தமிழர் தகவல் நடுவம் திறந்த கொள்கையையும் வெளிப்படைத் தன்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்! : த ஜெயபாலன்

Varathakumar_V_TICtic_logoஎனது மனதின் வேதனை ஒன்றை இங்கு நான் கூறியாக வேண்டும். இது எனது வேதனை மட்டுமல்ல இலங்கை வாழ்மக்களின்பால் மானசீகமாகவே அக்கறை கொண்டவர்களின் வேதனையும் தான். கடந்த 30 ஆண்டுகளின் அவலங்களுக்கும் தேக்கத்திற்கும் பின்னரும் எந்த அரசியல் நடவடிக்கைகள் இந்த இழிநிலைக்கு எமது நாட்டை இட்டுச் சென்றனவோ, அதே பாதையில்த்தான் இப்போதும் செல்வதுபோல் தெரிகிறது. அதே ஓட்டை விழுந்த கப்பலில்தான் அரசியல் பயணங்கள் தொடர்வதுபோல் தெரிகிறது. அப்படியானால் எம் இனிய மக்களுக்கு என்றுமே விமோசனம் இல்லையா? என கேட்கத் தோன்றுகிறது? இந்த நிலைமையை இந்த நிகழ்ச்சி (சுவிஸில் இடம்பெற்ற தமிழ் பேசும் கட்சிகளின் மாநாடு.) ஓரளவாவது மாற்றியமைக்க வேண்டும். வாயளவில் அல்லாது செயலளவில் ஒற்றுமையும் புரிந்துணர்வும் வேண்டும். ஒரு புதிய பரிணாமம், ஒரு புதிய பாதை திறக்கப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும். போர் முடிவுற்ற சூழ்நிலையில் நாம் சரியாகப் பயணிக்க வேண்டும் என்பதே இலங்கை மக்கள் அனைவரது சுபீட்சத்திலும் அக்கறை கொண்டவர்களின் ஆதங்கமாகும்.

வரதகுமார் – நிறைவேற்று செயலர். தமிழர் தகவல் நடுவம் மீட்சி: இதழ் 13, நவம்பர் 2009

”Role of Diaspora in renewing hope and rebuilding lives of the war affected communities in Sri Lanka: Some thoughts and Action. – இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் வாழ்வை மீள்கட்டமைப்பதிலும், மீள நம்பிக்கையூட்டுவதிலும் புலம்பெயர்ந்தவர்களின் பாத்திரம்: சில சிந்தனைகளும் செயற்பாடுகளும்” என்ற தலைப்பிலான சந்திப்பு ஒன்றினை தமிழர் தகவல் நடுவம் ஒக்ரோபர் 02 2010ல் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில் இலங்கையில் இருந்து தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் சமூகங்களைச் சேர்ந்த கல்வியியலாளர்களும் மனித உரிமைவாதிகளும் கலந்துகொள்கின்றனர். இவர்கள் செப்ரம்பர் 25 2010 முதல் ”Post-war challenges facing Tamil speaking peoples of Sri Lanka. – இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் போருக்குப் பின் எதிர்கொள்ளும் சவால்கள்” என்ற தலைப்பில் பலசுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட தகவலுடன் இந்த அழைப்பை விடுத்துள்ள தமிழர் தகவல் நடுவம் இதனை தாங்கள் மேற்கொள்ளளும் பல்வேறு முன்முயற்சிகளில் ஒன்று என்று மட்டும் குறிப்பிட்டு உள்ளது. தமிழர் தகவல் நடுவம் கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் சந்திப்புக்களையும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வந்தபோதும் மே 18 2009ற்குப் பின் முரண்பட்ட அரசியல் சக்திகளையும் உள்வாங்கி செயற்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்தி வருகின்றது. இதுவிடயத்தில் பல்வேறு முன்முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் அவை காத்திரமான பலனை அளிக்கவில்லை என்பதே உண்மை. ஆனாலும் உரையாடுவதும் விவாதிப்பதும் ஆரோக்கியமானதே. அதற்கான தளத்தை தமிழர் தகவல் நடுவம் பேணி வருகின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் இருந்து தமிழர் தகவல் நடுவம் அதனுடன் தன்னையும் பின்னிப் பிணைத்து வந்துள்ளது. அதனால் தமிழர் தகவல் நடுவம் பற்றிய ஆய்வும் மதிப்பீடும் அவசியமானது. ஆனால் இக்கட்டுரையானது தமிழர் தகவல் நடுவத்தின் அண்மைக் காலத்தைய சில நடவடிக்கைகளை மட்டுமே கவனத்திற்கொள்கிறது.

செப்ரம்பர் 25, 2010 முதல் நடாதத்தப்படுகின்ற சந்திப்பு தமிழர் தகவல் நடுவத்தின் பல்வேறு முன்முயற்சிகளில் ஒன்றல்ல. இது குறிப்பாக சூரிச் இல் 2009 நவம்பர் 19 முதல் 22 வரை நடைபெற்ற தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் சந்திப்பின் தொடர்ச்சியே. அக்கூட்டத்தின் மறைமுகமான நிகழ்ச்சி நிரல் மேற்கத்தைய அரசுகளின் ‘ரெஜீம் சேன்ஜ்’யை மையப்படுத்தியே இருந்தது. ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சியை மாற்றியமைப்பதன் பின்னணியில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்காக தமிழ்பேசும் சமூகங்களை ஒருகட்டமைப்பினுள் கொண்டு வந்து ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக நிறுத்த முற்பட்டனர். ஆனால் தமிழ்பேசும் சமூகங்களின் பிரதிநிதிகளை குறைந்தபட்ச புரிந்துணர்வு ஒன்றுக்கு கொண்டு வந்து அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுப்பது என்பது வெளிப்படையான நிகழ்ச்சி நிரலாக தமிழர் தகவல் நடுவத்தினால் முன்வைக்கப்பட்டது.

இந்த மாநாட்டுக்கு ஏற்பட்ட 100 000 பவுண் வரையான செலவையும் – ”இதனை நடாத்துவதற்கான பெரும்பாலான செலவினை சுவிஸ் அரசாங்கமும், IWGயும், Essex பல்கலைக்கழகத்தின் மனித உரிமை மையமும் பகிர்ந்து கொண்டன” என வி வரதகுமார் தங்கள் உத்தியோகபூர்வ ஏடான மீட்சியில் தெரிவித்து இருந்தார். International Working Group on Sri Lanka என்ற அமைப்பே இம்மாநாட்டை ஒழுங்கு செய்வதாகவும்  Initative on Conflict Prevention through Quiet Diplomacy, தமிழர் தகவல் நடுவம் ஆகியனவே இம்மாநாட்டின் ஏற்பாடுகளைச் செய்வதாக அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

சூரிச் மாநாடு மாநாடு பற்றிய மேலதிக வாசிப்பிற்கு:

லண்டனில்? சூரிச்சில்? இரகசிய மாநாடு??

