எனது பார்வையில் கே பி : ”உலகை மாற்ற வேண்டுமாயின் நீ முன்னுதாரனாமாயிரு. – Be the change you want to see in the world.” மகாத்மா காந்தி : எஸ் வாசுதேவன்

NERDO_KP_Meetsமகாத்மா காந்தியின் பொன்வாக்குளில் ஒன்று. ”உலகை மாற்ற வேண்டுமாயின் நீ முன்னுதாரனாமாயிரு.” இதன் அவசியம் இன்று நம் தமிழ் சமூகத்தில் அவசியமான ஒன்றாக இருக்கிறது. சமூக மாற்றம் பற்றி பேசும் பலரே இன்று சமூகத்தின் பல்வேறு சிரழிவுகளுக்கு காரண கர்த்தாக்களாக இருக்கிறார்கள். இது தாயகத்தில் மிகவும் ஒரு மேசமான நிலையில் உள்ளது. அதற்காக புலம் பெயர் மண்ணில் உள்ளதெல்லாம் திறம் என்று கூறவரவில்லை. புலம்பெயர் மண்ணில் இன்று வேறு ஒரு வியாதி பிடித்துள்ளது. கற்பனையில் கப்பலோட்டும் தமிழனாக புலம்பெயர் தமிழன் மிகவும் மோசமான ஒரு தமிழ் சமூகத்தை புலம்பெயர் மண்ணில் உருவாக்கி வருகிறான்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சிக்காக 20 வருடங்களுக்கு மேலாக உழைத்து பின்னர் தகடு வைப்புகளால் ஓய்வு பெற்ற கே.பி என்று அழைக்கப்படும் திரு செல்வராசா பத்மநாதன் அவர்கள் புலிகளின் மறைவிற்கு பின் பரவலாக அதிகம் பேசப்பட்டு வந்த ஒருவர். இவர் நல்லவரா கெட்டவரா என்ற விவதாம் தொடர்ந்த வண்ணமே உள்ளது. ஆனால் அண்மையில் தமிழ் பத்திரிகையாளர் டீ. பி. எஸ் ஜெயராஜ் நான்கு பகுதிகளாக கே.பியுடனான நேர்காணலை மிகவும் விறுவிறுப்பாக எழுதியிருந்தார்.

நம்மவர்களுக்கு விடுப்பு பூராயம் அறிவதில் மிகுந்த அக்கறை! ஆனால் இந்த நேர்காணல் இந்த விடுப்பு பூராயங்களை விறுவிறுப்பாக்கவில்லை. யதார்த்த நிலையை விளக்கியது. கே.பி முன்னர் வெளியில் இருந்து சொன்னதைதான் மீளவும் சொல்லியிருக்கிறார். கே பி உடன் மே18க்குப் பின் பலதடவை உரையாடி இருந்தேன். விவாதித்தும் இருந்தேன். தேசம்நெற் ஆசிரியர்களும் கே பி யுடன் கதைத்ததைப் பதிவு செய்திருந்தனர். இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் என்ன விடயங்களைப் பேசினாரோ அதே விடயங்களையே அவர் கைது செய்யப்பட்ட பின்னரும் பேசுகின்றார். நானும் விடுதலைப் புலிகளுடன் செயற்பட்டவன் என்பதை முன்னரே எழுதி உள்ளேன். அவ்வாறே கே பி யும் விடுதலைப் புலிகளுடன் நீண்ட காலம் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்.

இப்போதுள்ள நிலையில் கே பி தங்களால் வழிநடத்தப்பட்ட இளைஞர்கள் சிறைகளில் வாடுவதனாலும் தங்களை நம்பிய மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி அனைத்தையும் இழந்த நிலையில் இருப்பதால் அவர் குற்ற உணர்விற்கு உள்ளாகி இருப்பதை அவருடன் உரையாடியதில் இருந்து உணருகிறேன். அந்தக் குற்ற உணர்வு பாதிக்கப்பட்டவர்களிற்கு எப்படியாவது உதவ வேண்டும் என்ற உந்துதலை வழங்குகின்றது.

ஆனால் இதுபற்றி உடைந்து போய் பல்வேறு அணிகளாகி உள்ள புலம்பெயர் புலிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதைகளை தம் வசதிக்கேற்ப வெளியிடத் தொடங்கினார்கள். கே.பியே அடுத்த முதல்வர்! கே.பி டீ.பி.எஸ் கூட்டில் ஒரு பத்திரிகை. கே.பி ஒரு ஆயுதக்குழுவை கட்டுகிறார். கே.பி அபிவிருத்தி என்ற பெயரில் காசு சேர்க்கிறார். கே.பி மீளவும் புலிகள் பாணியில் மாபியா நடத்த முனைகிறார். என்று தாம் விரும்பிய படி காது மூக்கு வைத்து தொடங்கிய கதைகள் இன்று கடைசியல் கே.பிக்கு அரசு 500 பரப்பு காணியை இலவசமாக வழங்கியுள்ளதில் என்பதில் வந்து நிற்கிறது.

Kumaran_PathmanathanKumaran_PathmanathanKumaran_Pathmanathanஇயக்கத்தை விட்டு கே.பியை ஓய்வெடுக்க சொன்னபோது அவரிடம் இருந்த கடைசி குண்டூசி வரை இயக்கத்தால் பொறுப்பேற்கப்பட்டது. அதன் பின்னர் வெளிநாட்டு புலிகளிடமிருந்து ஒரு ஓய்வூதிய சம்பளமே அவருக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் இயக்கத்தின் செயற்பாடுகளில் இருந்து ஓதுங்கியிருக்க கூறிய அதே இயக்கம் கே.பியை ஒரு அரசியல் ஆலோசகராக 2003இல் கொண்டுவர மீளவும் விடுதலைப் புலிகளின் தலைவர் முயன்றதை பலர் மறந்து விட்டனர். அதை அன்று இக்பால் அத்தாஸ் ஹின்டு பத்திரிகையில் விலாவாரியாக எழுதியிருந்தார். http://www.hinduonnet.com/2003/10/15/stories/2003101511111000.htm

கே.பியை எப்படியாவது இயக்கத்தினுள் வைத்திருக்க விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முயன்ற போதும் அதுவும் கூடிவரவில்லை. இதற்கு பின் நடந்தவைகளை தனது நேர்காணலில் கே.பி விரிவாக கூறியள்ளார். கே.பியுடன் வேலைசெய்த முன்னைநாள் இயக்க நண்பர்கள் பலர் இன்று வெளிநாடுகளில் தாமுண்டு, தம்பாடு உண்டு என்று இருக்கிறார்கள். இவர்கள் யாரும் கே.பியை குறை கூறவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தை விட்டு விலத்திய பல்வேறு பதவிகளை வகித்தவர்கள் இன்று புலம்பெயர் மண்ணில் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் யாரும் கே.பியின் இந்த அறிக்கை பொய் என்று கூறவில்லை.

ஆனால் இதெல்லாம் சும்மா கட்டுக்கதை என்று இவர் தற்போது ஒரு சூழ்நிலைக்கைதி எனவே இவரை விட்டு விட்டு நாம் நமது வேலையான தேசியத்தை கட்டுவோம் என்று தேசிய வியாதி பிடித்த கூட்டம் அலைகிறது. இவர்களில் 99வீதமானோர் எந்த ஒரு இயக்கத்திற்கும் போகாதவர்கள். போராட்டம் தொடங்கிய மறு கணமே வெளிநாடு வந்தவர்கள். ஒரு சிலர் வெறும் சாக்கு போக்குக்காக தம் சொந்த நலனுக்காக இயக்கங்களிற்கு போனவர்கள். இவர்களில் பலர் புலம்பெயர் ஊடகங்களை தம் வசம் வைத்திருப்பவர்கள். இவர்கள் தான்  இன்று கே.பியை ஒரு துரோகியாக்கி அவரை ஏதாவது ஒரு நாட்டின் உளாவளி என்று முத்திரை குத்தமுனைபவர்கள். இவர்களில் ஒரு தரப்பு உலகப் புகழ் பெற்ற புனைபெயர் தமிழ் ஊடகவியலாளர்கள். இணைய செய்திகளை படித்து விட்டு நோரக கண்டது போல் விலாவாரியாக எழுதித் தள்ளுகிறார்கள்.

ஊடக தர்மத்திற்காக இலங்கைக்கு உயிரைப்பணயம் வைத்து சென்ற டைம்ஸ் சஞ்சிகையின் மேரி வாழும் இந்த நாட்டில் தான் இந்த கூட்டமும் வாழ்கிறது. ஒரு ஊடகவியலாளனிற்கு இருக்க வேண்டிய அடிப்படை தகமைகள் கூட இருக்க வேண்டாம்? குறைந்த பட்சம் நேர்மையாவது வேண்டாமா?

