ThesamNetLeaks : கொள்வனவு விதிகளை மீறிய யாழ் பல்கலைக்கழக உப வேந்தருக்கான வேட்பாளர் : த ஜெயபாலன்

Vasanthy_Arasaratnam_Prof_UoJஅண்மைக் காலமாக மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றிருந்த யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கான தெரிவில் நவம்பர் 27ல் இடம்பெற்ற பல்கலைக்கழக கவுன்சில் உறுப்பினர்களின் தெரிவு புதிய திருப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. இதுவரை யாழ்-சைவ-வேளாள-ஆண் ஒருவரே பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகத் தெரிவு செய்யப்பட்டு வந்தார். அதற்கு மாறாக பேராசிரியர் ஹுல் 2006ல் பல்கலைக்கழகக் கவுன்சிலால் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை அச்சுறுத்தலை மேற்கொண்டு பேராசிரியர் ஹுல் ஐ தனது கடமையைச் செய்ய விடாமல் தடுத்தனர். தற்போது பல்கலைக்கழகக் கவுன்சிலால் மூவர் (பேராசிரியர்கள் வசந்தி அரசரட்ணம் ரட்னஜீவன் ஹூல் என் சண்முகலிங்கம்) தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு அவர்களுடைய பெயர்கள் வழங்கப்பட்டு உள்ளது. இவர்களில் ஒருவரை ஜனாதிபதி நியமிப்பார்.

அண்மைக்காலமாக தேசம்நெற் யாழ் பல்கலைக்கழகத்தின் திரைமறைவில் இடம்பெற்ற நிர்வாகச் சீர்கேடுகள், மோசடிகள், பாலியல் துஸ்பிரயோகங்கள், கல்வித் தரத்தின் சீரழிவுகள் என்பனவற்றை வெளிக்கொண்டு வந்ததன் பயனாக என் சண்முகலிங்கம் தவிர்ந்த ஏனைய தகுதியற்ற வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டனர். யாழ் பல்கலைக்கழகத்தின் உப வேந்தருக்கான தெரிவில் ஆரம்பத்தில் முன்னணி வேட்பாளர்களாகக் கருதப்பட்ட பேராசிரியர் எஸ் சத்தியசீலன், பேராசிரியர் என் ஞர்னகுமாரன் ஆகியோர் நவம்பர் 27ல் முதல் மூவருக்குள் தெரிவு செய்யப்படவில்லை. யாழ் பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் சீர்கேடுகள், மோசடிகள், பாலியல் துஸ்பிரயோகங்கள், கல்வித் தரத்தின் சீரழிவுகள் என்பனவற்றுக்கு காரணமானவர்களில் ஒருவராக அடையாளம் காட்டப்பட்ட கடந்த மூன்று ஆண்டுகள் உப வேந்தராக இருந்த பேராசிரியர் என் சண்முகலிங்கம் யாழ் பல்கலைக்கழகக் கவுன்சிலால் தெரிவு செய்யப்பட்ட மூவரில் ஒருவராக உள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னணிப் பேராசிரியர்களின் திருவிளையாடல்கள் அம்பலத்திற்கு வந்ததால் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் மட்டுமே யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, ஒப்பீட்டளவில் தகுதியான ஒரே வேட்பாளர் ஆனார். அதனால் தேசம்நெற் இன் தொடர்ச்சியான பிரச்சாரங்கள் அவருக்கு சாதகமாக இருந்ததுடன் அரசியல் ரீதியான ஆதரவும் அவருக்கு கிடைத்தது.

உப வேந்தருக்கான தகமை அடிப்படையில், கல்வித் தகமையாக இருந்தாலென்ன நிர்வாக – முகாமைத்துவத் திறனாக இருந்தாலென்ன பேராசிரியர் ஹுல் ஏனைய அனையவர்களைக் காட்டிலும் மிக உச்சத்திலேயே உள்ளார். ஆனால் அவருக்கான அரசியல் ஆதரவு மிகக்கீழ் நிலையிலேயே உள்ளது. ஆனால் கல்வித் தகமை, நிர்வாக – முகாமைத்துவத் திறன் அடிப்படையில் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் கீழ் நிலையில் (பேராசிரியர் ஹுல் உடன் ஒப்பிடுகையில்) இருந்தபோதும் அவருக்கான அரசியல் ஆதரவு மேல்நிலையில் உள்ளது. அதனால் அவரை யாழ் பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக ஆக்குவதற்கான வாய்ப்பு நிறையவே உள்ளது.

பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் யாழ் பல்கலைக்கழகத்திற்குள் இருந்து போட்டியிட்டவர்களில் அப்பதவிக்கான தகமையைக் கொண்டிருந்தார். ஆனால் தற்போது வெளிக்கொண்டுவரப்பட்டு உள்ள, ஆவணங்கள் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தின் கரங்களும் கறைபடிந்தவை என்பதனை நிரூபிக்கின்றது.

யாழ் பல்கலைக்கழகத்தில் பல மோசடிகள் மூடி மறைக்கப்படுகின்றன. பல்கலைகழகத்தின் பெயருக்கு நல்லதல்ல என்று கூறி மோசடிகள் தொடர்ச்சியாக மூடிமறைக்கப்பட்டதால் யாழ் பல்கலைக்கழகம் மிகச் சீரழிவுக்கு சென்றுள்ளது. பல்வேறு மட்டங்களிலும் உள்ளவர்கள் மோசடியில் ஈடுபட்டு அவை மூடிமறைக்கப்படும் போது அவர்கள் உயர்நிலைக்குச் செல்லும் போது மேலும் மேலும் மோசடிகளில் ஈடுபட்டு அவற்றை பல்கலைக்கழகத்தின் பெயரைப் பாதுகாப்பதாகக் கூறி மூடிமறைக்கின்றனர். அதனால் பல்கலைக்கழகம் பற்றி தேசம்நெற் இல் வெளிக்கொண்டு வரப்பட்ட விடயங்கள் மிகச்சொற்பமானவையே எனவும் மோசடியும் ஊழல்களும் குவிந்துள்ளதாகவும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2003ல் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான கணணி வலையமைப்பு மற்றும் பாகங்களை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டார். இவ்வாறான பெரும்தொகைக் கொள்வனவுகள் பல்கலைக்கழக விதிமுறைகளுடாகவும் ரென்டர் முறையிலுமே மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் பேராசிரயர் வசந்தி அரசரட்ணம் இந்த விதிமுறைகளை மீறி நேரடியாக M/S Delvon Computers (Pvt) Ltd, என்ற நிறுவனத்துக்கு கொள்வனவுக் கட்டளையை வழங்கி உள்ளார். இந்நிறுவனம் ஓய்வுபெற்ற இராணுவ கேணல் தர தளபதி ஒருவருடையது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கொள்வனவு பல்கலைக்கழக விதிமுறைகளுடாகவும் ரென்டர் முறையினூடாகவும் மேற்கொள்ளப்படாமையினால் இக்கொள்வனவுக்கான நிதியினை வழங்க நிதிக்குழு தாமதித்தது. அவர்கள் குறிப்பிட்ட கொள்வனவு தொடர்பான கணக்கியல் பதிவுகளில் கேள்விகளை எழுப்பினர். அப்போதைய உப வேந்தர் மோகனதாஸ் இவ்விடயத்தை நிதிக்குழுவிற்கு குறிப்பிட்டு இருந்தார். அதன் பின்னர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் முன்னர் வழங்கிய தொகையைக் குறைத்து புதிய தொகையை வழங்கியதாக தெரியவருகிறது.

மருத்துவ பீடத்திற்கான கணணி வலையமைப்பு மற்றும் அதற்கான பாகங்களைக் கொள்வனவு செய்ய WHO, 963400.00 ரூபாய்களை மட்டுமே யாழ் பல்கலைக்கழகத்திற்கு வழங்கி இருந்தது. ஆனால் பேராசிரியர் வசந்தி அரசரடணம் தனக்கு வழங்கப்பட்ட நிதி வரையறைக்கு பலமடங்கு அதிகமாக கொள்வனவு விதிகளை மீறி நேரடியாக கொள்வனவுக் கட்டளையை வழங்கி இருந்தார். ஆனால் இது கேள்விக்கு உட்படுத்தப்பட்ட போது கொள்வனவுத் தொகை குறைக்கப்பட்டது. அப்படி இருந்துமே அப்போதைய சந்தை நிலையிலும் பார்க்க அதிகமாகவே இருந்தது.
 
