அருட்தந்தை S J இம்மானுவேல் மீண்டும் கத்தோலிக்க மதத்துடன் இணைவு! – ‘பாவிகளையும் யேசு மன்னித்து வரவேற்பாராக’: ரி கொன்ஸ்ரன்ரைன்

Emmanuel_S_J_Rev_Frநான் முதலில் தமிழன் – பின்னர்தான் கிறிஸ்தவன்”, “பிரபாகரனை யேசுநாதருடன் ஒப்பிடலாம்” என வேத வாசகங்களைப் பொழிந்த (வணபிதா) பேராசிரியர் டாக்டர். S J இம்மானுவேல் அடிகளார் மீண்டும் கத்தோலிக்க மதத்துடன் இணைவதை தற்போது பரவலாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

1950 க்களில் லத்தீன் அமெரிக்காவில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களில் ‘இறையியல்’ ஒரு புரட்சிகர வடிவத்தை எடுக்க ஆரம்பித்தது. ‘விடுதலை இறையியல்’ என்ற கருத்தாக்கம் உருவானது. இது காலப்போக்கில் லத்தீன் அமெரிக்காவையும் தாண்டிய சர்வதேச கருத்தாக்கமானது. ”கிறிஸ்தவ மத நம்பிக்கையை ஏழைகளின் துன்பம், அவர்களின் போராட்டம், நம்பிக்கை, சமூகத்தை விமர்சனப் பார்வையுடன் அணுகுவது என்ற அடிப்படையில் ஏழைகளின் கண்களினூடாக கத்தோலிக்க மதமும் கிறிஸ்தவமும் பார்ப்பதுவே ‘விடுதலை இறையியல் ‘எனப்படுகின்றது.”

சமூக அநீதிகளுக்கு எதிரான ஒரு உள்ளுணர்வாக இந்த இறையியல் பலம்பெற்றது. இது லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து இலங்கை போன்ற நாடுகளுக்கும் பரவியது. இந்த ‘விடுதலை இறையியல்’ அடிப்படையில் இலங்கையின் தமிழ் பகுதிகளில் இருந்த கத்தோலிக்க மத நிறுவனம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் நிலையை எடுத்தது.

Catholic_Fr_Carry_Piraba_Playcardஆனால் பின்னான காலகட்டத்தில் விடுதலை அமைப்புகளே மக்களது துன்பங்களுக்கும் கொலைகள் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றுக்குக் காரணமாக இருந்த போதும் இந்த மத நிறுவனத்தினால் முழுமையாக தங்களை விடுவித்துக்கொள்ள முடியவில்லை. விரும்பியும் விரும்பாமலும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தமிழ் கத்தோலிக்க மத நிறுவனம் நெருங்கி நின்றதற்கு இதுவே காரணம்.

ஆனால் S J இமானுவல் அடிகளார் அருட்தந்தை கஸ்பார் போன்றவர்கள் தங்களது சொந்த விருப்பம் காரணமாக தங்களையும் தாங்கள் சார்ந்த மத நிறுவனத்தையும் தம் சொந்த நலன்சார்ந்து பயன்படுத்திக் கொண்டனர். 

கடந்த சில வருடங்களாக புலம்பெயர் தமிழர்களின் புலன்பெயர்வை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி அவர்களை உசுப்பேத்தி உசுப்பேத்தி லண்டன் பாரிஸ் ஜேர்மன் நகரங்களில் நடுறோட்டில் படுக்கவைத்து ஆட்டம் ஆடி கூத்தாடி தாம் வாழும் தமக்கு தஞ்சம் கொடுத்த நாடுகளுக்கே இடைஞ்சலாக இருந்த சம்பவங்களில் S J இம்மானுவேலின் பங்கு முக்கியமானது.
 
கடந்த பல வருடங்களாக ஜேர்மனியில் இருந்துகொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார சக்கரத்தைச் சுற்றியவர் S J இம்மானுவேல் அடிகளார். பணத்தை மட்டும் அடிப்படையாக வைத்து எவ்வித அரசியல் அறிவோ சாணக்கியமோ அல்லது மொழித்திறனோ அற்ற புலம்பெயர் புலி வால்களுக்கு உயர் கல்வித் தகைமையும் அதீத பேச்சாற்றலும் பலமொழித் திறமையும் கொண்ட அதிலும் குறிப்பாக ஒரு கத்தோலிக்க உயர் குருவானவர் கிடைக்கப்பெற்றது ஒரு வரப்பிரசாதமாக கருதப்பட்டது. வணபிதா S J இம்மானுவேலின் தகமையுடனும் அனுபவத்துடனும் எந்த புலி பிரமுகரும் ஈடாக இருக்கவில்லை. இதனால் Global Tamil Forum (GTF) (உலக தமிழ் பேரவை) இன் தலைமை S J இம்மானுவேலுக்கு பொன் தகட்டில் வைத்துக் கொடுக்கப்பட்டது.

Emannuel_S_J_Group_With_Gordon_BrownGTF பிரித்தானியாவில் இயங்கிவரும் British Tamil Forum,  Tamils For Conservative,  Tamils For Labour போன்ற அமைப்புக்கள் போன்றதொரு விடுதலைப் புலி ஆதரவு அமைப்பே. ஆக மொத்தமாகக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் வணபிதா இம்மானுவேல் புலன்பெயர் தமிழர்களின் தேசியத்தலைவர். இம்மானுவேல் அடிகளார் Global Tamil Forum (GTF) என்ற நெடியவன் குழுவின் தலைவர் என South Asia Intelligence Review இதழில் குறிப்பு உள்ளது.

