பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம் மீது தொடரும் நெருக்கடி

Jeyaranjan_T_Cllrபிரித்தானிய தமிழர் விளையாட்டு கழகத்தின் (BTSL) போட்டிகளில் அம்பெயராக பணியாற்றிய சொக்கன் என்பவர் அம்பெயர் கட்டணம் 300 பவுண்ட் தொலைபேசிக்கு செலவாகியது 50 பவுண் மொத்தம் 350 பவுண்களைத் தரவேண்டுமெனக் கோரியுள்ளார். கை பாதிக்கப்பட்ட முன்னாள் போராளியான இவர் வேறு தொழில் புரிவதற்கு இயலாதவர். அம்பயர் கட்டணம் அவருக்குரிய முக்கிய வருவாய். அது நீண்டகாலமாகக் கொடுக்கப்படாமல் உள்ளது.

ரெட்பிரிச் கவுன்சிலர் ஜெயரஞ்சனும் (படம்) தங்கள் RLSSC கழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை BTSL உடனடியாகத் தரவேண்டும் எனக் கோரி காராசாரமான மின் அஞ்சலை அனுப்பி வைத்திருந்தார். BTSL வழங்கிய காரணங்களை தாங்கள் ஏற்கத் தயாரில்லை எனவும் கவுன்சிலர் ஜெயரஞ்சன் தனது மின் அஞ்சலில் தெரிவித்துள்ளார்.

லண்டன் கிரிக்கட் கழகங்களிடையே கழகம் கட்டும் போட்டி

BTSL_Logoலண்டன் கிரிக்கட் கழகங்களிடையே கழகம் கட்டும் போட்டி ஆரம்பமாகி உள்ளது. வசந்தன் கிருஸ்ணன் தலைமையிலான பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகத்தினுள் ஏற்பட்டுள்ள நெருக்கடியும் முரண்பாடுகளும் கடந்த லண்டன் குரல் இதழில் வெளியானது. ”எமது கழகத்தில் நிதிநெருக்கடி உள்ளது. ஆனால் எமது முன்னேற்றத்தை விரும்பாதவர்கள் இதனைப் பெரிது படுத்துகின்றனர்!!!” வசந்தன் கிருஸ்ணன் (பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம்)

ஒக்ரோபர் 03ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஆனால் வசந்தன் கிருஸ்ணன் தலைமையை ஏற்காத ஒரு பிரிவனர் ஹரோ ஐயப்பன் ஆலயத்தில் கூடி ‘வேணி’ என்பவர் தலைமையில் புதிய கழகம் ஒன்றைக் கட்ட முற்பட்டு உள்ளனர்.

அதே சமயம் லண்டனில் 15 ஆண்டுகள் வரை கிரிக்கட் போட்டிகளை நடாத்தி வந்த ஸ்கந்தமூர்த்தி ஒக்ரோபர் 10ல் தங்கள் கழகத்தை மீளக்கட்டுவதற்கான சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தள்ளார்.
அதேநாள் ஒக்ரோபர் 10ல் வசந்தன் கிருஸ்ணனும் தங்கள் கிரிக்கட் கழகங்களை சந்திப்பு ஒன்றிற்கு அழைத்துள்ளதாகத் தெரியவருகிறது. பெரும்பாலும் பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகத்தில் உள்ள கிரிக்கட் கழகங்கள் மூன்றாகப் பிரிந்து செல்லலும் நிலை தோண்றியுள்ளது.
இதில் ஸ்கந்தமூர்தியின் கழகத்திற்கு கிரிக்கட் கழகங்கள் சென்றுவிடக் கூடாது என்பதில் ஏனைய இரு விளையாட்டுக் கழகங்களும் கவனமாக உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் தங்களை தமிழ் தேசிய கிரிக்கட் அணிகள் என்கின்றனவாம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • kuru
    kuru

