வியூகம் சஞ்சிகையின் இதழ் 2 வெளியீடு

Viyoogam_02_Coverமே 18 இயக்கத்தின் கோட்பாட்டு சஞ்சிகையான வியூகம் சஞ்சிகையின் 2வது இதழ் வெளியீடு ரொறன்ரோவில் செப்ரம்பர் 12ல் நடைபெறவுள்ளது. சிங்கள தேசியவாதத்தின் தோற்றம் பாராளுமன்றமும் புரட்சிகர சக்திகளும் சூழலியலும் நிலைத்து நிற்கக்கூடிய வளர்ச்சியும் வீட்டு வேலைக்கு ஊதியம் தொடர்பான முன்மொழிவுகள் போன்ற கட்டுரைகளுடன் வியூகம் இதழ் 2 வெளியாகி உள்ளது.

2009 மே 18க்குப் பின் உருவான அரசியல் திருப்புமுனையை தளமாக்கி உருவாகிய மே 18 இயக்கம் கோட்பாட்டு தளத்தின் அவசியத்தை உணர்ந்து வியூகம் என்ற கோட்பாட்டு சஞ்சிகையையும் ஆரம்பித்தனர். இதன் முதலாவது இதழின் வெளியீடு ரொறன்ரோ லண்டன் பிரான்ஸ் ஆகிய நகரங்களில் இடம்பெற்றது. மே 18 இயக்கம் தத்துவார்த்த விவாதத்துடன் மட்டும் தன்னை மட்டிறித்திக் கொள்ளாமல் யதார்த்த அரசியலிலும் தன்னை ஈடுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டது. ஜனாதிபதித் தேர்தல் பாராளுமன்றத் தேர்தல்களில் யதார்த்தபூர்வமான அரசியல் முடிவுகளை மேற்கொண்டிருந்தது. மேலும் பொதுத்தளத்தில் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வருகின்றது.

Viyoogam_02_Coverபல்வேறு அரசியல் பின்னணிகளில் இருந்தவர்களையும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டுவரும் நோக்கில் முன்னைய அரசியலின் தொடர்ச்சியாக இல்லாமல் புத்வேகத்துடன் ஆரம்பிப்பதற்காக மே 18 இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மே 18 2009 ஒரு மிக முக்கியமான திருப்புமுனை. அதிலிருந்து முகிழ்த்துள்ளது மே 18 இயக்கம். புலம்பெயர் சூழலில் காணப்படுகின்ற தத்துவார்த்த தனிநபர் வித்தகப் போட்டிக்குள் தன்னை உட்படுத்திக் கொள்ளாது மே 18 இயக்கம் அதன் அரசியலை முன்னெடுக்கின்றது.

ஆயினும் புலம்பெயர் நாடுகளில் புரட்சியைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டவர்கள் போன்று செயற்படுகின்ற கீபோட் புரட்சியாளர்களை மே 18 இயக்கத்தின் செயற்பாடுகள் அச்சத்திற்கு உள்ளாக்கியது. அதனால் அதற்கு எதிரான காழ்புணர்வுகள் கீபோட் புரட்சியாளர்களிடம் இருந்து வெளிப்பட்டதில் ஆச்சரியம் இல்லை. மக்கள் என்ற முகமூடிக்குள் தனிநபர் சார்ந்த விம்பங்களைக் கட்டிக்கொண்டு இவர்கள் செய்கின்ற அரசியலுக்கு மே 18 இயக்கத்தின் இரண்டாவது இதழ் இன்னமும் அச்சுறுத்தும்.

வியூகம் இதழ் 2 இன் வெளியீட்டு நிகழ்வுகள் பற்றிய விபரம்:
May_18_Movement_Viyoogam02

மே 18 இயக்கம் தொடர்பான மேலதிக வாசிப்பிற்கு:

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீள்மதிப்பீடும் கலந்துரையாடலும் – மே 18 இயக்கம் : ஜெயபாலன் த

பிற்போக்கு தலைமைகளையும், கைக்கூலிகளையும் தோற்கடிப்போம்!

இடதுசாரி முன்னணித் தோழர் விக்கிரமபாகுவை ஆதரிப்பதாக ‘மே 18 இயக்கம்’ முடிவு!

