Wednesday, September 29, 2021

சோனகர் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர்… : எஸ் ஆர் நிஸ்தார் மொகமட்

SL_Moorsஎன் அம்மாவின் இயற்பெயர் “நாச்சியா(ர்)”, என்ன அழகான தமிழ் பெயர்? “தலைவி” என்ற பொருள்பட அப்படி இடப்பட்டதாம். பெயரை மாத்திரம் பார்த்து இது சுத்த தமிழ்பெயர் எனவே இவர் இப்போது இல்லாவிட்டாலும் இவரின் பரம்பரை தமிழர் ஆகத்தான் இருக்க வேண்டும் என்று இனம் பிரிக்கும் தன்மை தமிழரிடையே காணப்படுவது கண்கூடு. இந்த அடிப்படையில்தான் இரண்டாம் புவனேகபாகுவின் வாரிசு “கலே பண்டார” அல்லது ” வத்ஹிமி” என்பவனின் பெயரை வைத்து அவன் சிங்களவன் என்ற முடிவுக்கு வருவதும் பிழையாகிவிடும். ஏனெனில் அந்த அரசன் “சோனகர்” இனத்தை சேர்ந்தவன். இப்படியாக அடிப்படை விடயங்களில் தெளிவில்லாமல் குழப்பங்களுக்கு மத்தியில் அரைத்த மாவை மீண்டும் மீண்டும் அரைப்பது போல இந்த சர்ச்சைக் குரிய “சோனகர்” இனம் பற்றி மிண்டும் பேச வேண்டியுள்ளதாக தேசம்நெற் கருதுவதால் மிண்டும் உங்களோடு.

இந்த சோனகர் என்ற வரையறைக்குள் வருபவர்கள் அனேகமா “இஸ்லாம்” என்ற சமயத்தை பின்பற்றுவதால், அவர்கள் சமய அடிப்படையில் “முஸ்லிம்” என்ற பெயரையும் பெறுகின்றனர். இந்த முஸ்லிம் என்ற வார்த்தை எல்லைகள், மொழிகள், கலாச்சாரங்களை கடந்த பெயர். அதாவது யார் இஸ்லாம் என்ற மதத்தை பின்பற்றுகிறார்களோ அவர்களைக் குறிக்கும் சொல். அவர் எங்கு இருக்கிறார், என்ன மொழி பேசுகிறார், என்ன நிறத்தையுடையவர் என்ற கேள்விகளை எல்லாம் தாண்டிய ஒரு அடையாளம். ஆனாலும் இலங்கையை பொறுத்தவரை தெரிந்தோ தெரியாமலோ இதுதான் அது, ஆகவே அதுதான் இது என்ற ஒரு குழப்பத்துக்குள் தமிழர் மாத்திரமல்ல, இந்த சோனகரும் மூழ்கிவிட்டனர்.

இனம் என்பது மொழிவாரியாகத்தான் இருக்க வேண்டும் என்று பலர் வாதிட்டாலும் இனத்துக்கான வரைவிலக்கணம் “ஒரு சமயத்தை பின்பற்றும் அல்லது குறிப்பிட்ட கலாச்சார தன்மைகளை கொண்டுள்ளோரும் கூட தனியான இனமாக வகைப்படுத்தப்படலாம் ” என்கிறது. ஆகவே சமய ரீதியில் முஸ்லிம்கள் என்போர் “தனியான இனம்” என்று வாதிடுவதற்கு இது வழிவகுக்கின்றது. ஆனால் உலகலாவிய ரீதியில் “முஸ்லிம்” என்பவர் ஒரு இனமாக பார்க்கப்படாமையால் இலங்கையில் மாத்திரம் அப்படி பார்க்கப்பட வேண்டும் என்பது பல சிக்கல்களை அரசியல் ரீதியில் உருவாக்கக் கூடியது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

மனிதன் இயற்கையாகவே இப்படியான வேறுபட்ட அடையாளங்களை கொண்டிருக்கும் போது அவனை ஒற்றை சொலுக்குள் அடக்குவது, பாரதியாரின் ஆண், பெண் தவிர இனங்கள் வேறெதுவுமிலலை என்ற நிலைப்பாட்டை ஒத்ததாகும். ஆனால் நடைமுறையில் காரியங்கள் அப்படி நடந்தேறுவதுமில்லை. மனிதன் ஒரு சமூக பிராணி என்பதால் சமூக வாழ்வியல் சூழலில் அவனுக்கு பல அடையாளங்கள் தேவைப்படுகிறன அல்லது அப்படியான அடையாளகள் தேவைகருதி கொடுக்கப்படுகிறன. இந்த அடிப்படையில் சமயம் சார்ந்த அடையாளமாக “முஸ்லீம்” அல்லது “இஸ்லாமியர்” என்ற போதிலும் எமக்கு இன்னும் பல அடையாளங்கள் தேவைப்படுகிறன. அதில் முக்கியமானது “இலங்கையர்” என்பது.

இந்த இலங்கையர் என்ற பதப் பிரயோகம் “அமெரிக்கர்” என்ற பதப் பிரயோகத்தின் தன்மையை ஒத்தல்ல. எழுதப்படாத பல கட்டுப்பாடுகள், சட்டங்கள் மறைமுகமாகவும், சிலவேளை வெளிப்படையாகவும் நடைமுறைப் படுத்தப்பட்டாலும் அரம்பத்தில் அடிமைகளாக அமெரிக்காவுக்குள் கொண்டுவரப்பட்ட கறுப்பினத்தவன், கலப்பினத்தவன் அமெரிக்க ஜனாதிபதியாக முடியுமாய் இருப்பது ஒருவகை அமெரிக்க தன்மை(Americanism) எனலாம். அத்தகைய வாய்ப்பு வசதிகளோ, அரசியலமைப்பு ஏற்பாடுகளோ, வளர்ச்சியடந்த சிந்தனை போக்குகளோ இல்லாத ஒரு நாட்டில் அதுவும் உலகத்தின் தனித்த ஒரு இனத்தையும், தனித்த ஒரு மொழியையும் பெரும்பான்மையாகக் கொண்ட நாட்டில் அங்கே உள்ள சிறுபாமையினர் தொடர்பாக எழும் காரணமற்ற ஆனால் அனுபவரிதியில் ஏற்படும் நியாயமான பயத்தின் அடிப்படையில் பெருன்பான்மை சமூகத்தின் அரசியல் நகர்வுகள் வடிவமைக்கப்படும் என்பதில் புதுமை ஒன்றுமில்லை.

இந்த அடிப்படையில் சிறுபான்மையினருக்கு “இலங்கையர்” என்ற அடையாளம் மாத்திரம் அரசியல் ரீதியில் போதுமானதல்ல. ஆகவே இந்த சிறுபான்மையினாரில் ஒரு பிரிவினர், பெருன்பன்மையோரின் அரசியல் நகர்வினாலும், சிறுபான்மையோரில் பெரும் பன்மையாக இருக்கும் தமிழரின் அரசியல் நகர்வுகளினாலும் ஏற்படும் பயத்தின் காரணமாக தங்களுக்கு இருக்கும் அனைத்து அடையாளங்களையும் பாவனையில் வைத்திருப்பது பிழையான அம்சமாக இருக்கப் போவதில்லை. மாறாக இது ஒருவகை பாதுகாப்பு ஏற்பாடகவே அமையும். சிங்களவரையும், தமிழரையும் பொறுத்தவரை மொழிசார்ந்த, இனம் சார்ந்த, சமயம் சார்ந்த அடையாளங்கள் பாவனையில் இருக்கும் போது, முஸ்லிம்கள் என்ற மத அடையாளத்தைக் கொண்டுள்ள இஸ்லாமியர்கள் தமது இன அடையாளத்தை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயமாகும். இந்த உரிமை பிரச்சினை என்பது புதிய பிரச்சினைகளை உருவாக்குவதற்கல்ல, புதிதான பிரச்சினைகளின் சாத்தியபாடுகள் மிக அதிகமாகவே உள்ளதால் அவற்றை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டுமாயின் நாம் இலங்கையர் என்ற உரிமையோடு, அது பல்லின மக்கள் வாழும் இலங்கை என்ற விடயத்தை அச்சமின்றி, தெளிவாக நிலைநிறுத்த எமது இந்த “சோனகர்” என்ற இன அடையாளம் மிக இன்றியமையாததாகும்.

பிரதேசங்கள் எல்லை இடப்படுவதும், எல்லை இடப்பட்ட பிரதேசங்கள் பெயரிடப்படுவதும் அவற்றை “நாடுகள்” என்று நாம் அழைப்பதும் புதுமையான விடயங்கள் அல்ல. அதேபோல் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் மக்கள் மீள் பகுப்புக்குள்ளாவது ஏற்றுக் கொள்ளப்படுகின்ற ஒரு விடயமாகவே காணப்படுகின்றது. எனவே ஏதோ ஒரு அடிப்படையில் மக்கள் குழுக்களாக, குலங்களாக, கோத்திரங்களாக, இனங்களாக, தேசியங்க்களாக பிரிவடைவதை நாம் மறுதலிக்க முடியாது. அனால் இந்த பிரிவின் அடிப்படையில் ஒருவர் மற்றவரைவிட உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர் என்ற நிலைவரும் போது அல்லது ஒருவர் தன் போன்ற மற்றவர்களுடனான கூட்டுக்கு தடை ஏற்படும் போது அங்கே பிரச்சினைகள் எழுவது தவிர்க்க படமுடியாதுள்ளது.

வரலாறுகள் தோறும் நமக்கு போதுமான படிப்பினைகள் இருப்பினும், இத்தகைய பிரச்சினைகள் பூதாகாரமாகி மனித குலம் அழிவை சந்தித்ததற்கு நாம் சாட்சிகளாக இருந்தபோதும் அதன் பாரதூரம் இன்னும் சரியாக அறியப்பட்டதற்கான அறிகுறிகள் மிக சொற்பமாகவே காணப்படுகின்றன. யூத இனத்துக்கு எதிரான ஆரிய ஹிட்லரின் இன அழிப்பும், ரூவெண்டா நாட்டில் ஹூட்டு, டுட்சி இனங்களுக்கிடையிலான இனவழிப்பு நடவடிக்கைகளும், சூடானில் பூர்விக மகளுக்கும் ஜஞ்சூவின் அறபு நாடோடிகளுக்கும் இடையிலான அழிப்பு நடவடிக்கைகளும், சேர்பியாவில் பொஸ்னிய இன அழிப்பு செய்யற்பாடும், இலங்கையிலே அரசாங்கம், புலி என்ற போர்வைக்குள் பலியாக்கப்பட்ட மக்களும் இந்த பரிதாப நிலையின் சான்றுகள். இத்தகைய அநாகரிகங்களின் அடிப்படை இரண்டு விடயங்களே. ஓன்றில் ஒரு இனம் மற்றைய இனத்தை தாழ்வாகக் கருதுவது, மற்றயது ஒருவரின் அடையாளத்தை மற்றவர் மறுக்க முற்படுவது.

இந்த அடிப்படையிலேயே “இலங்கை சோனகர்” பற்றிய எனது பார்வை அமைந்திருக்கிறது. இலங்கை “பல்லின மக்கள்” வாழும் நாடு. இந்த “பல்லினம்” என்ற வார்த்தை குழப்பமே இந்த விடயத்தை சிக்கலாக்கியுள்ளதாக நான் கருதுகிறேன். சுதந்திரத்துக்கு பின்னான இலங்கையில் தமிழர்களின் “வட்டுக்கோட்டை தீர்மானம்” என்ற தனி நாட்டுக்கான அடித்தளம் இடப்பட்டபோது இலங்கையில் சிங்களம், தமிழ் என்ற இரண்டு மொழிசார் இனங்கள் தான் இருப்பதாகவும் எனவே இலங்கை பெளதிக ரிதியாக இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும் என்பது தமிழ் அரசியல்வாதிகளின் ஆசையாக இருந்தது. அங்கே தமிழை அதிகமாக பேசும் ஒருசாரார் (சோனகர்) பற்றியோ, அல்லது சிங்களமும், தமிழும் பேசும் இன்னொரு சாரார்(பறங்கியர்) பற்றியோ பேசப்படவிலை. ஆனால் இங்கிலாந்தில் உருக்கொண்ட ஒரு தீவிரவாத / போராட்ட தமிழ் அமைப்பு “இஸ்லாமியர்”, “தோட்ட தொழிலாளர்”, ஏனைய சிறு இனத்தினரையும் இந்த தமிழ் போராட்டம் உள்ளடக்க வேண்டும், அப்படி இல்லாவிட்டால் தமிழரின் சுதந்திர போராட்டம் வெற்றி பெறாது, வெற்றி பெற்றாலும் நிறைவு பெறாது என்று எதிர்வு கூறினர். அவர்கள் தங்கள் போராட்ட வடிவத்தை இப்போது மாற்றிவிட்டனர் என்றாலும், இஸ்லாமியர், தோட்டத்தொழிலாளர் என்பதோடு பறங்கியர் விடயத்திலும் அவர்களின் கருத்து அவ்வாறே இன்றும் உள்ளது.

