”நானும் தெருவில் நின்று போராடியவன்! இன்று உள்ளே இருக்கின்றேன்.” ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரித்தானிய இலங்கைத் தூதரகத்தில் இடம்பெற்ற சந்திப்பில்

MR_at_UK_Empassy”நான் எதிர்க்கட்சியில் இருந்தபோது நானும் இப்படி தெருத்தெருவாகப் போராட்டியவன். எனது போராட்டத்திற்கு நியாயம் இருந்தது. ஆனால் இங்கு நடைபெறும் போராட்டங்களுக்கு நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை” எனத் தெரிவித்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. இன்று (டிசம்பர் 02) பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி இங்கு மேலும் தெரிவிக்கையில் ”ஜனநாயகத்தின் தாய்நாடாக இருக்கும் பிரித்தானியாவில் கருத்துச் சுதந்திரத்திற்கு முன்னுரிமை அளிக்கின்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் யூனியனில் எனது கருத்தை தெரிவிக்கவிடாமல் தடுத்தது கருத்துச் சுதந்திரத்தை மறுத்ததே” எனத் தெரிவித்தார்.

”ஒன்றரை வருடங்களுக்கு முன் நான் உங்களைச் சந்தித்த போது நான் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவேன் என்று உறுதி அளித்திருந்தேன். அதனைச் செய்து முடித்திருக்கிறேன். இனிமேல் இலங்கையில் அபிவிருத்தி மேற்கொள்ளப்படும். சமாதானம் நிலைநாட்டப்படும். சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் அனைவரும் இலங்கையர்களாக வாழ்வார்கள். அடுத்த தடவை மீண்டும் உங்களைச் சந்திக்கும் போது அவற்றைச் செய்து முடித்திருப்பேன்” என்று தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் அனைவரும் தனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இன்று இடம்பெற்ற சந்திப்பில் அமைச்சர்கள் ஜி எல் பீரிஸ் எஸ் பி திஸ்ஸநாயக்கா ஆகியோரும் கலந்து கொண்டனர். அங்கு வந்திருந்த தமிழ் முஸ்லீம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. வழமைக்கு மாறாக இன்றைய நிகழ்வு பெரும்பாலும் சிங்கள மொழியிலேயே இடம்பெற்றது. இச்சந்திப்பில் மூவின சமூகங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்று மொழிகளையும் பேசக்கூடியவராக இருந்த போதும் இலங்கைத் தூதரகம் இக்கூட்டம் பற்றிய ஏற்பாடுகளை சீராக ஒழுங்கமைத்து இருக்கவில்லை.

கூட்ட ஏற்பாடுகள் எவ்வித ஒழுங்கும் இன்றி சீரற்றதாகவே காணப்பட்டது. ஒரு நாட்டின் ஜனாதிபதி உடனான சந்திப்பு என்று எவ்வித ஒழுங்கமைப்பும் இன்றி இச்சந்திப்பு அமைந்தது. அரசியல் உரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கான வாய்ப்பு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கவில்லை.

ஒக்ஸ்போர் யூனியனில் இடம்பெற இருந்த ஜனாதிபதியின் உரை ரத்து செய்யப்பட்டமை இலங்கை அரசுக்கு ஏற்பட்ட வெளிப்படையான அவமானமே. இவ்வாறான ஒரு ஆர்ப்பாட்டம் முடுக்கி விடப்படும் என்பதை இலங்கைத் தூதரகம் கணித்து தகுந்த ஆலோசணை வழங்கத் தவறிவிட்டதாக தற்போது இலங்கை இராஜாங்க வட்டாரங்களில் குற்றம்சாட்டப்படுகிறது.

ஜனாதிபதியின் உரை ஒக்ஸ்போர்ட் யூனியனில் ரத்து செய்யப்பட்டமை அரசியல் ரீதியில் பலவீனமாகிக் கொண்டிருந்த பிரிஎப் ரிவைஓ போன்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு  அமைப்புகளுக்கு அமைப்புகளுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. ஒக்ஸ்போர்ட் நோக்கிய ஆர்ப்பாட்டம் அதன் பின்னர் ஜனாதிபதி தங்கியிருந்த ஹொட்டலை நோக்கியும் பின்னர் இலங்கைத் தூதரகத்தை நோக்கியும் நகர்ந்தது.

இலங்கைத் தூதரகத்தில் இன்று மாலை ஜனாதிபதியுடனான சந்திப்பு இடம்பெற்ற வேளை தூதரகம் உள்ள வீதியின் இரு அந்தங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி இருந்தன. பெரும்பாலும் அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி இவ்வார்ப்பாட்டங்கள் இடம்பெற்றது. ஆனால் புலிக்கொடிகளைத் தாங்கிய வண்ணம் இருந்த சிலர் ஜனாதிபதியின் சந்திப்பிற்கு வந்து சென்றவர்களை நோக்கி மோசமான தூசண வார்த்தைகளை தமிழிலும் சிங்களத்திலும் கோசமாக எழுப்பினர்.

இச்சந்திப்பையொட்டி ஏரானமான பொலிசார் அப்பகுதி எங்கும் குவிக்கப்பட்டு இருந்தனர். ஆயுதம் ஏந்திய பொலிசார் தூதரகத்திற்கு பாதுகாப்பு வழங்கினர்.

Show More
Leave a Reply to Nathan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

63 Comments

  • சாந்தன்
    சாந்தன்

    //…நானும் தெருவில் நின்று போராடியவன்! இன்று உள்ளே இருக்கின்றேன்.”..//
    ஆனால் இன்று உங்கள் பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் யூ.என்.பி எம்பி ஜயலத் ஜயவர்த்தனா வெளியில் இருந்து போராடுகிறார் அவரை ஜெயில் உள்ளே போட வேண்டும் என்கிறார்களே?

    //…”நான் எதிர்க்கட்சியில் இருந்த போது நானும் இப்படி தெருத்தெருவாகப் போராட்டியவன். எனது போராட்டத்திற்கு நியாயம் இருந்தது. ஆனால் இங்கு நடைபெறும் போராட்டங்களுக்கு நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை” ..//
    அப்போது அரசில் (பிரேமதாசா என நினைக்கிறேன்) இருந்தவர்களும் இதேபோலத்தான் சொன்னார்கள் என நினைக்கிறேன்!

    //….ஜனநாயகத்தின் தாய்நாடாக இருக்கும் பிரித்தானியாவில் கருத்துச் சுதந்திரத்திற்கு முன்னுரிமை அளிக்கின்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் யூனியனில் எனது கருத்தை தெரிவிக்கவிடாமல் தடுத்தது கருத்துச் சுதந்திரத்தை மறுத்ததே” எனத் தெரிவித்தார்…//
    சேய் நாட்டில் கருத்துச்சுதந்திரத்தை கழுத்தை நெரித்துக் கொல்வதாக சிங்கள பத்திரிகையாளர்களே சொல்கிறார்களே? உங்கள் காதில் விழாதா?

    //…இன்று இடம்பெற்ற சந்திப்பில் அமைச்சர்கள் ஜி எல் பீரிஸ் எஸ் பி திஸ்ஸநாயக்கா ஆகியோரும் கலந்து கொண்டனர். அங்கு வந்திருந்த தமிழ் முஸ்லீம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. ..//
    ஜீ.எல்.பீரீஸுக்கும் முஸ்லிம்களுக்கும் அப்படி என்ன பிரச்சினை? புரியவில்லையே?

    //…வழமைக்கு மாறாக இன்றைய நிகழ்வு பெரும்பாலும் சிங்கள மொழியிலேயே இடம்பெற்றது. இச்சந்திப்பில் மூவின சமூகங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்று மொழிகளையும் பேசக்கூடியவராக இருந்த போதும்….//
    இதென்ன புதினம். ஸ்ரீலங்காவைப்பற்றி அறிந்த சின்னக்குழந்தையும் சொல்லுமே? எல்லாம் புலி இருக்கும் வரைதான் என்ற உண்மை இவர்களுக்கு இப்போதாவது புரியுமா, அல்லது எல்லாம் பிரிட்டிஷ் ரமில் ஃபோரத்தால் வந்த வினை என யார் தலையிலாவது அள்ளிப்போடுவார்களா?

    //….கூட்ட ஏற்பாடுகள் எவ்வித ஒழுங்கும் இன்றி சீரற்றதாகவே காணப்பட்டது. ஒரு நாட்டின் ஜனாதிபதி உடனான சந்திப்பு என்று எவ்வித ஒழுங்கமைப்பும் இன்றி இச்சந்திப்பு அமைந்தது. அரசியல் உரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கான வாய்ப்பு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கவில்லை….// ஸ்ரீலங்கா அரசிடம் அதனை எதிர்பார்த்துப் போனது அவர்கள் குற்ரமில்லையே?

    //… இவ்வாறான ஒரு ஆர்ப்பாட்டம் முடுக்கி விடப்படும் என்பதை இலங்கைத் தூதரகம் கணித்து தகுந்த ஆலோசணை வழங்கத் தவறிவிட்டதாக தற்போது இலங்கை இராஜாங்க வட்டாரங்களில் குற்றம்சாட்டப்படுகிறது….//
    ஸ்ரீலங்கா தூதரகத்துக்கு அட்வைஸ் சொன்னவர்களுக்கு இனிமேல் ஆப்புத்தான்! புலிப்பினாமிகள், வாலுகள், புண்ணாக்குகள் என அட்வைஸ் பண்ணி இருப்பார்கள். பாவம் ஹம்சா தமிழ்நாட்டு ஊடகங்கள், பொலிஸ், கருணாநிதி மாதிரி நினைத்டிருப்பாரோ என்னவோ! அனாலும் இதில் இதில் ஸ்ரீலங்கா தூதரகத்தை குறை சொல்லிப் பிரயோசனமில்லை. கடந்த இரண்டு மூன்று மாதங்களின் முன்னரே இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெறலாம் என அறிந்து ஒக்ஸ்ஃபோட் யூனியன் மஹிந்தாவின் பேச்சை நிறுத்தியது. ஆனால் ஜீ.எல்.பீரீஸும் அவர்களின் கோஷ்டியும் இதனை ஒரு பந்தயமாக எடுத்து லொபியிங் குரூப் பொட்டிங்கர் உதவியுடன் மீண்டும் அரங்கேற்றி தமிழர் முகத்தில் கரி பூச நினைத்தனர். ஆனால் நடந்த விடயங்கள் பி.ரி.எஃப் கூட நினைத்திராத அளவுக்குப் போய்விட்டது என நினைக்கிறேன்.

    இதில் அடுத்த ஜோக் ஐ.நா அலுவலகம் முன்னர் உண்ணாவிரதம் இருந்து ஊழியர்களை உள்ளே சொல்லவிடாமல் தடுத்த விமல் வீரவன்சா இங்கிலாந்து தனது ராஜீக கடமையில் இருந்து தவறிவிட்டது என குற்றம் சாட்டியதுதான்!

    “எனது போராட்டத்திற்கு நியாயம் இருந்தது. ஆனால் இங்கு நடைபெறும் போராட்டங்களுக்கு நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை”
    நீங்கள் எதிர் கட்சிக்கு வரும்போது இந்த போராட்டங்களுக்கு நியாயம் தெரியவரும்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    மேலும் இந்த ஒக்ஸ்ஃபோட் யூனியன் சிக்கல் பற்றிய பத்திரிகை அறிக்கை கூட பெல் பொட்டிங்கரிடம் இருந்தே வந்திருந்தது. இந்த உத்தியோக பூர்வ பத்திரிகை அறிக்கையைக்கூட ஸ்ரீலங்கா தூதரக அல்லது வெளிநாட்டு அமைச்சின் லெற்றர் ஹெட்டில் வெளியிடக்கூடத் தோன்றவில்லையா? பொதுவாக லொபியிங் குரூப்புகள் அறிக்கை எழுதுவார்கள் ஆனால் அறிக்கை வெளிவருவது அந்த லொபியிங் குர்ருப் வேலை செய்யும் அமைப்பினதாக அல்லது அரசின் லெற்ரர் ஹெட்டில் தான் இருக்கும். ஸ்ரீலங்கா தூதரகம் அவ்வளவு குழம்பி உள்ளதா? சொல்லப்போனால் தென்னிந்திய அரசியல்வாதிகள், பேப்பர்காரர்கள், பொலிசுக்கு தங்கச்சங்கிலி, லாப்ரொப் கொடுத்து அலுவல் பார்த்த ஆளை லண்டனுக்கு அனுப்பினால் இதுதான் நடக்கும் எனத் தெரியாது போலும்.

