யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

Prof_Hooleகடந்த 30 ஆண்டு கால யுத்தத்தில் இருந்து இலங்கைத் தமிழ் மக்கள் சுமுகமான வாழ்நிலைக்குத் திரும்பிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் தமிழ் கல்விச் சமூகத்தின் கல்விநிலையை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய அவசர தேவை ஏற்பட்டு உள்ளது. ஆனால் அச்சமூகத்தின் அதி உயர்ந்த கல்வி ஸ்தாபனமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மிக மோசமான சீரழிவை நோக்கிச் சென்று கொண்டு உள்ளது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இந்நிலையை மாற்றியமைக்கக் கூடிய வாய்ப்பு தற்போது ஏற்பட்டு உள்ளது. தமிழ் கல்விச் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என விரும்புபவர்கள், விரைவில் இடம்பெறவுள்ள உபவேந்தருக்கான தேர்தலில் பல்கலைக்கழகத்தை இலங்கையின் தரமான பல்கலைக்கழகங்களில் ஒன்றாக மாற்றக் கூடிய தகுதியும் ஆளுமையும் உடைய பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் க்கு தங்கள் ஆதரவை வழங்க வேண்டும்.

இந்த நியமனத்தில் தமிழ் மக்களின் நலன்சார்ந்து செயற்பட வேண்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கூடிய சமூகப் பொறுப்பு இருப்பதால் அவரை நோக்கி இக் கடிதம் எழுதப்பட்டு உள்ளது. மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கவுன்சில் உறுப்பினர்களும் இதனைக் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இம்மடலின் இறுதியில் பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் யை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆதரிப்பவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவிடுவதற்கான இணைப்பில் பெயர்களைப் பதிவு செய்து இம்முயற்சிக்கு உங்கள் ஆதரவை வழங்கவும். இம்முயற்சிக்கு உங்கள் நண்பர்கள் உறகளின் ஆதரவையும் பெற்றுத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
._._._._._.

மதிப்பிற்குரிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு,

பல்கலைக்கழகங்களே தெளிவான பார்வையையும் தலைமைத்துவத்தையும் சமூகத்திற்கு வழங்க வேண்டும். ஆனால் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள் குறிப்பாக வடக்கு – கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்கள் தலைமைத்துவம் இல்லாததால் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளன.

தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிய உபவேந்தருக்கான தேர்வு இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை புதிய திசைவழி முன்னேற்றுவதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு இதுவொரு சிறந்த சந்தர்ப்பம் என நாங்கள் நினைக்கின்றோம். மேலும் தமிழ் கல்விச் சமூகத்திற்கு சிறந்த தலைமைத்துவத்தை இந்த நெருக்கடியான காலகட்டத்தில் வழங்கவும் இது வாய்ப்பாகி உள்ளது.

இதன் கீழ் கையெழுத்திட்ட எங்களுக்கு இலங்கைத் தமிழ் மக்களினது நல்வாழ்விலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் மிகுந்த அக்கறையுண்டு. பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தேர்வில் போட்டியிட உள்ளார். நீங்கள் அவரை அப்பதவிக்கு கொண்டுவருவதற்கு வேண்டியனவற்றை செய்ய வேண்டும் என நாங்கள் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.

நாங்கள் பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு உபவேந்தராக வரவேண்டும் என்று கோருவதற்கான காரணங்கள் வருமாறு:

1. லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த இலங்கையில் கூடிய தேர்ச்சியுடைய கல்வியியலாளர். சர்வதேச பல்கலைக்கழகங்களில் பல ஆண்டுகள் கற்பித்த அனுபவம் உடையவர். இவரினால் உபவேந்தர் பதவி மதிப்படையும்.

2. University Grand Commissionஇல் 15 பல்கலைக்கழகங்களை நிர்வகித்தமை அவருக்கு இந்த பல்கலைக்கழகங்கள் இயக்கப்படுகின்ற முறை அதனை கட்டுப்படுத்தும் விதிமுறைகள் சட்டங்கள் என்பனவற்றில் மிகுந்த அனுபவத்தை கொடுத்துள்ளது. அதனால் இவரினால் உயர்ந்த அளவு தரத்தில் நிர்வாகத்தை திறம்படச் செயற்படுத்த முடியும்.

3. இவர் இலங்கையின் தென்பகுதியிலும் வெளிநாடுகளிலும் நன்கு அறியப்பட்டவராதலால், பல்கலைக்கழகத்திற்கு பல நன்மைகளைப் பெற்றுத்தர முடியும்.

4. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பொறியியல் பீடத்தை அமைக்க உள்ள நிலையில் பொறியிலாளரான இவரின் தனிப்பட்ட தொடர்புகள் பொறியியல்துறையை அமைப்பதற்கு மிக அவசியமானது. மேலும் இவர் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபம்மா ராவோ உடன் பணியாற்றியவர் என்பதால் இந்தியவில் இருந்து நிதி உதவிகளையும் இவரால் பெற்றுக்கொள்ள முடியும்.

5. அமெரிக்காவில் தனக்கு இருந்த பதவியைத் துறந்து யாழ்ப்பாணம் வந்ததன் மூலம் வடக்கு – கிழக்கின் அபிவிருத்தியில் தனது பொறுப்புணர்வை வெறும் வார்த்தைகளில் அல்லாமல் செயலில் காட்டி உள்ளார்.

மேலுள்ள ஐந்து விடயங்களிலும் போராசிரியர் ரட்னஜீவன் ஹுல் க்கு சமனான தகுதியுடைய ஒருவரை காண்பது கடினமாகவே உள்ளது. இவர் முன்னர் 2006ல் உபவேந்தராக நியமிக்கப்பட்டவர். ஆனால் சில அரசியற் சக்திகளால் தனது கடமையைச் செய்யவிடாது தடுக்கப்பட்டார். அப்போது முடியாமற் போன பல்கலைக்கழகத்தை முன்னேற்றும் முயற்சிக்கு இப்போது சந்தர்ப்பம் வழங்கப்படுவதே நியாயமானது.

