யாழ் பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் நியமிக்கப்பட்டு உள்ளார்.! : த ஜெயபாலன்

Prof_Hoole_at_Thesam_Meeting_27Aug10யாழ் பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டு உள்ளார்.  டிசம்பர் 16 பேராசிரியர் சண்முகலிங்கத்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், பேராசிரியர் ஹூல் உத்தியோகபூர்வமாக நியமனப் பத்திரத்தைப் பெற்று பதவியேற்கும் வரை பேராசிரியர் என் சண்முகலிங்கன் பதில் துணைவேந்தராக கடமையாற்றுவார். பேராசிரியர் ஹூல் அடுத்தவார நடுப்பகுதியில், அல்லது இடையே நீண்ட விடுமுறைகள் வருவதால் ஜனவரி முற்பகுதியில் பதவியேற்பார் எனத் தெரியவருகின்றது.

இது தொடர்பாக தேசம்நெற், பேராசிரியர் ஹூல் உடன் தொடர்பு கொண்ட போது, ”ஜனாதிபதி கல்வித் திறமைக்கும் ஆளுமைக்கும் மதிப்பளித்து இந்த நியமனத்தை அளித்தமைக்கு நான் நன்றியாய் உள்ளேன். அவரது நம்பிக்கைக்கும் மற்றையவர்களது நம்பிக்கைக்கும் ஏற்ப யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறந்ததொரு பல்கலைக்கழகமாக கட்டியெழுப்புவேன்” எனத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தனக்கு வாக்களித்த, ஆதரவளித்த, தமிழ் மக்களின் கல்வியில் அக்கறைகொண்ட, அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஹூல் க்கு தேசம்நெற் ஆசிரியர் குழு சார்பாகவும் வாசகர்கள் சார்பாகவும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. சீரழிந்து கொண்டிருக்கும் தமிழ் கல்விச் சமூகத்தை யாழ் பல்கலைக்கழகத்தை சிறப்பான நிலைக்கு கொண்டு செல்வதற்கான முதல் அடியாக பேராசிரியர் ஹூல் உடைய நியமனம் அமைந்துள்ளது.

கடந்த யூலை முதல் யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான நீண்ட விவாதத்தை தேசம்நெற் மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

2006ல் பேராசிரியர் ஹூல் யாழ் பல்கலைக்கழக உபவேந்தராக நியமிக்கப்பட்ட போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் அவருக்கு எதிராக கொலைப் பயமுறுத்தல்களை மேற்கொண்டனர். அதன் காரணமாக அவர் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்:

யாழ்ப்பாணக் கம்பஸ் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது பிரிவாக இருந்து 1979 ஜனவரி 1 முதல் யாழ்ப்பாணப் பல்லைக்கழகமாக இயங்க ஆரம்பித்தது.

இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாணக் கம்பஸ் ஆக இயங்கிய காலப்பகுதியில் அதன் முதலாவது அதிபராக இருந்தவர் பேராசிரியர் கெ கைலாசபதி (01 ஓகஸ்ட் 1974 – 31 யூலை 1977). அவரைத் தொடர்ந்து பேராசிரியர் எஸ் வித்தியானந்தன் (01 ஓகஸ்ட் 1977 – 31 டிசம்பர் 1978) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக மாறும்வரை யாழ்ப்பாணக் கம்பஸ் இன் அதிபராக இருந்தார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர்கள்:

பேராசிரியர் எஸ் வித்தியானந்தன்   1979 ஜனவரி   – 1988 யூலை
பேராசிரியர் ஏ துரைராஜா   1988 செப்ரம்பர்  – 1994 ஏப்ரல்
பேராசிரியர் ஏ குணரட்னம்   1994 ஏப்ரல்  – 1997 பெப்ரவரி
பேராசிரியர் பி பாலசுந்தரம்பிள்ளை   1997 பெப்ரவரி  – 2003 ஏப்ரல்
பேராசிரியர் எஸ் மோகனதாஸ்   2003 ஏப்ரல்  – 2006
பேராசிரியர் ஜீவன் கூல்  2006 பதவியை பொறுப்பேற்கவில்லை.
பேராசிரியர் என் சண்முகலிங்கம்   2008 ஜனவரி – 2010 டிசம்பர்
பேராசிரியர் ரட்ன ஜீவன் ஹூல்   2010 டிசம்பர்

இலங்கையின் மிகச் சிறந்த கல்விமான் ஆன பேராசிரியர் ஹூல் தனது கல்விச் சேவையை தனது மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற விருப்பில் செப்ரம்பரில் இலங்கை திரும்பினார். அங்கு செல்லும் வழியில் லண்டன் வந்து தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் பற்றிய சிறப்புரையை தேசம் ஏற்பாடு செய்த சந்திப்பில் வழங்கி இருந்தார்.