    Reply
  • ganesh
    ganesh

    அரசியல்தீர்வை இந்தியா கொண்டுவந்தபோது அதை சரியாக பயன்படுத்த தெரியாத புலிகள், அரசியல்தீர்வை சந்திரிகா கொண்டு வந்த போது அதை சரியாக கையாளத் தெரியாத புலிகள், மகிந்தா பேசுவோம் என்றபோதும் தாங்கள் பலவீனமாக இருக்கிறோம் என்று தெரிந்தும் முயற்சிக்காத புலிகள் இன்று பெற்ற பெரு வெற்றி மகிந்தாவை பேசவிடாதது என்று மார்பு தட்டுங்கள் இந்த வெற்றி தமிழ் மக்களுக்கு எதையும் தராது, நீங்கள் விளங்கிக் கொண்ட உலகம் 1980 மட்டுமே இந்த உலகம் மாறிவிட்டது சூழல் மாறிவிட்டதை உங்களால் புரிந்து கொள்ளாமல் தமிழ் மக்களுக்கு கடந்த 30 வருடமாக செய்த அநீயாயங்கள் கொடுமைகளின் பலன் யாழில் மக்கள் புலிகள் என்றால் காறித்துப்புகிறார்கள்.

    லண்டனில் உங்கள் போராட்டம் எந்த பயனும் தராது என்று தெரியாமலும் புலிகளின் தவறுகள் இனிமேல் புலிகள் பெயரை பாவித்து, புலிக்கொடியை பாவித்து, பிரபாகரன் பெயரை பாவித்து, புலி இயக்க வரலாற்றை பாவித்து எதையும் இனிமேல் சாதிக்கமுடியாது என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ள மாட்டீர்கள். உங்கள் போராட்டத்தின் நோக்கம் இதை பின்னின்று நடாத்தும் (பிரிஎப்/ரிவைஓ)பினாமிகளின் நோக்கம் தம்மிடம் உள்ள புலிகளுக்காக சேர்த்த பணத்தை சொத்தை நாட்டில் கஸ்டப்படும் புலி உறுப்பினர்களுக்கு உதவ கொடுக்காமல் கொள்ளை அடிப்பதற்கே ஆகும்.

    இலங்கை அரசிடம் உரிமைகள் போரடியே பெற வேண்டும், ஆனால் 30 வருடமாக நீங்கள் செய்த பயங்கரவாதப் போராட்டத்தால் அல்ல,
    உங்கள் 30 வருட போராட்ட நடவடிக்கைகள் தவறு என்பதை உங்கள் போராட்டமே நிரூபித்துள்ளது, மீண்டும் உங்களால் சோடா காஸ் நடவடிக்கைகளால் தமிழருக்கு ஆபத்து உருவாக தொடங்கியுள்ளது

    உங்கள் அடுத்த போராட்ட நகர்வு என்ன என்று உங்கள் மூளையை கிளறுங்கள் ஒன்றுமில்லை என்பதே உங்கள் அறிவு சொல்லும், போராட்டம் இப்படியாக நடாத்தப்படவதில்லை அடுத்தமுறை இன்னுமொருமுறை மகிந்தா அல்லது வேறு யாரும் வரும் வரை உங்கள் போராட்டம் படுத்துவிடும் இப்படியே ஏதொஒண்டை சொல்லிக் கொண்டே அடுத்த 30 வருடம் போய்விடும் இதுதான் உங்கள் வரலாறாகிறது. இதுவே மாபெரும் வரலாற்றுத் துரோகம்.

    Reply
  • ராசன்
    ராசன்

    / மீண்டும் உங்களால் சோடா காஸ் நடவடிக்கைகளால் தமிழரருக்கு ஆபத்து உருவாக தொடங்கியுள்ளது/
    அப்போ உங்கள் காஸ்போன சோடா நடவடிக்கைகளால் யாருக்கு ஆபத்து. ஜயலத் ஜயவர்த்தனாவுக்குப் போல் இருக்கிறது.

    /உங்கள் அடுத்த போராட்ட நகர்வு என்ன என்று உங்கள் மூளையை கிளறுங்கள் ஒன்றுமில்லை என்பதே உங்கள் அறிவு சொல்லும், போராட்டம் இப்படியாக நடாத்தப்படவதில்லை அடுத்தமுறை இன்னுமொருமுறை மகிந்தா அல்லது வேறு யாரும் வரும் வரை உங்கள் போராட்டம் படுத்துவிடும் இப்படியே ஏதொஒண்டை சொல்லிக் கொண்டே அடுத்த 30 வருடம் போய்விடும் இதுதான் உங்கள் வரலாறாகிறது. இதுவே மாபெரும் வரலாற்றுத் துரோகம். /
    அவர்களின் மூளையை அவர்கள் கிளறுவார்கள். உங்கள் மூளைக்குள் இருக்கும் போராட்ட நகர்வு என்ன என்பதனை எமக்குத் தெரிவியுங்கள். நீங்கள் என்ன கிளறு கிளறினாலும் ஒன்றும் வராது என்பது 30 வருடம் போயும் உங்களுக்குத் தெரியவில்லை. அப்பப்ப ஸ்ரீலங்காவில் இருந்து டக்ளச், சித்தார்த்தன் வரும்போது மட்டும் உங்கள் போராட்டம் அவர்கள் மறுமுறை வரும் வரை படுப்பதைப்போல்த்தான் இதுவும் என வைத்துக் கொள்ளுங்கள். இதுவே வரலாறாகிறது. இதுவே மாபெரும் வரலாற்றுத் துரோகம்

    Reply
  • மகுடி
    மகுடி

    கோசம் போடும் எவரும் ; தமிழருக்கான தீர்வை கொடுங்கள் என்று எந்தவொரு கோசத்தையும் வைக்கவில்லை.
    தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களை தமது வீடுகளுக்கு அனுப்புங்கள் என்ற கோசத்தை வைக்கவில்லை.
    அடைத்து வைத்திருக்கும் அப்பாவிகளை விடுதலை செய்யுங்கள் என்ற கோசத்தை வைக்கவில்லை.

    வந்தவர்கள் புலிக் கொடியோடு ; புலிக் கோசத்தையும் வைத்தார்கள். மகிந்தவை சிறையில் அடைக்க வேண்டும் என்று கோசமிட்டார்கள்.
    மேலே உள்ள கோசங்களையாவது இணைத்திருக்கலாம். அதையெல்லாம் விட்டு விட்டார்கள். இது தனிப் புலிக் கோசமாகவே கணக்கில் வரும்.
    அதை ஏன் உணரவில்லை?

    Reply
  • Information
    Information

    Editorial : Britain’s moment of shame
    December 2, 2010, 12:00 pm

    That the United Kingdom is a state sponsoring terrorism is only too well known as it harbours terrorists of all kinds who do not pose a threat to it, including the LTTE and lets them raise funds for wars in other countries like Sri Lanka. But, as we saw on Wednesday, Britain has now been reduced to a puppet state manipulated by terror backers on whose support some British political parties and politicians are dependent to win elections! A US diplomatic cable exposed by Wikileaks has revealed that David Miliband, while he was British foreign secretary, focused on Sri Lanka’s war to win votes of LTTE sympathisers in the UK.

    Today, Britain, which used to boast of being ‘the land of free speech’, has come to such a pass that there is no democratic space even for a visiting Head of State to make a speech at a leading academic institution. The British government made a public display of its impotence, when the Oxford Union was compelled on Wednesday to cancel President Mahinda Rajapaksa’s address citing security reasons.

    An attempt is being made in some quarters to make the cancellation of President Rajapaksa’s address out to be a comedown for him and his government. Nothing could be further from the truth. He has incurred the wrath of terror backers because he effectively neutralised the LTTE at home militarily. He did so not for his own sake; the whole country has benefited from the defeat of terrorism. Tamil people are now living without fear of their children being forcibly conscripted. They do not have to pay protection money to terrorists. Terror strikes on civilian targets have ceased and people are moving about freely without fear of being blown to bits. On the other hand, it was not President Rajapaksa who did chicken out; it was the British government that has been left with egg on its face for giving in to terrorist sympathisers. President Rajapaksa was man enough to go to London in spite of threats from LTTE backers to have him arrested there.

    President Rajapaksa may not have been able to make his scheduled speech but he managed to deliver a strong message––loud and clear––to the world by going all the way to Britain and being denied the promised opportunity to make his speech: Sri Lanka is safer than Britain, which has sadly become a prisoner of powerful terror lobbies capable of making British politicians dance to their tune!

    It is not President Rajapaksa who should feel insulted by the Oxford incident but the weak-kneed British government leaders who buckled under threats and pressure from terror backers. They also made a mockery of the British law by allowing LTTE sympathisers to display in public places the flag of the LTTE, which is a banned terrorist group in the UK. This is the kind of respect the British government has for the law of the land!

    What a shame!

    Reply
  • vanavil
    vanavil

    பிரிட்டனுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம்

    பிரித்தானிய அரசுக்கு எதிராக கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம் முன்னால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

    கொழும்பு பௌத்தாலோக மாவத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் வாகன நெரிசல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க பிரித்தானிய அரசாங்கம் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

    Reply
  • தோஸ்து
    தோஸ்து

    “இலங்கை அரசிடம் உரிமைகள் போரடியே பெற வேண்டும்”
    “உங்கள் 30 வருட போராட்ட நடவடிக்கைகள் தவறு என்பதை உங்கள் போராட்டமே நிரூபித்துள்ளது”
    “போராட்டம் இப்படியாக நடாத்தப்படவதில்லை”-கணேஸ்.
    அப்படியா! எப்போ உங்கள் அறிவான உரிமை போராட்டம் தொடங்குது!

    Reply
  • Nathan
    Nathan

    கணேஸ் அப்ப என்னதான் செய்யிறதெண்டு சொல்லுங்களேன். உங்களமாதிரி வீட்டில இருந்துகொண்டு செய்யிற எல்லத்தையும் குறை கூறிகெண்டு நோகாம பின்னூட்டம் எழுதினால் சனத்துக்கு விடிவு வருமென்றால் அதை நானும் செய்யத்தயார்.

    //இலங்கை அரசிடம் உரிமைகள் போரடியே பெற வேண்டும், ஆனால் 30 வருடமாக நீங்கள் செய்த பயங்கரவாதப் போராட்டத்தால் அல்ல//

    சரி 1948 இல இருந்து 1977 வரை அகிம்சையாய் போரடினம் 1977 இல இருந்து 2009 வரை ஆயுதத்தால போரடினம். இப்ப என்ன செய்யிறதெண்டு தெரியமலும் உங்களப்போல மூளையை கிளறி எடுப்பதற்கு ஒருவரும் இல்லாமையாலும் சனம் உந்த பிடிஎப் மற்றும் ரிவைஓ பின்னால போகவேண்டிக்கிடக்கு. ஏன் நீங்கள் போய் எப்படி போரட வேண்டும் என்று அங்கு கூடியிருந்த கூட்டத்திற்கு சொல்லவேண்டியது தானே? தலைவர் இல்லாததாலதானே சனம் தடுமாறுது. இவ்வளவு விவரமான நீங்கள் தலைவனாய் மாறி மக்களுக்கு உரிமை வாங்கி தரலாமே?

    அரசாங்கத்துடன் போரடி உரிமையை பெறவேண்டுமென்றியல் ஆனா யார் எப்படி போரடவேண்டுமென்று சொல்லுறியல் இல்ல. உப்பிடியே சொல்லிப்போட்டு நீங்க பாட்டில போய்டுவியல். அப்ப சனம் எப்படி உரிமையை வென்றெடுக்கிறது? இணையத்தில பின்னூட்டம் எழுதியா?

    //போராட்டம் இப்படியாக நடாத்தப்படவதில்லை அடுத்தமுறை இன்னுமொருமுறை மகிந்தா அல்லது வேறு யாரும் வரும் வரை உங்கள் போராட்டம் படுத்துவிடும் இப்படியே ஏதொஒண்டை சொல்லிக் கொண்டே அடுத்த 30 வருடம் போய்விடும் இதுதான் உங்கள் வரலாறாகிறது. இதுவே மாபெரும் வரலாற்றுத் துரோகம்.//
    ஓம் இப்படி பேரட்டம் செய்யக்கூடாது. கடும் குளிரில போய்நிண்ட இந்த வேலை இல்லாதவர்கள் சும்மா பேசாம வீட்டில படுத்திருந்தா மகிந்த தம்பாட்டில் ஓக்ஸ்போர்ட்டில் பேசிப்போட்டுபோய் சந்தோசத்தில ஊரில தமிழ்ச் சனத்திற்கு விருந்து கொடுத்திருப்பார் போல. லண்டன் தமிழர் அச்சா சனம் அதனால உங்களுக்கு கிராம மட்டத்தில சுயாட்சி தாறன் எண்டும் சொல்லி இருப்பார். இந்த விவரம் கூட தெரியாம் டொக்டர் எஞ்சினீயர் மெத்தப் படிச்சவர்கள் எண்டு கொண்டு நேற்று வந்திருந்த கொஞ்சப்பேரை பார்க்க எனக்கு இப்ப கவலையாய் தான் இருக்கு.