இது தொடர்பாக நிதிக்குழுவின் ஒக்ரோபர் 25 2004ல் இடம்பெற்ற 247வது கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது 2003ல் 1163550.60 ரூபாய்க்கு பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் பல்கலைக்கழக விதிமுறைகளையும், ரென்டர்முறைகளையும் மீறி கொள்வனவை மேற்கொண்டதாக அப்போதைய உபவேந்தர் மோகனதாஸ் 247வது நிதிக் குழு கூட்டத்திற்கு வழங்கிய குறிப்பில் குறிப்பிட்டு உள்ளார்.
 
நிதிக்குழுவின் 233வது கூட்டத்திற்கு பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் வழங்கிய குறிப்பில் வேலைத்திட்டத்திற்கு ஆன செலவீனம் ரூபாய் 2,080,839.18 ஆல் அதிகரித்து உள்ளதாகக் குறிப்பிட்டு இருந்தார். அதாவது மொத்த செலவீனம் ரூபாய் 2,080,839.18 + 963,400.00  = 3 044 239.18.  வழங்கப்பட்ட நிதிவரையறைக்கு (963400.00 ரூபாய்) அதிகமாகவே பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் செலவீனத்தை மேற்கொண்டார்.

இந்த அதீத செலவீனத்தை மருத்துவ பீடத்தின் தகவல்தொழில் நுட்பத்திற்கு யுனிவசிற்றி கிறான்ட் கொமிசனால் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து தருமாறு பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் நிதிக்குழுவின் 233வது கூட்டத்திற்கு வழங்கிய குறிப்பில் கேட்டு இருந்தார்.

Delvon நிறுவனம் கேட்டுக்கொண்ட நிதியை வழங்காமல் ஓராண்டுவரை கூட்டங்களில் விவாதித்து ஒக்ரோபர் 30 2004 ல் இடம்பெற்ற நிதிக் குழுவின் 291வது கூட்டத்தில் பல்கலைக்கழகக் கவுன்சில் (Council Memo 277/17(e)) இது தொடர்பாக பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தை கண்டித்து இருந்தது. எதிர்காலத்தில் இது தொடர்பான அனைத்து விடயங்களும் பல்கலைக்கழக விதிமுறைகளுடாகவும் (through Bursar) ரென்டர் முறையினூடாகவுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் பல்கலைக்கழகத்தின் சார்பில் Delvon  நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டதால் பல்கலைக்கழக நிதிக் குழு பல்வேறு அழுத்தங்களாலும் குறைக்கப்பட்ட ஆனாலும் சந்தை நிலையிலும் அதிகமான கட்டணத்தை நிறுவனத்திற்கு வழங்கியது.

இவ்வாறான மோசடிகள் நிர்வாகச் சீர்கேடுகள் வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்களிலும் அவற்றின் வளாகங்களிலும் மலிந்து காணப்படுகின்றன. இப்பல்கலைக்கழகங்களின் உயர் பதவிகளில் உள்ளவர்களே இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்ற போது ‘கற்பித்தலும் ஆய்வும் இணைந்து பாரபட்சமற்ற உண்மையைத் தேடுவதே பல்கலைக்கழகம்’ என்ற வரைவிலக்கணம் இழக்கப்பட்டுவிடுகின்றது.

அண்மைக் காலமாக தேசம்நெற் இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள்:

‘இலங்கையின் தமிழ் கல்விச் சமூகம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை’ நூலின் மின்னியல் வடிவம்: UoJ_A_View_By_Jeyabalan_T

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

யாழ் பல்கலைக்கழகத்தின் இலக்கையும் தொலைநோக்கு பார்வையையும் முன்னெடுத்துச் செல்லும் கல்வியியல் ஆளுமையும் முகாமைத்துவத் திறமையும் உடையவரை உபவேந்தராகத் தெரிவு செய்யுங்கள்! : த ஜெயபாலன்

ஈபிடிபி தோழர்களே! நல்லதொரு இதயவீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிந்திட வேண்டாம். : ரி சோதிலிங்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை நூலுக்கான முன்னுரை : த ஜெயபாலன்

தமிழ் கல்விச் சமூகத்தின் மகுடம் யாழ். பல்கலைக்கழகம் – அதன் துணைவேந்தர் தெரிவிற்கான தேர்தல் ஒரு அலசல்

ThesamNetLeaks : கொள்வனவு விதிகளை மீறிய யாழ் பல்கலைக்கழ உப வேந்தருக்கான வேட்பாளர் : த ஜெயபாலன்

Show More
Leave a Reply to loven Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

  • Nathan
    Nathan

    ஜெயபாலன் அப்படி என்ன தான் உங்களுக்கும் கூலுக்கும் உள்ள கொடுக்கல் வாங்கல்? நீங்கள் பேராசிரியர் கூலை உப வேந்தரக நியமிக்க படும் பாட்டை பார்த்தால் வேறு ஏதோ இருக்குதோ என எண்ணத்தோன்றுது.

