தமிழீழ மக்கள் விடுதலை கழகம் – கடந்து வந்த தடங்கள் – பகுதி (1)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் – PLOTE தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புகளில் முக்கியமானது. எண்பதுக்களில் மிகப் பெருந்தொகை உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக ஆரம்ப காலங்களில் விளங்கியது. ஆனால் இந்த அமைப்பினுள் ஏற்பட்ட உட்பூசல்கள் மற்றும் காரணங்களால் மிகப்பெரும் தொகையானவர்களைக் கொண்டிருந்த இவ்வமைப்பு மிக விரைவிலேயே அதன் கட்டமைப்புகள் குலைந்து பலவீனமான நிலைக்குச் சென்றது.

தமிழீழ விடுதலைப் போராட்ட அமைப்புகளில் போராட்டத்திலும் பார்க்க உட்படுகொலைகளில் தங்கள் கூடுதல் உறுப்பினர்களை இழந்த அமைப்பும் புளொட் அமைப்பே. அதன் தலைவரும் உட்படுகொலையிலேயே உயிரிழக்க வேண்டி இருந்தது.

தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் பெரும்தொகையான தமிழீழ மக்கள் விடுதலைக் கழக உறுப்பினர்கள் தாங்கள் அங்கம் வகித்த அமைப்பின் வரலாற்றை பதிவுசெய்ய முற்படுகின்றனர். ஏனைய விடுதலை இயக்கங்களிலும் பார்க்க தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் அரசியல் விவாதத் தளங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டுவதால் தேசம்நெற் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கடந்த கால செயற்பாடுகள் பற்றிய பதிவுக்கும் மீளாய்வுக்குமான தளமாக ஆகி உள்ளது.

இது விமர்சனத்திற்கான களம் என்பதிலும் பார்க்க உண்மையை அறிவதற்கான தகவல் பரிமாற்றத்திற்கான களமாக ஆகி உள்ளது.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஜேர்மனியில் இடம்பெற்ற மாநாட்டின் ஊடக அறிக்கையைத் தொடர்ந்து வந்த இந்தப் பதிவுகளை தற்போது தனிப்பதிவாக்கி உள்ளோம்.

தமிழீழ மக்கள் விடுதலை கழகம் – கடந்து வந்த தடங்கள் – பகுதி (2)
http://thesamnet.co.uk/?p=23385

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

312 Comments

 • Thalaphathy
  Thalaphathy

  இயக்கம் எல்லாவற்றையும் இலவசமாய்த்தரும், நாங்க அதுக்ககுள் போய், ஊராற்ர காசிலும், அவர்களிடம் கொள்ளையடித்த காசிலும் – சாப்பிட்டும், உடுப்புப்போட்டும், அரசியல்படிச்சும், தமிழ்மக்களுக்கு கொஞ்சம் கீரோஸியம் காட்டலாமெண்டு வெளிக்கிட்ட நம்ம சில “புளட்” காரர்களுக்கு, அது சரிவராமப்போனபின், வெளிநாடுகளுக்கு ஓடிவந்து, தாங்க “புளட்” என்று கீரோஸிசம் காட்ட வெளிக்கிட்டு, அதுவும் எடுபடாமல் போனவர்கள், புலியோட சேர்ந்து தங்கட கீரோஸியத்தைக் புலம்பெயர் தேசங்களில்காட்ட வெளிக்கிட்டும் மண்கவ்விய பின்னர், எல்லாவிதமாகவும் இணையத்தளங்களில் எழுதி தமது செஞ்சோற்றுக்கடனை தீர்ப்பதற்கு வெளிக்கிட்டுள்ளதாக பொதுசனமும் இன்றைய “புளட்”டும் அபிப்பிராயப்படுகிறதாக கேள்விப்பட்டேன்.

  மாயாவும், அஜீவனும் மற்றும்பல ஆயிரக்கணக்கான நம்ம புலம்பெயயர்தேசத்து பிரபல்யங்களும் இதற்கு விதிவிலக்கல்லவே!

  Reply
 • palli
  palli

  //மாயாவும், அஜீவனும் மற்றும்பல ஆயிரக்கணக்கான நம்ம புலம்பெயயர் தேசத்து பிரபல்யங்களும் இதற்கு விதிவிலக்கல்லவே/!/ தளபதி
  இதில் எனக்கு உடன்பாடு இல்லை; காரணம் தளபதி நீங்களே ஒரு கழக தோழர் என்பது என் கணிப்பு, காரணம் பல்லியையே கழகம் என சான்றிதழ் தந்தவரல்லவா நீங்கள், சில விடயங்களை நாம் கவனிக்க தவறுகிறோம் என்பது உன்மையே, கழகம் பற்றி தேசத்தில் வந்த அளவுக்கு மற்றய அமைப்புகள் பற்றி வரவில்லை. இதில் இதுக்கு உதவிய சில ஊடகங்கள்.

  புளொட்டின் மறுபக்கம்;;;;; சிவா சின்னபொடி;
  வழி தெரியாத பாதையில் ஈழம்;; பரந்தன் ராஜன்;
  புளொட்டின் ஆ(கோ)வணங்கள். ரயாகரன்;
  எனது இலக்கம் இது; சீலன்
  இப்படி இன்னும் பல விமர்சனங்கள்? ஆனாலும் இவையில் எது உன்மை எது பொய் என்பது தெரியவில்லை,ஒன்றுக்கொன்று முரன்பாடாகவே உள்ளது; இதில் ஜயர் நான் சொல்லுவதே வேதம் என சொல்லுகிறார்; இத்தனைக்கு பிறகும் பல்லிக்கும் சில கழக தோழர்கள் சில கதைகள் சொல்லுகிறார்கள். அதுவும் முரன்பாடாகவே உள்ளது, ஆகவே உன்ம்மையாக கழகத்தில்
  இருந்த மாயா குசும்பு போன்றவர்கள் அங்கு என்னதான் நடந்தது என எழுதினால் பல்லியும் சில தகவல்கள் எனது நண்பர்கள் மூலம் தரலாம்; உன்மையாக வாதம் செய்வதானால் எனது மைல் முகவரிகூட தர தயாராக உள்ளேன்; இந்த வாதம் மற்றய அமைப்புக்களுக்கு கூட ஒரு புள்ளியாக அமையலாம்; ஏன் இன்றய கழகத்தினருக்கு கூட சில தகவல்கள் கிடைக்கலாம்; ஆகவே அவர்கள் மகாநாட்டை நாம் விமர்சிக்குமுன் கடந்தகால தவறுகளை சுட்டி காட்டுவோம்;
  நட்புடன் பல்லி;

  Reply
 • palli
  palli

  புளொட்டின் அன்றய மத்திய குழு உறுப்பினர்கள்.
  முகுந்தன்; இல்லை
  வாசு;;இல்லை
  கண்ணன்;இல்லை
  சேகர், இந்தியா
  யாண். கனடா;
  ஈஸ்வரன்; இல்லை
  அசோக்; பாரிஸ்;
  பொன்னுதுரை; பாரிஸ்
  செந்தில்; இல்லை
  பாபுஜி; கனடா
  கேசவன்,????
  மாறன்,?????
  சீசர், இந்தியா
  சந்ததியார்; இல்லை
  ராஜன்,இந்தியா,

  இடையில் இனைந்ததாக சொல்லபடுபவர்கள்.
  சங்கிலி; இல்லை
  தாஜன், இல்லை
  நடேஜர், இல்லை
  வாமதேவன், இல்லை
  இவை அனைத்தும் நண்பர் தந்த தகவல்தான்
  தவறாயின் பல்லி பொறுப்பல்ல;

  Reply
 • BC
  BC

  //பல்லி – இருந்த மாயா குசும்பு போன்றவர்கள் அங்கு என்னதான் நடந்தது என எழுதினால்…//
  மாயா புளட்டில் முன்பு இருந்தது தெரியும். குசும்பு மாவை அண்ணையோடு இளைஞர் பேரவையில் இருந்தவர் என்று நினைத்தேன்.

  Reply
 • Thalaphathy
  Thalaphathy

  //இதில் எனக்கு உடன்பாடு இல்லை; காரணம் தளபதி நீங்களே ஒரு கழக தோழர் என்பது என் கணிப்பு, காரணம் பல்லியையே கழகம் என சான்றிதழ் தந்தவரல்லவா நீங்கள்//-palli on November 3, 2010 10:14 pm

  பல்லி எனக்கு மறதிநோய் இருக்கிறதோ தெரியாது. நான் உங்களை எங்கு, எப்படி, எந்தசந்தர்ப்பத்தில் “புளட்” என முத்திரை குத்தினேன் என ஆதாரங்களை முன்வைப்பீர்களானால் – நீங்கள் எழுதியதை ஏற்றுக்கொள்ள தயாராய் இருக்கிறேன்.

  Reply
 • அஜீவன்
  அஜீவன்

  //வாமதேவன் இல்லை//

  வாமர் சென்னையில் இருக்கிறார். இது கனடாவில் வதியும் அவர் மனைவி தந்த தகவல். ( சில காலத்துக்கு முன்)

  செ.ஜெகநாதன் போன்றவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்து போனவர்கள். அரசியல் பேச்சில் வல்லவர்கள்.

  புளொட்டில் இருந்த தோழர்கள் அநேகர் புலத்தில் வாழ்கிறார்கள். அதிகமானவர்கள் அரசியல் ஈடுபாடற்று வாழ்கிறார்கள். ஒரு சிலர் புலத்தில் புலிகளோடு இணைந்தார்கள். சிவா சின்னப்பொடி (திவாகரன்) போன்றவர்கள்.

  என்னைப் பொறுத்தவரை “அரசியல்வாதிகள் மாறலாம். இயக்கங்களில் இருந்தவர்களால் மாற முடியாது. ஒதுங்கத்தான் முடியும்.” எனவே நான் புளொட்டை விட்டு வெளியேறிய பின்னர் எவரோடும் இணையவில்லை. அனைத்து இலங்கை உறவுகளோடும் ஒரு நட்பு பாலம் இருக்கிறது.

  கடந்த முறை ஜேர்மன் ஸ்ருட்காட் நகரில் இடம்பெற்ற மாகாநாட்டில் தளம் மற்றும் பின் தளத்தில் இருந்தவர்களில் 10 பேராவது கலந்து கொள்ளவில்லை என அங்கு சென்று வந்த எனது நண்பர் சொன்னார். அங்கு நடந்த சில தகவல்களை சொன்னார். அதை நான் எழுதுவதை விட ஜனநாயகம் குறித்து பேசும் செ.ஜெகநாதன் போன்றோர் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

  ஜப்பசி மாதம் 30ம் 31ம் திகதிகளில் ஜேர்மன் ஸ்ருட்காட் நகரில் இடம்பெற்ற மாநாடு குறித்து , ஏகப்பட்ட புலம்பெயர்ந்து வாழும் புளொட் தோழர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்பதை பல நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள். அவர்கள் மூலமே இந்த மகாநாடு குறித்து அறிந்தேன். இதை நடத்தியவர்கள் தளத்திலோ அல்லது பின் தளத்திலோ இருந்தவர்களை இணைத்துக் கொள்ள விரும்பவில்லை என தெரிகிறது. எனவே குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அந்த நிகழ்வு அறிவிக்கப்பட்டது. ஆகக் குறைந்தது புளொட் இணையத்தளங்களிலாவது இது குறித்து தெரிவிக்கப்படவேயில்லை.

  அந்தவகையில் ஈபீஆர்எல்எப் வரதராஜப் பெருமாள் அவர்கள் வந்த போது அதன் தோழர்கள் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து பலர் சந்திக்கவும் ; கலந்துரையாடவும் செய்திருந்தனர். இது பாராட்டுக்குரியது.

  கடந்தமுறை சித்தார்த்தன் அவர்கள் சுவிசுக்கு வந்த போதும், ஒரு சிலர் பலரை சந்திக்க விடவில்லை என்பதை பல்லியும் சொல்லியிருந்தார். எந்த ஒரு அமைப்பிலும் இருந்தவர்கள் அழையா விருந்தாளிகளாக எங்கும் போக விரும்பமாட்டார்கள். இயக்க தலைமைகள் என்ன தவறுகளை செய்திருந்தாலும் ; ஆரம்ப கால அனைத்து இயக்கங்களில் வாழ்ந்த போராளிகளும், பல இழப்புகளோடு தமது வாழ்வை அழித்துக் கொண்டவர்கள் என்பதை எவரும் மறுக்க முடியாதது. இன்றும் இயக்கத்தில் இணைவதை விட ; அங்கு பரிதவிக்கும் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற அவா இருக்கிறது. அவர்களது நல்ல எண்ணங்களை பலர் உணரவில்லையென்றே நினைக்கிறேன்.

  இயக்கங்களின் தோழர்கள் தங்களை உயர்த்திக் கொள்ளும் எண்ணத்தில் இணைந்தவர்கள் அல்ல. மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் எனும் எண்ணத்தில் தமது இளமைக் காலக் கனவுகளை வீசி எறிந்து விட்டு வந்தவர்கள் என்பதை இன்று தலைமை தாங்குவோர் மறந்தால் அது இன்னொரு வரலாற்று தவறாகிவிடும். எனக்கு அனைத்து இயக்கங்களிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். நான் அனைவரையும் மதிக்கிறேன். ஒதுங்கியிருப்போரில் அநேகமானவர்கள் மக்கள் மேல் நேசம் கொண்டவர்கள். அவர்கள் தனியாக பல உதவிகளை செய்கிறார்கள். அரசோடு நேரடியாக பேச முடிந்த, நட்பான பல இயக்கங்கள் , ஜனநாயக பாதைக்கு வந்துவிட்ட நிலையில் இன்னமும் திரை மறைவு நிகழ்வுகளால் எந்த ஒரு நன்மையும் ஏற்படப் போவதில்லை.

  Reply
 • nanee
  nanee

  இரண்டுபேரைப் போட்டால் மற்றவர்கள் வாயைமூடிக்கொண்டிருப்பார்கள் என்று நம்புகின்றவர்களே இன்னமும் இயக்கபெயர்களில் அரசியல் நடாத்துவதுபோல் தெரிகின்றது.இவ்வளவு அழிவுகளுக்கு பின்னமும் இயக்கங்களில் இருந்த பலர் அதையே அரிச்சுவடிபாடாமாக நம்புகின்றார்கள்.
  மற்றது தளபதி மழைக்கு கூட இயக்கபக்கம் ஒதுங்கிய ஆளில்லை என நம்புகின்றேன்.எனது இலக்கம் இது- சீலன் வாசித்தால் விள்ங்கும் எப்படி இயக்கத்திற்கு போனவர்கள் இருந்தார்களென்று.எங்கோ 1% சோக்கு பண்ணிக்கொண்டு திரிந்திருக்கலாம் .நீங்கள் இயக்கத்திற்கு போகாவிட்டாலும் பரவாயில்லை போனவர்களை கொச்சைப்படுத்ததி சந்தோசம் காணவேண்டாம்.அனைவரினதும் போராட்டம் பிழைத்ததற்கு பந்திபந்தியாக அவரவர் நம்புவத்தை எழுதிக்கொண்டே இருக்கலாம்.

  Reply
 • மாயா
  மாயா

  //இரண்டுபேரைப் போட்டால் மற்றவர்கள் வாயைமூடிக்கொண்டிருப்பார்கள் என்று நம்புகின்றவர்களே இன்னமும் இயக்கபெயர்களில் அரசியல் நடாத்துவதுபோல் தெரிகின்றது.- nanee//

  இதில கருத்துதெழுதுறவங்களுக்கு உள்ள பிரச்சனை எங்களுக்கு இல்லை. நீங்களும் உங்கட பெயரை பதியலாம். நாங்கள் தடுக்க மாட்டம் nanee.

  இங்கு அதிகமானவங்கள் தோழர்களாக இருந்தாலும் > உள்ளே நடந்தவை இல்லாட்டி நடப்பவை பற்றி தெரியாதவங்கள். அதனால் அவங்களுக்கு ஒரு எல்லைக்கு மேல போக ஏலாது. ஒரு சிலவங்களால் அந்த எல்லையை தாண்டி போக முடியும். அஜீவன் > இயக்கத்தை விட்டு வந்தாலும் அஜீவனை சினிமாக்காரர் எனத்தான் தெரியும். அவரோடு நெருங்கனவர்களுக்கு அவரைத் தெரியும்.

  எங்களைப் போன்றவர்கள் வித்தியாசமாக கடும் வேதனைகளோடு வாழ்ந்திருக்கிறம். அவை பலருக்கு மறந்து விட்டது. போராட்ட களத்தில் இல்லாதவங்கள் > கையெழுத்து போட தொடங்கியிருக்கினம். கதைக்கத் தொடங்கியிருக்கினம். இவங்களும் சேர்ந்து தொழில் தொடங்க திட்டம் போடுவதாக கதைக்கினமாம். உங்கள் சேவை தாயகத்தில் உள்ள மக்களுக்குத்தான் தேவையே அல்லாமல்> புலத்தில் தொழில் செய்வதாக இருப்பதாக இருக்கிறது. காதாடு காதாக கதைச்சாலும்> சுவருக்கும் காது உண்டு. தோழர் முகுந்தனோடு புளொட் செத்துப் போனது. அதை நிமிர்த்த ஒரு சரியான தலைமை இன்னமும் இல்லை. அந்த நம்பிக்கையும் பலருக்கு இல்லை. எனவே இந்த மாநாடு கோழி செட்டைக்குள் தலையை வச்சுக் கொண்டு தூங்கியதா நினைக்கிறது மாதிரி நடந்திருக்கு. போன பலருக்கு திருப்தியில்லை.

  Reply
 • Thalaphathy
  Thalaphathy

  //மற்றது தளபதி மழைக்கு கூட இயக்கபக்கம் ஒதுங்கிய ஆளில்லை என நம்புகின்றேன்.எனது இலக்கம் இது- சீலன் வாசித்தால் விள்ங்கும் எப்படி இயக்கத்திற்கு போனவர்கள் இருந்தார்களென்று.எங்கோ 1% சோக்கு பண்ணிக்கொண்டு திரிந்திருக்கலாம் .நீங்கள் இயக்கத்திற்கு போகாவிட்டாலும் பரவாயில்லை போனவர்களை கொச்சைப்படுத்ததி சந்தோசம் காணவேண்டாம்.அனைவரினதும் போராட்டம் பிழைத்ததற்கு பந்திபந்தியாக அவரவர் நம்புவத்தை எழுதிக்கொண்டே இருக்கலாம்.//-nanee on November 4, 2010 12:43 pm

  நீங்கள் எழுதியவரையில் எனக்குப் பெருமைதான், ஏனனில் மக்கள்சொத்திலும், அவர்களது உழைப்பிலும் நான் சிலவருடங்களேனும் எனதுவாழ்வை கடத்தவில்லையென்பதால் மட்டும். இயக்கத்திற்குப்போய் PLO and UP training எடுத்தவர்கள் தங்களை தமிழர்களின் மீட்பர்களாக இன்றும் கதைவிட்டுத்திரிகிறதை ஒப்பிடும்பொழுது நான் ஒரு சின்னப்பயல்தான். யார் உங்களுக்கு போதித்தார்கள் நீங்கள் உங்களுடைய தனிமனித அல்லது சமூகவிடுதலையை வென்றெடுக்க “புளட்”டில் இருந்துதான் போராட வேண்டுமென்று. “புளட்” நீங்கள் தனிமனிதனாக போராடுவதற்கானஅறிவையும், பயிற்சியையும்தான் உங்களுக்கு தந்தது என்று ஏன் நீங்கள் உதிரிகளாகும்வரை உணராமலிருந்தீர்கள்? – உங்கள்மீது உங்களுக்கு தன்னம்பிற்கை என்றுமே இருந்ததில்லையா? கூட்டாகச்சேர்ந்தாலும் மற்றும் கருவிகள் இருந்தால் மட்டுமே நீங்கள் உங்கள் உரிமைகளுக்காக ஊரவர்கள்செலவில் போரடுவீர்களோ? – ஆனாலும் நான் ஏதோ ஒருவகையில் இன்றும் அரசியல் செய்துகொண்டுதான் இருக்கிறேன் – கருவியால் அல்ல கருத்தாலும் அறிவாலும் மட்டும்தான். இதையும் நான் “புளட்”டில் தான் கற்றுக்கொண்டேன். உங்கள் மன அமைதிக்காக கீழே ஒரு கொசுறுச்சமன்பாடு.

  30 வருட பழமைவாய்ந்த இலங்கைத்தமிழரின் ஆயுத அரசியல்போராட்டத்தின் வரலாற்றில் எம்மவர்களுக்கிடையேயுள்ள சில சமன்பாடுகளை இங்கு தருகிறேன்.

  புலி எவரையாவது(அவர்கள் உறுப்பினர்கள் உட்பட) சுட்டுக்கொன்றால் – அது தேசத்துரோகத்திற்கு தமிழ்மக்கள் சார்பாக வளங்கப்பட்ட தண்டணை!
  மாற்றுஇயக்கதினரை தாக்கவந்த புலிகளை திருப்பி தாக்கியழித்தால் – அது ஒட்டுப்படைகளின் தேசத்துரோகமான வன்முறை!
  புலிகள் தமிழ்மக்களிடம் கப்பம் வாங்கினால் அது மண்மீட்பு நிதி – இதையே மாற்று இயக்கத்தினர் தமது தோழர்களின் பாதுகாப்புக்காகவும், அவர்களது உயிரின் வாழ்விற்காகவும் செய்தால் அது ஒட்டுக்குளுக்களின் சூறையாடல்!
  புலிக்கு ஆதரவான புத்திஜீவிகள் இயற்கையாக இறந்தால் அவர்கள் தேசப்பற்ரார்களும் மாமனிதர்களும் – மாறாக மற்றையவர்கள் இறந்தால் தேசத்துரோகிகளும் ஒட்டுக்குளுக்களில் ஒருவரும்!
  இப்படிப்பல,………….

  Reply
 • விளங்காமுடி
  விளங்காமுடி

  தளபதி!
  சமன்பாடு என்றாலென்ன? எங்கே உங்கள் சமன்பாடுகள்?

  Reply
 • மாயா
  மாயா

  //இயக்கத்திற்குப்போய் PLO and UP training எடுத்தவர்கள் தங்களை தமிழர்களின் மீட்பர்களாக இன்றும் கதைவிட்டுத்திரிகிறதை ஒப்பிடும்பொழுது நான் ஒரு சின்னப்பயல்தான். யார் உங்களுக்கு போதித்தார்கள் நீங்கள் உங்களுடைய தனிமனித அல்லது சமூகவிடுதலையை வென்றெடுக்க “புளட்”டில் இருந்துதான் போராட வேண்டுமென்று. “புளட்” நீங்கள் தனிமனிதனாக போராடுவதற்கானஅறிவையும், பயிற்சியையும்தான் உங்களுக்கு தந்தது என்று ஏன் நீங்கள் உதிரிகளாகும்வரை உணராமலிருந்தீர்கள்? – Thalaphathy //

  தளபதி ஏதோ மேஞ்சு திரிஞ்சது எழுத்துக்களில் தெரியுது. உள்ளே இருந்தவனுக்குத்தான் தெரியும் பட்ட வேதனை. உள்ளே இல்லாத உங்களைப் போன்றவங்களுக்கு அது தெரியாது. பீஎல்ஓவுக்கும்> ஊபிக்கும் என்ன காசு மரம் புடுங்கவா போனாங்கள்? எவரும் உதிரிகளாகும்வரை உணராமலிருக்கவில்லை. பின்தள மாநாட்டிலிருந்து அத்தனையையும் உடைத்தெறிந்து விட்டே தோழர்கள் வெளியேறினார்கள். தலைமைக்கே தாக்கு பிடிக்க ஏலாமல் போனது. உங்களுடைய எழுத்துகள் நேர்மையான போராளிகளையும் கொச்சைப்படுத்துகிறது. அந்தவகையில் நானே சொல்வது உண்மையாக படுகிறது. உங்களுக்கு பலிகளைப் பற்றித் தெரிந்தளவு> புளொட்டைப் பற்றித் தெரியவில்லை. அதை அழகாக சமன்பாடாக எழுதி முடித்திருக்கிறீர்கள். உங்களை அடையாளப்படுத்தியதுக்கு நன்றி.

  Reply
 • Thalaphathy
  Thalaphathy

  விளங்காமுடி அவர்களுக்கு!
  உங்களுக்கு கணிதபாடம் போதிப்பதற்கு தேசம்நெற் சரியான இடமல்ல. நான் Maths, Physics, Chemistry என்று உங்களுக்கு Private tution சொல்லித்தர தயாராகவே உள்ளேன். கட்டணத்தை செலுத்தியபின் நீங்களும் கொஞ்சம் கணக்குப்படிக்கலாம்.

  நண்பர் அஜீவனுக்கு!
  நான் மேய்ந்து திரிந்தபடியால்த்தான்(வெள்ளாடு மாதிரியல்ல) உங்களின் இயலாமையையும், சாட்டுப்போக்குகளையும் ஆணித்தரமாக முன்வைக்கிறேன்!. உமாமகேஸ்வரனுக்காகவா நீங்கள் “புளட்”டுக்கு போனீர்கள்? போரடவென்று போனவன் இன்றுவரை ஏதோ ஒருவிதத்தில் போரடிக்கொண்டுதான் இருக்கிறான்.

  Reply
 • மாயா
  மாயா

  தளபதி ; நான் எழுதியதை ஏன் இன்னொருவர் மேல் போடுகிறீர்கள். உங்கள் சமன்பாடு குறித்தே எழுதினேன். அதை விளக்குங்கள் .

  Reply
 • palli
  palli

  //::பல்லி எனக்கு மறதிநோய் இருக்கிறதோ தெரியாது. //
  இருக்கு என தான் நினைக்கிறேன், தேடுங்கள் கிடைக்கும்; தளபதி நாம் இயக்கத்துக்கு போகவில்லை என்பதால் போனவர்களை இழிவாய் பேசுவது அழகல்ல, அஜீவன் இன்று ஒரு சினிமா சார்பான தொழிலாளியோ அல்லது; முதலாளியாகவோ இருக்கலாம்; ஆனால் அவர் அன்று கழகத்திடம் ஆயுதம் இல்லாத காலத்தில் நிகெரவொட்டியா(உச்செரிப்பு சரியோ தெரியவில்லை;) தாக்குதலில் ஒருவர்: மிகவும் சுலபமாக ஒரே நேரத்தில் பல தாக்குதலை செய்தார்கள். அத்தனையும் வெற்றி; ஆனால் அந்த பந்தா எதுவும் அவரிடம் நான் இன்றுவரை பார்த்ததில்லை; ஆனாலும் அவர்கள் கூட ஒரு சகோதர யுத்தத்தை விரும்பாமலும் தலமையின் தவறாலும் விலகிவிட்டனர் என சொல்லும்போது அதை எப்படி நாம் மறுக்க முடியும்; மாயா சொன்னது போல் கழகத்தின் முக்கியமானவர்கள் விலகிபோனதே கழகத்தின் தோல்விக்கு காரணம் என்பது என் கணிப்பு; இதே தேசத்தில் படித்தேன் ,அதை பலமுறை திரும்ப நான் எழுதியும் உள்ளேன், கழகத்தில் இருந்த ஒருவர் இன்று நாஸாவில் தொழில்நுட்ப்பவாதியாக இருப்பதாக, அப்படியானால் அவரும் நிங்கள் சொல்வது போல் விளையாட்டாகவா இயக்கத்துக்கு போய் இருப்பார்; தலமைகளளோ அல்லது சந்தர்ப்பங்களளோ தவறியதுக்கு யாவரையும் குறை சொல்வதில் நியாம் இல்லை; பல்லி இருவர் பெயரை சொன்னது பலரை இந்த தளத்தில் உன்மையை எழுத வரவழைக்கவேதான்;

  Reply
 • nanee
  nanee

  புளொட்டில் இருந்தவர்கள் மட்டுமல்ல அனைத்து இயக்கங்களிலும் இருந்து வெளியேறிய பலர் இப்போது மிகவும் நல்ல நிலையில் இருக்கின்றார்கள்.ஒவ்வொறுஇயக்கமும் அதற்கென தனித்தன்மை கொண்டது.புளொட்டில் சேர்ந்து சில மாதங்களிலேயே பலர் உட் கட்சி ஜனநாயத்திற்காக போராட வெளிக்கிட்டு விட்டார்கள்.உடனேயே பலர் விட்டு வெளியேறியிருக்கலாம் ஆனால் ஒரு நல்ல தெளிவான பல தோழர்களை கொண்ட ஒரு இயக்கத்தை நாலு அராஜவாதிகளுக்காக காவுகொடுக்க அவர்கள் தயாராக இல்லை.இருந்தும் புறச்சூழ்நிலை அந்த சந்தர்பத்தை கூட அவர்களுக்கு கிடைக்காமல் பண்ணிவிட்டது.புறச்சூழ்நிலை என நான் சொல்வது ரோ,புலிகள்.இவர்களுடன் முட்டுக்கொடுக்க வேண்டிய தேவையானது உட் கட்சிப்போராட்டத்தை பெரிதும் பாதித்தது.தளபதி கூட எதையோ கிண்டதான் இப்படி எழுதுகின்றார் போல் எனக்கு படுகின்றது.இப்போ புளொட்டாக இல்லாவிட்டாலும் பழைய புளொட்டாக பலரை சந்தித்து சந்தோசமாக இருக்கின்றோம்.பள்ளிக்கூட பழைய மாணவர்களைப்போல்.

  Reply
 • nanee
  nanee

  மிக முக்கிய விடயம் 83 கலவரத்துடன் ஊதிப் பெருத்த இயக்கம் 84 ஆரம்ப காலக் கட்டத்திலேயே உட் கட்சிப்போராட்டத்தில் தொடங்கி புலிகள் மாதிரி கடைசிவரை பிழையான தலைமைக்கு துதிபாடிக்கொண்டும், அல்லது அராஜகத்திற்கு பயந்தும் விட்டுவிடு ஓடாமல், ஓடியவர்கள் கூட வாயை மூடிக்கொண்டிருக்காமல் பிழையான ஒரு தலைமையயும் இயக்கத்தையும் உடைத்துவிட்டுசென்றதுதான் உண்மையான நேர்மையான தெளிவான தோழர்களின் வெற்றி.அதில் எனக்கும் ஒரு சிறுபங்கு இருப்பது பற்றி இன்றும் பெருமைப் படுகின்றேன்.எப்போதோ அழியவேண்டிய பல தோழர்களைக் காத்ததும் மக்களை இந்த இழிவுக்கு கொண்டும் வராமல் காப்பாற்றியத்தற்கும் புளொட்டின் பல தோழர்களுக்கு நாம் இன்றும் மதிப்பு கொடுக்கின்றோம்.

  Reply
 • BC
  BC

  குசும்பு, நீங்கள் புளட்டில் இருந்தீர்களா?

  Reply
 • சீலன்
  சீலன்

  பின்னோட்ம் இடும் தோழர்களுக்கு வணக்கம்
  புளட்டின் அராஜகத்தைப்ப பற்றியும் அதன் செற்பாடு பற்றியும் பலரும் பல விதத்தில் தமக்கு தொரிந்த வற்றை பதிவில் ஏற்றுகின்றனர் இது வரவேற்க தக்கதும் மதிக்கப்பட வேண்டியதுமே. இருக்க தற்போது நானும்> எனது தோழர்களின் முயற்சியாலும் தமிழ் தேசிய ஆவணக் காப்பகம் என்ற ஒரு இணையப் பகுதியை ஆரம்பித்து அதில் எனது போராட்ட சுவடிகளை பி டீ எவ் (PDF) வடிவில் எற்றி வருகின்றோம் அதில் எமக்கு கிடைத்த எல்லா இயக்கங்களின் துண்டுபிரசுரகளும் வெளியீடுகளையும் ஏற்றியுள்ளோம். இதைவிட பன்மடங்கு ஆவணங்கள் புலம் பெயர் நாடுகளில் அங்காங்கே அவரவர் வீட்டின் மூலைகளில் புதைந்து கிடக்கின்றன. புளட்டின் ஆவணங்கள் நான் அறிந்த வரை ஐக்கியராஜியத்திலும் பிரான்ஸ் ஜேர்மனி போன்ற இடங்களில் வீடுகளின் முகடுகளில் இருக்கின்றன. அவற்றை எமக்கு பெற்றுத்தருவதற்கான ஆவணை உங்களால் செய்ய முடியுமா? அல்லது உங்களிடம் இருக்கும் ஆவணங்களையாவது எமக்கு தந்துதவுவீர்களா? நீங்கள் தரும் ஆவணங்கள் நீங்கள் எந்த வகையில் தருகின்றீர்களோ அதே போன்று மீளவும் உங்களிடம் கையளிக்கப்படும் என்பதையும் நான் உறுதி செய்கின்றேன்.
  தொடர்புகளுக்கு :tamilarangam@tamilarangam.net
  சீலன்

  Reply
 • மாயா
  மாயா

  // உட் கட்சிப்போராட்டத்தில் தொடங்கி புலிகள் மாதிரி கடைசிவரை பிழையான தலைமைக்கு துதிபாடிக்கொண்டும், அல்லது அராஜகத்திற்கு பயந்தும் விட்டுவிடு ஓடாமல், ஓடியவர்கள் கூட வாயை மூடிக்கொண்டிருக்காமல் பிழையான ஒரு தலைமையயும் இயக்கத்தையும் உடைத்துவிட்டுசென்றதுதான் உண்மையான நேர்மையான தெளிவான தோழர்களின் வெற்றி.அதில் எனக்கும் ஒரு சிறுபங்கு இருப்பது பற்றி இன்றும் பெருமைப் படுகின்றேன்.எப்போதோ அழியவேண்டிய பல தோழர்களைக் காத்ததும் மக்களை இந்த இழிவுக்கு கொண்டும் வராமல் காப்பாற்றியத்தற்கும் புளொட்டின் பல தோழர்களுக்கு நாம் இன்றும் மதிப்பு கொடுக்கின்றோம். – nanee//

  இக் கருத்தை எவராலும் மறுக்க ஏலாது. புளொட்டில் உட்கட்சி போராட்டம் என்பது தவறான வழி முறைகளுக்கு எதிராக தோழர்கள் குரல் கொடுத்ததே. அன்றைக்கு அவர்கள் குரல் கொடுக்காமல் இருந்திருந்தால் > இயக்கத்தை உடைத்து விட்டு வெளியேறாமல் இருந்திருந்தால் அத்தனை தோழர்களும் அநியாயமாக செத்து மடிந்திருப்பார்கள். எனவே பல்லி குறிப்பிடுவது போல நாசாவிலும் வேலை செய்யும் தகுதியுள்ள சுனில் போன்ற இளைஞர்கள் இருந்த இடமே தெரியாமல் போயிருக்கும். அதே போல புலத்தில் பலர் இருக்கிறார்கள். செயலதிபரை> எல்லாம் பெரியய்யாவுக்காக என்று பேக்காட்டினது மாதிரி ஒரு குழுவினர் உருவாவதை புளொட் தோழர்கள் தடுக்க வேண்டும். இனி ஆயுதப் போராட்டம் அங்கே சரியே வராது. சனநாயகம்தானே> பகிரங்கமாக செய்யுங்கோ> இல்லாட்டி பேசாம இருங்கோ. தாயகத்தில் உள்ள மக்கள் தங்களை பார்த்துக் கொள்ளுவாங்கள்.

  1983க்கு பிறகு வெளிநாடுகளில் இருந்து போன சிலர்தான் அன்றைய இளைஞர்களை படுகுழியில் தள்ளினார்கள். முடிந்தால் ஏதாவது உதவுங்கள். உங்கள் புண்ணாக்கு அரசியல் சித்தாந்தங்கள் அந்த மக்களுக்கு இன்னொரு தூக்கு கயிறாகவே இருக்கும். கயிறு கொடுக்கிற வேலை இனியும் வேணாம்.

  Reply
 • palli
  palli

  //இவை அனைத்தும் நண்பர் தந்த தகவல்தான் தவறாயின் பல்லி பொறுப்பல்ல;//
  இதுவரை கழகம் உள்கொலை என்பதே மிகபெரிய குற்றசாட்டு; அதில் உன்மையும் உண்டு; ஆனால் இதில் நான் பல ஆண்டுகளுக்கு முன்பு கேள்வி பட்டேன் கழகத்தில் 213பேர் உள்கொலையால் இறந்ததாக, இந்த கணக்கை கொடுத்தவர் யார்?? அல்லது அதுக்கான விபரங்கள் அல்லது ஆவணங்கள் உண்டா? என நான் பல இயக்க தோழர்களிடம் கேட்டுவிட்டேன், அவர்கள் அப்படிதான் சொல்லுகிறார்கள் ஆனால் விபரம் தமக்கு தெரியாதெனவும் சொல்லுகிறார்கள்? நான் கேட்ட கழகத்தினர் பெரிய பொறுப்புகளில் இருந்தவர்கள். இதில் நாலு அனைத்து முகாம் பொறுப்பாளர்; ஒரு அரசியல் ஆலோசகர் ஏன் இன்று நாஸாவில் இருக்கும் சுனில் உட்பட எவருக்கும் சரியான விபரங்கள் சொல்ல முடியவில்லை; அல்லது மறைத்தார்களோ நான் அறியேன்; எனது கேள்வி இப்படி முக்கிய பதவிகளில் இருந்தவர்க்கே தெரியாமல் அத்தனை கொலையையும் செய்தது யார்? எங்கு? எப்படி? அப்படியாயின் இறந்த நபர்கள் பெயர் ஊர் தெரியுமா?? இருப்பினும் எனக்கு தகவல் தந்த நண்பர் (இன்று கழகமல்ல) தந்த விபரங்கள் சிலதை தருகிறேன்; அதன்படி அவர்கூட தம்முடன் வந்தத்தில் யார் யார் இப்படி துரோகதனமாய் கொல்லபட்டனர் என அறிவதில் ஆர்வமாய் உள்ளனர், அதற்க்கு இந்த வாததளம் ஒரு சிறு பங்காவது உதவும் என்பது என் நிலைபாடு; உள்கொலை விபரம் நண்பர்களே தெரிந்தவர்களை எழுதுங்கள். சில கடந்தகால தோழமை நண்பர்கள் உங்களுக்கு கிடைக்ககூடும்,

  உமா மகேஸ்வரன்; கொழும்பு;
  காக்கா;;;இந்தியா
  மதன்;;;; இந்தியா
  சீலன்;;; இந்தியா
  சந்ததியார்;;; இந்தியா
  விஜயகுமார்;; இந்தியா
  வெள்ளை,,, இந்தியா
  அச்சுவேலி(நாலுபேர்) இந்தியா
  அகிலன்; கிழக்கு
  செல்வன்;;கிழக்கு
  ஆதவன், வவுனியா
  கட்டுவான் சிறி;;; வவுனியா
  சுரேஸ்;; சென்னை
  காளித்;; சென்னை
  றொபின்ஸன்;;சுவிஸ்(பெயர் சரியோ தெரியவில்லை)
  தாஸன் ,,, வவுனியா
  மாணிக்க தாஸன்;;; வவுனியா

  தொடருமா,,,?? கழக உள்கொலை பட்டியல்?

  Reply
 • nanee
  nanee

  முதலில் சுனில் நாசாவில் இல்லை.யார் இந்தக் கதை இட்டு கட்டியது.
  திக்கு திக்காக நடந்ததில் முழுமையாக ஒரு பட்டியலை எடுப்பது மிக கஷ்டம் என்றே நினைக்கின்றேன். தள மகாநாடு முடிய பின் தள மாநாடுக்கு ஒரு அறிக்கை தயாரித்தார்கள் அதில் முகாமில் நடைபெற்ற கொலைகள் மாத்திரம் 73 இருந்ததாக நினைவு. அதைவிட முதலில் நடந்தவை வெளியில் நடந்தவை என மொத்தம் எப்படியும் 100 வரும். படு பாவிகள். ஒரு சில அரசியல் கொலைகளித்தவிர மிகுதி அனைத்தும் அப்பாவிகள். கேடு கெட்ட இனம் விடுதலையும் மண்ணாங்கட்டியும் இப்படியே அழிந்துபோவதே நல்லது.

  Reply
 • சீலன்
  சீலன்

  உட்கொலை விபரம் எனக்குத் தெரிந்தது

  விம்மி
  கனடா
  சேசலிசம் சிறி
  ஆணந்தன்
  6 பயிற்சிக்காக வந்த தோழர்கள் (4 பேர்அல்ல )
  சசி
  ரத்தினம்

  Reply
 • மாயா
  மாயா

  பல்லி ; இப்படி கொலை செய்யப்பட்டவர்களுடைய தொகை குத்து மதிப்பே தவிர> இதைவிட அதிகமாகவும் இருக்கலாம். 213 என்பது தோழர் முகந்தன் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டதும்> இயக்கத்தை விட்டு வெளியேறும் போது ஒரு சில தோழர்களால் > அப்போது வெளிநாடுகளில் இருந்து உதவி செய்த தமிழர்களுக்கு> புளொட் அராசகம் என தெரியப்படுத்தியவற்றிலிருந்து அறியப்படுவது.

  அன்று தமிழ்நாட்டிலிருந்த முகாம்களில் இருந்தவர்களது > உண்மையான பெயரோ > ஊரோ எவருக்கும் தெரியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இயக்கப் பெயர் இருந்தது. கழகம் உடைந்து சிதறிய பின்னரும் > சேர்ந்து வெளியேறியவர்களுக்கு மட்டும் தெரிய வந்தது. இப்பவும் கழகத்தில் இருந்தவரது சொந்தப் பெயரைச் சொன்னால் விளங்காது. இயக்கப் பெயரைச் சொன்னால் உடனே அடையாளம் சொல்வார்கள். இதனால் ஏதோ ஒரு வகையில் நெருக்கமாக இல்லாவிட்டால் ஒன்றாக பழகியவர்களுக்கு மட்டுமே இப்போதும் இவர்களை பற்றித் தெரியும். புளொட்டில் இருந்து வெளியேறிய அதிகம் தோழர்கள் இப்பவும் அமைதியாகவே இருக்கிறார்கள். எனவே மிக முக்கியமானவர்களாக இருந்தவர்களும் பகிரங்கமாக வருவதில்லை. தமது நண்பர்களுடன் சந்தித்துக் கொள்வதும் > தொடர்பில் இருப்பதும் இருக்கிறது. சுட்டுக் கொண்ட மீயாவ் > அடுப்படிப் பக்கம் போகாது என்பது போல இவங்களுடைய நிலமை.

  இன்னொன்று பீ முகாம் அந்த நாட்களில் மகிவும் பிரபல்யம். அங்கு மட்டுமில்லை ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு மாற்றுவதாக சொன்னவர்களும் இல்லாமல் போனார்கள். இதுவும் பலருக்கு தெரியாது. அவர் வேறு முகாமுக்கு போயிட்டார் என்பார்கள். அவர் உலகத்தை விட்டே போயிட்டார் என்பது யாருக்கும் தெரியாது. கனடா என்ற ஒரு தோழர் புலிகளின் ஊடுறுவல் என கொல்லப்பட்டார். அவரை நாட்டுக்கு அனுப்புகிறோம் என்றே அழைத்துப் போய் கொலை செய்தார்கள். இவர் கனடாவிலிருந்து இயக்கத்துக்கு வந்தவர். இவர் செய்த குற்றம் > அவர் சகோதரர் ஒருவர் புலியில் இருந்தது. அவர் சகோதரர் அனுப்பிய ஜட்டியால் வந்த சாவு. சாதாரணமாக தோழர்களுக்கு கடிதத் தொடர்பு வைத்துக் கொள்ள முடியாது. அப்படி வரும் கடிதங்கள் சென்னை > வடபழனியிலிருந்த மாதவன் (பிரான்சு) வீட்டுக்கே வரும். கனடாவுக்கு வந்த பார்சலில் அவருக்கு அவரது சகோதரர் ஜட்டிகளை அனுப்பியிருந்தார். அதை அனுப்பியவர் யார் என தேடியதில் கனடாவின் சகோதரர் புலி ஆதரவாளர் என தெரிய வந்தது. கனடா கொல்லப்பட்டார். ஜட்டிக்கே கொலை செஞ்சவங்கள் என என் நண்பர்கள் வெறுத்து சொன்ன நாட்களை என்னால் இன்னமும் மறக்க் முடியாது. இப்படியான அநியாயக் கொலைகள் …………

  சந்ததியார் பிரச்சனையில்தான் அதிகமானவர்கள் கொல்லப்பட்டார்கள். இவை குறித்து முகாம்களில் இருந்து சென்னை வந்தவர்கள் சேர்ந்து சொன்ன கதைகள் இரவின் தூக்கத்யைே கெடுக்கும். எல்லாம் டிராகியுலா கதை மாதிரியானது. பலர் சைகோவாக இருந்தார்கள். இவற்றுக்கு தலைமை தாங்கியவர்களில் சங்கிலி > வாமர் > செந்தில் > இடி > சவுதி ……..( சிலரது பெயர்கள் நினைவுக்கு வரவில்லை) போன்றவர்கள் முக்கியமானவர்கள். இந்தக் கொலைகாரர்களை இன்டலிஜன்சு என சொன்னது பெரிய பகிடி. மாணிக்கதாசன் இந்தியாவிலிருக்கும் போது நேர்மையானவராக பார்க்கப்பட்டவர். பின்னர் மோசமாக மாறினார். சந்ததியார் கொலையில் தாசன் ஈடுபடவில்லை.

  ஒவ்வொரு முகாமிலிம் இருந்தவர்களுக்கு அந்த முகாமில் நடப்பது தெரியும். இருந்தாலும் யாரிடமும் அதைச் சொல்ல வாய் திறக்கவில்லை. பெரியவருக்கு எதிராக கதைப்பவர் போல ஒருவர் ஒவ்வொரு முகாமிலும் இருந்தார்கள். அவர்கள் பெரியவருக்கு சார்பானவர்கள். அவரோடு சேர்ந்து முகுந்தனுக்கு எதிராக கதைத்தால் அவருக்கு சங்கிலி தேத்தண்ணி கொடுப்பார். இது யுதாசு யேசுவைக் காட்டிக் கொடுத்தது போல சங்கிலி ஒருவரை அடையாளப்படுத்தும் ஒரு டெக்னிக். இந்த வேலையில் செந்தில் (ம.கு.உறுப்பினர்) குழு நம்பர் வண். இவர் நாட்டுக்கு போன பின் முகுந்தனுக்கு எதிராக செயல்பட்டு > பின்னர் அங்கு கழகத்தால் கொல்லப்பட்டார். புளொட்டில் இருந்த பலர் இலங்கை ஊடகங்களில் இருக்கிறார்கள். பாதுகாப்பக்காக இவர்களது பெயர்களை சொல்ல முடியாமலிருக்கிறது. உண்மையான இயக்க பற்றாளன் தன்னை மேன்மைப்படுத்த முயல மாட்டான். அந்தவகையில் ஆயிரக் கணக்கான தோழர்கள் அமைதி காக்கிறார்கள். அதுவும் அந்த நாட்டின் அமைதிக்கு நல்லதாகவே நினைக்கிறேன்.

  புளொட் தோழர்கள் பாதை தவறுகிறதே என்று தெரிந்ததும் அதை உடைத்தால்> பல ஆயிரம் உயிர்கள் காக்கப்பட்டன. இல்லாவிட்டால் அத்தனையும் இன்னொரு முள்ளிவாக்காலாக ஆயுதமும் இல்லாமல் புலி வாய்களுக்கு இரையாகியிருக்கும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் என்னிடம் இல்லை. புலத்தில் அரசாங்க உதவிப் பணத்தில் வாழ்ந்து கொண்டு அரசியல் நடத்தும் சிலரிடம் அவதானமாக இருக்க வேண்டும். இவர்களின் முந்திய சரிதுஇதிரங்களில் சில எமக்கு தெரியும். தனக்காக தானே உழைத்து வாழாத இவர்கள் > மக்களுக்காக உழைக்கப் போவதாக சொல்வது போன்ற பகிடி போல > வேற எந்தப் பகிடியும் இவ்வருடத்தில் இருக்காது.

  Reply
 • Thalaphathy
  Thalaphathy

  இங்கு எழுதப்படும் பதிவுகளுக்கப்பால் ஒருசில கேள்விகள் எனது நண்பர்கள் மத்தியிலும் எழுந்தன அவையாவன:

  புலிகளால் இலக்கு வைக்கப்படாத இலங்கையிலுள்ள கட்சித்தலைவர்களில் ரணில் விக்கிரமசிங்கவும்(UNP), தற்போதைய “புளட்”டின் தலைவர் சிர்த்தார்தனும் தானென தெரியவந்துள்ளது. அப்படியானால் புலிகள் “புளட்”டை நம்பினார்களா? அல்லது புலிகள் தமது இலக்கை அடைவதற்காக தற்போதைய “புளட்”டை சிர்த்தார்தன் மூலமாக மாற்றியமைதார்களா? – ஏனனில் சிர்த்தார்தன் “புளட்”டிற்கு தலமைதாங்கத் தொடங்கிய காலத்திலிருந்து புளட்டிற்குள் இருந்த புலிகளுக்கெதிரான சக்திகள் குண்டுகளால் கொல்லப்பட்டன!

  Reply
 • மாயா
  மாயா

  // முதலில் சுனில் நாசாவில் இல்லை.யார் இந்தக் கதை இட்டு கட்டியது. – nanee//

  தற்போது சுனில் > நாட்டில் என்று அறிகிறேன்.

  Reply
 • நந்தா
  நந்தா

  தளபதியின் சந்தேகம் சரியானதே! சித்தார்த்தன் வேலுப்பிள்ளைக்கு மலர் வளையம் வைத்தநிகழ்வு அவர் புலிகளினால் நியமிக்கப்பட்டவர் என்பதை ஊர்ஜிதம் செய்கிறது!

  சித்தார்த்தனின் தந்தை தர்மலிங்கத்தையும், ஆலாலசுந்தரத்தையும் போட்டுத் தள்ளிய லண்டன் கும்பல்களே ஆறுதல் பரிசாக சித்தார்த்தனுக்கு புளட் தலைமையை வழங்கினார்கள்.. அதனால்த்தான் வவுனியாவில் புளட் இயக்கத்துடன் தொடர்பாக இருந்த சாதாரண மக்கள் கூட புலிகளால் அடையாளம் காணப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

  தற்போதைய புளட் புலிகளின் பினாமிதான் என்பதில் எனக்கு சந்தேகம் கிடையாது!

  தளபதியின் கேள்வியை நான் முன்னர் தேசத்தில் எழுப்பியிருந்தேன்!

  Reply
 • palli
  palli

  //சித்தார்த்தனின் தந்தை தர்மலிங்கத்தையும், ஆலாலசுந்தரத்தையும் போட்டுத் தள்ளிய லண்டன் கும்பல்களே ஆறுதல் பரிசாக சித்தார்த்தனுக்கு புளட் தலைமையை வழங்கினார்கள்.. //
  இவர்களை போட்டது ரெலோவா அல்லது புலியா?? சித்தார்த்தன் தருமலிங்கத்தின் மகனா,,? அல்லது வளர்ப்பு மகனா?? ஆனாலும் சித்தார்த்தனுடன் புலிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்பது எனக்கும் மாணிக்கதாசன் கொலைக்கு பின் நந்தா போல் சந்தேகமே;;??

  //6 பயிற்சிக்காக வந்த தோழர்கள் (4 பேரல்ல )
  சசி
  ரத்தினம்//
  இதில் பல்லி நால்வர் பெயரை குறிப்பிடாத போது எப்படி சசி, ரத்தினம் தான் மிகுதி இருவரும் என நீங்கள் இனம் காட்டினீர்கள்? இந்த ஆறு பெயரில் தப்பியவர்கள் குகன்; சூட்டி இருவருமே புலம்பெயர் தேசத்தில் இருப்பதாக சொல்லுகிறார்கள்? விபரம் தேவைபடில் அன்றய அச்சுவேலி பொறுப்பாளர் ரூபனிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம், அவர் இப்போது இந்தியாவில் திருமணம் முடித்து உள்ளார், அவரும் தற்போது கழகத்தில் இல்லை என கேள்வி,

  // முதலில் சுனில் நாசாவில் இல்லை.யார் இந்தக் கதை இட்டு கட்டியது. -நனே//
  கனடாவில் உள்ள யாராவது ஒரு கழக தோழர் இதை சொன்னால் பல்லியும் நம்புவேன், காரணம் கனடாவில் சுனிலின் மிக நெருங்கிய நண்பரே இந்த தகவலை தந்தார்;

  //அப்படியானால் புலிகள் “புளட்”டை நம்பினார்களா? //
  சரியாக தெரியவில்லை ஆனால் எனது கிராமத்தில் கூட கழககாரரை புலிகள் தீண்டவில்லை, இது குழவி கூட்டுக்கு கல் எறிய படகூடாது என்னும் தத்துவமாக கூட இருக்கலாமோ என நான் நினைத்தேன்;

  //திக்கு திக்காக நடந்ததில் முழுமையாக ஒரு பட்டியலை எடுப்பது மிக கஷ்டம் என்றே நினைக்கின்றேன்.//
  அதனால் ஒரு குத்துமதிப்பாய் உயிர்களை ஏலம் விடலாமா?? யார் யார் இறந்தார்கள் என்னும் உன்மை தெரிய வேண்டாமா? இது கழக அக்கறை அல்ல; இறந்த தோழர்கள் விபரம் அறியும் அல்லது ஏக்கம் என நினையுங்கள் ?

  //புளொட் தோழர்கள் பாதை தவறுகிறதே என்று தெரிந்ததும் அதை உடைத்தால்> பல ஆயிரம் உயிர்கள் காக்கப்பட்டன//
  இது நிஜமான உன்மைதான், காரனம் என் கிராமத்திலும் பலர் கழகமென திரிந்தார்கள். ஆனால் புலியின் கொலை வேட்டையில் யாரும் சிக்கவில்லை, அதுக்கு கழக உடைவே காரணம் என சொல்வார்கள்.

  //விம்மி///
  இவர் எங்கு எப்போது கொல்லபட்டார் என சரி பார்க்கவும்; கழக விம்மி ஒருவர் கே கே நகரில் 1987ல் மிக பெரிய மற்ற வியாபாரியாக இருந்தார்;

  நான் ஒருமுறை ஜெயபாலனிடம் என்னிடம் கழக தகவல்கள் நண்பர்கள் மூலம் சேகரித்து வைத்துள்ளேன் அதை உங்கள் தளத்தில் போடலாமா என கேட்டேன், அதுக்கு அவர் என்னை அறிமுகம் செய்யும்படி கேட்டார்; அந்த சூழ்னிலையில் என்னால் என்னை அறிமுகம் செய்ய முடியவில்லை, அதனால் அதை அப்படியே விட்டு விட்டேன்; இப்போது இதை சரியான நேரமாக கணித்து எனக்கு தெரிந்த அறியகூடிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்; எனது பதிவு கழக வரலாறு அல்ல கழகத்தால் காணாமல் போனோர் தேடல் மட்டுமே; இது காலபோக்கில் மற்றய அமைப்புகள் சார்பாயும் தொடரலாம்; அத்துடன் பலருக்கு சிலரை அறிமுகம் செய்யவும் இது உதவலாம்; கழகத்தில் இருந்தவர்கள். உங்கள் முகாமில் யார் யார் கொல்லபட்டார்கள்? என்பதை சொல்லுங்கள்? நண்பர்களாய் விவாதிப்போம் சரியான தகவலை வெளிவர முயர்ச்சிப்போம்,

  Reply
 • Jeyarajah
  Jeyarajah

  இயக்கத்தில் இருந்த யார் எழுதினாலும் ஜயர் உட்பட உள்ளுக்குள் நடந்த கொலைகள் பற்றியும் சந்தேகப்பார்வை பற்றியுமே எழுதுகிறார்கள். இதற்குள் யார் யாரை கொலை செய்தார்கள் என்ற புள்ளிவிபரம் வேறை…..

  இலங்கை அரசுமீதான குற்றச் சாட்டுக்களிலும் பார்க்க இவர்களில் உள்ளுக்குள் நடந்த குற்றச்சாட்டுக்களே மேலதிகம். இவ்வளவு எமது அறிவுஜீவிகளையும் தமது உறவுகளையும் கொலை செய்த இந்த இயக்கங்கள் தோன்றியது வடுவா?? அல்லது வரலாறா??

  Reply
 • palli
  palli

  விடுபட்ட உள்கொலை???
  கண்ணாடி சந்திரன்
  கேசவன்
  தராக்கி
  இன்னும் தொடரலாம்;??

  இலங்கையில் கழகத்துக்காய் கொலை செய்த புண்ணியவான் இன்று அமெரிக்கா குடிமகனாம், விடுதலைதான் மூச்சென்ற கூட்டம் இன்று வெளிநாட்டில் உல்லாச ஆட்டம்;

  Reply
 • palli
  palli

  //வடுவா?? அல்லது வரலாறா??//
  வடுவாக நடந்த சாக்கடை சமாசாரங்கள் வரலாறாக போய் விடுமோ என்னும் ஜயம் பல்லிக்கு இருக்கு; அதனால் இது வடுவே என்பதை சுட்டி காட்டவே இந்த முயற்சி,

  Reply
 • நிசாந்தன்
  நிசாந்தன்

  இந்த தேசத்தில் எழுதியவர்கள் வயிற்றெரிச்சல் கொண்டவர்கள் என்பது மட்டும் புரிகின்றது. புளொட் அமைப்பின் சர்வதேச மகாநாடு பற்றி புளொட் இயக்கத்தின் இணையத்திலே வெளிவந்த செய்தியை வாசிக்காதவர்களும், புலி இருக்கும்வரை வாயை பொத்திககொண்டு புலிகளின் அராஜகத்திற்கு துணைபோனவர்களும், புலம்பெயர் தேசத்தில் புலிகளின் பயங்கரவாத அச்சுறுத்தல்களிற்கு முகம் கொடுத்து குறைந்தளவு ஜனநாயக தோற்றத்திற்கு வித்திட்ட புளொட் உறுப்பினர்களை கொச்சைப்படுத்துவது வேடிக்கையானது. இவ்வளவு காலமும் பெட்டி பாம்பாட்டம் கிடந்துவிட்டு இன்று புத்திசீல்கள் போல் வெளிக்கிட்டு கழகத்தின் வெளிநாட்டு தோழர்களை விமர்சிக்க இவர்கள் எந்தவிதத்திலும் தகுதியற்றவர்கள். தங்களது சொந்த பெயரையே கூறமுடியதவர்கள்.
  அல்லது அன்று புளொட் அமைப்பு தவறாக செல்கின்றது என்று கூறியவர்கள் தன்னிலும் ஒழுங்கான ஒரு தலைமைத்தவத்தை கொடுத்து தமிழீழ போராட்டத்தை தன்னிலும் வழிநடாத்த முடிந்ததா? உங்களை போன்ற சந்தர்ப்பவாதிகள் இருக்கும்வரை சிங்களவன் ஏன் கவலை படுவான்.
  இத்தனை ஆயிரம் உயிர்கள் பலிகொள்ளப்பட்டும், போராட்டம் திசை திருப்பப்பட்டுள்ளபோதும், அன்று இதன் தார்ப்பரியத்தை கூறிய அமரர் தோழர் உமாமகேஸ்வரனின் உரையை கேளுங்கள். உங்களை போன்றவர்கள் நீங்களும் வழி காட்ட மாட்டிர்கள் வழிகாட்டினவிலும் ஆயிரம் தவறுகளை கண்டு பிடிப்பதை தான் செய்ய முடியும். இவ்வாறு எழுதுவதை விட ஆரோக்கியமாக எதனையாவது செய்ய முடியுமா என்று சிந்தியுங்கள்.
  வவுனியாவில் புளொட் கால் ஊன்றி காலத்தில் இருந்து அந்த மக்களிற்கு ஆற்றிய உதவிகளை அறிய முயலுங்கள். ஏன் இறுதியாக வன்னி யுத்தத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களை வரவேற்று அந்த மக்களிற்கு உடனடியா உணவு பொதிகளையும், தண்ணீரையும் வழங்கி அந்த மக்களை வரவேற்ற தோழர்களையும், அதற்கு பக்க துணையால் வெளிநாடுகளில் இருந்து செயலாற்றிய தோழர்களின் அர்ப்பணிப்பகளையும் அறிய முயலுங்கள்.

  தவறுகள் நடக்காமல் இருப்பதற்கு நாம் ஒன்று புத்தர் அல்ல. தவறுகளை மட்டும் தூக்கி பிடிக்கும் நீங்கள். நல்ல விடயங்களை கண்டு கொள்ளாமல் விடுவதுதான் வேதனைக்குரியது. இந்தியாவில் இருந்திருக்கலாம், பி.எல்.ஒ.வில் பயிற்சி எடுத்திருக்கலாம் இவை இல்லை இன்றைய தேவை யார் ஆரோக்கியமாக சிந்தித்து செயலாற்றுகின்றார்களோ அவர்கள் போன்றவர்கள்தான் இன்றைய கழகத்திற்கு தேவை.

  வெளிநாட்டில் இன்று கழகத்திற்காக செயற்பட்டு கொண்டிருக்கும் ஒவ்வொரு தோழனும் தமது உதிரத்தை சிந்தியே பணியாற்றி கொண்டுள்ளனர். வீட்டிற்கள் இருந்து கொண்டு அவர் பழையவர் இவர் புதியவர் அவருக்கு அழைப்பு விடவில்லை இவருக்கு வெத்திலை வைக்கவி;ல்லை என்று கூறுவதை விடுத்து. இந்த மகாநாட்டிற்கான அழைப்பு இணையதளங்களில் அதுவும் கட்சியன் உத்தியோப+ர்வ இணையத்தில் வெளிவந்தபோது அந்த மகாநாடு குறித்த தகவல் தேவையானோர் தொடர்பு கொள்வதற்குரிய தொலைபேசி இலக்கங்கள் வெளியிடப்பட்டிருந்தன. உண்மையான அக்கறையுடையவர்கள் அதற்கு தொடர்பு கொண்டிருக்கலாம். அந்த மகாநாட்டில் கலந்து கொண்ட பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுதான் வந்தார்கள் என்பதையும் தேசத்தில் எழுதும் இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  நிசாந்தன்

  Reply
 • nanee
  nanee

  நான் பழைய புளொட் பற்றி கொஞ்சமாவது எழுதுகின்றேன் என்னுடன் தொடர்பிலுள்ள பல தோழர்களுக்கு இப்போ இவைகள் பற்றி எதுவித அக்கறையுமில்லை. இன்னமும் நாடுபற்றியும் நாட்டுமக்கள் பற்றியும் மிகுந்த அக்கறையுடன் தான் இருக்கின்றார்கள் ஆனால் பழையவகளை கிண்ட விருப்பமில்லை. சுனில், சுந்தர்லிங்கம், அதியன், பொன்னுத்துரை, செல்வராசா, சங்கர், பாலா(கரைப் பொறுப்பாளர்)மது, கதிர், ஜெகத், யுனிக், நேதாஜி, பவன், ஜீவன், பாபுஜி இப்படி பட்டியல் ரொம்ப நீளம். நான் எல்லோருடனும் நடந்தது நடந்துவிட்டது என்ற ரீதியில் பழகுவதால் பலருடனும் இன்றும் தொடர்பில் உள்ளேன்
  அதைவிட அஜீவன், மாயா அன்றும் இன்றும் என்றும் எனது உயிர் தோழர்கள். அப்படி ஏதும் ஆவணம் தயாரிக்கும் பட்சத்தில் உதவிசெய்ய தயாராக உள்ளேன்.

  Reply
 • nanee
  nanee

  சித்தார்த்தர் பற்றி முன்பே எழுதியிருந்தேன். கடைசிக் காலங்களில் என்ன நடந்ததோ தெரியாது ஆனால் நீங்கள் எழுதுவதுபோல் எதுவும் இல்லை
  மற்றது உமா, சித்தர், வாசு, கண்ணன், ராஜன், சங்கிலி, இவர்கள் எல்லோருடனுமுடனேயே கழகம் பிழையாகப்போகின்றது என முடிந்தவரை அவர்களுடனேயே விவாதித்திருக்கின்றேன்.
  டோனியிடம் கதைக்க வேண்டுமெனில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்தில் கூட முடியாது. ஆனால் வெஸ்ட் இண்டீசில் ஒரு சின்னதீவில் மட்ச் நடக்கும் போது சிம்பிளாக சந்திக்கலாம். அதே மாதிரி எனக்கு உமாவுடன் அனைத்து பிரச்சனைகளையும் தனியாக கதைக்கும் சந்தர்ப்பம் பல முறை கிடைத்தது. எல்லாவற்றிற்கும் அவர் ஒரு பதில் வைத்திருப்பது வேறு விடயம்.
  கனடாவின் கொலை பற்றி என்னுடன் நடந்தது முழுக்க அவர் பக்கம் இருந்து விளக்கினார். எங்களுக்கு என சொந்த புத்தி இருக்குத் தானே.
  இது இல்லாதாதால் தான் உலகம் முழுக்க தமிழன் அகதியாகவும் நாட்டில் அடிமையாகவும் அலைகின்றான்.

  Reply
 • BC
  BC

  //உங்களை போன்ற சந்தர்ப்பவாதிகள் இருக்கும்வரை சிங்களவன் ஏன் கவலை படுவான். // – நிசாந்தன்
  புலிகள் அடிக்கடி கூறும் அதே வசனம் புளட்டிடம் இருந்தும் வருகிறது.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  பி.சி: ///பல்லி – இருந்த மாயா குசும்பு போன்றவர்கள் அங்கு என்னதான் நடந்தது என எழுதினால்…//
  மாயா புளட்டில் முன்பு இருந்தது தெரியும். குசும்பு மாவை அண்ணையோடு இளைஞர் பேரவையில் இருந்தவர் என்று நினைத்தேன்/
  பிசி சொல்வதுபோல் இளைஞர்பேரவையில் இருந்த மையஅமைப்பாளர்களுள் நானும் ஒருவன் ஆனால் சேனாதியின் அரசியில் வெறும் பாராளுமன்ற ஆசனத்துக்கான ஒரு போராட்டமாக தேர்தல்களத்தில் உருவானபோது நான்:உமா: உமை: சந்ததி: செந்தில் இராசநாயகம் (முரளி -பிற்காலப்புலி: பரந்தன் ராஜன் என தீவீரவாதத்தைத் தழுவிக்கொண்டோம். தீவீரவாதத்திலும் பிளவுகள் வாய்சண்டைகள் சன்னங்களாக வெளிவரத்தொடங்கின.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  நானீ! சொந்வதைக் கவனத்தில் கொள்வது முக்கியம். இயக்கத்துக்குப் போனவர்கள் எல்லாம் சோறுதண்ணிக்காகப் போனவர்கள் என்ற சொல்பவர்கள் கேவல எண்ணம்கெண்டவர்கள். வசதியான குடும்பங்களின் செல்லப்பிள்ளைகள் கூட இயக்கத்தில் இருந்தார்கள் வதை பட்டார்கள் சுடுபட்டு இறந்தார்கள். இந்த அவச்சொற்களைச் சொல்லும் நாக்குக்களை எந்த நஞ்சு போட்டும் கழுவ இயலாது. விடுதலை வேட்கையில் வந்த குழந்தைகள் பட்ட துன்ப துயரங்கள் எந்தக் காட்டு நரிக்கும தெரியாது. இருந்தும் அவர்கள் போராடினார்கள். புளொட் புலி ஈ பி ஈபிடிபி ரெலே என எல்லா தலைமைகளையும் நாம் முழுமையாகக் குற்றம் சாட்டலாம் குறை கூறலாம். ஆனால் போராட என்று வந்த எவனையும் குற்றங்கூறவோ அல்லது குறைசொல்லவோ எவருக்கும் உரிமை கிடையாது. அரசியல் கொதிநிலையில் போராட்ட உக்கிங்கொண்ட காலந்திலும் சுறணையற்று இருந்தவர்கள் இன்று தட்டெழுத்தில் தந்துவமா பேசுகிறீர்கள்?