    Reply
  • thurai
    thurai

    இராசபக்சவிற்கு எதிர்ப்பு காட்டிதும், அவரிற்குத் தண்டனை கொடுக்க முயல்வதும் புலிகள் புலம் பெயர் நாடுகளில் தங்களை விட தமிழர் மீது உருமை கொண்டவர்கழும் அக்கறை கொண்டவர்கழும் வேறு யாருமில்லை யென்பது போல் காட்டி புலத்தில் வாழும் அரசியல் அறிவற்ற தமிழர்களை ஏமாற்ரவேயாகும்.

    புலம்பெயர் நாடுகளில் பணத்தைப்பறித்து வாழ்ந்தவர்கள் சும்மா இருப்பார்களா? வன்னியழிந்தாலென்ன, இன்னுமோர் முள்ளிவாயக்கால் வந்தாலென்ன எல்லாம் புலம் பெயர் புலிகளின் வியாபார விளம்பரத்திற்கு உதவியாகவே அமையும்.

    மண்ணில் அழிவில் புலத்தில் வாழும் புலிகள். பிரிட்டிஸ் தமிழ் ,உலகத்தமிழ், குலோபல் தமிழ் விசன். 100 பேர் கூட்டாகச் சேர்ந்தவுடன் உலகத் தமிழரிற்கெல்லாம் தாங்கள்தான் பிரதிநிதிகள் என்று தங்களிற்கு தாங்களே முடிசூட்டி வாழும் புலியின் மாறு வேசக்காரரின் ஏமாற்று வேலைகளே இவையாவும்.– துரை

    Reply
  • Nathan
    Nathan

    //இராசபக்சவிற்கு எதிர்ப்பு காட்டிதும் அவரிற்குத் தண்டனை கொடுக்க முயல்வதும் புலிகள் புலம் பெயர் நாடுகளில் தங்களை விட தமிழர் மீது உருமை கொண்டவர்கழும் அக்கறை கொண்டவர்கழும் வேறு யாருமில்லை யென்பது போல் காட்டி புலத்தில் வாழும் அரசியல் அறிவற்ற தமிழர்களை ஏமாற்ரவேயாகும். துரை//
    துரை, இப்படியான போரட்டங்களில் கலந்து கொள்பவர் எல்லாம் புலிகளின் ஆதரவாளர்களென்ற முடிவுடன் எழுதுகிறீர்கள். உண்மையில்; பல புலி எதிர்பாளர்களும் புலியுடன் சம்மந்தமே இல்லாதவர்களும் தமிழருக்காக போரட்டங்களில் கலந்து கொண்டிருந்தனர்; உங்களுக்கு புலியின் மேலுள்ள தனிப்பட்ட கோபங்களை இப்போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள்மேல் புலிச்சாயம் பூசி தீர்த்துக்கொள்ள முயல்கிறீர்கள்.

    Reply
  • thurai
    thurai

    //அரசாங்கத்துடன் போரடி உரிமையை பெறவேண்டுமென்றியல் ஆனா யார் எப்படி போரடவேண்டுமென்று சொல்லுறியல் இல்ல. உப்பிடியே சொல்லிப்போட்டு நீங்க பாட்டில போய்டுவியல். அப்ப சனம் எப்படி உரிமையை வென்றெடுக்கிறது? இணையத்தில பின்னூட்டம் எழுதியா?//நாதன்

    எங்களிற்கு, என்ன வேண்டும், என்ன உருமை வேண்டும் அதற்கு எவ்வாறு போராட வேண்டுமென்பதெல்லாம் புலத்தில் தீர்மானிக்கப்பட முடியாது. விடுதலைக்கான தலைமையென்பது போராடும் மக்களிடமிருந்தே தோன்ற வேண்டும். மேற்கூறிய இரண்டு விடயங்களையும் மட்டுமல்ல வாய் திறந்து சரி பிழை சொன்னால் வாய்க்குள் துப்பாக்கி வைத்தவர்களால்தான் இன்று இணயத்தள யுத்தம் தமிழர் மத்தியில் நடக்கின்றது.

    இதுவரை புலம் பெயர்நாடுகளில் விடுதலயென்னும் பெயரால் புலி வேசம் போட்டவர்கள் தான் சிங்கள அரசிலும் பார்க்க தமிழர்களிர்குத் துரோகம் செய்தவர்கள். இவர்களை முதலில் எல்லோருமாக கண்டறிந்து தண்டனை சட்டரீதியாகக் கொடுத்த பின்னர் தான் மகிந்தாவும் சிங்கள அரசும் தமிழர்களிற்கு என்ன செய்கின்றார்களென்பதை புலம்பெயர் தமிழர் கருத்திற் கொள்ளவேண்டும். அதுவரை ஈழத் தமிழரை நிம்மதியாக வாழவிட்டாலே போதும்.– துரை

    Reply
  • மாயா
    மாயா

    லண்டனிலிருந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சற்று முன்னர் நாடு திரும்பியுள்ளார். அவரை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் விமான நிலையத்தில் கூடியிருந்து வரவேற்றனர்.

    படங்கள் :http://www.lankadeepa.lk/2010/12/03/front_news/12.htm
    http://www.lankaenews.com/Sinhala/files/2080NFP_Protest_britishHighcommision_J.jpg

    Reply
  • Mohan
    Mohan

    -http://www.guardian.co.uk/world/2010/dec/03/tamils-sri-lanka-general-arrest-warrant

    Reply
  • Nathan
    Nathan

    துரை உங்களுக்கு நானெழுதிய பல விசயங்களை ஜெயபாலன் வெட்டிப்போட்டார். ஜெயபாலன் தயவுசெய்து தணிக்கையின் பெயரால் பேச்சு சுதந்திரத்தை தடுக்காதீர்.

    ஊரில சனம் சாப்பட்டுக்குத்தவிர வாயை திறக்கவே பயப்பிடுது. இதைபாத்திட்டு வந்து ஆகா அவங்களுக்கு ஒரு குறையும் இல்லை ஆனா வேலையில்லாத புலம் பெயர் தமிழர் தான் ஆர்ப்பாட்டம் அது இது என்று திரியிறாங்கள் என்பது அபத்தம்.

    அவர்களுக்கு அரசியல் தீர்வென்று வேண்டும் என்று நாங்கள் செல்லுரமே தவிர இன்ன தீர்வு வேண்டுமென்று சொல்லவில்லை என்பதை மறந்திட்டடியல். எமது போரட்டம் அழுத்தங்களை பிரயோகித்து இலங்கை அரசாங்கத்தை ஒரு தீர்வை ஏற்படுத்த சம்மதிப்பதே. அங்குள்ளவர்களுக்கு என்ன வேண்டுமென்பதை ஜயா சம்மந்தரும் தோழர் டக்ளசும் மற்றும் பலரும் யோசிக்கட்டும்.

    நீங்கள் இங்க இருந்து அது பிழை இது பிழை என்பதால் ஒன்றுமே ஆகப்போவதில்லை. சனல் 4 உம் கமரூனும் ஓபாமாவும் தமிழருக்கு நியாயம் கிடைக்க பண்ணுவார்களென்றால் உறு மீன் வர காத்து நின்றது கொக்கு மட்டுமல்ல நாமுமாய் தான் இருப்போம்.

    Reply
  • karuna
    karuna

    புலிகள் பணம் வாங்கியதுபோல் பிரிஎப் நிச்சயமாக மகிந்தவிடம் பணம் வாங்கியுள்ளது என்பது நன்கே இப்போது புலனாகிறது. ஊரில் சரிந்து போன மகிந்தாவின் செல்வாக்கு மீளவும் உச்சிக்கு போயுள்ளது! வில்லனாக மாறிய மகிந்தா இன்று கொழும்பில் மீண்டும் ஹீரோ! புலிக்கொடி போராட்டம் இனி அங்கு தடுத்துவைத்திருக்கும் புலி சந்தேக நபர்களிற்கு ஆயுள் தண்டனையை கொடுக்கும்! இராணுவ மயமாக்கலை இன்னும் அதிகரிக்கும்! மொத்தத்தில் பிரிஎப் மற்றும் அவர்களின் கூட்டு போராட்டகாரர்களிற்கு கஜான நிரம்பும்! யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழனின் கோவணம் உருவப்படும். நேற்று முழுவதும் தெரிவில் இறங்கி போராடிய புலம் பெயர் தமிழர் மீளவும் ஓவர்றைம் அடிக்க சென்றுவிடுவார்கள்! டோல் எடுப்பவர்கள் கையில் காசு வேலைக்கு போய்விடுவார்கள்! இணையத்தில் வெற்றி வெற்றி என்று எழுதி தள்ளியவர்கள் ஒரு பியருடன் இணையத்தில் தென்னிந்திய நடிகையினை பார்த்து ரசிப்பார்கள்! ஆனால் பாவம் தயாக தமிழனோ மகிந்தவை அப்சற் ஆக்கிப்போட்டங்களே எங்களுக்க என்ன நடக்குமோ என்ற பயத்தில் படுக்கையிலேயே சிறு நீர் கழிப்பான்!

    Reply
  • kumaran
    kumaran

    இரண்டு வாரம் நித்திரை இல்லாம மனப்பாடம் பண்ணின ஒக்ஸ்போர்ட் யூனியன் Speechஐ cancel பண்ணியதால் மஹிந்த ரொம்ப கடுப்பாகி யாருக்கச்சும் அதை பேசிக்காட்டியே தீருவேன் எண்டு அடம் பிடிக்கிறராம்…

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    //அரசாங்கத்துடன் போரடி உரிமையை பெறவேண்டுமென்றியல் ஆனா யார் எப்படி போரடவேண்டுமென்று சொல்லுறியல் இல்ல. உப்பிடியே சொல்லிப்போட்டு நீங்க பாட்டில போய்டுவியல். அப்ப சனம் எப்படி உரிமையை வென்றெடுக்கிறது? இணையத்தில பின்னூட்டம் எழுதியா?// – Nathan on December 3, 2010 11:39 am

    ஒரு சமூகதின் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான இருப்பு என்பது அந்த சமூகத்தின் பொருளாதார, அறிவியல் மேன்பாட்டின் அடிப்படையிலேயே இன்றுவரை உலகத்தால் தீர்மானிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு உதாரனமாக உலகஅரங்கில் தற்போதைய இந்தியாவை நாம் எடுத்துக்கொள்ளலாம். இதேபோல இலங்கையில் சிறுபான்மையினரின் இருப்பையும் அவர்களின் அரசியல் அதிகாரங்களையும் உறுதிசெய்ய வேண்டுமெனில் நாம் செய்யவேண்டியன பின்வருவன:

    1) மத்திய அரசின் உதவிகளில் தங்கியிருக்கும் சிறுபான்மை மக்களின் பொருளாதாரத்தை அதனிலிருந்து விடுவிக்க, புலம்பெயர்ந்தவகள் தமது தாயகப்பிரதேசங்களில் முதலிட்டு, இப்பிரதேசங்களை உற்பத்திப்பொருட்களின் பிரதேசங்களாக மாற்றியமைக்க முன்வரவேண்டும். இதை இவர்கள் தாம் இருக்கும் நாடுகளிலுள்ள வியாபாரக் கம்பனிகளினூடாகவே செய்யமுன்வந்தால், இலங்கைஅரசு தனது அடக்குமுறைகளை இந்த முதலீடுகள்மீது செய்யமுடியாது.

    2) புலம்பெயர்ந்த எமதுநாட்டின் தொழில்சார் வல்லுனர்கள், தமது அறிவையும், அனுபவங்களையும் எமது பிரதேச அபிவிருத்தியின் பங்குதாரர்களாக செயற்ப்பட அங்குள்ள நிறுவனங்கள் முன்வரவேண்டும்.

    3) இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்களினது அரசியல் பிரதிநிதிகளானவர்கள், தமது சொந்த வாழ்வின் வளர்ற்ச்சியை முன்னிலைப்படுத்தாது, தமது சமூகவளர்ற்சிக்கான பிரதிநிதிகளாக செயற்படவேண்டும்.

