துயர்துடைக்க வாரீர் : இணுவையூர் பதஞ்சலி நவேந்திரன்.

Maaveerar_Memorialமற்றையவர்களின் விடிவிற்காக தன்னுயிர் ஈய்ந்த அந்த உத்தமர்களிற்கு,  
எனது ஒருகண மௌன அஞ்சலி
 
போராட்டம் உக்கிரம் அடைந்த உச்சக்கட்டத்தை அடைந்த நேரத்தில் இருந்து எத்தனை தூக்கமற்ற இரவுகள். இத்தனைக்கும் என்னுடன் நெருக்கமாக சம்பந்தப்பட்ட நண்பர்களோ உறவினர்களோ எந்த விதத்திலும் இந்த உச்சக்கட்ட போராட்டத்தில் பாதிக்கப்படவில்லை இருப்பினும் இறுதிநிலைப் போராட்டத்தில் உயிர்நீத்த அத்தனை மக்களை நினைத்தும் மனம் ரணமாக வேதனைப்பட்டிருக்கிறது. அங்கவீனர்களாக உறவுகளை இழந்த ஒன்றுமற்று அனாதைகளாக்கப்பட்ட பொதுமக்கள் போராளிகளை நினைத்த நினைத்து மனம் துவளுகின்றது.

வெளிநாடுகளில் வாழும் பெரும்பாலானவர்கள் இந்தப் போராளிகளுக்கும் போராட்டத்தினால் அகப்பட்டு நலிந்த மக்களுக்கும் மாற்றுக்கருத்தின்றி நிறையவே அடைக்க முடியா கடன்பட்டு இருக்கிறார்கள். போராட்டமின்றி வெளிநாட்டின் சுக போகங்கள் எமக்கும் கிடைத்திருக்க மாட்டாது. திரும்பிப் பாருங்கள் எம்முடன் படித்த சக மாணவ போராளிகளை எம்மைவிட மிகத் திறமைவாய்ந்த நண்பர்கள் போராட்டத்தில் இணைந்து, ஒன்று இறந்து இருக்கிறார்கள் அல்லது எல்லாவற்றையும் இழந்து இன்று ஒன்றுக்கும் இயலாதவர்களாக எல்லோராலும் வெறுக்கப்படும் நிலையிலும் இருப்பது மிகப்பரிதாபமானதும் வேதனையானதும்.

போராட்டத்தில் அவர்கள் இணையாமல் இருந்திருந்தால் இன்று எம்மைவிட மிகச்சிறப்பாகவே இருப்பார்கள். அவர்களின் திறமையால் தாய்நாட்டிலே போராட்டத்தினாலே எல்லோரும் தான் பாதிக்கப்படடார்கள் இருப்பினும் எனது இரக்கம் புலிப்போராளிகள் மீதுதான். காரணம் புலிப் போராளிகள் தவிர்ந்த மற்றயவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட பல வகையான அமைப்புக்கள் முண்டியடிக்கின்றன. இலங்கை அரசு உட்டபட பல அரசாங்கங்களும் இதில் உள்ளடக்கம்.
துரதிஸ்டவசமாக எல்லோராலும் கைவிடப்பட்டவர்கள் இந்த புலிப் போராளிகளே. மற்றைய இயக்கங்கள் இவர்களை எதிரியாக பார்க்கின்றன. அரசாங்கமோ ஒளித்துக்கட்ட வரிந்து கட்டி நிற்கிறது. எல்லாவற்றிக்கும் மேலாக யாருக்காக போராடினார்களோ, அந்த மக்களுக்கும் இவர்களை பிடிக்காமல் போனது மிகமிக துரதிஸ்டவசமானது. இப்போராளிகளை பராமரிக்க வேண்டிய பாரிய பொறுப்பு வெளிநாடுகளில் வாழும் ஒவ்வொருவருக்கும் உண்டு. தயவு செய்து உதவிக்கரம் நீட்டுங்கள்.

மாவீரர் தினம் முடிவடைந்து ஒரு வாரம் ஆகின்றது. விதைக்கப்பட்டவர்களுக்கு உரிய மரியாதை வணக்கம் செலுத்த வேண்டியது எமது எல்லோரினதம் கடமை. மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும் நான் மேலே குறிப்பிட்ட போராட்டத்தில் பாதிக்கப்பட்ட இந்த நலிந்த மெலிந்த மக்களுக்கு, போராளிகள் உட்டபட நாம் என்ன செய்யப்போகிறோம்?

தலைமைகள் அழிக்கப்பட்டு சிதைக்கப்பட்ட நிலையில் எம்மை வழிநடத்த ஒருத்தரும் இல்லையா? என மனம் விம்மி வெடிக்கிறது. செய்வதற்கு நிறைய இருந்தும் இதைசெய் இப்படிச்சொல் என்று சொல்வதற்க்கு தகமையான தலைவர்களோ அமைப்புகளோ இல்லாமல் மனம் அல்லல்படுகின்றது.

நம்பி நடந்த பலர் ஏமாற்றிவிட்டார்கள். எனவே யாரையும் நம்ப மனம் மறுக்கிறது. இருப்பினும் உதவிசெய்ய மனம் உன்னுகிறது. வழிதான் தெரியவில்லை. இருப்பினும் பிறை ஒளியாய் சில கருத்துக்கள் பாதிக்கப்பட்ட இந்த சமூகத்திற்கு நாம் செய்யும் உதவி பாரிய நடவடிக்கைகளாக இருக்க வேண்டும் என்பதில்லை. சிறுதுளி பெரு வெள்ளம் என்பார்கள். எம்மால் முடிந்த சிறுசிறு உதவிகள் ஒவ்வொருவரும் செய்தால் அதுவே சிற்றருவியாகி ஆறாகி கடலாகி சமுத்திர வடிவமாகும்.

நாளை என்று ஒத்திப்போடாமல் இன்றே இக்கணமே செயல்வடிவம் எடுப்போம்.

1. எமக்கு தெரிந்த நண்பர்கள் உறவினர்களுக்கு எம்மால் முடிந்த சிறு உதவிகள்.

2. அடுத்த கட்டமாக நாம் பிறந்த ஊர் கிராமம் அல்லது பட்டினம் வெளிநாடுகளில் இந்த கிராமங்களை அடிப்படையாக வைத்து அமைப்புக்களை உருவாக்குங்கள். அவற்றில் இணைந்து சில உருப்படியான காரியங்களை உங்கள் கிராமங்களுக்கு செய்யுங்கள்.

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயரும்.
 
3. தமிழர்களின் அடையாளங்களில் ஒன்று கல்விக்கு முதன்மை அளித்தல். இக்கல்விக்கு தாய் நாட்டிலுள்ள பாடசாலைகள் உறுதுணையாக நின்றன. நிற்கின்றன. இப்பாடசாலைகளின் பழைய மாணவர் அமைப்புகள் வெளிநாடுகளில் இயங்குகின்றன. நாட்டுக்கு நாடு இவை இருக்கின்றன. நானா? நீயா? என போட்டி போட்டு ஒரே தேவைக்கு பல நாட்டிலுள்ள இச்சங்கங்கள் தமக்குள் பேசாமல் அதிபர் கேட்டுவிடடார் என்பதற்காக பணத்தை வாரி இறைக்கின்றன. படித்த நன்றிக்கடனை செலுத்த வேண்டும் என்ற கடமை உணர்வு அளவிற்கு அதிகமாகவே, தேவைக்கு மிதமிஞசியே செய்ய வைக்கிறது. 40 சீட்பஸ் அதற்கு நிரந்தர ஓட்டுனர். அதனைப் பராமரிப்பதற்கு அதைப் பாதுகாக்க கொட்டகை இப்படியே பட்டியல் நீள்கின்றது.
 
இந்த வெளிநாட்டில் இயங்கும் பழைய மாணவர் சங்கங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் ஒருவருடத்திற்கு உங்கள் உதவிக் கரங்களை இந்தப் பாதிக்ப்பட்ட இடங்களில் உள்ள பாடசாலைக்கு நீட்டுங்கள். ஒரு பாடசாலையை தத்து எடுங்கள். ஒரு வருடத்திற்கு நீங்கள் படித்த பாடசாலைக்கு உதவி செய்யாமல் விட்டால் அப்பாடசாலை ஒன்றும் தராதரத்தில் குறைந்துவிடாது.

முற்றாக ஒன்றுமே இல்லாமல் பிரிந்த கூரையும் ஆசிரியர்கள் இல்லாத பாடசாலைக்கு நீங்கள் உதவ முடியமானால் அவர்கள் அதனால் அடையும் பலன் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என்ற கருத்தை ஆதரிக்க மாகவி பாரதியாரை உதவிக்கு அழைக்கின்றேன்.
 
