இலங்கையில் தமிழ் எழுத்தாளர்களும் இணையப் பாவனையும் : செல்வி எம்.ஐ.எப் நபீலா

செல்வி எம்.ஐ.எப் நபீலா தமிழ்த்துறை இறுதியாண்டு
சப்பிரகமுவை பல்கலைக்கழக மாணவி மேற்கொண்ட ஆய்வின் ஒரு பகுதி கட்டுரையாகத் தரப்படுகின்றது. இப்பகுதி ”இலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே நாட்டம்” என்ற தலைப்பில் எழுதப்பட்டது.  எம்.ஐ.எப் நபீலா “தமிழ் இலக்கியத்துறையில் புன்னியாமீன்”  எனும் தலைப்பில் மேற்கொண்ட ஆய்வின் ஒரு பகுதியே மேற்படி கட்டுரையாகும்.  
த.ஜெயபாலன்

._._._._._.
 
இணையத்தள பாவனை சர்வதேச அளவில் வெகு தீவிரமாக வளர்ச்சி கண்டு வருகின்ற போதிலும்கூட, எமது இலங்கையில் அதன் வேகம் மந்தகரமான நிலையிலேயே அமைந்துள்ளது. இலங்கையில் இணையத்தளம் பற்றிய அறிவு அல்லது விளக்கம் மக்கள் மத்தியில் குறைவாக காணப்படுவதும் இணையத்தள சேவைகளை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டணங்கள் அதிகரித்துக் காணப்படுவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். உதாரணமாக 20ஆம் நூற்றாண்டுகளில் இறுதிக்கட்டங்களில் ஸ்ரீலங்கா டெலிகொம்மினால் இணையத்தள இணைப்புகள் வழங்கப்பட்ட போதிலும்கூட, டவுண்லோட் – தரவிரக்கத்திற்கேற்ப கட்டணங்கள் அறவிடப்பட்டமையினால் பாவனையாளர்களுக்குப் பெருந்தொகையான பணத்தினை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக புரோட்பேண்ட் இணையத்தள இணைப்பு வசதியை ஸ்ரீலங்கா டெலிகொம் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் பிரதான நகரங்களை மாத்திரம் மையப்படுத்தியிருந்த இவ்விணைப்பானது தற்போது அகில இலங்கை ரீதியில் வியாபிக்கப்பட்டு வருகின்றது. புரோட்பேண்ட் இணையத்தள சேவைக் கட்டணம் நிலையான கட்டணத்தைக் கொண்டிருப்பதினால் தரவிரக்க பரப்பளவில் கவலை கொள்ளத் தேவையில்லை. இதன் காரணத்தினால் தற்போது படிப்படியாக இணையத்தள பாவனையாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இன்னும் சில ஆண்டுகளில் இத்தொகை பல மடங்குகளாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்க முடியும். அதேநேரம், இலங்கையில் போட்டியாக செயல்படும் ஸ்ரீலங்கா டெலிகொம்மின் எஸ்.எல்.ரி. சிட்டிலிங்க், மொபிடெல், மற்றும் சன்டெல், லங்காபெல், டயலொக், எடிசலாட், எயாடெல், ஹட்ச், டயலொக் சீ.டி.எம்.எ. போன்ற தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களும் இச்சேவையினை போட்டி போட்டுக் கொண்டு வழங்கி வருவதை அவதானிக்கின்றோம்.
 
மத்திய காலத்தில் உருவான அறிவியல் எழுச்சியுடன் படிப்படியாக ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியினால் அச்சுத் தொழில்நுட்பம் (Printing Technology) தோன்றியது. அதற்கு தமிழ்மொழியும் ஈடுகொடுத்தது, அதன் விளைவாகவே இன்றைய தமிழ் உயர்ந்த நிலையில் உள்ளது. தொடர்தேர்ச்சியான தொழில்நுட்ப வளர்ச்சியில் 20ம் நூற்றாண்டின் இறுதிக்காலப்பகுதியில் ஏற்பட்ட பாரிய முன்னேற்றம் இன்றைய கணனியுகம் (Age of Computer) ஆகும். இந்த யுகத்தையும் தமிழ் மொழி மிகவும் நுட்பமான முறையில் எதிர்கொண்டு வருகிறது.
 
இன்று தட்டச்சு செய்தல், கணக்குகள் பதிதல், விபரங்களை சேகரித்தல் போன்ற சிறிய தேவைகள் முதல், விண்வெளியில் செயற்படுகிற ஏவுகணைகளை மாத்திரமல்லாமல் விண்வெளி ஆய்வுக்கூடங்களைக் கூட பூமியிலிருந்து கட்டுப்படுத்தி, செயற்படுத்தக்கூடிய உயர்மட்டப் பணிகள் வரை இயக்கும் கருவியாக கணனி மாறிவிட்டது. இன்றைய கணனி யுகத்தில் தனி மனிதராக இருக்கட்டும் அல்லது பன்னாட்டுத் தொழில் நிறுவனமாக இருக்கட்டும் கணனியின்றி அன்றாடச் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. தேவையான தகவல்களைத் தரவுகளாகச் சேமித்துவைத்தல் (Database Development), தேவைப்படும்போது தகவல்களைத் தேடியெடுத்தல் (Information Extaction and Retrieval), மின்னஞ்சல் அனுப்புதல் (e-mail)வினாடிகளில் உலகெங்கும் இணையத்தளம் (Internet and Web) மூலம் தொடர்பு கொள்ளுதல், இணையத்தளம் மூலம் தொழில் மற்றும் வணிகத் தொடர்புகளை மேற்கொள்ளுதல் (E-commerce) என்று கணனியின் பயன்பாடுகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இன்றைய காலகட்டத்தில செய்திப் பரிமாற்றத்திலும் இணையம் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது.
 