ஆனாலும் அவர்கள் சொல்லும் “இஸ்லாமியர்” என்ற பதப்பிரயோகம் அரசியல் ரிதியில் தூர நோக்கு கொண்டதாகக் காணப்படவிலை. ஆகவேதான் அதற்கான மாற்றிடாக , சரியான இன அடையாயளமாக நாம் “சோனகர்” என்ற பதத்தை பிரயோகிப்பதற்கான தேவையை உணர்த்தி நிற்கின்றோம். இந்த சோனகர் என்ற விடயம் வசதிகருதிய புதிய கண்டுபிடிப்போ அல்லது இலங்கையின் அரசியல் சூழ் நிலையை என்றும் குழப்பம் நிறைந்ததாக வைப்பதுவுமாக அமையக் கூடியதல்ல, மாறாக அது இஸ்லாமியர் அல்லது முஸ்லீம் என்ற மத அடையாளத்தில் நாம் எதிர் நோக்கக் கூடிய சாத்தியமான ஆபத்துக்களை விட, சோனகர் என்ற இனஅடையாளதில் சற்று பாதுகாப்பை பெறலாம் என்ற நிலைப்பாடே. எனது இந்த வாதத்தை பிழையாக அர்த்தப்படுத்தி விடக்கூடாது, அதாவது எமது அரசியல் இருப்புக்காக நாம் சோனகர் என்ற இனப் பெயரை முதன்மை படுத்துவதே ஒழிய எந்தக் காரணம் கொண்டும் எமது மத அடையாளத்தையோ அல்லது மதத்தையோ விட்டு விடுவதற்கான யோசனையல்ல, இது என்பதை முதலில் சோனகர் உணர வேண்டும். அடுத்ததாக இந்த பெயரை மீள் நிலை நிறுத்த முயல்வதென்பது ஏனைய இனங்களின் உரிமைகளில் தலையிடும் விடயமும் அல்ல என்பதும் குறிப்பாக தமிழ் இனத்தினரால் உணரப்பட வேண்டும்.

சாதுவான தமிழர்கள் போர்க் குணம் கொண்டோராக மாற்றப்பட்டதும், அதன் தாக்கத்தை நேரடியாக பெரும்பான்மை சிங்கள அரசாங்கதின் மேல் பாய்ச்சி அது மறைமுகமாக சிங்கள இனத்தினை கிலிகொள்ளச் செய்ததும், அதே நேரம் சக மொழி பேசுவோர், இரண்டறக் கலந்து வாழ்ந்தோர் என்றும் பாராமல் அவர்களையும் பயமுறுத்தி தம் கீழ் வைத்திருக்க புலி பயங்கர வாதிகள் எடுத்த முயற்சி, முழு தமிழினத்தின் நிலைப்பாடாக கொள்ளமுடியாது என்றாலும், இலங்கையின் அரசியல் சூழ் நிலையானது குழகப்பரமானதாகவே செல்வதற்கு ஏதுவாக அரசியல் அமைப்பு திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையிலும், இன வாத சிங்கள், தமிழ் அரசியல்வாதிகள் அத்தகைய ஒரு அடிப்படையிலேயே தமது அரசியலை முன் நடத்தி செல்ல முயல்வதாலும் அப்படியான நிலைமைகளுக்கு உறுதியாக நின்று முகம் கொடுக்கவுமே நாம் எமது இனத்தின் அடையாளத்தை தெளிவாக முன்வைக்க வேண்டும் என்பது எனது நிலப்பாடு.

வட்டுக்கோட்டை திர்மானத்துக்கு முன்பிருந்த காலத்திலும், புலி பயங்கரவாத காலத்திலும், அதற்கு பின்பும், கடந்த பொது தேர்தல் காலங்களிலும் தமிழர்களை பெருவாரியாக பிரதி நிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் இலங்கையில் இரண்டு இனங்கள் உள்ளதாகவே பேசின, பேசுகின்றன. அதே போல் இவர்களுடன் சம்பந்தமில்லாத சுயபிரகடனம் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமரான திரு. வி. உருத்திரகுமரன் மே/ஜூன் 2010 தில் புதிய திசைகளின் வானொலி அரசியல் ( லண்டன் சூரியோதயம் வானொலியூடாக) கலந்துரையாடல் ஒன்றில் கூறிய ஒரு விடயம் மிகவும் கவனிக்கத்தக்கது. அதாவது இந்த பிரதமர்(?) நாடு கடந்த தமிழீழ அரசு பற்றி விளக்கமளித்தபோது நம்மால் ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. இந்த அரசு பற்றி இலங்கையில் வாழும் தமிழரின் விருப்பம் அறியப்பட்டதோ இல்லையோ நான் அறியேன், இருந்தம் உங்கள் உத்தேச தமிழீழ ஆட்சிக்குள் வரவிருக்கும் சோனகரிடம் அவர்களின் விருப்பு பற்றி அறியப்பட்டதா? என்ற கருவை உள்ளடக்கியதே அந்தக் கேள்வி. அதற்கான அவரின் பதில்,” இந்தியாவின் தமிழ் நாட்டில் ஒரு முஸ்லிம் பிரமுகர் இந்த நாடு கடந்த தமிழீழ அரசை ஆதரித்துளார்” என்பதே. ஆகவே இப்படியான ஒரு ஏமாற்று போக்கு இந்த தமிழ் அரசியல் வாதிகளிடம் இருக்கும் வரை நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டியது எமது கடமையே ஒழிய அது தமிழரின் பிரச்சினை கூட இல்லை. நாம் நம் இனத்தை இது வென்று சொல்லும் போது அதை ஆதாரங்களோடு பிழையென நிறுவுவது வேறு. ஆனால் காரணங்கள் இல்லாமலே அதை தந்திரமாக முறியடிக்க முற்படுவது கேவலமானது. இலங்கை சோனகரை தமிழர் என்று குறிப்பிடுவது விருப்பம்மில்லாத ஒருவரை பலாத்கார கலியாணத்துகு ஒப்புதல் அளிக்க செய்யும் முயற்சி போன்றது. அது ஒரு இனத்துக் கொதிரான உரிமை மீறல். இதைவிட வேறு வார்த்தைகளால் இந்த நிலைப்பாட்டை விளங்கவைக்க முடியாது.

Moors_Map_of_SL01இனி இந்த “சோனகர்” ரின் வரலாற்றைப் பார்ப்போம். மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் இந்தியா நோக்கிய தம் பார்வையை செலுத்தமுன்பே அரேபியர் தெற்கு, தென்கிழக்காசிய பிராந்தியத்தில் தமது குடியிருப்புக்களை நிறுவியுள்ளனர். இந்த வகையில் கி.மு. 310 ஆண்டளவில் மடகஸ்கார் தீவுக்கும் சுமாத்திரா தீவுக்கும் இடையிலான வியாபாரபாதையின் கடல் வழி இணைப்பு இலங்கையூடாகவே இடம் பெற்றுள்ளது. எகிப்திய பல்கலை வல்லுனர் க்ளோடியுஸ் தொலமி(Claudius Ptolemy) கி.பி. 150களில் இலங்கை பற்றிய வழங்கிய தகவல்கள் அவர் அறேபியரிடம் இருந்து பெற்றதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த தொலமி வரைந்த இலங்கை படத்தில் நதிகள் புலூவியஸ்(Fluvius) என்று கூறப்படுகிறன. அதன் அடிப்படையில் மன்னாரின் தென் புறத்தில் ஓடும் நதி “பாசிஸ் புலூவியஸ்” அதாவது பாரசிகர் நதி, அதாவது அப்பிரதேசத்தில் பாரசிகர் அதிகம் வாழ்ந்ததால் அப்பெயர் வழங்கப் பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. இந்த நதி இன்று அருவி ஆறாக பெயர் பெற்றுள்ளது, (மகாவழி கங்கை ஓரத்திலும் பாரசீகர் வாழ்ந்ததாக காணக்கிடைகின்றது). இந்த நதிக்குக் கீழ் இன்றைய புத்தளம் நகருக்கு வடக்காக “சோனா புலூவியஸ்” (Soana Fluvious) என்ற நதியை அவர் வரைந்துள்ளார். சோனகர் நதி என்பதை அது குறிக்கிறது. அதாவது சோனகர் அதிகம் வாழ்ந்த இடமாக அது அடையாளப் படுத்தப்படுகிறது. இந்த நதியினை இன்றும் புத்தள பிரதேச மக்கள் “பொன்பரப்பி ஆறு”, அல்லது “காலாவி ஆறு” என்றழைகின்றனர். இது சிங்களதில் “கலா ஒய” என்றழைக்கப் படுகின்றது. இந்த நதி தீரங்களுக்கே இன்றும் புத்தளம் வாழ் மக்கள் குடும்பம் குடும்பமாக சென்று குடிசை(tent)அடித்து, இரவு வேளைகளில் வேட்டையாடி தமது கோடைகாலத்தை கழிக்கும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர். இது ஆற்றங்கரையில் வாழ்ந்தோரின் பழக்க வழக்கங்களின் மிச்சசொச்சங்கள்.

இதே நேரம் கி.மு. 327-326 இடைப்பட்ட காலத்தில் மகா அலெக்ஸ்சந்தரின் கட்டளை பிரகாரம் இலங்கையின் புவி வரை படத்தைத் தந்த கிரேக்க மாலுமி ஓனொஸ் கிறிட்டோஸ்( Oneus Crites ) புத்தளத்திளும் அதைச் சுற்றியுள்ள அயல் பாகங்களுடன் நிலத்தொடர்புடைய பகுதிகளிலும் “சோனகர்”களின் குடியேற்றம், விஜயன் இலங்கைக்கு வர முன்னரே அதிகம் காணப்பட்டதாக குறிப்பிடுகின்றார். அதே நேரம் இந்த பொன்பரப்பி ஆற்றை “சோனாள் பொட்டமஸ்” என்று குறிப்பிட்டுள்ளார். “சோனாள்” என்பது “சோனகரையும்”, “பொட்டமஸ்” என்பது ஆற்றையும் குறிக்கும். இந்த பிரதேசம் தான் அதாவது அருவி ஆற்றுக்கும், மாயன் ஆறு என்றழைக்கப்படும் தெதுறு ஒயாவுக்கும், அதாவது இன்றைய சிலாபத்துக்கு வடக்கே பாயும் தெதூறு ஓயாவில் இருந்து மன்னாருக்கு தெற்காகவுள்ள குதிரைமலைக்கும் இடைப் பட்ட பிரதேசமே “சோனகம்” என்ற பிரதேசமாகவும் இந்த மாலுமி சித்தரிக்கின்றார். இந்த பகுதியை, அதாவது அரிப்பு, பொன்பரப்பு, புத்தளம் பிரதேசத்தை “Igona Civitas” ,அதாவது அறேபிய பழங்குடிகள் வாழ்ந்த இடமாகும் என J.R. Sinnathamby என்ற ஒரு ஆய்வாளரும் குறிப்பிடுகின்றார்.

இன்றைய 21ம் நூற்றாண்டில் நாம் காணும் நாடுகள், கண்டங்களின் அமைவுகள், சமுத்திரங்கள், மலைகள் எல்லாம் உலகம் தோன்றிய நாள் தொட்டு இப்படியே இருக்கவில்லை என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம். இதற்கு “கண்ட நகர்வு”(continental drift) களே காரணமாகும் என்பது நிலவியலாளர் கூற்று. இந்த அடிப்படையில் இன்றைய இந்தியா, அவுஸ்திரேலியா, அண்டார்டிக்கா முனை இதற்கிடையில் உள்ள தீவுகள் எல்லாம் ஓன்றாக இருந்த பகுதியை “கொண்ட்வானா லேண்ட்”(Gondwana Land) என்றழைப்பர். இந்து மாசமுத்திரத்தில் மூழ்கிப் போன பெரும் பகுதி “லெமுரியா கண்டம்” (Lemuria Continent) என அழைக்கப் பட்டதும் நாம் அறி ந்ததே. இந்த கடற்கோளின் விளைவே தென்பகுதி காணாமல் போக வடபகுதி இமய மலையாக நிமிர்ந்து நிற்பதைக் காணலாம். பின்னர் ஏற்பட்ட சிறிய கடற்கோள்களின் விளைவாக இந்திய நிலப்பரபில் இருந்து இலங்கை பிரிந்து சென்றது என்பதற்கு சான்றுகள் அதிகம் உள்ளன. அதே நேரத்தில் க்ளோடியுஸ் தொலமி(Claudius Ptolomy)யின் பிரகாரம் “தப்ரபேன்” (Taprobane) என்று அழைக்கப்பட இலங்கை இன்றை இலங்கையை விட பல மடங்கு விசாலமானது என்கின்றார். அதன் படி “க்கிறினிச்” (Greenwich) 75வது பாகை இன்றைய இலங்கையின் மேற்கு கரையில் இருந்து சுமார் 400 மைல் தூரத்தில் பண்டைய இலங்கையை ஊடறுத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது. ஆகவே அன்றைய இலங்கை இன்றைய இலங்கையைவிட விசாலமானது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இத்தகைய புதிய நில அமைவுகளுக்கு முன் இலங்கை இந்தியாவுடன் நிலத்தால் இணைந்திருந்த பகுதி என்பதிலும் யாருக்கும் சந்தேகங்கள் எழ நியாமமிருக்காது.

இந்த இணைபின் மூலம் புத்தளம் பிரதேசத்தில் வட மேற்கில் பாய்ந்தோடும் “சோனகர் நதி” யினதும் அதற்கு எதிராக, அதாவது இந்தியாவின் தென் கிழக்கில் காயல்பட்டிணத்தின் கடலில் சங்கமிக்கும் “தாமிரவருணி ஆறு” (அல்லது பொதிகை நதி(?)) என்றழைக்கப்படும் ஆறும் ஓரே நதியே. இந்த நதியையும் “தப்ரபேன்” என்றே அழைத்துள்ளனர். அந்த காலத்தில் ‘சோனகர்” வாழ்ந்த இடமும் அதுவே. சோனகர் பிரதேசத்தைப் பிரிப்பது “தாமிர வருணீ” என்ற நதியே என்றும் கூறப்பட்டுள்ளது. தாமிரவருணி ஆற்றுப் படுக்கைகளில் வாழ்ந்த மக்களின் பழக்க வழக்கங்க்கள், குணாதிசங்கள், உடல் அமைப்பு, நிறம், அவர்கள் பேசும் மொழியின் தன்மை(dialact), அவர்கள் வைத்துக் கொள்ளும் பெயர்கள், தாழி அடக்க முறை என்பதெல்லாம் ஓன்றையே சுற்றி நிற்கின்றது. அதுதான் சோனகர் என்ற இனத்தையும், அது காலங்காலமாக வாழ்ந்த இன்றும் வாழ்ந்து வரும் பிரதேசத்தையுமாகும்.