    சரி விசயம் என்னவென்றால் உபவேந்தர் நியமனம் இப்போ அரசியலாகிப்போச்சு. பேராசிரியர் கூல் ஒரு படி மேலே போய் இது சாதிய சமய அடிப்படை நியமனம் எனக்கூற அதை நீங்கள் தூக்கிப்பிடித்து ஒரு விதமான சமயச் சண்டையை கிளறி விட்டுட்டியல். ஐனாதிபதி தான் இறுதி முடிவு எடுப்பாரென்றால் அவரும் சைவ வேளாள குல சப்போட்டரோ? நானறிய யழ்ப்பாணத்தில கலியாணம் கட்ட போகேக்க தான் சாதி பாக்கிறவை பல்கலைகழகத்திற்கோ பாடசாலைக்கோ போகேக்க எந்த சாதி அல்லது சமய ஆள் பாடமெடுக்கிறார் என்று பார்ப்பதில்லை. ரட்ண ஜீவன் கூலுலையும்; அவரது சகோதரன் ராஜன் கூலுலையும்; கொன்வியூஸ் பண்ணி ஆட்கள் யோசிக்கினம் என நினைக்கிறேன்.

    அதோடு வசந்தி மேடத்திண்ட ஊழலை வெளிகெணர்ந்ததற்கு நன்றி. உப்படி பார்த்தால் ஊரில இருக்கிற பாதிப்பேர் கை கறை படிந்;து போய் தான் இருக்கு. இந்த ஊழலையும் சழூக பெறுப்போடு முன்னரே வெளியிட்டிருந்தால் உங்கள் ஊடக தர்மத்தை பாரட்டலாம். ஆனா இப்ப வெளியிட்டு கூலுக்கு அனுதாபம் தேட முயல்வது உங்கள் பக்கச்சார்பை எடுத்தியம்புது.

    அப்படிப்பார்த்தா பேராசிரியர் கூலும் சும்மா இருக்காம மகிந்தரை ஒக்ஸ்போர்ட்டில பேசவிடாதது பேச்சு சுதந்திரத்தை பாதிக்கும் என அறிக்கை விட்டதும் மகிந்தரை குளிர்வித்து பதவியை தட்டவே. பேராசிரியர் கூலிடம் கல்வி கற்காத போதும் அவரது ஆளுமை அறிவு கண்டு நானும் வியந்ததுண்டு. ஆனால் தானும் ஒரு அரசியல் வாதிதான் என அறிக்கை விட்டு நிரூபித்துள்ளார். ஏனெனில் இலங்கை ஒன்றும் பேச்சு சுதந்தரத்தை மதிக்கும் நாடல்ல. இதே மகிந்தரின் ஆட்சியில் எத்தனையோ ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டபோதும் சிறையிலடைக்கப்பட்ட போதும் காணாமல் போகச்செய்யப்பட்டபோதும் பேராசான் வாயே திறக்கவில்லை. இதே யாழ்ப்பாணத்தில் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 10 வருசம் போய்விட்டது ஆனால் நடந்ததுஎதுவும் இல்லை இதைபற்றி பேராசிரியரோ இல்லை அவரை வக்காலத்து வாங்கும் நீங்களோ பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை. ஏனெனில் அவர் புலிகளால் கொல்லப்படவில்லை அதுதான். இதை நான் சொல்ல ஜெயபாலன் பல கட்டுரைகளை தான் எழுதியதாக வாதிடுவார். ஆனா நான் கேட்பது இதற்கு காரணமான தோழர் டக்கிளசை எப்போதாவது நீங்கள் குடைந்ததுண்டா?

    எனவே பேராசிரியர் கூலும் பதவிக்காக கால்பிடிக்கக் கூடியவர் என நிரூபித்துவிட்டார். மிகப்பெரிய அரசியலில இது ஒரு சிறிய அரசியல் அவ்வளவு தான்.