    அண்ணன்மாரே கொஞ்சம் திங் பண்ணுங்கோ. இவ்வளவு காலமும் தமிழ் தேசியத்தின் பெயரால் வசந்தன் வாழ்ந்தார் .இப்போது வசந்தன் கிரிக்கட் ஆல் தமிழ் தேசியத்திற்கு வாழ்வு கொடுக்கவுள்ளார் .முள்ளிவாய்காலில் ஒரு இலட்சம் மக்கள் செத்ததிற்கு கணக்குள் அண்ணனிடம் கேட்காது போல இப்போது வசந்தனிடம் கணக்கு விபரங்களை அல்லது அம்பயர்.பந்து மைதானத்திற்கு என .. எல்லா விடயத்தினையும் மறந்து விடுங்கள் இது ஒரு கனவு போல..
    இப்போது நடைபெறும் மும்முனை போட்டியில் வசந்தன் குழு தமது ஆரம்பகால உறுப்பினர்கயை களம் இறக்கியுள்ளார். விஐயகுமார். காலவண்ணன் போன்றவர்கள் ஆரம்பகாலங்களில் இவர்களுடன் இருந்தவர்கள் பின்னர் ஒரம் காட்டப்பட்டவர்கள்

    Reply
  • thurai
    thurai

    எல்லாமே புலிகள் காட்டியவழிகள். மிரட்டல், பறித்தல் அழித்தல். உலகமெங்கும் வாழும் புலம்பெயர் தமிழரிடையே வள்ர்ந்துள்ளதும், புலிகள் வளர்த்து விட்டு சென்றதும் பகைமை மட்டுமே. நாடுகடந்த தமிழீழமாயினும் சரி, சிறுபிள்ளைகள் விளையாடும் விளையாட்டாக இருந்தாலும் சரி ஒற்றுமைக்கு இடமே இல்லை.

    துரை

    Reply
  • bernie suresparan
    bernie suresparan

    Dear Editor, You must verify your stories before publishing them for all to read. I have been involved in cricket for more than 30 years in this country and am still involved because of the love I have for the game. Our club have been involved with British Tamils Cricket League since its inception. We are a strong cricket club and were the champions of the premier league last year and should be this year as well,provided the league makes the right decision not involving politics.

    There were so many things that were wrong with BTCL this year and I have tried in so many ways to resolve them with the organisers. When my efforts failed,I decided to get the clubs together to play good cricket without any influence either political or otherwise. I am not involved in any politics and for you to say that I am is wrong. I am not a supporter of tigers or the government but only interested in the welfare of tamil people. The people who report this to you must have motives beyond my belief and hell bend on subortisation. I must tell you, people who belong to cricket clubs are not stupid to belive these stories and will decide on where they can play cricket proper without any interference.

    Our league is not run by an individual but it belongs to all the clubs. Financial benefit the league gets will only be spent for the benefit of the clubs or the league. No individual or organisation will benefit from our league. If you need to see our constitution we are more than happy to share this with you. –Bernie.

    Reply
  • Information
    Information

    நண்பர்களே வணக்கம்

    உங்களுக்கு தெரியுமா “கேக்கிறவன் கேணையன் என்றால், எருமை மாடு ஏயர்பஸ் ஓடுமாம்” – தமிழர் நாம் எல்லாம் கேணையர்களா??

    தமிழ் கிரிக்கட் -விளையாட்டு கழகங்களைத் ‘தந்திரமாக’ ஏமாற்றும் பிரமாண்டமான மோசடி ……. தலைமையைக் பீடத்தை கைபற்ட பிரதாபன் , தனம் இரவோடு இரவாக பெரும் முயற்சி. நடு இரவில் போன் கால்……பதவிகள் கையள்ளிப்பு – ராஜபக்சே ஸ்டைலில் கட்சி உடன்பாடு.

