று நாமும் நம்பிக்கை கொண்டு எமது மக்களின் மனச்சாட்சிக் குரலாக இங்கு நான் பேச விரும்புகின்றேன்.

தமிழ் மக்களின் கடந்த கால வரலாறுகள் யாவும் கொடியதும், நெடியதுமான துயரங்களைச் சுமந்து வந்த வரலாறுகளே! எரிந்து போன தேசமும், அழிந்து போன வாழ்வுமாக யுத்தத்தின் வடுக்களையே எமது மக்கள் இதுவரை சுமந்து வந்திருக்கின்றார்கள்.

எங்கள் பாதங்கள் இன்னமும் சுடுகின்றன. எரிந்து போன எங்கள் தேசத்தின் தெருக்களில் எம் மக்களோடு மக்களாகச் சேர்ந்து நாமும் நடந்து வந்திருக்கின்றோம்.

எமது மக்கள் இதுவரை பட்ட துயரங்களும், விட்ட கண்ணீரும், இழந்த இழப்புக்களும், அடைந்த அவலங்களும் தொடர்ந்தும் எம் உணர்வுகளில் எரிந்து கொண்டிருக்கின்றன.

ஆனாலும், இன்று எமது தேசம் மாற்றம் ஒன்றைக் கண்டிருக்கின்றது. புயலடித்த எங்கள் தேசம் அமைதிப்பூங்காவாக மாறியிருக்கின்றது. போர் முழக்கங்கள் இப்பொழுது இல்லை. துப்பாக்கி சத்தங்கள் எங்கும் ஓய்ந்து விட்டன. எந்த நேரத்தில்?… என்ன நடக்குமோ?… என்ற அச்சங்களும், ஏக்கங்களும் எமது மக்கள் மனங்களை விட்டு அகன்று சென்று விட்டன.

இழப்புக்களும் அவலங்களும் நிகழ்ந்திருந்தாலும், இதுவே இறுதி இழப்பாகும் என்ற நம்பிக்கையோடு, இதுவே எமது மக்கள் சந்திக்கும் இறுதியான அவலமாக இருக்கட்டும் என்ற உறுதியோடு, இனி, துன்பங்களோ, துயரங்களோ இங்கில்லை என்ற எதிர்பார்ப்போடு இந்த மாற்றத்தை உருவாக்கித் தந்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் நாம் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றோம்.

இந்த மாற்றத்தைக் கண்டு நாம் எமது மக்களோடு இணைந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். ஆனாலும், இத்தகைய மாற்றம் ஒன்று நிகழ்ந்து விட்டதற்காக மட்டும் நாம் எமது இலட்சிய சுமையை இடைவழியில் இறக்கி வைத்து விட முடியாது.

எமது வரலாற்று வாழ்விடங்கள் தோறும் எமது மக்கள் அரசியலுரிமை பெற்ற சுதந்திர பிரஜைகளாகவும், ஐக்கிய இலங்கைக்குள் மற்றைய இனக்குழும மக்களோடு சரிநிகர் சமானமானவர்களாகவும், இனங்களுக்கிடையில் சமத்துவ ஐக்கியமுள்ளவர்களாகவும் வாழ அனுமதிக்கின்ற அரசியல் மாற்றமொன்று உருவாகும் வரை நாம் எமது பயணத்தில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்ள முடியாது.

இத்தகைய ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக முதலிலே நாம் சில கேள்விகளுக்கு விடை காணவேண்டும்.

எமது அரசியலுரிமைப் பிரச்சினைக்கான தீர்வினை நாம் கடந்த காலங்களில் பெற்றுக் கொள்ள முடியாது போனமைக்கான காரணங்கள் யாவை?..

எமது மக்கள் அழிவுகளையும், அவலங்களையும் மட்டுமே இது வரை காலமும் தொடர் துயரங்களாக சுமந்து வந்திருப்பதற்கான காரணம் என்ன?….

இவைகளுக்கு நாம் முதலில் விடை தேட வேண்டும்!… நாம் கடந்து வந்த பாதையில் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் எவை என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்!

அனுபவங்களின் கருப்பையில் இருந்துதான் புதிய புதிய வழிமுறைகளும், சிந்தனைகளும் பிறப்பெடுக்கின்றன. தோற்றுப்போன வழிமுறைகளில் இருந்து கற்றுக் கொண்டு, அனுபவங்களை படிப்பினைகளாக ஏற்றுக்கொண்டு நடைமுறைச்சாத்தியமான வழிமுறை நோக்கி செல்வதால் மட்டுமே நாம் தேடிக்கொண்டிருக்கும் இலட்சியக் கனவுகளை எட்டி விட முடியும்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இதையே வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.

நாம் எதைச் சொல்லி வந்துள்ளோமோ அதுவே இங்கு நடந்து முடிந்திருக்கின்றது.

எது நடக்கும் என்று தீர்க்கதரிசனமாக தெரிவித்திருந்தோமோ அதுவே இங்கு நடந்து கொண்டுமிருக்கிறது.

எந்த கனவுகள் ஈடேறும் என்று நாம் எண்ணியிருந்தோமோ அவையே எமது அனுபவங்கள் கற்றுத்தந்த புதிய வழிமுறைகளில் தொடர்ந்து நடக்கவும் போகின்றன….

ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்திய ஒரு சுதந்திரப்போராட்ட இயக்கத்தை வழி நடத்திச் சென்ற ஆரம்பகால தலைவர்களில் நானும் ஒருவன். அன்றைய தவிர்க்க முடியாத காலச்சூழலே நாம் ஆயதம் ஏந்திப் போராட வேண்டிய கட்டாய கட்டளைகளை எம்மீது பிறப்பித்திருந்தது.

எமது சமகால இருப்பை நியாயப்படுத்துவதற்காக எமது கடந்தகால வரலாற்றை கொச்சைப்படுத்த நான் விரும்பவில்லை.

ஆனாலும், ஆயுதப்போராட்டம் என்பது நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தப்பட்டு, நிதானிக்கச் செய்ய வேண்டிய இடத்தில் நிதானித்து நடத்தப்பட வேண்டிய ஒன்று.

மாறிவரும் சூழலை கருத்திற் கொண்டு, எமது மக்களின் கருத்துக்களை சரிவர நாடி பிடித்து அறிந்து,… எமது பலம், பலவீனங்களை கருத்தில் கொண்டு,…

எம்மிடம் உள்ள பலத்தோடு, எடுக்க முடிந்த உரிமைகளை எடுப்பதற்காக எமது போராட்ட வழிமுறையினையும் நாம் மாற்றியமைத்திருக்க வேண்டும்.

நாம் தனிநபர் பயங்கரவாதிகளாகவோ, அன்றி ஆயுதத்தின் மீது மோகம் கொண்டு எழுந்த வெறும் வன்முறையாளர்களாகவோ ஆயுதம் ஏந்தி களத்தில் நின்றிருக்கவில்லை.

தமிழ் மக்களை நாம் எவ்வாறு நேசித்திருந்தோமோ அது போலவே இஸ்லாமிய சகோதர மக்களையும், சிங்கள சகோதர மக்களையும் நேசித்திருந்தோம்.

இதன் காரணமாகவே நாம் இஸ்லாமிய சகோதர மக்களுக்கு எதிராகவோ அன்றி, அப்பாவி சிங்கள சகோதர மக்களுக்கு எதிராகவோ எமது துப்பாக்கிகளை ஒரு போதும் நீட்டியிருந்ததில்லை. நீட்ட நினைத்திருந்ததும் இல்லை.

அப்பாவி சிங்கள சகோதர மக்கள் அநியாயமாக புலிகளின் தலைமையால் அழித்தொழிக்கப்பட்ட போது எமது எதிரிகள் அப்பாவி மக்கள் அல்ல என்றும், அன்றைய அரசாங்கமே என்றும் சரியான திசை வழியை நாம் சொல்லி வந்திருக்கின்றோம். இத்தகைய படுகொலை சம்பவங்களை வன்மையாக கண்டித்தும் வந்திருக்கின்றோம்.

இஸ்லாமிய சகோதர மக்கள் வணக்க ஸ்தலங்களில் வைத்து வஞ்சகத்தனமாகக் கொன்றொழிக்கப்பட்ட போதும் சரி, வரலாற்று காலந்தொட்டு இரத்தமும் தசையுமாக தமிழ் மக்களோடு ஒன்று கலந்து வாழ்ந்த இஸ்லாமிய சகோதர மக்கள் வடக்கில் இருந்து பலாத்காரமாக புலிகளின் தலைமையினால் வெளியேற்றப்பட்ட போதும் சரி….

இந்த கொடிய நிகழ்வுகளானவை தமிழ் பேசும் மக்களில் ஒரு சாராராக இருக்கும் இன்னொரு சிறுபான்மை சமூக மக்களை அடக்கி ஒடுக்கி அவர்களது நிலங்களை ஆக்கிரமிக்கும் செயலாகும் என்று அவைகளை நாம் கண்டித்தே வந்திருக்கின்றோம்.

இவ்வாறு சகல இன மத சமூக மக்களுக்கும் எதிரான வன்முறைகளை நாம் அவ்வப்போது கண்டித்தே வந்திருக்கின்றோம்.

மொத்தத்தில் தமிழ், முஸ்லிம், மற்றும் மலையக மக்களுக்காக மட்டுமன்றி பொருளாதார ரீதியில் ஒடுக்கப்படுகின்ற சிங்கள மக்களின் உரிமைகளுக்காகவும் தென்னிலங்கை சிங்கள முற்போக்கு சக்திகளோடு கை கோர்த்து அனைத்து மக்களின் நலன்களுக்காகவுமே அன்று நாம் போராட எழுந்திருந்தோம்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முந்திய காலச்சூழலில் மாறி மாறி ஆட்சிக்கு வந்திருந்த இலங்கை அரசின் அன்றைய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண மறுத்திருந்ததை நான் முதலில் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

இலங்கைத் தீவு என்பது பல்வேறு இன மத சமூக மக்களுக்கு சொந்தமான நாடு. தமிழ் என்றும் சிங்களம் என்றும் இரு வேறு மொழிகளை பேசுகின்ற மக்கள் சமூகங்கள் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

ஆனாலும், இந்த நாட்டின் ஒரு பகுதியினராகிய தமிழ் மக்களுக்கு மொழியுரிமை மற்றும் பல்வேறு விடயங்கள் மறுக்கப்பட்டிருந்தன.

1956 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் அன்றைய ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்ட தனிச் சிங்கள சட்டமும் மற்றும் பிரஜாவுரிமை தொடர்பான பிரச்சினையும் திட்டமிட்ட வகையிலான பூகோள ரீதியில் குடிப்பரம்பல்களை மாற்றக்கூடியதான குடியேற்றங்களும் அரசு கவனிப்புப் பெறாமல் மாற்றாந்தாய் மனப்பாண்மையுடன் அரச உத்தியோகங்களிலும் ஏனைய நிர்வாக செயற்பாடுகளிலும் தமிழ் மக்கள் நடத்தப்பட்ட முறைமைகள் உயர்கல்வி பெறும் விடயங்களில் தரப்படுத்தலை மேற்கொண்டமை அடிக்கடி தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு இனக்கலவரங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்ளைச் செயற்படுத்த விடாமல் அன்றைய சிங்கள அரசியல் தலைமைகளே தடுத்தமை போன்ற பல்வேறு காரணங்கள் தமிழ் மக்களை இந்த நாட்டின் இரண்டாம் தரப் பிரஜைகளாக ஒதுக்கி வைத்திருந்தன.

இலங்கையின் புகழ் ப+த்த இடதுசாரி தலைவர்களில் ஒருவரான கொல்வின் ஆர்.டி. சில்வா அவர்கள் தான் சிங்கள சகோதர மக்கள் சமூகத்தை சார்ந்தவராக இருந்துகொண்டும் அன்று தனிச் சிங்கள சட்டத்திற்கு எதிராக அன்று குரல் கொடுத்திருந்தார்.

இரு மொழிக் கொள்கை என்பது இலங்கையை ஒரு தேசமாக வைத்திருக்கும் என்றும், ஒரு மொழிக் கொள்கை என்பது இலங்கையை இரண்டு தேசங்களாகக் கூறு போட்டுவிடும் என்றும் தனிச் சிங்கள சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் அவர் குரல் எழுப்பியிருந்ததை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

அப்போது பருத்தித்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இடதுசாரி தலைவர்களில் ஒருவரான பொன் கந்தையா அவர்கள், இந்த நாட்டில் வாழும் ஒரு தமிழ் குடிமகன் ஒருவன்; தன் மனைவியுடன், அல்லது தன் பிள்ளைகளுடன் எந்த மொழியில் பேசவேண்டும் என்பதை தீர்மானிக்குமாறு நான் கோரவில்லை என்றும் மாறாக இந்த நாட்டின் பிரஜை என்ற வகையில் இந்த நாட்டின் அரசாங்கத்தோடு எந்த மொழியில் பேச வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்று கோருவதாகவும் தமிழர்கள் எல்லோரும் சிங்கள மொழியை படிப்பதற்கும், சிங்களவர்கள் எல்லோரும் தமிழ் மொழியைப்; படிப்பதற்கும் சட்டமூலம் கொண்டு வரப்பட்டால் நாம் ஆதரிப்போம் எனக் கூறினார்.

இதை ஏற்றுக்கொண்டு ஏனைய பாரம்பரிய தமிழ்த்; தலைமைகளும் இதை ஒரு மாற்று யோசனையாக முன்வைத்திருந்தால் அன்றைய ஆட்சியாளர்களும் அதை நடைமுறைப்படுத்தியிருந்தால் மொழியுரிமை பிரச்சினைக்கு அன்றே தீர்வு காண முடிந்திருக்கும்.

இன்று என்ன நடந்து கொண்டிருக்கின்றது?. எமது இளம் சந்ததியினர் உலக நாடுகள் எங்கும் புலம் பெயர்ந்து சென்று உலக நாடுகளின் பல்வேறு மொழிகளையும் பேச வேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் மொழியை அவர்கள் மறந்துதான் போய்விடுவார்களோ என்ற ஏங்கங்களும் அவர்களது பெற்றோர்கள் மத்தியில் உருவாகி வருகின்றன.

இந்த நிலைக்கு அன்றைய ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, இரு மொழிகளையும் ஈரின மக்களும் கற்க வேண்டும் என்ற தோழர் பொன் கந்தையா அவர்களின் கோரிக்கையினை நிராகரித்திருந்த தமிழ்த் தலைமைகளும்தான் பொறுப்பேற்க வேண்டும்.

இன்று கூட தமிழும் அரச கரும மொழிகளில் ஒன்று என்பது சட்டத்தில் இருந்தாலும், அதை நடைமுறையில் அனுபவிப்பதற்கான நிர்வாகச் சிக்கல்கள் பெரும் தடையாக இருந்து வருகின்றன என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

1974 ஆம் ஆண்டில் நடந்த நான்காவது உலகத்தமிழர் மாநாட்டு அனர்த்தங்களும், தெற்காசியாவின் சிறந்த பொது நூலகமாக கருதப்பட்ட யாழ் நூலகம் 1981ல் அன்றைய ஆட்சியாளர்களால் எரித்தழிக்கப்பட்ட சம்பவமும் அன்றைய ஆட்சியாளர்கள் மீது தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு தீராத கசப்புணர்வுகளை உருவாக்கியிருந்தது.

இதே வேளை, கடந்த பொதுத்தேர்தலின்போது யாழ் வந்திருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள்கூட யாழ் நூலகம் எரித்தொழிக்கப்பட்ட துயரம் தோய்ந்த சம்பவம் குறித்து யாழ் மக்கள் மத்தியில் மிகவும் மனம் வருந்தி தமிழில் உரையாற்றியிருந்ததையும் இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

அதேபோன்று, அண்மையில் யாழ்ப்பணத்திற்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்கள் அன்றைய ஆட்சியாளர்களால் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய சம்பவத்தையும் நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

காலத்திற்குக் காலம் அவ்வப்போது மாறி மாறி வந்த இலங்கையின் அன்றைய ஆட்சியாளர்கள் தமது ஆட்சியின் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக, தமக்கு எதிராக சிங்கள மக்களே கிளர்ந்தெழுந்து விடுவார்கள் என்ற அச்சத்தில் சிங்கள சகோதர மக்களின் கவனத்தை தமிழ் பேசும் மக்களுக்கெதிராகத் திசை திருப்பி விட்டடிருந்தனர்.

இதன் காரணமாகவே 1956, 1958, 1977 மற்றும் 1981 முதல் 1983 வரை என்று இலங்கைத் தீவில் இனக்கலவரங்கள் தூண்டி விடப்பட்டிருந்தன. இதன்போது பெரும்பாலான தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள், உடமைகளை இழந்த நிலையில் தென்னிலங்கையில் இருந்து வடக்கு கிழக்கு நோக்கி அகதிகளாக துரத்தப்பட்டார்கள்.

இந்த இடத்தில் எம் தேசத்து கவிஞன் ஒருவன் எழுதியிருந்த ஒரு கவிதை வரியினை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

பொடி மெனிக்கே தடியெடுக்க
குல துங்க துவக்கெடுக்க
கூரையேறி நாங்கள் குதித்தது
அப்புகாமி முற்றத்தில்…
கொலைப்பயத்தில்
குங்குமத்தை அழித்திருந்த
எங்கள் குல மாதர்
நெற்றிகளில் முத்தமிட்டு
சிரித்து வரவேற்றாள் சிங்கள மாது!
என்று அந்த கவிஞன் எழுதியது போல் தமிழ் மக்கள் அன்றைய ஆட்சியாளர்களால் தூண்டிவிடப்பட்டவர்களால் தாக்கப்பட்ட போது அவர்களைக் காப்பாற்றி வடக்கு கிழக்கு நோக்கி அனுப்பியவர்களும் சிங்கள சகோதரர்களே என்பதையும் நான் இங்கு கூறி வைக்க விரும்புகின்றேன்.

இதே வேளை, இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு பிந்திய காலம் தொட்டு இன்று வரை இலங்கையில் எந்தவொரு இனக்கலவரங்களும் நடந்ததாக வரலாறு இல்லை.

அவ்வாறானதொரு நிகழ்வைத் தூண்டிவிடுவதற்கு இலங்கையின் இன்றைய ஆட்சியாளர்கள் விருப்பப்பட்டிருக்கவும் இல்லை.

இந்த நிகழ்வானது இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னரான இலங்கை அரசின் ஆட்சியாளர்களின் குணாம்ச ரீதியான மாற்றத்தை எம் முன்பாக ஒப்புவித்து நிற்கிறது என்பதையும் நான் இந்த இடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

நாம் சிங்கள சகோதர மக்களை வெறுத்து ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கவில்லை. எமது உரிமைகளைத் தர மறுத்த அன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக சிங்கள மக்களையும் இணைத்து ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கைக்காகவே போராட நாம் எண்ணியிருந்தோம்.

ஆனாலும், சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் அரசியலுரிமை குறித்த தெளிவான சிந்தனைகளை கொண்டிருந்தவர்கள் இருந்த போதிலும், அதற்கான ஒரு ஒன்றுபட்ட ஆயுதப்போராட்டத்தை இணைந்து நடத்துவதற்கு சிங்கள மக்கள் மத்தியில் இருந்து போதிய அளவில் எவரும் முன்வந்திருக்கவில்லை.

இதன் காரணமாகவே அன்றைய சூழலில் நாம் சிங்கள முற்போக்கு சக்திகளோடு உறவுகளை வைத்துக்கொண்டிருந்தாலும் தனியான ஆயுதப்போராட்டத்தையே நடத்த தொடங்கியிருந்தோம்.

ஆனாலும் ஒரு தாய் பெற்ற பிள்ளைகளாக ஒன்றுபட்டு நிற்பதை மறுத்து போராட்டக்களத்தில் அர்ப்பண உணர்வுகளோடு நின்றிருந்த ஆயிரக் கணக்கான சக இயக்க போராளிகளையும், சக இயக்கத் தலைவர்களையும் புலிகளின் தலைமை தெருத்தெருவாக கொன்றொழித்தபோதுதான் எமது போராட்டம் செல்ல வேண்டிய பாதையை விட்டு விலகி திசை மாறி செல்லச் தொடங்கியது.

தமக்கு எதிராக போராடுவதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் அன்றைய ஆட்சியாளர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டு வந்திருந்ததை போலவே புலிகளின் தலைமையும் அன்றைய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சக விடுதலை அமைப்புகள் மீதான தடையினை விதித்திருந்தது.

புலிகளின் தலைமை ஏற்படுத்தியிருந்த இந்தத் தடையானது அன்றைய அரசாங்கத்தின் பயங்கரவாத தடைச்சட்டத்தை விடவும் மிக மோசமாகவே தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டிருந்தது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஏனெனில், எமது தமிழ்த் தலைவர்கள் எவரையும் அரச படைகள் கொன்றொழித் திருக்கவில்லை. மாறாக சக இயக்கங்கள் மீதான தடைகளை உருவாக்கிய புலிகளின் தலைமையே தமிழ்த் தலைவர்கள் அனைவரையும் அழித்தொழித்தது.

இலங்கை அரசுக்கு எதிராக ஜனநாயக வழிமுறையில் போராடுவதற்கான சுதந்திரம் என்பது இலங்ககை அரசினால் கூட அங்கீகரிக்கப்பட்டிருந்த நிலையில், அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தாமல் ஜனநாயக வழியில் குரல் கொடுத்து வந்த தமிழ்த் தலைமைகள் கூட புலிகளின் தலைமையால் அழித்தொழிக்கப்பட்டன.

இந்தச் சூழலில் எமது போராட்டம் எதை நோக்கிச் செல்கிறது என்பது பற்றி அப்பொழுது சிந்தித்தோம். தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின் பிரதான எதிரிகள் உண்மையாகவே இலங்கையின் ஆட்சியாளர்களா? அல்லது புலிகளின் தலைமையா என்று எங்களைச் சிந்திக்கவைத்தது.

ஏனைய விடுதலை இயக்கங்களை புலிகளின் தலைமை தடை செய்து, அதன் உறுப்பினர்களை தெருத்தெருவாக கொன்றொழித்து, தனித்தலைமை அதிகாரத்தை கையிலெடுத்திருந்தபோது புலிகளின் தலைமையை நோக்கி ஏன் என்று கேள்வி கேட்டு தவறுகளை சுட்டிக்காட்ட யாருக்கும் அந்த ஜனநாயக உரிமை இருந்திருக்கவில்லை.