மேலும், இந்தியாவின் திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தின் தெற்கு சுவற்றில் உள்ள கல்வெட்டில் இந்த” சோனகம்” பற்றிய தகவல் பெறமுடியும். தமிழ் நாட்டு பேரசர்கள் வெற்றி கொண்ட பிரதேசங்களில் ஒன்றாக “சோனகம்” குறிப்பிடப் பட்டுள்ளதானது அந்த பிரதேசத்தின் இருப்பையும், முக்கியத்துவத்தையும் உணர்த்துவதா உள்ளது. இதே போலவே போர்த்துகேயர்களின் இலங்கை வருகைக்குமுன் மொரோக்கோ நாட்டின் யாத்ரீகர் இபுனு பதுதா(Ibn Batuta) 1345 ஆண்டு 9ம் மாதம் 12ம் திகதி “பத்தள” என்று அழைக்கப்பட்ட புத்தளத்தின் துறைமுகத்தில் தன் தோழர்களுடன் வந்திறங்கியதாக தனது “The travels of Ibn Batuta” என்ற நூலில் அதன் ஆசிரியர் சாமுவேல் லீ குறிப்பிடுகின்றார். இப்னு பதுதா, பாவாதமலையை தரிசிக்க புத்தளத்தில் வந்திறங்கியபோது அங்கு ஒரு பாரசிக மொழி பேசக்கூடிய பாண்டிய மன்னன் ஆட்சி செய்ததாகவும் குறிப்பிடுகின்றார். இந்த பாண்டிய மன்னனாக வருணிக்கப்பட்டவனே “தக்கியூதீன்” என்று இனங்காணப்பட்டான். தக்கீயுதீன் அடிப்படையில் ஒரு பாரசிகன் என்றும் பாண்டிய மன்னனின் படையில் தளபதியாக இருந்தவன் என்பதும் அவன் பாண்டிய மன்னனின் மகள் ஒருவரை திருமணம் முடித்திருந்தான் என்பதும் வரலாறு. ஆகவே இலங்கையின் புராதன துறைமுகங்களில் ஒன்றான புத்தளத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்து அதை தன் நிருவாகதில் வைத்திருக்க தக்கியுதீன் நியமிக்கப்பட்டிருப்பத்ற்கான வாய்ப்புகள் அதிகம்.

Moors_Map_of_SL02இந்த ”சோனகர்” என்ற இனம் ஒரு கலப்பு இனம். இந்த இனத்தின் தோற்றத்துக்கு பல மூலங்கள் உள்ளன. இருப்பினும் அனைத்து மாறுபட்ட மூலத்திலும் ஒரு அசைக்க முடியாத, மாறாத மூலமாக காணப்படுவது அதன் “அரபு” இரத்த கலப்பு. இந்த அரபுக்கள் முதலில் தென் அறேபியாவில் இருந்து, அதாவது இன்றைய யெமனில் (Yemen)இருந்து ஏடன் (Aden) துறைமுகம் ஊடாக வந்தவர்கள் (என் தாயின் தந்தையின் பேரன் ஒரு யெமனி). அவர்களைத் தொடர்ந்து, ஏற்கனவே கிழக்கு ஐரோப்பிய அரபு கலப்பால் உருவாகிய “மூர்”(Moors)கள், பிற்பாடு பாரசீகர், அவர்களுடன் அபிசினியர்கள் (எகிப்து நாட்டவர்), பிற்பாடு தமிழ் நாட்டு சோனவர்கள், இன்றைய கேரளா அதாவது மலையாளிகள் பிற்பாடு வட அறேபியா, அதாவது பாலைவனத்து அரபிகள் என்று இலங்கை சோனகர் இனத்தின் மூலங்கள் பிரிந்து செல்கின்றன. இந்த மூலத்தின் தன்மைக் கேற்பவே இலங்கை ”சோனகர்” பலவித உடல், நிற அமைப்புகளைக் கொண்டுள்ளனர்.

சபாயீன், அதாவது தென் அறேபியர்கள் கி.பி. 7ம் நூற்றாண்டில் தம் அரசியல், சமய செல்வாக்கை வட அறேபியர்கள், அதாவது பாலைவனத்து அறேபியரிடம் இழக்கும் வரை கடல் மூலமான இந்து சமுத்திர வாணிப சாம்ராஜ்யம் அவர்கள் கையிலேயே இருந்தது. இந்த அறபுக்கள் தான் தென் இந்திய கரைகளிலும் வடமேற்கு இலங்கை கரைகளிலும் சங்கு, முத்து குளிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள். இவர்களின் வருகை இந்தியாவிலும், இலங்கையிலும் வியாபார நோக்கமாகவே இருந்தது. பிற்காலத்தில் சமய பரப்பலும் அதில் காணப்பட்டது. ஆனால் தென் இந்தியாவிலும், இலங்கையிலும் அறேபியரின் வருகை, வட இந்தியாவுக்கான அவர்களின் அரசியல் அடிப்படையிலான( நாடு பிடித்தல்) வருகையை விட வித்தியாசமானது. அதுவும் கி.பி. 7ம் நூற்றாண்டளவிலேயே இஸ்லாம் என்ற மதம் இந்த வட அறேபிய முஸ்லீம்களால் இலங்கை சோனகர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகின்றது. எனவே இஸ்லாமியர் அல்லது முஸ்லீம் என்ற சமய அடியாளம், சோனகர் என்ற இன அடையாளத்துக்கு மிகவும் பிற்பட்டது. அதாவது சோனகர் என்ற அடையாளம் கி.மு.4ம் நூற்றாண்டுக்கும் முற்பட்டது. சேர் அலெக்ஸாந்தர் ஜொன்ஸ்டன் (Sri Alexander Johnston), இலங்கையின் முதல் பிரதம நீதியரசர், இவரும் இலங்கை சோனகர்கள் அறபுக்களின் வழித் தோன்றல்கள் என்பதை திட்டவட்டமாகக் கூறுகின்றார். முஸ்லீம் என்ற சமய அடையாளத்துடன் இலங்கைக்குள் பிரவேசித்த வட அறேபியர்கள் அனேகமாக அரசியல் அகதிகளாக பிரவேசித்தவர்கள். இவர்கள் அறேபியாவில் இருந்து வெளியேறி, இன்றைய ஈராகின் யூப்ரிடீஸ், டைக்கிறிஸ் நதியூடாக இந்தியாவின் தென் பகுதியிலும், இலங்கைத் தீவிலும், மலாக்காவிலும் குடியேறினர். இந்த அடிப்படையில் இலங்கையில் ஏற்கனவே அறேபிய தொடர்புடைய மக்கள் வாழ்ந்த பிரதேசங்களில் இவர்கள் குடியேறினர். இதில் பிரதான இடங்களாகக் கருதப்படுவது, புத்தளம், கல்பிட்டி, குதிரை மலை, மாந்தோட்டம், மன்னார், யாழ்ப்பாணம், திருக்கோணமலை, மாத்தறை, வெளிகம, காலி, பேருவளை, கொழும்பு, கம்பொலை, ரத்தினபுர என்பனவாகும். மிக பின்னய காலத்தில் போர்த்துக்கேயரின் அச்சுறுத்தளினாலும் துறைமுகப்பட்டணங்களில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்டதினாலும் இங்கு வாழ்ந்துவந்த சோனகர்கள் உற்புர கிராமங்களுக்கும், மலை நாட்டு பிரதேசங்களுக்கும் குடியேறினர்.

இரண்டாம் புவனேகபாகுவின் வாரிசு கலேபண்டார (வத்ஹிமி)” ஹஸ்த்தி சைலாபுரம்” என்ற பெயர் கொண்ட ”சோனக” அரசன் இன்றைய குருணாகல் பகுதியை ஆட்சி செய்துள்ளான். அரசனாக இருக்க அடிப்படை தகுதி “பெளத்தன்” ஆக இருத்தல் என்ற அன்றைய, அப்பிரதே மேல்மட்ட அரசியல் வாதிகளின் போக்கினால், இந்த அரசன் எத்துக்கல் மலை உச்சியில் இருந்து வீழ்த்தப்பட்டு கொலை செய்யப்படும் வரை அரசாட்சியிலேயே இருந்துள்ளான். இதைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கும் மன்னனின் எதிர்பாளர்களுக்கும் இக் கொலை தொடர்பாக ஆங்காங்கே கலவரம் நடந்தாக அறியப்படுகின்றது. ஆகவே இந்த விடயமும் இலங்கை சோனகரின் நீண்ட வரலாற்றை கூறுகிறது.

பிற்காலத்தில் இலங்கை கோட்டை, யாழ்ப்பாணம், கண்டி என்ற மூன்று இராச்சியங்களாக பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்ட போதும், இவற்றுக்குப் புறம்பாக ”வன்னிமை” அரசுகளும் இருந்தன. இவை இந்த இராஜதானிகளுக்கு புறம்பாக நிருவாக அதிகாரம் வழங்கப்பட்ட பிரதேசங்களாகும். இதில் முக்கியமானவை கிழக்கில் மட்டக்களப்பு, கொட்டியாரமும், வடமேற்கில் புத்தள பிரதேசமுமாகும். ஆனால் இந்த புத்தள பிரதேசம் ஒருகாலத்தில் கண்டி இராச்சியத்தின் கீழும், இன்னொரு காலத்தில் கோட்டை எல்லைக்கும் உற்பட்டிருந்திருந்தாக அறியக்கிடைக்கின்றது. ஒரு போதும் யாழ் இராஜ்சியதுக்கு கட்டுப்பட்டிருக்கவில்லை. புத்தளத்தில் ஆட்சியை தம் கையில் வைத்திருந்தவன் “தக்கியு தீன்” என்ற பாரசீக தொடர்பும், பாண்டிய மன்னனின் ஆதரவும் கொண்டவனாக சொல்லப்படுகிறது. கண்டி இராஜ்சியத்தின் வெளிநாட்டு வியாபாரம் புத்தளம், கல்பிட்டி துறைமுகம் ஊடாகவே நடைபெற்றுள்ளது. புத்தள நகரின் மேற்கே உள்ள “பெரு வழி ஆறு”, மீ ஒயா என சிங்களத்தில் அழைக்கப்படும், ஆறு புத்தளத்தில் இருந்து, மாத்தளை, அக்குரணை வரையும் செல்கிறது. இந்த ஆற்றோர பாதையை “கண்டிப் பெருவழி” என்றும் அழைப்பர். இந்த ஆற்றங்கரை பாதையில் புத்தளம் முதல் கண்டிவரையும் ஆங்காங்கே இருக்கும் முஸ்லிம்களை அதிகம் கொண்ட சோனக கிராமங்கள், சிறிய நகரங்கள் இன்றும் இருப்பதைக் காணலாம். “பெரு வழி ஆறு” தவளம் எனப்படும் பெருள்காவும் முறை அதாவது கூட்டம், கூட்டமாக மாடுகளின் மேல் பாரமான பொருள்கள் ஏற்றிச் செல்லும் முறைக்கு பெயர் பெற்ற பிரதேசமாகும். கண்டிப்பிரதேசத்தில் இருந்து கண்டிராஜ்ய வெளிநாட்டு ஏற்றுமதி பொருட்கள் புத்தளம், கல்பிட்டி துறைமுகங்கள் வரை கொண்டுவரப்பட்ட முறையும் இதுவாகும். அதேபோல் புத்தள துறைமுகத்திலும், குதிரை மலை துறைமுகத்திலும் இருந்து பொருட்கள் இந்த தவள முறையிலேயே மலைநாடு நோக்கி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆரம்பகால சோனகர் பற்றிய தவல்கள் ஒன்று பின்வரும் செய்தியையும் தருகின்றது. அதாவது கி.பி 437-407 பராக்கிரமபாகு காலத்தில், அநுராதபுரத்தில் “யொனாஸ்’ என்று குறிப்பிட்டு ஒரு பகுதி “சோனவர்”களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தாம். இன்றும் சிங்களவர் இலங்கை சோனகரை “யொன்னு” என்றும் அழைக்கின்றனர். இந்த “யொன்னு” என்ற சொல் பாளி மொழியின் “யொன்ன” என்பதன் திரிபாகக் கொள்ளப்படுகிறது. ஆனாலும் “யோனக்க” என்ற சிங்கள சொல்லாலேயே பொதுவாக இன்று ”சோனகர்” அழைக்கப்படுகின்றனர். “மரக்கல” எனும் காரணப் பெயர், அதாவது மரக் கப்பல்களில் இலங்கை வந்த “அரபிகள்” என்று பொருள்படவும் இவர்கள் அழைக்கப்பட்டாலும், இலங்கையின் “மலாய்”, “போரா”, மேமன் முஸ்லிம்கள் தவிர, ஏனைய முஸ்லிம்களின் இனப் பெயராக அவர்களின் பிறப்புசாட்சி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் “சோனகர்” (தமிழ்) ” யோனக்க” (சிங்களம்) என்பதே. ஆனாலும் இவர்களை இஸ்லாம் என்ற சமையத்துடன் அடையாளப்படுத்தியே, அதாவது 95% மேல்பட்ட சோனகர்கள் இஸ்லாமியர்களாக இருப்பதால் அவர்களை குறிக்கும் முகமாகவே இன்றைய இலங்கை கொடியில் “பச்சை” நிறம் தரப்பட்டுள்ளது. இலங்கைக் கொடியின் சிங்க அடையாலமே அரபியர்களின் அன்பளிப்பென்பது வேறுமொரு கதை.

