தேசம்நெற்லீக்ஸ்: சரணடைந்த பிரபாவின் இறுதி நிமிடங்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு உள்ளது!

Pirabakaran_Vதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் சரணடைந்த பின் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டமை ஒளிப்பதிவு செய்யப்பட்டு உள்ளது தெரியவருகிறது. சம்பவத்தின் போது யுத்தப் பகுதியில் கடமையில் இருந்த புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இதனைப் பதிவு செய்ததுடன், ஆர்வ மேலீட்டினால் இதனை தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் அனுப்பி வைத்தும் உள்ளனர் எனத் தெரியவருகிறது. அண்மைக்காலமாக பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி சரணடைந்தவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான ஒளிப்பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

அவர்கள் இன்னமும் முயற்சி எடுத்தால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் இறுதி நிமிடங்களும் அவர்களுக்குக் கிடைக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

சில நிமிடங்களே நீளமான இப்பதிவில் பிரபாகரன் சரணடைந்த இடத்தில் இருந்து வேறோர் இடத்திற்கு கொண்டு செல்லப்படுவதும் அங்கு அவர் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானதாகவும் கூறப்படுகிறது. காட்சிகள் மிகக் கோரமானதாக உள்ளதாகவும் தெரியவருகிறது. இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள சிலர் இப்பதிவினைப் பார்வையிட்டு உள்ளனர்.

வே பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் சரணடைந்ததும் அதன் பின்னரே கொல்லப்பட்டது பற்றியுமான தகவலை தேசம்நெற் மே 21 2009ல் வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தது. இந்தியாவின் ‘?’ மிகப்பெரும் துரோகம்!! பிரபா உட்பட புலிகளின் தலைவர்கள் அவர்களின் குடும்பங்கள் சரணடைந்த பின்னரேயே கொல்லப்பட்டு உள்ளனர்!!! த ஜெயபாலன் ஆனால் அச்சம்பவம் ஒளிப்பதிவு செய்யப்பட்டு சிலருடைய கணணிகளிலும் தொலைபேசிகளிலும் பாதுகாக்கப்பட்டு உள்ளமை இப்போது தெரியவந்துள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவுக்கும் இலங்கை அரசுத் தலைமைக்கு இடையேயான முரண்பாடுகளும் அதனை அடுத்து முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சி உடன் கூட்டமைத்துக் கொண்டதும் இப்பதிவுகள் பொதுத் தளத்திற்கு வருவதைத் துரிதப்படுத்தி உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் இன்னமும் உயிருடன் உள்ளதாகக் கூறி கிழக்கு லண்டனில் உள்ள பிரியா உணவகத்தில் அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டும் சிறு வைபவம் நவம்பர் 26ல் இடம்பெற்றது. ரூட் ரவி என்று அறியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் லண்டன் ஆதரவுத் தலைமைகளில் ஒருவரான இவர் கேக் யை வெட்ட முயற்சித்த போது, இலங்கை அரசினால் பிரச்சினை வரும் என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒரு சிறுமியைக் கொண்டு கேக் வெட்டப்பட்டு ‘தேசியத் தலைவர்’ இன் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனது இறுதி நிமிடங்கள் அடங்கிய ஒளிப்பதிவு அதன் ஆதரவு அமைப்புகளுக்கோ அல்லது சனல் 4 தொலைக்காட்சிக்கோ ஏற்கனவே கிடைக்கவில்லையா அல்லது கிடைத்தும் அவர்கள் அதனை ஒளிபரப்பவில்லையா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

Show More
Leave a Reply to T Constantine Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

57 Comments

  • aras
    aras

    இந்த தடவை அது பிரபாகரன் இல்லை என புலிப்பினாமிகள் மிக கடுமையாக மறுதலிப்பார்கள். (இவர்களோடு அரசும் சேர்ந்து கொள்ளும்)

    Reply
  • நந்தா
    நந்தா

    இதென்ன புதுக் கதை? சுனாமியின் பின்னர் பிரபாகரன் எந்த முக்கியஸ்தர்களையும் சந்திக்கவில்லை. ஏன்?

    புலிகள் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கு முல்லைத்தீவு கடற்கரையில்நின்ற பொழுதே சுனாமி வந்து பிரபாகரன் உட்பட பல புலிகளை கொன்றது என்பதும் பிரபாகரனுடைய சடலம் குலிரூட்டப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது என்பதும் இன்னொரு தகவல். அந்த 50,000 டாலர் பெறுமதியான சவப்பெட்டி சென்சிலுவை சஙத்தினரால் நிவாரணப் பொருள்களோடு கடத்தப்பட்ட செய்தி உள்ளது.

    அரசினால் பிரசுரிக்கப்பட்ட முதல் படத்தில் பிரபாகரன் எந்த வித சித்திரவதைகளுக்கும் ஆளாகிய அடையாளங்களெ இல்லை. தவிர “இராணுவ உடையுடன்” அந்தப் படம் பிரசுரமாகியது.பிரபாகரன்நித்திரை கொள்ளும் பொளுதும் இராணுவ சீருடையுடந்தான் அல்லது சரணடைந்த பின்னர் இலங்கை இராணுவத்தினர் இராணுவ “மரியாதையுடன்” பிரபாகரனை சீருடை மாட்டி விசாரித்தார்களா?

    சனல்4 வீடியோக்களில் கொல்லப்படுவதாக காட்டப்படும் தமிழர்கள் யாரென்று இதுவரையிலும் கண்டு பிடிக்கப்படாத மர்மம் என்ன? அப்படி அந்த தமிழர்களை அடையாளம் தெரியாமல் அல்லது யாரென்று கண்டு பிடிக்க தயக்கம் இன்று வரை காட்டப்படுவதன் நோக்கம் என்ன?அடையாளம் தெரிந்தால் “சித்திரவதைக் கதைகள்” அம்புலிமாமா கதைகளாகிவிடும் என்று புலிகளின் எசமானர்களான பாதிரிகளுக்கு தெரியும். இன்று லண்டனில் நடக்கும் புலி விளையாட்டுக்களின் சூத்திரதாரிகள் இம்மானுவேல் பாதிரி கோஷ்டி என்பது யாவரும் அறிந்துள்ள உண்மை!

    ஜெயபாலன் அந்தத் தமிழர்கள் யாரென்று கண்டு பிடிக்க இப்பொழுது வாய்ப்பும் வளமும் இருக்கிறது. இலங்கையில் “இனம் தெரியாத” என்று கூறுவது கஷ்டம். வன்னி என்பது இந்தியாவின் மும்பாய் போல மில்லியன் கணக்கான மக்கள் வாழும் இடமல்ல.

    கொஞ்சம் அக்கறை எடுத்து அந்த சனல்4 வீடியோக்களில் உள்ள தமிழர்களின் படங்களை காட்டி அவர்களின் அடையாளங்களை ஊர்ஜிதம் செய்யுங்கள்.

    Reply
  • Anonymous
    Anonymous

    போட்டோ காட்டி. கேபிஐ கொண்டு கண்ணீர் அறிக்கை விட்டு.சுவிஸ் குலம் தலைமையில் அஞ்சலி செலுத்தும் முயற்சி. ராம் பெயரில் 2009 மாவீரர் உரை. ஜேர்மனியில் தமிழ் வளர்ப்பதாக சொல்லிக் கொள்பவர்களின் 2011 மாவீரர் தினத்தில் அஞ்சலி செலுத்தாட்டால் பிறிம்பாக அஞ்சலி செலுத்துவோமென்ற சரடு. எதுவும் புலத்தமிழர் மத்தியல் எடுபடவில்லை என்பது மகிந்தாவின் லண்டன் வருகையின் போதே மகிந்தாவின் கண்ணுக்கு முன்பே காண்பிக்கப்பட்டு விட்டது. சரி வீடியோ காட்டியாவது பார்ப்போம். மயிரால் மலையை கட்டி இழுத்து பார்ப்பது விழுந்தால் மலை அறுந்தால் மயிர்தானே!

    Reply
  • Danu
    Danu

    மாவீரர் தினம் என்று கொண்டாடுவோர் இனிமேலுக்கு மாகோழைகள் தினம் என்று கொண்டாடுங’கோ.

    Reply
  • T Constantine
    T Constantine

    Very slow leak. Old news.

    Reply
  • karuna
    karuna

    மயிரால் மலைகட்டும் நண்பரே! புலம்பெயர் சமுகத்தின் ஊரோடு ஒத்துப்போகும் வியாதியில் நீங்களும் நன்கே பீடிக்கப்பட்டுள்ளீர்கள்! மகந்தா வருகையின் எழுச்சி இப்போ புலிப்பினாமிகளிற்கு எவ்வளவு வருவாய் கொடுத்தது என்பதை ஜீரிவியே புட்டுப்போட்டு காட்டிய பிறகும் இங்கு வந்து கருத்தெழுதுவதை விடுத்து புனைகதையெழுதுவதே நல்லது!

    Reply
  • பல்லி
    பல்லி

    //தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனது இறுதி நிமிடங்கள் அடங்கிய ஒளிப்பதிவு அதன் ஆதரவு அமைப்புகளுக்கோ அல்லது சனல் 4 தொலைக்காட்சிக்கோ ஏற்கனவே கிடைக்கவில்லையா அல்லது கிடைத்தும் அவர்கள் அதனை ஒளிபரப்பவில்லையா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.//

    ஜெயபாலன் இதை இறுதி நிமிட என சொல்வதை தவிர்க்கலாம், காரணம் இது 30 வருட எதிர்பார்ப்புடன் ஒரு வருடமாய் பிளான் பண்ணி அரசு போர் தொடுக்க அதை கவனத்தில் கொள்ளாது பணவரவில் புலி புலத்தாரும் உயிர் (கரும்புலி) செலவில் தளத்து புலிகளும் கவனம் செலுத்த தலமைகள் (புலிதான்) தமக்கு எதுக்கு போர் என தகுதி அல்லாத பாதுகாப்புடன் பங்கரில் பதுங்க இது அனத்தும் தெரிந்தும் உயிர்மீது ஆசையாலும் வாழ வழி தெரியாமலும் பல்லுக்குள் அகப்பட்ட நாக்கு போல் புலி இழுத்த பக்கமெல்லாம் சென்று இறுதியில் முள்ளி வாய்க்காலில் முடிவுற்ற மக்களும் இப்படி எதிர்பார்த்த விடயம் எதிர்பாராமல் நடந்ததால் தலை இருக்கா இல்லையா என்பதில் சந்தேகம் சிலருக்கு; அதில் ஜெயபாலனும் அடக்கம்; அதுதான் காட்சியை பார்த்து உறுதி செய்துவிட்டால் நல்லது என்பது ஒரு ஊடகவியாளனின் கணிப்புதான்; ஆனால் இங்கு இந்த ஒலிநாடாக்கள் எல்லாம் (வீடியோ) ஏதொ ஒரு சிலருக்கு விளம்பரமாகதான் வெளியாகுதே தவிர அங்கு நடந்த அல்லது நடக்கிற கொடுமைகளுக்காக இல்லை என்பது புரிகிறது; இதனாலதான் அறியபட்டவர்களின் வீடியோக்கள் அம்பலமாகிறது ஒரு கமலாவோ அல்லது விமலாவோ இப்படி துன்புறுத்தபட்டால் இப்படி பிரியதர்சினி போல் விளம்பர படுத்த மாட்டார்கள், ஆக இறப்பிலும் பணவரவே குறியாக உள்ளது; அரசால் நடத்தி முடிக்கபட்ட வன்செயல்கள் அனைத்தும் கண்டனத்துக்கு உரியதுதான் அதில் பல்லிக்கு கருத்து மாறுபாடில்லை; ஆனால் அந்த கண்டனமும் மீண்டும் ஒரு அழிவுக்கான அன்பர்களை வளர்க்க உதவகூடாது; பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்பதை விட அவர் இருந்தால் என்ன செத்தால் என்ன என்னும் மனனிலைதான் இன்றய வன்னி மக்களின் எதார்த்தநிலை;

    Reply
  • BC
    BC

    என்ன பல்லி, தலை இருக்கா இல்லையா என்பதில் ஜெயபாலனுக்கும் சந்தேகமா?அவர் ஏற்கெனவே தலை சரணடைந்து தான் கொல்லப்பட்டது என்று கட்டுரை எழுதினவர்.
    //சுனாமியின் பின்னர் பிரபாகரன் எந்த முக்கியஸ்தர்களையும் சந்திக்கவில்லை. ஏன்?//
    இது யோசிக்க வேண்டிய விசயம்.
    புலம் பெயர்ந்த புலிகளிடம் தலை எப்பொழுது போராட்டத்தை கையளித்தார்?

    Reply
  • Nathan
    Nathan

    ஜெயபாலன் இதென்ன புது லீக்ஸ். சும்மா விக்கிலீக்ஸ் மாதிரி ஏதாவது சொல்;லவேண்டுமென்பதற்காக பிரபாகரனை பற்றி சரடு விடுரிங்கள்.

    உங்களிட்ட ஆதாரம் இருந்தா நெற்றில போடலாமே. ஆதைவிட்டுட்ட கணணயில இருக்கு கைத்தெலைபேசியல இருக்கென்று பகடிவிடாதேங்கோ. ஆதாரம் இல்லாமல் ஊர் வம்பர் கோஸ்டி மாதிரி கதை அளந்து உஙகளை நீங்களே தாழ்த்திக்கொள்ள மாட்டியல் என நினைக்கிறேன்

    சரி விவாத்திற்கு உங்கள் வதந்தியை எடுதாலும் அதில் நிறைய leakage இருப்பதாலோ எனனவோ நீங்களும் தேசம் லீக்ஸ் எண்டு பேர்வைத்து உள்ளீர்கள்.
    முலாவது பிரபாகரனின் உடலில் காயங்கள் எதுவுமில்லை. தலை மட்டுமே சிதறி இருந்தது. இரண்டாவது பிரபகரனை உடனே கொல்ல வேண்டிய தேவை அரசுக்கிலை. அதுடன் பதுக்கிவைத்திருக்கும் தங்கம் பணம் ஆயுதம் என எல்லாத்தையும் ஒரே நாளில் சொல்லி இருக்கவும் முடியாது. ஆகக்குறைந்தது கோத்தா தன்னை கொல்ல முயன்றதற்க ஒரு அறையாவது கொடுக்க விரும்பியிருபபார்.