    மற்றும் ஜெயபாலனுக்கு ஊடகத்துறையில் உள்ளோர்க்கு நண்பனுமில்லை எதிரியுமில்லை என்பதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை என நினைக்கிறேன்

    Reply
  • karuna
    karuna

    ஜெயபாலன் கவனம் வெகுவிரைவில் நீங்களும் ஒரு பெண்ணுடன் தகாத முறையில் எந்தவித பாதுகாப்புமின்றி கதைத்ததற்காக கைது செய்யப்படலாம்! தேசம்நெற் லீக்ஸ் மரக்கறி லீக்ஸ் ஆக மாறவிட்டால் சரி!

    Reply
  • நந்தா
    நந்தா

    வெளிநாடுகளில் புலிகள் பல கும்பல்களாகப் பிரிந்துள்ளது போன்று போன்று யாழ் பல்கலைக் கழகத்திலும் பல கோஷ்டிகள் பிரிந்துள்ளதாகவும் சண்முகலிங்கனோடு நின்ற பலர் கட்சி மாறியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

    இந்த வசந்தி அரசரத்தினம் சண்முகலிங்கனின் ஒரு கையாளாகவே இருந்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது. கூல் வந்தால் தங்கள் “பொட்டுக்கேடுகள்” வெளி வருவது மாத்திரமின்றி சிலரின் தொழில்களே பறி போகும் என்றுநம்புவதனால் சண்முகலிங்கன் அல்லது சண்முகலிங்கனின் கையாள் வசந்தியை தெரிவு செய்வதன் மூலம் தொடர்ந்தும் பல்கலைக் கழகத்தினுள் தங்கள் “மோசடிகளை” செய்யலாம் என்றும் நம்புகிறார்கள்.

    அடுத்தது கூல் எல்லாவற்றுக்கும் “அறிக்கை” சமர்ப்பிக்க வேண்டும் என்று நாதன் ஏன் எதிர்பார்க்கிறார்?

    யாழ்ப்பாணத்து சுதந்திர ஊடகங்களை சுருட்டி குப்பையில் போட்டது மாத்திரமின்றி ஊடகவியலாளர்களை முதலில் கொலை செய்ததும் புலிகள் என்பது பற்றித் தெரியாமல் நிமலராஜன் என்ற புலி ஊடகவியலாளர் பற்றி கவலை தெரிவிக்கவில்லை என்று கேட்கும் நாதன் தமிழ் ஊடகங்கள் இன்னமும் பிரபாகரன் சாகவில்லை என்று பொய் எழுதுவதை “ஊடக சுதந்திரம்” என்கிறாரா?

    வெளினாட்டுப் புலிகளின் பிரதான பிரச்சனை தமிழும் அல்ல, தமிழரும் அல்ல. அந்த “கொடுக்கல்,வாங்கல்” என்பதுதான். வெளினாடுகளில் புலி என்று அலைபவர்கள் எவ்வளவு தேறும் என்று அலைகிறார்கள். அதே கண்ணுடன் ஜெயபாலனை மாத்திரமின்றி புலிகளை விமர்சிப்பவர்களையும் பார்த்து “நல்ல காசு கிடைக்கிறது” என்கிறார்கள்.

    Reply
  • loven
    loven

    Hello Jeyabalan
    Procedures are only guidance but some times you need to breach for Value For Money to procure items. I wish Cool to get the job but don’t try to put mud on the candidates by corruption allegation which are very low level like western papers. Cool has all the skills and abilities to become a vice.

    Reply
  • Mythili
    Mythili

    I think we should allow the decision as to who should become the vice-chancellor in the hands of university fraternity, the selection committees and the president (who would decide at the end),

    Reply
  • Anonymous
    Anonymous

    //அடுத்தது கூல் எல்லாவற்றுக்கும் “அறிக்கை” சமர்ப்பிக்க வேண்டும் என்று நாதன் ஏன் எதிர்பார்க்கிறார்?//
    அதைத் தான் நானும் கேட்கிறேன். மகிந்த கருத்துச் சுதந்திரத்தையே இலங்கையில் ஒடுக்குவது பற்றி அந்த அறிக்கையில் ஒரு வார்த்தை கூடப் பேசாத கூல் அந்த மகிந்தவுக்கு கருத்துச் சுதந்திரம் இல்லை என்று அறிக்கை விடுகிறார்.