இதைவிடவும் இன்னுமொரு வரலாறு இந்த “சோனவர்”ருக்கு உண்டாம். அதாவது இது மனித வரலாற்றின் ஆரம்பத்துக்கே செல்கின்றது. நாம் ஏற்கனவே பார்த்த இலங்கையும், இந்தியாவும் இன்னும் பல பிரதேசங்களும் ஓன்றிணைந்த காலப்பகுதி அது. அப்போது முதல் மனிதன் “ஆதம்” என்பவர் படைக்கப்படுகின்றார். அவர் இலங்கையின் பாவாதமலை (Adam’s Peak) அல்லது “சமனல கந்த” என்று சிங்களத்தில் சொல்லும் மலை உச்சியில் சுவனத்தில் (Paradise) இருந்து இறக்கப்படுகிறார். அவரின் காலடி அடையாளம் அந்த மலை உச்சியில் இன்றும் யாத்திரிகர்களால் தரிசிக்கப் படுகின்றது. டார்வின்னின் கூர்ப்பு கொள்கையை நம்புவோர்களைவிட மீதிபேர், அல்லது ஆகக் குறைந்தது மதங்களை நம்புவோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்ட விடயம் மனிதன் இறைவனால் படைக்கப்பட்டான் என்பதே. அப்படியானால் உலகத்தில் ஏதோ ஓர் இடத்தில் முதல் மனிதனின் சஞ்சாரிப்பு இருந்திருக்க வேண்டும். ஆப்ரஹாமின் வழி வந்த மதங்களான யூதமும், கிறிஸ்தவமும், இஸ்லாமும் அந்த முதல் மனிதன் “ஆதாம்” என்றே சொல்கின்றன. உலகத்தின் எந்த இடத்திலும் “Adam’s Peak” என்ற இடம் இல்லாமல் அது இலங்கையில் இருப்பதென்பது சிந்தனைக்கு எடுக்க வேண்டிய முதல் விடயமாகும். அதேநேரம் ஐரோப்பியர்தான் இந்த மலைக்கு அப்படி ஒரு பெயர் வைத்தனர் என்பது ஒரு பொய்யான வாதமாகும் என்பதோடு அப்படித்தான் அவர்கள் அம்மலைக்கு பெயர் வைத்தனர் என்றாலும் அது ஒரு தற்ச்செயலான விடயமாக இருக்க முடியாது. ஐரோப்பியரின் இலங்கைக்கான் வருகை ஆரம்பிக்க முன்னரே பல வெளி நாட்டார் இந்த “ஆதம் மலை”யை தரிசிக்கவென்று வந்துள்ளனர். அதில் பிரதானமானவர் நாம் ஏற்கனவே கண்ட மொரோக்கோ நாட்டைச்சேர்ந்த இப்னு பதுதா ஆவார்.

இந்த ஆதாம் சுவனத்தில் இருந்து வந்த படியால்(மதவாதிகளின் நம்பிக்கைப்படி) அவரின் வழிதோன்றகள் “சுவனர்” என அழைக்கப்பட்டனராம். இந்த அடிப்படையிலேயே சுவனர் திரிபடைந்து “சோனகர்” என்றறியப்பட்டனராம். ஆனால் இந்த சோனகரில் பலர் காலவோட்டதின் பிரகாரம் தமது கடவுள் நம்பிக்கைகளை மாற்றிக் கொண்டுள்ளனர். அது சிதறியும், திரிபடைந்தும் “நாகர்” என மாற்றம் அடைந்ததாகவும், இதன் அடிப்படையில் பாம்பை வழிபடும் “நாகர்”இனம் தோன்றியதாகவும், பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட கடற்கோள்களினால் இலங்கை இந்தியாவில் இருந்து பிரிந்து செல்ல நாகர்கள் இலங்கையின் வடக்கிலும், இந்தியாவில் பெங்களுரை அண்டிய பகுதியிலும், நாகர்லாந்து என்ற பிரதேசத்திலும் அதிகம் காணப்பட, சோனகர் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும், தென் இந்தியாவின் கீழைக்ரை, காவிரி பூம்பட்டிணம், வேலூர் பகுதிகளிலும் இன்றும் சோனகர்களாகவே காணப்படுகின்றனர். இந்த வரலாறு இன்னும் ஐயந்திரிபர நிறுவப்படாமல் இருக்க, சோனகர் அறபு கலப்புடைய இனமாக இந்தியாவிலும் இலங்கையிலும் இன்னும் சில இடங்களிலும் உருப்பெற்று அந்தந்த இடங்களில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே வாழ்ந்து வந்துள்ள வரலாறு சந்தேகங்களுக் கப்பால் நிருபிக்கப்பட்டுள்ள விடயமாகும்.

இருப்பினும் இந்த சோனகர் காலாகாலமாக வாழ்ந்த பிரதேசம் இன்று வரலாற்றில் இருந்து மறைக்கப்படுவதற்கான முயற்சியாகவே புலிகளின் “தமிழீழ வரைபடம்” அமைந்துள்ளது. அதயே இன்று அடிப்படை ஏதும் இல்லாத நாடுகடந்த தமிழீழ அரசு “தமிழீழம்” என்றும், அது தமிழர் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் பூர்வீக பூமியாகவும் சித்தரிக்கின்றது. இதையே இன்றும் புலம் பெயர் தமிழரும் (புலி ஆதரவு, தமிழ் பேசும் முஸ்லிம் என்ற கொள்கை ஆதரவு) ஒரு வேதவாக்காக காவித்திரிகின்றனர். இதைவிடவும் மோசமான விடயம் என்னவென்றால் சுமார் 225 வருட காலமாக இலங்கையின் மலை நாட்டு பகுதிகளில் வாழ்ந்துவரும் இந்திய தமிழர்களை இலங்கை பிரசைகளாக ஏற்றுக் கொள்ளும் சில இலங்கை தமிழர், கி.மு.னான காலப்பகுதியில் இருந்தே இலங்கையில் வாழ்ந்துவரும் “சோனகர்”களை அப்படியாரும் இல்லையென்றும், அவர்கள் சைவத் தமிழர்களாக இருந்து இஸ்லாமியத் தமிழர்களாக மாறியவர்கள் என்றும் எனவே அவர்கள் இன அடிப்படையில் “தமிழர்” என்ற அடையாளத்துடன் மெளனித்து இருக்கும்படியும், அப்படி இல்லாவிட்டால் நாடோடிகளாக இங்கு வந்த மாதிரி திரும்பிப் போய்விடவேண்டும் என்று கூறுவது ஒரு இனத்துக் கெதிரான உரிமை மீறலாகும். படுமோசமான, மட்டரகமான இனத் துவேசமாகும். அது இப்போதே கலைந்தெறியப் படாவிட்டால், இந்த நிலைப்பாட்டில் இருக்கும் தமிழர்களே எம் இனத்தின் முதல் எதிரிகளும் ஓன்றுபட்ட இலங்கையினதும் எதிரிகளாவார்கள்.

எனவே நான் மேலே நிறுவியது இலங்கையின் சோனகர் என்ற இனத்தின் இருப்பை மாத்திரமல்ல, அவர்களுக்கோர் வரையறுக்கப்பட்ட இடமும் இருந்தது என்பதையுமே. சோனகர்களுக்கு ஒர் இடம் இருந்தது என்பது ஆண்டபரம்பரை மீண்டும் ஆள வேண்டும் என்ற த.வி.கூ யின் அசட்டுத்தனமான கூக்குரல் போன்றதொரு கொள்கையை முன்வைத்து முழு சோனகர் இனத்தையும் அழித்தொழிக்கவுமல்ல. மாறாக யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு அதாவது இலங்கை சிங்களவர்களை பெரும்பான்மையாக் கொண்ட பல்லின மக்கள் வாழும் நாடு. அதில் ஒவ்வொரு இனத்தின் உரிமைகளும் மதிகப்பட்டு ஓன்றுபட்ட இலங்கையாக அது இருக்க 21ம் நூற்றாண்டின் வளர்ச்சியில் நாம் தவர விடப்பட்டாமல் இருக்க வேண்டும் என்ற எனது நிலைபாட்டை ஐயந்திரிபர நிறுவவுமே.

கடைசியாக இது ஒரு ஆராய்ச்சி கட்டுரையாக வடிவமைக்கப்படாததால் இதற்கான உசாத்துணை நூல்கலின் விபரம் தரப்படவில்லை. இருந்தும் இந்த தலைப்பில் கலந்துரையாட விரும்புவோர் உங்கள் நியாயனாம் சந்தேகங்களை, தெளிவின்மைகளை, மேலதிக விளக்கங்களை பகிர்ந்து கொள்ள முனைந்தால் இது ஒரு ஆரோகியமான அடுத்த கட்டத்துக்கு எம்மை இட்டுச் செல்லும். மாறாக இதற்குள் மதங்களை இழுத்து அல்லது தேவையிலாமல் வேறு கருத்துக்களை புகுத்தி இதை குழப்ப முற்படுவது நாகரிகமற்ற செயலாகும் என கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

34 Comments

 • BC
  BC

  நாடு கடந்த தமிழீழ ருத்ரகுமாரன் இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள ஒரு முஸ்லிம் பிரமுகர் பற்றி குறிப்பிட்டதை ஏமாற்று போக்கு என்கிறீர்கள். தமிழ்நாட்டில் இருந்து அரபு தமிழன், என்றும் இஸ்லாமிய தமிழன் என்றும் பலர் தங்களை பெருமையுடன் அறிமுகபடுத்தி கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதை நீங்கள் பார்த்ததில்லையா? தமிழ் எங்கட மொழி, இஸ்லாம் எங்கள் வழி என்று இஸ்லாமிய மதத்தை சேர்ந்தோர் எழுதி வாசித்திருக்கிறேன். நீங்கள் உங்கள் சோனக மொழியில் பேசிக் கொண்டிருந்தாலோ அல்லது சிங்களத்தில் பேசிக் கொண்டிருந்தாலோ யாரும் உங்களை தமிழ் அடையாளத்திற்க்கள் கொண்டுவர மாட்டார்கள்.

  Reply
 • BalBoy
  BalBoy

  Puttalam is Al Sonakatheru, don’t worry!

  Reply
 • thurai
  thurai

  யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் சோனகவளவு என்னும் தோம்புப் பெயர்கள் உண்டு. அதோடு சோனகதெருவே இறுதியாக சோனகர் ஒன்றாகா வாழ்ந்த பகுதியாக யாழ்ப்பாணத்தில் உள்ளது. எதற்காக சோனகர் வடபகுதியில் பரந்து வாழ முடியாது போனதென்பதைப் பற்ரிய ஆய்வினை
  அறியத்தந்தால் உண்மைகள் வெளிவர உதவியாக இருக்கும்.– துரை

  Reply
 • Kusumpu
  Kusumpu

  இப்ப நிஸ்தாரின் பிரச்சனை என்ன?. உங்களை யார் சோனகர் இல்லை என்றது. இருந்திட்டுப்போங்களேன். நீங்கள் நீங்களாகவே இருங்கள் எங்களுடன் சொறியவேண்டாம் என்கிறோம். இந்தியத்தமிழர்கள் உங்களுக்குப் பிறகு வந்தவர்கள் தான் ஆரம்பத்தில் சிலர் எதிர்த்தாலும் நாம் இன்று அவர்களை மனதார தமிழர்களாக எம்மவராக ஏற்றுள்ளோம். எதிரியுடன் நின்று கைதோத்து எம்மை அழிப்பதற்கு காலாக இருந்துவிட்டு நாங்களும் உங்களில் ஒருவர் என்று சொல்ல முயலாதீர்.

  Reply
 • நந்தா
  நந்தா

  கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் மாத்திரமே “யவனர்கள்” அதவது கிரேக்கர்கள் வியாபாரத்துக்காகவும் பின்னர் படை வீரர்களாகவும் வந்துள்ளனர். தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கிரேக்க பொன் நாணயங்கள் அதற்குச் சாட்சியாக இன்றும் உள்ளன. அரேபியாவில் அப்படி நாணயங்கள் காணப்பட்டதாக வரலாறு கிடையாது.

  கிரேக்கர்கள் இருந்த குடியிருப்புக்கள் “ஜோனக புரம்” என்றும் அழைக்கப்பட்டுள்ளன.

  ஜவன, யவன, ஜோனக என்பவற்றின் திரிபே தற்போதைய சோனக என்பது.

  கிரேக்கர்களின் இடத்தில் அரேபியர்கள் என்று ஒரு “செருகல்” செய்து வரலாற்றை விழுங்க நிஸ்தார் முயல்கிறார்.

  இனி யவன ராணி என்று சாண்டில்யனின் கதையை இந்த முஸ்லிம் என்ன பண்ணுவாரோ தெரியவில்லை.

  முஸ்லிம் சமயம் பிறக்க முன்னர் இருந்த தொடர்புகளை இவர் இப்பொழுது முஸ்லிம்களுக்கு சொந்தம் கொண்டாடுகிறார். அது எப்படி?

  தமிழைப் பேசிக் கொண்டிருப்பதற்கு காரணம் சொல்ல முடியாமல் இருந்து கொண்டு ஏதோ ஒரு அரேபியக் “கனக்ஷனுக்கு” உரிமை கொண்டாடுகிறார்.

  அது மாத்திரமல்ல இந்துக்களாக இருந்து மதம் மாறிய முஸ்லிம்கள் பற்றி வாயே திறக்காமல் முஸ்லிம் அல்லாத அரேபியன் வந்து போனதை இஸ்லாமுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்.

  சோனக(ர்) என்பதே ஒரு திருடப்பட்ட பெயர். இலங்கயிலுள்ள முஸ்லிம்களுக்கும் கிரேக்கர்களுக்கும் என்ன சம்பந்தம்? தமிழைப் பேசிக் கொண்டே “தமிழர்” அல்ல என்று தலையை சுற்றும் இவர் காது குத்தும் தொழிலுக்குப் போகலாம்.