நீங்கள் வடக்கு – கிழக்கை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று இதயபூர்வமாக விரும்பும் ஒருவர் என்பதாலும் அமைச்சராக இந்த விடயத்தில் உங்களுடைய வார்த்தைக்கு ஒரு இடம் இருப்பதாலும் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் அவர்களுக்கு வெளிப்படையான உங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் யை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆதரிப்பவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவிடுவதற்கான இணைப்பு:

http://digitechuk2.co.uk/petition/ProfessorHoole.htm

திரு ராரின் கொன்ஸ்ரன்ரைன்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ண ஜீவன் ஃகூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்ன ஜீவன் ஃகூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

Show More
Leave a Reply to நந்தா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

32 Comments

  • Mohan
    Mohan

    இன்றைய அரசியல் நிலவரத்தின்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிபார்சு செய்பவருக்கு அந்தப் பதவி கிடைக்குமா என்பது தெரியவில்லை. ஜனாதிபதியின் புதல்வருக்கும் அமைச்சரக்குமிடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலை தற்போது தீவிரமடைந்திருக்கின்றது. அமைச்சரின் அரசியல் பகையாளியும் முன்னாள் ஊடகவியலாளருமான சிறிரங்கா நாமலின் ஆத்ம நண்பர். அவரே இப்போது ஜனாதிபதியின் நெருக்கத்திற்குரியவர். அண்மைய நிய+யோர்க் பணயத்தின்போதும் அவரே பிரகாசமாக ஜொலித்தார். புலம்பெயர் புலிகளுடனும் நெருக்கமான உறவை கொண்டிருப்பவர் இந்த ரங்கா. அவர் மூலம் புலிகள் அமைச்சரின் சிபார்சை காணாமல் செய்வதற்கே சந்தர்ப்பம் அதிகம். எனவே எமது கோரிக்கையை ஜனாதிபதியிடமே வைக்கலாம். கடவுளிடம் கேட்பதற்கு தரகர் எதற்கு என்பது போல. இன்றைய நிலவரப்படி அமைச்சர் சண்முகலிங்கனை ஆதரித்தால்தான் ரட்ணஜீவன் நியமனமாக சந்தர்ப்பம் கிடைக்கும்.

    Reply
  • T Constantine
    T Constantine

    Mohan

    Thank you for your informationand advise . It is helpful.

    Reply
  • Sri vaishnavi
    Sri vaishnavi

    Constantine உங்கள் விருப்பம் நிறைவேற வாழ்த்துக்கள். சமூக அக்கறை கொண்ட அனைவரும், கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் டக்லசிற்கு விடுக்கும் இந்த வேண்டுகோளில் தயவு செய்து கை ஒப்பமிடவும். இதன் மூலமாவது எமது சகோதரிகள் நிம்மதியாக கல்வி கற்க வழி ஏற்படட்டும்.

    Reply
  • T Constantine
    T Constantine

    I appreciate there are few people are concerned as to why this letter was addressed to Hon Douglas Devanenda. Please find the reply bellow.

    The legal process as laid down in the Universities Act is the following: The Council votes in a panel of 3 and sends the list of unranked names to the UGC. The UGC makes its comments and passes the 3 names on to the President who appoints one of the three. Minister of Higher Education has no role in this although like any other minister he may urge the president to appoint a particular person.

    But the reality is that the President has tended to go by Douglas’ choice in all matters concerning the North including the choice of VC from the Council’s list of 3. Even the external members of the Council were appointed by the UGC on Douglas’ recommendation; at least many of them. Several members of the Council meet with Douglas before every Council meeting to decide on a common stand on matters coming before the Council and are likely to vote as he directs.

    So officially Douglas has no role but in reality he plays a very big role. In fact this is the first time that the Council has mostly nominees of one man (DD). Previously the UGC played a more democratic role by appointing nominees from various quarters — different ministers, the VC, public officials, the opposition MPs, etc. But this is the first time when the Council is almost one political bloc.

    So is the petition misdirected? I still think Douglas will continue to have the President’s ear since the President cannot ignore Douglas after he got the highest preference vote last time. If he lets go of Douglas, the President will have no one in Jaffna. There are other players now but they are not as essential to the President as Hon Douglas is.

    In any circumstances this imitative will be extend to presidents office.

    Thank you

    Reply
  • Ajith
    Ajith

    I read lot of comments in this subject in this web talking about political interferance as one of the primary reasons for the current status of Jaffna University. People should think twice why these people are concentrating one man for the job. why is only for jaffna University Why can’t he considered for Eastern Unlversity where we need real development or Upcountry where those are under developed?

    Reply
  • T Constantine
    T Constantine

    Ajith

    Good thinking. Why dont you take the lead. We will support you.

    Reply
  • நந்தா
    நந்தா

    இரத்தின ஜீவன் ஹூலின் தகைமைகள் அவரை கண்டிப்பாக மற்றவர்களிடமிருந்து உயர்த்துகின்றன. அவரது “படிப்பு” பற்றிய சிந்தனைகள் சமூக உயர்வையே நோக்கியுள்ளன. சண்முகலிங்கம் போன்ற “தவிச்ச முயல் அடிக்கும்” கூட்டங்களிலிருந்து அவர் கண்டிப்பாக வேறு படுகிறார்.

    அவரது நியமனத்தை அமைச்சர் டக்ளஸ் கண்டிப்பாக ஆதரிப்பார் என்றே எதிர்பார்க்கிறேன். யாழ் மக்களின் உயர்வு என்ற கருத்தில் பேராசிரியர் இரத்தின ஜீவனுக்கும் தேவானந்தாவுக்கும் எதுவித வேறுபாடுகளும் இருக்கும் சாத்தியங்கள் இல்லை.

