பிரபல பாடகி சொர்ணலதா காலமானார்

suwarna-latha.jpgஇந்தியா வின் பிரபல பாடகி சொர்ணலதா நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் காலமானார். நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சுவர்ணலதா (37)  சிகிச்சைப் பலனின்றி  சென்னை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.

கேரளா பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட சொர்ணலதா 25 தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது உட்பட பல மொழிகளில் கடந்த ஆண்டுகளாக பின்னணி பாடியுள்ளார்.

இவரது தந்தை கே.சி.செருக்குட்டி ஹார்மோனியம் வாசிப்பவர், பாடகர். தாய் கல்யாணியும் இசையில் நாட்டமுடையவர். சுவர்ணலதாவிற்கு ஹார்மோனியமும், கீ போர்டு இசைக்கருவிகளையும் வாசிக்கத் தெரியும். 1989ஆம் ஆண்டு முதல் பாடி வரும் சுவர்ணலதா, இளையராஜாவின் இசையில் சத்ரியன் என்ற படத்தில் “மாலையில் யாரோ மனதோடு பேச” என்ற பாடல் மூலம் தனது அருமையான குரல் வளத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து இவர் அலைபாயுதே படத்தில் பாடிய ‘எவனோ ஒருவன்”, பாம்பே திரைப்படத்தில் பாடிய குச்சி குச்சி ராக்கம்மா, ஜென்டில்மேன் படத்தில் பாடிய ‘உசிலம் பட்டி பெண்குட்டி’ காதலன் படத்தில் முகாபலா முகாபலா ஆகிய பாடல்கள் தமிழ் நாட்டில் அடிரடி ஹிட் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கருத்தம்மா’ படத்தில் ஏ. ஆர். ரகுமானின் இசையில் ‘போறாளே பொன்னுத்தாயி….’ எனும் பாடாலை பாடியதற்காக சொர்ணலதா தேசிய விருதும் பெற்றார். இவர் ஏறத்தாழ 7500க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.

‘தளபதி’ பாடத்தில் ‘ராக்கம்மா கையைத் தட்டு…’, ‘சத்திரியன்’ படத்தில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச…’, ‘சின்னத்தம்பி’ படத்தில் ‘போவோமா ஊர்கோலம்’, ‘நீ எங்கே…’, ‘என் ராசவின் மனசிலே’ படத்தில் ‘குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே…’, ‘காதலன்’ படத்தில் ‘முக்காலா…’, ‘அலை பாயுதே’ படத்தில் ‘எவனோ ஒருவன்…’, ‘பம்பாய்’ படத்தில் ‘குச்சி குச்சி ராக்கம்மா…’, ‘இந்தியன்’ படத்தில் ‘மாயா மச்சிந்ரா…’ போன்றன. இவர் பாடிய பாடல்களுள் பிரபலமானவை.

Show More
Leave a Reply to ajeevan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அருமையான பாடகி. இனிமையான குரல்வளமிக்கவர். இவரது இளப்பு வேதனையானது. இவரது ஆத்மா சாந்தியடையவும், இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினர் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள், இரசிகர்கள் மனஅமைதி பெறவும் எல்லாம்வல்ல எல்லார்க்கும் பொதுவான இறைவன் அருள் பாலிப்பாராக.

    இவர் தமிழில் அறிமுகமானது “கேப்டன் பிரபாகரன்” படத்தில் இடம்பெற்ற “ஆட்டமா சதிராட்டமா” பாடல் மூலம். அதுபோல் “தளபதி” திரைப்படத்தில் இடம்பெற்ற “யமுனையாற்றிலே ஈரக்காற்றிலே” பாடலும் இவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது.

    Reply
  • ajeevan
    ajeevan

    மாலையில் யாரோ மனதோடு பேச
    மார்கழி வாடை மெதுவாக வீச
    தேகம் கூடலே ஓ மோகம் வந்ததோ
    மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ
    நெஞ்சமே பாட்டெழுது……..

    தனது இனிய குரலால் கவர்ந்த மற்றெருவர்.
    இவரது இழப்பு அதிர்ச்சியானது.
    அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும்…..

    http://www.youtube.com/watch?v=_NRxA_HR8Us&feature=player_embedded

    வருவான் காதல்(மரண) தேவன் என்றும் காற்றும் கூற
    வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
    வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாட
    ஒரு நாள் வண்ண மாலை சூட…..

    ————————–

    மாலையில் யாரோ மனதோடு பேச
    மார்கழி வாடை மெதுவாக வீச
    தேகம் கூடலே ஓ மோகம் வந்ததோ
    மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ
    நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது
    (மாலையில்..)

    வருவான் காதல் தேவன் என்றும் காற்றும் கூற
    வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
    வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாட
    ஒரு நாள் வண்ண மாலை சூட
    வளர்த்தேன் ஆசை காதலை நெஞ்சமே பாட்டெழுது
    அதில் நாயகன் பேரெழுது
    (மாலையில்..)

    கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணை பார்க்க
    கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
    கண்ணை பார்க்க அடடா நானும்
    மீனைப் போல கடலில் பாயத் தோணுமோ
    அலைகள் வெள்ளி ஆடை போல
    உடலின் மீது ஆடுமோ நெஞ்சமே பாட்டெழுது
    அதில் நாயகன் பேரெழுது
    (மாலையில்..)

    படம்: சத்ரியன்
    இசை: இளையராஜா
    பாடியவர்: ஸ்வர்ணலதா

    Reply
  • palli
    palli

    கர்வம் இல்லாத இனிமையான பாடகி; அவர இழப்பால் துயருரும் அவரது குடும்பத்துக்கும் ரசிகர்களுக்கும் பல்லி குடும்ப கண்ணீர் துளிகள். அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்;
    பல்லி குடும்பம்;

    Reply
  • kalai
    kalai

    ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம் அவரது பாடலில் மிகவும் கவர்ந்த பாடல் http://www.youtube.com/watch?v=IFuzKsLrWvk

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    ‘கறுத்தம்மா’விற்காக, உருகிப் போகிற குரலின் உரிமைக்காரி.
    அடி நீயும் போய்விட்டாயா!
    கண்ணிரும் சோறும் தந்த மண்ணை விட்டு…,
    கடைசியில் ஊமையும் ஊமையும் பேசிய பாஷையடி..,
    http://www.youtube.com/watch?v=P7Ldrtz38Os

    Reply
  • pandithar
    pandithar

    போறாளே பொன்னுத்தாயி
    பொத பொதவென்று கண்ணீர் விட்டு….

    வரிகள் ஒவ்வொன்றிலும் சோகம் சொட்டியே எழுதப்பட்டிருக்கின்றது. ஆனாலும் அதை உச்சரிக்கும் இசையின் உதடுகள் கண்களுக்குள் கார்முகில்களை வரவழைத்து விட்டன….

    ஆகவேதான்… அதற்கு தேசிய விருது கிடைத்தது!
    உச்ச தொனியில் பாடும்போது அவள் தன் முகத்தின் அழகை இழக்கின்றாள். ஆயினும் இசை அவளுக்கு அதை விடவும் ஆயிரம் மடங்கு அழகை கொடுத்தது..

    நீ எங்கே?….
    என் அன்பே!!…

    நீ இன்றி
    நான் இங்கே….

    சென்று வா சகோதரி..
    உன் குரல் எங்கள் காது மடல்களில்
    கூடி கட்டி குடியிருக்கின்றது

    உன் நினைவாக……..

    Reply