இன்னறுங் கனிச்சோலைகள் செய்தல்
இனிய நீர்க்கண் சுனைகள் இயற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னர் உள்ள தர்மங்கள் யாவும்
பெயர்விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்னயாவினும் புண்ணியம்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்து அறிவித்தல்
வீணாண வெட்டிப்பேச்சை கைவிட்டு வாரீர் துயர் துடைக்க

இணுவையூர் பதஞ்சலி நவேந்திரன்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

33 Comments

 • saba
  saba

  எங்கே ஜயா இவ்வளவு காலமும் இருந்தீங்க இங்க ஜரோப்பாவில் ஊர் சங்கங்கள் ஏராளம் தொடங்கி 20 வருடங்களாக இருக்கிறது இது உங்களுக்கு தெரியாதோ? இல்லாட்டில் நீங்களும் புத்துக்குள்தான் இருந்தீர்களா இவ்வளவு காலமும் இப்பதான் உங்களுக்கும் விடிந்துள்ளது போல் உள்ளது.

  Reply
 • Ahilan
  Ahilan

  என்ன நவேந்திரன் அவர்களே! நரபலியெடுத்தவர்களுக்கு நயந்துரைக்கிறீர்கள். யார் மாவீரர்கள்? சாவுக்குப்பயந்து சயனைட்டுடன் திரிந்தவர்களா? ஆயுதமே இன்றி நிராயுதபாணியான மக்களை கொன்று குவித்தவர்களா? நாம் வாழ்வதற்காக அப்பாவி நிராயுதபாணிகளை கவசமாகப் பயன்படுத்தியவர்களா? மாவீரர்கள். கோழைகளுக்கு மாவீரர் என்ற பட்டம் கொடுத்தவனே ஒரு கோழைதான் என்பதை அறியவும். தீர்க்கதரிசனம் இன்றி எமது இனத்தையும் பொருளாதாரத்தையும் அழிந்த மடையர்கள் மாவீரர்களா? புலத்துப்பணத்தை எப்படிக் கறக்கலாம் என்பதில் வெகு கரிசனையாக இருக்கிறீர்கள்: அரங்கேற்றம் பிறந்தநாள் விழாக்கள் என்று கூத்தடிக்கிறீர்களே அவற்றை முதலில் ஊரில் உள்ள ஏழைகளுக்கு அனுப்பிவிட்டு கோழைகளுக்கு அஞ்சலி செலுத்துவதா விடுவதா என்பதை பின்பு யோசிக்கலாம். அனியாயமாக புலிகளால் சுடப்பட்ட ஏனைய இயக்க போராளிகளை என்ன வீரர்கள் என்று அழைக்கப்போகிறீர். கற்பிணித்தாயை குண்டுகட்டி அனுப்பிய பாதகர்களை மாவீரர் எனும் போது அருவெருப்பாக இருக்கிறது. உமது வீட்டில் நாலு உயிர் புலிகளால் கொல்லப்பட்டிருந்தால் அதன் வேதனை உமக்குப் புரியும். வசதியாக இருந்து கொண்டு வாய்கிழியக் கதைக்கலாம்.

  Reply
 • மாயா
  மாயா

  சையநைட் கடித்து சாகச் சொன்னவர்கள் ; சைனைட் கடிக்காது சரணடைந்ததை என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை. கிடைத்த சமயங்களை பயன்படுத்தியிருந்தால் இவ்வளவு படு கொலைகள் நிகழ்ந்திருக்காது.

  கொலை வெறியோடு திரிந்தேர் ; கொல்லப்படும் போது மனதை வருத்துகிறது. இவர்களும் அதைத்தானே செய்தார்கள்.

  காதலித்த குற்றத்துக்காக மண்டையில் போட்டவர்கள். அதை வீடியோவில் பதிவாக்கி இணையத்தில் விட்டிருந்தாலும் இதை விட வேதனையாக இருந்திருக்கும். ஏன் என்று கேட்கத் தோன்றும்? சிங்களவன் ; தமிழனைக் கொல்கிறான். அவனுக்கு எம்மில் ஈவிரக்கம் இருக்காது. அனால் தமிழனே தமிழனை; கொல்வதைப் பார்த்தால் இதன் வலியும் ; வெறுப்பும் இதைவிட அதிகமாகியிருக்கும்.

  யாழ் வீதிகளுக்கு பழக்கமில்லாத வேற்றுப் பகுதியிலிருந்து போராட என வந்த இளைஞர்களது கழுத்தில் டயர்களை போட்டு எரித்த போது கோலா கொடுத்த பெரியோர்களே; உங்களுக்கு இப்போது வரும் வீடியோக்கள் வலிக்கிறதே? அதே வலி அந்த இளைஞர்களைப் பெற்ற பெற்றோருக்கும் இருந்திருக்காதா?

  உண்ண வழியில்லாது ஒருவனோடு படுத்த அபலையின் மண்டையில் போட்டார்களே? எவன் பாவம் என்றான்?

  புலிச் சொல் கேளாது வாக்குப் போட்டதற்காக விரலை வெட்டினார்களே? எவன் பாவம் என்று எதிர்த்தான்?

  பெத்த குழந்தைகளை ; ஒழித்து மறைத்த பெற்றோரை போட்டுத் தள்ளினார்களே ? எவன் பாவம் என்றான்?

  போருக்கு வர முடியாது எனக் கெஞ்சிய எத்தனை பாலகர்களை இழுத்துச் சென்று களப் பலியாக்கினர்கள்? யார் பாவம் என்றார்கள்?

  எத்தனை? எத்தனை?

  இன்று சிங்கள இராணுவத்திடம் கெஞ்சும் ரமேசிடம் எத்தனை பேர் கெஞ்சியிருப்பார்கள்? எத்தனை பேரை போட்டிருப்பார்? எத்தனை பேருக்கு போட உத்தரவு கொடுத்திருப்பார்? மொழி புரிந்தவனிடம் கெஞ்சும் போது அவனுக்கு உனது உணர்வு புரியாது. ஆனால் மொழியால் ; உணர்வால் ஒன்றுபட்ட எத்தனை பேரை இது போல விசாரித்து போட்டுத் தள்ளியிருப்பார்கள்?
  -http://www.youtube.com/watch?v=59HOzX8vDB8&feature=player_embedded

  யார் செய்தாலும் கொலை கொலைதான். படு கொலை படுகொலைதான். நீ என்ன செய்கிறாயோ ; அது உனக்கும்தான். அதுதான் இயற்கை. இனியாவது இந்த கொடுமைகளை தவிர்த்து வாழ மக்களை வழி நடத்துவோம்.

  Reply
 • Ilamsei
  Ilamsei

  அன்பர்களே
  நீங்கள் யாபேரும் புலிகளால் பாதிக்கப்பட்டதும் புலிகளின் பிழைகள் யாவும் மற்றவர்களுக்கு தெரியாது என்ற கொள்கையினை நீங்கள் கை விட வேண்டும். இப்பொழுது அல்லலுறும் மக்கள் புலிகளால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாக நிர்பந்த்தத்தலோ புலிகளில் இணைந்து துன்பப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவ முன்வருதல் நம் கடமை ஆகும். என்னெனில் நேரடியாக நீங்கள் மற்ற இயக்கங்களில் இருந்தவர்களுக்கு உதவி செய்யலாம் ஆனால் அப்பாவி புலி உருபினர்களிட்கு உதவி செய்ய முடியாது. விரும்பினால் கூட உதவ முடியாது. நன்றி மறத்தல் நன்றன்று. நீங்கள் மற்ற இயக்கங்களில் இருந்து பல கடமைகள் ஆற்றினீர்கள். மறுக்கவில்லை. ஆயினும் நீங்கள் முழுதுமாக தூய்மையானவர்களா? சரி புலி தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்றீர்கள் அவர்கள் முடிந்தும் ஏன் இன்னும் தமிழர்களின் ஒடுக்குமுறை அகலவில்லை?
  இங்கு நவேந்திரன் கோரியது உதவி செய்வதர்ட்கு மட்டும் தான். அத்துடன் இறந்தபின் யாபேரும் ஒன்று என்ற எமது பண்பாடினை மறுக்கிறீர்கள். 20 வருடமாக உங்களது சங்கங்கள் இயங்கினது தெரியாமல் இல்லை இப்போ துன்பபடுவோர்களுக்கு உதவி மறுக்கும் நீங்கள் வசதி இல்லாமலா இருக்கிறீர்கள்? சரி நீங்கள் ஒரு மாவீரர் தினத்தினை சிவகுமார் நாளில் வையுங்கள் பார்க்கலாம்? ஒரு பதினைந்து பேரினை தான் உங்கள்ளால் கூட முடியும். பிரபாகரன் இருந்தது போல் நீங்களும் புலி எதிர்ப்பு என்பது ஒன்று தான் வாழ்க்கை என்று மாறாதீர்கள். எதிரியுடன் கூட கூடுச்சேர முனையும் நீங்கள் உங்கள் சகோதரர் பிழையான வலினடதல்லல் அல்லலுறுவதிலிருந்தும் காப்பாற்ற மறுக்குறீர்கள். என்ன கொடுமை?
  இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்.