இலங்கையில் பெரும்பாலான பிறமொழி தேசிய அச்சு ஊடகங்கள் இணையங்களை பயன்படுத்துவதைப் போல தமிழ்மொழி மூல தேசிய பத்திரிகைகளும், இணையத்தில் தமிழ் தளங்களினூடாக செய்திகளை உடனுக்குடன் தரவேற்றம் செய்கின்றன. உதாரணமாக இலங்கையின் முன்னணித் தேசிய தமிழ் பத்திரிகைகளான தினக்குரல், வீரகேசரி, தினகரன், சுடர் ஒளி போன்ற (தேசிய நாளிதழ்களும், வாராந்த இதழ்களும்) தத்தமது இணையத்தளங்களினூடாக செய்திகளை தரவேற்றம் செய்து வருகின்றன. இங்கு செய்திகளை கள எழுத்துருவில் மாத்திரமல்ல பத்திரிகைகளை முழுமையாக (ஈ – பேப்பர்) மின் பத்திரிகை மூலமாகவும் வாசிக்கக்கூடியதாக இருக்கும். அச்சு ஊடகங்களை விட இணைய ஊடகங்கள் ஒலி, ஒளி அமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதினாலும் அவை வேகமாக மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்து வருகின்றன.

 இணையங்களில் செய்திகள் மாத்திரமல்ல, இலக்கியக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் போன்ற இலக்கியப் படைப்புகளையும் பிரசுரித்து வருகின்றன. இதற்கென தனி வளையமைப்புக்களும் உள்ளன. திரட்டிகளின் உதவி கொண்டு தேடல்கள் மூலம் எமக்குத் தேவையானவற்றை அடைந்து கொள்ள முடியும். மேலும், குறித்த ஆக்கங்களை எத்தனை ஆண்டுகள் சென்றாலும் கூட, வாசித்தறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். நவீன தொழில்நுட்ப மாற்றத்துடன் இணையங்களும் பல புதிய பரிமாணங்களை பெற்று வருகின்றன. இணையத்தளத்தின் மூலம் மின்னணுக் கல்வி (E-learning) மின்னணுக் கருத்தரங்கம் (E-conference) ஆகியவைகூட இன்று நடைமுறையில் உள்ளன. பல்லூடகக் கருவியாகவும் (Multi media) கணனி இன்று பரிணமித்துள்ளது. எனவே எழுத்து, பேச்சு, படம் என்று பலவகைப்பட்ட ஊடகங்கள் வழியே ஒருவர் உலகெங்கும் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு பிரமாண்டமான வளர்ச்சி இன்று ஏற்பட்டுள்ளது.

 ஸ்ரீலங்கா டெலிகொம்மினது பதிவுகளுக்கமைய உலக வங்கியால் வெளியிடப்பட்ட அறிக்கையில் 2010 முதல் ஒன்பது மாதங்களில் இலங்கையில் இணையத்தள பாவனையாளர்கள் 1,776,200 என அறிய முடிகின்றது. இது மொத்த சனத்தொகையின் 8.3மூ ஆகும். 2000ஆம் ஆண்டு முதல் இலங்கையின் இணையத்தளப் பாவனை குறித்த அறிக்கை பின்வருமாறு
 
ஆண்டு பாவனையாளர்கள். சனத்தொகை வீதம்
2000           121,500           19,630,230            0.5 %
2007           428,000           19,796,874            2.2 %
2008           771,700           21,128,773            3.7 %
2009        1,163,500           21,324,791             5.5 %
2010        1,776,200           21,513,990             8.3 %
http://www.internetworldstats.com/asia/lk.htm
 
மேற்படி அறிக்கையின் பிரகாரம் 2007 ஆம் ஆண்டின் பிறகு இணையத்தள பாவனை வேகமாக அதிகரித்துள்ளமைக்கான பிரதான காரணியாக புரோட் பேண்ட் இணையத்தள இணைப்பு அறிமுகமானதை குறிப்பிடலாம். 2015 ஆம் ஆண்டு ஆகும் போது இணையத்தளப் பாவனை 30% மாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
உலகளாவிய ரீதியில் இன்று இணையத்தளப் பாவனையாளர்கள் தொகை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள இணையங்களின் துணையினையே நாடியுள்ளனர். ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் குறிப்பாக வளர்ச்சியடைந்த நாடுகளில் இணையப் பாவனை செய்திப் பரிவர்த்தனை இலக்கிய பரிமாற்றம் என்பவற்றை விட கல்வித் துறை அபிவிருத்திற்கும் விசாலமான பங்களிப்பினை வழங்கி வருகின்றது. உலகளாவிய இணையத்தள பாவனைப் பற்றிய கணிப்பீட்டுப் புள்ளி விபரம் வருமாறு
 
WORLD INTERNET USAGE AND POPULATION STATISTICS
 
உலக வலயங்கள் சனத்தொகை டிச.31, 2000 நிகழ்காலம் வீதம்
Africa            1,013,779,050         4,514,400          110,931,700           10.9 %
Asia               3,834,792,852       114,304,000        825,094,396           21.5 %
Europe              813,319,511       105,096,093         475,069,448           58.4 %
Middle East        212,336,924          3,284,800           63,240,946           29.8 %
North America    344,124,450       108,096,800         266,224,500           77.4 %
Latin America
/Caribbean          592,556,972         18,068,919          204,689,836           34.5 %
Oceania
/ Australia             34,700,201          7,620,480            21,263,990           61.3 %
WORLD TOTAL
                      6,845,609,960        360,985,492        1,966,514,816           28.7 %
 
இங்கு சனத்தொகை எனும் போது 2010 ஆம் ஆண்டின் உத்தேச சனத்தொகையாகும்.
டிச.31, 2000 வரை இணையத்தளப் பாவனையாளர்கள்.
நிகழ்காலம் எனும் போது செப்டம்பர் 2010 வரை கணிப்பிடப்பட்டுள்ளது.
http://www.internetworldstats.com/stats.htm
 
உலகில் டிசம்பர் 1990 கணக்குப்படி ஒரே ஒரு இணையதளம் தான் இருந்தது. அதன் முகவரி info.cern.ch அதன் சொந்தக்காரர் www-வை அதாவது html-ஐ கண்டு பிடித்த Tim Berners-Lee ஆவார். 2010 செப்டெம்பர் மாத கணக்குப்படி இணைய உருண்டையின் மொத்தப் பாவனையாளர்களின் எண்ணிக்கை 1966,514,816 ஆகும். இணையதளங்கள் உருவாக பல காரணங்கள் கூறப்பட்டாலும் கூட ஒரு முக்கிய காரணமாய் அமைவது கூகிளின் அட்சென்ஸ் (Google Adsense) என்றால் மிகையாகாது. ஆனாலும் அன்றைக்கு Tim Berners-Lee; முதன்முதலாய் நெய்த அந்த வலைப்பக்கத்தை இன்றைக்கும் பத்திரமாய் வைத்திருக்கின்றார்கள். அதன் முகவரி வருமாறு http://www.w3.org/history/19921103-hypertext/hypertext/ www/theproject.html
 