தற்போது யாழ் பல்கலைக்கழகம் கல்வி நிலையிலும் நிர்வாகத்திலும் மிகச் சீரழிந்த நிலையில் உள்ளது. பேராசிரியர் ஹூல் ஏற்றுள்ள பொறுப்பு மிகப் பாரியது. தமிழ் பேசும் மக்களின் குறிப்பாக வடக்கு மக்களின் கல்வி நிலையை மேம்படுத்தும் முக்கிய பொறுப்பு பேராசிரியர் ஹூல் இடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

பேராசிரியர் ஹூல் உடைய நியமனம் பலத்த அரசியல் இடையூறுகளுடன் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பலரும் அவரிடம் நம்பிக்கையான மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அவரிடம் வைத்துள்ள நம்பிக்கை அவரது பொறுப்பின் கடினத்தை தெரிவிப்பதாக உள்ளது.

அண்மைக் காலமாக தேசம்நெற் இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள்:

‘இலங்கையின் தமிழ் கல்விச் சமூகம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை’ நூலின் மின்னியல் வடிவம்: UoJ_A_View_By_Jeyabalan_T

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

யாழ் பல்கலைக்கழகத்தின் இலக்கையும் தொலைநோக்கு பார்வையையும் முன்னெடுத்துச் செல்லும் கல்வியியல் ஆளுமையும் முகாமைத்துவத் திறமையும் உடையவரை உபவேந்தராகத் தெரிவு செய்யுங்கள்! : த ஜெயபாலன்

ஈபிடிபி தோழர்களே! நல்லதொரு இதயவீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிந்திட வேண்டாம். : ரி சோதிலிங்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை நூலுக்கான முன்னுரை : த ஜெயபாலன்

தமிழ் கல்விச் சமூகத்தின் மகுடம் யாழ். பல்கலைக்கழகம் – அதன் துணைவேந்தர் தெரிவிற்கான தேர்தல் ஒரு அலசல்

ThesamNetLeaks : கொள்வனவு விதிகளை மீறிய யாழ் பல்கலைக்கழ உப வேந்தருக்கான வேட்பாளர் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் ரட்ன ஜீவன் ஹூல் இன்று பதவியேற்பார்! : த ஜெயபாலன்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

39 Comments

 • Pratheepan
  Pratheepan

  இப்போது உள்ள நிலையில் வவுனியா வளாகத்தின் ஊழல் மோசடிகள் வெளிக்கொண்டுவரப்பட்டு அங்கும் ஒர் சிறந்த நிர்வாக அமைப்பு கொண்டுவர வேண்டும். அதன்பின்தான் வாளாகத்தை பல்கலை கழகமாக்குவதை பற்றி சிந்திக்கலாம். இல்லையேல் அது குரங்கின் கை பூமலைதான்.

  மோசடிகள் மிகுந்த நந்தகுமாரன், திருமதி புவனேஸ்வரி லோகநாதன், குகனேசன், மங்களேஸ்வரன், கனகநாதன், … போன்றவர்கள் இருக்கும் வரை வளாகம் உருப்படமாட்டாது. இதில் உள்ள முக்கிய விடையம் என்னவென்றால் இவர்கள் யாவருமே தமது கல்வி தகுதியை நிரூபிக்க தவறியவர்கள், மற்றும் தகுதி உடையோரை உள்வாங்க மறுத்தவர்கள் அல்லது தகுதி உடையோரை வாளகத்தை விட்டு விரட்டியவர்கள்.

  Reply
 • Ajith
  Ajith

  It is nor surprise. So, It is clear now that there is voice within UOJ in support of Sinkala racism and war criminals.