    தேசம் நெற் குறிப்பிட்டது போல பல்கலைக்கழகத்தின் பெரும் சீரழிவுக்குக் காரணமான சண்முகலிங்கனை துணைவேந்தராக்கி அழகு பார்த்த அதே டக்ளஸிடம் நேரில் சந்தித்து தன்னை துணைவேந்தராக்குமாறு கோருகிறார். கூல் அவருடைய துறையில் நிபுணத்துவம் மிக்கவராக இருக்கலாம். ஆனால் அவர் ஒரு பொறுப்பான பதவிக்குரிய தார்மீக விழுமியங்களைக் கொண்டவரா எனில் ஏனைய இரு வேட்பாளர்களை விட ஒன்றும் முன்னிலையில் இல்லை என்பது தான் யாழ். பல்கலைககழகத்தின் துர்ப்பாக்கியம்.

    Reply
  • நந்தா
    நந்தா

    //அதைத் தான் நானும் கேட்கிறேன். மகிந்த கருத்துச் சுதந்திரத்தையே இலங்கையில் ஒடுக்குவது பற்றி அந்த அறிக்கையில் ஒரு வார்த்தை கூடப் பேசாத கூல் அந்த மகிந்தவுக்கு கருத்துச் சுதந்திரம் இல்லை என்று அறிக்கை விடுகிறார்.//

    தமிழர்களின் பாஷயில் கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன?

    Reply
  • அனுஷா. B
    அனுஷா. B

    //தற்போது வெளிக்கொண்டுவரப்பட்டு உள்ள, ஆவணங்கள் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தின் கரங்களும் கறைபடிந்தவை என்பதனை நிரூபிக்கின்றது.// From the news article “கொள்வனவு விதிகளை மீறிய யாழ் பல்கலைக்கழக உப வேந்தருக்கான வேட்பாளர்” by த. ஜெயபாலன்

    வசந்தி அரசரெத்தினத்திற்கும் ஊழலுக்கும் ஏதோ வகையில் தொடர்பிருக்கின்றதுதான் போலிருக்கின்றது.

    புவனேஸ்வரி லோகனாதன் ஒரு தகுதியுமே இல்லாமல், விரிவுரையாளராகவும், அதன் பின் சிரேஸ்ட விரிவுரியாளராகவும் எவ்வாறு கள்ளவழியில் முன்னேறினார் என்பதனை தேசம்நெற் வாசகர்கள் நன்கு அறிவார்கள். இது தொடர்பாக பல செய்திகள் தரப்பட்டிருக்கின்றன. புவனேஸ்வரி 2009ம் ஆண்டு தனது பேராசிரியர் பதவியுயர்வுக்கான விண்ணப்பத்தை நியாயமற்ற கள்ள வழியில் இ. நந்தகுமாரனினதும் எஸ். குகனேசனினதும் துணைகொண்டு சண்முகலிங்கன் பார்வைக்கு அனுப்பிய கதை அனைவரும் அறிந்தததே.

    சண்முகலிங்கம் புவனேஸ்வரியின் பேராசிரியர் பதவி விண்ணப்பத்தை பரீட்சகர்களுக்கு அனுப்பி வைத்திருந்தார். புவனேஸ்வரியின் விண்ணப்பத்தை தரமற்றது, இப்படியான பேர்வழி ஒரு விரிவுரையாளராக கூட இருக்கத் தகுதியற்றவர் என்று பரீட்சகராக நியமிக்கப்பட்டிருந்த பேராசிரியர் திருமதி. மகேஸ்வரன் அதனை நிராகரித்து விட… புவனேஸ்வரிக்கு “ஆப்பிழுத்த குரங்கின் நிலைதான் போங்கள்”. அத்துடன் தேசம்நெற்றிலும் புவனேஸ்வரியின் திருகுதாளங்கள் வெளிக்கொணரப்பட்டு விட்டதால், புவனேஸ்வரிக்கு வெளியே தலைகாட்டமுடியாத நிலை…

    ஏனெனில், அண்மையில் நடந்து முடிந்த வவுனியா வளாகத்தின் ஆய்வு மாநாட்டுக்கு வருகை தந்திருந்த பேராசிரியர் திருமதி. மகேஸ்வரனை மதிய போசன இடைவேளையின் போது இரகசியமாக சந்தித்து உரையாடினார் புவனேஸ்வரி லோகனாதன்.

