இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? : ஆதவன் (வன்னி)

Maaveerar_Thuyilum_Illam_2010இது கார்த்திகை மாதம். நம் இல்லங்கள் தோறும் சோகத்தின் வெளிச்சம். அப்படியும் ஒரு காலம் இருந்தது என்பதை எவரும் மறுக்க முடியாதுதான். ஆனால் எல்லாமும் முடிந்துவிட்டது. சரிகளுடனும் பிழைகளுடன் முன்று தசாப்த கால அரசியல் வாழ்வு முற்றுப் பெற்றுவிட்டது. அது பல்லாயிரக் கணக்கான மக்களின், போராளிகளின் தியாகத்தால் உருப்பெற்ற ஒன்று. வெறும் வாய்ச் சொல் வீரத்தாலோ, விதண்டா வாதங்களாலோ நிலைபெற்ற ஒன்றல்ல. எனவே இனி அதனை நாம் காயப்படுத்தவும் தேவையில்லை. கொச்சைப்படுத்தவும் தேவையில்லை.

சமீப நாட்களாக நடந்தேறிக் கொண்டிருக்கும் சில நிகழ்வுகளை பார்த்தால் எல்லாவற்றையும் தூக்கி வீசிப்போட்டு போனால் என்ன என்று கூட யோசிப்பதுண்டு. ஒரு புறம், உணவுக்காவும், தங்கள் மானம் மறைப்பதற்கான உடு துணிக்காகவும் கையேந்தி நிற்கும் மக்கள். மறுபுறமோ எதுவுமே நடக்காதது போன்று நல்லூர் கோயில் திருவிழாவில் முட்டி மோதிக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம். அடுத்து தமிழ்செல்வனுக்கு சிலை வைப்பதாகக் கூறி இன்னொரு கூட்டம். இப்போது மாவீரர் தினக் கொண்டாட்டத்திற்கான அழைப்பு விடும் பிறிதொரு கூட்டம். இது போதாதென்று தங்களை தாங்களே பிரதமர் என்றும் அமைச்சர்கள் என்றும் சொல்லிக் கொண்டும், அதற்காக பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருக்கும் இன்னொரு பிரிவு. கோமாளித்தனத்தின் எல்லை கூட எங்களுக்குத் தெரியவில்லை.

கடந்த முன்று தசாப்த கால போர் வாழ்வில் தன்னலமற்று தங்கள் உயிர்களை தியாகம் செய்தவர்களை நினைவு கொள்ள வேண்டும் என்பதில் தவறில்லை ஆனால் இறந்தவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவாவது இறந்து கொண்டிருக்கும் எங்கள் மக்களுக்கும் சரணடைந்த முன்னாள் போராளிகளுக்கும் ஏன் எங்களால் கொடுக்க முடியவில்லை. அவர்கள் குறித்து ஏன் எங்களால் கசினை கொள்ள முடியவில்லை. அவர்கள் செய்த துரோகம்தான் என்ன?

இப்படி எத்னையோ கேள்விகள் மனதை வருத்தும் போது கூடவே இன்னொரு கேள்வியும் எழுவதுண்டு. உண்மையிலேயே நாங்கள் ஒரு விடுதலை அவாவிய சமுகம்தானா? நடப்பவற்றை பார்த்தால் அப்படி நம்ப மனம் ஏனோ மறுக்கிறது. எப்படி எங்களால் இவ்வளவு சாதாரணமாக எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு சிந்திக்க முடிகின்றது. கடந்த மூன்று தசாப்பங்களாக போராட்டத்தின் பக்கபலமாக இருந்த உறவுகள்தான் இன்று நடு வீதியில் வாழ வழியின்றி இருக்கின்றனர். இந்த போராட்டத்தின் உயிர் மூச்சாக இருந்தவர்கள்தான் இன்று சரணடைந்து எதிகாலத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். உங்கள் விருப்பங்களுக்கு பலியான மக்கள் இன்று மரணத்திற்கு இரையாகிக் கொண்டிருக்கின்றனர். உங்கள் கனவிற்கு முகம் கொடுக்க போராடிவர்கள் இன்று தங்கள் சமூக-முகமிழந்து (social face) இருக்கின்றனர். இவர்களை காப்பாற்ற வேண்டிய பெறுப்பு ஒவ்வொரு புலம்பெயர் தமிழனுக்கும் உண்டு. இதனை தட்டிக் கழிக்கும் எவருமே நிட்சமாக மனச்சாட்சியுள்ள மனிதர்களாக இருக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் அனைவரும் இன்று சிறப்பாக வாழ்ந்து கொண்டிருப்பது அவர்களது பேரால்தான். இன்று களத்திலும் புலத்திலும் நீங்கள் தூக்கி பிடிக்கும் அரசியல் சுலோகங்களில் இருப்பதெல்லாம் அவர்களின் குருதி தொட்டு எழுதிய வாசகங்களே!