Nediyavan_Sivaparan_Perinbanayakamதமிழீழ விடுதலைப் புலிகளால் சர்வதேச விடயங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டவரே நெடியவன் என்கின்ற பேரின்பநாயகம் சிவபரன். தற்போது இவரும் இவரைச் சார்ந்த குழுவினருமே தமிழீழ விடுதலைப் புலிகளின் பெரும்பான்யையை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்களே S J இமானுவலின் பின்னிருந்து உலகத் தமிழர் பேரவையை இயக்குகின்றனர். இவர்கள் இலங்கையில் மீண்டும் குண்டுகளை வெடிக்க வைத்து ‘பனை மரத்தில வெளவாலா தலைவருக்கே சவாலா! தலைவர் வந்துவிட்டார். பராக்! பராக்!!’ என்று பறைசாற்ற நேரம் பார்த்துக் காத்திருக்கின்றனர்.

உலகத் தமிழ் பேரவையின் கீழ் இணைந்துள்ள அமைப்புகள்: Australian Tamil Congress, British Tamils Forum, Canadian Tamil Congress, Danish Federation of Tamil Associations, House of Eelam Tamils, Norwegian Council of Eelam Tamils, New Zealand Tamil Society, Wellington Tamil Society, Swedish Tamil Forum, Malaysia – Tamils Relief Fund, United States Tamil Political Action Council, European Tamil Union, Tamil Cultural Centre.

S J இம்மானுவேல் 18 மே 2009 ற்க்கு பின்னால் உத்தியோகபுர்வ விடுதலைப் புலிகளின் பிரிவு ஒன்றுக்கு தலைவர் என்பது ஆதாரத்தடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. S J இம்மானுவேல் தலைமை தாங்கும் GTF, ‘Protest Sri Lankan Goods’, ‘Protest Sri Lankan Airways’ என்ற மண் கவ்விய பிரச்சாரங்கள் நடாத்தியது என்பது முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியதாகும்.

Vanni_Missionஅதுமட்டமல்லாமல் புலம்பெயர் சமூகத்தின் பெரிய மோசடிகளில் ஒன்றான வணங்காமண் செயற்குழுவிற்க்கு பின் பலமாக British Tamil Forum – BTF இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது, BTF, GTF என்பன ஒரே அமைப்புகள். மேலும் GTFஇன் தலைவராக நியமிக்கப்பட இருந்த எதிர்வீரசிங்கம் வணங்கா மண் முக்கியஸ்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே வணங்கா மண் கொள்ளைக்கு பின்னணியில் S J இம்மானுவேல் அடிகளார் இருப்பது நிரூபணம்.

S J இம்மானுவேல், அமெரிக்காவில் வசிக்கும் உருத்திரகுமார் கூட்டாகவே  Trasnational Government  அமைக்க, இதன் முதற் கருவின் கதாநாயகன் கேபி. கே பி கைது செய்யப்பட்டதன் பின்னால் S J இம்மானுவேல் உருத்திரகுமார் கூட்டே இன்றய விடுதலைப் புலிகளின் சுழியோடிகள். இன்னொரு வகையில் கூறப்போனால் S J இம்மானுவேல், உருத்திரகுமார், நெடியவன் கைகளிலேயே புலிகளின் பெருவாரியான பணம் தங்கிப்போயுள்ளது.

எனவே இன்றைய யாழ்-மன்னார் கத்தோலிக்க பீடமும் தம்மை S J இம்மானுவேலுடன் இணைத்துக்கொள்வது ஊகிக்கக் கூடியதே.

Emmanuel_S_J_Rev_Frவன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் செய்த கொடுமைகளை அப்பட்டமாக மறைத்தது மட்டுமல்ல அவற்றை நியாயப்படுத்தி பிரச்சாரம் செய்த முக்கிய நபர்களில் S J இம்மானுவேல் முக்கியமானவர். உலகில் உள்ள சகல அரசசார்பற்ற பெரும் ஸ்தாபனங்களும், முக்கிய நாடுகளும், விடுதலைப் புலிகளை கண்டித்தபோது “மக்களோடு புலிகள், மக்களே புலிகள்” என புலம்பெயர்ந்து நாடகளிலிருந்து உசுப்பேத்திய பல ஆயிரம் தமிழ் மக்களை கொல்வதில் S J இம்மானுவேலுக்கு பாரிய பங்கு இருக்கிறது. ஒரு தமிழன் என்ற முறையில் ராஜபக்ச சகோதரர்கள் கையில் உள்ள இரத்தக்கறையைவிட இவரின் கையில்தான் அதிக இரத்தகறை இருக்கிறது.

போரின் உச்சக் கட்டத்தில் சென்ற வருடம் மார்ச் மாதம் வவனியா கிளிநொச்சி பகுதியில் முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி வந்த மக்களை நேரடியாக சந்தித்தவுடன், நான் அவர்கள் தப்பி ஓடும்போது (புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிறிலங்கா இராணுவத்தின் பிரதேசத்திற்குள்) புலிகள் செய்த அட்டூழியங்களை நேரடியாக விபரிக்க கேட்டவன். விடுதலைப் புலிகள் தப்பி ஓடும்போது மக்களை நோக்கி சுட்டதையும் அடித்ததையும் வடுக்களுடன் பார்த்த எனக்கு S J இம்மானுவேல் போன்றோர் புலிகளின் வக்கிரத்தை நியாயப்படுத்துவது புலிகளின் பயங்கரவாதத்தைவிட அகோரமானது.

மனிதப் படுகொலைகள் உக்கிரமாக நடந்து கொண்ட கடைசி நாட்களிலாவது பிரகாரனின் விசுவாசிகளாக இருந்த S J இம்மானுவேல் போன்றோர் சற்று நேர்மையான முறையில் பிரச்சினைகளை அணுகி இருக்கலாம்.