  Reply
 • Velupillai
  Velupillai

  சண்முகலிங்கத்தினதும் அவரது நாற்பது திருடர்களுக்கும் ஆபிரிக்க நாடுகள் ஏதாவது அசைலம் கொடுக்குமா என தேசம் நெற் இனி ஆராய்ந்து எழுதவேண்டும்.– வேலுப்பிள்ளை.
  (பின் குறிப்பு இன்றிரவு தண்ணியடித்து கூலின் நியமனத்தை கொண்டாட உள்ளேன்)

  Reply
 • Saravanan
  Saravanan

  பேராசிரியர் ரட்ணஜீவன் கூலுக்கு எனது வாழ்த்துக்கள். அவரது கல்விப்பணி தமிழ்பேசும் கல்விச் சமூகத்துக்கு பயனுடையதாக அமையட்டும்

  Reply
 • rohan
  rohan

  பெரிய ஒரு சவால் – எனக்கென்றால் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலினால் பெரிதாக ஏதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கையில்லை. பேராசிரியர் துரைராஜாவினாலேயே முடியவில்லை!

  குறைந்தது பாலியல் துஷ்பிரயோகம், கோஷ்டி கட்டல் போன்றவை முடிவுகட்டப்படுதல் பெரிய ஆறுதலைத் தரும்.

  Reply
 • தோஸ்து
  தோஸ்து

  ”ஜனாதிபதி கல்வித் திறமைக்கும் ஆளுமைக்கும் மதிப்பளித்து இந்த நியமனத்தை அளித்தமைக்கு நான் நன்றியாய் உள்ளேன்//பேராசிரியர் ரட்ணஜீவன் கூல்.
  ஆமாம் ஆமாம். டக்லஸிற்கு கருணாவிற்கு திறமைக்கும் ஆளுமைக்கும் மதிப்பளித்து அமைச்சர் பதவி கொடுத்தமாதிரி.இருந்தாலும் வாழ்த்துக்கள். இவருக்கு இப்பதவி கொடுக்கப்படாவிட்டால் அடுத்த தெரிவு பேராசிரியர் சண்முகலிங்கம்தானே!

  Reply
 • நந்தா
  நந்தா

  இரத்தின ஜீவனுக்கு எனது வாழ்த்துக்கள். எனது எதிர்பார்ப்பின்படி நடந்ததில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். நாளையிரவு கண்டிப்பாகத் தண்ணிதான்.

  Reply
 • Sri vaishnavi
  Sri vaishnavi

  ராமருக்கு அணில் உதவியது போல, எமது தமிழ் சமூகத்தின் எதிர்காலதிற்கு உதவியதற்கு தேசம் இணையதிற்கும், ஜெயபாலனுக்கும் நன்றிகள். ஹூல் அவர்கள் பதவி பெறுவதற்கு வாசகர்களும் உதவியுள்ளனர், நன்றிகள்.
  மேலும், டக்லஸ் தேவானந்தாவை ஹூல் அவர்களுக்கு எதிரானவராக இங்கு யாரும் காட்ட முனைய வேண்டாம். எனக்கு தெரிந்த அளவில் டக்லஸ் ஆரம்பத்தில் ஹூல் மீது சில விமர்சனங்களை வைத்தாலும், இன்று ஹூல் பதவி பெறுவதர்ற்கு டக்லஸ்தான் உதவியுள்ளார்.
  இனி, தனது திறமையை காட்டி எமது நம்பிக்கையை, நிஜமாக்க வேண்டியது ஹூலின் கடமை. பல்கலைகழகத்தில் நடக்கும் பெண்கள் மீதான வன்முறையை ஒழிக்க வேண்டும் என்பது இன்று முக்கிய விடயமாகும். அத்துடன் கற்கை நெறியும் மறு சீர் அமைக்கப்பட வேண்டும்! வாழ்த்துக்கள் !!!

  Reply
 • karuna
  karuna

  அஜித்தின் கருத்திலே ஒன்று புரிகிறது! இவரின் நியமனம் தமிழ் தேசிய வெறியூட்டலை நிச்சயம் யாழ் பலகலைக்கழகம் இனி தொடராது! குறைந்த பட்சம் யாழ் பல்கலைக்கழத்தின் கல்வித்தரத்தை உயர்த்துவதுடன் ஊழல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களை தடுப்பதே அவசர மற்றும் அவசியத்தேவை! யாழ் பல்கழலக்கழகம் சிறந்த அறிவாளிகளை உருவாக்க வேண்டுமே தவிர குதிரை கஷேந்திரன் போன்றவர்களை அல்ல! வாழ்த்துக்கள்! நிறைய எதிர்பார்கிறோம் ஹூல் இடமிருந்து!

  Reply
 • Ragu
  Ragu

  Congratulations to Professor Hoole.

  Reply
 • aras
  aras

  மகிந்தவின் கருத்துச் சுதந்திரத்திற்காக “போராடிய” அந்த அறிக்கைக்கு கைமேல் பலன்.