  Reply
 • Mohamed
  Mohamed

  It is better to avoid discussing this type of issue.It may create some contradictions and conflicts between the Tamil and Muslim ethnic groups.
  Mohamed Shareef Asees

  Reply
 • தோஸ்து
  தோஸ்து

  உங்களின் தகவலில் உள்ள உண்மைதன்மைக்கு தங்களின் அண்மைக்கால சில பதிவுகளே சான்று பகர்கின்றன. கடந்த 75 வருடகால நிகழ்வுகளிலேயே இவ்வளவு தகவல்திரிபு செய்த நீங்கள் கி.மு கி.பி என்றுதரும் எந்த ஆதாரமற்ற தகவல்களை அடுத்தவர்கள் நம்பிவிடுவார்கள் என்ற தளராத நம்பிக்கையை பராட்டத்தான் வேண்டும்.

  1)இது 2010 இன்றும் 9 வயது குழந்தை UKயில் குழந்தை பிறப்பிக்கிறார்கள். ஸ்பெயினில் திருமண வயது 13. எந்த யுகத்தில் இருக்கிறிகள்-Mohamed Nisthar on August 11, 2010 10:20 pm
  Spain: 18, 16 with parental consent.
  en.wikipedia.org
  2)இந்த உலகத்தின் முதல் பல்கலைக்கழகமான கி.பி 859ல் மொரோக்கோ (Morroco) வில் உள்ள பெஸ்(Fes) நகரத்தில் ஆரம்பிக்கப்பட்டு இன்றும் கல்வி சேவை செய்து கொண்டிருக்கும் பெஸ் பல்கலைக்கழகமாகட்டும் Aug19கட்டுரைகள்/ஆய்வுகள், நிஸ்தார் எஸ் ஆர் எம் which was founded in 859[1] The madrasa has been (and still is) one of the leading spiritual and educational centers of the Muslim world. The madrasa has been elevated to university status in 1947-en.wikipedia.org

  //யூத இனத்துக்கு எதிரான ஆரிய ஹிட்லரின் இன அழிப்பும்//
  ஆரியஹிட்லரின் இன அழிப்பிலிருந்து தப்பி தமது தாயகமாக அவர்கள்கருதிய இஸ்ரேலிற்கு வந்தபோது அவர்களை வேரோடும் வேரடிமண்ணோடும் அழிக்க இன்றுவரை கங்கணம் கட்டி நிற்கும் முஸ்லிம்களை எப்படி அழைப்பது.

  // இலங்கை சோனகரை தமிழர் என்று குறிப்பிடுவது விருப்பம்மில்லாத ஒருவரை பலாத்கார கலியாணத்துகு ஒப்புதல் அளிக்க செய்யும் முயற்சி போன்றது. அது ஒரு இனத்துக் கொதிரான உரிமை மீறல். இதைவிட வேறு வார்த்தைகளால் இந்த நிலைப்பாட்டை விளங்கவைக்க முடியாது//
  நியாயமான சிந்தனை. சிறிலங்கா என்ற நாட்டின் அதிகாரத்தை ஏற்காது தமிழீழம் என்ற நாட்டை ஸ்தாபிக்க விரும்பும் வடகிழக்கு தமிழரின் உரிமையில் தலையிடும் சோனகரின் அதிலும் வடமேல்மாகண சோனகரின் சிந்தனை மற்றும் செயற்பாட்டை எப்படி அழைக்கிறீர்கள்.

  //இந்த நிலைப்பாட்டில் இருக்கும் தமிழர்களே எம் இனத்தின் முதல் எதிரிகளும் ஓன்றுபட்ட இலங்கையினதும் எதிரிகளாவார்கள்.//
  உங்களின் நிலைப்பாட்டை ஏற்க மறுப்பவர்களை எதிரியாக பிரகடனம் செய்யும் உங்களிற்கும். தங்களின் நிலைப்பாட்டை ஏற்க மறுப்பவர்களை தங்களின் நாட்டை/ பிரதேசத்தை விட்டு வெளியேறு என்பவர்களிற்கும் என்ன சிந்தனை வேறுபாடு?

  Reply
 • இரவி சங்கர்
  இரவி சங்கர்

  நிஸ்தார் என்னுடைய கேள்வி இதுதான். இலங்கையில் வாழும், தமிழ் மட்டுமே தெரிந்த, இஸ்லாம் மதத்தினை பிறப்பிலிருந்து பின்பற்றி வந்த, நாச்சியா உம்மா என்ற பெண், தமிழ் மட்டுமே தெரிந்த சைவசமயத்தை பின்பற்றுகிற வேலாயுதம் என்பவரை திருமணம் புரிந்து இஸ்லாம் மதத்தை துறந்து ஒரு எந்த மதத்தையும் பின்பற்றாமல் (நாஸ்திகவாதியாக) வாழ்ந்தால் அவரை எப்படி அழைப்பது?

  அ) சோனகப் பெண்
  ஆ) தமிழ்ப் பெண்
  இ) சிறிலங்கா முஸ்லீம் பெண்
  ஈ) இஸ்லாமியப் பெண்
  உ) அப்படி நடக்காது, அல்லது நடக்க விடமாட்டோம்

  Reply
 • Kusumpu
  Kusumpu

  /அரேபியாவில் அப்படி நாணயங்கள் காணப்பட்டதாக வரலாறு கிடையாது/ நந்தா
  எப்படி இருக்கும்? இவர்களிடம் “நாணயம்” என்றும் இருந்ததில்லையே நந்தா. இவர்களிடம் இருந்து எப்படி நாணயத்தை எதிர்பார்க்கலாம்.
  சாண்டிலியனின் யவணராணியை மட்டுமல்ல முழு இலங்கைக்கும் அறுக்கும் வேலைதானே நடக்கிறது.

  /முஸ்லிம் சமயம் பிறக்க முன்னர் இருந்த தொடர்புகளை இவர் இப்பொழுது முஸ்லிம்களுக்கு சொந்தம் கொண்டாடுகிறார். அது எப்படி?/ இது கூடவா தெரியவில்லை நந்தா. இவர்கள் அல்லாவின் பிள்ளைகள் எந்த முஸ்லீமையே அவர்களின் பிள்ளைகளையோ கேட்டுப் பாருங்கள். தாம் அல்லாவின் பிள்ளைகள் என்பார்கள். எனக்கோரு கேள்வி அப்பன் என்ன செய்தான் என்பதுதான். சம்பந்தர் அழுததுபோல் அம்மையே அப்பா என்று அழலாம் போல் இருக்கிறது. இஸ்லாம் பிறக்க முன்னரே அல்லா குல்லாப் போட்டுவிட்டாரல்லவா. அல்லாவுக்கு முன்னரே சிவன் வந்துவிட்டார் என்று சொல்லிப்பாருங்கள். ஈரான் சவுதியில் இருந்து உங்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படும்.

  /தமிழைப் பேசிக் கொண்டே “தமிழர்” அல்ல என்று தலையை சுற்றும் இவர் காது குத்தும் தொழிலுக்குப் போகலாம்/ போவே மாட்டார்கள் காரணம் தங்களுக்குத் தாங்களே மாறி மாறிக் குத்துகிறார்கள் தெரியவில்லையா. போதாது போனால் விக்கிப்பீடியாவில் உள்ளதை தமிழாக்கம் செய்து கொண்டு ஓடிவருவார் நிஸ்தார் தான் ஏதோ கண்டுபிடித்தது மாதிரி.

  தோஸ்து! நல்லாகத் தோசை போட்டிருக்கிறீர்கள். இரண்டு பக்கமும் சுட்டாலும் அவர்களுக்கு விளங்காது. இன்னும் கொஞ்ச நேரத்தில் பாருங்கள் ஒரு மகாபாரதமே வரும். ஆனால் அங்கே இராமன் சீதைக்குச் சித்தப்பா என்று இருக்கும்.

  Reply
 • thayumanavar
  thayumanavar

  இலங்கையில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் சோனக இனத்தைச் சார்ந்தவர்களே! இலங்கையில் இஸ்லாம் பரவுவதற்கு முன்னும் சோனக இனம் இருந்தது. சோனக மொழியும் இருந்தது.

  அதேநேரம், தமிழர் இனத்திலிருந்தும் இஸ்லாத்தைத் தழுவியவர்கள் ஏராளமான இருக்கின்றனர். அண்மைக்காலமாக சிங்கள இனத்திலிருந்தும் இஸ்லாத்தைத் தழுவுபவர்கள் கணிசமான அளவு அதிகரித்திருக்கிறது. தமிழைப் பேசுவதால் மாத்திரம் தமிழர் என்று அடையாளப்படுத்த முனைவது தவறு. இலங்கை அரசும் எப்போதோ முஸ்லிம்களை சோனகர் இனம் என்று ஏற்றுக் கொண்டுள்ளது.

  சிங்கள, தமிழ் இன மக்கள் இஸ்லாத்தைத் தழுவினாலும் காலப்போக்கில் அவர்கள் முஸ்லிம் என்றுதான் அழைக்கப்பட்டனர். மாறாக, அவர்கள் அவர்களின் இன நாமத்தின்மூலம் அழைக்கப்படுவதில்லை. இஸ்லாத்தைத் தழுவிய தமிழர்களுடன் உரையாடும்போதுகூட, அவர்கள் தாங்கள் முன்னாள் தமிழர் என்று சொல்கிறார்களே ஒழிய, தங்களை தமிழினம் என்று சொல்வதில்லை. சோனக இனத்தைச் சார்ந்தவர்கள் என்றுகூட சொல்வதில்லை. முஸ்லிம் என்று அடையாளப்படுத்தப் படுகின்றனர். சிங்கள மக்களும் அவ்வாறே! ஆனால், இஸ்லாத்தை தழுவிய தமிழ், சிங்கள மக்களின் பிள்ளைகளை சோனக இனம் என்றே, பிறப்புச்சாட்சிப் பாத்திரத்தில் பதிகின்றனர். இதை யாரும் ஆட்சேபிப்பதும் இல்லை.

  மேல் மாகாணத்தில் குறிப்பாக நீர்கொழும்பில் வசிக்கும் மக்கள் பெரும்பான்மையினர் கிறிஸ்தவர்கள். மூன்று, நான்கு பரம்பரைக்கு முன், அவர்கள் அனைவரும் தமிழர்கள். தற்பொழுது அவர்கள் தங்களை சிங்களவர் என்று சொல்கின்றனர். வீடுகளில் சிங்களம்தான் பேசுகின்றனர். கரையோரத்தில் வாழும் கிறிஸ்தவர்கள் அநேகமானோர் வீட்டில் தமிழ்தான் பேசுகின்றனர். ஆனால், தங்களை சிங்களவர் என்று சொல்லிக் கொள்கின்றனர். தமிழ்ப் பிரிவினைவாதத்தை எதிர்க்கக் கூடியவராகவும் இருக்கின்றனர்.

  Reply
 • குணசிங்கம் பரணிதரன்
  குணசிங்கம் பரணிதரன்

  சோனகர் என்றோர் இனமுண்டு அதற்கு ஒரு குணமுண்டு… என்று சொல்வதன் மூலம் நிஸ்தார் எடுத்த முயற்சி மேலும் மேலும் தமிழ் பேசுகின்ற சமூகத்தைச் சுக்கு நூறாகப் பிளவடையவே வழிவகுக்கும் என்பதில் ஐயமேதுமில்லை.

  நிஸ்தார் அவர்களே, தமிழர்கள் என்று சுட்டப்படுபவர்கள் யார்?

  1. வன்னியில் காட்டுமிராண்டித்தனத்தை தமக்குள்ளேயே கட்டவிழ்த்து விட்ட காட்டுமிராண்டிகளா?
  2. கொழும்பில் இருந்து கொண்டு ஊடகங்களை மையமாக வைத்து அரசியல் பண்ணி தமிழ் அரசியல் மூலம் சுவிஸ் வங்கி கணக்குகளை நிரப்பும் அரசியல்வாதிகளா?
  3. புலம்பெயர்ந்த மண்ணில் கடனட்டை ஊழல், களவாணித்தனம் செய்து சிதறிப் போயிருக்கின்ற ஒரு கூட்டமா?
  4. குடியேறிய பூமியில் கலாச்சாரம் மற்றும் மொழியைத் தொலைத்து விட்டு விம்பிள்டன் ஓடியனிலும், இன்னோரன்ன மேற்கைத்தய நாடுகளின் சினிமாச்சாலைகளிலும் தென்னிந்திய மசாலா சதை வியாபாரிகளின் பித்தலாட்டுத் தனமான சினிமாக்களை பார்க்கவென்று அணி வகுக்கின்றவர்களா?
  5. வெய்யிலிலும், வேர்வையிலும் தோய்ந்து கந்தகக் கொதிப்பாய் பிளந்து போன இலங்கை மண்ணில் வாழ்விழந்து நிற்கின்ற தமிழ் மட்டுமே பேசத் தெரிந்த பாமரர்களா?

  யார் தமிழர்? இதற்கான விடையக் காண முயல்தல்தான் நலமேயன்றி, மேலும் ‘தமிழ் பேசும் சமூகத்தை’ சிதிலமாக்கும் எண்ணத்துடன் சரித்திரத்தை திரிபு படுத்திக் கதைகூறுதல் அல்ல என்பதனை நாம் ஏற்றுக் கொள்ளுதல் அவசியம். அது என்னைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுகின்ற தமிழ்பேசுகின்ற மக்களைப் பொது நீரோட்டத்திலிருந்து மேலும் அன்னியமாக்கி விடும்.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  இரவிசங்கர்! /நிஸ்தார் என்னுடைய கேள்வி இதுதான். இலங்கையில் வாழும்இ தமிழ் மட்டுமே தெரிந்தஇ இஸ்லாம் மதத்தினை பிறப்பிலிருந்து பின்பற்றி வந்தஇ நாச்சியா உம்மா என்ற பெண்இ தமிழ் மட்டுமே தெரிந்த சைவசமயத்தை பின்பற்றுகிற வேலாயுதம் என்பவரை திருமணம் புரிந்து இஸ்லாம் மதத்தை துறந்து ஒரு எந்த மதத்தையும் பின்பற்றாமல் (நாஸ்திகவாதியாக) வாழ்ந்தால் அவரை எப்படி அழைப்பது/

  இதற்குச் சந்தர்ப்பம் மிகக் குறைவு இரவிசங்கர். வேற்று மதத்தவர்களை இஸ்லாம்பெண் மணம் செய்தால் மரணமே பதில். கட்டுக்கதைகள் கேட்க நல்லாகத்தான் இருக்கும்.