உலக அளவில் 28.7 வீதமாக இணையத்தளப் பாவனை அதிகரித்துள்ள அதே நேரத்தில் இலங்கையில் 8.3 வீதமாகவே இணையப்பாவனையே காணப்படுகிறது. இந்நிலையில் தமிழ் மொழி மூலம் இணையப்பாவனையாளர்களின் எண்ணிக்கை இதனை விட வெகுவாகக் குறைந்திருக்கலாம். செப்டம்பர் 2010இல் இலங்கையின் வட பகுதிக்கு ஸ்ரீலங்கா டெலிகொம்மினால் புரோட் பேண்ட் இணைய இணைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இப்பகுதிகளிலும் இணையப்பாவனை அதிகரிக்கப்படலாம் எனக் கருத இடமுண்டு.

தமிழ் இணைய உலகில் தேசம்நெற் கட்டுரையாளர் புன்னியாமீன்:
 
Punniyameen_P_Mஇலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே அதிகளவில் நாட்டம் செலுத்தி வருகின்றனர். இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களுக்கு பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் விட்டால் வேறு ஊடகங்களில்லை என்று கூறுமளவிற்கு மரபு ரீதியான அணுகுமுறைகளிலேயே இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர். இதன் காரணமாக மரபு ரீதியான வழிமுறைகளைப் பேணி வந்த பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் இன்றும் அதே முறைகளை கடைபிடித்து வருவதினால் குறிப்பிட்ட சில எழுத்தாளர்கள் மாத்திரமே எழுத்துலகில் சோபித்து வர முடியும். இணையத்தள ஊடகங்களின் வளர்ச்சி ஏற்படும்போது இத்தகைய கட்டுப்பாடுகள் தகர்த்தப்படுவதினால் புதிய எழுத்தாளர்கள் வளர்ச்சியடையக் கூடிய வாய்ப்பு உருவாகின்றது. சிலநேரங்களில் எழுத்துக்கள் தரமின்றிப் போய் விடலாம் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும்கூட, இதுவொரு புரட்சிகரமான மாற்றமாக அமைய இடமுண்டு.
 
இத்தகைய பின்னணிகளின் மத்தியில் இலங்கையில் இணையத்தளங்களின் ஊடாக தமது படைப்புகளை முன்வைப்பதில் இலங்கை தமிழ் எழுத்தாளர் புன்னியாமீனின் பங்களிப்பு விசாலத்துவமிக்கதாக அமைகின்றது. இதுவரை இவரின் 300க்கும் மேற்பட்ட ஆக்கங்கள் சர்வதேச ரீதியிலான இணையத்தளங்களில் வெளிவந்துள்ளன. இதனால் சர்வதேச ரீதியில் தமிழ் இணையத்தள வாசகர்களுக்கு நன்கு பரிட்சயமான ஒரு பெயராகவே இவரின் பெயர் பிரபல்யம் பெற்றுள்ளது. அண்மையில் புன்னியாமீன் இணையத்தளங்களில் பிரசுரமான 70 கட்டுரைகளை தொகுத்து சர்வதேச நினைவு தினங்கள் எனும் பெயரில் 03 பாகங்களை வெளியிட்டிருந்தார். இம்முயற்சி பற்றி இந்தியாவில் புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ் பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “…உலக அளவில் நினைவுகூரப்பட வேண்டிய செய்திகளை இவர் (புன்னியாமீன்) இணையத்தளங்களில் எழுதியமை கண்டு வியந்துபோனேன். இணையத்தால் இணைந்தவர்கள் நாங்கள்…”. இதிலிருந்து இணையத்தளங்களில் புன்னியாமீனுக்குள்ள ஈடுபாடு பற்றி எம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
 
கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களின் பெயர் பதிந்திருப்பதற்கு இணையத்தளங்களில் வெளிவரும் அவரது ஆக்கங்களே ஒரு பிரதான காரணியாக அமையலாம். இலங்கையில் அரசியல் பற்றிய ஆய்வுகள், இலங்கை அரசியல் சிறுபான்மை இனத்தவர்கள் பற்றிய ஆய்வுகள், விஞ்ஞானம், வரலாறு, நவீன தொழில்நுட்பங்கள் உள்ளடங்கலாக சர்வதேச நினைவுதினங்கள் பற்றி விரிவான ஆய்வுக்குறிப்புகள், இலக்கிய ஆய்வுக்குறிப்புகள் என பல்வேறு துறைகளிலும் இவரின் எழுத்துக்கள் முத்திரை பதித்து வருகின்றன. இலங்கை எழுத்தாளர்களிடையே இணையங்களில் எழுதுவதில் தற்போதைய நிலையில் இவர் முதன்மை இடத்தில் இருப்பதை யாராலும் மறுத்துவிட முடியாது.
 
இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் இந்த காலகட்டங்களில் இவரின் ஆக்கங்கள் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பிரித்தானியா, நோர்வே, சுவிச்சர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஜெர்மனி, ஐக்கிய அமெரிக்கா, கனடா, தென் ஆபிரிக்கா, மொரிசியஸ் தீவுகள் போன்ற நாடுகளை தளமமைத்துக் கொண்டு இயங்கும் நூற்றுக்கணக்கான இணையத்தளங்களில் இவருடைய பல ஆக்கங்கள் வெளிவந்த வண்ணமே உள்ளன. கூகூல் http://www.google.lk, யாஹ{ http://www.yahoo.com, எம்.எஸ்.என்.http://www.msn.com திரட்டிகளிலிருந்து இணையத்தள தேடல்களின் அடிப்படையில் இதுவரை 183 இணையத்தளங்களில் இவரின் ஆக்கங்களையும், இவர்பற்றிய ஆக்கங்களையும் காண முடிகின்றது. இவரின் ஆக்கங்கள் பிரசுரமான இந்த இணையத்தள முகவரிகளின் ஆங்கில அகரவரிசைப்படி கீழ்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
 