தமிழ் பேசும் கட்சிகளின் மாநாட்டின் திரைக்குப் பின்னால்: த ஜெயபாலன்

தமிழ் பேசும் கட்சிகளின் திசைமாறிய மாநாடு : த ஜெயபாலன்

நடந்தது என்ன? சூரிச் மாநாடும் எழுந்த விமர்சனங்களும்! : மீட்சி

கடந்த ஆண்டு நவம்பர் 19 முதல் 22 வரை நடைபெற்ற சூரிச் மாநாடு பற்றி வி வரதகுமார் வருமாறு தெரிவித்து இருந்தார். ”பங்குபெற்றோர் யாவரும் ஒரு நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றிக்காக ஒற்றுமையுடனும், ஒன்றுபட்ட நோக்குடனும் உழைப்பது என உறுதி பூண்டனர். தம்மிடையே பேசி முக்கியமான விளக்கங்களைப் பெற்று ஒரு பொது நோக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அத்துடன் தமிழ் பேசும் மக்கள் ஒரு சமாதானமான செழிப்பான சமூகமாக உருவாவதற்குத் தேவையான அவர்களது உரிமைகளை பெறவதற்காகத் தொடர்ந்தும் இப்டியான கலந்துரையாடலில் பங்கெடுத்துக் கொள்வதெனத் தீர்மானம் எடுத்துக் கொண்டனர்.”

ஆனால் அடுத்த ஒரு ஆண்டுக்குள் அவ்வாறான ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்துள்ள தமிழர் தகவல் நடுவம் முன்னைய சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ்பேசும் சமூகங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு இவ்வாறான ஒரு கலந்துரையாடல் இடம்பெறுவதை அறிவிக்கவில்லை. இதுதொடர்பாக இலங்கையில் உள்ள தமிழ்பேசும் சமூகங்களின் அரசியல் கட்சிகளோடு தேசம்நெற் தொடர்புகொண்ட போது அவர்கள் இதுபற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை.

இப்போதைய கலந்துரையாடல் ‘Post-war challenges facing Tamil speaking peoples of Sri Lanka.-  இலங்கைத் தமிழ்பேசும் மக்கள் போருக்குப் பின் எதிர்கொள்ளும் சவால்கள்’ என்ற அடிப்படையில் இடம்பெற்றுள்ளது. இக்கலந்துரையாடலுக்கு இலங்கையில் இருந்தும் இலங்கைக்கு வெளியே இருந்தும் கல்வியியலாளர்களும் மனித உரிமைவாதிகளும் அழைக்கப்பட்டு உள்ளனர். சந்திரஹாசன், பாக்கியசோதி சரவணமுத்து, சீலன் கதிர்காமர், ராஜன் பிலிப்ஸ், பேராசிரியர் சிற்றம்பலம் உட்பட இன்னும் சிலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள வந்துள்ளர். இவர்கள் பெரும்பாலும் மனித உரிமைகள் அமைப்புகள் உட்பட்ட அரசுசாரா பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். இக்கலந்துரையாடலும் முன்னைய சூரிச் மாநாடு போன்று பெரும் நிதிப் பங்களிப்பின்றி மேற்கொண்டிருக்க முடியாதாகையால் தமிழர் தகவல் நடுவம் இச்சந்திப்பின் பின்னணியில் உள்ளவர்களை வெளிப்படுத்துவதன் மூலம் மட்டுமே இச்சந்திப்புக்களின் உண்மையான நோக்கங்களை தமிழ் மக்கள் அறிந்துகொள்ள முடியும்.

தமிழர் தகவல் நடுவம் எப்போதும் அரசு மற்றும் கட்சிகள் பொது அமைப்புகளிடம் திறந்த கொள்கையையும் வெளிப்படைத் தன்மையையும் வலியுறுத்தி வருகின்றது. ஆனால் இவற்றை தமிழர் தகவல் நடுவம் கடைப்பிடிப்பதில் எப்போதும் தயக்கம் காட்டியே வந்துள்ளது. சூரிச் மாநாட்டிலும் அதில் கலந்துகொண்ட கட்சிகள் தேசம்நெற் இணையத்தைப் பாரத்தே அம்மாநாடு பற்றிய உள் தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டி இருந்தது.

புலம்பெயர்ந்த மக்கள் இலங்கையின் அரசியல் நடவடிக்கைகளில் எழுந்தமானமாக நேரடியாக ஈடுபடுவதை எப்போதும் விமர்சிக்கும் தமிழர் தகவல் நடுவம், அங்குள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடாகவே புலம்பெயர்ந்த தமிழர்கள் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்கள் நேரடியாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தமிழ் அரசியல் பிரதிநிதிகளை கீழ்மைப்படுத்தும் என்றும் தமிழர் தகவல் நடுவம் தெரிவித்து வந்துள்ளது. ஆனால் இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் முக்கிய சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ளும் தமிழர் தகவல் நடுவம் அது பற்றி எவ்விதமான விடயத்தையும் இதுதொடர்பாக மாநாட்டை மேற்கொண்ட தமிழ் கட்சிகளுக்கு அறிவிக்கவில்லை.

தமிழர் தகவல் நடுவம் பற்றிய சந்தேகப் பார்வையும் நம்பிக்கையின்மையும் ஏற்படுவதற்கு இவ்வாறான இறுக்கமான மூடிய வெளிப்படையற்ற நகர்வுகளே காரணமாக இருந்துள்ளது. அதனாலேயே சூரிச் மாநாட்டில் தமிழர் தகவல் நடுவத்தினால் குறிப்பாக எதனையும் சாதிக்க முடியவில்லை. இப்போது சூரிச் மாநாடு கிடப்பில் போடப்பட்டு லண்டன் மாநாடு. இதுவே கடந்த காலங்களில் தமிழர் தகவல் நடுவத்தின் செயற்பாட்டு போக்காக இருந்து வருகின்றது.

2009 மே 18க்குப் பின் தமிழர் தகவல் நடுவம் வேறு வேறு முயற்சிகளில் இறங்கியது. அதற்காக வேறு வேறு சந்திப்புக்களையும் ஏற்பாடு செய்தது. இந்த சந்திப்புக்களின் நோக்கங்களில் அரசியல் ரீதியான முரண்பட்ட நலன்களும் இருந்தது. அப்படி இருக்கையில் ஒரே குழுவில் செயற்பட்டவர்களுக்கு இடையேயே ஒளிவுமறைவுகள் மலிந்து காணப்பட்டது. அதனால் தமிழர் தகவல் நடுவத்தினை எல்லோரும் சந்தேகப் பார்வையுடன் பார்க்கின்ற நிலை உருவானது.

தமிழ் மக்களிடையே புரிந்தணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அரசியல் ரீதியாக முரண்பட்டவர்கள் அனைவரையும் அழைத்து ஒரு சந்திப்பு நடந்து கொண்டு இருக்கும்; அதே நேரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை மட்டும் அழைத்து மற்றும்மொரு சந்திப்பு தனியாக நடைபெறும். பின்னர் இவர்கள் அனைவருக்கும் எதுவும் தெரியாத வகையில் அரசசார்பற்ற அமைப்புகளை வரவழைத்து மற்றுமொரு சந்திப்பு நடைபெறும். தமிழர் தகவல் நடுவம் தன்னுடைய தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப தமிழ் அரசியல் ஆர்வலர்களை பிரித்தாளுகின்ற தந்திரத்தை நீண்ட நாட்களாகவே கொண்டுள்ளது. தமிழர் தகவல் நடுவத்தின் சில கூட்டங்களுக்கு தொடர்ச்சியாகச் செல்லும் ஒருவர் இதனை மிக இலகுவில் கண்டுகொள்ள முடியும். இது தமிழர் தகவல் நடுவத்தின் மிகப் பெரும் பலவீனமாகவும் தமிழர் தகவல் நடுவத்தினால் எதனையும் முழுமையாகச் சாதிக்க முடியாமல் போவதற்கான காரணமாகவும் உள்ளது.