  Reply
 • Ahilan
  Ahilan

  Ilamsei
  நீங்கள் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் மறைமுகமாக உங்கள் எழுத்துக்கள் ஒத்துக்கொள்கின்றன பலியெடுக்கும் புலிகளின் நடவடிக்கைகளை இதோ
  /நேரடியாகவோ அல்லது மறைமுகமாக நிர்பந்த்தத்தலோ புலிகளில் இணைந்து துன்பப்படுகிறார்கள்./

  புலிகள் பலமாக இருந்தபோது மாவீரர் குடும்பங்களின் இராசபோக வாழ்க்கை பற்றி மறந்த விட்டீர்களோ. தட்டிச்சுத்திய காசுகளில் நடல்புடல் வாழ்க்கை. செய்த பழிகளை அனுபவிப்பதற்குச் சந்தர்பம் கிடைத்திருக்கிறது அனுபவிக்கட்டுமே. எமது கடமையைப்பற்றிப் பேசும் நீங்கள் நாம் புலிகளால் நையப்புடைக்கப்படும் போதும், மக்கள் புலிகளால் கொல்லப்படும்போதும், மக்களைப் பயணக்கைதிகளாக வைத்திருந்த போதும் என்ன செய்தீர்கள். உங்கள் கடமை உணர்வு என்ன செய்தது? புலிகளை ஒரு கேள்வி கேட்டீர்களா? அப்படி ஏதும் நடந்ததாகத் தெரியவில்லையே. புலிகளின் வழியில் புலத்துப்பணத்தை தட்டிச்சுத்த வருகிறீர்கள். உடலுழைப்பின்றி அடிக்கும் கொள்ளைதானே இது.

  / நீங்கள் மற்ற இயக்கங்களில் இருந்தவர்களுக்கு உதவி செய்யலாம் ஆனால் அப்பாவி புலி உருபினர்களிட்கு உதவி செய்ய முடியாது. விரும்பினால் கூட உதவ முடியாது/ ஓகோ.. மில்லியன் கணக்கில் அல்ல பில்லியன் கணக்கில் புலிகளுக்கு என்று சேர்த்த பணங்கள் எங்கே. அதை இப்பவும் புலிப்பினாமிகள்தான் வைத்திருக்கிறார்கள். அதை மக்களுக்குக் கணக்குக்காட்டி பயன்படுத்துங்கள். எமது லண்டன் மக்களிடம் கறந்தகாசுகளுக்குக் கணக்குக் காட்டுங்கள். ஓசியில் தின்ன முயற்சிக்காதீர்கள். தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கத்துக்குப் பணம் கேட்பதே தண்டனைக்குரியது என்பதை மறந்து விடவேண்டாம்.

  /சரி புலி தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்றீர்கள் அவர்கள் முடிந்தும் ஏன் இன்னும் தமிழர்களின் ஒடுக்குமுறை அகலவில்லை?/ புலிகள் மட்டுமே காரணம். தமிழரிடம் இருந்த அனைத்தையும் நந்திக்கடலில் கொட்டியபின் எம்மக்களின் தன்னம்பிக்கை, போராடும் திறன், பொருளாதாரம். கல்வி, எம்மிடையே வாழ்ந்த புத்திஜீவிகள் அனைவரையும் கொன்று குவித்துவிட்டு எம்மையும் அடிமைகாக்கி சிங்கள அரசிடம் கொடுத்து விட்டு ஒடுக்கு முறைபற்றிக் கேட்கிறீர்கள்.
  கட்டுரையாளர் நவேந்திரனுக்கு வக்காளத்து வாங்கும் நீங்கள் அவரும் ஒரு ஒடுக்குமுறையாளன் என்பதை அறிவீரா?
  இங்கே பாடசாலை நடத்தினார்கள். கணக்கு வளக்குகளைச் சரியாகக் காணோம். படிப்பிக்கும் வாத்திமாருக்கு சரியான சம்பளம் கொடுக்கவில்லை. ஊரில் புலிகளை கொண்டுவந்து அப்பாக்குட்டி பள்ளிக்கூடத்தில் கூட்டம் வைக்க ஒடி ஒழித்தவர்கள் புலியின் பெயரைச் சொல்லிக்கொண்டு காசடிக்க நிற்கிறார்கள்.. நவேந்திரனது ஊரில் உங்கள் செயல்பாடுகளை இங்கே விளக்க முடியுமா? அங்கே நவேந்திரன் போன்றோருக்கு வாலும் தெரியாது வரியும் தெரியாது

  /இப்போ துன்பபடுவோர்களுக்கு உதவி மறுக்கும் நீங்கள் வசதி இல்லாமலா இருக்கிறீர்கள்/ மக்கள் துன்பப்படும்போது என்ன செய்தீர்கள் அப்போதும் புலிகளுக்குத்தானே வக்காளத்து வாங்கினீர்கள். புலிகள் மக்கள் வதைசெய்தபோது விரலுயத்த முடியாதவர்கள் இப்போ கேட்கிறீகள் கொள்ளையர்களுக்கும் கொடும்பாவிகளுக்கும் உதவுமாறு. உங்களுக்குள் இருப்பது மனமா? மரக்கட்டையா?
  பிரபாகரன் என்ற பத்தாம் வகுப்புக்கூடப் படிக்காதவன் புலியக உருவானதே சிவகுமாரனால் என்பதை மறக்க வேண்டாம். புலிகளிடம் போதிய சனம் இருக்கு என்கிறீர் அவர்களின் கணக்கு வளக்கைக் காட்டி விட்டு அவர்களிடம் காசு கேட்க வேண்டியதுதான் பின்பு என்ன மாற்றுக்கருத்தாளர்களிடம் பேச்சு? புலிகளை அன்றுமல்ல இன்றும் இனி என்றும் எதிர்ப்போம். அதற்காக அரசுடன் சேரவேண்டிய அவசியம் எமக்கில்லை. புலிகளையும் அரசையும் தராசில் போட்டால் தெரியும் யார் படு அயோக்கியர்கள் என்பது. எம்மைக் பொறுத்த முறையில் இருவரும் ஒன்றுதான். புலிகளை ஆதரித்தவர்களுக்கும் புலிகளுக்கும் இந்தத்தண்டனைகள் போதாது என்பது எமது கருத்து. கொஞ்ச நெஞ்சப்பாடா பட்டீர்கள்.

  Ilamsei /இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்./ இந்த எழுத்தைப் பார்த்தால் புலியின் பழக்கம் தெரிகிறது. நீங்கள் என்னத்தைச் சொன்னாலும் காசைத்தாருங்கள் என்பது போல் இருக்கிறது. தேனெடுக்கப்போனவன் விரல் நக்குவதுபோல் நீங்கள் அடித்ததை கணக்குக் காட்டுங்கள். புலியைச்சாட்டி நீங்கள் வேறு

  Reply
 • BC
  BC

  //புலிகளின் வழியில் புலத்துப்பணத்தை தட்டிச்சுத்த வருகிறீர்கள். உடலுழைப்பின்றி அடிக்கும் கொள்ளைதானே இது.//

  சரியாக சொன்னீர்கள் அகிலன். இங்கே ஒரு வேண்டுகோள், அங்கே ஒரு போராட்டம். தொழிலை மறுபடியும் தொடங்கும் முயற்ச்சி நடக்கிறது.

  Reply
 • Ahilan
  Ahilan

  பிசி! என்ன சொல்கிறீர்கள். சாவுமணியா (சாவு- பணமா) கொண்டு திண்டது போதாதா? புலத்தில் கொள்ளை அடித்துத் திண்டது போதாதா? போதுமையா நிறுத்தச் சொல்லுங்கள். பிணம் விழுத்திச் சேர்க்கும் பணம் வாழவிடாது. வாழ்கொண்டு வெட்டும். பிரபாரனுக்கு மண்டையில் விழுந்தது போல் கொத்துத்தான் விழும். அங்கே தமிழர்களை வாழவிடுவதில்லை கொன்று தீர்ப்பது என்று புலிகளுடன் இவர்களும் சபதம் எழுத்து இருக்கிறார்களோ?

  Reply
 • thurai
  thurai

  ஈழத்தமிழரின் இன்றைய நிலைமைக்கு காரணம் தானாக தனது நிலமையை உணர்ந்து செயற்படாமல் மற்ரோரை பார்த்து அவர்களின் வழி செல்வதுதான்.
  தென்னிந்தியாவில் திராவிடத்தமிழர் என உசுப்பேத்தி தி.மு.க என தொடங்க இலங்கையில் தமிழ் என தொடங்கினார்கள். சினிமாத்துறையில் கதாநாயகன் வில்லன் கன்னிப்பெண் போல. இலங்கைப் பிரச்சினையும் உள்ளது. புலம் பெயர்நாடு முழுவதும் சினிமா, நாடகங்கள், இவற்ரால் பிழைக்கும் தொலைக்காட்சி நிறுவனக்கள்.