  Reply
 • நண்பன்
  நண்பன்

  பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் அவர்களுக்கு வாழ்த்துகள். யாழ் பல்கலைக் கழகம் சிறந்து விழங்க தங்கள் பணி உறுதுணையாக வேண்டும்.

  Reply
 • mohamed nisthar
  mohamed nisthar

  Gongrats, Professor Hoole.

  Tamil community has a big expectation from your leadrship. I hope you would shape up the entire community of the Jaffna University and upgrade its current position, fingers cross.

  Reply
 • rohan
  rohan

  //மேலும், டக்லஸ் தேவானந்தாவை ஹூல் அவர்களுக்கு எதிரானவராக இங்கு யாரும் காட்ட முனைய வேண்டாம். எனக்கு தெரிந்த அளவில் டக்லஸ் ஆரம்பத்தில் ஹூல் மீது சில விமர்சனங்களை வைத்தாலும், இன்று ஹூல் பதவி பெறுவதர்ற்கு டக்லஸ்தான் உதவியுள்ளார்.//

  இது ஒன்றும் புதினம் இல்லையே! தீவிர புலி விசுவாசியான சண்முகலிங்கன் பின்னர் டக்ளஸுக்குக் காவடி எடுத்தார். சண்முகலிங்கனின் தூணான டக்ளஸ் இப்போது ஹூலுக்குச் சாமரம் வீசத் தயாராக உள்ளார். அரசியலில் இதெல்லாம் சகஜம்..

  Reply
 • rohan
  rohan

  //மகிந்தவின் கருத்துச் சுதந்திரத்திற்காக “போராடிய” அந்த அறிக்கைக்கு கைமேல் பலன்.//
  நடந்தது நடந்து போயிற்று – மற்றவர்களுக்கு முண்டு கொடுக்கப் போகாது பல்கலைக் கழக நிர்வாகத்துடன் ஹூல் இருந்து கொள்ள வேண்டும்.

  Reply
 • சண்முகதாசன்
  சண்முகதாசன்

  ரட்ணஜீவன் கூல் (பி.எச்.டி, டி.எஸ்.சி) அவர்களுக்கு வாழ்த்துக்கள்! இனிமேல்தான் வேலை நிறைய இருக்கின்றது…

  ஊழல் அழுக்கை கூட்டிப் பெருக்கி கழுவித் துடைத்து கல்வியறிவு என்னும் சூரியக் கதிரை அறியாமையிருளால் சூழப்பட்டிருக்கின்ற யாழ் பல்கலையை ஒளி பெற வைக்கும் மிகவும் கடினமான வேலை அது… கத்தி மேல் நடப்பது போல் கவனம் வேண்டும், தவறின் சண்முகலிங்கம்/ன் குழுவின் குகைக்குள் விழும் அபாயம் காத்திருக்கின்றது…

  இனிமேல் புவனேஸ்வரி லோகனாதனுக்கும், R. நந்தகுமாரனுக்கும் (Rector, Vavuniya Campus), மங்களேஸ்வரனுக்கும் (Dean, Faculty of Business Studies), குகனேசனுக்கும் (Dean, Faculty of Applied Science), சிறீதரனுக்கும் (சிரேஸ்ட பதிவாளர், Vavuniya Campus), R. ஜெயக்குமாருக்கும் (உதவிப் பதிவாளர், Faculty of Applied Science) நிலமை கஸ்டமாகப் போகுமா? அல்லது, அவர்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து தாம் தேசம்நெற்றை வவுனியா வளாகத்தில் தடை செய்ததைப் போல கூலுக்கும் தடை விதிப்பார்களா?

  Careful dear Professor… these people are capable of banning the sun from rising – if they have to protect their illegal activities!

  ஐயா ,பேராசிரியர் கூல் அவர்களே, கவனம்! புவனேஸ்வரி நினைத்தால் பூகம்பமும் வெடிக்கும்! புவனேஸ்வரியின் குழறுபடித்தனமான பேராசிரியர் விண்ணப்பம் இனி உங்கள் கையில்… புவனேஸ்வரிக்கும், நந்தகுமாரனுக்கும் பேராசிரியர் பதவியுயர்வு உங்களூடாக நடப்பின், அதை விடவும் பெரியதொரு இழுக்கு உங்களுக்கு இருக்க மாட்டாது.