இக்கட்டுரையில் ஆரம்பத்திலேயே வி வரதகுமாருடைய குறிப்பில் உள்ள ”கடந்த 30 ஆண்டுகளின் அவலங்களுக்கும் தேக்கத்திற்கும் பின்னரும் எந்த அரசியல் நடவடிக்கைகள் இந்த இழிநிலைக்கு எமது நாட்டை இட்டுச் சென்றனவோ, அதே பாதையில்த்தான் இப்போதும் செல்வதுபோல் தெரிகிறது. அதே ஓட்டை விழுந்த கப்பலில்தான் அரசியல் பயணங்கள் தொடர்வதுபோல் தெரிகிறது.” என்ற குறிப்பு தமிழர் தகவல் நடுவத்திற்கும் மிகப் பொருத்தமானதே. இந்த ஓட்டை வீழ்ந்த கப்பலில் சூரிச் என்றும் லண்டன் என்றும் வி வரதகுமார் நீண்ட காலம் பயணிக்க முடியாது. இந்தக் கப்பலை நம்பியே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உட்பட முக்கிய போராளிகள் காத்திருந்ததாக தன்னை வெளிப்படுத்த விரும்பாத முக்கிய அரசியல்வாதி ஒருவர் சூரிச் மாநாட்டில் சந்தித்த போது தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார். ஆகவே தமிழர் தகவல் நடுவத்தின் கடந்த 30 ஆண்டுகால அரசியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதில் உள்ள ஓட்டைகள் அடைக்க முடிந்தால் அடைக்கப்பட வேண்டும். முடியாத நிலையில் அக்கப்பல் மூழ்குவது தவிர்க்க முடியாதது.

Show More
Leave a Reply to Mythili Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

11 Comments

  • Deva
    Deva

    ஜெயபாலன் கட்டுரையில என்ன சொல்ல வாறார்? அரசியல் கூட்டம் என்றால் எல்லாத்தையும் வெளிப்படையாச் செய்ய வேணும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். சில விசயங்களைச் சொல்லலாம் சிலது சொல்ல முடியாது. வரதரும் எல்லாரையும் அனுசரித்துப் போனால் தானே ஒரு உடன்பாட்டுக்கு வரமுடியும். இதில என்ன பிழை?

    Reply
  • Selvan
    Selvan

    “செப்ரம்பர் 25, 2010 முதல் நடாதத்தப்படுகின்ற சந்திப்பு தமிழர் தகவல் நடுவத்தின் பல்வேறு முன்முயற்சிகளில் ஒன்றல்ல. இது குறிப்பாக சூரிச் இல் 2009 நவம்பர் 19 முதல் 22 வரை நடைபெற்ற தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் சந்திப்பின் தொடர்ச்சியே. அக்கூட்டத்தின் மறைமுகமான நிகழ்ச்சி நிரல் மேற்கத்தைய அரசுகளின் ‘ரெஜீம் சேஞ்’யை மையப்படுத்தியே இருந்தது. ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சியை மாற்றியமைப்பதன் பின்னணியில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்காக தமிழ்பேசும் சமூகங்களை ஒருகட்டமைப்பினுள் கொண்டு வந்து ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக நிறுத்த முற்பட்டனர். ஆனால் தமிழ்பேசும் சமூகங்களின் பிரதிநிதிகளை குறைந்தபட்ச புரிந்துணர்வு ஒன்றுக்கு கொண்டு வந்து அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுப்பது என்பது வெளிப்படையான நிகழ்ச்சி நிரலாக தமிழர் தகவல் நடுவத்தினால் முன்வைக்கப்பட்டது”

    நீங்களும் தற்போது சேரமான் போன்றவர்கள் போன்று தான் எழுத தொடங்கியிருக்கின்றீர்கள் போலுள்ளது. மேற்கூறிய உங்களின் கருத்துக்கு உங்களிடம் ஏதாவது ஆவண ரீதியான அல்லது பெயர்பெற்ற சர்வதேச விவகாரங்களுக்கான ஆய்வு மையங்கள் அல்லது சர்வதேச ரீதியாக நம்பத்தகுந்த ஊடகங்களில் இருந்து ஆதாரம் எதனையும் காண்பிக்க முடியுமா? பதிவு, சங்கதி மற்றும் ஈழம் ஈ நியூஸ் போன்ற ‘ஊடகங்கள்’ போன்று நீங்களும் எழுதுவதானால், ஏன் வேலை வினைகெட்டு ‘தேசம்’ நடத்துகின்றீர்கள்?

    வரதர் ஒரு தகவலும் தரவில்லை என்று கூறுகின்றீர்கள், அடிப்படையில் தற்போது நடந்து முடிந்த கலந்துரையாடலானது சிவில் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கானது எனவே தான் அரசியல் கட்சிகளுக்கு அறிவிக்கப்படவில்லை. அத்தோடு நீங்கள் என்ன தகவலை எதிர்பார்க்கின்றீர்கள்?
    நீங்கள் வரதரிடம் இது சம்பந்தமாக ஏதும் கேள்வி கேட்டீர்களா? முக்கியமாக உங்களுக்கோ அல்லது தேசத்துக்கோ தகவல் அளிக்கவேண்டும் என்ற கடப்பாடு வரதருக்கு இல்லை.

    மொத்தத்தில் நீங்கள் எந்த விதமான ஆதாரங்களும் இல்லாமல், உங்களோடு தகவல் பகிர்ந்து கொள்ள மறுத்தமைக்காக பழிவாங்கும் வகையில் வரதருக்கு எதிராக தனிப்பட்ட ரீதியில் தாக்கி எழுதியுள்ளீர்கள்.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    //மேற்கூறிய உங்களின் கருத்துக்கு உங்களிடம் ஏதாவது ஆவண ரீதியான அல்லது பெயர்பெற்ற சர்வதேச விவகாரங்களுக்கான ஆய்வு மையங்கள் அல்லது சர்வதேச ரீதியாக நம்பத்தகுந்த ஊடகங்களில் இருந்து ஆதாரம் எதனையும் காண்பிக்க முடியுமா?//
    செல்வன் தமிழர் தகவல் நடுவத்தின் கலந்துரையாடலில் கலந்து கொண்ட நான்கு புத்திஜீவிகள் மனியத உரிமைவாதிகள் நேற்று (செப்ரம்பர் 30 2010) ஜிரிவி யில் தோன்றி இது சூரிச் மாநாட்டின் தொடர்ச்சி எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

    //வரதர் ஒரு தகவலும் தரவில்லை என்று கூறுகின்றீர்கள், அடிப்படையில் தற்போது நடந்து முடிந்த கலந்துரையாடலானது சிவில் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கானது எனவே தான் அரசியல் கட்சிகளுக்கு அறிவிக்கப்படவில்லை. அத்தோடு நீங்கள் என்ன தகவலை எதிர்பார்க்கின்றீர்கள்?//
    இதற்கான பதில் கட்டுரையில் உள்ளது.