    இந்த மூன்று பிரதான கோட்பாடுகளையும் நாமெல்லோரும் கடைப்பிடிப்போமாயில், எமது அரசியல் அதிகாரங்களையும், எமது சந்ததிகளின் வாழ்வையும் எந்த வல்லரசினால்கூட புறந்தள்ள முடியாது.

    Reply
  • நந்தா
    நந்தா

    ஆமா! இந்த ஒக்ஸ்போர்ட் யூனியனுக்கும், தமிழுக்கும், எங்கடை மொட்டைக் கறுப்பன் நெல்லுக்கும் என்ன சம்பந்தம்?

    புலிக் கொடியோடு போனவன் எவனாவது ஒழுங்காக பள்ளிக்கூடம் போயிருப்பானா?

    எண்டாலும் பாருங்கோ! தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத இயக்கத்தின் கொடியை பிடிக்க எப்படி இந்த “ஜனனாயக”, “சட்டவிண்ணர்களான” பிரிட்டிஷ் வெள்ளையர்கள் அனுமதித்தனர்? பின்லாடனின் கொடிக்கும் அனுமதி கிடைக்கும் போலத் தெரிகிறது.

    இந்த இங்கிலாந்துக் கும்பல்களெ புலிகளின் எஜமானர்கள் என்பது இப்பொழுதாகிலும் தமிழ் மர மண்டைகளுக்குப் புரிந்தால் சரி.

    Reply
  • BC
    BC

    //துரை உங்களுக்கு நானெழுதிய பல விசயங்களை ஜெயபாலன் வெட்டிப்போட்டார். ஜெயபாலன் தயவுசெய்து தணிக்கையின் பெயரால் பேச்சு சுதந்திரத்தை தடுக்காதீர். //
    இது தான் சமீபத்தில் நான் படித்த மிக சிறந்த நகைசுவை. தங்களுக்கெதிராக வாயை திறந்தவர்களை கொலை செய்தும், துன்புறுத்தி சித்திரவதை செய்த பயங்கர புலி இயக்கத்தை சேர்ந்தவர் சொல்கிறார்.
    கப்பமும் கட்ட வேண்டும்,கொலை செய்யும் உரிமையும், கருத்து சொல்லும் உரிமையும் புலிகளுக்கு மட்டுமே இருக்க வேண்டும். இது தான் புலிகளின் தாகம்.

    Reply
  • விளங்காமுடி
    விளங்காமுடி

    தளபதி!
    அரசியலமைப்பு மாற்றமும் அதிகாரப் பரவலாக்கமும் இல்லாமல், நீங்கள் எழுதிய எவையும் நடைமுறைச் சாத்தியமற்றவை.

    Reply
  • thurai
    thurai

    //அவர்களுக்கு அரசியல் தீர்வென்று வேண்டும் என்று நாங்கள் செல்லுரமே தவிர இன்ன தீர்வு வேண்டுமென்று சொல்லவில்லை என்பதை மறந்திட்டடியல்//நாதன்

    முள்ளிவாய்க்காலில் புலிகளைக்காப்பாற்ர மக்களை இராணுவத்திற்கு பலி கொடுக்கு முன் அரசியல் தீர்வுவேண்டுமென்று ஒரு சொல் சொல்லியிருக்கலாமே. ஈழத்தமிழர் அரசியல் வேண்டும் போர் வேண்டாமென்றால் தமிழீழம் மின்றி தலைவர் ஒன்றையும் ஏற்காரென்றீர்கள்.

    இப்போ மக்களை அரசியல் வேண்டாம் சமைக்க அரிசி இருந்தாலே போதுமென்கின்ற நிலைமைக்கு கொண்டுவந்துவிட்டு இப்ப இங்கிருந்து அரசியல்தீர்வு வேண்டுமென்கின்றீர்கள். தேடிய சொத்துக்கள் போதுமென்று புலம்பெயர் மக்களிடம் பணம் கேட்காது விட்டாலே முதலில் போதும்.

    //நீங்கள் இங்க இருந்து அது பிழை இது பிழை என்பதால் ஒன்றுமே ஆகப்போவதில்லை. சனல் 4 உம் கமரூனும் ஓபாமாவும் தமிழருக்கு நியாயம் கிடைக்க பண்ணுவார்களென்றால் உறு மீன் வர காத்து நின்றது கொக்கு மட்டுமல்ல நாமுமாய் தான் இருப்போம்//நாதன்

    புலிகள் பிழையென்று 25 வருடமாக நாங்கள் சொன்னது உங்களிற்கு அப்போதும் விளங்கவில்லை. முள்ளிவாய்க்காலின் பின்பும் விளங்கவில்லை.

    உல்லாச வாழ்வை விரும்பும் புலத்துத்தமிழர். அவர்களின் பணத்தைப் பசியாறிய விடுதலைப் புலிகள். ஈழத்தில் தவிக்கும் தமிழ்மக்கள். இனியுமேன் புலிக்கொடி? தமிழரை சிங்களவர்களிற்கு பலிகொடுத்து வாழும் புலத்துத் தமிழரின் சின்னமே புலிக்கொடி. தமிழரின் விடுதலையின் சின்னமல்ல. முதலில் விட்ட தவறிற்கு மன்னிப்பு கேழுங்கள். அந்த பழக்கமிருந்தால். அல்லாவிடில் ஒதுங்கி விடுங்கள்.– துரை

    Reply
  • thurai
    thurai

    //துரை, இப்படியான போரட்டங்களில் கலந்து கொள்பவர் எல்லாம் புலிகளின் ஆதரவாளர்களென்ற முடிவுடன் எழுதுகிறீர்கள். உண்மையில்; பல புலி எதிர்பாளர்களும் புலியுடன் சம்மந்தமே இல்லாதவர்களும் தமிழருக்காக போரட்டங்களில் கலந்து கொண்டிருந்தனர்; உங்களுக்கு புலியின் மேலுள்ள தனிப்பட்ட கோபங்களை இப்போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள்மேல் புலிச்சாயம் பூசி தீர்த்துக்கொள்ள முயல்கிறீர்கள்.//நாதன்

    புலிகளின் ஆதரவாளர்க்ழும்,புலியின் அனுதாபிகழும், பரிதாபமானவர்களென்பதே எனது கருத்து. தலைவரின் பேராலும், புலியின் பேராலும், ஈழ்த்தமிழரின் பேராலும் புலியினையும், போரையும் நடத்தியவர்கள் யார்? இவர்களே ஈழத்தமிழினத்தினத்திற்கு எதிரானவர்கள். தமிழரின் அழிவில் வாழ்க்கை நடதுபவர்கள். புல்லாங்குழல் ஊதி எலிகளை வரவழைத்து ஆற்ரில் இறக்கியழித்த கதை போல்தான் தமிழீழப் பாட்டைப் பாடி தமிழரை அழிவிற்கு கொண்டு போனவர்கள்.

    ஆயிரம் புலி எதிப்பாளர் மத்தியில் ஒரு புலிக்கொடி மட்டும் போதும். எல்லோருமே புலியாகவே கருதப்படுவார்கள்.– துரை

    Reply
  • hari
    hari

    “புலிக் கொடியோடு போனவன் எவனாவது ஒழுங்காக பள்ளிக்கூடம் போயிருப்பானா?-நந்தா.

    சரியான கேள்வி. ஆனால் இங்கு கேட்டு பிரயோசனம் இல்லை. ஒரு புலி சார்பு ஊர்வலத்திலை இக் கேள்வியை கேட்டு பாருங்கோ சரியான பதில் கிடைக்கலாம்.

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    //அரசியலமைப்பு மாற்றமும் அதிகாரப் பரவலாக்கமும் இல்லாமல், நீங்கள் எழுதிய எவையும் நடைமுறைச் சாத்தியமற்றவை.// – விளங்காமுடி on December 3, 2010 4:28 pm

    இன்று இருக்கும் இலங்கையின் அரசியல் யாப்பில், ஏன் இவை சாத்தியமற்றவை என்பதை தயவுசெய்து யாராவது சட்டநிபுணர்கள் இங்கு பதிவிடுவீர்களா?- இது விளங்காமுடியைப் போன்ற சட்டக்கல்லூரி மாணவர்களை சிலவேளை சிந்திக்க வைக்கலாம்!

    Reply
  • thurai
    thurai

    //புலிகள் பணம் வாங்கியதுபோல் பிரிஎப் நிச்சயமாக மகிந்தவிடம் பணம் வாங்கியுள்ளது என்பது நன்கே இப்போது புலனாகிறது. ஊரில் சரிந்து போன மகிந்தாவின் செல்வாக்கு மீளவும் உச்சிக்கு போயுள்ளது//கருணா

    பணம் வாங்கினாலென்ன, வாங்காவிட்டாலென்ன மகிந்தவிற்கு ஆதரவை இலங்கையில் தேடிக்கொடுத்த பெருமை பிரிப் இற்கு என்றுமுள்ளது. புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்கள் செய்யக்கூடியது இராசதந்திரமான, அரசியல் நடவடிக்கைகள். இவர்கள் செய்வதோ மகிந்தாவை எதிர்த்து, சிங்களவர்களை மகிந்தாவிற்கு ஆதரவாக்கி, தமிழர்களிற்கு எதிரிகளாக்கி, இலங்கையில் தமிழரின் அழிவை காண்பதே. அப்போதான் புலமெங்கும் உண்டியல் குலுக்கலாம்.– துரை

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    இந்திய, சீன நிறுவனங்களால் இலங்கையில் முதலிட முடியுமானானால், ஏன் வேற்றைய நாட்டு நிறுவனங்களால் அங்கு முதலிட முடியாது!

    Reply
  • hari
    hari

    புலிகள் மோசமாக மனிதவுரிமைகளை மீறியதாக குற்றசாட்டை முன்வைக்கும் மனிதவுரிமைவாதிகளே! உங்களிற்கும் பிரித்தானியா வீதிகளும் நீதிமன்றங்களும் மனிதவுரிமை அமைப்பு அலுவலங்களும் கதவை திறந்து வைத்துள்ளன நீங்களும் தாரளமாக ஊர்வலம் போகலாம் வழக்கு தொடுக்கலாம் மனு கையளிக்கலாம் கவனயீர்ப்பு செய்யலாம். அடிக்கிற குளிரை பார்த்து அலுப்பு படாமல் ஏதாவது ஒன்றை அல்லது பலவற்றை செய்து புலிகளை புலிப்பினாமிகளை சட்டப்படி தண்டிக்கலாம். என்னுமேன் தாமதம்!

    /இந்திய சீன நிறுவனங்களால் இலங்கையில் முதலிட முடியுமானானால் ஏன் வேற்றைய நாட்டு நிறுவனங்களால் அங்கு முதலிட முடியாது!”//
    வடகிழக்கு எல்லாம் பசில் ராஜபக்சா மயமென்ற செய்தி தெரியாதா? ஒரு கோடி நீங்கள் முதலிட விரும்பினால் இரண்டு கோடி லஞ்சம் கொடுக்கணும்.

    Reply
  • மாயா
    மாயா

    புலத்து புலிகள் ; மகிந்தவை மாவீரனாக்கி விட்டார்கள். இதுவரை மகிந்த மேல் இருந்த சில கடுப்புகளும் சிங்கள மக்கள் மனதிலிருந்து மறந்து விட்டனவாம். மகிந்த ; சரியில்லைதான். இருந்தாலும் எங்கள் அதிபரை மானபங்கம் செய்ததை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என பலரும் அபிப்பிராயப் படுகின்றனர். மகிந்தவுக்கு மச்சம் வேலை செய்துதான் இருக்கிறது.

    சும்மா கிடந்த எதையோ ; ஊதிக் கெடுத்தானாம் என்பது போல ஆகி விட்டது. மகிந்தவை முடியாவிட்டால் ; மகிந்தவோடு வந்த எவரையாவது கைது செய்வோம் என்றவர்கள் நிலை என்ன? உங்களைப் போன்ற மேதாவிகளை நம்பித்தான் பிரபாகரன் முள்ளிவாய்க்கால வரை போய் ; கடைசியில் சரணடைந்தார். இனியாவது அந்த மக்கள் புலத்து புலம்பல்களை உணர்ந்தால் சரி. வெளிநாட்டுக்கு போனால் ஐநாவை இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தி விடுவார்கள் என்று அவர்கள் அப்ப நம்பினார்கள். இன்னமுமா?