  Reply
 • Kusumpu
  Kusumpu

  பி.சி- /குசும்புஇ நீங்கள் புளட்டில் இருந்தீர்களா?/ புளட்டில் இருக்கவில்லை புளொட் புலிகளில் இருந்த பெரியவர்களுடன் இருந்தேன். எழுத்துகளுக்கிடையில் இருக்கும் உண்மையை நீங்களே கண்டடிவதே உசிதமானது.உங்களது நேர்மையான நேரடியான கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாதகாரணத்தால் என் உளவில் பதில்தான் இது.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  சீலனின் பதிவகம் விருப்புக்குரியதே புலத்தில் பல புழுகுள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இயக்கங்களில் இருக்காதவர்கள் எட்டியும் பார்க்காதவர்கள் தங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்பது போல் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பிரபா உமா பற்றி தட்டெளுத்துத் தபெலா அடிப்பவர்கள் இவர்களின் மூச்சுக்காற்றே படாதவர்கள். உமா பிரபா இயக்க அங்கத்தவர்களிடம் இருந்த தனிமையாகிய காலம் இயக்கங்கள் பெருத்துப் புடைக்க வெளிக்கிடும் போதே. சுருக்கமாகச் சொன்னால் சுந்தரத்தின் கொலைக்குப் பின்பு என்று சொல்லலாம். அதற்கு முன் சாதாரண மனிதர்களாக அசைவில் இருந்தார்கள்.

  ஜெயராஜ்! /இதற்குள் யார் யாரை கொலை செய்தார்கள் என்ற புள்ளிவிபரம் வேறை…..
  இலங்கை அரசுமீதான குற்றச் சாட்டுக்களிலும் பார்க்க இவர்களில் உள்ளுக்குள் நடந்த குற்றச்சாட்டுக்களே மேலதிகம். இவ்வளவு எமது அறிவுஜீவிகளையும் தமது உறவுகளையும் கொலை செய்த இந்த இயக்கங்கள் தோன்றியது வடுவா?? அல்லது வரலாறா??/

  தலமைப்பீடமோ தலைவரோ முடிவெடுக்தாலும் வெவ்வேறு கைகளினூடாகவே கொலைகள் செய்யப்பட்டன. இல்லையேல் இயக்கங்கள் பிடிபட்டிருக்கும். யார் யாரூடாக யாரைச் செய்தார்கள் என்றவிபரங்கள் எடுப்பது கடினமானது. தகவல்களைத் திரட்டி ஆயந்த முடிவெடுகப்பதைத் தவிர வேறு வழிகிடையாது. நீங்கள் கூறும் அறிவுயீவிகள் யார். இந்த அறிவுயீவிகள் தான் அறிவுகளைச் சீவி எறிந்த இளைஞர்களை உசுப்பேத்தி இனத்தையே நாசம் செய்து விட்டார்களே. மக்கள் பாமரராகவே இருந்திருக்கலாம் எந்தப்பாவமும் அறியாதவர்களாக வாழ்ந்திருப்பார்கள். அறிவுயீவகள் என்று கறுப்புக் கோட்டுகளைப் போட்டு நாட்டையே கரியாக்கி விட்டார்களே. முக்கியமாக செல்வநாயகமும் பொன்னம்பலமும். ஏன் சகல அறிவறுந்த அரசியல்வாதிகளுமே நாட்டை நார் நாராய் கிளித்து நாசமாக்கியவர்கள். இதுதான் வரலாறு

  பல்லி! /இவர்களை போட்டது ரெலோவா அல்லது புலியா?? சித்தார்த்தன் தருமலிங்கத்தின் மகனாஇஇ? அல்லது வளர்ப்பு மகனா?? ஆனாலும் சித்தார்த்தனுடன் புலிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்பது எனக்கும் மாணிக்கதாசன் கொலைக்கு பின் நந்தா போல் சந்தேகமே;;?/
  நல்ல கேள்வி. சித்தாத்தான் இலண்டனில் படித்தேறமுடியது புளொட்றேறியவர். ஒரு பரம இரகசியம் தெரியுமா பல்லி. ஏன் சித்தாத்தனை சந்தேகிக்கிறீர்கள் ஏன் முகுந்தனைச் சந்தேகிக்க வில்லை. பிரபாவையோ தலைமைப்புலிகளையோ போட சந்தர்ப்பமும் பலமும் இருந்தபோதும் ஏன் பெரிசு தடுத்தது என்ற கேள்வியை யாரும் ஏன் கேட்க முயலவில்லை. பாண்டிபசார் சுடுவாட்டுக்குப் பின் புலிகளால் பெரிசைச் சுட்டிருக்கலாம் ஏன் செய்யவில்லை. துரோகிகள் என்று சுடப்பட்டவர்களில் அனைவரும் ஒன்றுமறியாத அப்பாவிகளே. செத்துப்போன புளொட்டை மீண்டும் மீண்டும் எழுப்பி மரணதண்டனை கொடுகப்பதை விட இறுதியுத்தத்தில் பல உண்மைச்செய்திகளை ஆவனப்படுத்த வேண்டியிருக்கிறது. அதைச்செய்யுங்கள். ஒவ்வொருவரும் தமது உறவுகளுக்கோ உண்மை எனப்பட்டதை எழுதினால் அதை முக்கியமாக இடங்களில் பயன்படுத்தலாம்: புலிகள் இன்னும் எப்படி எமது மக்களைச் சுரண்டலாம் என்று நிற்கிறார்களே தவிர நடந்த முடிந்த யுத்தத்தில் நடந்த மனிதஉரிமை மீறல்கள் அப்பாவி மக்கள் பற்றி யாரும் சிந்தித்ததாகத் தெரியவில்லை. இதுபற்றி சிறிது சிந்தியுங்கள்.

  Reply
 • Thalaphathy
  Thalaphathy

  //சித்தார்த்தர் பற்றி முன்பே எழுதியிருந்தேன். கடைசிக் காலங்களில் என்ன நடந்ததோ தெரியாது ஆனால் நீங்கள் எழுதுவதுபோல் எதுவும் இல்லை//-nanee on November 6, 2010 3:38 am

  அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையென்றால், ஏன் நீங்களும் எனையவர்களும் சனநாயக நீரோட்ட அரசியலில் உங்களை இணைத்துக்கொள்ளவதில் என்ன தயக்கம். உமாமகேஸ்வரன் தலைவராக இருந்த காலத்தில் நடந்த உட்கொலைகளுக்கும் 20 வருடங்களுக்கு பின்னர் உள்ள தற்போதைய தலமைக்கும் கட்சிக்கும் எப்படி முடிச்சுப் போடலாம்?

  Reply
 • Kusumpu
  Kusumpu

  பிசி//உங்களை போன்ற சந்தர்ப்பவாதிகள் இருக்கும்வரை சிங்களவன் ஏன் கவலை படுவான். // – நிசாந்தன்
  புலிகள் அடிக்கடி கூறும் அதே வசனம் புளட்டிடம் இருந்தும் வருகிறது/ ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தான் இவை இரண்டும்:
  நிசாந்தன் கழகத்தின் மேல் இருக்கும் விசுவாசம் கழத்தின் பிழைகளை மறைக்கலாம் உணச்சி நிலையில் இருந்து கொண்டு முடிவெடுப்பது என்றும் தவறானதே. புளொட் இன்னும் தனது போக்கை சரியாக்கவில்லை. புளொட்டினால் பிடிப்ப்பட்டு கப்பம் கறப்கப்பட்டவர்கள் இப்போதும் வெளிநாடு வருகிறார்கள். புளொட்டினால் மனநோயாளியாக்கப்பட்ட பலரை நான் சந்தித்துக் கதைத்துள்ளேன். ஊரை அடித்து உலையில்போட்டுபர்கள் ஒருநாள் அன்னதானம் கொடுக்கும் செயல்தான் அகதிகளுக்கு உணவு. புளொட் தொடர்ந்தும் பிழையான வழியில்தான் பயணக்கிறது. ஜனநாயகம் என்று பேசும் புளொட் தொடக்கம் ஈபிடிபி வரை ஆயதங்களை இன்னும் போடவில்லை மாறாக மிரட்டல் கடத்தல் நடந்து கொண்டதான் இருக்கிறது.

  Reply
 • Thalaphathy
  Thalaphathy

  //நானீ! சொந்வதைக் கவனத்தில் கொள்வது முக்கியம். இயக்கத்துக்குப் போனவர்கள் எல்லாம் சோறுதண்ணிக்காகப் போனவர்கள் என்ற சொல்பவர்கள் கேவல எண்ணம்கெண்டவர்கள்.//-//இந்த அவச்சொற்களைச் சொல்லும் நாக்குக்களை எந்த நஞ்சு போட்டும் கழுவ இயலாது.//- Kusumpu on November 6, 2010 10:18 am

  நான் எழுதியதன் அர்த்தம் இயக்கங்களுக்கு போனவர்களெல்லாம் சோறு தண்ணிக்காக போனவர்களென்பதல்ல, மாறாக இந்த மக்களிடம் இயக்கத்திற்கு போனவன் ஒவ்வொருவனும் கடமைப்பட்டுள்ளான் என்பதாகும். மேலும் தமிழ் மக்கள் அனைவரும் 80 களில் இருந்த அத்தனை பிரச்சனைகயும் அதற்கு மேலான பிரச்சனைகளிலும் கிடந்து உழலுகிறார்கள். சரியான அரசியல் தெளிவின்மையால் பேய்க்காட்டுபவர்களை நம்மி தமது சந்ததிகளின் எதிர்காலத்தையே அழிக்கிறார்கள். இந்த மக்களுக்கு இப்பொழுதுதான் ஆதரவும் உதவிகளும் சிறந்த வழிகாட்டல்களும் தேவைப்படுகின்றன. இந்த நேரத்தில் கைகொடுக்க முன்வராத, இந்த இயக்கத்திற்குப்போய் தற்போது வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டு மற்றவர் செய்யும் ஒவ்வொரு முன்னெடுப்புக்களையும் ஏளனம் பண்ணிக்கொண்டு திரிபவர்களை வேறு எந்த வார்த்தைகளால் வர்ணிப்பது.

  சரி உங்களால் மற்றவர்களுடன் ஒத்தகருத்துடன் உடன்படாமல் செய்வது எது? – ஈகோ அல்லது நான்பழையவன் – எனக்குத்தான் எல்லாம் தெரியும் மற்றவர்களெல்லாம் புண்ணாக்குகள் என்ற நினைப்போ? எதுவென்பதை எழுதினால்தானே தெரியும். அதற்காகத்தான் வாசிப்பவர்களை எழுதத்தூண்டப்பண்ணும் வார்த்தைகளை தேர்ந்தெடுத்தேன்.

  Reply
 • padamman
  padamman

  இங்கு பின்ணோட்டம் விடும் சிலர் உண்மைகளை அறிந்து விடுவது நல்லது எனக்கு சந்தேகம் நண்பர்கள் சொன்னார்கள். சிலர் எதையாவது எழுதவேண்டும் என்பதை விடுத்து நல்ல விடையங்களை எழுதங்கள்

  Reply
 • palli
  palli

  //சுனில், சுந்தர்லிங்கம், அதியன், பொன்னுத்துரை, செல்வராசா, சங்கர், பாலா(கரைப் பொறுப்பாளர்)மது, கதிர், ஜெகத், யுனிக், நேதாஜி, பவன், ஜீவன், பாபுஜி இப்படி பட்டியல் ரொம்ப நீளம்//
  இதில் சொல்லிய எவருக்காவது 213 கொலை விபரம் தெரியுமா?? ஏன் உமா மகேஸ்வரனுக்கு கூட உள் இயக்க நபர்கள் இப்படி நடந்தது அப்படி நடந்தது என சொன்னதை வைத்துதான் அவரது கொலை கணக்கு இருக்குமே தவிர அவர் ஜமன் போல் கொப்பியா வைத்திருக்க முடியும்;

  சந்ததியார் கொலையில் இருந்தே கழகம் தடம் புரள தொடங்கியது; காக்காவின் கொலை மேல் மட்டத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் (காக்காவை) என்பதால் முகாம்களுக்குள் பெரிதாக பிரச்சனை வரவில்லை, ஆனால் சந்ததி இருந்த காலத்தில் மூன்று அல்லது நாலு முகாம்கள்தான் இருந்திருக்க முடியும் என சொல்லுகிறார்கள்? அவர் அனைத்து முகாம்களுக்கும் சென்றதால் அவரை அனைவருக்கும் தெரியும்; அவரது பிரச்சனை தொடங்கியது ஒரு சுகயீனம் இல்லாதவர்கள் தங்கும் முகாமில்; அதுக்கு பொறுப்பாய் இருந்தவர் தோழர் தங்கராசாவாக இருக்கலாம்: அங்கேதான் சந்ததியின் முகுந்தனுக்கு எதிரான அரசியல் தொடங்கியது, சந்ததியும் தோழர் தங்கராசாவும் மிக அழகாகவும் நழினமாகவும் அரசியல் பேசுவார்கள்? அதில் அந்த முகாமில் இருந்த ( 80 பேர் இருக்கலாம்) கூடிய பகுதியினர் இவர்கள் கருத்தை ஏற்றும் கொண்டனர், இதில் ஏன் சந்தத்திக்கு வில்லங்கம் வந்ததெனில் இங்கே இவர்களால் அரசியல் பயிற்ச்சி பெற்றவர்கள் (ராணுவ பயிற்ச்சி எடுக்க முடியாதவர்கள்) மற்றய முகாம்களுக்கு பயிற்ச்சியாளராக அனுப்ப சந்ததியார் முடிவு செய்தாராம்; இதை பெரியையா விசுவாசியான பிரதீபன் என்பவர் பெரியவருக்கு போட்டு கொடுக்க உடனடியாக அங்கிருந்து அனைவரும் மற்றய முகாம்களில் பிரித்து போடபட்டனர்: இதை பரந்தன் ராஜனே செய்ததாக செய்திகள்? அப்போது யாரும் கொல்லபட்டதாக செய்திகள் இல்லை, ஆனால் தோழர் உட்பட மொக்கு மூர்த்தி குழுவினால் மிகவும் சித்திரைவதை செய்ய பட்டனர், தோழர் இன்றும் இருப்பதாகவே சொல்லுகிறார்கள். ஆனால் இது செய்தியா அல்லது உன்மையில் இருக்கிறாரா என தெரியவில்லை; இதன் பின்பு சில காலம் சென்ற பின் சங்கிலி உளவுதுறை தொடங்கிய பின் சந்ததி டேவிட்ஜயா இருவரையும் போட முடிவு செய்ய பட்ட போது ராஜன் இதுக்கு இடையூறு
  செய்தால் சங்கிலியால் எதுவும் செய்ய முடியாது;( காரனம் ராஜன் அப்போது கழகத்தில் மிக சக்த்திவாய்ந்த நபராக இருந்தாராம்) அப்போது முகுந்தன் ராஜனை அழைத்து சந்ததியின் பிரச்சனையை சொல்லி இவரால் கழகம் சிதறபோகிறது இவரை உன்னால் மட்டுமே போட முடியும்; கழ நலன் கருத இதை செய்யவும் எனவும் அவருக்கு(ராஜனுக்கு இயக்க ஆலோசகர் பதவியும் வழங்கபட்டது) இங்குதான் முகுந்தன் தனது படிப்பறிவை காட்ட தொடங்கினார்; அரசியல் ஆலோசகர் யான் இயக்க ஆலோசகர் ராஜன்; இரு திறமைசாலிகளிடமும் எந்த பொறுப்பும் இல்லை; ராஜன் முகுந்தன் பேச்சின் படி சந்ததியை போட ஏற்று கொண்டு (தான் இதை ஏற்று கொள்ளாவிட்டால் வேறு யாராவது இதை செய்து விடலாம் என யோசித்து) அதற்க்காக நாலு தனக்கு நம்பிக்கையானவர்கள தெரிவு செய்து அவர்களை மதுரையில் ஒரு தங்கு விடுதியில் தங்க வைத்தார், தனது தகவல் கிடைக்கும் வரை சென்னை வர வேண்டாம் எனவும் கட்டளை இட்டாராம்(இதை எனக்கு சொல்லியது ராஜன் அல்ல அந்த நால்வரில் ஒருவர், அவர் இன்று பாரிஸ்சில் உள்ளார்) ஆனால் ராஜனுக்கு சந்ததியுடன் தொடர்பு இருந்தது; இந்த நேரத்தில் முகுந்தன் சங்கிலியை அழைத்து ராஜனும் சந்ததியும் இனைய போகிறார்கள். ஏற்க்கனவே காத்தான் சுந்தரம் என இயக்க தோழர்கள் முறுகல் நிலை உண்டு, இதில் இவர்கள் இருவரும் இனையும் போது கண்டிப்பாக எமக்கு சாதகமான நிலை இருக்காது, ஆகவே ராஜனை போடுவது சரிவராது சந்தியை , டேவிட்ஜயாவை உடன் போடு என கட்டளை இட்டார்; இதற்க்கு சங்கிலி தெரிவு செய்தத்து சந்ததியின் உறவுக்காரரையே; இதில் பங்கு கொண்ட இருவர் இன்று பாரிஸ்சில் உள்ளனர்; இதில் ராஜனை ஏமாற்றி சங்கிலி மூலம் சந்ததியை முகுந்தன் போட்டுவிட்டார், இதால் கொதிப்பான ராஜன் எப்படி என்னிடம் பொறுப்பை தந்து விட்டு சங்கிலி மூலம் காரியம் நடந்தது என முகுந்தனுடன் நேரடியாக பிரச்சனையில் இறங்கி காக்காவின் கொலை எதற்க்காக எனவும் இயக்கத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என இயக்க ஆலோசனை சொன்னார்; தொடங்கியது பிளவு ராஜனுக்கும் முகுந்தனுக்கும் ;இந்த பிளவால் ராஜன் கழகத்துக்குள் தனி குடிதனமாக தனக்கு பிடித்த 100 மேற்பட்டவர்களை முகுந்தனின் அனுமதியுடன் தனி முகாம் அமைத்தார், அதில் பயிற்ச்சி கொடுத்து அவர்களுடன் ராஜன் தலமைதாங்கி தளத்தில் இறங்குவதாக; இதில் முகுந்தனுக்கு சவாலாய் டேவிட் ஜயாவை முடிந்தால் போடு என சவாலும் விட்டார்; இது முகுந்தனுக்கு முள்ளாக ஆரம்பித்தத்து:

  இது ஏன் இங்கே என யாரும் கேக்கலாம் எப்படி பெரிய அமைப்பு இப்படி சின்ன சின்ன விடயத்தால் அழிந்து போனதே என்பதால் சீலனுக்கு இதை தெரிய படுத்துகிறேன்: தேசம் அனுமதி தருமாயின் கழகத்தில் கொலை செய்தவர்கள் யார் யார் அவர்கள் இப்போது எங்கே என்ன செய்கிறார்கள் என்பதை எழுதுவேன்,
  நிஜாந்தன் இது கழக விமர்சனம் அல்ல; காணாமல் போனோருக்கான தேடல்,

  Reply
 • Thalaphathy
  Thalaphathy

  //புளொட்டினால் பிடிப்ப்பட்டு கப்பம் கறப்கப்பட்டவர்கள் இப்போதும் வெளிநாடு வருகிறார்கள்.//- Kusumpu on November 6, 2010 11:40 am

  நான் வெளிநாட்டுக்கு வரும்வரையில் கொழும்பு-புறக்கோட்டையில் இலங்கையின் மிகப்பெரிய வர்த்தகரும் பணக்காரமுமான தீவகத்தமிழர் ஒருவர் நிறுவனத்தில் கணக்காளராக சிலகாலம் கடைமையாற்றியிருந்தேன். இந்த கடமைக்காலத்தில் நான் நேரடியாகவே சில அரசியல் விடயங்களைப்பற்றி அறிந்துகொள்ள வாய்ப்புக்கள் கிடைத்தன. அதாவது இலங்கையின் இருபெரும் கட்சிகளும் அந்த வர்த்தகரிடம் அன்றைய காலகட்டத்தில் பல இலட்ச்சங்களை கப்பமாக பெற்றன. இன்றும் பெற்றுக்கொண்டிருக்கின்றன. இவற்ரோடு ஒப்பிடும்பொழுது நீங்கள் குறிப்பிட்டவகைகள் இலங்கை அரசியலைப்பொறுத்தவரையில் சாதாரணமான விடயங்களே.

  Reply
 • நிசாந்தன்
  நிசாந்தன்

  உங்களிடம் சில கேள்விகளை கேட்க்க விரும்புகின்றேன் புளொட் உட்கொலை செய்ததையே விமர்சித்து கொண்டுள்ள நீங்கள். அதில் இடம்பெற்ற கொலைகளையும் பெயர்களை கூறுகின்றீர்கள். சரி அந்த அமைப்பில் இருந்து தவறு என்று கூறி வெளியேறிய உங்களால் சரியான தலைமைத்துவத்தை கொடுக்க முடிந்ததா? அல்லது அதன் பின்னர் ஏற்பட்ட வடகிழக்கு மாகாணசபை அரசையோ அல்லது அதில் பிரதான பங்காற்றிய ஈ.பி.ஆர்.எல்.எவ்- ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பை கொண்டோ சரியான தலைமை துவத்தையாவது கொடுக்க முடிந்ததோ?

  அல்லது அதன் பின்பு தமிழீழ அரசு நிறுவும் சகல பலங்களையும் கொண்ட புலிகளுடன் இணைந்து அல்லது நீங்கள் இப்போது புளொட்டை விமர்சிக்கும் பாணியில் புலிகளை விமர்சித்து அவர்களை சரியான பாதையில் கொண்டு செல்ல முடிந்ததா?

  இன்று தமிழர்களின் தலைநகர் என்று கூறப்படும் யாழ் மண்ணிலேயே சிங்கள குடியேற்றம் நடக்கின்றது அதனை பற்றி வாய் திறக்கின்றீர்களா இல்லை? புளொட் உட்கொலையை விமர்சிக்க வேண்டும் இதுவே உங்களது தொழில். வவுனியாவில் இன்று கணிசமான தமிழ் கிராமங்கள் உருவாக்கப்பட்டு தமிழர் வாழ்விடம் உறுதி செய்யப்பட்டதே இது யாரால்? இவற்றை புரிகின்றீர்களா? இல்லை.

  தமிழர் நிலங்களில் பௌத்த விகாரைகள், இராணுவ முகாம்கள், சிங்கள குடியேற்றம் செய்வதையே கொண்ட மஹிந்தவின் விசுவாசிகளாகவே நீங்கள் செயற்பட்டு கொண்டு புளொட்டை விமர்சிக்க எந்தவிதத்திலும் உங்களிற்கு தகுதி இல்லை.

  Reply
 • மாயா
  மாயா

  நிசாந்தன் > நீங்கள் அடுத்தவர்கள் முகமூடி அணிந்து தேசத்துக்குள் வருவதாக குற்றச் சாட்டை வைக்கிறீர்கள். “மஹிந்தவின் விசுவாசிகளாகவே நீங்கள் செயற்பட்டு கொண்டு புளொட்டை விமர்சிக்க எந்தவிதத்திலும் உங்களிற்கு தகுதி இல்லை” என்கிறீர்கள். தவிரவும் “இந்த தேசத்தில் எழுதியவர்கள் வயிற்றெரிச்சல் கொண்டவர்கள் என்பது மட்டும் புரிகின்றது.” என்கிறீர்கள்.

  உங்களுக்கு பல விடயங்கள் தெரியாது. நீங்கள் இடையில் இருந்து வண்டியில் ஏறி பயணிப்பவர் என்பதை உணர முடிகிறது. அதனால் வரும் கோபம் உங்கள் எழுத்துகளில் தெறிக்கிறது? “அடிமைத்தனத்தை உடைததேறியப் புறப்பட்டவர்கள் > ஒரு போதும் அடிமைகளாக இருக்க முடியாது. ஆனால் அதுவே நடந்தது. சுதந்திரத்துக்காக போராட கழம் இறங்கியோர் தனது சுதந்திரத்தையும் இழந்து போய் நின்றனர். தனக்கே சுதந்திரம் இல்லாத போது > தனது சமுதாயத்துக்கு அவனால் எப்படி சுதந்திரத்தை பெற்றுத் தர முடியும்? கடந்த கால வடுக்கள் மாறப் போவதில்லை. ஒரு கொள்ளைக்காரன் அல்லது கொலைகாரன் கோவிலில் தான தர்மம் செய்வதால் அவன் தவறுகள் நியாயப்படுத்தப் பட மாட்டாது.

  வவுனியாவில் கப்பம் வாங்குவதாக கேள்விப் படுகிறேன். இது உண்மையா என ஒரு புளொட்காரரிடம் கேட்டேன். எனக்கு கிடைத்த பதில் ” சொன்னவன் பொண்டாட்டியை கொண்டு வந்து விட்டால் > இதுக்கு பதில் தெரியும் ” என்றார் அவர். இப்படிப்பட்டவர்களா புளொட்டில் இப்போது இருப்பது என மனம் நொந்தேன். இன்று அவர் கம்பி எண்ணுகிறார். அவர் குறித்து எவரும் அக்கறைப்பட்டதாக நான் கேள்விப்படவே இல்லை.

  மகிந்தவோடு உறவு இருந்த போது கழகம் என்ன செய்தது? மகிந்த தந்த பணத்தில் பசி ஆறியது. இன்று எங்களை மகிந்தவின் விசுவாசிகள் என விமர்க்க உங்களுக்கு தகுதி இல்லை. நாங்கள் எங்கள் பணத்தில் வாழ்ந்தோம். நீங்கள்தான் மகிந்தவின் பணத்தில் வாழ்ந்தீர்கள்? இல்லையென்றால் > உங்கள் செலவுக்கு யார் பணம் தந்தது? உங்களுக்கு யார் பாதுகாப்பு தந்தது? புலிகளா? அரசா? எதைச் சொன்னாலும் எங்களால் அன்னியப்பட்டுத்தான் போவீர்கள்.

  புலிகளுக்கு எதிராக போராடிய > அனைத்து புளொட் முன்னணித் தோழர்களும் கொல்லப்பட்டார்கள் என்றால் > அவர்களுக்கு புலிகளுக்கு அடையாளம் காட்டியது யார்? இப்படியானவர்கள் இருக்கும் வரை புளொட்டை நம்ப முடியாது. இவர்களை நம்பி எப்படி பயணிப்பது? இவர்களை நம்புவதை விட சிங்களவனை நம்பலாம். காரணம் அவன் குடியேற்றம் செய்வதாகத்தான் குற்றம் சுமத்துலாம். அவன் இனி எவரையும் கொல்ல மாட்டான். யுத்த காலத்தில் தினமும் இறந்த தொகையை கணக்கிட்டு பாருங்கள். யுத்தம் முடிந்த பின் இறக்கும் தொகையை கணக்கிட்டு பாருங்கள். உண்மையை உணர்வீர்கள். தமிழீழம் என்பது முடீந்து போன சுனாமி. இன்னொரு சுனாமிக்குள் சிக்க புத்தி உள்ளவர்கள் தயாராக மாட்டார்கள். அப்படியானவர்கள் நிச்சயம் முட்டாளாகவே இருப்பார்கள்.

  அன்று பொங்கலோடு தமிழீழம் பெற்றுத் தருவதாக சொல்லி வந்தார்கள். கப்பலில் இருந்து வானோலி நடத்துவதாக புளுகி வந்தார்கள். 13 ஆயிரத்துக்கு மேல் போராளிகள் இருப்பதாக சொல்லி வந்தார்கள். ஆனால் பொங்கலுக்கு சாப்பாடு போட முடியாத அவலம் முகாம்களில் இருந்தது. யார் படகிலோ ஆட்களை 6 மாத பயிற்சி என்று கொண்டு வந்த போராளிகளை திரும்ப நாட்டுக்கு சவுக்கந் தடியோடா கொண்டு போய் இறக்குவது? இல்லை அம்பும் வில்லும் செய்து கொடுத்து> வேடர்கள் போல போராடவா விடுவது? தாக்குதல்களுக்கு தயாரான போராளிகளுக்கு ஆயுதமே அனுப்பாத ஒரு அமைப்பு புளொட். அங்கே ஈகோ பிரச்சனை தலை தூக்கியது. போனவர்கள் மாட்டுப்பட்டாலும் பரவாயில்லை> ஆயுதம் அனுப்ப பிரச்சனைப்பட்டார்கள். கடைசியில் போனவர்கள் அங்கே மக்களிடம் இருந்த துப்பாக்கிகளை பாவித்தும் > தற்காப்பு கிரினெட்டுகளை பாவித்தும் தாக்குதல் தொடுத்து > அங்கிருந்து பெற்ற ஆயுதங்களோடு பல முனைத் தாக்குதல்களைத் தொடுத்து வெற்றியோடு தப்பி வந்தது. ஆனாலும் அந்த குழுவுக்கு உதவிய மக்களில் 200க்கு மேற்பட்டவர்களை சாகடிக்க அந்த தாக்குதல் காரணமாகியது. எந்த ஒரு தாக்குதலின் பின்னும் > உதவிய மக்களை காக்க பலம் இல்லாத ஒரு இயக்கம் அப்படியான தாக்குதல்களில் இறங்கலாகாது. அதை அனைத்து இயக்கங்களும் செய்துள்ளன. இவை தவறானது. இது தேவையற்றது. இது முட்டாள்தனமானது.

  பகிரங்க மேடைகளிலும் > வானொலிகளிலும் > தொலைக் காட்சிகளிலும் கதைப்பது அல்லது எழுதுவது ஒன்றும் பெரிய விடயமேயில்லை. இவை யதார்த்தமா? இவை சாத்தியமா? அரசு எங்களை மதிக்கிறது. எங்களால் போராளிகளை பார்க்க முடிந்தது. அவர்களுடன் நேரடியாக பேசுகிறோம். உங்களுக்கு ஏதாவது தேவையென்றால் எங்களுடன் கதையுங்கள் என்று பேசிய செ.ஜெகநாதன் போன்றவர்கள் > இப்போது அரசு எமது அரசியல் வேலைகளை செய்யத் தடையாக இருக்கிறது என பேசுகிறார்கள்? நாளை என்ன பேசுவீர்களோ எங்களுக்குத் தெரியாது? காற்றடிக்கும் பக்கமெல்லாம் ஆடுவதை விட சரியான தொலை நோக்கு இல்லாத தன்மையையே இவர்களிடம் காண முடிகிறது. இங்கே நீங்கள் மட்டும் ஏமாறவில்லை> ஒட்டு மொத்த மக்களையும் ஏமாற்றப் பார்க்கிறீர்கள்? இனியும் பம்மாத்துகள் வேண்டாம்?

  அண்மையில் வரதராஜ பெருமாளின் உரையை டீபீசியில் கேட்க முடிந்தது. அவர் சரியா தப்பா என்பதை விட > யதார்த்தத்தை முன் வைக்கிறார். கேளுங்கள் கொஞ்சமாவது தெளிவடையலாம்:

  -http://www.tbcuk.com/varather3.mp3

  Reply
 • Kusumpu
  Kusumpu

  தளபதி/அதாவது இலங்கையின் இருபெரும் கட்சிகளும் அந்த வர்த்தகரிடம் அன்றைய காலகட்டத்தில் பல இலட்ச்சங்களை கப்பமாக பெற்றன. இன்றும் பெற்றுக்கொண்டிருக்கின்றன. இவற்ரோடு ஒப்பிடும்பொழுது நீங்கள் குறிப்பிட்டவகைகள் இலங்கை அரசியலைப்பொறுத்தவரையில் சாதாரணமான விடயங்களே/
  கப்பம் சின்னனோ பெரிதோ கப்பம் கப்பம்தான். அதற்காக மற்ற இயங்கங்களோ அரசியல்வாதிகளோ என்று விரல் நீட்டிக்காட்ட இயலாது. தாங்கள் சிறந்தவர்கள் என்று மார்புதட்ட அன்றை புளட்டுக்கோ இன்றைய புளட்டுக்கோ தகுதி கிடையாது.
  /சரி உங்களால் மற்றவர்களுடன் ஒத்தகருத்துடன் உடன்படாமல் செய்வது எது? – ஈகோ அல்லது நான்பழையவன் / ஈகோ மட்டுமலல பழையதையே கதைத்துக் கதைத்து- கலாச்சாரவாரிசுகளின் பழக்கமே இது. மனிதர்கள் தனித்துவமானவர்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கும் புலிகளைப்போல் சூரியபுத்திரன் பிரபாரன் சொன்னால் மந்திரம் அவர் நினைப்பது போல்தான் நாமும் நினைக்க வேண்டும். இதுவோ புலிகள். அப்படியானால் நாம் எல்லோரும் மதிவதனியை அல்லவா தூக்கிக் கொண்ட ஓடியிருக்க வேண்டும். அவரவர் கருத்துக்களுடன் ஒரு பொது நோக்கை நோக்கி தனிப்பட்ட மனிதன் பாதிக்கபடாதவகையில் வேலைத்திட்டங்களைத் தீட்டுங்கள். எல்லாம் ஒழுங்காக அமையும்.

  Reply
 • நந்தா
  நந்தா

  வவுனியாவில் சந்ததியாரின் காலத்தில் புளட் இயக்கத்துக்கு வளர்ந்த செல்வாக்கும் டேவிட் ஐயாவின் பணமும் உமாமகேஸ்வரன் போன்ற தீவிர “அமிர்தலிங்கம்” விசுவாசிக்கு எரிச்சலை உண்டு பண்ணியிருக்கிறது. அடுத்தது வரவு- செலவு விவகாரங்களில் “கறாராக” இருந்த சந்ததியாரின் போக்கு பல “சாகசம்” காட்ட வந்தவர்களுக்குத் தொல்லையாக இருந்தது.

  மார்க்சிசத்துக்கும் உமாமகேஸ்வரனுக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்குத் தெரியாது. ஆனால் “உட் கட்சி போராட்டம்” என்ற கம்யுனிச வரிகளை “உச்சாடனம்” செய்து தங்களுக்கு இயக்கங்களில் தொல்லையாக கருதப்பட்டவர்களைப் போட்டுத் தள்ளவும் அந்தக் கொலைகளை நியாயப்படுத்தவும் அந்த வரிகளைப் பயன்படுத்திக் கொண்டனர்.

  பின்னர் அதே “வரிகள்” பிரகாரம் அவர்களும் பரலோகம் அனுப்பப் பட்டனர். சந்ததியாருடன் தொடர்பான பல வவுனியா தமிழ் குடும்பங்களில் புலிகள் கொலைகளைப் புரிந்தனர்.

  சித்தார்த்தன் திடீரென்று குதித்த தலைமை. புலிகளால் விமர்சிக்கப்படவுமில்லை. கொலை முயற்சி செய்யப்படவுமில்லை! என்னமோ இருக்குது மர்மமா இருக்குது!

  Reply
 • nanee
  nanee

  பல்லி உமது பதிவு கொஞ்சம் முன்னுக்கு பின்னாகவும் முரண்பாடாகவும் இருக்கின்றது.
  சந்ததியார் கொலை செய்யப்பட்டது அவர்பிரிந்து கனகாலத்தின் பின்.விட்டு ஒதுங்கியிருந்த சந்ததியாரை ஆயுதம் பிடிபட்டது சந்ததியாரால் என்ற ஒரு சந்தேகத்திலேயே.கழகத்தை சந்ததியார்,காந்தன்,சந்திரன்,இன்னும் சில தோழர்களின் பிரிவு பெரிதும் உடைத்துவிட்டது.மற்றவர்கள் தலைமறைவாகவும் சிலர் நாட்டுக்கும் சென்றுவிட்டார்கள் ஆனால் சந்ததியார் போலிசில் போய் முறைப்பாடு கொடுத்துவிட்டு சென்னையிலேயே இருந்தார்.தான் ஒவ்வொரு நாளும் வந்து ஸ்டேசனில் கையெழுத்து வைப்பதாகவும் வரத்தவறும் பட்சத்தில் புளொட் தன்னை கடத்திவிட்டாதாக நடவடிக்கை எடுக்கும் படியும் கூறியிருந்தார்.அதிவிட மாகாலிங்கபுரத்தில் இருந்த இன்fபோமேசன் சென்டருக்கு தினமும் வரும் வழக்கத்தையும் கொண்டிருந்தார்.தனது உயிரில் சந்ததியார் மிக கவனமாகவே இருந்தார்.கொலைக்காக சுவிசில் இருந்து சந்தயாரின் உறவினர் ஒருவர் வரவழைக்கப்பட்டு அவர் தர்செயலாக சந்த்தயாரை சந்தித்தது போல் நாடகம் போட்டு அவருடன் ஆட்டோவில் போன சந்ததியாரை கடத்தி கொன்றார்கள்.ராஜனுடனான பிரச்சனை ஆரம்பத்தில் இருந்தே இருந்தது.பீ.எல்.ஓ விற்கு ராஜனை அனுப்பியதே தற்காலிகமாக பிரச்சனியில் இருந்து உமா விடுபடவே.சங்கிலியை உடன் திருப்பி அழைத்ததும் உள்ளுக்க பூதகரமாகும் பிரச்சனையை கையாளவே.ஆனால் போன ராஜனும் கொஞ்சகாலத்தில் திரும்பி வந்துவிட்டார்.யாருமே இல்லாத ஒரு நிலை வந்தபின்புதான் சித்தார்தர் தலைவரனார்.

  Reply
 • BC
  BC

  குசும்பு பதிலுக்கு நன்றி.
  புலிகள், புளட் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது உண்மை தான். நிசாந்தனும் அதை உறுதிபடுத்தியுள்ளார். தளபதி புளட் கப்பம் பெற்றதை சாதாரணமான விடயங்களே என்றது ஆச்சரியமாக இருந்தது.

  Reply
 • Rohan
  Rohan

  //புலிகள், புளட் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது உண்மை தான். நிசாந்தனும் அதை உறுதிபடுத்தியுள்ளார். தளபதி புளட் கப்பம் பெற்றதை சாதாரணமான விடயங்களே என்றது ஆச்சரியமாக இருந்தது.//

  அப்பாடா.. இனியாவது கழகத் தோழர்கள் புலி வசை பாடுவதை விடுத்து நாலு நல்லது செய்ய முற்படுவார்கள் என்று நம்புவோம்.

  Reply
 • palli
  palli

  //பல்லி உமது பதிவு கொஞ்சம் முன்னுக்கு பின்னாகவும் முரண்பாடாகவும் இருக்கின்றது.//
  எங்கே உங்களுக்கு முரன்பாடு என சொன்னால் அது எனக்கோ அல்லது நண்பர்களுக்கோ தெரிந்தால் கட்டாயம் பதில் தருவேன்;

  //காந்தன்,சந்திரன்,இன்னும் சில தோழர்களின் பிரிவு //
  இவர்கள் பிரிவுக்கும் சந்தத்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அதுவும் காந்தன் பிரிவுக்கு காரணம் உண்டு; ஆனால் இவர்கள் பிரிவும் முகுந்தனுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியது உன்மைதான், காரணம் இவர்கள் சந்தத்தியுடன் இனைந்து விட்டாலும் என; ஆனாலும் ஒரு பக்கத்தில் இவர்களுக்கு உறுப்பினர் ஆதரவு இல்லை என்பதால் ஒரு ஆறுதல் ஆனால் ராஜன் விடயம் வேறு, முகுந்தன் சென்னையில் தங்கி இருந்த போது முகாம்களை கவனித்தத்து ராஜன் என்பதால் ராஜனுக்கு பின்னால் போக பலர் முன் வரலாம் என்னும் கருத்து இருந்தது உன்மையே; அதேபோல் ஆயுத பிரச்சனை சந்ததிமேல் முகுந்தன் போட்ட பழி, காரனம் சந்ததி ஒரு தவறான மனிதன் என்பதை தோழர் மத்தியில் விதைக்கவே, ஆனால் என் பின்னோட்டம் சரியாக இருக்கும் என்பதில்லை, இருப்பினும் பலரது கருத்து(கழகத்தினர்) இப்படிதான் இருக்கு; ராஜன் பி எல் ஓவுக்கு போகாமல் இருந்தால் இந்த விடயங்கள் அல்லது கழக உடைவு தவிர்க்க பட்டிருக்கலாம்; உன்மையில் கழகத்தின் படைதுறை ராஜனுக்கே கொடுத்திருக்க வேண்டும், அது கணனிடம் கொடுக்க பட்டதே முகுந்தனின் நரிதனம்தான் எனவும் ஒரு செய்தி உண்டு,

  //கொலைக்காக சுவிசில் இருந்து சந்தயாரின் உறவினர் ஒருவர் வரவழைக்கப்பட்டு அவர் தர்செயலாக சந்த்தயாரை சந்தித்தது போல் நாடகம் போட்டு அவருடன் ஆட்டோவில் போன சந்ததியாரை கடத்தி கொன்றார்கள்//
  இது தவறான தகவல் சந்ததியை பேச வரும்படி அழைத்தது பெரம்பூர் ராதா; இதை அவரே சொல்லியுள்ளார்; அதில் சந்தேகமே இல்லை; சந்ததியாரும் அந்த நேரத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்பதுகாய் பலருடன் தனது பாதுகாப்பையும் பாராது பேசினார் என்பதும் உன்மை;
  இவரை கடத்தி கொல்வதற்க்கு முன்பு டேவிட் ஜயாவையே கடத்தி சாக்கில் கட்டி முகுந்தன் கொண்டுபோய் நிறுத்தினார்கள். ஆனால் முகுந்தனோ கோபமடைந்து அவனை கொண்டுவர சொன்னால் இந்த கிழவனை கொண்டு வருவதா? இவனை கொண்டுபோய் எறியுங்கடா எங்காலும் என பேசியதை புரியாத கொலையாளிகள் டேவிட்ஜயாவை கொண்டுபோய் றோட்டில் போட்டு விட்டு சென்றனர், முகுந்தன் சொன்ன எறியுங்கடா என்பது அவர்களுக்கு புரியாததால் இன்றும் டேவிட் ஜயா அதே சென்னையில் உயிர் வாழ்கிறார், இதை அறிந்தபின்னும்
  சந்ததி தன் பாதுகாப்பில் கவனம் செலுத்த தவறியதும் எமது ஈழ போராட்டத்துக்கு ஒரு தடைகல்;

  Reply
 • மாயா
  மாயா

  //இவர்கள் பிரிவுக்கும் சந்தத்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அதுவும் காந்தன் பிரிவுக்கு காரணம் உண்டு; ஆனால் இவர்கள் பிரிவும் முகுந்தனுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியது உன்மைதான், காரணம் இவர்கள் சந்தத்தியுடன் இனைந்து விட்டாலும் என் ஆனாலும் ஒரு பக்கத்தில் இவர்களுக்கு உறுப்பினர் ஆதரவு இல்லை என்பதால் ஒரு ஆறுதல் ஆனால் ராஜன் விடயம் வேறு //

  பல்லி சொல்லும் காரணமே உண்மையானது.

  ராதாவின் வீட்டில் வைத்துத்தான் சந்ததியாரை பிடித்தார்கள். அதை எனக்கு நன்கு தெரியும். பல்லி சொல்வது முற்றிலும் சரியான தகவல். சந்தியாரை போட்டு குழு உடனேயே இரவாடிரவாக உரத்தநாட்டுக்கு போய்விட்டது. அடுத்தநாள் சென்னையில் இருந்த அநேக புளொட் தோழர்களை தமிழக காவல் துறை அழைத்து போய் விசாரித்து விட்டு அனுப்பியது. அடிக்க> உதைக்கவில்லை. கேட்ட கேள்விகள் இரண்டு. 1. சந்ததியாரை தெரியுமா? பதில் ; தெரியாது. சந்தழியார் கொல்லப்பட்டது தெரியுமா? பதில் : தெரியாது . அதன் பின்னர் காவல்துறை கேள்வி கேட்கவில்லை. ஒவ்வொருவரையும் அழைத்து > தெரியது – தெரியாது – தெரியாது. சரி போ. அப்படிப் போனவர்களில் நானும் ஒருவன்.

  புளொட்டில் இருந்து பிரிந்த பலரைப் போலல்லாது ராஜன் > முகுந்தனோடு நேரடியாக மோதியவர் என்பது குறிப்பிடத் தக்கது. இவை எவ்வளவு கடுமையாக இருந்தது என்றால் சென்னை அசோக் நகரில் இருந்து காரியாலயத்தில் துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டது>சென்னை கே.கே. நகரில் இருந்து எமது வீட்டில் மத்தியகுழு தர்க்கம் உச்சத்துக்கு போனது போன்றவைக்கு பிறகு> பின்தள மாநாட்டுக்கு ராஜன் குழு நேரடியாகவே போய் பங்குபற்றியது போன்றவற்றைக் குறிப்பிடலாம். வேறு எவருமே புளொட்டில் இருந்து பிரிந்து சென்று மோதியதில்லை. ராஜனுடன் > என்னோடு இருந்த பீஎல்ஓ ராஜா இருந்தார். ராஜா> ராஜனை விட்டுப் பிரிந்து பின்னர் >சில காலத்துக்கு முன் சென்னையில் காலமானார். மேற்குறிப்பிட்ட மத்தியகுழு சந்திப்பின் போது > ராஜனின் குழு ஆயுதங்களோடு வாகனத்தில் கே.கே.நகர் > முதலாவது செக்டர் பாதையில் நின்றார்கள். மேலே இருந்த படிக் கட்டில் முகுந்தன் சார்பானவர்கள் ஆயுதங்களோடு நின்றார்கள். இங்கேதான் பெரும் வாக்குவாதம் தொடங்கியது. இதன் பின்னரே உரத்தநாட்டு பின்தள மாநாடு நடத்தப்பட்டது. அதோடு அநேக தோழர்கள் புளொட்டை விட்டு வெளியேறினார்கள். இக் காலத்தில் “தமிழீழத்தின் குரல்” வானோலியை மூடிவிட்டு > அங்கிருந்த தோழர்கள் வெளியேறினார்கள். அவர்கள் வெளியேற முன்னர்> புளொட்டின் தவறுகளை சுட்டிக் காட்டி உலகின் தொடர்புகள் இருந்த > அனைத்து முக்கிய நபர்களுக்கும் புளொட்டுக்கு உதவி செய்ய வேண்டாம் என்ற தகவலையும் > உள்ளே நடக்கும் தவறுகளையும் பட்டியலிட்டு அனுப்பி வைத்தார்கள். இதனால் புளொட்டுக்கு > உதவியவர்கள் தமது உதவிகளை நிறுத்திக் கொண்டனர். வெளிநாட்டு உதவிகள் முற்றாக நின்றன.

  இதுபோல ஒரு நிலை புலிகளுக்குள் ஏற்பட்டிருந்தால் > புலிகளின் போராட்டம் இன்றைய நிலைக்கு தள்ளப்பட்டிருக்காது. இவ்வளவு மக்கள் அநியாயமாக செத்தும் இருக்க மாட்டார்கள். அதை புலிகளின் ஆதரவாளர்களோ அல்லது புலியமைப்பில் இருந்தவர்களோ செய்யவில்லை என்பதை இன்று உணராவிட்டாலும் > என்றோ உணர்வார்கள். இன்றும் புலிகளது புலம்பெயர் ஆதரவு குழுக்கள் தமது சுயநலத்துக்காக அங்குள்ள மக்கள் குறித்து கவலைப்படுவதாக இல்லை என்பது வெளிப்படை. இன்னமும் மகிந்தவை யாராவது கொன்றால் அல்லது சாகடித்தால் தமது போராட்டத்தை தொடரலாம் எனும் மனநிலையில் இருக்கிறார்கள். றோகான்> நினப்பது போல நாங்கள் புலிகளை வசை பாடவில்லை. எமது மக்களை நேசிப்பதால் தொடர்ந்து கருத்துகளை முன் வைத்து > கண் திறக்க வைக்க முயல்கிறோம். அது புலியாக இருக்கட்டும் > புளொட்டாக இருக்கட்டும்> வேறு யாராகவும் இருக்கட்டும் இதையே நாம் தொடர்ந்து செய்வோம். இன்று மகிந்தவிடம் அதிக பலம் மட்டுமல்ல > சிங்களவர்களையே கட்டுப்படுத்தும் அரசியல் மற்றும் இராணுவ பலம் இருக்கிறது. இப்போது பேச்சு வார்த்தைகள் மூலம் அங்கு வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு சாணக்கியமாக பெற்றெடுப்பது சிறந்த அரசியல்வாதிகளின் கையில் இருக்கிறது. சிங்கள மக்களே > தமிழருக்கு உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்துள்ளனர். எதிர்கட்சிகளுக்குள் அவர்களது அரசியல் லாப நோக்கு இருந்தாலும் > தமிழருக்கு சாதகமான கருத்துகள் வெளிவருகின்றன. இவற்றை பயன்படுத்தும் நியையை விட்டு > இன்னும் சுயநல அரசியல் செய்தால் > தமிழ் பேசும் சமூகம் சிறுபான்மையாக அல்ல > இல்லாமலே போய்விடும். அந்தத் தவறு கவனித்தில் கொள்ளப்பட வேண்டும். இங்கே சங்கரியா? தோழரா? சித்தார்த்தனா? வரதரா? சம்பந்தரா என்பதல்ல முக்கியம். அந்த மக்களுக்கு யாரால் எதையாவது பெற்றுக் கொடுக்க முடியும் என்பதே முக்கியம்.

  புளொட்டால் அன்று ஒரு ஆயுதக் கொண்டேனரை இறக்கிக் கொள்ள முடியவில்லை? இன்று புலத்தில் இருந்து சென்ற உதவிப் பொருட்களை இறக்கிக் கொள்ள முடியவில்லை? என்ன கொடுமை? இதற்கு காரணம் என்ன? தலைமையில் ஏதோ பிசகு இருக்கிறது. மதில் மேல் மியாவாக இருப்பதை விட > ஏதாவது ஒரு பக்கத்தில் இருந்தால் > இன்று பலதையும் அந்த மக்களுக்காக செய்யலாம். ஆனால் இன்னமும் அழகாக அரசியல் கதைப்பதைத் தவிர உருப்படியாக ஒன்றும் இல்லை.

  கடந்த முறை தேர்தலில் தோற்றதற்கு என்ன காரணம்? வன்னியில் இருந்து வந்த மக்களுக்கு உண்மையாகவே உதவினீர்கள். பாராட்டுக்கள். ஆனால் அதை விட அங்கு பலரை மிரட்டி வாங்கிய கப்பம் மக்களை வெறுப்படையச் செய்துள்ளது. அரசுக்கு சார்பான இயக்கங்களை வன்னி மக்கள் வாழ்ந்த மூகாம்களுக்குள் போக இராணுவம் அனுமதித்தது. அங்கு இந்த இயக்கங்கள் செய்தது என்ன? அனைத்தையும் மக்கள் சொல்கிறார்கள். அருசு தெரிந்து கொண்டு விட்டது. அரசு இவர்களை சந்தேகிக்கிறது. தூர விலக்கி விட்டது. அன்று அரசோடு நின்று புலிகளை எதிர்த்த இயக்கங்களை விட > நேரடியாக மனம் மாறிய புலிகளை அரசு பாவிக்கிறது. இன்றின் அரசின் புலனாய்வு மற்றும் பலம் அரசோடு இணைந்த புலிகள்தான். இனி ஒரு அணுவும் அசையாது என்பது இராணுவத்தின் நம்பிக்கை. அரசு மாறலாம் > இராணுவ கட்டமைப்பு மாறாது. இதுவே இந்தியாவிலும் உள்ள நிலை. பாதுகாப்புத் துறை என்றும் ஒரே விதத்தில் இருக்கும். இனியும் காலம் கடத்தாது நேர்மையாக அரசிடம் இருந்து எதையாவது பெற்றுக் கொடுக்க அரசியல்வாதிகளுக்கு அனைத்து மக்களும் அழுத்தங்களை கொடுக்க வேண்டும். இதைத் தவிர்த்து தமது இயக்கங்களை பலப்படுத்த நினைத்தால் ஐந்தாக இருக்கும் இன்றைய தமிழ் அரசியல் கட்சிகள் ஐம்பதாக சிதறும்.

  பெளத்த பிக்குகளின் பேச்சை இதுவரை எந்த அரசியல் தலைமையும் தட்டியதில்லை. அதை பற்றிப் முதலில் பேசியவர் கொத்லாவல ; அவருக்கு அரசியல் ஆயுள் சில மாதங்கள்தான் இருந்தது. மகிந்த அதை நடைமுறைப்படுத்தியுள்ளார். பெளத்த பிக்குகள் அச்சத்தில் வாய் பேசாது தடுமாறுகிறார்கள். கடுமையானவர்கள் மெளனமாகி விட்டனர். சிலர் தெரியாத் தனமாக கதைக்கிறார்கள். அது ஒன்றிரண்டு பேச்சுக்களோடு முற்றுப் பெறும். இந்தியாவும் > உலகமும் > தமிழருக்கு நியாயமான உரிமையை கொடுங்கள் என வலியுறுத்துகின்றன. இன்று தருவதை தடுப்பதற்கு நாட்டில் புலிகள் இல்லை. என்ன பிரச்சனை? இன்னும் உங்கள் சுயநலமா? மக்கள் இவர்களை ஒதுக்க வேண்டும். அதுவே இவர்களுக்கு சரியான தண்டனை. இன்னொரு நல்ல தலைமை உருவாக வழி பிறக்க இன்னொரு வழி.

  Reply
 • நந்தா
  நந்தா

  சந்ததியார் கொல்லப்பட்ட விதம் படு கேவலமும் அரக்கத்தனமும் கொண்டது. கொலை செய்துவிட்டு உடலை பல பாகங்களாகக் கொத்தி சென்னையின் பல பாகங்களிலும் வீசினார்கள். சந்ததியாரோ டேவிட் ஐயாவோ முகுந்தன் என்ற நன்றி கெட்டவரால் தங்களுக்கு இந்த முடிவு வரும் என்று கனவில் கூடநினைத்திருக்க மாட்டார்கள்.

  முகுந்தன் கோஷ்டி தத்துவங்களைப் படித்து அறிவதை விட கொலைகள் செய்து தப்புவது எப்படி என்று அதிகம் படித்தார்கள். மக்கள் தங்களைக் கண்டு மிரள வேண்டும் என்ற பாஸிஸ கொள்கையை அமுல் படுத்துவதில் அக்கறைப்பட்டுக் கொண்டனர்.

  ஆயினும் முகுந்தன் போன்ற கொலை வெறி கொண்டவர்களைப் பயன்படுத்தி சந்ததியார் போன்றவர்கள் வவுனியாவில் வளர்த்த தமிழ் சிங்கள உறவுகள், மக்கள் ஆதரவு என்பனவற்றை தகர்த்த அதெ கும்பல்கள் தங்கள் தேவைகள் முடிந்தவுடன் முகுந்தனையும், படிப்படியாக “பழைய” கழக முக்கிய புள்ளிகளையும் “முடித்துவிட்டனர்”. சித்தார்த்தனுக்கு இது தெரியாத விடயமல்ல.

  Reply
 • kovai
  kovai

  உமைகுமாரனையும், இறைகுமாரனையும் எதற்காக ‘பாலமோட்டை சிவம், சந்ததியார்’ குழுவினர் கொன்றார்கள்?

  Reply
 • palli
  palli

  //சந்ததியார் கொல்லப்பட்ட விதம் படு கேவலமும் அரக்கத்தனமும் கொண்டது. கொலை செய்துவிட்டு உடலை பல பாகங்களாகக் கொத்தி சென்னையின் பல பாகங்களிலும் வீசினார்கள். //
  இது சரியான தகவல் இல்லை; அப்படி செய்திருந்தால் அன்றே கழகம் சென்னையை விட்டு போயிருக்கும்; மாயா சொல்வது போல் தமிழகத்தில் இடையூறு செய்யாததால்; தெரியும் தெரியாது என்பதுடன் சந்ததி கொலைவழக்கு முடிந்து விட்டது; ஆனால் காகா என்பவர் மிக கடுமையான சித்திரவதை மூர்த்தி குழுவால் செய்யபட்டார் என்பது அங்கு முகாமில் இருந்த நண்பர்கள் செய்தி;

  //சித்தார்த்தனுக்கு இது தெரியாத விடயமல்ல.//
  சித்தார்த்தன் ஆரம்பகாலத்தில் கழகத்தின் உள் விடயங்கள் தெரியாதவரே, ஏதாவது முக்கியமான பேச்சுவார்த்தைகளுக்கு அல்லது அலுவல்களுக்கு மட்டுமே சித்தார்த்தன் முகுந்தனால் பாவிக்கபட்டார், அவரது கருத்து எதுவும் கழகத்தில் உள் நுளைய முடியாது; இது மாயா போன்ற சென்னையில் இருந்த பலருக்கு தெரியும்,
  //உமைகுமாரனையும், இறைகுமாரனையும் எதற்காக ‘பாலமோட்டை சிவம், சந்ததியார்’ குழுவினர் கொன்றார்கள்?//
  இது உன்மைதான் ஆனால் இதில் சந்ததி சம்பந்தபடவில்லை சிவத்துடன் சென்றது மொக்குமூர்த்தி சுதா போன்றோர் இவர்கள் சுந்தரத்தின் விசுவாசிகளாம்;
  //அதைவிட அஜீவன், மாயா அன்றும் இன்றும் என்றும் எனது உயிர் தோழர்கள். அப்படி ஏதும் ஆவணம் தயாரிக்கும் பட்சத்தில் உதவிசெய்ய தயாராக உள்ளேன்.// கண்டிப்பாக நானும் என்னிடமும் எனது நண்பர்களிடமும் இருக்கும் உன்மையான அல்லது ஓர் அளவு சரியான தகவலை தர முயற்ச்சிக்கிறோம்

  Reply
 • மாயா
  மாயா

  பல்லி சொல்வது சரி. நந்தா தெரிவிக்கும் விதமாக சந்ததியாரது உடலை கண்ட துண்டமாக போட்டது என்பது தவறான தகவல். சந்ததியாரை பிடித்து சில மணி நேரத்துக்குள் கொல்லப்பட்டார். அவர் பெரிதாக சித்திரவதை செய்யப்படவில்லை. கைத்துப்பாக்கியால் வெடி வைத்தே கொன்றார்கள். வாமதேவன் வீட்டிலிருந்தே கை விலங்கு எடுத்துச் செல்லப்பட்டது. இரவு 8 மணிக்கும் 10 மணிக்கும் இடையே சந்ததியாரைப் பிடித்தார்கள். இதில் ஈடுபட்ட ஒருவர் தற்போது கனடாவில் இருக்கிறார். இரவு 7 மணிக்கு கைவிலங்கு எடுத்துச் செல்லப்பட்டது. 11 மணிக்கு திரும்பி வந்தவர்கள் உரத்தநாடு போவதாகவும் > யாரும் விசாரித்தால் ஒரு கிழமையாக தாங்கள் சென்னையில் இல்லை என்று சொல்லும்படி சொல்லி விட்டு > உடனடியாக போய் விட்டார்கள்.

  அடுத்தநாள் காலையில் போலீசார் வந்தார்கள். சந்ததியாரை யாரோ கொலை செய்து விட்டதாக விசாரித்தார்கள். எனக்கு அப்படி யாரையும் தெரியாது என சொன்னேன். எமது இடத்துக்கு வந்தவர்கள் கியுபிராஞ்சை சேர்ந்தவர்கள். அவர்கள் முகுந்தன் எங்கே என்று அடுத்து கேட்டார்கள். சென்னையில் இல்லை என்று சொன்னேன். போலீசுக்கு வந்து வாக்கு மூலம் கொடுத்துவிட்டு போகச் சொன்னார்கள். நான் அவர்களோடு போய் திரும்பி வந்தேன். ஏற்கனவே போலீசில் நின்ற சிக் மோகன் > ” இந்தியாவுக்கு எதிராக வங்கம் தந்த பாடத்தை எழுதிய சந்தியாரையை பற்றி விசாரிக்கிறார்கள் போல தோழர்” என்றார் என்னிடம். எனக்கு கோபமாக வந்தது. வா உனக்கு செய்யிறன் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். எந்த சந்ததியாரோ எனக்கென்ன தெரியும் என்றேன். அவர் எப்பவோ வெளியேறிட்டார் என்றான். நாங்கள் கதைப்பதை போலீசார் கெட்டுக் கொண்டிருந்தனர்

  எனக்கு விசயம் தெரியும் > அவனுக்கு தெரியாததால் உளறுவதாக எண்ணினேன். பின்னர் ஒருநாள் மோகன் எனது அறைக்கு வந்த போது அண்டைக்கு என்னடாப்பா போலீசில வச்சு விசர் அலம்பினீர் என்றேன். வங்கம் தந்த பாடம் என்று சொன்னால் அவங்க கடுப்பாவாங்கள் எண்டு சொன்னான் என்றான் மோகன். எனக்கு சிரிப்பு வந்தது. அவன் தோழில் தொங்கும் பைதான் அவன் கொழும்பில் கொல்லப்பட்ட போதும் என் நினைவுக்கு வந்தது.

  //சித்தார்த்தன் ஆரம்பகாலத்தில் கழகத்தின் உள் விடயங்கள் தெரியாதவரே//

  சென்னைக்கும் டில்லிக்கும் >சித்தார்த்தன் > கிருஸ்ணரோடு லண்டனிலிருந்து வந்து போய்க் கொண்டிருந்தார். புளொட்டுக்கு சேரும் பணம் மற்றும் தேவையான பொருட்களை கொண்டு வருவோர்களில் முக்கியமானவர்களாக இவர்களாகவே இருந்தனர். திம்பு பேச்சு வார்த்தைக்கெல்லாம் போனார். சித்தார்த்தரின் அப்பா > தர்மலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட பின் அவர் புளொட்டில் நிரந்தரமாக நிற்கும் மன நிலைக்கு தள்ளப்பட்டார் என நினைக்கிறேன். தர்மலிங்கம் கொலை செய்யப்பட்ட போது இவர் வடபழனி மாதவன் வீட்டில் இருந்ததாக நினைவு. சரியாக ஞாபகம் இல்லை.

  Reply
 • kovai
  kovai

  பல்லிக்கு!
  இறைகுமாரன் இயக்கங்களின் உறுப்பினராக இருக்கவில்லை. உமைகுமாரன் இயக்கத்திலிருந்து வெறுப்படைந்து ஒதுங்கி இருந்தார். ஆனால் அவர்கள் சந்ததியாருடன் விவாதங்களில் ஈடுபட்டதும் நான் அறிவேன். இவர்கள் இருவரும் தனிநபர் கொலை, கொள்ளையில் ஈடுபட்டிருந்த ‘பாலமோட்டை சிவம்’ பற்றி விமர்சித்ததும் நான் அறிவேன். நிராயுதபாணிகளாக இருவரும் ‘திருடனின் மறைவிடத்தை அறிந்ததும், சந்தித்ததும் அவனை வேலியால் பாய்ந்து ஓடவிட்டதும்’, சாதாரண விடயமாக எடுத்துக் கொண்டதுதான் அவர்கள் என்னைச் சந்தித்த கடைசி நாள். ‘சுந்தரத்தின் கொலைக்கு பழிவாங்கல்’ என்ற கதை பொய்யானது என்பது என்னளவில் உண்மை. தயவு செய்து அந்தக் கொலையாளிகள் இனியாவது உண்மைக் காரணத்தை வெளியிடட்டும்.

  Reply
 • நந்தா
  நந்தா

  அப்படியாயின் சந்ததியாரின் உடலில் காணப்பட்ட வெட்டுக் காயங்கள் எப்படி வந்தன? உடலின் பல பகுதிகள் காணப்படவில்லை. அது எப்படி?

  சடலத்தை கண்டவர்கள் இன்னமும் உயிரோடு இருக்கிறார்கள்.

  Reply
 • மாயா
  மாயா

  //சந்ததியாரின் உடலில் காணப்பட்ட வெட்டுக் காயங்கள் எப்படி வந்தன? உடலின் பல பகுதிகள் காணப்படவில்லை. //

  நந்தா > இந்தக் கொலை சென்னையிலுள்ள ஒரு மாயானத்தில் வைத்தே செய்யப்பட்டது. அங்கே வைத்து பெரிதாக சித்திரவதைகள் செய்து கொண்டிருக்க முடியாது. முகுந்தன் > சில விடயங்களை சந்ததியிடம் கேட்டார். அதில் முக்கியமானது கென்டேனரில் வந்த ஆயுதங்கள் குறித்த தகவலை வழங்கியது நீர்தானே? என்பது. சந்ததி சொன்ன பதிலுக்கு பிறகு > மூக்கில் கைத்துப்பாக்கியை வைத்து தட்டி விட்டார்கள். ஆள் செத்தது உறுதிப்படுத்திக் கொண்டு இடத்தை விட்டு நகர்ந்தார்கள்.

  சந்தியார் ஏற்கனவே தனது பாதுகாப்புக்காக போலீசில் முறைப்பாடு செய்திருந்ததால் > அதிக நேரம் இழுத்தடிக்க போனவர்கள் விரும்பவில்லை. அவரை டோச்சர் பண்ணிக் கொல்ல வேண்டும் என்றால் > சென்னை கே.கே. நகர் > அம்மன் கோவிலடியில் இருந்த புளொட் புலனாய்வு காரியாலயத்துக்கு கொண்டு வந்து > சித்திரவதை செய்து கொலை செய்திருப்பார்கள். அவை பிரச்சனையாகி விடும் என்றே பிடித்தோம் : முடித்தோம் என காரியத்தை முடித்து விட்டு உரத்தநாட்டுக்கு போனார்கள். சந்ததி கொல்லப்பட்ட செய்தி பெரிதாக சென்னை பத்திரிகைகளில் வரவும் இல்லை.