www.24dunia.com/tamil, www.360news.in, www.abc.net,www.ads.clicksor.com, www.alaai.co.cc, www.alaikal.com, www.amalathaselroy.blogspot.com, www. andamansaravanan.blogspot.com, www.anonasurf.com, www.aruvi.com, www. asafardeen.blogspot.com, www.athirady.info, www.bestestsite.info, www. Best queen12.blogspot.com, www.bit.ly, www.blogcatalog.com, www.blogcop. com, www.blogger-index.com, www.blogs.oneindia.in, www.bogy.in, www. bname.ru, www.chat.oneindia.in, www.cmr.fm, www.comedy fans.wordpress. com, www.content.usatoday.com, www.dazy.sk, www. deccannetwork.com, www.de-de.facebook.com, www.dekrizky.us, www.dillee pworld.blogspot.com, www.thedipaar.com, www.eelamtoday.com, www.eera anal.org, www.encyk. fotelikisamochodowe.net, www.engaltheaasam. com, www.en.wordpress. com,www.ethamil.blogspot.com www.facebook.com, www. faroo.com, www. fetna.org ,www.firmy24.podhale.pl, www.flexalution. com, www.freer.info, www. friendfeed.com. www.google.com, www.geotamil. com, www.groups. google.co.in, www.groups.google.com, www.groups. google.dk, www.groups. google.fr, www.groups.google.ge, www.groups. google.gr, www.groups. google.to, www.ikmahal.com, www.ilakkiyainfo.com, www.ilankainet.com, www.ilayamalar.blogspot.com, www.ilbts.org , www.india everyday.com, www. indiantoday.com, www.infokarirterkini.co.cc, www.inioru. com, www.kalai mahan.blogspot.com, www.kalanjiam.com, www.kannadi puthagam.blogspot. com, www.karuthurimai.net, www.kattankudi.info, www.kavi mathy.wordpress. com, www.kevins.nl, www.kingwebnewspaper .blogspot.com, www.komsc. com, www.koodal1.blogspot.com, www.kopi-welcomemyblog.blogspot.com, www.kulantamil.com, www.lakehouse.lk, www.lankamuslim.org, www.linux 24web.info, www.live.athirady.org, www. maatru.net, www.manitham.net, www.masdooka.wordpress.com, www.meel parvai.net, www.meettal.blogspot. com, www.mixx.com, www.mnmanas. blogspot.com, www.muelangovan. blogspot.com, www.mulaggam.com, www.mullivikkaal.com, www.mykathi ravan.com, www.mytoday.com, www.namathu.blogspot.com, www.nayanaya. mobi, www.nerudal.com, www.neruppu.com, www.newathirady.com, www. news.writeka.net, www.news.thiratti.com, www.nkl4u.in, www.noolaham.org/, www.ns3.greynium.com, www.onlineinet.com, www.oodaru.com, www.ottran. com, www.penniyam.com, www.puhali.com, www.push2check.com, www. puzha.com, www.radio.ajeevan.com, www.ragil.info, www.rammalar. wordpress.com, www.ramnadinfo.com, www.rasigancom.blogspot.com, www. rizardview.blogspot.com, www.sangamamlive.com, www.search.webdunia.com, www. singakkutti.blogspot.com, www.sitedossier.com, www.shaseevanweblog. blogspot.com, www.shakthienews.com, www.space2world.com, www.spider. com.au, www.srisagajan.blogspot.com, www.sumanasa.com, www.supperlinks. blogspot.com, www.surfblocked.net, www.sri.lanka.asia, www.ta.indli.com, www.tamil10.com, www.tamilalai.org, www.tamilauthors.com, www.tamil. bingra.com, www.tamil.com, www.tamilalai.org, www.tamilexpress. webnode.com, www.tamilkudumbam.com, www.tamilnirubar.org, www.tamil newsnetwork.com, www.tamilnews.cc, www.tamil.net, www.tamilsguide.com, www.tamilish.com, www.tamilmanam.net, www.tamilsguide.com, www.tamil velibkp.blogspot.com, www.tamil.webdunia.com, www.ta.wikipedia. org, www. taweet.com, www.ta.wordpress.com, www.techtamil.in, www. teleindia. comm, www.thakval.info, www.thatstamil.oneindia.in, www.thaynilam. com, www.thedipaar.com, www.theendlessinfo.com, www.thenee.com, www.thenee. eu, www.thesamnet.co.uk, www.thinakaran.lk, www.thinakaran. lk/vaaraman jari, www.thinakkural.com, www.thiru2050.blogspot.com, www. thoora.com, www.tmpolitics.net, www.twitter.com, www.twurl.nl, www.ubervu. com, www. udaru.blogdrive.com www.usa-learning.blogspot.com, www.ustamil. blogspot. com, www.valaipookkal.com, www.vallinam.com, www.viyapu.com, www. wap.orlingo.com, www.webjosh.com, www.webmanikandan.blogspot.com, www. worldub.blogspot.com, www.xna.no, www.yarl.com 
 
செப்டம்பர் 26. 2010இல் சுவிஸ் அரசின் கலாசார வானொலியான கனல்கா சர்வதேச வானொலி நிகழ்ச்சியில் பிரபல குறுந் திரைப்பட இயக்குனரும், திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான அ. ஜீவன் கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களுடன் மேற்கொண்ட நேர்காணலின் போது “…தான் இந்தியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தட்ஸ் தமிழ் ஒன் இந்தியா இணையத்தளத்திலும், சங்கமம் லைவ் இணையத்தளத்திலும், பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தேசம்நெற், தமிழ்நிரூபர் போன்ற இணையளத்தளங்களிலும், பிரான்ஸை மையமாகக் கொண்டியங்கும் இலங்கை நெற் இணையத்தளத்திலும் மூலமாக எழுதுவதாக குறிப்பிட்டார். அதேநேரம், அதிரடி, புதிய அதிரடி, முழக்கம், எங்கள் தேசம், நெருப்பு, கண்ணாடி, ஊடரு, பெண்ணியம் போன்ற பல இணையத்தளங்களும் இவரின் ஆக்கங்களை முதன்மையாக பிரசுரித்துள்ளன.
 