ஒத்துப்போக மறுத்த சொந்த இனமக்களையே புலிகளின் தலைமை கொன்றொழித்த போது ஏன் என்று கேட்கும் பலத்தோடு யாரும் இருந்திருக்கவில்லை.

அப்பாவிச் சிங்கள முஸ்லிம் மக்களை புலிகளின் தலைமை கொன்றொழித்த போது அதையும் ஏன் என்று கேட்கும் பலத்தோடு யாருமிருந்திருக்கவில்லை.

அழிவு யுத்தத்தை நிறுத்தி அரசியல் தீர்வு நோக்கி செல்லுங்கள் என்று புலிகளின் தலைமையிடம் கேட்பதற்குக் கூட யாரும் அப்போது பலமாக இருந்திருக்கவில்லை.

தவறுகளை சுட்டிக்காட்டி சரியான திசை வழி நோக்கி அழைத்து செல்ல முடிந்த உண்மையான விடுதலை அமைப்புகள் சகலவற்றையும் அடித்து நொருக்கி, சிதைத்து மனித குலத்திற்கு சவாலாகவே புலிகளின் தலைமை செயற்பட்டுக்கொண்டிருந்தது.

இழந்து போன உரிமைகளை பெறுவதற்கு மாறாக இருக்கின்ற உரிமைகளும் இழந்து போகும் ஆபத்தையும், அழிவையும் நோக்கி எமது போராட்டம் செல்ல தொடங்கியிருந்த போதுதான் நான் முன்னெச்சரிக்கையாக சில விடயங்களை சொல்லியிருந்தேன்.

விடுதலைக்கான போராட்டத்தை அழிவு யுத்தமாக மாற்றி, எடுத்த முயற்சிகள் யாவற்றையும் எங்கோ ஓரிடத்தில் கொண்டு சென்று சரித்து கொட்டிவிடப்போகின்றார்கள் என்று அன்றே நான் தொலை தூர நோக்கோடு சகல தரப்பினர் மத்தியிலும் எடுத்து விளக்கியிருந்தேன்.

ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சக வாழ்வும் சமத்துவ உரிமையும் கூடிய அரசியல் தீர்வொன்று கிடைக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்த்திருந்த எம் கனவுகளை மெய்ப்படுத்த… தமிழ் மக்கள் அழிவுகளை மட்டும் சந்திக்க தொடங்கியிருந்த ஒரு காலச்சூழலில்…. விடுதலைக்கான போராட்டம் என்பது இருந்த உரிமைகளையும் இழந்து போவதற்கான அழிவுப்பாதையை நோக்கி செல்லச் தொடங்கிருந்த வேiளையில்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது உருவாக்கப்பட்டது.

இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது ஒரு பொன்னான வாய்ப்பு, அரியதொரு சந்தர்ப்பம்.

எமது ஜனநாயக சுதந்திரத்தை மறுத்து எம் மீது கொலைக்கரங்களை நீட்டிக்கொண்டிருந்த புலிகளின் தiலைமையின் மீதான விரோதங்களைக் கூட நாம் கருத்தில் எடுத்திருக்கவில்லை.

ஆனாலும்,….. யார் குற்றியும் அரிசியானல் சரி என்ற வகையில் புலிகளின் தலைமை இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு எமது மக்களின் அரசியலுரிமையை நோக்கி செல்லாமல் அந்த சந்தர்ப்பத்தை தட்டிக்கழித்து விட்டார்களே என்ற தீராத கவலையே எமக்கு உண்டு.

இலங்கை இந்திய ஒப்பந்த நடை முறைகளில் ஈ.பி.டி.பியினராகிய எமக்கு பங்கெடுப் பதற்கான ஜனநாயக உரிமை என்பது மறுக்கப்பட்டிருந்தமை குறித்த ஆட்சேபனையை இப்போது நான் தெரிவிக்க விரும்பவில்லை.

ஆனாலும்,….. எங்களது உரிமையை மறுத்து, அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் சந்தர்ப்பத்தை கையில் எடுத்துக்கொண்டவர்கள் அதை சரிவரப்பன்படுத்தியிருக்காமல் து~;பிரயோகம் செய்து விட்டார்களே என்ற மனத்துயரங்களே எமக்கு இப்போதும் உண்டு!

இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது முழுமையான அரசியல் ஏற்பாடுகளை கொண்டிருக்கவில்லை என்ற விமர்சனங்கள் குறித்து நாம் சிந்தித்திருந்தாலும் அது குறித்து நாம் கவலை கொண்டிருக்கவில்லை.

ஆனாலும்,….. கிடைத்த உரிமைகளை எடுத்துக்கொண்டு இன்னமும் எடுக்க வேண்டிய உரிமைகளுக்காக அதை ஒரு ஆரம்ப முயற்சியாக எடுத்துக்கொண்டு முன்னோக்கி சென்றிருக்கவில்லையே என்ற ஆதங்கமே நமக்கிருக்கிறது.

தமது விருப்பங்களுக்கு மாறாக அவசர அவசரமாக இலங்கையும், இந்தியாவும் தங்களது நலன்களுக்காக செய்து கொண்ட ஒப்பந்தமே இதுவாகும் என்று புலிகளின் தலைமை கிளப்பியிருந்த சுய கௌரவப் பிரச்சினை குறித்து நாம் அக்கறை செலுத்தவில்லை.

அரசியல் தீர்வின்றி அழிவுகள் மட்டும் சூழ்ந்த துயரச்சமுத்திரத்தில் மூழ்கி திசை தெரியாது திக்குமுக்காடிக்கொண்டிருந்த தமிழ் மக்களை கரை நோக்கி அழைத்துச் செல்ல முடிந்த தமிழ் மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டதே இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற உறுதியான கருத்தே இன்னமும் எம்மிடம் உண்டு!

இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது மயிலே! மயிலே! இறகு போடு என்று நாங்கள் இரந்து கேட்டு பெற்றுக்கொண்ட யாசகம் அல்ல.

அது அன்றைய எமது அனைத்து விடுதலை இயக்கங்களினதும் நீதியான போராட்டமும், அர்ப்பணங்களும் பெற்றுத்தந்த மாபெரும் வரப்பிரசாதம் ஆகும்!

அந்த வகையில் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முந்திய நீதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் சிலருக்கும் இலங்கை இந்திய ஒப்பந்த உருவாக்கத்தில் நியாயமான பங்களிப்பு இருந்திருக்கின்றது என்பதை நான் தெரிவிக்க விரும்புகின்றேன்.

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கும் இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவானதில் கணிசமான பங்களிப்பு இருந்திருக் கின்றது என்பதை நான் முரண்பாடுகளுக்கு அப்பாலும் ஏற்றுக் கொள்கின்றேன்.

ஆனாலும், அந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து, தமிழ் மக்களை தொடர்ந்தும் அழிவு யுத்தப்பாதைக்கு இழுத்துச் சென்று எமது மக்களையும், அழியவைத்து, தனது இயக்க உறுப்பினர்களையும், அழிவுயுத்தத்திற்கு பலி கொடுத்தது….

இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தவிர, எதையுமே தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்காமல், பெற்றுக்கொள்வதற்கு மாறாக, இருந்தவைகளையும் துடைத்து அழித்து தொலைத்து, அழிவுகளை மட்டும் தமிழ் மக்கள் மீது அவலங்களாக சுமத்தி விட்டு வேலுப்பிள்ளை பிரபாகரன் தானும் அழிந்து போன நிகழ்வானது தனக்குத் தானே அவர் தோண்டிய படுகுழி என்பதே உண்மையாகும்.

உனது கால்களில் குத்திய முட்கள் ஒவ்வொன்றும் அடுத்தவன் தூவி விட்டவைகள் அல்ல. அவைகள் ஒவ்வொன்றும் உனக்கு நீயே என்றோ ஒரு நாள் தூவி விட்டவைகள். இதைத்தான் இந்த இடத்தில் என்னால் கூற முடியும்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று நடைமுறைப்படுத்த தவறியிருந்த புலிகளின் தலைமை அதன் பின்னரும் கனிந்து வந்திருந்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் தவறவிட்டிருந்தது.

பிரேமதாசா அரசுடனான பேச்சுவார்த்தை…

சந்திரிகா குமாரணதுங்க அரசுடனான பேச்சுவார்த்தை….

ரணில் விக்கிரமசிங்க அரசுடனான பேச்சுவார்த்தை….

இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசுடனான பேச்சுவார்த்தை….

இவ்வாறு தொடர்ச்சியாக சர்வதேச மத்தியஸ்தளங்களோடு நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளின் போது அர்த்தமற்ற நிபந்தனைகளை விதிப்பதைத் தவிர்த்து, சாத்தியமான வழிமுறையில் புலிகளின் தலைமை அரசியல் தீர்வொன்றிற்கு உடன் பட்டிருந்தால் தமிழ் மக்கள் அழிவுகளைச் சந்தித்திருக்க வேண்டிய துயரங்கள் இங்கு நிகழ்ந்திருக்காது.

பண்டா செல்வா ஒப்பந்தம் டட்லி செல்வா ஒப்பந்தம், என்பன உருவாக்கப்பட்ட போது அந்த ஒப்பந்தங்களை கிழித்தெறிந்து அதை தடுத்து நிறுத்தியிருந்தவர்கள் இலங்கையின் பெரும்பான்மையினம் சார்ந்த அன்றைய அரசியல் தலைமைகளே என்பதில் எந்தவித மறு பேச்சுக்கும் இங்கு இடமில்லை.

ஆனாலும், இலங்கை இந்திய ஒப்பந்தம் முதல், அதற்கு பின்னரான அனைத்து முயற்சிகளும் தவறவிடப்பட்டமைக்கான தவறுகளை தமிழ்த்; தலைமைகளே ஏற்க வேண்டும்.

கிடைத்ததை எடுத்துக்கொண்டு மேலும் எடுக்க வேண்டிய உரிமைகளுக்காக கட்டம் கட்டமாக முயன்று பெற்றுக்கொள்ளாமல் கிடைத்தவைகள் அனைத்தையும் அரை குறை தீர்வு என்று தட்டிக்கழித்து வந்த அனைத்து தலைமைகளுமே அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.

ஆகவே தமிழ் மக்கள் இன்றுவரை தாங்கி வந்துள்ள துயரங்களுக்கும், அவலங்களுக்குமான பொறுப்பை வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது மட்டும் சுமத்தி விட்டு சம்பந்தப்பட்ட ஏனைய தமிழ் தலைமைகள் அதற்கான பொறுப்பில் இருந்து விலகிவிட முடியாது.

சம்பந்தப்பட்ட அனைத்து தமிழ்த் தலைமைகளும் அதற்றான தார்மீகப்பொறுப்பை ஏற்கவேண்டும். ஆயுதப்போராட்டத்தை ஆரம்பங்களில் வழி நடத்திச் சென்றவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் தமிழ் மக்கள் சுமந்து வந்த அவலங்களுக்கான தார்மீகப்பொறுப்பை நானும் பகிரங்கமாகவே ஏற்றுக்கொள்கின்றேன்.

எதையுமே பெற்றுத்தராமல் வெறும் அவலங்களை மட்டுமே எம் மக்கள் மீது சுமத்தி வந்த அழிவு யுத்தத்தை நிறுத்துமாறு நாம் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் பல தடவைகள் பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

புலிகளின் தலைமையை அரசியல் தீர்வு நோக்கி கொண்டுவருமாறு நாம் சர்வதேச சமூகத்திடமும் பல தடவைகள் வலியுறுத்தியும், எடுத்து விளக்கியும் கோரிக்கை விடுத்து வந்திருக்கின்றோம்.

இது போலவே புலிகளின் தலைமையை ஆதரித்து, உறவு கொண்டிருந்த சக தமிழ் கட்சிகளின் தலைமைகளிடமும் புலிகள் தலைமையை அரசியல் தீர்வு நோக்கி அழைத்து வாருங்கள் என்று பல தடவைகள் கூறி வந்திருக்கின்றோம்.

ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வும் சம உரிமையும் கிடைக்க முடிந்த ஒரு அரசியல் தீர்விற்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வருவாரேயானால் நான் போட்டி அரசியல் நடத்திக்கொண்டிருக்க மாட்டேன், அரசியலில் இருந்து விலகி நின்று நல்லவைகள் நடக்கின்றனவா என்று வெளியில் இருந்து பார்த்துக்கொண்டிருப்பேன் என்று பல தடவைகள் நான் பகிரங்கமாக சொல்லியிருக்கின்றேன். ஆனாலும் இறுதி வரை இந்த வழி முறை நோக்கி பிரபாகரன் வந்திருக்கவில்லை.

சர்வதேச சமூகம் புலிகளின் தலைமையை சரியான வழிமுறை நோக்கிக் கொண்டு வர தவறிவிட்டது என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். புலிகளின் தலைமையை ஆதரித்து உறவு கொண்டிருந்த தமிழ் கட்சிகளும் அதை செய்திருக்கவில்லை என்பதை நான் நேசமுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் ஆட்சிக்கு வந்தததும் தான் புலிகளின் தலைவர் பிரபாகரனோடு நேரடியாகவே பேசி தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காண விரும்புவதாக பகிரங்க அழைப்பு விடுத்திருந்தார்.

இதையிட்டு நாம் மகிந்த ராஜபக்ச அவர்களின் திறந்த மனதை வெளிப்படையாகவே பாராட்டி விரும்பி வரவேற்றிருந்ததோடு, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட சகலர் மத்தியிலும் எடுத்து விளக்கியிருந்தோம்.

யுத்த நிறுத்தம் குறித்து யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் புலிகளின் தலைமையோடும், அரசியல் தீர்வு குறித்து அனைத்துத் தமிழ், முஸ்லிம் தலைமைகளோடும் அரசாங்கம் பேச வேண்டும் என்பதே ஈ.பி.டி.பி யினராகிய எமது நிலைப்பாடாக இருந்து வந்தது.

இதை மகிந்த ராஜபக்ச அவர்கள் நடத்தி முடிப்பேன் என்று பகிரங்கமாக கூறி புலிகளின் தலைமையை நோக்கி அழைப்பு விடுத்திருந்த போது தமிழ் மக்கள் மட்டுமன்றி இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து இன சமூக மக்களும் மனம் மகிழ்ந்து வரவேற்றார்கள்.

ஆனாலும் புலிகளின் தலைமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் சமாதானத்திற்கான அழைப்பை ஏற்க மறுத்து தொடர்ந்தும் யுத்த முனைப்புகளில் ஈடுபட்டு வந்ததை யாரும் இங்கு மறுக்க மாட்டார்கள்.

மாற்று ஜனநாயக கட்சிகளின் உறுப்பினர்கள், அதன் ஆதரவாளர்கள், கல்விமான்கள், புத்திஐPவிகள், ஊடகவியலாளர்கள், மதகுருமார்கள் தம்மோடு ஒத்துப்போக மறுத்த பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரையும் தமது சொந்த இனம் என்றும் பாராமல் புலித்தலைமை தொடர்ந்து அச்சுறுத்தியும், துன்புறுத்தியும், நாட்டை விட்டுத் துரத்தியும் கொன்றொழித்தும் வந்துள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் சமாதான நோக்கில் எமது வரலாற்று வாழ்விடங்கள் தோறும் கை கட்டி காவல் கடமைகளில் மட்டும் நின்றிருந்த பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடிகளை தீ மூட்டி எரித்து, அங்கொன்றும் இங்கொன்றுமாக பல்வேறு தாக்குதல்களை படையினர் மீது புலிகள் தொடர்ந்தும் நடத்திக்கொண்டிருந்தனர்.

இறுதியாக, மாவிலாறு அணைக்கட்டை புலிகளின் தலைமை மூடிவிட்டதோடு சமாதானத்திற்கான கதவுகளை முழுமையாக இறுக மூடிவிட்டு எமது வரலாற்று வாழ்விடங்களை மறுபடியும் ஒரு யுத்த சூழலுக்குள் வலிந்து கட்டி இழுத்திருந்தார்கள்.

அழிவு யுத்தம் எமது மக்கள் மீது பேரவலங்களை சுமத்தும் என்று நாம் பல தடவைகள் வலியுறுத்தி வந்துள்ளோம். அழிவு யுத்தத்தை தொடர்ந்து நடத்தி வந்த புலிகளின் தலைமை தம்மையும் அழித்து எமது மக்களையும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லப்போகின்றார்கள் என்றே நாம் எச்சரிக்கையோடு தெரிவித்து வந்திருக்கின்றோம்.

அழிவு யுத்தத்தின் ஊடாக எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்றும், அது எமது மக்களின் தசைத்துண்டங்களையும், எலும்புக்கூடுகளையும், எரியுண்டு போன சாம்பல் மேடுகளையுமே மிச்சமாகத் தரும் என்று இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு புலிகள் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து இறுதி வரை நாம் எச்சரித்து வந்துள்ளோம்.

இங்கு இறுதியாக என்ன நடந்து முடிந்திருக்கின்றது? எமது மக்களின உயிர்களை யுத்த களத்தில் தொலைத்து, உடமைகளை சிதைத்து, வனப்பும் வளமும் மிக்க அழகிய எங்கள் தேசத்தை சுடுகாடாக மாற்றுவதற்கான சூழலை உருவாக்கிய புலிகளின் தலைமை இன்று நாம் அன்றே சொன்னது போல் தம்மையும் அழித்துக் கொண்டுள்ளது.

யுத்தம் நடக்காத பிரதேசங்களை நோக்கி எமது மக்களை வருவதற்கு அனுமதியுங்கள் என்றும், எமது மக்களை யுத்த கேடயங்களாக பயன்படுத்தாதீர்கள் என்றும் நாம் இறுதி மோதலின் போது கூட மனிதாபிமான வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஆனாலும் புலிகளின் தலைமை அதைக்கூட கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

போர்ப் புயலடித்து ஓய்ந்து இப்பொழுது எங்கும் அமைதி பிறந்திருக்கிறது. இந்த வேளையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களிடம் எமது மக்களின் சார்பாக கோரிக்கைகளையும் நாம் முன்வைத்துள்ளோம்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறு, புலிhத்தலைமையின் பிரச்சினைகள் வேறு என்று நாம் ஆரம்பந்தொட்டு தொடர்ந்தும் ஐனாதிபதி அவர்களிடம் வலியுறுத்தி வந்திருக்கின்றோம். அவரும் அதை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்.

தமிழ் மக்கள் நியாயமானதொரு அரசியல் தீர்வின் மூலம் ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வும், சமத்துவ உரிமையும் பெற்று யுத்தமில்லாத பூமியில் வாழவே விரும்புகின்றார்கள் என்பதையும், புலிகளின் தலைமை அரசியல் தீர்விற்கு விருப்பமின்றி தொடர்ந்தும் முடிவற்ற யுத்தத்தையே நடத்த விரும்புகின்றார்கள் என்பதையும்; பல தடவைகள் தெரிவித்து வந்திருக்கின்றோம். அதையும் அவர் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்.

யுத்தத்தை விரும்பிய புலிகளின் தலைமையை ஐனாதிபதி அவர்கள் யுத்தத்தால் வெற்றியடைந்திருக்கின்றார். புலித்தலைமையின் பயங்கரவாத பிரச்சினைக்கு அவர் முடிவு கட்டியிருக்கிறார். அதற்காக நான் அவரை பாராட்டுகின்றேன்.

ஆனாலும் தமிழ் மக்களின் பிரச்சினை என்பது பயங்கரவாத பிரச்சினை அல்ல என்பதையும் ஐனாதிபதி அவர்கள் நன்கு உணர்ந்து கொண்டிருக்கின்றார் என்றே நாம் உறுதியாக நம்புகின்றோம்.

கடந்த 2009 மே 18 இல் எமது தேசத்தை சிறைப்படுத்தி வைத்திருந்த யுத்தத்தை ஐனாதிபதி அவர்கள் வெற்றி கண்ட போது இந்த வெற்றியானது தமிழ் மக்களை வெற்றிகண்ட வரலாறு அல்ல என்றும், மாறாக இந்த நாட்டின் பயங்கரவாதிகளை தமிழ் முஸ்லிம், சிங்கள மக்கள் வெற்றி கண்ட வரலாறே என்றும் தெரிவித்திருந்தார். இதை நாம் வரவேற்றோம். வரவேற்கின்றோம்.

இதே வேளையில், எல்லாள மன்னனை வெற்றிகண்ட துட்டகைமுனு மன்னன் தன்னால் தோற்கடிக்கப்பட்ட எல்லாள மன்னனுக்கு செலுத்தியிருந்த மரியாதையை இந்த நாட்டின் சகல மக்களினதும் ஆட்சித்தலைவர் என்ற வகையில் தமிழ் மக்கள் மீதும் ஜனாதிபதி அவர்கள் செலுத்தி வருகின்றார் என்றே நாம் நம்புகின்றோம்.

கலிங்கத்துப்போரில் வெற்றி கண்ட அசோகச்சக்கரவர்த்தி யுத்த சக்கரவர்த்தி என்ற நிலையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு புத்த தர்மத்தினனாக மாறியதைப்போல், யுத்த தர்மராக இருந்த ஜனாதிபதி அவர்கள் புத்த தர்மத்தவராக தொடர்ந்தும் செயலாற்றுவார் என்று நாம் நம்புகின்றோம்.

மதத்தால் மாறுபட்டாலும், பேசும் மொழியால் வேறுபட்டாலும், அன்றாட அடிப்படை வாழ்க்கை முறையில் பெரிதும் வேறுபடாதுள்ள நாம் அனைத்து மக்களும் மனிதநேயம் என்ற பொது வாழ்வில் தத்தமது இன, மொழி அடையாளங்களோடு ஒன்று பட்ட இலங்கையர்களாகவும், சமத்துவ உரிமை பெற்றவர்களாகவும் வாழ்வதற்கான மானிட தர்மத்தை இந்த மண்ணில் புதிய வரலாறாக ஜனாதிபதி அவர்களே தொடருவார் என நாம் நம்புகின்றோம்.

இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் இன்று இரு வேறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.

ஒன்று,…. அரசியலுரிமை பிரச்சினை! இது இதுவரை காலமும் முழுமையாகத் தீர்க்கப்படாமல் இருப்பினும் அதற்கான முன் நகர்வுகள் நடந்து வருவது குறித்து நாம் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம்.