  ஈழத்தமிழர் அரசியல் பிரச்சினையும் அவ்வாறே போய் ஜிரிவி க்கு பிழைப்பாகின்றது. இதில் புலிசாரார் யாவரும் கதாநாயகர்கள். சிங்களவர் அவர்களின் அரசியல் தலைவர்கள் மற்றும் மாற்ருக்க்ருத்துக்காரர் வில்லன்கள். ஈழ்த்தமிழினம் கன்னிப்பெண். இம்மூன்றையும் வைத்தே
  ஜிரிவி யின் தயாரிப்பாளரும் மற்ரும் இவர்களோடு சேர்ந்தோரும் பிழைப்பு நடத்துகிறன்ர்.

  பெயரளவில் மட்டும், தமிழர்களிர்காக, உற்வுகளிற்கா, தொப்புள் கொடிகளிற்காக இன்னும் எத்தனையோ.-துரை

  Reply
 • மாயா
  மாயா

  ஜிரிவியில் ஒரு Paavam குறும்பட SujeethGயை – தினேஷ் பேட்டி கண்ட போது, பேச்சு சுதந்திரம் பற்றியும், மீளாய்வு செய்ய வேண்டும் என்று ஏதொதோ சொன்னார். எப்படி இருந்த தினேஷ் இப்பிடி ஆயிட்டீங்களே?

  Reply
 • saravanabavan
  saravanabavan

  என்ன நவேந்திரன் அவர்களே! நரபலியெடுத்தவர்களுக்கு நயந்துரைக்கிறீர்கள். யார் மாவீரர்கள்? சாவுக்குப்பயந்து சயனைட்டுடன் திரிந்தவர்களா? ஆயுதமே //ahilan
  உயிருக்கு பயந்தால் எதற்கு நஞ்சோடு திரிகிறார்கள்.

  Reply
 • Ahilan
  Ahilan

  சரவணபவன்
  மற்றவர்களுக்கு கழுத்தில் நஞ்சு கட்டிவிட்டு சிவனென்று உசுப்பேத்தி கடைசியில் தான் மட்டும் குப்பி கடிக்காது சரணடைந்தது ஏன்? கொத்துப்பட்டுச் சாகவா? உயிர்வாழ ஆசை இருந்தது அல்லவா? உயிருக்குப் பயமில்லை சரவணா சாவுக்குப்பயம். இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. நாங்கள் மட்டும் சரணடைவோம் மற்றவன் பிள்ளைகள் குப்பி கடிக்கட்டும்.

  Reply
 • மாயா
  மாயா

  //நாங்கள் மட்டும் சரணடைவோம் மற்றவன் பிள்ளைகள் குப்பி கடிக்கட்டும். – அகிலன் //

  அப்பாவிகளையும் ; சிறுவர்களையும் முன்னரங்குகளில் போராட தள்ளிவிட்டு சாகடித்தவர்கள் ; கடைசியில் தாம் சாகப் பயந்து சரணடைந்தனர். சரணடையப் போவதில்லை என்று சொன்ன நடேசன் கடைசியில் சரணடைந்து கொல்லப்பட்டார். பெற்றோல் கலனோடு திரந்தவர்களும் சரணடைந்து கொல்லப்பட்டார்கள்.

  இதை கிளிநொச்சி விழுந்ததும் செய்திருந்தால் ;ஏகப்பட்ட அப்பாவிகள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். அதைவிட கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி இருந்தால் இவர்களில் அநேகர் வாழ்ந்திருக்கலாம். இருந்தாலும் இன்று வெளியில் இருந்து பேசும் பலர் இருந்திருப்பார்களோ தெரியாது? அவர்களை இவர்கள் போட்டுத் தள்ளித்தான் இருப்பார்கள்.

  சமாதான காலத்தில் ; இவர்கள் செய்தது வெளியே புலிகளுக்கு எதிரானவர்களை அல்லது ஒதுங்கியிருந்தோரை போட்டுத் தள்ளியதுதானே?
  இவர்கள் அனைவரும் சொன்னது போல கும்பலாக தற்கொலை செய்திருந்தால் ; கடைசியில் மிஞ்சியவர்கள் தப்பியிருப்பார்கள்.

  Reply
 • saravanabavan
  saravanabavan

  சிங்களத்தோடு போராடியோ பேசியோ ஒன்றையுமே பெறமுடியாது என்பதை நினைவில் வைத்திருங்கோ..இங்க சொல்லுறார்கள் வந்த வாய்ப்பை எல்லாம் தவறவிட்டுட்டார்கலாம் .ஏன்பா இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நம்மட வரதராசரை கொண்டுவந்து யாழில நடமுறைபடுத்தினான்களே… அந்த ஒப்பந்தத்தில் உள்ள அடிப்படை அம்சம் வடகிழக்கு இணைந்த பிரதேசம் ஆக இருக்கவேண்டும் என்பதுவே தலைகீழாக மார்ரிடடன்களே…இதிலிருந்து என்ன தெரியிது கொடுப்பவை எல்லாம் எதிர்காலத்தில் பறிக்கப்படும் .கொடுக்கிற சாமி கூரையை பிச்சுக்கிட்டு குடுக்கும் என்பது போல சிங்கள அரசு தமிழனுக்கு தீர்வை கொடுக்க வேண்டும் என்று மனதளவில் நினைத்திருந்தால் தீர்வுத்திட்டத்தை முன்வைத்துவிட்டு புலியோட யுத்தத்தை செய்திருப்பான். தமிழனுக்கு கட்ட கோமணம் கூட மிஞ்சாது…………நாம ஒற்றுமை ஆகாத வரை…

  Reply
 • மாயா
  மாயா

  //ஏன்பா இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நம்மட வரதராசரை கொண்டுவந்து யாழில நடமுறைபடுத்தினான்களே… அந்த ஒப்பந்தத்தில் உள்ள அடிப்படை அம்சம் வடகிழக்கு இணைந்த பிரதேசம் ஆக இருக்கவேண்டும் என்பதுவே தலைகீழாக மார்ரிடடன்களே…//

  இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து ; மீண்டும் ஆயுதத்தைக் கையிலெடுத்தவர்கள் யார் என்று சொல்லுங்கள் சரவணன்? இதற்கு காரணம் புலிகள்தானே?

  என்னைப் பொறுத்தவரை வடக்கு – கிழக்கு பிரிந்தேதான் இருக்க வேண்டும்.

  //சிங்கள அரசு தமிழனுக்கு தீர்வை கொடுக்க வேண்டும் என்று மனதளவில் நினைத்திருந்தால் தீர்வுத்திட்டத்தை முன்வைத்துவிட்டு புலியோட யுத்தத்தை செய்திருப்பான். //

  நீங்கள் எங்கே இருந்தீர்களோ தெரியாது. இந்தியா வாங்கிக் கொடுத்த தீர்வை எதிர்த்தீர்கள்? பிரேமதாசவுடன் இருந்த நெருக்கத்தை வைத்து அவரைக் கொலை செய்தீர்கள்? சந்திரிகாவோடு சமாதானம் பேசிக் கொண்டே ; சந்திரிகாவை சாகடிக்க முயன்றீர்கள்? நோர்வேயின் ஆதரவோடு ரணில் – பிரபா ஒப்பந்தத்தை கையெழுத்து விட்டு ; ரணிலை தோற்கடித்தீர்கள்? மகிந்தவை ஆட்சிக்கு அமர்த்திவிட்டு போட்டுத் தள்ள முயன்றீர்கள்? எல்லாத்தையுமே நீங்கள் செய்துவிட்டு ; இப்ப ஒப்பாரி வைக்கிறீர்கள்?

  //தமிழனுக்கு கட்ட கோமணம் கூட மிஞ்சாது…………நாம ஒற்றுமை ஆகாத வரை…//
  தமிழனை பிரித்தது நீங்கள்? அழித்தது நீங்கள்? புலத்திலும் புலிகளைத் தவிர வேறு எவருக்குமே ஒரு நிகழ்ச்சியையாவது செய்ய விடாதவர்கள் நீங்கள்? இப்ப ஒற்றமையை பற்றி கதைக்க வெட்கமாயில்லை?

  Reply
 • Ahilan
  Ahilan

  மாயா! கிளிநொச்சியில் அல்ல மாவிலாற்றிலேயே ஓடத்தொடங்கியிருந்தால் புலியும் இருந்திருக்கும் போதிய மக்களும் இருந்திருப்பார்கள். மிருகத்தின் பெயரை வைத்திருக்கும் அவர்களிடம் மனிதத்தன்மையையா எதிர்பார்க்கிறீர்கள்?