    மகிந்த நாடு திரும்பியபோது :http://www.youtube.com/watch?v=xrvqVK0nXVY&feature=player_embedded

    Reply
  • Kusumpu
    Kusumpu

    தெருவில் நின்றீர்களோ அல்லது தெருவில் கடுத்தீர்களோ தெரியாது. இலங்கை மக்களையும் இலங்கையையும் வெளிநாட்டுத் தெருவில் விட்டிருக்கிறீர்கள் என்பது மட்டும் உண்மை.

    Reply
  • விளங்காமுடி
    விளங்காமுடி

    தளபதி! //இன்று இருக்கும் இலங்கையின் அரசியல் யாப்பில்…//
    1948 இல்’நம்புங்கள் எம்மை’என்றபேரினவாதம்,தமிழ்த் தலைமைகளிடம் ‘சோல்பெரி அமைப்பை’ ஏற்றுக் கொள்ளப் பண்ணி சுதந்திரம் பெற்றது.
    அந்தப் பேரினவாதிகள் அதிலிருந்த தமிழ் மற்றும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பளிக்கும் சரத்தை 29(2) தூக்கி நிறுத்தினார்கள்.
    1972 இல் சீனச்சார்பெடுத்த சிறிமாவும், இடதுசாரிகளும் சேர்ந்து அதைத் துக்கி எறிந்தார்கள். பௌத்தசிங்கள பேரினவாத அரசை சட்டவிரோதமாய், ஒருதலைப்பட்சமாக உருவாக்கினார்கள்.

    இன்றும் முடிவடையாத, தன்னிகரில்லா (18வது திருத்தம்)த் தலைமையின்கீழ் ஆட்சி நடக்கிறது.

    இப்போதும் 2010இல் இனவழிப்பு தலைமைசொல்கிறது. ‘நம்புங்கள் எம்மை’

    //இந்திய, சீன நிறுவனங்களால் இலங்கையில் முதலிட முடியுமானானால், ஏன் வேற்றைய நாட்டு நிறுவனங்களால் அங்கு முதலிட முடியாது!//

    இலங்கையின் இராணுவ கேந்திரம், பல நாடுகளின் (இந்திய,சீன )முதலீடுகளை, ஆயுத உதவிகளை இலகுவாக பெற்றுக் கொள்ள வாய்ப்பாக இருந்தது. இதே ஆட்சியில், அதுவும் அதிக காலம் தாக்குப் பிடிக்காது.

    Reply
  • khasim
    khasim

    /இந்த விவரம் கூட தெரியாம் டொக்டர் எஞ்சினீயர் மெத்தப் படிச்சவர்கள் எண்டு கொண்டு நேற்று வந்திருந்த கொஞ்சப்பேரை பார்க்க எனக்கு இப்ப கவலையாய் தான் இருக்கு./ நாதன்

    /புலிக்கொடிகளைத் தாங்கிய வண்ணம் இருந்த சிலர் ஜனாதிபதியின் சந்திப்பிற்கு வந்து சென்றவர்களை நோக்கி மோசமான தூசண வார்த்தைகளை தமிழிலும் சிங்களத்திலும் கோசமாக எழுப்பினர்./கட்டுரை

    Reply
  • மாயா
    மாயா

    புலிகளோடு மகிந்த ஆரம்ப காலத்திலிருந்தே தொடர்பிலிருந்துள்ளார் என லங்காஈநியுஸ் பழைய புராணத்தை வெளிக் கொண்டு வந்துள்ளது. ஆதாரமாக மகிந்த கிரீஸ் நாட்டில் புலிகளின் பொறுப்பாளர்களாக இருந்த சந்திரசேகரம் மற்றும் சேகரம் ஆகியோருடன் உள்ள புகைப்படமொன்றையும் வெளியிட்டுள்ளது. மகிந்த கிரீஸ் நாட்டில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியொன்றைக் காண எஸ்.பீ.திஸானாயக்காவுடன் சென்ற போது ; அவர்களது அனைத்து செலவுகளையும் விடுதலைப் புலிகளே ஏற்றுக் கொண்டார்கள் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது.
    படம்: http://www.lankaenews.com/Sinhala/files/2066Mahinda_withLTTE_Greese_leader_J.jpg

    வட்டுக் கோட்டை பிரதிநிதிகளோ ; நாடு கடந்த பிரதமரோ ; வைகோ ; நெடுமாறனோ ; ஏனைய புலிகளின் குரல்களோ அமைதி காப்பதன் மர்மம் என்னவோ?

    Reply
  • விளங்காமுடி
    விளங்காமுடி

    லியாம் பாக்ஸ் உடனான கொடுக்கல் வாங்கல் தனிப்பட்ட சந்திப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
    “மகிந்தவுக்கு மச்சம் வேலை செய்துதான் இருக்கிறது.” மகிந்த சென்றார். வென்றார், வந்தார். ஆனால் யானையயல்லவா பலியாக்கப்பட்டு விட்டது.
    Was the Siyambalangamuwa elephant killed for the tusk sacrifice to banish ‘bad spell’ of a Govt. politico?
    -http://www.lankaenews.com/English/news.php?id=10352

    Reply
  • ஜெயா
    ஜெயா

    ரமேஸ் கெஞ்சுகிற காட்சியா? மகிந்தா திரும்பிபோன காட்சியா? யாராக இருந்தாலும் எது உங்கள் மனதில் வலிக்கிறது. மகிந்தா இன்று உரையாற்றாவிடில் நாளை அல்லது மீண்டும் வேறு ஒரு நாட்டில் உரையாற்றலாம் ஆனால் திரும்பிபோகும் போது மகத்தாக வரவேற்பு கிடைக்கும் ஆனால் ரமேஸ் போன்ற பல வீடியோக்கள் வெளிவரலாம். பலவிதமாக சிந்திக்க வெளிக்கிட்ட சிங்களவர்களையும் ஒன்று சேர்த்த பெருமை இந்த புலம்பெயர் தேசத்திற்கு ஒன்றும் விளங்காமல் உசுப்பேத்தி செய்கிற காரியம் ரமேஸ் மாதிரி பல பெயர்கள் உருவாகலாம் அதற்காக மகிந்தாவுக்கு அடிபணியாது சிங்களவனுக்கு சேவகசமா என்று வீரவசனம் வேண்டாம்
    பருத்தித்துறையும் தெரியாது நாவற்குடாவும் தெரியாது ஆனால் புலிக்கொடியால் இப்போ போராட்டம் வேண்டும்

    Reply
  • vanavil
    vanavil

    மகிந்தவை எதிர்த்த சிங்களவர்களை, மகிந்த பக்கம் திருப்பிய, லண்டன் புலித் தமிழருக்கு மகிந்த நன்றியாக இருப்பார்.

    Reply
  • London Boy
    London Boy

    புலிகளின் மனித உரிமைப் போராட்டம்:
    எழுபதுக்களில் எண்பதுக்களில் தொண்ணூறுகளில் இரண்டாயிரத்தில் – கொலைகள் சக கூட்டுக்கொலைகள் சக சித்திரவதை முகாம்கள் சக சரணடைந்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலைகள் சக சரணடைந்த இராணுவப் பணிப்பெண்கள் மீது பாலியல் வல்லுறவு அவர்களது பெண் உறுப்புகளில் கிரணைட் வெடிக்க வைக்கப்பட்டது (ஆனையிறவு முகாம் தாக்குதலின் பின்)சக இனமக்கள் கூட்டுப் படுகொலை இறுதியில் சொந்த மக்கள் மீதே பாலியல் வல்லுறவு சொந்த மக்களையே படுகொலை.
    2009 மே 18 வரை – யுத்தத்திற்கு அறைகூவல். பனைமரத்தில வெளவாலா தலைவருக்கே சவாலா! கோசம் தலைவர் பஉள்ளுக்குவிட்டு அடிக்கப் போகிறார் விளக்கம்.
    2009 மே 18 இரவுக்குப் பின் – மனித உரிமை! நியாயம்! நீதி!

    Reply
  • hari
    hari

    “புலத்து புலிகள் ; மகிந்தவை மாவீரனாக்கி விட்டார்கள். இதுவரை மகிந்த மேல் இருந்த சில கடுப்புகளும் சிங்கள மக்கள் மனதிலிருந்து மறந்து விட்டனவாம்”-மாயா

    புலத்து புலிகளிற்கு பிரித்தானிய தூதரகமூடாக நன்றி சொல்லவா தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஆளுங்கட்சி அமைச்சருமான “சாகும் வரை உண்ணாவிரத சாதனைநாயகன்” விமல் வீரவன்ச தலைமையிலும் மேல்மாகாண ஆளுநருமான அலவி மௌலானா தலைமையிலும் இரண்டு ஆர்ப்பாட்ட பேரணிகள் நடத்தப்பட்டன. கொமடி பண்ணுறீங்கள் மாயா.

    Reply
  • மாயா
    மாயா

    hari, விமல் வீரவன்ச மற்றும் அலவி மௌலானா ; தாங்களும் ஏதோ செய்ததாக மகிந்தவிடம் பெயரெடுக்க இரண்டு ஆர்ப்பாட்ட பேரணிகள் நடத்தினார்கள். அவர்களுக்கு மகிந்தவின் ஆதரவு தேவை. இங்கே சுத்த சுயநலம் ஹரி.

    மகிந்த கட்சியில் இருக்கும் ; சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேர் இருந்தும் அவர்கள் எந்தப் போராட்டமும் செய்யவில்லை. மொக்கு மேர்வின் சில்வாவும் எதையும் செய்யவில்லை. அதை உணர்வீர்களா?

    மகிந்தவின் ஆட்சியில் ஊடகவியாளளர்கள் அச்சுறுத்தல் ; விலைவாசி அதிகரிப்பு ; அடக்குமுறை என பல பிரச்சனைகள் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்திருந்தன. இவை எப்போது தொடங்குகிறது என்றால் ; யுத்தம் முடிவுக்கு வந்து விட்டது எனும் மனநிலையில்தான். லண்டன் புலி போராட்டம் அவற்றை பின் தள்ள வைத்து விட்டது.

    புலிகளை அழித்து விட்டீர்கள். இனி மக்கள் பிரச்சனைகளைப் பாருங்கள் என்ற முணுமுணுப்பு ; இன்னமும் புலிகள் இருக்கிறார்கள் . வெளிநாட்டில் இருக்கும் புலிகள் ; இலங்கையில் உள்ளவர்களை பயன்படுத்தி எதுவும் செய்யலாம் எனும் செய்தியை கொண்டு செல்ல வைத்துவிட்டது.

    அதைவிட மோசமான விடயம் ; அடைபட்டுக் கிடக்கும் புலிப் போராளிகளை விடுதலை செய்வதை நீடிக்க உதவியுள்ளது. அங்கே ஏகப்பட்ட அப்பாவிகள் ; அநியாயமாக அடைபட்டுக் கிடக்கிறார்கள். அவர்களையும் அதே பார்வையில் பார்க்கவே முற்படுவார்கள். மீள் குடியேற்றங்களும் மந்தமாகும்.

    புலிகளை முடித்து விட்டீர்கள். இனி தமிழர் பிரச்சனைகளை தீர்த்து வையுங்கள் என சொல்வோருக்கு ; இன்னும் புலிகள் முடியவில்லை. லண்டனில் புலிகளின் அட்டகாசத்தை பார்த்தீர்கள்தானே? என எதிர்க் கேள்வி கேட்க வைத்துவிட்டது இந்த புண்ணாக்கு போராட்டம்.

    அறிவுள்ளவர்களாக இருந்திருந்தால் ; லண்டனுக்கு வந்த மகிந்தவை ஒரு குழுவாக சென்று சந்தித்து அங்குள்ள மக்கள் படும் அவலத்தை எடுத்துரைத்திருக்கலாம். அதற்கு லண்டனில் உள்ள சில அரசியல் தலைமைகளையும் இணைத்துக் கொண்டு போய் பேசியிருக்கலாம். உதாரணத்துக்கு போல் சத்தியநேசன் போன்றவர்களையும் இணைத்துக் கொண்டிருக்கலாம். காரணம் அவர் அண்மையில் இலங்கை சென்று திரும்பியிருந்தார். அவர் பல விடயங்களை சொல்ல முடிந்தவராக இருக்கிறார்.

    அடுத்து புலிக் கொடியை தவிர்த்து விட்டு ; மக்கள் படும் அவலங்களை காட்சியாக்கியிருக்கலாம். ஏகப்பட்ட புத்தி ஜீவிகள் இந்த புலிக் கொடியை தூக்காதீர்கள் என சொல்லியும். அதையேதான் தூக்கித் திரிகிறீர்கள். ஆரம்பம் முதல் இன்று வரை தமிழரின் அழிவுக்கு வித்திட்டவர்கள் தமிழரேயல்லாமல் ; சிங்களவரோ அல்லது உலகமோ அல்ல.