இன்னொன்று,…. இந்த நாட்டில் யுத்தம் தொடங்கியதாலும், அது அழிவு யுத்தமாக மாறி, அந்த அழிவு யுத்தத்தை வெற்றி கொள்ள வேண்டிய கட்டாயத்தின் போது ஏற்பட்ட பிரச்சினைகளும் எமது மக்களின் இதுவரை அழியாத அவலங்களாக எம் முன்னால் விரிந்து கிடக்கின்றன.

அழிவு யுத்தம் காரணமாக எமது மக்கள் தங்களது சொந்த நிலங்களையும் வீடுகளையும் உறவுகளையும் உடமைகளையும் இழந்த நிலையில் மிகுந்த பாதிப்புகளுக்கும் மன அழுத்தங்களுக்கும் மன வேதனைகளுக்கும் ஆட்பட்டவர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.

புலிகளின் தலைமையால் பலாத்காரமாக பிடித்துச்செல்லப்பட்டும், மூளைச்சலவை செய்யப்பட்டும், விரும்பியும் விரும்பாலும் புலிகள் இயக்க உறுப்பினர்களாக இருந்தவர்கள் பலர் அழிவு தரும் துப்பாக்கிகள் ஓய்ந்த பின்னரும் புனர்வாழ்வு முகாம் என்றும் தடுப்பு முகாம் என்றும் வாழுகின்ற நிலைமைகளைக் காண்கிறோம்.

ஆகவே… யுத்தத்தின் காரணமாக சகல மக்களும் அனுபவித்து வரும் அவலங்களுக்குத் தீர்வு கண்டு சகலருக்கும் புனர்வாழ்வும் புதுவாழ்வும் அளிக்க வேண்டியது இங்கு உடனடிக் கடமையாகும்.

இவை தொடர்பாக பல காரியங்களையும் அரசாங்கம் ஆற்றிவருவதையும், அதில் நானும் முன்னின்று உழைத்து வருவதையும் நான் இந்த இடத்தில் கூறி வைக்க விரும்புகின்ற அதே வேளையில் எஞ்சியுள்ள காரியங்களையும் துரிதப்படுத்த வேண்டும் என்று நான் தமிழ் மக்களின் சார்பாக மனிதாபிமான வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றேன்.

இதை இன்னமும் சிறப்பாகவும் அர்த்த பூர்வமாகவும் செய்து முடிப்பதற்கு சர்வதேச சமூகமும் மேலும் முன்வர வேண்டும்.

இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்வதற்கான உரிமை என்பது சர்வதேச சமூகத்திற்கு உண்டு என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனாலும் புலிகளின் தலைமையின் மீதான அழுத்தங்களை மேலும் அதிகப்படுத்தி அவர்களை அரசியல் தீர்விற்கு உடன்பட வைக்கும் முயற்சியில் சர்வதேச சமூகத்தால் முடியாமல் போய் விட்டது என்பதே எமது கவலையாகும்.

அவ்வாறு முடிந்திருந்தால் இன்று நடந்து முடிந்திருக்கும் இறுதிக்கால அழிவுகளையாவது சர்வதேச சமூகத்தால் தடுத்து நிறுத்தியிருக்க முடிந்திருக்கும்.

ஆகவே, அவலப்பட்டு துயரங்களை சுமக்கும் தமிழ் மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்காகவும், அரசாங்கம் முன்னெடுத்து வரும் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கும், மற்றும் மனிதாபிமான உதவிகளுக்காகவும் சர்வதேச சமூகம் இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களை நோக்கி தமது கரங்களை நீட்டுவதே காலப்பொருத்தமான கடமையாகும் என்று சர்வதேச சமூகத்திடம் நாம் மனிதாபிமான வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இந்த இடத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களிடம் நான் இன்னொரு விடயத்தையும் தெரிவிக்க விரும்புகின்றேன்.

உலகம் முழுவதையும் தானே ஆள வேண்டும் என்ற அடங்காத அருவருப்பான ஆசையினால் ஜேர்மனிய மக்கள் மீதும், ஜேர்மனிய தேசத்தின் மீதும் சர்வாதிகாரி கிட்லர் இரண்டாம் உலக யுத்தத்தை நடத்தியதன் மூலம் பேரழிவுகளை ஏற்படுத்தியிருந்ததை இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

உலக மகா சர்வாதிகாரியான கிட்லர் தனக்கு பக்கத்தில் தனக்குரிய புதை குழியை தானே தோண்டி வைத்துக்கோண்டே இரண்டாம் உலக யுத்தத்தை தொடங்கியிருந்ததையும், இறுதியில் அந்த புதை குழியில் தானே வீழ்ந்து அழிந்த பின்னர் ஜேர்மனிய மக்கள் தம்மை வலிந்து கட்டிய ஒரு உலக யுத்தத்திற்குள் தள்ளி விட்டிருந்த கிட்லரின் தவறுகளையே எண்ணிப்பார்த்தார்கள் என்பதையும் நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

அது போலவே தமிழ் மக்களும் தங்களை இவ்வாறானதொரு அதளபாதாளத்திற்குள் தள்ளியிருக்கும் புலிகளின் தலைமையின் தவறுகளை உணர்ந்து வருகின்றனர். எமக்கான அரசியலுரிமைகளை நாம் கோருவது எமது ஜனநாயக உரிமையாகும். எமது அரசியலுரிமைப் பிரச்சினை தீர்க்கப்படாத வரைக்கும் அதற்காக நாம் நடைமுறைச்சாத்தியமான வழிமுறையில் உழைத்துக்கொண்டே இருப்போம்.

ஆனாலும் அரசியலுரிமைக்காக, சமாதானப் பேச்சுக்காக நடமுறைச்சாத்தியமான வழிமுறையில் உடன்பட்டு வரமறுத்து இறுதிவரை அழிவு யுத்தத்தில் மட்டும் மோகம் கொண்டிருந்த புலிகளின் தலைமையின் தவறுகளை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.

அரசியல் தீர்விற்கு வர மறுத்து அழிவு யுத்தத்திற்குள் எமது மக்களையும் தேசத்தையும் புலிகளின் தலைமை தள்ளி விட்டிருந்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களின் போதும் தமது சுயலாபங்களுக்காக அதை ஆதரித்து அதற்கு தூண்டு கோலாக இருந்து வந்த சுயலாப தமிழ் அரசியல் தலைமைகளின் தவறுகளையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம். தவறான தமிழ்த் தலைமைகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளுக்காக தமிழ் மக்கள் ஜனாதிபதி அவர்களால் வஞ்சிக்கப்படமாட்டார்கள் என்றே நாம் நம்புகின்றோம். அழிந்து போன எங்கள் வரலாற்று வாழ்விடங்களை மீண்டும் புதிய அழகோடு புதுப்பித்து எமது மக்களிடம் ஒப்படைத்து, சிதைந்து போன எமது மக்களின் வாழ்வியல் உரிமைகளை மறுபடியும் தூக்கி நிறுத்தி எமது மக்களுக்கு புதிய வாழ்வை வழங்க அரசாங்கம் தொடர்ந்தும் விரைவாகச் செயற்படும் என்று நாம் நம்புகின்றோம்.

இதுவரை யுத்தம் துப்பிய கந்தகக் காற்றை மட்டும் சுவாசித்து வந்த எங்கள் மக்களின் வரலாற்று வாழ்விடங்கள் தோறும் சுகந்தமான புதிய தென்றல் வீச வேண்டும்.

தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினை குறித்து நாங்கள் ஜதார்த்தமாகவே இதுவரை சிந்தித்து வந்துள்ளோம். ஆகாயத்து சூரியனையும், சந்திரனையும் பூமிக்கு கொண்டு வந்து எமது கைகளில் தாருங்கள் என்று சாத்தியமற்ற விடயங்களை நாம் கேட்கவில்லை.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அந்த சட்டத்தின் பிரகாரம் அதற்கு இருக்க வேண்டிய சகல அதிகாரங்களையும் வழங்கி, அந்த அடிப்படையில் ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சக வாழ்வையும், சமத்துவ உரிமையையும் நோக்கிய எமது இலட்சிய கனவுகளை நடைமுறை நனவாக்குவதற்கு வழி சமைக்க வேண்டும் என்றே நாம் கேட்கின்றோம்.

ஆளும் கட்சி உட்பட எதிர்க்கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் என அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டு அதில் பங்கெடுத்தும் வருகின்ற மாகாணசபை திட்டத்தை தமிழ் மக்களுக்காகவும் நடை முறைப்படுத்த வேண்டும் என்றே நாம் கேட்கின்றோம்.

தென்னிலங்iகை மக்கள் அனுபவித்து வரும் வாழ்க்கை என்பது தங்கமாகவும், தமிழ் மக்கள் அனுபவித்து வரும் வாழ்க்கை என்பது தகரமாகவும் காணப்படுகின்ற ஏற்றத்தாழ்வுகள் உள்ள இலங்கைத் தீவில் விரைவான மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அனைத்து மக்களுக்கும் சமவுரிமை வேண்டும் என்றே நாம் கேட்கின்றோம்.

நிலையானதும், உறுதியானதுமான ஆட்சியதிகாரம் எங்கு இருக்கின்றதோ அங்குதான் அதிகாரங்களை உரிய முறையில் அனைத்து இன மக்களுக்கும் பகிர்ந்தளிக்க முடியும்!

ஆகவே இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் பெற்றிருக்கும் ஆட்சியதிகாரம் என்பது நீடித்த நிலைத்து இன்னமும் உறுதி பெற வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம். அதற்காக இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து இன மத சமூக மக்களும், அரசியல் கட்சிகளும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களது அரசாங்கத்தை தொடர்ந்தும் பலமுள்ளதாக பாதுகாப்பதற்கு முன்வர வேண்டும் என்றும் நான் பகிரங்கமாக தெரிவிக்க விரும்புகின்றேன்.

மத்தியில் உள்ள அதிகாரங்கள் எந்தளவிற்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றனவோ அதே அளவிற்கு நாட்டில் ஐக்கியமும் சமாதானமும், நாட்டின் இறைமையும் தொடர்ந்தும் பாதுகாக்கப்படும்.

தமிழ் மக்களை நான் பிரதிநிதித்துவப்படுத்துபவனாக இருந்த போதிலும், தமிழ் மக்களின் வாக்குகளால் நான் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற போதிலும், எமது தமிழ் மக்களின் உரிமைகளுக்காக மட்டுமன்றி சிங்கள, முஸ்லிம் மக்களின் வாழ்வியல் மற்றும் அரசியல் உரிமைகளும் உயர்ந்து செழிக்க வேண்டும் என்பதையுமே நான் விரும்புகின்றேன்.

பல்லின சமூக மக்கள் வாழும் இலங்கைத் தீவில் ஒரு இனம் உயர்ந்தும், இன்னொரு இனம் தாழ்ந்தும் ஏற்றத்தாழ்வுகளோடு வாழும் அரசியல் சூழ்நிலை இருக்குமாயின் அது இனங்களுக்கிடையிலான கசப்புணர்வையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்கவே வழி சமைக்கும்.

ஆகவே, இந்த நாட்டில் வாழுகின்ற சகல இன மக்களுக்கும் சம உரிமை வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம்.

மாறி வரும் உலகத்தின் போக்கை புரிந்து கொண்டு. உலக ஒழுங்கை உணர்ந்து கொண்டு. உலகமயமாக்கலை அனுசரிக்க வேண்டிய இடத்தில் அனுசரித்து, எதிர்கொள்ள வேண்டிய இடத்தில் எதிர்கொண்டு எமது தேசிய மற்றும் சமூக பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க வேண்டுமேயானால் அதற்குத் தேவையானது இனங்களுக்கிடையிலான சமத்துவ உரிமைகளை நிலை நிறுத்துவதேயாகும்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் வெறும் சுயலாபங்களுக்காக மட்டும் அறிக்கை விட்டு, சாக்கடையில் ஓடுகின்ற சேற்று நீரோடு நாமும் சேர்ந்து ஓடியிருக்கலாம். ஆனாலும் அதற்கு மாறாக சமாதான நதிகள் சங்கமிக்கும் சமுத்திரத்தின் திசை நோக்கி ஆற்று நீராக ஓடி வந்தவர்கள்.

பெருத்த சூறாவளியையும், பலத்த சுனாமியையும் எதிர்கொண்டு உரிமைக்குக் குரல் கொடுத்து உறவுக்கு கரம் கொடுத்து, எதிர்ப்பு அரியலை தவிர்த்து நாம் இணக்க அரசியலின் வாசலை திறந்து விட்டவர்கள்.

எத்தனை இராணுவ தாக்குதல்களை யார்தான் நடத்தினாலும், அரச எதிர்ப்பு அறிக்கைகளை யார்தான் அடிக்கடி வெளியிட்டாலும், அரசாங்கத்துடன் பேசித்தான் எமது மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்ற தீர்க்கதரிசனமான தீர்மானத்தை எடுத்தவர்கள்.

நடைமுறைச்சாத்தியமான வழி முறையில் மட்டும்தான் அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றும், எங்கிருந்து தொடங்குவது சாத்தியமோ, அங்கிருந்து தொடங்கியே எமது கனவுகளை நனவாக்க முடியும் என்றும் ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சக வாழ்வு காண துணிச்சலோடு எழுந்து வந்தவர்கள் நாங்கள்.

இது போன்று நாம் எடுத்து கொண்ட துணிச்சலான அரசியல் நிலைப்பாட்டிற்காக… என்னோடு கூட இருந்தவர்களையும், எனது சிறகுகளாக இருந்தவர்களையும், எனது கால்களாக இருந்தவர்களையும் சுயலாப அரசியலுக்காக அறுத்துப்போட்டார்கள். துரோகிகள் என்று துற் பிரச்சாரம் செய்து, தூற்றுதல் நடத்தி பலரையும் அழித்தொழித்தார்கள். அச்சுறுத்தினார்கள்.

எமது நடைமுறைச்சாத்தியமான கொள்ளைகளை ஆதரித்தவர்களை இந்த மண்ணை விட்டு துரத்தினார்கள்.

என் மீது மனித வெடி குண்டுகளை ஏவி விட்டு ஏகப்பட்ட தடவைகள் என்னை கொன்றொழிக்க முயன்றார்கள். ஆனாலும் விழ விழ எழுந்து குருதி துடைத்து இன்னமும் பல மடங்கு உரத்த சிந்தனைகளோடு நான் எழுந்து வந்திருக்கின்றேன்.

மரணத்தைக் கண்டு, மனித வெடி குண்டுகளைக் கண்டு நான் அச்சத்தில் அடங்கி ஒடுங்கி நாட்டை விட்டே ஓடியிருக்கலாம். ஆனாலும் எமது மக்கள் மீதான தீராத நேசமும், அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற அடங்காத இலட்சிய வேட்கையும் தொடர்ந்தும் எமது மக்கள் மத்தியில் நான் இருந்தே தீர வேண்டும் என்ற கட்டாய கட்டளையை எனக்கு பிறப்பித்திருக்கின்றன.

எந்த வழி முறையை துரோகம் என்று கூறி எம் மீதான தூற்றுதல்களை எமது மக்களின் எதிரிகள் நடத்தினார்களோ, எந்த வழிமுறையில் எம்மோடு கூட இருந்து எமது மக்களுக்காக அர்ப்பண உணர்வுகளோடு உழைத்தவர்களை கொன்றொழித்தார்களோ அன்று முதல் நாம் தேர்ந்தெடுத்து செயற்பட்டு வருகின்ற அந்த வழிமுறையே சரியானது என்று வரலாறு இன்று தேர்ந்தெடுத்திருக்கின்றது.

எம்மையும் எமது கொள்கைகளையும் நேசித்த எமது மக்களையும் அவர்கள் சுமத்திய அபாண்டமான பழிகளில் இருந்து வரலாறு இன்று விடுதலை செய்து வருகின்றது.

இது போலவே நாம் முன்னெடுத்துவரும் எமது நடைமுறைச் சாத்தியமான வழி முறையினாலும், எமது அர்ப்பண உணர்வுகளாலும் எமது மக்களையும் எதிர்கால வரலாறு விடுதலை செய்யும் என்று நாம் திடமாக நம்புகின்றோம்.

சமாதானத்தையும், சமவுரிமை சுதந்திரத்தையும் விரும்பும் எமது மக்களோடு அனைத்து அரசியல், ஜனநாயக சக்திகளும் இணைந்து ஒன்று பட்டு உழைக்க வேண்டும் என்று நான் அனைவரையும் அழைக்கின்றேன்!

அரசியல் மக்களை பிரித்து வைக்கிறது! பொருளாதாரம் மக்களை ஒன்றிணைக்கிறது!!

புகழ் பூத்த இந்த வாசகத்தை இலங்கை தீவில் வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் என்று அனைவருக்கும் பொதுவான ஒரு போதனையாக நான் முன்வைக்கின்றேன்! ஆரம்பகால ஆட்சியாளர்களாலும், சில சுயலாப தமிழ் தலைமைகளாலும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இனமத முரண்பாடு என்ற சூழ்ச்சிகளுக்குள் இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் சிக்குண்டு கிடந்த பழைய வரலாறுகளை நாம் மறப்போம்.

இந்த நாட்டின் ஒரு பகுதி மக்களான தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயம் என்பது சிங்கள சகோதர மக்களுக்கோ அன்றி முஸ்லிம் சகோதர மக்களுக்கோ விரோதமான விடயம் அல்ல என்ற உண்மை சகல தரப்பாலும் உணரப்பட வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.

கடந்த காலங்களில் புலிகளின் தலைமையால் அப்பாவி சிங்கள சகோதர மக்களும், இஸ்லாமிய சகோதர மக்களும் கொன்றொழிக்கப்பட்ட அனைத்து கொடிய வன்முறைகளுக்கும் நாம் மனத்துயரங்களோடு பகிரங்கமாகவே மன்னிப்பு கேட்கின்றோம்.
அப்பாவி மக்களான உங்களை கொன்றொழித்த புலிகளின் தலைமையை உங்கள் மனங்களில் வைத்து நீங்கள் தமிழ் மக்களை பார்க்காதீர்கள். தமிழ் மக்களைப்போல் உங்களையும் நேசிக்கும் எங்களைப் போன்றவர்களின் முகங்களுக்கு ஊடாக மட்டும் தமிழ் மக்களைப் பாருங்கள். இந்த நாட்டின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் உங்களது உறுதியான கரங்களை நீட்டி, அதன் ஊடாக அழகிய எங்கள் இலங்கைத் தீவில் அனைத்து மக்களுக்கும் பொதுவான சமூக பொருளாதாரத்தை வளர்த்தெடுத்து வாழ்வியல் உரிமைகள் சிறந்து செழிக்க வாழ்வோம் வாருங்கள் என்று சிங்கள சகோதர மக்களை நோக்கியும் இஸ்லாமிய சகோதர மக்களை நோக்கியும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

இந்த உரை உங்களுக்கு ஆச்சரியத்தை தந்திருக்கலாம். உங்களது ஆச்சரியத்திற்குக் காரணம் இந்த குரலின் அசாதாரணத் தன்மையே. கடந்த ஐம்பது வருடகால இலங்கை வரலாற்றை மீட்டுப் பார்க்கும் போது ஒரு முக்கியமான உண்மை பளிச்சிட்டுத் தெரிகிறது. அதாவது சாதாரண தமிழ் மக்களின் நியாயப் பூர்வமான கோரிக்கைகள் சாதாரண சிங்கள மக்களிடத்தில் சரிவர எடுத்துக் கூறப்படவில்லை. அதே போலவே சாதாரண சிங்கள மக்களின் நட்புணர்வும் இயைபுணர்வும் இணைந்து செல்லும் பாங்கும் தமிழ் மக்களிடத்தே எடுத்துக் கூறப்படவே இல்லை. இந்த மௌன இடைவெளியை இல்லாமற் செய்வதன் மூலமாகவே நாம் ஒன்றுப்பட்ட பிரிக்கப்பட முடியாத இலங்கையை ஏற்ப்படுத்தலாம். அந்த மனநிலையில் நின்றுகொண்டே இந்த உரையை நிகழ்த்தியிருக்கின்றேன்.

நாங்கள் முதலில் இலங்கையர்களாகவும் அடுத்து எமது இனக்குழும அடையாளத்தையும் இணைத்து போற்றிக் கொள்வோம். தமிழரைப் பெறுத்தவரையில் இலங்கையர்களாகவும் தமிழர்களாகவும் வாழ விரும்புகின்றோம். அதையே எமது இலட்சியமாகக் கருதுகின்றோம். இலங்கையர்களாக இருப்பதற்காக தமிழையோ தமிழர்களாக இருப்பதற்காக இலங்கையையோ என்றுமே விட்டு விட இலங்கைத் தமிழர்களான நாம் ஒப்புக்கொள்ளவே மாட்டோம். இது உறுதி. தமிழில் ஓர் அற்புதமான கவிதை வரிகள் உண்டு.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே.

இதுவே சகலருக்கும் உரியதான பொது விதியாக இருக்கட்டும் என்று கூறி வாழ்க்கையை நாம் வாழ்ந்து காட்டுவோம் வாருங்கள் என்று கூறி எனது சாட்சியத்தை இத்துடன் முடிகின்றேன்.

Show More
Leave a Reply to BC Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

90 Comments

  • Myl
    Myl

    Lifetime leader of the “democratic party” is more the problem than a solution. About time the blood soiled old breed take the back seat and allow young people at least an avenue for meaningful political participation.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    ஒரு சரியான வரலாற்றுப் பாடத்தை இங்கே தோழர் வைத்துள்ளார் போராட ஆரம்பித்த நாம் ஒவ்வொருவர் சார்பிலும் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது எமது இலங்கைசார் கருத்துக்களையும் மிகச் சரியாக முன்வைக்கப்பட்டுள்ளது ஒரு இயக்கம் அதன் தலைமை சரியான நேரத்தில் மிகச்சரியாக செயற்பட்டுள்ளது இந்த வரலாற்று முக்கியத்துவமான உரைக்கு நன்றி.