    //நீங்கள் வரதரிடம் இது சம்பந்தமாக ஏதும் கேள்வி கேட்டீர்களா? முக்கியமாக உங்களுக்கோ அல்லது தேசத்துக்கோ தகவல் அளிக்கவேண்டும் என்ற கடப்பாடு வரதருக்கு இல்லை.//
    இன்றைய இலங்கை அரசும் அப்படித்தான் சொல்கிறது. சர்வதேச சமூகத்திற்கோ ஊடகங்களுக்கோ தகவல் அளிக்க வேண்டும் என்ற கடப்பாடு அரசுக்கு இல்லையாம்.

    //நீங்கள் எந்த விதமான ஆதாரங்களும் இல்லாமல், உங்களோடு தகவல் பகிர்ந்து கொள்ள மறுத்தமைக்காக பழிவாங்கும் வகையில் வரதருக்கு எதிராக தனிப்பட்ட ரீதியில் தாக்கி எழுதியுள்ளீர்கள்.//
    தமிழர் தகவல் நடுவத்தின் நிறைவேற்றுச் செயலாளரை தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்டிய ஒரு விடயத்தை குறிப்பிட்டுக் கூறவும்.

    எதற்கு எவ்வாறான அல்லது என்ன ஆதாரம் கேட்கின்றீர்கள் என்று தெளிவாக குறிப்பிட்டால் ஆதாரங்களை முன் வைத்து உங்களுக்கு விளக்க வசதியாக இருக்கும்.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    Dear friends

    We are writing to invite you for a discussion with a delegation of academics and human rights defenders from the Tamil, Muslim and upcountry Tamil speaking communities, who have come from Sri Lanka to attend a roundtable discussion on one of the Tamil Information Centre(TIC) initiative of dealing with post-war challenges facing Tamil speaking peoples of Sri Lanka.

    The discussion will focus on the theme “Role of Diaspora in renewing hope and rebuilding lives of the war affected communities in Sri Lanka: Some thoughts and Action”. It will look at the current situation and how the diaspora could realistically and efficiently contribute to assist the victims of war in the island.

    The discussion will be held on Saturday, 2 October 2010 at Thulasi, Bridge End Close, off Clifton Road, Kingston Upon Thames KT2 6PZ from 3-6pm.

    We hope you will be able to attend and contribute to the discussion.

    Kindly confirm attendance

    With kind regards

    Tamil Information Centre

    Reply
  • நந்தா
    நந்தா

    ஈழம்” என்பது ஒரு ஓட்டை விழுந்த கப்பல் என்றும் கரை சேராது என்றும் ஆரம்பத்தில் சொன்ன பலர் இன்று உயிருடன் இல்லை. ஓட்டைக் கப்பலில் வந்தவர்கள் “போட்டுத்”தள்ளி விட்டார்கள். உயிரோடு உள்ளவர்கள் பலர் மெளனமாக சிரிக்கிறார்கள்.

    ஜெயபாலனின் தேடலில் இந்த அமைப்பின் கையாலாகாத தனங்கள் பற்றிய கருத்துக்கள் வரவேற்கத்தக்கவையே!

    மூழ்கிய கப்பலின் “இரும்புக்கு” இப்பொழுது குடுமி பிடி சண்டை தொடங்கியுள்ளது!

    Reply
  • Mythili
    Mythili

    //:ஜெயபாலன் கட்டுரையில என்ன சொல்ல வாறார்?/
    வரதர் தன்னைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதுதான். இதை நேரடியாகக் கூறமுடியாது குழையடிக்கிறார்.

    Reply
  • Thenee
    Thenee

    ‘போரினால் துயருற்ற மக்களின் வாழ்க்கையை முன்னேற்றப் புலம் பெயர்ந்த தமிழரின் பங்கு’
    லண்டன் தமிழர் தகவல் நடுவகம் நடத்திய கூட்டம் பற்றிய சில குறிப்புக்கள்
    இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 06.10.10

    02.10.10ல் லண்டனிலுள்ள தமிழர் தகவல் நடுவத்தில் மேற் குறிப்பிட்ட விடயம் பற்றிப் பேசுவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் பார்வையாளராக (அழைப்பற்றவர்களில் ஒருவராக) அமர்ந்திருந்தபோது கிரகித்துக்கொண்ட சில விடயங்கள் இக்கட்டுரையை எழுதத் தூண்டியது.

    2ம் திகதி நடந்த அமர்வுக்கு முன்னோடியாகத் லண்டன தமிழர் தகவல் நிலையத்தால் பல விடயங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன என்பதை இணையத்தளங்கள் மூலம தெரிந்து கொண்டேன். அதாவது, புரட்டாதி மாதக்கடைசியில், இலங்கை, கனடா போன்ற நாடுகளிலிருந்து வந்த பல பிரமுகர்கள் தலைமையில், இலங்கையில் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் பற்றியும் அவற்றை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்பது பற்றியும் மூன்று நாட்களாக ‘அறிஞர்கள் ஆய்வமர்வு’ நடந்ததாகவும் ஆனால் அது சம்பந்தமாக இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் தலைவர்களுக்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ எதுவும் தெரியப்படுத்தாத இரகசியமாக நடந்ததாக லண்டனில் பேசப்பட்டது.

    கூட்டத்துக்கப்போனபோது, ஒரு குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருந்தது தெரிந்தது. அத்துடன் ‘அறிஞர்கள் ஆய்வமர்வில’ பங்கு கொண்ட, திரு பாக்கியசோதி சரவணமுத்து, திரு சந்திரஹாஸன் செல்வநாயகம, திரு ராஜன் பிலிப்ஸ் போன்றோர் ஏற்கனவே தங்கள் ஊருக்குத் திரும்பி விட்டதாகச் சொல்லப்பட்டது.

    ‘போரினாற் துயருற்ற தமிழ் மக்களின் வாழ்க்கையை முன்னேற்றப் புலம் பெயர்ந்த தமிழரின் பங்கு’ என்ற பெயரில் கூட்டம நடக்கவிருப்பதாக அறிவித்திருந்தாலும் கூட்டத்தை ஆரம்பித்து வைத்த தமிழர் தகவல் நடுவ முகவர் திர வரதகுமார் அவர்கள், கடந்த முப்பது வருடங்களாக நடந்த போரினால் இலங்கையிலுள்ள மக்கள் பொதுச்சபைகள் செயலிழந்து இருப்பதாகவும் அவற்றை மீண்டும் பலப்படுத்திச் செயற்படவைப்பது பற்றிக் கலந்துரையாடவிருப்பதாகவும் சொன்னார்.

    அத்துடன், இலங்கையில் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் பற்றிக் கடந்த சில நாட்களாகச் வரவழைக்கப்பட்டீருந்த அறிஞர்களால் அடையாளம் காணப்பட்ட விடயங்களுக்க எப்படியான நிவாரணங்களைக் காணலாம் என்று அறிஞர்கள சொல்லவிருப்பதாகவும் அறிவித்தார்.

    அறிஞர்கள் சார்பில் தங்களின் ஆய்வுகளின் முக்கிய பத்து அம்சங்களைப் பற்றி, ஆய்வமர்வில் பங்குபற்றியவர்கள சார்பில் பேராசிரியர் சீலன் கதிர்காமர் விளக்கவுரை கொடுத்தார்.