நான் கடந்த ஆவணியில் இலங்கை போய் வந்ததும் மீண்டும் எனக்கு கே.பியுடன் பேச வாய்ப்பு வந்தது. பேசிய பின் தான் அங்கு அவரைப் போய் பார்த்திருக்க வேண்டும் என்று பின்னர் கவலைப்பட்டேன். காரணம் தற்போது அவர் செய்யும் முயற்சி! அந்த முயற்சி வெறும் கண்துடைப்புக்காவோ காசு பணம் சேர்க்கவோ செய்யும் முயற்சி அல்ல. நான் வன்னியில் நேரடியாக பார்த்து பாதிக்கப்பட்ட விடயங்களை விட அவரை பல விடயங்கள் மிகவும் மன அழுத்தத்திற்குள்ளக்கி இருந்தது. இதை அவருடனான உரையாடலில் புரிய முடிந்தது. இயக்கம் நடாத்திய காலங்களில் அதீத விசுவாசம் காட்டாது அந்த மனிசனும் சொத்து சேர்த்திருந்தல் மலேசியா போயிருக்கத் தோவையில்லை. பிடிபட்டிருக்கவும் மாட்டார்.

பத்மநாதனின் படமே அவர் பிடிபட்ட பின்னரே ஊர்ஜிதம் செய்யப்பட்டது. புலம்பெயர் நாட்டில் மே 18 இற்கு பின் தலைமறைவான பணக்காரப் புலிகளில் ஒருவராக கே.பியும் இருந்திருக்க முடியும். இயக்கம் முழுவதும் அழிந்ததை ஊர்ஜிதம் செய்த செல்வராசா பத்மநாதன் ஒரு பற்றிக்காக (Patrick) தென் ஆபிரிக்காவிலேயோ அல்லது டேவிட்டாக எரித்திரிவியாவிலோ ஒதுங்கியிருக்க முடியதா?

NERDO_KP_Meetsமக்கள் மீது பற்றுள்ளவர்கள் மக்களை விட்டு  ஓட மாட்டார்கள். நம்பிக்கை இழந்த மக்களிற்கு தன்னால் ஏதாவது செய்ய முடியுமா என்றுதான் சிந்திப்பார்கள். இந்த ஒரு நோக்கிற்கா தன் அடையாளத்தை வெளியில் கொண்டு வந்த கே.பியை இலங்கை அரசு கைது செய்ததையே பொய் என்று தமிழீழத்தை இதோ நெருங்கிக் கொண்டிருப்பதாக எழுதிய அதே புலம்பெயர் ஊடகவியலாளர்கள் ஆய்வு செய்து எழுதுகிறார்கள்.

கே.பி மலேசியவில் தங்கியிருந்த போது பல்வேறு தடவைகள் மணிக்கணக்கில் தொலைபேசியில் கதைக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்து. ”புலிகளின் ஏகப்பிரதிநிதுத்துவத்தை நீங்கள் மூட்டை கட்டிவைக்க வேண்டும்” என்று நான் தொடங்கவே, ”தம்பி இது தான் நாங்கள் விட்ட பெரிய பிழை இதை இனியும் விடக்கூடாது” என்று கூறியதோடு நிற்காது, பல்வேறு பட்ட இயக்க தோழர்களை அணுகியதுடன் அவர்களை தொடர்ந்து சந்தித்தும் வந்தார். இது தான் இங்குள்ள ஏகப்பிரதிநிதித்துவ புலிகளின் வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்தது. தமது பதவிகள் பணம் அனைத்தும் பறிபோய்விடும் என்ற அச்சத்தில் கே.பி எதிர்ப்பு யுத்தத்தை அவர்கள் அன்றே ஆரம்பித்து விட்டார்கள்.

இன்று புலிகள் செய்த அனைத்து தவறுகளிற்கும் அனைவரிடமும் பொது மன்னிப்பும் கோரியுள்ளார் கே.பி. புலிகளின் அராஜகத்தை விமர்சித்து அவர்களை விட மிக மோசமாக ஆராஜகம் செய்த கட்சிகள் கூட இன்னமும் குறைந்த பட்ச மன்னிப்பை கூட இலங்கை மக்களிடம் கோரவில்லை. ஆனால் இதைக் கூட இந்த போலி ஊடகவியலாளர்கள் எள்ளி நகையாடுகிறார்கள். இவர் சூழ்நிலைக் கைதியாம்.  அதுதான் மன்னிப்பு கேட்டவராம்.

”மாற்றம் என்பது உன்னுள் ஆரம்பிக் வேண்டும்” என்பதை கே.பி இன்று நிரூபித்துள்ளார்.

NERDO_Book_Donationநேர்டோ என்ற அமைப்பை கே.பி தொடங்கியதன் காரணம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அந்த மக்களின் கஸ்டத்திற்கு தானும் ஒரு காரணம் என்ற குற்ற உணர்வு மட்டும் அல்ல. மாறாக மனித நேயம் கொண்ட எந்த ஒரு மனிதனுக்கும் உருவாகும் ஒரு உணர்வு. வன்னிக்கு நேரடியாக சென்று நிலைமைகளை பார்த்து அந்த மக்கள் படும் அவலங்களை பார்க்கும் ஒவ்வரு மனித நேயம் கொண்டவர்களுக்கு உருவாகும் அந்த உணர்வே கே.பிக்கும் உருவாகியது.

தடுத்து வைக்கப்படுதலின் உளவியல் தாக்கத்தை தானே அனுபவித்து உணர்ந்த கே.பி, தடுத்து வைக்கபட்டிருக்கும் முன்னை நாள் போராளிகளின் வேதனையையும் தாக்கங்களையும்  நன்கே உணர்ந்தார். இவை பற்றி பேசும் ஒவ்வொரு கணமும் அவர் உணர்ச்சிவசப்படுவதை என்னால் புரிய முடிந்தது. ”நான் வாழ்ந்து முடிந்து விட்டேன் ஆனால் இவர்கள் வாழவேண்டும்” என்பதிலும் ”அவர்கள் நல்ல மனிதர்களாக வெளியில் வந்து தங்கள் சொந்த காலில் நிற்பதை பார்க்க வேணும்” என்பதே அவரின் விருப்பம். கே.பியும் ஒரு கொஞ்ச காலம் சிறையில் அப்பிடி இப்பிடி காலத்தை தள்ளிப்போட்டு பொது மன்னிப்பில் மயிலிட்டியில் தன் வாழ்க்கையை முடித்திருக்க முடியம். ஆனால் அதை செய்ய அவர் விரும்பவில்லை.

”அரசாங்கம் செய்யட்டும். நாங்கள் ஏன் செய்ய வேண்டும்” என்று விதண்டாவாதம் பேசவில்லை. அவர் இதை வைத்து அரசியலும் செய்யவும் விரும்பவில்லை. யுத்தத்தால் பாதிகப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை ப+ர்த்தி செய்ய தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யவே முனைகிறார். இன்று வட கிழக்கில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குறிப்பாக இந்த போராட்டத்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை நேரில் பார்த்த, மனச்சாட்சி உள்ள ஒரு சாதாரண மனிதன் செய்யும் ஒரு செயற்பாட்டையே இன்று நேர்டோ ஊடாக கே.பியும் செய்ய முனைகிறார்.

NERDO_KP_Meetsஅண்மையில் மிகவும் இரகசியமாக புலம்பெயர் மண்ணிலிருந்து சென்று கே.பியை சந்தித்தவர்கள் அங்குள்ள பலரிற்கு பல வாக்குறுதிகளை கொடுத்து விட்டு நாடு திரும்பினர். கே.பியும் இவர்கள் ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்த்திருக்க வந்த ஒருவர் போட்ட குத்துக்கரணத்தால் எல்லாமே தலைகீளாக மாறியது. உதவியை எதிர்பார்த்தவரகள் ஏமாற்றம் அடைந்தனர். இலங்கை அரசை சார்ந்தவர்களோ பார்தீர்களா புலம்பெயர் தமிழர்களை என்று ஏளனம் செய்தனர். ஆனால் நல்ல மனம் படைத்த ஒரு சிலரின் உதவியுடன் தன்னால் இயன்றதை கே.பி செய்யாமல் இருந்து விடவும் இல்லை.