  போலீசார் சந்தேகத்தின் பேரில் அழைத்துப் போனவர்களுக்கு உடலைக் காட்டவுமில்லை. புளொட்டில் எவரும் கைதாகவுமில்லை. அழைத்துப் போய் ஒரு போமாலிட்டிக்கு அழைத்துப் போய் கேட்டு விட்டு திருப்பி அனுப்பி விட்டார்கள். இந்தியாவில் > அன்று போராளிகளுக்கு இருந்த சுதந்திரம் எப்படியானது : அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதற்கு இதுவெல்லாம் ஒரு சான்று. தாங்கள் விரும்பியதை பயமே இல்லாமல் செய்தார்கள். போலீசே கண்டு கொள்ளாமல் விட்டது. இதையெல்லாம் இந்திராவின் மகனை கொலை செய்து இல்லாமல் செய்த மாபெரும் முட்டாள் தனத்தை புலிகளே செய்தார்கள். அதோடு எல்லா சுதந்திரமும் பறி போனது.

  அன்றைக்கு மூன்று பேரை ஏற்றிக் கொண்டு ஒரு மோட்டார் சைக்கிள் போகுதென்றால்> அவர்கள் விடுதலைப் புலிகள். ( எல்லா இந்திய போராளி இயக்கங்களையும் > இந்தியாவில் விடுதலைப் புலிகள் என்றே அழைத்தார்கள். அவர்களுக்கு 33 இயக்கத்தின் பெயரைச் சொன்னால் தலையே சுற்றும்.) வாடகை சைக்கிளில் முன்னால் ஒருவரை வச்சுக் கொண்டு யாராவது போனால் > அவர்களும் விடுதலைப் புலிகள். ( இந்தியாவில் பின்னால்தான் ஆட்களை ஏற்றுவார்கள்) எல்லாத்தையும் நாத்திப் போட்டு > தொப்புக் கொடியை அறுத்துப் போட்டு தொப்புள் கொடி உறவு எனச் சொன்னால் பழைய ஆட்களோடு பழகியவர்கள் என்ன கேணயன்களா?

  விசயமே தெரியாத சில புதுசுகள் யார் யாரோ சொல்லும் பொய்களை நம்பி இணையத்தில் போராட்டம் நடத்துவது > பிரபாகரனை உயிர்ப்பிக்கத் துடிப்பது எல்லாம் கவுண்டர் – செந்தில் வாழைப்பழ கொமடியை விட பெரிய கொமடி.

  மேலே நந்தா சொன்தை லண்டனிலிருக்கும் ராமிடம் கேட்கலாம். இவர் ராதா குறித்து தெரிந்தவர். சென்னை அசோக் நகரில்தான் இவர்கள் அப்போது இருந்தார்கள். உண்மைகளை முடிந்தால் வந்து எழுதவும். இதெல்லாம் முடிஞ்சு கொஞ்ச நாளைக்கு பிறகு > சந்தியாரை போடப் போன வாமரைப் போட புளொட் திட்டம் தீட்டியது. அது வாமருக்கு தெரிய வர > ஆள் பம்பாய்க்கு மாறினார். வாமர் ரெயில் ஏற நின்ற போது > ஆளை சுத்தி வளைச்சார்கள். வாமர் கில்லாடி> தன் கையிலிருந்த பேப்பர் கட்டை காட்டி > புளொட் செய்த அத்தனை திருகுதாளங்களும் இதிலிருக்கு > இடத்தை விட்டு போகாட்டி போலீசுக்கு கொடுத்துட்டுத்தான் சாவன் என மிரட்டி விட்டு டெலிபோன் கெபினுக்கள் நுழைய வந்தவர்கள் இடத்தை விட்டு போனார்கள். பின்னர் நான் பம்பாயில் வைத்து வாமரை சந்தித்தேன். அப்போது சொன்ன பகிடி ” நான் டெலிபோண் கெபினுக்குள்ள நுழைஞ்சதும் ; ஓடிட்டாங்கள். நான் சொன்ன மாதிரி ஒண்டும் என்னிடம் இருக்கவில்லை. அதோட உள்ள உள்ள டெலிபோனே வேலை செய்யயில்லை. அன்டைக்கு வாயும் > மண்டையும் இல்லாட்டி போட்டு தள்ளியிருப்பார்கள் ” என்று சிரித்தார். வாமர் போன பிறகு > அவரது மனைவி புள்ளைகளை வெருட்டினார்கள். வாமரின் மனைவி ” அந்தக் கொலைக்கார பாவி எங்கயோ போய்த் தொலைஞ்சிட்டான். எங்களையும் கொல்லுங்கடா……” என கத்திய கத்தில் வந்தவர்கள் திரும்பினார்கள். இப்போது வாமரின் மனைவியும் குழந்தைகளும் கனடா டொரொன்டோவில் இருக்கிறார்கள். அன்று வாமரையும் > மனைவியையும் கொல்ல முயன்ற ஒருவர் வாமரோடு பம்பாயில் இருந்தார். என்னைக் கண்டதும் முழிஞ்சு கொண்டு நின்றார். நான் ஆளோடு கவனம். இவரும்தான் உம்மை போட வந்தவர் என்று முகத்துக்கு முன்னாலயே சொன்னேன்.தோழர்களின் சிறு தவறுகளுக்கு தண்டனை கொடுத்த வாமர்> பின்னர் சமூகத்தையே சிதைக்கும் தூள் பிஸ்ணசில் கெப்படன் குமாராக பம்பாயில் அன்று ஒரு நாயகனாகவே வாழ்வதை பார்த்த போது மனம் வெறுத்துப் போனது.

  மக்களுக்காக போராட வந்து > கொலைகாரரோட சேர்ந்திட்டமே என்று மனசு வேதனைப்பட்ட நாட்கள் எண்ணிலடங்காது. எத்தனை இளம் வயதினர் தங்கள் வாழ்வை கரியாக்கிக் கொண்டார்கள்? எத்தனை குடும்பங்கள் பெத்த குழந்தைக்கு என்ன நடந்தது எனத் தெரியாமல் வாழ்கிறார்கள்? உயர வேண்டிய எத்தனையோ இளைஞர்கள் உயிரே இல்லாமல் போனார்கள்? அன்றைக்கு புளொட்டை உடைத்ததால் செத்தவர்கள் எண்ணிக்கையை சொல்லலாம். ஆனால் புலிகளில் செத்தவர்கள் எண்ணிக்கையை சொல்லவே முடியாது? நாங்கள் பட்டுத் தெளிந்து இன்னமும் சைகோ போல இப்படி புலம்புகிறோம். புலம்பெயர் இளைஞர்கள் இவற்றை பார்த்தாவது சிந்தித்து செயல்பட வேண்டும். அன்று ஒரு கொலைகாரனை கீரோவாக பார்த்து ஏமாந்தீர்கள்? இன்று புலத்து படித்ததுகள் தாங்கள் வாழ அவர்கள் பேரால் உங்களைப் பிடித்து பலி கொடுத்து வாழ முயல்கிறார்கள். எங்கள் காலம் முடிவுக்கு வந்து கெண்டிருக்கிறது. உங்களாலாவது அந்த இனம் மகிழ்வாக வாழ வேண்டும். இனி ஒரு யுத்தம் > இனி ஒரு ஈழம் எல்லாம் செத்த புணம். இவற்றுக்கு உயிர் கொடுக்கும் முட்டாள் வேலையில் எவரும் இறங்கலாகாது.

  ஆளாளுக்கு நாடு கடந்து நாடு கடந்த நல்லூர் அரசு அமைக்க முயற்சி> அப்படி இப்படி என படு முட்டாள்தனங்களை சில கோமாளிகள் செய்வார்கள். இவர்களை அடித்து துரத்துங்கள். இல்லாட்டி எங்கட ஊர் பேரிலும் நாங்கள் அரசமைக்க அமெரிக்காவோடு கதைச்சுக் கொண்டிருக்கிறம் என்று சொல்லுங்கள். வந்தவர்கள் தலை தெறிக்க ஓடுவார்கள். இதிலிருந்து ஒன்றை நீங்கள் நம்ப வேண்டும். அதாவது பிரபாகரன் செத்துட்டார் என்பதை. காரணம் பிரபாகரன் இல்லாத துணிவிலதான் இதெல்லாம் நடக்குது. இல்லையென்றால் ஊரில இருக்கும் நல்லூர்காரர்கள் செத்தார்கள்.

  எனவே “22-மார்ச் 2010 அன்று வெளிவந்த தமிழ்வின் இணையத்தில் சிங்கள அரசிற்கு மீண்டும் ஓர் அதிர்ச்சி வைத்தியத்தை விடுதலைப் புலித் தலைவர்கள் கொடுத்துள்ளனர். நாங்கள் நல்ல உடல் நலத்துடன் பத்திரமாக இருக்கிறோம் என்று பிரபாகரனும் பொட்டம்மானும் தமிழக அரசியற் தலைவர்கள் உட்பட 5 பேருக்கு எழுதிய கடிதம் சிறீலங்கா அரசிற்கும் இந்திய அரசிற்கும் அதிர்ச்சி அளித்தபடியே இருக்கிறது.” எனும் பம்மாத்து இணையங்களில் காசுக்கு மாரடிக்கும் இந்திய கோமாளிகளது தகவல்களை அல்லது செய்திகளை இன்னொரு ” இந்திரன்” சினிமா பஞ்ச் டயலாக்காக எடுத்துக் கொண்டு சிரியுங்கள்.

  Reply
 • palli
  palli

  //சடலத்தை கண்டவர்கள் இன்னமும் உயிரோடு இருக்கிறார்கள்//
  அப்படிதான் சிலர் சொல்லுகிறார்கள்? ஆனால் சந்ததியின் உடலை யார் யார் பார்த்தார்கள் என்பது கூட அவர்களுக்கு தெரியாது என்பதுதான் உன்மை; சந்ததியை யார் யார் கொலை செய்தார்கள் என்பதை கூட என்னால் தர முடியும்; தேசம் அனுமதித்தால்;

  Reply
 • நந்தா
  நந்தா

  சந்ததியாரின் சடலத்தை புளட் இயக்கம் சார்ந்த எவரும் பார்க்கவில்லை என்பது வெளிவரும் எழுத்துக்களில் காணக் கூடியதாக உள்ளது. ஆயினும் “நாங்கள் அப்படி மோசமானவர்கள் இல்லை” என்ற பாணியில் இயக்கப் பெயரை பாதுகாக்க முயற்சிப்பதும் தெரிகிறது!

  Reply
 • அஜீவன்
  அஜீவன்

  //அதைவிட அஜீவன், மாயா அன்றும் இன்றும் என்றும் எனது உயிர் தோழர்கள். அப்படி ஏதும் ஆவணம் தயாரிக்கும் பட்சத்தில் உதவிசெய்ய தயாராக உள்ளேன்.//

  இவை யாருக்காவது பயன்படுமானால் நிச்சயமாக செய்யலாம். உண்மைகளை வெளியே கொண்டு வரலாம். இவை பல இளைஞர்களுக்கு ஒரு பாடமாகவாவது இருக்கும். கலந்துரையாடுவோம்.. தேசம் வழி காட்டியிருக்கிறது. உலகெங்கும் சிதறி வாழும் பலர் இணைய , இது ஒரு வாய்ப்பாகவும் அமையும்.

  – அஜீவன்

  Reply
 • Rohan
  Rohan

  //இறைகுமாரன் இயக்கங்களின் உறுப்பினராக இருக்கவில்லை. உமைகுமாரன் இயக்கத்திலிருந்து வெறுப்படைந்து ஒதுங்கி இருந்தார். ஆனால் அவர்கள் சந்ததியாருடன் விவாதங்களில் ஈடுபட்டதும் நான் அறிவேன். இவர்கள் இருவரும் தனிநபர் கொலை, கொள்ளையில் ஈடுபட்டிருந்த ‘பாலமோட்டை சிவம்’ பற்றி விமர்சித்ததும் நான் அறிவேன். நிராயுதபாணிகளாக இருவரும் ‘திருடனின் மறைவிடத்தை அறிந்ததும், சந்தித்ததும் அவனை வேலியால் பாய்ந்து ஓடவிட்டதும்’, சாதாரண விடயமாக எடுத்துக் கொண்டதுதான் அவர்கள் என்னைச் சந்தித்த கடைசி நாள்//

  இந்த இருவரையும் அவர்களது ஊரைச் சேர்ந்த ஓர் இளவயதுக் காரரே சுட்டுக் கொன்றதாக அப்போது வந்த வதந்தி பொய்யா?

  Reply
 • kovai
  kovai

  Rohan!
  சுட்டவர்கள் யாரென்று எனக்குத் தெரியாது, ஆனால் எப்படிப்பட்டவர்கள், எதற்காக இந்த இருவரையும் சுட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். என் நினைவுகளில் இருப்பவை இவை.

  அந்தக் காலகட்டத்தில், புலிகளில் ஏற்பட்ட பிளவின் பின் யாழின் பல பகுதிகளில் கொள்ளையும், அதனோடான கொலையும் நிகழ்ந்தன. அதில் யாழ்.வேம்படி மகளீர் பாடசாலையின் அருகே இருந்த வீட்டில் தனியே வசித்த பணக்கார மூதாட்டி கழுத்து நெரித்து கொல்லப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டது, பிரபலமானது. அந்தக் குழுவினர் அளவெட்டி, திருநெல்வேலியை ஒட்டிய பகுதிகளில் மறைந்திருந்தது தெரிய வந்தது. இவர்களை சமூகவிரோதிகளாக எண்ணிய உமா,இறை இருவரும்,இவர்களை போலிசாரிடம் பிடித்துக் கொடுக்கத் தீர்மானித்தார்கள்.இதில் மூதாட்டியின் கொலை, கொள்ளையில் சம்பந்தப்பட்ட ஒருவரின் வதிவிடத்தை துல்லியமாக கண்டறிந்ததில் எனக்குப் பங்குண்டு. இறுதியாக தெரிந்த போலிசாருக்கு அறிவித்து விட்டு, இறைகுமாரன் நேரடியாக அந்த நபருடன், அவர்களில் ஒருவராக பேச்சுக் கொடுத்த போது, இறைகுமாரனின் தோற்றத்திலும், பேச்சிலும் சந்தேகம் கொண்டு, அந்த நபர் ஓடிவிட்டார். தோல்வி முகங்களுடன் திரும்பி வந்து, என்னைச் சந்தித்த போது சொன்னேன்.”இயக்கம் உடைந்தது தெரிந்து வளர்ந்ததவர்கள் என்றபடியால்,இவர்களுக்கு இருக்கின்ற இயக்கங்கள்தான் சரணாலயம்,கவனம்”
  அடுத்த நாள் காலை அவர்களின் சடலங்களை நேரில் பார்த்தேன்.

  இதை நான் எழுதியது, இந்த சமூக விரோதக் கொலைகளை, இன்றுவரை இயக்க முரண்பாடுகளின் கொலையாகக் கதை அளப்பவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே.

  Reply
 • nanee
  nanee

  புளொட்டில் இருந்தவர்கள் எழுதுவதுபோல் மற்ற இயக்கங்க்ளில் இருந்தவர்களும் எழுதினால் நல்லதென நினைக்கின்றேன்.(இந்த அளவு கேவலாமாக இருக்கும் என நினைக்கவில்லை)
  கனடாவில் 3,4 பேர் பல கொலைகளில் சம்பந்தமானவர்கள் இருக்கின்றார்கள் .ஆனால் அவர்களிடம் என்னவென்று கேட்பதென்றுதான் தெரியவில்லை.கேட்டாலும் ஒப்புக்கொள்வார்களோ தெரியாது. முடிந்தால் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கின்றேன்.

  Reply
 • karu
  karu

  புளொட் ஈபிஆர்எல்எப் ஒன்று கூடல் ரெலோ மக்களுக்கு உதவி என்று நீங்கள் கூட்டம் வைக்கிறதை தேசம் நெற்றில் பார்த்தால் எமக்கு இங்க தலை சுத்துகிறது புலி மட்டுமல்ல மற்றய இயக்கங்களும் தமது பெருடன் இங்கே வருவது பற்றி நன்றாக யோசிக்க வேண்டும் உங்களின் கடந்தகால நடவடிக்கைகள் மிகமுக்கியமாக கொலைகள் பற்றி வெளிவர வேண்டும் கடந்த இரண்டுவருடமாக ஏன் உங்களுக்கு புத்தி தெளியவில்லையா இப்ப மட்டும் என்ன?

  யாழ்ப்பாணத்தில் என்வாக இருந்தாலும் ஈபிடிபி நாலு உதவிகளை செய்து மக்களுடன் மக்களாக நிற்கிறார்கள் அதேபோல வவுனியா முல்லைத்தீவிலும் மன்னாரிலும் மட்டக்களப்பிலும் ரெலோ ஏதோ ஒரு நகராட்சிச பாராளுமன்ற உறுப்பினர் என்றும் நிற்கிறார்கள் பாராளுமன்றத்திலும் நிற்கிறார்கள் வவுனியாவில் புளோட் நகராட்சி சபையில் நல்ல பல காரியங்களை செய்துள்ளனர்

  ஆனால் ஈபிஆர்எல்எப் பேச்சு மட்டும் தான் உங்களையும் மக்களுக்கு நிரூபியுங்கோ

  எப்படி இருப்பினும் இரண்டு இரண்டு மூன்று தேர்தல்களின் பின்னர் உங்கட பழைய இயக்கங்களுக்கு சனம் சாணி அடிக்கும் நம்பி இருங்கோ! தப்பித்துக்கொள்ள ஒரே வழி அத அரசுடன் சேர்ந்து என்றாலும் சனத்திக்கு வாழ்க்கைக்கு உதவுங்கோ வெட்டிப்பேச்சை கேட்க யாரும் தயாரில்லை
  –karu jaffna

  Reply
 • Rohan
  Rohan

  //எப்படி இருப்பினும் இரண்டு இரண்டு மூன்று தேர்தல்களின் பின்னர் உங்கட பழைய இயக்கங்களுக்கு சனம் சாணி அடிக்கும் நம்பி இருங்கோ! தப்பித்துக்கொள்ள ஒரே வழி அத அரசுடன் சேர்ந்து என்றாலும் சனத்திக்கு வாழ்க்கைக்கு உதவுங்கோ வெட்டிப்பேச்சை கேட்க யாரும் தயாரில்லை//

  வெல் டன், கரு.

  இந்தத் தலைப்பு புளொட் பற்றிய மீள்பார்வைக்குக் கொஞ்சமாவது உதவியிருக்கிறது.

  இன்னொரு இயக்கம் விமர்சனப்படுத்தப் படுவதற்கு ஒரு சிறு கட்டுரை எழுதுவதன் மூலம் (ஒன்றன் பின் ஒன்றாக) தேசம் களம் அமைத்துத் தர வேண்டும்.

  Reply
 • BC
  BC

  கரு, உங்கள் கருத்தே எனதும். வரதராஜ பெருமாளின் உரையை ஒலிவடிவில் கேட்டேன். சரியாக உண்மைகளை பேசியிருக்கிறார். ஆனால் இந்திய இராணுவத்தோடு ஈபீஆர்எல்எவ் இயக்கம் செய்த அட்டூழியங்களை மறக்க முடியாது. கட்டாய பிள்ளை பிடி கொடுமைக்கு புலிகளுக்கு முன்மாதிரியாக இருந்தவர்கள் இவர்கள்.

  Reply
 • Thalaphathy
  Thalaphathy

  இங்கு பதிவிடப்பட்ட கடைசிப் பின்னூட்டங்களையும், இந்த உலகசரித்திரத்தில் மனிதகூட்டங்களின் வரலாறுகளையும் ஒப்பிடும் பொழுது, சில விடயங்கள் தெட்டத்தெளிவாக விளங்குகின்றன. அதாவது சமூகமுன்னேற்றம் என்பது தமிழர்களுக்கு தேவைப்படாத ஒன்று. இந்த தமிழ்ச்சமூகம் கற்காலத்து நம்பிக்கைகளையும், அந்த நம்பிக்கைகளில் எவராவது எந்தவகையான மாறுதல்களையும் ஏற்படுத்தவிடாமல் பாதுகாத்து, தானும் வாழாமல், உலகப் போக்கிற்குல் தன்சந்ததியும் இணைக்கவிடாமல் ஏதோ ஒரு தனித்தன்மையை காவித்திரியுமாறு எமக்கும், எல்லோருக்கும் சொல்கிறது. தாங்கள் மற்றவர்களுக்கு செய்த பாவங்களையும் வன்முறைகளையும் கழுவ, துலாக்காவடி, பறவைக்காவடி மற்றும் வைரவர் பலி என்று இன்றும் தொடர்ந்து கொண்டும், பறைமேளத்தின் சுருதியில் கலையாடி வாக்குச்சொல்லி வாழவும், உணர்வு நரம்புகளை புடைக்கவைக்க எவன் சுருதிபாடுகிறனோ அவனே தனது இனத்தவனென்றும் கங்கனம் கட்டி காட்டுமிராண்டி வாழ்வே தமது இனப்பெருமை என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது. பறைமேளத்தின் சுருதியில் லயித்து, பறைதட்டியவர்களின் பின்சென்று, கொத்துக் கொத்தாய் முல்லிவாய்க்காலில் பலியிடப்பட்டபோதும், எமது இராகம் பறைமேளத்தின் சுருதியே என இன்றும் ஒற்றைக்காலில் நின்றுகொண்டு மாற்றத்தை விரும்புபவர்களை, போக்கிரிகளென்றும் துரோகிகளென்றும் புறம்சொல்கிறது. இந்த இனம் எந்தக்காலத்திலாவது கெளரவமாக வாழுமா?

  Reply
 • மாயா
  மாயா

  //இந்தத் தலைப்பு புளொட் பற்றிய மீள்பார்வைக்குக் கொஞ்சமாவது உதவியிருக்கிறது. இன்னொரு இயக்கம் விமர்சனப்படுத்தப் படுவதற்கு ஒரு சிறு கட்டுரை எழுதுவதன் மூலம் (ஒன்றன் பின் ஒன்றாக) தேசம் களம் அமைத்துத் தர வேண்டும். – Rohan //

  றோகனே தொடங்கலாம் என நினைக்கிறேன். எந்த இயக்கமாக இருந்தாலும் நடந்த தவறுகளை அல்லது நடந்த பாதிப்புகளை எழுதுங்கள். இறந்தவர்களது பெயர்களை குறிப்பிடலாம். இருப்பவர்களை கவனமாக பயன்படுத்துவோம். அவர்களாகவே வந்து எழுதினால் வரவேற்போம். ஒரு கட்டுப்பாடோடு எழுதும் போது நம்பிக்கையோடு அனைத்து தரப்பினரும் தமது வேதனைகளை அல்லது தாம் கண்ட மோசமான விடயங்களை பதிவார்கள். இவை எதிர்கால அரசியல்வாதிகளை சிந்திக்க வைக்கும். தேசம் பாதையை திறக்கட்டும். பயணிக்க நாங்கள் தயார்……

  Reply
 • vetrichelvan
  vetrichelvan

  மாயா கூறுவதுபோல் எல்லா உண்மைகளும் வெளிவரவேண்டும்

  Reply
 • மாயா
  மாயா

  சுய விமர்சனம் செய்பவர்கள் புளொட்டில் இருந்தவர்கள் அல்லது புளொட்டில் இருப்பவர்கள் மட்டும்தானா? ஏனைய இயக்கங்களில் பிரச்சனைகளே இருக்கவில்லையா? என்னைப் பொறுத்த வரையில் இயக்கங்கள் மட்டுமல்ல > தமிழ் அரசியல் கட்சிகளுக்குள்ளும் இது போன்ற குத்து வெட்டு கொலைகள் நடந்தன. டெலோவுக்குள் நடந்த குத்து வெட்டுகளாலும் கொலைகளாலும் 7 டெலா (சின்ன செந்தில்) போன்றவை உருவாகின. ஈபீக்குள்ளும் முரண்பாடுகள் ஏற்பட்டன. அதுவே பிரிவுகளாயின. புலிகளுக்குள் இருந்த பல முக்கியமானவர்கள் கைதாகி கல்லறையானார்கள். புலிகளது ஆட்சியில் அனைவரும் புலிக்கு ஆதரவாக இருந்திருந்தால் > யுத்த காலத்தில் கைப்பற்றப்பட்ட கொடுமை சிறைகளை அவர்கள் அமைக்க தேவையே இல்லை.

  மனித உரிமை குறித்து கதைக்கும் > இவர்கள் எல்லோரும் எப்படி மக்களை மாக்கள் ஆக்கினார்கள் என தெரிந்தோர் எழுத வேண்டும். ஒன்றுமே தெரியாதென்றால் தொடர் தவறுகளுக்கு வழி போட்டு > மலர் தூவுறீங்கள் என அர்த்தம். இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என புலம் பெயர்ந்து வந்தவர்களும் வாய் திறப்பதாக இல்லை. ஆனால் அகதி காரியாலயங்களில் ஏகப்பட்ட கதைகளை சொல்லியுள்ளார்கள். அதை நாங்கள் சொல்வதை விட அவர்கள் சொல்வதே நல்லது.

  Reply
 • Jeyarajah
  Jeyarajah

  அப்பழுக்கற்ற தலைவனையும் மேல்மட்டத்தில் அரசியல் மயப்படுத்தப்பட்ட போராளிகளையும் கொண்ட அமைப்பாக ஈபிஆர்எல்எவ் இருந்ததென்பது சிலருக்கு ஜீரணிக்க முடியாவிட்டாலும் அதுதான் உண்மை. ஒற்றுமைக்காகப் பாடுபட்டதில் ஏனைய தலைவர்களிலும் பார்க்க பத்மநாபாவுக்கு அளப்பரிய பங்குண்டு. புலிகள் பலவீனமாக இருந்த காலத்தில் நான்கு இயக்கங்கள் ஒன்றாகக் கைபிடித்தபோது உமாமகேஸ்வரன் சொன்னது, பிரபாகரன் இவர்களை பழி வாங்குவான் என்று. அதையும் மீறி பத்மநாபா இன ஒற்றுமைக்காகச் செயற்பட்டவர். கேதீஸ் போன்ற பல அறிவாளிகளையும் கொண்ட அமைப்பாக இருந்தது.

  தமிழர் விடுதலைக் கூட்டணியே மேதினக் கூட்டத்தை ரவுண்கோலில் நடத்த , ஈழ மாணவர் பொதுமன்றம் முற்றவெளியில் மிகப்பிரமாண்டமாக மேதினக் கூட்டத்தை நடத்தினார்கள். அதேநேரம் அதீத ஜனநாயகம், பாதுகாப்பு சம்பந்தமாக அசட்டையின்மை, ராணுவ மயப்படுத்தப்படாமை இதுபோன்ற காரணங்களால்தான் பத்மநாபாவும், 13 தோழர்களும் சென்னையில் பலியானார்கள்.

  சாதிகுறைந்த இளைஞர்கள் ஈபிஆர்எல்எவ் இல் இருப்பதாக யாழ்மேலாதிக்கம் குறைகூறி இவர்களைப் புறக்கணித்ததும் நடந்த உண்மை.
  அதேநேரம் இலங்கை-இந்திய ஒப்பந்த காலத்தில் டா- எடி போட்டு கீழ்மட்டப் போராளிகளும் நடந்த கொண்டார்கள். அதற்குப் பதிலாக ஜயா, அக்கா போன்ற வார்த்தைகளைப் பாவித்திருக்கலாம். தமிழ்த் தேசிய பொலிஸ்படை என்றபெயரில் கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கையும் இவர்கள் தவிர்த்திருக்க வேண்டும்.

  இன்று எல்லோர் வாயாலும் உச்சரிக்கப்படும் இலங்கை- இந்திய ஒப்பந்தம், 13வது சரத்து என்பது இயக்கங்கள் காலத்தில்தான் நடந்தது. அது சரியாக நடைமுறைக்கு வந்திருந்தால் இன்று வடக்கு, கிழக்கு என்ற பிரிவினையே வந்திருக்க சந்தர்ப்பமில்லை. வரதர் சொன்னதுபோல தமிழீழம் கிடைக்காதென்று தெரியும். தமிழீழத்திற்கு குறைவான தீர்வை ஏற்க மாட்டோம். வேறு யாராவது தீர்வை எடுத்துத்தந்தால் அதற்கும் விடமாட்டோம். இதுதான் நடந்தது.

  Reply
 • palli
  palli

  //மாயா கூறுவதுபோல் எல்லா உண்மைகளும் வெளிவரவேண்டும்//
  உன்மைதான் அதற்க்காக தாங்கள் டெல்லி பற்றிய கருத்துக்கள் அன்றய நிலைபாடுகள் செயல்பாடுகள் பற்றி எழுத வேண்டும்; காரணம் நீங்கள்தானே டெல்லி பொ,,,,,,????

  Reply
 • விளங்காமுடி
  விளங்காமுடி

  நாபா வெளிநாடு கண்டவர்; கேதிசுந்தான். அறிவாளிககளாகத்தான் இருப்பினம். மற்ற மண்டையன் குழு தலைவர் புலியோட. புலியாட்கள் டெலொவோடை இருக்கையில வரதர் அப்ப ஆதரவாளர். தான் முதலமைச்சராயிருந்து அராஜகம் பண்ணியது புலி அராஜகம் மறைத்து விடாது.

  Reply
 • இராவணன்
  இராவணன்

  kovai
  உமா, இறைவன் மரணம் தொடர்பாக PLOT இடம் கேள்வி கேட்டபோது (விநாயகர் கோவில் அளவெட்டி) அந்த கொலையை தாம் செய்ததாக ஒப்புகொண்டார்கள். ஆனால், ஏன் என்ற காரணம் கூறவில்லை. “கருத்து வறுமை” என்று கூறித் தப்பினார்கள் .

  Reply
 • மாயா
  மாயா

  // நான்கு இயக்கங்கள் ஒன்றாகக் கைபிடித்தபோது உமாமகேஸ்வரன் சொன்னது, பிரபாகரன் இவர்களை பழி வாங்குவான் என்று. – Jeyarajah//

  உமா இந்த 4 பேரும் கைகோர்த்தவை பாத்திட்டு சொன்னார் ” முழியனை (பிரபாகரன்) பத்தி தெரியயில்லை. புடிச்ச கையை வெட்டிப் போட்டுத்தான் தூங்குவான்” நான் ஏலாத்தனத்தில சொல்றதா மனசுக்குள்ள நினைச்சன். அதுதான் நடந்தது. தப்பியது சபாபதி மட்டும்தான்.

  Jeyarajah சொல்லும் ” தமிழ்த் தேசிய பொலிஸ்படை என்றபெயரில் கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கையும் இவர்கள் தவிர்த்திருக்க வேண்டும். ” என்பது நியாயமான ஒரு கருத்து.

  புலிகள் கடைசி காலத்தில் குழந்தைகள் முதல் கிழடுகள் வரை சேர்த்ததுக்கு சற்று சமமானது. அதனால் பாதிக்கப்பட்ட பலரை நான் சந்தித்துள்ளேன். அவர்களுக்கு இவர்கள் கொடுத்த டோச்சர் காரணமாக சிலருக்கு இன்னமும் நடக்க முடியவில்லை. இவர்களையெல்லாம் எப்படி நாங்கள் தோழர்கள் என்பது? வரதர் இப்போது அழகாக கதைக்கிறார். இருந்தாலும் கடந்த காலத்தை பற்றி வருத்தம் என்றாலும் தெரிவிக்க மனம் வரவில்லை. இவர்களையெல்லாம் தலைவர்களாக மக்கள் ஏற்க இயலாது. யோசனை சொல்பவர்களாக வைத்துக் கொள்ளலாம்.

  //வரதர் அப்ப ஆதரவாளர். தான் முதலமைச்சராயிருந்து அராஜகம் பண்ணியது புலி அராஜகம் மறைத்து விடாது.- விளங்காமுடி//
  உண்மையான வார்த்தைகள்.

  Reply
 • kovai
  kovai

  உமா,இறை இருவருக்கும் அஞ்சலி நிகழ்வு வீரசிங்கம் மண்டபத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் நடாத்தப்பட்டது. எந்தவொரு இயக்கத் தொடர்பாளர்களும் பேச்சாளர்களாக அனுமதிக்கப்படவில்லை. குறிப்பாக வாசுதேவா தன்னை பேச விடும்படி, மண்டபத்தில் நாண்டு கொண்டு நின்றார். அவரிடம்,விடுதலை அணி(இளைஞர் பேரவை) சார்பாக, சந்ததியாருடன் சேர்ந்து அஞ்சலி நிகழ்வினை நிகழ்த்தும்படி அறிவுறுத்தப்பட்டது.

  தீக்கோழிகள் மணலில் தலை புதைத்தபடி இருந்தன.

  ‘பிரபலங்கள்’,’கவிஞர்கள்’, ‘படித்தவர்கள்’ எவருமற்ற மேடை இருந்தாலும் கணிசமான மக்கள் அஞ்சலியில் கலந்து கொண்டார்கள். பேரறியாக் கவிஞனின் வரிகளில், யாழில் பிரபல இசையமைப்பாளரின் இசை இவ்வாறு மண்டபத்தை அதிரவைத்தது. “நூறு மலர்கள் மலருமென்று மலர்களிரண்டு வீழ்ந்தன இன்று……….”

  Reply
 • மாயா
  மாயா

  palli on November 9, 2010 10:53 pm
  //உன்மைதான் அதற்க்காக தாங்கள் டெல்லி பற்றிய கருத்துக்கள் அன்றய நிலைபாடுகள் செயல்பாடுகள் பற்றி எழுத வேண்டும்; காரணம் நீங்கள்தானே டெல்லி பொ,,,,,,????//

  பல்லி> அதிகமாக ஆட்களிருக்கிறவங்களுக்கு ஆயுதம் குடுக்கிறதா சொன்னதுக்காக 6 மாத பயிற்சி என்று பின் தளத்துக்கு கொண்டு வந்த தொகை> எந்த இயக்கத்திலும் இல்லாத தொகை. இந்திரா காந்தி சாகிற வரைக்கும் ஓரளவு லக்கி காத்து அடிச்சது. இந்திராவின் சாவோடு > எல்லாம் மாறிப் போனது. அதனாலதான் கொண்டு வந்த சீன ஆயுதங்கள் கொண்டேனர் பிடிபட்டது. கெட்ட காலத்துக்கு சீக்கியர் இருந்த ஒரு இடத்து விலாசத்தையா புளொட் குடுக்க வேணும்?. இந்திரா ” எங்கயிருந்து ஆயுதம் கொண்டு வந்தாலும் பிரச்சனையில்லை” என்றதுக்கு சீன ஆயுதங்களை வாங்கி> பஞ்சாப் காகித ஆலை முகவரிக்கு சாமான்களை ஏத்தியது. புளொட்டோட கெட்ட காலம்…. சீக்கியன் இந்திராவை கொண்டதால> அதுவும் சகுனப் பிழையானது. எல்லாம் பிழையானது.

  அந்த காலத்தில இருந்த புளொட் பொடிகளை போய் நாட்டை பிடிக்க ஏதாவது செய்யுங்கடா என்று விட்டிருந்தாலும் செய்திருப்பாங்கள். ஏனென்றால் 2 சொட்கண்ணோடும்> 4 கிரினெட்டோடும் போன 12 பேர்> நிக்கவெரட்டியா என்ற தனிச் சிங்களப் பகுதியின் மையாமான இடத்தின் போலீசை தாக்கி அங்கிருந்த ஆயுதங்களால் பொலீசு> வங்கி> கொமினிகேசன் சென்டர் என தாக்கி> 1 கிலோ மீட்டர் சுற்று வட்டத்தை 2 மணி நேரம் கையில் வைத்திருந்து விட்டு இழப்புகளில்லாமல் தப்பியது உதாரணம். தாக்குதல் நடந்த இடத்தை சுற்றி இராணுவ – கடல்படை – விமான தளம் மற்றும் போலீசின் முக்கிய பகுதிகள். அனுராதபுரம் > குருநாகல்>ஆனமடுவ> கலாஒய> கல்பிட்டி> சிலாபம் > கட்டுநாயக்க எனும் இடங்கள் மிக அருகாமையில் இருந்தன.

  இனி இந்த தமிழ் கட்சிகள் தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்பினால் > அந்த தமிழீழம் என்ற வாலை முதலில் நறுக்க வேண்டும். அதாவது இந்த கட்சிப் பெயர்களில் இருந்து இந்த “தமிழீழம்” லேபலை கிழித்தெறிந்து > புதிய பெயர் மாற்றம் ஒன்று செய்து கொனள்ள வேண்டும். இது இவர்களுக்கு கடினம்தான். இருந்தாலும் இது ஒரு புண். இதற்கு இனி மருத்தவம் இல்லை. வெட்டி வீசி விட்டு > புத்திசாலித்தனமாக முன்னேற வழியொன்றைத் தேட வேணும். இல்லையென்றால் > தேசிய கட்சிகள் தமிழரை ஆக்கிரமிக்கும். அன்றும் தமிழ் கட்சிகளுக்குள் ஒற்றுமையிருக்கவில்லை. இன்றும் இல்லை. எனக்கு ஒரு பாராளுமன்ற சீட் > இல்லாத போது நான் எப்படி கதைப்பது என்பதெல்லாம் நொண்டிச் சாக்கு. புலிகள் எப்ப பாராளுமன்றம் போனாங்கள்? இருந்தாலும் பேச்சு வார்த்தைக்கு அவங்கள் மட்டும்தானே போனாங்கள். அதை நாத்திக் கொண்டது அவங்கட முட்டாள்தனம். அது திரும்பியே வராது. நாலு பெட்டைகளோடு > ஒரு பொடியனை அனுப்பினா சுறா மாதிரி ஏதாவது செய்து மீன் போல மாட்ட இடமுண்டு. இதுதான் நடக்கும். அதுதானே கடந்த கால புலன் இல்லாத போராட்டங்களில நடந்தது?

  இப்ப சிலர் சோசலிசம் கதைக்கிறவங்களுக்கிட்ட தலையை கொடுத்து நிக்கிறாங்க. இவங்க எவரும் உழைச்சு சம்பாதிக்கிறவங்க இல்ல. எல்லாரும் ஓசியில் புவா சாப்பிடுறவங்க. வேலை வெட்டி இல்லாதவங்கள். இவங்களிடம் திரும்பவும் மக்களை அடகு வைக்கலாகாது.

  ரணில் ஆட்சியில் சமாதான காலத்திலேயே > சனம் மெதுவாக போராட்டத்தில் இருந்து ஒதுங்கியது. போராளிகளும்தான். அதுதான் ஆரம்பம். இனி ஆட்களே இல்லை. கொழும்பே தெரியாதவங்க வெளிநாட்டில இருந்து போயா அடிக்கவா போறாங்க. இப்ப எல்லாம் பல வெளிநாட்டு வரியில்லாத புலிகள் > இலங்கைக்கு போய் வாராங்க. போய் வாரவங்களுக்கு உண்மை தெரியும். இருந்தாலும் சொல்ல முடியாமல் தவிக்கிறாங்க. பாவம் இந்தியாவில இருக்கிற சல்லிக்கு ஒப்பாரி வைக்கிற புண்ணாக்குகள் > தங்கட உழைப்புக்கு இணைய போர் நடத்துறாங்க. அவங்க ஏன் இந்தியாவில நடக்கிற கொடுமைகளுக்கு ஒப்பாரி வைக்கவோ> கண்டு கொள்ளவோ மாட்டேன் என்கிறாங்கள். அங்கயிருந்து காசு வராது? for sample: -http://www.youtube.com/watch?v=eEMU91B1Ftg&feature=player_embedded

  சும்மா ஒரு பேச்சுக்கு > அடுத்து ரணிலை போட்டா> எத்தனையோ பேர் இருக்கிறாங்க இரண்டதம் இடத்துக்கு…. மகிந்தவை போட்டா > குடும்பமே இருக்கு…… ஆனால் நம்ம தமிழ் கட்சித் தலைவர்களின் பரந்த நோக்கங்களை பாருங்க> இரண்டாவது இடத்துக்கு பேர் சொல்ற மாதிரி எவருமில்லயப்பா? ….. இவங்களுக்கு பின்னால போய் நடுத் தெருவில கையேந்திறுதை விட > நல்ல புளியங் கொம்பா …….. இல்லை. நீங்களே தீர்மானியுங்க. அவங்க கதைக்கிறது எல்லாமே நல்லாயிருக்கு. யதார்த்தம் மிசிங்.

  என் மனசில் பட்ட இன்னொரு விசயம்> வெளிநாட்டில இருந்து போன சாமான்களையே எடுக்க வக்கில்லாம புளொட் இருக்கு என புலத்து புளொட் தலைவர் டீபீசியில சொல்றார். நண்பர்கள் சொல்கிறார்கள். அன்றைக்கும் கொண்டேனரை பறி கொடுத்தீங்க. இன்றைக்கும் கொடுத்தீங்க. பாருங்க “லிட்டில் எயிட்” என சின்ன அமைப்பு > ஒரு புண்ணாக்கு அரசியலும் இல்லை > தாங்கள் கொண்டு போறதை கொடுத்துட்டு வாராங்களேயப்பா. அந்த மனுசுன் அரசியல் கட்சி தொடங்கலாமே? நீங்களலெல்லாம் அரசாங்கத்தோட எத்தனை காலமா இருந்தீங்க.

  அவங்கள விடுங்க. புலத்தில இருந்து புலிகள் அனுப்பின கப்பல் போகாதென்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் நீங்கள் அனுப்புற சமான்களை எடுக்க முடியுமா என்று கேட்காமல் அனுப்பின புத்திசாலிகள் யோசிக்கவே இல்லையா? ஒரு கொண்டேனர் சாமானை கொண்டு போகத் தெரியாதவங்கள> எப்படியப்பா ஒரு நாட்டு மக்களை சுபீட்சத்துக்கு கொண்டு போவாங்கள்? என்று நம்புறது.

  கடந்த முறை ஜெர்மனியில நடந்த மாநாட்டில > வந்தவங்கள் எல்லாம் காசு போட்டு வெளிநாட்டில தொழில் தொடங்கி / வீடு வாங்கி அதில வருகிற வருமானத்தில > தாயக மக்களுக்கு உதவுவம் என்றாங்களாம். ஐயா சாமி > சாகப் பொறவன் தண்ணி கேக்கிறான்> இவங்களோ தண்ணி பக்டரி கட்டி தண்ணி போத்தல் குடுக்க மாநாடு நடத்துறாங்க. இதைத்தான் தண்ணி காட்டுறது என்கிறதோ?

  தோழர்களே நீங்க வந்த நாடுகளில இருந்து இங்கு வர > விமான செலவு > ஏனைய செலவு எல்லாமே அநியாயம். அதை அந்த மக்களில் யாருக்காவது நேரடியாக அனுப்பியிருந்தால் எத்தனை குடும்பம் வாழும்? போட்டோ > வீடியோ எடுத்து பப்ளிசிட்டி செய்ய உதவி செய்ய வேண்டாம்.

  எனக்கென்னவே பல இயக்கங்களில் இருந்தவர்கள் காந்தீயவாதிகளாக இருந்தாக படுகிறது. பலர் எதுவுமே எழுதுவதாக இல்லை. எழுதுங்கள். மனசாவது ஆறும்.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  இராவணன் / உமா, இறைவன் மரணம் தொடர்பாக Plot இடம் கேள்வி கேட்டபோது (விநாயகர் கோவில் அளவெட்டி) அந்த கொலையை தாம் செய்ததாக ஒப்புகொண்டார்கள். ஆனால், ஏன் என்ற காரணம் கூறவில்லை. “கருத்து வறுமை” என்று கூறித் தப்பினார்கள்

  இராவணா! இது பழையகதை. புளொட்டுத்தான் செய்தது என்பதில் சந்தேகமே கிடையாது. காரணம் இந்தவிடயம் எனக்கு நன்கு தெரியும். கேள்விச் செவியன் ஊரைக்கொடுத்தான் என்றமாதிரிதான் எல்லாம் நடந்தது.
  சுத்தரத்தை சித்திராப்பிரசுரத்தில் வைத்து போட்ட பின் இறை அந்தரோட்டால் போனாராம். இதனால் இறைதான் சுந்தரத்தைக் காட்சிக் கொடுத்து சீலனும் பிரபாவும் சுட்டார்களாம். இதற்கு எநத ஆதராமும் கிடையாது. இறை சுந்தரத்துடன் மிக நெருங்கிப்பழகியது மட்டுமில்ல சில வேலைத்திட்டங்களையும் செய்தார்கள். அந்தக்காலத்தில் புலி புளொட் இரண்டையும் ஒன்றாக்கும் முயற்சியில் இருபக்கத் தொடர்வுகளையும் இறை வைத்திருந்தார். இறை இறப்பதற்கு முன் மாலை 6 மணியளவில் எனது வீட்டில் ரீ குடித்துவிட்டுத்தான் போனவர். இறையுடன் கதைக்க என்று போய் வாய்கலப்பு உயிரெடுப்பாக முடிந்தது. இதை எத்தனை தரம் எழுதுவது. இதுதான் உண்மை உண்மை உண்மை. இறையும் உமாவும் நல்ல நண்பர்கள் உமாவுக்கு இதன் ஒருபகுதி சிதம்பரசக்கரத்துப் பேய்தான்.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  பல்லி நீங்கள் பல கேள்விப்பட்ட விசயங்களை சரியாக எழுதினாலும் பல புனைவுகளாகவும் நீங்கள் கேள்விப்பட்டுள்ளீர்கள். கோவை: இராவணன்! சந்ததி இறையையோ உமாவையோ சுடவில்லை. ஆனால் வாக்குவாதம் நடைபெற்றது. இறையும் சந்ததியும் இளைஞர் பேரவையில் பொது வேலைத்திட்டங்களில் ஈடுபட்டவர்கள். சந்ததி யாரையும் சுட்டது கிடையாது. பண்ணாகம் சேயோன்: சந்ததி; வாசுதேவா; நான் ; இறை எல்லோரும் கூடித்திரிந்த காலங்கள் பல உண்டு. இறை புலியிலோ புளட்டிலோ இருக்கவில்லை என்பது சரியா இருந்தார்கள் என்பது சரியா என்ற கணக்கிட முடியாது. புலி புளொட் விரிவின்பின் தான் புலியா புளொட்டா என்று தீர்மானிக்க முடியும். அதற்கிடையில்தானே ஒருவரை ஒருவர் போட்டுத்தள்ளி விட்டார்களே. தப்பி ஒடி நான் மட்டும் உயிரோடு இருக்கிறேன். இறை உமாவின் இறுதி அஞ்சலி பற்றி கோவை தகவல் சரியானதே. இளைஞர் பேரவையில் விடுதலை அணி என்று மாவை யாப்பை மீண்டும் தேர்தலுக்குரியதாக மற்ற முயன்றபோதே நாம் பிரிந்த வந்தோம். உமாமகேஸ்வரனும் இதில் ஒருவர்.

  மாயா!/அந்த காலத்தில இருந்த புளொட் பொடிகளை போய் நாட்டை பிடிக்க ஏதாவது செய்யுங்கடா என்று விட்டிருந்தாலும் செய்திருப்பாங்கள். ஏனென்றால் 2 சொட்கண்ணோடும்> 4 கிரினெட்டோடும் போன 12 பேர்> நிக்கவெரட்டியா என்ற தனிச் சிங்களப் பகுதியின் மையாமான இடத்தின் போலீசை தாக்கி அங்கிருந்த ஆயுதங்களால் பொலீசு> வங்கி> கொமினிகேசன் சென்டர் என / ஏன் கிளிநொச்சி வங்கி எதை வைத்து அடித்ததாம். அங்கே சுந்தரம் இல்லை என்றால் எல்லாம் நாறியிருக்கும். வேலைபழு நேரவின்மை காரணமாக தொடர்ந்த இங்கே வந்து எழுதமுடியாமல் உள்ளேன். சரியான தகவல்களை தயவுசெய்த ஆதாரபூர்வமாக வைப்பது அவசியம்.

  Reply
 • மாயா
  மாயா

  குசும்பு > தொடர்ந்து எழுதுங்கள். நானும் அவசர அவசரத்தில் ஏதாவது எழுதுகிறேன். நன்றி

  Reply
 • BC
  BC

  //ஒருவரை ஒருவர் போட்டுத்தள்ளி விட்டார்களே. தப்பி ஒடி நான் மட்டும் உயிரோடு இருக்கிறேன்.//
  என்ன கொடுமை இது குசும்பு! தமிழர் விடுதலைக்கு என்று தொடங்கிய இயக்கங்கள் இப்படி சொல்ல வைத்துவிட்டதே! எந்த காலத்திலும் ஆயுத இயக்கங்கள் வேண்டாம்.

  Reply
 • kovai
  kovai

  குசும்பு!
  உங்கள் எழுத்தில் பல தவறான எடுமானங்கள் உள்ளன.
  மூதாட்டியின் கழுத்தை நெரித்துக் கொண்டு களவெடுத்தவர்கள்தான், தங்களைப் பிடிக்க முயற்சித்த இறை, உமாவைக் கொன்றார்கள். அவர்களுக்கு தண்ணீர் தெளித்து, தோழர்கள் ஆக்கியது சந்ததியார். அந்தத் தோழர்களின் வரலாற்று அனுபவந்தான் நிக்கவரெட்டியா காவலாளியை கழுத்து நெரிக்கக் கை கொடுத்ததது. இறை இயக்கங்களில் உறுப்பினராக இருந்ததில்லை. சுந்தரத்திற்கும் இறைகுமாரனுக்கும் வேலைத் திட்ட தொடர்புகள் இருந்ததில்லை. உமைகுமாரன் விடுதலைப் புலிகளின் முழு நேர உறுப்பினராக இருந்தவர். இளைஞர் பேரவையினரிடமிருந்த பிரிந்தவர்கள்தான் விடுதலை அணி. விடுதலை அணி பிரிவின் முன்னமே உமாமகேஸ்வரன் விடுதலைப் புலிகளின் CHAIRMAN.

  Reply
 • மாயா
  மாயா

  //அந்தத் தோழர்களின் வரலாற்று அனுபவந்தான் நிக்கவரெட்டியா காவலாளியை கழுத்து நெரிக்கக் கை கொடுத்ததது. – கோவை//

  இது தவறு. அப்படிக் கொல்லப்பட்டவர் கொழும்பிலிருந்து உடப்புக்கு கேஸ் சிலின்டர் கொண்டு வந்தவர். நிக்கவெரட்டியாவில் துப்பாக்கியால் சுட்டுத்தான் சிலர் கொல்லப்பட்டனர்.கழுத்து நெரித்து கொல்லப்படும் நிலையில் எவரும் இருக்கவில்லை.

  நிக்கவெரட்டியா தாக்குதலுக்கு போனவர்களில்5 பேர் போலீசுக்கும் > 3 பேர் வங்கிக்கும் > 2 பேர் கொமினிகேசன் பகுதிக்கும் சென்றார்கள். நடு வழியில் 2 பேரை > ஏதாவது எதிர்பாராத விதத்தில் கல்பிட்டி – புத்தளம் – ஆனமடு – கலாஒய பகுதியிலிருந்து இராணுவமோ > போலீசோ> கடல்படையோ வந்தால் ஒரு பாலத்தை தகர்க்க வெடி மருந்துகளோடு விட்டுச் செல்லப்பட்டது. போலீசுக்குள் போனவர்களில் ஒருவரான சாம் முருகேசு (இவர் முருங்கனைச் சேர்ந்தவர்/டில்லியில் பயிற்சி பெற்றவர் ) சில காலத்துக்கு முன் இலங்கையில் வைத்து புளொட்டாலேயே கொல்லப்பட்டதாக அறிகிறேன். அவர் இறந்தது உண்மை. எப்படி இறந்தார் என்பது குறித்த சரியான தகவல் என்னிடம் இல்லை. போலீசுக்குள் போன ஏனையவர்களில்> ஒருவர் கனடாவில் இருக்கிறார். ஒருவர் சுவிசில் இருக்கிறார். ஒருவர் இந்தியாவில் இருக்கிறார்.

  வங்கிக்கு சென்ற பீஎல்ஓ ராஜா > பரந்தன் ராஜனோடு இணைந்து பின்னர் பிரிந்து சென்னை வடபழனியில் இருந்தார். அவரும் இறந்து போனார். இவர்தான் அந்த சிலின்டர் கொண்டு வந்தவனை கொன்றவர். சிலர் இதைச் செய்தது தாங்கள் என்று சொன்னதுண்டு. அந்த சிங்களவரைக் கொல்ல வேண்டி இருக்கவில்லை. அவர் சிலிண்டர் ஒன்றை தூக்கிக் கொண்டு உள்ளே வந்த போது உள்ளே இருந்தவர்களைக் கண்டதும் வெருண்டு போலீசுக்கு போகப் போகிறேன் என அடம் பிடித்து கத்தத் தொடங்கினார். இதனால் அந்தஆள் சாக வேண்டி வந்தது. அடுத்த இருவர் வான் ஒன்றில்
  வந்தார்கள். இவர்கள் மிரண்டு போய் நின்றார்கள். அதனால் அவர்களை கட்டிப் பொட்டார்கள். அவர்களால்தான் உடப்பிலிருந்து தாக்குதலுக்கான குழு போன விபரம் போலீசுக்கு தெரிய வந்தது. இல்லாவிட்டால் அதுவும் தெரிந்திருக்காது.

  குசும்பு சொல்லும் களிநொச்சி தாக்குதல் மற்றும் கொள்ளையும் > நிக்கவெரட்டியா தாக்குதலும் கொள்ளையும் நடந்த காலம் > நடந்த இடம் குறித்து சற்று நல்ல மதிப்பீடு செய்வது நல்லது. அவை இரண்டும் ஒரே மாதிரியானவை இல்லை. கிளிநொச்சி தமிழ் பகுதி. இது சிங்களப் பகுதி. அங்கே பிடிபடும் வாய்ப்புகள் குறைவு. மக்களும் காட்டிக் கொடுக்க மாட்டாங்கள் என்று நம்பலாம். நிக்கவெரட்டியாவில் இது எதிர்மறை. பலருக்கு சிங்களம் தெரியாது. ஓட வழியும் தெரியாது.

  முக்கியமான விடயம் > தாக்குதலுக்கு ஆயுதங்களை அனுப்புவதாக சொல்லி விட்டு > புளொட் உரத்த நாட்டிலிருந்து ஆயுதங்களை அனுப்பாமல் விட்டது. அதற்கான காரணம் சுபாசும் > தாசனும் இல்லாமல் தாக்குதல் நடக்க விடாமல் பண்ணுவதாக இருந்ததேயாகும். நல்ல காலம் தாக்குதல் இடங்கள் மூவருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. வாமர் > ராஜா > இன்னொருவர். உமாவே தாக்குதல் கொழும்பில் என்றே கருதியிருந்தார். எல்லாம் முடிந்த பிறகே நிக்கவெரட்டியா எனத் தெரிந்தது. போலீசிலிருந்த ஆயுதங்களை வைத்துத்தான் எல்லாமே நடந்தது. இதற்கும் கிளிநொச்சி வங்கிக் கொள்ளையும் ஒரே மாதிரியானவை இல்லை. மேலதிக தகவல்களை எழுத விரும்பவில்லை. அதில் ஈடுபட்ட பலர் இன்னமும் இலங்கையில் இருக்கிறார்கள். இத் தாக்குதலுக்கு பின்னரே உடப்பில் காவல் நிலையம் ஒன்று உருவானது.

  Reply
 • சீலன்
  சீலன்

  இதில் பல்லி நால்வர் பெயரை குறிப்பிடாத போது எப்படி சசி, ரத்தினம் தான் மிகுதி இருவரும் என நீங்கள் இனம் காட்டினீர்கள்? //
  என்று பல்லி குறிப்பிட்டுள்ளீர்கள் இதில் நான் குறிப்பிட்ட சசி இரத்தினம் அந்த ஆறுபேரில் உள்ளடங்கள் இல்லை. சசி இவர் புதுக்கோட்டை முகாமைச் சேர்ந்தவர் தங்கராஜாவின் பிரச்சனையில் ராஜனுக்கு உதவியர் எனக் கருதி கொலைசெய்யப்பட்டார். ரத்தினம் பீ முகாமில் தப்பி ஒடியதற்காக சித்திரவதையின் போது இறந்தவர் இதை குறிப்பிட்டது மொட்டை மூர்த்தியின் அடியாள் ஆன குகன்.

  //நான் ஒருமுறை ஜெயபாலனிடம் என்னிடம் கழக தகவல்கள் நண்பர்கள் மூலம் சேகரித்து வைத்துள்ளேன் அதை உங்கள் தளத்தில் போடலாமா என கேட்டேன், அதுக்கு அவர் என்னை அறிமுகம் செய்யும்படி கேட்டார்; அந்த சூழ்னிலையில் என்னால் என்னை அறிமுகம் செய்ய முடியவில்லை, அதனால் அதை அப்படியே விட்டு விட்டேன்;//
  எனக்குறிப்பிட்டுள்ளீகள் உங்களின் தகவல்களை நீங்கள் எனக்கு அனுப்பும் பட்சத்தில் அதை வெளிக்கொண்டு வருவதற்கு என்னால் ஆன முயற்சியை எடுப்பேன்.

  Reply
 • palli
  palli

  // அங்கே சுந்தரம் இல்லை என்றால் எல்லாம் நாறியிருக்கும். //
  எந்த சுந்தரம்?? இதில் பங்கு பற்றியது வாமர் தலமையில் பி எல் ஓ ராஜா தானே தலமை ஏற்று போனதாக சொல்லுகிறார்கள்? அதேபோல் ஓட்டிகள் பரையா; முகுந்தன் செயல்பாடுகளும் அதேபோல் ஒரு பெண் (அவரது பெயர் கூட உமா என இருக்கலாம்) உதவினாராம்; இறுதி காலங்களில் அவர் பரந்தன் ராஜனுடன் இனைந்ததாகவும் செய்திகள் இருக்கே, அஜீவன் நீங்கதானே இதுக்கு நேரடி சாட்சியம், இதில் பாங்கில் அடித்த நகையை வாமர் சிலதை ஏதோ தில்லுமுல்லு விட அது தலமைக்கு தெரியவர வாமர் பம்பாய் பயணமாக வேண்டிய சூழல் என்பது வாமருடன் பம்பாயில் குரக்கன்மா வியாபாரியின் வாக்குமூலம்;

  //பல்லி நீங்கள் பல கேள்விப்பட்ட விசயங்களை சரியாக எழுதினாலும் பல புனைவுகளாகவும் நீங்கள் கேள்விப்பட்டுள்ளீர்கள்.// அது எது என சுட்டிகாட்டினால் அதற்கான விளக்கத்தையும் கேட்டு எழுதுவேன், நான் விடயங்களை கேட்டு அறிபவர்கள் குசும்புபோல் 1983 முன்பு செயல்பட்டவர்களையும் மாயாபோல் சென்னையில் இருந்து ஓரத்த நாடுவரை தெரிந்தவர்களும் என்பது குறிப்பிடதக்கது; சரியான தகவல் வர வேண்டும் என்பதுக்குதானே எழுதுகிறோம், ஆகவே குசும்பு மாயாபோல் பங்கு கொண்டவர்கள் விவாதிக்கும் போது ஜயர் போல் கற்பனை கதை சொல்பவர்கள் முகம் வெளிக்கும்;

  // இறை இயக்கங்களில் உறுப்பினராக இருந்ததில்லை. சுந்தரத்திற்கும் இறைகுமாரனுக்கும் வேலைத் திட்ட தொடர்புகள் இருந்ததில்லை.//
  இருக்கலாம் ஆனால் இவர் காந்திய செயல்பாட்டில் பங்கு கொண்டவர் என்பதை அவருடன் செயல்பட்ட பளையை சேர்ந்த ஒரு நண்பர் சொல்லுகிறார்; அவரும் காந்தியத்தில் ஒரு முக்கிய நபர் (பெயர் குறிப்பிடவில்லை) :
  //நிக்கவெரட்டியா தாக்குதலுக்கு // மாயா சொன்னது அத்தனையையும் எனக்கு பி எல் ஓ ராஜா சொன்னார், அதோடு வாமர் இறுதிவரை கடலில்தான் இருந்தாராம், அத்துடன் சாம்முருகேஸ் இவர்கூட கழக உழவுதுறையை சேர்ந்தவர்தான்; இவர் பெரிஜயா விசுவாசி இவரது கழுத்தில் புலிகளின் சனைட் குப்பி போல் பெரிசின் படம் தொங்கிய வண்னமே இருக்கும்; இறுதிகாலத்தில் முகுந்தனுக்கு உதவியாக செயல்பட்டவர்கள் இவரும் ஆச்சி ராஜனுமே(மெய்பாதுகாவலர்) ஆனால் ஆச்சிக்கு முகுந்தல் கொலை திட்டத்தில் பங்கு உண்டு, இவருக்கு அதுபற்றி தெரியாது; இவரே முகுந்தன் உடலை கொழும்பில் பெற்று வவுனியாவரை கொண்டு வந்தார்; இவர் உளவுதுறையில் இருந்ததால் இவருக்கு ஓர் அளவு கள்ளபுத்தி வேலை செய்யும் ; அதனால் இந்த கொலையின் பின்ணணி யார் யார் பங்கு கொண்டார்கள் என்பதை சொல்லகூடாத இடத்தில் சொல்லியதால் இவருக்கும் மாலை போட்டது கழகமே;

  Reply
 • palli
  palli

  //ஏன் கிளிநொச்சி வங்கி எதை வைத்து அடித்ததாம். அங்கே சுந்தரம் இல்லை என்றால் எல்லாம் நாறியிருக்கும். //
  இதன் நாயகன் பரந்தன் ராஜன் என்பதாகதானே சொன்னார்கள். ராஜன் இயக்கத்துக்கு வரமுன்பே பரந்தன் கிளிநொச்சி மக்களுக்கு அவர் ஒரு ரவுடியாய் அறிமுகமானவர்தானே; இவரை சந்ததிதான் காந்திய காவலாளியாக கந்தியத்தில் இனைத்தாராம்; பின்பு முகுந்தன் பிரபா பிரிந்த போது பிரபாவின் கொட்டத்தை அடக்க சரியான நபர் ராஜந்தான் என்பதை புரிந்து கொண்ட சந்ததி உமாவுடன் ராஜனை தொடர்புகள் செய்ததாக அன்றய கழக காந்திய தோழர்கள் சொன்னாலும் ராஜனும் அப்படிதான் சந்ததிக்காகவே தான் கழகத்தில் இனைந்ததாக சொல்லுகிறார்; இவரது மிக நெருங்கிய நணபர்கள் காக்கா மாணிக்கதாஜன்; மாணிக்கம்தாஜன் பரந்தன் ராசனுடன் ரவுடியாக இருந்த காலத்தில் இருந்து நண்பர் ஆனால் காக்கா இயக்கமான பின்பே நண்பர் ஆனார், இவர்கள் மூவரையும் முகுந்தன் என்றுமே ஒன்றாய் இருக்க விட்டதில்லை; ஆனால் காக்காவை முகுந்தன் கொலை செய்தது அவரது தனிபட்ட பிரச்சனையே தவிர கழககருத்து முரன்பாடல்ல; ஆனால் காக்காவின் குடும்பமே அன்றய காலத்தில் கழக வளர்ச்சிக்காய் உதவியது என்பது உடுவில் மக்களுக்கு நன்கு தெரியும்;

  காகாவின் இழப்பை சரி செய்யவே அன்று சின்னமெண்டிஸ்க்கு தளபொறுப்பு கொடுக்கபட்டதாய்கூட செய்திகள் உண்டு ஆனால் உன்மையில் சின்ன மெண்டிஸ் மிக ஒரு நல்ல போராளி; துணிவு,நேர்மை, பண்பாடு, விட்டுகொடுப்பு, மனிதநேயம் இப்படி பலதில் காக்காவுக்கு நிகரான நபராய்தான் நான் பல இடத்தில் மெண்டிஸ்சை பார்த்தேன்; எப்படி காக்கா கொல்லபட்டார் இதில் வாமர் குடும்பமே சம்பந்தபட்டது; வாமர் ராஜன் ,அக்கா குடும்பம் என மூன்று குடும்பம் ஓரத்த நாட்டில் தனி தனி வீட்டில் இருந்தார்கள்( ஆறாம் நம்பர் என தோழர்கள் சொவார்கள்) இதை தமிழகத்தை சேர்ந்த இளவளகன் ,ராமசாமி , தவிடன்; இவர்கள் எஸ் டி எஸ்சின் தொண்டர்கள். இவர்கள் செல்வாக்கு அன்று கழகத்துக்கு இருந்ததால் கழகம் ஓரத்த நாடு பட்டுவாகோட்டையில் மிக முன்னேற்றம்; சரி இதில் எப்படி காக்கா கொல்லபட்டார் , காக்கா இயக்கத்தை விட்டு வெளியேறி பட்டுவா கோட்டையில் ஒரு தங்குவிடுதியில் தங்கி இருந்தார் (ராகவனும் காகாவும் எதிர் அணியில் இருந்தாலும் மிக நெருங்கிய நண்பர்கள்) அவர் இடைக்கிடை மேலே குறிப்பிட்ட மூன்று குடும்பத்திலும் சாப்பிட வருவது வழக்கம் (நட்பு ரீதியாய்தான்) இதுவே அவரது அழிவுக்கும் வழிசெய்தது;

  Reply
 • palli
  palli

  // உங்களின் தகவல்களை நீங்கள் எனக்கு அனுப்பும் பட்சத்தில் அதை வெளிக்கொண்டு வருவதற்கு என்னால் ஆன முயற்சியை எடுப்பேன்.//
  இது பற்றி ஜெயபாலனுடன் பேச உள்ளேன், அத்துடன் எனக்கு தகவல்கள் தந்தவர்கள் அனுமதி பெற்று கண்டிப்பாக முடிந்தால் தருவேன், இன்று தேசத்தில் போகும் பின்னோட்டங்கள் உன்மையான ஆவணங்கள்தான், காரணம் வாதம் செய்தே உன்மை பொய் வருகிறது,

  Reply
 • மாயா
  மாயா

  உமா அல்ல பல்லி > சோபனா. இவர் கனடாவிருப்பதாக சொல்கிறார்கள். ஜொமனிக்கே இவர் வந்தார். பரந்தன் ராஜனோடு இணையவில்லை. பீஎல்ஓ ராஜா > வெளியேற உதவியிருக்கலாம். இவர் கழகத்தை விட்டு வெளியேறி முதலில் வந்தது பிரசாத்திடம். அவரிடம் பிரச்சனைகளை சொல்லியிருந்தார். பீஎல்ஓ ராஜாவுக்கு உடப்பில் வைத்து சோபனா பழக்கம்.

