ஜே.வி.பி உறுப்பினர்கள் மீது யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாதவர்கள் தாக்குதல்.

JVP Bannerயாழ்ப் பாணத்தில் ஜே.வி.பி உறுப்பினர்கள் மீது நேற்று ஞாயிற்றுக் கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு யாழ்.கந்தர்மடத்தில் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதனின் இல்லத்தில் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும், ஜே.வி.பியின் உறுப்பினர்கள் மூவர் உரையாடிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள்களில் சென்ற இனந்தெரியாத நபர்கள் வீட்டிற்குள் புகுந்து ஜே.வி.பி உறுப்பினர்கள் மீது தாக்குதல்களை நடத்தினர். அத்துடன் ஜே.வி.பியினர் சென்ற வாகனமும் தாக்குதலுக்குள்ளானது.

இத்தாக்குதலில் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுனில் ஹெந்துநெத்தி, அக்கட்சியின் முன்னாள் உறுப்பினர் எம்.மோகன். கட்சியின் யாழ்.குழுத்தலைவர் லலித்குமார், ஜே.வி.பியின் பத்திரிகையான ‘லங்கா’வின் ஊடகவியலாளர் பிரியந்த ஆகியோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அங்கு வந்த பொலிஸாரினால் இவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டனர்.

தடுத்து வைக்கப்பட்டோர் மற்றும், காணாமல் போனோரின் விபரங்களை வெளியிட வேண்டும் எனக்கோரி யாழப்பாணத்தில் இன்று திங்கள் கிழமை ‘நாம் இலங்கையர்’ என்ற அமைப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவிருந்தது. இதற்காகவே ஜே.வி.பியினர் யாழ்ப்பாணம் சென்று பல்வேறு தரப்பினரைச் சந்தித்து உரையாடினர். இதனடிப்படையில் நேற்று மாலை 6.30 மணியளவில் யாழ்.கந்தர்மடத்திலுள்ள பத்மினி சிதம்பரநாதனின் இல்லத்திற்குச் சென்று அவருடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கையில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • மாயா
    மாயா

    போர் காலத்தில் இராணுவத்தால் கைதானவர்களது பெயர்ப் பட்டியலை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுப்பதற்காக பதாகை போராட்டம் நடத்தி, கையெழுத்து பெற்றுக் கொண்டிருந்த தமது அமைப்பின் 48 உறுப்பினர்களை போலீசார் கைது செய்துள்ளதாக ருவண் மதுரங்க தெரிவித்துள்ளார். இவர்களில் பல்கலைக் கழக மாணவர்களும் அடங்கியுள்ளனர்.

    -http://www.lankadeepa.lk/2010/11/15/images/jaffna-%5Bprotest-jvpDSC03919.jpg

    Reply
  • kovai
    kovai

    எழுபதின் பிற்பகுதியில் ரோகண விஜயவீரா, தன் தமிழருக்கெதிரான ‘அஞ்சாம் வகுப்பை’ ஈடு செய்ய யாழ்.முற்றவெளியில் கூட்டத்திற்கு வந்திருந்தார். தமிழர் ஒருவர், சிறையில் தன் நிர்வாணத்தை மறைக்க துவாய்’ தந்து உதவியதாக வீரகேசரி’யில் செய்தி வெளியிட்டிருந்தார். பல்லாயிரக் கணக்கான மக்கள் முன்னிலையில் அந்தத் தமிழர் பேசிக் கொண்டிருந்தார். மேடைக்கு பின்னே உரையாடிக் கொண்டிருந்த ரோகண’ மீது நெற்றிக்கு குறி வைத்து கல்லால் அடித்தார்கள். அடித்த குழுவில் நின்றவர்களில் எனக்குத் தெரிந்த முகம் புஷ்பராசாவினுடையது. அவர் தான் எழுதிய ‘சாட்சியத்தில்’ அந்த முக்கிய சம்பவம் இல்லை (இதைச் செய்தவர்கள் யாரென்பதையும், ஏனென்பதையும் அன்றைய இளைஞர் பேரவையினர் வெளிக்கொணர்வார்களா?) இரத்தம் ஓடியபடி இருக்க, உடனே மேடைக்கு வந்து நீண்ட சொற்பொழிவு செய்தார். ஆனால் அந்தச் சம்பவம், மறுதாக்கத்தை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியது வரலாறு. மீண்டும் இவ்வாறான ‘இனந்தெரியாத’ தாக்குதல் தமிழர்களுக்குப் பாதகமானது எனத் தெரிந்தவர்கள்தான், அரங்கேற்றுகிறார்கள்.

    Reply
  • மாயா
    மாயா

    இத் தாக்குதலைச் செய்தவர்கள் ; இலங்கை அரச புலனாய்வு துறைச் சேர்ந்தவர்களென ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்து ; இது குறித்து தான் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

    Reply