    இரத்தினஜீவனின் நியமனம் கண்டிப்பாக புதிய பல்கலைக் கழக மூல்யங்களை உருவாக்கும் என்பதுடன் மக்களின் நல்வாழ்வு என்ற புதிய திசையில் தமிழ் மக்களையும், விசேடமாக யாழ் மக்களையும் வழிநடத்தும் என்றே எதிர் பார்க்கிறேன்.

    கல்விக்கும், சமூக ஒழுக்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அவரது சேவை கண்டிப்பாகத் தேவை.தவிர அவர் கணனித்துறையில் கொண்டுள்ள அக்கறையும் தகைமைகளும் அனுபவங்களும் இருட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டு அவதியுறும் தமிழ் மாணவர்களுக்கு ஒரு “வெளிச்சமாகவே” இருக்கும்!

    Reply
  • thurai
    thurai

    அஜீத்,
    சரியான கருத்து.

    ஈழத்தமிழர்களென்றால் யாழ்ப்பாணதவரென்றும், அதிலும் தமிழரில் மேலான்வர்களென்றால் ஓர் குறிப்பிட்ட சமூகத்தினர் தான் என்பதுமே கருத்தாக் உள்ளது.

    இதுவே தமிழீழ விடுதலையை ஓர் பயங்கரவாதிகளின் கைகளில் ஒப்படைத்தது. தமிழ்ர்கள் தமிழ்பேசுமனைவரையும் தமிழர்களாக பிரதேச வேறுபாடின்றி சம உருமை கொண்ட மனிதர்களாக மதிக்கும் பழக்கம் வரும் வரை தமிழர்ர்கள் உருமைப்போராட்டம் என்பதை மறந்திருப்பதே நல்லது.

    துரை

    Reply
  • Ajith
    Ajith

    Mr. Constantine,

    It is good that you realise that your move is politically motivated and you are wrong.

    Reply
  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    கிழக்கு மற்றும் மலையக அபிவிருத்தி பற்றி சிந்திப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், பேராசிரியர் ஹூல் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். அவரை கிழக்கில் அல்லது மலையகத்தில் நியமித்தால் உடனே யாழ்ப்பாண மேலாதிக்கமாகி விடுமல்லவா? கிழக்கு மற்றும் மலையகத்தின் நிலையைவிட யாழ்ப்பாணத்தின் நிலை ஒன்றும் இன்று சிறப்பானதாக இல்லை.. கிழக்கு மற்றும் மலையகத்தை விருத்தி செய்ய அங்கே தோன்றிய கல்விமான்கள் நிறையவே உள்ளனர்..அவர்களது சேவைகளைப் பயன்படுத்துவது தான் நல்லது..இதற்காக யாழ்ப்பாணத்தை புல்லுருவிகளின் கைகளில் மீண்டும் ஒப்படைத்து அதனை மேலும் சீரழிப்பதில் இருந்து காப்பாற்ற வேண்டிய தருணம் வந்து விட்டது…

    Reply
  • Kumar
    Kumar

    பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் உபவேந்தர் பதவிகளை சர்வதேச ரீதியாக விளம்பரம் செய்தே நிரப்புகின்றன. ஏன் யாழ் பல்கலைக்கழகம் மட்டும் டக்ளசில் மட்டும் தங்கி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? ஹூல் VC பதவிக்கு தகுதியானவர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் அவர் எப்ப்படி அப்பதவியை அடைய வேண்டும் என்பதில் எனக்கும் மற்றும் பலருக்கும் ஒரு விருப்பு இருக்கின்றது. கடந்த 3 VC யும் டக்ளசின் ஆசிர்வாதத்தால் தானே நியமிக்கப்பட்டனர்? அவர்கள் தானே UOJ இன் முழுச் சீர்கேட்டிற்கும் காரணம் என பலரும் எழுதுகின்றனர். சமூக நலன் விரும்பிகள் ஒரு குழு அமைத்து சர்வதேச ரீதியாக விளம்பரம் செய்து பல்கலைக்கழக பேரவை ஊடாக 3 பெயர்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதே நேர்மையான விதிமுறையாகும். ஹூல் போன்ற நேர்மையாளர்கள் டக்ளஸ் போன்றவர்களின் பிச்சையை விரும்பமாட்டார்கள். அது மாத்திரம் அல்லாது நக்கியவர் நாவிழக்கவும் வேண்டி வருமே. ஹூலின் கடந்த காலங்களைப் பார்த்தீர்களானால் அவர் எப்பொழுதும் எவருக்கு எதிராகவும் பேசத்தயங்காதவர். எதிர் காலத்தில் டக்ளஸின் அடாவடிகளையும் அவர் தட்டிக்கேட்பதையே பெரும்பாலானோர் விரும்புவர்

    Reply
  • T Constantine
    T Constantine

    Dear Ajith

    An opinion should be the result of thought, not a substitute for it.

    My action is political . Motivation is doing the right thing for UOJ

    Thank you

    Reply
  • kajen
    kajen

    Mr. Kumar

    Prf.Hoole might be good to elite class of Jaffna and SLDF or American corner, not to the ordinary citizens of Jaffna.