  Reply
 • BC
  BC

  //கருணா – இவரின் நியமனம் தமிழ் தேசிய வெறியூட்டலை நிச்சயம் யாழ் பலகலைக்கழகம் இனி தொடராது!//அதற்காகவும் தேசம்நெற், தமிழ்பேசும் சமூகத்தின் பற்றாளர்கள் விருப்பபடி இவர் நியமிக்கப்பட்டு உள்ளதாலும் பேராசிரியர் ரட்ணஜீவன் கூலை வாழ்த்துகிறேன்.

  Reply
 • usha -thanusan
  usha -thanusan

  யாழ் பல்கழைக்கழக புதிய துணை வேந்தா; அவர்களுக்கு.
  உடனடியாக யாழ் பல்கழைக்கழகத்தில் மேற்கொள்ளவேண்டிய செயற்பாடுகளையும் நடந்த குளறுபடிகளையும் தங்கள் கவனத்திற்கு இதன் மூலம் கொண்டுவருகிறோம். இதில் பலவற்றிக்கு ஆதாரம் உண்டு விசாரணைக்கு தேவையெனின் அவை உங்களிடம் ஒப்படைக்கப்படும்.

  மேற்கொள்ளவேண்டிய செயற்பாடுகள்

  1)இதுவரை நடந்துவந்த பல்கழைக்கழக குழறுபடிகள் விசாரனை செய்யப்பட வேண்டும்.
  2)தகுதியற்ற பட்டங்களை நிறுத்த வேண்டும்
  3)வகுப்பறைகள் துறைகள் மலசல கூடம் போல் உள்ளது என்பன ஒவ்வொரு வேலையாட்களால் நாளும் வாங்கும் சம்பளத்திற்கு சுத்தம் செய்யவேண்டும்.
  4)தற்காலிக விரிவுரையாளர்களை எடுபிடி வேலை செய்விப்பவர்களை எச்சாpக்க வேண்டும்.
  5)தகுதியற்றவர்கள் வினாத்தாள் தயாரிப்பதையும் வினாத்தாள்கள் மதிப்பிடுவதையும் நிறுத்தவேண்டும்.
  6)சிலர் பல்கழைக்க வேலையை பகுதி நேரமாக கருதி வெளிவேலையில் ஈடுபடுகின்றனர் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  7)தனிப்பட் காரணங்களுக்காக பழிவாங்கப்படுதலை தடுக்க வேண்டும்
  8)சொந்த பந்தம் பார்த்து பணிநியமனம் கொடுக்கக் கூடாது.
  9)ஒவ்வொரு துறைகளும் செயற்பட தேவையான வளங்களை அளிக்க வேண்டும்.
  10)பட்டப்படிப்புகள் பரிவு-வெளிவாரி-நுண்கலைப்பீடம்-சித்திரமும் வடிவமைப்பும். என்பவற்றில் நடந்த குளறுபடிகளை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  11)சண்முகலிங்கன் காலத்தில் கொடுக்கப்பட்ட நியமனங்கள் பதவி உயர்வுகள் தொடர்பில் உள்ள குளறுபடிகளை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  12)தகுதியற்றவர்கள் தமக்கு தகுதியற்ற பாடங்களை கற்பிப்பதையும் பாடவிதானம் தயாரிப்பதையும் நிறுத்த வேண்டும்
  13)நிர்வாகத்தில் நடந்த நடந்து (கொள்வனவு தொடர்பாகவும் கணணி தளபாடம் அலுவலப பொருட்கள் )கொண்டிருக்கின்ற காசு மோசடிகளை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  14)தனிபட்ட தேவைக்கு பல்கழைக்கழக வளங்களை(மனித வளம் உட்பட) பயன்படுத்தவதை தடுக்க வேண்டும்
  15)கலைப்பீடாதிபதி அலுவலகம் பல்கலைக்கழகத்தில் செயற்பட வேண்டும்.(வீட்டில்தான் மாணவர்களை வந்து சந்திக்க சொல்கின்றனர்)
  16)பட்டபடிப்பிற்கு தகுதியானவர்களுக்கு அனுமதித்து தகுதியான விரிவுரையாளர்களை நியமிக்க வேண்டும். இதுவரை நடந்த குளறுபடிகளை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  17)நுhலக புத்தக கொள்வனவு குளறுபடிகளையும் தனிப்பட்ட கொம்மிசன்களையும் வெளி கொண்டுவர வேண்டும்
  18)மாணவர்களின் பகிடிவதை ரவுடிதனதம் என்பவற்றிற்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும்.