Emmanuel_S_J_Rev_Frஅண்மையில் லண்டனில் யாழ்புனித பற்றியரசர் கல்லுரி அதிபருக்கு அளிக்கப்பட்ட கௌரவ விருந்தோன்பிலும் மற்றும் அண்மையில் காலம் சென்ற மூத்த குருவானவர் வணபிதா மதுரநாயகம் அவர்களின் மறைவை ஒட்டி இடம்பெற்ற இரு வைபவங்களிலும் S J இம்மானுவேல் முக்கிய பிரதிநிதியாக வந்திருந்தார். இவ்வாறான மதச்சடங்குகளில் நான் S J இம்மானுவேலை கடந்த 25 வருடங்களாக புலம்பெயர்ந்த மண்ணில் காணவில்லை. நான் இவரை கண்டது எல்லாம் அரசியல் கூட்டங்களில் தான்.

“பாவிகளையும் யேசு மன்னித்து இரட்சிப்பார்” என்ற வேதவாக்கை நம்பித்தான் S J இம்மானுவேல் அடிகளார் கத்தோலிக் மதத்துடன் இணைந்து கொண்டால் நல்ல விடயம் தான். அதற்கு மாறாக எஞ்சியுள்ள புலம்பெயர் தமிழ் மக்களை இன்னுமொரு முள்ளிவாய்க்காலுக்கு அழைத்து செல்லத்தான் வந்துள்ளாரோ என்பதற்க்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

24 Comments

  • Pearl Thevanayagam
    Pearl Thevanayagam

    Rev. Fr S.J. Emmanuel is a very enlightened individual and he had his early ecumenical education in Italy and he travelled with my late father in 1965 (my father paid his own way for his university studies in fine arts and sculpture).

    I have known Fr Emmanuel since my childhood and to be a very pious Catholic and a scholar. He is one of those rare Catholic priests who believed in Christian Socialism with a social conscience promoted by British authors such as Charles Kingsley (author of Water Babies) highlighting the plight of orphans in the 18th century.

    The unsubstanitated allegations against an independent-thinking priest who defied standard norms to fight for justice shows the poor quality of journalism.

    Thesamnet should provide substantial evidence before casting aspersions on a priest who has done much for the rights of Tamils both Hindus and Christians.

    Reply
  • மாயா
    மாயா

    சிலுவை மரங்கள் இல்லாததால் , குண்டுகளையும், துப்பாகிகளையும் பிதா எமக்கு அருளினார். பிதாவே ,இவர்கள் தெரியாமல் செய்யும் பாவங்களை மன்னித் தருள்வீராக.

    இது போல தமிழ் அரசியல்வாதிகள் அன்று இளையோரை உசுப்பேத்தி ஆயுதம் தூக்க வைத்தனர். அப்படி ஆயுதம் தூக்கிய இளசுகள் பெரிதாகி, முள்ளி வாய்க்கால் எனும் கல்வாரியில் எமக்காக இரத்தம் சிந்தி உயிர் விட்டனர். ஏசுவைப் உயிர்த்தது போலவே இவர்களது உயிர்ப்புக்காக நாம் காத்திருக்கிறோம்.

    அதேபோல புலத்து இளசுகளையும் உசுப்பேத்தி , இலங்கை சென்று தலிபான்கள் போல , குண்டுகளோடோ அல்லது பெரிய பைலட்டுகளாகியோ இலக்குகளைத் தாக்க வேண்டும் என இந்த தலைவர்கள் இளசுகளுக்கு அறைகூவல் விடுகின்றனரோ? பிதாவே பாவிகளை ஆசீர்வதியும்.
    http://www.youtube.com/watch?v=qKConvId1Oo&feature=player_embedded

    Reply
  • Ajith
    Ajith

    The author of this article Mr Constantine is hanging on relegion to find fault with Father FJ Imanueal. Fr. SJ Imanuel has the right to involve in politics and act according to his will. It is a matter for him, not a matter for Mr. Constantine. Being a tamil, suffered under continuous racist Sinhala regimes he has the right to defend his people’s right. He is not an associate with the murders of buddhist regime as like Constantine. Mr. Constantine, may I ask you one think in what way Father Imanuel is threat to you. If you have enough talent and charcteristics to lead the people behind you why should you bother about Father Imanual.

    Reply
  • BC
    BC

    புலம்பெயர் தமிழ் மக்களை இன்னுமொரு முள்ளிவாய்க்காலுக்கு கொண்டுபோக முயற்சிப்பவர்கள் பட்டியல் அடிகளார் இம்மானுவேல்,அதிபர் சிறிதரன் என்று நீளும். சிறிதரன் பாடசாலை பிள்ளைகளை பிடித்து புலிகளுக்கு கொடுத்ததாக தேசம்நெற் வாசகர் முன்பு அறிய தந்தார். இப்போ புலத்து தமிழ் பிள்ளைகளை பார்க்கும் போது இவருடைய இரத்தம் ஒவ்வொரு நிமிடமும் ஏதேதோ சொல்லி கொண்டிருக்கிறதாம்.

    Reply
  • நந்தா
    நந்தா

    இதென்ன புதுக் கதை!
    இந்த இம்மனுவல் எப்பொழுது கத்தொலிக்க பாதிரி கூட்டத்தை விட்டுவிட்டு “வேறு” பாதிரிக் கூட்டத்துக்குப் போய் பாதிரி உடுப்புடன் அலைந்தார்? பிரபாகரனிடம் எப்போது ஞானஸ்னானம் பெற்றார் என்று கட்டுரையாளர் சொல்லாதது ஏன்?

    புலிக்கும்பலுடன் பாதிரிகள் வங்கிக் கொள்ளைகள் நடத்தினார்கள். கொலைகள் கொள்ளைகள் என்று அலைந்தனர். இன்றும் அலைகிறார்கள்.

