தமிழீழ விடுதலைப் போராட்ட கால ஊடகவியலாளர் எஸ் சிவநாயகம் காலமானார்.

Sivanayagam_S_Journalistஊடக வியலாளர் எஸ் சிவநாயகம் தனது 80வது வயதில் நேற்று (நவம்பர் 29) கொழும்பில் காலமானார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கிய காலகட்டத்தில் ஊடகவியலாளராகச் செயற்பட்ட இவர் 1982ல்  யாழ்ப்பாணத்தில் வெளியாகிய சற்றடே ரிவியூ பத்திரிகையின் ஆசிரியராக கடமையாற்றியவர். இவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் நேரடியாகத் தொடர்புபட்டு அதனுடன் வாழ்ந்தவர். அதன் பின்னர் சென்னையில் தமிழர் தகவல் நடுவத்திற்கு பொறுப்பாகச் செயற்பட்டவர்.

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது இறுதிக்காலப் பகுதியில் புற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார். இவர் கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றில் தனது கல்வியை மேற்கொண்டவர்.

ராஜீவ் காந்தியின் படுகொலையை அடுத்த எஸ் சிவநாயகம் இந்தியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். பின்னர் 1993ல் பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோரிய இவர் லண்டனிலும் நீண்டகாலம் வாழ்ந்தவர். சில ஆண்டுகளுக்கு முன் கொழும்பு சென்ற இவர் இறுதி யுத்தத்தின் போதும் அங்கேயே வாழ்ந்தவர்.

the_Pen_and_the_Gunஇவர் சில ஆண்டுகளுக்கு முன் தனது அனுபவத் தொகுப்பான ‘தி பென் அன் தி கன்’ என்ற நூலை வெளியிட்டு இருந்தார். மேலும் அதற்கு முன்பாக ‘ஸ்ரீலங்கா: விற்னஸ் ரு ஹிஸ்ரி’ என்ற நூலையும் எழுதி இருந்தார்.

இவருடைய இறுதி நிகழ்வு டிசம்பர் 02 கொழும்பில் நடைபெற உள்ளது.

Show More

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • விளங்காமுடி
    விளங்காமுடி

    ஒரு அறிஞனை தமிழினம் இழந்து விட்டது. அந்த எண்பதுகளில் தேடிக் கிடைத்த திரவியமாய், ‘சற்றடே ரிவியூ’ பத்திரிகையை வெளிக்கொணர்ந்த மனிதனுக்கு என் அஞ்சலி.

    Reply
  • பல்லி
    பல்லி

    ஒரு அனுபவம் வாய்ந்த ஊடகவியாளன் இழப்பு உன்மையிலேயே அந்த இனத்துக்கு மட்டுமல்ல சமூகத்துக்கே பெரிய இழப்புதான், அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுவதோடு பல்லி குடும்ப கண்ணீர் அஞ்சலி.
    பல்லி குடும்பம்;

    Reply
  • மாயா
    மாயா

    மறைந்த அறிஞருக்கு எமது அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுவோம்.

    Reply
  • ஜயக்குமரன்
    ஜயக்குமரன்

    சிவநாயகம் ஐயா அவ்ர்கள் தனது எழுத்தைப் பயன்படுத்திப் பிழைக்காத அரிதான மிகச் சில பத்திரிகையாளர்களில் ஒருவர். அனைத்து ஈழ அரசியல்வாதிகளும் (விடுதலைப் புலிகள் உட்பட) அவருடைய எழுத்தாற்றலையும், பத்திரிகைத் துறை அனுபவத்தையும் தமது தேவைக்கு பயன்படுத்திக் கொண்ட பின்பு அவரைக் கைவிட்டனர். அவர் யாரைப் பற்றியும் அவதூறு எழுதியது கிடையாது. தமது பேனாவை தமிழ் மக்களது விடுதலைக்கும், நல்வாழ்வுக்கும் அர்ப்பணித்த ஒரு பத்திரிகையாளரை இழந்தது தமிழ் மக்களது துரதிர்ஷ்டமே.. அவரது வாழ்வும் எழுத்தும் வளர்ந்துவரும் இன்றைய ஊடகவியலாளர்களுக்கு மிக முக்கியமான ஒரு முன்னுதாதரணம்..தமிழ் மக்கள் என்றும் அவரை நன்றியுடன் நினைவு கொள்வர்..

    Reply