  குணசிங்கம் பரணீதரன்- நிஸ்தாரின் நோக்கமே அதுதானே இந்த நிஸ்தார் ஒரு பிரதிநிதியே தவிர முழு முஸ்லீம் சமூகமே பிரித்துப் பிழைப்பது. உலகில் ஒரு நாட்டிலாவது ஒற்றுமையாக இந்த மதம் இருந்ததாக இருக்க விட்டதாக ஒரு இடத்தைக் காட்டுங்கள். தமிழர்கள் சிங்களவர்கள் என்று பிரிந்த அடிபட்டு தமிழர் அழிந்தபோதும் எரிகிற வீட்டில் பிடுங்கிய கொள்ளி மிச்சம் என்று எண்ணுபவர்கள் சோனகர்கள். மற்றவர்களைப் பிரித்து தாம் கொழுப்பார்கள். புலிப்போரில் அழிந்தது தமிழர்களும் சிங்கள இராணுவமுமே கொழுத்தது சோனகர்.

  தாயுமானவர்! அது என்ன சோனகமொழி அப்படி ஒரு மொழி. உலகில் மொழிப்பட்டியலில் தமிழுக்கு ரிஏஎம் என்று குறியீடு உண்டு. சோனகமொழி என்ற ஒன்று எங்குமே கிடையாது.

  /தமிழைப் பேசுவதால் மாத்திரம் தமிழர் என்று அடையாளப்படுத்த முனைவது தவறு/ ஐயோ நீங்கள் தமிழைக் கொன்று பேசுவதை விட பேசாமல் இருப்பதே நன்று. நீங்கள் சொல்லும் சோனகமொழியில் பேசுங்கள்.
  /சிங்கள, தமிழ் இன மக்கள் இஸ்லாத்தைத் தழுவினாலும் காலப்போக்கில் அவர்கள் முஸ்லிம் என்றுதான் அழைக்கப்பட்டனர். மாறாக, அவர்கள் அவர்களின் இன நாமத்தின்மூலம் அழைக்கப்படுவதில்லை/யாருக்கு நாமம் போட வெளிக்கிட்டிருக்கிறீர்கள்.
  ஒரு விசயத்தை மனதில் வைத்துக் கொள்ளுகள் எந்த ஒரு கிறிஸ்தவனும் தமிழ் கிறிஸ்தவரானாலும் சரி சிங்களக் கிறிஸ்தவரானாலும் சரி தன்னை மதம்நாடி அடையாளப்படுத்துவதில்லை சோனகர்களைப் போல்.

  Reply
 • BC
  BC

  Thayumanavar ,உங்கள் தமிழ் இனத்தின் மொழியான தமிழில் தாயுமானவர் என்று அழகான பெயர் வைத்து கொண்டு முஸ்லிம் மதத்தை பின்பற்றும் ஒரே ஒரு காரணத்திற்காக இலங்கையில் இஸ்லாம் பரவுவதற்கு முன்னும் சோனக இனம் இருந்தது, சோனக மொழியும் இருந்தது என்று மாபெரும் அபந்தமாக கதைக்கலாமா?
  தமிழைப் பேசிக் கொண்டே நான் தமிழன் அல்ல என்று கூறும் சிந்தனையை எங்கேயிருந்து பெற்றீர்கள்?
  இரவி சங்கர் சொன்ன மதிரி ஒரு தமிழர் பிறப்பால் இலங்கை முஸ்லீம் பெண்ணான ஒருவரை திருமணம் செய்திருப்பது நேரிலேயே தெரியும் அந்த சகோதரி தன்னை தமிழ் பெண்ணாகவே அறிமுகபடுத்துகிறார்.

  Reply
 • BBC
  BBC

  இலங்கை சோனகரை தமிழர் என்று குறிப்பிடுவது விருப்பம்மில்லாத ஒருவரை பலாத்கார கலியாணத்துகு ஒப்புதல் அளிக்க செய்யும் முயற்சி போன்றது. அது ஒரு இனத்துக் கொதிரான உரிமை மீறல். இதைவிட வேறு வார்த்தைகளால் இந்த நிலைப்பாட்டை விளங்கவைக்க முடியாது.// nisthar

  ‘சிறுமியின் திருமணம் சட்டவிரோதம்’ BBC

  மலேசியாவில் 11 வயது இஸ்லாமிய சிறுமி ஒருத்தியை, 41 வயதுக்காரர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தமை சட்ட விரோதம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தச் சிறுமியின் தந்தைக்கு தனது மகளை, அந்த நபருக்கு திருமணம் செய்து வைப்பதில் ஆர்வம் எதுவும் இல்லை என்றும், அச்சுறுத்தல் மற்றும் பலவந்தம் ஆகியவை இந்தத் திருமணத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் இஸ்லாமிய நீதிமன்றத்தின் நீதிபதி கண்டறிந்துள்ளார்.

  மலேசியாவில் 16 வயதுக்கு உட்பட்ட முஸ்லிம் பெண்கள், இஸ்லாமிய நீதிமன்றத்தின் அனுமதியுடன் திருமணம் செய்துகொள்ள முடியும். இந்த 11 வயதுச் சிறுமியை, அந்த 41 வயதுக்காரர் கடந்த பெப்ரவரி மாதத்தில் தனது நான்காவது மனைவியாக திருமணம் செய்துகொண்டார்.

  இந்தத் திருமணம் செல்லுபடியாகாது என்று இஸ்லாமிய நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதற்கு அந்தப் பெண்ணுக்கு திருமண வயது வரவில்லை என்பது காரணமல்ல. அவர்கள் இஸ்லாமிய சட்டங்களை பின்பற்றவில்லை என்பதுதான் அதற்குக் காரணம்.

  16 வயதுக்கு உட்பட்ட இஸ்லாமியப் பெண்கள் இஸ்லாமிய நீதிமன்றத்தின் அனுமதியுடன் திருமணம் செய்துகொள்ள அங்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

  அங்கு சிறார் திருமணங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்று பெண் உரிமை அமைப்புக்கள் குரலெழுப்புவதற்கு இந்தத் திருமணம் தூண்டியயுள்ளது.

  மலேசிய சிறார் திருமணம்
  இஸ்லாமிய பெண்கள் பூப்பெய்தினால் திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை காரணமாக, இந்த நடைமுறை தொடர்வதாக இஸ்லாத்தில் உள்ள சகோதரிகள் என்ற அமைப்பு கூறுகிறது.

  இந்த மாத முற்பகுதியில், பொது வைபவம் ஒன்றில் வைத்து 14 வயதுப் சிறுமி ஒருத்திக்கு 23 வயது ஆசிரியரை திருமணம் செய்து வைத்தார்கள்.

  திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதெல்லையை 18 ஆக அதிகரிக்க வேண்டும் என்று பெண்ணுரிமை அமைப்புக்கள் கோருகின்றன.

  Reply
 • குணசிங்கம் பரணிதரன்
  குணசிங்கம் பரணிதரன்

  தமிழில் பேசி எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள் அனைவரும் தமிழராகவும் முடியாது, இஸ்லாமியப் பெயர்கள் உள்ளதால் எவரும் முஸ்லிமாகவும் முடியாது…

  தமிழ் என்பது மொழி. தமிழர் என்பது ஒரு மொழிவழி மக்கள் குழு. மொழிக்கும் மதத்துக்கும் இந்த நவீன யுகத்தில் பெரிதாய் ஒன்றும் சம்பந்தமில்லை.

  மதத்தின் பெயராலும் மொழியின் பெயராலும் அழிந்தது போதும். மனிதராய் வாழக் கற்றுக் கொள்ள வேண்டிய நேரமிது. விதண்டாவாதமும் வீண் வாதமும் தேவையில்லாத முரண்பாடுகளை மட்டுமே உருவாக்கும்.

  ஒன்று பட்டால் உண்டு வாழ்வு! அதனை நிஸ்தார் விரும்புகின்றாரா? அப்படியாயின் ஏனிந்த பிரிவினைவாதக் கட்டுரை? தேவைதானா??

  எழுத்துச் சுதந்திரம் என்பது இருபக்கமும் தீட்டப்பட்ட கத்தி மாதிரியானது – அதனைப் பிழையாகக் கையாண்டால் நம்மையே காயப்படுத்தி விடும். இதனை நிஸ்தார் அறிந்துகொள்தல் அவசியம்.

  Reply
 • kovai
  kovai

  நிஸ்தார்!
  //..யூத இனத்துக்கு எதிரான ஆரிய ஹிட்லரின் ‘இன அழிப்பும்’, ரூவெண்டா நாட்டில் ஹூட்டு, டுட்சி இனங்களுக்கிடையிலான ‘இனவழிப்பு’ நடவடிக்கைகளும், சூடானில் பூர்விக மகளுக்கும் ஜஞ்சூவின் அறபு நாடோடிகளுக்கும் இடையிலான ‘அழிப்பு’ நடவடிக்கைகளும், சேர்பியாவில் பொஸ்னிய ‘இன அழிப்பு’ செய்யற்பாடும், இலங்கையிலே அரசாங்கம், புலி என்ற போர்வைக்குள் ‘பலி’யாக்கப்பட்ட மக்களும் இந்த பரிதாப நிலையின் சான்றுகள்…//

  நீங்கள் கவனமாக தேர்ந்தெடுத்த சொல்லாடல்களின்படி,
  யூதர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் நடந்தால் அது இனவழிப்பு.
  முஸ்லிம்களிடையே நடந்தால் அது வெறும் அழிப்பு.
  அதுவே தமிழர்களுக்கு நடந்தால் அது வெறும் பலியே.

  உங்கள் நோக்கமும், சிந்தனை முறையும் வெளிப்படையானவை.

  எழுபதின் பிற்பகுதியில் முதன் முதலாக மட்டக்களப்பு சென்ற போது, அங்கே சந்தித்த எல்லாத் தமிழ் மக்களும், “தொப்பி பிரட்டி முஸ்லிம்களை விட சிங்களவர்கள் மேல்” என்று சொன்னதை, இப்போதுதான் என்னால் புரியக் கூடியதாகவிருக்கிறது.

  உங்களுக்கிருக்கும் ‘எண்ண’ மிதப்பில், தமிழர்களிடம் ‘சருவச்சட்டி’ வாங்கி, அதில் ‘பிரி’யாணி பண்ணுகிறீர்கள்.

  உலகின் பொருளாதாரத்தையும், வரலாற்றையும், நாகரிகத்தையும், மனிதப் பண்புகளையும், “பாலைவனத்தின் மணல்களாகப் பரவிய யூத, முஸ்லிம் மதவெறியர்கள்” சின்னாபின்னப் படுத்துகிறார்கள் என்பதே, உங்கள் எழுத்துகளிலும் உண்மையாகி நிற்கிறது.

  பிற்குறிப்பு:
  இப்படித்தான் ஜே.ஆர்.ஜேயவர்த்தனா என்ற சிங்கள வெறியனை, கீழக்கரை “முஸ்லிம்”வழி என ஆய்வு எழுதப்பட்டு, மறைப்பு செய்யப்பட்டதாக பல்கலைக்கழக மட்டத்தில் பேசப்பட்ட விடையம்.
  தொடர்ந்து, யாராவது, பாண்டிய மன்னன் பரிசளித்த நகரந்தான் ‘Paris(France)’ எனவும் எழுதுங்கள்.

  Reply
 • Anton ரவி
  Anton ரவி

  //தமிழில் பேசி எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள் அனைவரும் தமிழராகவும் முடியாது//

  மிகவும் நல்ல கருத்து பரணிதரன் அவர்களே! மேற்படி கருத்தை நாம் தமிழ் கல்விமான் கூட்டத்துக்குப் பொருத்தப்படுத்திப் பார்க்க வேண்டும்.

  தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தும் பி.எச்.டி பட்டம் பெறவும் எம். எஸ்.சி பட்டம் பெறவும் வெளிநாடு சென்று வந்தமையால் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான, விவசாய, மற்றும் மருத்துவ பீட விரிவுரையாளர்களுக்கு தமிழில் உரையாடும் வல்லமை இல்லாது போய் விட்டதாம். இதனை அவர்கள் பெருமையாகச் சொல்லுகின்றார்கள்.

  இந்தப் படித்த மனிதர்களின் தலையில் நன்றாக ஓங்கிக் குட்டினால் அவர்கள் “oh my mommy, oh my daddy” என்றா கதறியழுவார்கள்?

  இதனைப் போன்ற பாவனைக்கார நோக்கில்தான் (தேவையில்லாமல்) நிஸ்தார் வேண்டுமென்றே குப்பையைக் கிளறுகின்றார்!

  Reply
 • நந்தா
  நந்தா

  முஸ்லிம் மதத்தின் ஆணையிடலின்படி முஸ்லிம்கள் அல்லாதவர்களினால் எழுதப்பட்ட “வரலாறுகள், அறிவு நூல்கள்” அனைத்தும் பொய் என்றும் அவை அனைத்தும் அழிக்கப்பட வேண்டும்.

  சந்திரனில் மனிதன் இறங்கியதையே “பொய்” என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் உண்மையிலேயே “தனிக்குணம்” உள்ளவர்கள்தான். அவர்களின் இஸ்லமியக் கோட்பாடுகளின்படி இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் அவர்களைவிட “கீழானவர்கள்” என்பது மாத்திரமல்ல அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் அல்லது மதமாற்றம் செய்யப்பட வேண்டியவர்கள்.