    Kajen

    Reply
  • murugan
    murugan

    அமைச்சருக்கு இது ஒரு நல்ல சந்தார்ப்பம். இவரும் பிழைவிட்டால் இவரும் மக்கள் மேல் சவாரி விடுவது உறுதிப்படுத்தப்படுகின்றது. பேரசிரியரின் தகைமைகள் பதவியை உறுதிப்படுத்துகின்றது. இவரின் பதவிக்காலத்தில் தமிழ் மாணவர்கள் பல நன்மைகளை பெறவேண்டும்.
    கடந்த கலத்தில் நடந்தது இது தான் உண்மை தெரிந்துகொள்ளங்கள். இவரின் வருகையை சில விரிவுரையாளர்கள் விரும்பாதல் தமது மதிப்பு குறைவடையும் என்பாதலும் தமது பட்டங்கள் குறைவு என்பாதாலும் அப்பேதைய செல்வாக்கு மிக்க சத்தியை பிடித்து இவரின் வருகையை குழப்பினார்கள் அதாவது பேரவை உறுப்பினர்களின் படங்கள்; பெயர்கள் குறிப்பிட்டு பகிரங்க மரணதண்டணை விதிக்கப்படும் என்று இணையம் மூலம் எச்சரித்தார்கள். இதனால் எக்கத்தில் ஒரு பெண் உறுப்பினர் இறந்தார்(பெயர் மங்கையர்கரசி சிற்றப்பலம் ஒய்வுபெற்ற அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது); இதேசத்திகள் இப்போது அமைச்சரைப்பிடித்து இவரின் வருகையை குழப்புவார்கள். இதற்கு அமைச்சர் இடம்கொடுக்க கூடாது. பேரசிரியரின் வருகையை பல்கழைகளகத்தில் பலர் விரும்புகின்றனர் என்பாது உண்மை.

    Reply
  • நந்தா
    நந்தா

    துணை வேந்தர் பதவிகளுக்கு சர்வ தேச ரீதியில் விளம்பரம் செய்கிறார்களா? இதென்ன புதுக் கதை? அப்படி எந்தப் பல்கலைக் கழகம் இலங்கை இந்திய அமெரிக்க கனடிய பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்துள்ளது என்று குமார் சொல்லுவாரா?

    கஜன் சொல்லுவதைப் போல ஹுல் குடும்பம் மில்லியன், கோடிகளுக்குச் சொந்தக்காரர்களல்ல. எனவே அமெரிக்க பூச்சாண்டி தேவையற்றது.

    Reply
  • Kumar
    Kumar

    UOJ was advertising in international journals such as New Scientist for lecturer/senior lecturer positions in late eighties and early nineties. Several universities and academic institution in Sri Lanka advertise in international journals to recruit academics.

    Reply
  • நந்தா
    நந்தா

    Kumar:
    Show us any evidence. I never come across such ads!

    Reply
  • Kumar
    Kumar

    What evidence do you want? Old New Scientist? You can ask any academics in that period. I remember several foreign nationals applied for academic positions but they were not called for interview because of their citizenship. One has to be Sri Lanlkan citizen to become a permanent faculty.

    After internet become popular, universities stopped advertising in international journals. Instead they advertise in their websites. You can see an advertisement for VC at UOJ website as well.

    Reply
  • இராஜரத்தினம்
    இராஜரத்தினம்

    2006இல் நடைபெற்ற துணைவேந்தர் தேர்தலில் பொறியியலாளரான இரத்தினஜீவன் கூல் அரசியல் செல்வாக்கால் நியமனம் செய்யப்பட்டு உயிர் அச்சுறுத்தலை காரணங்காட்டி நாட்டை விட்டு வெளியேறினார்.. இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியவரின் முகாமைத்துவம்> நிர்வாகம்> ஸ்திரதன்மையின்மை மற்றும் எதையும் பொறுப்புடன் செயலாற்றும் தன்மையின்மை ஆகிய செயற்பாடுகள் பல்கலைக்கழக சமூக வரலாற்றில் பாரியதோர் இடைவெளியை உருவாக்கி உள்ளதை அனைவரும் அறியக்கூடியதாகவுள்ளது.

    அத்தோடு பேராசிரியர் இரத்தினஜீவன் கூல் அவர்களின் செயற்பாடுகள் அவரின் தகைமையை ஸ்திரப்படுத்தக்கூடிய வகையில் அமையவில்லை. அதாவது துணைவேந்தராக நியமிக்கப்பட்ட நிலையில் உயிர் அச்சுறுத்தல் எனக்கூறி> யாழ் பல்கலைகழக சமூகத்தை உதாசீனம் செய்து விட்டு வெளிநாடு சென்றுவிட்டார். அதுமட்டுமல்ல தன துறை சார்ந்த ஆராச்சிகளையோ> வெளியீடுகளையோ அல்லது யாழ் மண்ணுக்கு உயர்கல்விச் சேவைகளையோ ஆலோசனைகளையோ வழங்கவில்லை. அத்துடன் அவரின் கட்டுக்கோப்புக்குள் அமைவாக இருக்கும் யாழ்ப்பாணகல்லூரியின் தொழில்நுட்ப நிறுவனத்தின் டிப்ளோமா பொறியியல்கல்வி திறம்பட செயற்படுத்தப்பட்டு முழுமை பெறவில்லை. இந் நிகழ்வு குடும்பத்தில் பொறியியல் நிபுணர்கள் இருந்தபோதும் தமது சேவையூடாக அபிவிருத்தி செய்ய முடியாதிருந்ததை காட்டுகின்றது. இது இவ்வாறிருக்க ஜீவன் கூல் அவர்கள் யாழ் பல்கலைகழகத்தில் பொறியியல் பீடத்தை உருவாக்க முயற்சிப்பதென்பது எவ்வகையிலும் பொருந்தாத விடயம். ஆனால் அவரது முழுமுதல் நோக்கம் யாதெனில் எவ்வகையிலாவது யாழ் பல்கலைகழக துணைவேந்தராக மீண்டும் கதிரை ஏறவேண்டும் பேரவாவே ஆகும். அப்படியாயின் இவருக்கு முன்னர் கிடைத்த சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்தியிருக்கலாம்.இதை விடுத்து யாழ் பல்கலைகழக நிர்வாகத்தை தனது குடும்ப ஆதிக்கத்தின் மூலம் சீரழிப்பதும் இவரது ஓர் உள்நோக்கமாக இருக்கலாம்.