இன்று அவர்களிற்கு கோடிக்கணக்கில் பணம் தேவையில்லை. ஆழுக்கொருவர் ஒரு பவுண் மாதம் கொடுத்தாலே அது ஒரு மாற்றத்தை கொண்டுவரும். புலிகளின் பணத்தை இங்கு வைத்துள்ளவர்கள் அதை காப்பாற்ற கே.பியை துரோகியாக்குவதிலேயே கவனமாயுள்ளனர்.  இவர்களிற்கு மக்களைப் பற்றியோ அவர்கள் படும் துன்பம் பற்றியோ அக்கறை கிடையாது.  கே.பி ஏன் செய்ய வேண்டும்? எம்மை நேரடியாக செய்ய அரசு ஏன் தயங்குகிறது என்று ஒருவர் கேட்கிறார்.

20 வருடங்களிற்குமேல்  தனது உழைப்பால் ஒரு அமைப்பை எந்தவித சுயநலமும் பாராது கட்டிக்காத்ததுடன் இன்று ஒரு சதம் காசு கூட கையில் இல்லாது வெறும் கைதியாக இருப்பதே  ஒரு முக்கிய காரணம். காசுதான் பெரிது என்றிருந்தால் கே.பி மலேசியா முதல் மயிலிட்டி வரை பினாமி பெயர்களில் முதலிட்டு விட்டு இன்று சொகுசாக வாழ்ந்திருக்க முடியும்!

இலங்கை அரசை அணுகி தாம் ஒரு அரச சார்பற்ற ஸ்தாபனத்தை நடாத்த போகிறோம் என்றதும் அரசு இணங்கியதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. இந்த விடயத்தில் ஏற்கனவே பலரை நம்பி செயற்பட விட அவர்கள் தமது கஜானாக்களை நிரப்புவதிலேயே கவனம் செலுத்த முனைந்தார்கள். ஆனால் தனது எதிர்காலம் என்ன என்று தெரியத நிலையிலும் அதைப்பற்றி கவலைப்படாது யுத்தத்தால் பாதிக்ப்பட்ட  மக்களின் வாழ்க்கைத் தரத்தை எப்படியாவது உயர்த் வேண்டியது தனது கடமை என்று இலங்கை அரசிடம் கோரி அவர்களை இணங்க வைத்தார். அதை பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தற்போது செய்து வருகிறார்.

School_Under_TreeNERDO_School_Supportஉடல் நலம் ஓத்துளைக்காது போதும்  வன்னிக்கு அடிக்கடி சென்று அந்த மக்களுடன் ஒன்றாக இருந்து அவர்களின் நலனை எந்த வித அரசியல் லாபமும் பாரக்காது முழுநேரமாக  தன்னை அர்ப்பணித்து செயலாற்றி வருகிறார். கே.பியை பொறுத்தவரை இது சமூக சேவை மாத்திரம் அல்ல. தன் மனதில் ஏற்பட்ட வடுக்களை போக்க உதவும் ஒரு நீவாரணம். கே.பி மீதான  அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் தொடரவே போகிறது. ஆனால் அவை அனைத்துமே காலப்போக்கில் அடிபட்டுப்போகும். தனது விடா முயற்சியால் எவ்வாறு புலிகள் என்ற அமைப்பை கட்டியமைக்க உதவினாரோ அதேபோல் இந்த மக்களின் வாழ்வை கட்டிமையக்க இவரால் நிச்சயம் முடியும் என நம்புவோம்!

குமரன் பத்மநாதனின் நேர்காணல்கள்:

(யூன் 14 2009ல் குமரன் பத்மநாதன் வே பிரபாகரனின் மரணம் தொடர்பாக தேசம்நெற் க்கு தெரிவித்த கருத்துக்கள். இப்போது வெளியிட்டு வரும் கருத்துக்களை பெரும்பாலும் 2009 யூனிலும் குமரன் பத்மநாதன் கொண்டிருந்தார். இவை தேசம்நெற் இல் வெளியாகி இருந்தது. தவிபு தலைவர் பிரபாகரன் உண்மையிலேயே வீர மரணம் எய்தி விட்டார். : விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை , VVT E ஆக மாறும் LTTE : த ஜெயபாலன் )

”ஹெலிகொப்டர் முயற்சி சாத்தியமற்றுப் போனது. நெடியவன், காஸ்ட்ரோ மீது சினங்கொண்டேன்.” குமரன் பத்மநாதன்

”நட்பில் பிரிவு எதுவும் இருக்கவில்லை. பிரிந்திருக்கவும் என்னால் முடியாது. அவர் எனது தலைவர், நண்பர். ஓர் மூத்த சகோதரன்.” : குமரன் பத்மநாதன்

பிரபாகரனையும் குடும்பத்தினரையும் வெளியேற்ற ஹெலி வாங்க முயன்றேன்: குமரன் பத்மநாதன்

”ஆயுதக்கொள்வனவில் வெற்றி! தலைமையை இயக்கத்தை காப்பதில் தோல்வி! மக்களின் வாழ்வை மீள் கட்டியெழுப்புவதில் நிச்சயம் வெற்றிபெறுவேன்!” குமரன் பத்மநாதன்

Show More

Your email address will not be published. Required fields are marked *

14 Comments

  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    “உனது நண்பர்கள் யாரென்று சொல், நீ எப்படிப்பட்டவன் என்று சொல்கிறேன்” என்று யாரோ சொன்னார்கள்.. திரு. கே.பி.யின் நண்பர்களில் ஒருவர் திரு. சார்ள்ஸ். இவர் மே 18க்குப் பின்பும் லண்டனில் பணம் சேர்த்து திரிந்தவர். மக்கள் அனாதைகளாக வவுனியா முகாம்களில் அடைக்கப் பட்டபோது வவுனியாவில் வெடிச்சத்தங்கள் கேட்பதாக புரளி கிளப்பி விட்டு வசூல் வேட்டைக்கு போராட்ட முகம் ஒன்றை ஏற்படுத்த படாத பாடுபட்டார். ஏற்கனவே இவர் பொறுப்பிலிருந்த ரெலோ பணத்திற்கு நடந்த கதை ஊரறிந்தது… கே.பி யை இரகசியமாகப் போய் மலேசியாவில் சந்தித்து வந்தவர். அதன் பின்புதான் கே.பி. பிடிபட்டார்.

    கே.பி. யை எனக்கு தெரியாது. ஆனால் மலேசிய பைவ் ஸ்டார் ஓட்டலில் இருந்து கொண்டு அவர் அரசியல் செய்யத் தொடங்கிய போது தன்னை இந்திய றோ சந்திக்க விரும்புவதாக அவர் சொன்னதாக ல்ண்டனில் அவரது நண்பர்கள் கதைகளை அவிழ்த்து விட்டனர்.மக்களுடய அங்கீகாரம் பெற அவர் மேற்கொண்ட முயற்சிகளில் இதுவும் ஒன்று. நான் சிறு வயதில் இயேசு அழைக்கிறார் கூட்டங்களுக்கு போன அனுபவத்தை மீண்டும் உணர்வதாக இது இருந்தது.

    கே.பி பிடிபட்டது விடுதலைப் புலியின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக..ஒருநாள் பயிற்சிக்குச் சென்றதால் கைதுசெய்யப் பட்ட சிறுவனோ சிறுமியோ சிறையில் வாட இவர் எப்படி கொழும்பிலும் வசதியாக வாழ முடிகிறது..?
    இது விடுதலைப் புலி இயக்கத்தின் தலைமை நிலையில் இருந்த அனைவரிடமும் இருந்த/ இருக்கும் பொதுக்குணம்.. வாய்ச் சவடால் பேசுவதும் பின்னர் பிடிபட்டவுடன் பல்டி அடிப்பதும்.. இதைத்தான் அவரும் செய்கிறார்..

    மேலும் கே.பி. ஆரம்பத்தில் இருந்தே தலை மறைவு வேலைகளுக்கும், உல்லாச வாழ்க்கை முறைகளுக்கும் பேர் போனவர். அவர் மக்களுக்காக வேலை செய்வதானாலும் கூட ஏ.ஸி..ரூமில் இருந்து கொண்டுதான் செய்வார் என்பது தான் அவரைப் பற்றிய கணிப்பீடு. அவருக்கு தேவையான வசதிகளின் அடிப்படைகளிலேயே அவருடைய கொள்கை அமைய முடியும்..

    அவர் தனது போராட்ட காலத்தின் எப்பகுதியிலும் மக்களுடன் இணைந்து சிறு துரும்பைக் கூட நகர்த்தாதவர். கைது செய்யப் பட்டவுடன் திடீரென ஒரு பாதிரியாரின் மனநிலையுடன் அவர் பேசுவதில் நம்பகத்தன்மை குறைவாகவே உள்ளது..அத்துடன் அவர் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்து மக்களுக்கு சேவை செய்த அனுபவம் சிறிதும் இல்லாதவர். தமிழ் மக்களுக்கு இன்றைய நிலையில் தேவையான தலைமையை ஒரு சூழ்நிலைக் கைதியான இவரால் நிச்சயமாக வழங்க முடியாது.

