தமிழீழ மக்கள் விடுதலை கழகம் : ஊடக அறிக்கை

PLOTE_Bannerதமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சர்வதேச கிளைகளின் மகாநாடு ஜப்பசி மாதம் 30ம் 31ம் திகதிகளில் ஜேர்மன் ஸ்ருட்காட் நகரில் இடம்பெற்றது. இந்த மகாநாட்டில் சுவிஸ், ஜேர்மன், இங்கிலாந்து, பிரான்ஸ்,நோர்வே, கனடா நாடுகளின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கடந்தகால, நிகழ்கால, எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன் கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்திருந்த தலைவர் சித்தார்த்தன் அவர்கள் குறிப்பிட்ட விடயங்களின் அடிப்படையில், நீண்டகால இனப்பிரச்சினைக்கு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13வது திருத்த சட்டத்தின் முழு அதிகாரத்தையும் அமுல்படுத்துவதன் மூலம் ஒர் ஆரம்ப நடவடிக்கையாக கொள்வதுடன், இலங்கை தீவில் சிங்கள மக்கள் அனுபவிக்கும் சகல ஜனநாயக உரிமைகளையும் இலங்கை தமிழ் பேசும் மக்கள் தாமும் அனுபவிக்கின்றோம் என்று திருப்திபடும் வகையில் முழுமையான அரசியல் தீர்வை இலங்கை அரசு முன் வைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

PLOTE_Conference_31Oct10இந்த இனப்பிரச்சினை தீர்வில் (இலங்கை – இந்தியா ஒப்பந்தம்) 1987ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அதிகாரப் பரவலாக்கலை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா தனது பங்களிப்பை செலுத்த வேண்டும் என்று தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சர்வதேச கிளைகளின் மகாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த கால இந்த ஆயதபோராட்டத்தினை ஆரம்பித்து வைத்தவர்களில் நாமும் ஒருவர் என்ற ரீதியில் ஏற்பட்ட மக்கள் அழிவுகளுக்கு நாம் மிகுந்த வேதனைப்படுவதுடன், பாதிக்கப்பட்ட மக்களிற்கு எம்மால் ஆன உதவிகளை செய்யவதற்குரிய வேலை திட்டங்களை முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இன்நிலையில் பலவீனமாகவுள்ள தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் குறித்து ஒரு தீர்க்கமான அரசியல் தீர்வுக்கு அரசு முன்வரவேண்டும் என்பதில் பாரியளவு பங்களிப்பை புலம்பெயர் தமிழ் சமூகம் செலுத்த வேண்டும் என்று வேண்டுகின்றோம்.

சர்வதேச செயற்பாட்டு குழு சார்பில்
செ.ஜெகநாதன்
தமிழீழ மக்கள் விடுதலை கழகம்

ஜப்பசி 31 2010

Show More
Leave a Reply to vanavil Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

  • சுகுணகுமார்
    சுகுணகுமார்

    முதலில் புளட் தமிழ் மக்களிடம் தன்னைப்பற்றி ஒரு சுயவிமர்சனம் செய்து காணாமல் போன புளெட் தோழர்கள் கொலை செய்த தோழர்களின் விபரங்களை வெளியிட்டு யார் யார் எங்க என்ன செய்தார்கள் என்ற விபரத்தை வெளியிட்ட பின்னரே ஒரு பொது மன்னிப்பு கேட்ட பின் மக்களிடம் போவது முறை! அதை விடுத்து மிண்டும் ஜனநாயகம் பேசியபடி புதைகுழிகளை கிண்ட ஆரம்பிக்க வேண்டாம்!

    Reply
  • vanavil
    vanavil

    இந்த மாநாட்டின் விபரங்கள் ரகசியமாகவே நடந்ததா? இங்கே ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? குறைந்தது தேசத்துக்காவது? புலிகளது மாநாடுகளுக்கே தேசம் போகும் போது இங்கே தேசம் சார்பில் யாராவது சென்றார்களா?

    Reply
  • நந்தா
    நந்தா

    சுடுகாட்டில் சாம்பலின் மீதுநின்று கொண்டு “உன்னை மீண்டும் உயிர்ப்பிப்பேன்” என்று அறை கூவல் விடுவதைப் போலவே இவர்களது “மாநாடு”நடத்தப்படுகிறது.

    புளட், புலி என்ற அடையாளங்களை நிலை நிறுத்தி சாதிக்க என்ன இருக்கிறது?