    அவர்களால் முக்கியமாக அடையாளம் காணப்பட விடயங்களின் சாராம்சம்:

    இன்று மீழ்வாழ்வுக்க உடனடியாகத் திரும்ப முடியாமல் அகதி முகாம்களில் இருக்கும் 20 – 30 .000 மக்களின் மீழ்வாழ்வுக்குதவுதல்,அத்துடன் தமிழ்ப்பகுதிகளிலிருக்கும் நிலப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல்
    கல்வித்தரத்தை உயர்த்தல், அதறுகுப் புலம் பெயர்ந்தோரின் பங்கு எதிர்பார்க்கப்படுகிறது. அபிவிருத்தி என்ற பெயரில் வேண்டுமென்றே பின்போடப்படும் அரசியற் தீர்வுக்கான வழிகளை முன்னெடுத்தல வடக்கு கிழக்கு ஒன்று சேர்வது பற்றிப் பேசுவது இப்போது தேவையற்ற விடயம் ஆனால்
    பிராந்திய சபைகளின் அதிகாரத்தை மேம்படுத்தல்
    வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீழ்குடியேற்றத்தை முன்னெடுத்தல் இன்று கல்வியறிவு இல்லாமல் அரசியற் பிரச்சினைகளைச் சரியாக அணுகத்தெரியாத தமிழ்த் தலைவர்களின் தமிழ்த் தலைவர்களின் அரசியல் ஞானத்தை மேம்படுத்தல்
    இன்று அங்கிருக்கும் தமிழத் தலைவர்கள் படித்தவர்களாகவில்லாதிருப்பதால், புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கைத் தமிழரின் தலையைத் தாங்கும் வழியை முன்னெடுத்தல்.
    தமிழர் பிரச்சினைக்கு முடிவுகாண வெளிநாட்டுச் சக்திகளிடம், முக்கியமாக இந்தியா, அமெரிக்கா, இந்தியவிடம் உதவி கோரல்
    மிக மிக முக்கியமாக. தமிழ்ப் பகுதிகளிலிருந்து இராணுவத்தை அகற்றல்
    சிறையிலிருக்கும் புலிப்போரளிகளின் பெயர்ப்பட்டியலை உடனடியாக வெளியிடுதல் அத்துடன அவர்களை உடனடியாக விடுதலை செய்தல்.
    தமிழர் தகவல் நடுவத்தில் நடந்த கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள் சம்பந்தமாகப் பல தரம் பல விதமான புலம்பெயர் தமிழ்க் குழக்கள் அரச நிர்வாகத்தைச் சந்தித்துப்பேசிப் பல நிவாரண விடயங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன

    என்று தமிழர் தகவல் தகவல் நடுவகத்திற்குத் தெரிந்தும் தெரியாதது போல் இந்த அறிஞர்களைக் கூட்டிவைத்து ஒரு கிழமை ஆய்வு செய்தது வியப்பாகவிருக்கிறது.

    தமிழர் பிரச்சினைகளைப் புலிகள் தவிர வேறு யாரும் பேசக்கூடாது என்ற சட்டம் இருந்ததுபோல், இன்று, லண்டன் தமிழர் தகவல் நடுவகம் மட்டும்தான் இந்த விடயங்களைப்பேசத் தகுந்தவர்கள் என்று நினைக்கிறார்களா?

    புல நாடுகளின் உதவியுடன் அகதிகள் நிர்வாக வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுபற்றி நாள்தோறும் அறிக்கைகள் வந்தபடியிருக்கின்றன. வேலை மினக்கெட்டு மூன்று நாட்களை நிவாரண ஆய்வு வேலைகளில் ஈடுபட்டவர்கள் தமிழ்பத்திரிகைகள் படிப்பதில்லையா?

    இலங்கையின் தமிழ்த் தலைவர்கள்:

    இந்த விடயம் பற்றி கூட்டத்திற்கு வந்திருந்த மேதகுகள் மிகவும் மனவருத்தப் பட்டுக்கொண்டார்கள். முக்கியமாகப் போராசிரியர் சித்தம்பலம் அவர்கள் (தமிழரசுக்கட்சி)எயர் கல்வி படியாதவர்கள் பதவிகளில் இருப்பதாக உருக்கமாகச் சொல்லி வருத்தப்பட்டார். புலிகளால் படித்தவர்கள் பலர் கொலை செய்யப்பட்டது யாவருக்கும் தெரியும். படித்த பலர் புலம் பெயர்ந்ததும் பலர் தெரிந்த விடயம். ஆரசியற் தலைமைக்கு படித்த ஆட்கள் இல்லாத போது பொது மக்களால் தெரிவு செய்யப்படவர்கள் இன்றிருக்கும் தலைவர்கள். மேதகு பட்டம் பெற்றால் மட்டுமதான் பகுத்தறிவு வளருமா?

    பேராசிரியர்கள் பட்டப்படிப்பு மட்டும்தான் ஒரு மனிதனினின் திறமைக்கு அடையாளம் என்று சிறு தனமாக நினைத்தால் இவர்களுக்குச் சில சரித்திர பிரசித்தம் பெற்ற படியாதவர்களை நினைவுபடுத்த வேண்டிக்கிடக்கிறது.

    இந்து, முஸ்லிம் மக்களால் அதிபெரு அண்ணலாக மதிக்கப் பட்ட அக்பர் சக்கரவர்த்திக்கு எழுதப்படிக்கத் தெரியாது. ஆபிரகாம் லிங்கள் ஆரம்பக்கல்வியில்லாமல் வாழ்க்கையைத்தொடங்கித் தன் முயற்சியால் வழக்கறிஞரானவர். இப்படிப் பலர் மக்களுக்காக வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். தாங்கள் பேராசிரியர்கள் என்பதால் மற்றவர்களை அதிலும் குறிப்பாகத் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றவாதிகளைக் கிண்டல் செய்யத் தேவையில்லை.

    பெரிய பட்டம் பெற்ற தமிழ்ச் சட்டத்தரணிகள் தொடங்கிய தமிழ்த் தலைமை தறிகெட்டுப்போய்த் தோல்வியைத் தழுவி விட்டது. புலம் பெயர்ந்தோர் சொன்ன அறிவுரையால் தமிழர் விடுதலைப் போராட்டம் முள்ளிவளையில் கௌபீன மண்டலத்தைக் கண்டுவிட்டது. ஓபாமாவின் கப்பலை அனுப்பித் தமிழ் மக்களைக் காப்பாற்றுவதாகப் பொய்சொன்ன புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்களால் முடிந்த பணிகளை மக்களுக்குச் செய்யும் இலங்கையின் தமிழ்த் தலைமையைத் தாறுமாறகப்பேச எந்த உரிமையும் கிடையாது. பிரபாகரனின் போர்க்கைதிகளாக 300.000 தமிழர் முடங்கித் துன்பப்பட்டபோது அவர்களை வெளியே விடச்சொல்லி ஒரு குரல் எழுப்பாதவர்கள் இந்தப் பேராசிரியர்கள். இன்று பேசும் மனித உரிமையின் வாசகங்கள் அன்று எஙகே தொலைந்து கிடந்தது?.