இணையத்தளங்களிலுள்ள ஒரு பொதுவான பண்பு ஒரு இணையத்தளத்தில் வெளிவரக்கூடிய தரமான ஆக்கங்கள் வேறும் இணையத்தளங்களில் மீள் பிரசுரம் செய்யப்படுவதனை குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் கலாபூஷணம் புன்னியாமீனின் அண்மைக்கால சில ஆக்கங்கள் 20 தொடக்கம் 30 வரையிலான இணையத்தளங்களில் மறுபிரசுரமானதை அவதானிக்க முடிகின்றது. உதாரணமாக 2010 செப்டம்பரில் பிரசுரமான அன்னை தெரேசா நூற்றாண்டுவிழா எனும் கட்டுரை 24 இணையத்தளங்களில் பிரசுரமாகியுள்ளன. அதேபோல 14 ஆகஸ்ட் 2010ல் வெளிவந்த உலகிலே தரையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது சர்வதேச துறைமுகம் எனும் கட்டுரை 20 இணையத்தளங்களில் பிரசுரமாகியுள்ளன. 24 ஆகஸ்ட் 2010ல் வெளிவந்த அடிமை வியாபாரத்தையும், அதன் ஒழிப்பையும் ஞாபகமூட்டுவதற்கான சர்வதேச தினம் எனும் கட்டுரை மொத்தம் 16 இணையத்தளங்களில் பிரசுரமாகியுள்ளன. அதேபோல சர்வதேச இளைஞர் ஆண்டைப் பற்றி இவரால் ஆகஸ்ட் 2010ல் எழுதப்பட்ட கட்டுரையும் 34 இணையத்தளங்களில் பிரசுரமாகியுள்ளன.
 
இவ்வாறாக ஒரே ஆக்கம் உலகளாவிய ரீதியில் காணப்படக்கூடிய பல நாடுகளை தளமாக அமைத்து இயங்கும் இணையத்தளங்களில் பிரசுரமாகும்போது எழுத்தாளரின் முக்கியத்துவம் அதிகமாகின்றது. அதேநேரம்ää மேற்குறிப்பிட்ட உதாரணப்படி மீள்பிரசுரம் செய்துள்ள இணையத்தளங்கள் உலகளாவிய ரீதியில் பல நாடுகளை தளமாகக் கொண்டு இயங்குபவை என்பதையும் கவனத்திற் கொள்ளல் வேண்டும்.
 
இணையத்தளங்களில் காணப்படக்கூடிய மற்றுமொரு சிறப்பம்சமாக வாசகர்களின் பின்னூட்டங்களைக் குறிப்பிடலாம். குறித்த கட்டுரை தொடர்பில் வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பின்னூட்டங்கள் மூலமாக இணையத்தளத்துக்குத் தெரிவிக்கக் கூடியதாக இருக்கும். இந்த அடிப்படையில் புன்னியாமீனின் ஆக்கங்கள் தொடர்பாக இடம்பெற்றுள்ள பின்னூட்டங்களை அவதானிக்குமிடத்து இவரது எழுத்துக்குக் சர்வதேச மட்டத்தில் காணப்படும் வரவேற்பினை அவதானிக்க முடிகின்றது.
 
அதேநேரம், தற்போதைய நிலையில் இலங்கை எழுத்தாளர்களிடையே இணையத்தள பயன்படுத்தல்கள் குறைவாகக் காணப்பட்ட போதிலும்கூட, 2007 முதல் 2010 வரை தமிழ் மொழி மூல இணைய எழுத்துக்களை ஆராயுமிடத்து புன்னியாமீனின் பெயர் தனியிடத்தில் முன்னணியில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
 
உசாத்துணை:
கலாபூசணம் புன்னியாமீன் – சர்வதேச நினைவு தினங்கள். பாகம் 1, சிந்தனை வட்டம். தபால் பெட்டி இலக்கம் 1 பொல்கொல்லை கண்டி. ஜுலை 2010. ISBN: 978-955-1779-43-6
கலாபூசணம் புன்னியாமீன் – சர்வதேச நினைவு தினங்கள். பாகம் 2, சிந்தனை வட்டம். தபால் பெட்டி இலக்கம் 1 பொல்கொல்லை கண்டி. ஜுலை 2010. ISBN: 978-955-1779-44-3
கலாபூசணம் புன்னியாமீன் – சர்வதேச நினைவு தினங்கள். பாகம் 3, சிந்தனை வட்டம். தபால் பெட்டி இலக்கம் 1 பொல்கொல்லை கண்டி. ஜுலை 2010. ISBN: 978-955-1779-45-0
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை சிறப்பு மலர் 2010. தமிழ் நாட்டு அரசு
http://www.internetworldstats.com/asia/lk.htm
http://www.internetworldstats.com/stats.htm
http://www.google.lk/
http://www.yahoo.com/
http://www.msn.com/

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

12 Comments

 • தேவராசா
  தேவராசா

  பாராட்டத் தக்க முயற்சி. ஆனாலும் புன்னியாமீன் அவர்கள் மட்டும் தான் இணையத்தில் உலாவரும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் அல்லவே.

  சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்றிருந்தாலும் நல்லதொரு கருத்தாவாக விளங்கும் சோபா சக்தி முதல் இன்னும் பலர் உள்ளனரே… அது நஃபீலாவின் ஆய்வுக்குள் அகப்படவில்லையா?

  அல்லது, தாங்கள் உங்கள் ஆய்வினை, புன்னியாமீனைப் பற்றியதொரு விடயக்கலை ஆய்வு என்று சுருக்கிக் கொண்டு அதனையும் தலைப்பில் உள்வாங்கியிருக்க வேண்டும்.

  எந்தவொரு ஆய்வுக்கும், அதன் தலைப்பு யதார்த்தமானதும், தர்க்கரீதியாகப் பொருத்தமானதாகவும் அமைய வேண்டும். இதனை உங்கள் ஆய்வு மேர்ப்பார்வையாளரிடம் கேட்டுத் தெளிந்து கொள்தல் நலமே. வாழ்த்துக்கள்!

  Reply
 • மாயா
  மாயா

  முதலில் வாழ்த்துகள்.