    புலம் பெயர் அரசியல் நடாத்தும் முன்னாள் புலிகளில் பெரும்பான்மையோர் இத்தகைய மனநிலை கொண்டவர்களே.. அல்லல்பட்ட மக்களின் நலனை விட தமது குடும்ப, சாதி, சமூக நலனையே அவர்கள் முக்கியமானதாக கொண்டுள்ளார்கள்.ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தங்களையே அழைக்க வேண்டும் என உருத்திர குமாரனும் அவரது நண்பர்களும் காத்திருக்கிறார்கள்..இதற்காக அவர்கள் தமக்கே உரிய முறைகளில் அரசாங்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தி வருகிறார்கள்..

    Reply
  • karuna
    karuna

    இலங்கையிலை இருக்கிற எதிர்கட்சி மாதிரி எல்லாத்தையும் எதிர்க்கிறது விவாதத்திற்கு நல்லாயிருக்கும் அனால் நடைமுறைக்கு சரியா? கே.பி பற்றி பல கதைகள் புரளிகள் இன்றும் உலாவுகிறது. அனால் தற்போது கே.பி பொது மன்னிப்பு கேட்டு விட்டு மக்களிடம் நேரடியாக வேலை செய்வது போல் தெரிகிறது. ஒருவர் எப்படி மாறினார் ஏன் மாறினார் என்பதை விட்டு தற்போது என்ன செய்கிறார் என்று பார்ப்பது ஆரோக்கியமானது. யார் குத்தினாலும் அரிசியானால் சரி. வன்னியில் மிக மோசமான நிலையில் உள்ள மக்களிற்கு நேர்மையாக ஏதாவது செய்தால் அதை வரவேற்போம்!
    எதிரி நல்லது செய்தால் அதை வரவேற்கும் பக்குவத்தை தமிழ் மக்களிடம் காண்பது அரிது தான்!

    Reply
  • ashroffali
    ashroffali

    யார் என்னதான் சொன்னாலும் கே.பி.இன்று அரசாங்கத்தின் செல்லப் பிள்ளை. அரசாங்கம் போட்டுக் கொடுக்கும் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அவர்கள் எழுதிக் கொடுப்பவற்றை வாசிக்கும் கிளிப்பிள்ளையாகவே தற்போதைக்கு கே.பி.செயற்படுகின்றார்.

    இறுதி யுத்த கால கட்டத்தில் நடைபெற்ற பல்வேறு மனித உரிமை மீறல்களை மறைக்க அரசாங்கம் படாத பாடு பட்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாகவே புலிகளின் தவறுக்கு கே.பி.யை வைத்து மன்னிப்புக்கோர வைத்தது. அதற்காக நான் புலிகளை உத்தமர்கள் என்று கூற வரவில்லை.அவர்களுடைய அந்திமக் காலம் வரை தீவிரமாக அவர்களை எதிர்த்தவர்களில் நானும் ஒருவன்.அதன் காரணமாக பல தடவைகள் புலிகளினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டவனும் கூட.

    ஆனால் தற்போதைக்கு அரசாங்கத்தின் செயற்பாடுகள் புலிகளை விட மிக மோசமானதாக அமைந்துள்ளது. புலிகளுக்குப்போட்டியாக அரசாங்கமும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டது. இன்றும் கூட இடம்பெயர் மக்களை மனிதர்களாக நடத்தும் பக்குவம் அரசாங்க உயர்மட்டத்திடம் இல்லை.அதற்குப் பதிலாக அவர்களை வைத்து உலக நாடுகளிடம் கையேந்தும் நடவடிக்கை மூலம் அந்த மக்களைக் கண்காட்சியாக்கி பணம் உழைப்பதே அரசாங்கத்தின் நோக்கம்.

    உண்மையைச் சொல்வதாக இருந்தால் இறுதிக்கட்ட யுத்த காலத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகைப் பணம் மற்றும் தங்கம் என்பன அப்பகுதியில் வாழ்ந்த பொதுமக்களுக்கும் உரிமை கொண்டாடக்கூடியவை. அதனை விலாவரியாக விவரிக்கத் தேவையில்லை என்று நினைக்கின்றேன். அந்த வகையில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தங்கம் என்பவற்றின் பெறுமதியே அந்தப்பிரதேச மக்களை மீளக்குடியமர்த்தவும் அவர்களுக்கான வசதிகளை வழங்கவும் போதுமானது. அவற்றுக்கெல்லாம் என்ன நடந்தது? ஓரிருவரின் பொக்கற் நிரம்பியதைத் தவிர ஆக்கபூர்வமான முறையில் அவை பயன்படுத்தப்படவில்லை.

    அடுத்ததாக தமிழ் மக்கள் விடயத்தில் அரசாங்கம் தற்போதைக்கு நேர்மையாக நடக்கத் தயாரில்லை.நான் இன்றைக்கு சொன்னதாக எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அரசாங்கம் ஒரு போதும் இனப்பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான தீர்வொன்றை முன் வைக்காது. அதற்குப் பதிலாக அரைகுறைத் தீர்வொன்றையே திணிக்கும். அதனைக் கை நீட்டி வரவேற்பதற்குத்தான் கருணா சிறீ ரங்கா எனப் பலர் இப்போதைக்குப் போசிக்கப்படுகின்றார்கள்.

    புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் அண்மையில் அழிக்கப்பட்டதாக ஒரு செய்தி வந்ததே? யாராவது அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்தீர்களா? உண்மையில் புலிகளின் ஆயுதங்களுக்கு என்ன நடந்தது என்றாவது யாருக்காவது தெரியுமா?

    இப்படியாக சுட்டிக்காட்ட ஆயிரம் விடயங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் பட்டியலிட சந்தர்ப்பம் கிடைக்கும் போது நான் பட்டியலிடுவேன். அல்லது அதற்கு முன் எனது மரணச் செய்தி அல்லது நான் காணாமல் போன செய்தியாவது உங்களுக்குக் கிடைக்கும். அந்தளவுக்கு நானும் எனது குடும்ப அங்கத்தவர்களும் உயிரச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றோம்.யாருக்காக நான் மற்றவர்களைப் பகைத்துக்கொண்டேனோ யாரை நான் நியாயவாதிகள் என்று நம்பியிருந்தேனோ அவர்கள் தான் இன்று என் உயிருக்கு உலை வைப்பதற்கு ஆலாய்ப் பறந்து திரிகின்றார்கள். எனக்குள் இருக்கும் அதிருப்தியோடு நான் ஒரு புறமாக ஒதுங்கி வாழவே முற்பட்டேன். ஆனால் எனது உயிர் அழிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் திடமாக முடிவெடுத்து மாபியாக் கும்பல்களை அணுக முடிவு செய்த பின் நான் இனியும் மெளனமாக இருக்க முடியாது.

    நாளை நான் காணாமல் போனால் கூட எனக்குள் புதைக்கப்பட்டுள்ள உண்மைகள் வெளிவரக்கூடாது என்று அங்கலாய்ப்பவர்களின் செயற்பாடாகவே அது இருக்கும்.ஒரு காலத்தில் நான் அவர்களைத் தான் தலையில் தூக்கி வைத்துக்கொண்டிருந்தேன். இன்று தங்கள் காலடியில் போட்டு மிதிக்க அவர்கள் தான் துடிக்கின்றார்கள்.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அரசாங்கத்தின் அனுசரணை இல்லாமல் எதுவுமே செய்ய முடியாது. அதனை நானும் ஒத்துக்கொள்கின்றேன். அதற்காக அரசாங்கம் என்னவோ அதி உத்தமர்களின் அரசாங்கம் என்று நீங்கள் மற்றவர்களை முட்டாள்களாக்க வேண்டாம்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அரசாங்கத்தின் தயவை நாட வேண்டியிருப்பதை மட்டும் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளுங்கள். அதற்கு அப்பால் வேண்டாம்.

    எந்த ஒரு விடயத்துக்காக நாம் இவ்வளவு இழப்பகளைச் சந்தித்துள்ளோமோ அந்த விடயத்தை அதாவது அதிகாரப் பகிர்வை தள்ளிப் போட்டு அப்படியெ கிடப்பில் போட முனையும் அரசாங்கத்தை மட்டும் நியாயப்படுத்த வேண்டாம். அதற்கு துணை போகும் கே.பி. போன்றவர்களை புனிதர்களாக்க முயற்சிக்கவும் வேண்டாம்.ப்ளீஸ்………

    Reply
  • vasu
    vasu

    தாமிரா மீனாஷி
    ஊகங்கள் எல்லாம் உண்மைகள் அல்ல!