    மேலும் இவர் யாழ் சமூக அமைப்பைச் சீண்டியும்> ஆறுமுகநாவலரை; இழிவான செயல்களை செய்தார் என்றும் ஆங்கில நாளேடுகளில் பெரியதோர் விமர்சனம் செய்துள்ளார். இது யாழ்ப்பாணத்தின் கந்தபுராண கலாச்சாரத்தை சீரழிக்கும் நோக்குடைய ஒரு கிறிஸ்தவன் தான்> என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தி;யிருக்கிறார். யாழ்ப்பாண சமூகத்தில்> பரமேஸ்வரா கல்லூரி உற்பத்திவித்த யாழ் பல்கலைகழகத்திற்கு வேறு தகுதியான துறைசார்ந்தவர்கள் இல்லையா? இது மதக் குரோதமல்ல. ஆனால் கிறிஸ்தவ சமூகம் இதை அவர்களது நிறுவனத்தில் ஏற்குமா?? நாவலரை குறை கூறும் ஒரு பேராசிரியருக்கு நாவலர் உருவாக்கிய சமூகத்தில் இடம் தருவது பொருந்துமா??

    Reply
  • நந்தா
    நந்தா

    நாவலர் பற்றி எழுதுபவர்கள் நாவலருக்கு சென்னையில் நடந்த தமிழாராய்ச்சி மகானாட்டில் சிலை வைக்கப்படாத காரணத்தை அறிந்திருக்க வேண்டும்!

    கூலை கிறிஸ்தவன் என்றும், கந்த புராணக் கலாச்சாரம் பற்றியும் கதைப்பவர்கள் அந்தநாவலர் கிறிஸ்தவர்களுக்காக பைபிளை மொழி பெயர்த்து விட்ட குழுவில தலைமை தாங்கியது இந்துக்களுக்கு செய்த துரோகமாகப் படவில்லையோ?

    புலிகளின் கொலை மிரட்டல்களுக்கு நின்று பிடிக்க அவருக்கு என்ன பைத்தியாமா? புலிகளோடு சேர்ந்து “அரசுப்பணத்தை” கொள்ளையடித்த கும்பலுக்கு சாமரம் வீசி தாங்களும் வயிறு வளர்த்த கும்பல்களுக்கு பலகலைக் கழகம் பற்றிக் கதைக்க எந்த யோக்கியமும் கிடையாது.

    அடுத்ததாக கூல் அங்கு பாதிரியாராக வரவில்லை. உபவேந்தரகவே வருகிறார்.

    புலிகளின் கலாச்சாரமும் கந்த புராணத்தை அடிப்படையாகக் கொண்டதோ?

    கத்தொலிக்க பாதிரிகளின் அட்டகாசங்கள் மாத்திரம் கந்த புராணத்துக்குள் வருகிறது என்று இந்த இராஜரத்தினம் சொல்லுகிறாரா?

    நாவலர் நல்லூரிலிருந்து நல்லூர் மக்களால் துரத்தப்பட்டவர். வெள்ளையனுக்கு கை கட்டிச் சேவகம் செய்த ஆறுமுகநாலரை நல்லூர் மக்கள் வரவேற்றது கிடையாது.

    Reply
  • kamali
    kamali

    நாவலர் உருவாக்கிய சமூகம் யாழ்ப்பாணச்சமூகம் என்பதை விட கிறிஸ்தவ மிஷனரிமார்களிடம் நாவலர் உதயமானார் எனக் கூறுவது தான் சரி. கூலை அனுப்பியது புலிகள் என்பதை விட யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் ஒரு கூட்டத்தினர் என்பது இரகசியமான பரகசியம். எமது சமூகம் மொழி சார்பு தேசியம் பேசி பட்ட துன்பங்கள் ஒரு புறம். மொழியால் லாபம் பெற்றவர்கள் இப்பொழுது சமய வாதம் ஆரம்பிக்கின்றார்கள். அடுத்தது குடும்பம் என்ற வட்டத்திற்குள் போய்த்தான் ஓயும். பரமார்த்த குருக்களையும் சீடர்களையும் தொடர்ந்து பதவியில் இருக்கவிட வேண்டுமா?

    Reply
  • Ajith
    Ajith

    புலிகளின் கொலை மிரட்டலுக்கு பயந்தவர் என்றால் ஏன இன்று வர நினைக்கிறார். நாட்டில் இன்னும் அவசர கால சட்டமும் ராஜபக்க்சவின் கொலைப் பயங்கரவாதமும் கொடிகட்டி பறக்கின்ற நிலையில் இங்கு வருகறார் என்றால் சோழியன் குடுமி சும்மா ஆடாதென்பது தானே பொருள். யாழ்ப்பாணம் பலவருடங்களாக சின்ஹல இராணுவ ஆட்சியில் தானே இருந்தது. Colombo வில் இருந்திருக்கலாம் தானே.

    கூல் இங்கு பாதிரியார் ஆகவும் வரவில்லை துணை வேந்தர் ஆகவும் வரவில்லை. ராஜபக்சேவின் வேண்டுகோளில் யாழ்ப்பாண மக்களை பழிவாங்கும் ஒருவராகவே வருகிறார். வெள்ளையனுக்க சேவகம் செய்தவர்களை மாத்திரமல்ல சின்ஹல்வனுக்கு அடிமைபட்ட எவரையும் யாழ் மண் வரவேற்காது.

    Reply
  • thurai
    thurai

    //வெள்ளையனுக்க சேவகம் செய்தவர்களை மாத்திரமல்ல சின்ஹல்வனுக்கு அடிமைபட்ட எவரையும் யாழ் மண் வரவேற்காது.//அஜீத்

    30வருட கால விடுதலை என்னும்பெயரை வைத்து போரை நாடத்தியவர்கள் யார் என்பதையும், இதனால் இலங்கையிலும் புலம் பெயர்நாட்டினிலும்
    பயனடைந்தவர்கள் யாரென்பதையும் அவதானிக்கவும். அரசியல் கட்சிகள் சிங்களவரோடு பேரம்பேசின. புலிகள் பிரேமதாசாவோடு பேரம் பேசின.
    கே.பி???

