கடந்த 18ஆம் திகதி கிளிநொச்சி பாரதிபுரத்தில் கட்டடம் ஒன்றின் இடிபாடுகளை அகற்றிக் கொண்டிருந்த போது குண்டு ஒன்று பெரும் அதிர்வுடன் வெடித்துள்ளது. இதனால் இருவர் படுகாயமடைந்தனர்.
கிளிநொச்சியில் தினமும் குண்டு வெடிக்கும் சத்தங்கள் கேட்டு வருகின்றன. போரினால் ஏற்பட்ட இடிபாடுகளை துப்புரவாக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பல இடங்களில் வெடிபொருட்கள் மீடக்கப்பட்டு அவை செயலிழக்கப்படுவதாலும் தற்செயலாக நிகழும் பல குண்டுகள் வெடிப்புக்களாலும் இச்சத்தங்கள் கேட்டுவருகின்றன. இக்குண்டு வெடிப்பினால் பொதுமக்கள், துப்புரவாக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனவர்கள் பாதிப்படைகின்ற நிலையும் ஏற்பட்டள்ளது.