    தோழமையுடன் – த சோதிலிங்கம்

    Reply
  • pandithar
    pandithar

    உண்மைகளை மிக தெளிவாக எடுத்து விளாசியிருக்கிறார் ஈ.பி.டி.பி தலைவர். இது ஒரு வாரலாற்று ஆவணமாக பாதுகாக்கப்ப வேண்டும். காரணம் மிக அனுபவம் வாய்ந்த ஒரு தலைவரது உரை. இதல் சொல்லப்பட்ட விடயங்களை எப்படிப்பட்டாவது நடைமுறைப்படுத்துவதற்கு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அதற்கு ஆதரவாக இருப்போம். இதை விடுத்து அவரே சொன்னது போல சூரியனையும் சந்திரனையும் கேட்டு காலத்தை கடத்துவது சரியானதல்ல.

    Reply
  • arunn
    arunn

    வாழ்த்துக்கள் தோழரே!!! உங்களுடைய நீண்டகால போராட்ட அரசியல் அனுபவம் மிக தெளிவாக இங்கே உரைக்க படுள்ளது. உங்கள் கருத்து வெறும் வார்த்தைகளாக இல்லாமல் செயல் வடிவம் குடுத்து நொந்து நூலாகி போய் இருக்கும் நமது தாயக மக்களுக்கு நல்வாழ்வை ஏற்படுத்தி குடுக்க வேண்டும் என்று பணிவாக கேட்டுகொள்கிறேன். அதோடு நாம் அனைவரும் தோழரின் கரங்களை வலுபடுத்த வேணும்…வாழ்த்துக்கள் தோழரே…..

    Reply
  • nantha
    nantha

    காம்ரேட் கதிரவேலு அவர்களின் மகனை இப்போது ஒரு அனுபவப்பட்ட “தோழர்” தேவானந்தாவாக பார்ப்பதில் சந்தோஷமே உள்ளது.

    அவர் பணி தமிழர்களுக்கு எப்பொழுதும் தேவை!

    Reply
  • Ajith
    Ajith

    When he is going to stop abductions and murders in the soil he born. What a gimmic?

    Reply
  • பல்லி
    பல்லி

    எனக்கேதோ இது கே பி யின் வருகயால் கிடைத்த அனுபவம் போல் உள்ளது: பார்ப்போம் கே பி யா? அல்லது தோழரா மகிந்தாவை மகிழ்விப்பார் என; இது பலரை கலவரபடுத்தலாம் ஆனால் இதுவே கலப்படமற்ற உன்மை;

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //,,,When he is going to stop abductions and murders in the soil he born. What a gimmic?//
    அஜித் உங்களின் கேள்விக்கான பதில் பி.பி.சி இன் செய்திக்குறிப்பில் உள்ளது. அதாவது எல்லாம் புலிப்பிரச்சராமே அன்றி வேறில்லை பாணி!

    LTTE propaganda
    But he also said that other allegations, for instance of kidnappings, were largely “rumours” based on “LTTE (Tamil Tiger) propaganda”.

    Briefly answering questions from commissioners in English at the end, Douglas Devananda was asked about allegations made by Tamils in the north that pro-government elements were engaging in extortion, for instance taking paddy away from farmers.

    He admitted that some of this was happening but said it was “almost under control now”.

    Reply
  • vanthiyadevan
    vanthiyadevan

    thanks to mr dougls
    true statement
    anyway mr palli
    k p is jujupi for thozlar

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    யாருக்கோ பிறந்து,
    யாரிடமோ வளர்ந்து,
    புலி’ப்பணத்தில் பயிற்சி பெற்று,
    புதுப் புது இயக்கங்களில் கொன்றோடி,
    அலன் தம்பதிக் கடத்தல்,
    கோடம்பாக்கம் கொலைவெறியின் பின்
    உன் இறுதிச் சரணாலயந்தான் சிங்களப் பூமி.
    போதி மரத்தடியில் போதை தலைக்கேற
    நீ இப்போது சொல்கிறாய்.
    ‘காலச்சூழலே,ஆயதம் ஏந்திய கட்டாயக் கட்டளை.’
    புரிகிறது தோழரே! நன்றாகப் புரிகிறது.

    Reply
  • P.V.Sri Rangan
    P.V.Sri Rangan

    நல்லூர்த் திருவிழாவும், துப்பாக்கி விற்பனையும்.
    “தலைவர்”உரை நிகழ்த்துகிறார்.அவரது தலைவரான மிகந்தா மாத்தையாவோ நல்லூர்த் திருவிழாவில் பெரிய-பெரிய துப்பாக்கி (எஸ்.எல்.ஆர் போன்ற அமைப்புடன்) பிளாஸ்றிக்கில் விற்றுக் கொண்டிருக்கிறார். இந்தத் துப்பாக்கிகளை யாழ்ப்பாண மக்கள் பரவலாக வேண்டிக் கொண்டிருக்கினமாம்.
    தென்னிலங்கைச் “சகோதரர்கள்”இந்தத் துப்பாக்கி வியாபாரதை மிகப் பரவலாகத் திருவிழாவில் செய்கின்றனர். யாப்பாணப் பெரிசுகளிலிருந்து, சிறுசுகள்வரை துப்பாக்கி வேண்டுவதில் ஆர்வமாக இருக்கிறார்கள்-வேண்டித் தள்ளுகிறார்கள்!

    இது குறித்து இந்தத் தலைவர் ஏதாவது தனது மக்களுக்குக் குறிப்புணர்த்தினரா? எல்லாம் தெரிந்த டக்ளஸ் மாத்தையாவுக்கு இந்தப் புலம் தெரியாதா என்ன?அவரும் தொடர்ந்து தனது மக்களைக் காட்டிக் கொடுக்கலாம்.ஒரு போராட்டத்துக்குள்ளிருந்த மக்கள் சமுதாயம், இனவொடுக்கு முறைக்கெதிரான ஆழ்மன அழுத்ததிலிருந்து இன்னும் விடுபடாத சமுதாயம் இத்தகைய துப்பாக்கித் தாகத்தை இயக்கவாத மாயையிலிருந்து விளையாட்டுத் துப்பாக்கியாக நுகரும்போது அஃதே ஆழ்மனவிருப்பாகக் கணிக்கப்படும்.

    மகிந்தாவின் அரசுக்கு மிகச் சாதகமான கருத்தொன்று வைக்கப்படப்போகிற அபாயம் இந்தத் துப்பாக்கி விற்பனைக்கூடாக முன்வைக்கப்படப் போகிறது.

    யுத்தத்துக்குப் பின்பான யாழ்ப்பாண மக்களது மனங்களை-சமூக உளவியலை அளக்கும் இந்த விளையாட்டுத் துப்பாக்கி விற்கும் நாடகத்தில் சாகடிக்கப்படும் சிவில் உரிமைகள் குறித்து எதிர்காலம் பேசும்.

    யாழ்ப்பாண மக்கள் இன்னும் துப்பாக்கியை மறப்பதற்கில்லை.அவர்களது மனங்களில் எண்ணக் கருவாக இருக்கும் துப்பாக்கிமீதான காதல் அழிவதற்கு இன்னும் பல வருடம் எடுக்கும் என ஆய்வாளர்கள் சொல்வர். பிறகென்ன? இராணுவ ரீதியான கண்காணிப்பும், இராணுவக் கெடுபிடியும் தொடர்ந்து நிலைப்படுத்தப்படும்.

    இந்த விளையாட்டுத் துப்பாக்கி விற்பவர்கள் வெறும் வியாபாரிகள் அல்ல. அவர்கள் எமது மக்களது மனங்களை அளவிடுகிறார்கள். அரசினது சமூக ஆய்வாளர்களும், அவர்களது பணியாளருமெனப் பலர் இதுள் இயங்குகிறார்கள். பாவம்பிடித்த நமது மக்களோ அப்பாவித்தனமாகப் பற்பல துப்பாக்கிகளை வேண்டித் தமது தாகத்தைத் தணிக்க அடுத்த இராணுவ நெருக்குவாரம் தொடரலாம்.

    தமிழ் பேசும் மக்களைத் தொடர்ந்து கண்காணிப்பது,அவர்களது எண்ணங்களை அறிவது-ஆய்வதெனச் ஸ்ரீலங்கா அரசு மிக வேகமாகக் காய் நகர்த்துகிறது. துப்பாக்கி வேண்டும் குடும்பங்கள் கண்காணிக்கப்படுவர்.

    எல்லாம் அவன் செயல்-இன்ஷா அல்லா!

    ப.வி.ஸ்ரீரங்கன்- ஜேர்மனி- 05.09.2010

    Reply
  • Ajith
    Ajith

    Santhan, This is an article from Sunday leader. Do you think it is an LTTE propaganda?-http://www.thesundayleader.lk/2010/06/20/judiciary-in-jeopardy/

    However, the sudden transfers of the two Magistrates are speculated to have taken place following a speech made in parliament by UNP Parliamentarian Jaya Sri Ranga during the last parliamentary sessions.

    Sri Ranga in his speech during an adjournment debate directly accused the EPDP, a constituent party in the governing UPFA, of abducting and extorting money from Tamil people in the North while threatening the judges who heard the relevant cases in court.

    He has specifically mentioned the names of Chavakachcheri Magistrate T.J. Prabhakaran and Vavuniya Magistrate Alex Raja saying that they were hearing cases against members of the EPDP for alleged threats, abductions, extortion and even murders.

    Sri Ranga in his speech called for the independence of the judiciary in the North saying that the judges were under constant threat by members affiliated to the government if they delivered a judgment against alleged extortion.

    At the time of the transfer, Chavakachcheri Magistrate Prabhakaran was hearing a case of abduction and murder of a teenager that had taken place in Chavakachcheri during the general election period.
    A 19-year-old schoolboy from the Chavakachcheri Hindu College was allegedly abducted and later killed by the group who had abducted him with the intention of extorting money. Several EPDP members had been accused in the case and EPDP member and Jaffna Deputy Mayor T. Illango alias Regan had allegedly threatened Prabhakaran.

    Meanwhile, Vavuniya Magistrate Alex Raja at the time of his transfer had been under threat and had been asked to withdraw an open warrant issued by him on several suspects in a murder case. According to Sri Ranga, the suspects in all these cases have been identified as members of the EPDP.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    வாள் எடுத்தவன் வாளால் மாண்டுபோவான். மெல்லெனப் பாயும் தண்ணீர்கல்லையும் ஊடுருவிப்பாயும். இதுவே நடந்ததும் நடந்து கொண்டிருக்கிறதும். இப்படி இருக்கும் போது “முரட்டுமாடுகள்” தமிழ்மக்களின் பிற்போக்கு தனத்தை பயன்படுத்தி அதிகாரத்துடன் தமது மேய்சலை நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. இதையும் டக்கிளஸ் அவர்கள் தனக்குரிய தெளிவாலும் மனவலிமையாலும் வெற்றி கொள்வார் என எதிர்பார்க்கலாம்.

    கே.பிக்கு கிடைத்த ஞானம் கைதியாகி போனபின் கிடைத்த ஞானம். அவர் வாழவேண்டுமென்றால் அப்படித்தான் கதைக்கவேண்டும் உடன்பட்டு தீராவேண்டும் இன்று வரை கே.பி புலிகளையோ புலிகளின் தலைமையோ விமர்சித்ததில்லை. கே.பியின் தலைவர் இன்றுவரை மோட்சதிற்கு போய் விட்ட வேலுப்பிள்ளை பிரபாகரன் தான். தவறு செய்துவிடோம் என்பதுடன் முடிவடைகிறது. டக்கிளஸ் சின் நிலை அதுவல்ல!. கே.பி அனுப்பிய வைத்த வெடிகுண்டு புகையூடாக வெளிவந்து நிற்பவர்.

    Reply
  • LUCKY
    LUCKY

    வாழ்த்துக்கள் தோழரே!!! உங்களுடைய நீண்டகால போராட்ட அரசியல் அனுபவம் மிக தெளிவாக இங்கே உரைக்கப்பட்டுள்ளது. இது பலரை கலவரப்படுத்தலாம் ஆனால் இதுவே கலப்படமற்ற உன்மை. அவர் பணி தமிழர்களுக்கு எப்பொழுதும் தேவை.

    Reply
  • Ajith
    Ajith

    அவர் பணி தமிழர்களுக்கு எப்பொழுதும் தேவை./
    Yes Yes whis service is necessary for tamils. Abductions, murders, money laundering, .. Well done Douglas. You continue the service to Sinhala masters.

    Reply
  • thurai
    thurai

    டக்ளஸ் மீதும், இலங்கை அரசின் மீதும் குற்றங்களை சுமத்தும் புலி ஆதரவாளர்களுக்கும், மற்றவர்களுக்கும் தாங்கள் வாழும்புலம் பெயர் நாடுகளில் தமிழீழ கோசத்தை வைத்தும், புலியின் பெயரால் தமிழர்களை மிரட்டியும் உல்லாச வாழ்வு வாழ்பவர்களை தெரிவதில்லையா? அல்லது இவர்களும் அவர்களுக்கு துணைபோகும் கருத்தாளர்களா?

    துரை

    Reply
  • indiani
    indiani

    தோழரின் இந்த வாக்குமூலம் வரவேற்கப்படவேண்டிய முக்கியமான தொன்றாகும் போராட்ட ஆரம்பகாலத்தில் தோழர் தங்கத்துரையின் நீதிமன்ற உரையின் சாரமம் ஒன்றாக இருப்பதை அவதானிக்கப்பட வேண்டியது. இதைவிட அண்மையில் தோழர் வரதராஜப்பெருமாளின் தோழர் நாபா அவர்களது நினைவுப்பேருரையும் பல நல்ல சரியான விடயங்களை வெளிக்கொணர்ந்துள்ளது.

    Reply
  • Yoga.s
    Yoga.s

    எல்லாம் சரி தான்! ஒன்றை மறந்து விட்டாரா? அல்லது மறைத்து விட்டாரா? இலங்கையில் பல்வேறு தடவைகள் இனக் கலவரங்கள் நடந்தன! இறுதி 1983 என்று நினைக்கிறேன். அப்போதெல்லாம் தோழர்?!சொல்லும் “பொருளாதாரம்” தான் மக்களை இணைத்ததோ?அகதிகளாக உடுத்திய துணியுடன் ஓட வைத்ததோ? மேலும், 83க்குப் பின் இனக் கலவரமென்று ஒன்று ஏற்படாதிருந்த காரணம் எங்கள் பலம் “ஆயுத்தில்” இருந்தது என்ற உண்மையை போட்டுடைத்திருக்கலாமே? ஓஓ அப்படிச் சொன்னால் புலிகள்…! கொழும்பு வீடுகளின் வரவேற்பறையில்”தலைவர்”படம் தொங்கிய காலங்களுமிருந்ததே? உண்மையைக் கண்டறியும்?! ஆணைக் குழு முன் உண்மைகளையும் சொல்ல வேண்டுமில்லையா?

    Reply
  • Ajith
    Ajith

    டக்ளஸ் மீதும், இலங்கை அரசின் மீதும் குற்றங்களை சுமத்தும் புலி ஆதரவாளர்களுக்கும், மற்றவர்களுக்கும் தாங்கள் வாழும்புலம் பெயர் நாடுகளில் தமிழீழ கோசத்தை வைத்தும், புலியின் பெயரால் தமிழர்களை மிரட்டியும் உல்லாச வாழ்வு வாழ்பவர்களை தெரிவதில்லையா? அல்லது இவர்களும் அவர்களுக்கு துணைபோகும் கருத்தாளர்களா? – Thurai

    The same questions for you Mr. Thurai. Douglas has the same time period as LTTE and continue to do the murders and abductions as a minister of a government in the homeland. What you are saying is that Douglas is doing the same thing LTTE did in foregin soil. Tamils who are affected by LTTE in foregin soil can seek justice in foregin countries where justice system is impartial. But in Sri Lanka the situation is jutice system cannot function independently. If there is a true justice system Rajapkase and Douglas should have been sentenced to death over the murders of a 100, 000 innocent people. In Sri Lanka Rajapkase regime keeps all its citizens under prison. Former President Chandrika herself afraid talk about this regime fearing the white van? Just imagine the situation of ordinary citizen. Are you a collaborator of Rajapakse actions?

    Reply
  • BC
    BC

    டக்ளஸ்சின் உரை சிலரை கலவரபடுத்துகிறதே! கொலை வெறி புலிதலைவரின் உரையை கேட்டுபழகியதால் உண்மையை ஏற்று கொள்வது சிரமம்தான்.

    Reply
  • ஜெயராஜ்
    ஜெயராஜ்

    ஜிரிவியும் லங்காசிறியும் என்று ஒருவட்டத்துக்குள் இருந்தவர்களுக்கு இந்த உரை விளங்க கடினமாக இருக்கலாம் இருந்தாலும் இப்போ வேறு தளம் பார்ப்பது வரவேற்க வேண்டிய விடயம். மாவீரர் உரையில் அன்ரன் பாலசிங்கம் நாலு தூசணபகிடிகள் சொன்னால் கைதட்டி பழகியவர்களுக்கும், பொட்டம்மான் நல்ல கோட்டல் கட்டி வைத்திருக்கிறார் கிளிநொச்சி போனால் நல்லா சாப்பிடலாம் என்றவுடன் விசில் அடித்தவர்களுக்கும், விளங்குவது கடினம் தான். அங்கு எல்லாவற்றையும் தொலைத்து நிற்பவர்களுக்கு இங்கு இருந்து கொண்டு உசுப்பேத்துபவர்கள் செய்கிற வேலை அவர்களை இன்னமும் அதேநிலையில் வைக்கத்தான் உதவும்.

    கூட்டமைப்பை பாராளுமன்றம் அனுப்பி வைத்தது தனிய கண்டன அறிக்கைகள் விடமட்டும் தானோ? முடிந்தால் தாங்கள் ஜெயித்த தொகுதியில் நாலு ஏழைப்பிள்ளைகளுக்க ரியூசனாவது சொல்லி கொடுத்திருக்கலாம். இலங்கையில் இன்றய பத்திரகைகளும் எமக்கு எது தேவை, மக்களின் தலைவர்கள் யார் என்றும் தலையங்கம் எழுதும் அளவுக்கு வந்துள்ளது.

    நெசவு தொழிற்சாலைக்கு வேலைக்கு போகிற 60 பெண்களின் பாதுகாப்புக்கு தான்தான் பொறுப்பு என்று சொல்லுகிற அளவு துணிவும் வேண்டும்

    மகிந்தா அரசுடன் இருந்து கொண்டும் சிங்கள முற்போக்கு சக்திகளுடன் சரியான உறவை வளர்க்கவில்லை என்று சொல்லுவதையும் உதாசீனமாக பார்க்க கூடாது.

    Reply
  • naanee
    naanee

    சொன்னவைகள் அத்தனையும் உண்மை. இதை பலர் என்றோ உணர்ந்துதான் இருந்தார்கள் நேரம் வரும் போது உயிருடன் இருந்து அதுவும் இலங்கையில் தொடர்ந்தும் இருந்து சொன்னதற்கு நன்றிகள். தமிழனின் நிலை பற்றித்தான் சொல்லியிருக்கின்றாரே ஒழிய தனது நிலைப்பாட்டை முதன்மைபடுத்தவில்லை. குதர்க்கம் எவரும் கதைக்கலாம் நடைமுறையில் ஒரு சிறிதளவேனும் சாதிப்பதுதான் கஸ்டம். இவ்வளவையும் சொன்னதற்காவது டக்கிளசுக்கு நன்றிகள்.

    Reply
  • rajesh
    rajesh

    தோழர் டக்ளஸ்,தோழர் ஜெயராஜ் வாழ்த்துக்கள்,

    Reply
  • thurai
    thurai

    அன்பின் அஜீத், ஒரு இராசபக்சவோ, அல்லது ஒரு டக்ளஸ் மட்டுமோ, புலியின் தலைமை மட்டுமோ குற்றங்கள் எல்லாவற்ரிற்கும் காரணமல்ல.

    புலம்பெயர் நாடுகளில் புலிகளின் பெயரால் மக்ளை மிரட்டியவர்க்ழும் பணம் பறித்தவர்கழும் யாரென எல்லோரிற்கும் தெரியும். இவர்களை பின் புலத்தில்இருந்து செயற்படுத்தி சுயநலம் காணுபவ்ர்களை ஒருவராலும் அறியமுடியாது அவர்கள் சட்டத்தின் கைகளில் இன்னமும் சிக்கவில்லை சிக்கவும் மாட்டார்கள். இதே நிலமைதான் இலங்கையிலும். மகிந்தா பெயராலும், டக்ளஸ் பெயராலும் சுயநலம் காண்போரே அதிகம். இவர்களே
    நாட்டின் குற்றச்செயல்களிற்கு காரணம்.

    புலிகளை குற்றவாளியாக்குவதன் மூலம் தமிழர்களிற்காக உயிர்கொடுத்த போராளிகளை கேவலப்படுத்த முடியாது. பின்னணியில் இருந்து சுயநலமடைவோரும், தவறாக வழிகாட்டியோருமே குற்றவாளிகள். இந்தப் பயங்கரக் குற்றவாளிகள் தங்கள் நலன்களைக்காக்கவே புலிகளை
    தவறாக வழிநடத்தினர்கள். இலங்கை அரசு செய்த தமிழினப் படுகொலைகளிற்கும் இவர்களே காரண்ம்.

    இதனை தமிழர் புரியாத வரை,ஏற்காதவரை ஈழத்தமிழரின் அழிவை யாராலும் தடுக்கமுடியாது.

    துரை

    Reply
  • மாயா
    மாயா

    அங்கே முகாம்களை விட்டு வெளியேறும் இளைஞர்களைப் பற்றிய செய்திகளை தமிழ் ஊடகங்கள் கொண்டு வரவில்லை. இதுதான் தமிழர் நிலை. இதோ லங்காதீபவில் உள்ள ஒளிப் புகுதியை காண: ( என்னால் அந்த பகுதியை தனியாக எடுக்க முடியவில்லை. வீடியோ பகுதியில் பாருங்கள்)
    http://www.lankadeepa.lk/
    அடிதடிக்கு ஆயிரம் பேர் வருவார்கள்
    அமைதிக்கு ஆறு பேர் தயாரில்லை.

    Reply
  • பல்லி
    பல்லி

    //யாருக்கோ பிறந்து,
    யாரிடமோ வளர்ந்து,//

    பிறப்பிடம் தேவையில்லை
    பிறருக்காய் வாழ்வதற்கு
    பிற்போக்கு வரிகளுடன்
    பித்தலாட்ட கவி வரிகள்.