இந்தச் சூழலில்தான் மாவீரர் தினத்திற்கான அழைப்புக்கள் விடுக்கப்படுகின்றன. உண்மையில் இது ஒரு கொச்சைப்படுத்தலுக்கான அழைப்புத்தான். இறந்து கொண்டிருக்கும் முன்னாள் போராளிகளின் வாழ்வு மீது சிறிதளவு கூட அக்கறை கொள்ளாதவர்கள் இறந்து போன போராளிகளை நினைவு கொள்வதை எந்தவகையில் உண்மையானது என்று நம்புவது? தயவு செய்து அவர்களை உங்களது அற்ப பிழைப்புக்காக கொச்சைப்படுத்தாதீர்கள். பல்லாயிரக்க கணக்கான போராளிகளும் பல நூற்றுக் கணக்கான தளபதிகளும் தங்களை இழந்த இந்த போராட்டத்தில்; சு.ப.தமிழ்செல்வனுக்கு மட்டும் ஏன் ஒரு பிரத்தியேக சிலை வழிபாடு.  அந்த பணத்தில் பத்து குழந்தைகளுக்கான எதிகாலத்தை உவாக்க முடியும். முகம் சிதைந்து மற்றவர்கள் முன் தோன்றுவதற்கே அஞ்சி ஒழியும் முன்னாள் பெண் போராளிகளின் வாழ்வை மீட்டெடுக்க முடியும்.

துரோகத்திற்கு உங்களிடம் ஏராளம் விளக்கங்கள் இருக்கலாம் நன்பர்களே! ஆனால் நம்மை நம்பிய ஏழை மக்களை வஞ்சிப்பதுதான் உண்மையான துரோகம். இன்று புலம்பெயர் சூழலில் வசதியாக இருந்து கொண்டு அரசியல் செய்வோரும், உதவி செய்ய முன்வருவோரைக் கூட தடுத்துக் கொண்டிருக்கும் கனவான்களும் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் உங்களால் பலிக்கடாவாக்கப்பட்ட அந்த ஏழை மக்களுக்கும், எங்கள் அண்ணன்மார் இருக்கின்றனர் அவர்கள் எங்களைக் காப்பாற்றுவார்கள் என்று நம்பிக் கொண்டிருந்த அந்த போராளிகளுக்கும் நீங்கள் செய்து கொண்டிருக்கும் இந்த பச்சை துரோகத்தை வரலாறு நிட்சயம் பதிவு செய்யும்.

ஆயிரம் சாட்சிகளை விட பெரியது மனச்சாட்சி என்று ஒரு கருத்துண்டு. மனச்சாட்சி உறுத்தலுக்கு உட்பட்ட ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்தும் முன்னாள் போராளிகள் குறித்தும் ஏதோவொரு வகையில் குற்ற உணர்விற்கு ஆட்பட்டவர்களாகவே இருக்கின்றனர். கே.பி அண்ணருடன் கதைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அவர் அவ்வாறானதொரு குற்ற உணர்விற்கு ஆட்பட்டவராகவே பேசுகின்றார். எல்லோரும் ஒன்றுபட்டு கண்ட கனவு, தொடங்கிய பயணம் ஆனால் அதன் வலிகளையும் வேதனைகளையும் ஒரு குறிப்பிட்ட மக்களை மட்டும் அனுபவிக்கச் சொல்லுவது என்ன நியாயம். இதுதான் அவரின் வாதம். மனச்சாட்சிக்கு அஞ்சும் ஒவ்வொரு மனிதனையும் இந்த கேள்வி அலைக்கழிக்கின்றது. கே.பி ஒரு மனச்சாட்சிக்கு மதிப்பளிக்கும் மனிதர். அவர் பாவப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்களை விட்டுவிட்டு ஒதுங்கி வாழ விரும்பவில்லை. இந்த போராட்டத்தின் ஆதி அந்தம் வரை இருந்த ஒருவர் என்ற வகையில் அவர்களது இன்றைய துயர் வாழ்வில் தனக்கும் பங்குண்டு என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் துனிவு அவரிடமுண்டு. எனவே தனது இறுதிக் காலத்தில் தன்னால் இயன்றதை அந்த மக்களுக்காக செய்ய முயல்கின்றார். அவருடன் பேசிய சந்தாப்பங்களிலெல்லாம் நான் இதனையே புரிந்து கொண்டேன். இதுதான் அவரது பணியின் அடிப்படை. இதற்கு பலரும் பல்வேறு விளங்கங்களைச் சொல்லலாம். நாம் விளக்கங்களில் காலங்களை கடத்தியதுதானே அதிகம்.

