க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று செவ்வாய்கிழமை இணைத்தளத்தில் வெளியாகியுள்ள நிலையில் யாழ். மாவட்டத்தில் 35 பேருக்கு மூன்று ‘ஏ’ திறமைச்சத்தி கிடைத்துள்ளது.
வேம்படி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த சுமங்கலி சிவகுமார் என்ற மாணவி கணிதப்பிரிவில் மூன்று ‘ஏ’ திறமைச் சித்தி பெற்று யாழ்.மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் பாலகோபாலன் கோகுலன் என்ற மாணவன் உயிரியல் பிரிவில் மூன்று ‘ஏ’ சித்திபெற்று யாழ்.மாவட்டத்தில் முதலிடத்தில் உள்ளார். வர்த்தகப் பிரிவிலும் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் புருசோத்தமக்குருக்கள் ராஜாராம் மூன்று ‘ஏ’ பெற்று மாவட்டத்தில் முதலிடத்தில் உள்ளார். கலைப்பிரிவில் கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலய மாணவன் குணசிங்கம் தர்மேந்திரன் மூன்று ‘ஏ’ சித்தி பெற்று மாவட்டத்தில் முதலிடத்தில் உள்ளார்.
யாழ்.இந்துக் கல்லூரியில் கணிதப்பிரிவில் 9 பேரும், உயிரியல் பிரிவில் 3 பேரும் மூன்று ‘ஏ’ சித்தி பெற்றுள்ளனர். வேம்படி மகளிர் கல்லூரியில் கணிதப்பிரிவில் 4 பேரும், உயிரியல் பிரிவில் 3 பேரும், வர்த்தகப்பிரிவில் 2 பேரும் 3 ஏ சித்தி பெற்றுள்ளனர். கொக்குவில் இந்துக் கல்லூரியில் கணிதப் பிரிவில் ஒருவரும், உயிரில் பிரிவில் 3 பேரும் மூன்று ‘ஏ’ சித்தி பெற்றுள்ளனர். சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கணிதம், உயிரியல், கலை ஆகிய பிரிவுகளில் தலா ஒவ்வொருவரும், நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் வர்த்தகப்பிரிவில் ஒருவரும் மூன்று ‘ஏ’ சித்தியும் பெற்றுள்ளனர்.