    Reply
  • BC
    BC

    //இளைஞர்களைப் பற்றிய செய்திகளை தமிழ் ஊடகங்கள் கொண்டு வரவில்லை.//
    உண்மை தான் மாயா. நீங்கள் தந்த தந்த இணைப்புக்கு சென்று மொழி தெரியால் ஒவ்வொன்றாக கிளிக் செய்து வீடியோ பார்த்துவிட்டேன்.

    Reply
  • தென்னவன்
    தென்னவன்

    இவர்கள் தான் நாடு கடந்த தமிழிழ அரசின் தோற்றத்தை விரும்பாதவர்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிரானவர்கள். தமிழத்தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் சில பேருக்கு “தலைப்பாகை கட்டி“ களத்தில் இறக்கிவர்கள். இன்னும் தமது நண்பர்களின் இணையத் தளங்கள் ஊடாக தமிழ்த் தேசத்தின் விடுதலைப் பாதைக்கு எதிராக “தானும் உண்ணாது மற்றவனையும் உண்ண விடாது“ தடுக்கின்றார்கள்.

    அந்தக் கோஸ்டி குழுவாதத்திற்கு தலை தாங்குபவர்களை தமிழ் தேசியத்தின் உண்மையான நெஞ்சங்கட்கு அடையாளம் காட்ட வேண்டிய கட்டாய காலத்தில் நாம் இருக்கின்றோம். தமிழ் (கனடா உலகத்தமிழர் பொறுப்பாளரென கூறிக்கொள்ளும் தமிழ் என்கிற கிராஞ்சி) தமிழ்நெற் ஜெயா, கனடாவில் சண் மாஸ்ரா,; நேரு (தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தோடு தன்னை தானே ஒப்பீடு செய்பவர்) கமல் ( மாதந்தம் 4000 டொலர் ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு கனடா உலகத்தமிழர் பத்திரிகைப் பொறுப்பாளராக இருப்பவர்) அருமை என்கிற அருமருகன், ,சண் மாஸ்ரர் போன்றவர்கள் பெயர் குறிப்பிட விரும்பாத இன்னும் ஒரு சிலர் மற்றைய நாடுகளில் இருந்து கொண்டு போராட்டத்தை முன்னெடுக்காது பதவி ஆசைகளுக்காக தம் சுயநலங்களுக்காக போராட்டத்தின் அடி ஆழம் தெரியாமல் நாடு கடந்த கனடா அரசின் அங்கத்தவர்களையும் பாதை மாறி செல்லும் பயணத்தில் இழுத்துச் செல்ல முனைகின்றார்கள்.

    நாடு கடந்த தமிழீழ அரசு என்ற கட்டமைப்பின் பொருள் விளங்காது சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்பவர்களை மக்கள் விரட்டியடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இருந்தும், நா.க. த.அரசினை எதிர்த்துவிட்டு சந்தர்பவாத நரிமூளையைப் பாவித்து, இறுதிச் சந்தர்ப்பத்தில் நாடு கடந்த தமிழிழ அரசிற்கு தாமும் ஆதரவு என்று காட்ட சாயம் பூசியவர்களையும் கனடா மக்கள் நன்கு அறிந்து கொண்டார்கள்.

    பிற்குறிப்பு: தனிப்பட்ட நபர்களை தாக்குவதோ அல்லது அவர்களை குறை கூறுவதோ தமிழீழ தேசிய ஊடகமான சங்கதியின் நோக்கமல்ல. ஆனால் தமது இருப்புகளை தக்க வைத்துக் கொள்வதற்காக மக்களை தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும் சிலரது தவறான செயற்பாடுகளை சுட்டிக்காட்டுவது தவிர்க முடியாதது ஆகின்றது.

    “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

    (இன்னும் வரும்)

    கனடாவிலிருந்து தென்னவன்

    Reply
  • chandran.raja
    chandran.raja

    எதையும் புரிந்து கொள்ளமுடியாது இருக்கிறது தென்னவன். நீங்கள் எந்த குறூப் சார்பாகக் கதை எழுதுகிறீர்கள்?.

    Reply
  • BC
    BC

    தமிழ்நெற் ஜெயா என்பவர் யார்?தமிழீழத் தாயகம், தமிழீழ தேசியம், நாடு கடந்த தமிழீழ அரசு!எனக்கும் ஒன்றும் விளங்கவில்லை.

    Reply
  • Ajith
    Ajith

    Dear Mr. Thurai, So you agree that the real culprits to the current status of Sri Lanka are not the tamils (LTTE, TNF, or SLFP,UNP). It is not only the tamils but also Sinhala people should realise this. Tamils and Sinhalese should accept each others right of self determination and respect each other and stand together against foregin elements that is trying to destroy united Tamil-Sinhala Sri Lanka.

    Reply
  • pandithar
    pandithar

    யாரும் வந்து எதையும்
    எழுதிவிட்டு போகலாம்…
    யாருக்கும் தெரிவதில்லை
    இனி இங்கு என்ன நடக்கும் என்று……….

    அனுபவங்களின் கருப்பையில் இருந்து
    புதிய சிந்தனைகள் பிறப்பெடுக்கும்…
    சொன்னார் தோழர்…இது உண்மை…

    இவரது வழி முறையை யாவரும்
    விமர்சனங்களோடு ஆதரித்தால்
    விமோசனம் நிச்சயம்…

    அடுத்து… கே. பி எங்கே?… டக்ளஸ் எங்கே?…
    சும்மா கே.பியையும் டக்ளஸையும்
    ஒப்பிட்டு குழப்பாதீர்கள்…

    மகவும் மன வலிமை படைத்த
    டக்ளஸ் கே.பியி வருகையை கண்டு
    சிறுதேனும் கலங்குவார் என்று யாருமே நம்பார்….

    Reply
  • nantha
    nantha

    கனடாவில் இப்போது நாலைந்து கும்பல்களாக “புலி” வசூல் ராஜக்கள் பிரிந்துள்ளனர். இந்த தென்னவன் என்பவர் உருத்திர குமாரன் என்ற அமெரிக்க பிரஜையின் அணியில் நிற்கிறார். இவர்களது அணியில் தாலிக் கொடி அறுத்த கள்ளர்களும் இருக்கிறார்கள்.

    உருத்திரகுமாரன் கனடாப் பக்கம் தலை காட்ட முடியாது. ஏனென்றால் அமெரிக்காவூடாக அகதிகளாக வந்தவர்களிடம் ஆயிரக்க கணக்கில் “சுத்திய” ஆள். உருத்திரகுமாரன் வந்தால் “தர்மஅடி” கொடுக்க ஆயத்தமாக எமாற்றப்பட்ட தமிழர்கள் காத்திருக்கின்றனர்.

    இப்பொழுது நடைபெறும் “போர்”, தமிழர்களிடம் வசூலிக்கும் உரிமை பற்றியதெ ஒழிய வேறொன்றுமில்லை!

    Reply
  • thirumal
    thirumal

    அறிக்கை விடுவது சுலபம். இருந்தாலும் இப்படி ஒரு அறிக்கையை விடுவதற்கு ஒரு மனப்பக்குவம் தேவை. தோழர் டக்ளஸ் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு இன்னம் செய்யவேண்டியது தனது தவறுகளை பொத்தம் பொதுவாக வருந்திவிட்டுப் போகாது ஆகக்குறைந்து துன்பியல் சங்ம்பவங்கள் என்றாவது ஒத்துக்கொண்டு மன்னிப்புக்கோர வேண்டும்.
    தமிழ்த் தரப்பிலிருந்து இப்படி ஒரு அறிக்கை தன்னும் இதுவரையில் வரவில்லைஎன்பதை தீவிரவிமர்சகர்கள் கருத்தில்கொள்ளவேண்டும்.

    Reply
  • thurai
    thurai

    அஜீத், இலங்கையின் இனப்பிரச்சினைக்கும், நடந்த போரிற்கும் காரணம் தமிழரும், சிங்களவரும் தவறாக் சுயநலம் கருதும் அரசியல் வாதிகளால் வழிநடத்தப்பட்டதேயாகும். இதனை தமிழ் சிங்கள மக்கள் உணர்ந்து புரிந்துணர்வுடன் செய்ற்படுவதன் மூலமே அமைதியை இலங்கையில்
    கொண்டுவர முடியும். இதற்கு புலம்பெயர்தமிழர் இடையூறாக இல்லாமல் இருப்பதே முதற்கடமை.

    துரை

    Reply
  • மாயா
    மாயா

    அற்புதனைக் கொன்றது தாங்கள்தான் என ஏற்று இவர் மன்னிப்பு கேட்பாரா?

    Reply
  • palli
    palli

    //அற்புதனைக் கொன்றது தாங்கள்தான் என ஏற்று இவர் மன்னிப்பு கேட்பாரா?//
    மாயா இதை விபரமாக சொன்னால் நல்லது:
    தகவல் அல்லவா??

    Reply
  • BC
    BC

    இதை விபரமாக சொன்னால் நல்லது. பல்லி கேட்டதை தான் நானும் கேட்கிறேன். வேறு எவரோ சொன்னால் ஒன்றுமேயில்லை. ஆனால் மாயா சொன்னதால் அதை பற்றி அறிய வேண்டும்.

    Reply
  • nantha
    nantha

    புலிகளால் கொலை செய்யப்பட்டு குடும்பத் தலைவர்களை இழந்து அனாதைகளாகியுள்ள தமிழ் குடும்பஙளுக்கு இதுவரையில் எந்த விமோசனமும் கிடைக்கவில்லை. அவர்கள் அரச உதவிகளில்த்தான் காலத்தைக் கழிக்கிறார்கள்.

    இப்பொழுது புலிகளைக் கொன்றவர்கள் அல்லது எதிர்த்தவர்கள் யாரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று இங்கு பலர் குரல் எழுப்புகிறார்கள்?

    Reply
  • pandithar
    pandithar

    மாயா, பல்லி,
    அற்புதனை கொன்றது புலிகள் என்று பலருக்கும் தெரியும். அற்புதனின் சகாக்களும் அப்படித்தான் முன்பு நம்பி ஈ.பி.டி.பி யை விட்டு வெளியேறினர். பின்பு உண்மை தெரிந்ததும் ஈ.பி.டி.பி யுடன் இணைந்து இன்று யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். அற்புதனுக்கும் தோழருக்கும் இருந்த சாதாரண முரண்பாட்டை பயன்படுத்தி புலிகளே அற்புதனை கொன்றார்கள்.

    Reply
  • Ajith
    Ajith

    அஜீத், இலங்கையின் இனப்பிரச்சினைக்கும், நடந்த போரிற்கும் காரணம் தமிழரும், சிங்களவரும் தவறாக் சுயநலம் கருதும் அரசியல் வாதிகளால் வழிநடத்தப்பட்டதேயாகும். இதனை தமிழ் சிங்கள மக்கள் உணர்ந்து புரிந்துணர்வுடன் செய்ற்படுவதன் மூலமே அமைதியை இலங்கையில்
    கொண்டுவர முடியும். இதற்கு புலம்பெயர்தமிழர் இடையூறாக இல்லாமல் இருப்பதே முதற்கடமை. துரை
    Mr. Thurai,
    Unfortunately, still the same kind of politicians are guiding the people. For example, Rajapakse joined extremist Sinhala fundamentalist to take away the rights of tamils and denying the fact that tamils have the right of self determination. There is no Sinhala politician to guide the Sinhala people. Sinhala people are not prepared to accept that tamils right of self determination. If there should be a permanent peace both Sinhala and Tamils should recognise each others right of self determination. Tamils have accepted the Sinhala right of self determination and equality whereas Sinhala people are not prepared to accept tamils as a equal citizen of that nation.You are wrongly accuse diaspora tamils. The reason for tamils being became diaspora tamils because of the mistakes of Sinhala politics and violence against tamils. Sinhala people had the choice to select/elect their leadership but they failed to elect a true Sinhala politician. Just ask why Sinhala people failed to elect a leader from LSSP or CP. It is the decision of Sinhala people from either a United nation or unitary Sinhala dominant nation that will determine the peace.

    Reply
  • மாயா
    மாயா

    // அற்புதனுக்கும் தோழருக்கும் இருந்த சாதாரண முரண்பாட்டை பயன்படுத்தி புலிகளே அற்புதனை கொன்றார்கள். – pandithar//

    தோழர் என பாவித்த உங்கள்(pandithar) வார்த்தை, உங்களை EPDPயைச் சேர்ந்தவர் என்பதைக் காட்டி விட்டது. இனி என்ன? நீங்கள் சொல்வதை நாங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். இருந்தாலும் புலிகளுக்கு அப்போது தினமுரசு ஆசிரியர் அற்புதனைக் கொல்ல வேண்டி இருக்கவில்லை. கொஞ்சம் காலம் போய் அதைச் செய்திருப்பார்கள். அற்புதன் கொல்லப்படும் போது புலிகள் சார்ந்த கருத்துகள் தினமுரசில் வெளியாகிக் கொண்டிருந்தன. புலிகளால் தடை செய்யப்பட்ட தினமுரசை புலிகளே தேடிப் படித்ததற்கு காரணம் , அற்புதனின் அற்புதமான எழுத்துக்களே. ஒரு நல்ல பத்திரிகை ஆசிரியர், உண்மைகளை எழுதிய ஊடகவியளாளன் அற்புதன். அவரது நினைவு தினங்கள் ஈபீடீபியினரால் சில காலம் வரை முறையாக அனுட்டிக்கப்படவில்லை? ஏன்? நாங்கள் மறக்கவில்லை? யாருக்காவது நினைவுக்கு வருகிறதா? ஆனால்….. உண்மைகள் என்றோ ஒரு நாள் வெளியாகியே தீரும்?

    Reply
  • பல்லி
    பல்லி

    //உண்மைகள் என்றோ ஒரு நாள் வெளியாகியே தீரும்?//
    இன்னும் வரும்::

    Reply
  • மாயா
    மாயா

    // Mr. Thurai,
    Unfortunately, still the same kind of politicians are guiding the people. For example, Rajapakse joined extremist Sinhala fundamentalist to take away the rights of tamils and denying the fact that tamils have the right of self determination. There is no Sinhala politician to guide the Sinhala people. Sinhala people are not prepared to accept that tamils right of self determination. If there should be a permanent peace both Sinhala and Tamils should recognise each others right of self determination. Tamils have accepted the Sinhala right of self determination and equality whereas Sinhala people are not prepared to accept tamils as a equal citizen of that nation.You are wrongly accuse diaspora tamils. The reason for tamils being became diaspora tamils because of the mistakes of Sinhala politics and violence against tamils. Sinhala people had the choice to select/elect their leadership but they failed to elect a true Sinhala politician. Just ask why Sinhala people failed to elect a leader from LSSP or CP. It is the decision of Sinhala people from either a United nation or unitary Sinhala dominant nation that will determine the peace.//

    தமிழர்களைப் போல் இனவாதிகள் இருக்கும் போது, சிங்களவர்கள் போன்ற இனவாதிகளும் இருந்தே ஆவார்கள். எனவேதான் உங்களைப் போன்றவர்களை , அதாவது ஆங்கில வல்லுனர்கள் சொல்வதை புரிந்து கொள்ள , ராசபக்சவால் , ஆங்கில கல்வி முறை விரைவில் அமுலுக்கு வர இருக்கிறது. இதில் என்ன நன்மை தெரியுமா? சிங்களவன் விரும்பாவிட்டால் , தமிழ் படிக்கவும் தேவையில்லை. தமிழன் விரும்பாவிட்டால் சிங்களம் படிக்கவும் தேவையில்லை. இருவரும் பொது மொழியாக ஆங்கிலத்தை கற்கலாம். அடுத்து என்ன? சிங்களவனுக்கும் தமிழனுக்கும் உரையாட ஒரு பொது மொழியுண்டு. அதனால் அரசியல்வாதிகளது கோசங்கள் மறையும். உலகத்தோடு நாளைய சமுதாயம் பயணிக்கவும் வாய்ப்பு உருவாகும். அரசியல் புளுகர்களது பருப்பு எதிர்காலத்தில் வேகாது. இந்த மாற்றங்களுக்காகவேனும் மகிந்த இன்னும் 10 வருடம் அதிபராக (ஏகாதிபதியாக) இலங்கையை ஆளுதல் வேண்டும். சிங்கை அதிபர் லீக்குவான்யு ஆண்டதும் இப்படித்தான். எதிர்த்தவன் ஆதவனையே பார்த்ததில்லை. ராசரத்தினத்தை தவிர?……. பிரபாவும் இதையேதான் செய்தான். வன்னி கடும் சிறை அடிமை வாழ்வை விட , மகிந்தவின் 18 ஆவது அரசியல்யாப்பு திருத்தம் தமிழருக்கு தீங்கு விளைவிக்காது. 5 வருட யுத்தம்: 5 வருட அரசியல் போராட்ம் ; இனி வருவது மாபெரும் மாற்றமாக இருக்கும்.

    மகிந்த ஆட்சியில் செத்து மடிவர் எனச் சொன்ன தமிழர் சிரித்து மகிழ்கின்றனர். எதிர்காலத்தில் வன்னியும் வளம் கொழிக்கும் நிலமாக மாறும். சந்திரிகா ஆட்சியில், அவர் செய்தது குடித்ததும், கூத்தாடினதும்தான். மகிந்த ஆட்சியில் ஏகப்பட்ட மாற்றங்கள். நட்டவன் அறுவடை செய்வதில்லை. அடுத்த சந்ததி மகிழ்வாக வாழும். பண்டாவும் , JRம் , பிரபாவும் தந்த வடுக்கள் உடன் மாறாது. அதற்கு காலம் எடுக்கும் .

    Reply
  • BC
    BC

    பண்டிதர்,தகவலுக்கு நன்றி.

    Reply
  • vijayan
    vijayan

    தோழர் டக்ளஸ் அவர்களின் கொலைக்குழு (புலிகள் பாணியிலான பிஸ்டல் குழு) ஊர்காவற்துறைப் பகுதியிலும் மற்றும் வடமராட்சி யாழ்மாவட்ட ஏனைய பகுதிகளிலும் தங்களுக்கு வேண்டாத நபர்களை(மக்களை) புலிகள் என்று குற்றம் சாட்டி அதிகளவில் புலிகளின் வன்னியாட்சிக் காலங்களில் கொலை செய்தனர். நிச்சயம் இதற்காக பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும்.

    Reply
  • pandithar
    pandithar

    அன்புடன் மாயா!….
    நான் தோழர் என்று எழுதியமைக்காக என்னை ஈ.பி.டி.பி என்று விட்டீர்கள். டக்ளஸ் தேவானந்தாவை தோழர் என்று எழுதும் எல்லாரையும் அப்படித்தான் கணிப்பீர்களா?… பரவாயில்லை நான் அதை துடக்கென்று கருதவுலம் இல்லை. வெட்டக்கப்படவும் இல்லை. அது இருக்கட்டும்.

    தினமுரசு பத்திரிகையை புலிகள் பல முனைகளில் வீழ்த்தி வட முயன்று இறுதியில் சுவிஸிலும்> பிரான்சிலும் மூர்க்கத்தனமான முறையில் தடை செய்திருந்தார்கள். இது அற்புதன் கொல்லப்படுவதற்கு முன்னர் நடந்தது. இந்த தடைக்கு காரணம் சொன்ன புலிகள்
    ‘தலைவர் பிரபாகரன் அவர்கள் தமக்கு எதிராக எழுதுபவர்கள் குறித்து தமக்கு அக்கறை இல்லை என்றும் யார் ஆதரவாக எழுகின்றார்களோ அவர்கள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் புதிய ஒரு கோட்பாட்டை ஆதாரம் காட்டி தினமுரசு கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சை ஊட்டுகின்றது என்று தமது தடைக்கு காரணம் கற்பித்திருந்தார்கள்.’

    அற்புதன் கொல்லப்படுவதற்கு முன்னதாக இந்த பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவரான வானொலி மாமா பத்மநாதன் ஐயா அவர்களது குடும்பம் தமிழ் நாட்டிற்கு வந்திருந்தார்கள். வந்ததற்கான காரணத்தை தேடிய போது தினமுரசு ஆசிரியர்களில் ஒருவர் என்பதால் மட்டக்களப்பில் வாழ்ந்திருந்த அவர்களது குடும்மபத்தவர்களிடம் சென்ற புலிகள் பத்மநாதன் ஐயாவை விசாரணைக்கு வருமாறு மிரட்டியதாகவும்> இதனால் அந்த குடும்பம் தமிழ் நாட்டீற்கு தாம் தப்பியோடி வந்ததாகவும் தெரிவித்தனர். இது எதை காட்டுகின்றது.

    இது தவிர அற்புதன் கொல்லப்பட்ட போது புலிகளின் குரல் வானொலி துரோகி அற்புதன் கொல்லப்பட்டு விட்டதாக பரப்புரை செய்திருந்தது./ மக்கள் குரல் வானொலியின் ஊடாக புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை வாங்கு வாங்கென்று அற்புதன் அம்பலப்படுத்திய வரலாற்றை பிரபாகரன் மறந்து போய்விடவில்லை என்று புலிகள் கூறித்திரிந்ததும் எனக்கு ஞாபகம். அது தவிர நான் எதோ ஒரு காலத்தில் டக்ளஸையும் தலைவராக கொண்ட ஒரு அமைப்பில் அங்கம் வகித்த குடும்பம் சார்ந்தவன் அவர்கள் இந்த வழிமுறையை விரும்புபவர்கள் அல்ல. டகளஸ் தேவானந்தா குறித்து எனக்கும் விமர்சனங்கள் உண்டு. அதற்காக இதை என்னால் ஏற்க முடியாது. உண்மைகள் இன்னும் வெளிவரும்.

    Reply
  • மாயா
    மாயா

    சென்னையில் அசோக் நகரில் (இவர் போலீசாரால் அப்போது கைதானார்) கள்ளியம்காடு Jayam மகனான பச்சிளம் பாலகனை, பணம் பறிக்க கடத்தியதற்காக இவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். கேட்பாரா?
    சென்னை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு இவர் பொறுப்பல்ல. எனவே அது இவரது தவறல்ல? இவர் அந்த முகாமுக்கு பொறுப்பாக இருந்தார்.