    //சனல்4 வீடியோக்களில் கொல்லப்படுவதாக காட்டப்படும் தமிழர்கள் யாரென்று இதுவரையிலும் கண்டு பிடிக்கப்படாத மர்மம் என்ன? அப்படி அந்த தமிழர்களை அடையாளம் தெரியாமல் அல்லது யாரென்று கண்டு பிடிக்க தயக்கம் இன்று வரை காட்டப்படுவதன் நோக்கம் என்ன?அடையாளம் தெரிந்தால் “சித்திரவதைக் கதைகள்” அம்புலிமாமா கதைகளாகிவிடும் என்று புலிகளின் எசமானர்களான பாதிரிகளுக்கு தெரியும். இன்று லண்டனில் நடக்கும் புலி விளையாட்டுக்களின் சூத்திரதாரிகள் இம்மானுவேல் பாதிரி கோஷ்டி என்பது யாவரும் அறிந்துள்ள உண்மை!//

    நானறிய இலங்கையில் சனல் 4 ஒளிபரப்புவதிலலை. இணையங்களில் தரவிறக்கவும் சனத்துக்கு பயம் ஏனெனில் IP address ஜ வைத்து வீட்டுக்கு வந்துவிடுவாங்களென்று. மீழ் குடியேறியவர்க்கு இந்த வசதிகளெதுவும் இல்லை. ஆதலால் அவர்கள் இனம் காண்பது அரிது. அத்துன் பலர் குடும்பங்களாக கொல்லப்பட்டு விட்டதாலும் வீடியோவில் கெல்லப்படுபவர்களின் முகங்களை தெளிவாக பார்க்க முடியாததாலும் அவர்களை இனம் காண்பது அரிது. முன்னர் வெளியான படமொன்றில் இருந்து கைது செய்யப்பட்டு கைகள் கட்டப்பட்டிருந்த தனது தந்தையை 9 வயது மகள் அடையாளம் காட்டியது முன்னர் உடகங்களில் வெளியாகி இருந்தது.

    Reply
  • thurai
    thurai

    புலம்பெயர் புலிகளிற்கு இராசபக்சவில் கோபம் ஏற்பட பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது தலைவரை அழித்ததோ அல்லது புலிகளை அழித்ததோ அல்ல. நாழுக்கு நாள் இராணுவம் தமிழரைக் கொன்றால் தாங்கழும் இன்னும் 30 வருடத்திற்கு பிழைப்பை நடத்தியிருக்கலாம். இவர் ஒரே தடவையில் இவ்வளவு பேரையும் கொன்று தங்கள் வருவாயை கெடுத்துவிட்டார் என்பதுதான். துரை

    Reply
  • M.Desmond
    M.Desmond

    இந்த தலைமைக்காகவா இத்தனை விலைகளைக் கொடுத்தது தமிழினம்?

    எத்தனை போராளிகள் போரில் பின்னடித்ததுக்காக சுட்டுக்கொல்லப்பட்டனர், இதே முல்லை கடலில் கரும்புலி போராளி ஒருவன் வாழும் விருப்பில் கப்பலை தகர்க்காது கரை வந்ததற்காக பலர் முன்னிலையில் மரண தண்டனைக்கு உள்ளக்கப்பட்டான்.
    பெண் போராளிகள் காதலிப்பதை அறிந்ததும் தலை மயிரை வெட்டி களமுனைக்கு அனுப்புவதும், சண்டையில் சாகாது விபத்தில் விழ்ந்தால் வீரச்சாவு என்று அறிவிக்காமல் விடுவதும்…………..
    இன்னும் எழுதுவேன்…………….

    Reply
  • நந்தா
    நந்தா

    //நானறிய இலங்கையில் சனல் 4 ஒளிபரப்புவதிலலை. இணையங்களில் தரவிறக்கவும் சனத்துக்கு பயம் ஏனெனில் ஈP அட்ட்ரெச்ச் ஜ வைத்து வீட்டுக்கு வந்துவிடுவாங்களென்று. மீழ் குடியேறியவர்க்கு இந்த வசதிகளெதுவும் இல்லை. ஆதலால் அவர்கள் இனம் காண்பது அரிது. அத்துன் பலர் குடும்பங்களாக கொல்லப்பட்டு விட்டதாலும் வீடியோவில் கெல்லப்படுபவர்களின் முகங்களை தெளிவாக பார்க்க முடியாததாலும் அவர்களை இனம் காண்பது அரிது. முன்னர் வெளியான படமொன்றில் இருந்து கைது செய்யப்பட்டு கைகள் கட்டப்பட்டிருந்த தனது தந்தையை 9 வயது மகள் அடையாளம் காட்டியது முன்னர் உடகங்களில் வெளியாகி இருந்தது.//

    தந்தையை அடையாளம் காட்டியதை அது உண்மையா பொய்யா என்று இதுவரை எந்த ஊடகக் காரர்களும் ஆராயாது விட்டநோக்கம் என்ன?
    அது எந்த ஊடகத்தில் வந்தது?

    கொல்லப்படுபவர்களின் முகங்கள் “தெளிவில்லாமல்” போனது எப்படி?

    அந்த வீடியோக்களை இராணுவத்தினர் எடுத்து சனல்4 க்கு கொடுத்திருந்தால் அந்த இராணுவத்த்னருக்குக் கண்டிப்பாக கொலை செய்யும் இராணுவத்தினரின் பெயர்கள், எந்தப் படைப் பிரிவு என்பன தெரிந்தே இருக்கும். அதனை வெளியில் சொல்லுவதில் (இவ்வளவும் செய்த பிறகும்) என்ன பிரச்சனை?

    இந்த வீடியோவை லண்டனுக்குக் கொண்டு வந்து இப்படி வாலும் தலையுமில்லாமல் புரளி கிளப்புபவர்கள் இராணுவத்தினரின் பெயர்களை வெளியிடட்டும்.

    இராணுவ சீருடையில் கைகள் கட்டிய ஒரு மனிதனைக் கொல்லும் காட்சியை வைத்து தமிழ், சிங்களம் என்று எப்படித் தீர்மானிக்க முடியும்?

    அதில் வரும் பாஷையை யாரும் பேசி பதிவு செய்திருக்க முடியும்!

    நக்கீரன் மாதிரி பிரபாகரன் டி வி பார்ப்பது போல கம்பியூட்டர் மூலம் “வெட்டி, ஒட்டி,நகாசு” வேலைகள் செய்து படிக்காத பாமரர்களை ஏமாற்றி அவர்களிடம் சில்லறை பிடுங்கலாம். கனடாவில் பிரபாகரன் குதிரை சவாரி செய்வது போல படம் ஒன்றை என்னாலும் “சுட” முடியும்.

    ஊடகங்கள் என்பன உண்மை பேசுகின்றன என்று அலையத் தேவையில்லை!

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    அன்புடன் கருத்தாளர்களுக்கு,
    தேசன்நெற்லீக் எதை காண்பிக்கப் போகிறதோ தெரியாது. ஆனால் என்னிடம் ஒரு தகவல் உள்ளது அது சரியா, பிழையா என்று அறியமுடியாதுள்ளது. முடிந்தால் யாரும் உதவுங்கள். ஆதாவது, ஜோர்தானில் இருந்து ராஜபக்ஸ நாடுதிரும்பியது மே மாதம் 18ம் திகதி. ஆனால் புலித்தலைவர் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டது மே19ம் திகதி. புலித்தலைவர் 18ல் சரணடைந்துள்ளார். பூர்வாங்க விசாரணையில் ராஜ பக்ஸவுடன் பேச வாய்ப்புத்தருமாறு கோரியுள்ளார். 18ல் சரணாகதி விடயம் ராஜபக்ஸவுக்கு தெரியப்படுத்தப் படவே அவரும் உடனேயே நாட்டுக்கு திரும்பியுள்ளார். புலித்தலைவரின் வேண்டுதலின் பேரில் ராஜபக்ஸவை சந்திக்க வைக்க புலித்தலைவர் உலங்கு வாணூர்தி மூலம் அநுராதபுர ராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கே கண்ணாடி மறைப்பின் இருபக்கத்திலும் இரு தலைவர்களும்(?) ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்துள்ளனர். ஆனால் ராஜபக்ஸ கதைக்க விரும்பவில்லை.

    ராஜபக்ஸ கொழும்பு திரும்ப, புலித்தலைவர் ராணுவமுகாமைல் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் இந்திய-இலங்கை ராஜ தந்திரிகள் ஆலோசனை நடைபெற்றுள்ளது. புலித்தலைவரை இந்தியாவிடம் கையளிக்க இலங்கை முன்வந்துள்ளது. இந்தியாவோ தமிழ் நாட்டின் அரசியல் நிலவரத்தையும் அது இந்திய அரசியலை பாதிக்கப்போகும் விடயத்தையும் கருத்தில் கொண்டு, தலைவரை ஏற்க மறுத்ததோடு, இலங்கை எந்த முடியையும் எடுக்க சமிக்ஞை கொடுத்தது. 18ம் திகதி இரவு சாப்பாட்டு நேரத்தில் புலித்தலைவரின் சாப்பாட்டு தட்டில் இரண்டு சைனட் குப்பிகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் புலித்தலைவர் ஒன்றையேனும் உற்கொள்ளவில்லை. தற்கொலை செய்ய தலைவர் தயார் இல்லாதது அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகே அவரை கொல்லுவதற்கான தீர்மானம் எடுக்கப் பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் தம் ஆசையை தலைவர் மீது காட்டியுள்ளனர். இறந்த புலித்தலைவரின் உடல் நந்திக் கடல் ஏரிக்கு கொண்டுவரப் பட்டுள்ளது.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    முதலில் நந்தா போன்றவர்கள், கனடாவிலிருந்து வெள்ளைகாரர்கள்? எழுதியதை படித்துவிட்டு, தமிழ் வட்டடெழுத்து பல்லவர் எழுத்து, அது பிராமி-பிராகிருதியிலிருந்து நேரடியாக இலங்கை தமிழ் பகுதியில் வந்துவிட்டு சிங்களத்துடன் ஆரத்தழுவி மகிழ்கிறது, தமிழுக்கும்-தமிழ்நாட்டிற்கும்-பிரபாகரனுக்கும் (மளையாளி?) இதில் சம்பந்தமில்லை அழிக்கப்படவேண்டியவர்கள், என்று லக்ஷ்ர் இ தொய்பா-பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. பாணியில் கூறுவதை நிறுத்த வேண்டும்! .பிரபாகரன் களமாடி களபலியானானா? அல்லது சரணடைந்து செத்தானா? என்பது இலங்கைதமிழருக்கும்-இலங்கையருக்கும் அக்கறையில்லாத போது, தமிழ்நாட்டுத்தமிழருக்கு அக்கறையில்லை!. இதில் வயித்தெறிச்சல் என்ன வென்றால் தமிழும்-மளையாளமும்- சிங்களமும் தங்கள் ஒலிகளுக்கு தகுந்த மாதிரி பல்வேறு எழுத்து வடிவில் எழுதப்பட்ட பிராந்திய மொழிகள். மலாய் போன்றவைகள் எழுத்து வடிவு இல்லாததால் சம்பந்தமில்லாத ஐரோப்பிய எழுத்து வடிவில் எழுதிய மாதிரி!.
    நான் மே 2009 ல் சண்டை முடிந்தவுடன், மகிந்தாவை துட்டகைமுனுவாக புகழ்ந்து தேசம்நெட்டில் எழுதியது, பிரபாகரன் மகிந்த சகோதரர்களின் ஆதரவுடன் சரணடைந்து விட்டதாகவும் (இந்திய உளவுக்கு டிமிக்கி கொடுத்து) இதற்கு கருணா (வினாயகமூர்த்தி முரளிதரன்) ஒழுங்கு செய்ததாகவும் கேள்விப்பட்டேன்.
    இது பல்லியின் கருத்தை ஒத்து, புலித்தலைமைகள் அவர்களின் உள் தளபதிகள் சிலரின் (எந்த உளவின் கையாட்கள்?) கட்டுபாட்டுக்குள் சுனாமி காலத்திலிருந்து சிறைக் கைதிகளாக இழுபட்டு திரிந்திருக்கிறார்கள். இவர்களின் கண்களில் மண்ணை தூவியே சரணடைந்திருக்கிறார்கள்?. புலம்பெயர் புண்ணாக்குகளுக்கும் இந்த உளவுத்துறை கையாட்களுக்கும் பிஸினஸ் தொடர்புகளும், இந்த நாடகத்தை முழுமையாக நடத்தி முடிக்க பல பில்லியன் டாலர் பணமும் கையளிக்கப்பட்டிருக்கிறது?. அடுத்து பிரபாகரன் உயிருடன் எஸ்கேப் ஆகிவிட்டார் என்று எழுதினேன். அது சிங்கப்பூரிலிருந்து ஒரு புண்ணாக்கு (ஐ.பி.கே.எஃப். காலத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்ட) தீடிரென்று முளைத்து, தலைவர் உள்ளார் என்று கூறிய சில மாதங்களில், கேட்டதையெல்லாம் கொடுத்தோம் கப்பல் கப்பலாக அனுப்பினோம் என்று வருத்தப்பட்டு, பின்னர் கனடிய தமிழ் காங்கிரஸில் புகுந்துக்கொண்டது!. பிறகு கனிமொழி-ஜகத்கஸ்பார் காலத்தில் “ஒரு உண்மை தெரிஞ்சாகணும்” என்று எழுதினேன். அது,திட்டமிட்டு ஒரு “உள் கும்பல் (வெள்ளாள கலாச்சாரம்?)” தங்கள் லாபத்திற்காக பிரபாகரன் கும்பலை பலிக்கடாவாக ஆக்கியிருக்கிறது, இது ,சிங்களவர்கள் தமிழர்களை அழிக்கநினைப்பதும், தமிழர்களுக்குள் ஒரு பகுதி (கேனிபாலிஸ்ட்டுகள்) மற்றதை அழிக்க நினைப்பதும்,ஒரு “ஆம்புடேஷன்” ஏனென்றால், பல ஆண்டுகால இலங்கைத் தமிழரின் பரிணாம வளர்ச்சியே பிரபாகரன்(அவன் இயக்கம்), சிங்களவர்களுக்கும் – தமிழர்களுக்கும் உள்ள உண்மையான(சாதாரண) பிரச்சனையை சொல்ல தெரியாமல் (பேராசையால்) அதை கலதோன்றி, மண்தோன்றா காலத்து மூத்தக்குடி பிரச்சனையாக திராவிட? டமாரம் அடித்ததே பிரச்சனையின் ஆணிவேர் என்றும் எழுதியிருந்தேன்!.
    கடைசியாக த.ஜெயபாலனின் ஆதாரப்படி சரணடைந்தது உண்மையென்றால், எதற்காக, எப்படி அவ்வளவு ஆணித்தரமான நம்பிக்கை யாரால் ஊட்டப்பட்டது என்று ஆவணப்படுத்தப்படல் வேண்டும். ஜெயலலிதாவும்-வைகோவும் என்று ஜோக் அடிக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்!