    பணத்தைச் செலவழித்து புலம் பெயரக்கூடிய புத்திஜிகள், படித்தவர்கள், என்போர் இல்லாத வறுமையான தமிழ்ப்பிரதேசங்களில் மக்களோடு மக்களாக நின்ற தங்களால் முடிந்த பணியைச்செய்கிறார்கள் இவர்கள் கூறும் அதிகம் படிக்காத இன்றைய தமிழ்த்தலைவர்கள். தமிழ்த்தேசியக் கூட்டணியினர் உலகம் சுற்றம வாலிபர்களாக ஊர்வலம் வந்த காலத்தில் புலிகளின் கொலைவெறிக்கு முகம் கொடுத்தவர்கள் இந்தத் தலைவர்கள். மக்களுக்காகப் பணிசெய்ய சத்தியபிராமாணம் எடுத்தவர்கள். ஆரம்பத்தில் ஒரு விடுதலைப் போராட்டமாக வடிவெடுத்து, சரியான அரசியற் தெளிவற்றபோக்கால் 37 குழுக்களாகப் பிரிந்ததால் கடைசியல் படுதோல்வியைக் கண்டபின் ஜனநாயக அரசியல் வழிக்குத் திரும்பியவர்கள்..

    ஒரு போராளியின் வாழ்நாளில் மூன்று காண்டங்களையும் கண்டவர்கள்

    1.கிஷ் காண்டம்- ஆரம்ப போர்க்காலம், இயக்கங்கள் வளர்க்கப்பட்ட காலம்

    2.ஆரண்ய காண்டம்- இடைக்கால கொலைக்காண்டம்- இயக்கங்களின் அழிவுக்காலம் தமிழன் தமிழனை ஈவிரக்கமின்றுத் தெருவில் போட்டு எரித்தகாலம்

    3.யுத்தகாண்டம்- போராட்டம் தொலைதூரம போன காண்டம, எதிரியின் துரத்தலைக்கண்ட காண்டம். குடைசியாக ஒட்டுமொத்தமாக அத்தனையும் இழந்த காலம்.

    (எனது சிறுவயதில் எனது இனத்தின் வீடுதலைக்காக ஆயுதம் ஏந்தியவன் நான்;. எனது உயிரும் உடலும் எனது மக்களின் வீடுதலைக்கு என்ற எனது சத்தியப் பிரமாணத்தை மறக்கமாட்டேன். என்னால் முடிந்ததை என் மக்களுக்குச்செய்வேன் – கிழக்கு முதல்வர் திரு சந்திரகாந்தன-பிள்ளையான். மட்டக்களப்பு 26.08.08).

    ‘என்னைப் பதின்மூன்று தரம் கொலைசெய்ய வெளிக்கிட்டார்கள், இதுவரை தப்பிவிட்டேன் எனது வாழ்க்கையின் இறுதிவரைக்கும் எனது மக்களுக்குப் போராடுவேன். அந்த உறுதியான மனப்பான்மையுடன் எனது பணியைச் செய்வேன்’ – டக்ளஸ் தேவானந்தா. லண்டன் 2008

    போராட்டத்தின் பல வடிவங்களில் பேச்சுவார்த்தையும் ஒன்று அதன் மூலம் எங்களால் பெறக்கூடியவற்றையும் தூக்கி எறிந்து விட்டு தொடர்ந்தும் போருக்கு ஆள்சேர்க்கச் சொன்னால், அமைதி வந்து விட்டது என்று சந்தோசப்பட்ட தாய்கள் என்னவென்று தங்கள் குழந்தைகளைப் பலிக்காடாக்க அனுமதிப்பார்கள் தீர்க்க தரிசனமற்ற, அரசியற் தெளிவற்ற ஆயதப் போரால் மக்கள் தொடர்ந்து அழியக் கூடாது எனபதற்காக சமாதான வழிக்கு வந்தேன்’ முரளிதரன் – கருணா கொழும்பு 28.02.2009.

    கடந்த வருடம் கார்த்திகை மாதம், அகில உலக சக்திகளின் சதி வலைப்பின்னலின் அடிப்படையில், தமிழத் தகவல் நடுவத்தால் விபரம் சொல்லாமல் அழைக்கப்பட்டு, அவர்களின் பெயரால் அரசியல் வியாபாரம் செய்யவிருப்பதைத் தங்கள் நுண்ணறிவால் புரிந்துகொண்டு சுவிட்சர்லாந்து மகாநாட்டில் போர்க்குரல் எழுப்பிய டக்ளஸ் தேவானந்தாவுக்குத் தமிழ் மக்கள் நன்றி சொல்கிறார்கள். அன்று அந்த அரசியல் ஞானம் அதிரடித் தனமாக உடனடி வேலை செய்திருக்காவிட்டால், தமிழரைக் கேவலமாகப்பேசிய ஒரு இராணுவ ஆட்சியில் தமிழ் மக்கள் இன்று பல வேதனைகளை அடைந்திருப்பார்கள். போரின் காரணமாக அகதிகளாக வந்தவர்களை விடுதலைசெய்யவேண்டாம் என்ற சொன்ன சிங்கள இனவாதி சரத் பொன்சேகாவை இந்த ‘மேதகுகள்’ மிகவும் சாமர்த்தியமாக மறந்து விட்டுத் தமிழ்த் தலைவர்களை அரசியல் சூனியமானவர்கள் என்ற கணிப்பது படித்தவர்களுக்க அழகல்ல.

    புலம் பெயர் தமிழ்த்தலைமை

    புலிகளின் அதிகாரம் கொடிகட்டிப் பறந்தபோது, தங்களுக்குப் பிடிக்காதவர்களை வாய் கூசாமல் வைது முடித்தார்கள். புலம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கப் பல பொய்களைச்சொல்லிப் பணம் சேர்த்தார்கள். உலக ஸ்தாபனங்களிடமும் தங்கள் கற்பனைக்கு வந்தமாதிக் கதைகளைக்கட்டி பொய் விடயங்களை அள்ளிக்கொட்டினார்கள் அளவுக்கு மீறிய பொய்களால் புலிகள் சொன்னதை யாரும் காதில் போட்டதில்லை (அவர்களிடம் பணம் வாங்குபவர்களைத் தவிர). இலங்கையில் பல ஸ்தானிகராலயங்கள் இருக்கின்றன. அவர்கள் அரசு தரும் செய்திகள் தவி தங்கள் ஒற்றர்கள் மூலமும் பல விடயங்களை அறிந்து கொள்வார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாதவர்கள்.

    போர் நடந்த கால இறுதிக்கால கட்டத்தில் தமிழ்ப்பெண்கள் நூற்றுக்கணக்காக, இலங்கை இராணுவத்தின் பாலியல கொடுமைகளுக்காகிறார்கள் என்றும், தமிழர்கள் கொலை செய்யப்பட்ட அவர்களின் உள்ளுறுப்புக்கள் விற்பனைக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றமதி செய்யப்படுவதாகவும், தமிழ்ப் பகுதிகளில் விஷவாயுவைப் பரவ விட்டிருப்பதாகவும், தமிழ்க்குழந்தைகள் படுமோசமாகக்கொலை செய்யப் படுவதாகவும் போன்ற பல கதைகளைப் பரவ விட்டார்கள்.