    அடுத்து, இனவாதத்தை பெரிதாக ஊதி இளைஞர்களை தவறான வழிக்கு இட்டுச் சென்றதற்காக அனைத்து (இறந்தவர்களைத் தவிர ), உயிரோடு இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் மன்னிப்புக் கேட்க வேண்டும்?
    அடுத்து சிங்கள இனவாதிகளும்?

    Reply
  • மாயா
    மாயா

    // பத்மநாதன் ஐயா அவர்களது குடும்பம் தமிழ் நாட்டிற்கு வந்திருந்தார்கள். //

    பத்மநாதன் ஐயா இப்போது எங்கே?

    pandithar , அற்புதன் அரசியலுக்கு புக வேண்டும் எனும் கருத்து அப்போதைய சிங்கள அரசியல்வாதிகளிடமே இருந்தது. டக்ளசை விட , பேச்சு மற்றும் எழுத்து ஆற்றல் மிக்கவராக அற்புதன் இருந்தார். அதற்கான வழிகளும் ஆராயப்பட்டு, அரசியல் களத்தில் இறங்க இருந்த நேரத்திலேயே அற்புதன் கொல்லப்பட்டார். ஈபீடீபியால் , அவருக்கான பாதுகாப்பும் அப்போது குறைக்கப்பட்டிருந்தது. அற்புதனின் கொலைக்குப் பின்னர் , டக்ளசை விட்டு வெளியேறியவர்கள் தேர்தலில் நின்று மீண்டும், டக்ளசோடு இணைத்திருக்கலாம். அவர்களுக்கு வேறு வழி? இவரை விட்டால் புலிகளிடமோ அல்லது அரசோடோதான் சேர வேண்டும். புலிகளோடு சேர்வது தன் தலையிலேயே தீ வைத்துக் கொள்வதற்கு சமம். அரசு ஏற்கும் விதத்தில் இவர்கள் முக்கியமானவர்கள் இல்லை. அற்புதன் இருந்திருந்தால் , டக்ளசை விட அவரே இன்று முதன்மையானவராக இருந்திருப்பார்? இன்றைய நிலையில் டக்ளசின் நிலைப்பாடு சமயோசிதமானது. கடைசி வரை தம்மை தக்க வைத்துக் கொள்வார். மகிந்த தோற்று ரணில் வந்தால் அவரோடு இவர் இணைவார். இதில் எந்த ஐயமும் இல்லை. சுயநல தமிழ் அரசியல்வாதிகளை மகிந்த தனக்காக பாவிக்கிறார். இதை நாம் மறக்கலாகாது. பிரபாகரன் சொன்னது போல , “மகிந்த யதார்த்தவாதிதான்”.

    Reply
  • thurai
    thurai

    அன்பின் அஜீத், புலம்பெயர் வாழ்தமிழர்கள் என்றால் எல்லோரும் தமிழுணர்வும், மனிதநேயமும் கொண்டவர்களா? அப்படி இருப்பதாக கூறி நடப்பவர்களெல்லாம் பணம் தேடுவதையும் தற்புகழ்ச்சியையுமே விரும்புகின்றார்கள். இதுவே 30 வருடமாக புலம்பெயர் நாடுகளில் நடக்கின்றது.

    அதோடு இலங்கையில் வாழும் தமிழர்களிற்கு சிங்களவருடனான அமைதியான வாழ்வே அவசியம். தமிழ் பிரதேசங்கள் காக்கப்பட வேண்டுமானால் தமிழர்கள் அங்கு குடியேற வேண்டும். உலகமுழுவதும் குடியேறிவாழ்ந்து கொண்டு சிங்களவனையும் குடியேறவிடாமல் தடுப்பது எவ்வகையானது.

    தமிழ் மொழிக்கு உரிமை வேண்டும், தமிழர் ஆட்சி செய்ய தமிழர் பிரதேசம் வேண்டும் என்று குரல் கொடுக்கும் உங்களைப் போன்றவர்களிடம் ஓர் கேள்வி. நீங்கள் எப்போதாவது தமிழரிடமுள்ள சாதி பாகுபாடு, சமூக ஏற்றத்தாழ்வுகள் நீங்கி தமிழர் சம உரிமையுடனும் தமிழரைத் தமிழர் மதிப்புக் கொடுத்தும் வாழ்வதற்கான வழிகளைப் பற்றி சிந்தித்து செயற்பட்டீர்களா?

    புலிகளை வன்னியில் காப்பாற்ரி உலகமுழுவதும் தமிழரை மிரட்டி கொள்ளையடிப்பதே பல புலிகளின் நோக்கமாகவிருந்தது. இது முடியாமல் போய்விட்டது. கொள்ளையடித்த புலத்துப் புலிகள் மெல்ல மெல்ல கூண்டுக்குள் போய்க் கொண்டிருகின்றார்கள். பண்த்துடன் சிலர் இலங்கையில்
    முதலீட்டாளர்கள். சிலர் புலம்பெயர் நாடுகளில் செல்வந்தார்கள். இதனை மறைப்பதற்கே இலங்கை அரசிற்கெதிரான குற்றச்சாட்டுக்கள். இதற்கு அரசுநஸ்ட ஈடு கொடுக்குமென்றால் புலிகளே அதற்கும் உரிமை கோருவார்கள்.- துரை

    Reply
  • nantha
    nantha

    கள்ளியங்காடு ஜெயம் என்பவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது புரியவில்லை. ஏனென்றால் இந்த “ஜெயம்” ஆட்கடத்தல், தூள் கடத்தல் மன்னன். அது மாத்திரமல்ல வெளினாட்டுக்கு அனுப்புகிறேன் என்று லட்சங்கள் வரையில் தமிழர்களிடம் மோசடி செய்தநபர்.

    ஜேர்மனிக்கு அனுப்பிய பெண்ணின் பையில் அவளுக்குத் தெரியாமல் “தூள்” சரைகளை கட்டி அனுப்பி அந்தப்பெண் அகப்பட்டுத் தூக்கு மாட்டித் தற்கொலை செய்த விபரம் மாயாவுக்கு தெரியாதோ?

    பின்னர் இதேநபர் இலங்கையிலிருந்து கூட்டிக் கொண்டு வந்த பெண்களிடம் தினமூம் சல்லாபம் செய்ததும் சில இந்திய காடைகளுக்கு அந்த தமிழ் இளம் பெண்களை கொடுத்து சேவை செய்ததும் பரகசியமான விடயம்.

    தனக்கிருந்த பணபலத்தினை வைத்து தமிழ்நாட்டில் பொலிஸ் கும்பல்களுக்கு கைகூலி கொடுத்து கொடுத்த காசைக் கேட்ட பல தமிழர்களை சிறையில் இட்டு வெறுங்கையோடு துரத்திய இந்த ஜெயம் என்றவரிடம் டக்ளஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது புதிரான கோரிக்கையாகவுள்ளது.

    இவ்வாறு பாதிக்கப்பட்ட பல தமிழர்களின் முறைப்பாடுகளே அந்தக் கடத்தலுக்கு மூல காரணம் என்பதனை மாயா தெரிந்து கொள்வது நல்லது.

    கோடிக்கணக்கில் மோசடி செய்த ஜெயத்துக்கு டெலொ, புளட், புலி ஆகிய இயக்கங்கள் பாதுகாப்புக் கொடுத்தன. ஏனென்றால் சுருட்டிய பணத்தில் இயக்கங்களுக்கும் பங்கு கிடைத்தது.

    Reply
  • Ajith
    Ajith

    Mr Maya, This is what you said.
    தமிழர்களைப் போல் இனவாதிகள் இருக்கும் போது, சிங்களவர்கள் போன்ற இனவாதிகளும் இருந்தே ஆவார்கள்.

    What you are saying is tamils are racists, So you would expact Sinhala racist as well. In otherwords Sinhalese were not racists. They became racists because tamils are racists. Sinhala only is a product from SWRD to convince Sinhala racists. Sinhala politicians had the power and they were ruling the country since Independence from British, not the tamils. English was the language of education before Sinhala only.Rajapkase was part of that government. I had my education in schools and University in tamil. The problem is not the communication. Most of the tamils including you and me can communicate well with Sinhala only speaking people. It is Rajapakse like racist leaders poisend Sinhala masses. It is sad that you put Rajapakse under non politician. He is the real politician who destroyed whole democratic principles and human values by purchsing politicians and murdering journalists and politicians who do not agree with him.

    Mr Thurai,
    தமிழ் மொழிக்கு உரிமை வேண்டும், தமிழர் ஆட்சி செய்ய தமிழர் பிரதேசம் வேண்டும் என்று குரல் கொடுக்கும் உங்களைப் போன்றவர்களிடம் ஓர் கேள்வி. நீங்கள் எப்போதாவது தமிழரிடமுள்ள சாதி பாகுபாடு, சமூக ஏற்றத்தாழ்வுகள் நீங்கி தமிழர் சம உரிமையுடனும் தமிழரைத் தமிழர் மதிப்புக் கொடுத்தும் வாழ்வதற்கான வழிகளைப் பற்றி சிந்தித்து செயற்பட்டீர்களா?

    You asked above question. You must understand that I am not a high caste person. I don’t beleive in the caste system. I am one of the person affected by the caste system, standardisation of education, Sinhala military and Sinhala rule. The caste system is a hindu & buddhist tradition has a history of more than 2000 years originated from India. It is people like you continue to use this as means of politics to justify Sinhala racist oppression. If you look at those who used the caste as means to collect votes from people never in their personal life had a meal with the low caste people or get married a low caste woman. You are contradicting yourself in several occasions.
    Statement 1
    “புலிகளை வன்னியில் காப்பாற்ரி உலகமுழுவதும் தமிழரை மிரட்டி கொள்ளையடிப்பதே பல புலிகளின் நோக்கமாகவிருந்தது”
    Statement 2
    “புலம்பெயர் நாடுகளில் புலிகளின் பெயரால் மக்ளை மிரட்டியவர்க்ழும் பணம் பறித்தவர்கழும் யாரென எல்லோரிற்கும் தெரியும்.

    புலிகளை குற்றவாளியாக்குவதன் மூலம் தமிழர்களிற்காக உயிர்கொடுத்த போராளிகளை கேவலப்படுத்த முடியாது. பின்னணியில் இருந்து சுயநலமடைவோரும், தவறாக வழிகாட்டியோருமே குற்றவாளிகள்.”

    Reply
  • மணித்துரை
    மணித்துரை

    தினமுரசு அற்புதன் மட்டுமா?
    தினமுரசு அற்புதன் உயிருடன் இருந்திருந்தால் இன்றைய இவரின் ஆட்டங்கள் அரங்கேறியிருக்குமா?
    சுவிஸ் இற்கு போக இருந்த பாலநடராஜா ஐயருக்கு என்ன நடந்தது. தனது இரகசியங்கள் வெளியே தெரிந்து விடும் என்று யார் கொலை செய்தது?
    தோழர் நிரூபிபிப்பாரா?

    Reply
  • pandithar
    pandithar

    மாயா!… நல்லதொரு கற்பனை கதையை அவிட்டு விட்டிருக்கிறீர்கள். முடிந்ததால் அற்புதன் இறுதி நாட்களில் வெளியிட்டிருந்த தினமுரசு பிரதிகளை எடுத்து பாருங்கள் உண்மை புரியம்.

    அது தவிர> அற்புதன் ஆற்றல் உள்ளவர் என்பது உண்மைதான். பேச்சாற்றல் உள்ளவர்கள் எல்லோரும் கட்சிக்கு தலைமை தாங்க முடியாது. ஆனாலும் அற்புதனால் முடியும் என்பது பலருக்கும் தெரியும்.

    அற்புதன் டகளஸ் தேவானந்தா மீது மிகவும் தோழமை விசுவாசம் கொண்டவர் என்பது பலருக்கும் தெரியும். அற்புதன் புதிய கட்சி ஆரம்பிக் இருந்தாரா என்று அவரது சாகக்களிடம் ஒரு முறை கேட்டு பாருங்கள்.

    லலித் அத்துலத் முதலி> கொப்பேகடுவ> குமார் பொன்னம்பலம்> சின்னபாலா போன்றவர்களையும் ஈ.பி.டி.பி தான் கொன்றார்கள். இப்படியும் நம்பக்கூடிய வகையில் சொன்னார்கள். இப்போது உண்மை வெளிவந்து விட்டது.

    புலிகளின் மகளிர் அணி பொறுப்பாளர் தமிழினி புலிகளின் படுகொலை குறித்து திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகிறாராம். அற்புதனை டக்ளஸ்தான் கொன்றார் என்றால் நான் விரும்பும் அற்புதமான ஆற்றல் படைத்த அற்புதனை கொன்ற டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அரசியலை முழுமையாக நிராரித்து கருத்து கூறவும் நான் தயார்.

    Reply
  • palli
    palli

    // ஜெயத்துக்கு டெலொ, புளட், புலி ஆகிய இயக்கங்கள் பாதுகாப்புக் கொடுத்தன. //
    அதே ஜெயத்தின் இறுதி காலம் தெரியுமா?? வேண்டுமாயின் அவர் இன்று கனடாவில் ரக்ஸ்சி ஓட்டுகிறார் கேட்டுபார்க்கலாம்; அவரும் ஒரு முள்ளிவாய்க்காலை இந்தியாவில் சந்தித்தார் என்பது தெரியும்; அவரது குடும்பம் சின்னாபின்னமாக தமிழகத்தை விட்டு வெளியேற நேர்ந்ததும் சொல்லுவார், ஆடியவர்கள் யாராயினும் தப்பவே முடியாது; இந்த விடயத்தில் நந்தா சொல்லுபவை உன்மைதான்,

    Reply
  • ஜெயராஜ்
    ஜெயராஜ்

    மாயா,
    அற்புதன் பற்றிக் கேட்டால் கல்வியங்காடு ஜெயத்திட்டை போகக்கூடாது. இனி கல்வியங்காடு ஜெயம் பற்றிக் கேட்டால் வேறொருவரைப் பற்றி…….. இப்படியே ஆதாரம் இல்லாமல் எழுந்தமான முடிவுகளுக்கு வரக்கூடாது. இதுவரை நடந்த தவறுகளுக்கு தானும் பொறுப்பு என்று சொல்லியதை வேறு எப்படி விதமாக சொல்லவேண்டுமென்று விரும்புகிறீர்கள். சத்தியராஜ், கவுண்டர் பாணியில் வீட்டிலை இருக்கிற குஞ்சு, குருமான், அம்மா, ஜயா, மாமா, மாமி எல்லாரும் ஒருக்கா வெளியில வாங்கோ நாங்கள் விழுந்து கும்பிட வந்திருக்கிறம் என்றுதான் சொல்ல வேண்டுமா… அன்று நடந்த படுகொலைகள்பற்றி யார் யாரைப் போட்டாங்கள் என்று எவருக்கும் தெரியாது. பலது வெளிச்சத்துக்கு வந்த உண்மைகள். இதில் எதிரும் புதிருமான கருத்துக்கள் உண்டு

    Reply
  • மாயா
    மாயா

    // கள்ளியங்காடு ஜெயம் என்பவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது புரியவில்லை. ஏனென்றால் இந்த “ஜெயம்” ஆட்கடத்தல், தூள் கடத்தல் மன்னன். அது மாத்திரமல்ல வெளினாட்டுக்கு அனுப்புகிறேன் என்று லட்சங்கள் வரையில் தமிழர்களிடம் மோசடி செய்தநபர்.//

    இவர் செய்த செயல் மோசமானதாக இருந்தால் , கள்ளியங்காடு ஜெயத்தைத்தான் தண்டித்திருக்க வேண்டும். அது நியாயம். அதற்காக ஒரு பச்சிளம் பாலகனைக் கடத்தி, சில லட்சங்களை பெற முயன்று அசோக்நகர் தொலைபேசி கெபினில் வைத்து சென்னை போலீசாரால் பிடிபட்டது சரியாகப்படவில்லை? இதை ஜெயத்துக்கான தண்டனையாகவா கருதுகிறீர்கள்?
    …………

    அவர் கனடாவில் டாக்சி ஓட்டலாம்? ஆனால் வாளெடுத்தவன் வாளால் சாவான் என்பது போல , எவர் என்ன செய்தாலும் அவனுக்கு தண்டனை இவ்வுலகில் நிச்சயம் உண்டு. இதில் நம்பிக்கை உடையவன். அதை நாம் கண்ணால் கண்டே வருகிறோம். காண்போம். பல இயக்கங்கள் செய்த பல கொலைகள் , அரசு உட்பட புலிகள் பெயரிலேயே நடத்தின என்பது மறைமுக விடயமும் அல்ல? இதுவே யதார்த்தம், உண்மை. புலிகளும் கொலைகள் செய்தனர். புலிகள் பெயரில் சிலரும் கொலைகளை செய்தனர். அதில் அற்புதனது கொலையும் ஒன்று.

    Reply
  • nantha
    nantha

    டக்ளஸ் கடத்தல் செய்தது ஏன் என்றும், ஜெயத்தின் கொள்ளையடிப்பும் போக்கிரித்தனங்களும் அதற்குக் காரணம் என்பதனை மாயா மறந்து விட்டது ஏனோ?

    ஜெயத்தினால் லட்சக் கணக்கில் பணம், மானம் என்பவற்றை இழந்தவர்களுக்கு என்ன பரிகாரம் மாயா? டக்ளஸ் செய்தது அப்படியான சில தமிழர்களின் அவலத்தை நீக்கவே தவிர அந்த குழந்தையைக் கொல்ல அல்ல என்பதைப் புரிந்து கொண்டால் சரி!

    ஆனால் அவரிடம் டக்ளஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது மிகவும் கண்டனத்துக்குரியது! ஜெயம் என்றவரை டக்ளஸை விட உயர்வான ஆத்மா என்று மாயா கருதுகிறார்!

    Reply
  • Kanthan
    Kanthan

    Dear Sothi, Your Comments on September 4, 2010 4:35 pm
    “ஒரு சரியான வரலாற்றுப் பாடத்தை இங்கே தோழர் வைத்துள்ளார் …….”

    Sothi, Jeyapalan and others (including LTTE proxies) in abroad, first of all you should bear in your mind that all of you are away from the reality. Sothi, the statement is something like LTTE’s statement, as THALAIVAR would show the path for our freedom.

    Sothi, do you believe these criminals (Doglus)would do something for us. Prabaharan had some genuine objectives, but Doglus ….

    “உண்மைகளை மிக தெளிவாக எடுத்து விளாசியிருக்கிறார் ஈ.பி.டி.பி தலைவர். இது ஒரு வாரலாற்று ஆவணமாக பாதுகாக்கப்ப வேண்டும். காரணம் மிக அனுபவம் வாய்ந்த ஒரு தலைவரது உரை. …”
    Also, we should keep the records of his (Doglus) anti social activities, such as killing innocent civilians and so on. Those are the important documents also.
    Yes, he is expert in cheating the whole society. they are trying to hide behind the so called “DEMOCRACY”.

    Reply
  • மாயா
    மாயா

    // nantha on September 9, 2010 10:43 pm
    டக்ளஸ் கடத்தல் செய்தது ஏன் என்றும், ஜெயத்தின் கொள்ளையடிப்பும் போக்கிரித்தனங்களும் அதற்குக் காரணம் என்பதனை மாயா மறந்து விட்டது ஏனோ?//

    சூலைமேடு துப்பாக்கி சம்பவத்துக்குப் பின், ஈபீஆர்எல்எப்பால் டக்ளஸ் ஒழுக்காற்று ரீதியாக நீக்கப்பட்டார். அதனால் அவர் கையில் பணம் இருக்கவில்லை. கேகே நகரில் இருந்த டக்ளஸ் , அப்போது பணம் இருந்த கடவுச் சீட்டு , ஆள் கடத்தல் என காசு சம்பாதித்த ஜெயத்தின் மகனைக் கடத்தி காசுதான் கேட்டாரே தவிர , அவர் ஜெயத்தைக் கடத்தி தண்டனை கொடுக்கவில்லை. ஜெயத்துக்கு அவர் செய்த குற்றத்துக்கு என்ன தண்டனை கொடுத்தார்? யாழில் நடந்த பணம் தொடர்பான கடத்தல்களும் ஏதோ ஒருவித தண்டனைகளா?

    Reply
  • pandithar
    pandithar

    டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சொன்னது போல் சிங்கள மக்களிடம் தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினை குறித்து ஒரு புரிதலை தெளிவாக ஏற்படுத்த வேண்டும். இது கடந்த காலங்களில் பெருத்த ஒரு இடைவெளியாக காணப்பட்டதால்தான் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாமல் போயிருந்தது. பாலஸ்தீனர்களுக்காக பத்தாயிரம் இஸ்ரேலிய மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்திய வரலாறு நினைவுக்கு வருகின்றது. இது போல் எமது போராட்ட வரலாற்றில் நடந்திருக்கவில்லை. பேரினவாத அரசுகள் செய்த தவறுக்காக நாம் என்ன செய்திருக்கின்றோம்?… சிங்களவனின் தோலை கிழித்து நாங்கள் செருப்பு போடுவோம் என்று மேடை முழக்கம் செய்ததுதான் மிச்சம். அப்பாவி சிங்கள மக்களை கொன்று குவித்ததுதான் மிச்சம். பேரினவாதத்திற்கு எதிராக ஒரு குறுந்தேசிய வெறியையே வளர்த்திருந்தோம். பழைய இடதுசாரி தலைவர்களை தமிழ் மக்கள் ஏற்றிருந்தால் இந்த பிரச்சினை எப்போதோ முடிந்திருக்கும்.

    அன்று பொன் கந்தையா போன்றோர் சிந்தித்த சில விடயங்களை இன்று டக்ளஸ் தோவானந்தா அவர்கள் சிந்திப்பது நல்ல விடயம். டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு சிங்கள மக்களை அணுகுவதற்கு நல்ல வாய்ப்பு உண்டு. டக்ளஸின் தந்தை திரு கதிரவேல் அவர்கள் இலங்கையில் ஆரம்பகால கம்யூனிஸ் கட்சி முக்கியஸ்தர். கம்யூனிஸ் கட்சி முதன் முதலில் வெளியிட்ட சிவப்பு நாடா என்ற பத்திரிகைக்கு பொறுப்பாக இருந்தவர். பெரிய தந்தை கே.சி நித்தியானந்தா அவர்கள் சிங்கள மக்களாலும் அறியப்பட்ட ஒரு தொழிற்சங்க வாதி. அதே வேளை தமிழர் புனர்வாழ்வு கழகத்தை ஆரம்பித்து வைத்து தமிழ் மக்களுக்கு முதன் முதலில் அரசியல் சாரா பொது நிறுவன சேவைய தொடக்கி வைத்தவர். இந்த வரலாற்று பின்னணியோடு சம்பந்தமானவர்களின் கோட்பாடுகளை டகளஸ் தேவானந்தா அவர்களும் முழுமையாக ஏற்றுக்கொள்வதில் தடையில்லை. தமிழ் மக்களில் அரசியலரிமை பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண விரும்புபவர்கள் கட்சி> இனம்> மதம் என்ற எல்லை கடந்து சிந்திக்க வேண்டும். உழுத்துப்போன பாரம்பரிய தமிழ் தலைமைகளின் குணடுச்சட்டிக்குள் குதிரை ஓட முற்றபட முடியாது. அனைவரும் சேர்ந்து டக்ளஸ் தேவானந்தா அவரகளின் வழிமுறையை சில விமர்சனங்களோடு ஆதரிப்போம்.