  ஆய்வுகளை ஒருவர் செய்யும் போது பலரால் ஒத்துழைப்புகள் கிடைப்பதில்லை. ஏன் செய்திகளை சேகரிக்கச் சென்றாலும் நம்மவர் “தெரியாது” அல்லது “கேள்விப்பட்டன்” என்பது போன்ற விதத்திலேயே தகவல்களை வழங்குவார்கள். ஆனால் எல்லாம் வந்த பின்னர் அது தவறு இது தவறு என விமர்சனங்களை முன் வைப்பார்கள். அதுவரை யாரும் யாரையும் கண்டு கொள்வதில்லை.

  நஃபீலாவின் நிலையும் அதுவாக இருக்கலாம். புண்யாமீன் இணையத்தில் நல்ல விடயங்களை எழுதுபவர். மலையகத்தில் பெரும்பாலும் மாணவ – மாணவிகளுக்காக கல்வி ரீதியாக உதவுபவர். அந்த வகையில் இலகுவில் மாணவர்கள் இவரோடு நெருங்குவதும் ; இவர் குறித்த தகவல்களையும் பெறுவது இலகுவானது. ஏனையவர்களில் எத்தனை பேர் அப்படி இருப்பார்கள் என தெரியாது.

  எவராலும் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது. நஃபீலாவின் கட்டுரை ஒருவர் குறித்த ஆய்வாக இருக்கிறது. பல விடயங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஆய்வுகள் தொடர ; இது ஒரு முன் மாதிரியாக இருக்கும் என நம்புகிறேன்.

  நஃபீலாவுக்கு எமது மனமார்ந்த நன்றிகள். தொடரட்டும் உங்கள் பணி……….

  காய்க்கும் மரங்களுக்கே கல்லடி விழும். தொடர்ந்தும் நல்ல கனிகளை தர வாழ்த்துகள்.

  Reply
 • George
  George

  இந்த ஆய்வு ”இலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே நாட்டம்” என்ற தலைப்பில் எழுதப்பட்டது.

  Reply
 • கலைமகன் பைரூஸ்
  கலைமகன் பைரூஸ்

  செல்வி எம்.ஐ.எப் நபீலாவின ஆய்வினைப் படித்தேன். வாழ்த்துக்கள்
  அவர் கலாபூசணம் புன்னியாமீன் ஆசிரியர் பற்றிய தேடலிலேயே ஆய்வினை மேற்கொண்டிருக்கின்றார் என்பது விளங்குகின்றது. ஆய்வுத் தலைப்பை மாற்றி எழுதியிருக்கலாம். காழ்ப்புணர்ச்சியுடன் சிலர் கருத்துக்களைத் தெரிவிப்பதுபோல நானிங்கு தெரிவிக்கவில்லை என்பதை கருத்திற்கொள்க.
  ஆயினும் இன்று இணையத்தளத்தில் இலங்கையரில் பலர் தடம் பதித்துவருகின்றார்கள். இதற்கு நல்ல உதாரணம் மாவனல்லை ரிசான் செரீப் – ஆசிரியை பஹீமா ஜஹான் போன்றோர். உலகளாவிய ரீதியில் இவர்களுடைய ஆக்கங்கள் வெகுவாகப் பேசப்படுகின்றன.

  செல்வி நபீலா இணையத்தள தேடுபொறிகளில் இன்னும் தேடி ஆய்வினை சிறப்பாக எழுதியிருக்கலாம். இந்த ஆய்வுக்கட்டுரை புன்னியாமீன் ஆசிரியருக்கான மணிமகுடம் என்பது எனது தாழ்மையான கருத்து.

  நபீலா தொடர்ந்து எழுத்தில் பங்களிக்க அடியேனின் வாழ்த்துக்கள்
  -http://kalaimahanfairooz.blogspot.com

  Reply
 • Che. Yalpanan
  Che. Yalpanan

  //காய்க்கும் மரங்களுக்கே கல்லடி விழும். தொடர்ந்தும் நல்ல கனிகளை தர வாழ்த்துகள்.//

  விமர்சனம் என்பது ஆய்வாளர் ஒருவரால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது. விமர்சனங்கள் தான் ஆய்வை மேம்படுத்த உதவும்.

  நவீன ஆய்வுக் களத்தில் விமர்சனம் மூலம் மேம்படுத்தப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்தான் வரவேற்கப்படுகின்றன.

  Peer Review என்பதன் முக்கியத்துவத்தை மாயா அறிந்திருக்க வேண்டும் என நினைக்கின்றேன். விமர்சனத்துக்கு (Peer review and the due correction of material produced as per comments/suggestion) ஆப்பு வைத்து அதற்கு அப்பாற்பட்டு நடந்தால், வவுனியா வளாகத்தினதும் யாழ் பல்கலையினதும் கல்வியாளப் பெருந்தகைகளின் நிலைதான் வந்து சேரும். அதன் பின் பாலசுந்தரம்பிள்ளை போல கெளரவ கலாநிதிப் பட்டத்துக்கு அலைந்து திரிய வேண்டிய நிலைதான் ஏற்படும். கவனம் நஃபீலா.

  உங்கள் ஆய்வு இன்னமும் மேம்படுத்தப்படலாம் என்பதே வெளிப்படை. குறிப்பாக தலைப்பு சரிவரப் பொருந்தவில்லை என்பது வெள்ளிடைமலை.

  வவுனியா வளாகத்தின் புவனேஸ்வரி லோகனாதனின் கத்தரிச் செடி ஆய்வு போல உங்கள் ஆக்கம் வரக்கூடாது. அதுதான் – அல்லது தங்களுக்கு திரு. புன்னியாமீனை முன்னுக்கு கொண்டுவரும் நோக்கம் இருந்தால் – அது வேறு. அந்த வகையில் இது புன்னியாமீனின் பங்களிப்பு பற்றிய கட்டுரை என்றே கொள்ளப் படும்.

  A good researcher is one who is prepared to take a positive approach towards all comments regarding his/her work, and, perform the necessary improvements to the synthesis generated as per comments by peers or the general public. The purpose of research (ultimately) is to improve the knowledge-base – which is the rightful property of the community at large. And, as such… the researcher is not the final owner of the information he/she generates.