    இவர்களிடம பணம் வாங்கும் இந்திய அரசியல் கோமாளிகளும் ( தமிழ்க் கூட்டணியின் ஆத்மார்த்த சினேகிதன் சரத் பொன்சேகா கொடுத்த பட்டம்!) இதே விடயங்களைச் சொல்லி அப்பாவித் தமிழ் இளைஞனான முத்துக்குமாரின் உயிரைப் பலி வாங்கினார்கள். தங்களின் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள என்னவென்றாலும் சொல்லத் தயங்கமாட்டார்கள் புலிகளின் அழிவுக்கப்பின் தமிழரின துயரை வியாபாரப் பொருளாக்கப் பலர் முன் வந்திருக்கிறார்கள் அதற்குக் கருதேடும்போது, பல ருசியான விடயங்களை இணைக்க வேண்டியிருபதால் தங்கள் மேடைகளுக்குத் தேவையான நடிகர்களையும் திறமையாகத் தெரிவு செய்கிறார்கள்.

    இலங்கைத் தமிழரின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவி செய்ய இன்றிருக்கும் தமிழ்த் தலைவர்கள் தகுதியற்றவர்கள் என்று வாய் கூசாமற் சொன்னார்கள் புலி பாசிசத்தை மவனமாக அங்கீhகித்தவர்கள் போராட்டத்தில் வளர்ந்த தலைமையை மட்டம் தட்டுகிறார்கள்

    தமிழ்ப் பிரதேசங்களில் இன்ற இருக்கும் தமிழ்த் தலைவர்களுக்கப் படிப்பறிவில்லை என்று சொன்னது மட்டுமல்லாமல், இலங்கையில் இன்று ஒரு நல்ல தமிழ்த் தலைமை கிடையாது. அந்தத் தலைமை புலம் பெயாந்த மக்களிடமிருந்ததான் வரவேண்டும் என்ற ஆதங்கப் பட்டுக்கொண்டார்கள். புலம் பெயாந்த தமிழ்த் தலைமைகள் இதுவரை தமிழருக்குச் செய்த நன்மை போதும். உங்களைக் காப்பாற்ற அமெரிக்க ஜனாதிபதி ஓபமாவின் கப்பலை அனுப்ப வழி செய்கிறோம், தொடர்ந்து போராடுங்கள் என்று அங்கிருந்தவர்களுக்கு உசுப்பேத்தி ஆயிரக்கணக்கானவர்களை அழித்தது போதாதா?

    இதுவரை 70.000 மேற்பட்ட தொகையான தமிழர்களை இழந்து விட்டோம. இதில் கிட்டத்தட்ட 22.000 தமிழர் உயிர்கள் தற்கொலைதாரிகளாகப் புலிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டுப் பலி கொடுக்கப் பட்டவர்கள. 1976-87 விடுதலைப்போரில் இறந்த மாவீரர் தொகை 625ஆகும, அதன்பின் கடைசிப்போர் 2009 வரை இறந்தவர்கள கிட்டத்தட்ட 21.000 இளம் உயிர்கள்)

    (ஐக்கிய தேசியக்கட்சி அரசால் கொல்லப்பட்ட ஜேவிபியினர் கிட்ட்டத்தட்ட 60000 இளைஞர்கள்)

    புலம் பெயர் நாடுகளிற் பணம் சேர்க்க இலங்கையில் போரைத் தூண்டி விட்டு 89.000 பெண்களை விதவைகளாக்கியது போதாதா? ஆயிரக்கணக்கான தமிழரை அரைகுறை மனிதர்களாக ஊனமடையவைத்தத போதாதா? ஓரு லட்சததுத அறுபதினாயிரம் பேருக்குப்பொய்க்கால்கள் தேவைப் படுகின்றன, அதற்குப்பொறுப்பு யாருக்கு?.

    வளர வேண்டிய ஒரு இனத்தை வாழவிடாமல் சீரழித்தது போதாதா? புலம் பெயாந்தவர்கள் தலைவர்களாக இருப்பதானால் தங்களை அதிமிக வலிமை படைத்த’ ஆகாயப் பிரதமர்களாக’ பிரகடனப்படுத்தி சந்தோசப்படட்டும். முக்களை வைத்துப்பிழைத்த பலர் இலங்கையில் காலடி எடுத்த வைக்க எந்தத் தகுதியம் அற்றவர்கள். இவர்களிற் பலர் சந்தர்ப்பவாதிகள். அரசியல் மாபியாக்கள்.

    இலங்கைத் தமிழர்கள் புலம் பெயர்ந்தோரின் தலைமையை எதிர்பார்திருக்கவில்லை.அடிக்க அடிக்க முளைத்துவரும் அற்புத செடிக்கு நிகரானவர்கள் இலங்கைத தமிழர்கள். இன்று கொஞ்சம் கொஞ்சமாக நிமிர்ந்து நிற்கத் தொடங்கியிருக்கும் தமிழ்ச் சமுதாயத்தைக் கற்பனைப் பேச்சுக்களால் இன்னுமொரு தரம் முடமாக்க வேண்டாம்.

    சிறையில் இருக்கும் போராளிகள்

    போராளிகள் பற்றி இலங்கை இராணுவத்தின் மேல்மட்டங்களிலும் ஜனாதிபதியுனடனும் புலம பெயர் நாடுகளிலிருந்து சென்ற நல்லெண்ணத் தூதுக்குழு சந்தித்தார்கள் என்பதைத் தகவல் நடுவகத்திற்குச் சொல்லியிருந்தேன். இன்று போராளிகளின் பொறுப்பாளராகவிருக்கும் பிரிகேடியர் வுதாந்த ரணசின்காவின் டெலிபோன் நம்பரையும் கொடுத்திருக்கிறேன் ஆனாலும், எல்லாம் இருட்டில நடப்பதுபோலவும் தங்களுக்கு மட்டும்தான் இந்த விடயங்களில் அக்கறைகாட்டுவதாகச் சொல்வது சரியில்லை. கூட்டத்துக்கு வந்திருந்த மேதகுகள் சிறையில் இருக்கும் போராளிகள் பற்றி எவரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை என்ற பாணியில் பேசினார்கள்.

    இந்தியா வைக்கும் பல கோரிக்கைகளில் சிறைக்கைதிகளின் விடுதலையை விரைவாக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும்.

    போரின் பின் 11.000 பேர் சிறை படிக்கப்பட்டார்கள். போராளிகளின் எதிர்காலம் பற்றி இராணுவ ஜெனரல் தயா ரத்தினாயக்காவை 4.11.09 சந்தித்தபோது அவர் சொன்ன தகவல்கள்:

    •11.000 போராளிகள 2000 பேர் பெண்கள்இ போராளிகள் 18-60 வயதுக்குட்பட்டவர்கள்.
    •40 விகிதமானோர் ஏற்கனவே ஏதோ ஒரு துறையில் பயிற்சி பெற்றவர்கள்
    •60 விகிதத்தினர் உத்தியோக நிலையளவில் படிப்பத்தராதரம் உள்ளவர்கள்.
    •40 விகிதமானோர் ஓ’லெவல் படிப்புவரை படித்திருந்தார்கள்.
    •700-800பேர் ஏ லெவல் எடுத்தவர்கள்.
    •140 பட்டதாரிப் படிப்பில் இருந்தவர்கள்.;
    •300-400 பல்கலைக்கழகத்தை எதிர்பார்த்திருந்தார்கள்
    •.273 பேர் உடனடியாக மேற்படிப்புக்கு சிபாரிசு செய்யப் பட்டவர்கள்.
    •144 பேர் தம்பதிகள்.