  சரவணா
  /சிங்களத்தோடு போராடியோ பேசியோ ஒன்றையுமே பெறமுடியாது என்பதை நினைவில் வைத்திருங்கோ/ சரி நீங்கள் சொன்னமாதிரியே வைத்திருக்கிறோம். அப்படியானால் பேச்சு வார்த்தை மூன்றாந்தரப்பு மத்தியஸ்தம் சமபலத்துடன் இருக்கிறோம் என்ற வீராப்புகளும் பித்தலாட்டப் பேச்சுக்களும். பேச்சுவார்த்தைக்கு அனுசரணையாளர்கள் மத்தியஸ்தர்களோ வாத்தியாரோ அல்ல என்ற உண்மை தெரியாது பேச்சுவாத்தை. வேடிக்கையாக இல்லையா? குழந்தைப்பிள்ளை வாத்தியாரிடம் குற்றம் சொல்வது போல் அங்கை அடிக்கிறான் இஞ்சை பிடிக்கிறான் என்று நோர்வேயிடம். சிரிப்புக்குரிய சங்கதி சரவணா இது. சிங்களவனுடன் போராடியோ பேசியோ ஒன்றையும் பெற ஏலாது என்றால் ஏன் இவை இரண்டையும் புலிகள் செய்தார்கள். விட்டு விட்டு தம்பாப்பிள்ளை செய்தமாதிரிச் செய்திருக்க வேண்டியது தானே.

  பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்கள் பற்றிப்பேசும் சரவணா! ஒவ்வொரு பேச்சுவார்த்தையையும் குழப்பிக் கொண்டு குறுக்காலை ஓடியது யார்? திம்புவின் கைகோத்து நின்றுவிட்டு கையறுத்தது யார்? இறுதிப்பேச்சு வார்த்தையின் புலிகளின் கோரிக்கைகளை கேட்டுவிட்டு (அவர் பேச்சுவார்த்தை உயர்மட்டங்களின் பங்குபற்றியவர்) என்னிடம் கேட்டார். ஏ9 திறப்பதுதானா புலிகளின் போராட்டம். ஓஸ்லோ உடன்படிக்கை 45நாடுகளின் அனுசரணையுடன் இதைவிட அதிகாரங்கள் கொண்டதாக இருக்கிறதே என்றார். ஒரு பேச்சுவார்த்தைக்குப் போகுமுன எதிரியின் பலவீனங்கள் மத்தியஸ்ததரப்பின் பலம் பின்புலம் அனுசரணைகள் இப்படிப் பலவற்றை ஆராய்திருக்க வேண்டும். என்னைப் பொறுத்தமுறையில் ஒஸ்லோ உடன்படிக்கையை பிரபாகரன் சரியாக வாசிக்கவில்லையா அல்லது புரியவில்லையா.

  /தமிழனுக்கு கட்ட கோமணம் கூட மிஞ்சாது…………நாம ஒற்றுமை ஆகாத வரை/ எப்படி ஒற்றுமையாகிறது. சிங்களவனுடன் ஒற்றுமையானாலும் புலிகளுடன் ஒற்றுமையாக முடியாது. பொதுவா தமிழர்களாய் ஒரு பொதுகூட்டம் போட்டால் புலி என்று கொடூரமிருகத்தின் கொடியைப்பிடித்துக் கொண்டு நிற்கிறீர்கள். எப்படி பின் நாம் தமிழர்களால் புலிகளுடன் ஒற்றுமைப்படுவது. தமிழர்கள் எல்லாம் புலிகள் அல்ல என்பதை போராட்டம் தெளிவாகக் காட்டியிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களின் துரொகி என்றும் சொல்லலாம்

  Reply
 • BC
  BC

  //சிங்களவனுடன் ஒற்றுமையானாலும் புலிகளுடன் ஒற்றுமையாக முடியாது. //
  உண்மை. மிகவும் அபாயகரமான விடயம்.

  Reply
 • sri
  sri

  புலி எதிர்ப்பாளர்களே வணக்கம். உங்கள் கண்ணுக்கு கட்டுரையாளர் புலியாதரவாளர் போன்று தோன்றுவதே தவறு. இதற்கு காரணம் தாங்கள் புலியால் பாதிக்கப் பட்டிருக்கிறீர்கள் என்பது உங்கள் எழுத்துமூலம் விளங்குகின்றது. என்னைப் போன்ற பலர் மாற்று இயக்கங்களால் பாதிக்கப் பட்டுள்ளார்கள். இது என்ன புதுக்கதையென எண்ண வேண்டாம். முன்னால் வட கிழக்கு முதல்வர் மாண்பு மிகு வரதராயப் பெருமாள் இன்றைய அமைச்சர் டக்ளச் தேவானந்தா போன்ற மகான்களால் பாதிக்கப்பட்ட நான் யாருடன் நிற்பது. ஆரம்ப காலத்தில் வரதர் டக்ளச் கொழும்பிற்கு வந்தால் தங்குவதற்கும் வேறுபல தேவைகளுக்கும் ஓடியோடி உதவி செய்தானே ஒரு அன்பன். அவன் புலிகளுக்கு வேண்டியவனா… அவனை கடத்தி கொன்றதை எப்படி மறப்பது. இருப்பினும் என் உணர்வுகளை கட்டுப் படுத்திளயுள்ளேன். நான் ஒரு மடையன் ஏனெனில் வலியால் துடிப்பவர் நீங்களல்லவா.. புலிகளை திட்டுங்கள்.. உங்கள் வலியை போக்குங்கள். நான் என்ன செய்ய.. மாற்று இயக்கத்தை திட்டினாலும் உங்களுக்கு வலிக்குமல்லவா…

  Reply
 • Jeyabalan T
  Jeyabalan T

  கட்டுரையாளர் நவேந்திரன் ‘துயர் துடைக்க வாரீர்’ என்ற தலைப்பிலேயே தனது நோக்கத்தை தெளிவாகக் குறிப்பிட்டு எழுதி உள்ளார். அவர் பாதிக்கப்பட்ட போராளிகளுக்கும் மக்களுக்கும் புலம்பெயர் தேசத்தில் குறிப்பாக புலிகளுடைய யுத்தத்திற்கு ஆதரவு வழங்கியவர்களை நோக்கியே இதனை குறிப்பிட்டு உள்ளார். அவர் உதவிகளை நேரடியாகச் செய்யும்படியே கோருகின்றார். நிதி சேகரிக்க முற்படவில்லை. இன்றைய காலத்தின் தேவையையே அவர் வலியுறுத்தி உள்ளார் என நினைக்கிறேன்.

  எல்லோரையும் போல் அவரக்கு ஒரு அரசியல் கருத்து நிலைப்பாடு உள்ளது. அந்த நிலைப்பாட்டை அவர் கொண்டிருப்பதற்கு முழு உரிமையும் அவருக்கு உண்டு. அது பற்றிய விமர்சனங்களை அரசியல் ரீதியாக பண்பாக முன் வைப்பதே பொருத்தமானது.

  கருத்துக்களம் பலமான பொதுத்தளம். அதனைச் சரியான முறையில் கையாள்கின்ற பொறுப்பு கருத்தாளர்களுக்கு உண்டு. இதனைக் கவனத்தில் கொள்ளவும்.

  Reply
 • மாயா
  மாயா

  நவேந்திரன் தமது கருத்தில் எழுதிய பகுதி ; இக் கட்டுரையை வேறு விதமாகப் பார்க்க வைத்து விட்டது என எண்ணுகிறேன். குறிப்பாக

  //போராட்டத்தினாலே எல்லோரும் தான் பாதிக்கப்படடார்கள் இருப்பினும் எனது இரக்கம் புலிப்போராளிகள் மீதுதான். காரணம் புலிப் போராளிகள் தவிர்ந்த மற்றயவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட பல வகையான அமைப்புக்கள் முண்டியடிக்கின்றன. இலங்கை அரசு உட்டபட பல அரசாங்கங்களும் இதில் உள்ளடக்கம்.

  துரதிஸ்டவசமாக எல்லோராலும் கைவிடப்பட்டவர்கள் இந்த புலிப் போராளிகளே. மற்றைய இயக்கங்கள் இவர்களை எதிரியாக பார்க்கின்றன. அரசாங்கமோ ஒளித்துக்கட்ட வரிந்து கட்டி நிற்கிறது. எல்லாவற்றிக்கும் மேலாக யாருக்காக போராடினார்களோஇ அந்த மக்களுக்கும் இவர்களை பிடிக்காமல் போனது மிகமிக துரதிஸ்டவசமானது. இப்போராளிகளை பராமரிக்க வேண்டிய பாரிய பொறுப்பு வெளிநாடுகளில் வாழும் ஒவ்வொருவருக்கும் உண்டு. தயவு செய்து உதவிக்கரம் நீட்டுங்கள்.// எனும் பகுதி.

  நவேந்திரன் ; இந்த நிலைக்கு அடிப்படையே புலிகள்தான். புலிகளின் கடந்த கால செயல்கள்தான் என்றால் மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இறுதி யுத்ததத்தின் பின்னர் புலிப் போராளிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதற்கு முன் அவர்கள் பாதிக்கப்பட்டது மிகக் குறைவு. ஆனால் ஏனைய இயக்க போராளிகள் பல வருடங்களாக பாதிக்கப்பட்டிருந்தார்கள். தினமும் அரச படைகளிடமிருந்து தப்புவதா ? புலிகளிடமிருந்து தப்புவதா? எனத் தெரியாமல் வெருண்டு போய் பல ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இயக்கங்களை விட்டு ஒதுங்கியிருந்தவர்களையும் இவர்களும் விடவில்லை. எந்த இயக்கத்தலிருந்து வெளியேறினார்களோ ; அந்தஅமைப்புகளும் விடவில்லை.