    துரை

    Reply
  • நந்தா
    நந்தா

    அஜித்:
    கூல் யாருடைய அழைப்பில் வந்தாலும் தமிழர்களுக்கு நல்லது செய்வார். ராஜபக்ஷ ஒன்றும் தமிழ்செல்வன் அல்ல. ஒரு நாட்டின் ஜனாதிபதி தமிழர்களில் “படித்த” ஒருவரை, புலிக் கிரிமினல்களுக்கு ஆதரவில்லாத ஒருவரை யாழ் பலகலைக் கழகத்துக்கு தொழிலுக்கு அனுப்புகிறார் என்பது சாதாரண மக்களுக்கு சந்தோஷம் தரும் செய்தி.

    புலிக்கும்பல்களுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் புலிகள் கொலை செய்தது போல கூலும் கொலை செய்ய வருகிறார் என்கிறீர்களா?

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    //வெள்ளையனுக்க சேவகம் செய்தவர்களை மாத்திரமல்ல சின்ஹல்வனுக்கு அடிமைபட்ட எவரையும் யாழ் மண் வரவேற்காது.//-Ajith on October 21, 2010 6:30 pm

    அஜித்! நீங்கள் எழுதிறத்தைப் பார்த்தால், நீங்கள்தான் யாழ் மண்ணினதும் மக்களினதும் அனைத்து சனநாயக உரிமைகளையும் கையில் வைத்திருக்கிற குறுநில மன்னர்போல இருக்கிறது. இந்த யாழ்ப்பாண மண்ணைப்பற்றி நீங்கள் நினைத்தமாதிரி எழுதுவதற்கு, நீங்கள் என்ன ஒட்டுமொத்த யாழ் மக்களின் பிரதிநிதியோ! வெள்ளைக்காரனுக்கு சேவகம் செய்யக்கூடாது என்கிறியள், அப்ப அவன்ர நாட்டில வேண்டப்படாத விருந்தாளிகளாக இருந்துகொண்டு Social fund எடுக்கிறதெல்லாம் உங்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் அவமானமா தெரியவில்லையோ? –

    Reply
  • Ajith
    Ajith

    தளபதி,
    நான் யாழ் மக்களினதும் மண்ணினதும் அனைத்து சனநாயக உரிமைகளையும் கையில் வைத்திருக்கிற குறுநில மன்னரும் அல்ல மந்திரியும் அல்ல. உங்களைபோல் எமது மக்கள் அனைத்து சனநாயக உரிமைகளையும் அனுபவிக்க உரிமை உள்ளவர்கள் என்பதனை மதிப்பவன் , விரும்புபவன். நான் எனக்கு சரியென பட்டதை சொல்லும் சனநாயக உரிமை உள்ளவன். இது நந்தாவுக்கு மாத்திரம் உரிய உருமை அல்ல. எனது கருத்தை உண்மையான யாழ்ப்பாண பிரதிநிதிகளும் கொண்டிருகிறார்கள் என்பதும் பொருந்தும். யாழ் மக்கள் சின்ஹலவர்களினதும் வெள்ளைக்காரனுக்கு அடிமைகளாக வாழவா வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்?

    தளபதி எப்போது கண்டு பிடித்தீர் நாங்கள் இங்கு Social fund எடுத்துக்கொண்டு இருக்கிறோம் என்று. அதை உறுதிபடுத்த உங்களிடம் எதாவது ஆவணங்கள் உள்ளனவா. நாங்கள் எப்போதும் உழைப்பை உரிமையை மதிபவர்கள். இந்த நாடில் நாங்கள் அடிமைகள் அல்ல. உங்களுக்கு Social fund இக்கும் social security இக்கும் வேறு என்பது தெரியாமல் கதைகிறீர்கள். (Social fund:When you are on a low income it is very difficult to budget for emergency expenses, funeral costs, the costs of a new baby or one-off payments for large items, such as, furnishing a home.
    Social security is primarily a social insurance program providing social protection, or protection against socially recognized conditions, including poverty, old age, disability, unemployment and others). இது இந்த நாட்டில் வசதி குறைந்த எல்லோருக்கும் வழங்கப்படும் கொடுப்பனவு. சின்ஹல தேசத்தின் கொடுமைகள் காரணமாக தப்பி வந்தவர்கள் இதனை பெறுவது தவறல்ல. அனால் அதை தவறாக பயன்படுத்துவது தவறு. உங்களைபோல் நான் உங்களை பற்றி தெர்யாமல் உங்களை பற்றி பொய்யான கருத்துக்களை பரப்ப விரும்பவில்லை. முதலில் அதனை பழகி கொள்ளுங்கள்.

    Reply
  • தேவராசா
    தேவராசா

    //இது இந்த நாட்டில் வசதி குறைந்த எல்லோருக்கும் வழங்கப்படும் கொடுப்பனவு. சின்ஹல தேசத்தின் கொடுமைகள் காரணமாக தப்பி வந்தவர்கள் இதனை பெறுவது தவறல்ல. அனால் அதை தவறாக பயன்படுத்துவது தவறு. உங்களைபோல் நான் உங்களை பற்றி தெர்யாமல் உங்களை பற்றி பொய்யான கருத்துக்களை பரப்ப விரும்பவில்லை. முதலில் அதனை பழகி கொள்ளுங்கள்.//Ajith on October 23, 2010 9:11 am

    அஜித்துக்கும் தளபதிக்கும் பணிவான வணக்கங்கள். நலமா?

    நிற்க, இந்த விவாத மேடை யாழ் பல்கலைக்கழகத்தின் மேம்பாடு பற்றிய கரிசனைகளின் விளைவாக எழுந்ததேதயன்றி, சமூக நலன்புரித் திட்டங்கள் மூலம் பணம் பெறுதல் எப்படி என்பதற்கான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ள அல்லவே.