பாராளுமன்ற ஜனநாயகமும் ஜனநாயக முன்னணியும் : ரகுமான் ஜான்

இலங்கையில் தேர்தலும் தமிழ் மக்களது அரசியல் எதிர்காலமும் : கலந்துரையாடல்

 ‘ஜனநாயகப் பண்போடு நடந்துகொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும்’ ரகுமான் ஜான் – வியூகம் வெளியீடு தொகுப்பு : த ஜெயபாலன்

‘விவாதக் களத்திற்கான தளத்தின் ஆரம்பமே வியூகம்’ ரொறன்ரோ வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ரகுமான் யான்

இரயாகரன் சார்! எனக்கொரு உண்மை தெரிந்தாக வேணும் : த ஜெயபாலன்

மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்

தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்

இதுவும் கடந்து போம்: புலியெதிர்ப்பின் அரசியல்: தேசபக்தன்
 
நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்

Show More

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • varma
    varma

    /புலம்பெயர் நாடுகளில் புரட்சியைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டவர்கள் போன்று செயற்படுகின்ற கீபோட் புரட்சியாளர்களை மே 18 இயக்கத்தின் செயற்பாடுகள் அச்சத்திற்கு உள்ளாக்கியது. அதனால் அதற்கு எதிரான காழ்புணர்வுகள் கீபோட் புரட்சியாளர்களிடம் இருந்து வெளிப்பட்டதில் ஆச்சரியம் இல்லை. மக்கள் என்ற முகமூடிக்குள் தனிநபர் சார்ந்த விம்பங்களைக் கட்டிக்கொண்டு இவர்கள் செய்கின்ற அரசியலுக்கு மே 18 இயக்கத்தின் இரண்டாவது இதழ் இன்னமும் அச்சுறுத்தும்/
    இது யாரைக் குறிக்கிறது? மேலும் மகிந்த அரசுக்கு எதிராகவே மே18 இயக்கம் அச்சுறுத்தும் என நான் எண்ணினேன். ஆனால் இப்போது இதை படிக்கும்போது அவர்களுக்கு மகிந்தவைவிட கீபொட் மாக்சியவாதிகளே பிரதான எதிரியாக தோன்றுவதால் இந்த மே18 இயக்கம் தமிழ்மக்களுக்கு தேவைதானா என யோசிக்கவைக்கிறது.
    வியுகத்திற்கு எதிராக யதீந்திரா என்பவர் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதற்கு வியுகத்தின் பதில்களை பெற்று தேசம்நெற் வெளியிடுமா?

    Reply
  • pothu
    pothu

    // வியுகத்திற்கு எதிராக யதீந்திரா என்பவர் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதற்கு வியுகத்தின் பதில்களை பெற்று தேசம்நெற் வெளியிடுமா?/

    வியூகத்திற்கு எதிராக யதீந்திரா எழுதவில்லை. வியூகம் தொடர்பாக தனது பார்வையையும் விமர்சனத்தையும் வைத்திருந்தார்.

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    /…மேலும் மகிந்த அரசுக்கு எதிராகவே மே18 இயக்கம் அச்சுறுத்தும் என நான் எண்ணினேன்…./ varma on September 5, 2010 10:54 am
    எல்லா உச்சாடனமும், உத்வேகமும்,கதையும் மகிந்தவை மகிமைப்படுத்தவே. மாவோ மகிந்தவிற்கு காதோரமாகச் சொன்னது இதுதான். “துப்பாக்கியிலிருந்துதான் அதிகாரம் பிறக்கிறது.”

    Reply
  • சுகுணகுமார்
    சுகுணகுமார்

    சிங்கள தேசியத்தின் தோற்றம் அதன் பின் தமிழ் தேசியத்தின் இறுக்கம் அதன் பின் சிங்கள தேசியத்தின் மோசமான இறுக்கம் இது தொடரவே போகிறது. எனவே தேசிய விடுதலைப்போராட்டம் ஒன்று முள்ளிவாய்க்காலில் போய் முடிந்த பின்னும் கனடாவில் இருந்தபடி மீள ஓரு தேசிய போராட்டத்தை கட்டியெழுப்ப முனைவது போல் தெரிகிறது! முதலில் யாருக்காக போரடுகிறீர்கள் புலம் பெயர் தமிழ் தேசியத்திற்கா அல்லது இலங்கை தமிழ் தேசியத்திற்கா? இலங்கை தமிழ் தேசியத்திற்கு என்றால் முதலில் இந்த வியூகம் மனிக் பாமில்தான் தனது வேலையை தொடங்கியிருக்கவேண்டும்.

    மாறாக ஒரு கணனி முன் இருந்து தட்டிக்கொண்டு மறுகணனி புரட்சியாளர்களை விமர்சிப்பது கவுண்டன் செந்தில் கொமடியையும் மிஞ்சுகிறது! அடிப்படை வசதிகள் அற்று இருக்கும் மக்களிற்கு தேவை உங்கள் கோட்பாடுகள் அல்ல! முதலில் களத்தில் இறங்க ஒரு வழியை பாருங்கள்!