  தயவு செய்து வால்பிடிப்பபவர்களை நம்ப வேண்டாம் பொறுத்த நேரத்தில் காலை வாருவார்கள். சண்முகலிங்கனிடமிருந்து பலர் களன்று விட்டார்கள். அவரை தொpயாதென்றும் குறிப்பிடுகின்றார்களாம். தயவு செய்து இவற்றிற்கெல்லாம் விலைபோகாது உங்களது பாரிய பொறுப்பை நிறைவேற்றவும். இந்த பாவப்பட்ட யாழ் கல்வி சமுதாயம் உங்களைத்ததான் நம்பியுள்ளது. இனியாவது கல்விக்கு விடிவுகாலம் வரட்டும். இனிதே தொடரட்டும் உங்கள்பணி.

  Reply
 • pandithar
  pandithar

  ஜெயபாலன்!…. செய்தி இனிப்பாக இருக்கிறது> ஆனால் உங்கள் செய்தி உண்மையில்லை. இதுவரை ஐனாதிபதி யாரையும் தெரிவு செய்யவில்லை. மறு அறிவித்தல் அல்லது தெரிவு நடக்கும் வரை சண்முகலிங்கம் அவர்களை தொடர்ந்தும் துணைவேந்தராக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தயவு செய்து உங்கள் தகவலை உறுதிப்படுத்தவும்…..

  Reply
 • jeyarajah
  jeyarajah

  பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் தேசம் நிர்வாகத்திற்கும் ஜெயபாலனுக்கும் ஆரோக்கியமான விமர்சனங்களை வைத்த வாசகர்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகள்.

  நாம் ஒன்றுசேர்ந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு நல்ல உதாரணம். மீண்டும் வாழ்த்துக்கள்.

  Reply
 • evon
  evon

  ரட்ணஜீவன் கூலின் நியமனம் நல்லதொரு அடையாளம். ஆணோருவன் தன்னிலும்பார்க்க படித்த – ஆளுமைமிக்க ஒரு பெண்ணை தனது துணையாக ஏற்றுக்கொள்வதில் காட்டும் தயக்கமே கூலின் நியமனத்தை எதிர்த்தவர்களின் நிலைமை. அது யாழ். பல்கலைக்கழகமாக இருந்தாலும் சரி யாழ் சமூகமாக இருந்தாலும் சரி ஏன் ஈபிடிபியின் நிலைப்பாடாக இருந்தாலும் சரி இதுதான் யதார்த்தம்.

  ஒப்பீட்டு ரீதியில் கூலின் செயற்பாடுகள் யாழ்.கல்விச் சமூகத்துக்குக் கிடைத்த பெருவெற்றியாக அமையும். ஆனால் கால்தடம் போட்டு விழுத்துவதற்கு நிறைய பேர் அவரைச் சுற்றியே சுற்றியே வலம் வருவர்… (தகுதியற்றவர்களின் பட்டப்படிப்பு பறிக்கப்படுவதுபோல தகுதியற்ற விரிவுரையாளர்களும் திண்ணைக்கு அனுப்பப்படவேண்டும். உ+ம்: புலிகளுக்கு காவடியெடுத்த சிதம்பரநாதன்)

  வலுவான கல்விச் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு எமது முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் நாம் வழங்குவோம்.

  பிற்குறிப்பு: ரட்ணஜீவன் கூல் உபவேந்தராக வரக்கூடாது என்பதற்காக எவ்வாறு எதிரணியினர் மோசமாக செயற்பட்டனரோ அதேபோல கூலை ஆதரித்தவர்களும் நியாயத்துக்கு புறம்பாக செயற்பட்டனர் என்பது உண்மை. அதேபோல சண்முகலிங்கத்தின் அரசியல் நிலைப்பாடு செயற்பாடுகளுக்கு மேலானதுதான் ரட்ணஜீவன் கூலின் செயற்பாடு. ஆனால் அவரால் முற்போக்கா செயற்பட முடியுமா என்பது கேள்வியே. கூலின் குடும்பம் தமிழரசுக் கட்சிசார்ந்தது. அதனால்தான் கூலின் நியமனத்துக்கு தமிழரசு கட்சியும் சிறு முயற்சி எடுத்திருந்தது.