    தாயகத்து அரசியல் என்பது சிறீலங்கா அரசின் சிறைக்கைதி என்பது வெளிப்படையானது, அங்கு மகிந்தாவின் விரல் அசையாது ஒரு புல்லைக் கூட புடுங்க முடியாது. ஆனால் அதனை முதன்மைப்படுத்தி பலமாக செயற்படும் நிலையில் உள்ள புலம்பெயர் அரசியலை பின்தள்ளும் இந்த மாமனிதர்களை என்ன சொல்வது? கேவலமாக இறுதில் சாதாரண கிரிக்கெட் விளையாட்இல் கூட இவர்கள் கையை வைத்துவிட்டார்கள்.

    தற்போது எமது எதிரி என்பவன் எம்மைப் போலவே இருக்கிறான், எம்மைப்போலவே தேசியம் பேசுகிறான். இதற்ட்கு உதாரணம் வசந்தன், பிரதாபன், கலா வண்ணன், விஜயகுமார், தனம் போன்ற துரோகிகள்.

    இவர்கள் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள்? லண்டனில் தங்கள் வியாபாரத்தை பெருக்கி கோட்டு சூட்டு போட்ட சீமான்கள் ஆனார்களே தவிர வேறு என்ன செய்தார்கள்? நெஞ்சு கொதிக்குது இந்த மனிதரை நினைக்க நினைக்க… பதவி, பந்தா தேடி அலையும் பைத்தியகாரர்கள்… இவர்களா எம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்போரர்கள்?? வட கிழக்கு மக்களுக்கு சேர வேண்டிய பல லட்சம் பணம் லண்டனில் இவர்களிடம் முடக்கம்.

    தாயக மக்களுக்கு உதவுகின்றோம், எதிரி ஊடுருவி விட்டான், நடந்ததை மறப்போம், எல்லோரும் ஒற்றுமையாக இருப்போம், வசந்தனை மன்னிப்போம், தொலைந்த பணத்தை அறவுடமுடியாத கணக்கில் போடுவம் என்ற விடயங்களை முன் வைத்து பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகங்களை தன் பக்கம் வளைத்துப்போட நீலிக் கண்ணீர் நாடகம் அரங்கேற்றம்.

    இவர்கள் பிரிட்டிஷ் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் தலைவர்கள் என்று தங்களை இனம் காட்டிகொண்டு KPயின் நேரடி வழிகாட்டலில் லண்டனில் நடக்கும் அனைத்து புலம்பெயர் ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான விசயங்களில் தலையிட்டு வருடத்திற்கு சுமார் 1 மில்லியன் பவுண்ட்ஸ் புலம் பேர் தமிழர் பணம் அம்பேல். இது வரை ஸ்போர்ட்ஸ் கவுன்சிலின் கணக்கு வழக்குகள் எதுவும் யாரிடமும் காட்டப்படவில்லை – இந்த வருடம், உணவகம் ஸ்பொன்சர் மற்றும் உநிபோர்ம் மூலம் சேர்க்கப்பட்ட £100K மேலான பணம் அனைத்தும் மாயமாக மறைவு.

    லண்டனில் நடந்த போராட்டத்தில் அடிக்கடி முகம் காட்டி அதன் மூலம் தன்னை பிரபலப்படுத்த முயன்று தோத்த பலர் KP உடன் கொழும்பில் சந்தித்த பின்னர் இப்பொழுது இந்த கும்பலில் சேர்ந்து பதவிகளை எடுத்து இருப்பது வேடிக்கையானது.

    இதில் சூத்ரம் என்னவென்றால் ஏழு பேர் கொண்ட நிரந்தர அங்கத்தவர் (இப்பொழுது ஆறு பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது) பட்டியல் முடிவாகியுள்ளது. நீங்களே பார்த்து புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே … விஷயம் என்னவென்று!! கீழே பாருங்கள் –

    நீங்கள் எந்த கூட்டத்தை கூட்டினாலும் எங்கு கூக்குரல் இட்டாலும் இந்த சண்டியர்களை நிரந்தர அங்கத்தவர் பட்டியலில் இருந்து அகற்ட முடியாது. இவர்கள் நிரந்தரமானவர்கள் – விரும்பினால் நீங்கள் தான் இடம் மாற வேண்டும். வசந்தனோ, தனமோ இவர்கள் எவரும் தலைவரால் நியமனம் பெறாதவர்கள். காவ்புக்குள் கடா வெட்டினவர்கள்!!