    Reply
  • BC
    BC

    //இரண்டு சைனட் குப்பிகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் புலித்தலைவர் ஒன்றையேனும் உற்கொள்ளவில்லை. தற்கொலை செய்ய தலைவர் தயார் இல்லாதது அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. //
    புலி தலைமையின் உண்மையான முகம் இங்கே வெளிபடுவதால் முகமெட் நிஸ்தாரின் தகவல்படி நடந்தும் இருக்கலாம்.

    Reply
  • rajeeve
    rajeeve

    தங்களால் சயனைட் கொடுத்து சாகடிக்கப்பட்ட குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைந்திருக்கும் சிலவேளை தனது பிழைகளுக்கு பிராயச்சித்தம் தேடிக் கொண்டிருக்கலாம் ஆனால் புலம்பெயர் புண்ணாக்குகளின் உசுப்பேத்தலில் தன்னை தலைவராக்கி விட்டார் இவருக்கு உலகம் ஏன் இலங்கையில் சிங்கள மக்கள் ஏன் தமிழ் மக்கள் தன்னைப்பற்றி பெரிதாகவே நினைப்தாக இவர் தனக்கு தான் மகுடம் சூடிக்கொண்டிருந்தார் இவரைப்பற்றிய மேலும் பல இறுதிக்கட்ட தகவல்கள் இனிமேல் வெளிவரும்.

    நிஸ்த்தார் சொன்னது போல சாப்பாட்டுடன் மட்டும் அல்ல பல தடவைகள் பல இடங்களில் சரத் ஊட்பட சயனைட்டை இவரிடம் காட்டீ கேட்டுள்ளார்கள் ஏன் நீ சாப்பிடவில்லை என்று எங்கே உனது சயனைட்டு என்றும் கேட்டுள்ளார்கள் பலதரம் பல இராணுவத்தால் சயனைட்டு கொடுக்கப்பட்டது பிரபாகரன் சாப்பிடவில்லை

    பிரபாகரன் தனது கழுத்தில் தொங்கவிட்ட சயனைட்டீல் வெறும் குப்பி என்பதை மறந்து விடாதீர்கள் இந்த ஜடியாவை பின்னாளில் பாலசிங்கம் ஈரான் யுத்த்தில் திறப்பு கழுத்தில் தொங்கவிட்டு(இறக்கும்போது சொர்க்கத்திற்கான திறவு கோல் என்று கூறப்பட்டது) போருக்கு போன விடயத்துடன் ஒப்பிட்டு பிரபாகரனுக்கு ஜடியா கொடுத்திருந்தவர் என்றும் அறியப்படுகின்றது

    பிரபாகரன் தன்னைப்பற்றி பெரிதாக பீலாவிட்டது போல் வெளிநாடுகளிலும் பலிகளின் பலர் தம்மைபற்றி பெரிதாகவே நினைத்திருந்தார்கள் என்பதையும் மறந்துவிட வேண்டாம் இன்றும் பிரபாகரன் போட்டடோ போட்ட கலண்டர்கள் விற்பனைக்கு வந்துள்ளது மட்டும்.

    பிரபாகரன் தன்னை இவர்கள் யாருடையதோ(இவர்கள் யார் என்று லண்டனில் உள்ள சிலருக்கு தெரியும்) பேச்சின்படி தான் யாரிடமோ ஒத்துக்கொண்டபடி தன்னை பாதுகாப்பார்கள் என்றே நினைத்து விட்டார்.

    ஏற்கனவே பலர் கூறியதுண்டு பிரபாகரன் இராணுவத்திடம் அகப்பட்டாலும் சயனைட் சாப்பிடமாட்டார் என்று காரணம் கோழைகள் மற்றவர்களையே தனக்காக சாகவைப்பார்கள் தான் துணிந்து முன்போய் உதாரணமாக எந்த நடவடிக்கைகளையும் செய்யாதவர் பிரபாகரன். இன்றும் உயிருடன் இருக்கும் முக்கிய உறுப்பினர்கள் பலருக்கும் சயனைட் கொடுக்கப்பட்டத அவர்களும் சாப்பிடவில்லை.

    பின்னாளில் சயனைட்டு கொட்து சாகச்சொன்ன(இது மட்டுமல்ல மேலும் கதைகள் பல உண்டு)சரத்துக்கு புலிகளின் ஆதரவு வட- கிழக்கில் சரத் அமோக வெற்றி.

    Reply
  • thurai
    thurai

    புலிகளின் தமிழீழ விடுதலைப்போராட்டம் இன்னமும் முடியவில்லை. முடியப்போவதும் இல்லை. காரணம் தமிழர்களிற்கும் போரை நடத்திய புலிகளிற்கும் எந்த தொடர்பும் இருக்கவில்லை. தமிழர்களை இலங்கையிலும் உலகமுழுவதும் ஏமாற்ரி வாழ்ந்த கூட்டத்தினரின் தயாரிப்பே விடுதலைப்போர்.

    சிங்களவர்களிலும் பார்க்க தமிழரின் உயிரோடு விளையாடி ஏமாற்ரிவாழ்பவர்களே புலம்பெயர் புலிகள். இதில் அறிந்தோ அறியாமலோ எல்லாத் தமிழர்க்ழுமே பங்களித்து உள்ளார்கள். சுட்டுப்போட்டு ஓடித்தப்பி ஆரம்பித்த போராட்டம் தமிழரை உயிரோடு சுடுகாட்டிற்கே கொண்டுபோய் விட்டது. இவர்களெல்லாம் இனிமேலும் தமிழரைப்பற்ரி அக்கறைகொண்டவர்களாக கதைப்பதையும் எழுதுவதையும் நிறுத்தினாலே ஈழத்தமிழர்களிற்கு பேருதவியாக இருக்கும். இவர்களின் வீர் காவியம் தலைவரின் தப்பிஓடிய காவியமாகவா, அல்லது தலைபோன காவியமாகவா வெளிவரப் போகின்றது-துரை

    Reply
  • Nathan
    Nathan

    //தந்தையை அடையாளம் காட்டியதை அது உண்மையா பொய்யா என்று இதுவரை எந்த ஊடகக் காரர்களும் ஆராயாது விட்டநோக்கம் என்ன?
    அது எந்த ஊடகத்தில் வந்தது?//
    தமிழ்வின் அலது அதிரடியாக இருக்கலாம் சரியாக ஞபகம் இல்லை. ஊடகக் காரர் ஏன் ஆராயவில்லை என்பதை அவர்களிடம்தான் கேட்கவேண்டும்.

    //கொல்லப்படுபவர்களின் முகங்கள் “தெளிவில்லாமல்” போனது எப்படி?
    அந்த வீடியோக்களை இராணுவத்தினர் எடுத்து சனல்4 க்கு கொடுத்திருந்தால் அந்த இராணுவத்த்னருக்குக் கண்டிப்பாக கொலை செய்யும் இராணுவத்தினரின் பெயர்கள்இ எந்தப் படைப் பிரிவு என்பன தெரிந்தே இருக்கும். அதனை வெளியில் சொல்லுவதில் (இவ்வளவும் செய்த பிறகும்) என்ன பிரச்சனை? இந்த வீடியோவை லண்டனுக்குக் கொண்டு வந்து இப்படி வாலும் தலையுமில்லாமல் புரளி கிளப்புபவர்கள் இராணுவத்தினரின் பெயர்களை வெளியிடட்டும்.
    இராணுவ சீருடையில் கைகள் கட்டிய ஒரு மனிதனைக் கொல்லும் காட்சியை வைத்து தமிழ்இ சிங்களம் என்று எப்படித் தீர்மானிக்க முடியும்?
    அதில் வரும் பாஷையை யாரும் பேசி பதிவு செய்திருக்க முடியும்! நக்கீரன் மாதிரி பிரபாகரன் டி வி பார்ப்பது போல கம்பியூட்டர் மூலம் “வெட்டி, ஒட்டிஇநகாசு” வேலைகள் செய்து படிக்காத பாமரர்களை ஏமாற்றி அவர்களிடம் சில்லறை பிடுங்கலாம். கனடாவில் பிரபாகரன் குதிரை சவாரி செய்வது போல படம் ஒன்றை என்னாலும் “சுட” முடியும்//

    நீங்கள் கெகலிய ரம்புக்வெலவின் சொந்தக்கரரோ? அவருக்கேவராத சந்தேகங்கள் உங்களுக்கிருக்கு போல. சுட்டவனே நேரில வந்து சொன்னாலும் வெற்றுக்கேள்விகளுக்கு குறையில்லை.

    நந்தா உந்த வீடியோவைத்தான் ஐ நா வின்; பிலிப் அஸ்டனும் அமரிக்க CIA உம் உணமை எண்டா பிறகு உங்களுக்கு சந்தேகம் வந்திருக்கெண்டா கஸ்டம் தான். முகம் தெரிய எடுக்க உதென்ன சினிமாவா? உங்கட கதையைக் கேட்டா படமெடுத்த ஆமிக்காரன் தன்டையும் சகபடிகளின்டயும் பெயர் வர உதை சனல் 4 இற்கு அனுப்பின மாதிரியல்லோ இருக்கு. இதை எடுத்தவனும் இந்த கொலைகளில் சம்பத்தப்பட்டவன்தான. அவன் தன்ட சகாவின் பெயர் ஊரை போட்டே வீடியோவை கொடுக்கிறான்? அப்படியே யாராவது சொன்னாலும் நீங்கள் என்னசெய்யப் போறிங்கள்? இது பொய்ப் பேர் என்பியல் அவ்வளவு தான்.

    Reply
  • Varathan
    Varathan

    Jeyabalan, first remove the name leaks. The worst thing is copying the name from other websites. Be creative…don’t copy. Keeping the identity of Thesamnet. it looks very odd

    Reply
  • நந்தா
    நந்தா

    அமெரிக்கக் கப்பல் வந்து தங்களைக் காப்பாற்றும் என்று புலிகளும் பாதிரிகளும் நின்றதை மறந்தவர்கள் பலர்.

    வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல அமெரிக்க சீ ஐ ஏ சொல்லுகிறதாம் என்று கண்டு பிடித்து அது சரியென்று யாரை ஏமாற்றுகிறார்கள். அம்ரிக்கவின் ஏவல்களான புலிகளைப் பற்றி அமெரிக்கர்கள் “கண்டு” பிடித்த விஷயத்தை உண்மை என்று நம்ப புலி வால்கள்தான் உள்ளனரே ஒழிய வேறு யாரும் கிடையாது.

    வீடியோ உண்மையாக இருக்கலாம். ஆனால் அதில் வந்து காட்சியளிப்பவர்கள் யார் என்பதோ பேசும் பாஷை எதுவென்பதோ பிலிப் அஷ்டனுக்கு தெரிய வாய்ப்புக் கிடையாது. தமிழ் பாஷை கூட அடேல் பாலசிங்கத்துக்கு தமிழர்களை விட அதிகமாகத் தெரியும் என்று பீற்றும்புலி வால்களாக உள்ளதும் தெரியும்.

    அமெரிக்கா ஈராக் மீது படையெடுப்பதை நியாயப்படுத்தி பால்மா தொழிற்சாலைகளை நாசகார ஆயுதங்கள் செய்யப்படும் தொழிற்சாலைகள் என்று உலகத்தையே ஏமாற்றிய பின்னரும் அமெரிக்கன் சொல்லுகிறான், நம்புங்கோ என்றால் நம்ப நாதன் மாதிரி நாங்களும் இல்லை!

    அந்த வீடியோவை எடுத்தவனும் கொலையில் சம்பந்தப்பட்டவன் என்று இவர் கண்டுபிடிப்பு வேறு செய்கிறார். அந்த வீடியோவினால் தனக்கும் பிரச்சனை வரும் என்று தெரிந்து கொண்டா அதனை சனல்4 க்கு அனுப்பியிருக்கிறான்?

    புலிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த தமிழகளைப் போட்டுத் தள்ளும் காட்சியை புலிகளே வீடியோவாக்கியிருக்கிறார்கள். அதனால்த்தான் தலை, வால் இல்லாமல் புரளி கிளப்பியிருக்கிறார்கள்.