  Reply
 • பல்லி
  பல்லி

  //யாழ் பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டு உள்ளார்.//
  ஜயா இந்த நியமனத்துக்காக அரசியல் பேசாதீர்கள். அது உங்கள் கல்வியை மட்டுமல்ல வரும்கால மாணவர்களின் கல்வியையும் சீரளித்துவிடும்; அன்புக்காய் நீங்கள் அரசியல் செய்தால் படிக்காத பல்லிகூட உங்கள் படிப்பை விமர்சிக்க நேரிடலாம்; அப்படி ஒரு நிலைக்கு வர மாட்டீர்கள் என நம்புகிறோம்: வாழ்த்துக்கள் உங்கள் கல்வி பயணத்துக்கு;

  Reply
 • rohan
  rohan

  //பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் தேசம் நிர்வாகத்திற்கும் ஜெயபாலனுக்கும் ஆரோக்கியமான விமர்சனங்களை வைத்த வாசகர்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகள். நாம் ஒன்றுசேர்ந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு நல்ல உதாரணம். மீண்டும் வாழ்த்துக்கள்.//
  கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லை? யார் ஒன்று சேர்ந்து எதைச் சாதித்தோம்? ஹூலின் நியமனத்தில் ‘நாம்’ செய்தது உண்மையில் என்ன?

  Reply
 • ARUMUGAM
  ARUMUGAM

  யாழ். பல்கலைக்கழக பதில் துணைவேந்தராக பேராசிரியர் சண்முகலிங்கன் நியமனம்.
  யாழ். பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை நியமிப்பதற்காக தெரிவு நடவடிக்கைகள் இடம்பெற்ற நிலையில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் மறு அறிவித்தல்வரை பதில் துணைவேந்தராக கடமையாற்றுவார் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

  கடந்த மூன்று வருடங்களாக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் என். சண்முகலிங்கன் பதவி வகித்து வந்தார். அவரது பதவிக் காலம் நாளையதினம் 18ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் மறு அறிவித்தல் வரை முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முலிங்கனே பதில் துணைவேந்தராக கடமையாற்றுவார் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்கா யாழ் பல்கலைக்கழக பதிவாளருக்கு இன்றையதினம் அறிவித்துள்ளார்.

  கடந்த சில நாட்களின் முன்னர் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் பொழுது மருத்துவ பீடப் பேராசிரியர் திருமதி வசந்தி அரசரத்தினம் 14 வாக்குகளைப் பெற்று முதல் இடத்திலும் தலா ஒன்பது வாக்குகளைப் பெற்று துணைவேந்தர் என்.சண்முலிங்கனும் பேராசிரியர் ரட்ணஜீவன் கூலும் இரண்டாவது இடத்தையும் பெற்றிருந்தனர். குறித்த மூவரினதும் பெயர்களை யாழ். பல்கலைக்கழக பேரவையானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைத்துள்ள நிலையில் ஆணைக்குழுவானது அதனை ஜனாதிபதிக்கு பரிந்துரைத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அம்மூவரிலிருந்து ஒருவரை தெரிவு செய்யவுள்ளமை நியதியாகும்.

  இந்நிலையில் ஜனாதிபதி புதிய துணைவேந்தரை தெரிவுசெய்வதற்கு முன்பதாக ஊடகங்கள் பலவற்றிலும் புதிய துணைவேந்தர் தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.–http://salasalappu.com/?p=16786

  Reply
 • யோகநாதன் குரூஸ்
  யோகநாதன் குரூஸ்

  //ஜெயபாலன்!…. செய்தி இனிப்பாக இருக்கிறது> ஆனால் உங்கள் செய்தி உண்மையில்லை. இதுவரை ஐனாதிபதி யாரையும் தெரிவு செய்யவில்லை. மறு அறிவித்தல் அல்லது தெரிவு நடக்கும் வரை சண்முகலிங்கம் அவர்களை தொடர்ந்தும் துணைவேந்தராக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தயவு செய்து உங்கள் தகவலை உறுதிப்படுத்தவும்…..//pandithar on December 17, 2010 3:54 pm

  என்ன கொடுமையடாப்பா இது? இன்னுமா சண்முகலிங்கன் University of Jaffnaஇல் அந்தப்புரம் வைத்து மகிழ்வவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்?
  “யாரங்கே? சேடிப் பெண்களை சண்முகலிங்க மன்னரிடம் அனுப்புங்கள்… அவர்களுக்கும் பேராசிரியர் பதவி வழங்குவார் அவர்!”