    “ஈழம்” என்பது தமிழர்களின் சர்வ நாசங்களுக்கும் காரணம் என்று தெரிந்த பின்னரும் இவர்களை நம்பி பின்னால் போகின்ற மக்கள் கூட்டம் பரிதாபத்துக்குரியவர்கள் மாத்திரமல்ல, இந்த இயக்கங்கள் பற்றி அறியாதவர்களாகவுமிருக்கிறார்கள்.

    Reply
  • மாயா
    மாயா

    எப்படியான ஒரு இயக்கம். போட்டுள்ள படத்தை பார்க்கும் போது விவேக் கொமடிதான் ஞாபகத்துக்கு வருகிறது. “எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டனே” என்பது போல. 23 பேர்தானே படத்திலே தெரிகிறார்கள். யார் முகமும் தெரியவில்லையே? இன்னமும் யார் இருக்கிறார்கள்? எதைக் கதைத்தார்கள்? என்ன முடிவு எடுத்தார்கள்? எதுவுமே தெரியவில்லை. ஜெயபாலன் தகவல்களை தேடி எழுதுங்கள்

    Reply
  • palli
    palli

    //காணாமல் போன புளெட் தோழர்கள் கொலை செய்த தோழர்களின் விபரங்களை வெளியிட்டு யார் யார் எங்க என்ன செய்தார்கள் என்ற விபரத்தை வெளியிட்ட பின்னரே//
    தெரிந்தால் சொல்லமாட்டார்களா?? அவர்களுக்கே தெரியுமோ தெரியாது; செய்தவர்கள் சிலர் வீரமக்கள் ஆகிவிட்டனர்: மிகுதி புலம் பெயர் தேசத்தில் ;; இவர்கள் புதியகழகத்தினரப்பா?? மாயா சொல்லுங்க உன்மையில் கழகத்தில் இன்று இருப்பதில் ஆர் ஆர் ;பவனை விட வேறு யாராவது
    பளயவர்கள் இருக்கிறார்களா?? சித்தர் ஜெகநாதன் கணக்கில் இல்லை;

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    இயக்கம் எல்லாவற்றையும் இலவசமாய்த்தரும், நாங்க அதுக்ககுள் போய், ஊராற்ர காசிலும், அவர்களிடம் கொள்ளையடித்த காசிலும் – சாப்பிட்டும், உடுப்புப்போட்டும், அரசியல்படிச்சும், தமிழ்மக்களுக்கு கொஞ்சம் கீரோஸியம் காட்டலாமெண்டு வெளிக்கிட்ட நம்ம சில “புளட்” காரர்களுக்கு, அது சரிவராமப்போனபின், வெளிநாடுகளுக்கு ஓடிவந்து, தாங்க “புளட்” என்று கீரோஸிசம் காட்ட வெளிக்கிட்டு, அதுவும் எடுபடாமல் போனவர்கள், புலியோட சேர்ந்து தங்கட கீரோஸியத்தைக் புலம்பெயர் தேசங்களில்காட்ட வெளிக்கிட்டும் மண்கவ்விய பின்னர், எல்லாவிதமாகவும் இணையத்தளங்களில் எழுதி தமது செஞ்சோற்றுக்கடனை தீர்ப்பதற்கு வெளிக்கிட்டுள்ளதாக பொதுசனமும் இன்றைய “புளட்”டும் அபிப்பிராயப்படுகிறதாக கேள்விப்பட்டேன்.

    மாயாவும், அஜீவனும் மற்றும்பல ஆயிரக்கணக்கான நம்ம புலம்பெயயர்தேசத்து பிரபல்யங்களும் இதற்கு விதிவிலக்கல்லவே!

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    // மாயாவும், அஜீவனும் மற்றும்பல ஆயிரக்கணக்கான நம்ம புலம்பெயயர்தேசத்து பிரபல்யங்களும் இதற்கு விதிவிலக்கல்லவே! //

    அஜீவன் புளொட்டை விட்டு வெளியேறியது 1986ல். அதன் பின்னர் அரசியல் ஈடுபாடுகளில் இறங்கவில்லை.

    Reply
  • rasan
    rasan

    அப்ப நீங்கள் தமிழீழம் என்ற சொல்லை உங்கடை பெயரில் இருந்து முதலில் நீக்குங்கள்.

    Reply
  • palli
    palli

    //அஜீவன் புளொட்டை விட்டு வெளியேறியது 1986ல். அதன் பின்னர் அரசியல் ஈடுபாடுகளில் இறங்கவில்லை.//
    அதுவரையும்தான் புளொட் அதன் பின்??

    Reply