  இவர்கள் சிறுபான்மையாக உள்ளதினால் மற்றவர்களை ஏமாற்ற எந்த வழிமுறைகளையும் கையாளலாம் என்பது அரேபிய முகமதுவின் உபதேசம். அதை நிஸ்தார் கன கச்சிதமாக கடைப்பிடிக்கிறார்.

  அரேபியர்கள் கடல் கொள்ளைக்கரர்களாகவே இருந்தவர்கள். இன்றும் சோமாலியர்கள் நடத்தும் கடல் கொள்ளைகளும் அல்லாவின் ஆணைப்படியே நடத்துகிறார்கள். சாராயம் குடிப்பது பாவம் என்று சொல்லும் இஸ்லாம் “அபின்” உற்பத்தியை ஆப்கானிஸ்தானில் எப்படி அனுமதிக்கிறது?

  Reply
 • maheshan
  maheshan

  /நாச்சியா(ர்)/
  பெயருக்கு இப்படி அடைப்புக்குறி போட்டு இருபெயர் கொள்ள (நாச்சியா / நாச்சியார்) யாரும் எழுதுவதில்லையே?….

  Reply
 • thiru
  thiru

  இந்திய பிரதேசத்தில் இந்திய கலாச்சாரத்திற்கான உறவுகளை வளர்க்கும் பணியில் இந்நிய மொழிகளடன் சிங்களத்தையும் இணைத்து இயங்க ஆரம்பிக்க வேண்டிய தருணம் வந்துள்ளதை நிஸ்தாரின் கட்டுரை எடுத்துரைக்கிறது.
  நிஸ்தார் தனது நினைவுகளுக்கு வரலாறு எழுதியுள்ளார் என்பதே இங்கு சரியான சொல்லாடலாகும் இல்லாவிட்டால் இதற்கு என்ன ஆதாரம் தந்துள்ளார் எங்கே இருந்து இவற்றை பொறுக்கியெடுத்துள்ளார்

  இலங்கையில் மக்கள் எப்படி எந்த நிலப்பரப்பில் வாழ்கிறார்கள் என்பதை அவதானித்து விட்டு இப்படியாக ஒரு புனைவை எழுதியுள்ளார் இப்படியாக வரலாற்றில் உள்ள பல திரிபுகளை உலகம் அறிந்தே உள்ளது

  இனிமேல் இதை ஒரு ஆதாரமாக கொண்டு ஒருகைடாவை உருவாக்குவார்கள் இருந்து பாருங்கள் அதற்காக நாடு மொழி என்றெல்லாம் அத்திவாரம் போட்டாச்சு ஒரு முள்ளிவாய்க்காலை காலாஓயாவில் போடலாம்.

  “இஸ்லாமிய கைடாக்கள்/தொய்யாதக்கள் இந்தியாவிலிருந்து வந்து இலங்கையில் தமது இரகசிய வேலைகளை அரம்பித்துள்ளனர்” -பிரிஜ செய்தி/

  Reply
 • logan
  logan

  அறேபியர்கள் தான் இலங்கை இந்தியா போன்ற நாடுகளுக்கு எல்லாவற்றையும் கொண்டு வந்தாங்க என்று நிஸ்தார் நினைக்கிறார் இதற்கு மேலே எப்படி இஸ்லாமிய சாயத்தை அடிக்கலாம் என்று இன்னொரு கூட்டம் பாத்திட்டு இருக்கு எப்படியோ இப்படியான ஆட்களையும் தேசத்தில் பார்ப்பதில் திருப்தி.

  Reply
 • Ajith
  Ajith

  நிஸ்தாரின் அடிப்படை நோக்கமே தமிழ் பேசும் மக்களிடயே நிரந்தர பிரிவை வளர்பதே. சோனகர் தனி இனமா அல்லது தனி மதமா என்பது ஒரு பிரச்னை அல்ல. சாதரண சோனக/முஸ்லிம் மக்களுக்கு நிஸ்தார் கூறும் எந்த வேறுபாடும் புரியாது. அவர்கள் அப்படியும் நினைக்க வில்லை. அவர்கள் மதரீதியான தமது அடையாளத்தையே தாம் இரு இனத்தின் அடையாளமாக வைத்திருக்க விரும்புகிறார்கள். முஸ்லிம்கள் இந்த அடையாளத்தை பாவித்தே தமது பொருளாதார அரசியல் லாபங்களை அடைகிறார்கள். சிங்கள மக்களின் தமிழ் தமிழர் எதிர்ப்பு போக்கினை சாதகமாக பாவிகிரர்கள். அவர்கள் தங்கள் தங்களை ஒரு தனி இனமாக நோக்குவதை தமிழர்கள் என்றும் கேள்வி குறியாகவில்லை. ஆனால் இவர்கள் இலங்கை அரசை ஆளும் சிங்கள இனத்திடம் தனி இனம் என்ற கோரிக்கையை முன் வைபதில்லை. ஏன்? ஆனால் தமிழர் உரிமை குரல் எழுப்பும் பொது இடையே புகுந்து தாம் தனி இனம் என்பார்கள். இந்த இடத்தில சிங்கள தமிழ் மக்களிடையே ஏற்படும் புரிந்து உணர்வே இவர்களை தனிமை படுத்த சரியான பாதையாகும்.

  Reply
 • thangam
  thangam

  முஸ்லீம்கள் வியாபாரிகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இலங்கை வரலாற்றை பொறுத்தவரை அரசியலில் வியாபாரத் தன்மைமையை வெளிப் படுத்துயிருக்கிறார்கள். அவர்களின் அரசியல் போராட்டம் என்பதே இருக்கிற அரசியல் “கோட்டா” எடுப்பது பற்றியோ. இது இப்படியிருக்க 85 காலப்பகுதியில் மன்னாரில் ஏ.கே.47 உடன் சிங்கள இராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் மரித்துப் போனவனும் ஒரு இலங்கை முஸ்லீம் பாலகன் என்பதையும் குசும்பு போன்றவர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
  முஸ்லீம்களுக்கு தனிகுணம் இருக்குமாக இருந்தால் அதை முறையடிக்கக் கூடிய சகல முறைகளையும் தூயதமிழன் கண்டுபிடித்து வைத்திருக்கிறான். இந்த தூயதமிழன் புலம்பெயர் நாட்டிலேயே குடிபெயர்ந்திருக்கிறான். இலங்கை முஸ்லீம் வியாபாரிகளை முறையடிக்கிறயளவிற்கு யாழ்பாணத்தமிழன் முன்னேறியிருக்கிறான்.

  Reply
 • thayumanavar
  thayumanavar

  //இந்த இடத்தில சிங்கள தமிழ் மக்களிடையே ஏற்படும் புரிந்து உணர்வே இவர்களை தனிமை படுத்த சரியான பாதையாகும்///AJITH

  முஸ்லிம்களை தனிமைப்படுத்த மிகவும் இலகுவான வழி இருக்கிறது.

  தனிநாட்டுக் கோரிக்கை, சுயநிர்ணய உரிமை, சுதேச்சையாக ஆளும் ஆசை, இனப்பேச்சு வார்த்தைகள் போன்றவற்றை முற்றாகத் துறந்தால், தமிழ், சிங்கள மக்களிடையே புரிந்து உணர்வு ஏற்படும்.

  அப்போது முஸ்லிம்களின் கதி அதோகதிதான்! இதற்கு நமது தமிழ் மக்கள் தயாரா?

  Reply
 • Rajendra
  Rajendra

  //எழுபதின் பிற்பகுதியில் முதன் முதலாக மட்டக்களப்பு சென்ற போது, அங்கே சந்தித்த எல்லாத் தமிழ் மக்களும், “தொப்பி பிரட்டி முஸ்லிம்களை விட சிங்களவர்கள் மேல்” என்று சொன்னதை, இப்போதுதான் என்னால் புரியக் கூடியதாகவிருக்கிறது.

  உங்களுக்கிருக்கும் ‘எண்ண’ மிதப்பில், தமிழர்களிடம் ‘சருவச்சட்டி’ வாங்கி, அதில் ‘பிரி’யாணி பண்ணுகிறீர்கள்.

  உலகின் பொருளாதாரத்தையும், வரலாற்றையும், நாகரிகத்தையும், மனிதப் பண்புகளையும், “பாலைவனத்தின் மணல்களாகப் பரவிய யூத, முஸ்லிம் மதவெறியர்கள்” சின்னாபின்னப் படுத்துகிறார்கள் என்பதே உங்கள் எழுத்துகளிலும் உண்மையாகி நிற்கிறது.//

  முஸ்லிம் பயங்கரவாதத்தின் குரலாக நிஸ்தார்

  Reply
 • Ajith
  Ajith

  // முஸ்லிம்களை தனிமைப்படுத்த மிகவும் இலகுவான வழி இருக்கிறது. தனிநாட்டுக் கோரிக்கை, சுயநிர்ணய உரிமை, சுதேச்சையாக ஆளும் ஆசை, இனப்பேச்சு வார்த்தைகள் போன்றவற்றை முற்றாகத் துறந்தால், தமிழ், சிங்கள மக்களிடையே புரிந்து உணர்வு ஏற்படும். அப்போது முஸ்லிம்களின் கதி அதோகதிதான்! இதற்கு நமது தமிழ் மக்கள் தயாரா? \\

  ஆம் தமிழர்கள் தற்காலிகமாக தமது ஆசைகளை துறந்து தான் ஆக வேண்டும். இப்போது அல்கைடாவின் ஊடுருவல் தமிழர்களின் போராட்டம் காரணமாக சிங்கள இனவாதிகளின் கண்களுக்கு தெரிவதில்லை. முஸ்லிம் பயங்கரவாதத்தை சிங்கள தேசம் புரிந்து கொள்ளும காலம் வரும். தமிழர்களின் பொருளாதார, அரசியல் , இராணுவ பலம் பறிக்கப்பட நிலையில் சிங்கள இனவாதத்திற்கு மிக ஆபத்தான எதிர்காலம் முஸ்லிம் பயங்கரவாதம் தான். அது சிங்களத்தின் இருப்பையே கேள்விக் குறியாக்கும். சிங்களவரின் தமிழர் எதிர்ப்புக்கு காரணம் மதம் அல்ல. மொழி வேறுபாடே. 1815 இல் ஏற்பட்ட முஸ்லிம் பௌத்த இன கலவரத்தின் காரணங்களை சிங்களம் மறந்திருக்க முடியாது, இப்போது அவர்களுக்கு அவற்றை நினைவிற்கு கொண்டுவர சிறிய அவகாசத்தை தமிழர் வழங்க வேண்டும்.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  /முஸ்லிம்களை தனிமைப்படுத்த மிகவும் இலகுவான வழி இருக்கிறது. தனிநாட்டுக் கோரிக்கை சுயநிர்ணய உரிமை சுதேச்சையாக ஆளும் ஆசை இனப்பேச்சு வார்த்தைகள் போன்றவற்றை முற்றாகத் துறந்தால் தமிழ் சிங்கள மக்களிடையே புரிந்து உணர்வு ஏற்படும்/
  தாயுமானவரே! புரிந்துணர்வு ஏற்படுமா புகுந்து விளையாடச் சொல்லுமா? மீண்டும் தமிழர்களையும் சிங்களவர்களையும் கொழுவி விட்டு கூத்துப்பாத்தால் பறுவாயில்லை முஸ்லீம்களை வளர்த்து கொலைப்பிணங்களை விற்று வாழ நினைக்கிறீர்கள். ஈழப்போரில் உழைத்தது சோனகர்கள்

  பரணிதரன் தரணிக்குத் தரும் விடயம் சரியாக இருப்பது முக்கியம் உலகில் 90சதவீதமான மக்கள் மொழிவழியே அடையாளப் படுத்தப்படுகிறார்கள். காரணம் மொழி என்பது மனிதனின் உணர்வுப்பாலம். இந்த மொழி என்பது இல்லாவிட்டால் மனிதன் வாய்பேசா மிருகம். /தமிழில் பேசி எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள் அனைவரும் தமிழராகவும் முடியாது இஸ்லாமியப் பெயர்கள் உள்ளதால் எவரும் முஸ்லிமாகவும் முடியாது…/ இது உமது கருத்து மட்டுமே. கணிப்பீடுகளை ஆய்வுகளை வாசியுங்கள். எனது சொந்த விருப்பில் சோனகரை தமிழில் சேர்க்காது இருப்பது தமிழுக்கும் நல்லது தமிழ் இனத்துக்கும் நல்லது.

  Reply
 • thayumanavar
  thayumanavar

  //தமிழர்கள் தற்காலிகமாக தமது ஆசைகளை துறந்து தான் ஆக வேண்டும்.//ajith
  மேற்படி ஆசைகளை தற்காலிகமாக துறப்பதனால் யாது பயன்? நிரந்தரமாக துறந்தால் மட்டுமே, தங்களின் புனித இலட்சியத்தை அடைய முடியும்!

  //முஸ்லிம் பயங்கரவாதத்தை சிங்கள தேசம் புரிந்து கொள்ளும காலம் வரும்.//
  தமிழ் பயங்கரவாதத்தை எப்படியோ, நம் அரசு அணைத்துவிட்டது. முஸ்லிம் பயங்கரவாதமா? ஐயோ! தலை சுற்றுகிறது. ஒன்று முடிய இன்னொன்றா? நமது நாடு தாங்குமா?
  //1815 இல் ஏற்பட்ட முஸ்லிம் பௌத்த இன கலவரத்தின் காரணங்களை சிங்களம் மறந்திருக்க முடியாது,//
  1815 இல் கலவரம் நடந்திருந்தால்தானே, சிங்களம் மறக்காமல் இருப்பதற்கு. 1915 இல் என்று நினைக்கிறேன்.