கார்த்திகை மாதத்தை முன்வைத்து புதுவை அண்ணன் எழுதிய கவிதை வரிகள்  இவை. கேட்கிறதா மணி? கேட்கிறதா பாடல்? தெரிகிறதா நெய் விளக்கு? எங்களாலும் சில ஓலிகளை கேட்க முடிகிறது. எங்களாலும் சில காட்சிகளை கான முடிகின்றது நன்பர்களே! அது – எங்களை காப்பாற்றுங்கள் என்னும் பாதிக்ப்பட்ட மக்களின் கதறல்கள். இறப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் அங்கவீனமடைந்த அந்த போராளிகளின் இறுதிக் குரல்கள். வெள்ளத்தில் இடுப்பளவு தண்ணீரில் தனது கைக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நிற்கும் தாய்மாரின் காட்சிகள். இரவில் தான் தூங்கிவிட்டால் தன் குழந்தைகளை பாம்பு தீண்டிவிடுமோ, நட்டுவக்காலி குத்திவிடுமோ என்று அஞ்சி விழித்துக் கொண்டிருக்கும் உறவுகளின் காட்சிதான் எங்குமே தெரிகிறது. மணியும் இல்லை, பாடலும் இல்லை, எரியும் நெய்விளக்கும் இல்லை. நன்பர்களே கதறலும் கண்ணீரும் அவமானத்தில் கூனிக்குறுகிய முகங்களும்தான் இங்கு வாழ்வு. அவர்கள் இப்போதும் இருக்கிறார்கள் ஆனால் பின்னர் இறந்து போகலாம். இறந்து கொண்டிருப்பர்களை காப்பாற்றுவதே எங்கள் முன்னுள்ள ஒரேயோரு கடமையாகும். மனச்சாட்சியுள்ள ஒவ்வொரு புலம்பெயர் தமிழரும் ஒரு கணம் இறந்து கொண்டிருக்கும் உங்கள் உறவுகள் குறித்து சிந்திக்குமாறு நாம் கோருகிறோம். இறந்த போராளிகள் குறித்து சிந்திக்க முற்படும் இவ் வேளையிலாவது இறந்து கொண்டு இருக்கும் மக்கள் குறித்தும் முன்னாள் போராளிகள் குறித்தும் ஒரு கணம் சிந்தியுங்கள்.

Show More
Leave a Reply to Navendren Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

  • T Sothilingam
    T Sothilingam

    எத்தனையோ வகைவகையான ஆயுதங்களை வாங்க பணம் அள்ளி வீசிய சமூகம் ஏன் மூடிக்கிடக்கிறது? ஆயுதம் வாங்க நாளை பிறக்கும் தமிழீழம் என்று கடன் கேட்டு வட்டியுடன் மீளத் தருவோம் என்று வீடுவீடாய் போனவர்கள் இன்று ஏன் வாய்திறக்கிறார்கள் இல்லை? குறைந்தது தாம் செய்யாவிட்டாலும் சேர்த்த பணம் எங்கே என்ன நடந்தது அந்த பணத்திற்க்கு?

    புலம்பெயர்ந்தவர்களின் கைகளில் கிடக்கும் சொத்துக்கள் ஏன் இந்த முன்னாள் புலி உறுப்பினர்களை அந்த புலி வீரர்களை நீங்கள் போற்றிய வாயால் பாதுகாக்க வேண்டாமா? உங்கள் பணத்தில் வாங்கிய அவர்கள் பெற்ற கைதுகள் அவர்களின் மரணங்கள் குடும்பத்தின் இழப்புக்களுக்கு இன்று உங்கள் பணங்கள் தேவைப்படுகின்றது.