    ஆயிரக் கணக்கான இலங்கைத் தமிழர்கள் “துரையப்பா” கொலை வழக்கில் தங்களை இலங்கை அரசு தேடுகிறது என்று “கதை” எழுதி அகதி என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் நாடுகளில் இந்த வீடியொ விளையாட்டு ஒன்றும் புதினமல்ல.

    கெகலிய ரம்புக்வெல அந்த வீடியோவை பொய் என்று நிராகரித்தமை நியாயமானதுதான். புலிகளின் “உண்மை” பேசும் திறன் உலகம் அறிந்த விஷயம். அவர்கலின் கதைகளின்படி அவர்கள் யாரையும் கொலை செய்யவில்லை. ஆமேன்!

    டெமகிரசி:
    வெள்ளையர்களின் நாடுகளில் இருந்தால் அவர்கள் நம்முடைய நாடுகளில் செய்யும் சோமாரித்தனக்களை “கண்டுக்க” கூடாதோ? தவிர வெள்ளையர்கள் எழுதியதைத்தான் நான் படிக்கிறேன் என்று உங்களுக்கு யார் சொன்னது?

    Reply
  • Ajith
    Ajith

    Dear Jeyapalan,
    You have clearly proved here that Rajapakse government killed surrendered people. In otherwords, you have evidence to prove that Rajapakse and his military is responsible for war crimes. Now You have a huge responsibity. It is your duty take this evidence to the UN appointed commission, the LLRC that was appointed by Sri Lanka Government and prove the world that
    1. Prabakaran is not killed in a war and killed after surrendering to the military.
    2. Rajapakse and his government has done crimes against humanity.

    It is very important you to do this because Sri Lanka government always deny war crimes charges. The people of Sri Lanka has the right to know the truth.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    நந்தா ஒரு புதிய மாற்றம் நிகழ்கிறது, “கனடா” என்ற நாடு தோன்றியதிலிருந்து அதன் வெளிஉறவு கொள்கையை இங்கிலாந்துதான் நிர்ணயிக்கிறது. அமெரிக்கா என்பது ஒரு உலுத்துப்போன இராட்சஷன் அவனை நிறுத்தமுடியாது அவனை தனக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்கிற தரவு,குறிப்பாக தற்போது ஐரோப்பியர்களால் மேற்கொள்ளப்படுகிறது. அமெரிக்க கண்டத்தில் வாழும் ஐரோப்பியரிடையே எழும் ஓருணர்வை பலப்படுத்தவே ஐரோப்பிய யூனியனும் தன் கொள்கையாக்குகிறது. அமெரிக்க – கனடாவில் போலந்துகாரர்கள் 30 லட்சத்திற்கு மேல் உள்ளனர். பெரும்பாலான தொழில்நுட்பங்களையும், அதன் ஆராய்ச்சிகளையும் அமெரிக்காவும், ஜெர்மெனியும் தன்னகத்தே கொண்டுள்ளனர், இவர்களிடமே உலகின் பணவளம் முடங்கியுள்ளது. இவர்களின் அடியாட்களாகவே சி.ஐ.ஏ. வும், ஐக்கிய செய்தி சேவை (ஃபி.என்.ஃடி) செயல்படுகிறது. ஃபி.என்.ஃடி. தான் சதாம் ஹுசைனுக்கு பங்கர் அமைத்துக் கொடுத்தது!. இவர்களிடம் பில்லியன் கணக்கில் பிடுங்கித் தின்று ருசிக் கண்டதே பாகிஸ்தானின் “ஐ.எஸ்.ஐ.”.
    இந்திய “ரா” என்பது இவர்கள் ஊடுருவக்கூடிய இந்திரா காங்கிரஸின் “ஆர்.எஸ்.எஸ்(பிஜேபி)” போன்றது!.
    லக்ஷர் இ தோய்பா ஒரு இஸ்லாமிய அதி தீவிரவாத அமைப்பு இல்லை அது ஒரு “இந்திய எதிர்ப்புவாத அமைப்பு”. இந்த அரசியலின் நிர்ணயிக்கும் சக்தியாக ஆல்பர்ட் ஐன்ஸ்டின் காலத்திலிருந்து இழைந்து ஓடுவது “அணு ஆயுத அரசியல்”!
    The full scope of the ABDUL QADEER KHAN network is not fully known. Centrifuge components were apparently manufactured in Malaysia with the aid of South Asian and “GERMAN” middlemen, and used a Dubai computer company as a false front. In Malaysia, Khan was helped by “SRI LANKA-BORN BUHARY SAYED ABU TAHIR”,who shuttled between Kuala Lumpur and Dubai to arrange for the manufacture of centrifuge components by a Malaysian company.Khan Research Laboratories is said to have entered into an agreement with Malaysian businessman Shah Hakim Zain to export conventional weapons to Malaysia.
    நாம் ஒன்றை ஆராயவில்லை. பிரபாகரனும் விடுதலைப்புலிகள் இயக்கமும்,அரசியல் அடித்தளமில்லாமல் வெறும் இராணுவ இயக்கமாக யார் வளர்த்துவிட்டது?. இதுபோல்தான் ஆப்கானிஸ்தானில் குண்டூஸ் மாகாணத்தின் சுயநலமான “குலுபுதீன் ஹெக்மத்தியார்” இயக்கத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ஜியா உல் ஹக் வளர்த்துவிட்டார். அவன் சோவியத்திற்கு எதிராக விட தன் சகோதர இயக்கங்களையே அதிகமாக அழித்தான். அவனுக்கு ஐ.எஸ்.ஐ. மூலமாக 10 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் சி.ஐ.ஏ. பட்டுவாடா செய்திருக்கிறது!. இதன் பெரும்பகுதி தற்போதும் இரானில் பதுக்கப்பட்டு, அமெரிக்காவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது!. அமெரிக்க பலவீனத்தால் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானத்திலும் இலாபம் அடைந்தவர்கள் அமெரிக்காவின் போட்டியாளர்களே!. இதில் ஐ.எஸ்.ஐ., லக்ஷர் இ தொய்பா, குலுபுதீன், டுஸ்டும், நஜிபுல்லா, போன்றவர்கள் அமெரிக்க பணத்தை பிடுங்கிக் கொண்டு தங்களுடைய சொந்த அரசியலைதான் (குறிப்பாக இந்திய எதிர்ப்பு) செய்கிறார்கள். இதில் முக்கியமாக கையாளப்படுவது பாகிஸ்தானின் அணு ஆயுதம்!.
    Turkey and Russia manipulates American foreign policy weakness to further his strategy in the name of European influence says this WikiLeaks – What, though, do the thousands of documents prove? Do they really show a US which has the world on a leash? Are Washington’s embassies still self-contained power centers in their host countries?In sum, probably not. In the major crisis regions, an image emerges of a superpower that can no longer truly be certain of its allies — like in Pakistan, where the Americans are consumed by fear that the unstable nuclear power could become precisely the place where terrorists obtain dangerous nuclear material.”Part of the ISI may be out of control”?
    Shortly after Musharraf’s resignation as president in August 2008, then but the former leader Ahmed Shuja Pasha of military operations promoted to the new ISI boss. Pasha is an experienced commander, he has out numerous attacks in the tribal area. And compared to Taj He is a cosmopolitan man who not only English but also Speaks German, some years ago attended classes at the Pasha Federal Armed Forces Staff College in Hamburg.
    The army chief is the most powerful man in the country of Pakistan:
    Zardari and his people to vote “agree with America that Pakistan’s largest Threat from the growing number of militant insurgents in Cross the Mediterranean. The military and the ISI have this step, however, previously with previous mindset, they still believe that India is the Main threat and as a strategic depth in Afghanistan a potential conflict with India is needed. They provide further ostentatiously or by acquiescence, support for proxy forces, including the Haqqani group, Nazir commander, Gulbuddin Hekmatyar and Lashkar-i-Toiba, as an instrument of foreign policy, “Patterson reports in February 2009 just before a visit Kayanis in Washington. However, General Kayani described it as “open, direct and thoughtful.” Within months of taking office President Zardari to make army chief
    Kayani and ISI boss Pasha no longer hide their contempt for the new head of state. “Kayanis and Pasha’s body language was disrespectful against their own president, “shocked the then Afghan Interior Minister Hanif Atmar in spring 2009 compared to the Americans.—
    இது போலதான் இலங்கையும் ஒருவித இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. பசிலையும், மகிந்த அவர்களையும் நம்பலாம ஆனால் கோத்த பாய எந்த அளவுக்கு இராணுவத்தை கட்டுக்குள் வைத்திருக்கிறார் என்பது அன்போல்ட் ஆகும்போதுதான் தெரியும்!. இவர்கள் பாகிஸ்தான் அதிபர் “சர்தாரியாக” ஆகாமல் இருப்பார்கள் என்று நம்புவோமாக!.

    Reply
  • thurai
    thurai

    அஜீத் அவர்களே,
    போரின் போது குற்ரங்கள் புரிவதும் அவற்ரை விசாரிப்பதும் உலகத்தில் புதிதான விடயமல்ல. புலிகளின் போராட்டத்தின் போது தமிழ் மக்கள் கொல்லப்படுகின்றார்கள், தற்கொலைப்படையில் இளையோர் பலியாகின்றார்கள் என சொல்லிப்பார்த்தோம். யாராவது கேட்டீர்களா? விடுதலை வேண்டுமானால் உயிர் இழப்புகள் தவிர்க்க முடியாததொன்று இதுவே புலிகளின் மந்திரம்.

    இராசபக்ச சொல்கின்றார் புலிகளை அழிக்கவேண்டுமானால் இராணுவமும் மக்கழும் இறப்பதை தவிர்க்க முடியாததென்று.

    மேற்கூறிய இரண்டு பேரிற்கும் என்ன வித்தியாசமுண்டு.

    மேற்கூறிய இரண்டு அநியாயமான இழப்புக்களிற்கும் காரணம் புலம் பெயர்நாடுகளிலிருந்து தமிழீழம் கேட்டவர்களேயாகும். இலங்கையரின் (தமிழர்+சிங்களவர்) குருதியிலும், உயிர்களிலும் தங்கள் வாழவை உலகினில் வழமாக்கிய தமிழர் கூட்டம் எங்கு உள்ளதென்பது உமக்குத் தெரியுமா? அவர்களை தேடி முதலில் தண்டனை பெற்று கொடுப்பதற்கு முதலில் தயாராக நீங்கள் உள்ளீரா? துரை

    Reply
  • விளங்காமுடி
    விளங்காமுடி

    கட்டுரையாளர் நேரடியாகப் பார்க்காத விடையத்தை, கேள்வி ஞானத்தில் தாளிப்பு செய்ய, அதற்கேற்றால் போல் ஆதாரமற்று, ஆளுக்கொரு கதைகளைச் சொல்லி, அதையே வேதவாக்காக நம்பியபடி கருத்தாடுபவர்கள், பரமார்த்த குருவும் சீடர்களையும் நினைவுக்கு கொண்டு வருகிறார்கள்.
    ‘புலிகள்’ இல்லாததை நம்புகிறார்கள் என்று சொல்லிக் கொண்டே, ‘புலியெதிர்ப்பாளர்களும்’ அதையே செய்கிறார்கள் என்றால், அது அடிமைப்பட்ட இனத்தின் அங்கிடுதெத்தித்தனந்தான்.
    ‘புலிகள்’ ‘வருவாய்’க்குப் போராடினார்கள் என்றபடியான, தமது ‘வருவாய்’ பற்றிய ஏக்கமும், அதே வேளையில் தாம் எழுத்தில் போராடுவதும் ‘வருவாய்’ பெற்றுக் கொள்ளத்தான் என்ற ஒப்புதல் வாக்குமூலமும், பலரிடம் துல்லியமாக வெளிப்படுகிறது.

    Reply
  • பல்லி
    பல்லி

    //என்ன பல்லி, தலை இருக்கா இல்லையா என்பதில் ஜெயபாலனுக்கும் சந்தேகமா?அவர் ஏற்கெனவே தலை சரணடைந்து தான் கொல்லப்பட்டது என்று கட்டுரை எழுதினவர்.:://
    அது எனக்கு தெரியாது; ஆனாலும் நான் ஜெயபாலன் கட்டுரைகளை விரும்பி படிப்பேன்; ஆனால் அப்படி அவர் எழுதிய பல மாதங்களுக்கு பின்பு அது உன்மைதானா என்னும் கேள்வி அவர் மனதில் தோன்றியதன் காரணம் என்ன?? பி சி ஒன்றை நாம் புரிந்து கொள்ளவோ அல்லது ஏற்று கொள்ளவோ மறுக்கிறோம்; பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்பதை விட;அவர் இறந்து விட்டார் என இதுவரை இலங்கையில் மரணசான்றிதழ் வழங்கவில்லை;
    அதிரடி நாயகன் கோதய ராஜபட்ச்சா அல்லது மகிந்தாவோகூட இதுவரை எந்த இடத்திலும் பிரபாகரன் இறந்து விட்டார் என சொல்லியிருந்தால் அதை பல்லிக்கு நினைவுபடுத்துங்கள்; கருணா பிரபாவின் சடலத்தை பார்ப்பதுக்காய் அல்லது அடையாள படுத்துவதக்காய் வரவளைக்கபட்டார், அவரும் சடலத்தை பார்த்தார், ஆனால் இதுதான் பிரபாகரன் என எங்காவது சொல்லியிருந்தால் பல்லிக்கு சுட்டிகாட்டவும், ஆனால் அவர் சடலத்தை பார்த்த வீடியோ காட்சியை பலர்போல் நானும் பார்த்தேன்; அவரது முக செய்தி; அடடா இதுவா அவர் என்பது போலவே இருந்தது: அதுவே அவரது கருத்தாக இதுவரை இருக்கிறது; ஆக ஏதோ ஒரு ஊகமே நடக்கிறது; சரத்திடம் பிரபாபற்றி கேட்டால் அந்தநேரத்தில் நான் சீனா சென்றதாக சொல்லுகிறார், இந்தியா இலங்கையிடம் அதுவும் இலங்கையின் தலமை நீதியரசரிடம் பிரபாகரனின் மரண சான்றிதழ் கேட்டது பலர் அறிந்ததுதான்; ஆனால் நீதியரசர் அந்த சான்றிதழ் கொடுத்தாரா என்பது யாருக்காவது தெரிந்தால் பல்லிக்கு சொல்லுங்கோவன்; இப்படி ஆயிரம் சந்தேகம் பல்லிக்கு இருக்கும்போது ஜெயபாலனுக்கு ஒரு சின்ன சந்தேகம் வரகூடாதா?? பிரபாகரன் இருந்த காலத்தில் எதை கிழித்தார் அவர் இல்லை என நாம் ஆராட்சி செய்வதுக்கு; இன்னும் சில சந்தேகங்களுடன் தொடரும் பல்லி;;?