    சுவிசில் கடைசி பேச்சு வார்த்தை நடந்த போது ; அனைத்து மேற்கத்திய புத்தி ஜீவிகள் தொடக்கம் எரிக் சொல்கெய்ம் வரை தமிழ்ச்செல்வனோடும் வந்த குழுவினரிடமும் கெஞ்சாத குறையாக இந்த சந்தர்ப்பத்தை தவற விட்டு விடாதீர்கள் என சொல்லிப் பார்த்தார்கள். கேட்கல்லயே? “அடைந்தால் மகாதேவி. அடையாவிட்டால் மரணதேவி” என்று மேசையில் அடித்துக் கதைத்தார்கள். கடைசியில் அதே மேற்கத்திய நாடுகளின் கப்பலுக்காக காத்திருக்கிறோம் என்று கத்தும் போது அதை அவர்கள் கேட்டும் கேட்காது இருந்தார்கள்.

    இந்தியா ” தமிழருக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்தது தவறான ஒரு செயல்” என பகிரங்கமாக சொல்லி விட்டது. மேற்கத்திய நாடுகள் ” தமிழருக்கு அகதியாக இங்கே வாழ விட்டது தவறு ” என சொல்லப் போகிறது. அதுவும் வெகு தொலைவில் இல்லை.

    மோட்டுச் சிங்களவன் ; புத்திசாலிகளாகி ; புத்திசாலித் தமிழன் மோட்டுத் தமிழன் ஆகிவிட்டான். முன்னர் 7 இராணுவத்துக்காக 1983 கலவரமே நடந்தது. இன்று மகிந்தவை இவ்வளவு அவமானப்படுத்தியும் ; அங்கே எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லையே? ஏன் என்று யோசிக்கவில்லையா? தமிழ் ஊடகங்கள் உசுப்பேத்திய அளவுக்கு ; சிங்கள ஊடகங்கள் அங்கே உசுப்பேத்தவில்லை. இன்னொரு கலவரம் உருவாக அரசும் இடம் கொடுக்கவில்லை. கொடுக்காது. அவர்கள் 1983ல் செய்த முட்டாள்தனத்தை இனி ஒரு போதும் செய்ய மாட்டார்கள். எம்மவர்கள் இன்னும் இன்னும் அதே முட்டாள்தனத்தை செய்கிறார்கள்? எப்போது திருந்துவார்களோ தெரியாது.

    மேற்கத்திய நாடுகள் மகிந்தவின் மேல் மதிப்போடுதான் பார்க்கும்.மேற்கிலிருந்து யோசிப்பவனும் ; செயலாற்றுபவனும் அதே மேல் மட்டத்தில்தான் இருக்கிறான். ஒரு நாட்டுக்கு போய் எனக்கு இப்படி நடந்தால் என்றுதான் யோசிப்பான்? இலங்கை அரசு செய்த குற்றச் செயல்கள் தவறென்றாலும் அதையும் எதிர்க்க பயங்கரவாதம் எனும் போர்வை ஒரு போதும் பலனழிக்காது. புலிக் கூட்டம் தனது பிழைப்புக்கு வீதிக்கு வந்ததே தவிர ; தமது மக்களுக்காக அல்ல. எதேதோ சொன்னார்கள் என்னத்தை சாதித்தீர்கள். உங்கள் போராட்ம் புஸ்வானமானதான் மிச்சம்.

    கடைசி யுத்த வெற்றியை மகிந்த மக்களைக் கொண்டாட விட்டிருக்க விட்டிருக்கக் கூடாது என பகிரங்கமாக ஒரு பெளத்த பிக்கு சொன்னார். இது வெற்றியல்ல ; மக்கள் செத்திருக்கிறார்கள். இதை அமைதியாக விட்டிருக்கலாம். அவர் என்னோடு தனது கருத்தை பகிர்ந்து கொண்டதை என்னால் மறக்க முடியவில்லை. எல்லாளனை துட்டகைமுணு கொன்று வெற்றி பெற்ற போது ; அவன் அதைக் கொண்டாடவில்லை. அவன் தனது மக்களை ஒரு வயலில் வேலை செய்ய விட்டு ; அவர்களுக்கு உணவழித்து ஒன்றாய் இணைய வழி செய்தான் . அதுபோல மகிந்த செய்திருக்க வேண்டும் என்றார். லண்டனிலிருந்து நாடு திரும்பிய மகிந்தவை வரவேற்க அவர்தான் முன்னால் நின்றார். அவர் காலில்தான் மகிந்த முதலில் விழுகிறார். நிலமை எப்படி மாறிவிட்டது பார்த்தீர்களா?

    Reply
  • indiani
    indiani

    கிளிநொச்சியில் 500 மக்களை மழையில் நிற்கவிட்டு மகிந்தாவிற்க்கு ஆதரவாக கோசமிட வைத்துள்ளது இராணுவம். இதற்கு முக்கிய காரணம் என்றுமே எதிர்ப்பு அரசியல் நடத்தும் முட்டாள்தனமான புலியிசம். இலங்கையிலுள் தமிழ் மக்கள் வெகு விரைவில் கிளர்ந்து எழுவார்கள், புலம்பெயர் மக்களுக்கு எதிராக தம்மை நிம்மதியாக வாழவிட கோருவார்கள். அப்போதும் புலிகள் இப்படியான தமது செயல்களை கைவிடமாட்டார்கள் காரணம் இவர்கள் பயங்கரவாதிகளே!
    புலிகள் புலிகளின் பெயரில் செய்யப்படும் அத்தனை நடவடிக்கைகளும் பயங்கரவாதமே! புலிகளால் மக்களுக்கான எந்த நடவடிக்கைகளையும் என்றும் செய்ய தகுதி பெற்றவர்கள் அல்ல காரணம் இவர்கள் பயங்கரவாதிகளே இதைவிட இவர்கள் புலிகளின் பெயரில் களவு எடுத்த பணத்தை ஒளிக்க வழிவகைகளையே தேடுகின்றனர் இவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கட்ட வேண்டும்.

    Reply
  • நந்தா
    நந்தா

    //சரியான கேள்வி. ஆனால் இங்கு கேட்டு பிரயோசனம் இல்லை. ஒரு புலி சார்பு ஊர்வலத்திலை இக் கேள்வியை கேட்டு பாருங்கோ சரியான பதில் கிடைக்கலாம்.//

    அது ஏன் ஊர்வலம் போகேக்கை கேக்கோணும்? தடி கூட இல்லாத தமிழர்களைக் கும்பலாக வந்து அடித்துப் போட்டு ஓடுவது எப்பொழுதும் ஒரு வீரத்தனம் பாருங்கள்!

    துவக்கு தூக்கி சதிராட்டம் காட்டி மாவிலாறிலை தொடங்கின ஓட்டம் முள்ளிவாய்க்காலில் நிண்டது எப்படி? அங்கால கடல்!ஓட முடியாது! சயனைட் கட்டியவர்கள் வெள்ளைக் கொடி காட்டினார்களாம். சிங்களவன் சுட்டுட்டானாம். மனித உரிமை மீறிப் போச்சாம்!

    இந்த தேசம்நெற் ஒரு மைதானம். வந்து உங்கடை வீராப்புக்களை காட்டுங்கோவன்! கொள்கை விளக்கம், அப்பிடி ஒண்டும் கிடையாது என்டுநினைக்கிறன், இருந்தால் எடுத்து விடுங்கோ இல்லாட்டி உங்கடை கொள்ளை விளக்கத்தையாவது அள்ளி விடுங்கோ! தமிழீழம் கிடைக்காட்டியும் சில்லறை புடுங்கிற வழியாவது தெரியுமெல்லே!

    Reply
  • விளங்காமுடி
    விளங்காமுடி

    16 சிங்கள மாணவர்கள் படிக்கும் நிறுவனம் ஒன்றில், 8 மாணவர்களை மட்டும் கொண்ட குழுவின் அழைப்பின் பேரில், “ஏலுமெண்டா பண்ணிப்பார்” என்று, லியாம் பாக்ஸ்ற்கு கொட்டிக் கொடுத்த பணத்தை நம்பிப் போன “சர்வ வல்லமை பொருந்திய சானாதிபதியின்” ஆளுமையை, அறிவாற்றலை என்னவென்று சொல்வது?

    “ஒக்ஸ்போர்ட் யூனியனின்” அழைப்பு என்று பீற்றிக் கொண்டு, 8 பேர் கொண்ட ‘சங்கமைய’வின் அழைப்பிற்கு ஏமாந்து, வெள்ளைப் புலிகளின் முன்னால், கொள்கை விளக்கம் கொடுக்கப்போன வீரதீரத்தை எப்படி மெச்சுவது?

    சிங்கள பவுத்த பேரினவாதம், ஏற்கனவே தமிழர்களின் கோவணம் வரை உரிந்து விட்டார்கள். இனிக் ‘கலவரம்’ என்ற பேரில் தமிழர்களிடம் எடுக்க என்ன இருக்கிறது?

    ‘சேர்'(வெள்ளைப் புலி) என்று கூப்பிட்டு, பூசாரியையும், மௌலவியையும் காட்டி, போர்வைக்குப் போன காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும்.

    Reply
  • மகுடி
    மகுடி

    ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்தும் லன்டனில் ஜனாதிபதிக்கு ஏதிராக இடம்பெற்ற நிகழ்வுகளுக்கு கண்டனம் தெரிவித்தும் இன்று (04) கிளிநொச்சியில் ஊர்வலமும் கண்டன ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றுள்ளது.

    கிளிநொச்சி நகர வர்த்தக சங்கம் முச்சக்கரவண்டிச் சங்கம் மற்றும் மக்கள் அமைப்புகள் இணைந்து ஏற்பாடுசெய்த இவ் ஊர்வலமும் கண்டன ஆர்ப்பாட்டமும் கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து ஆரம்பித்து காக்கா கடை சந்தி வரை இடம்பெற்றது

    ஜனாதிபதி அவர்கள் லண்டனுக்கு பயணம் மேற்கொண்ட போது அங்கு அவருக்கு ஏதிராக பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர் இதனை தாம் வன்மையாக கண்டிப்பதோடு ஜனாதிபதிக்கு தாம் என்றும் ஆதரவாக இருப்போம் எனவும் ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர். –http://www.epdpnews.com/news.php?id=9106&ln=tamil

    Reply
  • Ajith
    Ajith

    Honourable President of Sri Lanka Mahinda Rajapakse said:
    ”நான் எதிர்க்கட்சியில் இருந்தபோது நானும் இப்படி தெருத்தெருவாகப் போராட்டியவன். எனது போராட்டத்திற்கு நியாயம் இருந்தது. ஆனால் இங்கு நடைபெறும் போராட்டங்களுக்கு நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை” எனத் தெரிவித்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. இன்று (டிசம்பர் 02) பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். _ Jeyapalan

    May I ask you Sir, at least you had the right to say this in this free country and go back to Sri Lanka. Do you know how many people you sent to the next world without any reason. The people didn’t murder you here as you did for number of Ploiticians, Journalists, innocent civilians. You even murdered those who were with your street fight defending the JVP terrorism. It is your government that organise the protest (even yesterday) against British High Commision in Sri Lanka. Here the protest is peaceful, democratic and within the law of the nation to ask for an arrest of a war criminal who ordered the murder of over 40,000 innocent tamils using unlawful methods unlike you do all attrocites under emergency law and corrupted rule.

    ஜனாதிபதி இங்கு மேலும் தெரிவிக்கையில் ”ஜனநாயகத்தின் தாய்நாடாக இருக்கும் பிரித்தானியாவில் கருத்துச் சுதந்திரத்திற்கு முன்னுரிமை அளிக்கின்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் யூனியனில் எனது கருத்தை தெரிவிக்கவிடாமல் தடுத்தது கருத்துச் சுதந்திரத்தை மறுத்ததே” எனத் தெரிவித்தார்.

    Mr President you are right that Britain is the motherland of free speech and Oxford union give priority to express views of all including a war criminal. You are the one who postponed earlier opportunity fearing the arrest for your crimes. You thought you made all arrangements for your secure journey and kept this visit very secret. Even you made an appointment with opposition leader on 30th November. Why couldn’t you make your speech public when you had the statement. Just send your speech to media, they will publish you. Do you agree that there is no freedom of speech under your rule in Sri Lanka? If you can’t allow freedom of speech in your rule what right you have to have freedom of speech? Actually they should have arrest you and allow to give your free speech in the courts.Dear President Sir, you learned a lesson here: Every action has a reaction. It is the consequences of your actions that you starts to come back to you. You denied the right of a journalist, politician and a citizen of mother lanka.