    Reply
  • pandithar
    pandithar

    திருவாளர் காந்தன் அவர்களே!…
    தமிழ் மக்கள் மீது அக்கறைப்படும் நீங்கள் முதலில் தமிழில் எழுதப்பழக வேண்டும். மக்களின் கருத்துக்கள் அறிய வேண்டும் என்றால் தமிழ் தெரிய வேண்டும்.

    டக்ளஸ் குற்றவாளி> சமூகவிரோதி என்றால் டக்ளஸ் தேவானந்தாவை ஏன் தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டும். கடந்த தேர்தலில் தமிழ் தலைவர்களில் அதிக விருப்பு வாக்கு பெற்றவர் அவர்.

    விருப்பு வாக்களித்த முப்பதினாயிரம் மக்களும் சமூகவிரோதிகளா?……

    Reply
  • BC
    BC

    //சோதிலிங்கம்- ஒரு சரியான வரலாற்றுப் பாடத்தை இங்கே தோழர் வைத்துள்ளார்//
    சோதிலிங்கம் கூறியது சரி. உண்மையை சொன்னால் பொறுக்காதே! புலி தலைவர் மக்களை கொன்று மக்களுக்கு பாடம் படிப்பித்தவர்.
    பிரபாகரன் உரை என்ற வருடாவருடம் நடக்கும் ஒரு நகச்சுவை கூத்தை பார்த்து ரசித்ததால் வந்த வினை. தமிழ் எழுத தெரியாதவர், பிரபாகரனை தலைவராக ஏற்றவர்கள் அப்பாவி தமிழ் மக்கள், கொலைகள் என்று எல்லாம் சொல்வது மிகவும் வினோதமான செயல்.

    Reply
  • Kanthan
    Kanthan

    Dear pandithar, Your comment on September 10, 2010 8:51 am
    “டக்ளஸ் குற்றவாளி> சமூகவிரோதி என்றால் டக்ளஸ் தேவானந்தாவை ஏன் தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டும். கடந்த தேர்தலில் தமிழ் தலைவர்களில் அதிக விருப்பு வாக்கு பெற்றவர் அவர்.”

    It is clear from the fact (beyond any doubt not in Sri Lanka but also in India) that Dogulus is a criminal in all norms and as I said earlier these criminals are trying hide behind the so called Democracy. Before counting ballet papers we should count or estimate the election fraud. Especially the countries like Sri Lanka.

    Reply
  • thurai
    thurai

    திரு.அஜீத்,
    சாதி, சமூக ஏற்ரத்தாழ்வுகள் தமிழரிடமுள்ளபோது, ஓர் பெரும்பான்மை இனத்தை எதிர்க்கும் சக்தி ஒரு போதும் ஈழத்தமிழர்களிற்கு கிடையாது. அது மட்டுமல்ல விடுதலை என்னும் சொல்லை உச்சரிக்க கூட எங்களிற்கு அருகதையில்லை. சிங்கள அரசுடன் சேர்ந்து காலத்துக்குக் காலம் தமிழரை ஏமாற்ரி தங்களின் குடும்ப சுகபோகங்களை அனுபவித்தவர்கள் யார்? விடுதலைப்போர் என்று 30 வருடமாக புலத்துத் தமிழர்களை ஏமாற்ரியது யார்?
    யாரவது ஒரு சிங்களவர் தமிழரிடம், வாக்குகளைப் பெற்ரோ, அல்லது பணத்தினைப் பெற்ரோ ஏமாற்ரியுள்ளார்களா?

    தமிழரசுகட்சி, தமிழர் கூட்டணி, தமிழீழ விடுதலைப் புலிகள். எல்லாம் தமிழரை உசுப்பேத்தி சுயநலமடைந்த அமைப்புக்களேயாகும்.

    முதலில் தமிழர் தமிழரை ஏமாற்ருவதில் இருந்து ஈழத்தமிழரை நாம் எல்லோரும் காப்பாற்ரவேண்டும். அதன் பின்பே சிங்களவர் எமக்கு எதிராக என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்ரி பேசவேண்டும். எங்களை நாங்கள் திருத்தாதவரை சிங்களவரை எதிரியாக்குவது தமிழர்களையே மேலும் பாதிக்கும்.– துரை

    Reply
  • pandithar
    pandithar

    காந்தன்…
    தயவு செய்து மன்னிக்கவும். எனக்கு ஆங்கிலத்தில் முழுமையாக வாசித்து விளங்க முடியாது. தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினையின் ஆரம்பம் மொழியுரிமை பிரச்சினை. சுத்தமான தமிழில் இடடப்பட்டிருக்கும் பதிவுக்கு நீங்கள் ஆங்கிலத்தில் பின்னூட்டம் எழுதுவது யாருக்காக. யார் இதை வாசிக்க வேண்டும் என்று எழுதுகின்றீர்கள். தயவு செய்து தமிழில் எழுதுங்கள்.தமிழே தெரியாத நீங்கள்> தமிழையே மறந்த நீங்கள் எப்படி தமிழ் மக்கள் மீதான பற்றதலை கொண்டிருக்க முடியும்?…

    தமிழை உங்களால் வாசிக்க முடியும் என்றால் தமிழை ஏன் எழுத முடியாது?…

    உங்களது பார்வைக்கு டகளஸ் கிறிமினலாக தெரிவதற்கு பல காரணங்கள் உண்டு. அதை நான் கிளற விரும்பவில்லை.

    பிரபாகரன் அடைய முடியாத இலக்கு இரண்டே இரண்டு. ஒன்று தமிழீழம். இன்னொன்று டக்ளஸை கொல்வது. டக்ளஸ் மீதான பிடிப்பை எமக்கு உருவாக்கியது பிரபாகரனின் கொலை முயற்சிகளும்> உங்களைப்போன்றவர்களின் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளும்தான்.

    தயவு செய்து மன்னிக்கவும். தமிழோடு வாருங்கள். விவாதிக்கலாம்.

    Reply
  • nantha
    nantha

    ஜெயத்தைக் கடத்திப் புலிப் பாணியில் “கொலை” பண்ணியிருக்க வேண்டும் என்று மாயா சொல்லுகிறாரா?

    ஜெயத்தினால் ஏமாற்றப்பட்ட எனது உறவினர் ஒருவர் டக்ளஸின் உதவியை நாடியதை நியாயம் என்றே எண்ணுகிறேன்!

    தமிழை மறந்தவர்கள் “தமிழ்” உரிமை என்று டக்ளஸை சாடுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் “புலி” என்று பெருமை கொண்டவர்கள்.

    இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தேவானந்தா ஒரு விடிவெள்ளி என்பதை தேர்தல்கள் நிரூபித்துள்ளன!

    தமிழில் எழுத முடியாதவர்கள் சில “நொண்டி” சாட்டுக்களை வைப்பார்கள். ஆனால் சிலநாட்களில் யுனிகோட் தமிழ் எழுதும் முறையைப் படிக்கலாம் என்பதை படித்து தமிழில் எழுதுவதை சந்தோஷமாக செய்பவன் என்ற முறையில் பண்டிதரின் கருத்தோடு உடன்படுகிறேன்.

    Reply
  • மாயா
    மாயா

    டக்ளசின் மேல் தனிப்பட்ட வெறுப்பு எதுவும் எனக்கில்லை. பல வேளைகளில் அவரை ஆதரிப்பவன் நான். தவறுகளை சுட்டிக் காட்டுகிறேன். அவை மிக அவசியமானது. இல்லாவிட்டால் பிரபாகரன் சொன்னதற்கும், செய்ததற்கும் தலையாட்டிய தமிழர்கள் போல் நாமும் எதிர்காலத்தில் ஆகிவிடுவோம். அந்த வேதனையை இனியும் கொண்டு வராதீர்கள். இனியாவது தவறுகளை சுட்டிக் காட்டுங்கள். இப்படியாவது எழுதுங்கள். இல்லையென்றால் தமிழர் சமூகம் என்றும் யாருக்காவது தலையாட்டும் பொம்மைகளாகவே வாழ்ந்து அழிந்து விடும். நந்தாவின் உறவினர் விடயத்தில் பேசும் போது, எனக்கு உங்களிடம் பொது நலம் இருப்பதாக தெரியவில்லை. நந்தாவின் தண்டனை என்பது இன்னும் கொலைக் கலாச்சாரமுடையாதாகவே இருக்கிறது. நான் தண்டனை என்பதை இப்படி விளங்கிக் கொண்டதற்கு நான் என்ன செய்ய?

    Reply
  • murugas
    murugas

    I visited jaffna recently and common man appreciates the services of Dougls.He is being described as a leader without middle man or broker.I was amazed to see many young boys and girls got employment through Douglas.Another important matter.Very few people survived LTTE targets.One of them is Douglas.How many times tigers targeted him? The incident in the prison was an unbelievable incident like cinemea.He may be subject to criticism.However we all should support and encourge him for more services.Sorry I am not familiar with Tamil fond typing.

    Reply
  • pandithar
    pandithar

    காலம் யாரை எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது?.. அத்தியடிக்குத்தியன் என்று தன்னை எழுதிய புதுவையின் சகோதரியை வரவேற்ற டக்ளஸ் தேவானந்தா கடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரரையும் நிச்சயம் வரவேற்று உதவுவார் என்று நம்புவோம்.
    கடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர், தனக்கு உதவுமாறு ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை.www.velichcham.com/10.09.2010-10.html

    Reply
  • palli
    palli

    //டக்ளஸ் குற்றவாளி> சமூகவிரோதி என்றால் டக்ளஸ் தேவானந்தாவை ஏன் தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.//
    பண்டிதர் இலங்கை தமிழரும் சரி புலம்பெயர் தமிழரும் சரி புலிகளைதான் மிக அதிகமாக ஆதரித்தனர் உங்கள் வாதத்தின்படி பார்த்தால்?

    சரி தோழருக்கும் வரதருக்கும் என்ன பிரச்சனை?? ஏன் இருவரும் சேர்ந்து செல்ல மறுக்கின்றனர்?? இப்படி பலதை கவனத்தில் எடுத்தால் தோழரும்??

    ஜெயத்திடம் தோழர் இயக்கமாக பணம் வேண்டவில்லை; இயக்கத்தால் ஒதுங்கிய குழுவாகவே அட்டகாசமாக. வேண்டாம் நந்தா பல்லியின் வாயை கிளறாதையுங்கோ; மாயாவின் கருத்தில் எனக்கும் உடன்பாடுதான்,

    Reply
  • santhanam
    santhanam

    டக்ளஷ், ஜெயம் இருவரும் தங்கள் உழைப்பில் வாழவும் இல்லை கொடுக்கவும் இல்லை அவர்கள் இருவரும் இடைதரகர்களாகவிருந்து மக்கள் சொத்தை சுத்தியவர்கள். இன்றும் டக்ளஷ் யாழ் கொழும்பு போக்குவரத்து, மண்வியாபாரம், கடைகளில் கப்பம் களவு ஆகியவை அரச இயந்திரத்துடன் சேர்ந்து படுவேகமாக நடைபெறுகிறது. அத்துடன் புலத்து புலிகளின் இன்றைய செயற்பாட்டாளர்கள் யாழ்சென்றுவர பாதுகாப்பும் தேவைகளையும் நிறைவு செய்கிறார். சரணடைந்த புலிகளை கப்பம் பெற்று வெளியில் எடுத்துவிடுகிறார்.

    Reply
  • nantha
    nantha

    டக்ளஸ் மீது காட்டமாக உள்ளவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் பெரும்பாலும் அபத்தங்களாகவே உள்ளன. புலிகளுக்கு ஆதரவாளர்கள் என்று தம்மை இனம் காட்டியவர்களும், மாற்று இயக்கத்து முன்னாள் சேவகர்களும் டக்ளஸ் மீது கண்டனம் செய்ய எதுவித தார்மீக உரிமையும் அற்றவர்கள்.

    புலிகளே இன்று டக்ளஸின் உதவியை நாணமின்றி நாடுகிறார்கள். எனவே புலிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் புலிகளுக்கு “மானம்” காக்கும்படி அறிவுரை செய்வது நல்லது.

    மாயா ஜெயத்துக்கு வக்காலத்து வாங்குவதன் தார்மீக காரணம் ஏதாவது கொடுக்கல் வாங்கல் என்றே அனுமானிக்கிறேன்.

    இயக்கங்கள் அனைத்தும் பொதுமக்களின் சொத்துக்களில்தான் வயிறு கழுவினார்கள். வீட்டிலிருந்து எவனும் இயக்கத்துக்கு பணம் கொண்டு போய் கொடுத்து இயக்கத்தில் சேர்ந்ததாக இதுவரை வரலாறு கிடையாது. எனது உறவினர் ஒரு சாட்சியே தவிர ஜெயத்திடமிருந்து கொடுத்த பணத்தை வாங்க மாயா ஏதாவது வழி இந்தியாவில் வைத்திருந்தால் சொல்வது நல்லது!

    வங்கிக் கொள்ளை, வீடுகளில் கொள்ளை, வான் கடத்தல், வரி வசூலிப்பு என்று சகல சமூக விரோதங்களையும் புரிந்த இயக்கத்து செம்மல்கள் “பொதுனலம்” என்று ஜெயம் போன்றவர்களுக்கு இன்னமும் வக்காலத்து வாங்கி தாங்கள் இன்னமும் அவர்களின் பக்கமே என்று காட்டுகிறார்கள்! இவர்களுக்கு “மனிதநேயம்” “மக்கள்நலம்” என்பதெல்லாம் ஒரு ஊரை ஏமாற்றும் தந்திரங்களே என்பதைப் படிப்பவர்கள் புரிந்து கொள்வது நல்லது!

    Reply
  • Kanthan
    Kanthan

    Dear Pandithar, As per your comments on September 10, 2010 1:23 pm:

    I do not love Tamils only but also I love all working class and as a PROLETARIAT I did not utter a single word without any basis in this forum. All what I have done here is that I spoke on behalf of the poor people in Sri Lanka. Since, they have been cheated by the so called leaders since from Ramanathan to the present leaders, Doglus, Sitharthan, Sampanthar, Selvam Adaikalanathan, Sures Premachandiran and many others especially Thandaimann and even Chandirasekarn.

    This is my last comment in this forum since I do not want to waste my time by arguing this TRIVIAL facts with your elegant language. Finally, I would like to state that I am not fluent in any language. By nature I love Science. That is’t.

    Reply
  • thirumal
    thirumal

    ‘இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தேவானந்தா ஒரு விடிவெள்ளி என்பதை தேர்தல்கள் நிரூபித்துள்ளன!’

    இது கொஞ்சம் ஓவர். உப்பிடித்தான் எல்லாரையும் அநியாமாக்கினதுபோல கருத்துச்சொல்லவேண்டாம். தமிழ்மக்கிளில் எத்தினைவீதம் டக்ளசுக்கு வாக்குப்போட்டார்கள் என்பதே முக்கியம். மற்றம்படி டக்ளஸ் நல்லது செய்தால் வரவேற்போம்.

    Reply
  • மாயா
    மாயா

    //மாயா ஜெயத்துக்கு வக்காலத்து வாங்குவதன் தார்மீக காரணம் ஏதாவது கொடுக்கல் வாங்கல் என்றே அனுமானிக்கிறேன்.

    இயக்கங்கள் அனைத்தும் பொதுமக்களின் சொத்துக்களில்தான் வயிறு கழுவினார்கள். வீட்டிலிருந்து எவனும் இயக்கத்துக்கு பணம் கொண்டு போய் கொடுத்து இயக்கத்தில் சேர்ந்ததாக இதுவரை வரலாறு கிடையாது. எனது உறவினர் ஒரு சாட்சியே தவிர ஜெயத்திடமிருந்து கொடுத்த பணத்தை வாங்க மாயா ஏதாவது வழி இந்தியாவில் வைத்திருந்தால் சொல்வது நல்லது!- nantha //

    முன்னரெல்லாம் நந்தாவின் கருத்துகள் நல்லதாக இருக்கின்றன என பல முறை வியந்துள்ளேன். கடந்த காலங்களில் வரும் கருத்துகள் நந்தாவை அப்படியானதாக எண்ண வைக்கவில்லை. ஜெயத்துக்கு வக்காலத்து வாங்கவில்லை. அது நான் அறிந்த ஒரு சம்பவமேயாகும். இந் நிகழ்வு நடக்கும் போது நான் அசோக் நகரில் இருந்தேன். அக் காலங்களில் நடந்தவை எனக்குத் தெரியும். நந்தாவின் உறவினர் கடனாக அந்தப் பணத்தைக் கொடுத்திருக்க மாட்டார். அவர், ஜெயம் மூலம் வெளிநாடு செல்லவே பணம் கொடுத்திருப்பார். நீங்களும், உங்கள் உறவினரும் நியாயமானவர்களாக இருந்தால் சென்னை போலீசில் முறையிட்டிருக்கலாம். இந்தியாவில் தங்கியிருந்த, தங்கி இருக்கும் இலங்கையர்கள் தான் தோற்றித்தனமாக நடந்த செயல்களின் பட்டியலில் இந்தக் கடத்தல் சம்பவம் லட்சத்தில் ஒன்று. இயக்கங்கள் என்ற பெயரில் அவர்கள் செய்த அடாவடித்தனங்களை இந்தியத் தமிழர்கள் பொறுத்துக் கொண்டார்கள். இன்றும் இலங்கை வாழ் தமிழர்களில் எவராவது இடம் மாறி வாழ எம்மவர் விடுவதில்லை. அந்த அளவு மோசமானவர்கள் இலங்கை தமிழர்கள்?

    ஏதோ ஆயுதம் தூக்கினார்கள் என்ற காரணத்துக்காக தாங்களே நீதிபதிகளாக நினைத்து தண்டிக்க வேண்டும் என நந்தா நினைத்தால், இவர்கள் அனைவரும் பாதாளகக் குழுக்களுக்கு சமமானவர்கள். நந்தாவுக்கு பிரச்சனை வந்தால் போலீசுக்கு போவதை அல்லது நீதிமன்றம் போவதை விடுத்து ஆயுதக் குழுக்களிடமே செல்ல வேண்டும் என சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். எனவே உங்கள் கருத்துப்படி புலிகள் சட்டத்தைக் கையிலெடுத்து சட்டாம் பிள்ளையானது சரியானதே. இப்போதும் கடந்த கால ஆயுதக் குழுக்கள் சட்டத்தை கையிலெடுப்பதும் சரியானதே. நந்தாவின் கருத்துப்படி?

    மகிந்த ஆதரித்த பாதாளக் குழுக்களுக்கே சாவுகள் வந்து கொண்டிருக்கும் போது, இந்த தமிழ் ஆயுததாரிகளுக்கும் சாவுக்கான பார்வைகள் நெருக்கிக் கொண்டிருப்பதை என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியும். பாதாளக் குழுக்களில் 90 சதமானவர்கள் முடிக்கப்பட்டு விட்டார்கள். அதற்காக ஒரு படையே இயங்குகிறது. அடுத்து இந்த இயக்க ஆயுததாரிகள்தான். அதற்கான பணிகளை கோட்டாபய செய்து கொண்டிருக்கிறார். அது விரைவில் அரங்கேறும், அதற்காகவேதான் இந்த அரசியல் மாற்றங்கள். சிங்கையில் லீக்குவான்யு செய்தது போல மகிந்தர் குழு செய்ய இருக்கிறது. இது இன்றைய நிலையில் மிக அவசியமானது. அதிகம் வேண்டாம், மெர்வின் சில்வாவின் பாதாளக் குழு, குடு லாலையே போட்டுத் தள்ள அதிரடி போலீசார் திட்டம் போட, கடைசியில் குடு லாலை மெர்வின் லண்டனுக்கு அனுப்பினார் எனும் தகவல் பலர் அறிந்தது. மகிந்தரை தலையில் வைத்து ஆடும் மெர்வின் என்ற சண்டித் தனமான அமைச்சருக்கே இந்த நிலை என்றால், அடுத்தவர்கள் நிலையை நான் சொல்லியாக வேண்டியதில்லை.

    //கொடுத்த பணத்தை வாங்க மாயா ஏதாவது வழி இந்தியாவில் வைத்திருந்தால் சொல்வது நல்லது!//

    உங்கள் உறவினர் முறையாக இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால், அவரால் போலீசாரிடம் முறையிடலாம். உங்கள் உறவினரிடம் பணம் கொடுத்தற்கான பத்திரங்கள் இருக்கும். அவர் வெளிநாடொன்றுக்குச் செல்ல திருட்டுக் கடவுச் சீட்டும், வீசாவும், ஆள் கடத்தல் செய்யவும் பணம் கொடுத்தார் என்றால், அவர் ஒரு கிரிமினல். அவருக்காக வாதாடும் நீங்களும் கிரிமினல்களை ஆதரிக்கும் ஒருவர். உங்களால் இப்படியான குறுக்கு வழிகளைத்தான் ஆதரிக்க முடியும். எனவே நாட்டு சுபிட்சம் ஒன்று குறித்து பேச உங்களைப் போன்றவர்கள் பேசுவது சரியல்ல. புலிகளின் செயல்களை எதிர்க்கும் நீங்கள் அதே பாணியிலான அடுத்தவர் செயல்களை சரியென ஆதரிக்கும் உங்கள் எண்ணங்கள் தனி மனித விரோதமாகவே படுகிறது. உங்களிடம் பொதுநலம் என்பதும் இல்லை. நேர்மை என்பதும் இல்லை. நீங்கள், அரசியல் சட்டம், பாதுகாப்புச் சட்டம் எதையும் ஏற்றுக் கொள்பவராகவும் இல்லை. நீங்கள் தற்போதும் பிரச்சனைகள் வந்தால், ஆயுதக் குழுக்களைத்தான் நாடுகிறீர்களா?