    “எப்படியாவது எனக்கு பேராசிரியர் பதவிக்கு சிபாரிசு செய்யுங்கள், எவ்வளவு இலஞ்சமாவது தருவேன்”, என்ற போக்கில்தான் புவனேஸ்வரியின் பேரம் இருந்திருக்கும்…

    இப்போது புவனேஸ்வரியின் விண்ணப்பதை பரீட்சிப்பவராக வசந்தி அரசரெத்தினம் நியமிக்கப்பட்டிருக்கின்றார். தமிழில் கூட ஒரு ஐந்து வசனம் ஒழுங்காக எழுத முடியாத புவனேஸ்வரிக்கு பேராசிரியர் பதவி வழங்குவதற்கு காரணமாக வசந்தி அரசரெத்தினம் அமைவாரானால் அது அவர் கணினிக் கொள்வனவில் செய்த ஊழலிலும் பார்க்கப் பெரிய கிரிமினல் குற்றமாக கருதப்படும்…

    மேலும் தேசம்நெற் பின்னுட்டாளர் இராசதுரை முதல்கொண்டு அண்மையில் மும்முரமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்ற திரு. அப்பாவி, செல்வி. M சபா மற்றும் தேவராசா ஆகியவர்கள் வெளிக்கொணர்ந்திருக்கின்ற பல விடயங்களின் (இவை மறைக்கப்படிருந்த உண்மைகள்) காரணமாக பெளதிக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கந்தசாமி முதல் கொண்டு எதற்கும் அஞ்சாமல் தனிக்காட்டு நரியாக பாலியல் முதல் பணம் வரை அட்டூழியம் புரிந்த சண்முகலிஙன்/ம் வரை நொந்து நூலாகி பின்வாங்கியிருப்பதாகவும் அறியக் கிட்டுகின்றது.

    பாலசுந்தரம்பிள்ளை தற்போது வசந்தி அரசரெத்தினத்துக்கு வக்காலத்து வாங்கி பிரச்சாரம் செய்து திரிகின்றாராம். சரியான பச்சோந்திதான் இந்தாள் (இந்த ஆள்)!

    இவ்வளவுமிருக்க இரட்னஜீவன் ஹூல் யாழ்/கணிதத் துறைக்கு விசேட ஆலோசகராக நியமிக்கப்பட்டு மாதம் ரூபா 80,000 வரை சம்பளமாக பெறுவதாக அறிகின்றோம் (“இதில் கிம்பளம் எவ்வளவு?” என்று சண்முகலிங்கன்/ம் குழு கேட்டுத் திரிவதாகவும் தகவல்).

    எது எப்படித்தான் இருந்தாலும்,”பல்கலைக்கழகமும் கல்வியும் மாபெரும் வியாபாரமாக மாற்றப்பட்டு விட்டது…”

    சண்முகலிங்கனுக்கு அது பதவி மற்றும் ‘சதை வியாபாரம்’… மறுபுறம், ஹூலுக்கு தான் புகழ் பெற்று தனது பெயரை முன்வைப்பதற்கான கொள்கை பரப்பு வியாபாரம்… அவ்வளவுதான் வித்தியாசம்… எல்லாமே அடிப்படையில் வியாபாரம்தான்…

    அதனால்தான் இ.நந்தகுமாரன் வவுனியா வளாக முதல்வராக இருந்து கொண்டே என்.ஜி.ஓக்களுக்கு தனது வானை வாடகைக்கு விட்டு வியாபாரம் பண்ணி வருகின்றாரோ தெரியவில்லை… இந்த வியாபாரிகள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து ‘கூறி விற்பது… யாழ் பல்கலையின் மானத்தையும்… தமிழ் பேசும் சமூகத்தின் அபிலாசைகளையும்தான்”. அதில் ஒரு சந்தேகமும் இல்லை…

    இந்த நிலையில் “இராமன் ஆண்டாலென்ன… இராவணன் ஆண்டாலென்ன… ” என்ற நிலைதான் – பேராசிரியர் ஹூல் வருவார் அவர் அற்புதங்கள் செய்வார் என்று எதிர்பாத்திருந்த அப்பாவிகளுக்கு!