    ”ஒன்றரை வருடங்களுக்கு முன் நான் உங்களைச் சந்தித்த போது நான் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவேன் என்று உறுதி அளித்திருந்தேன். அதனைச் செய்து முடித்திருக்கிறேன்.

    Dear President,
    You claim that you have done the job. Well done! So, Why you have to rule the nation under emergency law? If there is no terrorim why should you continue to have emergency law? Why did you arrest the opposition candidate under military law instead of normal law? Why do you want to have a 200,000 Sinhala military in every streets of tamil areas? Why should you have high security zone? The people are surrounded by Sinhala military. There is no freedom of speech, movement and law and order. Don’t you think it is your terror rule in the country.

    இனிமேல் இலங்கையில் அபிவிருத்தி மேற்கொள்ளப்படும். சமாதானம் நிலைநாட்டப்படும். சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் அனைவரும் இலங்கையர்களாக வாழ்வார்கள். அடுத்த தடவை மீண்டும் உங்களைச் சந்திக்கும் போது அவற்றைச் செய்து முடித்திருப்பேன்” என்று தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் அனைவரும் தனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
    Dear President,
    Do you know what are the necessities of a development? What are the necessities of a peace? It is not the terrorism that was a barrier to the development and peace. It is the state terrorism against democratic rights of the people; It is the denial of Sinhalese to share the power of the nation with other nationalities. It is the use of racism of the Sinhala rulers to deny the right of other communities. It is the Sinhala state and rulers who massacred hundreds of innocent tamils to deny the rights of existence of tamils. As long as you deny the truth development and peace are out of reach to Sri Lanka. It is your Government that demerged North East. It is in your government your army commander said that tamils have no place in this courty. It is you who made alliance with Sinkala racists?
    Do you know that you also promised to solve the ethnic problem and appointed an all party group to find a solution during your first term. That group also came up with some proposals but you burnt them and never talk about that. Why? What happened to your promise? It is good that you agree tamils, muslims and Sinhalese are currently not living as Sri Lankans, that means they are seperated.Why didn’t you tell when the next time you are going to make a visit, days, years, decades or it may not come.
    You must understand that people are not prepared to give cooperation for dictatorship and a government that is corrupted, abuse human rights and promotes crimes against humanity. To prove that there is no blood on your hands, let allow for an impartial international inquiry.

    Reply
  • thurai
    thurai

    //இவர்கள் பயங்கரவாதிகளே இதைவிட இவர்கள் புலிகளின் பெயரில் களவு எடுத்த பணத்தை ஒளிக்க வழிவகைகளையே தேடுகின்றனர் இவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கட்ட வேண்டும்.//இன்டியானி

    இராசபக்சவும் சிங்கள இராணுவமும் சேர்ந்து ஈழத் தமிழர்களை புலிகளின் பயங்ரவாதத்திலிருந்து காப்பாற்ரிவிட்டது. ஆனால் புலம்பெயர் தமிழர்களை யார் காப்பார்களோ?

    அன்னியர் ஆட்சியில் இலங்கை இருந்தால் ஆங்கிலம் பேசலாம். ஆனால் சிங்களவர் ஆட்சி செய்தால் சிங்களம் தேவையில்லை தமிழே எங்கள் உயிர். இதுவே லண்டன் வாழ் புலிகளின் குரல். எனவே ஆசிய நாட்டு அரசாங்கங்களை ஆட்டிபடைக்க கைக்கூலிகளாக மாறி வரும் புலிக்கூட்டமும் அதற்கு கண்மூடித்தனமாக ஆதரவு வழங்கும் புலம்பெயர் தமிழர்கழும். இவர்களால் உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தலை குனிந்தே வாழ்வார்கள்.-துரை

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவை Oxford Union இல உரைநிகழ்த்த முடியாமல் செய்தது, இந்தியாவின்ர இராஜ தந்திரமும் பழிவாங்கலும்தான் என பலபேர் கருதுகினம். காரணம் அவர் (ராஜபக்ச) கிருஸ்ணாவின்ர இலங்கைகான நிகழ்சிநிரலை சரியாக நிறைவேற்றவிடாமல், அவருடைய திட்டமிட்ட நிகழ்ச்சிநிரல் முடியமுன்பே பாகிஸ்தான் அதிபர் சர்தாரிக்கு இலங்கையில் செங்கம்பள வரவேற்பு அளித்ததுதானாம். தன்னை இங்கிலாந்தில் வைத்து அவமானப்படுத்திய இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கத்தான் ராஜபக்ச இங்கிலாந்திலிருந்து வெளியேறியவுடன் வன்னியில் தனக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தினாராம். இந்த ஆர்ப்பாட்டத்தின் உட்பொருள் யாதெனில் – எங்க நீங்க இவையளுக்கு வீடுகட்டிக்கொடுங்கோ பார்ககலாம் என்ற சவால் தானாம். மற்றும்படி புலிக்கொடி விடயம், இங்கிலாந்து அரசினால் புலம்பெயர்ந்தவர்களின் தலையில் பாரத்தை போட்டுவிட்டு – ராஜபக்சவுக்கு தனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்பதைக் காண்பிக்கத்தானாம், எனவே பிரித்தானியாவாழ் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ்மக்களே உங்களுக்குத் தெரியாமலே புலிகளின் பெயரில் உளவாளிகள் உங்கள் தலையில் ஆப்பு இறக்குவார்கள், ஆதலினால் அரசியல் விடயங்களில் கொஞ்சம் அவதானமாக இருங்கள்!

    Reply
  • ARUMUGAM
    ARUMUGAM

    ஜனாதிபதியின் லண்டன் விஜயமும் புலிப்பினாமிகளின் சதிராட்டமும்!
    ஐரோப்பாவில் புலம்பெயர்ந்த புலிப்பினாமிகள் கடந்த வாரம் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் லண்டன் விஜயத்துடன் புலிக்கொடியுடன் கடைவிரித்திருந்தார்கள். இன்றைய நிலையில் கடையை மூடிவிட்டு முள்ளிவாய்க்காலில் வாழ்க்கையை இழந்த மக்களுக்கும் போராளிகளுக்கும் பாரியதொரு வரலாற்றுக்கடமையை செய்துவிட்டதாக நினைத்துக் கொண்டு தாமும் தம் வாழ்க்கை நலன்களும் என்று தத்தம் பணிக்கு திரும்பிவிட்டார்கள்.
    இதில் லண்டன் புலிப்பினாமிகளின் பங்கே முக்கியமானதாக நோக்கப்படுகின்றது. இவர்களுக்கு பக்கபலமாக சுவிஸ் ஈழத்தமிழர் அவை பிரான்ஸ் ஈழத்தமிழர் அவை, ஜெர்மன் ஈழத்தமிழர் அவை, நெதர்லாந்து ஈழத்தமிழர் அவை , கனடா ஈழத்தமிழர் அவை, அவுஸ்திரேலிய ஈழத்தமிழர் அவை என்று அனைத்து புலிப்பினாமி அமைப்புக்களும் தத்தம் பங்கிற்கு அறிக்கைப் போரும் விட்டு பஸ்ஸில் ஆட்களை அழைத்துக் கொண்டு லண்டனுக்கும் அழைத்துச் சென்றிருந்தனர்…………………….

    இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வுகளுக்கு பிரிட்டிஸ் போறம் தரப்பில் பெருந்தொகை நிதி செலவிடப்பட்டதாகவும் அறியப்படுகின்றது. அவுஸ்திரேலியாவிலிருந்து கூட நிதிபெறப்பட்டதாக பிரிட்டிஸ் போறத்தின் பேச்சாளர் தெரிவித்திருந்தார். இந்த நிதிவளங்களை முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கோ அல்லது இடைத்தங்கல் முகாம்களில் வாழும் மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கோ செலவு செய்திருக்கலாம்……..http://salasalappu.com/?p=15344#more-15344

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //… சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேர் இருந்தும் அவர்கள் எந்தப் போராட்டமும் செய்யவில்லை. மொக்கு மேர்வின் சில்வாவும் எதையும் செய்யவில்லை. அதை உணர்வீர்களா?..//

    கீழே உள்ள படத்தில் உங்கள் ‘மொக்கு” மேர்வின் இருக்கிறாரே? போராட்டம் செய்யவில்லையா? அப்ப ஜெயலத் ஜெயவர்த்தனாவுக்கு பார்லிமன்றில் அடிபோட வெளிக்கிட்டனரே?-http://www.dailymirror.lk/news/images/8180-happy-to-be-home.html

    Reply
  • Information
    Information

    Sunday, 5 December 2010
    Jaffna don comes down hard on Oxford Union– by Ananth PALAKIDNAR

    President Mahinda Rajapaksa should not have been prevented from addressing the Oxford Union. A university means, an institution of ideas. Therefore, the President should have been allowed to speak instead of preventing him from addressing the Oxford Union Forum according to Dr. Ratnajeevan Hoole, one of the contenders for the post of the Vice Chancellor of the University of Jaffna.

    Dr. Ratnajeevan Hoole was elected as the Vice Chancellor of the University of Jaffna in 2006. However, he had to withdraw from the post due to the threats to his life and his family members by the LTTE.

    Dr. Hoole commenting on the Oxford issue in London last week told the Sunday Observer that the Universities are places of learning and independent thinking.

    Therefore, President Rajapaksa in his capacity as a Head of State should not have been prevented from addressing the Oxford Union. “He should have been allowed to address the Forum and the audience could have come out with questions.

    Dr. Ratnajeevan Hoole said that two of his brothers, Dr. Rajan Hoole and Dr. Paul Hoole were products of the University of Oxford.

    Dr. Ratnajeevan Hoole is in the fray for the post of Vice Chancellor of the University of Jaffna after four years.

    Commenting on Jaffna after the LTTE, was defeated Dr. Hoole said, that he could see the difference.

    “Following threats to my family and self from the LTTE, I lived in the United States for the past four years. I have been living in Jaffna for the past three months.

    “The North under the grip of the LTTE was terrible. Everyone was living under pressure and intimidation.

    “The terrorist outfit did not allow people in the North to think or act freely.

    “However, with the fall of the outfit, there is a vast change in the day-to-day life of the people in the North.

    “Essential food and services are flowing freely into the peninsula.

    “The political parties are functioning freely. Hence, I see the light at the end of the tunnel like others in Jaffna,” Dr. Hoole said.

    -http://www.sundayobserver.lk/2010/12/05/new04.asp

    Reply
  • hari
    hari

    “லண்டனுக்கு வந்த மகிந்தவை ஒரு குழுவாக சென்று சந்தித்து அங்குள்ள மக்கள் படும் அவலத்தை எடுத்துரைத்திருக்கலாம்”-மாயா
    சிறிலங்காவிலுள்ள தமிழரின் அவலநிலையை பிரித்தானிய தமிழர் சொல்லித்தான் சிறிலங்கா அதிபருக்கு தெரியவரும் என்கிறீர்கள்.
    தமிழ்அரங்கம் தமிழ்தேசியகூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் கேபி என எல்லோரும் மகிந்தவுடன் நல்லிணக்க அரசியல் செய்யினம். பற்றாக்குறைக்கு கிளிநொச்சி முல்லைத்தீவு மக்கள் மகிந்தா ஆதரவு ஊர்வலம் போனதாக ஈபிடிபி இணையதளம் படம் போடுது. ஒட்டு மொத்தத்தில் ஈழத்தமிழர் மகிந்தாவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக ஒரு விம்பம் காட்டபடுகிறது.(தமிழ்அரங்கம் தமிழ்தேசியகூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் கிருஸ்ணாவிடம் மகிந்தாவிற்கு அழுத்தம் கொடுக்கும் படி மகஜர் கொடுக்க அலைந்தது தனிக்கதை) இந்நிலையில் பிரித்தானிய தமிழர் செய்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈழத்தமிழர் மகிந்த அரசினால் பழி வாங்கப்பட்டால் ஈழத்தமிழரின் உண்மை தலைமை பிரித்தானியாவில் இருப்பதாகவெல்லோ அர்த்தப்படும். பனைமரத்தில் தேள் கொட்டினால் தென்னை மரத்திற்கு நெறிகட்டும் என்ற கதையாகவெல்லோ இருக்குது.