    முடங்கிக்கிடக்கும் பணங்களுக்கு என்ன நடந்தது என்று உண்மையை சொல்லியாவது இந்த ஏக்கம் கொண்ட முன்னாள் புலி உறுப்பினர்களின் உங்கள் மீது இருந்த நம்பிக்கை பொய் என்றாவது சொல்லுங்கள். வியாபாரம் தான் பண்ணிவிட்டோம் சுயநலம்தான் எமது குறிக்கோளாக இருந்தது போராட்டம் எமக்கு சுத்தமாத்து என்றாவது சொல்லி விடுங்கள்.

    இராணுவ முகாம்களில் அடைபட்டுள்ள இந்த முன்னாள் புலி வீரர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்குமாக அவர்களது வாழ்வில் ஒளியூட்ட உங்கள் சேவைகள்? எங்கே? தரப்படுமா? பதிலளியுங்கள்?

    போராடிய பேராளிகள் என்ன? ஆயுதங்களா தூக்கி எறிய? போராடிய பெண்பிள்ளைகள் தமது அடையாளங்களை கெளரவத்தை இழந்து சமூகத்திற்க்கு சேவையாற்ற விழைந்த தமக்கு இக்கதி என்று உள்ள நிலையை மாற்ற புலிகளின் பணங்கள் சொத்துக்கள் முழுவதுமாக பயன்படுத்தப்படல் வேண்டும்.

    புலிகளின் சொத்துக்கள் பணங்களை தம்வசம் வைத்திருந்து கொண்டு மறைவாக இருக்கும் அமைப்புக்களும் இன்று வரையில் நாட்டில் உள்ள முன்னாள் புலிப்போராளிகளுக்காக சேவையாற்றுபவர்களிடம் கையளிக்க வேண்டும். முன்னாள் புலிப்போராளிகளினால் நாட்டில் ஏற்ப்படுத்தப்பட்ட அமைப்புக்களினூடாக இந்த சேவையினை ஜரோப்பாவிலிருந்தும் நாட்டினுள் இருந்தும் செய்து வருகிறார்கள் இந்த சேவையாளர்கள் தம்முடன் போராடிய புலிப்போராளிகளின் உயிரை அவர்களது குடும்ப உறுப்பினர்களை பாதுகாக்கும் இந்த பணிக்கு இணைந்து சேவையாற்ற முன்வர வேண்டும்.

    உங்கள் பலரிடம் உள்ள பணங்களும் சொத்துக்களும் உங்களடையதல்ல புலிவீரர்களுடையதே களம் கண்ட அந்த போராளிகளினடையதே அவர்களுக்காகவே இந்த பணங்கள் சேர்க்கப்பட்டது அதை அவர்களிடமே கையளியுங்கள். பொறுப்புடன் பணியாற்றிய நிதி சேகரித்த முன்னாள் புலி இயக்க சேவையாளர்கள் இந்த கருத்தை பணிவுடன் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    போரை முகம் கொண்டு துணிந்து எழுந்து போராடியவர்களின் மனவேகத்திற்க்கு மதிப்பளித்து அந்த ஆழுமை கொண்ட பரம்பரையினரை எழ எழுந்திட வாழ வாழ்ந்திட உதவி செய்ய வேண்டியது புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் கடமையாகும்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    So appealing is this scenario that quite a number of Diaspora professionals and academics have been contributing large sums for these plans. Some western lawyers and experts have been minting money off these gullible Diaspora suckers. One legal eagle was being paid 1000 US dollars per day as a retainer for more than three months until recently. There is a Tamil saying about the “all knowing Gecko (arappadicha Palli)falling into the pot of Kool (stew)”. These antics remind one of that saying.—-dbsjeyaraj.com/dbsj/archives/1792

    Reply
  • Navendren
    Navendren

    Dear Writer,

    Very well covered article. It sincerely touched my heart. There is no day that I do not think about the people who paid a high price in the name of freedom struggle, including LTT front line members. We all have our duty to help this people. Due to the war only, we all (with few exception) are in the overseas countries. We are all safe and well-off due to those who sacrificed their live in the struggle.