    Reply
  • நந்தா
    நந்தா

    டெமோகிரஸி:
    உங்கள் கதை படு தமாஷாக இருக்கிறது. கனடா 1967 ஆம் ஆண்டிலிருந்து பிரிட்டனுடனான சகல தொடர்புகளையும் துண்டித்துள்ள ஒருநாடு என்பது உங்களுக்குத் தெரியாதா? பிரிட்டனின் படிப்பு கனடாவில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

    கனடாவில் இன்று பிரிடிஷ், பிரான்சு வம்சாவழியினருக்கு அடுத்ததாக அதிகளவில் இருப்பவர்கள் சீனர்கள் என்பதும் தெரியாமல் கதைகளை விட வேண்டாம். மூன்றாவது கனடிய மொழி என்ற அந்தஸ்து சீன மொழிக்குப் பரவலாக கனடாவில் வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனும், அமெரிக்கவும் இராக் மீது “பொய்”களின் அடிப்படையில் படையெடுத்த போது கனடா படைகளை அனுப்ப முடியாது என்று விலகியிருந்த விஷயம் தெரியாதோ? கனடாவின் வெளினாட்டுக் கொள்கை பிரிட்டனில் தயாரிக்கப்படுகிறது என்று எதனை வைத்துக் கண்டு பிடித்தீர்கள் என்பது தமாஷாகத்தான் உள்ளது.

    இலங்கை கூட 1972 இல்தான் பிரிட்டனுடனான தொடர்புகளைத் துண்டித்தது. அது மாத்திரமல்ல இலங்கை கான்வென்ட் கல்விக்கு 1956இல் சாவு மணியடித்துவிட்டது. இந்தியர்களால் இன்னமும் கான்வென்ட் கனவுகளில் இருந்து விடுபட முடியவில்லை.

    கனடியர்கள் அமெரிக்கர்களுக்கும், பிரிட்டிஷ்காரர்களுக்கும் “”உறவினர்கள்”” என்பதன் அடிப்படையில் நடைபெறும் கொடுக்கல் வாங்கல்களை அடிமை-எசமான் என்ற “இந்திய” அகராதிக் கருத்துக்களை விதைக்கத் தேவையில்லை.

    ஜனாதிபதி இராஜபக்ஷ இந்தியா தனது “உறவு” என்றும் மற்றையநாடுகள் “நண்பர்கள்” என்று கூறிய கருத்தை உற்று நோக்குவது நல்லது. உண்மையும் அதுதான். தமிழ் என்ற முட்டாள்த்தனத்தின் அடிப்படையில் இந்தியாவை “எதிரி”யாக்கி இலங்கைத் தமிழர்கள் எதனையும் பெற முடியாது.

    இந்தியாவில், முக்கியமாக சினிமாக்களில், பணக்காரனாகியதும் கொழுத்தும் வெயிலில் கோட்ஸூட் அணிந்து கூத்தடிக்கும் பிரிட்டிஷ் அடிமை விசுவாசத்தைக் கனடியர்களிடம் காண முடியாது. ஏ.ஆர். ரகுமானுக்கு லண்டனில் இருந்து மியூசிக் போடுவது கவுரவமகியுள்ளது. கனடியர்கள் யாரும் அப்படி ஒரு முட்டாள்த்தனத்தை செய்வது கிடையாது.

    அமெரிக்காவில் வாழ்பவர்களுக்கு தாங்கள் “ஐரோப்பியர்கள்” அல்லது உறவினர்கள் என்ற உணர்வு உண்டு. ஆனால் இந்தியர்கள், இலங்கையர்கள், பாகிஸ்தானிகள், வங்காளிகள் ஆகியோரிடம் அந்த உணர்வு கிடையாது. இன்னமும் “எசமான்களை” தேடி அலைகிறார்கள்!

    Reply
  • Ajith
    Ajith

    துரை அவர்களே,
    சரியாக சொன்னீர்கள். போர் என்பது அழிவு , ஆனால் இந்த அழிவுக்கு நீங்கள் கூறும் காரணம் ஒரு நடுநிலையான மக்களின் உண்மையான வளர்ச்சியில் அக்கறையுள்ள ஒருவரிடம் இருந்து வருவது போல் தெரியவில்லை. ஒருபக்க சார்பான பழிவாங்கும் எண்ணம் கொண்ட ஒருவரிடம் வருவது போல் தெரிகிறது. தமிழ் ஈழம் என்று கோரியவர்கள் புலம் பெயர் தமிழர்கள் அல்ல. இந்த கோரிக்கை புலம்பெயராத தமிழர்களால் கோரபட்டது. இங்கும் நீங்கள் உண்மைகளை மறைத்து காட்ட முற்படுகிறீர்கள். சிங்களம் தான் முதல் முதலில் இலங்கை திருநாடில் தமிழ் ஈழம் என்ற கோரிக்கை எழுபதிற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கோ முன்பே இரத்த களரியில் மிதக்க விட்டவர்கள். அவற்றை பற்றி மூச்சு விடவே மறுகிரீர்களே ஏன்? நீங்கள் தேசம்நெட் தளத்தில் உங்கள் நியாயத்தை கூறுவதில் பலனில்லை? இங்கு ஜெயபாலன் தனக்கு கிடைத்த, தான் பார்த்த கண்ணொளி பற்றிய தகவலை பற்றி அறியதந்திருகிறார். அவரிடம் நாம் இந்த கண்நோளியின் உண்மை பொய்பற்றி கேட்கவில்லை. அவர் ஒரு பத்திரிகை ஆசிரியர் என்ற வகையிலும் உண்மைகளை சொல்ல கடப்பாடு உள்ளவர் என்ற வகையிலும் உண்மைகள் சரியான இடத்திற்கு சேரவேண்டும். இங்கு புலிகளை தண்டிக்கவேண்டும் என்று கருதும் உங்களுக்கு ஏன் ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டியர் அல்ல என்று விரும்புகிறீர்கள் என்பதனை விளக்க முடியுமா? உங்கள் எதிரி யார்? தமிழர்? சிங்களவர்? நீதி? புலிகள்? என்னை பொறுத்தவரை இந்த நாட்டின் பிரைச்சனைகளுக்கு அடிப்படை சிங்களைன்வதமும் சிங்கள ஆட்சியலர்க்களும்தான்? அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்? எனக்கு துரைக்கும் பிரபகரனுகும் உள்ள பிரச்னை பற்றியோ ஜெயபாலனுக்கும் பிரபகரனுகும் உள்ள பிரச்னை பற்றி அக்கறை இல்லை.

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    பிரபாகரன் சரணடைந்தார் என சொன்னால் எவரும் நம்ப மாட்டார்கள். ஆனால் பிரபாகரனும் ; அவரது குழுவும் சரணடைந்தது உண்மை. அதை ஒரு சிலர் மட்டுமே நம்பினர். அதுவும் இருக்கலாம் எனும் தோரணையில்……. இப்போது புலிகளே அது குறித்த தகவல்களைத் தேடுகிறார்கள். சாட்சிகளாக இருந்தோரும் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்றே சொல்லலாம்.

    அடுத்தபடியாக இது குறித்த தகவல்கள் சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் இருந்தே வெளியாகும். அது அவர்களுக்கும் பாதிப்பை உண்டு பண்ணலாம் எனும் சந்தேகம் உள்ளது. இது குறித்து ஒரு முக்கியமானவரிடம் விசாரித்தேன். அவர் சிரித்துக் கொண்டே சொன்னார் ” பிரபாகரன் செத்துட்டான். பிரச்சனை தீர்ந்தது. பிடித்து அடித்தார்களா? அடித்து பிடித்தார்களா? என்று ஏன் தேடுகிறாய்?” என்றார். எனக்கு அது போதும் என்றேன்.

    அடுத்து நடந்ததெல்லாம் ஒரு பட சூட்டிங். நல்லா நடித்தார்கள். புலிகள் அவர் பிரபாகரன் இல்லை என்றதும் அரசுக்கு சாதகமானது. இருக்கிறார் என்பதும் சாதகமாக இருக்கிறது. பிரபாகரனை அரச படைகள் கொன்றன எனச் சொல்ல புலிகள் முன் வர மாட்டார்கள்.

    ஆனாலும் ஒரு நாள் உண்மை வெளி வரும். அதுவரை காத்திருக்க வேண்டும். இன்றைய ஒற்றுமை பழுதுபடும் போது அனைத்தும் சங்கிலிக் கோர்வை போல வெளிவரும். mohamed nisthar கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.

    Reply
  • thurai
    thurai

    //ஒரு நடுநிலையான மக்களின் உண்மையான வளர்ச்சியில் அக்கறையுள்ள ஒருவரிடம் இருந்து வருவது போல் தெரியவில்லை. //அஜீத்
    தமிழரிலும் சிங்களவரிலும் உள்ள ஆதிக்க மோகம் கொண்டவர்கழும், மக்களின் வளர்ச்சியில் அக்கறையில்லாதவர்களால் தான், இலங்கை இந்தப்பாடு படுகிறது. இங்கு கருத்து எழுதுபவர்களால் அல்ல.

    இலங்கையில் ஆதிக்கம் செலுத்த ஆயுதமெடுத்தவர்கள். புலத்தில் மக்களின் அழிவினைப் பொருட்படுத்தாமல் போரை நடத்தியவர்கள்தான். வளர்ச்சி இல்லாவிடினும் நாம் தமிழரின் அழிவிற்கு ஒருபோதும் துணைபோகவில்லை.

    //தமிழ் ஈழம் என்று கோரியவர்கள் புலம் பெயர் தமிழர்கள் அல்ல. இந்த கோரிக்கை புலம்பெயராத தமிழர்களால் கோரபட்டது.//அஜீத்
    புலம்பெயராத தமிழர்களால் கோரப்பட்டதென எவ்வாறு கூற முடியும். வீட்டுக்கு நேரே புள்ளடி போடத்தொடங்கி வீடுகளிற்கு செல்லடி வாங்கிக் கொடுத்தவ்ர்கள் யார்? தமிழரை ஆள நினைத்தவ்ர்கள் (ஆசைப்பட்டவர்கள்) தொடங்கியதை முடிக்க முடியமல் மக்களின் தலையில் அழிவினைச் சுமத்தி விட்டு மறைந்து விட்டனர்.
    தமிழர் தம்மைதாமே ஆழ்வதற்கு எவ்வளவு தகைமையுடன் வாழ்ந்தார்கள். படித்தால் டாக்டர், என்சினியர், செய்தால் அரசாங்க உத்தியோகம், பணம் தேடுவதானால் மேல்நாட்டுப் பயணம். இந்த நிலமை இன்னமும் இலங்கைத் தமிழரிடம் மாறவில்லை. இவையெல்லாம் அடிமை வாழ்வை விரும்புவனிற்கே பொருந்தும். இவர்கள் தனிநாடு, விடுதலை, உருமை என்ற சொற்களை வாயால் சொல்லவே தகுதியற்ரவர்கள். ஆனால் அன்னிய நாட்டில் அழையா விருந்தாளியாக வாழும் தமிழரை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துவோரிற்கு வருமானம் கொடுக்கும் ஓர் நீர் ஊற்ரே தமிழீழம்.- துரை

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    நந்தா நீங்கள் ஓவராக கனேடிய பூர்வீககுடி மாதிரி பேசுகிறீர்கள். இன்னமும் கனடா மற்றும் ஆஸ்திரேலியாவின் அரசதலைமை பிரிட்டிஷ் ராணிதான், அது சம்பந்தமான பிரச்சனையும் சமீபத்தில் எழுந்தது, கியூபக் சிறிது வித்தியாசம். நீங்கள் எதிர்க்கும் இந்தியரும் கனடாவில் அதிகம். தமிழர்கள் என்ற பதத்தை அரசியலில் தமிழ்நாட்டில் சைவ தமிழ் இயக்கங்களை சேர்ந்தவர்களைத் தவிர யாரும் தூக்கிக்கொண்டு அலைவதில்லை. என்னுடைய மையப்புள்ளி வேறு. அமெரிக்க கண்டத்தில் “மெல்டிங் பாட்(கலாச்சார)” என்ற பரிசோதனை வெற்றியளிக்கவில்லை. நீங்கள் கூறிய மாதிரி சீனர்கள், இந்தியர்கள், தென் அமெரிக்கர்கள், தங்களை அமெரிக்க கண்டத்தவராக காட்டாமல், அமெரிக்க கொள்கையை செல்வாக்கு செலுத்துகின்றனர். கனடா இவ்வாறில்லாமல் வித்தியாசமான ஜெண்டில்மேனாக காட்ட முயற்சிகிறது ஆனால் அது கோமாளித்தனமாக ஆகிறது அதன் பிரதிபலிப்புதான் உங்களைப் போன்ற “கனடிய பூர்வீகக் குடிகள்”!. இதன் விளைவு அவைகளை உருவாக்கி மற்ற இனத்தவருக்கு புகலிடம் தந்த “ஐரோப்பியர்களை” தர்மசங்கடத்திற்கு ஆளாக்கியுள்ளது!. இதன் விளைவு ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானத்திலும் எதிர்வு கூறமுடியாத அளவுக்கு நிகழ்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது!, அவ்வளவுதான் ஆளைவிடுங்கள், மேலே உள்ள தலைப்பை பற்றி பேசுங்கள்!.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    சரணடைந்த பிரபாகரனின் குடும்பத்தினருக்கு நடந்த சித்திரவதைகள் பற்றிய 32 பக்க ஆவணம் தயாரிக்கப்பட்டு பேராசிரியர் ஹூலின் சகோதரர் விரிவுரையாளர் ராஜன் ஹூலினால் மனித உரிமை அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஒருவருடத்துக்கு முன்னர் கேள்விப்பட்டேன்.ிவ் ஆவணம் ஜெயபாலன் குறிப்பிடும் வீடியோவின் அடிப்படையில் அமைந்ததாக இருக்கலாம். இவ் ஆவணம் அமெரிக்க அரசிடமும் உள்ளதாகவும் அதன் அடிப்படையிலேயே அமெரிக்கா வந்த கோத்தபாயா, சரத் பொன்சேகா ஆகியோர் விசாரனைக்குட்படுத்தப்பட்டதாகவும் அறிந்தேன்.

    Reply
  • நந்தா
    நந்தா

    இந்தியாவிலும் ஒரு இந்திய ஜனாதிபதி இருக்கிறார். அவரால் எதுவும் செய்ய முடியாது. அதேநிலைதான் கனடாவில் மகாராணிக்கும் என்பது தெரியாமல் “பூர்வீகக்” குடிக் கதைகளை எடுத்துவிடுகிறார் டெமொகிரசி.

    அது மாத்திரமல்ல “நீங்கள் எதிர்க்கும் இந்தியரும்” என்று ஒரு பதம் உபயோகப்படுத்தியுள்ளார். அது என்ன? எயர் இந்திய விமானத்துக்கு குண்டு வைத்த சீக்கியர்களா?

    கனடியப் பூர்வீக குடிகள் பற்றிய சிந்தனை இன்னமும் தமாஷயிருக்குது. கனடா போன்ற 35 மில்லியன் சனத்தொகை கொண்டநாடு அரசியல் அரசியல் அமைப்பில் ஐ.நா.வின் மனித உரிமை சாசனத்தையும் சேர்த்து சட்டமாக்கியுள்ள ஒருநாடு. இந்தியா ஜனனாயகம் பற்றி எவ்வளவு அளந்தாலும் ஐ.நா. மனித உரிமைச் சாசனத்தின் ஒரு துளியைக் கூடநாட்டின் சட்டமாக்காமல் உள்ளது.

    மெல்ட்டிங் பொட் பரிசோதனை அமெரிக்காவுக்கு மாத்திரமே ஒழிய அமெரிக்க கண்டத்துக்கு அல்ல. அது அமெரிக்காவில் வெற்றி பெற்றுள்ள விஷயம். கனடா இந்த மெல்டிங் பொட் விளையாட்டை ஏற்றுக் கொள்ளாதநாடு. ஐ.நா.வின் மனித உரிமை சாசனத்துக்கு எதிரானது இந்த மெல்டிங் பொட் கொள்கை.

    இந்திய அரசியலின் கோமாளித் தனங்களை ஒப்பிடும் பொழுது கனடா அப்படியான கூத்துக்களை நடத்தவில்லை என்பது நல்ல விஷயம்.

    விஷயம் தெரியாமல் “அள்ளி” விட்டு என்ன சாதிக்க போகிறீர்கள்? எம் ஜீ ஆர் வாழ்க! சோனியாஜி சிந்தாபாத்! மாதிரி கோஷங்கள் கனடாவில் அறிவு கெட்டு யாரும் போடுவதில்லை!

    Reply
  • rohan
    rohan

    //அந்த வீடியோக்களை இராணுவத்தினர் எடுத்து சனல்4 க்கு கொடுத்திருந்தால் அந்த இராணுவத்த்னருக்குக் கண்டிப்பாக கொலை செய்யும் இராணுவத்தினரின் பெயர்களி எந்தப் படைப் பிரிவு என்பன தெரிந்தே இருக்கும். அதனை வெளியில் சொல்லுவதில் (இவ்வளவும் செய்த பிறகும்) என்ன பிரச்சனை? இந்த வீடியோவை லண்டனுக்குக் கொண்டு வந்து இப்படி வாலும் தலையுமில்லாமல் புரளி கிளப்புபவர்கள் இராணுவத்தினரின் பெயர்களை வெளியிடட்டும்.//
    கவனம் ஏதும் இல்லாமல் இப்படி லொஜிக்கல் ஆராய்ச்சி செய்கிறோம். ஒரு கவனமும் இல்லாமல் – கட்டுப்பாடும் இல்லாமல் – கண்டபடி படங்கள் எடுக்கப்பட்டன. பிரபாகரனின் சடலம் என்று காட்டப்பட்ட உடலைச் சுற்றி எத்தனை மொபைல் கமெராக்கள் நின்றன!

    யார் – எவர் – என்று இல்லாது இந்தப் படங்கள் உலகம் சுற்றின. இவ்வாறு கொப்புக் கொப்பாய்த் தாவி வந்த் படங்களே இப்போது சரத் பொன்சேக ஆதரவுக் குழுக்கள் மூலமும் மனித உரிமைவாதிகள் மூலமும் வெளிவருகின்றன. இப்படங்களை அரசும் இராணுவமும் அவரசப்பட்டுத் தேடி அழிக்க முயன்றமையையும் விடயம் அறிந்தோர் அறிவர்.

    Reply
  • BC
    BC

    பல்லி, பிரபாகரன் இறப்பு பற்றி உங்கள் சந்தேகத்தை என்னால் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது. நீங்கள் சொன்ன காரணங்கள் பல தலைவர் வருவார் என்று புலி ஆட்கள் சொல்லும் காரணங்கள் தான்.ஜெயபாலனுக்கும் இந்த விடயத்தில் சந்தேகம் இல்லை என்று அவர் எழுதியதை வைத்து நம்புகிறேன். முன்பு ஒருவர் குற்றம் சாட்டினார் ஜெயபாலன் தான் பல்லி என்ற பெயரில் கருத்து எழுதுவதாக, அப்படி இல்லை என்றும் நம்புகிறேன்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //பல்லி, பிரபாகரன் இறப்பு பற்றி உங்கள் சந்தேகத்தை என்னால் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது// எனக்கும் தான் என்னை புரிந்துகொள்ள முடியவில்லை; அது என் தவறா அல்லது நாட்டு நடப்பா என்பதையும் புரிய முடியாமல் தவிக்கிறேன்;

    // நீங்கள் சொன்ன காரணங்கள் பல தலைவர் வருவார் // இல்லை வடிவாக கவனிக்கவும் வந்தால் என்ன வராவிட்டால் என்பதே என் கருத்து;

    //.ஜெயபாலனுக்கும் இந்த விடயத்தில் சந்தேகம் இல்லை என்று அவர் எழுதியதை வைத்து நம்புகிறேன். // அதேபோல் அவர் எழுத்தே அவரரும் சந்தேகபடுவதாக எனக்குபட்டது; இதுதான் பார்வைகள் பலவிதம் என்பதோ?

    ://முன்பு ஒருவர் குற்றம் சாட்டினார் ஜெயபாலன் தான் பல்லி என்ற// எவர் அவர்??

    //அப்படி இல்லை என்றும் நம்புகிறேன்.// பாருங்க பி சி பல்லிக்கும் ஜெயபாலனுக்குமே சமபந்தம் இல்லை என்பது கூட உங்கள் சந்தேகம்தானே தவிர முடிவல்ல; அப்படி இருக்கும் போது தலை??

    Reply
  • BC
    BC

    //எவர் அவர்?? //
    புதியவர்கள் என்று நினைக்கிறேன்.
    புலிகள் அவர் இருக்கிறார் என்பது பெரிய பிஸ்னஸ் நோக்கத்தில்.
    //பல்லிக்கும் ஜெயபாலனுக்குமே சமபந்தம் இல்லை என்பது கூட உங்கள் சந்தேகம்தானே தவிர முடிவல்ல//
    இதில் இருந்து நான் அறிந்து கொள்வது ஒரு முடிவான, தெளிவாக தெரியும் விடயத்தை கூட பல்லி சந்தேகமாக தான் பார்ப்பார்.

    Reply
  • நந்தா
    நந்தா

    //கவனம் ஏதும் இல்லாமல் இப்படி லொஜிக்கல் ஆராய்ச்சி செய்கிறோம். ஒரு கவனமும் இல்லாமல் – கட்டுப்பாடும் இல்லாமல் – கண்டபடி படங்கள் எடுக்கப்பட்டன. பிரபாகரனின் சடலம் என்று காட்டப்பட்ட உடலைச் சுற்றி எத்தனை மொபைல் கமெராக்கள் நின்றன! //

    இதென்ன விதண்டா வாதம்? இராணுவத்தினரெல்லாம் கமராவுடன் திரிந்தார்களா அல்லது துப்பாக்கிகளுடன் இருந்தார்களா?

    ஊடக சுதந்திரம் இல்லை, பத்திரிகை நிருபர்கள் அனுமதிக்கப்படவில்லை, இராணுவக் கட்டுப்பாடு கர்ணகடூரம் என்றெல்லாம் எழுதியவர்கள் இன்று “கண்டபடி” கட்டுப்பாடு இல்லாமல் படம் எடுத்தார்கள் என்ற கதையை எப்படி நம்புவது? புலிக்கு ஆதரவான “கப்சாக்கள்” என்றால் தமிழர்கள் எல்லோரும் கேள்வியே கேள்க்காமல் “சரிதான் சாமி” என்று தலயாட்ட வேண்டும் என்ற எதிர் பார்ப்பா?

    இராணுவத்தினருக்கு “செல்போன்” பாவிக்க அனுமதியளிக்கப்பட்டதாக எந்த தகவலும் கிடையாது. அப்படியிருக்க இந்த செல்போன் கமரா கதை அவியலிலும் அவியல். புலிகளுக்கு ஆதராவான கருத்தை தமிழர்கள் தொண்டையில் படாமலேயே விழுங்கி விட்டு கை தட்டு என்று எதிர்பார்க்கிறார்கள்!

    இந்த புலி வால்கள் இப்பொழுது சாதிக்க விரும்புவது என்னவென்றால் “வெள்ளையனுக்கே விளங்கிவிட்டது”,நீ என்ன கேள்வி கேள்க்கிறாய் என்பதுதான்.

    //பிரபாகரனின் சடலம் என்று காட்டப்பட்ட உடலைச் சுற்றி //
    அதாவது அந்த சடலம் பிரபாகரனுடையது அல்ல என்று சாதிக்க முனைவது புரிகிறது. கோபாலசாமியுடனும்,நக்கீரனுடனும் சேர்ந்து பத்திரிகை நடத்த ரோகன் தகுதி பெறுகிறார்!

    Reply
  • rajeeve
    rajeeve

    இறுதியாகவும் இரண்டு குழந்தைகளை அனுப்பி தற்கோலைக் குண்டுகளை வெடிக்கவைத்த பின்பும் இராணுவம் மிக அண்மையில் சரணடையவே கேட்டுக்கொண்டிருந்தது பின்னர் புலிகள் தம்மிடையே குழம்பிப்போயிருந்து அவர்களுக்குள் சில சர்சரவுகளின் மத்தியிலே பிரபாகரன் முதலில் இரண்டு பேரை சரணடைய முன்வருவாதாக தெரிவிக்கிறார் இதனால் இராணுவம் இவர்களுக்கு வெள்ள நிற உடுப்புக்கள் தரப்படும் என்றும் அவற்றையே உடுத்து வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்க்கு இணங்கவே இரண்டு பேர் சரணடைந்தனர் சரணடையும்போது வெள்ளைநிற உடுப்புக்களை கொண்டு போய்கொடுத்தவர் இராணுவ வீரராவார் இரண்டுபேர்சரணடைந்ததும் அவர்களை கொற இழுவையில் இழுத்துக் கொண்டே உள்ளே சென்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

    இதன் பின்னர் சரணடைய வர இருந்தவர்கள் எல்லோரும் வெள்ளை நிற உடுப்புக்கள் உடுத்தபடியே தான் இருந்தனர் இதை நீங்கள் இவர்கள் இறக்கும் வரையிலும் அவர்களது உடுப்புக்கள் வெள்ளளையாகவே இருப்பதை அவதானிக்கலாம் கொல்ப்பட்ட பெண்கள் உட்பட வெள்ளை உடுப்புக்களடன் இருப்பதையும் அவதானிக்கலாம் இந்த சரணடைந்தவர்கள் பிரபாகரன் பற்றிய முடிவு எடுக்கப்படும் வரையில் உணவு கொடுத்து முள்ளிவாய்க்காலிலேயே வைத்திருக்கப்படனர். கொல்ப்பட்டவர்களில் முக்கிய தலைவரின் மனைவியர்கள் பிள்ளைகள் எல்லோரும்மாவர் இதனிடையே சரணடைந்து வெள்ளைநிய தேசிய உடையுடன் போன தலைவர் தன்னடன் ஒரு செற் இராணுவ உடுப்பும் கொண்டு போயிருந்தாராம் இந்த இராணவ உடுப்பையே பின்னர் இவர் கொல்லப்பட்டபோது அணிவிக்ப்பட்டிருந்ததை காணலாம் இவை எல்லாம் கடைசியில் நடைபெற்றவை ஆனால் பிரபாகரன் சரணடைந்ததும் இழுத்துப்போய் காலாலும் கையாலும் நிறையவே சாத்துபடி போட்டு விடடடெ வைத்திருந்தனர் இது அவரத மனைவி மக்களுக்கு முன்பாகவே நடைபெற்றதாம் இவருடன் சரணடைந்த அத்தனை பேருக்கும் இந்த நிகழ்வை நேரடியாக பாரத்துள்ளனர்
    பிரபாகரனை மயக்க மருந்து கொண்ட ஊசி போட்டு வேறு காரணங்களை சொல்லி பிரபாகரனின் உடலில் உள் பிரச்சினைகளை காரணமாக சொல்லியே இந்த ஊசி ஏற்றப்பட்டதாம் இதன்பின்னர் பல மணித்தியாலங்களாக பிரபாகரனுக்கு ஒன்றும் தெரியாமலே இராணுவத்தினர் பிரபாகரனை தூக்கி திரிந்தனராம் இதன்போத பல சர்வதேச – இந்திய உடகவியலாளர்கள் படம் எடுத்துள்ளனர் இதன் பின்னரே பிரபாகரன் பனாகொட முகாமில் இறைச்சிக்கடையில் விழித்தெழுந்தார் விழித்தெழுந்த சில மணி நேரங்களக்குள் இவர்பற்றிய முடிவுகள் சர்வதேச நாடகளும் இலங்கை இந்தியா உடன்பட்டுக்கொண்டுவிட்டனர்.

    பின்னர் பிரபாகரன் மீண்டும் முள்ளிவாய்காலுக்கு கொண்டுவரப்பட்டு இவரது முன்னிலையில் இவருடன் சரணடைந்தவர்கள் கொல்ப்பட்டது இந்த வீடியோக்களே நீங்கள் காணும் பின்பக்கத்தால் கொல்ப்படுபவைகளாகும் இதன்பின்னரே பிரபாகரன் வெட்டியும் கொத்தியும் கொலை கொலைசெய்ப்படுகிறார் இதற்க்கு முன்பே இவர் சேறு பூசப்பட்டும் காட்டுக்குள் ஒடித்திரிந்து விளையாட்டுக்கள் காட்டும்படி இராணுவம் கேட்க பிரபாகரன் செய்துள்ளார்.

    கழுத்து வெட்டப்படதாலேயே கழுத்தை திருப்பி திருப்பி வைத்து படங்கள் எடுக்க காட்டியுள்னர் இந்த காயங்கள் மறைக்கப்பட்டே படங்கள் எடுக்க அனுமதிக்ப்பட்டனர்

    இது சரணடைந்த கோழைகளின் வரலாறு.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /இதன் பின்னரே பிரபாகரன் பனாகொட முகாமில் இறைச்சிக்கடையில் விழித்தெழுந்தார் விழித்தெழுந்த சில மணி நேரங்களக்குள் இவர்பற்றிய முடிவுகள் சர்வதேச நாடகளும் இலங்கை இந்தியா உடன்பட்டுக்கொண்டுவிட்டனர்./–rajeeve on December 12, 2010 4:03 am.
    இந்த “முடிவுக்கு” இந்தியாவும்,”சர்வதேச நாடுகளும்” எதற்காக உடன்பட்டனர்!.
    இது வே.பிரபாகரன் மற்றும் விடுதலை புலிகள்? அமைப்பிற்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவா?,இலங்கைத்தமிழர்களின் “தத்து பித்துகளுக்கு” எதிரான முடிவா,ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் எதிரான முடிவா? அல்லது சர்வதேச நாடுகளின் தெற்காசிய கொள்கைகளுக்கு அமைவாக எடுக்கப்பட்ட முடிவா என்பதை தெளிவாக யாராவது விளக்க வேண்டும்!
    இந்த முடிவுகளிலிருந்து அழிந்தது போக மற்றவர்கள் தாங்கள் “மாறானவர்கள்” என்று வருங்காலத்தில் நிரூபித்துக் காட்டினால்,அடுத்த அழிவுகளிலிருந்து “தப்பித்து” காட்டினால்,இதனால் முதலில் மகிழ்ச்சியடையும் நபர் நானாகத்தான் இருப்பேன்!.

    Reply
  • மாயா
    மாயா

    //ஜெயபாலன் தான் பல்லி என்ற பெயரில் கருத்து எழுதுவதாக, அப்படி இல்லை என்றும் நம்புகிறேன்.//

    ஜெயபாலன் அல்ல பல்லி. அதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். எனக்கு ஒருவரை நன்கு தெரியும். இருவரோடும் தொலைபேசியில் பேசியுள்ளேன். பல்லி இயக்கத்தில் இருந்தாரோ இல்லையோ ; பல்லி ஆரம்ப காலம் தொட்டு பலரோடு இணைப்பில் இருந்துள்ளார். எனவே பல்லியோடு பேசும் போது அதை என்னால் உணர முடிந்தது. பல்லியின் குரலும் ஜெயபாலன் குரலும் வாழும் நாடுகளும் வெவ்வேறானவை. எனக்கும் இதே சந்தேகம் இருந்தது. பல்லியின் தொடர்பு கிடைத்த பின் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். பல்லி ; பல்லியாக இருப்பதில் எனக்கு விருப்பம். அதுதான் பல்லியின் பலம்.

    Reply
  • மாயா
    மாயா

    //இராணுவத்தினருக்கு “செல்போன்” பாவிக்க அனுமதியளிக்கப்பட்டதாக எந்த தகவலும் கிடையாது. அப்படியிருக்க இந்த செல்போன் கமரா கதை அவியலிலும் அவியல்.//nantha

    இறுதி யுத்த களத்தில் இருந்த இராணுவத்தினர் அனைவரிடமும் கைத் தொலைபேசிகள் கொடுக்கப்பட்டன. இதற்கு சில காரணங்கள் இருந்தன. ஒன்று வயர்லெசினால் சில பிரச்சனைகள் உண்டு. ஒலி மற்றும் ஒட்டுக் கேட்கலாம் என்பதும் ; அது ஒரு குழுவுக்கு ஒன்றாக இருக்கும். முன்னர் போல இராணுவம் பெரிய குழுக்களாக இங்கே தாக்குதல்களை நடத்தவில்லை. 2 முதல் 4-5 என குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தனர். எனவே அனைவரிடமும் கைத் தொலைபேசிகளை பாவிப்பது தப்பும் ஒருவருக்கும் தனது தகவலை பரிமாற முடியும். அதோடு தாங்கள் நிற்கும் இடத்தில் உள்ள நிலையை படமெடுத்து உடனடியாக அனுப்பவும் இது சாத்தியமாக இருந்தது. அதுவே இராணுவ தேவையாகவும் இருந்தது.

    மிக முக்கியமான விடயம் ; சரத் பொண்சேகாவை எந்த நேரத்திலும் ; என்ன பிரச்சனையானாலும் இராணுவீரர்கள் தொடர்பு கொள்ளச் சொல்லியிருந்தார். கடைசி யுத்தம் முடிவுற்ற கடைசி நிமிடங்களில் எவரையும் தூங்க வேண்டாம் என அறிவுறுத்தினார். அனைத்து இராணுவத்தினர் கைகளிலும் கைத் தொலைபேசிகள் கொடுக்கப்பட்டு இருந்தன.

    Reply
  • rohan
    rohan

    //ஊடக சுதந்திரம் இல்லை, பத்திரிகை நிருபர்கள் அனுமதிக்கப்படவில்லை, இராணுவக் கட்டுப்பாடு கர்ணகடூரம் என்றெல்லாம் எழுதியவர்கள் இன்று “கண்டபடி” கட்டுப்பாடு இல்லாமல் படம் எடுத்தார்கள் என்ற கதையை எப்படி நம்புவது? புலிக்கு ஆதரவான “கப்சாக்கள்” என்றால் தமிழர்கள் எல்லோரும் கேள்வியே கேள்க்காமல் “சரிதான் சாமி” என்று தலயாட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பா?//

    “இதன்பின்னர் பல மணித்தியாலங்களாக பிரபாகரனுக்கு ஒன்றும் தெரியாமலே இராணுவத்தினர் பிரபாகரனை தூக்கி திரிந்தனராம் இதன்போத பல சர்வதேச – இந்திய உடகவியலாளர்கள் படம் எடுத்துள்ளனர்” என்று ரஜீவ் எழுதியுள்ளார். விடயம் தெரிந்தவராக அவர் தெரிகிறார் – விசாரித்துப் பார்க்கவும்.

    // இராணுவத்தினருக்கு “செல்போன்” பாவிக்க அனுமதியளிக்கப்பட்டதாக எந்த தகவலும் கிடையாது. அப்படியிருக்க இந்த செல்போன் கமரா கதை அவியலிலும் அவியல். புலிகளுக்கு ஆதராவான கருத்தை தமிழர்கள் தொண்டையில் படாமலேயே விழுங்கி விட்டு கை தட்டு என்று எதிர்பார்க்கிறார்கள்!//
    ஜே ஆர் தோளுக்கு மேலால் பார்த்தது போல மாண்புமிகு கோத்தபாயா தோளுக்கு மேலால் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். தவறியிருந்தால், இந்த இரு இணைப்புகளும் உடலைச் சுற்றி மொபைல் கமெராக்கள் நிற்பதைக் காட்டும்.

    -http://www.daylife.com/photo/0eJM1HM0Ll05a
    -http://www.asiantribune.com/node/22187

    Reply
  • neena
    neena

    “இலங்கையின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பொறுத்தே தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் தமது நடவடிக்கைகளை ஆரம்பிப்பார்கள் என்பதை கூறமுடியும் என தெரிவித்துள்ள இந்திய பாதுகாப்பு செயலாளர் சிவசங்கர் மேனன்…”

    Based on which kindly analyze the above article. Thank you.

    Reply
  • rohan
    rohan

    //தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனது இறுதி நிமிடங்கள் அடங்கிய ஒளிப்பதிவு அதன் ஆதரவு அமைப்புகளுக்கோ அல்லது சனல் 4 தொலைக்காட்சிக்கோ ஏற்கனவே கிடைக்கவில்லையா அல்லது கிடைத்தும் அவர்கள் அதனை ஒளிபரப்பவில்லையா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.//
    ஆனால் இப் படத்திலுள்ள தொலைக்காட்சிப் படப்பிடிப்பாளர் யார்? அவர் இத்தனை நெருக்கமாக இருந்து எடுத்த படத்துக்கு என்ன நடந்தது?

    -http://www.daylife.com/photo/09TL23zgjT5Ct

    Reply
  • நந்தா
    நந்தா

    மாயா:
    அப்படியாயின் அந்த ஆயிரக் கணக்கான செல்போன் களும் கமராவுடன் கூடியவை என்பதும் அவற்றின் நெட்வேர்க் கன்ட்ரோல் அல்லது ரிசெப்ஷன் டவர் அருகில் எங்காவது இருந்திருக்க வேண்டும். தவிர இந்த செல்போன்களின் அலை வரிசைகள் வித்தியாசமானவையாகவும், மற்றவர்களால் டீகோட் பண்ண முடியாதவையாகவும் இருந்திருக்க வேண்டும்.

    அப்படிக் கமராவுடன் கூடிய செல்போன் களினால் இராணுவ வீரர்கள் எடுத்த ‘வேறு” படங்கள் அல்லது வீடியோக்கள் இதுவரயில் எங்கும் வெளியானதாகத் தெரியவில்லை.

    கோதபாய இராணுவத்தில் “சிக்னல்” கோர்ப்சில் அதிகாரியாக இருந்தவர். பின்னர் அமெரிக்காவில் கம்பியுட்டர் கம்யுனிகேஷன்சில் அறிவும் உள்ளவர். பத்திரிகை நிருபர்கள் போல அந்த கமராவுடன் கூடிய செல்போன்களைப் பாவித்திருக்க சாத்தியங்கள் இல்லை என்றே கருதுகிறேன்.

    Reply
  • நந்தா
    நந்தா

    //இதன்பின்னர் பல மணித்தியாலங்களாக பிரபாகரனுக்கு ஒன்றும் தெரியாமலே இராணுவத்தினர் பிரபாகரனை தூக்கி திரிந்தனராம் இதன்போத பல சர்வதேச – இந்திய உடகவியலாளர்கள் படம் எடுத்துள்ளனர்” என்று ரஜீவ் எழுதியுள்ளார். விடயம் தெரிந்தவராக அவர் தெரிகிறார் – விசாரித்துப் பார்க்கவும். //
    அப்போ பிரபாகரன் தொலைந்தார் என்று நம்புகிறீர்கள். அந்த சர்வதேச – இந்திய ஊடகவியலாளர்கள் இப்படியான ஒர் “கொட்”நியூஸை இன்னமும் வெளியே விடாமல் வைத்திருப்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்?

    அவர்கள் அனைவருக்கும் கோதபாயா லட்சக் கணக்கில் கொடுத்து அந்த வீடியோக்களை “அமுக்கி” விட்டதாக புதிய “புகை” ஒன்றை விடப் போகிறீர்களா?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….அவர்கள் அனைவருக்கும் கோதபாயா லட்சக் கணக்கில் கொடுத்து அந்த வீடியோக்களை “அமுக்கி” விட்டதாக புதிய “புகை” ஒன்றை விடப் போகிறீர்களா?….//
    ஒன்று புதிதாக புகை விடத்தேவையில்லை. அதனை ஸ்ரீலங்காவே செய்து விட்டது என்கின்ற உண்மை தெரியவில்லை நந்தாவுக்கு. முதலாவது வீடியோ வெளியாகி சிக்கல் பட்டுக்கொண்டிருந்த வேளை ரூபவாஹினியில் உள்ள அத்தனை வீடியோக்களும் அமைச்சரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது செய்தியாக வந்ததே!

    Reply
  • நந்தா
    நந்தா

    ரூபவாகினி பிரச்சனை வேறு. இந்திய பத்திரிகையாளர்களின் பிரச்சனை வேறு என்பது இன்னமும் தெரியாமல் இருப்பவர்களுக்கு “புகைக்க” ஏதாவது கிடைக்குமா என்று அலைவது மாத்திரம் புரிகிறது.