  Reply
 • ashroffali
  ashroffali

  புண்ணியாமீன் சேர் தற்போதைய இலங்கை இணையத்தள எழுத்தாளர்களில் அனைத்து வகை வாசகர்களையும் ஈர்த்துக் கொண்டவர் என்பதால் அவரைப் பற்றி அனைவரும் தெரிந்து வைத்திருப்பது இயற்கையானதே. அதன் காரணமாக நபீலா அவரை முதன்மைப்படுத்தியிருக்கலாம். அதற்காக யாரும் குறை காண முடியாது. அத்துடன் புண்ணியாமீன் சேர் பாராட்டுரைக்கு தகுதியானவரும் கூட. அவருக்கு மிக விரைவில் கெளரவ கலாநிதிப் பட்டம் கிடைத்தால் கூட வாழ்த்தப் போகும் ஆட்களில் நான் முதலாமவனாக இருப்பேன்.

  Reply
 • மாயா
  மாயா

  நம் வீட்டுக் குழந்தைகள் படம் வரையும். நீ பிக்காசோ போல் வரை என நான் சொல்ல மாட்டேன். ஆகா அழகாக இருக்கிறது. இதைவிட நல்ல படங்கள் வரைய வேண்டும். இதோ பார் இவர்கள் வரைந்த படங்கள் உலகப் புகழ் பெற்றவை. காரணம் இவை மற்றவர்களது படங்களை விட வித்தியாசமான கோணத்தில் ; கருத்துகளை சொல்கின்றன என உட்சாகப்படுத்தத் தெரிய வேண்டும். அதற்கான வழி முறைகளை சொல்ல வேண்டும். இந்த மாணவியின் வயது ; அவர் வாழும் சூழல் ; அவரது பொருளாதாரம் ; கலாச்சார பிரச்சனைகள் ஆகியன குறித்தும் நாம் எண்ண வேண்டும்.

  நீ ஏதாவது செய்தால்தான் உலகம் பேசும் அல்லது திட்டும். தத்தியாக இரு யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். வழி காட்டவும் மாட்டார்கள். நடக்காத குழந்தையை நட நட என்பார்கள். நடந்து ஓடித்திரயத் தொடங்கியதும் ஒரு இடத்தில் சும்மா இருக்குதா பாருங்க என்பார்கள். இவர்கள் இப்படியும் பேசுவார்கள் ; அப்படியும் பேசுவார்கள்.

  நபீலா; இங்கே யாராவது உங்களுக்கு வழி காட்டினால் அவர்கள் சொல்வது சரியாக இருந்தால் அதையும் தேடிப் பார்க்கவும். இல்லை நீங்கள் எழுதுவது சரியாகப் படுகிறதா தொடர்ந்து பயணியுங்கள். உங்களைத் தவிர வேறு ஆசான் வையகத்தில் எங்கும் இல்லை. வலி தெரியவில்லையா? அடி வாங்கு ; அப்போது உனக்கு வலியின் வேதனை புரியும். நீ சிரித்துப் பார் ; அந்த மகிழ்வை நீ உணர்வாய். இதை எவராலும் தர முடியாது. ஒருவனுக்கு உதவி செய்து பார். அந்த உதவிக்கான அர்த்தம் உனக்கு தெரியாமல் உன்னை வாழ்த்தும். அந்த உதவியை செய்யாமல் இருந்து பார்; அது தண்டனையாக உன்னை உணர்த்தும். அடுத்தவனை உயர்த்தப் பார் ; நீ உயர்ந்து செல்வதை உணர்வாய். உன்னை உயர்த்திக் கொள்ள முயன்று பார் ; நீ வீழ்வை காண்பாய்.

  எந்த ஒரு வெற்றியாளனும் ; முதல் படைப்பில் முன்னுக்கு வந்ததில்லை. அப்படி சரித்திரமும் இல்லை.

  ஒரு அழகான கதை:

  போரட்டம்
  ——-

  வாழ்க்கையில் நாம் எப்படிச் சோதனைகளை எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அவை தோல்வியாகவோ அல்லது வெற்றியாகவோ அமையலாம். ஆனால் முயற்சி இல்லாமல் வெற்றி வருவதில்லை.

  ஒரு உயிரியல் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு ஒரு கம்பளிப் புழு எப்படி வண்ணத்துப் பூச்சியாக மாறுகிறது என்று சொல்லிக் கொண்டு இருந்தார். அவர் தனது மாணவர்களிடம் ஒரு வண்ணத்துப் பூச்சி கூட்டினைக் காட்டி அடுத்த ஒரு சில மணி நேரங்களில் வண்ணத்துப் பூச்சி தனது கூட்டிலிருந்து போராடி வெளிவரப்போகிறது என்றும் ஆனால் யாரும் அதற்கு உதவக்கூடாது என்றும் கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்.

  மாணவர்களில் ஒருவன் அதன் மேல் இரக்கப்பட்டான். தனது ஆசிரியரின் சொல்லை மீறி, அந்த வண்ணத்துப் பூச்சி தனது கூட்டிலிருந்து வெளிவர உதவுவதற்குத் தீர்மானித்தான். அந்த வண்ணத்துப் பூச்சி போராட தேவையின்றி எளிதாக வெளியே வரும் பொருட்டு அந்தக் கூட்டை உடைத்தான். ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு வண்ணத்துப் பூச்சியும் இறந்து விட்டது.

  இப்பொழுது அந்த மாணவன் வண்ணத்துப் பூச்சியின் இறப்பிற்கு காரணமாகி விட்டான். கூட்டிலிருந்து வெளிவரப் போராடும் போராட்டம் உண்மையில் அதனுடைய சிறகுகளை வளர்க்கவும், தன்னை பலப்படுத்திக் கொள்ளவும் உதவும் என்பது தான் இயற்கையின் சட்டம். மாணவன் அந்த வண்ணத்துப் பூச்சியை போராட்டத்தில் இருந்து காப்பாற்றி விட்டதால், அது இறந்து விட்டது. இதே கொள்கையை நமது வாழ்விற்கும் பயன்படுத்துங்கள். போராட்டங்கள் இல்லாமல் வாழ்வில் எதுவுமே பயன்தராது.

  Reply
 • Jeyabalan T
  Jeyabalan T

  சப்பிரகமுவை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேற்படி மாணவி “தமிழ் இலக்கியத்துறையில் புன்னியாமீன்” எனும் தலைப்பில் மேற்கொண்ட ஆய்வின் ஒரு பகுதியே மேற்படி கட்டுரையாகும். மேற்படி கட்டுரையின் ஓர் உப தலைப்பே “இலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே நாட்டம்” என்பதாகும். இலங்கையில் இணையப்பாவனை பற்றி ஓர் விளக்கத்திற்காகவே இக் கட்டுரை பிரசுரிக்கப்பட்டது.