  யாழ் கோட்டைத் தாக்குதல் களத்தில் அனைத்து அமைப்புகளும் ஒன்றாக போராடின. ஆனால் ; வெற்றியை மட்டும் புலிகள் தனதாக்கிக் கொண்டனர். அதன் பின்னரும் ; முன்னரும் புலிகள் ஏனைய அமைப்பினரை குறி வைத்து தாக்கினர். இவை மனரீதியாக புலிகளை வெறுப்படைய வைத்தது. அது மட்டுமா ; சாதாரண மக்களிடமும் ஏனைய இயக்கத்தினர் துரோகிகள் என்று முத்திரை குத்தி ஒதுக்க வழி செய்தனர். இது மன ரீதியாக எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதை புலிகளால் உணர்ந்திருக்க முடியாது. அதனால் பாதிக்கப்பட்டவர்களால் மட்டுமே உணர முடியும்.

  கொல்லப்பட்ட புலி போராளிகளை எண்ணி எம்மால் வருந்தாமல் இருக்க முடியாது. அடைபட்டுக் கிடப்பவர்களை எண்ணி எம்மால் வேதனைப்படாமல் இருக்க முடியாது. ஆனாலும் இங்கே எழுதப்படும் கருத்துகள் புலிகளை கொப்பில் ஏற்றி ; தமது வயிற்றை நிரப்பிய வஞ்சகர்களும் ; தலைமைகளும் உணர வேண்டும் என்பதற்காகவே என அனைவரும் உணர வேண்டும்.

  இதுவரை புலிகளில் தப்பியிருப்போருக்காக அரசு செய்த உதவிகளில் 100ல் 1 சதவீதம் புலத்து புலிகள் செய்ததில்லை. பணம் பெற்றோ உறவுகள் என்றோ பலரை முகாம்களில் இருந்து தப்ப வைத்தவர்கள் ஏனைய சில இயக்கத்தினர்தான். இதே நிலை ஏனைய இயக்கங்களுக்கு நடந்திருந்தால் ; புலிகள் நிச்சயம் உதவியே இருக்க மாட்டார்கள்?

  உதவியவர்களை கடைசியில் போட்டுத் தள்ளும் / தள்ளிய மனோபாவம் அல்லது தாத்பரியம் கொண்டவர்கள் புலிகள். இதற்காக சான்றுகளை அள்ளிக் கொண்டு போகலாம்?

  இங்கு வரும் கருத்துகளில் ; புலிகளின் அழிவுக்குப் பின்னர் புலிகளது மறு வாழ்வுக்காக இங்கே பலர் எழுதுகிறார்கள். என்னைப் போன்றவர்களைப் பொறுத்தவரை தப்பியுள்ள அனைவரது மறு வாழ்வும் முக்கியமானது. அவர்களின் புணர் வாழ்வுக்கு ; இன்னொரு புலிப் போராட்டம் இல்லாமை உறுதி செய்யப்பட வேண்டும். அதை புலத்து புலிகள் நடைமுறைப்படுத்த வேண்டும். அல்லாவிட்டால் மனித நேயத்தோடு உதவுவோர் புலிகளாகி விடுவர். இது தற்போதைய முக்கிய தேவையாக இருக்கிறது.

  அடுத்தது ஏனைய இயக்க உறுப்பினர்களுக்கும் இது போல் உதவ வேண்டும் என பகிரங்கமாக எழுத அல்லது சொல்ல ஏன் யாரும் முன் வரவில்லை? அவர்களும் பாதிப்புக்கு உள்ளாகியே இருந்தார்கள்? புலிகளது வீழ்ச்சி சில மாதங்களில் முற்றானது. ஏனையவர்கள் பல வருடங்களாக பீதியோடு வாழ்ந்தார்கள். அது நல்லவர்களான அவர்களை மோசமானவர்களாக மாற்றியிருக்கும்? இல்லையென்று சொல்வதற்கில்லை…………. இது குறித்து உங்கள் எண்ணங்கள் என்ன? அவர்களும் பாதிக்கப்பட்ட போராளிகள்தானே?

  Reply
 • BC
  BC

  நவேந்திரன் துயர் துடைக்க வாரீர் என்று புலிகளுக்கே சவாலா என்று பாட்டு பாடி, புலி கொடி பிடித்து தாங்கள் சுருட்டிக் கொண்டு அழிவை நடத்திய கூட்டத்தை நோக்கி கேட்டால் நியாயமானதே.
  புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்கள் இலங்கையில் புலி சம்பந்தபட்டவர்களும், மக்களும் துன்பபடவேண்டும் அதை வைத்து முன்பு போல் வெளிநாடுகளில் பிழப்பு நடத்தவே விரும்புகிறார்கள். இந்த புலிகளுக்கு இலங்கையில் உள்ள முன்னாள் புலிகள் மற்றும் மக்களின் மறுவாழ்வு பற்றி எந்த அக்கறையும் இல்லை. உதவி செய்யும் லிற்றில் ஏயிட் அவர்களுக்கு தலையிடி. முன்னாள் புலிகளுக்கு உதவ விரும்பும் கேபி சம்பந்தபட்டோரை இவர்கள் திட்டி தீர்ப்பதையும் அவதானிக்கலாம். இவர்களிடம் பணம் கொடுத்து கொடுத்தே ஏமாந்த புலி ஆதரவாளர்கள் இப்போ விழிப்படைந்து இனி புலி பக்கமே தலை வைப்பதில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டனர்.

  Reply
 • sinna
  sinna

  //இந்தப் போராளிகளுக்கு மாற்றுக்கருத்தின்றி நிறையவே அடைக்க முடியா கடன்பட்டு இருக்கிறார்கள் போராட்டமின்றி வெளிநாட்டின் சுக போகங்கள் எமக்கும் கிடைத்திருக்க மாட்டாது//

  இணுவையூர் எங்களது ரெலோ இயக்கப்போராளிகளை பாசையூரிலும் கரையூரிலும் எப்படி எல்லாம் கொலை செய்தார்கள் உயிருடன் அவர்களை கதறக்கதற கொலை செய்த பாதர்களை இன்றும் நினைத்தாலம் மன்னிக்கமுடியாது. இந்த பாசிஸ்ட்டுக்ளிடமிருந்தும் இந்த கொடிய அரக்கபுலி சமூகத்திடமிருந்தும் நாம் தப்பித்துக்கொண்டதே பெரியபாடாகிப் போய்விட்டது எ;னபதை மறந்து பேசுகிறீர் எனக்கு தெரியும் இணுவையூரில் ரெலோ ஒருமறை ஒன்று கூடி தமது இயக்க நடைமுறைகள் பற்றி பேசவே உங்களது உறவினர்களும் நீங்களும் சேர்ந்து என்று நினைக்கிறேன்? உவங்களால இங்க ஆமி வந்து அடிக்கப்போகுது என்று எங்களை திட்ட கலைக்க நாங்கள் வெளியேறினோம்” இன்று என்னடா என்றால் நீங்கள் புலிகளுக்காகவும், எங்களை கொலைகாரப் புலியிலிருந்து தப்பி வந்து சுக போகங்கள் நடத்துகிறோம் என்றும் கதைவிடுறியள்.

  சுகபோகங்கள் உங்களுக்கக் கிடைத்திரக்கலாம். அதற்காக எல்லார்க்கம் கிடைத்ததாக சொல்லாதேங்கொ. புலியின் சகோதரப் படுகொலையால் தான் பெருமளவிலான சனம் வெளிநாட்டுக்கத் ஓடத் தொடங்கியத. அவர்கள் எல்லாம் விரும்பியோ இங்கை வந்து கஸ்டப்படுகினம். புலியின் தொல்லைக்குள்ளால் தப்பி வெளிநாடு ஓடியவர்கள் எத்தனைபேர். அவர்களுக்கெல்லாம் படிக்கவேணும் என விருப்பம் இல்லாமலோ இருந்தவை.