  Reply
 • kovai
  kovai

  மாயா!
  கழுத்து நெரித்துக் கொலை செய்த தோழமைச்செய்தி இங்கேதான் வெளிவந்தது. அந்த அனுபவம் அந்த மூதாட்டியை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்பிருந்தது என்பதே என் கருத்து.
  பல்லி!
  அய்யர் எழுதியது கற்பனைக் கதையல்ல. நடந்தவையே என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. இதில் புனைவு எது என ஆதாரங்களுடன் முன் வைக்கவும்.
  பரந்தன் ராசன் ஆனந்தசங்கரியின் அடியாளாக, ‘பரந்தன் சந்தி ச்சண்டியனாக’ இருந்தது எனக்குத் தெரியும். புலிகளின் பிரசுரம் ஒன்றை வினியோகிக்கும்படி கொடுத்த போது, அதில் தன் பெயரை எழுதி ஆனந்தசங்கரிக்கனுப்பியதால் புலிகளால் மிரட்டப் பட்டவர். (இந்தச் சம்பவம் பற்றி ஆனந்தசங்கரி தன் கருத்து வெளியிட்டால் அது வரலாற்றுப் பதிவாகும்). அந்த நேரத்தில் ‘அக்காவின்’ தொடர்பால் புலிகளிலிருந்து தப்பியோடிய உமா, ‘எதிரியின் எதிரியை’ தோழராக்கியது வரலாறு.

  Reply
 • raja
  raja

  களத்தில் அரசியல் வேலைசெய்த சுப்பர் உரும்பிராய் ரவி பின் தளத்திற்கு 1987ல் சென்றார்கள் இவர்களிற்கு என்ன நடந்தது என்று யாருக்காவது தெரிந்தால் எழுதவும்.

  Reply
 • palli
  palli

  // ‘எதிரியின் எதிரியை’ தோழராக்கியது வரலாறு.//
  இது தவறான செய்தி நான் புளொட் பேபி மற்றும் சந்ததியுடன் பேசி இருக்கிறேன், காக்காவுடன் இருநாள் தங்கி இருக்கிறேன், மாணிக்கதாஜனுடன் ஜேர்மணியில் பேசியும் இருக்கிறேன் இந்த மூவரின் கருத்தும் பரந்தன் ராஜன் பற்றியதில் வேறு படவில்லை, புலிகள் பூனையாக இருந்த காலத்திலேயே ராஜன் கழகத்தில் பிரபல்யம்; அதோடு கருணாவின் வாக்கு மூலம் பிரபாகரன் பயப்பிடும் தனி நபர்களில் ராஜனே முதலானவர் என்பதும் இங்கே ஒரு சாட்சியமாகிறது;

  // இதில் புனைவு எது என ஆதாரங்களுடன் முன் வைக்கவும்.//
  இது ஒரு பெரியவிடயமா? இதோ பாருங்கள் நான் பலரிடம் தகவல் சேர்த்துள்ளேன் மாயா, குசும்பு, அஜீவன், இன்னும் சிலர் கழகத்தில் இருந்தும் அதுபற்றிய (கழகம்) செய்திகள் சில வேறுபாடான கருத்துக்கள் இருக்கு ஆனாலும் சம்பந்தபட்டவர்கள் வாதம் செய்வதால் ஓரளவு உன்மை வர வாய்ப்புகள் அதிகமே, உதாரணத்துக்கு இதோ சில,
  ஜயரின்;;;; ஜயருக்குள் அடங்கிய தமிழீழம்:
  ராஜனின்;; வழி தவறிய தமிழீழம்;
  சின்னபொடியின்;;சீர் கெட்ட கழகம்;
  சீலனின்;; எனது இலக்கம் இதுவே
  இப்படி இன்னும் பல சொன்னாலும் அத்தனையையும் வாசித்தால் தலையை சுத்துகிறது, ஜயர் எப்போது இருந்து எப்போது வரை அமைப்புகளில் இருந்தார், 1983க்கு பின் ஒரு அமைப்பு சமாசாரம் மற்றய அமைப்புக்கு தெரிந்தால் தெரியபடுத்தியவர் துரோகியாகி பின்பு மண்ணுக்கு இரையாவதுவே வழக்கம், ஆனால் ஜயருக்கு மட்டும் அனைத்தும் அத்துபடி அது எப்படி?? அவர் தகவல்கள் சேகரித்துதான் எழுதுகிரார் எனில் அதை அவர் எங்கும் சொல்லியதில்லை; இது வேண்டும் என்றால் புஸ்பாதங்கதுரையின் மர்மநாவல் போல் இருக்கலாமே தவிர உன்மைகள் வர வாய்ப்பில்லை, ஜயரின் அத்தனை ஆக்கத்தையும் வாசித்தால் புரியும் அவர் புலியை நியாயபடுத்துவது, அதேபோல் ஜயர் கழக பி முகாமிலும் தனது கட்டுரையில் நுழைகிறார், ஆனால் முகாமை மட்டும் எட்டிபார்த்து விட்டு அவர் பின்பு தனது கற்பனை குதிரையை ஓட விடுகிறார், வஸ்த்தியாம் பிள்ளை கொலையில் இருந்து மட்டகளப்பு சிறை உடைப்பு வழிவந்து கருனாவின் பிரிவோடு முள்ளிவாய்க்கால் வரை சம்பந்தபட்டவர்கள் எம்மத்தியில் வாழ்கிறார்கள்? ஆகவே இந்த தெரியாத காலத்தில் எழுதிய ஸங்களை படிப்பதுபோல் ஜயரின் கட்டுரைகளை படிப்பது எப்படி நியாயம்;

  //உமா அல்ல பல்லி > சோபனா.//
  உன்மையே மாயா எனக்கும் பின்பு நினைவு வந்தது, ஆனால் இவர் ராஜாவின் அறிமுகம்தான், ஆனால் அந்த காலந்தில் ராஜனை விட ராஜாவே அந்த அமைப்பின் நாயகன் மட்டுமல்ல சங்கிலியின் அடக்கு முறைக்கு முற்றுபுள்ளி வைத்தார் என்பது பலரது நினைவுகள்? சோபனாவின் உதவியுடன் ராஜா பம்பாயில் உள்ள வாமரிடம் காக்கா கொலை பற்றிய வாக்குமூலம் ஒலிநாடாமூலம் பெறபட்டது எனவும் அது பிரசாந்த் போன்றோருக்கும் தெரியும்; (இவர் வாமனின் பம்பாய் உதவியாளர் பிரசாந்த் ஆக இருந்தால்) மாயா நான் 1988 ஆம் ஆண்டென நினைக்கிறேன் பம்பாய் போயிருந்தேன்; (செம்பூர் பாபுவிடம் இவரும் கழகமே) அப்போது வாமரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தத்து (பிரசாத் மூலமே) மனுஸன் என்ன நாட்டாண்மை செய்தார் பம்பாயில், அப்போது அவரது பெயர் கப்டன் குமார்; வேலு நாயக்கரின் வாரிசென சில பம்பாய்காரர் சொல்லுவது உண்டாம், ஆனால் கழககாரர் கழகத்தை விட்டு வெழியேறி பம்பாயில் கஸ்ற்ற பட்டால் சில உதவிகளும் செய்வாராம்; இப்போது கூட மாயாவின் பகிடிதான் சரியாக இருக்கும் எப்படி இருந்த கழகம் இன்று இப்படி ஆச்சு,

  Reply
 • மாயா
  மாயா

  இவர் ராஜாவின் அறிமுகம்தான், ஆனால் அந்த காலந்தில் ராஜனை விட ராஜாவே அந்த அமைப்பின் நாயகன் மட்டுமல்ல சங்கிலியின் அடக்கு முறைக்கு முற்றுபுள்ளி வைத்தார் என்பது பலரது நினைவுகள்? சோபனாவின் உதவியுடன் ராஜா பம்பாயில் உள்ள வாமரிடம் காக்கா கொலை பற்றிய வாக்குமூலம் ஒலிநாடாமூலம் பெறபட்டது எனவும் அது பிரசாந்த் போன்றோருக்கும் தெரியும்; – palli //

  நீங்கள் சொல்லும் காலத்தில் பம்பாயில் கெப்டன் குமார் (வாமர்) பம்பாய் லொட்ஜ் ஒன்றின் முழுமையாக வாடகைக்கு எடுத்திருந்தார். நீங்கள் சொல்லும் பிரசாத் ; சென்னை எம்எல்ஏ ஹாஸ்டலில் இருந்தவர். வாமர் ஓடிய பின் இவர்தான் வாமரின் மனைவி குழந்தைகளை சிலரோடு கொல்லப் போனவர்.

  இன்னொரு பிரசாத் வாமரை காப்பாற்றியவர். அவர் நிக்கவெரட்டியா தாக்குதலை ராஜாவோடு இணைந்து திட்டமிட்டவர். இவரை உமா ; வேறொரு நாட்டிலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வந்தார். அவரது நண்பர்களே இந்த சோபனா குடும்பம். கொழும்பு அமெரிக்க தூதரகத்தில் வேலை செய்தவர்.

  பல்லி ; சொல்வது சரி. வாமரிடம் , அனைத்து இயக்க பொடிகளும் இல்லை என்று வந்தால் ; சாப்பிடக் கொடுத்து கையில் 50 ரூபாயாவது கொடுத்து அனுப்பும் பழக்கம் இருந்தது. எந்த இயக்கம் என்ற வேறுபாடு வாமரிடம் இருக்கவில்லை. பஞ்சாயத்து பண்ணும் அபார திறனும் இருந்தது. என்னதான் மோசமாக இருந்தாலும் வாமர் ; உமா மேல் அளவு கடந்த அன்பு கொண்டிருந்தார்.

  சந்ததியாரோடு இணைந்து உமாவை கவிழ்க நினைத்த தனது மருமகன் உதயன் ( அன்டனி) வாமாரால் தாக்கப்பட்டு நோயாளியாக சென்னை வந்தார். அன்டனி மேல் சந்தேக பார்வை இருந்தது. இவருக்கு மூத்திரத்தோடு இரத்தமும் போகும். அப்படி அடித்திருந்தார்கள். இவரும் எங்களோடு இருந்தார். அப்போது இருந்த இன்னொரு நண்பர் சா….. ; இப்போது கனடாவில் இருக்கிறார். இவரும் லண்டனில் இருந்து இயக்கத்துக்கு வந்தவர். டில்லி சமாச்சாரங்கள் ; இவருக்கு அதிகம் தெரியும்.

  மேலே சொன்ன அன்டனி தலைமையில் திருச்சியில் ஒரு அசம்பாவிதம் நடந்தது. புலிகளுக்கு எதிரான இந்திய இராணுவம் வெளியேற நக்சல்பாரிகளோடு இணைந்து நடத்திய ஒரு செயல். சிலர் கைதானார்கள். சிலர் தப்பினார்கள்.
  யாரையும் பலவந்தப்படுத்தி அவரோடு இணைத்துக் கொள்ள முயல்பவர் அல்ல. அது எனக்கு நன்றாக தெரியும். நேருக்கு நேர் மோதுபவர். சிலரை அவர் அழைத்து வர மறுத்த போது விருப்பமில்லாவிட்டால் விடும்படி சொன்னவர்.

  Reply
 • நந்தா
  நந்தா

  இந்தக் கொலைகள் எதற்காக நடத்தப்பட்டன என்பதனை எவரும் குறிப்பிடத் தயாரில்லை. ஆயினும் அக்கொலைகள் தனிநபர் பயங்கரவாதம் என்றோ அல்லது பதவி மோகம் என்றோ சொல்வதை விட “யாரோ” வெளியிலிருந்து தலைமையினூடாக நடத்தியவைகளாகவே தெரிகிறது. இறுதியில் “சாட்சி” சொல்ல யாரும் இல்லாதவாறு முகுந்தனும் கொல்லப்பட்டது தற்செயலாக நடந்ததாகக் கருத முடியவில்லை!

  Reply
 • kovai
  kovai

  பல்லி! நீங்கள் குறிப்பிட்ட பெயரில் எவருமே,புலி இயக்கத்தில் அய்யருடன் இருந்தவர்கள் அல்ல. ஆக சந்ததியார் மட்டும் விடுப்பு புடுங்க, புலிகளுடன் இந்தியா சென்றவர். அப்போது ‘அக்கா’விற்காய் ஓடிப் போன உமாவின் குழப்பத்தால்,சந்ததியார் மரணத்தை வென்றவர்.பின் அதே உமாவால் மரணித்துப் போனவர். சந்ததி பேசியிருந்தால், இறை, உமா கொலைக்கு துணை போனதையும், கழுத்து நெரித்துக் கொன்று, அள்ளிய பணத்தில் இயக்கம் வளர்த்ததும், பின் அந்தப் பணத்தில் இந்தியாவில் ‘நாஸ்டா’பண்ணியதும் சொல்லியிருப்பார்.

  அய்யரின் வாழ்வின் பணி புலியைப் பிளந்ததும், புளொட்டை உருவாக்கியதுந்தான். அந்த வகையில் வரலாற்றில் அவர் பங்கு முக்கியமானது. இன்று புளொட் எனப் பெருமைப் படுவர்களுக்கு, அவர்தான் படிக்கட்டு. இந்தியாவால் ‘கொட்டிப் பரப்பிய வாழ்வு’தனைக் கண்டவர்கள்தான், இங்கே அதிகமாக எழுதுகிறார்கள். இவர்கள் புளொட்டின் உருவாக்கம் பற்றித் தெரியாத பால்குடிகள்.

  உமா தான் புனர்ஜென்மம் எடுக்க, பிரபாகரனால் மிரட்டப்பட்ட ‘சந்த்தியார், பரந்தன் ராசன் ,சுந்தரம்’ என்ற மும்மூர்த்திகளுடன், புளொட்டை கைப்பற்றிக் கொண்டதே வரலாறு. எதிரியினெதிரி தோழர்களாய்ப் போனது உண்மையே.

  அய்யரின் எழுத்தின் ‘கற்பனை’பற்றிக் கேட்டால், சம்பந்தமற்ற பேர்களை, கதைகளைச் சொல்ல கூடாது.அது நல்ல கருத்துகளைப் பகிர்வதற்கு இடம் கொடுக்காது.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  கோவை!
  நான் போதியளவு சந்ததி இறை உமாவுடன் பழகியிருக்கிறேன். எனது வீட்டிலும் அவர்கள் வீட்டிலும் தங்குமளவுக்கு எனக்கு இவர்களுடன் பழக்கம் உண்டு. /மூதாட்டியின் கழுத்தை நெரித்துக் கொண்டு களவெடுத்தவர்கள்தான் தங்களைப் பிடிக்க முயற்சித்த இறை, உமாவைக் கொன்றார்கள். அவர்களுக்கு தண்ணீர் தெளித்து, தோழர்கள் ஆக்கியது சந்ததியார்/ நீங்கள் கூறுவதுபோல் சந்ததி அப்படியானவர் இல்லை. பாலைமோட்டை சிவப்பற்றிய சந்ததியின் தகவல்கள் என்னிடம் அதிகம் இல்லை. ஆனால் இறையுடன் தான் கதைக்கச் சென்றது என்பது உண்மை. இறைமிறுக உமாவும் தொடர பின் கொலையில் முடிந்தது என்பதுதான் உண்மை
  /இறை இயக்கங்களில் உறுப்பினராக இருந்ததில்லை. சுந்தரத்திற்கும் இறைகுமாரனுக்கும் வேலைத் திட்ட தொடர்புகள் இருந்ததில்லை. உமைகுமாரன் / இயக்கம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள். புளொட்டாயின் புளொட் சரியாக அமைக்கப்படமுன்னரோ இறையைச் சுட்டாயிற்று. சுந்தரம் இறை நான் சில வேலைத்திட்டங்களைச் திட்டமிட்டோம். சிலவற்றை நடைமுறைப்படுத்தினோம். பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சிறிய அளவினேனும் புரிந்துணர்வை ஏற்படுத்த உதவியது. நாம் கோண்டாவில் குமணன் வீட்டில்தான் சந்திப்போம். அப்போ நான் தலைமறைவு வாழ்கைக்கையை மேற்கொண்டிருந்தேன். இறை உமாவுக்கு இந்தத் தேவை இருக்கவில்லை. அங்கே கண்ணனும் வருவார். முக்கியமாக புலி புளொட்டை இணைக்கும் செயலில் இறை மும்மரமாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. உமா புளொட்டுடன் அதிக தொடர்வில்லாதவர். குறைந்தபட்சம் எனது பக்கத்தில் தவறான எடுமானம் இல்லை என்பதைப் புரிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். எனக்கு ஆரம்பகாலங்களில் பிரபாவில் இருந்து உமா கண்ணன் சந்ததி ராஜான் என இந்தமட்டத்தில் தொடர்விருந்தது. இப்போது இயக்கங்கள் பெரிதாக விஸ்தரிக்கப்பட்டிருக்க வில்லை. நான் இத்துடன் நிறுத்துவது உசிதம் என்று கருதுகிறேன்.

  Reply
 • vanavil
  vanavil

  //இங்கே அதிகமாக எழுதுகிறார்கள். இவர்கள் புளொட்டின் உருவாக்கம் பற்றித் தெரியாத பால்குடிகள்.//

  எழுதுகிறவர்கள் பால் குடிகளாக இருந்தாலும் , தகவல்கள் உண்மையாக இருக்கின்றன. எனவே இவர்கள் புளொட்டில் இருந்தோர் என்பது மட்டுமல்ல, புளொட்டுக்குள் நடந்த உண்மை நிகழ்வுகளை எழுதுகிறார்கள். காந்தியின் வரலாறு எழுத , காந்தியோடு வாழ வேண்டியதில்லை. ஐயர் , எப்போது வெளிநாடு வந்தார்? அவருக்கு தெரிந்தது , ஆரம்பம் மட்டுமே. அதற்கு பிறகே போராட்டம் உச்சத்தை அடைந்தது. பல்லி சொல்வது போல் ; ஐயர் கேட்டு அறிந்தவற்றையும் சேர்த்து , புலிகளுக்கு சார்பாக எழுதுகிறார். உண்மை தெரிந்த சிலர் எழுதுகிறார்கள். பலர் மெளனமாக இருக்கிறார்கள். இயக்கங்களில் இருந்த கீழ் மட்ட போராளிகளுக்கு , தனக்கோ அல்லது தனது முகாமிலோ ஏதாவது நடந்தால் மட்டுமே தெரியும். இதுவே யதார்த்தம்.

  //அய்யரின் எழுத்தின் ‘கற்பனை’பற்றிக் கேட்டால், சம்பந்தமற்ற பேர்களை, கதைகளைச் சொல்ல கூடாது.அது நல்ல கருத்துகளைப் பகிர்வதற்கு இடம் கொடுக்காது.//

  ஐயர் என்ன சட்லைட் வைத்தா பார்த்தார்?

  Reply
 • palli
  palli

  //அய்யரின் வாழ்வின் பணி புலியைப் பிளந்ததும், புளொட்டை உருவாக்கியதுந்தான். அந்த வகையில் வரலாற்றில் அவர் பங்கு முக்கியமானது. இன்று புளொட் எனப் பெருமைப் படுவர்களுக்கு, அவர்தான் படிக்கட்டு. இந்தியாவால் ‘கொட்டிப் பரப்பிய வாழ்வு’தனைக் கண்டவர்கள்தான், இங்கே அதிகமாக எழுதுகிறார்கள். இவர்கள் புளொட்டின் உருவாக்கம் பற்றித் தெரியாத பால்குடிகள். //
  இதுவே ஜயரின் எழுத்தும். உங்களுக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்பது மட்டுமே, புலி புளொட் பிரிவின்போது அல்லது அதற்கு முன்போ அல்லது கழகத்தை கட்டியபோது பிரச்சனைகள் எதுவும் இருக்கவில்லை; இதுக்கு பலர் சாட்சியம்; ஆனால் அதற்கு பின்புதானே அனைத்து அமைப்புகளிலும் தேர்திருவிழா? உங்கள் வாக்குமூலம் இதோ (அய்யரின் வாழ்வின் பணி புலியைப் பிளந்ததும், புளொட்டை உருவாக்கியதுந்தான்.) ஆக அந்த தகுதியுடந்தான் ஜயர் நடையை கட்டுகிறார் என்பதுதானே என் வாதமும்; ஜயருக்கு தெரியாத பல விடயங்கள் அளககிரி; பூபால்; கணவதிபிள்ளை ,திசை, பாலரத்தினம்; மாவை, குகன் இப்படி என்னாலும் பலரை சொல்லமுடியும் நான் சொல்லுபவர்கள் எல்லாம் உயிருடன் இருப்பவர்கள் என்பது குறிப்பிடதக்கது, ஏன் நம்ம ராகவன் கூட இருக்காரே; ஆக ஜயரின் கதைகளை நீங்கள் கேப்பதுபோல் என்னால் கேக்க முடியாது; காரணம் சொற்பொழிவில் எனக்கு நாட்டமில்லை, உங்கள் கோபமே ஜயரின் ஏலாதனத்தை காட்டுகிறது;

  // உமா தான் புனர்ஜென்மம் எடுக்க, பிரபாகரனால் மிரட்டப்பட்ட ‘சந்த்தியார், பரந்தன் ராசன் ,சுந்தரம்’ என்ற மும்மூர்த்திகளுடன், புளொட்டை கைப்பற்றிக் கொண்டதே வரலாறு.:://
  அப்படியாயின் அதற்கு முன்பு கழகம் யாரிடம் இருந்தது என ஜயரை கேட்டு சொல்லுங்கோவன், நாகராசா செய்த நாரதர் வேலை ஜயரையும் வரலாறு எழுத வைக்குது;

  //அய்யரின் எழுத்தின் ‘கற்பனை’பற்றிக் கேட்டால், சம்பந்தமற்ற பேர்களை, கதைகளைச் சொல்ல கூடாது.அது நல்ல கருத்துகளைப் பகிர்வதற்கு இடம் கொடுக்காது.//
  வஸ்த்தியாம் பிள்ளை விடயத்தில் ராஜன் வாக்குமூலமும் ஜயரின் வாக்கு மூலமும் உமா மகேஸ்வரனின் வாக்குமூலமும் முரன்பாடாக உள்ளது, ஆகவே அதை ஜயர் சரியான ஆவணங்களுடன் அல்லது ராகவன் போன்றோரின் சாட்சியங்களுடன் வைப்பதுதானே சரி; அதைவிட்டு நான் எல்லாத்தையும் கண்டேன் கண்டேன் என சொல்லலாமா??

  //இந்தக் கொலைகள் எதற்காக நடத்தப்பட்டன என்பதனை எவரும் குறிப்பிடத் தயாரில்லை. //
  நந்தா கொலை எந்த காரணத்துக்கும் செய்யபடாது ஆனாலும் எமக்கு தெரிந்த அறிந்த காரணங்களை எழுதுகிறோம்; இதுவே உன்மை இல்லாவிட்டாலும் உன்மையை அண்டிய தகவலே தர முயல்கிறோம்; அதனால் எமது வாதத்தின் மூலம் என்ன நடத்திருக்கும் என்பதை பலர் தெரிய கூடும்:

  //இறுதியில் “சாட்சி” சொல்ல யாரும் இல்லாதவாறு முகுந்தனும் கொல்லப்பட்டது தற்செயலாக நடந்ததாகக் கருத முடியவில்லை!//
  சாட்சி சொல்ல வேண்டியவரும் (மெய்பாதுகாவலர்) கொலையில் உடந்தை என்பதால் நந்தா சொன்னது போல் சாட்சியம் இல்லாமல் போய்விட்டது, முகுந்தன் கொலைகூட அமைப்பின் நலன் கருத்தியோ அல்லது அவரது கடந்தகால தவறுகளுக்காக செய்யபடவில்லை, முகுந்தனின் உறவுக்காரர் ஒருவரை (கட்டுவான் சிறி என நினைக்கிறேன்) போட முகுந்தன் முடிவு செய்தபோது சிறியின் நண்பர்கள் ஆச்சி உட்பட பலர் வேண்டாம், என வற்புறுத்தினர் ஆனால் அதையும் கேளாமல் முகுந்தன் சில விஸமிகளை வைத்து சிறியை போட்டு விட்டாராம்; அதனால் கோபம் அடைந்த சிறியின் நண்பர்கள் காலபோக்கில் எமக்கும் இதுதான் நிலை என்பதை உணர்ந்ததால் நாம் பலர் இழப்பதை விட முகுந்தன் என்னும் ஒருவர் போவதே மேல் என முடிவுசெய்து அதன்படி செய்யபட்டதே முகுந்தன் கொலை என செய்திகள்? இது அன்று கழகத்தில் இருந்த சிலர் வாக்குமூலம்,

  Reply
 • Kusumpu
  Kusumpu

  பல்லி! /// அங்கே சுந்தரம் இல்லை என்றால் எல்லாம் நாறியிருக்கும். //
  எந்த சுந்தரம்?? இதில் பங்கு பற்றியது வாமர் தலமையில் பி எல் ஓ ராஜா தானே தலமை ஏற்று போனதாக சொல்லுகிறார்கள்? / சுந்தரமே பிளாற்ரில் கிடந்தவர். ஆயுதங்களின் இருப்பிடமும் பாதுகாப்பும் சுந்தரத்தைத் தவிர வேறுயாரிடம் அன்று இருக்கவில்லை. ஒரு சொற்ப ஆயுதங்களுடனேயே எல்லாத் திருவிளையாடல்களும் நடந்தன.
  /ராஜன் இயக்கத்துக்கு வரமுன்பே பரந்தன் கிளிநொச்சி மக்களுக்கு அவர் ஒரு ரவுடியாய் அறிமுகமானவர்தானே; இவரை சந்ததிதான் காந்திய காவலாளியாக கந்தியத்தில் இனைத்தாராம்; பின்பு முகுந்தன் பிரபா பிரிந்த போது பிரபாவின் கொட்டத்தை அடக்க சரியான நபர் ராஜந்தான் என்பதை புரிந்து கொண்ட சந்ததி உமாவுடன் ராஜனை தொடர்புகள் செய்ததாக அன்றய கழக காந்திய தோழர்கள் சொன்னாலும் / இப்போ கோவை புரிந்திருப்பார் என்று எண்ணுகிறேன் உமா சந்ததி முகுந்தன் சுந்தரத்திற்கிடையில் இருந்த அன்றைய தொடர்வுகளை. மேலும் பல்லி முகுந்தன் இளைஞர்பேரவை கொழும்புக்கிளை தலைவராக இருந்தார். ஈழவேந்தனும் இருந்திருக்க வேண்டும் சரியான ஞாபகம் இல்லை. ஆனால் பரந்தன்ராஜான்: சந்ததி: உமா: வாசுதேவா நாம் எல்லோரும் யாழ்கிளையில் இருந்தே இயங்கனோம் அன்றிலிருந்தே சந்ததி உமா தொடர்வு நீடித்தது. கருத்து ரீதியாகவும் போராட்ட வரையறைகள் பற்றியும் சந்ததி உமாவுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் இருந்தது இல்லை என்பதை யாவரும் அறிவது அவசியம்.

  /காக்கா இயக்கமான பின்பே நண்பர் ஆனார், இவர்கள் மூவரையும் முகுந்தன் என்றுமே ஒன்றாய் இருக்க விட்டதில்லை; ஆனால் காக்காவை முகுந்தன் கொலை செய்தது அவரது தனிபட்ட பிரச்சனையே தவிர கழககருத்து முரன்பாடல்ல் ஆனால் காக்காவின் குடும்பமே அன்றய காலத்தில் கழக வளர்ச்சிக்காய் உதவியது என்பது உடுவில் மக்களுக்கு நன்கு தெரியும்; / காக்கா ஆரம்பகாலத்தில் இயக்கத்தில் இல்லை. புளொட் அவசர அவரசமாக யார் யார் இன்னார் என்பதை சரியாக இனம்காணாமலேயே அள்ளிச் சேர்க்கப்பட்டார்கள். நண்பர்களை இயக்கத்துடன் இணைத்தால் இயக்கம் இயக்கமாக இருக்காது. முகுத்தனின் பாதுகாப்புக்கருதி அம்பிட்டவர்களையம் சரியாக இனம்காணப்படாது சேர்த்ததன் விளைவே புளொட்டின் இப்படிப்போனது என்பது எனது கருத்து. காக்காவை மட்டுமல்ல அவரது அண்ணனையும் கொன்றது முகுந்தனே. பல்லி சொல்வது போல் காக்கா குடும்பம் கழகத்துடன் ஆரம்பகாலத்தின் ஒன்றி வேலைசெய்தவர்கள். இன்று பலர் அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உயிருடன் இருப்பதால் பலவிடயங்களை இங்கே எழுத இயலாது. இவர்களின் மனங்களைப் பாதிக்காமல் இருக்க வேண்டுமானால் இத்துடன் இதுபற்றி எழுதுவதை நிறுத்துவதே சிறந்தது.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  /அய்யர் எழுதியது கற்பனைக் கதையல்ல. நடந்தவையே என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. இதில் புனைவு எது என ஆதாரங்களுடன் முன் வைக்கவும்/
  kovai அய்யர் எழுதுவது முழுமையான புலிகளின் சரித்திரமல்ல. அவர் எழுதுவது புலிகளின் ஒருபக்கத்தைமட்டுமே. புலிகளின் ஆரம்பகாலங்கள் பற்றி எழுதிய சில உண்மைக்குப் புறம்பானவை. இதற்காக எழுதுவது அனைத்தும் பிழை என்று நான் கூறவில்லை. புலி புளொட் தொடர்புகள் ஒரு நேர்வழிப்பாதை அல்ல. அப்படி இருக்கவும் முடியாது. அய்யர் தனக்குத் தெரிந்ததை எழுதுகிறார் என்று மட்டுமே எழுத்துக் கொள்ளலாம். உ.ம் புஸ்பராஜா எழுதிய இளைஞர்பேரவை பற்றிய கருத்துக்கள் அவரர் பக்கத்தின் சாட்சியங்களே தவிர முழுமையான இளைஞர் பேரவையில் வரலாறாக முடியாது. அய்யர் எழுதுவதும் அப்படியே.

  Reply
 • kovai
  kovai

  குசும்பு! நீங்கள் இயக்கம் எதுவிலும் உறுப்பினராக இருக்கவில்லை என்பது உங்கள் எழுத்தின் உண்மையும், வலிமையும் காட்டிக் கொடுத்து விட்டது. ஆகவே இறை, உமா கொலை பற்றி எனக்குச் சொல்லாதீர்கள். நேரமிருந்தால் என் கோர்வைகளை மீண்டும் படியுங்கள்.
  வானவில்!பின்வந்தவர்கள் முன்னிருந்தவர்களின் வரலாற்றைக் குழப்புவதால்,பால்குடிகள் என்று குறிப்பிட்டேன். யாருடைய பங்களிப்பையும் குறைத்து மதிப்பிட அல்ல, அதேவேளை எனக்குத் தெரியாத விடயங்களில் நான் தலையிட்டு வாதம் புரியவரவில்லை. எனது நோக்கம் உண்மைக்கு பங்களிக்க மட்டுமே. யாருடனும் வாதத்திற்கு வரவில்லை.

  என் எழுத்துகள் எவரையும் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.

  எழுத்துகளுக்கு இடம் கொடுத்த தேசத்திற்கும், ஏனைய வாசகர்களுக்கும் நன்றி.

  Reply
 • மாயா
  மாயா

  கோவை ; ஒன்றை நாம் மனதில் கொள்ள வேண்டும். அதாவது அனைத்து விடயங்களும் அனைவருக்கும் தெரியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு சில விடயங்கள் தெரியலாம். தெரியாதவர்களும் இருக்கிறார்கள். சிலர் ஆரம்ப காலத்தை அறிந்தவர்கள். சிலர் இடையில் நடந்ததை அறிந்தவர்கள். சிலர் தளத்தில் நடந்ததை அறிந்தவர்கள். சிலர் பின் தளத்தில் நடந்ததை அறிந்தவர்கள். அதுவும் அவர்கள் இருந்த இடத்தில் உள்ளதை மட்டுமே அறிந்தவர்கள். ஒரு சிலர் விதி விலக்கு. அதாவது தலைமைகளோடு நெருக்கமாக இருந்தவர்கள். இவர்களில் யாரும் மாகாநாடுகள் நடத்தி ; அன்றைய பிரச்சனைகளை அலசி ஆராய்ந்தவர்கள் இல்லை. இதை மனதில் கொள்ள வேண்டும்.

  ஐயர் காலத்தில் நடந்தவற்றை ஐயர் எழுதுகிறார். அவர் இயக்கத்தை விட்டு வெளியேறிய பின்னர் நடந்தவை குறித்து அறியாதவர். அது போல இயக்கம் தொடங்கிய காலங்களில் இருந்தவர்கள் இயக்கங்கள் வளர்ந்த காலத்தில் இல்லை. இயக்கங்களுக்குள் நடந்த பல கொலைகள் தலைமைகளுக்கு தெரியாமல் நடந்தவை. தலைமைக்கு தெரிந்து நடந்தவை ஒரு சில மட்டுமே. பல கொலைகள் அல்லது நிகழ்வுகள் எல்லாம் முடிந்த பின்னரே தெரிய வரும். எனவே தகவல்களை பகிர்ந்து கொள்வோரை பால்குடிகள் என்பது சரியாக படவில்லை. இவை தகவல் சொல்பவர்களை தடுத்துவிடும். உண்மை பொய்களை சரி செய்து கொள்ளலாம். இயக்கத்தின் தகவல்கள் தெரியாதவர்களிடம் பகிரப்படுவதில்லை. நெருங்கிய அந்யோன்ய நட்பான பின்பே சில தகவல்கள் பரிமாறப்படும். இந்த அடிப்படை தெரியாதவர்கள் இயக்கத்தில் இருந்தவர்களில்லை. சாராசரி பார்வையாளர்கள் மட்டுமே. தெரிந்தவர்களும் இன்று வாய் திறப்பதில்லை. இதுவே யதார்த்தம்.

  சங்கிலி ; செந்தில் ; வாமர்; ஊத்தை மூர்த்தி ஆகியோர் செய்த பல கொலைகள் ஆரம்பத்தில் உமாவுக்கு தெரியாமல் நடந்தது எனக்குத் தெரியும். இவர்களிடம் உமாவின் சில பலவீனங்களின் பிடிகள் இருந்தன. இதனால் இவர்களுக்கு பிடிக்காதவர்களை பழி வாங்கி விட்டு பெரியவருக்காக செய்தோம் என்பதும் அல்லது ஏதாவது ஒரு தவறை உருவாக்கி நியாயப்படுத்துவதும் நடந்தது. உமா இவைகளை கண்டு கொள்ளவில்லை. இவை பலரும் அறிந்தது. உமாவோடு நெருக்கமாக இருந்தவர்களுக்கு உமாவை எப்படி கனிய வைக்கலாம் என தெரியும். இதையே இவர்களைப் போன்றவர்கள் நடைமுறைப்படுத்தினார்கள். பலவேளைகளில் ஒவ்வொரு பொறுப்பாளர்களுக்கும் சார்பான சிலர் இருப்பார்கள். இந்த பொறுப்பாளர்களுடன் நேரடியாக மோத முடியாத போது ; அவர்களுடன் இருப்பவர்களில் முக்கியமானவர்களை ஏதாவது செய்து பொறுப்பாளர்களை பலவீனப்படுத்துவார்கள். இது போன்ற நிகழ்வுகளால் சிலர் செத்ததும் உண்டு. இவை எல்லாம் அநியாயச் சாவுகள். இவை எல்லாம் மரண சாசனங்களே தவிர சரித்திரங்கள் அல்ல. இவை சரியாகக் கொண்டு வரப்பட வேண்டும். இல்லாவிட்டால் இந்த ரவுடிகளுக்கெல்லாம் சிலை வைத்து தெய்வங்களாக்கும் கொடுமைகள் நடக்கும் ; எதிர்கால சந்ததி ஏமாற்றப்படும். ஐயர் எழுதும் சரிதம் இது போன்றது.

  தேசத்தில் வருவது போல சரியான தகவல்கள் முரண்பாடுகளோடு பதியப்பட வேண்டும். அவை சில தவறுகள் திருத்தப்பட வழி செய்யும். அதைவிட்டு நான் சொல்வதுதான் சரி; உனக்கு தெரியாதென்பதெல்லாம் மொக்கு தனம். நான் எழுதிய சில பகுதிகள் தேசத்தால் தணிக்கையாகியுள்ளது. அதுவும் நல்லதுக்கே. இருந்தாலும் மெது மெதுவாக எப்படியும் அவை கசியும்.

  என்னைப் பொறுத்தவரை ஒவ்வொருவரும் தனக்கு தெரிந்த அல்லது தனக்கு நடந்த அனுபவங்களை எழுதினாலே போதும் . உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். இந்த மாதிரியான நடப்புகள் புளொட்டுக்குள் மாத்திரமல்ல ; அனைத்து இயக்கங்களிலும் உண்டு. அடுத்த இயக்கங்களில் உள்ளவர்கள் பிலாத்துகள் போல கைகழுவி கடவுளின் பிள்ளைகளாக நினைக்கலாகாது. அது பிஸ்ட்டல் குழுவில் இருந்தவர் பேச்சு வார்த்தைக்கு போனதால் காந்தியாக்கி சிலை வைப்பது போன்ற ஒரு பகிடியே தவிர வேறென்ன.

  ஒவ்வொருவரது கருத்துகளும் ; அடுத்தவர் தனது கருத்துகளை தொடர வழி விடுவதாக அமைய வேண்டுமே தவிர ; அடுத்தவர் கருத்தை தடை செய்வதாக அமையலாகாது. நன்றி.

  Reply
 • jeyarajah
  jeyarajah

  மாயா கூறவது தான் உண்மை. எல்லோரும் எல்லாம் தெரிந்து இருக்க சந்தர்ப்பம் இல்லை. ஜயர் எழுதியதும் அப்படியே. இது போன்ற விமர்சனங்களால் பல உண்மைகள் தெரிய வாய்ப்பு உண்டு. இனி எழுதும் ஆய்வுக்கட்டுரையாளர்களுக்கும் உதவும் ஆனால் நடந்தது எல்லாம் கொலை கொலை என்று வரும்போது துரையப்பாவை வாழ விட்டிருக்கலாம்போல தோன்றுகின்றது.

  தமிழ்ச்செல்வன் சிலை விவகாரம் ஊரே சிரிக்கிறது ஒரு நாள் சிலை வைத்து திருவிழா நடந்தது பின்பு பழைய சிலைவைக்கும் இடத்திக்கு தமிழ்செல்வனின் சிலையும் போய்விட்டது > இப்போ அங்கே ஒன்றையும் காணோம். புலம்பெயர் தமிழர்கள் இளிச்சவாயர்கள் என்றால் பிரான்ஸ் அரசாங்கமும் அப்படியா?

  Reply
 • மாயா
  மாயா

  உயிர்ப்பிச்சை கேட்டு கையெடுத்து கும்பிட்டு மன்றாடிய ரெலோ இயக்கத்தின் தலைவன் சிறி சபாரத்தினம் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டு வெட்டப்பட்டு பின் செம்மணி சுடலையில் கொழுத்தி எரிக்கப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்ட வேளையில் எழுந்த மேற்சொன்ன பல விடைதேட முடியாத கேள்வி களுள் எழுந்த முக்கியமான கேள்வி என்னவெனில்? சிங்கள இராணுவத்தின் கைக ளில் இறப்பதை விட தனது சக தமிழ் உடன்பிறப்புக்களின் கைகளில் உயிர் நீத்தமைபற்றி வேதனைப் பட்டு அவர் கலங்கி இருப்பாரா? அல்லது பெருமையுடன் ஆன்மசாந்தி அடைந்திருப்பாரா?

  http://www.thangatheepam.com/TamilPDFFiles/24%20Nov%20115705.pdf

  Reply
 • palli
  palli

  //உதயன் ( அன்டனி) வாமாரால் தாக்கப்பட்டு நோயாளியாக சென்னை வந்தார். அன்டனி மேல் சந்தேக பார்வை இருந்தது. இவருக்கு மூத்திரத்தோடு இரத்தமும் போகும். அப்படி அடித்திருந்தார்கள். இவரும் எங்களோடு இருந்தார்.//
  இதுவும் நான் அறிந்த விடயமே ஆனால் அது எனக்கு நம்பிக்கையில்லாததால் எழுதவில்லை; ஆனால் மாயா அதே உதயன் கழகத்தின் ஆரம்பகால பெண் போராளியான துளசியை நாசம் செய்து விட்டதாக அந்த பெண் இன்றும் பலரிடம் புலம்புவது ஏன்? துளசியும் ராதாவும் ராஜனுடன் மாறியது தெரியும், பின்பு ராதாவை இறுதியாய் பி எல்லோவஒ முடித்து வந்த அவரது ஈழத்து காதலன் திருமணம் முடித்தத்தும் தெரியும், ஆனால் ரவி(காதலன்) உமா குறூப், ராதா ராஜன் குறூப்பாக இருக்கும் போது இது சாத்தியமா?? ஆனால் ராஜனுடன் இருந்த சிலர் இதை செய்து வைத்ததாக செய்திகள் உண்டு, இதில் இன்று லண்டனில் பிரபல்யமான ஒரு ஊடகத்தின் இயக்குணருக்கும் பங்கு உண்டாமே, சரி அதை விடுவோம், துளசி உதயன் திருமணமும் இப்படிதான் டேவிட் ஜயா சறோசினி போன்றோரால் நடத்தி வைக்க பட்டதாக ஒரு செய்தி அறிந்தேன்; ஆனால் துளசி அன்றய ரி ஆர் ரி யில் தமிழக செய்தி சேகரிக்கும் பிரிவில் ராஜாவின் சிபார்சில் உருந்திரன் என்பவரால் நியமிக்க பட்டார் எனவும் சொல்லுகிறார்கள்? ஆனால் அவர் இன்று மிக வறுமையில் சென்னையில் வாடுவதாகவும் ஒரு செய்தி உண்டு, இது பற்றி வெற்றி செல்வம் உங்களுக்கு ஏதும் தகவல் தெரிந்தால் தெரியபடுத்துவது நன்று, காரணம் உதயன் என்பவர் இன்று ஏதோ கமினிஸ் என செய்திகள் வருகின்றன, எது எப்படியோ பல உன்மைகளுக்கு பல்லியின் புள்ளிகள் உதவலாம் என்னும் நப்பாசை பல்லிக்கு உண்டு;

  Reply
 • மாயா
  மாயா

  //நிக்கவெரட்டியா தாக்குதலுக்கு : மாயா சொன்னது அத்தனையையும் எனக்கு பி எல் ஓ ராஜா சொன்னார், அதோடு வாமர் இறுதிவரை கடலில்தான் இருந்தாராம் – பல்லி //
  பல்லி > பி எல் ஓ ராஜாவும்: பிரசாத்தும் நண்பர்கள் இவர்கள் இருவரும்தான் தாக்குதல் இடங்களுக்கு போனது. திட்டம் தீட்டியது எல்லாம். வாமரும் பிரசாத்தை நம்பித்தான் உடப்பில் இருந்தார். வாமர்தான் தாக்குதலுக்கு உமாவிடம் அனுமதி பெற்றார். பிரசாத்தின் இஸ்லாமிய நண்பர் ஒருவரது (இவர் தமிழ் கட்சிக்காக தேர்தலில் நின்றவர். இவரும்உதவிதற்காக கைதாகி புசாவிலிருந்தார்) வீட்டில் இருந்துதான் சென்னையில் இருந்த உமாவோடு கதைத்தார். முதலில் தடுத்த உமா; பின்னர் சரியென்றார். வாமர் தாக்குதலுக்கு போனார். போலீசுக்கு முன்னால் றோட்டில் நின்றார். வந்தவங்களே போட்டுவாங்கள் என்ற பயம் இருந்தது. தனக்கு ஏதாவது நடந்தால் கொன்று போட்டு போகும்படி பிரசாத்திடம் போகும் போதே சொன்னார். பிரசாத் மோட்டார் சைக்கிளை ஓட்டிக் கொண்டு போகும் போது > பிரசாத்தோடு வாமர் போனார். பிரசாத் போலீஸ் வரை வந்து இறக்கி விட்டு மோட்டார் சைக்கிளை ஓட்டிக் கொண்டு முதலில் நுழைந்தது பிரசாத். காரணம் அன்று காலையிலேயே பிரசாத் > பி எல் ஓ ராஜாவை அழைத்து போய் ஒரு மணி நேரம் போலீசுடன் கதைத்துக் கொண்டிருந்ததால் சந்தேகம் வராது எனும் நம்பிக்கைதான். எனவே பின்னால் ஹய்ஏஸ் வாகனம் லேசாக நுழைய கேட்டை தள்ளி விட்டு உள்ளே போனது பிரசாத். அடுத்து வந்த வாகனத்தில் இருந்து குதித்த சாம் முருகேசு ஏகேயால் சுட்டு போலீசுக்குள் பிரசாத்தோடு நுழைய > மற்ற இருவரும் போலீசார் படுத்திருந்த பகுதிகளுக்குள் நுழைந்து கிரினெட்களை வீசினார்கள்.

  பி எல் ஓ ராஜாவும் இன்னும் இருவரும் வங்கிக்கு போய் முகாமையாளரை அடைத்து வைத்துவிட்டு கேஸ் சிலின்டரின் உதவியோடு வங்கயிலிருந்த பணத்தையும் நகைகளையும் > பணத்தையும் எடுத்தார்கள். மற்ற இருவர் கொமினிகேசன் டவரை தாக்க கெஸ்ட் ஹவுசுக்கு பக்கத்தால் ஓடினார்கள். எடுத்த பணம் 8 கோடி. நகை 3 மூடை நிறைய. அதுக்கெல்லாம் என்ன நடந்ததோ தெரியாது. வாமர் நகைகளை திருடியதாக பிரச்சனைப்பட்டதால்தான் > சென்னைக்கு வந்தார். சென்னையில் வாமரும் சேர்ந்துதான் சந்ததியாரைப் போட்டது. அதற்கு பிறகு வாமரை போட திட்டம் தீட்டிய போது பிரசாத்தான் வாமரை காப்பாற்றியது. வாமரை போட சிலர் கதைப்பதாக அறிந்ததும் > எங்காவது ஓடச் சொன்னார். இல்லாவிட்டால் ஆள் சென்னையிலே சரி. வாமரை பலருக்கு பிடிக்காது. எனவே ஆளை தட்ட > அடுத்தவர்கள் திட்டம் போட்டதாகவே நினைக்கிறேன்.

  //கழுத்து நெரித்துக் கொலை செய்த தோழமைச்செய்தி இங்கேதான் வெளிவந்தது. அந்த அனுபவம் அந்த மூதாட்டியை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்பிருந்தது என்பதே என் கருத்து. – kovai//
  சிலர் எங்கோ நடந்ததை > எங்கோ நடந்ததோடு ஒப்பிடுவது போல கதைப்பார்கள். இது ஒரு பிரச்சனை. நிக்கவெரட்டியாவில் ஜாஎலயில் இருந்து வந்த மெக்கானிக்கைத்தான் (டிரைவர் என சொல்கிறார்கள்) பீஎல்ஓ ராஜா கழுத்து நெரித்து கொன்றது. இது உடப்பில் நடந்தது. அந்த உடலை ஓட்டி வீரய்யா மூட்டையில் கட்டி> பாரக் கல்லும் வைத்து கடலில் போட்டார். அது 2-3 நாளில் கரை தட்டியிருந்தது.

  நிக்கவெரட்டிய வங்கி பற்றிய தகவல் சோபனாவின் அக்கா புருசன் அமரன் தந்தது. கிளிநொச்சி தாக்குதலுக்கு பிரான்சிலிருக்கும் மாதவன் கொடுத்த தகவல் பயன்பட்டது. காரணம் ஆயுதங்களையும் பணம் நகை ஆகியவற்றை எடுத்துக் கொணடு வந்தவர்கள் ஒரு படகில்தான் வந்தார்கள். அடுத்தவர்கள் மலையகத்தை நோக்கி ஒரு குழுவும் > கலாஒய காட்டுக்குள்யாக ஒரு குழுவும் சென்று விட்டது. படகில் வந்தவர்கள் பீஎல்ஓ.ராஜா> வாமர் > சாம் முருகேசு> பிரிட்டி……> பிரசாத் மற்றும் ஓட்டி வீரய்யா.

  தாக்குதலுக்கு முன் ஜென்னியும் உடப்புக்கு வந்திருந்தார். அவரை போகுமாறு அனுப்பியது பிரசாத்தான். ஜென்னி பாரீசில் இருக்கிறார்.
  நிக்கவெரட்டியாவிலிருந்து உரத்தநாடு வரைக்கும் பணத்தையோ அல்லது நகையோ யாரும் எடுக்க நினைக்கவில்லை. கடைசியாக மூடையை தூக்கும் போது விழுந்த தங்க சிலுவையை பிரிட்டி…. எடுத்து மாலையில் போட்டுக் கொள்ள தண்டனை கிடைத்தாக அறிந்தேன். பாவம் இவருக்கு சேர்ந்தே போன ஒருவர் சேம் சைட் கோல் போட்டார். அதாவது இவர் மேல் கிரினெட்டை வீசினார். பிடித்து எறிந்து தப்பினாலும் > காலில் காயம் > நொண்டிக் கொண்டு ஓடி வர > வாமர் காயம் என்றால் போட்டுத் தள்ளுங்கடா என்றார். பிரிட்டி… என்கொன்றுமில்லை என்று கத்தினான். அதனால் அவனையும் வண்டியில் போட்டுக் கொண்டு வந்தோம். எனவே வாமர் எதையும் எடுக்க வாய்ப்பில்லை. அப்படி எடுத்திருந்தால் பிரசாத்தான் எடுத்திருக்க வேணும். ஏனென்றால் பிரசாத்தான் காசு எண்ணியது. நகை மூடையை எவரும் பிரிக்கவே இல்லை. நிக்கவெரட்டியாவில் வைத்துதான் நகைகளை பார்த்தது. பின்னர்> அது சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. பார்த்ததுதான்.

  யாரையாவது தண்டிக்க ஒரு காரணம் வேணும். எனவே நகை திருடியதாக வாமர் மீது சொன்னார்கள். அது பொய். வாமரின் பம்பாய் வாழ்விலும் கெப்டன் குமாராக > எல்லா இயக்கத்து பொடிகளுக்கும் உதவினார். எல்லாம் குரக்கன்மா வருவாய்தான். வாமருக்கு சோறு போட்டது பம்பாயில் ஒரு தெலுங்கு பெண். பின்னர் அவளுக்கு ஒரு வீடு கட்டிக் கொடுத்தார். இப்போது என்ன நிலை என்பது தெரியாது.

  Reply
 • Kanna
  Kanna

  //அத்துடன் சாம்முருகேஸ் இவர்கூட கழக உழவுதுறையை சேர்ந்தவர்தான்; இவர் பெரிஜயா விசுவாசி இவரது கழுத்தில் புலிகளின் சனைட் குப்பி போல் பெரிசின் படம் தொங்கிய வண்னமே இருக்கும்; இறுதிகாலத்தில் முகுந்தனுக்கு உதவியாக செயல்பட்டவர்கள் இவரும் ஆச்சி ராஜனுமே(மெய்பாதுகாவலர்)//
  When Uma mured by Aachi Rajan and others, Sam in IPEK’s custody in Vavuniya. Uma’s body has been take over by wife and took to Vavuniya with the help of Vavuniya ENDLF team. Uma’s body viewed by tamils in Vavuniya bustand and Kovilkullam with the help from ENDLF. At the same time ENDLF keep other line open to Aachi Rajan too. That time Manikathasan in Asikulam. Vavuniya PLOTE faced internal problem from Sri and others. Sam and others have been brought to Vavuniya bustand by IPKF with rob tied to view the Uma’s body.

  //காக்கா இயக்கத்தை விட்டு வெளியேறி பட்டுவா கோட்டையில் ஒரு தங்குவிடுதியில் தங்கி இருந்தார்//
  Kaka has been asked to stay in Madras by Parnthan Rajan in his house while he left for PLO. But his frined and Vamathavan’s family have been set-up to get Kaka in Orathnadu. Then Kaka kidnaped by Interligent Ravi group in Orathanadu. Kaka got some frineds in Paduvakodi but this area not his resident at any time. Political internal muders took placed within PLOTE when Paranthan Rajan in PLO. Paranthan Rajan has been removed from Thanjavour area after the Padukodai Pannaiyar incident. Then Vamatheva took control the all camps adminstration.

  //சோபனா. இவர் கனடாவிருப்பதாக சொல்கிறார்கள். ஜொமனிக்கே இவர் வந்தார்//
  She was a bank employee, she left Sri Lanka after teh Nigavartiya incidents. She was in Madras some time (she particpate some of the Madras office adminstraion too), Now in Canada. Because of this issues she lost her total famil life too.

  Reply
 • palli
  palli

  //புஸ்பராஜா எழுதிய இளைஞர்பேரவை பற்றிய கருத்துக்கள் அவரர் பக்கத்தின் சாட்சியங்களே தவிர முழுமையான இளைஞர் பேரவையில் வரலாறாக முடியாது.//
  இதைநான் புஸ்பராஜாவிடம் நேரிலேயே சொன்னேன், அதுக்கு அவர் சொன்னது டேய் எனக்கு தெரிந்தத்தை எனது சட்ச்சியாய் பதிவு செய்கிறேன்; அது உங்களை போல் இன்னும் ஈழ குழறுபடிகள் தெரிந்தவர்களை எழுத வைக்கும் என, அது இன்று ஜயர் சொற்பொழிவாகவும் நாம் பலர் வாதமாகவும் செய்கிறோம்; ஜயரின் சாட்ச்சியம் ஈழ விடுதலை வரலாறாக முடியாது; அதுக்கு பலரது வாக்குமூலங்கள் தேவை, குசும்புவின் எழுத்துபடி பல இடத்தில் குசும்பு வந்து போகிறார், குறிப்பாய் புலி புளொட் சமாதானத்துக்காக கூட செயல்பட்டவர்களில் அவரும் ஒருவர்; ஆனால் ஜயரின் ஆக்கத்தில் குசும்பு தலைமறைவு ஏன், இதுவே ஜயருக்கு பல்லியின் ஆரமப வினாவாக வைக்கிறேன்;

  Reply
 • மாயா
  மாயா

  // //புஸ்பராஜா சொன்னது “டேய் எனக்கு தெரிந்தத்தை எனது சட்ச்சியாய் பதிவு செய்கிறேன்; அது உங்களை போல் இன்னும் ஈழ குழறுபடிகள் தெரிந்தவர்களை எழுத வைக்கும்” என, அது இன்று ஜயர் சொற்பொழிவாகவும் நாம் பலர் வாதமாகவும் செய்கிறோம்; ஜயரின் சாட்ச்சியம் ஈழ விடுதலை வரலாறாக முடியாது; அதுக்கு பலரது வாக்குமூலங்கள் தேவை, குசும்புவின் எழுத்துபடி பல இடத்தில் குசும்பு வந்து போகிறார், குறிப்பாய் புலி புளொட் சமாதானத்துக்காக கூட செயல்பட்டவர்களில் அவரும் ஒருவர்; ஆனால் ஜயரின் ஆக்கத்தில் குசும்பு தலைமறைவு ஏன், இதுவே ஜயருக்கு பல்லியின் ஆரமப வினாவாக வைக்கிறேன்; – palli //

  அன்று அந்த மனிதனை ; புஸ்பராஜாவை துரோகியாக்கினார்கள். அவர் விருப்பப்படி தனது தாய்நாட்டுக்கு போய் “சாகவாவது விடவில்லை. அதே போல ஐயர் அன்று எழுதியிருந்தால் அதுவேதான் அன்றும் நடந்திருக்கும். நல்ல காலம் எல்லாம் முடிந்த பிறகு பேனாவை ஐயர் தூக்கியிருக்கிறார்.

  பல்லி சொல்வது போல குசும்பு ஐயர் எழுதுபவை குறித்து ; குசும்புவின் பக்கத்தை எழுத வேண்டும். இருவருக்கும் ஒரே மாதிரியான பார்வை இருக்க முடியாது. அவை பல வேறு தகவல்களை தரும். இவர்கள் எழுதியதும் ; எழுதுவதும் ஈழ வரலாற்றின் சில பக்கங்கள் மட்டுமேயாகும். இவை முழுமை பெற்ற வரலாறு இல்லை.

  Reply
 • kovai
  kovai

  பல்லி குறிப்பிட்ட பெயரில் முகுந்தன், நாகராசா வாத்தி, ராகவன் புலி உறுப்பினர்கள்.
  பல்லிக்கு தெரிந்த அளகிரி; பூபால்; கணவதிபிள்ளை; திசை; பாலரத்தினம்; மாவை; குகன்; புஷ்பராசா; குசும்பு போன்றோர் புலி இயக்கத்தின் உறுப்பினர்கள் அல்ல.

  ஒரு இயக்கத்தில் இருக்காத, பிறரின் கதைகளைக் கேட்டெழுதுகிற குசும்பு, பல்லியின் எழுத்துக்கும், ஒரு இயக்கத்தில் இருந்து, அங்கே நடந்ததை எழுதுகிற அய்யர், மாயா எழுத்துகளுக்கும் உள்ள வித்தியாசம் வெளிப்படையானது.

  பஸ்தியாம்பிள்ளை விடயத்தில் ஜயரின் வாக்கு மூலமும் உமா மகேஸ்வரனின் வாக்குமூலமும்,சம்பவத்தின் பார்வையாளர்களின் நோக்கிலும்,இதில் சம்பந்தப்படாத பரந்தன் ராசனின் வாக்குமூலம் கேள்விச்செவியனின் நோக்காகவும் பகுத்தறியப்பட வேண்டும்.

  அய்யர் எழுதியதைப் படிக்காதவர்களும்,அவர் காலத்தில் இயக்கத்தில் இருந்தோரிடம் தொடர்பற்றவர்களும்,’புனைகதை’ என்பது சீரணிக்கக் கூடியதாகவில்லை. அய்யர் ,புஷ்பராசாவின் எழுத்துகள் முறையே, “பதிவு”,”சாட்சியம்” என்றே வெளிவந்தன.

  அய்யரின் எழுத்தில் இருக்கும் முரண்பாடுகள் அங்கே பலரால் கேள்வியாக எழுப்பப்பட்டுள்ளன.குசும்பு தான் செய்த விடையங்கள் எவை எனவும்,அவை எவ்வாறு அய்யரால் மறைக்கப்பட்டு விட்டன என குசும்பு எழுதட்டும்.

  Reply
 • palli
  palli

  //பல்லிக்கு தெரிந்த அளகிரி; பூபால்; கணவதிபிள்ளை; திசை; பாலரத்தினம்; மாவை; குகன்; புஷ்பராசா; குசும்பு போன்றோர் புலி இயக்கத்தின் உறுப்பினர்கள் அல்ல//
  ஆக ஜயரை விட பலரை பல்லிக்கு தெரியும் என்பதுதானே உங்கள் வாக்கு மூலம்;
  //ஒரு இயக்கத்தில் இருக்காத, பிறரின் கதைகளைக் கேட்டெழுதுகிற குசும்பு, //
  ஆக இயக்கத்தில் வந்து கொலையோ அல்லது கொள்ளையோ அடித்தால்தான் ஏதும் எழுத முடியுமா?
  உன்மையை சொல்லபோனால் குசும்புவுக்கு தெரிந்த விடயத்தில் சில பகுதி கூட ஜயருக்கு தெரியாது என்பது குசும்பு யார் என அறிந்தபின் பல்லிக்கு தெரிகிறது,
  //:பல்லி குறிப்பிட்ட பெயரில் முகுந்தன், நாகராசா வாத்தி, ராகவன் புலி உறுப்பினர்கள்// ஆகா மிகபெரிய தகுதிதான்;
  //ஒரு இயக்கத்தில் இருந்து, அங்கே நடந்ததை எழுதுகிற அய்யர்//
  அவர் இருந்த இயக்கம் பற்றி அவர் எழுதினால் அது சுயவிமர்சனம், ஆனால் அவர் அடுத்தவன் வீட்டை எட்டிபார்ப்பது எந்த வகையில் நியாம் என்பதே என் கேலி அல்ல கேள்வி?;
  //பஸ்தியாம்பிள்ளை விடயத்தில் ஜயரின் வாக்கு மூலமும் உமா மகேஸ்வரனின் வாக்குமூலமும்,சம்பவத்தின் பார்வையாளர்களின் நோக்கிலும், இதில் சம்பந்தப்படாத பரந்தன் ராசனின் வாக்குமூலம் கேள்விச்செவியனின் நோக்காகவும் பகுத்தறியப்பட வேண்டும். //
  இதுகூடவா கோவைக்கு தெரியாது ராஜன் பங்களிப்பு என்ன என்பதை வழிதெரியாத ஈழத்தில் பார்க்கவும்; (ஜயர் மாதிரி ராஜனும் நகைசுவை செய்தால் அதுக்கு பல்லி பொறுப்பல்ல)
  //அய்யர் எழுதியதைப் படிக்காதவர்களும்,அவர் காலத்தில் இயக்கத்தில் இருந்தோரிடம் தொடர்பற்றவர்களும்,’புனைகதை’ என்பது சீரணிக்கக் கூடியதாகவில்லை. அய்யர் , புஷ்பராசாவின் எழுத்துகள் முறையே, “பதிவு”,”சாட்சியம்” என்றே வெளிவந்தன.//
  ஜயரை தெரியாதவர்கள் கூட ஆரமபகாலத்தில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் இன்றும் எமக்கு பல தகவல்கள் பெருமை இன்றி தருகிறார்கள்;
  //குசும்பு தான் செய்த விடையங்கள் எவை எனவும்,அவை எவ்வாறு அய்யரால் மறைக்கப்பட்டு விட்டன என குசும்பு எழுதட்டும்.:://
  முதலில் குசும்பு யார் என தேசத்தில் பின்னோட்டம் இடும் பல்லிக்கே தெரிகிறபோது ஈழ வரலாறை எழுத புறபட்ட ஜயருக்கு தெரியாதா? என்பதுகூட கேலி அல்ல கேள்வியே??
  // குசும்புவின் பக்கத்தை எழுத வேண்டும். //
  உன்மைதான் நான் பலரிடம் விசாரித மட்டில் குசும்பு குசும்புதனமாய் எழுதினாலும் அன்று(30 வருடங்களுக்கு) முன்பே சமாதான விரும்பியாக செயல்பட்டு வந்துள்ளார்; அதனாலேயே அவர் எந்த தொழுவத்திலும் கட்டுபடவில்லை என நினைக்கிறேன்; அதையும் விட இன்றும் கூட எம்
  எழுத்தின் சாட்சியங்கள் உயிருடன் இருப்பவர்களை பாதிக்க கூடாது என்னும் மனிதநேயம் அவர் எழுத்தில் இருக்கு; (இதை முடிந்த மட்டும் பல்லியும் கடைபிடிக்க முயல்கிறேன்; சுட்டிகாட்டிய நட்புக்கு பல்லியின் நன்றி) ஆனால் ஜயர் எழுத்து அப்படி இல்லை கொதிக்கும் எண்ணையில் அப்பளத்தை போட்டதுபோல் பொங்கி பொங்கி எழுதுகிறார் உன்மையின்றி பல தகவலை;

  Reply
 • palli
  palli

  கண்ணா முடிந்தால் உங்கள் தகவல்களை தமிழில் தரவும்; பலர் இதை படிப்பதால் தகவல்கள் தமிழில் வருவது நல்லது என்பதால்தான்,

  Reply
 • kovai
  kovai

  பல்லி!
  அய்யரின் பதிவு வெளியில் இருக்கிறது. அதில் எது கற்பனை, புனைகதை, தவறு என்று சொல்லுங்கள். சரி எனப் பெற்ற தகவல்களைப் பதிவிடுங்கள். வெட்டியாடி வெறுமனே நீட்டிக் கொண்டு போவதில் உண்மைகள் வெளிவராது. அத்தகைய பதில் வருமாயின் தொடரலாம்.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  கோவை! நீங்கள் எந்த இயக்கத்துடன் எப்படி என்ன நிலையில் இருந்தீர்கள் என்பது எனக்குத் தெரியாது தேவையும் இல்லை. இயக்கங்களின் கட்டமைப்பு ஒரு நேர்கோடானது அல்ல. ஒரு தாக்குதலுக்கு (புளொட்டா புலியா என்று கேட்கக் கூடாது) நாம் தயாராகும் போது ஒருவரை ஒருவர் அறியாதவராகவும் வெவ்வேறு இடங்களில் இருந்தும் கொண்ட வருவோம் ஏன் தெரியுமா? ஒருவன் பிடிபட்டால் தொடர்ச்சியாக சங்கிலித் தொடர்பாக அனைவரும் பிடிபடுவார்கள். இந்த சின்ன விடயமே தெரியாமால் அய்யர் சொல்வதை அப்பட்டமாக நம்பி நீங்கள் எழுதுகிறீர்கள். இப்படி நம்பித்தானே புலத்துப்பணத்தை எல்லாம் கொண்டுபோய் முள்ளிவாய்காலில் கொட்டினீர்கள். மீண்டும் ஆய்வு சொந்த அறிவு என்பனவற்றை விட்டு விட்டு அய்யரை முழுமையாக நம்புகிறீர்கள். அய்யர் எழுதுவது சரியாக இருந்தாலும் புலிகளின் முழுப்பக்கமும் தெரிவதற்கு நியாயமில்லை.