  த.ஜெயபாலன்

  Reply
 • M.Y.M.MEEADHU
  M.Y.M.MEEADHU

  I APPRECIATE THE ANALYSIS OF THE WELL KNOWN WRITER
  (IN TAMIL) KALABOOSHANA BUNYAMEEN BY A RESEARCH STUDENT FROM SABRAGAMUWA UNIVERSITY. HER COMMENTS AND APPRECIATIONS OF HIS LITERARY CONTRIBUTIONS ARE QUITE RELEVANT AND ACCEPTABLE IN THE CURRENT LITERARY WORLD. BUT SHE CAN COMPARE BUNYAMEEN’S LITERARY PRODUCTIONS WITH OTHERS’ ACHIEVEMENTS. FOR INSTANCE JINNASHAREEFDEEN’S WRITINGS THAT HAVE FOUND GREAT RECOGNITION IN SOUTH INDIA, SINGAPORE, MALAYSIA ETC
  THERE ARE WRITERS ,POETS, CRITICS WRITING IN ENGLISH RECOGNISED AS INTERNATIONAL WRITERS IN UK,USA ,AUSTRALIA ETC. K.S .SIVAKUMARAN, SAMEEM, KALABOOSHANA MEEADHU AND SOME ENGLISH QUALIFIED WRITERS
  HAVE BEEN CONTRIBUTING RESEARCH ARTICLES ON ARTS AND LITERATURE TO WORLD WIDE WEBSITES.
  MR.M.Y.M.MEEADHU HAS WRITTEN A LOT IN ENGLISH
  THROUGH HIS WEBSITE .freewebs.com/meeadhu AND HAS FOUND RECOGNITION IN ENGLISH LITERARY WORLD. SO MAY I DRAW THE ATTENTION OF THE RESEARCH STUDENT NAFEELA TO WIDEN HER SCOPE OF RESEARCH BY INCLUDING THE ABOVE MENTIONED ENGLISH MEDIUM WRITERS TOO
  HOWEVER, I AM HAPPY TO CONVEY MY REGARDS TO NAFEELA FOR HER DEEP ANALYSIS OF BUNYAMEEN’S LITERARY ACHIEVEMENTS.
  COMMENTED BY M.Y.M.MEEADH-
  DUMBULUWAWA– HEMMATHAGAMA.

  Reply
 • BC
  BC

  நபீலாவின் ஆய்வு கட்டுரை பயனுள்ளதாக இருந்தது. இலங்கையில் இணையத்தள பாவனை பற்றி விபரமாக அறிந்து கொண்டேன். நன்றி. ஐரோப்பாவை விட கனடா, அமெரிக்காவில் இணையத்தள பாவனை அதிகம்என்பதை இப்போ தான் அறிகிறேன். புன்னியாமீன் பயனுள்ள நல்ல விடயங்களையே எழுதுபவர். ஆய்வாளருக்கு வாழ்த்துகள்.

  Reply
 • தேவராசா
  தேவராசா

  //அத்துடன் புண்ணியாமீன் சேர் பாராட்டுரைக்கு தகுதியானவரும் கூட. அவருக்கு மிக விரைவில் கெளரவ கலாநிதிப் பட்டம் கிடைத்தால் கூட வாழ்த்தப் போகும் ஆட்களில் நான் முதலாமவனாக இருப்பேன்//ashroffali on October 22, 2010 12:15 pm

  அடக் கடவுளே! என்று தீரும் இந்தக் கெளரவக் கலாநிதி மோகம். UoJ அழிந்தது போதாதா? புன்னியாமீனும் மாயவலையில் சிக்கிக் கொள்ள வேண்டாமே?!?

  ஆய்வு என்பது தேடலின் அடிப்படை. தேடலே அறிவின் மூலாதாரம். வண்ணத்துப்பூச்சிகள் பற்றிய கதை நல்லதுதான்… ஆனாலும் அதில் காத்திரம் இல்லை!

  மேலும், வலைப்பூ எழுத்தாளர்கள் (Tamil blog writers), சமூக வலையமைப்பு ஊடக எழுத்தாளர்கள் (social network media writers) என்று தகவல் தொழினுட்பத்தின் (IT) வளர்ச்சிப் போக்கில் தமிழ் எழுத்துக்களும் வளரத்தான் செய்கின்றன. அது பற்றியும் கவனமெடுத்திருத்தல் அவசியம்.

  Reply
 • தேவராசா
  தேவராசா

  //MR.M.Y.M.MEEADHU HAS WRITTEN A LOT IN ENGLISH
  THROUGH HIS WEBSITE .freewebs.com/meeadhu AND HAS FOUND RECOGNITION IN ENGLISH LITERARY WORLD. SO MAY I DRAW THE ATTENTION OF THE RESEARCH STUDENT NAFEELA TO WIDEN HER SCOPE OF RESEARCH BY INCLUDING THE ABOVE MENTIONED ENGLISH MEDIUM WRITERS TOO./M.Y.M.MEEADHU on October 22, 2010 4:45 pm /

  இதைத் தான் தன்னைத் தானே “கூறி விற்பனை செய்யும்” அதி வேடிக்கையான desperate self advertising நிலை என்று சொல்ல வேண்டும். M.Y.M மீஃது இதனை எழுதித் தன்னைத் தானே விளம்பரம் செய்ய முயன்றதன் மூலம், இலங்கைத் தமிழ் அறிவு ஜீவிகள் என்று காட்டிக் கொள்ள விழைபவர்களின் அதி மட்டமான நடவடிக்கைகளுக்கு தன்னையும் உட்படுத்தி விட்டிருக்கின்றார். சுயவிளம்பரம் செய்தல் தனக்கும் ஆகாது, உலகுக்கும் ஆகாது.

  எதற்கும் மீஃது, இந்த விடயம் தொடர்பாக தேசம்நெற்றின் பின்னூட்டாளர்கள் எப்படியெல்லாம் அணுகுவார்கள் என்பதனை யோசிக்காமலேயே தன்னைத் தானே புகுத்திக் கொண்டுள்ள double whammy நிலை இதுதான்.

  Reply