  மற்றது புலியள் போராட்டம் செய்தவை என்று யார் சொன்னது புலியள் பயங்கவைhதிகள் ஏதோ தனக்கு தனக்கு என்று செய்திச்சினம் தாங்களே வாங்கிக்கட்டிச்சிம் தொலைஞசு போனாங்கள் இவங்களும் மனிசரா? இணுவையூரில் போய் இணுவில் சந்தியில் நின்று 4 பேருக்கு இதில நீங்கள் எழுதினதை வாசிச்சுக்காட்டுங்கள் சனங்கள் கழுத்தைத் திருகிப்போடும்

  //எல்லோராலும் வெறுக்கப்படும் நிலையிலும் இருப்பது மிகப்பரிதாபமானதும் வேதனையானதும்//
  ஏன்புலிகளை சனங்கள் வெறுத்தது அப்பன் கொலைசெய்தான் அவரின் வாரிசும் கொலை செய்தது பரம்பரையே கொலைப்பரம்பரை என்று தமிழ் சனம் சொல்லுது கொலையாளிகள் கொல்ப்பட்டனர்.
  ஒருகாலத்தில யாரையும் மதித்திருந்தால் குழந்தைகளை வற்புறுத்தி இழுத்துப்போவானோ சந்தர்ப்பம் பாரத்து இனி ஆமிக்காரன் உன்னை கெடுக்கப்போறான் அதற்க்கு முந்தி நான் கெடுக்கிறன் என்று தமிழ் பெண் பிள்ளைகளை கெடுத்து போராளிகளா கற்பழிப்பவாதிகளா? கேவலம் இவங்களுக்கு…

  //திரும்பிப் பாருங்கள் எம்முடன் படித்த சக மாணவ போராளிகளை எம்மைவிட மிகத் திறமைவாய்ந்த நண்பர்கள் போராட்டத்தில் இணைந்து……… // இதை வாசிக்கையில் மகிந்தாவுக்கு எதிராய் குடைபிடிக்கப் போனவர்கள் டொக்டர் இஞ்சினியர்கள் என படிச்சாக்கள் என யாரொ எழுதியிருந்தது ஞாபகம் வருகிறது.

  Reply
 • Ahilan
  Ahilan

  சிறீ!நீங்கள் சொல்வது உண்மை. வலி என்பது எல்லோருக்கும் உரியதுதான். போரினால் பாதிக்கப் படாத எவருமே இருக்க இயலாது. யார் செய்தாலும் பிழை பிழைதான். ஆனால் இன்று எம்மைக் கோவணுமும் இல்லாமல் அங்கேயும் பிடுங்கி இங்கேயும் பிடுங்கிவிட்ட புலிகளை தமிழினித்துக் கடசி மகன் கூட மன்னிக்க மாட்டான்.தலையுள்ளவன் தான் துப்பாக்கி தூக்கவேண்டும் என்று ஆரம்பகாலங்களில் இருந்து கத்தினோம் கேட்டீர்களா? இராணுவத்தைக் கலைத்தான் மட்டும் விடுதலை வந்து விடுமா?

  ஜெயபாலன்! நவேந்திரனுக்கு எந்த அரசியல் கருத்துச் சுதந்திரம் உள்ளதோ அதே உரிமை எமக்கும் உள்ளது என்ற கருத்திலேயே நாம் களமாடுகிறோம். நவேந்திரின் ஊரில் புலியின் வாலையோ வரியையோ கட்டால் அவர் குடும்பமே ஓட்டம் பிடிக்கும் இங்கே வந்து புலிக்கிக் கொடிபிடித்தவர்கள் இவர்கள். ஜெயபாலன் உங்களிடம் ஒரு கேள்வி. புலம்பெயர் தமிழ் சமூகத்திடம் கோடி கோடியாய் கறந்த புலிகள் இன்றும் இருக்கிறார்கள். இயக்கம் பிரிந்தோ இணைந்தோ நடத்துகிறார்கள். இப்பணங்களக்கு கணக்கு வளக்கு இல்லை. இவற்றில் ஒரு பகுதியை கொடுத்தாலே போராளிகள் தம் 10பரம்பரைக்கு இருந்து சாப்பிடலாம். இப்படி நிலையிருக்க போராளிகளுக்குக் கொடு என்று நவேந்திரன் கேட்பது அபத்தமாகத் தெரியவில்லையா? அப்பாவிகளாக ஒன்று மறியாதவர்களாக பறிகொடுத்து மக்களுக்குக் கொடு என்று கேட்பது நியாயமானது. போராளிகளுக்கு என்று கொட்டிக் கொடுத்த பணத்துக்கு பதிலை கணக்கைச் சொல்லுங்கள் அதன்பின்பு கொடுப்பது விடுவது பற்றிப் பேசலாம்.இதே போராளிகள் எத்தனை தமிழ் மக்களை நரகவேதனைக்குத் தள்ளினார்கள் என்ற பட்டியலை முதலில் கொடுங்கள். இன்று தமிழனை இன்நிலைக்குக் கொண்டுவந்து விட்டவர்களே இவர்கள் தான். எமக்கு நவேந்திரனை பள்ளியில் இருந்த இலண்டன் வரை நன்கு தெரியும் என்பதால் தான் எழுதுகிறேன்.

  Reply
 • மாயா
  மாயா

  //மகிந்தாவுக்கு எதிராய் குடைபிடிக்கப் போனவர்கள் டொக்டர் இஞ்சினியர்கள் என படிச்சாக்கள் என யாரொ எழுதியிருந்தது ஞாபகம் வருகிறது.//

  படிக்காதவங்கள் இப்ப புத்திசாலிகளாகிட்டாங்கள் என்று நினைக்க வைக்குது.
  இல்லையென்றால் ஏமாறுறவங்கள் ஏமாற்றுறவங்களை அறிந்திட்டாங்கள்.

  Reply
 • sri
  sri

  மழை விட்டும் தூவானம் ஓயவில்லை என்றமாதிரி கட்டுரையின் விமர்சனம் நீண்டு கொண்டே போகின்றது.நவேந்திரன் என்ன பொpதாய் புலிகளை பாராட்டியா எழுதினார். அவர் மனதில் ஏற்பட்ட பாpதாபத்தின் வெளிப்பாடகா இருக்கலாமல்லவா எந்த இயக்கம் பிழை செய்யவில்லை-எந்த இயக்கம் கொலை செய்யவில்லை. என்ன… எண்ணிக்கை மட்டும் தான் வித்தியாசம். மற்றும் படி யாரையும் தூக்கி தோளில் வைத்து ஆட முடியாது. நடந்தவை நடந்ததாகவே இருக்கட்டும். நடக்க வேண்டியதைப் பற்றி ஆய்வு செய்தால் சாலச் சிறந்தது. நானும் நீங்களும் பாதிக்கப் பட்டிருக்கின்றோம். இவ்வளவும் பேசும் எங்களுக்கு மன்னிக்கவும் தொpந்திருக்க வேண்டும். இதற்காக இதை தலைப்பாக்கி விமர்சனம் வைக்க வேண்டாம்.
  எனது நண்பர் ஒருவர் எழுதிய கவிதை இதற்குப் பொருத்த மானதகாவிருக்கும் என்பதால் அதை இங்கு தருகின்றேன்.

  ஆளை ஆளை சும்மா தட்டி
  அவசரத்தில் சொல்லைக் கொட்டி
  நாளை இந்த உலகை நோக்கி
  நடக்க லாமா பகையைத் தூக்கி

  Reply
 • Ahilan
  Ahilan

  /நடக்க லாமா பகையைத் தூக்கி/ சிறீ இந்த வரிகள் இடிக்கின்றனவே. இப்படிதான் மன்னித்து மன்னித்து மண்ணில் தமிழன் இல்லாமல் போகிறான். கடந்தகாலம் மறக்கப்பட வேண்டியதல்ல. படிக்கப்படவேண்டியது மீழாய்வு செய்யப்படவேண்டியது. புலிகள் செய்வார்களா? கொலை செய்த தொகைதான் வித்தியாசம் என்று ஒரே கூடையில் எல்லாவற்றையும் போட இயலாது. தொகை என்பது பெரியவிசயம். இயக்கங்கள் பிழைசெய்தன நாம் என்ன பிழைசெய்தோம் அப்பாவிப் பொதுமக்களாக. நாம் எதற்கு மறக்கவேண்டும் மன்னிக்க வேண்டும். இன்னும் தமது பிழைகளை பெற்ற பணங்களை நடந்த நிகழ்வுகளை செய்து முடித்தவற்றை செய்ய நினைப்பவற்றைப் பற்றி எதுவுமே பேசாமல் ஒன்றுபடுவோம் என்று மீண்டும் புலிக்கொடியைத் தூக்கிக் கொண்டு நிற்கிறீர்கள். முதலில் புலிகொடியை: அந்த மிருகக் கொடியை எறிந்துவிட்டு வெறும் தமிழர்களாக இரத்தவாடை இன்றி வாருங்கள் பேசலாம். பொதுவான கூட்டம் என்பீர்கள் அங்கு வந்து கொலைவெறி கொண்ட புலிக்கொடியை உயர்த்துவீர்கள். சரி புலிகள் தான் ஒழுங்கு செய்யட்டும் அதற்கு எதற்கு வெறிகொண்ட புலிக்கொடி. இக்கொடியைக் கண்டாலே சமாதானம் தற்கொலை செய்து விடும். புலி புலி என்று மக்களும் உலகமும் கிலி பிடித்தது போதும். கொடியையும் செத்தவர்களுடன் சேர்ந்து எரித்து விட்டு வாருங்கள் தமிழர்களாக மனிதர்களாகப் பேசலாம். மிருகங்களாகத்தான் வருவீர்கள் என்றால் மனிதர்களுக்குள் உங்களுக்கு இடமில்லை. மகிந்த வந்தபோதும் கூட பொதுவான மனிதர்களாக இல்லாமல் புலியாக ஒரு குழுவுக்குள் குறிகிபோனார்கள் தமிழர்கள் என்பது என்கருத்து

  Reply
 • மாயா
  மாயா

  //கடந்த 26-ம் தேதி சுவிட்சர்லாந்து போன தாமரை, மூன்று நாட்களாக புலம்பெயர் மக்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். மூன்றாவது நாள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு கும்பலை, சுவிட்சர்லாந்து பொலிஸ் சந்தேகத்தின் பேரில் வளைக்க… கத்தி, நச்சு வாயுவைப் பாய்ச்சக்கூடிய ஸ்ப்ரே போன்றவை இருந்திருக்கின்றன. அடுத்த கணமே அவர்களை கஸ்டடிக்கு எடுத்தது பொலிஸ்.