    Social Welfare என்பதற்கும் நமது நாட்டில் வழங்கப்படும் “அரச பிச்சைச் சம்பளத்துக்கும்” என்ன வித்தியாசம்?

    அஜித்தும் தளபதியும் தளமும், களமும் மாறி விலகி நின்று தேவையில்லாத வெற்று விடயங்கள் பால் கவனத்தினை திசை திருப்புகின்றீர்கள்.

    சிங்கள தேசத்தின் கோரப்பிடியில் இருந்து தப்பினீர்களா? நல்லது. ஆனால், நீங்கள் தமிழ் தேசத்துக்காக என்னதான் இற்றை வரை செய்திருக்கின்றீர்கள்? யோசித்துப் பாருங்கள்…

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    திரு. அஜித் அவர்களே,

    நீங்கள் எனது கருத்தை தவறாக புரிந்துகொண்டு கருத்தின் சாரத்தை உங்கள் தலைமீது போட்டுள்ளீர்கள். நான் உங்களைத் தனிப்பட்ட முறையில் இங்கு தாக்கி எழுதவில்லை, மேலும் வெளிநாடுகளில் எம்மவர் செய்யும் அவமானகரமான விடயத்தைத்தான் பொதுவாக எழுதினேன். நீங்கள் வெள்ளைக்காரனுக்கு சேவகம் செய்தல் பற்றி எழுதியுள்ளீர்கள், உலகத்தின் முண்ணனிப் பல்கலைக்கழகங்களும் ஆய்வுகூடவசதிகளும் வெள்ளைக்காரர்களின் நாடுகளிலேயே உள்ளன. இந்தப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற திறமையான வெளிநாட்டவர்களுக்கு இந்தநாடுகளிளேயே தொழில்வாய்ப்புக்கள் அவர்களை தேடிவருகின்றன, மேலும் இலங்கையைப் பொறுத்தவரையில் அதன் பல்கலைக்கழகங்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களைப் பொறுத்தவகையில் 50 ஆண்டுகள் பின்தங்கிய நிலையிலே உள்ளன, அத்தோடு எமது தமிழர்களிடையே உள்ள பழமைவாதப்போக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் “சட்டம்பிமாரையும்”, “பரியாரியார்மாரையும்” தான் உருவாக்க வழிவகுக்கும்.

    வெள்ளைக்காரர்களின் தொழில்நுட்பத்தை திரு. கூல் அவர்கள் யாழ் பல்கலைக்கழகதினூடாக தமிழர்களிடையே பரப்ப இருப்பது வரவேற்க்கப்பட வேண்டிய விடையமே, அதைவிடுத்து “கெடு குடி சொல் கேளாது” என்பது போல எம்மவர்கள் பழமை பாடிக்கொண்டிருந்தால் எமது சமூகத்தின் அழிவையும் இயலாமையும் நாங்களே பார்வையாளர்களாக பார்த்துக் கொண்டிருப்போம்.

    மேலும் நான் Social fund என்ற வார்த்தையை பாவித்தது, ஆங்கிலத்தை சொந்த மொழியாக கொண்டிராத மற்றைய நாடுகளில் வாழும் எம்மவர்களுக்கு புரியக்கூடிய பொதுவான சொல் என்பதினால்தான். மற்றும்படி definition for a word and its meening were well known for me.

    Reply
  • நந்தா
    நந்தா

    ஜனனாயக உரிமை என்பது புலிகளுக்கும் புலிகளின் ஆதரவாளர்களுக்கும் சம்பந்தமில்லாத விஷயம். புலிகள் என்பவர்கள் “வெளினாட்டுக்” கூலிப்படைகள் என்பது யாவரும் அறிந்த உண்மை. புலிகள் தமிழர்களைக் கொள்ளையடித்து வெளினாட்டு வியாபரிகளுக்கு லாபம் காட்டிய கொள்ளைக் கோஷ்டி. துப்பாக்கி முனையில் ஜனனாயகத்துக்கு சமாதி கட்டியவர்களை ஆதரிக்கும் அஜித் ஜனனாயக உரிமை என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

    //யாழ்ப்பாண மக்களை பழிவாங்கும் ஒருவராகவே வருகிறார்.//
    இந்தக் கருத்துக்கு விளக்கம் தேவை. புலிகள் இரத்தினஜீவன் கூலின் நியமனத்தை எதிர்த்து கொலை மிரட்டல் விட்டதற்குப் பிரதான காரணம் கூலின் சகோதரன் ராஜனின் மனித உரிமைகளுக்கான அமைப்பு என்பதும் ராஜினி திரணகமவின் கொலையை அவர்கள் சர்வதேச ரீதியில் அம்பலப்படுத்தி “புலிகள் வெறும் கொலைகாரர்கள்” என்றும் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்குப் போராடவில்லை என்பதையும் அம்பலப்படுத்தியதும் ஆகும்!

    பலகலைக் கழகத்தில் குதிரை கஜேந்திரன் போன்றவர்கள் குடியிருந்து அட்டகாசம் செய்தநாள்க்களை அஜித் அறிந்து கொள்வது நல்லது!

    இரத்தினஜீவன் கூல் தனது கல்வியை மாத்திரம் தனது வாழ்வுக்கான ஆதாரமாக நம்பியிருப்பவர். தான் பிறந்து வளர்ந்த ஊரில் உயர் பதவியை அல்லது ஒரு தொழிலை செய்ய அவருக்கும் “ஜனநாயக” உரிமை” உண்டு என்பது அஜித்துக்கு தெரியாமல் போய்விட்டது!

    குதிரை கஜேந்திரன் அல்லது தமிழ் செல்வன் போன்ற “அறிஞர்” களை யாழ் பலகலைக் கழகத்துக்குத் துணைவேந்தராக்க வேண்டும் என்று அஜித் விரும்புவது புரிகிறது!