    இந்த இம்மானுவல் கத்தோலிக்க பாதிரியாக மீண்டும் இணந்துள்ளார் என்றால் இவ்வளவு காலமும் இந்த ஆள் எப்படி வண.பிதா என்று அழைக்கப்பட்டார்? சில வேளைகளில் வத்திக்கான் போப் ஏதாவது “நோபே” லீவு கொடுத்து விட்டிருந்தாரா?

    இந்த ஆளுக்கு மன்னிப்புக் கொடுத்த மகா பாதிரி யார் என்றும் கட்டுரையாளர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்!

    மார்க்சின் சோஷலிசத்தை “எதிரி” எனும் வத்திக்கான் கும்பல் “கிறிஸ்தவ” சோஷலிசம் பற்றி கதை விடுவது மாத்திரமின்றி பெரும்பான்மை இந்துக்களைக் கொண்ட தமிழர்களுக்கு “கிறிச்தவ” சோஷலிசம் மூலம் விடுதலை எடுக்கப் புறப்பட்டதாக இப்பொளுது “அள்ளி விடும்” கதைகளைப் பார்த்தால் தமிழர்களுக்கு கிறிஸ்தவ கும்பல்களினால் இன்னமும் ஆபத்து உள்ளது மாத்திரம் புலப்படுகிறது!

    மக்களுக்கு சேவை என்று புழுகடிக்கும் இந்த பாதிரிகள் மக்களை ஆயிரக் கணக்கில் கொன்று பசியாறிவிட்டு அந்த மக்களிடம் இதுவரையில் மன்னிப்புக் கேளாது மவுனம் சாதிக்கும் போக்கிரித்தனத்தை தமிழர்கள் ஏற்று இந்த போக்கிரிப்பாதிரியை தலையில் தூக்கி வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கட்டுரையாளருக்கு இருந்தால், அதனை மறந்து விடுவது நல்லது!

    Reply
  • நந்தா
    நந்தா

    Pearl and Ajith:

    What is the crap CHRISTIAN SOCIALISM? Killing and robbing HINDUS?

    Dont you know that this Emmanuel also a party to the Tamil orpahans in Sri Lanka?

    How are you justifying this man who was a part of LTTE terrorism?

    This fellow cannot claim anything TAMIL because he is a laborer for Vatican which is always against the Tamil culture! If he claims anything as “HIS PEPOPLE”, they are CATHOLICS only and not Hindus!

    Why are you both crying in English while pretend for TAMIL?

    Reply
  • T Constantine
    T Constantine

    Ajith

    With all due respect, Fr S J is not any threat to me. He is a threat to human kind.

    I accept Fr S J has much more talent, experience and qualification. Above all I am not a priest (Yet) hence I dint / do not have the privilege.

    With all his talents and spiritual connections – associating with a terror group is a disaster.

    Thank you, Constantine

    Reply
  • arul
    arul

    அருட்தந்தை பங்கு கொண்டது விதவைகளின் பணத்தை புலிகளில் இருந்த இளைஞர்களும் யுவதிகளும் என்ன செய்வதென்று தெரியாமல் இருப்வர்களது பணத்தை சிறையில் எந்த உதவிகளும் கிடைக்காமல் இருக்கம் அந்த இளம் சந்ததியின் பணத்தை அனாதரவாக இருக்கும் குழந்தைகளின் பணத்தை களவு எடுக்க அந்தப்பணத்தை தான் பாதுகாப்பதாக கூறி ஏமாற்றிவிடவேயாகும் அவர் ஒன்றும் அரசியலில் இறங்க என்ன தேவையுள்ளது கடவுளை பிராத்திக்க வேண்டியது தானே எல்லாம் தானாகவே நடக்கும் என்று போதனை புரியும் பாதிரிக்கு என்ன புலி அரசியல் தேவையிருந்தது சிலுவையை தூக்கி பிரார்த்தனை செய்ய கோரி மக்களை எமாற்றும் பாதிரிகள் எப்படி பயங்கரவாதி பிரபாகரனின் படத்தை தூக்கிப்பிடித்து ஊர்வலம் வரலாம்.

    சரி புலிகளின் அடக்குமுறை என்றால் இன்றுவரை அந்த அடக்கு முறைபற்றி ஒரு வார்த்தை பேசியிருக்கலாம் தம்மீது தொடர்ந்த நிர்ப்பந்தத்தை பேசியிருக்கலாம் அல்லது தாம் செய்த தவறுகளை மக்களின் முன்வைத்தார்களா. இறுதிக்காலத்தில் முல்லைத்தீவில் நடைபெற்ற மாற்றங்களில் மதமாற்றம் என்ற பெரில் செய்தவைகள் எல்லாம் தமக்கு பணம் திரட்டினார்களே தவிர வேறு என்ன செய்தார்கள்.

    பாதிரிகள் உண்மைகள் பாவமன்னிப்புக்களில் நம்பிக்கை கொண்டவர்கள் தமது தவறுக்கு மன்னிப்பு கோர வேண்டும் வணங்காமண் கண்ணீர் வெள்ளத்தில் சேர்த் பணத்தின் கணக்குகளை மக்களுக்கு முன்வையுங்கள் புலிஇயக்க உறுப்பினர்களின் நலனையும் வாழ்வுக்க அல்லல் படும் விதவைகள் குழந்தைகளின் வாழ்வைப்பற்றி உங்களிடம் உள்ள பணத்தால் திருத்துங்கள்

    Reply
  • Pearl Thevanayagam
    Pearl Thevanayagam

    I can write very well in Tamil. My impediment is I do not have Tamil keyboard. I ask commentators to give proof that Rev. Fr Emmanuel ever resorted to exploiting Tamil cause or earning kudos.

    I ask for nothing but evidence. Pure conjectures and gossip cannot vilify this priest who has a history of benevolence and downright regard for oppressed Tamils.