    The help does not need to be in a big scale, they can be very small scale such as(siru thuli peru vellam):
    1. Do some thing to your family members first.
    2. Start small scale projects in your village/ town – e.g.: initiate training schemes/ improve school facilities/ encourage farm industries.
    3. Persuade your Old Boys/ Girls association in your countries (UK, Canada, USA, Australia, all European countries)to take care of one of the affected schools in Vanni or East province.
    4. Encourage Tamil shops to buy products made in North/ Vanni/ East to stimulate economy.

    PATHANCHALY NAVENDREN

    Reply
  • மாயா
    மாயா

    நவேந்திரன் அவர்களது எண்ணம் போன்றவைதான் இலகுவானதும் முறையானதும்.

    நவேந்திரம் ; முடிந்தால் தமிழில் எழுதுங்கள். பலருக்கு இலகுவாக சென்று சேரும்.

    இணைப்பொன்று:

    http://www.google.com/transliterate/indic/Tamil

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    NERDO – SRI LANKA

    -http://www.youtube.com/watch?v=T5g3YVornT4

    Reply
  • நந்தா
    நந்தா

    சோதிலிங்த்தின் ஆர்வம் நியாயமானது. ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யார்?
    வெளினாடுகளில் உள்ள புலி சொத்துக்களின் பினாமிகள் ஒரு போதும் இலங்கைத் தமிழர்கழுக்கு எதையும் கொடுக்க மாட்டார்கள்.

    ராஜபக்சவே சரணம் ஐயப்பா!

    Reply
  • manikandan
    manikandan

    சோதிலிங்கம் எவ்வளவு சோக்கா சோத்துக்குள்ளை பூசணிக்காயை மறைக்கப் பார்க்கிறார் பாருங்கள். புலிகள் பேரால் சேர்த்த சொத்துக்களையெல்லாம் கே.பி. கையில குடுக்கட்டாம்.. நல்லது …அதைவிட ராஜபட்சே கையில் நேரடியாகவே கொடுத்து விட்டால் போச்சுதெல்லோ…..

    T Sothilingam on November 17, 2010 11:11 am

    NERDO – SRI LANKA

    -http://www.youtube.com/watch?v=T5g3YVornT4

    /முன்னாள் புலிப்போராளிகளினால் நாட்டில் ஏற்ப்படுத்தப்பட்ட அமைப்புக்களினூடாக இந்த சேவையினை ஜரோப்பாவிலிருந்தும் நாட்டினுள் இருந்தும் செய்து வருகிறார்கள் இந்த சேவையாளர்கள் தம்முடன் போராடிய புலிப்போராளிகளின் உயிரை அவர்களது குடும்ப உறுப்பினர்களை பாதுகாக்கும் இந்த பணிக்கு இணைந்து சேவையாற்ற முன்வர வேண்டும். /T Sothilingam on November 14, 2010 8:52 am Edit This

    Reply
  • Siva
    Siva

    மணிகண்டன் இந்த கட்டுரையில் பாதிக்கப்படவர்களின் நிலைகளை விட அந்த பணங்கள் பாதிக்கப்படவர்களுக்கு போககூடாது என்று நிற்கிறீர்கள் யாரிட்டை போனாலும் அந்த போராளிகள் மக்களிடம் போனால் சரி ஆனால் நீங்கள் யார்மூலமாக போகலாம் என்று சொல்லவும்

    Reply
  • அபிமன்யு
    அபிமன்யு

    சண்டைக்கு தாராளாமாகக் கொடுத்த கைகள், சமாதானத்திற்கு தாராளமாகக் கொடுக்கத் தயங்குகின்றன!

    அழிவிற்கு அள்ளிக் கொடுத்த கரங்கள், வாழ்விற்கு அள்ளிக் கொடுக்கப் பின்வாங்குகின்றன!

    ஆயுதக் கொள்வனவுகளுக்கு கொட்டிக் கொடுக்க முன்வந்த மனங்கள், வாழ்வாதாரங்களுக்கு வழங்க சாக்குப் போக்குகளை முன்வைக்கின்றன!

    –தாங்களும் காரணம் என்ற குற்ற உணர்வோ, பச்சாத்தாபமோ யாதுமின்றி, “இதற்கெல்லாம் சிங்கள அரசாங்கம்தானே காரணம்; அரசாங்கமே பார்த்துக் கொள்ளட்டும்” என்ற விதண்டாவாதம் வேறு!

    இது என்ன மாந்தரோ? இது என்ன சமூகமோ?

    Reply