  Reply
 • Ajith
  Ajith

  \\தமிழ் பயங்கரவாதத்தை எப்படியோ, நம் அரசு அணைத்துவிட்டது. முஸ்லிம் பயங்கரவாதமா? ஐயோ! தலை சுற்றுகிறது. ஒன்று முடிய இன்னொன்றா? நமது நாடு தாங்குமா?//
  உங்கள் அரசாங்கம் என்றுமே பயங்கர வாதத்தை அணைத்தது அல்ல. பயங்கர வாதத்தை வளர்த்த அரசுகள். 1958 இல் தொடக்கி இன்று வரை தமிழர் மீது பயங்கர வாதத்தை தூவிவிட்டது உங்கள் அரசுகள். 1972 இல் சிங்கள பயங்கர வாதம் நாடில் இரத்த வெள்ளத்தை வரவழைத்தது. 1987 -1989 இல் சிங்கள பயங்கரவாதம் மண்டை ஓடுகளையும் புதை குழிகளையும் தந்தது. அதே பயங்கரவாதிகளின் அரசுதான் இன்று உள்ளது. எனவே பயங்கர வாதம் சிங்கள தேசத்துக்கு ஒன்றும் புதிதல்ல. இலங்கையின் சிங்கள ஆட்சியின் 60 கால வரலாறில் அணையாத தீபமாய் இருபது இரத்த வரலாறு படைத்த பயங்கர வாதம் மட்டுமே என்பது வரலாற்று உண்மை. இன்று அல்கைடாவின் வளர்ச்சியும் சிங்கள இனவெறி கூச்சல்களும் ஜேவிபி யின் மாணவ போராட்டங்களும் கொலை வெறிபிடித்த ராஜபக்சேயின் சர்வதிகார கொடுமையும் உங்கள் நாடை எங்கே கொண்டு செல்கின்றது என்பது புரிய முடியவில்லையா ?

  “1815 இல் கலவரம் நடந்திருந்தால்தானே, சிங்களம் மறக்காமல் இருப்பதற்கு. 1915 இல் என்று நினைக்கிறேன்.”
  திருத்தத்திற்கு நன்றி,

  Reply
 • thayumanavar
  thayumanavar

  அன்பு அஜித்,
  தாங்கள் குறிப்பிட்டவை அனைத்தும் இனக்கலவரங்கள். சிங்கள, தமிழ் இனக்கலவரங்கள் தாங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையைவிட கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். அதேபோல், சிங்கள, முஸ்லிம் கலவரங்களும் மிக அதிகமாக நடந்துள்ளன. இவை ஊடகங்களில் அனேகமாக வருவதில்லை.

  இனக்கலவரம் வேறு. தமிழ்ப் பயங்கரவாதம் வேறு. பின்னையது மிகவும் ஆபத்தானது. அல்கைதா இயக்கம் இலங்கையில் இல்லை. நம் நாட்டின் பாதுகாப்பு அமைச்சு இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. கோத்தபாயாவே இதனை மறுத்துள்ளார். பலமான கட்டமைப்புள்ள தமிழ்ப் பயங்கரவாதத்தை வேரோடு அழித்த பெருமை, நமது நாட்டு இராணுவத்திற்கு உரியது.

  தமிழ்ப் பயங்கரவாதம்போல், அல்கைதா இயக்கம் பலமானது அல்ல. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அங்கத்தவர்கள் என்று சில ஊடகங்களில் சொல்லப்படுகின்றது. அதிகமான ஊடகங்களில் பாரிய பிரமையை உண்டாக்கியிருக்கின்றனர். அல்கைதா என்ற இயக்கம் தற்போது இல்லை என்றுகூட, பெரும்பான்மையான மக்கள் நம்பியுள்ளனர். இதன் பெயரை வைத்து, அதிகமானோர் அரசியல் நடத்துகின்றனர்.

  உங்கள் வாதத்தின்படி அல்கைதா இங்கு செயல்படுகின்றது என்று வைத்துக்கொண்டாலும், மிகவும் பலமான இலங்கை இராணுவத்தின் கண்ணில் இருந்து தப்புவது மிகவும் கடினம். தமிழ்ப் பயங்கரவாதம் அழிக்கப்படுவதற்கு மூன்று வருடம் தேவைப்பட்டது. அல்கைதா இயக்கம், அப்படி ஒன்று இருந்தால், அவர்களை நிர்மூலம் ஆக்குவதற்கு மூன்று வாரம்கூட அதிகம், நமது இராணுவத்திற்கு.

  Reply
 • தோஸ்து
  தோஸ்து

  //தாங்கள் குறிப்பிட்டவை அனைத்தும் இனக்கலவரங்கள். சிங்கள தமிழ் இனக்கலவரங்கள்//
  அரச இயந்திரத்தின் உதவியுடன் நன்கு திட்டமிட்டு சிங்களவர் பெரும்பான்மையாக இருந்த இடங்களில் வாழ்ந்த தமிழ் குடிமக்களின் வீடுகளில் ஆலயங்களில் பொதுவிடங்களில் கடைகளில் சிறைகளில் …. நடைபெற்றது. தமிழர் படுகொலை செய்யப்பட்டது காயபடுத்தப்பட்டது தமிழின அழிப்பில்லை வெறும் இனக்கலவரங்கள் என்கிறீர்கள்.
  //இனக்கலவரம் வேறு. தமிழ்ப் பயங்கரவாதம் வேறு. .//
  புலிகளின் ஆயுதநடவடிக்கையை “தமிழ்ப் பயங்கரவாதம்” என்றும் தமிழின அழிப்பை “இனக்கலவரங்கள்” குறிப்பிடும் உங்களால் அல்கைதா இயக்கத்தின் ஆயுதநடவடிக்கையை உங்கள் பார்வையில் “முஸ்லிம் பயங்கரவாதம்” என ஏன் வரையறுக்க முடியவில்லை.
  // நம் நாட்டின் பாதுகாப்பு அமைச்சு இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. கோத்தபாயாவே இதனை மறுத்துள்ளார்.//
  இவர்களின் ஆட்சியில் நடந்த தமிழின படுகொலையையும் இவ்வளவு போட்டோ வீடியோ ஆதாரங்கள் சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களினால் வெளியிடப்பட்ட நிலையிலும் திட்டவட்டமாக மறுத்துள்ளார். உங்களை போன்றவர்களை தவிர அவரின் மறுப்பை நம்பத்தான் ஆளில்லை. சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களினால் மனிதவுரிமைமீறல் குற்றச் சாட்டிற்குள்ளகியுள்ள தமிழ் ஆயுதகுழுக்களையும் பராமரித்து பேணியதும் இதே பாதுகாப்பு அமைச்சுதான்.

  Reply
 • DEMOCRACY
  DEMOCRACY

  இந்த அஜித்தும், தயுமானவர் என்பவரும் தேவையில்லாமல் அடித்துக் கொள்கிறார்கள். “அல் கொய்தா, பின்லேடன்” என்பது இந்தியவில் இல்லை, அப்கானிஸ்தானில் உள்ளது. அது இலங்கையில் காலூன்றலாம். அதன் பின்ணணி என்ன?.
  “கலாச்சாரத்தை மறந்து, பணத்தின் பின்னால் ஓடுகிறார்கள் ஆப்கானியர்கள்” என்றார், தாலிபனின் ஸ்தாபகர் முல்லா முகமது ஓமர்!. இது சாதாரண வார்த்தையாக இருக்கலாம், ஆனால் இலங்கைப் பின்ணணியில் ஆராயும்போது அதன் மதிப்பு தெரியும். பஸ்தூன் பழங்குடியினரின் ஹீரோவான இவர், பிரபாகரனைப் போல மற்றவர்களை நம்பி ஏமாறுபவர். பிரபாகரனைவிட ஒருபடி மேலான நேர்மை? உள்ளவர் என்று கொள்ளலாம். பின்லாடனின் நட்புக்காக (விருந்தோம்பல்)பல துன்பங்களை வரவழைத்து கொண்டதை கூறலாம்.

  பின்லாடனுடன் இதே அளவு நட்பு கொண்டவர்தான் வடக்கு கூட்டணி தலைவர்(தஜகிஸ்)இஞ்சினியர் மஸ்தூத். ஆனால் பின்லேடன் தன்னுடைய தேவைக்காக கொன்றார். ஓமரை போலவே குலுபுதீன் ஹெக்மத்தியாரும் ஒரு ஆரம்பகால முஜாகிதீன்தான், ஆனால் பணமும், சுயநலமுமே குறியானவன், பெருபாலான இலங்கைத்தமிழ் இயக்கங்கள் போல!. ஓமர், ஹசாரிகளை மாசர் இல் ஷெரிப்பில் படுகொலை செய்ததும், முட்டாள்தனமான இஸ்லாமிய சட்டங்களை இயற்றியதும் தவறான மதியுரையால்தான். எண்ணைக் குழாய் போடுகிறோம் என்று வந்த அர்ஜைண்டினிய ஃபிரிடாஸ் (பிறகு சீன) மற்றும் அமெரிக்க யுனோகால் நிறுவனங்களுடன், முன்பு ஆப்கானிய எண்ணை நிறுவனத்தில் வேலை செய்து பிறகு முஜாகிதீனாக மாறிய மொடாமுழுங்கி துருக்கிய(உஜபெஸ்க்)ரஷீத் தோஸ்தூமை ஓமர் பேச அனுமதித்தது (அமெரிக்காவில் விருந்துண்ண), இவருடைய படிப்பறிவின்மையை மற்றவர்கள் பயன்படுத்திய உதாரணங்கள். இவரைதான் இந்தியா ஆதரித்தது. இவர்தான் இந்தியாவும் ரஷியாவும் (சோவியத்) ஆதரித்த அதிபர் நஜிபுல்லாவை தப்பியோடும்போது பிடித்து, முஜாதீன்களிடம் கொடுத்து, நிர்வாணமாக்கி பிறப்புறுப்பை அறுக்க செய்தவர். இவரைதான் ஜெர்மனியின் வெளிவிவகார அமைச்சர் வெஸ்டர்வேலே (ஓ.எஸ்.சி.இ)ஆதரிப்பதாக விக்கிலீக் குற்றம் சாட்டுகிறது!.
  தாலிபனை(மாணவர்கள்) உருவாக்கியது பெனசிர் பூட்டோவும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. யும்தான் (லாரி போக்குவரத்து வர்த்தகத்துக்காக). பின்லேடன் சூடானிலிருந்து வந்தது, மதரஸா என்னும் பாகிஸ்தான் எல்லை பகுதியிலிருந்த சிறுவர்களை தன்னுடைய படையில் சேர்ப்பதற்காக. இதில் ஓமரை ஒருக்கண் வேதனையும், வறுமையும் ஈஸ்லாம் உணர்ச்சியில் தள்ளியது. தாலிபன் ஒரு இஸ்லாமிய இயக்கம், அந்த அடையாளத்தைவிட பஸ்தூன் பழங்குடி அடையாளமே மிகுந்திருந்தது. எல்லா தாலிபஙளும் பஸ்தூன்கள் ஆனால் பஸ்தூன்கள் எல்லாம் தாலிபன்கள் அல்ல.

  இந்தியா ஆதரிப்பது “தஜகிஸ்களை” இவர்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை கையில் வைத்திருக்கும் “பார்ஸி” வம்சாவழியைக் கொண்டவர்கள். தற்போதைய அமீர் கர்சாய் அரசாங்கத்தில் இவர்கள் செல்வாக்குதான் அதிகம். இவர்களையே அமெரிக்காவும் தாலிபன்களுக்கு எதிராக ஆதரிக்கிறது. /For Pakistan, a friendly, Pashtun-dominated government in Kabul is essential to national security. Today, we keep asking Pakistan to support a Tajik-dominatedgovernment in Kabul, which has closer ties to India than to Islamabad. For Pakistan, this is a mortal threat.- American Diplomat/.
  இதனால்தன் பாகிஸ்தான் லக்ஷர் இ தொய்பாவுக்கு அயுதம் வழங்குகிறது. அல்கொய்தாவை விட தாலிபான் அமெரிக்க எதிர்ப்பில் மாட்டிக் கொண்டதை பலர் பயன்படுத்துகின்றனர். இதனால் இந்த பிராந்தியத்தில் மேற்குலகின் பணம் கொட்டுகிறது பலர் பிடுங்கி அனுபவிக்கின்றனர்…

  Reply
 • thayumanavar
  thayumanavar

  Mr Democracy,

  தாங்கள் குறிப்பிட்ட முஜாஹிதீன்களில், முல்லா முஹம்மது உமர் மிகவும் நேர்மையானவர்.

  புலியிலிருந்து பிரிந்த கருணாவை, ரஷீத் தோஸ்தம் என்பவருக்கு ஒப்பானவர் என்று பாகிஸ்தானிய ஊடகங்களில் அன்று எழுதியிருந்தார்கள்.

  // எல்லா தாலிபஙளும் பஸ்தூன்கள் ஆனால் பஸ்தூன்கள் எல்லாம் தாலிபன்கள் அல்ல.///

  தலிபான்களில் பெரும்பாலானவர்கள் பஷ்தூன்கல்தான்.

  ஆனால், தலிபான்களில் அசாரிகள், பாகிஸ்தானியர், மத்திய ஆசிய நாடுகளிலுள்ளவர்களும் இருக்கின்றனர்.

  Reply
 • thayumanavar
  thayumanavar

  Mr Dosht,

  ///தமிழர் படுகொலை செய்யப்பட்டது காயபடுத்தப்பட்டது தமிழின அழிப்பில்லை வெறும் இனக்கலவரங்கள் என்கிறீர்கள்.///

  தமிழின அழிப்பில்லை என நான் சொல்லவில்லை.

  இனக்கலவரம் ஏற்படும்போது, சிறுபான்மையினர் அதிகம் பாதிக்கப்படுவது உண்மை.

  இதை தமிழின அழிப்பு என்று சொல்லும் நீங்கள், முன்னர் வடபகுதியில் சிறுபான்மையாக வாழ்ந்த சிங்கள, முஸ்லிம்கள் தமிழ்ப் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டதையும் இன அழிப்புகள் என ஏன் ஏற்றுக்கொள்ள தயங்குகிறீர்கள்?

  Reply