    Fr Singarayer stood up for the LTTE because he believed they were fighting a vicious class war in the form of FP headed by Amirthalingam. He was all for the upliftment of the lower castes which the FP denounced.

    Fr Emmanuel showed the same commitment to a classless society be they Hindus or Christians. He earned the wrath of conservative Catholics and majority Sinhalese in his pursuit for juctice. How bad is that.

    Let us give him his due. He is a treasure we cannot ignore.

    Hindus are still living in medieval times and their culture is obfuscated by their blind beliefs in astrology and foolish caste systems.

    Even the Hindu diaspora are still behind times. They need a wake-up call that we are living in a global village and narrow caste limitations cannot advance Tamil aspirations.

    Reply
  • நந்தா
    நந்தா

    தமிழில் எழுத தமிழ் கீபோர்ட் அவசியமில்லை என்பது தெரியாத இந்த பேர்ல் தேவனாயகம், “கிறிச்தவ சோஷலிசம்” பற்றியும் கத்தொலிக்க பாதிரிகளின் புலி தொடர்புகளையும் இப்பொழுது “இந்துக்களுக்கு” எதிரான வழக்கமான விஷம் கக்கலையும் நியாயபடுத்த “வழக்கமான” பொய்களை அவிழ்த்துவிடுவதைப் பார்க்கலாம்.

    தமிழரசுக் கட்சி என்பது ஒரு கிறிஸ்தவ செல்வனாயகத்தினால் ஆரம்பித்து தலைமை தாங்கப்பட்டது. செல்வனாயகமோ, தியோகுப்பிள்ளையோ 60களின் பிற்பகுதியில்நடந்த “சாதி” எதிர்ப்பு போராட்டங்களை ஆதரிக்கவில்லை.

    பேர்ல் தேவனாயகம் காது குத்துவதில் கை தேர்ந்தவர் போலத் தெரிகிறது. தமிழரசுக் கட்சிக்கு யாழ்ப்பாண கத்தொலிக்க பீடம் எப்போதும் ஆதரவு வழங்கியே வந்துள்ளது. எப்போதாவது கத்தொலிக்க தியோகுப் பிள்ளைகளோ, தோமஸ் சவுந்தரநாயகங்களோ செல்வனாயகத்துக்கும் அவருடைய கட்சியான தமிழரசுக் கட்சிக்கும் எந்த விஷயத்திலாவது எதிர்ப்புத் தெரிவித்ததாக இவர் காட்டுவாரா?

    இந்துக்கள் என்றதும் வழக்கமான “சாதிக்” கதையை அவிழ்த்துவிடும் கத்தொலிக்கர்கள் கீழ்சாதிக் கத்தொலிக்கர்களில் எத்தனை பேர் யாழ் பிஷப்பாக வரமுடிந்தது என்று இந்த பேர்ல் தேவனாயகம் சொல்லுவாரா? அப்படி வர முடியாவிடின் காரணத்தை முன் வைப்பாரா?

    இவவின் “கிறிஸ்தவ சோஷலிசத்துக்கும்” அடோல்ப் கிட்லரின் “நாஷனல் சோஷலிசத்துக்கும்” என்ன வேறுபாடு?

    புலிகள் கிட்லரின் வழிமுறைகளைக் கையாண்டது கத்தொலிக்க பாதிரிகளின் சுவிசேஷம் என்பது தற்போது எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால் வத்திக்கான் போப்புக்கள் கிட்லரையும் “ஆசீர்வாதம்” செய்து கைதூக்கி விட்டவர்களல்லவா!

    சோஷலிசப் புரட்சியாளர்களை ஆதரித்தமைக்காக நிகராகுவாவிலும் மற்றும் பல லத்தீன் அமெரிக்கநாடுகளிலும் பல கத்தொலிக்கக் குருமார் போப்பினால் துரத்தப்பட்டுள்ளனர். ஆனால் இந்த இம்மானுவல் மாத்திரம் துரத்தப்படாது இருந்த காரணம் என்ன? வத்திக்கானின் ஆசீர்வாதத்துடந்தான் இலஙையில் கத்தொலிக்க கும்பல்கள் புலிப்பயங்கரவாதத்தை ஆதரித்தார்கள் என்பதே உண்மை!

    இந்த பேர்ல் தேவனாயகம் புலிகளின் பகுதிக்குள் புக முயற்சித்து அடையாளம் கண்டு துரத்தப்பட்டது பற்றி சகலருக்கும் தெரியும்! எனவே இங்கிலிஷில் சொதப்பி உண்மைகளை மறைக்கலாம் என்று கனவு காண வேண்டாம்!

    Reply
  • Laurence Sivanadiyar
    Laurence Sivanadiyar

    பேர்ல் தேவனாயகம் அவர்களே! தமிழில் எழுதுவதற்கு தமிழ் தட்டச்சு பலகை தேவை இல்லை.பாடசாலையில் படிக்கும்போது தமிழ் ஆசிரியரும், ஆங்கில ஆசிரியரும் வகுப்பறையில் ஒரே கரும்பலகையைத்தான் உபயோகித்தனர். அதேபோலத்தான் இதுவும். உண்மையாகவே உங்களுக்கு தெரியாமலிருந்தால் மிக சுலபமாக தமிழில் தட்டுவதற்கு http://www.google.com/transliterate/ என்ற இணைய தளத்தில் தேடவும்

    Reply
  • Thanpalasingam
    Thanpalasingam

    “Hindus are still living in medieval times and their culture is obfuscated by their blind beliefs in astrology and foolish caste systems.”

    தேவநாயகம், நீங்கள் தீவகத்தை சேர்த்தவர். உங்களுக்கு தெரியும் என நினைகிறேன் கத்தோலிக்க வேளாளர் என தம்மை கூறும், கேரளாவில் இருந்து போர்த்துகிசரால் குதிரை பராமரிக்க அழைத்து வரப்பட்ட கரம்பொன் கத்தோலிக்க சமுகத்தின் சாதி வெறியும், அவர்களால் ஒடுகப்பட்ட மக்களின் நிலையும். இலங்கையில் யுத்தம் தொடங்கியவுடன், அதாவது பிரபாகரன் துரைஅப்பாவை சுட்டவுடன் ஜெர்மனிக்கும், வந்து தாம் தாம் சுட்டதென அகதி அங்கீகாரம் கோரியவர்கள் கரம்போனை சேர்த்தவர்களே. அதன் பிறகு அனலைதிவை சேர்ந்த வேளாளர் தொடர்ந்தார்கள். இன்று karampon இல் அழிந்த நிலையில் பல நூறு வீடுகள் இருகின்றன. அதை வேறு சாதியினருக்கு விற்ற கூடாதென எழுதாத சட்டம் போடுள்ளனர் இந்த கரம்பொன் மனிதர்கள். ஏன் உன்களது வீடும் அழிந்த நிலையில் தான் உள்ளது. நீங்கள் விற்கா விட்டாலும் வேறு சாதி மக்களுக்கு வாடைககுதல் குடுக்க தயார நீங்கள். நானும் அதே ஊர்தான். நாம் நமது சிந்தனையை முதல் தூய்மை ஆக்குவோம். அதன் பின் அடுத்தவரை விமர்சிக்கலாம்

    Reply
  • kalai
    kalai

    பேர்ல் தேவனாயகம் தமிழில் எழுத தட்டச்சு அவசியமில்லை என்பது தெரியாமல் இருப்பது அக்கறையின்மை. ஆனால் நீங்களோ…. தெரியாமல்! ஆச்சரியமா இருக்கிறது!!
    சாத்திரம் சம்ப்ரதாயம், சாதி கத்தோலிக்கர் பார்ப்பதில்லையாம் என்ன வேடிக்கை. கத்தோலிக்க திருமணம் மற்றும் கத்தோலிக்க குருப்பட்ட வைபவத்திற்கு “நாள்” பார்ப்பதிலையா? மேலும் பூரண கும்ப மங்கல விளக்கு ஏற்ருவதில்ல்யா? நான் மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவன் பல மத குருமாரின் குருப்பட்ட வைபவத்திற்கு சென்றிருக்கிறேன் எனக்கு கதை சொல்ல வேண்டாம்.பூரண கும்ப மங்கல விளக்கின் அர்த்தம் தெரியுமா? அடுத்ததாக சாதி பார்ப்பதிலையா? இத்துடன் பி .பி.சி செய்தி இணைக்கிறேன் .

    Bigotry alive for Christian Dalits

    By Sunil Raman
    BBC News, Eraiyur

    The village came up around the parish church, Lady of the Rosary Parish

    Centuries ago, as their forefathers faced social and economic deprivation, many low-caste Hindus embraced Christianity.

    But in one corner of southern India, their hopes for equality remain unfulfilled hundreds of years on. Called “pariahs”, hundreds of Dalit Christians continue to face discrimination – not from Hindus but fellow Christians.

    More than 200km (124 miles) from Chennai, the capital of the southern state of Tamil Nadu, is the village of Eraiyur.

    Home to about 3,000 Dalit Christians, mostly farm labourers and migrant workers, the area witnessed violence last year when Dalits demanded equal treatment.

    The village is dominated by Vanniyar Christians numbering 15,000, who own most of the land and businesses.

    They imposed restrictions on Dalits even though they had also converted to Christianity.

    Restricted life

    A 17th Century church building, Lady of the Rosary Parish, stands tall above the Eraiyur settlement. The village came up around the parish church, with Vanniyar houses closest to it. The Dalits were forced to build their small huts on the fringe of the village.

    It did not take long for the divisions within the Hindu social system to be reflected among the new Christians.

    The dominant Vanniyars created rules which restricted the movement of the Dalits.

    We were told not to touch any upper caste person, not to get too close to them, not to talk to them

    Mrs Peraiyamakar
    When they visited the parish church they were not allowed to walk on the main street leading to the building. Instead they had to use a side street that led to the church gate.

    When Dalits died they were not allowed to be buried in the cemetery. Their burial ground is beyond the village and can only be accessed through a broken path.

    In addition, the funeral cart parked inside the church building can be used only by Vanniyars.

    “We were told not to touch any upper caste person, not to get too close to them, not to talk to them,” says Mrs Peraiyamaka, 60, a farm labourer who has been visiting the parish church since childhood.

    “It is no different now.”

    Mr Thomas, a 60-year-old labourer says there is also a fear of violence as young Dalits refuse to be submitted to such humiliation.

    He says this fear prompted the Dalits to build an alternative church.

    A single-room, white-washed brick structure with an iron grill for the entrance is set in a small open ground.

    Called Our Lady of Perpetual Help, the Dalit church has a coloured icon of Virgin Mary with Baby Jesus in her arms. She is flanked by plastic flowers and incense sticks burn on the sides.

    The Dalits’ demands of recognition for their church were rejected by local Catholic priests on the ground that a village can have only one parish church.

    There is no big change after we came to Christianity. We have very good Christian names, we read Bible and got to Church instead of temples.

    Mr Mathew, Dalit activist
    Mr Mathew is a Dalit activist who graduated from Madras University.

    Having faced prejudice as a schoolboy, he has now decided to fight for the rights of Dalits.

    His efforts to seek justice have created tension in his village, forcing him to move to elsewhere.

    He is angry that although the constitution has banned “untouchability” it continues to be practised in different ways.

    “My family may get some minimum help or guidance from Christianity. That’s all. There is no big change after we came to Christianity,” says Mr Mathew.

    Vanniyars disgruntled

    Dalits are demanding that their church be recognised
    As we walked out of the Dalit quarters towards the well laid-out area where Vanniyar Christians live under the shadow of the whitewashed parish church, we were greeted by a few angry women.

    They did not want us to take pictures and asked us to leave.

    A few angry residents of Vanniyar quarters gathered around us. They agreed to answer our questions. Emily, 25, was eager to give their version of the story.

    “We have allowed them to use the road. They are creating trouble,” she says.

    We asked her how in a free country one group could dictate to others on the use of a public road.

    “I don’t know. It’s been like this… but we have now allowed them,” Emily replied.

    Similar responses came from other Vanniyars we spoke to.

    Mr Arukadas, a retired government teacher lives next to the parish church and he shared his unhappiness with the Dalit Christians.

    Asked about using a common funeral van and a graveyard where all Christians irrespective of their past Hindu caste identity can be buried, he retorted: “It will take a long time for a common graveyard.”

    http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8090009.stm

    Reply
  • thurai
    thurai

    ஈழத்தமிழர்களிற்கு அரசியலும் அரசியல் தலைமையும் இல்லாமல் செய்தவர்கள் புலிகள். இதே போல் புலம்பெயர் தமிழர்களிற்கும் இப்போ புலிகளின் அழிவின் பின் ஓர் அர்சியல் தலைமை புலம்பெயர் நாடுகளில் தோன்ற வாய்புண்டு. இதனை வியாபாரப் புலிகள் விரும்பமாட்டார்கள்.

    இம்மானுவேலை முன்நிறுத்தி அவரின் வாழ்காலம் வரை திரைமறைவில் திருட்டு வேலைகளை புலிகள் செய்வார்கள். இவர் ஆன்மீக விடுதலை பற்ரியோ அல்லது ரசியல் விடுதலை பற்ரியோ பேசுவதில்லை. ஈழ்த்தமிழரின் விடுதலைப்போராட்டம் தொடர குரல் கொடுங்கள். சிறையிலுள்ள புலிகளின் விடுதலைக்கு பணம் கொடுங்களென்பதே இவரின் பேச்சு.

    இவர் தன்னையோ, தன் சமூகத்தையோ திருத்த முடியாதவர். நீரோடு ஓடும் சருகுகள் போல் காலத்தோடு சேர்ந்து தம் வாழவைவழமாக்கும்
    வீரமற்ர மானிட வர்க்கங்கங்களேயாகும்.

    துரை

    Reply
  • Ajith
    Ajith

    Dear Constantine,
    If Father SJI is not a threat to you, then he is not a threat to any humun kind. If you put LTTE as a terror group, then you should tell who in Sri Lankan politics not belong to terrorism. In my opinion your association with Rajapakse more dangerous to all human kind than his association with LTTE. It is clear from your admission that you are not previlaged to become a priest because of your inferior attitude.

    Reply
  • Pearl Thevanayagam
    Pearl Thevanayagam

    It has always been the excuse of commentators to nitpick.

    When I said I cannot download Tamil scripts on my keyboard the commentators descendend on me like vultures missing wood for the trees.

    I asked a pertinent question as to how the author could substantiate that Rev. Fr Emmanuel profited from the LTTE.

    Mr Constantine could not reply or he did not have a reply.

    It is immoral and disingenous to cast aspersions on a priest who stood by Tamils through thick and thin. Should you find any evidence of wrongdoings you must substantiate.

    Priests such as Rev. Fr. Emmanuel gave up worldly pursuits to give their whole life to the betterment of mankind and justice.

    Please provide evidence Fr Emmanuel sought material gains.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    இன்னொரு விசயம் பாதிரியார் பாதியாப்போனாருங்கோ. பாதியானவர் சொன்னார் ஆத்மவிடுதலை இல்லதவன் போராடமுடியாது என்றார். அப்படியானால் என்ன சொல்ல வருகிறார். நானிருக்கிறேன் கிறிஸ்தவர்களாக மாறுங்கள் நான் போராடி பிரபாகரனுக்குப் பதிலாக தமிழ்ஈழம் எடுத்துத்தருகிறேன் என்கிறாரா?

    Reply
  • thurai
    thurai

    ஒரு இனத்திற்கு அழிவு வருமுன் காப்பவர்களே அந்த இனத்தினை தலைமைதாங்குவதற்கும் வழிநடத்துவதற்கும் தகுதியானவர்கள். ஈழத்தமிழர்களின் அழிவிற்கு தமிழரிடையே உள்ள சம்யங்கள் அனைத்துமே பொறுப்பேற்க வேண்டும். இதில் இந்து கிறிஸ்து என்று வேறுபாடில்லை. இதே போலவே அரசியல் கட்சிகழும்.

    புலம்பெயர் நாடுகளில் தமிழரோடு சேர்ந்து அகதிகளாகிய தெய்வங்களெல்லாம் தமிழரை மட்டுமா காக்கின்றன, அருள் கொடுக்கின்றன? புலம்பெயர் நாடுகள் எல்லாம் இந்தத் தெய்வங்கள் வருமுன் வறுமையிலா வாழ்ந்தன்?

    எனவே ஈழத்த்மிழரின் பேரைச் சொல்லும் அட்சகர்களே பாதிரிகளோ எல்லோரும் தமது பிழைப்புக்காகவேயாகும் இவர்களின் பின்னால் வாழும் ஏமாற்றுக்காரர் யாவரும் ஈழ்த்தமிழர்களேயாகும். பெயரளவில் மட்டும் இந்துக்கள் கிறிஸ்தவர்கள் செயல்களில் யாவரும் புலிகளேயாகும்.

    துரை

    Reply
  • Mythili
    Mythili

    The issue here is not Fr Emannuel. The issue here is this blog whose intention seems to mislead people, create confusion and demean people, in the name of freedom of expression.

    It is becoming more and more clear where the calibre of people writing in the blog are coming from, starting with the editors who think they are all people with intergrety.

