தடுப்பு முகாமில் இருந்து யாழ் பல்கலைக்கழகம் வந்த மாணவன் மீது பகிடிவதை. மாணவன் தற்கொலை முயற்சி!

Univercity_of_Jaffnaயாழ். பல்கலைக் கழகத்தில் சிரேஸ்ட மாணவர்களால் பகிடிவதைக்கு உட்பட்டதாகக் கூறப்படும் முதலாம் ஆண்டு மாணவன் ஒருவர் அதிகளவு பனடோல் வில்லைகளை உட்கொண்ட நிலையில் யாழ். போதனா வைததிய சாலையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளார். பல்கலைக்கழக விடுதியில் வசிக்கும் கலைப்பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவனாகிய எஸ்.ராஜேஸ் கண்ணா (வயது 23)என்பவருக்கே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன் பாடசாலை அதிபர் மாணவர்களை ஏசியதால் நான்கு மாணவிகள் நஞ்சருந்திய சம்பவம் ஒன்று வலிகாமம் பாடசாலை ஒன்றில் நிகழ்ந்தது அறிந்ததே. (பாடசாலையில் வைத்து நஞ்சருந்திய நான்கு மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி.)மேலும் பல்கலைக்கழக மாணவிகள் மத்தியில் தற்கொலை வீதம் அதிகமாக உள்ளதாகவும் அதற்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலரின் பாலியல் துஸ்பிரயொகங்கள் காரணமாக இருப்பதாகவும் பரவலான குற்றச்சாட்டுக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. (‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்)

நேற்று திங்கள் கிழமை மாலை எஸ்.ராஜேஸ் கண்ணா தங்கியிருந்த பாலசிங்கம் விடுதியில் வைத்து மூன்று மாணவர்கள் இவரைத் தாக்கியுள்ளதாகவும் இதனால் பாதிக்கப்பட்ட மாணவன் அதிகளவு பனடோல் வில்லைகளை உட்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவன் தடுப்பு முகாமிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மீது தாக்குலை மேற்கொண்ட மாணவர்கள் இவரை பகிடிவதை செய்யும் நோக்கத்துடன் தாக்கவில்லை எனவும், குறித்த மாணவர் ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொண்டதாகவும் அதனால் சிறு அசம்பாவிதம் ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மாணவனுக்கு சிகிச்சையளிக்க உரிய மருந்து இல்லாததால் பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஊடாக கொழும்பிலிருந்து அம்மருந்தினைப் பெற ஏற்பாடு செய்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

Show More
Leave a Reply to BC Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • BC
    BC

    இந்த பகிடிவதை இன்னும் யாழ்பாணத்தில் இருப்பதையிட்டு வெட்கப்பட வேண்டும். வெளிநாட்டில் புதிதாக பல்கலைக்கழகம் சேர்ந்த நண்பரின் உறவினருடன் பல்கலைக்கழக கன்ரீனில் உணவருந்திய போது இலங்கையில் நடக்கும் பகிடிவதை பற்றி கதைத்தோம். இலங்கையில் பகிடிவதை செய்பவனைவிட நிறவெறி தாக்குதல் செய்யும் வெள்ளையன் நல்லவன்.

    Reply
  • karuna
    karuna

    நீங்கள் பகிடிவதை என்று கூறுகிறீர்கள். நானும் யாழில் விசாரித்தபோது இதையெ கூறினார்கள் ஆனால் நோர்வே தமிழ் நெற் பொய்யை இப்படி கூறி தமிழ் மக்களை உசுப்பேத்துகிறது!

    Ex-Liberation Tiger combatant student in Jaffna University attempts suicide
    [TamilNet, Tuesday, 23 November 2010, 07:25 GMT]
    A first year Arts Faculty student in Jaffna University, a released ex-Liberation Tiger combatant from Vanni, tried to commit suicide Monday by taking overdose of tablets, sources in Jaffna. Meanwhile, the parents of a former Liberation Tiger combatant who had been rehabilitated after arrest and later released to join his family complained 18 November to Jaffna Human Rights Commission (HRC) office that their son is continually threatened by Sri Lanka Army (SLA) Intelligence Unit officers and men when he appears to sign at the SLA Intelligence Unit camp as instructed. The 23-year-old student who attempted suicide is admitted to Jaffna Teaching Hospital where the Vice-chancellor of Jaffna University, Professor. N. Shanmuagalingan visited him.

    The released ex-Liberation Tiger combatant was led to attempt suicide due to mental stress caused by an atmosphere of intimidation and threat to life, fellow students said.

    In August 2010 a third year medical student of Jaffna University committed suicide hanging himself in a house in Kantharoadai in Chu’n’naakam in Jaffna.

    In April 2010, 26-year-old Balasingham Karunanithi, a third year student of the Faculty of Management in Jaffna University, arrested and tortured by Sri Lanka Army (SLA) when he was held in a Vavuniyaa detention camp after the war on Vanni, committed suicide in Jaffna at a house in Naachchimaar Koayiladi where he was staying.

    In October 2009, Vignarajah Gowribalan, 26, a medical student in Jaffna University from Ki’linochchi in Vanni committed suicide due to mental stress.

    Accusations have been raised recently that the former Liberation tiger combatants released after rehabilitation are intimidated and at times attacked in the SLA Intelligence Wing camps in Achchezhu and Oorezhu in Jaffna.

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    இராணுவ தடை முகாமை விட மோசமாக இருக்கிறது யாழ் பல்கலைக் கழகம்? சிங்கள இராணுவத்தினரை விட மோசமானவர்களா இங்கு பயிலும் மாணவர்கள்?

    இராணுவத்திடம் அகப்பட்டு சாகத் துணியாத ஒரு முன்னைய போராளி ; இங்கே சாகத் துணிகிறார்கள் என்றால் நிலமையை யோசித்து பாருங்கள்?

    Reply
  • BC
    BC

    அன்பின் கருணா, அஜீவன் , பகிடிவதை என்று நடந்தபடும் சித்திரவதை, மனிதவதைக்கு எதிராக நாம் இருப்போம். நன்றி. எனக்கு TamilNet ஒரு சைபர்.0

    Reply
  • karuna
    karuna

    பகிடிவதையில் இவரின் இயக்க முன்நாள் செயற்பாடுகள் கிண்டலடிக்கப்பட்டுள்ளது. இவரை இயக்கம் என்று யாழ் பல்கலைக்கழகத்திற்கு காட்டிக் கொடுத்ததே இந்த தமிழ் ஊடகங்கள் தான்! புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் தமிழ் பிரதேசங்களில் இன்று ஒரு தீண்டத்தகாதவர்கள்.

    Reply