    அஷர்ரப்அலி –
    யாரையும் புனிதர்கள் ஆக்கவில்லை! ஒரு மாற்றத்தை கொண்டுவர நினைப்பவர் தான் முன்னுதாரணமாயிருக்க வேண்டும் என்றே கூறினேன். மேலும் நான் ஒரு இடத்திலும் அரசைப்பற்றி எதுவுமே கூறவில்லை! ஆனால் புலம்பெயர் நாடுகளில் சேர்க்கப்பட்ட பணம் மீள மக்களிடம் சேரவேண்டும் என்பதை தான் புலம் பெயர்ந்த தமிழனாக என்னால் கோர முடியும்!

    Reply
  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    முள்ளி வாய்க்காலின் இறுதிக் கட்டத்தில் புலி அமைப்பைச் சார்ந்தவர்கள் தமக்குள்ளே ஒரு துரோகியை இனம் கண்டனர். அவரை உயிருடன் காப்பாற்றுமாறு இராணுவத்தினருக்கு வந்த செய்தியை அறிந்து கொண்ட இயக்கத்தலைமை அவரைக் கைது செய்து கொலை செய்யுமாறு உத்தரவிட்டது. அவ்வாறு கொலை செய்யப் பட்டவர் கேணல் கருணாவிடமிருந்து கிழக்கை மீட்ட தளபதி பானு. அவர் எவ்விதம் கொல்லப் பட்டார் என்ற வருணனை கேட்பதற்கு மிக மோசமானது.,வவுனியா முகாம்களில் மக்கள் அல்லோலகல்லல் பட அதே முகாமில் இருந்து வெளியேற முடிந்ததுமல்லாமல் படகில் தப்பியோடி இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர் புலிகளின் தத்துவாசிரியர் மு. திருநாவுக்கரசு. இன்றும் தமிழ் நாட்டில் புலி சந்தேக நபர்கள் கைது செய்யப் படுவது ஒரு சாதாரண நிகழ்ச்சி., அப்படியானால் தத்துவாசிரியர் என அறியப்பட்ட இவரால் மட்டும் எப்படி ஜூனியர் விகடனில் பிரபா புராணப் பேட்டியளிக்க முடிந்தது? அதன் பிற்பாடும் எப்படி சுதந்திரமாக நடமாட முடிகிறது? இந்த நபர்கள் இப்படியானவர்கள் என்று கிஞ்சித்தேனும் எம்மால் ஊகிக்க முடிந்ததா?

    தமிழ் தகவல் நிலையக் (TIC) கூட்டங்களுக்கு தவறாமல் பைலுடன் சமூகமளிக்கும் சார்ள்ஸ் ஒரு முன்னாள் ரெலோ உறுப்பினர்., கே. பி. மலேசியாவில் பிடிபட்டதும் அவரை விடுவிக்க நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற தொனியில் எல்லோருக்கும் SMS அனுப்பினார் லண்டனில் ஒரு ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்யும் முயற்சியில் ஈடுபடும் வரை அவர் கே.பி. க்கு நெருக்கமானவர் என்று எவருக்கும் தெரியாது. கூட்டங்களில் இலங்கை தூதரகத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தும் தீர்மானங்களை வலிந்து முன் மொழிந்ததுடன் அதற்காக தெரிவு செய்யப்பட்ட குழுக்களில் தானும் அங்கம் வகிக்கும் வண்ணம் பார்த்துக் கொண்டார்.. அவர் ஸ்ரீலங்கா போய் கே.பியைச் சந்திக்கும் வரை அவர் மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு நபர் என்று நான் ஊகித்தது எவ்வளவு தவறு?

    உங்கள் கட்டுரையில் முக்கியமாக வெளிப்படும் தொனி கே.பி.யிடம் சல்லிக் காசு இல்லை என்பது.! எனது ஊகம் என்னவெனில் கே.பி.யுடன் பணத் தொடர்புகள் உள்ளவர்கள் தான் இந்தக் கருத்தை வலிந்து பரப்புகிறார்கள். அவரிடம் பணம் இல்லை என்பது தமிழ் மக்களது எதிர்காலத்தைப் பாதிக்கும் பெரியதொரு விஷயமா? அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்று நடுக்கடலில் விட்ட கப்பல்களுக்கும் கே.பி.க்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று உங்களால் அடித்துச் சொல்ல முடியுமா? அதற்காக ஒவ்வொரு தமிழ் குடும்பங்களும் கொடுத்த லட்சங்களும் கோடிகளும் எங்கே? புலம் பெயர் நாடுகளில் புலிகள் சேர்த்த பணத்தின் கதிதான் கே. பி. யிடம் இருந்த பணத்தின் கதியும்.!

    கே.பி. மட்டுமல்ல பொது வாழ்க்கையில் தம்மை வெளிப்படுத்திக் கொண்டுள்ள பெரும்பான்மையானோர் ஏற்கனவே செய்துகொள்ளப் பட்ட முடிவுகளின் படியே (agenda) வேலை செய்கிறார்கள். சில காலத்தின் முன் ஈரோஸ் அமைப்பின் திருமலை மாவட்ட முன்னாள் இராணுவப் பொறுப்பாளர் எனக் கூறிக் கொண்டு ஒருவர் கனடாவிலிருந்து இலங்கைக்குப் போய் லண்டன் வந்து சில கூட்டங்களில் பங்கு பற்றினார். பின்னர் புதிய இராணுவக் குழு இலங்கையின் கிழக்கில் உதயம் என ரைம்ஸ் பத்திரிகையில் இலங்கைத் தூதரகம் ஒரு சோடிப்பு செய்தியை வெளியிட அவர் காரணமாக இருந்தார்.

    இலங்கைத்தீவில் தமிழ் மற்றும் சிறுபான்மை மக்களின் பிரச்சனைகள் ஆழமானவை. அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதன் மூலம் அவர்கள் இன்றுள்ள அவசர தேவைகளில் பாதியையேனும் பெற்றுக் கொள்ளக் கூடும்…,ஆனால் கே.பி. போன்ற நபர்களின் மறுபிறவி அவதாரச் செயற்பாடுகள் எத்தகைய நீண்டகாலத் தீர்விவையோ அவற்றைக் கண்டறியக் கூடிய தலைமையையோ தமிழ் மக்களுக்கு தரப் போவதில்லை.

    Reply
  • Jeyarajah
    Jeyarajah

    புலியை எதிர்த்து இலங்கை அரசு போராடும்போது மாற்றஇயக்கத்தவர்களும் போராடினார்கள். ஒருவகையில் நாட்டிற்காக போராடினார்கள் என்று கூட சொல்லலாம் ஆனால் அதே புலி இயக்கத்தை சேர்ந்த கருணா பிள்ளையான் இப்போ ரங்கா கேபி போன்றவர்கள் ராஜ வாழ்க்கை வாழ அதே புலி இயக்கத்திற்கு எதிராக போராடிய எத்தனையோ போராளிகளும் அவர்களது குடும்பங்களும் சாதாரண வாழ்க்கையே வாழ முடியாமல் திண்டாடுகின்றனர் இவர்களை அரசும் கண்டு கொள்ளவில்லை.

    4000 ஏக்கர் காணி கையளிக்கப்படுவத 20 வருடம் மூடிக்கிடந்த பாடசாலைகள் திறக்கப்படுவது இலங்கையில் சுற்றுலாப்பயணிகள் வருவாயில் முதலிடத்தில் உள்ளது. இதுவெல்லாம் வானத்தில் இருந்து விழவில்லை அதே நேரம் இலங்கை அரசு போட்ட பிச்சையும் இல்லை, இதுவரை இறந்த போராளிகள் பொது மக்கள் எல்லோருமே காரணம்.

    தமிழர்க்கு எத்தனை கட்சிகள் இவர்கள் ஒரே குறிக்கோளை நோக்கித்தான் பயணிப்பதாக இருந்தால் இவர்கள் ஏன் ஒன்று சேரமுடியாமல் உள்ளது.
    மகிந்தா சொல்லித்தான் இவர்களுக்கு புரிய வேண்டுமா?
    கேபி ஈடுபட்டுள்ள வேலை ஒன்றும் கறிக்கடையில் மீன் வாங்கும் வேலையில்லை அதற்கான திறமைகள் தேவை. கரணம் தப்பினால் மரணம் ஆனால் இன்று எல்லோரும் எல்லாம் முடிய சாமியார் லெவலுக்கு வருவது தான் வேடிக்கை.

