அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திற்கு வவுனியாவில் சிலை

Amirthalingam_A_TULFதமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திற்கு வவுனியாவில் சிலை அமைப்பதற்கு தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்டக்கிளையின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழரசுக் கட்சியின் வவுனியாக் கிளைத் தலைவர் டேவிட் நாதன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னிக்கான கூட்டம் வைரவபுளியங்குளத்தில் இடம்பெற்ற போது தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் பேசுகையில் வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளை விரைவுபடுத்த வேண்டியதுடன், ஆக்கபூர்வமான செயற்பாட்டு வடிவங்களுக்கும் முதன்மை அளிக்க வேண்டும். அதற்கென மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களிலும் விரைவில் தமிழரசுக்கட்சியின் அலுவலகங்களை திறப்பதுடன் வவுனியாவிலும்  செட்டிகுளம், ஓமந்தை, நெடுங்கேணி, சாஸ்திரிகூளாங்குளம் ஆகிய பகுதிகளில் வட்ட செயலகங்களும் திறக்கப்படும் என தெரிவித்தார்.

Show More
Leave a Reply to karuna Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • Selva
    Selva

    I think Mr.Amirthalingam deserves it,but the statue should not be opened by anybody who associated with the terrorists who killed him brutally.Sampamthan,Suresh and Co. have no maral roght even to take part in theopening ceremony
    Selva

    Reply
  • karuna
    karuna

    காக்கா கக்கா போக ஒரு இடமா? சிலை வைக்கும் காசிற்கு ஒரு கட்டத்தை கட்டி அதற்கு பேர் வைத்திருந்தால் பிரயோசனமாகவும் இருந்திருக்கும். அது மரியாதை! இன்றைய தேவையை உணராத இந்த கூட்டம் என்றும் திருந்தப் போவதில்லை!

    Reply
  • BC
    BC

    //சிலை வைக்கும் காசிற்கு ஒரு கட்டத்தை கட்டி அதற்கு பேர் வைத்திருந்தால் பிரயோசனமாகவும் இருந்திருக்கும். //
    சரியாக சொன்னீர்கள் கருணா.ஏன் தான் சிலை வைப்பதில் தமிழர் பலருக்கு அப்படி ஒரு ஆசையோ தெரியவில்லை.

    Reply
  • palli
    palli

    என்னது சிலையா அதுவும் அமீருக்கா?? அன்றய தலைவன் சாகடிக்கபட்டான், அதனால் சாகடித்தவன் காலடியில் பல ஆண்டு கிடந்துவிட்டு அவனையும் யாரோ சாகடிக்க அன்றய தலைவனுக்கு சிலை வைத்து விட்டு தேசிய தலைவனுக்கு என்ன வைக்க போறியள், ஒரு தலவனுக்கு சிலைவைக்க கூட எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் ஜயா; சிலை வைத்து விட்டு திறப்பு விழாவுக்கு அமைச்சர் கருனாவை கூப்பிடுங்கோ; அவருக்கும் அமீருக்கு சிலை வைப்பதில் பங்கு உண்டல்லவா??

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…வைத்து விட்டு திறப்பு விழாவுக்கு அமைச்சர் கருனாவை கூப்பிடுங்கோ; அவருக்கும் அமீருக்கு சிலை வைப்பதில் பங்கு உண்டல்லவா??…//

    ஏன் அந்தலவு தூரம்? ஸ்ரீலங்கா பாலிமன்ரில நடந்த வினோதமான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில் சிங்கள அமைச்சர்கள் சிரில் மத்தியூ, நெவில் ஃபெனாண்டோ போன்றோர் அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையற்கரசி பற்றி சொல்லிய காதுகூசும் கதைகளையும் இரைமீட்டுக்கொள்ளுங்கள், அதனை அவரக்கூப்பிட்டு அவரின் வாயால் சொல்லச்சொல்லிக் கேட்டால் இன்னும் விசேசம். (அவர் அண்மையில் பீ.பீ.சி யைக் கூட்டிக்கொண்டு போய் செய்த உல்லாசப்பிரயானம் போல இதனையும் செய்து ஒலிபரப்பலாம்)

    Reply
  • நந்தா
    நந்தா

    வவுனியாவில் இன்னமும் யாழ் அகதிப் பிரவாகம் நின்ற பாடாகத் தெரியவில்லை!

    Reply
  • மாயா
    மாயா

    தமிழ் மக்களை சிலைகளாக்க அரசியல் நடத்தியவரல்லவா? அமிருக்கு சிலை வைக்கத்தான் வேண்டும். அதுக்கு முன்னால எலும்புக்கூடா நிக்கிற மக்கள் சிலையாகாமல் வாழ ஒரு வழி பண்ணிட்டு > சிலை வைக்கிறவங்களுக்கும் சேர்த்து சிலைகளை வச்சுக்கோவன்.

    தமிழ் தலைவர்கள் எல்லாம் சிலையாகவே இருந்திருந்தா > அந்த மக்கள் சீரும் சிறப்போடு வாழ்ந்திருப்பார்கள்.

    Reply
  • santhanam
    santhanam

    அமீரின் சிலை வடக்கு கிழக்கில் வாழும் ஒரு மனிதனின் செயல் இறந்த பின்பும் வாழவேண்டும் அமீர் அன்றும் இன்றும் வாழ்கிறார்.

    Reply