  ஏன் பிரபாவுக்குக் கூட அன்று இயக்கத்தில் வேறுபகுதிகளில் என்ன எப்படி நடக்கிறது என்பது தெரியாது. சரி அய்யர் எப்போ எங்கே புலிகளுடன் இணைந்தார் என்று கூறட்டும். சரியா பெயரை இல்லது இயக்கப்பெயரை தரட்டும். மேலும் கோவை எமது எழுத்துக்கள் எம்மைக் காட்டிக் கொடுத்துவிடும் என்பதையும் நாம் அறிந்திருப்பது முக்கியம். முக்கியமாக பல்லி சிலேடைத்தனமாக எழுதுகிறார் என்று கணித்துவிடாதீர்கள் நான் என்றோ ஒரிடத்தில் 1983 சரியாகச் சொன்னால் 1985க்குப் பின் இயக்கவிடயங்களைக் குறைத்துக் கொண்டேன் என்பதை எவ்வளவு துல்லிதாமாய பல்லி நினைவு வைத்திருக்கிறார் என்பதை நான் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

  /பல்லிக்கு தெரிந்த அளகிரி; பூபால்; கணவதிபிள்ளை; திசை; பாலரத்தினம்; மாவை; குகன்; புஷ்பராசா; குசும்பு போன்றோர் புலி இயக்கத்தின் உறுப்பினர்கள் அல்ல./ மற்றவர்களை விடும் நான் இருக்கவில்லை என்பதை எப்படி நீர் சொல்லுவீர்? ஆண்டு நினைவில்லை இரண்டு பொலிஸ் சிஐடீக்கள் இருவரது சண்முகநாதன் இவர்கள் எதற்காக யாரால் கொலை செய்யப்பட்டார்கள் என்பதை சிறிது விசாரியும் அல்லது அறிய முயலும் அப்போது தெரியும் புஸ்பராசாவினுடைய சரித்திரம். மீண்டும் சொல்கிறேன் விடுதலைப் போராட்டத்துக்கு அடிகோலியவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் எங்கே இருக்க புலிகளுக்கு பூப்போடுகிறீர்கள். இதன் விளைவுதானே முள்ளிவாய்க்கால். இதை நான் அன்றே சொன்னேன்.

  மாவையைப்பற்றி எழுதியிருந்தீர்கள் இரண்டு இயக்கத்தவருடனும் மாவைக்கு பிற்காலத்தில் சிறிய தொடர்வு இருந்தது. சரி பிரபாகரன் எந்த இயக்கத்தில் அங்கத்தவராக இருந்தார். எங்கேயாவது பிரபாவின் ஏன் அவர் மனைவி பிள்ளைகளில் விண்ணப்ப அல்லது அங்கத்துவப் படிவத்தைக் கண்டீர்களா? உங்களைப்போல் புலிகளுக்குப் பணம் கொடுத்தவர்கள் அங்கத்துவராக இருந்திருக்கலாம் அன்றைய பொழுதில் முளத்துக்கு முளம் சிஐடி நிற்கும் காலத்திலே பத்திரம் நிரப்பியா கொண்டு திரிய முடியும். மீண்டும் புஸ்பராசா பற்றி நான் எழுத விரும்பவில்லை காரணம் அவரின் குடும்பம் ஆரம்பகாலத்தில் பஸ்தியாம்பிள்ளையாலும் சிஐடி மாராலும் பலவேதனைக்கு உள்ளாகியவர்கள் இன்றும் சிலர் உயிருடன் இருக்கிறார்கள். அவர்களின் நிம்மதி எனக்கு முக்கியம் உங்களுக்கு எப்படியோ எனக்குத் தெரியாது.

  Reply
 • மாயா
  மாயா

  //She was a bank employee, she left Sri Lanka after teh Nigavartiya incidents. She was in Madras some time (she particpate some of the Madras office adminstraion too), Now in Canada. Because of this issues she lost her total famil life too. – Kanna//

  அவரது அக்கா கணவர் அமரன்தான் வங்கியில் பணிபுரிந்தவர். Shobana கொழும்பில் இருந்தார். அவரது அக்காவும் , குழந்தைகளும் அமரனும் ( அத்தான்) மற்றும் சோபானா ஆகியோர் நிக்கவெரட்டிய தாக்குதலுக்கு பின்னர் உடப்பில் காவல்துறை நுழைந்ததும், விமானம் மூலம் சென்னை வந்தனர். அமரன் குடும்பம் கே.கே. நகரில் ஒரு வீட்டில் தங்கினர். அமரன் வங்கியில் பணிபுரிந்ததால் புளொட் கணக்கு வழக்குகளை பார்த்தார். இதையே புளொட் காரியாலயத்தில் இருந்ததாக எழுதப்பட்டுள்ளதென நினைக்கிறேன். சோபனா பயிற்சிக்காக Tanjavoor Ladies முகாமுக்கு போனார். இவர் சீசரின் முகாமில் இருந்து , ஒரு பிரச்சனை காரணமாக வெளியேறி சென்னைக்கு வந்தார். நான் இயக்கத்தை விட்டு வெளியேறி ஒரு வீட்டில் தங்கியிருந்த போது என்னை சந்திக்க வந்தார். அது 1986ம் ஆண்டு. தனக்கு சில பிரச்சனைகள் என்று சொன்னார். அதை இங்கு எழுத முடியவில்லை. அவர் கையில் சைனைட் வைத்துக் கொண்டு , ஏதாவது பிரச்சனையென்றால் சாப்பிட இருக்கிறேன் என்றார். அப்போதுதான் எங்காவது போகுமாறு சொன்னேன்.

  அவர் கனடாவில் இருப்பது தெரியும். எங்கே என்று தெரியாது. எனது நண்பர்கள் சொன்னார்கள். அதை முன்னர் குறிப்பிட விரும்பவில்லை. நீங்கள் குறிப்பிட்டு இருப்பதால் இதை எழுதுகிறேன். அவருக்கு தலைமையில் ஒருவரால் பிரச்சனையொன்று வந்தது. நீங்கள் அதை அவரிடம் கேட்டு எழுதுங்கள். எனக்குத் தெரியும். உங்களுக்கு அவரைத் தெரியும் என்பதால் , அவர் விரும்பினால் எழுதுங்கள். இல்லாவிட்டால் வேண்டாம்.

  அவர் நிக்கவெரட்டியா தாக்குதல் காலத்தில் கணவனை பிரிந்தே வாழ்ந்து வந்தார். அவர்களுக்குள் சில பிரச்சனைகள் இருந்தன. இவற்றைச் சொல்லும் போது அவருக்கு என்னை தெரிய வரும்.

  //ஆனால் மாயா அதே உதயன் கழகத்தின் ஆரம்பகால பெண் போராளியான துளசியை நாசம் செய்து விட்டதாக அந்த பெண் இன்றும் பலரிடம் புலம்புவது ஏன்? Palli//

  அன்டனியின் காதல் எனக்குத் தெரியும். அன்டனியும் துளசியும் ஒன்றாக திருச்சியில் சென்று வாழ்ந்தார்கள் என்றே நினைக்கிறேன். அன்டனி , தமிழகத்தின் சில இடதுசாரிகளோடு தொடபில் இருந்தார். கமியுனிச தத்துவங்களை நன்றாகவே பேசவும் எழுதவும் வல்லமை கொண்டவர். இவர் சந்ததியின் குழுவில் இருந்ததால் இவரையும் கொல்லவே புளட் முயற்சி செய்தது. வாமர் , தனது மருமகன் என்பதால் வாமரே இவரைத் தாக்கி உயிரைக் காப்பாற்றினார். பின்னர் உமாவிடம் சொல்லி சென்னைக்கு அழைத்து வந்தார். அண்டனி எம்மோடு சில காலம் இருந்தார். இவரை தமிழீழத்தின் குரல் வானோலியில் பயன்படுத்தச சொன்ன போது , சிலர் அதை விரும்பவில்லை. இவர் மேல் சந்தேகம் இருந்து வந்தது. இவர் உமாவை விட சந்ததி குறித்த நினைவுகளை என்னோடு பகிர்ந்து கொண்டார். இவருக்கு உமாவில் திருப்தியில்லை என்பதை அறிவேன். இதற்கான சாட்சியாக எனது மற்றொரு நண்பன் சா…. கனடாவில் இருக்கிறார்.

  புளொட் பின் தளத்தில் உடையும் காலத்தில் அண்டனியும் வானோலிக்குள் வந்தார் என நினைக்கிறேன். அப்போது சென்னையில் இருந்த தமிழீழத்தின் குரல் கலையகம் தஞ்சைக்கு மாற்றப்பட்டது. அது இயக்குனர் டீ.இராஜேந்தர் தஞ்சை வீட்டுக்கு மாற்றலானது. அங்கிருந்து தப்பியவர்களில் அண்டனியும் ஒருவர். அடுத்தவர்கள் ஜோர்ஜ் – ஜோசப் -குகன் (போட்டோ எடுப்பவர்) – சிறீ – கோபி மற்றும் வினோத சிவா (பின்னர் புலியில் இணைந்தார்). இவர்களது வெளியேற்றத்தோடு வானோலியின் இயக்கம் தடைப்பட்டது. இவர்களது வெளியேற்றம் திவாகரனுக்கும் (சிவா சின்னப்பொடி) தெரியாது. இவர்களை தமிழக இடதுசாரிகளே பாதுகாத்தார்கள். புளொட் இந்திய இராணுவம் போனதோடு தளத்துக்கு போனது. அதன் பின்னர் மறைவிடங்களை விட்டு வெளியேறினர். திவாகரனும் உமாவோடு இலங்கைக்குச் சென்றார். எனவே அவர் எழுதிய மாலைதீவு தாக்குதல் குறித்த பதிவில் உண்மைகள் இருந்தன. ஆனால் அவர் புலிகளோடு இணைந்த பின் எழுதியதால் சில சந்தேகங்களும் இருக்கின்றன. திவாகரனை எனக்கு இலங்கையிலேயே தெரியும்.

  வானோலியை விட்டு வெளியேறிவர்கள் , புளொட் போனதும் தலை காட்டினர். சிலர் இந்தியாவை விட்டு வெளியேறினர். கோபி சென்னைக்கு வந்து ஒரு கடையில் வேலை செய்தார். அண்டனியும் , துளசியும் திருச்சியில் ( இடம் சரியாக தெரியாது) ஒன்றாக வாழ்ந்தார்கள். கோபியை காண வந்த போது சென்னையில் வைத்து சந்தித்தேன். அப்போது தமிழக இடதுசாரிகளோடு இணைந்து ஒரு தாக்குதலை செய்யப் போவதாகவும் , என்னையும் பங்கேற்க கேட்டார். நான் முட்டாள்தனமான ஒரு காரியத்தில் இறங்கப் பொகிறீர்கள் . அதை செய்ய வேண்டாம் என வாதாடினேன். கோபிக்கு அவதானம் என்றேன்.

  ஒருநாள் ஆந்தராவில் வைத்து தினசரியை பார்த்த போது அண்டனி சொன்ன தாக்குதல் நடந்து, பலர் அன்றே கைதாகியிருந்தனர். அதில் ஒரு மதகுருவும் அடக்கம். நான் உடனே கோபி வேலை செய்த இடத்துக்கு போண் பண்ணினேன். கியு பிராஞ் கோபியை விசாரிக்க பிடித்துக் கொண்டு போனதாக சொன்னார்கள். ஆனால் கோபிக்கும் அந்த தாக்குதலுக்கும் சம்பந்தமில்லை என்றார்கள். அதன் பின்னர் அண்டனி குறித்த எந்தத் தகவலும் இல்லை பல்லி.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  பல்லி! நீங்கள் என்னில் வைத்திருக்கும் மரியாதைக்கு என்றும் தலைசாய்கிறேன். என்னை அறிவதால் யாருக்கும் எந்தப்பலனும் கிடைக்கப் போவதில்லை. ஆரம்பகாலங்களில் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்வதற்குச் சந்தர்பங்கள் இருந்தது. இயக்கங்கள் கண்மூடித்தனமாக பொடியளைச் சேர்க்கத் தொடங்கியதும் இயக்கக் கட்டுபாடுகள் உடையத்தொடங்கின. இதனார் யார் எதை எப்படி என்ற கேள்விகளே மிஞ்சி இருந்தன. அய்யரால் என்னை அடையாளம் கண்டு கொள்ள முடியாது. ஆரம்பகாலத்தில் என்னை அறிந்த இராகவனே அண்மையில் சந்தித்தபோது அடையாளம் காணவில்லை. ஆனால் ஒருவர் மட்டும் என்னை சரியாக அடையாளம் கண்டு உம்முடன் நான் நன்கு பழகியிருக்கிறேன் ஒரு பமிலியர் (குடும்ப) தன்மை தெரிகிறது என்றார். மகிழ்ச்சியா இருந்தது. அன்று இயக்கத்தின் செயலாளராக இருந்த அன்ரன் எங்கோ? எல்லோரும் பிரபாகரனுக்கு கம்பி நீட்டியவர்கள் தான். அங்கயற்கண்ணி அக்கா கூத்துத்தான். ஏனையா என் வாயைக் கிளறுகிறீர்கள். நான் இயக்கத்தில் இருக்கவில்லை என்பதை கோவை சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. எந்த இயக்கத்தில் ஒருவன் பல இயக்கங்களில் ஒரே நேரத்தில் இருந்திருந்தால் இன்று வரை உயிரடன் இருந்திருக்க இயலாது என்பதை கோவை உணர்ந்து கொள்வது முக்கியம்.

  கேள்விச்செவியன் யார் என்பதை சரியாக அறிவது முக்கியம் கோவல். /பஸ்தியாம்பிள்ளை விடயத்தில் ஜயரின் வாக்கு மூலமும் உமா மகேஸ்வரனின் வாக்குமூலமும் ,சம்பவத்தின் பார்வையாளர்களின் நோக்கிலும், இதில் சம்பந்தப்படாத பரந்தன் ராசனின் வாக்குமூலம் கேள்விச்செவியனின் நோக்காகவும் பகுத்தறியப்பட வேண்டும்/ புலி புளொட் என்று உடைவதற்கு முன்னாலேயே உள்ளும் புறமுகாக உடைவுகளும் இணைவுகளும் ஆரம்பமாயின. இது ஏன் ஐயருக்கு தெரியவில்லை. சரி கோவைக்கு ஐயரைத் தெரியும் என்றால் மனச்சாட்சி தொட்டு சொல்லச் சொல்லும் நான் எழுதியது அத்தனையும் உண்மை. கேள்விப்பட்டது எதுவுமில்லை என்று சொல்லட்டும் பார்க்கலாம். துரையப்பா என்ற அப்பாவியை சுடப்பயன்படுத்திய துப்பாக்கி குசும்பினூடாகத்தான் போனது என்பதும் படுவேதனைக்குரியது. அந்த துப்பாக்கிக்குச் சொந்தக்காரன் எனது நண்பனின் தந்தை. அதை நாம் களவெடுத்து வைத்திருக்க முடியாத நிலையில் கைமாறி பாதகர்களின் கைகளில் சேர்ந்ததை ஏன் அய்யருக்கு இன்னும் தெரியவில்லை. அதில் இருந்த தானே சந்ததி பிடிபட்டது என்பதை ஏன் அய்யரக்குத் தெரியாமல் போனது. ஐயா நான் குசும்புத்தனமாக குசும்பாக யாருக்கும் தெரியாமலேயே இருந்த விடுகிறேன்.

  கோவை உமக்கு இறை உமாவுடன் எந்த அளவுக்குத் தொடர்பு என்பது எனக்குத் தெரியாது. இயக்க அல்லது விடுதலை சம்பந்தமாக ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் சந்திப்போம் மீண்டும் எழுதுகிறேன் சாகும் இரவு பின்நேரம் சுமார் 6 மணியளவில் நானும் இறையும் ஒன்றாகவே இருந்தோம் அப்போது இவர்களை எப்படி ஒற்றுமைப்படுத்துவது பற்றியே ஆரோசித்தோம் இடதுசாரித்துவம் பற்றியும் பண்ணைகள் விருந்தியுடன் மக்களை விடுதலைக்காக எப்படித் தயார்படுத்துவது பற்றியும் உரையாடினோம். ஏன் இதுபற்றி எழுதுகிறேன் என்றால் எனக்கும் இறைக்கும் இருந்த தொடர்பைக் காட்டவே. இதேபோல் எனக்கும் சுந்தரம் கண்ணன போன்றவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  /குசும்பு தான் செய்த விடையங்கள் எவை எனவும், அவை எவ்வாறு அய்யரால் மறைக்கப்பட்டு விட்டன என குசும்பு எழுதட்டும்.:://
  வேடிக்கையான கேள்வியாகி விட்டது. அய்யரக்கே விளிப்புணர்வு வந்ததே எம்மால் என்று சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள். உங்களுக்கு இன்பம் செல்வரத்தினம் பற்றி ஏதாவது தெரியுமா? கோவை முதன் முதலில் தனிப்பட்டவர்கள் கைத்துப்பாக்கி கொண்டு திரிந்தவர்களின் நானும் ஒருவன் என்று வெக்கப்பட்டு வேதனைப்பட்டு எழுதுகிறேன். எமது நோக்கமும் பார்வையும் சரியாகத்தான் இருந்தது. ஈகோ என்ற ஒன்று தடம்புரளப் பண்ணிவிட்டது. அன்று இளைஞனாக 15வயதுப் பொடியனாக இருந்தபோது இன்று போல் சிந்திக்கும் அறிவு இருக்கவில்லை இருந்தாலும் மீளாய்வும் சுயவிமர்சனம் செய்து கொண்டதால் ஒதுங்கிக் கொண்டு அளவுக்கு மீறிய பிழைகள் ஏற்படும் போது சுட்டிக்காட்டி அன்ரிப்புலியானவர்களில் நானும் ஒருவன். பேச்சுவார்த்தை 6மாதத்தக்கு மேல் நீடிக்குமானல் புலிகள் நிச்சயம் அழிவார்கள் என்று புலிகளின் காரியாலயத்திற்குச் சென்று சொல்லிவிட்டு வந்தேன் அப்போ அங்கு உள்ள சிலர் சொன்னார்கள் நீங்கள்தான் புத்திஜீவிகள் அங்குள்ளவர்கள் எல்லாம் முட்டாள்களா என்றார்கள். முடிவு என்ன? புலிகள் அழிந்து விடுவார்கள் என்பதற்காக நான் போகவில்லை. அப்பாவித்தமிழர்கள் அழிந்து விடக்கூடாது என்ற நோக்கத்துக்காகவே மீண்டும் புலிகளின் காரியாலயம் ஏறினேன். உங்கள் மக்கள்பால் உண்மையான மனிதநேயம் இருந்தால் மட்டுமே விடுதலைபற்றிப் பேசுங்கள். நாம் பேசும் எழுதும் வார்த்தைகள் எமது புதிய சமூகத்தை வழிதவறச் செய்துவிடும். அவதானமாக எழுதுவது அவசியம். அன்று மேடைகளில் சுயலாபத்துக்கம் பாராளுமன்றக் கதிரைகளுக்காகப் பேசியவார்த்தைகள் பிரபாகரனை மட்டுமல்ல என்போன்றவர்களையும் உசுப்பியது விளைவுகாண 30வருடங்களுக்கு மேல் எடுத்தது. இது இன்னும் முடிந்த விடவில்லை. சண்டை பிடித்துத்தான் எமது விடுதலையை நாம் எடுக்கவேண்டும் என்பது நியதியல்ல.

  Reply
 • மாயா
  மாயா

  //எந்த இயக்கத்தில் ஒருவன் பல இயக்கங்களில் ஒரே நேரத்தில் இருந்திருந்தால் இன்று வரை உயிரடன் இருந்திருக்க இயலாது என்பதை கோவை உணர்ந்து கொள்வது முக்கியம். – குசும்பு //
  கதை முடிந்திருக்கும். குசும்புவை என்னால் அடையாளம் காண முடிகிறது.

  // ”நாங்கள் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளுக்கு அரசினால் புனர்வாழ்வு, வாழ்வாதாரம் ஆகியன வழங்கப்படுவதற்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால் அரசு ஏனைய தமிழ் இயக்கங்களின் போராளிகளை ஒருபோதும் மறந்து விடக் கூடாது. அரசு புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு பற்றி மாத்திரமே பேசுகின்றது.

  புளொட் இயக்கம் கூட புலிகளைப் போலவே ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சிகளை வழங்கி இருந்தது. இவர்கள் எம்மை விட்டு சென்ற நாள் முதலாகவே வாழ்வாதாரத்துக்கு எவ்விதமான வழியும் இன்றி அல்லல் பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். புனர்வாழ்வு நடவடிக்கைகளில் எமது போராளிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்.” – சித்தார்த்தன்//

  மக்களுக்கு உதவவென்று நடந்த வெளிநாட்டு புளொட் குழுவின் மாநாடு புளொட்டுக்கு சாப்பாடு போடவா? ஏதோ மக்களுக்கு உதவ என்றது பம்மாத்தா? ( இந்த வசனம் பம்மாத்து வாசுவை நினைவுக்கு கொண்டு வருகிறது) மாநாட்டுக்கு வந்த சிலர் இப்பவும் பழைய புளொட் போல அவரைப் போட வேணும் இவரைப் போட வேணும் என்று கதைப்பவர்களாம். முதலில் இந்த பல்லவியை விடுங்கோ…… அந்தக் காலம் மலையேறிப் போச்சு. அதை இப்ப பாதுகாப்பு படை செய்யுது. நீங்கள் தேவையில்லை. புலிகள் காலத்தில் பேசாமல் இருந்து விட்டு > இப்ப சண்டித்தனம் காட்டி படம் காட்டுறவங்களை புளொட் தோழர்களுக்கும் > உங்களோடு வேலை செய்யிறவங்களுக்கும் தெரியும். நீங்கள் நாட்டுக்கு போனால் இனி பொட்டிப் பாம்புதான். அதை மறக்க வேண்டாம். இந்தக் கொலைக் கலாச்சார மண்டைகளோட இனியும் இறங்க நினைக்க வேண்டாம். இவற்றை அன்று ஒரு இயக்கமும் கேட்கயில்லை. இதனால்தான் இத்தனை சாபக் கேடும்; சாவுகளும்.

  தற்போது ஒரு சிலருக்கு மட்டுமே மக்கள் மேல் பாசமுண்டு. அடுத்தவர்கள் தாங்களும் ஏதோ ஒரு பதவியில இருக்க ஏதோ ஒரு அமைப்பு என்று வாறாங்கள். ஒரு சின்ன மீட்டிங். அதுக்கு பிறகு ஒன்றா சேர்ந்து தண்ணி அடிச்சு கெட்டு கெதர். இதுகள்தான் எல்லா இடத்திலயும் நடக்குது. வேற ஏதாவது உருப்படியா செய்றீங்களா? கனடாவில காசு சேர்த்து கொண்டேனரில சாமான் அனுப்பியதாவும் > சில பொருட்களை சீனாவிலிருந்து தருவித்ததாகவும் அவை அரசாங்கம் விடுவிக்கவில்லை என்றும் புளொட் சொல்லுது? அதை ஏன் சித்தர் பத்திரிகைகளில் சொல்லாமல் இருக்கிறார். ஒரு ஊடகவியளாளர் சந்திப்பை ஏற்படுத்தி இவற்றை சொல்லலாமே?

  அதன் விபரங்களை தேசத்தில் வெளியிட முடியுமா? தகவல் உண்மையாக இருந்தால் > அது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு வர எனக்குத் தெரிந்த சிலர் இருக்கிறார்கள். அரசு > அந்த மக்களுக்கு புலத்து மக்களிடம் உதவச் சொல்லியிருக்கிறது. எனவே அது குறித்து முயற்சிகளை செய்யலாம். அந்த தகவல்களையும் > அனுப்பிய பொருட்களின் விபரங்களையும் தேசத்தில் இணைப்பீர்களா?

  Reply
 • palli
  palli

  //அவருக்கு தலைமையில் ஒருவரால் பிரச்சனையொன்று வந்தது. நீங்கள் அதை அவரிடம் கேட்டு எழுதுங்கள். எனக்குத் தெரியும். உங்களுக்கு அவரைத் தெரியும் என்பதால் , அவர் விரும்பினால் எழுதுங்கள்.//
  குசும்புவின் அறிவுரை இங்கே முக்கியமாக படுகிறது; காரணம் நாம் எமது எழுத்தை நிருபிக்க உயிருடன் இருப்பவர்களை சாட்சியம் வைப்பது தவறு, அதுவும் நாமே புனைபெயரில் எழுதிகொண்டு அப்படி செய்வது நியாயம் அல்ல, மாயா மெலே குறிப்பிட்ட தகவல் ஒரு தலமையால் அல்ல தலமையாலேயே நடந்தது புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் சொல்லிய தாக்குதல் விடயத்தில் அன்டனும் சிறைவாசம் சென்று பின்பு சில ஆண்டுகள் சிறை இருந்து யாரோ புலத்தில் இருந்து உதவியதால் (பணம்) விடுதலை பெற்றதாக ஒருமுறை துளசி சொன்னார், இயக்கத்தில் பல பெண்கள் சேர்க்கபட்டாலும் அவர்களில் துளசியும் பேர்சொல்லகூடிய திறமைசாலியெனவே சொல்லுகிறார்கள், நான் டேவிட் ஜயாவை சந்திக்க போனபோதே துளசியை சந்தித்தேன்; வாடிய முகம், வறுமையின் தோற்றம், ஏமாற்றத்தின் சிரிப்பு, கடந்த கால வாழ்வு என கண்ணீருடன் சொன்னார்; ஆனால் இப்போது எங்கு என்பது எனக்கும் தெரியாது, ஆனால் அன்றும் எனக்கு இந்த கமினிஸ் என சொல்லும் அன்டன் மிது ஒரு வெறுப்பு வந்தது, ஒரு பெண்ணின் வாழ்வை சரிசெய்ய முடியாத இவர்களா?? சமுகம்மீது அன்பு செலுத்த முடியும்; கழகத்துக்கு சென்ற பெண்கள் பலர் கழகத்தில் இருந்தவர்களையே பின்பு திருமணம் செய்ததாக தகவல்கள். இது காதல் அல்ல ஒரு புரிந்துணர்வாக இருக்கலாம் என்பது என் கணிப்பு; ஆனால் யாரும் தவறாகவோ அல்லது கேவலமாகவோ போகவில்லை, துளசி மட்டும் வறுமையில் இருக்கிறாரே தவிர அவரும் யாரின் கையையும் எதிர்பார்க்கவில்லை என டேவிட் ஜயா சொன்னார்,

  // சரி எனப் பெற்ற தகவல்களைப் பதிவிடுங்கள். வெட்டியாடி வெறுமனே நீட்டிக் கொண்டு போவதில் உண்மைகள் வெளிவராது. //
  இதுவே என் நிலைபாடும் திரும்ப திரும்ப சொல்லுகிறேன் பல்லி எழுதுவது யாவும் தகவல் மட்டுமே, அந்த தகவல் உன்மையா அல்லது பொய்யா என்பதை சம்பந்த பட்டவர்கள் பின்னோட்டம் சரி செய்கிறது, நான் முன்பே ஒருமுறை ஜயரை வாதத்தில் கலந்து கொள்ளுங்கள் என அழைப்பு விட்டேன்; ஆனால் அவர் இந்த கன்று குட்டிகளுடன் (நீங்க தந்த பட்டம்தான்) என்னத்தை எழுதுவது என வரவில்லை, நாம் சொல்லும் தகவலை நீங்களே ஜயரிடம் சொல்லுங்கள் அப்போதாவது அவரது மகாவலி கங்கைக்கு ஒரு தடை வரட்டும், உலகமயமாக்குதல் என குலன் ஒரு கட்டுரை எழுதினார், அதில் 300மேற்பட்ட பின்ஓட்டங்கள் வந்தன; அதில் கூட ஜயர் எழுதாத பல சமாசாரம் வந்தது, குலனும் குசும்பு போல் ஆரம்ப கால அமைப்புகள் விபரம் தெரிந்தவர், ஒரு இடத்தில் குலன் பல்லிக்கு எழுதுவார்; பல்லி இன்ன பெயரை சொல்லி கிருபாவிடம் (துரையப்பா கிருபா) தெரியுமா என கேழுங்கள் தன்னை தெரியும் என; அபோது நான் அதை செய்யவில்லை பின்பு ஒரு இறப்பு வீட்டில் கிருபாவை பார்த்தபோது என்னை அறிமுகம் செய்துகொண்டு சில அன்றாட வாழ்க்கை முறை பற்றி பேசிவிட்டு குலன் சொன்னது நினைவுவர அதையும் தயங்கி தயங்கி கேட்டேன்; அவர் உடனே அவன் இன்னும் இருக்கிறானா??என கேட்டார்; (அவர் கேட்ட அவனில் அவர்களது நட்பை நான் புரிந்து கொண்டேன்) உன்மையில் இன்று கிருபா எந்த அரசியலும் இல்லாத ஒரு சராசரி மனிதனாக வாழ்கிறார், அதுக்காக அவர் அன்று செய்த காரியங்களை இல்லை என சொல்ல முடியுமா??

  Reply
 • மாயா
  மாயா

  //துளசியை சந்தித்தேன்; வாடிய முகம், வறுமையின் தோற்றம், ஏமாற்றத்தின் சிரிப்பு, கடந்த கால வாழ்வு என கண்ணீருடன் சொன்னார்; ஆனால் இப்போது எங்கு என்பது எனக்கும் தெரியாது – Palli//

  5 ஆயிரம் ரூபா உதவி செய்ய 5 லட்சத்துக்கு மாநாடு நடுத்தும் தோழர்களே ; புலத்து ஈழ ஆதரவாளர்களே ; பல்லி குறிப்பிடுவது போல தமிழீழ போராட்ட வரலாறில் உதவும் இதயமும் ; நோக்கமும் கொண்ட பலர் இன்னும் தவறுகள் செய்துவிட்டதாக நினைத்து புளுங்கி வாழ்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு ; அவர்களோடு இணைந்து அங்கே பரிதவிக்கும் அப்பாவி மக்களுக்கு அல்லது நேரடியாக தாயகம் சென்று தனிப்பட உதவுங்கள். அது நீங்கள் சாவதற்காக உங்களால் கொடுக்கப்பட்ட பணம் எனும் பாவத்துக்காச் செய்யும் பரிகாரமாக இருக்கும்.

  தொடர்ந்து லட்சங்களை செலவழித்து நடத்தப்படும் மாநாடுகளும் ; மாவீரர் தினங்களும் தேவையா? இவை என்னுள் எழும் கேள்விகள்? நான் வன்னிக்கு போன போது அந்த மக்களது கேட்டறிந்த சோகங்கள் எழுத்தில் வடிக்க முடியாதவை. அவற்றை நான் எழுதுவதை விட ; நீங்களே யாரோடாவது தொடர்பு கொண்டு கதைத்து பாருங்கள். உங்களால் நேரடியாக அங்கு போக அச்சமிருந்தால் வங்கி மூலமோ அல்லது உண்டியல் மூலமோ (தவறான வழிதான் ; ஆனாலும் செய்ய வழியில்லை) ஏதாவது சிறிதாக உதவுங்கள். அரசியல் தரகர்கள் வழி செய்யாதீர்கள். இவர்களை வைத்து பணம் கறக்கும் குழுக்கள் ஏராளம். அதை தடுக்கும் பலம் எமக்கில்லை. எனவே பாதிக்கப்பட்ட ஒரு உறவை எப்படியும் உங்களால் அடையாளம் காண முடியும். அவர்கள் எந்த இயக்கம் என்பது எமக்கு தேவையில்லை. பாவப்பட்ட ஒரு மானுடனாக மட்டும் பார்ப்போம். எனக்குத் தெரிந்த பல நண்பர்கள் இப்படி உதவுகிறார்கள்.

  ஒரு மாநாட்டுக்கோ அல்லது ஒரு மாவீரர் தினத்துக்கோ போய் கடைசியில் எதைச் செய்கிறீர்கள்?

  எப்போதும் வேதனைகளை சுமந்து கொண்டு வாழும் வழி நமக்கு மட்டுமல்ல : எவருக்கும் வேண்டாம். இப்படியான நிகழ்வுகளுக்கு போகும் செலவு – சாப்பாட்டு செலவு – அவர்களுக்கு கொடுக்கும் பணம் அனைத்தும் விரயம்தான். இன்றைய காலத்தில் செத்தவர்களை நினைவு கொள்வதை விட ; சாகப் போகிறவர்களை சாகாமல் காப்பதே நமது குறியாக வேண்டும். அரசு கொடுக்கிறதோ இல்லையோ ; நாம் நேரடியாக ஒரு குடும்பத்துக்கு ஒருவராக உதவினாலே ; அவர்கள் நாலு கோழியையோ அல்லது ஒரு மாட்டையோ அல்லது சிறிது விவசாயமோ செய்து தலை நிமிர்ந்து விடுவார்கள். பொருட்களை அனுப்புவதை விட ; ஏதாவது செய்ய முடியுமான வகையில் சற்று பணமாக அனுப்பினால் ; அவர்கள் விரும்பியதை அவர்களே தேர்ந்தெடுத்து செய்து கொள்வார்கள்.

  நான் கடந்த முறை சென்ற போது இதை உணர்ந்தேன். அங்கே செல்லும் போது சில உடைகளை எடுத்துச் சென்றேன். ஆனால் அது எனது தவறான ஒரு கணிப்பாக இருந்தது. சிலருக்கு அவை பொருத்தமில்லாதது. அளவில்லாதது. அதை அவர்கள் நேரடியாக சொல்லவில்லை. என்னால் அவர்கள் முககுறிப்பிலிருந்து உணர முடிந்தது. சிலருக்கு கையிலிருந்த பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்தேன். அதைப் பார்த்து என்னோடு சென்ற சிங்கள நண்பர்களும் தம்மிடம் இருந்த பணத்தைக் கொடுக்கும்படி தந்தார்கள். அவற்றையும் சிலருக்கு கொடுத்தேன்.

  வன்னியிலிருந்து கொழும்பை நோக்கிப் திரும்பும் போது ; பெற்றோலுக்கு பணம் இருந்தால் போதும் கொழும்பு வரை சாப்பிடாமல் போனால் நாம் சாக மாட்டோம் என சிங்கள நண்பகள் சொன்ன போது ; என் இதயம் வலித்தது. எமது மூதாதையர்களும் ; நாங்களும் செய்த தவறுகளால் ஒன்றுமே அறியாத எத்தனை பச்சளம் பாலகர்கள் மடிந்தனர் என்பதை எம்மால் உணர முடியவில்லை என்றால் நாம் மனிதர்களே இல்லை. எனவே இனி ஒரு அழிவுக்கு எவரும் உதவலாகாது. இங்கே எழுதப்படும் கருத்துகள் அல்லது பகிர்வுகள் யாரையும் வதைப்பதற்காகவோ ; பழி வாங்கவோ அல்ல என உணர்கிறேன். இன்னொரு முட்டாள் தனத்தை தடுக்க இது போன்ற பதிவுகள் வழி செய்யும்………… தொடர்வோம்.

  Reply
 • kovai
  kovai

  குசும்பு!
  நீங்கள் சொல்வதை உறுதிப் படுத்திக் கொள்ள, நீங்கள் குறிப்பிட்ட குமணன், சுந்தரம், கண்ணன் உயிருடன் இல்லை. அத்துடன் நீங்கள் குறிப்பிட்ட, ‘இயக்கத்தில் செயலாளர்’ பதவி இருக்கவில்லை. நீங்கள் கூறும் ‘அன்ரன்’ உறுப்பினர் மட்டுமே. இயக்கங்களில் இயக்க உளவாளிகள், அரச உளவாளிகள் இருந்ததும், அவர்கள் உயிரோடு இருப்பதும், எனக்கு நன்றாகவே புரிந்திருக்கிறது. ‘துரையப்பா துப்பாக்கி’ பற்றிய மூலம், இருக்கிற ‘கலாபதி’, சிலவேளை உறுதிப்படுத்தலாம். ஆனால் அந்த துப்பாக்கி இயக்கத்தால் விலை கொடுத்து வாங்கப்பட்டது. இரவல் எடுத்தல்ல.
  குசும்பிடம் கேட்பதெல்லாம் அந்தப் பிழைகளை இங்கே எழுதுங்கள் என்பதே. மீண்டும் கேட்கிறேன். அய்யரின் தவறுகள் எவை, சரியானவை எவை.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  கோவை! என்னிடம் கேள்விகேட்கும் நீங்கள் யார்என்பதை முதலில் உறுதிப்படுத்துங்கள். இயக்கம் இயக்கம் என்கிறீர்கள் எந்த இயக்கம் என்பதை விளக்குங்கள். ஆரம்பங்களில் புலிகளின் கடிதம் செயலாளர் என்று ஸ்டெம்பிள் பண்ணி அன்ரன் என்று கையெப்பம் இடப்பட்டே அனுப்பப்படும். அந்த இறப்பர் ஸ்டாம் அனேகமாக நீலமையில் தோய்தே குற்றப்படும். அந்த அன்ரன் என்ற இயக்கப்பெயரைக் கொண்டவர் (சொந்தப்பெயரை சொல்ல விரும்பவில்லை) இன்றும் உயிருடன் ஒரு நாட்டின் இன்ரலிஜன் சேவைக்குத் துணையாக இருக்கிறார். புலிகளுக்கு எதிராக இயங்கிவந்தார். இயக்கத்துக்குச் செயலாளர் இல்லை என்று சொல்வதில் இருந்து உங்களுக்கு ஆரம்பகால இயக்கங்கள் பற்றிய அறிவை அளக்கக் கூடியதாக இருக்கிறது. ஆரம்பகாலத்தில் புலியில் இருந்தவர்களின் ஒருவரை கொண்டுவந்து நிறுத்துங்கள் புலிகளுக்கு அன்ரனின் பெயருடன் செயராளர் என்று பதிவு செய்யப்பட்டு கடிதங்கள் அனுப்பப்படவில்லை என்று சொல்லட்டும். கோவை தெரியாததை தெரியாது என்று சொல்வது அழகுமட்டுமல்ல சிறப்புக்குரியதும் கூட.

  /நன்றாகவே புரிந்திருக்கிறது. ‘துரையப்பா துப்பாக்கி’ பற்றிய மூலம், இருக்கிற ‘கலாபதி’ சிலவேளை உறுதிப்படுத்தலாம். ஆனால் அந்த துப்பாக்கி இயக்கத்தால் விலை கொடுத்து வாங்கப்பட்டது/
  ஓகோ அதையும் காசாக்கி விட்டார்களா படுபாவிகள். கேள்விச் செவியன் கதை எனக்குத் தேவையில்லை. உங்களுக்கு அய்யர் சொல்வதுதான் சரி என்றால் அது எனக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை. அன்றில் இருந்து இன்றுவரை புத்தியில் புரட்சியடைந்தவனால் மட்டுமே புரட்சியில் பங்களிக்க முடியும். புரட்சி என்பது துப்பாக்கியில் பிறப்பதல்ல. புத்தியில் பிறப்பது. நீங்கள் அய்யர் எழுதியது மட்டும்தான் சரி என எண்ணும்போது பின்பு எதற்கு என்னிடம் என்ன வேண்டியிருக்கிறது. உங்களின் கேள்விகளை ஐயரிடமே கேளுங்கள். இந்துமதத்தின் மித்துக்களை எழுதிய ஐயர்கள் புலிகள் பற்றி எழுதுவது ஒரு விசயமா? உந்த மித்துக்களும் பித்துக்களும் உங்கள் போன்றவர்களுக்கே சரியானது. இவர்களில் இருந்து தெளிந்து வெளியில் வந்தவன் யான்.

  Reply
 • சீலன்
  சீலன்

  பல்லி; மாயா நீங்கள் இருவரும் பல கருத்துக்களை இங்கு பதிவில் ஏற்றுகின்றீர்கள் நல்லது. இதில் அன்ரனி, துளசியின் பிரச்சனை தொடர்பான உங்கள் பார்வை தவறானது. அவர்கள் தற்போது உயிருடன் இருப்பதாலும் பாதுகாப்பின் காரணங்களாலும் அவர்கள் விபரங்களை என்னால் தரமுடியாது. ஓன்று மாத்திரம் உண்மை அன்ரனியால் துளசி ஏமாற்றப்படவில்லை இதை துளசியை நேரில் சந்தித்து கதைத்த போது அவர் ஒப்பபுக்கொன்டார்.
  தோழர் தங்கராஜ தொடர்பான விபரம் தெரியுமா? கண்ணாடிச் சீலன் படுகொலை செய்யப்பட்டபோது அவரைத் தேடி அவரின் தங்கை பின்தளத்திற்கு வந்திருந்தார் அவர்பற்றி ஏதாவது தெரியுமா?

  Reply
 • Kusumpu
  Kusumpu

  ///எந்த இயக்கத்தில் ஒருவன் பல இயக்கங்களில் ஒரே நேரத்தில் இருந்திருந்தால் இன்று வரை உயிரடன் இருந்திருக்க இயலாது என்பதை கோவை உணர்ந்து கொள்வது முக்கியம். – குசும்பு //
  கதை முடிந்திருக்கும். குசும்புவை என்னால் அடையாளம் காண முடிகிறது.// மாயா
  தயவு செய்து என்னைத் தேடாதீர்கள். துப்பாக்கியுடன் தேடியவர்களே என்னை இன்னும் பிடிக்கவில்லை. என்னைக் கண்டு பிடிப்பதால் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. மக்களுக்காக வாழாத பிழையாவே குறிபாக்கும் துப்பாக்கிகளை என்றோ எறிந்துவிட்டேன். குற்றவுணர்வுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு அற்பஜீவன் என்பதுதான் என்நிலை.

  /குசும்புவின் அறிவுரை இங்கே முக்கியமாக படுகிறது; காரணம் நாம் எமது எழுத்தை நிருபிக்க உயிருடன் இருப்பவர்களை சாட்சியம் வைப்பது தவறு, அதுவும் நாமே புனைபெயரில் எழுதிகொண்டு அப்படி செய்வது நியாயம் அல்ல/
  பல்லி மனிதர்கள் அனைவரும் சந்தர்ப்பம் சூழுநிலைகளின் கைதிகள். அன்று எம்உணர்வுகளை உசுப்பிவிட்டு வோட்டுக்கள் வாங்கி பாராளுமன்றத்தில் குளிர்காய்தவர்களால் என்போன்ற பலர் விடுதலை வெறும் விழும்தலையாக மாறிதால் ஒதுங்கியவர்கள். அதற்காக விடுதலை உணர்வற்று எமது மக்கள்பால் அன்பின்றி வாழ்கிறார்கள் என்று கருதமுடியாது. எனக்கு இருக்கும் அதேவேதமை மற்றவர்களுக்கும் இருக்கும். இவர்களின் பெயர்களை உச்சரிப்பதற்கு உலகில் யாருக்கும் உரிமை கிடையாது. நீதிமன்றத்தில் சிலவருடங்களில் விடுதலை கிடைக்கும் ஆனால் எம்போன்ற பலருக்கு நாமே கொடுத்த ஆயுள்தண்டனைகளில் இருந்து மீழ இயலாது. மாக்சிச கருத்துக்களத்தில் மட்டுமே நான் பல சீரியசான விசயங்களை எழுதினேன். அப்போ பல்லி கூட ஆச்சரியப்பட்டார் குசும்பா எழுதுவது என்று. நான் வெறும் குசும்பாகவே இருக்க ஆசைப்படுகிறேன். என்னை விட்டுவிட்டீர்கள் என்றால் புண்ணியம் கிடைக்கும். நிச்சயமாகத் தெரிந்த நான் சம்பந்தப்பட்ட விசயங்கள் பிழையாக உருமாற்றம் பெற்று கற்பனைப்படும் போது பேசாமல் இருக்க முடியவில்லை. நாம் பழைய குசும்பாகவே சந்திப்போம்.

  Reply
 • palli
  palli

  // கண்ணாடிச் சீலன் படுகொலை செய்யப்பட்டபோது அவரைத் தேடி அவரின் தங்கை பின்தளத்திற்கு வந்திருந்தார் அவர்பற்றி ஏதாவது தெரியுமா?//
  நான் நினைக்கிறேன் இவர் பண்ணைமுகாமில் இருந்து அதன்பின் கொல்லபட்டவர் என, நான் இறந்தவர்கள் பெயர் குறிப்பிட்டதில் இவரது பெயர்(அவராக இருந்தால்) எழுதி இருந்தேன்; இவர் திருகோணமலையை சேர்ந்தவரென நினைக்கிறேன், இவரது விபரமாயின் தரலாம், காரணம்
  இவரது தங்கையும் பின்தளத்துக்கு பயிற்சிக்காக போனதாக தகவல் உண்டு, துளசி விடயத்தில் அவர் ஏமாற்றபட்டாரா இல்லையா என்பதை என்னால் சில அவரது உறவுகளை (நட்புதான்) சொல்ல முடியும்; ஆனால் அனுபவசாலிகளின் வேண்டுகோளுக்கிணங்க அதை இங்கு தவிர்க்கிறேன், வேண்டுமாயின் பி எல் ஓ ராஜாவை சொல்லி அவர் இவருக்கு ஏன் உதவவேண்டிய நிலை வந்தது என கேழுங்கள், பல்லியின் தகவலும் மாயா குசும்புவின் அனுபவங்களும் சரியாகதான் இருக்கும் என்பதில்லை ஆனால் ஓர் அளவாவது உன்மை அடங்கி இருக்கும், காலம் நேரம் பெயர்கள் சிலவேளை மாறி இருக்கலாம், அதை பல இடத்தில் சொல்லியும் உள்ளோம், நானும் துளசியுடன் பேசி இருக்கிறேன் என்பதை பதிவு செய்துள்ளேன், எமக்கு யார்மீதும் பகையோ அல்லது கோபமோ இல்லை, உன்மைகள் வரவேண்டும், பொய்கள் உன்மைபோன்று வருவது தவிர்க்கபட வேண்டும், சீலன் பலருடன் (கழக நண்பர்களுடன் பேசுங்கள்) அப்படி கிடைத்த தகவலே என்னது,

  கழகத்தின் நிதி பொறுப்பு,,
  மாதவன்
  மாசிலாமணி
  டைக்கரர் சிறி
  கீழே இன்னும் சிலர்??

  கழகத்தின் கட்டுபாட்டு குழு;;
  முகுந்தன்
  வாசு
  கண்ணன்;

  கழகத்தின் தள பொறுப்பு;
  பார்த்தன்
  கண்ணாடி சந்திரன்
  றமணன்
  சின்ன மெண்டிஸ்;

  அனைத்தும் தகவலே தவறாயின் திருதவும்;

  Reply
 • மாயா
  மாயா

  //பல்லி; மாயா நீங்கள் இருவரும் பல கருத்துக்களை இங்கு பதிவில் ஏற்றுகின்றீர்கள் நல்லது. இதில் அன்ரனி, துளசியின் பிரச்சனை தொடர்பான உங்கள் பார்வை தவறானது. //

  சீலன் ; எனக்கு அவர்கள் பிரிந்த தகவல்கள் தெரியாது. அதை சொல்லியிருக்கிறேன். நான் எழுதிய கருத்துகளை சரியாக பாருங்கள்.

  Reply
 • மாயா
  மாயா

  சீலன் ; மேலே குறிப்பிட்ட ஒருவர் குறித்து எனக்கு நன்கு தெரியும். அவர் குறித்து அவரது உறவு சொன்ன விடயங்கள். அவரே சொன்ன விடயங்கள். எனது பார்வையில் அவர் பட்ட விதம். அதே போல மாக்சீயம் பேசுவது வேறு; நடைமுறை வேறு என இருக்கலாகாது. என்ன பேசுகிறாயோ அதுவாக வாழப் பழகு. இல்லாவிட்டால் நீ மனிதனே இல்லை. நன்றாகப் பேசத் தெரிந்தால் ; அவர் சொல்வதை நம்பி விடுவோம். இருந்தாலும், ஒன்றாக கொஞ்ச காலம் வாழ்ந்தால் உண்மையும் ; பொய்யும் புரிந்துவிடும். கொஞ்சம் நிறமாகவும் ; அழகாக பேசவும் தெரிந்ததால் கண்கள் கண்ட இடமெல்லாம் அலைபாய்கிறதே என சொன்னதை சுதாகரித்துக் கொண்டு ; மாக்சீய கவிதை வடிப்பதாக சொன்ன போது என்னால் சிரிக்கத்தான் முடிந்தது. எனவே………… யேசு இறந்த பின் ; யேசுவைத் தெரியுமா? என சீடர்களிடம் கேட்ட போது எனக்கு அவரைத் தெரியாது என்றவர்கள் கதை எனக்குத் தெரியும். சிலர் உயிரோடு இருக்கும் அனைத்தையும் சொன்னதுண்டு. பல்லி ; சொன்ன விடயத்துக்கு நான் மறுப்புத் தெரிவிக்க எனக்கு வலு இல்லை. காரணம் எனக்கு அந்த நபரைத் தெரியும். இதற்கு மேல் வேண்டாம்.

  //தயவு செய்து என்னைத் தேடாதீர்கள். துப்பாக்கியுடன் தேடியவர்களே என்னை இன்னும் பிடிக்கவில்லை – குசும்பு//
  நான் துப்பாக்கியோடு திரிவதில்லை. உங்களைப் போல பலருக்கு அந்த அனுபவமுண்டு. ஒன்றாக இருந்தவர்களே கடத்த முயன்ற அனுபவங்களும் உண்டு. ஒரு தில். கரணம் தப்பினால் மரணம். ஒரு சர்க்கஸ்காரனின் வாழ்வு போன்றது போராளியாகும் அனைவர் வாழ்வும். இங்கே மிக நல்லவர்கள் பலர் இருக்கிறார்கள். சில கெட்டவர்கள் இருக்கிறார்கள். இவர்களால்தான் பிரச்சனை. நான் ஆயுதம் ஏந்தப் போவதுமில்லை. அரசியல் செய்யப் போவதுமில்லை. எனவே எழுத்துக்களால் கிடைத்த உறவுகள் எழிமையாகவே தொடரட்டும். எனக்கு லேசில் தப்பாது. உண்மைகளும் பொய்யாகாது.

  Reply
 • Jeyarajah
  Jeyarajah

  ஜயர் எழுதியதோடு ஒப்பிடும்போது புஸ்பராசா எழுதியது ஆரம்பித்த பல விடயங்கள் அதனில் அடக்கம் புலி வரலாறு என்பது வேறு ஈழப்போராட்ட வரலாறு என்பது வேறு, சயிக்கிள் கடை அப்பு முதல்(அமரசிங்கம்) அன்ரன் பாலசிங்கம் கிட்னி வரை நாம் உட்பட பலருக்கும் தெரியும். எனவே வரலாறு எழுதுபவர்கள் பலரின் கருத்துக்களையும் உள்வாங்கி எழுத வேண்டும். ஈழப்போராட்ட வரலாறு என்பது உமா-பிரா நாபா-சிறி-அமிர் என்ற வரையறைக்குள் முடிக்க கூடாது.

  குசும்பு, புஸ்பராசா குடும்பம் பட்ட கஸ்டம் கொஞ்ச நஞ்சமல்ல ஆனால் நீங்கள் நிற்ப்பாட்டியது அந்த குடும்ப நலன் கருதியா> அல்லது அவர் எழுதிய “ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியமா” தெரியவில்லை. ஆனால் நீங்கள் குசும்பாக எழுதுவதிலும் பார்க்க அவனா எழுதினால் நிறைய விடயங்கள் யாவருக்கம் கிடைக்கும்.
  ஜயர் எழுயதிலும் பார்க்க குசும்பு மாயா பல்லி எழுதுவதில் நிறையவே உண்மைகள் உள்ளது.

  Reply
 • palli
  palli

  // நிச்சயமாகத் தெரிந்த நான் சம்பந்தப்பட்ட விசயங்கள் பிழையாக உருமாற்றம் பெற்று கற்பனைப்படும் போது பேசாமல் இருக்க முடியவில்லை. நாம் பழைய குசும்பாகவே சந்திப்போம்.//
  முடியாது குசும்பு அது முடியாது; என்னால் எப்படி சில கடந்த கால மார்க்ஸ்சியம்; லெனிசியம்; ஏன் கமப ராமாயணம், இப்படி பலதை நம்ப முடியாதோ அதைபோல் ஈழ சதிராட்டத்தையும் நம்ப முடியவில்லை, என் முன்னே என் சமூகம் முன்னே நடந்த நடக்கிற விடயங்களை கூட நாம் கற்பனை கதைகளைதான் நம்ப வேண்டுமா??அத்துடன் மாவீரர் மட்டுமா?? தம் வாழ்வை இழந்தனர்; குசும்பு மாயா (இது உதாரணம் மட்டுமே) தம் இழமையை தொலைத்தனர், இவை எம் இளய சந்ததிக்கு தெரிய வேண்டாமா? தயவு செய்து குசும்பு குசும்பு தனமாகவாவது எழுதுங்கள் , காரணம் உங்களுக்குதான் தாய் வீடு சமாசாரம் தெரியும், குலனையும் இதில் பங்கு கொள்ள நட்புடன் அழைக்கிறேன், குசும்பு நான் கவிதை எழுதினால் என் மனைவி சொல்லுவார் குசும்பு படிக்காதவரை உங்களது கவிதை, அவர் படித்து விட்டால் அது கலவரம் என, அப்போது கூட எனக்கு உங்கள் மீது கடுப்பு வருவதில்லை; காரணம் வாழ்த்தை விட விமர்சனமே உயர்ந்தது என்பது என் கருத்து; ஏசுவோர் ஏசட்டும்; தூற்றுவோர் தூற்றட்டும் நீங்கள் நடந்ததை சொல்லுங்கள், நாம் தூங்கும் காலம் நெருங்குகிறது ,அப்போதாவது உன்மை அறிந்து தூங்குவோம்;

  Reply
 • kovai
  kovai

  குசும்பு! நான் எழுதியது புலிகள் இயக்கத்தில் ‘செயலாளர்’ இல்லை என்பதே. இயக்கப் பிரிவு பற்றிய விளக்கம், மத்திய குழு சார்பாக எழுதப்பட்டு அன்ரனால் அனுப்பப்பட்டது. மத்திய குழுவிற்கு தெரியாமல் அன்ரன் இறப்பர் ஸ்டாம் அடித்திருந்தால், எனக்குத் தெரிவதற்கு நியாயம் இல்லை. இலங்கையில் அரச பத்திரங்கள் இறப்பர் ஸ்டாம் கறுப்பு மையிலும், வியாபார நிலையங்கள் நீலமை பாவிப்பது தெரியும்.
  அன்ரன் திம்பு பேச்சுக்கு புலிகளால் அனுப்பப்பட்டவர். அவர் கனடாவின்(CSIS) உளவு நிறுவனத்திற்கு வேலை செய்து, தன்னை அவர்கள் கைவிட்டுவிட்டார்கள் என்று, TORONTO STAR பத்திரிகையில் முன்பக்கப் படத்துடன் பேட்டி கொடுத்தவர். பின்னர் அவர் இன்னொரு நாட்டிற்கு அனுப்பப்பட்டதாக செய்தி. ஆரம்ப காலத்தில் புலிகளின் கடிதங்கள் மத்திய குழுவென்றே அனுப்பப்பட்டன. இதில் இரண்டு ‘உமா’வின் பெயர் போட்டு வந்தன. பின் பிரபாகரன், கேபி,..,..,என்று தொடர்ந்தன. அய்யர் நடந்ததை எழுதியிருக்கிறார். ஆனால் அவரின் பார்வை, கருத்துகள் என்பன விவாத்திற்கு உரியதே.

  அய்யரின் ஜாதியையும்,மதத்தையும் இழுத்து வைத பின் என்னை யாரென்று வெளிப்படுத்த. உண்மைகள் வர வேண்டுமாயின் பிழைகளை சுட்டிக் காட்டுங்கள்.

  Reply
 • palli
  palli

  //ஜயர் எழுயதிலும் பார்க்க குசும்பு மாயா பல்லி எழுதுவதில் நிறையவே உண்மைகள் உள்ளது.//
  நன்றி ஜெயராஜ். இதை நாம் ஆணவமாய் எடுக்காமல் அன்பாய் ஏற்று இன்னும் பல தகவலை தர முயல்கிறோம்; அதில்வரும் தவறுகளை உங்களை போன்ற நண்பர்கள் சுட்டிகாட்டி எம்மை நேர்வழி செல்ல உதவி புரிய வேண்டும் என்பதை பின்னோட்ட நண்பர்கள் சார்பாய் கேட்டு கொள்கிறேன், மீண்டும் நன்றி ஜெயராஜ்

  Reply
 • சீலன்
  சீலன்

  மாயா> பல்லி நான் நீங்கள் சோல்லும் தகவல்கள் பிழையாக இருக்ககூடாது என்பதற்காகவே அன்ரனி> துளசி விடையத்தை எழுதினேன் இன்று வரை அன்ரனி என்னுடன் தொடர்பில் இருப்பவர் அத்தோடு அவரின் தனிப்பட்ட வாழ்கையையும் அறிந்தவன் என்ற முறையில் தான்.
  பல்லி நீங்கள் கூறுவது போல் எனக்கு பல கழக நண்பர்களை தெரியாது காரணம் நான் கழகத்தால் 6 மாதங்களுக்கு மேலாக சிறையில் வைக்கப்பட்டவன். நான் நாடு திரும்பிய பிறகு எவருடனும் தொடர்பில் இருக்கவில்லை.
  கழகத்தின் பொறுப்புகள் அடிக்கடி மாற்றப்பட்டன அதாவது மட்டக்களப்பு சிறையுடைப்புக்கு முன்> பின் அதன்பிறகு காந்தன்> சந்ததி ஆகியோரின் விலகலுக்குப்பின் அடுத்து தளமகாநாட்டுக்குப் பின் எனவே பல்லி நீங்கள் எந்த காலத்தை குறிப்பிடுகின்றீகள் என வரையறுங்கள். ஏன் என்றால் தளப் பொறுப்பில் ரெசோவிற்கு அசோக்> அரசியலுக்கு கோசவன் பொறுப்பாக இருந்த காலமும் உண்டு. கட்டுப்பாட்டுக் கமிட்டியில் பரந்தன் ராஜன் சந்ததி இருந்த காலமும் உண்டு.
  உங்களின் தகவல்கள் சரியாக வரவேண்டும் என்பதே எனது அவா. மாயா உங்களுடன் சென்னையில் சுகியும் வேலை சேய்திருப்பார். சுகி என்பவர் உயிருடன் இருக்கின்றாரா?

  Reply
 • மாயா
  மாயா

  //ஜயர் எழுயதிலும் பார்க்க குசும்பு மாயா பல்லி எழுதுவதில் நிறையவே உண்மைகள் உள்ளது. – ஜெயராஜ் //

  பல்லி போல ; நானும் நன்றி என தலை சாய்க்கிறேன். இங்கே எழுத முடியாமல் தவிக்கும் பலர் வந்து எழுத வேண்டும். அதுவே என் அவா. காரணம் எல்லோருக்கும் ; எல்லாம் தெரியாது. உமா – பிரபா – சிறீ – சபா மட்டுமல்ல அனைவரும் இதே நிலைதான். நானும்தான். எனக்குத் தெரிந்ததை விட அவருக்கு அதிகம் தெரியும் எனச் சொன்ன தோழர்களோடு இருந்திருக்கிறேன்.

  புளொட் ஒரு சமூக விஞ்ஞானக் கல்லூரியை ஆரம்பித்து பாடம் நடத்தியது. அங்கே பல முகாம்களில் இருந்து வந்த தோழர்கள் இணையும் வாய்ப்பு இருந்தது. அதுவே பல முகாம்களில் நடந்த ; நடக்கும் பிரச்சனைகளை பலருக்குள்ளும் பேச வைத்தது. இதன் பொறுப்பாளர் லண்டனில் இருந்து வந்த ராஜா அண்ணன். இவர் உமாவுக்கும் – பிரபாவுக்கும் தெரிந்த ஒருவர். இவர் இவர்கள் இருவரையும் இணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். அது சாத்தியப்படவில்லை. இவர் புளொட் பேச்சாளராகவும் இருந்தார். அவர் பலரை மனம் திறந்து பேச விட்டார். அங்கும் எமது புலனாய்வு மொக்குகள் இருந்தது. அதில் செந்தில் (மத்திய குழு ) ஆட்களை போட்டிருந்தான். அதனால் பலர் மெளனம் காத்தனர். ஒரு சிலர் மட்டும் நம்பிக்கையானவர்களுடன் முகாம்களில் நடந்தவற்றை பகிர்ந்து கொண்டனர். அதுவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும். நான் பல வேளைகளில் அத்து மீறிப் பேசுவதுண்டு. ” அண்ண கவனம். நீங்கள் எல்லாரையும் ஒரே மாதிரி பாக்கிறியள். போட்டுத் தள்ளிடுவாங்கள்.” என்று அன்பாக அறிவுரை சொல்வார்கள். அப்படியான நேரங்களில் இல்லை என்றால் நமந்தவைகளை சொல்வார்கள். இப்பவும் தொலைபேசியில் கதைத்தால் ” ஐயோ… அண்ண அத விடுங்கோ. உங்கட வேலையை பாருங்கோ. வெருளிகளை நம்பி வந்து எல்லாத்தையும் இழந்திட்டம். மொக்கு முழியனைப் பத்தி உமா சொன்னது …….. ” என கதை கதையா சொல்லி வருத்தப்படுவாங்க. இப்படி இருக்கிற பலர் இங்கு வந்து எழுத வேணும். அவை பலரது வாக்கு மூலங்களாக மட்டுமல்ல ; இயக்கம் என்று எம்மவர் நடத்திய கொத்தடிமைத் தனம் பற்றி அறியாதோருக்கு அறிவைத் தரும். இருந்தாலும் திருந்தாததுகளும் ; முடிச்சவிழ்க்கும் கும்பலும் மாறாது. திருடாய் பார்த்து திருந்தாவிட்டால் என நான் சொல்ல மாட்டேன். ஏமாறுகிறவன் இருக்கிற வரைக்கும் ஏமாற்றுபவன் இருப்பான் என்பதே இயக்கங்களின் அல்லது தமிழரின் விதி. இதுவே உண்மை.

  லண்டனில் இருந்து வந்த ராஜா அண்ணன் ; நாட்டுக்கு கடைசியாக போய் வந்தார். வந்தவர் சொன்னார் ” வானத்தில கெலிகளை கண்டதும் எங்கடதுகள் பனை மரத்துக்குள்ள ஓடி பதுங்குறாங்கள். பிஸ்டலால பக்கத்தில நின்ற என்னைத்தான் சுட ஏலும். புலிப் பொடிகள் படுத்து காலுக்குள்ள ஏகேயை வச்சு சுடுறாங்கள். அது படுதோ இல்லையோடா ஆயுதமும் இருக்கு ; ஆட்களும் துணிவா திரியுறாங்கள். புலிதான் நிற்கும் ” என்றார். இதையும் சமூக விஞ்ஞானக் கல்லூரியில் வைத்தே சொன்னார். அடித்தது யோகம். மனுசனுக்கு இடதுசாரிகளின் தொடர்பு இருந்ததால ஓடித் தப்பி ; ஒளித்து ; இருந்த நாட்டுக்கே வந்துட்டார். இல்லையென்றால் அவருக்கும் மாயானத்தில மாப் போட்டிருப்பாங்கள்.

  இங்கே அவர் குறைபட்டுக் கொண்டது எங்களால் ஆயுதம் இல்லாமல் போராட முடியாது என்பதைக் கருத்தில் கொண்டேயாகும். இருந்தாலும் உயரப் பறக்கும் கெலியை வெட்ட வெளி மைதானத்தில் கிடந்து சுடுவதும் முட்டாள்தனம்தான். ஆயுதத்தின் சுடு தூர அறிவில்லாதது. இப்படியான குணாதிசயங்கள்தான் புலிகளின் அழிவுக்கும் ; அவர்களை நம்பிய மக்களது அழிவுக்கும் காரணமாயின. புலிகள் ; ஊர்ச் சண்டியர்கள் போல கடைசிவரை சண்டியர்களாகவே வாழ உறுதி கொண்டார்களே தவிர ; வாழ்வதற்கான வழி முறையை கண்டவர்களில்லை.

  2003ல் ராஜா அண்ணனை லண்டனில் அவரது வீட்டுக்கு போய் சந்தித்தேன். உமாவோடு நாங்கள் ஒன்றாக இருந்த படங்களை அல்பத்தில் இருந்து காட்டி ” டேய் ராசா ; எல்லாரையும் அழிச்சுப் போட்டாங்கள்டா” என்று கண் கலங்கினார். “லூசங்கள். இடியடஸ் ……..” எனத் தொடர்ந்த அன்றைய விரக்தியை என்னோடு பகிர்ந்து கொண்டதில் அவரும் தவறு செய்துட்டதாக உணர்வதாகவே புரிந்தது.

  இன்றைய புலிகளது அழிவு அவரை நோகடித்திருக்கும் என தெரியும். புலிகள் என்னதான் கொடுமைகளை செய்தாலும் ; புலிகள் தமிழரை தலை நிமிர வைப்பார்கள் எனும் நம்பிக்கைகள்; ஈழப் போராட்டத்துக்கு வந்த பலரிடம் இருந்தது. என் நண்பன் நேதாஜி சொன்ன ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது. ” அண்ண ; நீங்க என்னதான் சொல்லுங்கோ ; சிங்களவனுக்கு; நான் புலி. புலிக்கு நான் புளொட்” இவை ஈழத் தமிழனின் உணர்வின் உண்மைகளாக இருந்தன. இருந்தாலும் புலிகள் மாபியா தெருச் சண்டியர்களாகவும் ; காசு பறிக்கும் கொள்ளையராகவும் இருந்தார்களே தவிர எதிர்கால நடைமுறை குறித்து எந்த அரசியல் ஞானமும் இல்லாதவர்கள். தீர்க்தரிசனம் இல்லாதவர்கள். அதிலும் புலத்து புலி மேதைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம்?

  அரசோடு நின்ற பல போராளிகள் ; புலியால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு உயிர் வாழ அதைத் தவிர வேறு வழியில்லை. அவர்கள் இருந்த இயக்கங்களாலும் பிரச்சனை. எதிர் இயக்கங்களாலும் பிரச்சனை என்றால் இது ஒன்றே இறுதி வழி. எனக்கு அனைத்து இயக்கங்களிலும் நண்பர்கள் இருந்தார்கள். இருக்கிறார்கள். அவர்களோடு நட்பொன்றை பேணுகிறேன்.யாரோடும் இணைவதில்லை. நம்பிக்கையோடு பலதை பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களை எதிரியாகப் பார்ப்பதில்லை. தவறாக நடக்கிறீர்கள் என்பதை சொல்வேன். தனியாக மோதவும் அஞ்சுவதில்லை. உன்னை நீ அறிந்தால் உலகத்தில் எங்கும் போராடலாம்.

  Reply
 • மாயா
  மாயா

  //மாயா உங்களுடன் சென்னையில் சுகியும் வேலை சேய்திருப்பார். சுகி என்பவர் உயிருடன் இருக்கின்றாரா?//

  சென்னையில் அநேகமானோர் இருந்தார்கள். இந்தப் பெயரில் யாரையும் தெரியாது. சில வேளைகளில் சென்னையில் வேறொரு பெயரை பாவித்திருக்கலாம். நானும் இடத்துக்கு இடம் என் பெயர்களை மாற்றியதுண்டு. இவை பாதுகாப்புக்காகவும் ; அடையாளம் காண முடியாமல் இருப்பதற்காகவும். இவர் எந்தப் பகுதியில் இருந்தார் என குறிப்பிட முடியுமா சீலன்? அடுத்தது இவர் ஆணா? பெண்ணா?

  Reply
 • மாயா
  மாயா

  ஆங்கிலத்தில தமிழ் எழுத ஒரு இணைப்பு. amma என ஆங்கிலத்தில் எழுதினால் தமிழில் அம்மா என மாறும். இங்கே கருத்துகளை பகிர்ந்து கொள்ள இது உதவியாக இருக்கும் . முயன்று பாருங்கள்.
  // naan ungalidam varuven//என எழுதினால் அது தமிழாக // நான் உங்களிடம் வருவேன்// என மாறும்

  http://www.google.com/transliterate/indic/Tamil

  Reply
 • palli
  palli

  //சுகி என்பவர் உயிருடன் இருக்கின்றாரா?//
  இவர் வட்டுகோட்டை அல்லது அரலாயாய் இருந்தால் லண்டனில் இருக்கிறார், நல்லாய் கவிதை எழுதும் ஆற்றல் மிக்கவர், இவர் தாங்கள் சொல்லிய கலாரூபன் மற்றும் அத்தைபத்து (நூலக பொறுப்பாளர்) இவர்கள் ஓரே ஊரை சேர்ந்தவர்கள் என நினைக்கிறேன்: இதில் கலாரூபன் இறந்ததாக( வெள்ளை; தவம்(ஓரத்தநாடு காரியலய பொறுப்பாளர்) இவர்களுடன் கலாரூபனும் போனபோது கடலில் மூழ்கி இறந்ததாக சொல்லுகிறார்கள், சில காலத்துக்கு முன்பு அழகன் (கழக மருத்துவர்)நான் இருக்கும் நாட்டுக்கு வந்தார் அவருடன் பேசினேன்; ஆனால் விபரமாக பேச முடியவில்லை; கனடாவில் உள்ளார்; அவருக்கும் பலவிடயங்கள் தெரியலாம்;

  //ஏன் என்றால் தளப் பொறுப்பில் ரெசோவிற்கு அசோக்> அரசியலுக்கு கோசவன் பொறுப்பாக இருந்த காலமும் உண்டு. கட்டுப்பாட்டுக் கமிட்டியில் பரந்தன் ராஜன் சந்ததி இருந்த காலமும் உண்டு.//
  உன்மைதான் ஆனால் நான் சொல்லியது கழக பொறுப்புக்களை தளத்தில் யார் எதுக்கு பொறுப்பாய் இருப்பினும் தளபொறுப்பாளருக்கு கீழ்தான் அவர்களது செயல்பாடு இதில் கேசவனும் அடக்கம்; இவர்தான் புதியதோர் உலகத்தின் ஆசிரியர் என நினைக்கிறேன்;
  ராஜன் கட்டுபாட்டு குழுவில் இருக்கவில்லை, பி எல் ஓ வுக்கு போகுமுன் அனைத்து முகாம் பொறுப்பாளர், வந்தபின் கழகத்தின் ஆலோசகர், சீலன் உங்கள் தகவலையும் சேகரிக்கிறோம் தெரிந்ததை சொல்வோம் தெரியாததை பெற்று கொள்வோம்;

  //அன்ரனி என்னுடன் தொடர்பில் இருப்பவர் அத்தோடு அவரின் தனிப்பட்ட வாழ்கையையும் அறிந்தவன் என்ற முறையில் தான்.// சீலன் நான் சொல்லியது சில வருடங்களுக்கு முன்னய கதை; ஆனாலும் அன்ரனி தொடர்பு எனக்கு இல்லை, ஆனால் அவர் செயல்பாடு தெரியும்; அதேபோல் அவர்களது குடும்பம் இன்று மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களது கடந்த காலத்தை நாம் எழுதி அவர்கள் வாழ்வுகு இடையூறு விளைவிப்பது தவறு என்பதால், உங்கள் தகவல்படி இருவரும்(இரு போராளிகள்) மனதுடன் வழமாக வாழ இயற்கையை வேண்டுவோம்; அத்துடன் நீங்கள் கேட்ட சீலன் நான் சொன்னவரா??

  Reply
 • kovai
  kovai

  மாயா! ராஜா என்பவர் புலிகளிடமிருந்து பிரிந்தவர்களை இணைக்க முயற்சித்தவர் என்பது உண்மையே. அவரிடம் பேசி, அது பற்றிய தகவல்களை வெளிக்கொணர முடியுமா?

  Reply
 • சீலன்
  சீலன்

  பல்லி நான் தேடுவது இவரைத்தான் சுகி என்னுடன் ஒன்றாகப் படித்தவர் கலாருபன் சுகி … … என பலர் ஒன்றாக பாடசாலையில் கல்வி கற்றோம். கலாருபன் தவம் செல்வன் … என பலர் நாட்டில் இருந்து திரும்பி இந்தியா வரும் போது கடலில் மூழ்கடிக்கப்பட்டனர் இவர்களின் படங்கள் நான் எழுதிய தொடரில் இணைத்துள்ளேன் பாருங்கள் பல்லி. அழகனுக்கும் செல்வராஜாவிற்கும் ஒரத்தநாட்டில் நடந்த பல விடையங்கள் தெரியும் ஆனால் இருவரும் தற்போது மெளனமாக இருக்கின்றனர். அடுத்து பாண்டி (ஊத்தைப்பாண்டி) இவருக்கும் நாலாம் மாடி பற்றிய கணிசமான விபரங்கள் தெரியும்.

  Reply
 • மாயா
  மாயா

  //kovai – ராஜா என்பவர் புலிகளிடமிருந்து பிரிந்தவர்களை இணைக்க முயற்சித்தவர் என்பது உண்மையே. அவரிடம் பேசி, அது பற்றிய தகவல்களை வெளிக்கொணர முடியுமா?//

  வெகுநாள் தொடர்பில்லை. முயற்சி செய்கிறேன் கோவை. நானும் பேச நினைத்ததுண்டு. பேசி என்ன நடக்கப் போகிறது என கழிந்ததும் உண்டு.

  சீலன் தேடும் நண்பர் குறித்த தகவல் பல்லியிடம் இருந்து கிடைத்துள்ளது. சீலனின் ; இலக்கத்தில் எழுதுவதை என் நண்பன் சொன்னார். அதையும் இங்கே இணையுங்கள். அதற்கு தேசம் வழிவிடும் என நம்புகிறேன்.

  Reply
 • nila
  nila

  நானும் ஒரு கழக உறுப்பினர் என்ற நிலையில் சில வரலாற்றுப் பதிவுகளை எடுத்துக்காட்ட வேண்டியுள்ளது. மற்ற அமைப்புக்களை விட கழத்திறகென்று நீண்ட ஒரு வரலாறு உண்டு. ஏனெனில் இது கழக வடிவம் பெறப்பட்டதானது ஒரு அடிப்படை சமூக மாற்றத்தையும் அதற்கான மக்கள் மட்டத்திலான வேலைத்திட்டங்களையும் செயற்படுத்தியே உருவானது. இதற்கான உதாரணம் காந்தீயம் என்ற சமூக ஸ்தாபனம் டொக்டர் ராஜசுந்தரம் அவர்களால் விஸ்தரிக்கப்பட்டதும் அதில் டேவிட் ஐயாவின் தலைமையும்- சந்தியாரின் இணைவும் பின் ராஜன்- உமா-சுந்தரம்-காத்தான் போன்றே பல ஆரம்பக் கால போராளிகளின் வருகையும் கிழக்கு மாகாணத்தை பொறுத்தளவில் சந்ததியார் காலற நடந்து தேடிய போராளிகள் -அதாவது தமிழ் தேசிய தலைமைகளால்- இளைஞர் அமைப்புக்களின் உடைவுகள் என முரண்பட்டு நின்றோரையும் (உதாரணம் வாசுதேவா போன்ற பலர்) திருமலையில் 1979 கடைசிப் பகுதியில் காந்தீயத்தை கிராம மட்டத்தில் கிராமிய சபைகள்-பொதுஸ்தாபனங்களுடாக பாலர் பாடசாலைகள் -பண்ணைகள் என்று சந்ததியாரின் அறிமுகங்கள் ஊடாக காந்தீயத்தின் தலைமைகளை திருமலை நோக்கி நகர்த்திய பெருமை சந்தியாரையே சாரும்.

  இதற்கு முன் திருமலை புனித சூசையப்பர் கல்லூரியில் யாழ்ப்பாணத்திலிருந்து ஆசிரியராக வந்து பணியாற்றிய பயஸ் மாஸ்ரர் அவர்களால் மாக்சியம் பற்றியும் விடுதலை பற்றியும் சில குறிப்பிடத்தக்க இளைஞர்கள் மத்தியில் அரசியல் அரிச்சுவடு தீவிரமாக பேசப்பட்டது. இந்த மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ரகுமான் ஜான்-பார்த்தன் என்ற ஜெயச்சந்திரன்(மறைந்த போராளி) றோஸ் மைக்கல் – புலிகளின் மூத்த உறுப்பினர் எனப்படும் தியாகி சால்ஸ் அன்ரனி (இவரின் அதிதீவிரவாதத்தால் இப் பாடசாலையில் சுதந்திர தினத்தன்று கொடி எரித்து விட்டு படிப்பையும் விட்டு தலைமறைவாகியதில் பின்னால் புலிகளுடன் இணைந்தது வரலாறு) இப்படியான மாணவர்கள் 1980 சந்ததியாரின் வருகைக்கு பின் முதலில் ஜெயச்சந்திரனும் அதனைத் தொடர்நது ஜெயகாந்தன்-கிருபாகரன் தளத்தில் வைத்து (சிவராம் கொம்பனியால் கொலைசெய்யப்பட்ட) ராதா கிருஸணன்- ஜான் என்ற ஒரு படித்த இளைஞர் வட்டம் காந்தீயத்திற்குள் உள்வாங்கப்பட்டனர் (தொடரும்…….)

  Reply
 • Kusumpu
  Kusumpu

  கோவை! அன்ரன் பற்றிய செய்தியை நான் இங்கு குறிப்பிட்டதே பதிவுகள் தவறாகப் போய்விடக்கூடாது என்பதற்காகவே. புலிகள் பிரிந்த விடயம் மட்டுமல்ல மற்றைய எழுத்து வேலைகளும் முத்திரையும் அன்ரனிடமே இருந்தது. எனது வாயைக்கிளறாதீர்கள். உயிருடன் இன்று இருப்பர்களை சமூகத்தின் முன் நிறுத்தி வேடிக்கைபார்க்க நான் விருப்பவில்லை. அன்ரன் எழுதிய கடிதங்கள் என்னிடம் இருந்தன என்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன். இயக்கத்தில் (எந்த இயக்கமானாலும் சரி) இருந்து விலகியவர்கள் எவ்வளவு குற்ற உணர்வுடன் வாழ்கிறார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். நான் என்னை சிறிது அடையாளம் காட்டுவதற்கே எழுதினேன். நானும் அவர்களுடன் திரிந்தவர்கள் தான். இத்துடன் நிறுத்துவோம். புலிகளின் மத்தியசெயல் குழுவில் செயலாளர் என்ற ஒருபதவி இருக்கவில்லை என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் முக்கிய கடிதங்களை…..? அவர் மூலமே அவரால் மத்திய செயற்குழுவின் ஆணையுடன் எழுதி அனுப்பப்படும்.

  Reply
 • மாயா
  மாயா

  நல்லதொரு ஆரம்பம் தொடருங்கள் நிலா.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  நிலா! நல்லது காந்தியப்பண்ணையில் இருந்து சந்ததியீறாக எழுதுகிறீர்கள். அப்படியானால் எனது பெயரை ஏன் கைவிட்டீர்கள்? அரபாத்தைத் தெரியுமா? நிலா நான் பலபெயரில் உலாவியவன் அதனால் தான் உயிருடன் இருக்கிறேன். என்னால் பழையவிசயங்களை எழுத முடிவதில்லை காரணம் நித்திரை வராது என்பதால். மறக்கத்தான் முயல்கிறேன் மறந்தும் இருந்தேன். பின்னோட்டக்காரர்கள் கிண்டி கிளறி விடுவார்கள் போல் இருக்கிறது. தொடருங்கள்.

  ஜெயராஜ், நன்றிகள். என்னால் அய்யர்போல் கேள்விப்பட்டவற்றை உண்மைபோல் நடந்ததாக எழுத இயலாது. முக்கியமாக அய்யர் எழுதியதில் எல்லாம் பிழை என்று கருதவேண்டாம் பல உண்மைகளை அய்யர் கொண்டுவந்துள்ளார் என்பதை யாரும் மறுக்க இயலாது. சில ஆரம்பகாலத் தகவல்கள் சரியாகவே உள்ளன. ஆனால் அவை அனைத்தும் ஒரு பக்கமானது. அதுமட்டும்தான் புலிகளின் வரலாறு என்று கருதுவது தவறானது.

  ஜெயராஜ்/குசும்பு, புஸ்பராசா குடும்பம் பட்ட கஸ்டம் கொஞ்ச நஞ்சமல்ல ஆனால் நீங்கள் நிற்ப்பாட்டியது அந்த குடும்ப நலன் கருதியா> அல்லது அவர் எழுதிய “ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியமா” தெரியவில்லை. ஆனால் நீங்கள் குசும்பாக எழுதுவதிலும் பார்க்க அவனா எழுதினால் நிறைய விடயங்கள் யாவருக்கம் கிடைக்கும்./
  ஆயுதப்போராட்டத்தை ஒருசில இயக்கங்களுடனும் தலைவர்களுடனும் முடிக்க முயல்கின்றனர். ஆனால் ஆணிவேராய் இருந்தவர்கள் நீரூற்றியவர்கள் பலருண்டு. உதாரணம் புஸ்பராசா…+ புஸ்பராசாவின் சாட்சியங்கள் என்பது அவரின் பக்கத்தில் அவருக்கு தொடர்புடையனவற்றை வைத்திருக்கிறார். நிச்சயமாக குடும்ப நலன் கருதியே. சிலவேளை உங்களுக்கும் தெரிந்திருக்கலாம் அவரது சகோதரி பற்றி. நான் இன்றும் அவவிற்கு தலைவணங்குகிறேன். வேண்டாம் போதும் போதும். இவை எந்தக்காலப்பகுதி என்று சிந்தியுங்கள். அந்த காலப்பகுதியிலேயே நாம் புரட்சி பற்றிச் சிந்தித்திருக்கிறோம் என்பதில் நானும் பெருமை அடைகிறேன்.

  Reply
 • மாயா
  மாயா

  குசும்பு ; உங்களுக்கு பஸ்தியாம் கொலை குறித்த தகவல்கள் அதிகமாகத் தெரியும். அதை எழுதும் போது உங்கள் எழுத்துகளின் வலிமையும் உண்மையும் தெரிய வரும். தேவையற்ற விவாதங்களை விட தகவல்களை எழுதுங்கள். சிலர் தமது அனுபவமாக எழுதுகிறார்கள். சிலர் தாம் கேட்டதை எழுதுகிறார்கள். இவற்றை சரி செய்து கொண்டு போவோம். இங்கே பலர் தகவல்களை சேகரித்து இருக்க மாட்டார்கள். சிலர் சொல்ல முடியாமல் இருப்பார்கள். நீங்கள் புலிகளது ஆரம்ப கர்த்தாக்களோடு இருந்தவர். எனவே ஆரம்ப கால நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்வதால் மகிழ்ச்சி குசும்பு.

  Reply
 • palli
  palli

  //நல்லதொரு ஆரம்பம் தொடருங்கள் நிலா.//
  நிலாவை எழுதவைத்த பெருமை மாயாவையே சாரும்; அவர்தான் பலரை உள்வாங்குகிறார், நன்றி மாயா; அத்துடன் மாயா இந்த சமூக விஞ்ஞானக் கல்லூரி ஆசிரியர் நித்தியானந்தன் என பெயர் உள்ளவரா?? அவர் லண்டனில்தான் இருந்து வந்தவர் என நண்பர் சொல்லுகிறர்; அத்துடன் அவர் ஒரு தகவலும் தந்தார், உமா ராஜன் புடுங்கு பாடில் ராஜன் தான் தளத்தில் தாக்குதல் செய்ய போகிறேன், அதனால் தனக்கு தான் கேப்பவர்களை தரும்படி கேட்டாராம், அதுக்கு முகுந்தனும் நீங்கள் விரும்பியவர்களை எடுத்து கொண்டு போங்கள் என சொல்லி விட்டு, அதில் யாரும் பொறுப்பில் இருப்பவர்களை எடுக்க வேண்டாம் எனவும் ஒரு தடை போட்டாரம்; ராஜனும் அதுக்கு உடன்பட்டு முகாம்களுக்கு சென்றபோது ஆச்செரியம் அவர் கணக்கு பண்ணிய பலர் சமூக விஞ்ஞானம் படிப்பதற்க்காக முதல் நாளே முகாமகளை விட்டு சென்னை சென்ற தகவல் கிடைத்தது; இதில் கிளிநொச்சி நபர்கள் முன்னிலை; குறிப்பாய் சொல்வதானால் ரஜீவ், குகன் போன்ற தலமை தாங்ககூடிய நபர்கள் கூட முகுந்தனால் சென்னை அழைக்கபட்டனராம்; இதுவும் தகவலே, ஆனால் தகவலை தந்தவர் முகுந்தனால் சென்னை அழைக்கபட்ட நபர் ஒருவரே,
  சீலன் சுகியின் முகவரி அல்லது தொடர்பு செய்து தர முயல்கிறேன், முடிந்தால் அவரது உன்மை பெயரை தரவும்; அழகன் செல்வராசா பாண்டி பலரது தொடர்புகள் எடுப்பது கஸ்ரமல்ல, நீங்கள் தேடிய சீலன் விபரம் தந்தேன் அது சரியா??

  //நாட்டில் இருந்து திரும்பி இந்தியா வரும் போது கடலில் மூழ்கடிக்கப்பட்டனர் :://
  சிறிய திருத்தம் இந்தியாவில் இருந்து நாட்டுக்கு போகும் போது உயிர் நீத்தனர்கள். ஒரு சின்ன வருத்தம் ஏன் நானே என எழுதிய நண்பர் தொடராமல் விட்டு விட்டார், அவரும் தொடர வேண்டும் என்பது எமது விருப்பம்; குசும்புவுக்கு உதவியாய் நிலாவின் கருத்துக்களும் தகவலும் வருமென எதிர்பார்ப்போம்; ஜயா இதுவே தகவலும் வரலாறும்; இப்போது கூட நீங்கள் ,,,,,,,,,??உங்கள் பலரை எழுத்து மூலமாவது ஒன்றினைக்க இந்த பல்லி இன்னும் பல தகவலையும் பலரையும் இனம் காட்டுவேன்; தேசத்துக்கு நன்றி எமக்கு சுகந்திரமாய் வாதம் செய்ய தளம் தந்ததுக்கு;

  Reply
 • palli
  palli

  கழகத்தின் ஓட்டிகள்.
  பாண்டி,
  நவம்,
  சிறி,
  முகுந்தன்,
  பைரய்யா,
  ரகு; தேவா,
  இன்னும் சிலர்,

  கழகத்தின் ஓட்டுனர்கள்.
  வாமன்,
  ராஜன்,
  அருமை,(அருள்)
  கட் பாலா
  யூட்,
  ரத்தினம்,
  நியூட்டன்,
  வசந்தன்,
  இடியமீன்,
  நடேசர்,
  நியாஸ்,
  இன்னும் சிலர்;

  இதில் ஒருமுறை மாணிக்கம் தாஜன் லாறி ஓட்டி அதை கவிட்டு அதில் ஒருவர் (சுதன்) இறந்தபோது இந்த யூட்தான் ஓடினார் என தமிழக பொலிஸ்சில் தாசன் சொல்லி தான் தப்பித்து யூட் பலகாலம் தமிழகத்தில் கழகத்துக்காக சிறை இருந்தார் என்பது கவனிக்க வேண்டியது, இது நடந்த இடம் சரியாக சொல்ல முடியாவிட்டாலும் புதுக்கோட்டை மதுரை றோட்டெனவே நான் அறிந்த தகவல்,

  Reply
 • சுகந்தன்
  சுகந்தன்

  /அரபாத்தைத் தெரியுமா?/

  இவர் சந்ததியாருடனும் டேவிட் ஜயாவுடனும் சித்தன்கேணி கணேச வித்தியாசாலையில் நடந்த அகதிகள் புனர்வாழ்வு கழகத்தின் கிளை அங்குராப்பணக் கூட்டத்திற்கு சமூகம் தந்திருந்த அரபாத் ஆயின் எனக்கு அவரை தெரியும். அது எனக்கு மறக்க முடியாத சந்திப்பு. ஆனால் அரபாத்துக்கு மறுபுறத்தில் என்னைத் ஞாபகம் இருக்குமா தெரியுமா தெரியாது. இது நடந்தது 1980 ம் ஆண்டு என நினைவு.

  சுகந்தன்.

  Reply
 • மாயா
  மாயா

  //இது நடந்த இடம் சரியாக சொல்ல முடியாவிட்டாலும் புதுக்கோட்டை மதுரை றோட்டெனவே நான் அறிந்த தகவல்//
  உரத்தநாட்டிலிருந்து அல்லது புதுக்கோட்டையிலிருந்து மதுரையில் நடந்த ஒரு கூட்டத்துக்கு போகும் போதுதான் இந்த விபத்து நடந்தது. லொறியை ஓட்டிச் சென்றது மாணிக்கதாசன்தான். ஒருவர் இறந்தார். எனக்கு இடம் நினைவுக்கு வரவில்லை. நினைவுக்கு வந்தால் எழுதுகிறேன்.

  // மாயா இந்த சமூக விஞ்ஞானக் கல்லூரி ஆசிரியர் நித்தியானந்தன் என பெயர் உள்ளவரா?? – Palli//
  அவர்தான். கோவை கேட்டுக் கொண்டதற்கிணங்க ; அவரைத் தொடர்பு கொள்ள எடுத்த முயற்சி வெற்றியளித்தது. நான் விபரம் சொன்னேன். உங்களைப் பற்றி தேசத்தில் வருகிறது. கடந்த கால விபரங்களை எழுதுவீர்களா? என்று கேட்டேன். அதற்கென்ன தை மாதம்தான் லண்டன் வருவேன். அதன் பின்னர் எழுதுகிறேன் என்றார்.

  தேசத்தின் பணியும் ; எழுதுவோரின் ஆர்வமும் பாராட்டுக்குரியது. இங்கே அனைத்து இயக்க போராளிகளும் எழுத வேண்டும் என்பதே எமது விருப்பம்.

  Reply
 • nila
  nila

  குசும்பு!உங்களைப் போன்றே நானும் பழைய நினைவுகளை மீட்டெடுத்து வரும் போது பல வித மனச்சஞ்சலங்களால் என்னுள்ளே நான் சாகடிக்கப்படுவது போன்ற உணர்வுகளால் மன வேதனைப்படுகின்றேன். ஆனால் எனது குடும்ப அரசியல் பின்னணிகளால் புத்தி தெரிந்த காலத்திலிருந்து ஏதோ ஒரு விதத்தில் எமது போராட்டத்தின் பல மையப்புள்ளிகளை கடந்து வந்து கொண்டிருக்கின்றேன். எனவே எமது தமிழ்பேசும் மக்களின் விடுதலை போராட்டம் சம்பந்தமான ஆவணப்படுத்தலில் எனக்குரிய வரலாற்றுக் கடமையை செய்ய முயற்சிக்கின்றேன். என்னால் முடிந்தவரை-சில வேளை நிக்கரவெட்டியா நகர்வு வரை கூட இருக்கலாம். ஏனெனில் இன்று வரை நாம் கடந்து வந்த பாதையில் நாம் இழந்த – நாம் பறிகொடுத்த எம்மவர்க்கு இது ஓர் அர்ப்பணிப்பாகவும் அமையலாம். குசும்பு-மாயா-அஜிவன் என இத் தளத்தில் வந்து போகும் எம்மவர்கள் என்னால் விடப்பட்டவைகளை சுட்டிக்காட்டினாலோ அன்றி ஆரோக்கியமான விமர்சனங்களாக வெளிப்படுத்தினாலோ நாம் தொடரும் இநத தளம் ஆரோக்கியமாக அமையுமென எதிர்பார்த்து உங்களுடன் களத்தில் இறக்கப்பட்டுள்ளேன்

  மேலும் எமது மறக்க முடியாத பதிவில் அரபாத்தும் ஒன்று. திருமலையில் ஜெயாவின் பொறுப்பிலிருந்த தென்னை மரவாடிப்பண்ணை(காநதீய குகதாசன்) கன்னியா பண்ணை- கங்குவேலிப்பண்ணை-பன்குளப்பண்ணை என்ற வேலைத்திட்டங்களும் அப்பண்ணையினூடாக சந்ததியாரின் நேரடிப்பார்வையில் ஏனைய மாவட்டங்களிலிருந்து தலைமறைவாக இருக்கவேண்டிய பல புளொட் அல்லது காந்தீய வேலைகளில் ர்டுபட்ட தோழர்கள் ஜெயாவாலும் ஜெயாவின் நண்பர்களாலும் பாதுகாக்கப்பட்டதும் வெளிவராத உண்மைகள் ஆனால் இன்று வரை இது சம்பந்தப்பட்டவர்களுக்கும் (குசும்பு உடபட)தெரிமென நினைக்கின்றேன். இதில் பன்குளம் பிரதீபன்- (தற்போதும் புளொட்டில் இருப்பவர். 83ல் இனக்கலவரத்தால் பன்குளத்தில் பெற்றோர் சகோதரர்கள் என பததிற்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் துவேசம் பிடித்த சிங்களவராலும் இலங்கை ராணுவத்தாலும் கண்மூடித்தனமாக கொலை செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது) மேலும் இறந்த தோழர்களான அன்பழகன் (இவர் வெலிக்கடை படுகொலையில் பலியானபோராளி-கடையப்ப பிழைப்பு நடத்திய ஒரு விதவைத் தாயின் அருமை மகன்-5சகோதரிகளின்- அவர்களின் எதிர்கால கனவுகளின் பாசமிகு சகோதரன்) மேலும் பலியான சேவல்கொடி-கன்னியாவைச்சேர்ந்த மற்றும் ஒரு தோழர்(மாணிக்கம் தாசனால் 1990பிற்பகுயில் வவுனியாவில் வைத்து அத் தோழரின் நிறைமாத கர்ப்பிணிப்பெண்ணுக்கு முன்னால் வெட்டிக்கொலை செய்யப்பட்டவர்(இவரின் பெயர் ஞாபகம் வரவில்லை தயவு செய்து யாராவது தெரிந்தால் பதிவு செய்யுங்கள்…..) மேலும்திருமலை மாணிக்கவாசகர் வீதியைச் சேர்ந்த தோழர்…..இவர் பெயரும் ஞாபகத்திற்கு வரவில்லை. ஜெயா மட்டக்களப்பில் போலிசாரால் சுடப்பட்டு மரணமான கடைசி நாளில் ஜெயாவுடன் முக்கிய வேலைத்திட்டத்தில் ஈடுபட்டிருந்தவர். பின் வேறொரு சம்பவத்தில் ஆமியால் பிடிபட்டு வவுனியா ஆகாயப்படை முகாமிலிருந்து தப்பியோடி பின் சிங்களக் கிராமமொன்றில் பிடிபட்டு சுடப்பட்டு மரணமானவர்)

  இப்படியான தியாகங்கள் நிறைந்த எம் தோழர்களால் திருமலை காந்தீயப்பண்ணை 80லிருந்து 83 சிறையுடைப்பு வரை புளொட்டின் அநதரங்க செயற்பாட்டுத்தளமானது. 1979 பிற பகுதிகளில் சந்தியாரின் அறிமுகத்தோடு திருமலை காந்தீயத்திற்கு மேற்பார்வையாளாராக திருமலை அரசியல் பின்னணி நிறைந்த ஒரு பெண் உள்வாங்கப்பட்டார்…தொடரும்

  Reply
 • மாயா
  மாயா

  நிலா ; சேவல்கொடியை எனக்குத் தெரியும் . இவரும் நிக்கவெரட்டியா தாக்குதலுக்குச் சென்றவர். தாக்குதல் முடிந்ததும் காட்டுப்பகுதி வழியாக ஒரு பகுதியை நோக்கிச் சென்றவர். இன்னொருவர் உமாவை கொலை செய்த ஆச்சி ராஜன் என நினைக்கிறேன். ஆச்சி ராஜனாக இருந்தால் ; இவர் மலையகத்தில் வைத்து கைத்துப்பாக்யோடு போலீசாரால் கைதானார்.

  Reply
 • vetrichelvan
  vetrichelvan

  தோழர்களே
  பிளாட் சிதறிபோனதக்கு காரணம் ஸ்ரீலங்கா உளவு துறையை சேர்ந்த ஷிர்லி ஸ்கந்தபபா இயக்கத்தில் ஊடுவியதுதான். காகா நிரஞ்சன் கொலைக்கு முக்கிய காரணம் உமாவின் திருமண விடயமும், கண்ணன், காகா பதவி போட்டிவும்தான் உமா .கொலை. மாணிக்கம்தாசன் உட்பட ஆனந்தி, திவாகரன் தவிர மற்றவர்கள் இயக்கமாக முடிவு எடுத்தது,

  மாயா, சாரங்கன் தொடர்பு உண்டா

  Reply
 • சீலன்
  சீலன்

  நீங்கள் தேடிய சீலன் விபரம் தந்தேன் அது சரியா??// சரி. நன்றி பல்லி.
  சுகியின் உண்மையான பெயர் ஞபகம் இல்லை ஆனால் அவரிடம் ஏன் சுகி என்ற பெயரை வைத்தா என விசாரிக்கவும் அதன் பின்னால் ஒரு கதை உண்டு. சரி அடுத்து நல்லது ஒரு ஆரம்பம் நிலாவின் பதிவுகள் நிலா இன்றுவரை பலருக்கு தெரியாத பெயர்களுடன் சம்பங்களுடன் முன்வருகின்றீர்கள் மிகவும் அவசியமான விடையம். நான் ஆவணப்பதிவை ஒழுங்கமைப்பவன் என்ற முறையில் எம் கண்ணுக்கு தெரியாத பல தோழர்கள் தமது உயிரை தியாகம் செய்துள்ளனர் அவர்களை நாம் எமது வரலாற்றில் பதிய வேண்டும் எனவே தோழர்களே உங்களுக்கு தெரிந்த விடையங்களை பதில் ஏற்றவும்.
  பல்லி ஒட்டிகள் பற்றி விபரம் தந்துள்ளீர்கள் இதில் யார் யார் உயிருடன் இருக்கின்றனர் என அறியத் தர முடியுமா?
  மாயா குசும்பு நிலா சுந்தரம் படைப்பிரிவு ( மீரான்) பற்றிய புதிவுகளும் அவசியம். சுந்தரம் தலைமையில் ஆனக்கோட்டை பெலிஸ்நிலையத் தாக்குதல் போன்றவற்றை பதில் ஏற்றுங்கள்

  Reply
 • palli
  palli

  //மாயா, சாரங்கன் தொடர்பு உண்டா//
  இவர் பரந்தன் ராஜனுடன் இப்போது செயல்படுபவராயின் இவர் சுவிஸ்சில் இருக்கிறார், உங்களுக்கு தெரிந்த சிலரிடம் (இவராயின்) இவர் தொடர்புகள் இருக்கிறது,

  //மாணிக்கம்தாசன் உட்பட ஆனந்தி, திவாகரன் தவிர மற்றவர்கள் இயக்கமாக முடிவு எடுத்தது//
  அப்படியாயின் மாணிக்கம்தாசன் ஏன் உமா கொலையில் சம்பந்த பட்டவரென சுவிஸ்ஸில் ஒருவரை கொலை செய்தார், அதோடு சின்னபொடியின் மறுபக்க கட்டுரையில் தாசன் மிக கேவலமாக விமர்சிக்கபடுகிறார், ஆனந்தி என்பவர் யார்??

  ///அரபாத்தைத் தெரியுமா?//
  சிவகுமாருக்கும் அரபாத் என ஒரு பெயர் உண்டென சிலர் அன்று சொன்னார்கள், அது சரியோ அல்லது தவறோ தெரியவில்லை, குசும்பு இன்று நாம் பேசும் அல்லது எழுதும் விடயங்கள் அன்று முகம் அறியா போராளிகளாகவும்; பொருளாதார உதவி செய்ததால் சிறை சென்றவர்களுக்கும் ஒரு நினைவாக அமையட்டும்; இப்படிதான் கரடிபோக்கில் கராச் வைத்திருந்த பாலரத்தினம், விசுவமடு சந்தியில் தேனீர்கடை ஆறுமுகம் என்பவர்கள் பொலிஸாரால் தாக்கபட்டது மட்டுமல்ல அவர்களது பொருளாதாரமும்???

  ஆச்சிராஜன் கழகத்தில் இனைந்து எந்த பயிற்ச்சியும் பெற்றதில்லை என சொல்லுகிறார்கள். இவர் சங்கிலிக்கு மிகவும் விசுவாசமாக இருந்ததால் இவர் உளவு படையின் அங்கத்தவராகி குறுகியகாலத்திலேயே உமாவின் மெய்பாதுகவலராகி இறுதியில் அவரே பொய்பாதுகாவலராகி உமாவுக்கும் ஜமனாகி விட்டார், இவர் பம்பாயில் இருந்து பின்பு சென்னையில் தங்கி இருந்தார், இவரது சகோதரம் ஒன்று புலம் பெயர் தேசத்தில் மிக பிரபல்யமான கவிதையாளர்; ஆச்சியின் இறப்பு செய்தி தேசத்தில் வந்ததாக நினைக்கிறேன்;

  புலியில் மட்டும்தான் புலத்து பினாமிகள் உள்ளனரா? அன்று நாட்டில் எப்படி கழக வழர்ச்சியோ அதேபோல் புலத்திலும் கழகம் கொடி கட்டியே பறந்தது 1983லேயே பலர் புலத்தில் இருந்து பயிற்ச்சிக்காய் கழகத்தில் இனைந்தனர்; அதேபோல் முகுந்தனும் இங்கு வந்ததாக சொல்லுகிறார்கள்; அப்போது கழகத்துக்கு சேர்ந்த பணம் கழகத்துக்கு போய் சேர்ந்ததா??
  இதில் லண்டன் மாயவன்; பாரிஸ் குழந்தை பாரிஸ் ஏகாமபரம்; கி;;;; மூர்த்தி; இப்படி பட்டியல் தொடருமே, இவரகள் அன்று அடிக்கடி தமிழகத்தை முத்தமிட்டனர்; அதனால் இவர்கள் கழக தோழர்களுக்கு நினைவில் இருக்க வாய்ப்புகள் அதிகமே; பிரபாகரன் நாட்டு பற்றாளர் பட்டம் கொடுத்தது போல் உமா தன் இரு மச்சான்மாரை தனிவீடு கொடுத்து மரியாதை செலுத்திய கதையும் உண்டு; இதில் ஒருவருக்கு(நாகலிங்கம்) ரெலாவின் பாதுகாப்பு உரிமையையும் வழங்கியதாக ரெலா செய்திகள்; புலிகள் மதிவதனியை தூக்கி கொண்டு போனதுபோல் கழகத்தினர் (வாமராய் இருக்கலாம்) ரெலாவை அப்படியே தூக்கி சென்று தமது கட்டுபாட்டில் செந்தில் காந்தன் தலமையென ஒரு ராமா நடத்தியதும் சரித்திரம் அல்ல கழகத்தின் நரிதனமே;

  Reply
 • T Sothilingam
  T Sothilingam

  ஓபரேய் தேவன் புலிகளால் கொலை செய்யப்பட்ட பின்பு காஸ்ரோ கூச் இருவருமே இயக்கத்தின் பொறுப்பாளிகளாகினர். இவர்களிடையேயும் பலமான உறவு இருந்தது என்றில்லை. இவர்களுக்கு பின்பு ரெலா இயக்கத்தின் பொறுப்பானவர்(பெயர் ஞாபகம் வரவில்லை) உமாமகேஸ்வரனின் உறவினர் இவர் சகோதரியின் அல்லது சிறிய தாய் மகளின் மகன் என நினைக்கிறேன்; இவர் உமாவுடன் பேசி ரெலா இயக்கத்தை தம்முடன் இணைத்ததாக அறிந்தேன் இது பற்றி காஸ்ரோவிடம் கேட்டபோது இதில் ஒரு சதிநடந்தது என்று கூறியிருந்தார். அவர் அப்போது (பெயர் ஞாபகம் வரவில்லை) புளொட்டின் உளவாளி பலகாலமாக எம்முடன் இருந்தவர் என்றே கருத்து கொண்டார். இதன்காரணமாக பின்னர் காஸ்ரோ கூச் இவர்களுக்கிடையேயும் பிரச்சினைகள் உருவாகி இந்த இணைவு சம்பந்தமாக புளோட்டுடனும் பிரச்சினைகள் உருவாகி பின்னர் கூச் காஸ்ரோ இருவரும் கொல்லப்பட்டதாகவே நான் அறிந்தேன். கூச் அல்லது காஸ்ட்ரோ வட்டுக்கோட்டை அரலியை சேர்ந்தவர்கள் என நினைக்கிறேன்.

  தமிழரங்கம் ரயா – உமா மகேஸ்வரன் – கலைச்செல்வன் (எக்ஸில்)- ஈரோஸ் ரவி சுந்தரலிங்கம், இன்னும் சில புளொட்டின் முக்கிய உறுப்பினர்கள் எல்லோரும் உறவினர்கள் எனவும் சிறிய வயதுகளில் இவர்கள் எல்லோரையும் ஊரில் நடக்கும் பூசை வீடுகளில் கலியாண வீடுகளில் ஒருசேர காணலாம் எனவும் அறிந்தேன்.

  Reply
 • மாயா
  மாயா

  //சாரங்கன் தொடர்பு உண்டா – vetrichelvan//

  உண்டு . இவர் சுவிசில் இல்லை. மேற்கத்திய நாடு ஒன்றில் இருக்கிறார்.

  // பிரபாகரன் நாட்டு பற்றாளர் பட்டம் கொடுத்தது போல் உமா தன் இரு மச்சான்மாரை தனிவீடு கொடுத்து மரியாதை செலுத்திய கதையும் உண்டு; இதில் ஒருவருக்கு(நாகலிங்கம்) ரெலாவின் பாதுகாப்பு உரிமையையும் வழங்கியதாக ரெலா செய்திகள்..//

  உமாவின் பெற்றோர் மற்றும் மச்சான்மார் எல்லோரும் என் பக்கத்து வீட்டில்தான் இருந்தனர் பல்லி. அவர்களுக்கான சில பணிகள் என்னிடம் உமா கொடுத்திருந்தார். நாகலிங்கம் பணம் குறித்து பார்த்தவர் எனத் தெரியும். சென்னை ; கே.கே. நகர் அம்மன் கோவிலுக்கு பக்கத்தில் இவர்கள் குடியிருந்தார்கள். புளொட்டின் சமூக விஞ்ஞானக் கல்லூரியாக இருந்த சத்துணவுத் திட்ட கட்டிடத்துக்கு பின்னால். டெலோவிலிருந்து பிரிந்த 7 டெலா செந்தில் குழுவுக்கும் நான்தான் வீடு பார்த்துக் கொடுத்தேன். அவர்களும் பக்கத்தில் இருந்தார்கள். இவருக்கு டெலோ பாதுகாப்பு வழங்கவில்லை.

  //புலிகள் மதிவதனியை தூக்கி கொண்டு போனதுபோல் கழகத்தினர் ……..//

  மதிவதனியின் கதையை நோர்வே நண்பர் த….தி எழுதலாமே? உங்களுக்கு முழு விபரமும் தெரியுமே தோழர்.

  -சையனைட் அருந்தி உயிரை மாய்த்த முதல் போராளி சிவகுமாரனின், தாயும் என்னோடுதான் சென்னையில் வாழ்ந்தார்கள்.

  Reply
 • palli
  palli

  //அவரிடம் ஏன் சுகி என்ற பெயரை வைத்தா என விசாரிக்கவும் அதன் பின்னால் ஒரு கதை உண்டு.//
  ஜயோகோ இதுகூடவா தெரியாமல் நல்ல கவிதையாளன் என சொன்னேன்; அவரது தாடிக்குள்ளும் ஒரு சோகம் தெரியுமே;
  // மீரான்) பற்றிய புதிவுகளும் அவசியம்.//
  இவர் இறந்து விட்டதாக செய்திகள், அதுவும் டென்மார்க்கில் இருந்து இந்தியா போய் ஒரு விபத்தில் இறந்ததாக ஒரு நினைவு; ஆனால் இவரா அல்லது அழியாத கோலமா என்பது நினைவில்லை; மாயா சரி பாருங்கள் ஓட்டிகள் மூவர் இருப்பதாக செய்தி ஆனால் அவர்கள் விபரம் தேசத்தில் தர முடியாது உங்கள் நேரடி தொடர்பு கிடைத்த பின் தருகிறேன்; அவசரம் வேண்டாம், அத்தோடு தாங்கள் தந்த முகவரியான தமிழரங்கம் உங்களுடையதா?? அல்லது அதில் தாங்கள் எழுதுகிறீர்களா?? ஆவணங்கள் சேகரிப்பதானால் தனி முகவரியே உகந்தது,

  Reply
 • T Sothilingam
  T Sothilingam

  நானும் மீரான் மாஸ்டரும் கோட்டை இராணுவ முகாமில் ஒன்றாக ஒரே அறையில் பூட்டப்படுபவர். அப்போது பல விடயங்களை மீரானிடம் கேட்டு அறிந்தேன்

  மீரான் மாஸ்டர் ஜரோப்பாவிலிருந்து இந்தியா போனபோது வாகன விபத்தில் இறந்தவிட்டார் என கேள்விப்பட்டேன். மீரான் பெரிய ஜயாவின் உண்மையான விசவாசி இவர் பெரிய ஜயா இப்படி எல்லாம் செய்த விட்டார் என பின்நாட்களில் பிடிபட்டு இராணுவ முகாமில்அடைபட்டு இருந்ததவர்கள் சொன்னபோது நான் அப்படி நினைக்கவில்லை எதுக்கும் ஒருநாள் நான் வெளியே பொனால் இதுபற்றி கேட்பேன் என்று சொன்னார் பின்னர் மீரான் விடுதலையான பிறக நடந்த எல்லாம் கேள்விப்பட்டும் புளொட்டுடன் இணைய மறுத்து விட்டார் என்று அறிந்தேன் அதைவிட உமா மகேஸ்வரன் மீது கோபமும் கொண்டிருந்தார் எனவும் அறிந்தேன்.

  சுழிபுரம் 6 புலிகளின் கொலைகளுக்கு மீரான் பொறுப்பு என பலர் கூறிய போதும் மீரான் தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றும் இது புலிகளே செய்துவிட்டு புளொட்டின் மீது பழியை போட்டவர்கள் என்று எனக்கு கூறினார் ஆனால் அதே காலத்தில் புலிகளில் இருந்தவர்கள் இல்லை மீரான்தான் புலிகளின் 6 குழந்தைகளையும் கொலை செய்தவர் என வாதிடுவார்கள்

  மீரான் இலங்கை அரசியல் வரலாற்றிலும் மாக்ஸிசம் பற்றி போதுமான அறிவுள்ளவர் நான் மீரானுடன் பல தடவைகள் சுழிபுரத்திலும் சித்தன்கேணியிலும் ஈழமாணவர் பொது மன்றம் சார்பாக பிரச்சாரங்களில் ஈடுபட்ட காலங்களில் பல தடவைகள் பிரச்சனைப்பட்டுள்ளேன் (ஒன்றும் சண்டையல்ல) மீரான் கருத்து ரீதியாகவே அணுகும் தன்மை கொண்டவர்.

  இலங்கை இராணுவத்தை புலிகள் பலப்படுத்துகிறார்கள் இதனால் தமிழ் மக்களுக்குத்தான் நட்டம் என்றும் மக்கள் போராட்டம் பற்றி புலிகள் தக்க அறிவு இல்லாதவர்கள் என்பதை அடிக்கடி சொல்லுபவர் அதைவிட பிரபாகரனை முழியன் வார்த்ததையாலே எப்போதும் விழிப்பார் பிரபாகரனின் கையில் ஈழப்போராட்டம் போனால் தமிழருக்கு எதுவுமே கிடைக்காது போகும் என்பதில் நானும் மீரானும் பல தடவைகள் புலிகளின் உறுப்பினர்கள் மத்தியிலேயே கூறியுள்ளோம்.

  மீரானின் சகோதரி பெயர் ஞாபகம் இல்லை புளொட்டின் உளவுப்பிரிவினர் என நினைக்கிறேன் அல்லது இந்தியாவினால் பயிற்றுவிக்கப்பட்ட தொலைத்தொடர்பு இயக்குனராக இருக்கலாம் என் நினைக்கிறேன் புளோட்டின்னுள்ளேயே திருமணம் செய்திருக்கலாம் என நினைக்கிறேன்.

  மீரான் மாஸ்டரின் தகப்னார் சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர்களில் ஒருவர் ஒரு-இரு முறை சீனாவுக்கும் போய்வந்தவர் இலங்கையில் மதிப்பு மிக்கவர் என்பது மீரானை பழக முன்பே எனக்கு தெரியும்.

  மீரான் இயக்கங்கள் ஒன்றிணைந்து ஈஎன்எல்எப் உருவாக்கியதை ஆதரித்தவர் ஆனால் புலிகள் ஒன்றிணைந்ததை எதிர்த்தவர் காரணம் பிரபாகரன் உங்களை அழிக்கவே இணைகிறார் என்ற கருத்தை பலமாக கொண்டிருந்தவர் என்னிடம் இந்தியாவில் அண்ணா நகரில் வைத்து இதை சொன்னவர்

  இந்தியாவுடன் இணைவதில் புளொட்டின் நிலைப்பாட்டை மீரான் உறுதியாக இருந்தவர் குறிப்பாக இந்தியா சொல்லுவதை செய்ய புளொட் தயாரில்லை ஆனால் ஈஎன்எல்எப் அப்படி இந்தியா சொல்வதை செய்ய தயார் என்ற கருத்து மீரானிடம் இருந்நது.

  அந்தக்காலங்களில் மீரானும் புளோட்டிள் சில உளவுப்படையினரம் சாதாரண ஆட்களாக ரெலோவின் ஆட்கள் தங்கும் இடங்களுக்கு வந்து போவது வழமை சிலவேளைகளில் தமக்கு தெரிந்த ரெலோ தோழர்களின் வீடகளில் தங்கியிருந்து போவதும் வழமை இது அவர்களுக்கு உளவாக இருக்கலாம் ஆனால் ரெலோ மறைக்க எதுவும் இல்லாத இயக்கமாகவே இருந்தது. இந்தக்காலத்தில் பரந்தன் ராஜன் புளொட்டினுள் பிரச்சினைகள் வந்து சிறிசபாவிடம் வந்தபோது சிறிசபாவை சந்திக்க வேண்டும் என்று கேட்க சிறிசபா நேரடியாக தான் தங்கியிருக்கும் இடத்திற்கு ராஜனை கூட்டிச்சென்றவர் (பல ரெலோ தோழர்களின் விருப்பத்திற்கும் மாறாக)

  விபியுடன் நல்ல உறவுடன் இருந்தவர் மீரானின் அப்பாவும் விபியும் நெருக்கத்தினால் மீரானுடனும் விபி நல்ல உறவு இருந்தத விபி ரெலோ தோழர்களுக்கு வகுப்பு எடுத்தகாத்தில் வகுப்பு முடிவில் விபியும் மீரானும் ரெலோ இடங்களிலேயே விபியை சந்தித்துள்ளார் எனக்கு இவை நேரடியாக தெரியும்.

  மீரான் புளொட் ஒரு புரட்சிகர அமைப்பு என்பதில் துளிகூட அசையாத நம்பிக்கை கொண்டிருந்தவர் புளொட் ஒரு கூட்டு முன்னணிக்கான தலைமைச்சக்தி என்பதிலும் குறிப்பாக சந்ததியார் இன்னும் பல தோழர்களில் நம்பிக்கை கொண்டிருந்தவர் தன்னை எப்போதும் முன்னிலைப்படுத்தி என்னிடம் கதைத்தவரல்ல பிரான்ஸில் உள்ள ஜென்னி பற்றி நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.

  மீரானின் குடும்பம் சுழிபுரத்தில் மிகவும் மதிப்பு மிக்கவர்கள் எனக்கும் மீரான் மீது இயக்க நடவடிக்கைளின் தவறுகள் தவிர மக்களை நேசித்த தோழர்.

  இயக்கங்களின் நடவடிக்கைகள் தவறுகள் துரோகங்களின் போது கொலைகளில் ஈடுபட்ட பலர் பற்றிய எனது பொதுவான அபிப்பிராயம் – கொலை செய்தவர்கள் எல்லோரும் கொலையாளிகள் அல்ல கொலை ஆயுதமாக பயன்பட்டுள்ளார்கள்! அதேபோன்று கொலை செய்யாதவர்கள் அத்தனைபேரும் கொலை செய்யத் துணியாதவர்கள் என்றில்லை.!!-

  செவ்வாய் வெள்ளி சைவ தினங்களில் விரதம் இருப்பவர் – மீரான் கந்தசஸ்டி கவசம் சிவபுராணம் முழுமையாக பாடமாக்கிக்கொண்டவர் இவருடன் ஒரே செல்லில் அடைக்கப்பட்டிருந்ததால் நானும் கந்தசஸ்டி கவசம் சிவபுராணத்தை பாடமாக்கிக்கொண்டேன்.

  பொது வாழ்வில் ஈடுபட்ட இயக்க நடவடிக்கையில் ஈடுபட்ட நாம் அனைவரும் விமர்சனங்களுக்கு முகம் கொடுத்தே தீர வேண்டும்!!

  புலிகள் மட்டும் தவறுகளும் துரோகங்களும் இழைத்தவர்கள் அல்ல!!

  Reply
 • nanee
  nanee

  வெற்றி உமது ஈ- மெயிலை இணைத்துவிடவும்.
  வெற்றிக்கு பல ஆரம்ப விடயங்கள் தெரியும். எனக்கும் பல தோழர்களுடன் இன்னமும் தொடர்பு இருக்கின்றது. ஆனால் ஆவணப்படுத்துவதுதான் கொஞ்சம் கஸ்டம். பலர் செவிவழி கேட்டதையும் பலர் தம்மை முதன்மை படுத்துவதிலும் பலர் இன்னமும் பயத்திலும் உள்ளார்கள்.
  76-83 ஒரு பகுதியாகவும் 83-90 ஒருபகுதியாகவும் பதிவு செய்வதே நல்லது.
  அன்ரன் தென் ஆபிரிக்காவில் இருக்கின்றார். இங்கு இருக்கும் போது என்னுடன் நல்ல தொடர்பில் இருந்தார் இருந்தும் பழையவற்றை கதைக்க பெரிதும் விரும்புவதில்லை. பிரபாவின் தீவிர விசுவாசி. இப்போது வேண்டுமானால் கதைத்து பார்க்கின்றேன். ராஜாவையும் முடிந்தால் சில விடயங்கள் கேட்கலாம். 83 பின்னர் வந்த தோழர்களிடமும் கேட்டுப்பார்க்கலாம்.

  Reply
 • சீலன்
  சீலன்

  ஆச்சி ராஜன் முதலில் பீ முகாமில் பயிற்சி எடுத்து ஈ முகாமிற்கு மாற்றப்பட்டு பின்னர் மாணிக்கம் தாசனால் நடத்தப்பட்ட கைகொமாண்டோஸ் எடுத்தவர் (தகவலுக்காக)
  மீரான் மாஸ்ரர் நோர்வேயில் இறுதிக்காலத்தில் வாழ்ந்தவர். அவர் நோர்வேயில் இருந்து பயணம் சென்று இந்தியாவில் வாகன விபத்தில் இறந்தார். இவரின் இறப்பு எனக்கு இன்றும் ஒரு கோள்விக்குறியாகவே உள்ளது இது யாராவது திட்டமிட்டு செய்திருக்கலாம் என.
  பல்லி சுகியின் தோடர்பை முடிந்தால் ஏற்படுத்தித் தரவும் நான் தான் தமிழரங்கத்தில் எழுதுபவன். நான் தந்த தொடர்பு முகவரி ஆவணச் சுவடியினுடையது. இந்த முகவரியும் தமிழ் அரங்கத்தின் தொடர்பு முகவரியும் வேறுபட்டவை அதை அவதானித்தால் புரியும்.
  சுழிபுரம் 6 இழைஞர்களின் கொலையில் மீரான் சம்பந்தப்பட்டதா இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் இதுபற்றி அதிகம் அறிந்தவர்கள் புலத்தில் உள்ளனர் அதில் ஒருவர் சுகன் (தலித்தியவாதி) இவர்கள் வாய் திறந்தால் இக்கொலை தொடர்பாக பல உண்மைகள் வெளிவரும்.
  //கழகத்தினர் (வாமராய் இருக்கலாம்) ரெலாவை அப்படியே தூக்கி சென்று தமது கட்டுபாட்டில் செந்தில் காந்தன் தலமையென ஒரு ராமா நடத்தியதும் சரித்திரம்//
  இதில் என்ன கூறவருகின்றீர்கள் என விழங்கவில்லை தயவு செய்து விபரமாக எழுதவும்.

  Reply
 • மாயா
  மாயா

  //ஆனால் ஆவணப்படுத்துவதுதான் கொஞ்சம் கஸ்டம். பலர் செவிவழி கேட்டதையும் பலர் தம்மை முதன்மை படுத்துவதிலும் பலர் இன்னமும் பயத்திலும் உள்ளார்கள்.//

  இது போன்ற நிலைமைகள் நடக்கும். ஆனால் ; இது நடந்துள்ளது. உதாரணத்துக்கு இலங்கையில் நடந்த ஒரு தாக்குதல் குறித்து மவுண்ட றோட் எம்.எல்.ஏ.ஹவுசலிருந்த ஒரு தோழர் ; அத் தாக்குதல் குறித்து கை கால் மூக்கு வைத்து தொலைபேசியில் விபரித்துக் கொண்டிருந்தார். அதில் பங்கு பற்றி விட்டு வந்த ஒரு நபர் அங்கே அப்பாவியாக பொன்னம்பலம் என்ற பெயரோடு பக்கத்தில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்.

  நமது எழுத்துக்கள் ; அடுத்தவரை எதையுமே எழுதப் பண்ணாமல் விட்டு விடும். தெரிந்தோர் அல்லது விரும்பியோர் எழுதலாம். தவறுகள் இருந்தால் யாரும் அதைத் திருத்தலாம். சிலர் தனக்கு நடந்ததை சொல்வார்கள். சிலர் தான் கேள்விப்பட்டதை சொல்வார்கள். சிலர் யாரோ சொன்னதைச் சொல்வார்கள். ஊடகங்களும் அந்தவகையானதுதான். செய்தியாளர்கள் நிகழ்வு நடக்கும் போதெல்லாம் ; அங்கிருப்பதில்லை. அங்கு போய் விசாரித்து அல்லது தேடி தகவல்களை வழங்குகிறார்கள். எனவே தொடர்ந்து பலர் எழுத வழி ஏற்படுத்தும் போது ; அது நம்மால் தடையாகி விடலாகாது என்பதை நாம் கருத்தில் கொள்வது நலம்.

  நான் உமா மீது அதீத நம்பிக்கை கொண்டவனாக இருந்தவன். அவர் இறந்த போது ஒரு துளி கண்ணீர் என் கண்ணில் வரவில்லை. அவரது சில விடயங்கள் அப்படி ஆக்கி விட்டன. ஆனாலும் உமாவின் தீர்க்க தரிசனம் குறித்து வியந்துள்ளேன். இன்றும் வியக்கிறேன். அவரோடு மிக நெருக்கமாக இருந்திருக்கிறேன். எனவே அவரது பலமும்; பலவீனமும் எனக்கும் தெரியும்.

  இயக்கத்தை விட்டு வெளியேற வேண்டும். போக விடுங்கள் என்ற போது ; அவர் என்னிடம் சொன்ன ஒரு வார்த்தை ” கவனமாக இரும். எனது கடிதம் இல்லாமல் ; யார் உம்மை அழைத்தாலும் நம்பி வர வேண்டாம். உம் மேல் சிலருக்கு கண் உண்டு.”

  இதிலிருந்து உமாவால் இயக்கத்தை தனது கட்டுப்பாட்டில் வைக்க முடியவில்லை என்பதை உணர்ந்தேன். சாவதற்கு வந்தேன். வாழ்வதற்காக வெளியேறுகிறேன். எது வந்தாலும் சந்திப்பேன் என்று சொல்லிவிட்டு வெளியேறி அதே கே.கே.நகரில் வாழ்ந்தேன். பல தடவைகள் என்னைக் கடத்தும் முயற்சிகள் இடம் பெற்றன. அவை தோல்வியில் முடிந்தன. எனவே எந்தக் காலத்திலும் மீண்டும் அதே தவறை செய்ய மாட்டேன் என உறுதி கொண்டேன். அது தொடர்கிறது ………….

  எத்தனையோ சுகங்களை மட்டுமல்ல ; ஒரு சுவர்க்க வாழ்வையே இழந்தேன். என் நிலை போல அனைவரையும் எண்ணுகிறேன். எனக்காக என் சகோதரன் கைதாகி புசாவில் இருந்த போது ; அவனை எடுக்க ஏதாவது செய்யலாமா என்று கேட்ட போது “போராட்டத்தில் இவை சாதாரணமானவை” என்ற பதில் வந்தது. ஆனால் அவரது குடும்பமோ என் முன்னால் நடமாடினார்கள். 18 மாதங்களுக்குப் பின் இந்திய இராணுவம் வந்த போது கொடுக்கப்பட்ட பொது மன்னிப்பில் வெளியே வந்தான். இப்பொது அவன் கனடாவில்……. இருந்தாலும் எனது தந்தை இறந்த போது நாங்கள் எவருமே அவரோடு இல்லை. பல காலத்துக்கு பின்னரே தகவல் அறிந்தோம்.

  இதைவிடக் கொடியவை இப்போது நடந்தவை. என்னை விட எத்தனை பேர் செத்துக் கொண்டே சிரிப்பார்கள்? எண்ணிப் பார்க்கிறேன். கடந்த முறை வன்னி போய் வரும் போது ஒன்றே ஒன்றுதான் என் மனதில் பட்டது. இத்தனை சோகங்களோடும் ; இன்னும் வாழ இவர்களாலும் முடிகிறதே என்பதுதான். நான் யாரிடமும் பணம் வாங்கி உதவ மாட்டேன்.யாரிடமும் கொடுக்கவும் மாட்டேன். என்னிடம் ஏதாவது கிடைத்தால் யாரோ ஒருவருக்கு; நீ இதை வைத்து வாழ்ந்து கொள் எனக் கொடுப்பேன். இந்த அரசியல் பித்தலாட்டம் புரட்சி . இதை அவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்.

  முடிந்தால் ஒவ்வொருவரும் ; உங்கள் வாழ்வின் மறக்க முடியாத சில வரிகளையாவது எழுதுங்கள். அதை யாரும் தடுக்காதீர்கள்.

  Reply
 • மாயா
  மாயா

  வெற்றி ; சாரங்கனோடு கதைத்தேன். டெல்லியில் ஒன்றாக இருந்த தகவல்களை பகிர்ந்து கொண்டார். (இது ஒரு நம்பிக்கைக்காக எழுதுகிறேன்.) உங்கள் மின் அஞ்சலை அனுப்பினால் ; அவரைத் தொடர்பு கொள்ள வைக்கிறேன்.

  Reply
 • மாயா
  மாயா

  //nanee – முதலில் சுனில் நாசாவில் இல்லை.யார் இந்தக் கதை இட்டு கட்டியது.//

  இதை கனடாவில் இருந்து தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சர்வதேச கிளைகளின் மகாநாடு ஜப்பசி மாதம் 30ம் 31ம் திகதிகளில் ஜேர்மன் ஸ்ருட்காட் நகரில் இடம்பெற்ற மாநாட்டுக்கு வந்த தோழர்கள் ; “சுனில் ஏன் வரவில்லை” என்று சிலர் கேட்டபோது ; கனடாவிலிருந்து வந்திருந்த இயக்கத்தின் கொழுந்துகள் ” சுனில் ; நாசாவில் ஒரு முக்கிய வேலையில் இருக்கிறார். அவரால் வெளியில் போக முடியாது” என சொல்லியிருக்கிறார்கள்.

  இப்படியான அரிச்சந்திரன்களை நம்பி மீண்டும் களத்தில் இறங்க முடியுமா? என சிந்தித்து செயலாற்றுங்கள். அன்று கடலில் இருக்கும் கப்பலில் இருந்து வானோலி ஒலிபரப்பாகிறது என்ற போது ; தஞ்சாவுரிலிருந்த 3 பகுதிகளில் கொடிக் கம்பத்தை ஏற்றி வானோலி ஒலிபரப்பானது. கொமினிகேசன் பார்தீபன் நோர்வேயில் என அறிந்தேன். யாருக்காவது தெரியுமா?

  கப்பலே இல்லை. அன்று கப்பல் கதை. இப்ப நாசாவா? நல்ல காலம் செவ்வாய்க்கு போயிருக்கிறார் என்று சொல்லவில்லை. சுனில் எமது நண்பர் என்பதால் ; சுனிலை அல்ல ; சுனிலைப் பற்றிய பொய் மூட்டைகளை அவிழ்க்கும் சிலரை அடையாப்படுத்தவே இதை எழுதுகிறேன்.

  அவர் கனடாவில்தான் இருக்கிறார். அவர் நாட்டிலும் ஏதோ செய்கிறார். இதுதான் உண்மை.

  Reply
 • nila
  nila

  வெற்றிச்செல்வன் இத்தளத்துக்கு வந்தது மகிழ்சியாக உள்ளது.(இவர் இந்தியாவில் தற்போது இருப்பவராய் இருப்பவரானால்) சென்ற வருடம் நான் ஒருவிடயமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டேன் ஆனால் தற்போதைக்கு எனது மேலதிக விபரங்களை வெளியிட வேண்டாம்.உங்களிடம் எனது ஈமெயில் உள்ளது நீங்கள் தான் என்றால் தொடர்பு கொள்ளவும்.புளொட்டின் தலைமைக்கும் டெல்லிக்கும் தொடர்பாளரான முக்கிய பாத்திரத்தை வகித்த உங்கள் அளப்பெரிய வேலைத்திட்டமும் டெல்லி முதற்கொண்டு உங்களுடைய செயற்பாடுகளும் பிரமிக்கத்தக்கவை.ஆனால் சென்ற வருடம் உங்களை தேடியதில் கண்டுபிடித்து உரையாடிய பின் உங்களைப்போன்ற திறமைசாலிகள் இன்று வறுமைக்கோட்டில் குடும்பத்தோடு பல சிரமத்தின் மத்தியில் மன விரக்திகளோடு வாழ்வதை அறிந்து மனம் பதைபதைத்தேன்.பல திறமைகள் நிறைந்த படிக்க வந்த நீங்கள் புளொட்டிற்குள் உள்வாங்கப்பட்டு செயற்பட்ட பாரிய வேலைத்திட்டங்களை நினைக்கும் போது பெருமூச்சுத்தான் விடமுடியும்.உங்கள் குறிக்கப்பட்ட பல நண்பர்களெல்லாம் புளொட்டை விட்டு வெளியேறி மேல்நாடுகளில் அன்றே செட்டிலாகிய நிலையிலும் அந்த நண்பர்கள் கூட உங்களுக்கு கைகொடுக்காமல் போனது மனவேதனைதான்…..ஏதோ…..
  மேலும் மேல்மட்ட பிரச்சனைகள் உங்களுக்கு தெரிந்திருக்கும் நிலையில் உங்கள் மூலம் வரும் பதிவுகள் முக்கியமானதாக இருக்கலாம். ஆயினும் நிரஞ்சனின் மரணத்திற்கு உமாவின் திருமணமும் ஒருகாரணமென்பது ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. ஏனெனில் உமாவின் திருமணம் 1984 மாசி 29(அது ஒரு லீப் வருடம்)ல் நடந்தது.நிரஞ்சனின் கொலை நீண்ட இடைவெளிக்குப் பின் 1985க்குப் பின் அல்லது 86ல் (நிரஞ்சனின் கைது கொலை சம்பந்தமாக இவ் விபரம் தெரிந்த ஒரு நபரை தொடர்பு கொண்டு கதைத்துள்ளேன் அவர் மூலம் விரைவில் இத்தளத்திற்கு பதிவுகள் வரும்)ஆயினும் நீங்கள் குறிப்பிட்ட விடயம் எங்கோ பல உண்மைகளை உதைக்கின்றது முடிந்தால் விபரமாக எழுதுங்கள்.
  மேலும் பதவிப் போட்டிகள் என்பது சந்தியார் கொலைக்குப்பின்னும் (வாசுதேவா அரசியற் துறைச் செயலர் என்ற….)நிரஞ்சன் கொலைக்குப் பின்னும்(கண்ணன் படைத்துறைச் செயலர் என்ற…)தகுதிகளின் அடிப்படையில் வெள்ளிடைமலையாக தெரிந்த விடயம் தான்.ஆரம்ப ஸ்தாபனம் உருவாக்கும் போது இருப்பவற்றைக் கொண்டு அமைப்புக் கட்டியது தவிர்க்க முடியாதாகலாம்.ஆனால் 84ல் ஒரு பருமித்த இயக்கமாக வளரும் போது பல திறமைசாலிகள் செயற்படத்தொடங்கிய போது பதவிகளும் பொறுப்புக்களும் அந்தந்த தகுதியானவர்க்கு வழங்கப்பட்டு உடனியாக சம்பந்தப்பட்டவர்களை நாட்டை நோக்கி இறக்கி செயற்பட விட்டிருந்தால் இரு தளத்திலும் ராணுவம் அரசியல் பிரிவுகள் புதாகாரமாகி சிக்கி சின்னா பின்னமாகியிருக்காது….விடுதலை என்ற பெயரில் குழிபறிப்புக்களும் மரணகுழிகளும் நிகழ்ந்திருக்காது….

  Reply
 • சுகந்தன்
  சுகந்தன்

  உமா மகேஸ்வரனின் தளவிஜயத்தின் போது அவரது மெய்ப்பாதுகாவலராக வந்தவர்களில் காந்தி என்பவரும் ஒருவர்.

  இவர் தீவுப்பகுதி இராணுவ அமைப்புக்கு பொறுப்பாக இருந்தார். சொந்தப் பெயரைத் தவிர்த்து புனைபெயரிலாவது சில வெளிச்சங்களை இவர் பாய்ச்சினால் அந்த ஆறு போராளிகளின் கொலை மீதான மர்மங்கள் சில துலங்கலாம். தனக்கு தெரிந்த தகவல்களை இவர் பரிமாறலாம்.

  Reply
 • nila
  nila

  சோதிலிங்கம் மீரான் வாத்தியைப்பற்றி சொன்னவை பெருமளவில் உண்மைகள். 91 அல்லது 92 பகுதிகளில் கடைசியாக அவர் அழைத்த தொலைபேசியின் மூலம் நிறைய விடயங்களை பேசினோம். கண்கெட்ட பின் தான் நாம் எல்லாம் சூரியநாமஸ்காரத்திற்கு புறப்படுகின்றோம். சோதி சொன்னது போல் ஒரு வேதாந்தியாகவே மாறிவிட்டார். அவரின் மரணம் ஒரு விபத்து மரணம்தான் என அவரின் நெருங்கிய உறவினர் மூலம் அறிந்து கொண்டேன். மனவிரக்திகளுடன் இருப்பவர்களைவிட இறந்தவர்கள் பாக்கியசாலிகள். எம்மைப் போன்றோர் தான் எல்லாவற்றையும் மறக்கமுடியாமல் இன்றுவரைகூட மனஉளைச்சல்களில் துயருருகின்றோம்.

  மீரான் வாத்தியின் ஒன்றுவிட்ட சகோதரி வாணி என்பவர் 1984 ஏப்ரல் 5ம் திகதி மேலும் 4 பெண்களுடன் பின்தளப்பயிற்சிக்காக (மட்டக்களப்பு மிருணா-மீரா என்ற இருபெண்கள் திருமலை ஜென்னி-வடலியடைப்பைச் சேர்ந்த(படைத்துறை கண்ணனின் ஒன்றுவிட்ட சகோதரி… என மொத்தம் 5 பெண்கள். இதில் வாணி உட்பட யாருமே புலனாய்வுதுறைக்கென வரவேயில்லை இதன் தொடர்சம்பவங்களை பின்வரும் பகுதிகளில் தெளிவாக குறிப்பிட உள்ளேன்
  மேலும் சுவிஸிலுள்ள ஈ.என்.டி.எல்.எப் சங்கரனுக்கும் நிங்கள் குறிப்பிடும் சாரங்கனுக்கும் எந்த தொடர்புமில்லை

  Reply
 • அஜீவன்
  அஜீவன்

  வெற்றி மற்றும் நண்பர்களுக்கு சாரங்கன் கனடாவில் இருக்கிறார். இவர் லண்டனில் இருந்து வந்தவர். வெற்றியோடு டில்லியில் இருந்தவர். சென்னையிலும் இருந்தார். என்னை உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். என் இயக்கப் பெயர் பிரசாத். வோட் பிரசாத். நானும் சாரங்கனும் ஒன்றாக சில காலம் இருந்தோம். எங்களோடு உண்ணாவிரதமிருந்து (புலிகளில்) இறந்த திலீபனின் தம்பி வினோத்தும் இருந்தார். உங்களுக்கு சாரங்கனின் தொடர்பு தேவையெனில் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். அல்லது சற்றுப் பொறுங்கள். அது நிச்சயம் சாத்தியமாகும்.

  இன்னும் அச்சங்கள் நம்மிடமிருந்து மறையவில்லை என நினைக்கிறேன். இணையத்தில் என்னைத் தேடிக் கொள்வீர்கள். என் மேல் நம்பிக்கையிருந்தால் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள். சிலர் தம்மை அடையாளப்படுத்தவில்லை. எனவே சில தடுமாற்றங்களும் தெரிகின்றன. சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டாம். எனது மின் அஞ்சல் : info@ajeevan.com

  Reply
 • nila
  nila

  தற்போது இப்புளொட் தளத்தினூடாக பல விடயங்கள் நினைவுபடுத்தப்பட்டு வெளி வருகின்றன.நல்ல விடயமே எனக்குத் தெரிந்த அல்லது தெரிந்தவர்களின் அல்லது நான் சம்பந்தப்பட்ட விடயங்கள் என வரும் போது பல குறிப்புக்களை பதிய வேண்டியுள்ளது.எனவே எனது தொடர் குறிப்புகள் தாமதங்களுடன் வருவது தவிர்க்க இயலாது.மன்னிக்கவும்.
  மேலும் தொடர் 2ல் திருமலை மாணிக்கவாசகர் வீதியைச் சேர்ந்த இளைஞன் என்று நான் மறந்த பெயர் திருமலை வசந்தன் என்பவர் இவர் மிகத்துடுக்கானவர். இவர் அற்புதம் என்ற புளொட் போராளியுடன் தான் பிடிபட்டு வவுனியா விமானத்தள முகாமில் இருந்ததாக அறிகின்றேன்.இவர் மரணத்திற்கு பின்பு டெலோவிலிருந்த இவரின் சகோதரர் புளொட்டின் ராணுவப் பிரிவுடன் இணைந்தார். 86ல் பி.எல்.ஓ சங்கர் (தற்போது லண்டனில் இருப்பவர்) கிழக்கு மாகாணப் ராணுவப் பொறுப்பாளராக பொறுப்பெடுத்து கிழக்குத் தாக்குதல் ஒன்றிற்கு பல திறமையான பயிற்சிபெற்ற இளைஞர்களுடன் பின்தளத்திலிருந்து வந்ததில் இந்த வசந்தனின் சகோதரரும் இணைந்திருந்ததை கன்னியாவில் வைத்து எல்லோரையும் சந்தித்ததில் இவரையும் கண்டு கதைத்தேன். வசந்தனின் குறுகுறுத்த செயற்பாடுகள் பற்றி இவருடன் கதைத்ததும் இந்த சந்திப்பும் கடைசியாகவே முடிந்தது. இவரும் அநியாயமாக ராணுவத்தால் கொல்லப்பட்டதாக பின்பு அறிந்து துயருற்றேன்.
  இது போன்றே சேவல்கொடியையும் நிக்கரெவெட்டியாவில் கண்டதுதான் எனது கடைசி சந்திப்பு…

  முக்கியமாக திருமலை காந்தீய செயற்பாடுகளில் தீவிரமாக செயற்பட்ட எமது ஸ்லாமிய தோழர் சலீம் என்பவருக்கும் நீண்ட வரலாறு உண்டு. இவர் பல இழப்புக்களுக்குப் பின்பும் உயிருடன் அதுவும் நாட்டிலேயே இருப்பது பெருமைக்குரியது. இவர் ஜான் மாஸ்ரருடன் கண்டிப்பாக தொடர்பில் இருப்பார் .கண்டிப்பாக இவர்களெல்லாம் விரக்திகளோடு வாழ்ந்தாலும் வரலாற்று கடமைகளுக்காவது இத் தளங்களுக்கு வாருங்கள்; ஒரு பாங்க் அலுவலகராக அரசு உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்த நீங்கள் புளொட்டின் மத்தியகுழுவரை செயற்பாட்டாளராய் இருந்துள்ளீர்கள். மேலும் சலீம் ராணுவத்தில் பிடிபட்ட 84 மார்ச் 19 அதிகாலை மறக்கக் கூடிய விடயமல்ல. அன்று காலை 9மணிக்கு உங்களுக்கும் எமக்கும் ஒரு சந்திப்பு இருந்தது நினைவிலிருந்தால்…

  ராணுவத்தில் உயிருடன் பிடிபடக்கூடாதென ராணுவம் சுற்றிவளைத்ததும் நீங்களே உங்களை போத்தலால் வயிற்றில் குத்திக்கொண்டு மிக மோசமான நிலையில் ரத்தம் சொட்டச் சொட்ட கைதாகி பல காலம் இலங்கைச் சிறையில் இருந்த வரலாறு மறக்கப்படுமா?
  அன்றைய கடைசி இரவில் உங்களை கடைசியாக சந்தித்த கிளிநொச்சி கண்ணன்- பேரின்பம் (இவர்கள் இருவரும் வவுனியா பண்ணைகளின் முழுநேர போராளிகள் இன்றும் பாரிசிலுள்ள இந்தக் கண்ணனுடன் கதைத்ததில் உங்கள் கடைசிச் சந்திப்பை ஞாபகப்படுத்தினார் (தொடரும்……பகுதி 3)

  Reply
 • Thalaphathy
  Thalaphathy

  மாயா!

  நீங்கள் பின்தளத்தில் நடந்தவகைளைத்தான் இங்கு பதிவுடுகிறீர்கள், அதற்காக பின்தளத்தில் இருந்தவர்கள் மட்டும்தான் “புளட்”டின் ஆரம்பமும் முடிவும் என்று நீங்கள் நினைப்பீர்களாயின் அதுதான் மிகப்பெரும் தப்பு. இலங்கைத்தமிழர்களின் எல்லாவித மாற்றங்களுக்காகவும், அந்தகாலங்களில் (83 – 87) நிறைய “புளட்”க்கள் தளத்தில்தான் வேலைசெய்து கொண்டிருந்தார்கள். தளத்தில் “புளட்” டின் பின்தளம் ஆயுதரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தான் கொண்ட கொள்கைகளை நிலைநாட்டும் என்றுதான் தோழர்களும், தமிழ்மக்களுக்கும் நம்பியிருந்தார்கள், அந்த நம்பிக்கை நாளடைவில் தளர்ந்துபோகவே, தளத்திற்கும் – பின் தளத்திற்குமிடையிலான ஒருங்கிணைப்பு தளர ஆரம்பித்தது. அந்த சந்தர்ப்பத்தில்தான் இலங்கையில் அரசியல் மாற்றங்களுக்கு “புளட்” டின் பின்தளம் உதவுமா என்பதை அறிய TESO தனது பிரதிநிதிகளாக, யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வசந்தன், தீபநேசன் என்ற இருவரையும் வள்ளம்மூலமாக பின்தளத்திற்கு அனுப்பி, தளத்திற்கு பின்தளமுகாம்கள் மற்றும் செயலதிபரின் நோக்குகள்பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வேண்டியது. இவர்கள் திரும்பிவந்து சமர்ப்பித்த வாக்குமூலங்களின்படி, “புளட்” டின் பின்தள முகாம்கள் பற்றிய விபரங்களும் அங்கு நடைபெறும் குளறுபடிகள் பற்றியும் தளத்திற்கு தெரியவந்தது. இதனடிப்படையில்த்தான் “ஈஸ்வரனை” தளத்தில் சுயமாக இயங்கும் “புளட்”டின் தளச்செயலாளராக தெரிவுசெய்யப்பட்டது. இறுதியாக நான் கலந்துகொண்ட தள “புளட்”டின் கூட்டம் இதுவாகும். இந்தக் கூட்டத்தில் எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கக்கூடியவர்களான அசோக், ஈஸ்வரன், வசந்தன், தீபநேசன், ஹப்பி, மோகன், இளங்கோ, தமிழ், கஜன், சியா மாஸ்ரர் இப்படி பலபேர்கள் கலந்துகொண்டார்கள். இந்த “ஈஸ்வரனின்” தெரிவின் பினனர் பின்தளத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டதான “சின்ன மெண்டிஸ்”சின் “புளட்”டின் தலமையிலான இராணுவஅமைப்பு, மற்றைய “புளட்”டின் அமைப்புக்களுடன் முரன்பட தொடங்கியது. சிறிது காலத்தின் பின் “ஈஸ்வரன்” தளபுளட்டின் உயிர் அச்சுறுத்தலினால் சிலநாட்கள் தீவகத்தில் அஞ்ஞாதவசம் இருந்தார். பின்னர் எப்படியோ வவுனியா கடந்து சுவிஸ் சென்றார், இரத்தம் கக்கி இறந்தார்.

  Reply
 • மாயா
  மாயா

  தளபதி ; அவரவருக்குத் தெரிந்தவற்றை அவரவர் எழுதுகிறார்கள். சில காரணங்களுக்காக சிலதை எழுதாமல் இருக்கிறார்கள். அதற்கு ஊரில் உள்ள பலரது உயிர்களை காவு கொடுக்க முடியாது. இன்னமும் கொலைகாரர்களாகவே வாழ பலர் தயாரியில்லை. காலங்கள் எழுத வேண்டியதை எழுத வைக்கும். அதுவரை பொறுங்கள். அதுவும் பலதை எழுதி ; பலர் வாழ்வோடு விளையாட முடியாது. அதை நினைவில் கொள்ளங்கள். தளத்தின் தோழர்கள் இல்லாமல் போயிருப்பார்கள். அவர்களது உடன் பிறப்பகள் இன்னும் இருக்கிறார்கள். அதை சிந்தியுங்கள். இன்னும் இங்கே எவரும் தனது உண்மை அடையாளங்களை பதியத் தயாராக இல்லை. நானும் அதில் அடக்கம்.

  Reply
 • vetrichelvan
  vetrichelvan

  …காகா, உமா பிரச்சனை சென்னை சிறையில் வைத்தே தொடங்கிவிட்டது. சிறையில் கண்ணனுக்கும் ,நிரஞ்சனுக்கும் சண்டை. மாணிக்கம் தாசன் உமா கொலையில் தனக்குள்ள தொடர்பை மறைக்கவே சுவிஸ்சில் வைத்து ராபின் அவரது மனைவி வட்சலா கொல்ல. டுமல் என்ற பிளாட் நபரை அறுபது லட்சம் செலவழித்துள்ளார். டுமல் ஆறு மாதம் ராபின் குடும்பத்துடன் பழகி , சாப்பிட்டு சிறந்த நண்பர்களாகி கொலை செய்துள்ளார்

  Reply
 • vetrichelvan
  vetrichelvan

  naanee my email id
  vetri23@gmail.com

  Reply
 • palli
  palli

  16 .11.2010 இரவு 11.30 பல்லியால் அனுப்பபட்ட பின்னோட்டம் ஒன்று தவிர்க்கபட்டதா. தணிக்கையா அல்லது தவறி விட்டதா?? அல்லது பல்லியின் தகவல்கள் தவறானவை என உள்ளதா???

  //நீங்கள் பின்தளத்தில் நடந்தவகைளைத்தான் இங்கு பதிவுடுகிறீர்கள், அதற்காக பின்தளத்தில் இருந்தவர்கள் மட்டும்தான் “புளட்”டின் ஆரம்பமும் முடிவும் என்று நீங்கள் நினைப்பீர்களாயின் அதுதான் மிகப்பெரும் தப்பு. //
  தளத்தில் கழகம்; பின் தளத்தில் கலகம், அதனால் கழக கலவரத்தை சொல்லி அதன்பின் கழக செயல்பாட்டை சொல்லுவார்கள். ஈஸ்வரன் ராஜனுடனும் இருந்ததாக ஒரு செய்தி உண்டு, ஒரு முறை ராஜனின் சார்பாய் ஆதவன் என்பவர் ஒரு அறிக்கை விட்டிருந்தார்; செயற்குழுவில் பலர் ராஜனுடன் இனைந்து விட்டதாக அந்த செயற்குழு மிகவிரைவில் கூடபோவதாகவும்;
  அதில் வந்தவர்கள்.
  ராஜன்;
  சேகர் வாத்தி;
  ஆதவன்;
  அசோக்,
  ஈஸ்வரன்;
  செந்தில்;
  பாபுஜி;
  மாறன்;
  பொன்னுதுரை;
  டேவிட் ஜயா போன்றவர்கள் பெயர் பதிவிடபட்டிருந்தது,

  Reply
 • தேசம்நெற்
  தேசம்நெற்

  பல்லி உங்கள் 16 .11.2010 இரவு 11.30 பின்னூட்டம் தேசத்தில் பதிவாகி இருக்கவில்லை. மீளப் பதிவிடவும்.
  தேசம்நெற்

  Reply
 • சுகந்தன்
  சுகந்தன்

  / TESO தனது பிரதிநிதிகளாக யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வசந்தன் தீபநேசன் என்ற இருவரையும் வள்ளம்மூலமாக பின்தளத்திற்கு அனுப்பி /

  தளபதி “சுகந்தன்” என்கின்ற என்னையே தவறாக வசந்தன் எனக் குறிப்பிடுகின்றார். இந்தப் படகுப்பணயம் தீபநேசன் கலா சுகந்தன் ஆகியோர் உள்ளடங்கியது.

  ஆனால் ஈஸ்வரனுடனான (தீபநேசன் அசோக்) குழுவானது பரந்தன் ராஜனின் வேலைத்திட்டத்தை இரகசியமாக ஏற்றுக்கொண்டு மீண்டும் தவறான திசையில் செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்தப் போக்குக்கு எதிராக மீண்டும் என்னை நிறுவிக்கொள்ள நான் அவர்களிடமிருந்து விலகிக் கொண்டேன்.

  Reply
 • சீலன்
  சீலன்

  //ஒரு முறை ராஜனின் சார்பாய் ஆதவன் என்பவர் ஒரு அறிக்கை விட்டிருந்தார்; செயற்குழுவில் பலர் ராஜனுடன் இனைந்து விட்டதாக அந்த செயற்குழு மிகவிரைவில் கூடபோவதாகவும்//
  இந்த செயற்குழு விட்ட அறிக்கை -http://www.tamilarangam.net/document/plot/conference/plot%20doc7.pdf
  இனைப்பு இது இது எமது ஆவணப்பகுதியில் உள்ளது பார்வையிடலாம். மற்றும் நண்பர்கள் ஆவணப்பகுதி தேடர்பான விடையங்களுக்கு என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டின் thavaguru22@gmail.com பல்லி எனது மெயிலை சுகியிடம் கொடுக்கவும். அத்தோடு பின்தளம் தளம் தொடாபாக இரண்டையும் பிரித்து பின்னோட்டம் விடுபவர்கள் வெளியிட்டால் வாசிப்பவர்களுக்கு விளங்கும். பின்தளத்தில் ஒரத்த நாட்டு காரியாலயத்துக்கு அருகில் மணியம் என்பவர் இருந்தார் அவர் தற்போது உயிருடன் இருக்கின்றாரா? தளபதியால் குறிப்பிடப்பட்ட விடையம் தோடர்பாக சுகந்தன் தமிழரங்கத்தில் எற்றிய பதிவின் தொடுப்பு இது
  -http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7012:2010-04-29-08-42-45&catid=108:sri&Itemid=50

  Reply
 • vanavil
  vanavil

  உமாவின் மரணம் கொலையல்ல , உமாவுக்கு புளொட் மரண தண்டனை விதித்தது. புளொட் மேல் மட்டக் குழு எடுத்த முடிவின் பிரகாரம் அவர் கொல்லப்பட்டார். இது மாணிக்கதாசனுக்கு மட்டுமல்ல , உயர் மட்டக் குழுவுக்கே தெரியும்.

  சிவா சின்னப் பொடி எழுதிய, மாலைதீவு தொடர் கட்டுரையில் ஏகப்பட்ட பொய்கள் உண்டு. சிவா (திவாகரன்) அனைவரையும் போட்டுக் கொடுத்து உமாவிடம் பெயர் வாங்க முயன்றவர். எனவே இவருக்கு ஒருமுறை தர்ம அடி விழுந்தது. புளொட் பொதுக் குழு , மறுமுறை தேர்வு செய்யப்படும் போது திவாகரனதும் ; ஆனந்தியினதும் பெயர்கள் பரிந்துரைக்கப் பட்ட போதும் இவர்களை எவரும் தேர்வு தேர்வு செய்யவில்லை.

  மாலைதீவு தொடர்பான கட்டுரையில் வரும் றோ மற்றும் பாகிஸ்தான் கேரளா என வரும் கதைகள், சிவா சின்னப்பொடியின் அதீத கற்பனையின் உச்சம்.

  Reply
 • சுகந்தன்
  சுகந்தன்

  ரெசோவின் மத்தியகமிட்டியில் அரசியலுக்கு பொறுப்பாக என்னை நியமித்த சிறிது காலத்தில் எமக்கு முன்னால் இருந்த மிகப் பாரிய பிரச்சனையாக புளட்டின் உட்படுகொலைகளுக்கும் வழிவிலகலுக்கும் எதிரான அபாயகரமான போராட்டமே இருந்தது. நாங்கள் புளட்டுக்கு வேலை செய்வதை மறுத்து மாணவர்களிடையே புளட்டினது போக்கினையும் அதன் உட்படுகொலைகளையும் அம்பலப்படுத்தி மிகவும் சீற்றம் கொண்டிருந்தோம். புதிதாக உள்வாங்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் பாடசாலை மாணவர்களை புளட்டின் அங்கமாக மாறாமல் சுயாதீனமான கருத்துக் கொண்டவர்களாக சுயாதீன மாணவர் அமைப்பாக மாற்றுவதற்கு முயற்சிகள் செய்தோம்.

  தளத்தில் புளட்டை அரசியல் ரீதியிலும் இராணுவ ரீதியிலும் தொடர்ந்தும் பிரதிநிதித்துவப்படுதியவர்கள் மேல் நாங்கள் தொடர்ச்சியாக எழுப்பிய கேள்விகள் அவர்கள் மீதான புறக்கணிப்புக்கள் போன்றவற்றோடு அவர்களது தொடர்ச்சியான மழுப்பல்களுக்கும் திசைதிருப்பல்களுக்கும் இடந்தராத எங்களது போக்கினால் ரெசோ புளட்டிடமிருந்து அக்கால கட்டத்தில் விலத்தியே சென்றது.

  இதற்காகவென பிரத்தியேகமாகவே கூட்டப்பட்ட புளட்டின் பிரதேசக்கமிட்டியிடமும் மத்தியகுழுப் பிரதிநிதிகளிடமும் உயிர் மீளாதிருப்போமாயினும் எங்களை படகில் அனுப்பி வைக்க வேண்டுமென மிகவும் கோபக்குரலில் அடித்துப் பேசிப் போராடிய கோரிக்கையாலேயே பின்தளம் சென்று வரும் இந்தப் படகுப்பயணம் சாத்தியப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பிரசன்னமாயிருந்தவர்களில் அசோக், மற்றும் பொன்னுத்துரை ஆகியோர் இருந்தனர். எங்களை அனுப்பி வைத்தால் வரும் எந்தக் கெடுதலையும் நாங்கள் ஏற்கத் தயார் என்ற மனப்பாங்குடனேயே நான் பயணமானேன். பின்தள நிலமைகளை நேரில் சென்றுவந்து உண்மைகளை சொல்லக்கூடிய நேரடிச்சாட்சியாக நம்பிக்கையான சாட்சியாக ரெசோ அங்கத்தவர்கள் மத்தியில் எனது பாத்திரம் அன்று கணிக்கப்பட்டது. அதேபோல் நான் திரும்பி வந்தபின்னால் எந்தச் சமரசத்துக்கும் இடமின்றியே வந்தேன். மன்னார் வழியாக திரும்பிவரும் வழியில் நடைபாதையில் எனக்கும் தீபநேசனுக்கும் இடையே கருத்து முரண்பாடும் அதையிட்டு வாக்குவாதமும் ஏற்பட்டது. இது கைகலப்பில் முடிந்தது. நிலத்தில் கட்டிப்புரண்டு உருண்டு அடிபட்டோம். ஆனாலும் திரும்பவும் நாங்கள் எழுந்து ஒருவருக்கொருவர் உடம்பில் பட்ட புழுதியை துடைத்துவிட்டு தொடர்ந்தும் நடந்தோம். இங்கே வாக்குவாதம் எதற்காக எழுந்தது எனில் புளட்டின் உட்படுகொலைகள் வழிவிலகல்களை நாங்கள் பாரதூரமாக பார்த்து புளட்டினை உடைக்கத் தேவையில்லை மாணவர் அமைப்புக்கு இதுபற்றி ஊதிப் பெருப்பிக்கத் தேவையில்லை என்ற கருத்தோடும் புளட்டின் சார்புநிலையோடும் தீபநேசன் தெரிவித்த கருத்துக்கு நான் முற்றிலும் எதிராக நின்றேன். இத்தனைக்குப் பிறகும் இந்தக் கொலைகார அமைப்பையும் அதற்குப் பொறுப்பானவர்களையும் காப்பாற்றுவதா அவர்களுடைய அரசியலைக் காப்பாற்றுவதா என்ற கோபம் எனக்கு ஏற்பட்டதால் தான் இந்த நிகழ்வு நடந்தது. யாழ்ப்பாணம் வந்தபின்னர் தீபநேசன் தன்னுடைய போக்கில் செயற்பட நான் அனைத்து மாணவர் அமைப்பு பிரதிநிதிகளுக்குமான கூட்டத்தினை ஒழுங்கு செய்து அவர்கள் மத்தியில் பின்தள நிலவரங்களை ஒப்புவித்தேன்.

  புளட்டினது அங்கமாக மாணவர் அமைப்பு இனிமேலும் செயற்பட முடியாது என்பதை உணர்ந்த மாணவர்கள் மற்றும் அவர்களது வட்ட, மாவட்டபிரதிநிதிகள் தாங்கள் தங்கள் வழியில் செல்வதாக முடிவெடுத்தார்கள். அதன் பின்னர் ரெசோவில் முன்னணியில் இருந்தவர்கள் மட்டும் வேறு மார்க்கங்களை தேடியும் மற்றைய போராட்டங்களில் தங்களை இணைத்தும் கொண்டனர். இவ்வாறு தன்னை இணைத்து விஜிதரன் போராட்டத்தில், இயக்க அராஜகங்களுக்கு எதிராகவும் மக்களுக்கு எழுத்து பேச்சு உரிமை கோரியும் மக்கள் சார்பு போராட்டங்களில் தன்னை அர்ப்பணித்து மிளிர்ந்த ஒரு போராளி ரெசோவின் மாணவர் அமைப்பின் முன்னைநாள் போராளியான, புலிகளால் வீதிப் படுகொலை செய்யப்பட்ட விமலேஸ்வரனாகும். பின்னர் ரெசோவைச் சேர்ந்த வசந்தன், குருபரன் புளட் அதியன் ஆகியோர் புலிகளால் சிறைவைக்கப்பட்டனர். குருபரனும் அதியனும் விடுவிக்கப்பட்டனர், வசந்தன் விடுவிக்கப்படாமல் வைத்து விசாரிக்கப்பட்டதன் அடிப்படையிலே அதன் தொடர்ச்சியாக ரயாகரன் யாரும் அறியாது கடத்தப்பட்டார். வசந்தனைக் கைது செய்து சிறைவைக்கப்பட்ட அதே காலத்திலேயே அதே இடத்திலேயே ரயாகரனும் மாத்தையா குழுவினால் கடத்திச் செல்லப்பட்டு சித்திவதைக்குள்ளாக்கப்பட்டார். ரயாகரன் தப்பிய பின்னரே வசந்தன் விடுவிக்கப்பட்டார். வசந்தன் விடுவிக்கப்பட்ட அன்று அவரை நான் அவரது வீட்டில் சென்று கண்டேன். இந்தக் காலங்களில் நான் ரயாகரனின் ஊரான வறுத்தலைவிளானில் தங்கியிருந்தேன். ரயாகரனினது உறவினர் வீட்டில் நான் தங்கியிருந்ததால் ரயாகரனது கடத்தல் நிகழ்வுகள் அவர்கள் வழியாய் எனக்கு தெரியவந்தது. வசந்தனை விடுவிக்க எடுக்கப்பட்ட முயற்சிக்கு என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. இந்த வட்டத்தில் அடுத்த நபராக நானாகவே இருக்கலாமென்ற ஊகம் என்னிடமிருந்ததால் எங்கும் உலாவுவது கடினமானதான எனக்கு இருந்தது. வசந்தனது வீட்டுக்கு ஒருமுறை சென்றபோது அங்கு வருவதை தவிர்த்துக் கொள்ளும்படி அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். பலபேர் வந்து போய் விசாரிப்பது மேலும் வசந்ததின் விடுதலைக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பது அவர்களது எண்ணமாகவிருந்தது.

  பரந்தன் ராஜனும் ரெசோவினால் பாரதூரமான உட்படுகொலைகள் மற்றும் அவற்றுக்கு உடந்தையாக இருந்தவராக பார்க்கப்பட்டவர் தான். அந்தப் பரந்தன் ராஜன் பின்னால் ஈஸ்வரன், தீபநேசன,; அசோக், முரளி போன்றோர் இசைவாக நடக்க ஆரம்பித்திருந்தனர். அவர்களுக்குள் ஒப்பந்தம் ஒன்று உருவாகியிருந்தது.

  பகை சூழ்ந்திருந்தது. புலிகள் ஒருபுறம் புளட் இன்னுமொரு புறம் புளட்டிலிருந்து பிரிந்து பரந்தன் ராஜனுடன் புதிதாக கூட்டுச் சேர்ந்திருந்த இந்தக் குழு மறுபுறம். இதுவே சூழலாகவிருந்தது.

  தீப்பொறி தலைமறைவாக இருந்தது. அது கேசவனி;ன் கொலைக்குப் பின்னால் புலிப்பினாமியாகி தமிழீழக்கட்சியாகி இன்று அழிந்தது.

  வெறும் உதிரியாக நான் புளட்டிலிருந்து ஒதுங்கினேன். ஆனாலும் அரசியலிருந்து நான் முற்றாக ஒதுங்கிவிடவில்லை.

  Reply
 • nila
  nila

  தளபதி! உங்களின் விசனம் நியாயமானதே. இதனைக் கருத்திற்கொண்டுதான் புளொட்டின் அடி அத்திவாரம் ஆகிய காந்திய செயற்பாடுகளையும் அதன் விஸ்தீரணங்களையும் முடிந்தவரை சம்பந்தப்பட்ட நபர்களை நினைவு படுத்தி படுத்தி (எனக்குத் தெரிந்த நான் தகவல் சேர்த்த நாம் சம்பந்தப்பட்ட )எழுதுகின்றேன். இது எனது நீண்டகால கனவும்-குறிப்பிடத்தக்க சிலரின் தூண்டுகோலுமே.
  அதாவது ஆரம்ப கால இளைஞர் அமைப்புக்கள் _புதிய புலிகள்-என இன்னோரின்தாக அகிம்சை போராட்டத்திலிருந்து ஆயுதபோராட்டமாக பரிணமித்து உட்கொலைகள்- போட்டிபுசல்கள் வளர்ந்து உமா- பிரபா என்று பிரிந்த நிலைகளில் உடனடியாக புளொட் என்பது உருவாக்கப்படவில்லை. இந்த இடைவெளியில் வவுனியா அகதிகள் புணர்வாழ்வுக்கழகம்(இதில் நித்தியானந்தன் உட்பட) தோற்றுவிக்கப்பட்டு வவுனியாவில் மலையக மக்கள் குடியேற்றமும் புனர்வாழ்வு வேலைத்திட்டங்களும் உருவாகின. இக் காலகட்டத்தில் தமிழ் தேசிய தலைமைகளால் அக்கட்சியின் இளைஞர் அமைப்புக்கள்- அதாவது யாழ் மாவட்டத்திலுள்ள இளைஞர் பேரவைகளும் கொழும்பில் (உத்தியோகங்களுக்கு சென்றிருந்த அதிகமான யாழ் இளைஞர்கள்) இளைஞர் பேரவை-மகளிர் பேரவை அமைப்புகளும் தமிழரசு கட்சியின் செயற்திட்டங்களில் முரண்பட்டு பலபல பிரிவுகளாக இளைஞர்அமைப்புக்களாக சிதறின. இதில்1973-1974 களில் என நினைக்கின்றேன்….

  கொழும்புக்கிளை இளைஞர் பேரவை தலைவர் ரகுபதிபாலசிறிதரன் (இவர் கோண்டாவிலைச் சேர்ந்தவர். இவர் பின்பு விரும்பி திருமணம் செய்த பெண் இல.ஒலிபரப்புக் கூட்டுத்தானத்தில் வேலை செய்த சுமதி என்பவர். இவர்களின் மகன் ..சில வருடங்களுக்கு முன்வரையில் சக்தி ரேடியோவில் என நினைக்கின்றேன் .. சிறந்த அறிவிப்பாளராக விளங்கி பின் அணமைக்காலத்தில் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.)
  இதன் செயலாளர் திரு.க.உமாமகேஸ்வரன் உட்பட இந்த நிர்வாகக் குழுவில் பல பின்நாளில் பல போராட்டங்களில் முக்கியஸ்தராக இருந்தனர்.(மண்டுர் மகேந்தினும் இருந்திருக்கலாம்) (இன்றுவரை இதில் சம்பந்தப்பட்டவர்கள் பல நாடுகளிலும் இருக்கின்றனர். முடிந்தால் பதிவைத் தொடருங்கள்…)

  மேலும் கொழும்புக்கிளை மகளிர் பேரவையின் செயலாளராக ஊர்மிளாவும் அதன் நிர்வாகக் குழுவில் திலகவதி (தற்போது பிரான்ஸிலிருப்பவர்)மற்றும் கொழும்பில் உத்தியோகம் பார்த்த பல பெண்களும் இருந்தனர். கொழும்பிலிருந்த இந்த அமைப்புக்கள் தீவிர செயற்பாட்டாளர்களாக இருந்தனர். இதனால் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்களுக்குள்ளும் பலநீண்ட விவாதங்கள் தவிர்க்க முடியாதாயின.

  தமிழரசுக்கட்சியின் ஒருபிரிவாக செயற்பட்ட அனைத்து “தமிழ் மகளிர் பேரவை”யின் தலைவியாக தியாகி சிவகுமாரனின் தாயாராகிய திருமதி.அன்னலட்சுமி பொன்னுத்துரையும் உப தலைவியாக திருகோணமலையைச் சேர்ந்த மேடைப்பேச்சாளரான திருமதி. பிலோமினா லோறன்ஸ் என்பவரும்- செயலாளராக திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்களுமாக வட கிழக்கு மாகாணத்தின் தமிழரசுக்கட்சியின் அங்கத்தினராக இருந்தனர்.இவ் அமைப்புக்களின் கிளைகள் விஸ்தீரணமாக அனைத்து தமிழ் மாவட்டங்களிலும் பல பெண்களையும் ஆண்களையும் உள்வாங்கி செயற்பட்டன இவை தான் எமது அரசியல் பரிணாம வளர்ச்சியின் ஒவ்வொரு மைல்கற்கள் .இந்த தமிழ் தேசிய அரசியலில் எமக்கு விமர்சனங்கள் இப்போது இருந்தாலும் அன்று இது தான் அரசியல் என்பது மறுக்கமுடியாது…தொடரும் 4

  Reply
 • Thalaphathy
  Thalaphathy

  சுகந்தன்,
  கலா அவர்கள் நலமாக இருக்கிறார்களா?
  என்னோடு படித்த பயல்களுக்கும் மற்றும் அந்தக்கால யாழ் பல்கலைக்காரர்களுக்கும் நன்கு அறியப்பட்ட முகம் அது. தீவகத்திற்கான பஸ்களில் நான் அவர்களை அடிக்கடி கண்டதுண்டு! எங்கிருந்தாலும் நலமாய் வாழ என் வாழ்த்துக்களும் ஆசிகளும்.

  Reply
 • மாயா
  மாயா

  நிலா ; தரமான பதிவு. தொடருங்கள்……

  Reply
 • palli
  palli

  //தீப்பொறி தலைமறைவாக இருந்தது. அது கேசவனி;ன் கொலைக்குப் பின்னால் புலிப்பினாமியாகி தமிழீழக்கட்சியாகி இன்று அழிந்தது//
  இந்த தீபொறி பற்றி உங்களுக்கு ஏதும் தெரியுமா?? அப்படியாயின் பாண்டி நேசன் பற்றி தெரியுமா?? இவர்கள் இருவருமே மாணவர்கள்தான், ஆனால் மோசமானவர்கள் தெரிந்தால் விவாதிப்போம்; தெரியாவிடின் அவர்களை தேடுவோம்;

  //கலா அவர்கள் நலமாக இருக்கிறார்களா?// ஜயோ ஜயோ இவருக்கும் பல்லியிடம் விமர்சனம் உண்டு; ஆனால் அது இப்போ முக்கியமல்ல; ஆனால் மாண்புமிகு ;;;; வருகிறபோது பல்லியும் வருகிறேன்;

  //ஆனால் ஈஸ்வரனுடனான (தீபநேசன் அசோக்) குழுவானது பரந்தன் ராஜனின் வேலைத்திட்டத்தை இரகசியமாக ஏற்றுக்கொண்டு//
  இது சரியான தகவலாக படவில்லை அசோக் ஈஸ்வரன் ராசனுடன் இனைவு கழகத்தில் சுனாமி போன்றது, இதை வேண்டுமாயின் ரிபிசி பணிப்பாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்;

  //உமாவின் மரணம் கொலையல்ல , உமாவுக்கு புளொட் மரண தண்டனை விதித்தது. புளொட் மேல் மட்டக் குழு எடுத்த முடிவின் பிரகாரம் அவர் கொல்லப்பட்டார். இது மாணிக்கதாசனுக்கு மட்டுமல்ல , உயர் மட்டக் குழுவுக்கே தெரியும்.//
  யார் அந்த மேல் மட்டம்; அதில் சின்னபொடி இல்லையா? அவர் தானும் ஒரு மேல் மட்ட உறுப்பினர் என புலத்து புலிகளிடம் சொல்லியதாக ஒரு புலி நண்பர் சொன்னாரே;
  //அவர்களுக்குள் ஒப்பந்தம் ஒன்று உருவாகியிருந்தது//
  அது என்ன?? ஏன் இந்த மறைவு: இனியும் ஒளிவு மறைவு வேண்டாமே;

  //ஆனாலும் அரசியலிருந்து நான் முற்றாக ஒதுங்கிவிடவில்லை.//
  அப்படியாயின் அதன் பின் உங்கள் அரசியல் என்ன?? இதுக்கான பதிலே உங்களது தகவலது வலுவை முடிவு செய்யும்;

  குசும்பு என்னாச்சு?? வாருங்க உங்களிடமே பல விடயம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்;
  நாதன் பற்றிய விபரத்துடன் வாருங்கள் (யோகேந்திர நாதனா அல்லது ஜெகநாதனா மறந்து போச்சு)

  //பலபல பிரிவுகளாக இளைஞரமைப்புக்களாக //
  ஜயோ நிலா இதை 30 வருடத்துக்கு முன்பே சொல்லியிருந்தால் லட்சகணக்கான தமிழரை காப்பாற்றி இருக்கலாமே (ஆதங்கமே தொடருங்கள்) ஜயருக்கு சரியான பதிலடி நிலா?

  // மன்னார் வழியாக திரும்பிவரும் வழியில் நடைபாதையில் எனக்கும் தீபநேசனுக்கும் இடையே கருத்து முரண்பாடும் அதையிட்டு வாக்குவாதமும் ஏற்பட்டது. இது கைகலப்பில் முடிந்தது//
  உங்களை இந்த வழியால் கூட்டி வந்தவர்கள் பெயர்களை சொல்லலாமே; மறந்து போச்சா?? அல்லது தேவையில்லையா?
  தொடருங்கள் உன்மைகள் வரட்டும்;

  Reply
 • Kusumpu
  Kusumpu

  நிலா /குசும்பு! உங்களைப் போன்றே நானும் பழைய நினைவுகளை மீட்டெடுத்து வரும் போது பல வித மனச்சஞ்சலங்களால் என்னுள்ளே நான் சாகடிக்கப்படுவது போன்ற உணர்வுகளால் மன வேதனைப்படுகின்றேன்./ இதை மற்றவர்களுக்குச் சொன்னால் புரியாது. அனுபவித்தால் தான் தெரியும். நாம் கடந்து வந்த பாதையை திரும்பிப்பாக்கும் போது வேதனைகள் மட்டுமல்ல ….
  /குசும்பு ; உங்களுக்கு பஸ்தியாம் கொலை குறித்த தகவல்கள் அதிகமாகத் தெரியும்./மாயா! இது ஒரு பெரிய கதை. அதுமட்டுமல்ல பஸ்தியாம்பிள்ளையின் அட்டூடியங்களைச் சொல்லிமாளாது. ஆரம்பமே எனக்குத் தெரிந்தவரை புஸ்பராணியின் பிரச்சனையில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். அது இப்போது சாத்தியமாகாது.
  சோதிலிங்கம்! /சுழிபுரம் 6 புலிகளின் கொலைகளுக்கு மீரான் பொறுப்பு என பலர் கூறிய போதும் மீரான் தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றும் இது புலிகளே செய்துவிட்டு புளொட்டின் மீது பழியை போட்டவர்கள் என்று எனக்கு கூறினார் ஆனால் அதே காலத்தில் புலிகளில் இருந்தவர்கள் இல்லை மீரான்தான் புலிகளின் 6 குழந்தைகளையும் கொலை செய்தவர் என வாதிடுவார்க/ இது சங்கிலியின் தலைமையில் நடந்ததாகவே நான் அறிகிறேன். நான் நினைக்கவில்லை மீரான் வாத்தி இப்படிக் கீழ்தரமான முறையில் கொலைசெய்திருப்பார் என்று. சரி பிழை எனக்குத் தெரியாது.

  /வகுமாருக்கும் அரபாத் என ஒரு பெயர் உண்டென சிலர் அன்று சொன்னார்கள், அது சரியோ அல்லது தவறோ தெரியவில்லை, / பல்லி
  /இவர் சந்ததியாருடனும் டேவிட் ஜயாவுடனும் சித்தன்கேணி கணேச வித்தியாசாலையில் நடந்த அகதிகள் புனர்வாழ்வு கழகத்தின் கிளை அங்குராப்பணக் கூட்டத்திற்கு சமூகம் தந்திருந்த அரபாத் ஆயின் எனக்கு அவரை தெரியும். அது எனக்கு மறக்க முடியாத சந்திப்பு/சுகந்தன்///

  இந்த அரபாத் (சொந்தப்யெரையோ ஊரையோ சொல்ல விரும்பவில்லை) காந்தியப்பண்ணையில் இருந்தவர் சந்திபோன்றோருடன் தொடர்பிருந்தது. மெல்லிய உருவம் கொண்ட அமைதியான ஒருவர். இவர் பலவருடங்கள் மக்கள் விடுதலைக்காகப் பணியாற்றியவர் சிறையில் பலகாலம் வாடி பின் யாழ்பாணச்சிறையில் இருந்து தப்பி என்னிடம்தான் வந்தார். அன்று நான் வீட்டில் நிற்கவில்லை அதன்பின் எங்கெங்கோ போய் மீண்டும் சொல்லச் சொல்லக் கேட்காமல் வன்னிக்குப் போகமுயன்று ரயிலில் சென்றபோது அந்த இரயிலில்தான் இராணுவம் மாறும் அப்போது இவரது ஒட்டுத்தாடியிலம் ஒரு இராணுவத்தான் அடையாளம் கண்டு மீண்டும் பிடிபட்டு இறுதியில் சிறைக்குள்ளேயே சிதம்பிப்போனார். இப்பவும் எனது மனம் கேட்கும் நான் நின்றிருந்தால் அவன் வாழ்ந்திருப்பான் அல்லவா? விதி என்று கைவிரிக்க நான் விரும்பவில்லை. என்னை நம்பித்தானே வந்தான். என்று எண்ணம் போது உயிரை ஒருதரம் உலுப்பும். எதை மறப்பது எத்தனையை மறப்பது?

  /மேலும் பதவிப் போட்டிகள் என்பது சந்தியார் கொலைக்குப்பின்னும் (வாசுதேவா அரசியற் துறைச் செயலர் என்ற….) நிரஞ்சன் கொலைக்குப் பின்னும்(கண்ணன் படைத்துறைச் செயலர் என்ற…)தகுதிகளின் அடிப்படையில் வெள்ளிடைமலையாக தெரிந்த விடயம் தான். ஆரம்ப ஸ்தாபனம் உருவாக்கும் போது இருப்பவற்றைக் கொண்டு அமைப்புக் கட்டியது தவிர்க்க முடியாதாகலாம்.ஆனால் 84ல் ஒரு பருமித்த இயக்கமாக வளரும் போது பல திறமைசாலிகள் செயற்படத்தொடங்கிய போது பதவிகளும் பொறுப்புக்களும் அந்தந்த தகுதியானவர்க்கு வழங்கப்பட்டு உடனியாக சம்பந்தப்பட்டவர்களை நாட்டை நோக்கி இறக்கி செயற்பட விட்டிருந்தால் இரு தளத்திலும் ராணுவம் அரசியல் பிரிவுகள் புதாகாரமாகி சிக்கி சின்னா பின்னமாகியிருக்காது….விடுதலை என்ற பெயரில் மரணகுழிகளும் நிகழ்ந்திருக்காது…/ இதுதான் உண்மை. கண்ணன் படைத்துறைத்தளபதி நல்ல விசுவாசி ஆனால் படைத்துறைத்தளபதிக்கு குறைந்தபட்சம் விளையாட்டுகளில் பயிற்சிகளில் திறமை இருந்திருக்க வேண்டும் பாடசாலைகளிலே விளையாட்டைக் கண்ணில் காணவிரும்பாதவர் படைத்துறைத்தளபதி. காக்கா கண்ணன் இவர்களை எனக்கு நன்கு தெரியும் உமாவை காணும் போது நான் சொல்லிவந்த விசயம் இதுதான் களத்தில் இறக்கு எவ்வளவுகாலம் சும்மாவைத்துச் சோறு போடுவாய். கேட்டார்களா? அதற்காக நான் புளொட்டில் இருந்தேன் என்று தப்புக்கணக்குப் போட்டு விடாதீர்கள். அதுமட்டுமல்ல கிளிநொச்சி வங்கியிலும் தெரிந்தவன் போனவன் வந்தவன் என்று பயன்படுத்தினார்கள். இப்படியான செயல்பாடுகளே புளொட்டின் இயக்க இறுக்கம் அற்றுப்போனதற்குக் காரணமாகும். இப்படி அள்ளிச்சேர்த்ததனால் பிரபா ஒருதரம் கலங்கியிருந்தார். இதன் விளைவதான் சுந்தரத்தின் கொலை.

  Reply
 • vanavil
  vanavil

  உமாவுக்கு மரண தண்டனை விதிக்க சென்னையில் வைத்துத்தான் முடிவெடுக்கப்பட்டது. உமாவை கொன்றவர் சுவிசில் வைத்துக் கொல்லப்பட்ட ராபின். ராபினது முயற்சி தப்பினால் , அடுத்த முயற்சிக்காக ஆச்சிராஜன் சற்று தூரத்தே பாதையில் நின்றுள்ளார். ஆனால் ராபின் எடுத்த பணியை ராபின் சரியாக முடித்துவிட்டார். இந்த பழி தனக்கு வரக் கூடாதென மாணிக்கதாசன் வவுனியாவுக்கு போய் விட்டார்.

  யாரும் இந்த சம்பவத்தைக் காணாததால் ; கொன்றவர்களே; போலீசுக்கு ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கொடுத்து , போலீஸ் வரும்
  போதும் கொலையாளிகளும் பக்கத்தில் இருந்துள்ளார்கள். பின்னர்தான் இறந்து கிடப்பவர், உமா மகேஸ்வரன் என அடையாளம் காட்டியுள்ளார்கள்.

  இக் கொலையைக்கு , மாணிக்தாசனும் உடந்தை என ராபின் மூலம் வெளியே தெரிய வந்தால், தனது பெயருக்கு களங்கம் வரும் என நினைத்து, மாணிக்கதாசன் டுமாலை சுவிசுக்கு அனுப்பி , அவர்களோடயே 6 மாதங்களுக்கு மேல் பழக விட்டு, அதன் பின்னரே ராபினையும் , மனைவியையும் கொலை செய்துள்ளார். இவர் அகதியாக வந்து சுவிசில் இருந்திருக்கலாம். கொலைக்குப் பின் இவர் நாடு திரும்பி, இவரும் கொல்லப்பட்டார்.

  உமாவின் கொலையை வைத்து மாணிக்தாசனை, பிளாக் மெயில் பண்ணி வந்த சாம் முருகேசுவை, ஒரு தாக்குதலுக்காக போவது போல அழைத்துச் சென்று , யாருக்கும் சந்தேகம் ஏற்படாதவாறு , மாணிக்கதாசன் கொன்றார். புலிகளோடு நடந்த மோதலில் சாம் முருகேசு கொல்லப்பட்டதாகவே அது தெரிவிக்கப்பட்டது.

  இவைகளோடு , மாணிக்தாசனின் மோசமான நடைமுறைகளால் வெறுப்புற்ற நிலையில், மாணிக்கதாசனையும் கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டாலும், புலிகளிலிருந்து புளொட்டுக்குள் ஊடுருவியிருந்த ஒருவரால் மாணிக்கதாசனுக்கான தாக்குதல் நடந்தேறியது.
  மாணிக்கதாசன் உயிரோடு இருந்த கடைசி காலத்தில், வவுனியாவுக்கு பொறுப்பாக இருந்த ஒரு இராணுவ அதிகாரியோடு சேர்ந்து செய்த செயல்கள் எண்ணில் அடங்காதவை. அவற்றில் பெண்களோடு இருந்த உறவுகள் அனைவருக்குள்ளும் தாசன் மீது வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது.

  இதேபோல புலிகளால், மாமனிதராகக் கருதப்படும் தராக்கி எனப்படும் சிவராம் , கிழக்கில் உள்ள கிராமங்களுக்கு சென்று, செய்த பெண் பலாத்காரங்கள் எவரும் அறியாதது. சிவராம் , தனது அடாவடித்தனங்களை தர்மரத்தினம் எனும் பெயரில் செய்து வந்தார். அவரால் நாசமான பெண்கள் அநேகம்.

  வாசுதேவா , கண்ணன் போன்றரது கொலைக்கு பின், இடம்பெற்ற பொதுக்குழுவுக்கான வாக்கெடுப்பில், பொதுக்குழுவுக்கு சிவா சின்னப்பொடியை தேர்வு செய்யச் சொல்லி உமா சிலரிடம் சொல்லியிருந்தார். ஆனால் சின்னப்பொடியும் , ஆனந்தியும் தேர்வாகவில்லை. எனவே சிவா சின்னப்பொடி எந்த உயர் மட்டக் குழுவிலும் இருக்கவில்லை.

  Reply
 • kanthi
  kanthi

  தீவுப்பகுதி அரசியல் இரனூவப்பொருப்பலாலர் (முன்னால்) சுலிபுரம் கொலை தொடர்பாக எனக்கு தொடர்பு இல்லை, இதில் நான் சம்பவத்தின் பின் உடன் தகவல் அரிந்தென். அப்போதுநான் முந்தனின் பாதுகவலர் . இதில் சக்கிலியனும் ,வெஙட்டும் ,சில சுலிபுரம் நபர்கலும் உடன் இருந்துல்லார்கல்.

  கலுகுப்படை தலைவர் ரஜ்குமார் கொலைநடந்த பொது எனக்கு தெரியும். இதில் நான் தான் அவரை கூட்டிவந்தேன் ,இதில் வாமன், பாபுஜி ,ரொபெர்ட்,பிரவுன், ,உதயன் அகியொர் உடன் இருந்தனர் .

  பின் விசாரனையின் பின் தாம்பரம் காட்டில் ,வாமன், பபுஜி ,பிரவுன்,ரொபெட், உடன் இருந்தனர், காந்தி, உதயன் வெலியில் இருந்தனர்.

  இவரும் முகுந்தனால் ,ரயனைப் பொல் புரக்கனிக்கப்பட்டவர், இது தான் இந்தியாவில்நடந்த முதல் கொலை எனநினைக்கின்ரரேன். ரஜ்குமார், வசந்தி, தேசம்நெட் ஜெயபலன், அகியோரின் உரவினர் எனநினைக்கின்ரென் .

  Reply
 • nila
  nila

  புளொட்டின் ஊடக அறிக்கை என்ற தளத்தில் கருத்ததைப் பகிர்ந்து கொள்ளும் நாம் புளொட்டின் கொடி -சின்னம்- நிறம் பற்றியதோற்றம்-மாற்றம் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தவில்லையென ஒரு ஆரம்பகால போராளி நினைவலைகளை தட்டிவிட்டதின் நிமித்தம் சில விடயங்களை குறிப்பிடுகின்றேன். காந்தீயப்பண்ணைகளின் சிருஸ்டிகர்த்தாவும்-புளொட்டின் ஆணிவேரானவருமான மணியண்ணன் என அன்றைய காலங்களில் அழைக்கப்படும் சந்ததியார் உட்பட்ட ஆரம்பகால மத்தியகுழு உறுப்பினர்களான சுந்தரம் என்ற சிவசண்கமுகமூர்த்தி- காத்தான் என்ற கிருஸ்ணகுமார்-முகுந்தன் என்கின்ற உமாமகேஸ்வரன்- ஞானசேகரன் என்ற ராஜன்-பொன்னுத்துரை என்கின்ற குமரன்-அசோக் என்கின்ற யோகன் கண்ணமுத்து-வாசுதேவா-ஜோதிஸ்வரன் என்ற கண்ணன்-பெரியமுரளி -ஈஸ்வரன் சங்கிலிஎன்ற கந்தசாமி திருமலை பாலன் என்றசலீம்-பார்த்தன் என்ற ஜெயச்சந்திரன்-ரகுமான்ஜான் உட்பட்ட மத்தியகுழுவினரால் தமழீழ விடுதலைகழகம் என்ற தலைமறைவு ஸ்தாபனமானது உருவானது”(இதில் விடுபட்ட உறுப்பினர்களை தயவு செய்து தெரிந்தவர்கள் பதிவு செய்யவும்.)

  இதற்கான கறுப்பு சிகப்பு அதில் 3நட்சத்திரமானதான கொடியானது இருண்ட வாழ்விலிருந்து புரட்சிகரமான போராட்டத்தினூடு மங்களகரமான -மூவினத்திற்குமான விடுதலை என்ற கருத்துடன் உருவானது. இதன் வெளிஅமைப்பாக காந்தீயம் சமூக பொருளாதார வேலைத்திட்ட அமைப்பாக செயற்பட்டது. தமிழீழ விடுதலை கழகத்தின் பத்திரிகையாக ‘புதியபாதை ‘சுந்தரத்தின் பொறுப்பிலும் பின் சுந்தரம் இல்லாத நிலையில் ஜெயச்சந்திரனின் பதிவிலும் நடந்தது. 81ம்ஆண்டு நத்தார்பண்டிகையை முன்னிட்டு ஏழைகளின் மீட்பரான ஒடுக்கப்பட்ட மக்களின் தூதுவராக கிறஸ்து சித்தரிக்கப்பட்டு சிகப்பும் கறுப்பிலுமான அழகிய வாழ்த்துமடல் அச்சிடப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டு அந்தப்பணம் அமைப்பு செலவினங்களுக்காக என ஒதுக்கப்பட்டது. 82 தை 2ம் திகதி சுந்தரம் பத்திரிகை அச்சிடுவதற்கு சித்திரா அச்சகத்திற்கு சென்றிருந்த வேளையில் அச்சகத்திலேயே வைத்து புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

  இதுவரையில் எந்த தமிழ் இயக்கங்களும் மேற்கொள்ளாத செயற்பாடாக பகிரங்கமான மேதின ஊர்வலமும் பொது மேடையில் பெரும் கூட்டமும் மட்டக்களப்பில் வாசுதேவா தலைமையில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தொகையானவர்கள் வரவழைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. அதேபோல் மிக இக்கட்டான காலகட்டமான 81ல் மேதின ஊர்வலம் திருமலை சின்னமுற்றவெளி மைதானத்தில் ஜெயச்சந்திரன் தலைமையில் பொதுக்கூட்டத்துடன் நடைபெற்றது. இந்நேரம் பலர் தலைமறைவாக தொடங்கிய காலத்தில் ஜெயா துணிச்சலாக இதை நடாத்தியது குறிப்பிடத்தக்க விடயமாக கணிக்கப்பட்டது. இதற்கு மட்டக்களப்பிலிருந்து யோகன் கண்ணமுத்துவும்-கிளிநொச்சியை சேர்ந்த அமைப்புக்கண்ணணும் பங்களித்ததும் திருமலை கழக இளைஞர்கள் ஜெயகாந்தன்_ராதா-கிருபா நந்தன்-பவன்- வசந்தன்-பிரதீபன் உட்பட பலர் இக்கட்டான சூழலிலும் தம்மை வெளிப்படுத்தி பங்காற்றியதும் துணிச்சலானதே.

  இதே நாட்களில் வவுனியா காந்தீய தலைமை அலுவலகம் ராணுவத்தாலும் ஷெலிகொப்டர் மற்றும் ராணுவ வாகனங்களால் சுற்றிவளைக்கப்பட்டு காந்தீய தலைவர்டேவிற் ஐயாவும் செயளாளர் டாக்டர் இராஜசுந்தரம் அவர்களும் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காந்தியமும் எல்லா இடங்களிலும் இலங்கை அரசாங்கத்தால் சீல் வைக்கப்பட்டது. பலர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பலர் தலைமறைவாகினர். இந்த காலகட்டத்தின் பாதுகாப்பு நிலை கருதியே ‘தமிழீழ விடுதலைகழகம்’ பெயர் மாற்றமாக ‘தமிழீழ மக்கள் விடுதலைக்கழக’மாக பெயர் மாற்றப்பட்டது. அதன் கொடியிலும் சிறிய மாற்றமாக 3 நட்சத்திரம் ஒரு நட்சத்திரம் உள்ளதானது .இதுதான் ஒரு தலைமறைவு அமைப்பானது ஒரு மக்களமைப்பு அல்லது ஒரு சமூக பொருளாதார அமைப்பு நிலையுடன் பகிரங்கப்படுத்தி வேலை செய்யும் போது ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அழிவுகளை எமக்கு பாடமாக காலம் விட்டுச்சென்றுள்ளது. இப்படியே நாம் விடும் தவறுகளுக்கெல்லாம் எமது போராட்ட அனுபவமின்மையையும் காலத்தையும் காட்டித் தப்பித்துக் கொள்கின்றோமா? எல்லாவற்றையும் இழந்து தான் நாம் எதிர்வரும் சந்ததிக்கு வரலாறு சொல்லிக்கொடுக்கப் போகின்றோமா? இப்படியான மீளாய்வுகளும் விமர்சனங்களும் இந்தத் தளங்களினூடாக எனினும் பார்க்கப்படுவது காலத்தின் கட்டாயமும் பங்காளிகளான எமக்குள்ள கடமையுமாகும்

  Reply
 • nanee
  nanee

  நிலா, சுகந்தன் தொடருங்கள். உங்கள் பதிவுகள் ஆரோக்கியமாக இருக்கின்றன.
  20 வருடங்களுக்கு பின் அஜீவனின் நட்பால் இன்று வெற்றியுடன் கதைத்தேன். ஒரு புது விடயமும் அறிந்தேன். எனக்கு வசந்த்தும் மிக நெருங்கிய தோழர். சமூக விஞஞான கல்லூரியில் எடுத்த படமும் என்னிடம் உள்ளது.

  Reply
 • Kulan
  Kulan

  நிலாவினுடைய பதிவுகள் சரியான உண்மைகளைக் காவிவருகிறது. இந்தக்குழு அமைவதற்கு முன்னரே பெயரிடப்படாத மிக மிக துரிதமான ஒருகுழு சுந்தரம் உமா இணைப்பில் இயங்கிக்கொண்டிருந்தது. இக்குழுவில் நானும் ஒருவனாகவே இருநதேன். அதில் நானும் ஒருவன் இருந்தாலும் இவர்களை பிரியவிடாது இணைத்துவிட வேண்டும் என்பதில் நான் மிக ஆர்வமாக இருந்து கலகப்பட்டுக் கொண்டவன். இதற்குக் காரணம் மக்களிடையே உள்ள உணர்வுகள் மழுங்கடிக்கப்படாமல் இருப்பதற்காகவும் இயக்கங்கள் மேல் சந்தேகங்கள் ஏற்படும் போது மக்களது உத்வேகம் மழுங்கடிக்கப்படும் என்பதாலும் இவர்கள் மீண்டும் இணையவேண்டும் என்பதில் மிக ஆர்வமாக இருந்தேன். இக்குழுவின் செய்பாடுகளால்தான் மத்திய செயற்குழு உருவானது. புதியபாதையை நாம் யாழ்பாணத்தில் கே.கே.எஸ் வீதியிலுள்ள ஒரு கிராமத்தில் இருந்து சுந்தரத்தின் தலைமையில் எழுதினோம். முதல் புதியபாதையை நானும் சுந்தரமுமே எடுத்துக் கொண்டோம். இக்காலத்தில் இறைகுமாரன் எமது தொடர்பில் இருந்தார். இறைகுமாரனுக்கு புலிகளின் தொடர்பும் நிறையவே இருந்தது. உடைந்து வந்தவர்களில் நானும் ஒருவனாக இருந்ததால் எனக்கும் புலிகளின் தொடர்பு நிறையவே இருந்தது. சுந்தரம் கண்ணன் காக்கா உமா (முகுந்தன்)சந்ததி ராஜன் போன்றவர்கள் நெருக்கமாக இருந்ததாலும் இவர்களை விட வயதில் மிக மிக இளையவனாக இருந்ததாலும் என்மேலுள்ள பார்வை மிக மிக மிதமாகவே இருந்தது. என்மேலுள்ள புரிந்துணர்வும் இதற்கு ஒருகாரணமாக இருந்தது. புதியபுலிகளில் இருந்து பிரிந்த விடுதலைப் புலிகளாகவும் புளொட்டாகவும் மாறிய ஒவ்வொருவரையும் எடுத்துக் கொண்டால் இவர்கள் இருபக்கமும் இரு துருவங்களே. எண்ணம், சிந்தனை, போக்கு, விடுதலை பற்றிய எதிர்காலஅறிவு என்ற எல்லா விடயங்களிலும் மாறுபட்டே இருந்தார்கள். காந்தியம் போன்ற பண்ணைகள் மக்கள் தொடர்புக்காக மட்டுமல்ல வேலைவாய்ப்பு பயிற்சிகள் விடுதலையைச் சமூகமயப்படுத்தல் போன்ற விடயங்களில் இப்பண்ணைகள் இருக்க வேண்டும் என்பன எமது எண்ணமாக இருந்தது. பிரபாகரன் போல் இராணுவத்தை தமிழர் பகுதியில் இருந்து அடித்துக் கலைப்பதநூடாக தமிழீழத்தை சிருஸ்டிக்கலாம் என்ற நம்பிக்கை எம்மிடம் இருந்ததில்லை.

  Reply
 • அஜீவன்
  அஜீவன்

  தெரியாத பல விடயங்கள் இன்று உண்மையின் வெளிப்பாடு போல பதிவாகின்றன. முகமிழந்து நின்ற தோழர்களது முகங்கள் மட்டுமல்ல, மறைந்து நிற்கும் உண்மைகளும் பதிவாகின்றன. இந்த வெளிப்பாடு ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் என நம்புகிறேன்.

  இங்கே வரும் பதிவுகள் பொய்யுரைக்கும் பலரது வாய்ப் பேச்சுகளை நிறுத்தும். இதுவரை தொடர்ந்த மெளனம், பல கெடுதல்களை செய்துள்ளது. அதை அனைவராலும் உணர முடியும். உங்கள் முகங்களை காட்டும் வரை தொடர்ந்து எழுதுங்கள். ஒருநாள் அனைவரது முகமும் இப் பதிவுகள் போல வெளிவரும் என நிச்சயமாக நம்புகிறேன். காரணம் எவரும் கொலை செய்யவோ கொள்ளை அடிக்கவோ நினைத்தவர்களில்லை. அதற்காக வாழ்வை இழக்க வேண்டியதில்லை. உண்மை ஒரு நாள் நிச்சயம் வெல்லும். உண்மை நேசங்கள் , தோழமையோடு பயணிக்கும்.

  பதிவுகளை இடும் அனைவருக்கும் நன்றிகள்.

  Reply
 • palli
  palli

  இருட்டினா மாலை; விடிந்தால் காலை என்பதுபோல் என்னமாய் பிளான் பண்ணி பண்ணி பல கொலைகளை அமசடக்காய் செய்து போட்டாங்க, இந்த கொலை திட்டத்தில் ஒரு சிறிதளவாவது அதை எதிருக்கு எதிராய் பாவித்து இருந்தால் ஈழம் இல்லாவிட்டாலும் இலங்கயிலாவது நாம்
  வாழ்ந்திருக்க முடியும்; மாணிக்கதாசனுக்கு மட்டுமல்ல சின்ன பொடிக்கும் இந்த முகுந்தன் கொலையில் பங்கு இருக்கலாம் என்பது என் சந்தேகம்; காரணம் அவரது புளொட்டின் அந்தபக்கத்தில் தன்னை மிக கவனமாக கையாளுகிறார்; அவருக்கு தெரியுமா தேசம் வரும் அதில் பலர் சொந்த சோக கதைகளை எழுதுவார்கள் என; உன்மையில் இப்போது தேசத்துக்கு நெருக்கடி வரலாம்; காரணம் எமக்கு தெரியாத பல விடயங்களை யாரோ இருட்டில் இருந்து எழுதுகிறார்கள். இன்னும் சிலர் கதை திரைகதையாக வர தேசம் இடம் கொடுப்பதால் இந்த காலம் தேசத்துக்கு பொல்லாத காலமே; ஆனாலும் இதெல்லாம் தேசத்துக்கு அடிக்கடி வருவதால் பழகி போச்சு:

  //20 வருடங்களுக்கு பின் அஜீவனின் நட்பால் இன்று வெற்றியுடன் கதைத்தேன். //
  இன்னும் பலருடன் கதைக்கலாம் உங்கள் கடந்த காலத்தை எழுதினால்;

  //ஒரு புது விடயமும் அறிந்தேன்.// என்ன அது;; சொன்னால் நாமும் அழுவோமில்ல;
  //சமூக விஞஞான கல்லூரியில் எடுத்த படமும் என்னிடம் உள்ளது.// படங்கள் எல்லாம் பத்திரமாக இருக்கு ஆனால் படைதான் விடை தெரியாமல் போச்சு;

  நான் ஒருமுறை சுவிஸ் போனபோது அங்கு ஒருவிழாவில் நெப்போலியனுடன் பேசிகொண்டு இருந்தபோது கழகதோழர் ஒருவரும் அந்த கலகலப்பில் இனைந்தார், அவர் பெயர் தெரியாது (சூலை கருப்பன் என பக்கத்தில் நின்றவர் சொன்னார்) இவர் நீர்வேலியை சேர்ந்தவர்; இவர் ஏதோ ஒரு முகாமில் தேனீருக்கு சீனி வேண்டும் என கேக்க அது முகுந்தன் வரை போய் பின்பு இவர் சங்கிலி மூர்த்திவரை சென்று இறுதியில் செல்வராஜாவின் உதவியால் உயிர்தப்பி தளம் சென்று அங்கும் அவருக்கு தொல்லைகள் வர சுவிஸ் வந்ததாக சொன்னார், இதை ஏன் இங்கு தருகிறேன் எனில் அவர் ஒரு சாதாரன போராளி; அவர் முகுந்தனை நேரடியாக கோபிக்கும் அளவுக்கு ஒரு அமைப்பின் செயலதிபர் நடந்திருக்கிறாரே என்பதை சுட்டி காட்டவே,நெப்போலியன் முடிந்ததால் அவரது வாக்குமூலமும் முடிந்து விட்டது; இல்லையேல் இன்னும் பல விடுப்புகள் கிடைத்திருக்கும்; இவர் இப்போது இல்லை என கேள்வி உன்மையா தெரியாது; இவர் சுவிஸ்சிலேயே புலிகளின் அலுவலகம் சென்று புலிகளை மிரட்டுவாராம்; இப்படி எத்தனை தோழர்கள்,,,,,,,,,???

  நிலாவின் எழுத்தை சின்னபொடியும் ஜயரும் இரவிலாவது படிக்கும்படி கழகத்தின் சார்பிலும் சமூகம் சார்பிலும் பல்லி அழைக்கிறேன்,(இப்படி ஏதாவது ஒன்றுகூடலில் பேசவேண்டும் என்பது பல்லியின் ஆசை )

  வெற்றி நான் உங்களை டெல்லியில் சந்தித்துள்ளேன்; தம்பியண்ணை; அம்பன்; வரதன்; பரம்; வக்கில் ;புரியுமே

  Reply
 • Deva
  Deva

  காந்தி
  நீங்கள் தீவு பகுதியில் பொறுப்பாளராக இருக்கும் போது சுருவில் கிராமத்தில் உங்கள் முகாம் இருந்தது. அக்காலத்தில் உங்களின் தலைமையில் பல சடலங்கள் சுருவில் அன்னை மேரிமாதா ஆலயத்ர்ற்கு பின்னாலுள்ள பணம் தோப்பிலும், புங்குடு தீவுக்கு அருகில் உள்ள கண்ணா தீவிலும் புதைகப்பட்டது. அச் சடலங்கள் யாருடையவை என சொல்ல முடியுமா ???
  உங்கள் தோழர்கள் எனது உறவினர்களை துப்பாக்கி முனையில் வெருட்டி அவர்களின் வள்ளங்களை பறித்து அவற்றில் இரு சடலங்களை ஏற்றி கண்ணா தீவுக்கு கொண்ண்டு போய் புதைத்தார்கள். அதை நான் கன்னல் கண்டேன். எனது ஊரான கேட்டில் கிராமத்தவர் பலர் கண் கண்ட சாட்சிகள்.
  உங்களை கோழி காரன் என நான் சொல்ல வில்லை. ஆனால் இன்றும் அச்சடலங்கை புதைத்த இடம் எமக்கு தெரியும். யார் அவர்கள் என தெரிந்தால் அவர்களின் உறவினர்களுக்கு தெரிவிக்கலாம். நன்றி

  குலனிடம் ஒரு கேள்வி
  நீங்கள் தீவு பகுதியில் இருக்கும் போது மெலிஞ்சிமுனை கிராமத்தின் பின்னால் உள்ள காட்டில் சடலங்கள் புதைகப்பட்டது. இது 85 கார்த்திகை மாதம் நடந்தது. அது எந்த இயக்கத்தால் புதைகப்பட்டது ??? பிளாட் அல்லது eprlf இனால் புதைகப்பட்டிருக்க வேண்டும். தெரிந்தால் குலன் இங்கு பதியவும்

  Reply
 • nila
  nila

  வாசுதேவா தலைமையில் மட்டக்களப்பு மேதின கூட்டம் நடைபெற்றது 1982 ம் ஆண்டென இணைத்துக் கொள்ளவும்_நன்றி

  மேலும் இந்த மேதினத்திற்கு அந்த கிட்டடி காலங்களில் கழகத்திற்குள் சேர்ந்திருந்த ஜீலி (பின்னாளில் ராதா என்றழைக்கப்பட்டவர்) என்ற பெண் தோழி உட்பட காந்தீய சறோஜினி (இவர் பின்னாளில் கழக மத்திய குழு உறுப்பினர்) -காந்தீய அலுவலகத்தில் கணக்காளாராக வேலைக்கு சேர்ந்து -பின்கழகத்திற்குள் இணைந்த ஜெயவாணி (பின்னாளில துளசி என்றழைக்கப்பட்டவர்) மற்றும் காந்தீய பண்ணைகளில் முழு நேர செயற்பாட்டாளர் கருணாவதி என நினைக்கின்றேன் (யாழ்ப்பாணத்து பெண் இவர் சந்ததியாரால் பண்ணைக்கு கொண்டுவரப்பட்டவர்) உட்பட்ட பெண்களும் திருமலை மாவட்டத்திலிருந்து திருமலை காந்தீய மேற்பார்வையாளர் திருமதி பிலோமினா லோறன்ஸ் தலைமையில் அம்மாவட்ட அனைத்து ஆசிரியர் பொறுப்பாளர் றஜனி (பின்னாளில் கழகத்திற்குள் ஜென்னி-கருணா அழைக்கப்பட்டவர்) கட்டைபறிச்சான் ஆசிரியர் பவானி -புளியடிச்சோலை பண்ணை ஆசிரியர் ஜெகதீஸ்வரி- பாலையுற்று ஆசிரியர் ரஜி.ஞானப்பிரகாசம் உட்பட பல பெண் தொண்டர்களும் மற்றும் ஏனைய காந்தீய மாவட்டங்களான கிளிநொச்சி-மன்னார்-யாழ்ப்பாணத்திலிருந்துமாக பல பெண் செயற்பாட்டாளர்களும்இந்த மட்டுநகரவீதிகளில் கோலாகலமாக மேதின கொடிகளுடன் பங்குபற்றியது தமிழ் பெண்களுக்குரிய முதல் வரலாற்றுப்பதிவென நினைக்கின்றேன்

  Reply
 • palli
  palli

  டேவா உங்கள் குத்துமதிப்பான விளையாட்டை தொடங்கியாச்சா?? நீங்கள் அமெரிக்கா அதிபராக இருந்த போது சோமாலியாவில் பல பிணங்கள் தெருவில் கிடந்தன அதுக்கான விளக்கம் தரமுடியுமா என நான் கேக்கலாம்; அது நியாயம் இல்லை; அதனால் உன்மையை தாங்கள் எழுதினால் அதுக்கு நாமும் குரல் கொடுப்போம்; பல்லி உங்களை காயபடுத்த நினைக்கவில்லை; உங்கள் கடுப்பு வேறு என்பது தெரியும்; அதனால் இனி வேறு விளையாட்டு விளையாடலாமா??

  குலனின் வருகை நிலா குசும்புவுக்கு இன்னும் பல தகவல்களை தரும் என்பதில் சந்தேகமே இல்லை; குலன் எழுதுங்கள் அந்த நேரத்து சைக்கிள் பயணங்களை:

  Reply
 • அஜீவன்
  அஜீவன்

  புலிகளினால் ஒதுக்கப்பட்டு சென்னையில் நாகராசாவோடு தங்கியருந்த ஐயரை சந்தித்த உமா , புளொட் பணத்தில் வாங்கியிருந்த பாவாணர் அச்சகத்தின் பொறுப்பைக் கொடுத்தார். இந்த அச்சகம் 1983ல் இளவழகன் என்பவர் பெயரில் இந்திய ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாவுக்கு உமாவால் வாங்கப்பட்டது. 1986ல் இயக்க முறிவுகளின் போது இளவழகன் அச்சகத்தை தனதாக்கிக் கொண்டார். இது புளொட்டில் பலர் அறியாத விடயம்.

  1988ம் ஆண்டு அனைத்து இயக்கங்களும் திரும்பி இலங்கைக்கு சென்ற பின், பாவணர் அச்சகத்தை விற்ற இளவழகன் அந்தப் பணத்தில் வியாபாரம் தொடங்கி இன்று தமிழகத்தில் கொடை வள்ளல் எனும் அரிதாரத்தோடு வாழ்கிறார்.

  இவரைத்தான் வைகோவும் ; நெடுமாறனும் மேடைகளில் ஈழத் தமிழர்களுக்கு அள்ளிக் கொடுத்த வள்ளல் என புகழாரம் சூட்டுகிறார்கள்.

  நாகராசாவோடு , ஐயர் இருந்தாலும் பாவப்பட்ட பணத்தில் வாழக்கூடாது என்று கூலி வேலை செய்து வாழ்ந்தவர் ஐயர்.

  இது குறித்தாவது ஐயர் இங்கு தமது கருத்துகளை பதியலாம்.

  இதேபோல உலக தமிழரின் பிரச்சனைகளை பேசி வந்த ஜனார்த்தனனுக்கு ஒரு பணிக்காக கொடுத்த 1-3 லட்சம் ரூபாய் பணத்தை தராமல் உமாவுக்கு தண்ணி காட்டினார்.

  இதோ சில நினைவுகளை பகிரும் புகைப்படங்கள்: (விஜய குமாரணதுங்க மற்றும் சந்திரிகா சந்திப்புகள்)

  http://www.facebook.com/album.php?aid=329003&id=823993901

  Reply
 • nila
  nila

  குலன்! நன்றிகள். உங்களைப்போன்ற பழையவர்கள் இப்படி ஆரோக்கியமாக இத்தளங்களுக்கு வருவது மிகவும் வரவேற்கத்தக்கது. எங்கள் எல்லோருக்கும் தெரிந்த பகுதி-பகுதிகளெல்லாம் இணைத்துத் தொகுக்கப்படும் போதுதான் ஒரு முழுமை உருவாகும். இந்த கூட்டு வேலைத்திட்டம்தான் ஓர் ஆரோக்கியமான விமர்சனத்திற்கு மட்டுமல்ல- எதிர்கால வரலாற்று ஆவணங்களாக்க முடியும் (இதனை தேசம் முழுமை பெற வைத்து இதுவரை எந்த ஊடகமும் துணிச்சலாக செய்ய முன்வராததை இவ் நிர்வாகக் குழு செயற்படுத்தும் என்பதில் எமக்கு நம்பிக்கை உள்ளது.கண்டிப்பாக இதுவரையில் கூட பல நெருக்கடிகள் பல வழியில் சாத்தியம் உண்டு.அந்த நெருக்கடிகளின் மூலம் தான் எமது கடந்த கால விடுதலைகளும் திசைமாறியது தெரியவரும் ….)
  நீண்ட காலமாகவே இபபடி ஆவணப்படுத்தல் ஒன்றின் அவசியம் ஒரு பெரும் நெருடலாகவே இருந்தது.அதை எங்கிருந்து எங்கு தொடங்குவதென்பது கேள்விக்குரியாக இருந்ததும் உண்மைதான் .ஏனெனில் ஒருநபர் தனியே மிக சிரமபட்டு வரலாற்றை எழுதவெளிக்கிட்டால் கூட்டிக்கழித்துப் பார்த்தால் அது தற்பெருமைக்குத்தான் என ஏளனப்படுத்தி பட்ட கஷ்டங்களை சிதறடித்து கொச்சைப்படுத்தி விடுவார்கள்.இதற்கு உதாரணம் புஸ்பராஜா அவர்களின் “ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ எனவே இவை எல்லா குறை நிறைகளையும் சரிப்படுத்தும் வழி ஒன்று பாரபட்சமில்லாமல் திறந்து விடப்பட்டிருக்கின்றதற்கு தேசத்திற்கு நன்றிசொல்லிக் கொண்டு இணைந்து செயற்படுவோம் ஆரோக்கியமான புரிதல்களோடு…

  அஜிவன்! உங்கள் இந்த கடைசிப்திவு அப்படியே என் மனஓட்டத்தையும் பிரதிபலிக்கின்றது.நான் குறிப்பிட எண்ணியிருந்த கருத்துக்களை அத்தனை அழகாக மிக சூட்சுமமாக உங்கள் கலை அம்சத்துடன் வெளிக்கொணர்ந்துள்ளீர்கள் .எனது கருத்து வெளிப்படும் போது இவ்வளவு நயணமாக வெளிப்பட்டிருக்குமோ தெரியாது.எனவே எனது நேரத்தை மிச்சப்படுத்தியதற்கும் உங்கள் லாவண்ய எழுத்திற்கும் எனது நன்றிகள்

  மேலும் நிக்கரெவெட்டிய தாக்குதல் பதிவில் உங்களுடன் வந்த பின்னால் வவுனியாவில் கொலைசெய்யப்பட்டமுல்லைத்தீவு சோழனையும் தற்போது லண்டனில் வாழ்ந்து வரும் தீபனையும் நீங்களோ நானோ பதிவில் மறந்து விட்டோம்.எடுத்தோம் கவிழ்தோம் என்று குட்டையை குழப்பி விட்டு -விடுதலைப் பாதையை விட்டு விட்டு ஓடியவர்கள் மத்தியில் கழகத்தின் ஆயுத இருப்பு- பலயீனம் தெரிந்தும் நேரடியாக கடல் வழியாக சிங்கள பகுதிக்கூடாக செயற்பட முனைந்த அன்றைய கால கட்ட தாக்குதல்கள் கரணம் தப்பினால் மரணமென்ற நிலைதான். எனவே இவற்றை நினைத்தால் …

  மற்றும் சோழனை நினைவு கூறும் போது மனதில் ரண காயங்கள் தொரிகின்றது. டெல்லி பயிற்சி முடித்த 116 கழக போராளிகளில் இவர் ஒருவர்.மிக உயர்ந்த தோற்றத்தை உடைய கறுவலான எந்நேரமும் சிரித்த முகத்தினன்.முதலாவது ஆண்கள் கொமினிகேஷன் பயிற்சிக்கு சென்ற 25 மாணவர்களில் இவரும் ஒருத்தர்.இந்த காலகட்டத்தில் முதல் முதல் பின்தளத்திற்கு வந்த 5 பெண் தோழிகள் (ராதா- துளசி- ஜென்னி-மிருணா- மீரா)இந்த 25 தோழர்களுடன் வகுப்புகளில் ஒன்றாக படித்தவர்கள் .இப் பெண் போராளிகள் உரத்தராயன்குடிக்காடு என்ற கிராமத்தில் அக்கிராம தலைவாரின் குடும்ப வீட்டிலிருந்து இப் பயிற்சியை மேற்கொண்டவர்கள். இதற்கு பொறுப்பாளராக கணபதி என்ற விக்கினேஸ்வரன்'(தற்போது லண்டனில் வசிப்பவர்) பார்த்திபன் இருந்தனர்.பயிற்சி ஆசிரியர்களாக சுரேன் மாஸ்ரர்(கனடா) குட்டி இருந்தனர். இந்த பயிற்சி முடிந்து 30பயிறசியாளர்களும் வேறு இடங்களிற்கு மாறிய நிலையில் தொடர்ந்து வந்த பயிற்சி வகுப்புக்களுக்கும் (அடுத்த பயிற்சிலும் பெண் தோழிகள் பயிற்சி எடுத்தனர்)பயிறசி முடித்த சோழன்தான் சாமான் போடுவதிலிருந்து அத்தனை வெளித்தொடர்புகளுக்கும் நம்பிக்கைக்கும் பெண் தோழிகளுடன் பழகுவதற்கு கண்ணியமானவர் என்ற நிலையில் செயற்பாட்டாளராக இருந்தார். அவர் குடும்ப நிலையும் மிக வறுமையானது.தந்தையற்ற இவருக்கு ஒரு ஏழைத்தாயாரும் ஒரு மூத்த திருமணவயதை ஒட்டிய சகோதரியும் இருந்தனர். தம்பி கழகத்திற்கு சென்றதால் படிப்பையும் பாதியில் விட்ட சகோதரி வேலைக்கு சென்று தான் தாயையும் தன்னையும் பார்த்தார். சோழன் நாட்டுக்குத் திரும்பிய நிலையிலும் குடும்பத்தை கவனிக்கவில்லை வவுனியாவில் அப்படியே கழகம் என்று திரிந்தார். கழகத்திலிருந்து பிரிந்து ராஜ (ஈ.என.எல்.எப்.டி)னுடன் சேர்ந்து இயங்கிய ஆதவனுடன் கதைத்ததை காரணம் காட்டிவவுனியா கழகத்தால் மானிக்கம் தாசனின் உத்தரவில் கொலைசெய்யப்பட்டார் இந்த மரணங்கள் என்றும் பின்னால் வந்ந கழகத்தின் கறைபடிந்த இரத்தம் தோய்ந்த அத்தியாயங்கள்

  Reply
 • அஜீவன்
  அஜீவன்

  நிலா, நிக்கவெரட்டிய தாக்குதலில் பங்கு பெற்றவர்களது சில பெயர்களை தவிர்த்து வந்தேன். காரணம் பலருக்கு தீங்கு நேரக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு …….

  ஜென்னியும் , உடப்புக்கு வந்திருந்த போது அவரை தாக்குதலுக்கு முன்னர் வெளியேற்ற வேண்டும் என பிடிவாதமாக இருந்தேன். அவர் ஈடுபடக்கூடாது என்பதற்காக அல்ல. அந்த இடம் பாதுகாப்பானதல்ல என்ற எண்ணம்தான்.

  நிலா, அவர்களது பெயர்களை மீட்டியிருப்பது ஒரு புறத்தில் மகிழ்வாகவும் , மறு புறத்தில் இல்லாமல் போனவர்கள் குறித்து வேதனையாகவும் இருக்கிறது. வருத்தங்கள்.

  ஜென்னி பல விடயங்களை அறிந்தவர். அவரை இலங்கையில் சந்தித்த பின், இந்தியாவில் பம்பாயில் வைத்து வாமர் தங்கியிருந்த விடுதியில் வைத்து சந்தித்தேன். அதன் பின்னர் பாரீசில் வைத்து சற்றும் எதிர்பாராதவாறு நண்பன் கலைச்செல்வனின் இறுதிச் சடங்கில் சந்தித்தேன். அங்கு உமாவின் சகோதரரும் , மாதவனும் வந்திருந்ததோடு உமாவின் மனைவி பேபி அக்காவையும் சந்தித்தேன். என்னை நன்கு அறிந்தவர்களில் இவர்களும் அடக்கம்.

  Reply
 • Deva
  Deva

  பல்லி அவர்களுக்கு;
  நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? நான் சொல்வது பொய் என்றா ?
  நீங்கள் வேண்டுமானால் இது பற்றி முன்னாள் EPRLf தமயந்தியிடமும், தேவாவுடன் இருந்து பிரித்த பரிதியடைப்பை சேர்ந்த இன்று லண்டன் இல் வாழும் மூர்த்தியிடம் அல்லது சீலன்(இங்கு எழுதும் பிளாட் சீலன் அல்ல இவர் EPRLF இன் ஈழ மாணவர் முன்னணியை சேர்ந்தவர் ) இடம் விசாரிக்கவும். நீங்களும் தேசமும் ஏற்றப்பட்டு செய்தால் நான் அந்த இடங்களுக்கு சென்று நிருபிக்க தயார். மேலும் காந்தி தலைமையில் தீவகத்தில் நடந்த பல விடயங்களை அறித்தவர்கள் பலர் ஐரோப்பாவில் உள்ளனர். முன் முதலின் தீவகத்தில், (1984 ) சடலங்களை புதைத்தவர்கள் பிளாட் இயக்கத்தினர். அதன் பின் ஒரு சடலம் EPRLf இனால் புதைகப்பட்டது. மேலும்,
  இன்று தீவகத்தில் மக்கள் ஊருக்கு திரும்பிய பின் குறிப்பிட்ட சில கிராமங்களின் சில பகுதிகளில் குடியிருக்க முடியாமல் உள்ளது. காரணம் அங்கு 1994 இல் தீவகதார் அகதிகளாக புலம் பெயர்ந்த பின் சடலங்கள் புதைகப்படிருப்பதனாலாகும். ஆனால் இது பற்றி இன்று அந்த மக்களால் கதைக்க முடியாமல் உள்ளது. காரணம் அரசியல் கட்சி ஒன்று மீது மக்களுக்கு இருக்கும் பயம். இதை செய்தவர்கள் பலர் இன்று லண்டன் இல் இருகின்றனர். நீங்கள் PLOT வரலாறு எழுத முனைவது புரிகிறது. ஆனால் இன்று பலர் தமது உறவுகளை பல வருடங்களாக தேடுகிறனர். அனாமதேயமாகவாவது இங்கு யாரவது தகவல் எழுதினால் பயனாக இருக்காதா ????

  Reply
 • சீலன்
  சீலன்

  யாராவது கழகத்திற்கு பின்தளத்தில் உத்தனை முகாம்கள் இருந்தன என குறிப்பிடமுடியுமா? கழகத்தின் வரலாறு கறைபடிந்த கரங்கள் இருந்தாலும் தியாகங்களின் உச்சத்திலும் மக்களின் உயர் மட்டவிடுதலையையும் மனதாற நேசித்த பலர் இருந்திருக்கின்றனர்.
  பீ முகாமில் பயிற்றுனராக இருந்த குரு (இவர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றி அதில் இருந்து தப்பிவந்தவர்) உயிருடன் இருக்கின்றாரா?
  காந்தி போன்றவர்களின் பதிவு அவசியமானதே காரணம் உமாவின் பாதுகாவலராக இருந்தவர் என்பதால் கணிசமான விடையங்கள் அவருக்கும் தெரிந்திருக்க வாய்புண்டு.
  அஜீவன் உங்களினால் ஏற்பப்பட்ட படங்கள் வரலாற்றில் முக்கியமானவை நண்றிகள் பல உங்களுக்கு

  Reply
 • linga
  linga

  What is the connection or reltionship between the Gandyam Charity and the PLOTE liberation organisation?

  Reply
 • vanavil
  vanavil

  1979ல் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் முறிவின் பின்னர் , அங்கிருந்து பிரிந்து சென்ற பிரபாகரன் , குட்டிமணியோடு டெலோவில் சேர்ந்த பின், நீர்வேலி வங்கியை கொள்ளையடித்தார்கள். அந்தப் பணத்தோடு தமிழ்நாட்டுக்கு தப்பிச் செல்ல குட்டி மணியும் , தங்கத் துரையும் ,பிரபாகரனும் திட்டமிட்டு ஒரு இடத்தில் சந்திப்பதாக முடிவானது.

  குறித்த நேரத்துக்கு வந்து குட்டி மணியும் , தங்கதுரையும் பிரபாகரனது வருகைக்காக காத்திருக்க , பிரபாகரனுக்கு பதிலாக போலீசார் வந்தனர். அதனால் பிரபாகரன் தங்கத்துரையையும் , குட்டிமணியையும் காட்டிக் கொடுத்ததாக உறுதியானது. அவர்கள் இருவரும் கைதான பின் பணத்தோடு பிரபாகரன் தமிழ்நாட்டுக்கு தப்பி வந்தார்.

  அந்நேரம் சென்னையில் எல்டீடீ எனும் பெயரில் இயங்கியவர்கள் , லண்டனில் இருக்கும் ராகவனும் , சென்னையில் தொழில் அதிபராக இருக்கும் நாகராஜாவும்தான். அப்போது சென்னையில் மிக வறுமையோடு நாகராசாவும் ,ராகவனும் வாழ்ந்து வந்தார்கள். காசோடு தப்பி தமிழகம் வந்த பிரபாகரன், தன்னிடம் இருந்த பணத்தைக் காட்டிய போது , அவர்கள் தம்மோடு பிரபாவை சேர்த்துக் கொள்ள முடிவெடுத்தனர்.

  சிறிது காலத்தில் பிரபாகரன் நாகராசாவை ஒதுக்கினார். அதன் பின்னர் அவர்களை விட்டு தனியாக வெளியேறிய நாகராசா, கடத்தல் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார்.

  அது சிறீ சபாரத்தினமும் , ராசப்பிள்ளையும் கூட்டுத் தலைமையாக டெலோவை இயக்கி வந்த காலம். குட்டி மணியையும் , தங்கத் துரையையும் காட்டிக் கொடுத்துவிட்டு பணத்தை எடுத்துக் கொண்டு பிரபாகரன் சென்னை வந்திருந்ததால், டெலோவின் பணத்தை பிரபாகரன் ஏடுத்து வந்துவிட்டார் எனவும் , அதைத் தர வேண்டும் எனவும் சிறீ சபாரத்தினமும் , ராசப்பிள்ளையும் வந்து கேட்டு, கொண்டு வந்த பணத்தில் அரைவாசியை பிரபாகரனிடமிருந்து அவர்கள் எடுத்துக் கொண்டனர். இதற்கு ராகவன் சாட்சி.

  இக்காலத்தில் எந்த இயக்கமும் நாகராசாவையும் , ஐயரையும் கண்டு கொள்ளவேயில்லை.

  இவர்களிடமிருந்து ஒதுக்கப்பட்ட நாகராசா கடத்தலில் ஈடுபட்ட போது , அவரோடு ஐயர் போய் தங்கியிருந்தார். அஜீவன் எழுதியுள்ள ஐயர் குறித்தும் , பாவணர் அச்சகம் குறித்தும் எழுதியுள்ளவை அப்போது நடந்த விடயங்களேயாகும். பின்னர் நாகராசாவுக்கு கிடைத்த பணத்தில் பல இலங்கை , இந்திய இடதுசாரி அமைப்புகளுக்கு உதவி வந்தார்.

  Reply
 • Kanna
  Kanna

  //தெரியாத பல விடயங்கள் இன்று உண்மையின் வெளிப்பாடு போல பதிவாகின்றன. முகமிழந்து நின்ற தோழர்களது முகங்கள் மட்டுமல்ல, மறைந்து நிற்கும் உண்மைகளும் பதிவாகின்றன. இந்த வெளிப்பாடு ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் என நம்புகிறேன்.//

  Ajeevan, as we passed through the pain of lost. these memories and friendship are the valuable in our life

  //கணக்கு பண்ணிய பலர் சமூக விஞ்ஞானம் படிப்பதற்க்காக முதல் நாளே முகாமகளை விட்டு சென்னை சென்ற தகவல் கிடைத்தது;//

  True statments – then after Rajan put lots of his loyalities in the T3S calss. That time one country asked PLOT to do the miltery operation in TRINCO & Kandy area. Jan/Kanthan also got other team preapred in Puthukodai area. Uma used these request to find the quick fix solution which he faced in training camps. Rajan’s teams locatated in Kodikarai & Thuthukudy. Kanthan’s team located in Puthukodai & Thrichy. after every affort gave-up as usuaal
  ஆச்சி ராஜன் முதலில் பீ முகாமில் பயிற்சி எடுத்து ஈ முகாமிற்கு மாற்றப்பட்டு
  Aachi got his basci traing in THENEE camps.in between Aachi got bacic COMANDO training in Puthukodai. Aachi never been in High Comando Divi. but Aachi and other intelegent, Uma’s body guard teams usually used the high comand firing tranch for their firing practiece.(these friends might show them in high comando camp friquantlly)Then he appointed in B camp as instructor for new comers. As Sangili and Aachi came from same area in Jaffna, Aachi got colosed realtionship with intelegent team – In B camp intelegent Div ran by Kugan(now in USA), Morthy(now pastor) and Aachi rajan. Medras itelegetn office ran by Idi Ravi, Mani, Kili, one more(now in Bombay jail). Most of these team leaders somehow realted to Sangili.

  //ஈஸ்வரனுடனான (தீபநேசன் அசோக்) குழுவானது பரந்தன் ராஜனின் வேலைத்திட்டத்தை இரகசியமாக ஏற்றுக்கொண்டு//
  When Easwarn group came from Jaffan, they came without knowing about the hot status in training camps. Just they came to have a CC meetig and willing to take control of the PLOTE. But reality is dangerous. Parnthan Rajan start going on his way. Athavan(then killed by Manikathasn in Vavuniya), Mustfa(TBC Ram), some others intialy support rajan. After first CC meeting with land comity(Eswaran group) CC splits in so many fraction. Rajan got suported by more CC members. As TELO Sri & Charles persanlly give the guranty for the harware for the defence (with condition = never Rajan start any armed confilict) Rajan got moral care taker for ran & files.
  This time there was a plan placed to make all CC under house arest and run the PLOTE under interim admin (lead by PLO teams – included Sunil, Kalith, Selvaraj, Rajeve, etc – T3S student also included for the admin level). these house arrested CC may work as adviser body – But Eeswaran & Ponuthrai mess-up this i the last minutes. Then Asoke and others fall into the Rajan side for their needs(safety, moeny,recogination etc..) I hope PALLI, MAYA, VOTE Prasad knew this operation, because every steps took placed in Tanjavor.
  PLZ remember this moments EPRLF Duglas & TELO Sri and Rajan had very nice and cloed frinedship. This team worked out help each others too. These alins put these LAND COMMITES in frighten status

  //இது சங்கிலியின் தலைமையில் நடந்ததாகவே நான் அறிகிறேன்.//
  As per i hear – these murders carried out by local PLOTE(Sulipuram team) memebers. these 6 LTTEs came to the point to put the poster -as Uma in htat area PLOTE as them to leave. mouth talk end up in hand fissed. as PLOTE over powerd on that security point these 6 LTTE taken into the point and beaten in front of Venkat team(Div of Uma’s body guard team came to Jaffna from India). When Sankili came to that point every think went over (LTTE over beaten by ..) SANKILI DECIDED TO NOT TO RELEASE THEM asked them to dump and left the point- after that history.. mypoint of view local PLOTE over reacted as UMA in that land. Sangili don’t want to creat another humilatting incident as Uma in Jaffna. So dump it

  //வெற்றி நான் உங்களை டெல்லியில் சந்தித்துள்ளேன்; தம்பியண்ணை; அம்பன்; வரதன்; பரம்; வக்கில் ;புரியுமே//
  OH buddy do you remaber green colur FIAT, Appartment closed to GEMINI bridge. Musilum frined in Egmore— Getting close or wrold is round/circle.

  PLOTE finacne admin ran by Santhathi through Mathvan in Medras – Masilamani ran Tanjavor & Puthokodi Divi. Tractor Sri ran Thenee, Madurai & Kampam Dive
  PLOTE training – Rajan then Vasu then Senthil then Subas then Kalith and other PLOs.
  Jan/Kanthan and Kannan ran supervser for trainig posiotion from Madras
  senthil, Babuji, Vamar etc being assisten from Vasu’s time periods.
  Subas become assisten on Senthil’s time
  Iyar & Pandy is responcibe in boat div.
  only some people are not affected by this group and team association. Mostly members associated wiht others for their safety reasons

  PLZ some one trancilate this if you can with love

  Reply
 • vanavil
  vanavil

  உமாவுக்கு மரண தண்டனை வழங்க காரணமான விடயங்கள் :
  1. இயக்கத்தையும் , தமிழ் இனத்தையும் சிங்கள இனத்துக்கு காட்டிக் கொடுத்தமை.
  2. (குறிப்பாக) அத்துலத் முதலி மற்றும் ரஞ்சன் விஜேரத்ண ஆகியோரோடு இருந்த தொடர்புகள்
  3. தனி மனித ஒழுக்கக் கேடுகள்

  அத்துலத் முதலியின் நட்பினால், உமா; லுதுப்பியிடம், 25 லட்சம் ரூபா பணம் பெற்றுக் கொண்டு மாலைத்தீவு தாக்குதலைச் செய்ய உத்தரவிட்டது.

  இது குறித்து திவாகரன் எனும் சிவா சின்னப்பொடி எழுதும் காரணங்கள் தவறானவை.

  இலங்கை ஜாஎல எனும் பகுதியில், மாலைதீவிலிருந்து வந்து கோழிப் பண்ணை வைத்திருந்த வியாபாரி லுதுப்பியின் வேண்டுகோளின் பெயரிலேயே மாலைதீவு தாக்குதல் செய்யப்பட்டது. லுதுப்பி , லலித் அத்துலத் முதலிக்கு நெருங்கிய நண்பர். இவர் மாலைதீவு அதிபர் அப்துல் கயூமின் உறவினர். இவர்கள் இருவருக்கும் தனிப்பட்ட குடும்ப பிரச்சனைகள் இருந்தன. எனவே அதிபர் அப்துல் கயூமைக் கொல்வதற்காகவே இத் திட்டம் போடப்பட்டது. வேறு எதுவும் பின்னணியில் இல்லை.

  இதை பயன்படுத்தி உமாவுக்கு பிரச்சனையாக இருந்தவர்களை, இப்படியான ஒரு தாக்குதலில் ஈடுபடுத்தி அகப்பட வைக்கலாம் என உமா எண்ணி, உமாவோடு பிரச்சனைப்படும் தோழர்களை தேர்வு செய்து இத்தாக்குதலுக்கு அனுப்பினார். அங்கு பெரிதாக இராணுவம் இல்லை. போலீசாரும் துப்பாக்கியோடு திரிவோர் அல்ல எனச் சொல்லப்பட்டாலும், அங்கே நிலமை வேறாக இருந்தது.

  மாலைதீவுக்குள் இறங்கிய சிலர் கொல்லப்பட்டும், சிலர் கைதாகியும் , இருவர் தப்பியும் திரும்பி வந்தனர். மாலைதீவில் உள்ளே புகுந்தவர்களை பிடிக்க மும்முரம் காட்டிய இந்திய படை , தப்பிய இருவரை கண்டும் தப்ப விட்டு விட்டது. இதனால் நடந்த விடயங்கள் வெளியே தெரிய வந்தன. இதில் பங்கு பற்றிய சிலர் தற்போது புலம் பெயர்ந்தும் உள்ளனர். அவர்கள் இது குறித்து எழுதுவார்கள் என நம்பலாம். ஆனால் இதற்கும் புளொட் தலைமை பெரிதாக எதுவும் செய்யவில்லை.

  இதேபோன்ற ஒரு தாக்குதல் 1985 அல்லது 1986ல் இந்தியாவின் பெங்களூரில் நடந்தது. அது பணத்துக்காக ஒரு நகைக் கடையை கொள்ளை அடித்த சம்பவம். நகைக்கடையை கொள்ளை அடித்துவிட்டு தப்பி ஆட்டோவில் ஓட முயன்ற வேளையில் , அது சம்பந்தமான வள்ளுவன் (கனடா) மற்றும் வெங்கட் (பிரான்ஸ்) ஆகிய இருவரும் போலீசாரால் கைதானார்கள்.

  பின்னர் இவர்களை நீதிமன்றத்துக்கு கொண்டு வரும் வழியில் வைத்து, பீஎல்ஓ சாந்தி தலைமையில் சென்ற குழு , திட்டமிட்டு மீட்டு இந்தியாவை விட்டு நாட்டுக்கு அனுப்பி வைத்தது. இவர்கள் புளொட்டை விட்டு வெளியெறியவர்கள் எனவும் , இவர்கள் வெளியேறி 3 மாதங்கலுக்கு மேல் என அறிக்கைகள் வெளியிடப்பட்டன. இது பொய்.

  இத்தாக்குதலுக்கு இரு நாட்களுக்கு முன் இவர்கள் (வள்ளுவன் மற்றும் வெங்கட்) சென்னையில் உள்ள சங்கிலியின் காரியாலயத்தில் இருந்தார்கள்.

  கடைசி காலத்தில் பழையவர்களை விலக்கி விட்டு புதியவர்களை சேர்த்துக் கொண்டு ஒரு அமைப்பை கட்டியெழுப்பும் திட்டமும் உமாவிடம் இருந்தது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே உமாவுக்கு மரண தண்டனை அல்லது உமாவை கொல்ல வெண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

  இந்த முடிவை எடுத்த முக்கியஸ்தர்கள் :- மாணிக்கதாசன் , லண்டன் கிருஸ்ணன் , தராக்கி சிவராம் , மாறன் ,ஆச்சிராஜன் , வெற்றி , சித்தார்த்தன், மதன், கே.எல்.ராஜன், சாம் முருகேசு ……… (இன்னும் சிலர்)

  பல்லி சொல்வது போல் திவகரனுக்கு தெரிந்திருந்தால் அடுத்த நிமிடமே அது உமாவுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கும்.

  இவர்கள் அனைவரும் 1989 பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் கூடியே இத் தீர்மானத்தை எடுத்தார்கள். ஆனால் உமா 1989 யூலை 16ம் திகதி கொல்லப்பட்டார். அதற்கு அடுத்த நாள் சிங்கப்பூர் போவதற்கு எண்ணியிருந்தார். இது நடக்கும் போது சித்தார்த்தர், அமிர்தலிங்கத்தின் மரண வீட்டில் இருந்தார்.

  Reply
 • Kulan
  Kulan

  தேவா! /குலனிடம் ஒரு கேள்வி
  நீங்கள் தீவு பகுதியில் இருக்கும் போது மெலிஞ்சிமுனை கிராமத்தின் பின்னால் உள்ள காட்டில் சடலங்கள் புதைகப்பட்டது. இது 85 கார்த்திகை மாதம் நடந்தது. அது எந்த இயக்கத்தால் புதைகப்பட்டது ??? பிளாட் அல்லது நிசடக இனால் புதைகப்பட்டிருக்க வேண்டும். தெரிந்தால் குலன் இங்கு பதியவு/ இதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள். மெலிஞ்சிமுனைப்பக்கம் நான் வந்தது கிடையாது. நான் யார் என்பது உமக்குத் தெரியாது ஏதோ தெரிந்தவன் போல் நடிக்கிறீர்கள். ஆனால் மெலிஞ்சிமுனை மக்கள் பற்றி எனக்குக் கிடைத்த தகவல் ஒன்றை நான் முன்பு பதிவு செய்திருந்தேன். அவலை நினைத்து உரலை இடிக்கிறீர்கள். நான் யார் என்பதை தேசம் நன்கறியும்.

  Reply
 • Kulan
  Kulan

  //குலனின் வருகை நிலா குசும்புவுக்கு இன்னும் பல தகவல்களை தரும் என்பதில் சந்தேகமே இல்லை; குலன் எழுதுங்கள் அந்த நேரத்து சைக்கிள் பயணங்களை// பல்லி உண்மைதான் சைக்கிள் தானே எமது விமானங்கள். எம்மை இன்றும் உயிரோடு வைத்திருப்பது சைக்கிள் என்றால் அன்று இயக்கங்களில் இருந்தவர்கள் மறுக்கவா போகிறார்கள். மேலும் பல்லி சைக்கிள் பற்றி ஒரு முக்கிய குறிப்பு உலகிலுள்ள வாகனங்கள் எல்லாம் தன் நிறைவிட குறைவான நிறையையே சுமந்து செல்லும் ஆனால் சைக்கிள் எனும் வாகனம் மட்டும் தன்நிறையைவிடப் பன்மடங்கு நிறையைச் சுமக்க வல்லது. அது மட்டுமல்ல பலன்சில் ஓடுவது. சிலவேளைகளில் லொறியாகவும் பயன்பட்டுள்ளது. இது ஏழைமக்களின் தோழன் என்பது என் கருத்து.
  அன்று ஏசியா சைக்கிளில் பிரபாகரன். என்று நாம் சைக்கிள்களை விட்டு இறங்கி மோட்டார்களில் ஏறத்தொடங்கினோமோ அன்றே போராட்டம் மக்களை விட்டு விலகத்தொடங்கியது என்பதை யாவரும் நினைவுபடுத்திக் கொள்வார்களாக. பதிவுகள் அமர்களமாக இருக்கிறது. கடுமையான வேலைப்பழுக்கள் காரணமாக பின்நோட்டங்களுக்கு முகம் கொடுக்க முடியவில்லை. நான் கட்டுரையாளர்களைவிட பின்நோட்டதாரர்களையே நேசிப்பவன்.
  //நாகராசாவோடு ஐயர் இருந்தாலும் பாவப்பட்ட பணத்தில் /வாழக்கூடாது என்று கூலி வேலை செய்து வாழ்ந்தவர் ஐயர்// அப்படியானால் பஸ்தியாம்பிள்ளை கொலையின் போது ஐயர் எங்கிருந்தார்? நாகராசா வாத்தி உயிருடன் மேற்குலகில்தான் இருப்பதாக அறிகிறேன். அவர் பதில் சொல்லலாமே. பஸ்தியாம்பிள்ளையின் வாகனம் வருவதை அறிந்த தம்பி மெல்லமாக இடத்தைவிட்டு அகன்று தப்பிக் கொண்ட கோழைத்தனத்தை ஏன் ஐயா சொல்லவில்லை. எப்படி ஏன் விலகித்தப்பினார் என்பதை நாகராசா வாத்தி சொல்லுவார் கேளுங்கள்.

  Reply
 • Kulan
  Kulan

  “1979ல் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் முறிவின் பின்னர் அங்கிருந்து பிரிந்து சென்ற பிரபாகரன் குட்டிமணியோடு டெலோவில் சேர்ந்த பின் நீர்வேலி வங்கியை கொள்ளையடித்தார்கள். அந்தப் பணத்தோடு தமிழ்நாட்டுக்கு தப்பிச் செல்ல குட்டி மணியும் தங்கத் துரையும் பிரபாகரனும் திட்டமிட்டு ஒரு இடத்தில் சந்திப்பதாக முடிவானது.” /

  வானவில் – நீங்கள் இங்கே கே.பியை தவறவிட்டுள்ளீர்கள். இது காட்டிக் கொடுப்பாக இருப்பதற்குச் சந்தர்ப்பம் குறைவு. இத்துடன்தான் கே.பியை குட்டிமணி தங்கத்துரை போன்றவர்கள் கழித்து வைத்தார்கள். பொலிஸ்க்குக் காட்டிக்கொடுப்பது என்பது பிரபாகரனுக்கு அன்றில் இருந்த பழக்கமான ஒன்றாகத்தானே இருந்து வந்திருக்கிறது. தன்வினை தன்னைச் சுடும் என்பது போல் வன்னிப்போரில் உள்ளிருதே புலிகள் தம்மைத்தாமே காட்டிக் கொடுத்தார்கள். புளொட்டிலும் கிளிநொச்சியின் பின் புதிய ஆயுதங்கள் கொண்டு வந்து இந்தியாவில் இறக்கும் போது காட்டிக் கொடுத்தது யார்? சீமான் பிரபாகரன் தான். இத்துடன் தான் புளொட்டின் உயிர் நாடியே நடுங்கத்தொடங்கியது.

  குலம் போன்றவர்களை விட்டுவிட்டு ராகவனை அளவுக்கு அதிகமாக இதனுள் சேர்ப்பது நியாயமற்றது. நான் நினைக்கிறேன் 1981 அல்லது 82ல் புலிகளின் தொடர்பு ராகவனுடன் இருக்கவில்லை என்பது என் நினைவு.

  Reply
 • palli
  palli

  குலன் சில மாதங்களுக்கு முன்பு உங்களது கட்டுரயான உலகமயமாக்கல் என நினைக்கிறேன்; (தப்பாயின் மன்னிக்கவும்) சொன்னீர்கள் பல்லி உங்கள் பின்னோட்டங்களை பார்க்கும் போது ஏதோ எனக்கு அருகாமையில் இருப்பது போன்ற ஒரு உனர்வு என, அதை பொய்யாக்க பல்லிக்கு விருப்பம் இல்லை;
  // இது அறிந்ததால் தான் நான் தேவா மீது சற்று கோபம் கொண்டேன்; குலன் உயிர் மீது அக்கறை கொண்டவர், மிருகங்களை கூட கொல்ல வேண்டுமா என சிந்திப்பவர், அவர் எப்படி பிணங்களை??? குலன் நாந்தான் அது என சொன்னாலும் என்னால் அதை ஏற்க முடியாது, அது
  எனது பலவீனமாக கூட இருக்கலாம், இந்த நிமிடம் வரை குலனை என்னால் அப்படி பார்க்க முடியவில்லை,
  // நாகராசா வாத்தி உயிருடன் மேற்குலகில்தான் இருப்பதாக அறிகிறேன்.//
  அவர் கனடாவில் இருக்கிறார்; ஆனால் அவரால் எதுவும் சொல்ல முடியாது குலன், காரணம் அவர்தானே நாரதர்;
  //பல்லி சொல்வது போல் திவகரனுக்கு தெரிந்திருந்தால் அடுத்த நிமிடமே அது உமாவுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கும்.//
  இதை சின்னபொடி சொல்ல முடியுமா?? பல்லியின் பலனில் சந்தேகம் வேண்டாம்; சின்னபொடி மட்டுமல்ல ஆனந்தியும் இதில் அடக்கம், என்ன எல்லாம் பேச்சுக்காய் நடக்குதென தலை ஆட்டினார்கள் ஆனால் கதையோ சூரன் போர் ஆச்சு;
  //உலகிலுள்ள வாகனங்கள் எல்லாம் தன் நிறைவிட குறைவான நிறையையே சுமந்து செல்லும் ஆனால் சைக்கிள் எனும் வாகனம் மட்டும் தன்நிறையைவிடப் பன்மடங்கு நிறையைச் சுமக்க வல்லது. அது மட்டுமல்ல பலன்சில் ஓடுவது.//
  இது சைக்கிளுக்கு மட்டுமா பொருந்தும்; அன்று நீங்களும்தான் குசும்பு உட்பட பலர் உங்கள் நிலமைக்கு மேல் செயல்பட்டீர்கள்? ஒற்றுமைக்காக நடுநிலை(பலன்ஸ்) வகுத்தீர்கள்.

  //இதேபோன்ற ஒரு தாக்குதல் 1985 அல்லது 1986ல் இந்தியாவின் பெங்களூரில் நடந்தது. அது பணத்துக்காக ஒரு நகைக் கடையை கொள்ளை அடித்த சம்பவம். நகைக்கடையை கொள்ளை அடித்துவிட்டு தப்பி ஆட்டோவில் ஓட முயன்ற வேளையில் , அது சம்பந்தமான வள்ளுவன் (கனடா) மற்றும் வெங்கட் (பிரான்ஸ்) ஆகிய இருவரும் போலீசாரால் கைதானார்கள். //
  வானவில் இது சரியான தகவல்தான், ஆனால் வள்ளுவன் ஒரு அரபு நாட்டில் வாழ்ந்து பின் ஜேர்மன் வந்ததாக ஜெயகர்ணன் என்பவர் சொன்னார்,
  //யாராவது கழகத்திற்கு பின்தளத்தில் உத்தனை முகாம்கள் இருந்தன என குறிப்பிடமுடியுமா? //
  ஆங்கிலத்தில் எல் வரை என்பது நான் அறிந்த தகவல்; கணனா உங்கள் தகவல் தமிழில் தரவும், அதன் பின்பே அதுபற்றி விமர்சிக்கமுடியும், காரணம் படிப்பவர்கள் எல்லோருக்கும் ஆங்கிலம் தெரியாது அல்லவா,,??பல்லிக்கும் தான்,
  //நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? நான் சொல்வது பொய் என்றா ? நீங்கள் வேண்டுமானால் இது பற்றி முன்னாள் ஏPற்ள்f தமயந்தியிடமும், //
  எந்த தமயந்தி இந்த போட்டோஎல்லாம் எடுப்பாரே அவரா?? அவராயின் அவருடன் இதெல்லாம் இலக்கிய சந்திப்பில் பேசி புழிச்சு போச்சு, அல்லது பெண் தமயந்தியா?? அந்த விளையாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை, அவர் கவிதை கச்சேரியென படுபிஸி,

  //சடலங்களை புதைத்தவர்கள் பிளாட் இயக்கத்தினர். //இல்லையென நானும் சொல்லவில்லை, ஆனால் உங்கள் பெரும்தன்மையே இங்கு பிரச்சனை?
  //இன்று தீவகத்தில் மக்கள் ஊருக்கு திரும்பிய பின் குறிப்பிட்ட சில கிராமங்களின் சில பகுதிகளில் குடியிருக்க முடியாமல் உள்ளது. காரணம் அங்கு 1994 இல் தீவகதார் அகதிகளாக புலம் பெயர்ந்த பின் சடலங்கள் புதைகப்படிருப்பதனாலாகும். ஆனால் இது பற்றி இன்று அந்த மக்களால் கதைக்க முடியாமல் உள்ளது.//
  இதை தோழரிடம் சொல்லுவோம், அவரது தனி மைல் முகவரி மற்றும் கைபேசி மூலம்; நீங்கள வாழும் நாட்டில் தோழரின் அங்கத்தவர்கள் இல்லையா?? அது சரி தாங்கள் தீவுக்கு போய் எந்தனை வருடம்??

  //இது குறித்து திவாகரன் எனும் சிவா சின்னப்பொடி எழுதும் காரணங்கள் தவறானவை. //
  இது மட்டுமா தவறு ?? இன்னும் பல;

  //பீ முகாமில் பயிற்றுனராக இருந்த குரு (இவர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றி அதில் இருந்து தப்பிவந்தவர்) உயிருடன் இருக்கின்றாரா//
  இவர் எழுதுமட்டுவாளை சேர்ந்தவர் ;இவருக்கு சிங்களம் நல்லாக தெரியும் என்பதால் 1984ல் கொழும்புக்கு வேலை செய்ய சென்ற நவாஸ் குழுவுடன் சென்று விட்டார், இவர் உயிருடன் இருக்கவே வாய்ப்புகள் அதிகம்; காரனம் மனிஸ்சன் புதிசாலி;

  //அனாமதேயமாகவாவது இங்கு யாரவது தகவல் எழுதினால் பயனாக இருக்காதா ????//
  கண்டிப்பாக பயனளிக்கும் அதில் சந்தேகமே இல்லை; அதை தாங்களே தொடங்குங்கள்; உங்களுடன் வலது கரமாய் பல்லி பயணிப்பேன், பல்லி மட்டுமல்ல பலர் உங்களை பின் தொடர்வார்,பல்லி உங்கள் எழுத்தை வெறுக்கவில்லை தவறான தகவலையே சுட்டி காட்டினேன்; அது தவறாயின் மன்னிக்கவும் நட்புடன் பல்லி;

  Reply
 • vanavil
  vanavil

  // இந்த முடிவை எடுத்த முக்கியஸ்தர்கள் :- மாணிக்கதாசன் , லண்டன் கிருஸ்ணன் , தராக்கி சிவராம் , மாறன் ,ஆச்சிராஜன் , வெற்றி , சித்தார்த்தன், மதன், கே.எல்.ராஜன், சாம் முருகேசு ……… (இன்னும் சிலர்)//

  காண்டீபன் (தவற விட்டு இருந்தேன்)

  // வள்ளுவன் ஒரு அரபு நாட்டில் வாழ்ந்து பின் ஜேர்மன் வந்ததாக ஜெயகர்ணன் என்பவர் சொன்னார்,//

  வள்ளுவன் தற்போது கனடாவில் ஒரு கார் வாஷ் பிளேஸ் ஒன்றை நடத்துகிறார். வெகு மொட்டாக அவரை பார்க்க முடிந்தது. அடையாளம் கண்ட போது முகம் கறுத்துப் போனது.

  Reply
 • nila
  nila

  கடந்த கழக வரலாற்றுப் பகுதிகளில் ஆரம்ப கால வவுனியா காந்தீய பண்ணை அமைப்பாளரில் ஒருவரும் சந்ததியாரின் நெருங்கிய சகாவுமானதும் கழக மத்திய குழு உறுப்பினருமான ஜக்கடையா என்றழைக்கப்படும் ஆதவன் அவர்களை குறிப்பிட தவறிவிட்டேன். அதனை இங்கு பதிவு செய்கின்றேன். இதற்கு முன் குறிப்பில் சோழனின் கொலையை குறிப்பிட்டதின் அடிப்படையில் பழைய தோழர் ஒருவரின் நினைவு படுத்தலில் இது பதிவாகின்றது. இவரை எனக்கு சந்தியார் மூலம் நீண்ட காலம் முன்பே ஜக்கடையா என்ற நபராகத்தான் தெரியும். ஆதவன் என்ற பெயர் எனக்கு பரிச்சயமாகவில்லை. தற்போது இவர் பற்றி தகவல் திரட்டியதில் இவர்தான் அவர் என்னும் போது இன்று மிக கலசமடைந்தேன். ஆரம்பத்திலிருந்து சந்ததியாருடன் பணியாற்றியதன் நிமித்தம் பின்தளபிரச்சனைகளில் முரண்பட்டு வெளியேறி ராஜனுடன் இணைந்த நிலையில் இந்திய அமைதிப்படையுடன் ஈ.என்.எல்.எப்.டிமற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் இலங்கைக்கு வந்த நிலையில் ராஜனுடன் இணைந்து எல்லா மாவட்டங்களிலும் அலுவலகங்கள் அமைக்கும் வேலை திட்டத்தை பொறுப்பேற்றார்.

  இதன் அடிப்படையில் தனது ஊரான தான் மக்களுடன் சேவை செய்த வவுனியாவில் அலுவலக வேலையை ஆரம்பிக்க ஆவன செய்தார். இதற்கு உதவியாக கிளிநொச்சி தீபன்(லண்டனில் இருப்பவர்) பழைய வவுனியா காந்தீய பண்ணை உறுப்பினரான கிளிநொச்சி அமைப்பு கண்ணன் ஆகியோரும் இருந்தனர். ஆதவன் கடத்தப்பட்ட முதல்நாள் இந்த கண்ணன் வவுனியா வீதியில் வைத்து மாணிக்கம் தாசனின் அடியாட்களால் கடத்தப்பட முயற்சித்த நிலையில் கழக பி.எல.ஓ பாபு ( இவர் திருமலையை சேர்ந்தவர் மிக நேர்மையானவர் .கநதசாமியை மகாநாட்டின் அடிப்படையில் புலனாய்வு பிரிவிலிருந்து விலக்கிய பின் இவர் கழக புலனாய்வு பொறுப்பை பொறுப்பெடுத்தார். இவருக்கு உதவியாளராக பி.எல்.ஒ பவன்(இவர் கருணாவினால் மட்டகளப்பில் நயவங்சகமாக சாப்பிடக்கூப்பிட்டு கொலைசெய்யப்பட்ட வாசுதேவா- கண்ணன்-ஆனந்தன்-சுபாஸ் உட்பட்ட 30க்கு மேற்பட்ட கழக தோழர்களை மையின்ஸ் வைத்து படுகோரமாக கொலை செய்த சம்பவத்தில் தப்பியுள்ள ஒரே ஒரு சாட்சி) வீதியில் தற்செயலாக வந்ததில் இக்கடத்தல் தடுக்கப்பட்டு இக்கண்ணன் காப்பாற்றப்பட்டுள்ளார். இச் சம்பவம் ராஜனுக்கு உடன் தெரிவிக்கப்பட்டு உடன் அக்க்ஷன் எடுக்க கேட்கப்பட்டதில் ராஜனால் பதிலாக ‘நாம் கழகத்திலிருந்து பிரிந்திருந்தாலும் அங்கிருப்பதெல்லாம் நாம் வளர்த்த எமது சகோதரர்கள் எனவே எந்தப்பிரச்சனைக்கும் போகவேண்டாம் அமைதியாக இருங்கள் என்று உறுதியாக கூறியதில் ராஜனின் பிரிவினர் மெளனமாகினர். ஆனால் அடுத்த நாள் வவுனியா அந்தோனியார் கோவிலடியால் சைக்கிளில் ஆதவன் போய்க்கொண்டிருக்கும் போது வேனில் வந்த தாசன் குறுப்பினர் இவரை இழுத்து போட்டுக் கொண்டு சென்று கட்டி வைத்து முரண்பட்டு பிரச்சனைபட்ட வேளையில் மாணிக்கம் தாசனால் சித்திரவதை செய்து அன்றே கொலை செய்யப்பட்டார்.

  இதே அருகிய நாட்களில் காளித்தையா என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் (இவரும் திருகோணமலையை சேர்ந்தவர். பழைய கழக உறுப்பினர்.பி.எல்.ஒ பயிற்சியாளர் கழகத்தை கடைசிமட்டும் திருத்தக் கஸ்டப்பட்டவர். பின் ராஜனுடன் சேர்ந்து மிகத்திறமையாக செயற்பட்டவர்) இந்தியா அரசால் இவர்களுக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புக்கும் கொடுத்த பணத்தை (ஈ.பி.ஆர்.எல்.எப் தோழர் ஒருவரும் இவருடன் வந்து கொலை செய்யப்பட்டார்) மட்டக்களப்பு திருமலை காட்டுப்பாதையில வைத்துகழக உறுப்பினரான ராசிக் குறூப் மோகன் குழுவினரால் சுற்றிவளைக்கப்பட்டு பெரும் தொகையான பணமும் பறிக்கப்பட்டு காட்டிற்குள்ளேயே இருவரும் கொலைசெய்யப்பட்டு பிரேதமாக துர்க்கியெறியப்பட்டார்.

  மேலும் 82 கழகத்தின் பண்ணைகளின் உறுப்பினர்களான கிளிநொச்சி முல்லைத்தீவு நந்தன்- கோன் என்ற இணைபிரியாத நண்பர்கள் 83 க்கு பின் பிள்தள பயிற்சி முடித்த பின் கிளிநொச்சி ராணுவப்பொறுப்பாளராக நந்தனும்- முல்லைத்தீவு ராணுவப்பொறுப்பாளராக கோனும் கழகத்தில் எந்த உடைவு பிரச்சனை வந்தாலும் கழகத்தை விட்டு கடைசிவரை விலகாமல் செயற்பட்டனர். தொடர்நது வன்னிக்குள்ளே குடும்பத்துடன் வாழ்ந்த கோன் புலிகளின் நிர்வாகத்தில் அவர்களின் கிராம நிர்வாக வேலைத்திட்டத்தில் மேலோட்ட வேலைகளில் ஈடுபடுத்தியுள்ளனர். கோனும் வேறு தப்பியோட விரும்பாமல் சில உதவிகள் செய்துள்ளார். பின் சில ஆண்டுகள் முன் -மன்னார் பக்கத்தில் தனது மனைவி ஒரு வளர்த்த மகளுடன் வந்து வாழ்ந்துள்ளார் இதனை நண்பனான நந்தன் (இவர் இப்போதும் கழகத்தில் உள்ளார் கடைசியாக நடந்த நகரசபைத் தேர்தலிலும் உறுப்பினராக பங்குபற்றியுள்ளார்)உட்பட சில கழக தோழர் விசாரித்ததில் தான் எனியும்ஒன்றிலும் இணைய விரும்பவில்லை ஓதுங்கியிருக்கின்றேன் என்று கூறியும் நம்பவில்லை பின் கொலை மிரட்டல் விட்ட நிலையிலும் தான் வெளிநாடெங்கிலும் போகின்றேன் அதற்கான ஒழுங்குகளுக்காக ஒருமாத கால அவகாசம் கேட்டுள்ளார். ஆனால் சிலநாட்களில்கழகத்தினர் வீட்டிற்குள் வந்து மனைவி -பிள்ளையை வீட்டற்குள் பூட்டிவிட்டு வெளியே கோனை கயிற்றால் சுற்றி கட்டிவிட்டு கோன் முழங்காவிலிருந்து தான் வெளிநாட்டிற்கு விரைவில் போக இருப்பதாகச் சொல்லி கதற கதற சுட்டு விட்டுச் சென்றனர். கொலைகாரர் போனபின் மனைவியின் அலறலில் அயலவர் வந்து உதவினர். கோன் முழங்காலிலிருந்து கை கும்பிட்டபடியே கொலைசெய்யப்பட்ட காட்சியிலிருந்து இன்னும் அந்தக் குடும்பம் மீளவில்லை .தற்போது அவர் மனைவியும் 13 வயது மகளும் பிழைப்பு தேடி இந்தியா சென்று வாழ்கின்றனர். மனைவி தையல் வேலை செய்து பிழைப்பு நடத்துகின்றூர் தமக்கு பிள்ளையில்லாததால் 2வயதிலிருந்து வளர்த்த பிள்ளை தந்தையில் உயிரே வைத்திருந்தார் .இனறு தந்தையும் இல்லை உறவும் இல்லை இது தான் விடுதலையின் விளைநிலமா?

  Reply
 • nila
  nila

  வானவில்!உங்களின் தரவுகள் -வரலாற்றுப்பதிவுகள் இந்தக் கருத்துத் தளத்திற்கு இன்னொரு வரப்பிரசாதம் தொடருங்கள் என்றோ ஒரு நாள் சொந்த முகத்துடன் சந்திப்போம்…
  மேலும் வெங்கட் பெங்களூரிலிருந்து சென்னையுடாக ஓடி அன்று கிழக்கில் தான் நின்றார். நின்றதும் ஜி.ரி.ஆர் என்ற பக்தன் கொம்பனியுடன்தான். இந்த பக்தன் 1985ல் மட்டக்களப்பில் தன்னிச்சையாக இயங்கிய ராணுவப் பொறுப்பாளர். செல்வன்- அகிலன் கொலையின் செயற்பாட்டாளர். இந்த பக்தனின் வலது கை தான் இந்த வெங்கட். ஈஸ்வரன் கிழக்கு மாகாண அனைத்து பொறுப்பாளராக இருந்தநேரத்தில் செல்வனுக்கும் இவருக்குமான பதவிப்போட்டியின் விளைவே இக்கொலை. இதற்கு முக்கிய சூத்திரதாரி சிவராம். இதற்கான பூடகமான கடிதத்தை ஈஸ்வரன் எழுதி சிவராம் மூலம் பக்தனுக்கு கொடுத்தனுப்ப பக்தனும் வெங்கட்டும் வயல்வெளியில் வைத்து செல்வனையும் அவரின் உதவியாளரும் நண்பருமான அகிலனையும் கொலை செய்து புதைத்தார்கள். ஆனால் திட்டமிட்டு பழியை பின்தளத்தில் போட்டார்கள் .ஒரே கல்லில் இரு மாங்காய் என்பது இதுதான்.
  வெங்கட் பிரான்ஸில் அல்ஜிரியன் பெண்ணை திருமணம் செய்துகொண்டு சகோதரர்களெல்லாமாக 20லட்சம் ஈரோவுக்கு டிஸனி லாண்ட்டிற்கருகில் ரெஸடுரண்ட் வாங்கி பெரும் வசதியோடு வாழ்கின்றனர். நாங்கள் இயக்கத்தில் சின்னப்பிள்ளைகள் எமக்கொன்றும் தெரியாது சொன்னதைச் செய்தோம் என்று சொல்லி தப்பித்து வாழ்கின்றனர். முள்ளிவாய்க்காலுக்கு முற்பட்ட புலிகளுக்கு தாராளமான பண உதவிகளும் செய்து புலி அரசியலையும் செய்து எல்லா வசதிகளோடும் வாழ்கின்றனர். இவற்றைக் கேட்கவாவது கந்தர் இருந்திருக்க வேண்டும் .ஆனால் எங்கோ எப்போ இவர்கள கணக்குக் கொடுக்க வைக்கப்படுவார். செல்வன் அகிலனின் குடும்ப கண்ணீர்கள் ஏக்க பெருமூச்சுக்கள் இவர்களை சும்மா விடாது.

  Reply
 • சுகந்தன்
  சுகந்தன்

  நிலா –
  செல்வன் அகிலன் பற்றி நீங்கள் தரும் தகவல் தான் உண்மையானது.செல்வனும் அகிலனும் இந்தியாவுக்கு பின்தளத்துக்கு சென்றிவிட்டார்கள் என்று பொய்யை தளத்திலிருந்த எங்களுக்கு பதிலாய் தந்தார்கள்.இந்தப் பதிலில்ல நாங்கள் பல பேர்கள் கொதிப்படைற்தோம். அவவேளைகளில் சிவராம் ஈஸ்வரன் பொன்னுத்துரை அசோக் போன்றோர் எங்களுக்கெல்லாம் சுத்தினார்கள். கொலை திருகோணமலையிலேயே நடந்தது என்பரது பரவலாக அன்றே பேசப்பட்ட விடயம்.

  Reply
 • vanavil
  vanavil

  நிலாவின் பதிவுகள் பல உண்மைகளை வெளிக் கொண்டு வருகிறது. நிலாவை தொடர்பு கொள்ள முயன்றேன். முடிந்தால் மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

  பதிவாகும் விடயங்கள் எதிர்கால சந்ததிக்கு எமது போராட்டத்தின் வடுக்களாக மட்டுமல்ல; எம்மவரும் எம்மை அழித்தனர் எனும் உண்மை சொல்லப்பட வேண்டும். இன்னும் மக்களை ஏமாற்றும் அனைவரையும் எடைபோட இப் பதிவுகள் வழி செய்யும். இவற்றை விளங்கிக் கொள்ளாதவர்கள் குறித்து வருந்த மட்டுமே எம்மால் முடியும். இதில் அத்தனை இயக்கங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இங்கே யார் நல்லவர்கள் என்று யாரும் உரிமை கோர முடியாது. இதுவே உண்மை.

  Reply
 • palli
  palli

  //காண்டீபன் (தவற விட்டு இருந்தேன்)//
  மிக முக்கியமான கொலையின் நாயகன் இதில் சேர்க்க படவில்லையே; இந்த கொழும்பில் உள்ள பாரிஸ் ரவல்ஸ்(தவம்) இவர் எப்படி மாணிக்கம்தாஸனால் துன்புறுதபட்டார்; அதுலத் முதலியின் கொலையில் தாஸன் பங்கு என்ன இப்படி இன்னும் பலசமாசாரங்கள் இருக்கே, அதுகளையும் சொல்லுங்கப்பா,

  //கொலை திருகோணமலையிலேயே நடந்தது என்பரது பரவலாக அன்றே பேசப்பட்ட விடயம்.//
  உன்மைதான் பரவலாய் பேசபடும் விடயம் எதுவும் அன்று செயல்குழுவுக்கு தெரிவதில்லைதானே; அவர்கள் அவர்களுக்குள் புடுங்கு படுவதால் இவகளை பார்க்க நேரம் ஏது; கேட்டு பாருங்க சி சி யில் நானும் ஒன்று என ஜந்தறிவாய் சொல்வார்கள்.
  :://ஆதவன் என்ற பெயர் எனக்கு பரிச்சயமாகவில்லை//
  இந்த மனுசனை தெரியாத வவுனியா மக்கள் இருக்க முடியாது; ஆண்டபரம்பரை மீண்டும் ஒருமுறை ஆளவேண்டும் என சொல்லியே அரசியல் பேச தொடங்குவார்; இவர் மல்யுத்த வீரன் போல் தோற்றம் கொண்டாலும் குழந்தை மனம் அதே சிரிப்பு அனைத்தையும் விட மிக எழிமை; ஆனால் அவரது குழந்தை பிள்ளை தனமே அவருக்கு ஜமனாகி விட்டது; வவுனியாவில் இவரது செல்வாக்கு அதிகமாய் இருந்ததால் இவர் களகத்துக்கு எதிராய் செயல்பட்டு