டென்மார்க் நாட்டில் நூல் அறிமுகமும் புத்தகக் கண்காட்சியும்

Book_Launch_Denmark10Oct10டென்மார்க் நாட்டில் தமிழ் இலக்கிய நூல்களின் அறிமுகவிழாவும், புத்தகக் கண்காட்சியும் நடைபெறவுள்ளன. ஒக்ரோபர் மாதம் 10 -ம் திகதி (10 – 10 – 2010) ஞாயிறு  டென்மார்க் விஜென் (Vejen) நகரில் நடைபெறவுள்ள இவ்விழாவில் கலையரசன் எழுதிய ‘ஆபிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா”, வி. ஜீவகுமாரன் எழுதிய ‘யாவும் கற்பனை அல்ல”, வேதா இலங்காதிலகம் எழுதிய ‘உணர்வுப் பூக்கள்” த. துரைசிங்கம் எழுதிய ‘தமிழ் இலக்கியக் களஞ்சியம்” உட்பட மற்றும் சில நூல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

எழுத்தாளர்கள் வி. ரி. இளங்கோவன், ஜீவகுமாரன், பௌசர், வேதா இலங்காதிலகம், கரவைதாசன் உட்படப் பலர் கருத்துரை வழங்கவுள்ளனர். ஈழத்து எழுத்தாளர் பலரின் நூல்கள், சஞ்சிகைகள் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.

Book_Launch_Denmark10Oct10டென்மார்க் நாட்டிலிருந்து வெளிவரும் ‘இனி” சஞ்சிகை – இணையத்தள வாசகர் வட்டம், நெதர்லாந்து ‘கலையகம்” வாசகர் வட்டம், பாரிஸ் ‘முன்னோடிகள்” இலக்கிய வட்டம் சார்பில் இதற்கான ஒழுங்குகள் மேற் கொள்ளப்பட்டு உள்ளன. ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்தும் கலை இலக்கிய இரசிகர்கள் இவ்விழாவில் கலந்துகொள்வரென எதிர்பார்க்கப்படுகிறது.

http://kalaiy.blogspot.com/

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

2 Comments

 • Nackeera
  Nackeera

  வாசித்தல் அருகிக்கொண்டு போகும் காட்சிகளே கணிசமாகிப்போன கணனியுகத்தில் வாசித்தலை ஊக்குவிக்கும் முகமாக வாசித்தலுக்கு அதுவும் தமிழில் வாசிப்பதற்கு ஜீவன் கொடுக்கும் ஜீவகுமாரின் கண்காட்சி வெற்றி பெறவாழ்த்துகிறேன்.

  Reply
 • T Sothilingam
  T Sothilingam

  டென்மார்க்கில் நடைபெறவுள்ள தமிழ் இலக்கிய நூல்களின் அறிமுகவிழாவும்- புத்தகக் கண்காட்சியும், மேலும் பலரை வாசிக்கும் எழுதும் ஆற்றலை வளர்க்கும் இயக்கத்திற்கு வாழ்த்துக்கள்.

  Reply