    Before writing about others they should think of their backgrounds. They all have blood in their hands. Could the person who has has written this note and the editors of this blog deny that they all ones belonged to groups who have murdered, Plundered wealth of civilins and fled the country.

    Would they declare themselves as to which murderous groups they belonged.

    The question here is What right they have to speak about others.

    Reply
  • T Constantine
    T Constantine

    Pearl Thevanayagam on September 29, 2010 1:59 pm //The unsubstanitated allegations //

    I have well reseached my article. Your allegation is very vague. Please be specific as to which allegation is unsusbstanied??

    நந்தா on September 29, 2010 8:14 pm

    // இம்மனுவல் எப்பொழுது கத்தொலிக்க பாதிரி கூட்டத்தை விட்டுவிட்டு “வேறு” பாதிரிக் கூட்டத்துக்குப் போய் பாதிரி உடுப்புடன் அலைந்தார்? பிரபாகரனிடம் எப்போது ஞானஸ்னானம் பெற்றார் என்று கட்டுரையாளர் சொல்லாதது ஏன்?//

    Nantha , you dont deserve any answer.

    Ajith on September 30, 2010 9:30 pm

    //In my opinion your association with Rajapakse more dangerous to all human kind than his association with LTTE. //

    I would say equally bad – Not more not less!!! Any how R was elected !!

    //It is clear from your admission that you are not previlaged to become a priest because of your inferior attitude.//

    Then you should be a priest. Sorry Fr Ajith

    Pearl Thevanayagam on September 29, 2010 10:01 pm //Please provide evidence Fr Emmanuel sought material gains.//

    Then who is financing Fr SJ’s world trips ?? Who financing his meetings?? Is it Vatican??

    Mythili on October 2, 2010 11:00 pm //Would they declare themselves as to which murderous groups they belonged.//

    MYTHILI, I am not hiding behind any name nor I am not in any group. I have written this article on my name – Speak for yourself

    Pearl Thevanayagam on September 29, 2010 10:01 pm

    //Hindus are still living in medieval times and their culture is obfuscated by their blind beliefs in astrology and foolish caste systems.//

    What sort of rubbish is this. At least Hindus are not institutinally protecting child abusers. Please dont start on comapring religions – all religions are prying on humans ignorance and stupidity.

    Thank you

    Reply
  • நந்தா
    நந்தா

    CONSTANTINE:
    Read the heading of this article. If you tell he came back to the Catholic Church, you must tell where did he go and how he was able to use the uniforms and use the words REV. Not only that you have to provide how he was able to come back after working for a criminal gang!

    Dont try to escape.

    Reply
  • Pearl Thevanayagam
    Pearl Thevanayagam

    Mr Constantine,

    Do you have proof that Rev. Fr Emmanuel misused funds. His trips are sdponsored by well-wishers who see him as a learned and impartial representative of Tamils. How bad is that? He never left the Catholic church and he was never involved in any child abuse. This is a serious allegation.

    Did not Hindu Priests engage in sexual misconduct? Certainly there are priests who have misbehaved. But Rev.Fr. Emmanuel Seemampillai is not one of them. He transcends caste creed and culture and it does not matter one little bit which part of Sri lanka he comes from.

    Yours are still conjectures and assumptions. Please provide proof of your allegations. Otherwise you are vilifying a respected and holy Catholic priest and forfeiting your journalistic credentials if you have any.

    Reply
  • T Constantine
    T Constantine

    Dear Mrs Pearl Thavanayagam

    You must read the articles fully before you comment. Issue of child abuse has been mentioned in connection to the Catholic Church in general, not in specific to an individual priest. Please don’t purposefully misrepresent my statement.

    If you think Global Tamil Forum, BTF and other related institutions are the /’well-wishers who see him as a learned and impartial representative of Tamils’/ then I should rest my case with you. These groups are the left over’s of LTTE. What ever said and done LTTE is a criminal gang and Fr SJ is a representative of that mafia.

    I am fully aware of the sexual misconduct of Hindu priests and priest of other faiths as well. That doesn’t justify the wrong doing of Catholic Church. I am also a Catholic product hence please don’t push your luck. I can tell some matters that may take this argument into a different level.

    If Fr SJ speaks about the human right violations and other atrocities committed in Sri Lanka – as a priest , then it must be appreciated. He chooses the LTTE platform to raise these issues hence its controversial, illegal and bringing his own church in to disrepute.

    Me forfeiting my journalistic credentials (if any) is different ball game comparing to FR SJ forefitting the fundamental teaching of the Catholic Church. He should stop encouraging hate and division within society. He is in a unique position to do that. Let him speak about human rights and freedom of expression from his own chosen platform (Catholic Church) NOT GTF or any other LTTE mafia groups. Apart from that I don’t have any issues with Fr SJ.

    Thank you

    Reply
  • khasim
    khasim

    செப்டம்பர் 29ல் தேசத்தில்வந்த இந்தக் கட்டுரையை இலங்கைநெற் ஒக்ரோபர் 16 இன்று மறுபிரசுரம் செய்துள்ளது. அண்மையில் இலங்கை அரசாங்கம் இம்மானுவேலுக்கு எதிராகவும் நாடு கடந்த தமிழீழத்துக்கெதிராகவும் பிரச்சாரங்களை தனது ஆதரவாளர்கள் மூலம் முடுக்கிவிட்டுள்ளது. அதன் எதிரொலியாகவா இதை மறுபிரசுரம் செய்துள்ளார்hகள்??……..
    தேசம் ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையை இலங்கைநெற் மறுபிரசுரம் செய்துள்ளபோதும் கட்டுரையின் மூலத்தைத் தெரிவிக்காமல் அதனை மறைத்து வெளியிட்டது எதற்காக??………..

    Reply