    11.000 போராளிகளும் வவுனியா,வெலிக்கட,தெல்லிப்பளை ரத்மலான போன்ற 17 இடங்களில் வைக்கப் பட்டிருந்தார்கள். பல தரமாகப் பிரித்துப் புனர் வாழ்வுக்கான பயிற்சிகளைக் கொடுத்துக்கொண்டிருந்ததர்கள். ஓவ்வொரு குறுப்பிலும் 500 இருந்தார்கள். போராளிகளில் பலர் இன்று விடுதலை செய்யப்படடிருக்கிறார்கள். பலர் விசாரணைக்குக காத்திருக்கிறார்கள். இவர்களை விட 566 இளம் போராளிகள் இருந்தார்கள். அவர்கள் அத்தனைபேரும் எதிர்கால வாழ்க்கைக்கத் தேவையான சிறு சிற பயிற்சிகள் பெற்றபின் விடுதலை செய்யப் பட்டார்கள்

    புலம் பெயர் நல்லிணக்கக் குழவினர், 01.10ல் ஜனாதிபதியைச் சந்தித்தபோது, போராளிகளின் விடுதலை பற்றி விசாரித்தபோது, 2000 போர் விசாரணைக்குக் கோர்டுக்குக் கொண்டு போகப் படுவார்கள் என்றும் மற்றவர்கள் நிவாரணப் பயிற்சிகளின் பின் கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை செய்யப் படுவார்கள் என்றம் சொன்னார்.

    இன்று அகதிகளுக்கான மீள்வாழ்வுக்கான பல தரப்பட்ட முயற்சிகளும் எடுக்கப் படுகின்றன. ஆனால் அவை போதாது. புலம் பெயர் தமிழரின் உதவி பெரிதும் வேண்டப்படுகிறது. அதைக் கொடுக்காமல் வெளிநாட்டுத் தமிழர்களுக்குப் பொய்ப்பிரசாரம் செய்து பணம் சேர்த்தவர்கள் புலிகள் அந்த மட்டமான வேலையை மனித உரிமைகளை முன்னெடுக்கும் ஸ்தாபனங்கள் பொறுப்புணர்ச்சியுடன் அணுக வேண்டும் என்பது தாழ்மையான வேண்டுகோளாகும்.

    Reply
  • மாயா
    மாயா

    தேனி : சிலரது முகத்திரைகளை கிழிச்சிட்டீங்க போங்க. சுப்பர்

    Reply
  • Ajith
    Ajith

    இந்தக் கப்பலை நம்பியே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உட்பட முக்கிய போராளிகள் காத்திருந்ததாக தன்னை வெளிப்படுத்த விரும்பாத முக்கிய அரசியல்வாதி ஒருவர் சூரிச் மாநாட்டில் சந்தித்த போது தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார்.

    This is the tactics Jeyapalan always use his imagination.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /இந்தக் கப்பலை நம்பியே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உட்பட முக்கிய போராளிகள் காத்திருந்ததாக தன்னை வெளிப்படுத்த விரும்பாத முக்கிய அரசியல்வாதி ஒருவர் சூரிச் மாநாட்டில் சந்தித்த போது தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார்./– ஜெயபாலன்.
    தேனி மூலியமாக, முதலில் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் கருத்துகளுக்கு பாராட்டுகள்!.

    இலங்கையில் எந்த அரசாங்கம் வந்தாலும் ஆதரிப்பது என்பது இலங்கை முஸ்லீம் காங்கிரசுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் வேண்டுமானால் நிர்பந்தமாக இருக்கலாம்!. அரசாங்கத்திற்கு வரும் அனைவருக்கும் ஒரே அரசியல் சூழல் இல்லை. நான் நிச்சயமாக சிங்களவர்களின் இனவாத சிந்தனை உருவாக்கத்திற்கு எதிரானவனே!.ஆனால் ரஜேஸ்வரி மகிந்த ராஜபக்ஷே சகோதரர்களை நியாயப்படுத்தும் விதம் நியாயமானதே. பிரபாகரனைப் பற்றியான என் கருத்து, ஈ.என்.டி.எல்.எஃப். பின் பரந்தன் ராஜன், மட்டகளப்பு டி.பி.சி.ராம்ராஜ் போன்ரோர்களின் கருத்தை ஒட்டியதே. ஆகையால் கருணாவைப்பற்றியதான தோழமை உணர்வு அரசாங்கம் மாறும்போது, “சூரிச் மாநாட்டு கதாநாயகர்கள்” ஆதரவுக்குள் சென்று விடுமா என்பது கவனிக்கப்பட வேண்டும். ராஜேஸ் பாலா, யு.என்.பி. யைப் பற்றி வெளிப்படுத்திய விதம் பாராட்டுக்குறியது. அது ஜே.வி.பி. க்கு இழைத்த கொடுமைகள் நாம் பிரச்சனையின் மறுபுறத்தை விளங்கிக் கொள்ள உதவுகிறது. தனி நபர்களை விட ஒரு குறிப்பிட்ட “அரசியல் சூழலை” சரியாக ஆதரிப்பதோ,விமர்ச்சிப்பதோ “தமிழர்கள்” என்ற சொல்லை அகராதியில் “அதிகமாக பேசும் முட்டாள்கள்” என்று தரவுபத்துதலில் இருந்து தடுப்பதற்கு துணை புரியலாம்!. இதை ராஜேஸ் பாலாவின் கருத்துக்கள், அரசாங்கங்களின் பால் சாய்வதை அவர் தடுத்துக் கொள்வார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், பிரதிபலிப்பது கவனிக்கத்தக்கது!. ஒரு குறிப்பிட்ட அரசியல் சூழல் என்பது அனுபவத்தால் அறியப்பட வேண்டியது, ஆகையால் “ஓபாம கப்பல்” பற்றியான ஜெயபாலனின் கருத்துக்கள் அதிகமாக ஆதாரம் மிக்கது என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு ,பத்திரிக்கையாளர் என்ற முறையில் மிக முக்கியமானது. அல்லது லங்கா சிரீ போன்று ஜனரஞ்சக இணையம் கலர், கலராக நடத்தலாம்.

    Reply
  • Chandrakumar
    Chandrakumar

    “தமிழர் தகவல் நடுவம் திறந்த கொள்கையையும் வெளிப்படைத் தன்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்” எழுதுபவர்களும் கடைப் பிடிக்கவேண்டும் என்பது மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் என ஆசைப்படுபவர்களது அவா! ஆனால் மக்களால் வாழவேண்டும் என நினைப்பவர்களது/ ஆசைப்படுபவர்களது அவாவாக இருக்க கூடாது ! ( மற்றும் மட்டக்களப்பு டி.பிசி ராமராஜ் என தவறாக எழுதியதை திருத்தவும் ! ரி.பி.சி.ராமராஜ் என எழுதவும் ! ) ஏனெனில் அவர் மட்டக்களப்பு சம்பந்தமானவர் கிடையாது ! நன்றி ! சந்திரன் .

    Reply