    Reply
  • மாயா
    மாயா

    //nantha on September 11, 2010 2:55 am
    நானாவின் பதிலுக்குநன்றி.
    ஆயினும் சவுக்கடியும், கல்லெறிந்து கொல்லுதலும் இன்னமும் தொடர்கிறது.ஈரானில் சவுக்கடி வாங்கிய பெண் விரைவில் கல்லெறிந்து கொல்லபட உள்ளார்!
    அடுத்தது இலங்கை முஸ்லிம்கள் இலங்கை சட்டங்களை அவமதிப்பது எப்படி நியாயமாகும்?//

    // nantha on September 11, 2010 2:18 am ஜெயத்திடமிருந்து கொடுத்த பணத்தை வாங்க மாயா ஏதாவது வழி இந்தியாவில் வைத்திருந்தால் சொல்வது நல்லது! //
    நந்தாவின் கேள்விக்கான பதிலை, நீங்கள் சொல்லும் வேறொரு தலைப்பில் இருந்தே பெற்றுள்ளேன். அதை இலங்கை தமிழர்கள், இந்தியச் சட்டங்களை அவமதிப்பது எப்படி நியாயமாகும்? என எடுத்துக் கொள்ளலாமா?

    // nantha on September 11, 2010 2:18 am and nantha on September 11, 2010 2:55 am //
    சில நிமிடங்களுக்குள் , மாறாட்டமா?

    Reply
  • nantha
    nantha

    இன்றுள்ள நிலையில் டக்ளஸை பாராட்டுவது ஓவராகத் தெரியவில்லை. “உள்ளே வர விட்டு அடிப்பார், நாகாஸ்த்திரம் விடுவார், உலகத்தின் நாலாவது பெரிய இராணுவத்தை விரட்டினார், விமானப் படை குண்டுகள் போடும், கொழும்பு பற்றி எரியும்” என்றெல்லாம் விட்ட கதைகளுக்கு மறுப்பு தெரிவிக்காதவர்கள் அல்லது அவற்றை நம்பி ஏமாந்தவர்கள் டக்ளஸ் என்றதும் கத்தத் தேவையில்லை!

    Reply
  • பல்லி
    பல்லி

    // ஜெயம் போன்றவர்களுக்கு இன்னமும் வக்காலத்து வாங்கி தாங்கள் இன்னமும் அவர்களின் பக்கமே என்று காட்டுகிறார்கள்! இவர்களுக்கு “மனிதநேயம்” “மக்கள்நலம்” என்பதெல்லாம் ஒரு ஊரை ஏமாற்றும் தந்திரங்களே என்பதைப் படிப்பவர்கள் புரிந்து கொள்வது நல்லது!//
    இதை படிப்பவர்கள் பலர் அதே ஜெயத்தால்தான் புலத்தை பார்த்தனர் என்பதுகூடவா நந்தாவுக்கு தெரியாது,

    //இயக்கங்கள் அனைத்தும் பொதுமக்களின் சொத்துக்களில்தான் வயிறு கழுவினார்கள். வீட்டிலிருந்து எவனும் இயக்கத்துக்கு பணம் கொண்டு போய் கொடுத்து இயக்கத்தில் சேர்ந்ததாக இதுவரை வரலாறு கிடையாது. // இதில் தோழரும் அடக்கம்தானே?

    //புலிகளே இன்று டக்ளஸின் உதவியை நாணமின்றி நாடுகிறார்கள். எனவே புலிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் புலிகளுக்கு “மானம்” காக்கும்படி அறிவுரை செய்வது நல்லது.// திருத்தவும் தோழரை அல்ல அவரது பதவியை அந்த பதவியில் பொட்டர் இருந்தால் கூட தோழர் அவர் உதவியை நாடவேண்டி இருக்கும்; ஆனால் அதுவும் இப்போ கே பி கொழும்பில் ஒரு சிங்கள பெண்மணியின் தொலைபேசி எண்ணை புலிகளுக்கு கொடுக்கிறாராம்; அவரோடு தொடர்பு கொண்டால் பிரச்சனை இல்லாமல் வெளியில் வரலாமாம்; இதில் பாட்டுகார சாந்தன் உட்பட பலர் அந்த பெண்மணியுடன் தொடர்பு கொண்டு விட்டதாக தோழர் வட்டாரமே கடுப்பில் இருக்காம் நந்தா ;

    //. சரணடைந்த புலிகளை கப்பம் பெற்று வெளியில் எடுத்துவிடுகிறார்.//
    நந்தா சந்தானத்தின் பின்னோட்டத்தை கவனியுங்கள் அப்படி ஆனால் கப்பம் கொடுப்பவனோ அல்லது வாங்குபவனா வெக்கபடவேண்டும் ,நாண வேண்டும்: குறுகவேண்டும்;

    // இந் நிகழ்வு நடக்கும் போது நான் அசோக் நகரில் இருந்தேன். // நான் அண்ணா நகரில் ஜெயத்தின் வீட்டுக்கு பக்கத்தில் இருந்தேன்;

    //எனவே உங்கள் கருத்துப்படி புலிகள் சட்டத்தைக் கையிலெடுத்து சட்டாம் பிள்ளையானது சரியானதே. //
    இதை அவரது பல பின்னோட்டம் நிருபித்துள்ளது; ஆனாலும் அவர் மட்டுமே புலியில்லை பல்லியில் இருந்து தேச நிர்வாகம் வரை இடைக்கிடை புலிகளாக்குவார்:

    //நந்தாவின் கேள்விக்கான பதிலை, நீங்கள் சொல்லும் வேறொரு தலைப்பில் இருந்தே பெற்றுள்ளேன். அதை இலங்கை தமிழர்கள், இந்தியச் சட்டங்களை அவமதிப்பது எப்படி நியாயமாகும்? என எடுத்துக் கொள்ளலாமா?//
    என்ன மாயா இது நாம் இலங்கை சட்டத்தை மதித்திருந்தால் ஏன் இன்று அகதியாய் பல லட்சம் பேர் புலத்திலும் சில லட்சம் பேர் நாட்டிலும் அவதிபட வேண்டும்; அதுசரி நந்தா சட்டபடிதான் எல்லாமே செய்கிறாரா??

    //“உள்ளே வர விட்டு அடிப்பார், நாகாஸ்த்திரம் விடுவார், உலகத்தின் நாலாவது பெரிய இராணுவத்தை விரட்டினார், விமானப் படை குண்டுகள் போடும், கொழும்பு பற்றி எரியும்” என்றெல்லாம் விட்ட கதைகளுக்கு மறுப்பு தெரிவிக்காதவர்கள்//
    இவர்களுக்கும் தங்களுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?? நந்தா இடைகிடை நீங்கள் எழுதும் பின்னோட்டங்களை திரும்ப திரும்ப வாசிக்கவும், அதுவே உங்களுக்கும் எங்களுக்கும் மக்களுக்கும் நனமை வகுக்கும்;

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    டக்ளஸை வளர்த்தது புலிகளும், சிங்கள பெளத்த அரசுகளின் அரவணைப்புமே. அடிமைகளாக அரசில் இயங்க வருவோருக்கு சிங்கள பெளத்த அரசுகள் கொடுத்தது இந்துக்கலாச்சார, பனம் பொருள் அபிவிருத்தி. அமைச்சுக்ளே. இந்து உயர் சாதிக்காரனை உள்வாங்கினால் அவனுக்குப் பாதுகாப்பாய் பனம்பொருள்காரனைப் பயன்படுத்து” என்பதே சிங்கள பெளத்த அரசுகள் தமிழனைப் பிரித்தாளக் கையாண்ட பாரம்பரியம்.
    இதற்குதவியாக டக்ளஸை பயன்படுத்துகிறார்கள் என்பதே வெளிப்படை உண்மை.
    இவர் வெற்றிலை போட்டுக் கொள்ள முரண்பட்டபோது நடந்ததெல்லாம் நாமறிவோம். “வீணை என்னடா ,வெற்றிலை என்னடா” என்ற எப்படியும் வாழலாம் தேர்தல் கீதமும், பணமும், கொழும்பை மையம் கொண்ட ஒரு குறுநிலப்பரப்புந்தான் இவரது இன்றைய வெற்றிக்கு காரணம்.
    இவரால் தனக்கும். தன் சூழ உள்ளவர்க்கும் கடத்தல்’ நாடகங்களை ஆடலாம், ஆனால் தமிழ் மக்களுக்கென்று ஒரு சிறு துரும்பையும் நகர்த்த முடியாது.

    Reply
  • மாயா
    மாயா

    //நந்தாவின் கேள்விக்கான பதிலை, நீங்கள் சொல்லும் வேறொரு தலைப்பில் இருந்தே பெற்றுள்ளேன். அதை இலங்கை தமிழர்கள், இந்தியச் சட்டங்களை அவமதிப்பது எப்படி நியாயமாகும்? என எடுத்துக் கொள்ளலாமா?//
    என்ன மாயா இது நாம் இலங்கை சட்டத்தை மதித்திருந்தால் ஏன் இன்று அகதியாய் பல லட்சம் பேர் புலத்திலும் சில லட்சம் பேர் நாட்டிலும் அவதிபட வேண்டும்; அதுசரி நந்தா சட்டபடிதான் எல்லாமே செய்கிறாரா??

    என்ன செய்ய பல்லி, இப்படியாவது நந்தா உணரலாம் எனும் நப்பாசையில் எழுதினேன்?

    Reply
  • nantha
    nantha

    மொத்தத்தில் ஜெயத்துக்கும், மாயாவுக்கும் என்ன கொடுக்கல் வாங்கல் என்பதைப் பற்றி தெளிவாக்கினால் பதில்கள் எழுத சுலபமாக இருக்கும்.

    Reply
  • மாயா
    மாயா

    //nantha on September 11, 2010 4:57 pm
    மொத்தத்தில் ஜெயத்துக்கும், மாயாவுக்கும் என்ன கொடுக்கல் வாங்கல் என்பதைப் பற்றி தெளிவாக்கினால் பதில்கள் எழுத சுலபமாக இருக்கும்.//
    புனித குரானை எரிக்கப் போகும் செய்தி வந்ததும் , அதை எதிர்த்து கருத்து எழுதினவர்களில் அநேகர் அதற்கு சம்பந்தப்பட்டவர்களில்லாதது போல , நான் ஜெயத்தை பார்த்ததும் இல்லை. ஆனால் நடந்த நிகழ்வு தெரியும். நீங்கள் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டுள்ளீர்கள்? சில வேளை அவரைப் போல நீங்களும் ஆள் கடத்தல் வேலைகளில் ஈடுபட்டு இருந்தீர்களோ தெரியாது? உங்கள் கோபம் தொழில் பகை போலத் தெரிகிறதே?

    Reply
  • pandithar
    pandithar

    வணக்கம்!……
    உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பல்வேறு கருத்துண்டு. விமர்சனப்பார்வை உண்டு. அதுபோல் எனக்கும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீது விமர்சனப்பார்வை உண்டு. அதற்காக திட்டமிட்டு யாரும் ஒரு கட்சியையையே குழுவையோ அவதூறு செய்தால் அதை ஏற்பது கடினம்.

    அடுத்து பல்லிக்கு…
    டக்ளஸ் தேவானந்தாவும் வரதராஐப்பெருமாளும் ஏன் கூட்டுசேரவில்லை என்று நீங்கள் கேள்வி எழுப்பினால், புளொட்டில் இருந்து ஏன் ஈஸ்வரன் குழுவினர் பிரிந்தனர் என்றும் ஒரு கேள்வியை கேட்கலாம். அவர்களும் டக்ளஸ் அணியும் இணைந்து ஏன் ஈ.என்.டி.எல்.எவ் ஆனார்கள் என்றும் கேட்கலாம். பலதும் பத்தும் என்பது ஐனநயக அரசியல் தளத்தில் தவிர்க்க முடியாதவை. ஆயினும் அவரவர் தனித்துவங்களோடு ஒரு ஐக்கியம் தேவை. அதுவே தமிழ் கட்சிகளின் அரங்கம். அதை நானும் வரவேற்கிறேன்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //புளொட்டில் இருந்து ஏன் ஈஸ்வரன் குழுவினர் பிரிந்தனர் என்றும் ஒரு கேள்வியை கேட்கலாம். // பண்டிதர் கண்டிப்பாக கேட்டுருப்பேன் ஈஸ்வரன் உயிருடன் இருந்திருந்தால்;

    /அவர்களும் டக்ளஸ் அணியும் இணைந்து ஏன் ஈ.என்.டி.எல்.எவ் ஆனார்கள் என்றும் கேட்கலாம். // அதுக்கானா பதிலும் ஏற்கனவே தெரியும்; ராஜன் தோழர் சண்டையாம்; ராஜன் தோழரை சிறையில் அடித்தாராமே;

    //பலதும் பத்தும் என்பது ஐனநயக அரசியல் தளத்தில் தவிர்க்க முடியாதவை// இது கையாலாகதனம்; அதனால் இதில் பல்லிக்கு உடன்பாடு இல்லை; அதில் விருப்பமும் இல்லை;

    //ஆயினும் அவரவர் தனித்துவங்களோடு ஒரு ஐக்கியம் தேவை. // இதில் தோழர் நிலைபாடு என்ன என்ன என்பதே ஏன் வரதர் தோழர் கூட்டு இல்லை என்னும் கேள்விஎழ காரணம்;

    // அரங்கம். அதை நானும் வரவேற்கிறேன்.// நானும்தான் இதை தோழர் புரிந்து கொள்ளும்போது;

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    பண்டிதர் நீங்கள் சொல்லவந்த கருத்துச்சரியானது – ஆனால் E.N.D.L.F ஐயும், PLOTE ஈஸ்வரனையும், E.P.R.L.F இன் முன்நாள் படைத்துறைச் செயளர் “ஐயா” வையும் இங்கு பொருத்த முற்படுவது ஒரு வரலாற்றுத்துத்ரோகம்!

    Reply
  • nantha
    nantha

    ஆள்கடத்தல், தூள் கடத்தல் என்பன நந்தாவுக்கு தேவைற்ற விஷயங்கள். ஆனால் வாங்கிய பணத்துக்கு ஆள் கடத்திகள் பற்றுச் சீட்டுக் கொடுத்தார்கள் என்று மாயா சொல்வதைப் பார்த்தால் மாயாவுக்கும் ஜெயத்திற்கும் நல்லஉறவு என்பதும் ஜெயத்தின் பங்காளி என்பதும் புலனாகிறது.
    ஜெயத்தினால் நன்மை அடைந்தவர்களுக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன பதில்? மாயா சட்டம் பற்றி சொல்கிறார். சமூக விரோதிகள் சட்டப்படி நடப்பதாக மாயா சொல்லி யாரை ஏமாற்றுகிறார்? ஆயினும் ஒரு சமூகத்தில் கோடிக்கணக்கில் மக்களை ஏமாற்றியவனிடம் “மன்னிப்பு” கேட்க வேண்டும் என்று கேட்பது எந்த சட்டத்தில் உள்ளது? சட்டத்தில் அப்படி இல்லை என்பது தெரியும். ஆயினும் அவனிடம் மன்னிப்பு கேள் என்று சொல்லி யாருடைய பெயரை மாயா “சுத்தமாக்க” புறப்பட்டிருக்கிறார்? டக்ளஸின் அதிரடிநடவடிக்கை ஆள் கடத்தி ஜெயத்தினதும் மாயாவினதும் “தொழிலை” பாதித்துள்ளது புரிகிறது!

    Reply
  • மாயா
    மாயா

    // nantha on September 12, 2010 2:57 am
    ஆள்கடத்தல், தூள் கடத்தல் என்பன நந்தாவுக்கு தேவைற்ற விஷயங்கள். ஆனால் வாங்கிய பணத்துக்கு ஆள் கடத்திகள் பற்றுச் சீட்டுக் கொடுத்தார்கள் என்று மாயா சொல்வதைப் பார்த்தால் மாயாவுக்கும் ஜெயத்திற்கும் நல்லஉறவு என்பதும் ஜெயத்தின் பங்காளி என்பதும் புலனாகிறது. ஜெயத்தினால் நன்மை அடைந்தவர்களுக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன பதில்? மாயா சட்டம் பற்றி சொல்கிறார். சமூக விரோதிகள் சட்டப்படி நடப்பதாக மாயா சொல்லி யாரை ஏமாற்றுகிறார்? ஆயினும் ஒரு சமூகத்தில் கோடிக்கணக்கில் மக்களை ஏமாற்றியவனிடம் “மன்னிப்பு” கேட்க வேண்டும் என்று கேட்பது எந்த சட்டத்தில் உள்ளது? சட்டத்தில் அப்படி இல்லை என்பது தெரியும். ஆயினும் அவனிடம் மன்னிப்பு கேள் என்று சொல்லி யாருடைய பெயரை மாயா “சுத்தமாக்க” புறப்பட்டிருக்கிறார்? டக்ளஸின் அதிரடிநடவடிக்கை ஆள் கடத்தி ஜெயத்தினதும் மாயாவினதும் “தொழிலை” பாதித்துள்ளது புரிகிறது!//

    //nantha on September 11, 2010 2:55 am
    நானாவின் பதிலுக்குநன்றி.
    ஆயினும் சவுக்கடியும், கல்லெறிந்து கொல்லுதலும் இன்னமும் தொடர்கிறது.ஈரானில் சவுக்கடி வாங்கிய பெண் விரைவில் கல்லெறிந்து கொல்லபட உள்ளார்!
    அடுத்தது இலங்கை முஸ்லிம்கள் இலங்கை சட்டங்களை அவமதிப்பது எப்படி நியாயமாகும்?//

    நந்தா , மேலே உள்ள பதிலை , அதாவது நீங்களே எழுதிய பதிலை நன்றாக கவனியுங்கள். இலங்கை முஸ்லிம்கள், இலங்கை சட்டத்தை மதிப்பதில்லையா? எனக் கேள்வி கேட்டிருக்கிறீர்கள். அதையேதான் நானும் கேட்கிறேன். நீங்கள் சட்டங்களை மதிப்பதில்லையா? ஜெயத்திடமிருந்து நீங்கள் அல்லது உங்கள் உறவினர் கொடுத்த பணத்தை மீட்க டக்ளசை வைத்து அல்லது டக்ளசோடு சேர்ந்து நீங்களும் அந்த பாலகனை கடத்தியிருக்கிறீர்கள்? நீங்கள் தர வேண்டிய பணத்துக்காக உங்கள் மகனைக் கடத்துவது சரியா? தவறா?

    ஜெயத்தின் மகனைக் கடத்துவது சரியென்றால் , புலத்தில் பணம் கொடுக்காத மக்களை அல்லது அவர்களது உறவினர்களை புலிகள் கடத்தியதும் சரி. அதுவும் தார்மீக கடமைதான். அந்த வகையில் புலிகள் செய்தவை அனைத்தும் சரியே.

    நந்தா, உங்களோடு எனது விவாதம் முற்றுப் பெறுகிறது. நன்றி வணக்கம்.

    Reply
  • nantha
    nantha

    முஸ்லிம் பிரச்சனைக்கும், ஜெயம் பிரச்சனைக்கும் என்ன தொடர்பு? மாயா இன்னமும் ஜெயம் செய்தது சரியென்று வாதாடுகிறார். அது மாத்திரமின்றி புலிகளின் ஆட் கடத்தலை நியாயம் என்று கூறுகிறார்.

    ஜெயத்தின் மகனைக் கடத்தியது சரி என்பதும், அது நீங்கள் சொல்லும் “மனிதாபிமானத்தின்” ஒரு பகுதி. புலிகள் ஆள் கடத்தல் செய்தது மக்கள் நன்மைக்கல்ல. ஆனால் டக்ளஸின் கடத்தலின் பயனாக ஜெயம் போன்ற கிரிமினல்கள் தங்கள் “தொழில்களை” தொடர முடியாமல் போனது மாத்திரம் உண்மை!

    Reply
  • pandithar
    pandithar

    பல்லி!….
    ஈஸ்வரனை பார் ஏன் பிரிந்தீர்கள் என்று கேட்பதற்கான சந்தர்ப்பத்தை பலரும் கைவிட்டு விட்டனர். மாறாக அவரோடு சேர்ந்து ஒத்துழைத்தும் விட்டார்கள். மாறாக ஈஸ்வரன் பிரிந்து போனது தவறானது அல்ல என்பது என் கருத்து…

    பலதும் பத்தும் உங்களுக்கு பிடிக்காதது என்றால்> ஒரே தலைமை ஒரே கருத்து ஒரே வழி….இதுதானா உங்கள் வழிமுறை?…

    சாதாரணமாக புலம்பெயர் தளத்தில் உள்ள படைப்பாளிகளே தங்களுக்குள் ஒரு ஒற்றுடைக்கு வர முடியாதுள்ளது. இப்படி இருக்க வரதரையும் தோழரையும் ஒற்றுமைக்கு வரவில்லை என்று ஆதங்கப்படுவது வேடிக்கையானது.

    அதுதானே இப்போது எதிரும் புதிருமாக இருந்தவர்கள் ஒன்று கூடி பேசுகின்றார்கள். தீர்மானம் எடுக்கின்றார்கள். அதற்காக அவரவர் கட்சிகளை கலைத்துவிட்டு இணைய வேண்டும் என்று எதிர்பார்ப்பது சடைமுறைக்கு மாறானதும். ஐனநாய பன்மைத்துவத்திற்கு எதிரானதுமான நடவடிக்கை.

    தோழர் எதை புரிந்து கொள்ள வேண்டும்?…. நான் அறிந்த மட்டில் நீங்கள் சொல்லும் தோழராகிய டக்ளஸ் தேவானந்தா அவர்களே தமிழ் கட்சிகளின் அரங்கத்தை ஆரம்பித்து வைத்தவர்.

    இதில் என்ன இருக்கின்றது?… அதில் கட்சி நலன் இருக்ககின்றது என்று சொல்லப்போகின்றீர்களா?/…

    அப்படி என்றால் எதை சரி என்று ஏற்கப்போகின்றீர்கள்?….

    Reply