  இதற்கிடையில் தாமரைக்கு திடீரென இரண்டு மெய்க்காப்பாளர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை சுவிஸ் பொலிஸ் செய்ய… அவருக்கு ஏதும் விளங்கவில்லை. ‘நான் ஒரு பாடலாசிரியர். எனக்கு ஏன் இத்தனை பாதுகாப்பு? தமிழ்க் குடும்பங்களைச் சந்திப்பதற்காகத்தான் நான் இங்கு வந்தேன். உங்களின் பாதுகாப்பே எனக்கு இடைஞ்சலாக இருக்கிறதே…’ எனப் பாதுகாப்பு பொலிஸாரிடம் அவர் முறையிட… அதன் பிறகுதான் மர்ம கும்பல் குறித்த பின்னணியைச் சொல்லி இருக்கிறார்கள் சுவிஸ் பொலிஸார். இதற்கிடையில் கருணாவின் கும்பல் தாமரையை டார்கெட் வைத்தே அந்த நிகழ்ச்சிக்கு வந்ததாகச் செய்தி கசிய… – ஜூனியர் விகடன்//
  -http://www.tamilwin.org/view.php?202IP520ePjoU2ebiG1r4bdF98Wcdc82F3dc41pi3b43oQH3e23PLS30

  அட பாவமே ; இப்படி ஒரு பொய்யா? என்னமா பில்டப் குடுக்கிறாங்க. இப்படி ஒரு செய்தி சுவிசில் வரவே இல்லையே?

  Reply
 • hari
  hari

  /முதலில் புலிகொடியை: அந்த மிருகக் கொடியை எறிந்துவிட்டு வெறும் தமிழர்களாக இரத்தவாடை இன்றி வாருங்கள் பேசலாம்./Ahilan
  வாழேந்திய சாதுவான சிங்ககொடிக்குள் வாருங்கள் மன்னித்து மறந்து “நமோ நமோ சிறிலங்கா மாதாவென” ஜக்கியப்படுவோம்

  Reply
 • Ahilan
  Ahilan

  மாயாவின் செய்தியில் இருந்து நாம் புரிவது என்ன விடுதலை என்பதோ இன ஒற்றுமை என்பதே தமிழனிடம் இல்லை அது தேவையும் இல்லை என்பதுதான். தமிழனிடன் இருந்தே தமிழனைக் காப்பாற்ற வேண்டிய நிலை. இதுதானே புலிநாசத்துக்கும் காரணமானது.

  Reply
 • Ahilan
  Ahilan

  கரி!/வாழேந்திய சாதுவான சிங்ககொடிக்குள் வாருங்கள் மன்னித்து மறந்து “நமோ நமோ சிறிலங்கா மாதாவென” ஜக்கியப்படுவோம்/ இதுதான் தமிழன். வளத்தால் குடும்பி வழித்தால் மொட்டை. புலி வேண்டாம் என்றால் சிங்கம் வேணும் என்று அர்த்தமாகாது. மிருகங்களே வேண்டாம் என்கிறோம்.

  Reply
 • BC
  BC

  அகிலன், கொடிய புலி சனங்களை பிடித்து சாப்பிட தொடங்க சனங்கள் பலர் சிங்கம் வசிக்கும் பகுதிக்கு தப்பி போய் தான் பத்திரமாக இருந்தவர்கள். அங்கேயும் புலி வந்து குண்டு தாக்குதல் நடத்தி பார்த்தது சிங்கம் சனத்தை அடித்து விரட்டும் என்று நினைத்து. ஆனால் முயற்ச்சி தோல்வி. புலம் பெயர்ந்து புலிகளில் பலர் தங்கள் குடும்பங்களை பத்திரமாக சிங்கத்திடம் தான் அனுப்பி வைத்தவை.

  Reply
 • Ahilan
  Ahilan

  இன்னொருவிசயம் தெரியுமா பிசி. புலத்திலுள்ள புலிகள் தமிழஈழம் கேட்டார்கள் ஆனால் வீடுகளும் அப்பாடமெட்டுகளும் மாடிகளையும் கொழும்பில்தானே வாங்கினார்கள். ஏன் தமிழ்ழீழத்தில் வாங்கியிருக்காலாம் தானே. அவர்களுக்குத் தெரியும் தமிழீழம் நடக்கிற விசயம் இல்லை என்று. வெளிநாட்டில் வெங்காயத்தமிழன் இருக்கிறான்தானே ஈழத்ததைக் சொல்லி காலம்காலமாய் கொழும்பில் வாழவழிவகுத்திருக்கிறார்கள். மிருகம் என்று பார்க்கப்போனோல் சிங்கமும் புலியும் தமிழர்களுக்கு ஒன்றுதான். புலி துவக்கோடை நிண்டலும் சரி துவக்கில்லாமல் நின்றாலும் சரி எமக்கு இரண்டும் மிருகங்கள்தான். நடுநிலமை என்ற ஒன்று இல்லை என்று நின்ற பலபுலிகள் சிங்கத்துடன் ஏன் போய் இருக்கிறார்கள். தேசியத்தலைவன் ஆமை இறைச்சி மன்னன் தெரிவுசெய்த கே.பி அரசாங்கத்துடன் இருக்கிறார் என்ன செய்யப்போகிறார்கள்?

  Reply
 • hari
  hari

  “புலி வேண்டாம் என்றால் சிங்கம் வேணும் என்று அர்த்தமாகாது. மிருகங்களே வேண்டாம் என்கிறோம்.”

  புலியை பற்றி நீங்கள் எப்படியும் விமர்சிக்கலாம். நாதியற்ற இனத்தின் போராட்ட அமைப்புதானே. ஆனால் சிங்களத்துடன் பேசப்போனால் சிங்ககொடியை ஏற்று அதற்கு “நமோ நமோ சிறிலங்கா மாதாவென” சலாமிட்டால்தான் பேச்சே தொடங்கமுடியும்.
  சிங்ககொடி ஒரு கொடிய மிருகக்கொடி என வாய்திறக்க முடியுமா! சிந்திப்பது எழுதுவது யதார்த்தத்திற்கு ஒத்துவருமா என முதலில் பாருங்கள்.

  Reply
 • Ahilan
  Ahilan

  கரி-உங்கள் புலி கொட்டமடித்த காலத்திலும் புலியை எதிர்த்து எழுதியவர்கள் நாங்கள். சிங்களவன் வெளிநாட்டில் மிட்ட முயற்சித்தபோது ஓட ஓட அடித்தவர்கள் நாங்கள். புலியோ சிங்கமோ மிருகங்களாய் இருக்கும் வரை எமக்கு எதிரிகள் தான். /புலியை பற்றி நீங்கள் எப்படியும் விமர்சிக்கலாம். நாதியற்ற இனத்தின் போராட்ட அமைப்புதானே. / திருந்திக் கொள்ளுங்கள். இன்று எம்மை நாதியற்ற இனமாக்கியது யார்? புலிகள் என்பதை மறுக்க யாராலும் முடியாது. சரித்திரத்தை சரியாகத் திரும்பிப்பார்த்தால் தமிழ் அரசியல்வாதிகளும் முழுப்பொறுப்பை ஏற்கவேண்டும். முழு எதிர்ப்புவாதம் என்றும் பயன் அழிக்காது. அதற்காக எதிரியின் காலில் விழு என்று கூறவில்லை. இன்று ஒரு பெண்பிள்ளையின் அவமானத்தை காசாக்க முயற்சிக்கிறது புலி. இதன்பின்பும் நீங்கள் எழுதுகிறீர்கள் தமிழர்களுக்காக புலிகள் போராடினார்கள் என்று. புலிகள் போராடியது தமக்காகவே தவிர தமிழர்களுக்காக அல்ல. ஈழத்தமிழர்களுக்காகப் போராட யாரும் பிறக்கவில்லை என்பது என்கருத்து.

  Reply