    Reply
  • சண்முகதாசன்
    சண்முகதாசன்

    //இந்த வியாபாரிகள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து ‘கூறி விற்பது… யாழ் பல்கலையின் மானத்தையும்… தமிழ் பேசும் சமூகத்தின் அபிலாசைகளையும்தான்”. அதில் ஒரு சந்தேகமும் இல்லை…//அனுஷா. B on December 11, 2010 1:36 am

    மிகவும் பொருத்தமானதும் தர்க்கரீதியானதுமான ஒரு கருத்தை அனுஷா அவர்கள் சொல்லியுள்ளார். அவருக்கு நன்றிகள்.

    வியாபாரம் என்று சொல்லும் போது – யாழ் பல்கலையின் மானத்தை விற்று குளிர்காய்ந்தவர்களில் முதன்மையான வியாபாரி முன்னாள் துணைவேந்தர் எஸ். மோகனதாஸ் என்றால் அது மிகையாகாது.

    யாழ் பல்கலைக்கழகத்தை கெடுத்துக் குட்டிச் சுவராக்கிய மிகவும் முக்கியமான யுகபுருசர்களுள் ஒருவரான மோகனதாஸ் (இவர் தான் பி.எச்.டி பட்டம் வாங்கிய இரசாயனத் துறை தவிர்ந்த மற்றெல்லாவற்றிலும் – அதாவது ஊழல் அடங்கலாக – இவர் ஒரு பண்டிதர்), ஓய்வு பெற்று பலகாலமாகி விட்டாலும், “இன்னமும் வடக்கு கிழக்கு பல்கலைக் கழகங்களை சீரழித்தே விடுவேன் (!)” என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகின்றார் போலும்…

    அண்மையில் இவர் யார் யாரினதோ கை காலையெல்லாம் பிடித்து, ஒரு மாதிரியாக பல்கலைக்கழக மானியங்கள் குழுவின் (UGC) ஒரு உறுப்பினராக இடம் பெற்று விட்டார். இது சண்முகலிங்கன் முதல் வவுனியா வளாகத்தின் குட்டி அரக்கர்களான R.நந்தகுமாரன், புவனேஸ்வரி லோகனாதன், மற்றும் எஸ். குகனேசன் வரையிலான ஊழல் பெருச்சாளிகளுக்கு நல்லதே…

    ‘UGC’யில் தம் மூத்த புல்லுருவியான மோகனதாஸ் இன்னமும் செல்வாக்குடன் இருப்பதால் அவர்கள் மலையைக் கல்லி எலி பிடிக்கவும், மலைகளைப் பிரட்டி சுக்கு நூறாக்கவும் எத்தனிப்பார்கள். ஆக, விரைவில் புவனேஸ்வரை பேராசிரியராகி விடலாம் என்றும் எதிர்பார்கப்படுகின்றது… எல்லாமே… கெட்டழிந்து போன கல்விக் கழகத்துக்கு இறுதுச் சங்கு ஊதுவது போலத்தான் அமையும்…

    இவ்வளவும் இருக்க வவுனியா வளாகத்தில் தற்போது ‘ராகிங்’ பிரச்சினை முற்றி விட்டது. டிசம்பர் 13ம் திகதி ராகிங் பிரச்சினையுடன் சேர்ந்த இன்ன பிற அரசியல் சிக்கல்களின் விளைவால் – பிரயோக பீட மாணவன் ஒருவரி வெளியாட்கள் அடித்து நொறுக்கினராம். இவ்வளவும் நடந்தேறும் போது பீடாதிபதி எஸ். குகனேசன் எங்கே என்று தேடினால், அவர் தனது சைட் பிசினஸான (அதுதான் அவரது மெயின் தொழிலும் கூட) ஹையர் எடியுகேசன் டியூட்டரியில் ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு டியூசன் எடுத்த படி நின்றாராம்…

    என்ன ஒரு கடமைப் பொறுப்புணர்வு… இவரன்றோ கடமை தவறாத கல்விமான்!?

    கடைசியில் எல்லாமே “சம்போ சிவ சம்போ” என்றாகி விட்டது போலத்தான் தெரிகின்றது… குகனேசனிடம் கேட்டுப் பார்த்தால் ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் மத்தியிலும் ‘பகிடிவதை கலாச்சாரம்” உள்ளதா என்று அறிந்து கொள்ளலாம்!

    Reply