  எனக்கு சிரிப்பு நடிகர் வடிவேலு நடித்த ‘இம்சையரசன் 23ம் புலிகேசி’ படத்தில் கோமாளிக் காமாந்திரகனான மன்னன் வஞ்சியருடன் குலாவிக் கும்மளமிட்டு நாட்டினை அழித்துக் குட்டிச் சுவராக்குவதுதான் மனதுக்குள் படமாக ஓடுகின்றது…

  ஏன் எல்லாருக்குமே இன்னமும் இந்த சண்முகலிங்கன் மோகம்? சிலவேளைகளில் ஜனாதிபதிக்கும் கெளரவ பேராசிரியர் பட்டம் தருவதாக இலஞ்ச வாக்குறுதி கொடுத்திருக்கின்றாரோ சண்முகலிங்கன்? தெரியவில்லை. சண்முகலிங்கன் இதுவும் செய்வார்… இன்னமும் செய்வார்!!!

  Reply
 • Travelling Academic
  Travelling Academic

  Hoole may be bit of a controversial character, but those of us with interest in UofJ should welcome this appointment. I am glad I found this forum where there seem to be many with interest in the development of UofJ, its role in the local community and wider country. Hoole is an imaginative and determined guy and will start many initiatives. That will create the opportunity for us to make our contributions, however small. He cannot do it alone. Our contributions can range from collecting a small amount of money to upgrade the toilets to taking with us a computer when we next visit Jaffna and donating it to the Computer Centre there. Those of you who have the know-how could make short term visits and teach a bit; or even resign your jobs here and join UofJ (but I can see this is difficult except in rare cases).

  Those of you who live in the UK will know the Tesco advertisement: “Every little helps.” This is applicable to UofJ now.

  The opportunity to achieve something is there — please let us do our bit.

  Reply
 • தோஸ்து
  தோஸ்து

  //ஏன் எல்லாருக்குமே இன்னமும் இந்த சண்முகலிங்கன் மோகம்?//
  தமிழர்களை எல்லாவிதத்திலும் ஒடுக்கியாச்சு. தமிழர் கல்வியையும் ஏன் விட்டுவைப்பான் என்ற நன்நோக்குதான்.

  Reply
 • palaiya maanavan
  palaiya maanavan

  Greate ….
  after long time we are going to have a Educated VC for jaffna university.

  prof..Hoole.. this is a challenge to you to make this campus best…
  ” naangal engalaal mudinthathai seythu ullom.
  ungal nambikaiyai kaapathuveergal ena nambukirom”

  1st make the changes in vavuniya campus and to make them to goto bambaimadu..
  there are lot of problem by the space..
  they are spending money to get open university halls for lecturers.
  Mrs selvarajan now a days comming to faculty like a visiting lecturer..
  sexual abuse is there in jaffna university..
  please make some immediate actions for these…
  this is my req. as a old boy…

  Reply
 • Travelling Academic
  Travelling Academic

  Virakesari today (Sunday 19th) says that Hoole’s appointment is not yet confirmed, and even suggests that the candidate who gained the highest number of votes may well be appointed. I think there is a lot of mischief around!

  Reply
 • யோகநாதன் குரூஸ்
  யோகநாதன் குரூஸ்

  பெருமதிப்பிற்குரிய திருவாளர் ‘பழையமாணவன்’ அவர்களுக்கு,

  முதற்கண் தேசம் பின்னூட்டாளர்கள் சார்பில் பேராசிரியர் ஹூலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த உங்கள் பெருந்தன்மைக்கும் பண்பிற்கும் நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஆனாலும்… சில விடயங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சீரிய சிந்தனையின் போக்கிற்கெதிராக முள்ளுப் போல் நெருடலாக இருக்கத்தான் செய்கின்றது.

  நிற்க திரு. தோஸ்து அவர்களின் கூற்றினை சற்றுக் கூர்ந்து கவனிப்போமா?

  //ஏன் எல்லாருக்குமே இன்னமும் இந்த சண்முகலிங்கன் மோகம்?…தமிழர்களை எல்லாவிதத்திலும் ஒடுக்கியாச்சு. தமிழர் கல்வியையும் ஏன் விட்டுவைப்பான் என்ற நன்நோக்குதான்.//தோஸ்து on December 18, 2010 12:54 pm

  ஒருவருமே தொடாத புதிய பரிமாணம் ஒன்றினை நண்பர் தோஸ்து முன்வைத்துள்ளார். பேராசிரியர் ஹூலுக்கு அரசியல் தெரியாது, அவருக்கு பல்கலைக்கழக பதவிப் போட்டி அரசியல் சாணக்கியம் சற்றும் கிடையாது – அவருக்குத் தெரிந்ததெல்லாம் கல்வியறிவு மேம்பாடு, விