‘தமிழ் மக்களுடைய இன்றைய நிலைக்கு இந்தியாவும் ஒரு காரணம். ஆனால் இந்தியா மட்டும் காரணம் அல்ல’ லண்டன் கூட்டத்தில் இந்திய ராஜதந்திரி கலாநிதி சந்திரசேகரன்

Audience”தமிழ் மக்களுடைய இன்றைய நிலைக்கு இந்தியாவும் ஒரு காரணம். ஆனால் இந்தியா மட்டும் காரணம் அல்ல” என இந்திய ராஜதந்திரி கலாநிதி சந்திரசேகரன் லண்டனில் நேற்று (நவம்பர் 10, 2010) நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ”இலங்கைக்கு இந்திய இராணுவம் அனுப்பப்பட்டது துரதிஸ்டமானது. ஒப்பந்தத்தில் இந்தியா தனது நலன்களை முன்னிலைப்படுத்தியது தவறு. ஒப்பந்தம் இலங்கை அரசுக்கும் தமிழ் தரப்பிற்கும் இடையேயே மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும்” என்று கலாநிதி சந்திரசேகரன் இந்தியா விட்ட தவறுகளைச் சுட்டிக்காட்டினார்.

‘இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையின் பரிமாணம்’ என்ற தலைப்பில் கலாநிதி சந்திரசேகரன் பிரித்தானியாவில் இயங்கும் இலங்கை அமைப்புகளின் பிரதிநிதிகளின் மத்தியில் சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். தேசம்நெற் – ASATiC இணைந்து ஏற்பாடு செய்த இக்கூட்டத்திற்கு ASATiC செயலாளர் ரவி சுந்தரலிங்கம் தலைமை தாங்கினார்.

”கடந்த காலங்களில் இந்தியாவில் உள்ள வெவ்வேறு ஏஜென்சிகள் தமிழ் இயக்கங்களுக்கு ஆயுதம் வழங்கியது பயிற்சி அளித்தது” எனத் தெரிவித்த கலாநிதி சந்திரசேகரன் ”இந்தியா ஒருபோதும் பிரிவினையை ஏற்றுக்கொள்ளவில்லை” எனவும் தெரிவித்தார். ”புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இன்னமும் பலமாக உள்ளனர். அவர்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டால் மீண்டும் ஒரு போராட்டத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்” என எச்சரித்த கலாநிதி சந்திரசேகரன், இலங்கை அரசு அரசியல் தீர்வை முன்வைப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

Audienceபிரித்தானியாவில் இயங்கும் தமிழ், முஸ்லீம், சிங்கள அமைப்புகளின் பிரதிநிதிகளும் இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகப் பிரதிநிதியும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் தயாபரன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். தமிழ் அமைப்புகளில் அரவிந்தன் – தமிழர் விடுதலைக் கூட்டணி, சம்பந்தன் – ரெலோ, தயா – புளொட், கிருஸ்ணன் – ரிஎம்விபி, நேசன் – ஈரோஸ் (ஒரு பிரிவு), கனெக்ஸ் – ஈரோஸ், ஆர் ஜெயதேவன் – ஏபிஆர்எஸ்எல், ராம்ராஜ் – ரிபிசி வானொலி, நஜா மொகமட் – ஸ்ரீலங்கா இஸ்லாமிக் போறம், முன்னாள் ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் ஜனா, ரான்ஸ் குளோபல் நிர்மலன், நேர்டோ வாசு ஆகிய அமைப்பினரும் பன்முகப்பட்ட அரசியல் ஆர்வலர்களும் இக்கலந்துரையாடல்களில் பங்கேற்றுக் கொண்டனர்.

Ravi_Sundaralingam_and_Chandrasekaran_Drஇலங்கையில் உயிர்நீத்த அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்குமான மௌன அஞ்சலியைத் தொடர்ந்து ரவி சுந்தரலிங்கம் தனது தலைமை உரையை வழங்கினார். இலங்கை மீதான இந்தியாவின் ஈடுபாட்டினையும் இந்தியாவின் பொறுப்புணர்வினையும் மேலோட்டமாகச் சுட்டிக்காட்டி கலாநிதி சந்திரசேகரனுடைய சிறப்புரைக்கு ஆரம்பப் புள்ளிகளை இட்டுச் சென்றார் ரவி சுந்தரலிங்கம். அவர் தனது உரையில்,

”தமிழீழ விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்தது. அதில் தமிழ் மக்கள் பாரிய இழப்பைச் சந்தித்தனர். முள்ளிவாய்க்கால் முடிவுக்கு இந்தியாவுக்கும் பொறுப்புள்ளது. அன்று தமிழர் விடுதலைக் கூட்டணியினர் பங்களாதேஸ் பிரிக்கப்பட்டது போன்று தமிழீழம் பிரித்துக் கொடுக்கப்படும் எனக் கூறிவந்தனர். ஆனால் இந்திய அரசு என்பது ஒரு போதும் அரசுக்கு எதிரான அரசு இல்லை என்பதனை இடதுசாரிக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட நாம் நம்பவில்லை.

இந்தியா ஒரு போதும் பிரிவினைவாதத்தை ஏற்றுக்கொள்ளாது என்பதனை அப்போது இலங்கை விடயத்தில் நெருக்கமாக ஈடுபட்டிருந்த கலாநிதி சந்திரசேகரனும் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டி இருந்தார். அப்படி இருக்க, இந்தியா துரோகம் இழைத்துவிட்டதாக கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இலங்கையின் கட்டமைப்பிற்குள் போராடவும் தீர்வை எட்டவுமே இந்தியா தீர்க்கமாக இருந்தது. ஆனால் தமிழ் தலைமைகள் அதனைத் தவறாகப் புரிந்து, இந்த நிலைக்கு வந்துள்ளோம். நாங்கள் மனிதர்களாக அனைத்து சமூகத்தவர்களும் இணைந்தே செயற்பட வேண்டும். இதனை விளங்கிக் கொள்ளாததனால் தமிழர்கள் மிகப் பெரும் விலையைக் கொடுத்துள்ளனர்.

இந்தியா தமிழர்களுக்கு சாதகமாகச் செயற்பட வேண்டும் என்று கோருவதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. தமிழர்களானால் என்ன, சிங்களவர்களானால் என்ன இரு சமூகங்களுமே இந்தியாவில் இருந்தே வந்தனர். இரு சமூகங்களுக்கும் இந்திய வரலாற்றுத் தொடர்பு உள்ளது. தமிழ்நாட்டிலும் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதனால் மட்டும் இந்தியா தமிழர்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. சிங்களவர்களும் இந்தியாவுக்கு நெருக்கமாக இருக்க முடியும்.

இன்று சிங்கள அரசாங்கம் தமிழ் மக்களை வெற்றிகொண்டுள்ளனர் என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்கள் இலங்கை அரசுக்கு ஏதிராக 30 ஆண்டுகள் போரிட்டு உள்ளனர். இன்று அவர்கள் தோற்கடிக்கப்பட்டு உள்ளனர் என்பதே உண்மை. ஆனால் வெற்றி பெற்ற சிங்கள அரசு எவ்வளவு தூரம் நியாயமானதாகவும் பெருந்தன்மையாகவும் உள்ளது என்பதைப் பொறுத்தே இலங்கையின் எதிர்காலம் தங்கி உள்ளது” என ரவி சுந்தரலிங்கம் தன் தலைமை உரையை முடித்துக் கொண்டார்.

Chandraseharan_Drஅதனைத் தொடர்ந்து நிகழ்வின் பிரதம பேச்சாளர் கலாநிதி சந்திரசேகரன், ‘இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையின் பரிமாணம்’ என்ற தலைப்பில் உரையாற்றியார். அதனைத் தொடர்ந்து இரு மணிநேரத்திற்கும் மேலாக இடம்பெற்ற கேள்வி நேரத்தில் பங்கெடுத்துக் கொண்டு இலங்கை – இந்திய உறவு, இந்திய – சீன உறவு, இந்திய – சர்வதேச உறவு, இலங்கை – சீன உறவு, இலங்கை – சர்வதேச உறவு எனச் சிக்கலான அரசியல் சூழல் பற்றி முன்வைக்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். 1980 முதல் 1991 வரை இந்திய அரச கட்டமைப்பில் அங்கம் வகித்த கலாநிதி சந்திரசேகரன் தமிழீழ விடுதலைப் போராட்டத் தலைவர்கள் அனைவரையும் தான் சந்தித்ததாகத் தெரிவித்தார். இச்சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் விடுதலை இயக்கங்களைச் சேர்ந்த பலர் கலாநிதி சந்திரசேகரனை அப்போது தாங்கள் சந்தித்துக் கொண்டதை குறிப்பிட்டுக் காட்டினர்.

கலாநிதி சந்திரசேகரனின் உரையிலும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கேள்வி நேரத்திலும் அவர் குறிப்பிட்ட விடயங்களின் சாரம்சம்:

”தமிழர்களுடைய பிரச்சினைக்கு இலங்கையின் ஒற்றையாட்சிக்கு உள்ளேயே தீர்வு என்பதை இந்தியா எப்போதும் தெளிவாகவே கூறி வந்தது. இதனை தமிழ் தலைவர்களிடமும் இந்தியா தெரிவித்து இருந்தது. இங்கு என்னைத் தெரிந்தவர்கள் இருக்கிறீர்கள், எப்போதாவது நான் இதற்கு மாறாகக் கூறி இருந்தால் நீங்கள் என்னைக் கேளுங்கள்.

1982ல் பாண்டி பஜாரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சுட்டு சம்பவம். முதல் இலங்கை தொடர்பான இந்திய வெளிவிவகாரக் கொள்கை பல்வேறு பிரிமாணங்களைக் கொண்டு உள்ளது. ஆரம்பத்தில் இந்தியா கூடுதலாகத் தலையிடவில்லை. உள்நாட்டு விடயமாகவே கருதியது.   

1981ல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டமை. 1982ல் இடம்பெற்ற சிறு சிறு கலவரங்கள். ஆனால் 1983ல் இடம்பெற்ற கலவரத்தை அந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை. 1983 கலவரம் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தமிழர்களையும் பாதித்தது.

அதனைத் தொடர்ந்து 1983 யூலைக்குப் பின் இலங்கை இதனை வெளியே கொண்டு சென்றது. திருகோணமலைத் துறைமுகம், வொய்ஸ் ஒப் அமெரிக்கா, இஸரேல் என இலங்கையில் வெளித்தலையீடுகள் தலை காட்டியது. அதனால் இந்தியா இலங்கை விடயத்தில் சற்று கடும்போக்கைக் கடைப்பிடித்தது. அதுவரை தமிழ் நாட்டில் கூட இலங்கை அரசுக்கு சார்பான நிலையே இருந்தது. இந்தியாவில் கைது செய்யப்பட்ட குட்டிமணி இலங்கையிடம் கையளிக்கப்பட்டார். இலங்கை மீதான இந்தியாவின் கடும் போக்கு அது இலங்கை மீது ஆளுமை செலுத்த வேண்டும் என்ற நோக்கிலோ அல்லது இலங்கையை இந்தியாவின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கிலோ செய்யப்படவில்லை.

1983 யூலைக் கலவரம் தமிழர்களுடைய பிரச்சினையை இலங்கை அரசு இராணுவ ரீதியாக தீர்க்க முற்பட்டதற்கான ஆரம்பமாகவே இந்தியா பார்த்தது. அதனால் தமிழர் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு அல்ல அரசியல் தீர்வு என்பதை வலியுறுத்துவதே இந்தியாவின் நோக்கமாக இருந்தது.

ஆனால் இந்திய அமைதிகாக்கும் படையின் தலையீடு துரதிஸ்டமானது. முழுமையுமே தவறுதலாகப் புரிந்து கொள்ளப்பட்டது. இந்தியா இராணுவ ரீதியில் தலையிட்டு இருக்கக் கூடாது. மோசமான நிகழ்வுகள் நடைபெற்று விட்டது.

மத்தியஸ்தம் வகிக்க வந்த இந்தியா தனது நலன்களை முன்னிலைப்படுத்தியது தவறு. ஒப்பந்தம் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இலங்கை அரசுக்கும் தமிழ் தரப்பினர்க்கும் இடையில் இடம்பெற்று இருக்க வேண்டுமேயொழிய, இலங்கை அரசுக்கும் – இந்திய அரசுக்கும் இடையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கக் கூடாது.

இந்த ஒப்பந்தம் பற்றி அப்போது என்னுடன் ஆலோசிக்கப்படவில்லை. இந்த ஒப்பந்தம் பற்றி நான் அறிந்திருக்கவும் இல்லை. இதில் எல்ரிரிஈ யை மட்டும் முன்னிலைப்படுத்தியதும் தவறு. அவர்கள் மட்டும் தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இல்லை.

ஆனால் இவ்வளவு நிகழ்வுகளுக்குபி பின் அண்மையில் சுரேஸ் பிரேமச்சந்திரன் ரிஎன்ஏ தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் எனத் தெரிவித்து இருந்தார். அதனை யாரும் மறுக்கக் கூட இல்லை. (ரவி சுந்தரலிங்கம் குறுக்கிட்டு அதனைக் கண்டித்து எழுதியதைச் சுட்டிக்காட்டினார்.) இவ்வாறான சிந்தனை மாற வேண்டும்.

இந்தியா இலங்கையை விட்டு வெளியேறும் போது எல்ரிரிஈ யை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தது. தவறுகள் எல்லாத் தரப்பிலும் உள்ளது. இந்தியாவை மட்டும் குறைகூற முடியாது. தமிழ் தலைவர்களுக்கும் பொறுப்பு உண்டு.

ஆனால் ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின் பென்டூலம் மற்றப் பக்கத்திற்கு ஆடத் தொடங்கி விட்டது.

சீனா பெரு வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. சீனா அளவிற்கு இல்லாவிட்டாலும் இந்தியாவின் பொருளாதாரமும் 8 வீதம் முதல் 9 வீதம் வளர்ச்சி அடைகிறது. இந்தியா விரிவடைகின்றது. ஏனைய நாடுகளுக்கும் இந்தியா வாயில்களைத் திறந்து விடுகின்றது. இந்தியாவின் வளர்ச்சி அதன் அயல் நாடுகளுக்கும் சாதகமானதாகவே அமையும். ஏனெனில் இந்தியாவின் பாதுகாப்பு அதன் அயல்நாடுகளிலும் தங்கி உள்ளது. அதனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் பயனை அயல்நாடுகளும் அனுபவிக்க வேணடும். அயல்நாடுகள் சுயாதீனமாகவே இயங்கும். அயல்நாடுகளில் வெளியார் வந்து பொருளாதார மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அதே சமயம் இதற்கு சில எல்லைகளும் உண்டு. இந்தியாவின் அயல்நாட்டில் வெளியார் ஒரு இராணுவத்தளம் அமைப்பதை இந்தியா அனுமதிக்காது. ஆகவே அயல்நாடுகளின் சுயாதீனத்தில் ஒரு சமநிலை பேணப்படும். 

இதற்கு நேபாள் சிறந்த உதாரணம். ஒரு நிலைக்கு மேல் இந்தியாவை மீறிச் செல்ல முடியவில்லை.

இலங்கையை எடுத்துக் கொண்டால் இந்தியாவின் உதவி வடக்கு – கிழக்குக்கு மட்டும் தான் இருக்க வேண்டியதில்லை. இலங்கை முழுவதற்குமே உதவியைப் பகிரவே விரும்புகிறது. வடக்கு – கிழக்கு இப்போது மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதால் தற்போது வடக்கு – கிழக்கிற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகின்றது. தெற்கிலும் கூட மிகவும் கஸ்டமான நிலையில் வாழும் சிங்கள மக்கள் உள்ளனர்.

மீள் உறவு, மீள் கட்டுமானம், மக்களைப் பலப்படுத்தல், அரசியல் தீர்வு என்று நான்கு விடயங்கள் முக்கியமானதாக உள்ளது. இதில் அரசாங்கம் மீள் கட்டுமானத்திற்கு முன்னுரிமை கொடுக்கின்றது. நீங்கள் அரசியல் தீர்வுக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள். இதில் எதற்கு முன்னுரிமை என்பதில் மாறுபட்ட அபிப்பிராயங்கள் உள்ளது. அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஹில்லரி கிளிங்டன் மீள்கட்டுமானமும் அரசியல் தீர்வும் சமாந்தரமாகச் செல்ல வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். இது விடயத்தில் இலங்கை அரசு அரசியல் தீர்வைக் கைவிட முடியாது. அதற்கு சிறிது காலம் எடுக்கலாம். அதனால் தமிழர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும்.

இலங்கை விவகாரத்தை தமிழ்நாடு அரசே தீர்மானிப்பதாகக் கருதப்படுகிறது. அது அப்படியல்ல. அதற்காக தமிழ்நாட்டு அரசுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று நான் சொல்லவில்லை. இந்தியாவில் உள்ளது ஒரு கூட்டரசாங்கம். அதில் மாநிலக் கட்சிகளும் பங்கேற்றுள்ளன. ஆனால் அவர்களுடைய மத்திய அரசின் முடிவுகளில் மாநில அரசுக்கு மட்டுப்படுத்தப்பட்ட குரலே உள்ளது. அது மட்டுமல்ல தமிழ்நாடு இந்தியாவிலேயே நான்காவது பெரிய வளர்ச்சியடைந்துவரும் மாநிலம். அதன் முக்கிய கவனம் தகவற் தொழில்நுட்பத்திலும் தொழில் உருவாக்கத்திலேமே அதிகம் உள்ளது. இலங்கை விவகாரம் தமிழ்நாட்டுக்கு முக்கியமான ஒரு விடயமல்ல” என கலாநிதி சந்திரசேகரன் தனது உரையில் குறிப்பிட்டார்.

Audienceஅதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நீண்ட கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் குறிப்பிட்ட விடயங்கள்,

”தற்போது இந்தியாவில் உள்ள அமெரிக்க ஜனாதிபதி ஓபாமாவோ, சீனாவில் உள்ள டேவிட் கமரூனோ இலங்கை விவகாரம் பற்றிப் பேசினால் நல்லது. ஆனால் அவர்கள் அது பற்றி பேசுவார்கள் என நான் நினைக்கவில்லை.

இந்தியா தொடர்ந்தும் இலங்கை அரசை அரசியல் தீர்வுக்கு, அதிகாரப் பரவலாக்கத்திற்கு வற்புறுத்தி வருகின்றது. அது 13 திருத்தச் சட்டம்+ + + என்பதாகவே உள்ளது. வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது தமிழ் மக்களிடையேயே பெருமளவில் பேசப்படவில்லை. இப்போதுள்ள நிலையில் அது சாத்தியமானதாக இல்லை.

இந்தியா மீண்டும் தமிழ் தேசியத்தை ஆயுதம் ஏந்த வைக்கும் நிலை இப்போது இல்லை. தொழில்நுட்பம், விஞ்ஞானம் மிகவும் மாற்றமடைந்துவிட்டது. அன்று இருந்த உலகம் இன்று இல்லை. இந்தியா ஒரு போதும் தமிழ் இயக்கங்களுக்கு அரசியல் விரிவுரை எடுக்கவில்லை. இந்தியா தமிழீழம் பெற்றுத் தரும் எனவும் கூறவில்லை. இந்த இயக்கங்களின் கைகளில் இருந்த ஆயுதங்கள் ஆபத்தானதாகிப் போன போது, இந்தியா இலங்கை இராணுவத்திற்கு உதவி செய்தது.

நடந்த தவறுகளுக்கு எல்லோருக்கும் பொறுப்பு இருக்கின்றது. உங்களுக்கும் பொறுப்பு இருக்கின்றது. மாத்தையாவுக்கு இந்திய புலனாய்வுத்துறையுடன் தொடர்பு இருப்பதாகக் கூறிக் கொலை செய்தீர்கள். மாத்தையாவுக்கும் இந்திய உளவுத்துறைக்கும் எவ்வித தொடர்பும் இருக்கவில்லை. அதற்கு ஆதாரம் இருந்தால் அதனை நான் பார்க்க விரும்புகிறேன். இப்படிப் பல சம்பவங்கள் நடந்துள்ளது. பலரை இந்திய முகவர் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அவர்களுக்கும் இந்தியாவுக்கும் தொடர்பே இருந்திருக்காது.

தமிழ் இயக்கங்களுக்குள் நாங்கள் ஈரோஸ் உடன் நெருக்கமாக இருந்தோம். புலிகளுக்கு மாற்றாக வருவார்கள் என்று கருதினோம். ஈரோஸில் கண்னியமான பலர் இருந்தனர். ஆனால் அது மட்டும் போதாது. அவர்களிடம் இராணுவ பலம், கட்டுப்பாடு  இருக்கவில்லை. அவர்களும் புலிகளிடம் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டி வந்தது.

எல்ரிரிஈ முற்றாக முறியடிக்கப்பட்ட நிலையிலும் இலங்கையின் வடக்கு கிழக்கில் மூன்று பெரும் இராணுவப் படைப்பிரிவுகள் நிலை கொண்டுள்ளது. இது மிகவும் அதிகமானதே. ஆனால் இவ்விடயத்தில் இந்தியா எதுவும் கூற முடியாது. இது இலங்கையின் பாதுகாப்புத் தொடர்பானது. இதே நிலைமை இந்தியாவின் காஸ்மீரில் உள்ளது. ஆனால் இன்னமும் அங்கு ஆயுத வன்முறை இடம்பெற்றுக்கொண்டு உள்ளது. ஆனால் எந்த நாடு ஆனாலும் அதன் இராணுவம் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக அரசாங்கம் செயற்பட முடியாது.

எல்ரிரிஈ முற்றாக முறியடிக்கப்பட்டாலும் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்கள் மோசமான நிலையிலேயே சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். இதனை அரசின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும்.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இந்தியாவையும் சீனாவையும் பயன்படுத்துவது இந்தியாவுக்கும் தெரியும். எல்லாவற்றுக்கும் ஒரு சிவப்புக் கோடு உள்ளது. அதனைத் தாண்ட முடியாது. அது ராஜபக்சவுக்கும் தெரியும். அது மட்டுமல்ல இந்தியாவின் பாதுகாப்பு ஈழத்தை அனுமதிக்காது என்பதும் ராஜபக்சவுக்குத் தெரியும். நீங்கள் இந்தியாவின் உதவி இல்லாமல் ஈழத்தை அமைக்க வழிதேடிப் பாருங்கள்.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தற்போதுள்ள முரண்பாடு ஒரு பெரும் பிரச்சினையாக இன்று இல்லை. இரு நாடுகளுமே இதனை சுமுகமாகவே அணுகுகின்றன. இந்த முரண்பாட்டை அயல்நாடுகள் பயன்படுத்த முற்படுவதால் சீன – இந்திய உறவு மோசமான நிலைக்குச் செல்லலாம். ஆனால் வளர்ச்சி அடையும் இந்திய பொருளாதாரம் எல்லைகளைக் கடக்கின்றது. அது சீனாவுக்கும் செல்கின்றது. அதனால் இந்த உறவுகள் பாதிப்படைவது அந்தப் பிராந்தியத்தின் பொருளாதார விருத்திக்கு உகந்தது அல்ல என்பது உணரப்பட்டு உள்ளது. ஆகவே எதிர்காலத்தில் முதலீட்டைப் பாதுகாப்பதும் லாபத்தைப் பெருக்குவதுமே எதிர்கால உறவுகளைத் தீர்மானிப்பதில் முக்கிய அம்சமாக இருக்கும்.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த சர்வதேச நாடுகள் தலையிடுவதையோ ஐநா தலையிடுவதையோ இந்தியா தடுக்க முடியாது. இந்தியா ஐநா சாசனத்தில் கையெழுத்திட்ட ஒரு நாடு. ஐநா அமைதிகாக்கும் படைக்கு இந்தியா தனது இராணுவத்தை வழங்கி வருகிறது. இலங்கையில் நோர்வே மத்தியஸ்தம் செய்தது. நேபாள் வந்த ஐநா இந்திய விடயங்களில் தலையீடு செய்தது. ஐநா பல விடயங்களிலும் தேவையற்று மூக்கை நுழைக்கிறது. அதனை இந்தியா அனுமதிக்காது. இலங்கையில் ஐநா தலையீட்டை இந்தியா விரும்பாது.

மனித உரிமைகளைப் பயன்படுத்தி நாடுகளை மேலான்மை செய்வதையும் இந்தியா அனுமதிக்கப் போவதில்லை. மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக போர்க் குற்றங்களைக் கொண்டு வருவது எல்லாம் நடக்கப் போவதில்லை. அவ்வாறான விடயங்களை இந்தியா எதிர்க்கும். இந்தியாவுக்கும் இதே பிரச்சினைகள் போர்க் குற்றச்சாட்டுகள் காஸ்மீரில் உண்டு. இந்தியா எப்படி இதனை ஆதரிக்கும்? இதனையே தான அமெரிக்கா குவாண்டனமோ பேயில், ஈராக்கில் செய்கின்றது.

இலங்கையின் குடிப்பரம்பல் என்பது உறுதியானதாக இல்லை. வடக்கு – கிழக்கில் இருந்து மக்கள் வெளியேறுகின்றனர். நீங்கள் இங்கு வாழ்கிறீர்கள். எப்படி குடிப்பரம்பலை ஒரே நிலையில் பேண முடியும். வரதராஜப் பெருமாள் அண்மையில் குறிப்பிட்டார் ‘கடைசி யாழ்ப்பாணத் தமிழன் இலங்கையை விட்டு வெளியேறும் போது தமிழர் பிரச்சினை தீர்ந்துவிடும்’ என்று.

நீங்கள் மீண்டும் உங்கள் நாட்டிற்கே செல்ல வேண்டும். ஆனால் இலங்கையில் இன்னமும் அந்நிலை தோன்றவில்லை. சிங்கள மக்களும் வெளிநாடு செல்லவே விரும்புகின்றனர். ஆனால் இந்தியாவில் இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர். இலங்கையில் அவ்வாறான நிலை ஏற்பட பொருளாதாரம் முன்னேற வேண்டும். அபிவிருத்தி முன்னெடுக்கப்பட வேண்டும்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் நடந்து முடிந்த போரினால் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை. வெளிநாட்டு கட்டமைப்புகள் அவ்வாறே உள்ளன. ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் இந்த ‘அடிடா’ அரசியலை விடவேண்டும். முரண்பாட்டு அரசியலை இனித் தொடர முடியாது. இவர்கள் இரு தரப்பு எல்ரிரிஈ யையும் கைவிட வேண்டும். புதிய சிந்தனையுடன் செயற்பட வேண்டும். இலங்கைக்குச் சென்று நிலைமைகளைப் பார்த்துவர வேண்டும். வடக்கு – கிழக்கு மற்றும் வறுமையில் வாடும் தென்பகுதி மக்களுக்கும் உதவ வேண்டும். புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இன்னமும் பலமாக உள்ளனர். அவர்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டால் மீண்டும் ஒரு போராட்டத்தை ஏற்படுத்தக் கூடிய வல்லமை உடையவர்கள். அந்நிலை ஏற்படாமல் இலங்கை அரசு அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும். அதனையே இந்தியா வலியுறுத்துகிறது’ என கலாநிதி சந்திரசேகரன் சபையில் இருந்துவந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கையில் சமூகங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்கான அறிக்கை ஆவணி 02 குறைந்தபட்ச புரிந்துணர்வுக் குழுவின் உறுப்பினர் நிஸ்தார் மொகமட்டினால் கலாநிதி சந்திரசேகரனிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இதன் போது கருத்து வெளியிட்ட நிஸ்தார் மொகமட், ”இலங்கையின் பல்லின சமூகம் என்பதனை வெறுமனே மொழிவாரியான தமிழ் – சிங்கள சமூகங்கள் என்று பார்க்கும் நிலை முடிவுக்கு வரவேண்டும்” என வலியுறுத்தினார். ”முஸ்லீம்கள் முற்றாக தனித்துவமான ஒரு தேசிய இனம்” என்பதனை அவர் வலியுறுத்திக் கொண்டார்.

இறுதியாக தேசம்நெற் ஆசிரியர் ரி சோதிலிங்கம் நன்றியுரை வழங்க நிகழ்வு முடிவுற்றது. இந்நிகழ்வில் பன்முகப்பட்ட அரசியலாளர்களும் ஒரே அரங்கில் கூடி ஒன்றுக்கு ஒன்று முற்றிலும் எதிரான உரையாடலை கண்ணியமான முறையில் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பிரிதிநிதி முன்னிலையில் இலங்கை அரசு தொடர்பான காட்டமான கேள்விகள் முன்வைக்கப்பட்டது. இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள தீபாவளி நிகழ்வில் கலந்துகொள்வதற்கான அழைப்பை உயர்ஸ்தானிகர் அலுவலகப் பிரதிநிதி விடுத்த போது தன்னை இலங்கையராக கருதும் நிலையை இலங்கை அரசு இன்னமும் ஏற்படுத்தவில்லை என ராஜன் என்பவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான பல்வேறு கருத்துப் பரிமாற்றத்துடன் நிகழ்வு முடிவுக்கு வந்தது.

._._._._._.

தெற்காசிய ஆய்வுக் குழுவின் இயக்குநர் கலாநிதி சந்திரசேகரனுடனான சந்திப்பு

Chandrasekaran_Drதெற்காசிய ஆய்வுக் குழு –  South Asia Analytical Group – SAAG இன் இயக்குநரான கலாநிதி சந்திரசேகரன் உடனான கலந்துரையாடல் ஒன்று நவம்பர் 10 மாலை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ‘இலங்கை தொடர்பான இந்திய வெளிநாட்டுக் கொள்கைகளின் பரிமாணம்’ என்ற தலைப்பில் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேசம்நெற் இணையமும் Accademy of Science and Arts for Tamils in Ceylon – ASATiC உம் இணைந்து இச்சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது.

கலாநிதி சந்திரசேகரன் தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு மிக நெருக்கமானவர். தற்போதும் அவரை இயக்குநராகக் கொண்டுள்ள தெற்காசிய ஆய்வுக் குழு இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் ஆளுமையுடைய வெளிநாட்டுக் கொள்கையைப் பிரதிபலிக்கின்ற ஒரு ஆய்வு நிறுவனமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை இனப்பிரச்சினை அதன் பின்னணி பற்றி மிக ஆழமான அனுபவத்தைக் கொண்டவர் கலாநிதி சந்திரசேகரன். அதேசமயம் இந்திய வெளிநாட்டுக் கொள்கை வகுப்பாளர்களுக்கும் நெருக்கமானவர். இந்த வகையில் அவருடனான இச்சந்திப்பு இலங்கை தொடர்பான இந்திய வெளிநாட்டுக் கொள்கையை விளங்கிக் கொள்ளவும் இலங்கை – இந்திய உறவைப் விளங்கிக் கொள்ளவும் உதவும்.

கலாநிதி சந்திரசேகரன் 2007ல் ஈரோஸ் அமைப்பின் நிறுவனர் ரட்னசபாபதியின் லண்டனில் நடைபெற்ற நினைவு மாநாட்டில் கலந்துகொண்டவர். அத்துடன் வன்னி யுத்தம் வேகமடைந்து கொண்டிருந்த காலப்பகுதியில் சர்வதேச மாநாடு ஒன்றுக்காக செல்கையில் லண்டன் வந்து சில சந்திப்புக்களையும் மேற்கொண்டிருந்தார்.

அப்போது தமிழீழ விடுதலைப் புலிகளது பலவீனம் அரசியல் தீர்வு 13வது திருத்தச் சட்டத்தை ஒட்டியது வடக்கு கிழக்கு அண்மைய எதிர்காலத்தில் இணைக்கப்படமாட்டாது போன்ற எதிர்வுகூறலை வெளியிட்டும் இருந்தார். இவை தேசம்நெற் இல் பிரசுரிக்கப்பட்டும் இருந்தது.

இச்சந்திப்பு சிறிய உரையைத் தொடர்ந்து ஒரு கேள்வி நேரமாகவே ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தேசம்நெற் உடன் தொடர்பு கொள்ளவும்.

கலாநிதி சந்திரசேகரனிடம் கேள்விகள் உள்ளவர்கள் அவற்றைப் இங்கு பதிவிடும்பட்சத்தில் அதற்கான அவரின் பதில்களைப் பெற முயற்சிக்கப்படும்.

Show More
Leave a Reply to waran Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

17 Comments

  • aras
    aras

    ஐயா நீங்கள் எண்பதுகளின் நடுப் பகுதிகளில் எமக்கு பயிற்சி அளித்தீர்கள். ஒரு பலனும் இல்லை. திரும்ப ஏன் ஐயா வருகிறீர்கள்? வட கிழக்கு தமிழ் ஈழத்தை நீங்களும் அபிவிருத்தி செய்யவோ?

    Reply
  • oruvan
    oruvan

    “தமிழ் இயக்கங்களுக்குள் நாங்கள் ஈரோஸ் உடன் நெருக்கமாக இருந்தோம்”

    இது அப்பட்டமான பொய்! ஐயா, நீங்கள் அப்போது கடைப்பிடித்த கொள்கயை கூறவா.

    Reply
  • kovai
    kovai

    சர்வதேச அளவில் இந்தியா தன் வளர்ச்சி மேற்குலகில் தங்கியிருப்பதையும், அதன் ஆதரவாக மாறிப் போவதையும் இந்த இராஜதந்திரி இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. மாறாக சீனா, மூன்றாம் உலக நாடுகளிடம், மாவோ சிந்தனையை விற்று, “சக்கையை விட்டு சாறு எடுக்கிற” வல்லாதிக்க வளர்ச்சியில் முன்னிற்கிறார்கள்.
    மேற்கு இந்தியாவை வசப்படுத்துகிறது, சீனாவை எண்ணி பயப்படுகிறது. இலங்கையின் சீன-இந்திய விலாங்குத்தனத்தை மேற்கு இரசிக்கிறது. சீன-இந்திய வெடிப்பின் தீக்குச்சியாக இலங்கையை மாற்ற, மேற்கு தயாராகிறது. இன்று நடக்கிற நாணய மதிப்பீட்டின் போட்டி, நாளைய அழிவினால் மட்டுமே சமனிலைப்படுத்தப்படும். அதனால் தெற்கு முள்ளிவாய்க்கால் வெகுதொலைவில் இல்லை.

    Reply
  • Nadarajah Balasubramaniam
    Nadarajah Balasubramaniam

    Our respect to Dr.Chandrasekaram. We know the site SAAC well. It is RAW’s voice. Anyway I would be happy to know his reply to my following questions.
    1.The IC started the 2002 peace talks once convinced that the LTTE could not be defeated militarily.Till mid of 2006, the talks were progressing and they were talking of the control of sew around Eelam. Then India started the nasty move got UK to act. SL bombed Sencholai on 17th of August with borrowed air-power.On 31st MR came over to Uk and met Tony Blair when he was holidaying and convinced him that they have doubled their military strength and that the LTTE strength is reduced because of the Tsunami, and that India would underwrite the victory. UK got pushed, shame on UK,got EU also to ban LTTE and did the nasty things. USA also joined. India gave Infantry and heavy military to SL to carry out the Genocide. Indian govt. will be named and shamed by the UN and IC. Prnab Mukergee, MK Narayanan, Shiv Shanker Menon and Nambiar will face war crime charges and will go for life imprisonment.
    2. The world and every right groups condemned SL for its impunity driven HR violations. India never even give a statement. India will never become a permanent member in the UNO.
    3.There are 192 members in the UN. India is only 1 in 192. So Mr. C should not speak nonsense.
    4. What is happening in SL is ethnic cleaning.Another war crime.
    5. Thanthai Cheva did our struggle till Vadukkotai decision. That happened only within SL only. The LTTE by its great military achievements made the whole world realize what is Eelam. Now after the demise of the LTTE military, or silincing the arms, their political party is doing the final lap in the Eelam race. Unfortunately the anti- LTTE misled click are being used by SL govt and even India. But SL is ignoring them and making use of the bought over LTTE.
    These chaps will join in our Eelam victory celebrations. Eelam will be very friendly with great China and also the great people of India once the present badge of diplomats leave the scene and their places taken by young brilliant chaps from all casts take over.
    Thank you.

    Reply
  • waran
    waran

    what i want to know they talk about to elam 1985 that time why they didnt say indian policy today come and say india didnt like eelam that time their use us dr. chandran like mr amirthalingam and suresh pramechandran

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    இந்தக் கட்டுரையையும், பின்னோட்டங்களையும் பார்க்கும் போது ஏதோ வேலை வெட்டி இல்லாதவர்கள் பொழுது போக்குகிறார்கள் என்ற தோற்றம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்!.
    ரவி சுந்தரலிங்கம் போன்ற சீரியசாக சிந்திக்கிறவர்கள்?, இவைகளை ஒரு சீரியசான வட்டத்திற்குள் கொண்டுவர வேண்டும்!
    முதலில், இந்திய ராஜதந்திரி கலாநிதி சந்திரசேகரன் ஐயா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    இந்திய அதிகார வர்கத்திலிருந்த ஒருவர், அவர் எத்தகையவராக இருந்தாலும், இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஒரு பிரச்சனையில் கருத்து சொல்லி வருவது அரிது, தங்கள் பொறுப்புகளுக்கான காலம் முடிந்தபின் சப்ஜக்டை மறந்துவிட்டு ஓய்வூதியத்தில் கவனம் செலுத்துவார்கள். இவர் கூறிய கருத்துக்களை நோக்கும் போது, ஓய்வு காலத்தில் இலங்கைத் தமிழர்களை பாராட்டிப் பேசி கைத்தட்டல் வாங்கி உலகம் சுற்றுபவராக தெரியவில்லை!. இது ஒரு சீரியசான காலகட்டம்!.

    முப்பது ஆண்டு காலமாக இந்தப் பிரச்சனையில் ஒட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு தெரியும், “இந்திய அதிகார வர்கம்” என்பது முக்கியமான ஒன்று!.
    இந்தியாவைப் பற்றி அறிந்தவர்களுக்குத் தெரியும், இந்திய ராஜதந்திரம் என்பது ஆர்ப்பாட்டமில்லாதது, உலகிலேயே ஆழமானது. இதை “Nadarajah Balasubramaniam on November 11, 2010 7:26 pm” போன்றவர்கள் அவர் கருத்துப்படி சிறுபிள்ளைத்தனமாக புரிந்துக்கொள்ள வைப்பதும், இந்த ஆர்ப்பாட்டமின்மையே!.

    அவர் கூறியிருக்கும் “இலங்கை விவகாரத்தில் தமிழநாட்டின் செல்வாக்கு அவ்வளவாக இல்லை, ஆனால் இந்திய அதிகாரவர்கம் தமிழ்நாட்டையும் கணக்கிலெடுத்துக் கொள்கிறது” என்பதன் எதார்த்தத்தை உணரவேண்டும்!. இந்தியா என்பது உலகில் தனித்து இல்லை, உலகில் ஏற்ப்படும் மாற்றத்திற்கு தகுந்தமாதிரி, இந்தியாவிலும் பிராந்தியத்திலும் மாற்றம் ஏற்ப்படுகிறது. “kovai on November 11, 2010 4:45 pm” இவர் இதைதான் தன்னுடைய புரிதலில் சொல்லுகிறார் என்று நினைக்கிறேன்.இவைகலி ஒழுங்குப்படுத்தி “நிறுவன மயப்படுத்தப் படவேண்டும்”!.குருட்டாம் போக்கில் அவ்வப்போது தோணுவதை சொல்லிவிட்டு பிறகு அத்தர் பல்டிகள் அடிப்பதால், எதையுமே ஒருமுகப்படுத்தாமல் நீண்ட லாவாணி கச்சேரியாகவே முடியும். இந்திய ராஜதந்திரிகளின் வார்த்தை ஜாலங்கள் அதிகம், முப்பது ஆண்டுகாலமாக இவ்வளவு எளிமையாக இலங்கைப் பிரச்சனைகளைப் பற்றி, உண்மைக்கு மிக அருகாமையிலான கருத்துக்களை வெளியிட்டிருப்பதன் மூலம், சந்திரசேகரன் அவர்களின் பொருப்புணர்ச்சி வெளிப்படுகிறது. ரவி சுந்தரலிங்கம் 8 நவம்பர் கட்டுரையில் கூறியுள்ள “MCU”(குறைந்தபட்ச புரிந்துணர்வு) இதிலிருந்தே ஆரம்பிக்கப்படல் வேண்டும்!…..

    Reply
  • Ajith
    Ajith

    இந்திய இராஐதந்தரி சந்திரசேகரன் ஐயா, இந்தியா ஒருபோதும் இலங்கை பிரிவதை ஆதரிக்கவில்லை என்றால் எதற்காக இந்தியா அரசும் ஏனைய அமைப்புகளும் சட்ட விரோதமாக ஆயுதம், ஆயுதப் பயிற்சி, நிதி என்று தமிழ் வாலிபர்களுக்கு வழங்கியது என்பதை விளக்க வேண்டும். இதைவிட பயங்கரவாதம் வேறு உண்டா. அல்கைடவுக்கு பாகிஸ்தான் , மற்றும் முஸ்லிம் நாடுகள் செய்வதை விட வலுவற்ற நட்பு நாட்டிற்கு செய்தது மிகப் பெரிய பயங்கரவாதம் ஆகும். இந்தியாவின் இந்த நடவடிக்கையால் இலங்கை இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் உயிர்களை பலியேடுத்தது. லட்ச்சகனக்கான மக்கள் நாட்டை விட்டு அகதிகளாக வைத்தனர். இலங்கையின் பொருளாதாரம் பாதாளத்தில் சென்றது. இந்தளவு அழிவுக்கு பின்னும் இந்தியா பெற்ற நன்மை என்ன. இன்று இலங்கை சீனாவின் கைபொம்மை. இலங்கை இன்று இராணுவ ரீதியில் பன்மடங்கு வலிமை பெற்றுள்ளது. இந்தியா இனி சுற்றவர மிகப் பெரிய இராணுவ வலயத்தால் சூழபட்டுளது. தமிழர்களை பொறுத்தவரையில் இனி இழப்திற்கு எதுவுமில்லை. ஆனால் இந்தியாவுக்கு ஏற்பட்ட தோல்வி இதை விடப் பெரியது,

    Reply
  • oruvan
    oruvan

    “இந்திய ராஜதந்திரம் என்பது ஆர்ப்பாட்டமில்லாதது, உலகிலேயே ஆழமானது.” DEMOCRACY on November 12, 2010 7:18 pm

    ஒ!! அதுதன் J.R இன் கையால் இந்திய ராஜதந்திரம் குட்டு வாங்கியதோ?

    இந்திய ராஜதந்திரம் J.R இன் ராஜதந்திரத் இடம் தோல்வி அடைந்தது என்பதை யாரும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது. மேலும் இந்த இராசதந்திரி சொன்னவற்றில் உண்மைகள் மிக குறைவு, மாறாக சிண்டு முடியும் வசன்ங்கள் தான் அதிகம் என்பது விபரம் தெரிந்தவர்களுக்கு மட்டும் தெரியும்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    “திரு.oruvan on November 13, 2010 5:03 am” அவர்களே, நீங்கள் ரவி சுந்தரலிங்கத்தின் ஜனநாயகப்படி, “Democracy is an ideology only in the hands of those, who want to dictate. As a tool for the benefit of mankind, it is a practice based on the minimum of understandings reached (MOU) among largest number of people, who differentiate themselves as communities, societies, peoples and nations, and with many other identities, within a geographically defined region.
    In this sense striving for such an understanding would be the main purpose of any democracy, which can be loosely stated as consensus building. In other words, democracy in action recognises that differences will and must exist if it to succeed. Differences will exist, as people have multi-faceted identities to suit their socio-economic and cultural needs, which some time have socio-historic basis. Differences must exist as any analysis or assumptions, idea or proposal have the inherent nature to be wrong due to the subjective nature of the subject, namely the nature and behaviour of people as individuals and collective. ” இதை பிரதிபலிக்கிறீர்கள்!. உங்களின் தேசிய குணாதியங்களின்படி, “உண்மைக்கு முன்னால் நடுநிலைமை என்று ஒன்று இல்லை” என்று பாரிஸ் ஈழமுரசு பொன்மொழியை உணர்த்துகிறீர்கள். பிறகு நாங்கள் என்ன சொல்ல… “டெமகரஸி” யின்படி உங்கள் தேசியத்தை அங்கீகரித்து “ஆதரவாளர்களாக” திரு.பழநெடுமாறன், திரு.வைகோ, ஆகியோர்கள் முப்பது ஆண்டுகளாக செய்த மாதிரி, செய்வோம்… ஆனால் குழியில் விழும்போது நாங்கள் அவ்வாறு சொல்லவேயில்லை வைக்கோவும், நெடுமாரனும்தான் அப்படி சொன்னார்கள் என்று அரசியலை மலிவான கேலிக் கூத்தாக்கினால் அதனால் வேதனையடைவது யார் என்று ரவிசுந்தரலிங்கம் போன்ற ஆராய்ச்சியாளர்கள்தான் விளக்கவேண்டும்!.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    … நாம் இங்கு கருப்பொருளாக எடுத்துக்கொள்வது,விடுததைப்புலிகளின் இராணுவ ரீதியான செய்த நடவடிக்கைகள் சரியா தவறா என்பதல்ல,அத்தகைய நடவடிக்கைகளை தீர்மானித்த “ரவி சுந்தரலிங்கத்தின் ஜனநாயக ரீதியான குணாதிசியங்களே” அதாவது இராணுவ பாலிசி,அந்த பாலிசியை கட்டுப்படுத்திய “அரசியல் கொள்கை”.இத்தகைய அரசியல் கொள்கைகளை விடுதலைப்புலிகள் முன்வைத்ததே இல்லை.தமிழர் விடுதலைக் கூட்டணியின் “ரவிசுந்தரலிங்கத்தின் ஜனநாயக குணாதியங்களைதான்” நடைமுறைப்படுத்தினார்கள்.”இந்த தேசியத்தை” கலைஞர் கருணாநிதியின் “TUTELAGE” ஜுடன் இந்தியாவுடனான புரிந்துணர்வை ஏற்ப்படுத்தவேண்டும் என்ற ரவி சுந்தரலிங்கத்தின் கூற்றை எனக்கு புரிந்துக் கொள்வதற்கு அவர்கள் “பில்லினெயர்களாக இருக்கிறார்கள்” என்பதுதான் கரணமா என்று விளக்க வேண்டும்,மற்றப்படி அரசியல் ரீதியாக,தி.மு.க. வின் மாநிலசுயாட்சி என்பது “ரவி சுந்தரலிங்கத்தின் ஜனநாயக தேசியத்தை” ஒட்டி இருப்பதாக கொள்ளலாம்.இது முறசொலி மாறனாலும்,தற்போது தமிழக திட்டக்குழு தலைவராக இருக்கும் முன்னாள் சென்னைபல்கலைக்கழக பொருளாதாரத்துறை தலைவரும்,கலைஞர் கருணாநிதியின் உறவினருமான பேராசிரியர் நாகநாதனாலும் வடிவமைக்கப்பட்டது!.புரிந்துணர்வுகள் இதன் அடிப்படையிலா?.இதன் அடிப்படையை புரிந்துக் கொள்வதற்கு,தி.மு.க. வரலாற்றில் மூதறிஞர் ராஜாஜி அவர்களின் கருணாநிதியின் மீதான செல்வாக்கிலிருந்து துவங்கப்படல் வேண்டும்!.

    Reply
  • அடைமொழி
    அடைமொழி

    “நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் தயாபரன்”

    என்ன கொடுமை சார் இது?

    Reply
  • thenee
    thenee

    இலங்கைபற்றிய விடயங்களில் மாற்றமடைந்தவரும் இந்திய அரசின் நிலைப்பாடு”

    Evolution of Indian Policy on Sri Lanka
    ஓய்வு பெற்ற இந்தியப் புலனாய்வுத்துறை அதிகாரி கலாநிதி; எஸ்.சந்திரசேகருடன் லண்டனில் ஒரு சந்திப்பு – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.

    லண்டன் தேசம் பத்திரிகைக்குழுவினரும், தமிழருக்கான விஞ்ஞான கலை அக்கடமிக்குழுவும (ASIATIC) சேர்ந்து, ஒய்வு பெற்ற இந்திய புலனாய்வுத்துறை அதிகாரியான கலாநிதி எஸ் சந்திரசேகருடனான ஒரு கலந்துரையாடலை 10.11.10ல் லண்டனில் நடத்தினார்கள். தமிழ், சிங்கள முஸ்லிம் மக்கள் பெருந்திரளில் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

    இலங்கை அரசுக்கு எதிரான தமிழர்களின் ஆயதப்போரில் திரு சந்திரசேகரின் பங்கீடு மிக முக்கியமானதாகவும், சென்னைத் தமிழரான புலனாய்வு அதிகாரியான அவர்தான் தமிழ் இளைஞர்களுக்கு ஆயதப்பயிற்சி கொடுப்பதில் முக்கிய பங்கெடுத்தவர் என்றும் அக்கூட்டத்தில் தெரியவந்தது. கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் சந்திரசேகரால் ஆயதப்பயிற்சிக்கு அனுப்பப்பட்ட போராளிகளும் இருந்தார்கள்

    வந்திருந்த தமிழர்களிடமிருந்து, ஆயதப்போரில் இன்று தமிழர்கள் தோல்விகண்டதிற்கும் இந்தியாதான் காரணமென்ற குரல்களும், தமிழ்களுக்குத் தமிழ்ப்பிரதேசம் கிடைக்க வேண்டிய விடயத்தில் இந்தியா கைவிட்டுவிட்டது, இந்தியா தமிழர்களுக்குத் துரோகம் செய்துவிட்டது, இலங்கைக்கு ஐக்கியநாடுகளின் படை வருவதை இந்தியா எதிர்த்தது, தமிழரின் இறுதிப்போராட்டத்தின்போது இந்தியா இலங்கைக்கு உதவி செய்து இலங்கையை வெற்றி கொள்ளப் செய்தது, 13வது சீர்திருத்தச்சட்டத்தை இலங்கை அமுல்படுத்தவேண்டும் என்பதை இலங்கைக்குச் சுட்டிக்காட்டாமல் இருப்பது, இன்றும் இலங்கை அரசைப்போர்க்குற்றங்கள் காரணமாகக் கூண்டில் நிறுத்த மேற்கு நாடுகள் முனையும்போது இந்தியா தடைபோடுகிறது, இந்தியாவுக்கு எதிரான சீனாவுடன் பாரிய உறவுகளை இலங்கை மேற்கொள்ளுவதால் இந்தியாவின் பாதுகாப்புக்குப் பங்கம் வருவதைத் தடுக்காமல் இருப்பது, சீனாவின் உதவியிடன் தமிழ்ப் பிரதேசங்களில் அணு ஆயுத உற்பத்தி நிலயங்கள் போடுவதைக்கண்டும் காணாமல் இருப்பது, தமிழ்ப்பிரதேசங்களில் அதிகப்படியாகக் குவிக்கப்படும் இலங்கை இராணுவத்தைப்பற்றி இந்தியா அக்கறை காட்டாதது, என்பது போன்ற விடயங்களுடன,தமிழ்நாடட்டு அரசியல்வாதிகளும் இலங்கைப்பிரச்சினையும், இந்தியாவில் வாடும் இலங்கை அகதிகள், இந்தியாவில் அல்லற்படும் இந்திய வம்சாவழித்தமிழர்கள்.இலங்கையில் நடைபெற்றக்கொண்டிருக்கும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னெடுப்புக்கள்,போன்ற பல விடயங்களையும் லண்டன்வாழ் தமிழர்கள் முன்வைத்தார்கள்.

    கலாநிதி சந்திரசேகர் அவர்கள் தன் முன்னுரையில் குறிப்பிடும்போது, அவர் 80-91 வரை இந்திய அரசின் உத்தியோகத்தராகவிருந்ததாகவும் இன்று ஓய்வு பெற்றுவிடடு தெற்காசிய ஆய்வுக்குழுவின் இயக்குனராப்பணிபுரிவதாகவும்; சொன்னார்.

    அவர் மேலும குறிப்பிடும்போது, இந்தியா ஒருநாளும் இலங்கை பிரிபடுவதை ஆதரிக்கவில்லை. இலங்கைத் தமிழர்களுக்குரிய அரசியல் பொருளாதார உரிமைகள் சமத்துவமாகக் கொடுக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாயிருந்தது, இன்றும் அதேநிலையைத்தான் கடைப்பிடிக்கிறது. 1983கு;குப் பின் இந்தியா இலங்கையில் நேரடியாகத்தலையிட்டது ஒரு துரதிர்ஷடமான விடயமாகும்.1983ல் சில சிங்கள் அரசியல்வாதிகள் தேசியப்பெயர் அட்டவணைகளுடன் தமிழர்களைத் தேடியலைந்து கொடுமைகள் செய்தார்கள். அக்கலவரத்தின்பின் இந்தியா வந்த இலங்கையில்; தாங்கள் பட்ட கொடிய அனுபவங்களைச் சொன்னார்கள். இந்தியாவுக்கு இலங்கையில் தமிழருக்கு நடந்த கொடுமை அதிர்ச்சியைக்கொடுத்தது.

    அக்கால கட்டத்தில், இலங்கை அரசுக்கு, அமெரிக்கா, பிரித்தானியா, இஸ்ரேல் போன்ற நாடுகள் தமிழர்களை அழிக்க உதவி செய்தன. தமிழர்களின் பாதுகாப்பை அவர்கள் தங்கள் கையில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற முயற்சியாக இலங்கைத்தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டது.

    பல தரப்பட்ட இயக்கத்தைச்சேர்ந்த தமிழ் இளைஞர்களும் ஒரு பிரமாண்டமான சக்தியாக உருவெடுத்தார்கள் இந்த வளர்ச்சியை அரசியற்செயற்பாடாக அவர்கள் மாற்றவில்லை. சென்னைப் பாண்டிச்சேரியில் நடந்த சம்பவம் (பிரபாகரனும் உமா மகேஸவரனும் துப்பாக்கிப்போர் நடத்தியது?) எங்களைச் சிந்திக்கப் பண்ணியது.

    1987ல் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் தமிழருக்கெதிரான இலங்கையின் கெடுபிடிகள் உச்சமடைந்தபோது இந்தியா இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பியது. இது மிகவும் ஒரு துரதிர்ஷ்டமான விடயம். அக்கால கட்டத்தில் இந்திய அரசு இலங்கை பற்றிய சில தெளிவான திட்டங்ளை வைத்திருக்கவில்லை என்பது எனது கருத்து. இந்தியாவில் பல பிராந்திய மக்களும் தங்கள் விடயங்களைத் தாங்களே நிர்வாகம் செய்வதுபோல் இலங்கையிலும்,

    ஐக்கிய இலங்கைக்குள் தமிழருக்கு அதிகாரம் வழங்கக்கூடியவித்தில் 13 சீர்திருத்தசசட்டம எழுதப்பட்டது. அந்தச் சட்டம் இன்று நடைமுறைப்படுத்தவில்லை. ஓரு நாட்டில் நடக்கும் பிரச்சினைக்கு அதில் சம்பந்தப் பட்டவர்கள்தான் சாசனங்கள் எழுதவேண்டும் கையெழுத்திடவேண்டும் ஆனால் 13வது சரத்து இந்திய, இலங்கை அரசால் கையெழுத்திடப்பட்டது. இலங்கைத் தமிழருக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் சாத்திடப்படவில்லை.

    இந்திய அமைதிப்படை, குமரப்பாபோன்ற ஒன்பதுபேரையும் இலங்கை அரசிடம் ஒப்படைத்தது மிகவும் பிழையான விடயம். அதைத்தொடர்ந்து நடந்த விடயங்களால் இந்திய அமைதிப்படை வெளியேறியபின் இலங்கை தொடர்பாக இந்தியா எந்தச் செயலையும்முன்னெடுக்கவில்லை.

    இலங்கையின் உள்நாட்டு விடயத்தில் தலையிடுவதில்லை என்பது மட்டுமல்ல அண்டை நாடுகளின் உள்நாட்டுப்பிரச்சினைகளில் இந்தியா தேவையில்லாமல் தலையிடுவதில்லை என்பது இந்தியாவின் வெளிநாட்டுக்கொள்கைகளில் ஒன்று.

    சுதந்திரமடைந்து நீpண்டகாலமாக இந்திய சமுத்திரத்தின் முக்கியம் பற்றி இந்தியா அக்கறைப்படவில்லை. இப்போது சீனா பெரிய அளவில் இலங்கையில் தலைபோடுகிறது. சீனா பொருளாதாரத்தில் அபாரவெற்றியைப்பெற்றிருக்கிறது. இந்தியாவும் பின் நிற்கவில்லை. இந்தியாவின் வளர்ச்சி 8-9 விழுக்காட்டில் இருக்கிறது. அண்டை நாடுகள் விருத்தியடையாவிட்டால் அதனால் உள்நாட்டுப்பிரச்சினைகள் வரும். அண்டை நாட்டுப் பிரச்சினைகள் இந்தியாவின் பாதுகாப்புக்குப் பங்கம் தரக்கூடாது. அதனால் இந்தியா இலங்கையின் விருத்திக்கு உதவுகிறது.இலங்கையில் சிங்கள் தமிழ் மக்களின் பொருளாதார முன்னேற்றம் அவர்களின் நல்வாழ்வுக்கு முக்கியமானது.

    அம்பாந்தோட்டையில் சீனா துறைமுகம் கட்டுவதால் இலங்கையைச் சீனா ஆட்டிப்படைப்தாக நான்நினைக்கவில்லை..

    இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னெடுப்புக்களை நான் நம்பவில்லை.இலங்கையில் முக்கியமாகத்தேவையானது அபிவிருத்தி. இந்தியா அதற்கான உதவிகளைச்செய்கிறது. தமிழர்களுக்கான அரசியல் பொருளாதார விருத்திக்கு 13வது சரத்து அமுல் படுத்தப்படுவது முக்கியம். இந்தியா இதுபற்றி எத்தனையோதரம் இலங்கையிடம் சொல்லி விட்டது.அதைவிட வேறு ஒன்றும் இந்தியா செய்ய முடியாது.ஆனால் 13வத சரத்து அமுலாகும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

    தமிழ் நாடு இருந்திருந்து சில அறிக்கைகள், வேண்டுகோள்களை விடுவதைவிட அவர்களால் வேறோன்றும் செய்ய முடியாது. இந்தியத் தேர்தல் அண்டுவதால் மத்திய அரசும் அதே வேலையைத்தான் செய்யும். தமிழ் நாட்டுக்கு இலங்கைப்பிரச்சினை ஒரு சிம்போலிக்கான விடயம் மட்டுமே. இந்தியாவில் பொருளாதார விருத்திபெறும் மாநிலங்களில் தமிழ்நாடு நான்காம் இடம் பெற்றிருக்கிறது.அவர்கள் திறமாக முன்னேறுகிறார்கள் ஆங்கில, கணனி அறிவு தென்னகத்தில் கொடிபறக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியால் வடக்கு தெற்கு பேதங்கள் மறக்கப் படுகின்றன. இலங்கையிலும் இம்மாற்றங்கள் வரவேண்டும். யுத்தம் என்பத மிகவும் கொடுமையானது; நடந்ததை வைத்துப்பேசிக்கொண்டிருக்காமல் மக்களின் முன்னேற்றத்திற்குப் பாடு படவேண்டும் என்றார்.

    இந்தியாவுக்கு ஓபாமா வந்துபோனார் அதன்பின்னர் இந்திய வெளிவிவகார மந்திரி இலங்கை வருகிறார் அதெல்லாம் எதற்காக என்று கேட்டபோது, ஓபாமா சீனாவுக்கு எதிராக ஒரு அணி திரட்டப்பார்க்கிறார். இரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஒரு பனிப்போர் நடந்தது. அந்த கால கட்டத்தில் இந்தியா அணிசேராத நாடுகளுடன் இணைந்தது. இப்போது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒரு பனிப்போர் நடக்கிறத. தென்னசியப் பிராந்தியத்தின் பாதுகாப்புக்காக இந்திய சீனாவுடனான அரசியல் உறவுகளைத் தொடரும். ஆனால் முரண்பாட்டை வளர்த்தால் அது தென்னாசியப் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு ஆபத்தையுண்டாக்கும்.பனிப்போர் எங்கள் பிராந்தியத்துக்கு உகந்ததல்ல.

    வெளிநாடுகளில் ஒலிக்கும் தமிழ்த்தேசியக்குரலைப்பாவித்து அமெரிக்காவும் பிரிட்டனும் இலங்கையில் தலையிடுமா என்ற கேள்விக்கு சந்திரசேகர் பதிலளிக்கும்போது, உலகம் மிகவும் வேகமாக மாறிக்கொண்டு வருகிறது. பொருளாதாரம் முன்னிலையில் இருக்கிறது. அதற்காக ஒருத்தருடன் ஒருத்தர் இணைகிறார்கள் என்றார்.

    இந்தியாவில் ஒரு கட்சி ஆட்சியற்ற கூட்டாட்சி நிலமை நீடிக்குமா அதனால் வெளிநாட்டுக்கொள்கைகளில் மாற்றம் வருமா என்ற கேள்விக்கு, இந்தியவின் அனைத்துக் கட்சிகளுக்கும் இந்தியாவின் பொருளாதாரக்கொள்கை முக்கியம்.வெளிநாட்டுக்கொள்கைகள் அண்டை நாடுகளின் நிலையைப்பொறுத்தது.

    இன்று, பர்மாவில் 2003ம் ஆண்டிலிருந்து பாராளுமன்றத ;தேர்தலில் வெற்றிபெற்ற திருமதி ஆங் சூ கி சிறையில்வாடுகிறார் இவர் இந்தப் பிராந்தியத்தில் பதவிக்கு வந்த சந்திரிகா,கசினா போன்ற அரசிற் தலைவிகளை விட மிகவும் ஆளுமையானவர் புத்திசாலி ஆனால் இந்தியா அவர்களின் உள்நாட்டு விடயத்தில் தலையிடமுடியாது. மேற்கு நாடுகள் சத்தம் போடலாம் ஆனால் நாங்கள் அண்டை நாடுகள் அரசியல் உறவுகளை வைத்திருக்கவேண்டும் என்றார்.

    இலங்கைத் தமிழ் இளைஞர்களை ஆயதப்பயிற்சிக்கு உட்படுத்திய இந்தியாவுக்கு இலங்கைத் தமிழரின் இன்றைய நிலைக்குப் பொறுப்பில்லையா என்ற கேள்விக்கப் பதிலளிக்கையில், இந்தியா ஆயதப் பயிற்சி மட்டும்தான்கொடுத்தது. இந்தியா இலங்கைத்தமிழரின் அரசியற் பிரச்சினை எப்படி முன்னெடுக்கவேண்டும் என்று சொல்லவில்லை.அது தமிழரைப்பொறுத்தது. அவர்கள் ஆயதத்தைப் பாவித்துத் தங்களைத்தாங்களே அழித்துக்கொண்டார்கள். மாத்தையாவை இந்தியாவின் கையாள் என்று கொலை செய்தார்கள். நான் புலனாய்வுத் துறையில் இருந்தவன் மாத்தையாவைச் சந்தித்தது கிடையாது. இதுவரை நடந்த விடயங்களுக்கு ஆயதம் தாங்கியவர்கள்தான் பொறுப்பேற்கவேண்டும்.

    நல்லிணக்க ஆணைக்குழுவில் சித்தார்தன் சொன்னதுபோல் இலங்கை அரசு தங்களுடன் இணைபவர்களுக்க மட்டும் உதவி செய்யக்கூடாது. ஓட்டுமொத்தமான தமிழர்களின் வளர்ச்சிககும் நீங்கள் ஒன்றிணைந்துகுரல் கொடுக்கவேண்டும்; என்றார்

    தென்னிலங்கையில் ஜேவிபியை அழித்தபின் இலங்கை அரசு அங்குபெரிய படையை நிறுவவிலலை. ஆனால் முள்ளியாவளைச் சண்டையில் புலிகள் தோற்றபின்னும் தமிழ்ப் பகுதிகளில் 400.000 இலங்கை இராணுவப் படைகள் இருக்கின்றன , இதுபற்றி உங்கள் கருத்து என்னவென்று கேட்டபோது, இலங்கையில் புலிகள் அழிந்தாலும் புலம்பெயர் நாடுகளில் அவர்களின் ஆதரவாளரர்கள் பலம் வாய்ந்திருக்கிறார்கள் அவர்கள் இன்னுமொரு போராட்டத்தை ஆரம்பிக்கலாம் என்ற பயம் இலங்கைக்கு இருக்கிறது. அதனால் தமிழ்ப் பகுதிகளில் படையிருக்கிறது; இந்தியாவில் காஷ்மிரில் இந்தியப் படையிருக்கிறது. ஓரு நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு விடயத்தில் இந்தியா தலைபோடமுடியாது. புலம் பெயர்ந்த தமிழர்கள் பலம் வாய்ந்தவர்கள் இலங்கைவாழ் தமிழர்களின் வாழ்வு வளம் பற்றிய அவர்களின் சிந்தனையில் மாற்றம் வரவேண்டும்.

    சீனாவும் இந்தியாவும் பிரச்சினைப்படுவதால் தமிழர்கள் நன்மையடையப்போவதில்லை. இந்தியாவிலும் பயங்கரவாதம் உண்டு. சீனாவுக்கம் இந்தியாவுக்கும் பொருளாதாரப்பாதுகாப்பு முக்கியமானது.

    புலிகளுடன் நடந்த யுத்தத்தில் இலங்கையின் வெற்றிக்கு இந்தியா உதவிசெய்தது.40.000 தமிழ் மக்கள் இறந்தார்கள். இந்தியா அண்மையில் மகிந்தாவை விசேட அதிதியாக அழைத்தார்கள். இந்தியாவிலிருந்து திரும்பி வந்த கையோடு மகிந்தா சீனா பயணமாகிவிட்டாh. இதன் பரிமாணம் என்ன என்று கேட்டதற்குப் பதில் சொன்ன கலாநிதி, மகிந்தா ராஜபக்சா பிசாசு விளையாட்டு விட்டால் இந்தியா பொறுமையுடன் இருக்கப் போவதில்லை. இலங்கையை இந்தியா கவனித்துக்கொண்டிருக்கிறது. தமிழர்கள் தங்களுக்கு மட்டும்தான் இந்தியா உதவவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் சிங்களவர்களும் இந்தியாவிலிருந்து வந்தவர்களே; விஷ்ணுவின் அவதாரமாகத்தான் புத்தர் கணிக்கப் படுகிறார். இன்றும் ; பிரேமசந்திரன்போன்றவர்கள் தாங்கள்மட்டும்தான் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதிகளும் என்று சொல்கிறார்கள். அது சரியான விடயமல்ல. அத்துடன் கொசாவோ பிரிந்தது போல் ஈழம் ஏன் பிரியக் கூடாது என்று கேட்கிறார்கள் இவர்கள் இந்தியாவைப்பற்றி ஆழமாக அலசவேண்டிய தேவையிருக்கிறது என்றார்.

    அதைத் தொடர்ந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், தமிழ்ப்பகுதிகளில் அணுவாலய நிலயங்கள் அமைக்க சீனாவின் உதவியுடன் இலங்கை முயல்வது தப்பான விடயமல்ல. இலங்கைக்கு எண்ணெய், எரிபொருள் வசதி கிடையாது. இன்று பல நாடுகள் இப்படி முயற்சிகளை முன்னெடுக்கின்றன.

    இலங்கை பொருளாதார வளர்ச்சி பெறவேண்டும். தமிழ் மக்கள் மட்டுமல்லாது சிங்கள மக்களும் பல சாட்டுக்களை வைத்துக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். பொருளாதாரம்தான் முக்கிய பிரச்சினை. புலம்பெயர்ந்த தமிழர்கள் வடக்கு கிழக்கு முன்னேற்றத்துக்கு உதவவேண்டும் இன்று ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த இந்தியர்கள் இந்தியாவுக்கு வந்து முதலீடுகளைச் செய்கிறார்கள். அதேமாதிரி இலங்கைத் தமிழர்களும் செய்யவேண்டும்.

    கடைசிக்காலகட்ட யுத்தத்தில் இலங்கைக்கு இந்தியா ஆயுதம் கொடுக்கவில்லை. ஆனால் இராணுவபலத்தால் பிரச்சினை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று நினைத்தார்கள். யுத்தங்கள் கொடுமையானவை. எதிர்பார்க்க முடியாத அழிவைத் தருபவை. போர்க்குற்றம் சொல்லி ஐ.நா.வரை போவது பிரயோசனமற்ற விடயம்.இதனால் ஒரு பிரயோசமும் வராது.

    இந்தியா. அமெரிக்கா என்று பல நாடுகள் போரில் அழிவுகளைக் காண்கிறது. இன்று தமிழர்களுக்குத் தேவையானது பொருளாதார அபிவிருத்தி அரசியல்த்தீர்வு என்பனவாகும் அதற்காகக் குரல் பொடுக்க வேண்டும் வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்கு இந்தியா 500 கோடி ரூபாக்களையும் உலக வங்கி 575 கோடி ரூபாக்களையும் கொடுத்திருக்கிறது. இலங்கைத் தமிழரின் வாழ்க்கை வளத்திற்கு தமிழக்குழுக்கள் தங்கள் பேதங்களை மறந்து ஒன்று படவேண்டும். புதிய சிந்தனையும் புதிய அரசியல் மாற்றங்களும் வரவேண்டும் என்றார்.

    Thanks- Thenee

    Reply
  • vanavil
    vanavil

    //இலங்கையின் உள்நாட்டு விடயத்தில் தலையிடுவதில்லை என்பது மட்டுமல்ல அண்டை நாடுகளின் உள்நாட்டுப்பிரச்சினைகளில் இந்தியா தேவையில்லாமல் தலையிடுவதில்லை என்பது இந்தியாவின் வெளிநாட்டுக்கொள்கைகளில் ஒன்று.//

    ”தமிழ் மக்களுடைய இன்றைய நிலைக்கு இந்தியாவும் ஒரு காரணம். ஆனால் இந்தியா மட்டும் காரணம் அல்ல” என சொல்லும் இந்திய ராஜதந்திரி கலாநிதி சந்திரசேகரனும்தான் போராளிகளது பிரிவுக்கும் ; இலங்கையின் இன்றைய நிலைக்கும் காரணம். இது கடந்த காலத்தில் அனைத்து இயக்கங்களையும் அழைத்து நடத்திய சம்பாசனையின் போது பங்கு கொண்டவர்களுக்குத் தெரியும். இவர் இப்போது நல்ல பிள்ளையாக நடிக்கிறார். இலங்கை பிரச்சனையை பார்த்தசாரதி கையாண்ட போது ; தமிழர் சார்பான அவரை புறந்தள்ள முழு முயற்சியில் திரை மறைவில் ஈடுபட்டு பார்த்தசாரதியை ஒதுக்கியவர் இந்த சந்திரசேகரன்தான்.

    இந்திய அரசு அனைத்து இயக்கங்களோடு பேசுவதற்கு முடிவெடுத்திருந்த நேரத்தில் ; அனைத்து இயக்கங்களையும் தனிப்பட்ட ரீதியாக ஒருவர் (இந்திய ராசதந்தரியான ஒரு தமிழர்) அழைத்து என்ன நடக்கப் போகிறது என்பதை விளக்கினார். அதாவது இந்திய அரசு ; தமிழீழத்தை பெற்றுத் தராது. அதேபோல இயக்கங்களையும் அங்கீகரிக்காது. அமைரிக்காவுக்கு சார்பான ஒரு கொள்கையுடைய ஜே.ஆரை பலவீனப்படுத்துவதற்கு இந்தியா ஈழ விடுதலைக் குழுக்களை பாவிக்கிறது. இவர்கள் போராட ஆயுதமோ அல்லது தனி ஈழமோ ஒரு போதும் வாங்கித் தராது. ஆனால் அமிர்தலிங்கம் தலைமையில் இருக்கும் கட்சி வழி ஒரு அரசியல் தீர்வை எடுத்துக் கொடுக்க நினைத்திருக்கிறது. எனவே அதற்கு உடன்படுங்கள். பின்னர் நீங்கள் இங்கிருந்து போராடுவதை விட அங்கிருந்தே போராடுங்கள். அது தனி நாடு ஒன்றை அமைக்க வழி செய்யும். அதை இந்தியா அங்கீகரிக்கலாம் என்றார். இது அரச சார்பான சந்திப்பாக இருக்கவில்லை.

    ஆனால் ஆசியப் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பான பலம் பொருந்தியவராக இருந்த இதே சந்திரசேகரன்தான் இயக்கங்களைக் குழப்பி ; இந்திய அரசுக்கு தவறான அணுகுமுறைக்கு வித்திட்டவர். இதன் ஒரு அங்கமாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தர்மலிங்கம் மற்றும் ஆலாலசுந்தரம் ஆகியோரை டெலோ மூலம் கொன்று அவர்களையும் அச்சத்துக்கு உள்ளாக்கினார். திம்பு பேச்சு வார்த்தைக்கு இலங்கை அரசு வருவதற்காக அனுராதபுர தாக்குதல் போன்றவற்றை ஊக்குவித்த புண்ணியவான்.

    இவரை நம்பி தண்ணியில் இறங்குவதை விட ; கடலில் குதிக்கலாம்.

    Reply
  • nanee
    nanee

    மன்னிக்க வேண்டும் இந்த தலைப்பை இன்றுதான் பார்த்தேன். நம்ம சந்திரன். சங்கர் ராஜியின் தோஸ்த். அதை ஈரோசுடன் இணக்கம் என்று எழுதுகின்றார். எங்கட பிரச்சனையில் ரோவுடன் ஆன தொடர்பில் மண்ணை கொட்டியவரே இவர்தான், திம்பு பேச்சு வார்த்தைக்கு போகும் போது தனிப் பிளேனில் எங்கட இயக்க பிரதிநிதிகளை அனுப்பி அங்கீகாரம் கொடுப்பதுபோல் இருந்தாலும் பின்னர் எமக்கு என்னத்தை செய்தார். இவரால் பல காரியங்கள் செய்ய கூடிய நிலையிலேயே இவர் இருந்தார். ஆனால் ஒன்றும் செய்யவில்லை.லண்டனுக்கு வந்து அயன்பொக்ஸ்சுடன் திரும்பினார் என்று சொல்வார்கள். இந்த முறை செல்போனோ தெரியாது. தேவையானால் இன்னமும் எழுதுவேன்

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    //எங்கட பிரச்சனையில் ரோவுடன் ஆன தொடர்பில் மண்ணை கொட்டியவரே இவர்தான், திம்பு பேச்சு வார்த்தைக்கு போகும் போது தனிப் பிளேனில் எங்கட இயக்க பிரதிநிதிகளை அனுப்பி அங்கீகாரம் கொடுப்பதுபோல் இருந்தாலும் பின்னர் எமக்கு என்னத்தை செய்தார். – nanee//

    இவர்களால் நடந்த கொடுமைகளையும் கழுத்தறுப்புகளையும் எழுதுங்கள் நாநீ. இல்லாவிட்டால் இவர்களால் இருக்கும் மக்களுக்கும் கேடுதான் வரும். இவர்கள் செய்த தகுடுதாளங்களை எழுதுங்கள். இது இன்றைய தேவையாக இருக்கிறது. இல்லாவிட்டால் இருப்பவர்களை உணர்ச்சி வசப்படுத்தி முட்டாள்கள் ஆக்கி இன்னொரு அழிவுக்கு வித்திட்டு விடுவார்கள்.

    Reply
  • oruvan
    oruvan

    “திம்பு பேச்சு வார்த்தைக்கு போகும் போது தனிப் பிளேனில் எங்கட இயக்க பிரதிநிதிகளை அனுப்பி அங்கீகாரம் கொடுப்பதுபோல் இருந்தாலும்….” nanee on November 18, 2010 5:02 am

    உங்களுக்கு அப்போது இந்திய அரசு தழிழ் போராட்ட குழுக்கள் தொடர்பாக கடைப்பிடித்த கொள்கை மற்றும் நடைமுறை தெரியவில்லை போல் தெரிகின்றது. அவற்றை நான் இங்கு எழுத முடியுமோ தெரியவில்லை.

    Reply
  • Mythili
    Mythili

    ஒற்றர்கள்இ உளவாளிகள் என்ற சொற்பதம் வரலாற்று கதைகள் தொடங்கி அம்புலிமாமாஇ சிஐடி மூசா கதைகள் வரைக்கும் வாசிக்கும் வாய்ப்பு உங்கள் பலருக்கும் கிட்டியிருக்கும். இந்த சொற்பதங்கள் பல்வேறுபட்ட மனிதர்களுக்கும் பல்வேறுபட்ட உணர்வுகளை ஏற்படுத்தக் கூடியது. பயம் திகில் நடுக்கம் மானம் பழியுணர்ச்சி பாசம் நட்பு தேசம் காதல் வீரம் கௌரவம் திமிர் மொழியுணர்வு மதஉணர்வு தந்திரம் என பன்முகதன்மை கொண்டவை. பாமர மக்களுக்கு பயம் திகில் நடுக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. புடித்தவர்களுக்கு மானம் தேசம் வீரம் பழியுணர்ச்சி ஆசை என்பவற்றை ஏற்படுத்தக்கூடியது. மேற்குறிப்பிடப்பட்ட உணர்வுகளை ஒற்றர்களும் உளவாளிகளும்தான் மனிதர்கள் மத்தியில் வெகுஜனமயப் படுத்தினார்கள். இதற்கான சான்றுகளை வரலாற்று கதைகள் முழுக்க தேடினால் வரிக்கு வரி பன்முகத்தன்மையுடன் இந்த உணர்வுகள் வெளிப்படும்.
    இந்துமத அடிப்படைவாதத்தில் கட்டமைக்கப்பட்ட இந்தியதேசத்தின் வரலாற்றுக்கதைகளில் “நராதர்” என்றொரு பாத்திரம் உண்டு. இது ஒற்றர்களினதும் உளவாளிகளினதும் குறியீடு. நாரதரின் பாத்திரம் பாமர மக்களினாலும்இ படித்தவர்களினாலும்இ பல்கலைக்கழகங்களாலும் கூட அங்கீகரிக்கப்பட்டவை. இந்த நாரதரின் பாத்திரம் “தந்திரம்” என்ற உணர்வை மனிதர்கள் மத்தியில் மிகுதியாக ஏற்படுத்தும். தந்திரம் என்றால் ஏமாற்றுதல் காலைவாரிவிடுதல் மோசடிசெய்தல் நட்டாற்றில் விடுதல் அபகரித்தல் கொள்ளையிடுதல் சுத்துமாத்து என பல அர்த்தங்களில் தொழிற்படுகின்றது. தந்திரம் என்ற சொற்பதம் அன்றைய இந்தியாவினதும் இன்றைய நவீன இந்தியாவினதும் இராசதந்திரம் என்ற மந்திரமாக தொழிற்படுகிறது.
    சும்மாயிருந்த முருகனையும் பிள்ளையாரையும் நாரதர் கொழுவிவைத்து சண்டையை மூட்டிவைத்த கதையை ஒருதடவை மீட்டுப்பார்ப்போம். சிவனே! என்றிருந்த சகேதரர்களை தூண்டிவிட்டு இந்த உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறீர்கள் என போட்டியைத்தொடங்க முருகன் வேலையும் மயிலையும் கொண்டோட பிள்ளையார் செய்வதறியாது திணற அப்பனையும் அம்மையையும் சுற்றிவந்தாலே உலகத்தை சுற்றிவந்தது சமம் ஆகும் என நாரதர் பிள்ளையாருக்கு போட்டுக் கொடுத்து ஞானப்பழத்தை பிள்ளையாருக்கு வாங்கிக்கொடுக்க முருகன் குடும்பத்தோடு கோவித்துக்கொண்டு கோவணத்துடன் நடுத்தெருவுக்கு வந்து ஆண்டியானார். இதே புனைகதைவழித் தொழிற்ப்பாடுதான் நாரதரின் துணையோடு முள்ளிவாய்காலில் கோமணத்துடன் ஊர்வலமாக செல்லும் பாய்க்கியத்தை பிரபாகரனுக்கு பெற்றுக் கொடுத்தது.
    அரிச்சந்திரன் கதையைப்பார்ப்போம் வாழ்நாளில் பொய்யே சொல்லமாட்டேன் என்றிருந்த அரசனை பொய் சொல்லவைத்துக் காட்ட முடியுமா என சவால்விட்ட நாரதர் அரிச்சந்திரனையும் நடுத்தெருவுக் கொண்டுவந்தார். மனிதர்களை ஒருவருடன் ஒருவர் கொழுவிவைத்து முடிந்துகொடுத்து கோழ்மூட்டிவைத்து ஒட்டுப்பார்த்துகொடுத்து நாரதர் பலாபலன்கள் அடைவதைத்தான் “நாரதர் கலகம் நன்மையில் முடியும்” என்ற கோட்டேசனுடன் இந்துமதமும் இந்தியவரலாறும் எங்களுக்கு சொல்லித்தந்திருக்கிறது.
    மனிதர்களுக்கு தோன்றக்கூடிய உணர்ச்சிகளில் இரண்டுவகையான உணர்வுகள் இந்த ஒற்றர்களுக்கும் உளவாளிகளுக்கும் ஏற்படுவதில்லை அவை பின்வருமாறு
    அ. வெட்கம்
    ஆ. குற்றஉணர்வு
    வெட்கம் குற்றஉணர்வு ஆகிய உணர்ச்சிகள் தனக்கு தோன்றிவிட்டதாக கூறும் ஒற்றரும் உளவாளியும் நாரதருமான சந்திரசேகரன் லண்டன் தமிழர்கள் மத்தியில் பழைய மொந்தையில் புதிய கள்ளை ஊற்றிக் கொடுத்திருக்கின்றார். இந்தக்கள்ளை தேசம் நெற் அன்ட் கொம்பனி பரிமாற பரமார்த்தகுருவின் சீடாகளான சம்பந்தனும் தமிழீழவிடுதலை இயக்கங்களின் வாரிசுகளும் அள்ளியள்ளி பருகியிருக்கின்றனர.
    சந்திரசேகரனின் பேட்டியை மேலோட்மாக பார்த்தால் பாவமன்னிப்பு கேட்பது போல தோன்றும். ஆனால் அதற்குள் இந்தியாவின் பொருளாதார நலனும் திமிரும் உள்ளடங்கியிருக்கிறது என்பதை கீழேயுள்ள நாரதர்த்தனமான பதில் உணர்த்துகின்றது. “இலங்கைத்தமிழ் இளைஞர்களை ஆயுதப்பயிற்சிக்கு உட்படுத்திய இந்தியா இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலைக்குப் பொறுப்பில்லையா?” என்ற கேள்விக்கு சந்திரசேகரன் பதிலளிக்கையில் “இந்தியா ஆயுதப்பயிற்சி மட்டும் கொடுத்தது. இந்தியா இலங்கைத்தமிழரின் அரசியற்பிரச்சினையை எப்படி முன்னெடுக்கவேண்டும் என்று சொல்லவில்லை. அது தமிழரைப்பொறுத்தது. அவர்கள் ஆயுதத்தைப் பாவித்து தங்களைதாங்களே அழித்துக்கொண்டார்கள்.” இதைவிட இன்னுமொரு நக்கலும் திமிரும் சேர்ந்த கூற்றை பாருங்கள்
    “இந்தியா இயக்கங்களுக்கு ஒருநாளும் அரசியல் வகுப்பெடுக்கவில்லை ஈழத்தை பெற்றுத்தருவாக சொல்லவில்லை அது மகிந்தவிற்கும் தெரியும். ஏலுமெண்டால் இந்தியாவின் உதவியில்லாமல் ஈழத்தை பெறும் வழியைப்பாருங்கள்.”
    இது சந்திரசேகரன் சொல்லும் பச்சைப் பொய். உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிங்களவரை எப்பிடியெப்பிடி எல்லாம் கொல்ல வேண்டும் எண்று சொல்லித்தான் பயிற்சியளித்தார்கள். சேலம் கொள்ளிமலையில் ரொலோவிற்கு பயிற்சியளித்த முன்னாள் தமிழ் இராணுவ அதிகாரி— சிங்களவரை கொல்லுங்கோடா என்று சொல்லித்தான் பயிற்சியளித்தார். ஏன்இ நுPசுடுகு க்கு சிவபுரத்தில் பயிற்சி அளித்த நாயர் கூட சிங்களவரைக் கொல்லுங்கோடா என்றுதான் பயிற்சி அளித்தார். இதற்கு சாட்சியாக என்னைப்போல இன்னும் பலர் புகலிடம் எங்கும் உயிரோடுதான் இருக்கின்றார்கள். இந்தியா எடுத்த அரசியல் வகுப்பில் முக்கியமானது என்னவென்றால் அது சிங்களவரை கொல் என்பதுதான்.
    சந்திரசேகரனின் இந்தத் திமிர்த்தனமான பதிலை புரிந்து கொள்வதற்கு நான் உங்களை கோடம்பாக்கம் நுடேுகு காரியாலயத்துக்கு அழைக்கிறேன். இந்தியா இயக்களுங்கு ஆயுதப்பயிற்சி வழங்கி ஆறுதல் அடைந்த பிற்பாடு
    அங்கே கார்திகேசன் என்றொரு நாரதர் காலை எட்டுமணிக்கெல்லாம் வந்துவிடுவார். பாலகுமாரைச் சந்திப்பார் சிறிசபாரத்தினத்தை சந்திப்பார் பிபாகரனைச் சந்திப்பார் பத்மநாபாவைச் சந்திப்பார் ஏன் விசுவானந்ததேவனையும் சந்திப்பார் இப்படி ஓடியோடி எல்லாரையும் சந்தித்தார். ஒருகட்டத்தில் நம்ம தலைவர்கள் கார்த்திகேசனைக் கண்டால் ஓடி ஒழிக்கத் தொடங்கினர்கள். ஆனால் கார்த்திகேசனோ கண்ணுக்குள்ள எண்ணை விட்டுக்கொண்டு கோடம்பாக்கம் அடையாறு அண்ணாநகர் என சுத்திச்சுத்தி எல்லாரையும் கண்காணித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொருவரிடமும் ஆளுக்காள் என்ன செய்கிறீர்கள் என்று விசயங்களை கறந்தார். ஆளையாள் கோள் மூட்டிவிட்டார. தீ மூட்டிவிட்டார். தீ கனந்து கொண்டிருந்தது. இயக்கங்கள் உட்கொலைகளை செய்துகொண்ருந்தன. இந்தியாவில் உள்ள நாரதர்கள் எல்லோருக்கும் அது நன்றாகதெரியும் அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. பிரபாகரன் மற்றைய இயக்கங்களை அழிக்கத் தொடங்கினான் அப்பொழுதும் நாரதர்கள் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் சந்திரசேகரன் சொல்வது போன்று இந்தியா இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட என்றுமே விரும்பியதில்லை என்பது காரணமாகவிருக்கலாம்??
    பின்பு பிரபாகரன் ராஜீவ்காந்தியை கொன்றான் அப்பொழுதான் நாரதர்கள் பிரபாகரனை கண்டுகொண்டனர். வளர்த்தகடா மார்பில்பாய்தது அதன்பின் வளர்த்தவர்கள் முள்ளிவாய்காலில் கடாவை தங்கள் வேள்விக்கு பலியாக்கினர். இதிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால் நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்ற நயவஞ்சகமான இந்துத்துவக் கோட்பாட்டைத்தான்.
    உலகத்திலுள்ள எல்லா உளவுத் துறைகளுக்கும் தனித்தனியா ஸ்ரைல்கள் பொதுத் தன்மைன்மைகள் உள்ளன. மாறாக இந்திய உளவுத்துறையான றோவிற்கு மட்டுட்மே இந்துத்துவ புனைகதை வரலாற்றுப் பாரம்பரியத்தின் தொடர்ச்சி இருக்கின்றது. நாரதரின் வாரிசுகள் மட்டுமே றோவை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
    இந்தளவிற்கும் தமிழ்மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என தீர்க்கதரிசனம் சொல்லிவிட்டுப் போன செல்வ நாயகத்தின் மகன் சந்திரகாசன்தான் இயக்கங்ளுக்கு ஆயுதப்பயிற்சி வழங்குவதற்கான தொடர்புகளை இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொடுத்தவர். அதன்பின் 85 ம் ஆண்டு இவரை ஊஐயு ஏஜன்ட் எனச் சொல்லி சுயுறு ஒரு நாகமாடியது. சந்திரகாசனை நாடுகடத்த சுயுறு விமானத்தில் ஏற்றியது. தமிழ் நாடு கொந்தளித்தது. அதனால் அவரை விமானத்திலிருந்து சுயுறு இறக்கிவிட்டது . அதன்பின் அவரது குரலை பிபாகரன் கோவணத்துன் ஊர்வலமாகப் போன பின் பிபிசி வானொலியில் கேட்கமுடிந்தது. சந்திரகாசன் ஒரு மாதாமுடி! மலைவிழுங்கி! இவ்வளவு நடந்தபின்னும் ஒன்றுமே தெரியாதவர் போல் அமசடிக்கிக் கொண்டுடிருக்கிறார். இப்பொழுது அவர் நொந்து போன தமிழ் உறவுகளின் காயங்களுக்கு மருந்து போட்டுக்கொண்டிருக்கிறார். ஒருவேளை ஆப்கானிஸ்தானில் ஒரு கமித்காசாய் உருவானதுபோல சந்திரகாசன் உருவாக இன்றளவிலும் முயற்சி செய்து கொண்டிருக்கலாம் யாரறிவார் பராபரனே! அதற்கான போட்டிகள் டக்ளஸ் பிள்ளாயான் கருணா கேபி சம்மந்தன் சிர்த்தாத்தன் செல்வம் அடைக்கலநாதன் என பட்டியல்கள் நீண்டு கொண்டே போகின்றன? கமித்காசாய்களால் இலங்கை மக்களுக்கு என்றுமே விடிவு வரப்போவதில்லை.
    இந்த இடத்தில்தான் அருந்ததிராய் என்ற ஒரு மனிதப்பிறவியை நினைவு கூர விரும்புகிறேன். இந்தியாவில் இருந்து கொண்டே இந்திய அரசை விமர்சித்துக் கொண்டிருக்கும் அருந்ததிராய் மாவோயிஸ்டுகள் பயங்கரவாதிகள் அல்ல காஸ்மீர் இந்தியாவின் பகுதியாக என்றுமே இருந்ததில்லை என்று சொல்லும் அருந்ததிராய் ஆதிவாசிளுக்காக போராடும் அருந்ததிராய் பத்து வருடங்களுக்கு முன் ஒருதடவை ஐரோப்பாவிற்கு வந்திருந்தார். அவரின் நாவல் பிரபலமான பொழுது ஐரோப்பா முழுக்க அவருக்கு மேடை அமைத்துக் கொடுக்கப்பட்டது. பேட்டிகள் எடுக்கப்பட்டன. பேர்ளின் நகரில் நடந்த கூட்டத்திற்கு நானும் சென்றிருந்தேன்
    “ஐயையோ என்வீட்டுக்கு காசு தண்ணிமாதிரிவந்து கொட்டுகிறது யாரோ காசு கொட்டுகிற பைப்லைனை என்வீட்டிற்கு திருப்பிவிட்டிருக்கிறார்கள் நான் திணறிக்கொண்டிருக்கிறேன்” என தனது பேச்சில் குறிப்பிட்டார் கூட்டத்தில் சிரிப்பொலிகள் எழுந்தன.
    அதன்பிறகு அருந்ததிராய் நர்மதா அணைக்கட்டுக்காக மக்களை வெளியேற்றாதேஇ ஆதிவாசிகளைக் கொல்லாதேஇ மாவோயிஸ்டுக்களை அழிக்கிறேன் என்று சொல்லி இந்தியாவின் கனிமங்களை வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு விற்காதேஇ காஸ்மீரை தனியேவிடு என்று தெருவில் இறங்கி சனங்களுடன் சேர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார். இந்த வரலாற்றுக் காலகட்டத்தில்தான் இந்தியா இலங்கைத் தமிழ் மக்களின் பொருளாதார மேப்பாட்டுக்கா பாடுபடுகிறது என உரத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறது.
    இந்திய மக்கட்தொகையில் பாதிக்குமேற்பட்டவர்கள் அரை வயித்துக் கஞ்சிக்காய் பாடாய் பட்டுக்கொண்டிருக்கும் நிலையில்தான் அது இலங்கைத் தமிழ்மக்களின் பொருளாதார வளர்ச்சிபற்றி பேசிக்கொண்டிருக்கிறது. இதன் நீட்சியாகவே இந்திய நாரதர்த்துறையின் செயற்பாடுகள் புகலிடத் தமிழ் மக்கள்வரைக்கும் வந்தடைந்திருக்கிறது. றோவின் இரத்தக்கறை படிந்த கரங்களை சந்திரசேகரன் லண்டன் வரையும் தூக்கிகொண்டுவந்து பாவமன்னிப்பை மிகவும் திமிர்த்தனமாக கேட்டிருக்கின்றார். இதை பரமார்த்த குருவின் சீடர்களான தேசம்நெற் ரவிசுந்தரலிங்கம் இராஜேஸ்வரி சம்மந்தன் மற்றும் இயக்கவாரிசுகள் ஆறஅமர்ந்து கேட்டிருக்கின்றார்கள். இந்தியா தூங்கிவிட்டதா விழிப்பாக இருக்கிறதா என அணைந்த கொள்ளிக்கட்டையை எடுத்துக்கொண்டுபோய் தேம்ஸ்நதியில் வைத்துப் பார்த்திருக்கிறார்கள். கொள்ளிக்கட்டை சீறவில்லை அதற்காக தேசம்நெற்றின் ஆசிரியர் ரி.சோதிலிங்கம் அவர்கள் சந்திரசேகரனுக்கு நன்றி தெரிவித்து கௌரவித்தார். இவர்களைப் பொறுத்தவரையில் நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பதை உளப்பூர்வமக நம்புகிறார்கள். மனப்பூர்வமாக வரவேற்கின்றார்கள் இவர்களும் கோமணத்துடன் ஆண்டியாவார்களா? ஞானப்பழம் கிடைக்குமா? அல்லது நாரதரின் நாமமும் பட்டையும்தான் கிடைக்குமா? என்பதை இனிவரும் காலங்கள்தான் சொல்லும்.
    ஜீவமுரளி
    நன்றி:அப்படியா.கொம்இ

    Reply