    அதற்கான தளம் தற்போது உள்ளது! கனடாவில் இருந்தபடி புனை பெயரில் புரட்சி செய்வதை விடுத்து மக்கள் போராட்டத்தை கட்டியெளுப்ப முதலில் மக்களிடம் போய்சேருங்கள்! இல்லை புலம் பெயர் மக்களிற்கு தான் புரட்சி என்றால் புலிப்பினாமிகளிற்கு எதிரான போராட்டத்தை முதலில் தொடங்குங்கள்! அதற்கான தேவை நிறையவே இருக்கிறது!

    Reply
  • nantha
    nantha

    தமிழர் விடுதலை என்றது தமிழர்களின் குரல்வளைகளைத் திருகுவதில்த்தான் ஆரம்பிக்கிறது. “வியூகம்” அதனை ஆரம்பிக்கிறது என்றே எண்ணுகிறேன்.

    இறுதியில் “தமிழர்களில்” ஒரு தொகையினர் மண்டையை போட்டபின் “கேபி” மாதிரி “மன்னிக்க வேண்டுகிறேன்” என்று அறிக்கையும் வெளிவரலாம்!

    சிங்களவர்களை விட தமிழ் என்று தமிழரின் முதுகில் சவாரி விட முனைபவர்களே “தமிழர்களுக்கு” ஆபத்தானவர்கள்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //சிங்களவர்களை விட தமிழ் என்று தமிழரின் முதுகில் சவாரி விட முனைபவர்களே “தமிழர்களுக்கு” ஆபத்தானவர்கள்//
    இதை சொல்லுவது நந்தா?? எல்லாமே அவன் செயல்:

    Reply
  • kadavul
    kadavul

    நந்தா சொல்வது சரி. வியூகமும் தமிழ் ஈழத்தைத்தான் தனது தீர்வாக முன் வைக்கின்றது. தீர்வை யாரும் முன் வைக்கலாம். நடைமுறை சாத்தியமானது எது என எந்த ஆய்வும் இல்லாமல் வெறும் குளிர் காய முன் வைக்கப்படும் கோசங்களாக மாறிவிடும். அது தான் நடக்கின்றது. வியூகத்தின் பிண்ணனியில் இயங்கும் கூட்டம் இதைத்தான் செய்கின்றது.செய்தது. தமிழீழக் கோசத்தில் வெற்றி பெற்றவர்கள் யாழ்ப்பாணிகளே. புலம் பெயர் நாடுகளில் செல்வச் செழிப்புடன் வாழ்கின்றார்கள். மீண்டும் ஒரு தடவை இளைஞர்களை பலிக்கடாவாக்கும் முயற்சியில் வியூகம் இறங்கியுள்ளார்கள்.

    Reply
  • nantha
    nantha

    தமிழ் என்ற வட்டத்துக்குள் நின்று கொண்டு “மார்க்சிசக்” கருத்துக்களை அமுல் படுத்த முடியாது. தமிழர்களை “கவரும்” ஒர் கோஷமே தமிழுக்குள் “இடதுசாரி சித்தாந்தம்”.

    இலங்கையில் மார்க்சிச கோஷம் தமிழரிடையே செய்து தங்களை தமிழர் மத்தியில் அடையாளம் காட்டுபவர்கள் பக்கத்துக் கேராளாவில் கம்யூனிஸ்ட்டுக்கள் “வாக்குகள்” மூலம் எப்படிப் பதவிக்கு வந்தனர் என்பதைப் பற்றி அக்கறைப் படுவதே இல்லை. மே.வங்கத்தில் அப்படியே. இந்த இலங்கைத் தமிழ் இயக்க மாக்சிச பக்தர்களுக்கு இந்த விஷயம் எப்படித் தெரியாமல் இருக்கிறது? சிலவேளைகளில் “இந்தியாக்காரன் என்ற இளக்காரமோ?

    கட்சியே இல்லாமல் உட் கட்சிப் போராட்டம் என்று கூட இருந்தவர்களுக்கே சமாதி கட்டியவர்கள் “வியூகம்” அமைத்து யாருக்கு “சேவகர்”களாக மாற உத்தெசித்துள்ளனர் என்பது புரியாத வரைக்கும் இந்த கோஷ்டி பற்றி எச்சரிக்கையாக இருப்பதுநல்லது.

    இவர்கள் பேசும் விஷயங்கள் ஏற்கனவே தமிழ் என்று புறப்பட்ட அனைத்து கட்சிகளும் பேசி தமிழர்களுக்கு சுடலை மார்க்கம் காட்டப்பட்ட விஷயங்களே!

    Reply