யாழ். பல்கலைக்கழக மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கருத்துத் தெரிவிக்க துணைவேந்தர் மறுப்பு.

Shanmugalingam_N_UoJகடந்த திங்கள் கிழமை யாழ்.பல்கலைக்கழக முதலாம் வருட மாணவன் ஒருவர் சிரேஸ்ட மாணவர்களால் கடுமையாக தாக்கப்பட்ட விடயம் குறித்து யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரிடம் விளக்கம் கேட்கச் சென்ற யாழ். ஊடகவியலாளர்களை துணைவேந்தர் என்.சண்முகலிங்கன் சந்திக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பு முகாமில் இருந்து யாழ் பல்கலைக்கழகம் வந்த மாணவன் மீது பகிடிவதை. மாணவன் தற்கொலை முயற்சி!

துணைவேந்தர் வேலைப்பழுவுடன் இருப்பதால் அவரைச் சந்திக்க முடியாது என தணைவேந்தரின் செயலர் தெரிவித்து ஊடகவியலார்களை திருப்பியனுப்பியதாகவும், எவ்வளவு முயற்சி செய்தும் துணைவேந்தர் என்.சண்முகலிங்கனை சந்திக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவன் தடிகளாலும் கை கால்களாலும் சிரேஸ்ட மாணவர் குழுவொன்றினால் மாறி மாறித் தாக்கப்பட்டதாக பல்கலைக்கழகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும், தாக்குதல் நடத்திய மாணவர்களின் பெயர்களையும் அம்முறைப்பாட்டில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Show More

Your email address will not be published. Required fields are marked *

 

4 Comments

 • M Saba
  M Saba

  //துணைவேந்தர் வேலைப்பழுவுடன் இருப்பதால் அவரைச் சந்திக்க முடியாது என தணைவேந்தரின் செயலர் தெரிவித்து ஊடகவியலார்களை திருப்பியனுப்பியதாகவும், எவ்வளவு முயற்சி செய்தும் துணைவேந்தர் என்.சண்முகலிங்கனை சந்திக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.//

  துணைவேந்தர் வேலைப்பழுவுடன் இருந்தாரா வேறேதும் பழுவுடன் இருந்தாரா?

  தேசம்நெற்றில் தன்னைப் பற்றி வந்த பல செய்திகள் காரணமாக சண்முகலிங்கன்/ம் பாரிய அளவில் மனமுடைந்து போயிருக்கின்றாராம்.

  அத்துடன் வருகின்ற December 27ம் திகதிக்குப் பின்னால் கதிரை தனதாக இருக்க மாட்டாது என்றும் அறிந்து கொண்டிருப்பதால், தனக்கேன் வீண் பிரச்சினை (?) என்றும் அவர் கைகழுவி விட்டிருக்கலாம்.

  எது எப்படியாயினும், பிரச்சினைகளை தூண்டி விட்டு குளிர்காய்ந்த சண்முகலிங்கனுக்கு பெரும் தலையிடியாக இருந்து கொண்டிருக்கின்றது தேசம்நெற். உண்மைகள் நிச்சயம் வெளிவரும், அப்போது சண்முகலிங்கன் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவார்.

  பகிடி வதைக்குப் பின்னால் இன்னொரு பயங்கர முகமும் இருக்கின்றது. அதனை மாணவர்களை தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் யுக்தியாக சில விரிவுரையாளர்கள் கையாள்தலும் வழமையே. இந்த மாதிரியான படித்த மனிதர்கள் மறைமுகமாக பகிடி வதை பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுவார்கள்.இதற்கு சிறப்பான உதாரணம் வவுனியா வளாகத்தின் புவனேஸ்வரி லோகனாதனும் எஸ். குகனேசனுமாவார்கள். இதனை மையமாக வைத்துத்தான் இவர்கள் வளாக முதல்வர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்துவார்கள்.

  ஊடகவியலாளர்கள் மாண்புமிகு சண்முகலிங்கனின் மின்னஞ்சல் இல் தொடர்பு கொண்டு தம் செவ்விகளை நிகழ்த்தலாமே?

  Reply
 • சண்முகதாசன்
  சண்முகதாசன்

  செல்வி. M. சபா அவர்களே. காடைத்தனமும் பயங்கரவாதமும் புவனேஸ்வரிக்கும் குகனேசனுக்கு மட்டும் தான் தெரியும் என்று நினைக்க வேண்டாம்.

  சண்முகலிங்கனுக்கும் காடையர் கூட்டத்தை ஏவிவிட்டு அட்டூழியத்தை கட்டவிழ்ப்பதில் பரிச்சயமுண்டு தெரியுமா? 2001/2 பகுதிகளில் சமூகவியல் துறைக்கு சண்முகலிங்கன் தலைவராக இருந்த போதில், அங்கு விரிவுரையாளராக கடமையாற்றிய றிச்சர்ட் என்பவர் மீது இப்படித்தான் காடையர்களை ஏவிவிட்டு தாக்குதல் மேற்கொண்டார். சமூகவியல் துறையில் தன்னை இளைஞரும், புத்திசாலியுமான றிச்சர்ட் ஓரம் கட்டிவிடுவார் என்று பயந்த சண்முகலிங்கன் மாணவர்கள் கூட்டத்தை உசுப்பேற்றி படிப்பித்தலில் மிகவும் கண்டிப்பானவரான றிச்சர்ட் மீது கோபமடையச் செய்து கட்டவிழ்த்த பயங்கரவாதத்தின் விளைவு, றிச்சர்ட்டும் அவர் சகோதரரும் தெருவில் மறித்துத் தாக்கப்பட்டார்கள், இதன் விளைவாக தலையில் காயமுற்று மண்டை வெடித்தநிலையில் – திரு. றிச்சர்ட் கனநாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டியதாயிற்று. இறுதியில் அவர் யாழ் பல்கலையை விட்டே போய்விட்டார்.

  ஆக மொத்தத்தில் அடியாட்களை வைத்து அட்டூழியம் செய்யும் நிழலுலக பயங்கரவாத குழுத்தலைவர்களுக்கு இன்னுமொரு பெயர் யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் என்றும் சொல்லி விடலாமல்லவா?

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  ///….செல்வி. M. சபா அவர்களே…..//

  M Saba on November 24, 2010 6:37 pm என எழுதினார். ஆனால் சண்முகதாசன் அவரை செல்வி ஆக்கிவிட்டார். ஆளைஆள் முன்பின் தெரியுமே அல்லது இருவரும் ஒரே அட்களோ? நடக்கட்டும் நடக்கட்டும்!!

  Reply
 • அப்பாவி
  அப்பாவி

  சண்முகதாசன் அவர்களே!

  “சண்முகலிங்கன் மாணவர்கள் கூட்டத்தை உசுப்பேற்றி …”

  அப்போ மேற் குறிப்பிட்ட விடையம் தொடர்பாகவும் சண்முகலிங்கனை விசாரிக்க வேண்டும்தானே?

  இதை ஒத்த விடையம் அல்லது இதை விட பாரதுரமான விடையம் வவுனிய வளாகத்தில் புவனேஸ்வரி லோகநாதனால் முன்னெடுக்க பட்டதாக கேள்வி. யாரவது இது பற்றி தகவல் தருவார்களா?

  Reply