    Reply
  • சொரூபன்
    சொரூபன்

    சொரூபன்,
    தமிழ் இனத்திற்காக எது நல்ல விடயம் செய்தாலும், எம் இனம் கொடுக்கும் பட்டம் துரோகி. இதற்கு கே.பி மட்டும் விதி விலக்கா? கப்பல்கள் அனைத்தும் சூசை அண்ணையின் பொறுப்புக்கு வந்து பல ஆண்டுகள் என்பது சிலருக்கு தெரியவில்லை போலும்! லண்டனில் வசிக்கும் கால் இல்லாத பாலன் தான் ஆஸ்திரேலிய அனுப்ப சொந்தங்களிடம் பணம் வாங்கியவர்! அப்போ, அது எப்படி கே.பியை சேரும்? இதுபோன்று சூசை அண்ணையின் பிரிவுதான் பிரான்சிலும் பணம் வாங்கியவர்கள்! அடைபட்டிருக்கும் போராளிகளை கேட்டால் சொல்வார்கள். யார் தங்களுக்காக வேலை செய்வது என்று!

    Reply
  • vasu
    vasu

    தாமிரா மீனாஷி – சார்ள்ஸ் கே.பியுடன் வைத்த தொடர்பாடலின் விளக்கங்களை சார்ளஸ் தான் வைக்க வேண்டும் ஆனால் கே.பி வை மலேசியா சென்று சந்திதவர்கள் பட்டியல் மிகவும நீளமானது. கே.பியை விடுவிக்க ரெக்ஸ் அனுப்பியவர்கள் பட்டியலும் நீளமானது. அனால் கே.பி தனக்கு அரசியல் வேண்டாம் மனிதாபிமான வேலைகள் தான் தேவை என்றதும் இந்த பட்டியல் சுருங்கி தற்போது காணாமல் போயுள்ளது.

    ஜெயராஜ் உங்கள் கேள்விகளுக்கு டீ. பி எஸ் ஜெயராஜ் கே.பி பற்றி எழுதிய சில வரிகளை இங்கு இணைக்கிறேன்!

    மலேஸியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட பத்மநாதன் சுற்றிவளைக்கப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார். அன்றிலிருந்து அவர் ராஐபக்ஷ அரசின் ஒர விருந்தாளியாக இருந்து வருகின்றார் தற்போது இந்த முன்னாள் எல்.ரி.ரி.ஈ முக்கியஸ்தர் இலங்கை அரசாங்கத்துடன் குறிப்பிடத்தக்க முறையில் ஒத்துழைத்து வருபவராக இருக்கிறார். இலங்கையில் யுத்தம் மும்முரமடைந்திருந்தவேளை ஆயுதங்களையும் ஏனைய யுத்த தளவாடங்களையும் ஒழுங்காக எல்.ரி.ரி.ஈ. அமைப்புக்கு அனுப்பிவைத்து யுத்தத்தை சூடேற வைத்தவர் தற்போது அந்த யுத்தத்தினால் தோன்றிய வடுக்களையும் காயங்களையும் போக்குவதில் ஆர்வங்காட்டி வருகிறார்.

    இக்கட்டத்திலே ஒரு கிறிஸ்தவ கூற்று ஞாபகத்துக்கு வருகிறது. ‘இறைவனே என்னை கைதியாக்கு. அப்போது நான் உண்மையிலேயே சுதந்திரமானவனாவேன். “என்பதே அக்கூற்றாகும். குமரன் பத்மநாதனும் இது போன்றே ஒரு சூழ்நிலை மாற்றங்களுக்குட்பட்ட ஒரு கைதியாகியுள்ளார்.
    கே.பி. சுயமாக இயங்கிய காலத்தில் தனது திறமைகள் சாதுரியங்கள் முயற்சிகள் அனைத்தையும் அழிவு சார்ந்ததாகப் பயன்படுத்தியிருந்தார் தற்போது கைதியாக மாறியிருக்கும் கே.பி ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டுவரக் காணப்படுகின்றார். தத்துவார்த்த பூர்வமாக நோக்கும் போது தற்போது கட்டுண்டுள்ள போதிலும் ஒரு உண்மையான சுதந்திரப்பாதையை நோக்கி நகர ஆரம்பித்துள்ளார் . எல்.ரி.ரி.ஈ. அமைப்பு இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை பெரும் பாதிப்புக்களை அவர்களுக்கு உண்டுபண்ணியிருந்தது. கே.பி. யும் இதில் ஒரு பங்காளியாவார். தற்போது யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்கள் தம்மை சுதாகரித்து ஒரு அமைதியான வாழ்க்கையக் கட்டியெழுப்ப முயன்று வருபவர்களாக இருக்கின்றனர் . முற்றிலும் வேறுபட்ட ஒரு சூழ்நிலையிலேயே அவர்கள் தமது புதுவாழ்க்கையை ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளனர்
    தமிழரது விடுதலை என்ற பெயரில் அழிவுகளையும் இழப்புகளையும் ஏற்படுத்துவது இலகுவானது. ஆனால் தமிழரின் புனர்வாழ்வு என்ற வகையில் அனைத்தையும் உணர்வுபூர்வமாகக் கட்டியெழுப்புவதென்பது மிகக்கடினமானதே கே.பி. தமிழ் மக்களுக்குக் கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்கள் குறித்து மனப்பூர்வமாகக் கவலை கொண்டவராக இருக்கின்றார். கடந்த கால அழிவுகளுக்கு எல்.ரி.ரி.ஈ. அமைப்பே பொறுப்பேற்கவேண்டுமென்று கூட அவர் நினைப்பவராக இருக்கிறார். இந்நிலையில் அவர் காவலில் வைக்கப்பட்டிருக்கின்ற போதிலும் தமிழ் மகக்ளுக்கு ஆக்கபூர்வமாக அவர்களது துயரத்தைப் போக்கும் விதத்தில் தம்மால் முடிந்தவரை நல்லவற்றையே செய்ய வேண்டுமென்ற மனப்போக்கு கே.பி.யிடம் தற்போது வெளிப்பட்டுள்ளது.

    இந்த வகையில் வடக்கு – கிழக்கு மக்களின் புனர்வாழ்வு, புனரமைப்பு நடவடிக்கைகளுக்கென அரசசார்பற்ற அமைப்பொன்றை ஆரம்பிக்க அவர் முன்வந்துள்ளார் . இதற்கு வடக்கு – கிழக்கு புனர்வாழ்வு புனரஅமைப்பு கழகம் (NERDO) எனவும் பெயரிட்டுமுள்ளார் .
    இந்த நிறுவனமூடாக கே.பி. யுடன் இணைந்திருப்போர் மூன்று முக்கிய விடயங்களில் கவனத்தை வெளிப்படுத்துவார்கள் .
    1 .வடக்கு – கிழக்கில் இடம்பெயர்ந்தோரின் விரைவான மீளகுடியேற்றம் .
    2 .முன்னாள் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களை விரைந்து விடுதலை செய்து சமூக அமைப்பில அவர்கள் உட்புகுவது .
    3 .யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்குப் பகுதிகள் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
    இலங்கை இன்று முரண்பாடுகள் சூசகத்தன்மைகள் உள்ள ஒரு நாடாக இருக்கின்றது. அரசசார்பற்ற நிறுவனங்கள் குறித்து இலங்கை அரசு கசப்புணர்வு கொண்டதாக இருக்கிறது பல்வேறு அரசசார்பற்ற நிறுவனங்கள் முன்பு எல்.ரி.ரி.ஈ. கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் பணியாற்றியதோடு அந்த அமைப்பின் விருப்பு வெறுப்புகளுக்கேற்றாற்போல அவை நடந்துகொண்டமையினாலேயே இலங்கை அரசின் அதிருப்தியை அரசசார்பற்ற நிறுவனங்கள் சம்பாதித்துள்ளன .