    “இந்த தேசம்நெற் ஒரு மைதானம். வந்து உங்கடை வீராப்புக்களை காட்டுங்கோவன்!”-நந்தா
    உங்களால்”புலிக் கொடியோடு போனவன் எவனாவது ஒழுங்காக பள்ளிக்கூடம் போயிருப்பானா?” என விழிக்கப்பட்டவர்கள் கணணியில் தமிழ் எழுதகூடிய ஆற்றல் உள்ளவர்களென ஒத்து கொள்கிறீர்கள். அப்போ அவர்களும் படித்திருக்கிறார்கள் என ஒத்து கொள்கிறீர்கள் அப்போ “ஒழுங்காக பள்ளிக்கூடம் போயிருப்பானா?” என்ற கேள்வி ஏன் எழுந்தது! நிறைகுடம் தளும்பாது.

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    //பிரித்தானிய தமிழர் செய்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈழத்தமிழர் மகிந்த அரசினால் பழி வாங்கப்பட்டால் ஈழத்தமிழரின் உண்மை தலைமை பிரித்தானியாவில் இருப்பதாகவெல்லோ அர்த்தப்படும்.//- hari on December 5, 2010 6:37 pm

    நல்ல கற்பனை!
    ABCD எழுதத்தெரிந்தவனுக்கு மட்டுந்தான் எங்கட இலங்கையின்அரசியல் தெரியுமோ? – அரசியல் யதார்த்தத்தை அனுபவிப்பவர்கள் யாவருமே தமது கருத்தை சொல்ல அனுமதிக்கப்படவேண்டும். ஆங்கிலத்தை தவிர பிரித்தானிய தமிழர்கள் பெருமைப்படுவதற்கு என்னதான் தகுதியிருக்கிறது. புலிக்கொடியை காட்டும்போதே உங்களது அறிவு மற்றும் அறிவியலின்மை பற்றி ஏனைய புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழர்களால் உங்களைப்பற்றி எடைபோடப்படுகின்றது!- நீங்கள் சொல்ல வருவது பழைய யாழ்ப்பாண மரபைத்தானே?

    Reply
  • நந்தா
    நந்தா

    /உங்களால்”புலிக் கொடியோடு போனவன் எவனாவது ஒழுங்காக பள்ளிக்கூடம் போயிருப்பானா?” என விழிக்கப்பட்டவர்கள் கணணியில் தமிழ் எழுதகூடிய ஆற்றல் உள்ளவர்களென ஒத்து கொள்கிறீர்கள். அப்போ அவர்களும் படித்திருக்கிறார்கள் என ஒத்து கொள்கிறீர்கள் அப்போ “ஒழுங்காக பள்ளிக்கூடம் போயிருப்பானா?” என்ற கேள்வி ஏன் எழுந்தது! நிறைகுடம் தளும்பாது./

    அப்போ அந்த புலிகொடி பிடித்த ஆள் என்று சொல்லுங்கோ!

    கணனியில் தமிழல் எழுதுவது என்னமோ சாதனை என்பது பரிதாபம். அதுசரி புலிக் கொடியில் இருக்கும் துப்பாக்கிகளுக்கும், தோட்டாக்களுக்கும், தமிழுக்கும்,தமிழருக்கும் என்ன சம்பந்தம்?

    Reply
  • rohan
    rohan

    //கோசம் போடும் எவரும் ; தமிழருக்கான தீர்வை கொடுங்கள் என்று எந்தவொரு கோசத்தையும் வைக்கவில்லை.
    தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களை தமது வீடுகளுக்கு அனுப்புங்கள் என்ற கோசத்தை வைக்கவில்லை.
    அடைத்து வைத்திருக்கும் அப்பாவிகளை விடுதலை செய்யுங்கள் என்ற கோசத்தை வைக்கவில்லை.//

    அப்படியெல்லாம் கோஷம் வைத்திருந்தால் மகிந்த தூக்கிக் கொடுத்து விட்டுத் தான் மறு வேலை பார்த்திருப்பார் என்று சொல்ல வருகிறீரகள். அட – ஒருநல்ல வாய்ப்பை இப்படித் தமிழர்கள் கோட்டை விட்டு விட்டார்கள்!

    பழைய மகிந்தவும் புதிய மகிந்தவும் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டுப் பாருங்கள். ஒவ்வொரு போர்வீரனுக்கும் கொடுத்த உத்தரவு பிடிஆணை இல்லது எவரையும் பிடிக்கக் கூடாது என்பதாம் – நம்புங்கள். -http://www.youtube.com/watch?v=xlKn25ggk9Y

    Reply
  • மாயா
    மாயா

    //பழைய மகிந்தவும் புதிய மகிந்தவும் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டுப் பாருங்கள்- rohan //

    மகிந்தவை நாங்கள் யதார்த்தவாதி என்றும் சொல்லவில்லை. பின்னர் போட்டுத் தள்ள ஆட்களை அனுப்பவுமில்லை. சரணடைந்த பிறகு மகிந்தவை பார்க்க வேணும் என்று கேட்கவுமில்லை. ???

    Reply
  • rohan
    rohan

    //மகிந்தவை நாங்கள் யதார்த்தவாதி என்றும் சொல்லவில்லை. பின்னர் போட்டுத் தள்ள ஆட்களை அனுப்பவுமில்லை. சரணடைந்த பிறகு மகிந்தவை பார்க்க வேணும் என்று கேட்கவுமில்லை. ???//
    புலி ஆதரவாளர்களை விட கொஞ்சம் அதிகமாகவே பிரபாகரனை நம்பி விட்டீர்கள் என்றும் தோன்றுகிறது.

    சேர்ந்து கோஷம் போடுவோம் வாருங்கள்… “மனிதநேயர் – பயங்கரவாதத்தை அழித்து ஒரு சொட்டுத் தமிழ் இரத்தமும் சிந்தாது தமிழனை விடுதலை செய்த பெருமகன் – அமைதியின் மறு உருவம் – மேன்மை தங்கிய இராஜபக்ச வாழ்க – வாழ்க”.

    Reply
  • மாயா
    மாயா

    //புலி ஆதரவாளர்களை விட கொஞ்சம் அதிகமாகவே பிரபாகரனை நம்பி விட்டீர்கள் என்றும் தோன்றுகிறது. -rohan//

    புலிகள் மகிந்தவை நம்பினார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள்? நீங்கள் யாரை நம்புகிறீர்கள்?

    Reply
  • மாயா
    மாயா

    //“மனிதநேயர் – பயங்கரவாதத்தை அழித்து ஒரு சொட்டுத் தமிழ் இரத்தமும் சிந்தாது தமிழனை விடுதலை செய்த பெருமகன் – அமைதியின் மறு உருவம் – மேன்மை தங்கிய இராஜபக்ச வாழ்க – வாழ்க”.//

    முன்னாள் புலிகள் இருவருக்கு மருத்துவ பீட அனுமதி!

    கடந்த ஓகஸ்ட் மாத க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளில் இருவருக்கு மருத்துவ பீட அனுமதி கிடைக்க உள்ளது.

    இருவரும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவருக்கு ஏ,2பி. மற்றவருக்கு 3சி.

    புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க இத்தகவலை வழங்கினார். புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் புலிகளில் 361 பேர் பரீட்சை எழுதினர் என்றும் 211 பேர் மூன்று பாடங்களிலும் சித்தி அடைந்துள்ளனர் என்றும் 40 பேர் பல்கலைக் கழகம் செல்கின்றமைக்கான அருகதையை பெற்றிருக்கின்றார்கள் என்றும் இவர் கூறினார்.
    – News

    தற்கொலைத் தாக்குதலில் அல்லது போரில் செத்திருக்க வேண்டியவர்கள் …….மருத்துவ பீட அனுமதி!……. அந்தவகையில் மகிந்த வாழ்க.

    Reply
  • BC
    BC

    புலிகளில் 361 பேர் பரீட்சை எழுதி, 211 பேர் மூன்று பாடங்களிலும் சித்தி அடைந்து, 40 பேர் பல்கலைக்கழகம் செல்கின்றமைக்கான அருகதையை பெற்றவர்கள். இவர்கள் புலிகளினால் பலாத்காரமாக பிடிக்கப்பட்டவர்களாகும். புலி இப்போ அழிக்கபடாமல் இருந்திருந்தால் இந்த அப்பாவிகள் எல்லாம் புலிகளின் வளர்ச்சிக்காக வெடிகுண்டுகளாக மாற்றப்பட்டோ, குப்பி கடிக்க வைத்தோ சாகடிக்கபட்டிருப்பார்கள் .புலம் பெயர்ந்த புலிகள் பிரபாகரன் பிறந்த தினத்தில் இவர்களுடை பெயரை சொல்லி தங்களுடைய நடனம் படிக்கும் பிள்ளைகளை நடனம் ஆடவிட்டு, குத்துவிளக்கு ஏற்றி மகிழ்ந்திருப்பார்கள்.

    Reply
  • kovai
    kovai

    //……சரணடைந்த பிறகு மகிந்தவை பார்க்க வேணும் என்று கேட்கவுமில்லை.// மாயா on December 13, 2010 10:12 am
    முப்பது வருடங்களுக்கு முன் மிகநெருக்கமாகப் பழகியவன் என்கிற முறையில், அவரது நடவடிக்கைகள் பற்றிய, பலரின் கேள்விகளுக்கப்பால், ‘வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தார்’ என்ற கூற்று முழுப்பொய்யானது என்பதை, இன்னமும் வாழுகின்ற நான் உறுதியாகச் சொல்வேன்.

    Reply
  • BC
    BC

    மாயா, புளட்டில் இவர் இருந்தவரா? புலிகளின் பிரசார பிரிவு தலைவர் மாதிரி செயல்படுகிறாரே!

    Reply
  • மாயா
    மாயா

    //மாயா, புளட்டில் இவர் இருந்தவரா? புலிகளின் பிரசார பிரிவு தலைவர் மாதிரி செயல்படுகிறாரே! – BC //

    பீசீ , இது மாதிரி ஒரு பம்மாத்து இருந்தார் . இப்ப இல்லை. 30 வருடங்களுக்கு முன் நெருக்கமாக பழகியவர் என சொல்லிக் கொள்கிறார்.

    கேபீ ; பிரபாகரனின் உயிர் சிநேகிதன். அவர், பிரபாகரன் மாறிப் போனார் என்றார்.

    20 – 30 வருடங்களுக்கு பிறகும் இலங்கை அப்படித்தான் இருக்கிறது என அன்று புலம் பெயர்ந்து வந்தவர்கள் நினைக்கிறார்கள். காரணம் இவர்கள் அதன் பிறகு இலங்கைக்கு போனதேயில்லை. மாற்றம் என்பது ஒவ்வொரு நொடியும் நடக்கிறது. சிலர் , நான்தான் அதைச் செய்தேன். அவரது வலது கையாக இருந்தேன் என படம் காட்டியிருப்பார்கள். அதைத் தொடர வேண்டாமா? புலிகள் இன்னமும் வன்னியை ஆண்டு கொண்டிருக்கிறார்கள் , உள்ள விட்டு அடிக்க தலைவர் வியுகம் வகுக்கிறார் என்று சொன்னாலும் சொல்லலாம்.

    Reply
  • thenupiriyan
    thenupiriyan

    //தற்கொலைத் தாக்குதலில் அல்லது போரில் செத்திருக்க வேண்டியவர்கள் …….மருத்துவ பீட அனுமதி!……. அந்தவகையில் மகிந்த வாழ்க// மாயா
    நாகர்கோவில் பாடசாலையின் மீதான விமானக் குண்டுவீச்சில் மடிந்த மாணவர்களிலும் மருத்துவ பீடத்திற்கான அனுமதி பெறக்கூடியவர்கள் இருந்திருப்பார்கள். அந்தவகையில் இந்த ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்த அனைவருமே வீழ்க.

    Reply
  • rohan
    rohan

    //புலிகள் மகிந்தவை நம்பினார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள்? நீங்கள் யாரை நம்புகிறீர்கள்?//

    புலிகள் மகிந்தவை நம்பினர் என்று நான் நம்பவில்லை. வெளிப்படையாகவே ‘மேற்கை’ எதிர்க்கும் ஒரு அரசியல்வாதியாக அவரைப் புலிகள் பார்த்தனர். அவருக்கு மேற்குலக ஆதரவு இருக்கது என்று நம்பினர். Genteman ரனில் கையில் வைத்திருந்த sophisticated மீரகொட போன்றோர் சர்வதேச உதவிகளை ஈட்டிக் கொடுத்து தம்மை அழிக்க வழி செய்வர் என்று எண்ணினர். இவ்வகையில் ஒரு rough and crude மகிந்த தமது gentlemany imageக்கு துணை செய்வார் என்று கருதினர்.

    Reply