    குனிய குனிய குட்டுறவன் மடையன் என்றால் குட்டு வாங்கறவனும் மடையன் தான். நண்பர்களே சிந்தித்து செயல் படுங்கள் – முடிந்தால் இந்த அநியாயத்தை தடுத்து நிறுத்துங்கள். இவர்கள் அனைவரும் எமது சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட வேண்டியவர்கள்.

    நீங்கள் கிரிக்கெட் விளையாடுங்கள் அல்லது விடுங்கள் ஆனால் இந்த ஆசாமிகளை ஊக்குவிக்காதிர்கள். நாம் பட்ட துன்பம் அனைத்தும் போதும். இனி இளப்பதரற்கு ஏதும் இல்லை. நாட்டுக்கு ஏதும் செய்ய வேண்டும் என்றால் நேரடியாக செய்யுங்கள். தயவு செய்து எக்காலத்திலும் தனி நபர்களை தமிழர் சார்பான விசயங்களில் அதரிகாதீர்கள்? கேள்வி கேளுங்கள் அது உங்கள் உரிமை? விசாரியுங்கள்? ஏன் அரியாசனத்துக்கு ஆசைபடுகிறார்கள் என்று யோசியுங்கள். தலயை மட்டும் ஆட்டாதிர்கள்!!

    விளையாட்டு கழகங்களே உங்கள் பணம் அனைத்தையும் வசந்தனிடம் உடனடியாக திரும்பி கேளுங்கள்? தர முடியாவிட்டால் பொலிசில் பதிவு செய்யுங்கள்? தமிழ் மக்களை ஏமாத்த முனையும் எல்லாருக்கும் எடுத்துகாட்டாக செயல்படுங்கள்.

    மிக விரைவில் இந்த கும்பலின் அட்டகாசம் முழுவதும் உங்கள் முன் வைக்கப்படும். இவர்களிடம் உள்ள எம் மக்கள் சொத்து விபரம், யார் யாருடன் தொடர்பு வைத்து உள்ளார்கள் என்பது உட்பட ?

    இது இறந்த என் அனைத்து சக போராளிகள் மற்றும் என் முள்ளிவாய்கால் தெய்வங்கள் மீது ஆணனை!!

    (தமிழா சிந்திந்து செயல்படு!!)

    உங்கள்
    Ranjith (Uduruvi)

    British Tamils Cricket League
    League Committee of Management 2011

    Patrons
    1.Dr.Theivendra
    2.Dr.Muraly
    3.Mr.Sivakumar
    4.Yet to be Decided.?????
    5.Yet to be Decided.?????

    Board of Governance of BTCL
    1.Mr.Vasanthan.
    2.Mr.Vijayakumar.
    3.Mr.Kalavannan
    4.Mr.Pradhaban.
    5.Mr.Uthyanan.
    6.Mr.Raj.

    Chairman Mr.Vijayakumar
    League Secretary Mr.Kalavannan

    Treasurer Mr.Ramesh (Merton Boys CC)
    Player Registration & ID Cards Mr.Rakulan (Bloomfield CC)
    Fixture Secretary Mr.Kandeepan (Redbridge Lankians CC)
    Umpire & Grounds Coordinator- Mr.Sriranjan
    Results & Score Card Mr.Sanjeevan (Eastham CC)
    Disciplinary Committee Mr.Singham (West 3 CC)
    Balls & Logistics Mr.Ratna ( Dollishill CC)
    Marketing &Media Mr.Mathan (Tamil CC)
    Presentation Ceremony Mr.Arnold
    New Membership & Recruitment Mr Suthan (Eastham CC)
    Sponsorship Mr.Raj (Tamil United CC) &
    Mr.Nehru (Northern CC)

    Reply