    இதன் காரணமாக சர்வதேச முக்கியத்துவம் பெற்ற மற்றும் உள்ளுரில் பிரபலமான அரசசார்பற்ற நிறுவனங்கள் பலவற்றை இடம்பெயர்ந்த மக்களுக்கு சேவையாற்ற அரசாங்கம் அனுமதிக்கவில்லை. இதனால் மீள்குடியேற்றம புனர்வாழ்வு நடவடிக்கைகள் என்பவை பெரிதும் பாதிக்கப்பட்டன. புதிய அரசசார்பற்ற நிறுவனங்கள் உருவாவதையும் அரசு ஏற்கவில்லை. ஆயினும் கே.பி. யின் அரசசார்பற்ற நிறுவனத்தை அமைக்கும் திட்டத்துக்கு அரசு ஆதரவாக இருக்கின்றது . அதேசமயம் கே.பி. யின் இந்த அரசசார்பற்ற நிறுவனம் உடனடியாகவே அங்கீகரிக்கப்பட்டு அதன் செயற்பாடுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது . அதேசமயம் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தி அவர்களின் புனர்வாழ்வு புனரமைப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு திட்டங்களை வகுக்கவும் கே.பி. யின் நிறுவனத்துக்கு அனுமதி தரப்பட்டுள்ளது
    இது விடயத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி இயக்க உறுப்பினர்களை சமூக அமைப்புடன் சேர்த்துக்கொள்வது விடயத்தில் முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது. ஒத்துழைப்பு இந்நிலையில் பல்வேறு அரசசார்பற்ற நிறுவனங்கள் எல்.ரி.ரி.ஈ. அமைப்போடு ஒத்துழைத்ததாக ஓரங்கட்டப்பட்டுள்ள அதேசமயம் எல்.ரி.ரி.ஈ அமைப்பின் ஒரு முக்கிய புள்ளியாக விளங்கியவர் அரசசார்பற்ற நிறுவனமொன்றை ஆரம்பிக்கவும் அதனூடாக அவர் நிவாரணப்பணிகளை மேற்கொள்ளவும் அரசாங்கம் அனுமதித்திருப்பது ஒரு விநோதமான செயலாகவே இருக்கின்றது .
    இதன் மூலம் அரசாங்கத்தின் தமிழ் மக்கள் குறித்த அரசியல் ரீதியான அணுகுமுறை நன்கு தெளிவாகின்றது. அத்தோடு பாதுகாப்புச் செயலாளர் கொத்தபாய ராஐபக்ஷ மற்றும் செல்வராசா பத்மநாதன் (கே.பி) ஆகியோர் கொண்டுள்ள பரஸ்பர நம்பிக்கை புரிந்துணுர்வு என்பவையும் இதன்மூலம் நன்கு புலனாகின்றது. கே.பி. மற்றும் அவர் சார்ந்தோரது உடனடி செயற்திட்டம் என்பது எல்.ரி.ரி.ஈ. அமைப்பில் அங்கம் வகித்து புனர்வாழ்வளிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கல்வி புகட்டுவதையே முதன்மையாகக் கொண்டுள்ளது. இந்த ஆகஸ்ட் மாதம் 346 முன்னாள் புலி உறுப்பினர்களான சிறுவர் சிறுமியர்கள் இத்தடவை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் தோற்றுகின்றனர். இவர்கள் பரீட்சைக்குத் தயாராவது குறித்து கே.பி. மிக ஆர்வமுடையவராக இருக்கின்றார். இந்த பரீட்சார்த்திகளில் 17 பேர் விஞ்ஞானப் பிரிவிலும்இ 13 பேர் கணிதத்துறையிலும் இருக்கின்றனர். 70 பேர் வர்த்தகத்துறையில் இருப்பதோடு 246 பேர் கலைப் பாடங்களுக்காகத் தோற்றவுள்ளனர். வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த மக்களின் உதவியோடு கே.பி இந்த பரீட்சார்த்திகளுக்கான பல்வேறு உதவிகளையும் வழங்கி வருகின்றார். சுயமாக இயங்குகின்ற கே.பி அவர்கள் சார்ந்த அவுஸ்திரேதலிய தமிழ் அமைப்பொன்று அம்மாணவர்களது டியுசன் வகுப்புகளுக்கு பணம் வழங்குகின்றது . சில ஆசிரியர்கள் தாமாகவே இம்மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க முன்வந்துள்ளார்கள். சில விசேட தகமையுள்ள ஆசிரியர்கள் மணித்தியாலத்துக்கு ரூபா 320 என்ற வகையில் கற்பித்தலை மேற்கொள்கிறார்கள். பகுதி பகுதியாக நாளொன்றுக்கு ஆறு மணித்தியாலங்கள் என்ற ரீதியில் இந்த மாணவர்கள் கற்பிக்கப்படுகிறார்கள்.

    இந்த கல்வித்திட்டத்துக்கான மொத்தச் செலவு பத்து லட்சத்து ஆறாயிரத்து நானூறு ரூபாக்களாகும் (10600400). டியுசன் வகுப்புகளுக்கான செலவு 3 லட்சத்து 6 ஆயிரம் ரூபா.. புத்தகங்கள் வழிகாட்டிநூல்கள் என்பவற்றுக்கான செலவு 6 லட்சத்து 45 ஆயிரத்து 800 ரூபா. பாட உபகரணங்களின் செலவு 34 ஆயிரத்து 600 ரூபாஇ நிர்வாக ரீதியான செலவு 20 ஆயிரம் ரூபா இதில் 15 ஆயிரம் ரூபா மற்றும் 5 ஆயிரம் ஆகியவை போக்குவரத்து மற்றும் எரிபொருளுக்கான கொடுப்பனவுகளாகும் .

    க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுற்றதும் அடுத்த கட்ட மாக புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களான மாணவர்களது க.பொ.த சாதாரண பரீட்சை சம்பந்தப்பட்ட விடயத்தில் கவனம் செலுத்தப்படும் . இப்பரீட்சை டிசம்பரில் இடம்பெறும். க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றவுள்ள புலி இயக்கத்திலிருந்த மாணவர்களின் தொகை இன்னும் சரிவரக்கணக்கிடப்படவில்லை. அனால் நிச்சயம் இத்தொகை ஆயிரக்கணக்கில் இருக்குமென்றே எதிர்பார்க்க முடியும். அத்துடன் இப்பரீட்சைக்கான செலவு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குரிய செலவை விடக் கூடுதலாகவே இருக்குமென எதிர்பார்க்க முடியும் .

    கே.பி.யும் அவரோடிணைந்து புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புக்கள் சில புனர்வாழ்வு புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக பணத்தை செலவிட ஆர்வங்காட்டும் அதேசமயம் சில எல்.ரி.ரி.ஈ. சார்பான வெளிநாடுகளில் இயங்கும் அமைப்புகள் பொறுப்பற்ற விதத்தில் பணவிரயத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த அமைப்புகளில் பூகோள தமிழ் பேரவை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஈழத்தமிழர் தேசிய பேரவை போன்றன வீணே தமது அர்த்தமற்ற நடவடிக்கைகளுக்காக பல மில்லியன் டாலர்களைச் செலவிட்டு வருகின்றன .
    இந்த அமைப்புகளின் செலவுகளில் ஒரு சிறிய பகுதியை தவிர 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபா செலவில் இடம்பெயர்ந்தோருக்கான வீட்டுத்திட்டமொன்றை அமைக்க உதவமுடியும். ஆனால் இந்த அர்த்தமற்ற புலம்பெயர்ந்த அமைப்புகள் உண்மை நிலவரங்களை அறிய முன்வருவார்களா?

    Translated from DBS artical on daily mirror.