    Reply
  • Ajith
    Ajith

    தேவராசா,
    இந்த விவாத மேடை யாழ் பல்கலைக்கழகத்தின் மேம்பாடு பற்றிய கரிசனைகளின் விளைவாக எழுந்ததாக இருந்தால் புலிகளை இழுத்து அதிகார அரசியல் லாபம் தேடவோ அல்லது மதங்களை இழுத்து மத வாதம் செயும் அரங்ககவோ இருந்திருக்காது. யாழ் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் உண்மையில் அக்கரை உள்ளவர்கள் அங்கு அரசியல் கலப்பற்ற ஒரு நிர்வாக அமைப்யே விரும்புவர்கள். அங்கு ஒருவரை உப வேந்தராக தெரிவுசெயவத்ர்கு ஏன் அரசியல் வாதிக்கு மனு கொடுக்க வேண்டும். அரசியல் வாதிகள் மாறலாம் ஆனால் பல்கலைகழகம் மாறகூடாது. அங்கு அரசியல் கலப்பற்ற ஒரு நிர்வாகியே தேவை. இங்கு விவாத மேடையில் கூலுக்கு அதரவு கோருபவர்கள் புலிகளின் எதிரிகள் (டௌக்லஸ் ஆதரவாளர்கள்) அவருக்கு எதிர்கருத்துக்கல் புலி அதரவாளர்கள் , இந்த விவாத மேடையில் யாழ் மாணவர்களோ விரிவுரையலர்களோ அல்லது பெற்றோர்களோ கருத்துகள் தெரிவிக்கவில்லை. நீங்கள் மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்பதை விட்டு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை சொலுங்கள்.

    தளபதி,
    நீங்கள் பாவித்த சொட்பதன்கள் “அப்ப அவன்ர நாட்டில வேண்டப்படாத விருந்தாளிகளாக இருந்துகொண்டு Social fund எடுக்கிறதெல்லாம் உங்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் அவமானமா தெரியவில்லையோ? .
    நீங்கள் பொதுவாக எழுதினேன் என்பதற்கு பின் அதைப்பற்றி விவாதிப்பது அழகல்ல. நீங்கள் நான் வெள்ளைக்காரனுக்கு சேவகம் செய்தல் என்றது அடிமை வாழ்வு என்னும் பொருளில் அன்றி தொழில் செய்வது பற்றியோ தொளில்நுட்பகளை அறிமுகபடுதுவதை பற்றியோ அல்ல. ஆனால் அதை திரு. கூல் அவர்கள் மாத்திரம் தான் செய்வர் மற்றவர்களால் முடியாது என்பது தான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. யாழ் பல்கலைகழக மாணவர்கள் பலர் இன்று பல்வேறு துறைகளில் பல்வேறு பல்கலைகழகங்களில் செவையாற்றுகிரர்கள். அங்கு ஒரு நிலையான நீதியான ஜனநாயகே நிர்வாகம் இருக்குமானால் பலர் சேவையாற்ற முன்வருவார்கள். இன்றும் பல முன்னை நாள் மாணவர்கள் பல்வேறு முறைகளில் தங்கள் பங்களிப்பை வழங்கி கொண்டுதான் இருக்கிறார்கள்.

    Reply
  • அப்பாவி
    அப்பாவி

    Ajith on October 23, 2010 10:19 pm ,

    “அங்கு அரசியல் கலப்பற்ற ஒரு நிர்வாக அமைப்யே விரும்புவர்கள்”

    என்பதைவிட, “திறமையான ஒருவரை”. மேலும் சணமுகலிங்கன், பாலசுந்தரம்பிள்ளை, மோகனதாஸ் போன்ற சமுக விரோதிகளை அல்ல. இந்த சமுக விரோதிகள டௌக்லஸ்ய் பயன்படுத்திதான் அந்த இடத்தை பிடித்தார்கள் என்பதை கவனதிற்கொள்க.

    நீங்கள் கூறுவது சரிதான், ஆயினும் அது பல்கலைகழகதிற்க்கு ஒரு முள்ளிவாய்கால் என்பதை நினைவிற்கொள்க.

    “நீங்கள் மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்பதை விட்டு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை சொலுங்கள்”

    உண்மையை வெளியிட்டோம். பொய்களை அல்ல.

    நன்றி.

    Reply
  • அப்பாவி
    அப்பாவி

    Ajith on October 23, 2010 10:19 pm ,

    “யாழ் பல்கலைகழகத்தில் ஒரு நிலையான நீதியான ஜனநாயகே நிர்வாகம் இருக்குமானால்….”

    அங்கு அது இல்லை என்பதுதன் பிரச்சினையே. அதற்க்கு காரணமானவர்கள் யார் என்பதும்தான் அதை எப்படி மாற்றுவதும் என்பதும்தான் இவ்விவாத அரங்கு ஆராய முற்படுகின்றது. இதில் சில நழுவல் ஏற்படதான் செய்கின்றது. இக்கால கட்டத்தில் அது தவிர்க்கமுடியாதது.

    மேலும், இப்போது யாழ் பல்கலைகழகம் இருக்கும் சூழமைவில் இத்தகைய சவால்களுக்கு பேராசிரியர் கூல் ஒருவர்தான் முகம் கொடுக்ககூடியவராக உள்ளார், மற்றவர்கள் அந்த பக்கம் கூட எட்டி பார்க்கமாட்டார்கள். அது உங்களின் எழுத்தில் தெரிகின்றது.

    நிற்க, யாழ் பல்கலைகழக நிர்வாகத்தில் பாலசுந்தரம்பிள்ளையின் செல்வாக்கு இன்னும் சிலகாலம் தொடருமயின் பல்கலைகழகம் ஒரு முள்ளிவாய்க்கால் ஆக மாறிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

    இப்போது உள்ள தெரிவு முள்ளிவாய்க்காலா அல்லது பேராசிரியர் கூலா?

    Reply