    Reply
  • rohan
    rohan

    //ஒன்று புதிதாக புகை விடத்தேவையில்லை. அதனை ஸ்ரீலங்காவே செய்து விட்டது என்கின்ற உண்மை தெரியவில்லை நந்தாவுக்கு. முதலாவது வீடியோ வெளியாகி சிக்கல் பட்டுக்கொண்டிருந்த வேளை ரூபவாஹினியில் உள்ள அத்தனை வீடியோக்களும் அமைச்சரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது செய்தியாக வந்ததே!//santhan
    எல்லாப் படங்களும் என்று தான் செய்தி வந்தது. ஊரெல்லாம் இப்படி உதிரிப் படங்கள் உலா வந்தமை எல்லோருக்கும் தெரிந்திருந்தது (ஓரிருவரைத் தவிர?)

    // பத்திரிகை நிருபர்கள் போல அந்த கமராவுடன் கூடிய செல்போன்களைப் பாவித்திருக்க சாத்தியங்கள் இல்லை என்றே கருதுகிறேன்’.//
    தகவல் தெரிந்து பேசுபவர் சிலர் – தமக்குத் தெரிந்தது மட்டுமே தகவல் என அடம் பிடிப்போர் வேறு சிலர்.

    “ஆனால் இப் படத்திலுள்ள தொலைக்காட்சிப் படப்பிடிப்பாளர் யார்? அவர் இத்தனை நெருக்கமாக இருந்து எடுத்த படத்துக்கு என்ன நடந்தது?” என்ற எனது வினா பதில் அற்று நிற்கிறது.-http://www.daylife.com/photo/09TL23zgjT5Ct

    Reply
  • santhanam
    santhanam

    பிரபாகரனின் அகங்காரமும் ஈகோவும் தான் அவரது இந்த நிலைக்குகாரணம் அன்னியசக்திகளின் உளவு நிறுவனங்களின் போட்டி நிலையே அவரது இரண்டும் கெட்டான் நிலை இதற்குள்ளும் தமிழ்மக்கள் பலிகடாக்கள் ஆக்கபட்டுள்ளனர் பிரபாகரன் 16 திகதி சர்வதேசசக்திகளின் கையில் அகப்பட்டுவிட்டார்……..அதேசக்திகள்தான் உயிருடன் உள்ளார் என்ற கற்பனையும் இறந்துவிட்டார் என்ற யதார்த்தையும் வெளிபடுத்தினர் இதில் என்ன வேடிக்கையென்றால் உடலைகாட்டிதான் இதையும் செய்தார்கள் தமிழனின் முட்டாள்தனம்தான் இவ்வளவு ஆராய்வுக்கும் காரணம்.

    Reply
  • மாயா
    மாயா

    நந்தா; இராணுவம் முன்னேறும் போது கனரக வாகனங்களில் பொருத்தப்பட்ட கொமினிகேசன் அண்டனாக்கள் பொருத்தப்பட்டிருந்துள்ளன. முன்னேறும் படைகளுக்கு பின்னால் அவை நகர்த்தப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு:

    http://www.eurocriticsmagazine.com/wp-content/uploads/2008/05/skynetsystems.jpg

    -http://www.zimbio.com/Science+and+Technology+Policy/articles/17/Skynet+Military+Satellite+Launches

    Rupawahini தொலைக் காட்சி உடனுக்குடன் போரின் நிலவரங்களை கொண்டு வந்தன என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.
    Phone news from vanni:
    -http://www.youtube.com/watch?v=XXm0vORGtg8&feature=related

    இவற்றுக்கு நெட்வேர்க் டவர்கள் இருந்துள்ளன. குறிப்பாக வன்னிப் போர் முனையில் இந்தியா – சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பாரிய தொழில் நுட்ப உதவிகளை செய்துள்ளன. சட்லைட் மூலமாக புலிகளதும், மக்களதும் செயல்பாடுகளை வேண்டியவர்கள் அவதானித்துள்ளார்கள்.

    மகிந்த எங்காவது செல்லும் போது ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு கொமினிகேசன்களை ஜாம் பண்ணும் சக்தியோடு ஒரு வாகனம் செல்லும்; அது அப்பகுதியில் உள்ள மொபைல் போண்களை செயலிழக்க வைக்கும். ஆனால் அவர்களது மொபைல் போண்கள் மாத்திரம் வேலை செய்யும். இது போன்ற உத்தியை அல்லது அலைவரிசையை கையாண்டிருக்கலாம்.

    Reply
  • rohan
    rohan

    //இவற்றுக்கு நெட்வேர்க் டவர்கள் இருந்துள்ளன. குறிப்பாக வன்னிப் போர் முனையில் இந்தியா – சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பாரிய தொழில் நுட்ப உதவிகளை செய்துள்ளன. சட்லைட் மூலமாக புலிகளதும், மக்களதும் செயல்பாடுகளை வேண்டியவர்கள் அவதானித்துள்ளார்கள்.//
    போர்க் குற்றம் என்பதன் வரவிலக்கணத்திலேயே சிக்கல் இருக்கிறது.

    ஆனாலும், இப்போதைய வரைவிலக்கணப்படி விசாரணைகள் நடந்தால் கோத்தபாய, சவீந்திர சில்வா, கமல் குணரத்ன, விஜய நம்பியார் என்று பெரிய ஒரு பட்டாளமே கம்பி எண்ணும் – அதனால் இந்த நிலைமைக்கே இடம் இல்லை!

    Reply
  • நந்தா
    நந்தா

    தொலைபேசி அன்டனாக்களுக்கும், தொலைக் காட்சி அன்டனக்களுக்கும் வித்தியாசம் உண்டு.

    ஆயினும் இங்கு கருத்து தெரிவிப்பவர்களின் கருத்துக்களின்படி எந்த செல்போனில் இருந்து படங்களை அனுப்பினாலும் அது எல்லா செல்போன் நெட்வேர்க்குகளுக்கும் போகும் சாத்தியம் கிடையாது. இராணுவத்தினரின் செல்போன்கள் கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட நெட்வேர்க்கினூடாகவே செயல் பட்டிருக்கும். அத்துடன் எந்த இராணுவ வீரனின் கையில் உள்ள செல்போனூடாக தகவல்கள் சென்றிருப்பினும் அவை பதிவு செய்யப்படும். அத்துடன் அவை ஒரு குறிப்பிட்ட “ரேஞ்ஞினுள்” மாத்திரமே செயல்பட்டிருக்கும். செல்போன்கள் துப்பாக்கிகள் மாதிரி கொடுத்துள்ளார்கள் என்பதை ஏற்கமுடியவில்லை.
    போர் குற்றம் என்று விசாரணை தொடங்கினால் டோனி ப்ளையரும், புஷ்ஷும்தான் முதலில் கூண்டில்நிற்க வேண்டிநேரிடும். ஐ.நா. மூலம் அதனை செய்து இராஜபக்ஷவை கூண்டில் ஏற்றலாம் என்று புலிவால்கள் ஆகாசக் கோட்டை கட்டி அதனைக் காட்டி வழக்கம் போல சில்லறை வசூலிக்கலாமே ஒழிய வேறு ஒன்றும் செய்ய முடியாது.

    புலிகளின் வெள்ளை எசமானர்கள் துணிவிருந்தால் இலங்கைக்கெதிராக ஐ.நா.வில் தீமானத்தைக் கொண்டு வரட்டும் முதலில். பின்னர் அந்த தீர்மானத்துக்கு நடக்கும் கதியை பார்த்து சிரிக்கலாம்.

    Reply
  • rohan
    rohan

    //தொலைபேசி அன்டனாக்களுக்கும், தொலைக் காட்சி அன்டனக்களுக்கும் வித்தியாசம் உண்டு. ஆயினும் இங்கு கருத்து தெரிவிப்பவர்களின் கருத்துக்களின்படி எந்த செல்போனில் இருந்து படங்களை அனுப்பினாலும் அது எல்லா செல்போன் நெட்வேர்க்குகளுக்கும் போகும் சாத்தியம் கிடையாது.//
    எடுத்த படங்கள் வந்திருப்பது நிஜம். கட்டுப்பாட்டுடன் நடப்பதை உறுதி செய்யத் தவறியதன் விளைவு இது. நேரடியாக எல்லோருக்கும் அனுப்பலாமோ என்னவோ தரவிறக்கம் செய்வது சின்ன வேலை. நான் இணைத்திருக்கும் படங்களிலெல்லாம் படையினர் வரிசை வரிசையாக நின்று படம் பிடிக்கின்றனர்.

    போர்க் குற்றம் எல்லாம் வேண்டாம். தொகை தொகையாய்க் கொல்லப்பட்ட அப்பவித் தமிழர்களுக்கு நடந்த கொடுமைக்கு யார் பதில் சொல்வது? எல்லாவற்றையும் புலிமேல் போடுவது சிலருக்குச் சரியாக இருக்கலாம். ஒரு உயிர் கூட இழக்கப்படவில்லை என்று இலங்கை அரசும் இராணுவமும் சொல்கின்றன. அதற்குத் தலைஆட்ட என பட்டாளமே இருக்கிறது. இந்த உயிர்களுக்கும் மானபங்கப்படுத்தப் பட்டு நடைபிணமாக்கப்பட்டுள்ள பெண்களுக்கும் நீதி கிடைக்க முயற்சிக்க வேண்டாம் – பார்த்துச் சிரிக்காமலாவது இருக்கலாமே!

    Reply
  • நந்தா
    நந்தா

    ரோகன்:
    முள்ளி வாய்க்கால் வரை அப்பாவிப் பொதுமக்களை ஆடு மாடுகள் போல ஓட்டிச் சென்றவர்கள் யார்? புலிகளொடு அந்த வேலயில் ஈடுபட்டு கம்பி எண்ணும் கத்தோலிக்க பாதிரிகள் பற்றி உங்கள் விமர்சனங்களைக் காணவில்லை.

    யுத்த சூனிய பிரதேசத்தினுள் புலிகள் போய் பிள்ளை பிடி கொலை கொள்ளையில் இறங்கியது உங்களுக்கு நியாயமாகப்படுகிறது.

    இறுதி நேரத்தில் தமிழ் பெண்களைப் புலிகள் கற்பழித்திருக்கிறார்கள். அதற்கு அவர்கள் சொன்னநியாயம். ஆமிக்காரன் வந்து உங்களை கற்பழிப்பான். அதனையே தாங்களும் செய்கிறார்கள் என்பதுதான்.

    ஆமி வருகிறது. பெண்களைக் கற்பழிப்பார்கள். புலிகளின் பகுதிகளுக்கு ஓடுங்கள் என்று கபடத்தனமாக மக்களை புலிகளுக்கு கவசங்களாக்குவதில் பத்தினாதன் போன்ற பாதிரிகள் முன்னின்றுள்ளனர்.

    மக்களை வைத்தே இறுதி நேரத்தில் புலிகள் தங்கள் உயிர்களைக் காத்துக் கொள்ள பேரம் பேசியுள்ளனர். “அப்பாவி” மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற கூச்சலின் பிரச்சாரமே புலிகள் தங்கள் தப்பியோட அந்த அப்பாவிகளை கேடயமாக்கியதின் அடிப்படையில் எழுந்த பிரச்சாரமே ஆகும்.

    ஆயிரக் கணக்கில் புலிகளே சரணடைந்திருக்கும் பொளுது “கொல்லப்பட்ட” மக்களால் அது ஏன் சாத்தியமாகவில்லை என்பதைச் சிறிதும் சிந்திக்காது ஐயகோ மக்களை இராணுவம் கொன்று விட்டது அலறி இன்னமும் புலிகளைக் காப்பாற்ற முயற்சி செய்து கொண்டு இருப்பவர்கள் சமூகத்தின் சாபக்கேடுதான்.

    Reply
  • Nathan
    Nathan

    //இறுதி நேரத்தில் தமிழ் பெண்களைப் புலிகள் கற்பழித்திருக்கிறார்கள். அதற்கு அவர்கள் சொன்னநியாயம். ஆமிக்காரன் வந்து உங்களை கற்பழிப்பான். அதனையே தாங்களும் செய்கிறார்கள் என்பதுதான். // நந்தா

    இதற்கு நந்தாவிடம் ஆதாரம் இருக்கா? இவ்வளவு காலம் புலிகள் பிள்ளை பிடித்தார்கள் காசு பறிச்சாங்கள் எஎன்று எழுதியவர் இப்ப புது கண்டுபிடிப்பாம் புலிகள் பாலியல் வல்லுறவு செய்தாங்கள் என்று.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    //இராணுவத்தினரின் செல்போன்கள் கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட நெட்வேர்க்கினூடாகவே செயல் பட்டிருக்கும். அத்துடன் எந்த இராணுவ வீரனின் கையில் உள்ள செல்போனூடாக தகவல்கள் சென்றிருப்பினும் அவை பதிவு செய்யப்படும். அத்துடன் அவை ஒரு குறிப்பிட்ட “ரேஞ்ஞினுள்” மாத்திரமே செயல்பட்டிருக்கும். //

    இப்போது கிடைக்கும் படங்களும் வீடியோவும் இராணுவத்தினரால் வழங்கப்பட்டவை. செல்போன்களை இராணுவம் தடை செய்திருக்கவில்லை. எனவேதான் அவர்கள் பகிரங்கமாக படம் பிடிக்கிறார்கள். அங்கே வேலை செய்யாது போனால் அவர்கள் வைத்திருக்கவும் தேவையில்லை. அதை றோகன் அனுப்பிய படத்தில் தெரிகிறது. அது இந்த அளவுக்கு பிரச்சனை தரும் என அவர்கள் நம்பியிருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன்.

    இராணுவத்தினரோடு சென்று ஊடுருவித் தாக்கிய அல்லது கண்காணிப்பில் ஈடுபட்ட தமிழ் குழுக்கள் அதிகமாக செல்போன்களையே பாவித்துள்ளனர். அப்படிச் செல்பவரது தகவல் இது.

    Reply