    மேற்படி மாணவர்கள் தற்போது பரீட்சை முடித்து விடுதலையாகி உள்ளனர்.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    கே.பிக்கு வக்காளத்து வாங்கும் வாசுதேவன்! //மகாத்மா காந்தியின் பொன்வாக்குளில் ஒன்று. ”உலகை மாற்ற வேண்டுமாயின் நீ முன்னுதாரனாமாயிரு.” இந்தப் புனிதமான வரிகளை மனிதக்கொல்லிகளுக்க அவர்ளுக்கு வக்காளத்து வாங்குவதற்கா மாசுபடுத்தாமல் இருந்தால் நல்லது. நீஙகள் கே.பியின் தொடர்பாளராக இருப்பதால் கே.பிக்கு வக்காளத்து வாங்குகிறீர்கள் என்பது தவறல்ல. என்னிடமும் சில கேள்விகள் உண்டு. விமலராசா (மாதகல்)ரியூசன் வாத்தியின் மோட்டார்வண்டியுடன் நீர்வேலி வங்கியில் அடித்த பணத்தை பிறீவ்கேசுடன் கொண்டோடினாரோ அதற்கு என்ன கணக்கு. அந்த வங்கிக் கொள்ளை ரொலோவுடன் சேர்ந்து நடந்தது. துரோகங்களிலே படுதுரோகம் நம்பிக்கைத் துரோகம். சரி அதன்பின் மாவியாக்களுடன் கூட்டு வியாபாரம் செய்து தூள்வித்து எத்தனை உயிர்களை நாசமறுத்தாரே கே.பி இதற்கு என்ன பதில்? ஒரு மன்னிப்பா? அத்தனை வருடமாக அப்பாவி மக்கள் கொல்லப்படும்போது காணாத புத்தனை கோத்தபாயவின் வீட்டில் கண்டாரோ? இந்தியன் ஆமி இலங்கையில் நிற்கும்போது இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தையை ஏற்படுத்தி பணத்தில் இருந்து ஆயுதம்வரை கிடைக்கச் செய்தவர் கே.பி. இதை புல்லுத்தின்னும் புலிகள் எரிந்தவீட்டில் பிடுங்கிய கொள்ளி மிச்சம் என்று சிந்தித்தார்களே தவிர கே.பிக்கும் அரசுக்கும் இருந்த உறவுபற்றி ஆளமாகச் சிந்திக்கவில்லையே. கேபி மன்னிப்புக் கேட்பதால் மட்டும் செய்த அநியாயங்களை மறந்து விடமுடியாது. உலகம் முழுவதும் கேபியின் கிறிமினல் கைவரிகள் உண்டு. பிரபாரனைக் கூட மக்கள் சிலவேளை மன்னிக்கலாம் கே.பியை யாரும் மன்னிக்க முடியாது. காரணம் பிரபா பாடசாலைப்படிப்பறிவு (இன்ரிரியூசன்) ஏறக்குறைய இல்லை எனலாம். கே.பி அப்படி அல்ல பட்டதாரி மாணவன். பாடசாலை செல்வது படிப்பதற்காக மட்டுமல்ல முக்கியமாக சிந்திப்பதையே படிக்கிறோம். இதை கே.பி செய்யவில்லை. பிரபாகரன் கே.பியை தெரிவு செய்ததும் நோர்வே:லண்டன் சுவீஸ் என்று தேடித்தேடி திரிந்து வாங்கிய பணங்கள் எங்கே? மீண்டம் நாங்கள் இந்தக்கிறிமினல்களை நம்பத்தாராக இல்லை. நமது மக்களுக்கு நன்மை செய்ய விரும்புபவர்கள் தனிப்பட்ட முறையிலோ வேறு முறைகளிலோ செய்யலாம்: மகிந்த குடும்பமோ சரத்தோ கேபியோ பிரபாவோ எல்லாருமே எமது பார்வையில் கிறிமினல்கள் தான். மன்னிப்பு என்று வார்த்தைகளால் உங்களது பாவங்களைக் கழுவிவிட முடியாது. கே.பி போன்ற கிறிமினல்களுக்கு வக்காளத்து வாங்கும் அனைவரும் அதே பட்டியலில்தான் சேர்க்கப்படவேண்டும். நான் மக்களுக்கு சொல்வது ஒன்று மட்டும்தான். மீண்டும் மீண்டும் முட்டாளாகாதீர்கள். பட்ட அனுபவம் போதாதா. கே.பி இருந்தால் என்ன செத்தால் என்ன. தமிழினத்தை அழித்த பெருமை பிரபாவுடன் கே.பி. கூட்டணி ஏன் எல்லா அரசியல்வாதிகளையும் சாரும். நம்பி வாக்குப் போட்டவர்களுகளையே கைவிட்டவர்களை இன்னுமா நம்பப்போகிறீர்கள். இன்று கே.பி யார் என்ன செய்கிறார் என்பதல்ல இன்றைய பிரச்சனை. கட்டுரையாளர் வேண்டு மென்றால் கே.பிக்கு வக்காளத்து வாங்கட்டும். கேபியோ புலியென்றே எமது வீடுகளுக்கு யார்வந்தாலும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மறந்து விடாதீர்கள். ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்.

    Reply
  • நாயகபாலன்
    நாயகபாலன்

    சார்ளஸ் ரெலோ அமைப்பில் காசு சேர்த்தாக நான் அறியவில்லை. ஆனால் குற்றம் சாட்டுபவர்கள் ஆதாரமிருந்தால் அதை இங்கு எழுத வேண்டும். நீங்கள் எழுந்தமானமாக ஒருவரை குற்றஞ்சாட்டுவது இந்த பின்னோட்டங்களின் நம்பகத் தன்மையை நிராகரிக்கிறது. ஆயுதக் கலாச்சராம் அஸ்தமித்த பின் காசடித்தவன் என்ற முத்திரை குத்தல் கோல்ற் பிஸ்ரலின் குண்டுகளை விட மோசமானவை!

    Reply
  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    நாயகபாலன்
    பணம் சேர்த்தவர்கள் எல்லோரும் உங்களிடம் சொல்லிக் கொண்டு சேர்க்காதது வருத்தம் தான்.. இயக்கங்களுக்கோ அல்லது பொது அமைப்புக்களுக்கோ பணம் சேர்த்தவர்கள் அவற்றை பகிரங்கப் படுத்தும் கலாசாரம் எம்மிடத்தில் இருந்தது கிடையாது. கணக்கு கேட்டவர்களுக்கும் கொலை மிரட்டலும் துரோகிப் பட்டமும் கிடைத்ததுதான் வரலாறு..

    சார்ள்ஸ் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டியவர் அவரே தவிர இன்னொருவர் அல்ல. நீங்கள் சொன்னால், 24 மணி நேரமும் நீங்கள் அவரை விட்டுப் பிரியாதவராக இருக்க வேண்டும்..அல்லது அவருக்காக பொய் வக்காலத்து வாங்குவதற்காக ஏதாவது நன்மை கிடைக்க வேண்டும்..

    Reply
  • jemaldeen
    jemaldeen

    விடுதலைப் புலிகளின் முன்னை நாள் அனைத்துலகப் பொறுப்பாளர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு முல்லைத்தீவில் வைத்து இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவரால் சல்யூட் மரியாதை வழங்கப்பட்டுள்ளது.-.tamilwin.com

    Reply
  • Muhamathu
    Muhamathu

    நம்மலுக்குல்லே ஆலை ஆல் குத்தம் சாட்டிகின்னி இரிச்சா தமிலன்ட எதிரிக்கிதான் லாவம். சால்ஸ் சல்லி வேங்கினதா தாமிரா மீனாஷி செல்றாவு ஆனா நாயகபாலன் செல்றாரு சால்ஸ் சல்லி வேங்கல்லன்னு செல்லி. 24 மணிநேரமும் சால்ஸ் கூடவே இருந்தியான்னி நாயகபாலன கேக்கிறாவு தாமிரா. இன்னமோ தாமிரா தானேதா 24 மணிநேரமு சால்ஸ் கூட ஒட்டிகின்னி இரிச்சா மாதிரியு சால்ஸ் சல்லி வேங்க தாமிராதா ரசீது குடுத்தாப்பல்லயு அடிச்சி செல்றாவு. இதாலதா சிங்கலவ தமிலன பீத்தமில பறதெமிலோ இன்னெல்லா செல்றா. இவங்க குத்தம் செல்லிசெல்லியே உருப்டாம இருச்சிர இனம். மின்னால போறவண்ட காலக் குனிஞ்சி வாரியே தமிலினத்துக்கு பலகிப்போச்சி. தா செய்யாதத மத்தவ செஞ்சி பேரெடுத்துருவான்னு பய. நா சால்ஸ நேர்ல பாத்தில்ல ஆனா கேல்விபட்ரிச்சே. அவரபத்தி நாயகபாலன் சென்னமாதிரித்தா நெறயப்பேர் செல்றாங்க. சால்ஸ் மேல எரிச்ச பொராமயிலதான் தாமிரா செல்ராவுன்னு ராகத்தா தெரியிது. ஆதாரம் கெடயாம வேனுமின்னே பெய்செல்றது அல்லாவுக்கே பொருக்காது. வுட்டுரு தாமிரா வாணா பொய்ப்புரலி. நா சும்மாவே சால்ஸூக்கு வக்காலத்து வாங்கல்ல. காணாத்த கண்டதா செல்றதும் கண்டதத் தனக்கு ஏத்தாப்ல மாத்தி செல்றதும் அறாம். எங்கட சாச்சா காலத்தில தமிலன் எப்டி வால்ந்தான்னி நெனச்சி பாத்தாலே ராகத்தாரிச்சி. இப்ப இந்தாமாரி சூல்ச்சி பன்னியே நாம இந்தா நெலமைக்கி வந்திற்றம். பொய் செல்ர வாய்க்கி பொரியி கெடய்க்காது.-முகமது

    Reply
  • karuna
    karuna

    (October 25, Colombo, Sri Lanka Guardian) The Rajapakaske regime’s “very special” prisoner and the leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), Shanmugam Kumaran Tharmalingam alias Selvarasa Pathmanathan KP, attended a ceremony in Kilinochchi recently where he gave books to school children. On the occasion KP said, “I started work now for our people. Especially we are helping to our children to gain good education.”

    Furthermore, he said, “We all have to care about children who lost their parents during the War with the Sri Lankan army. They were martyred for our homeland,” he made the crucial comment during the speech, the Sri Lanka Guardian learns.

    Meanwhile when Sri Lanka Guardian contacted Maj. Gen. Ubaya Madawela, the Army spokesperson regarding a recent news report that a Sri Lanka Army officer saluted KP during his visit to in Wanni. He said, “According to military tradition a senior officer must be saluted by a junior officer. But it is not true

    Reply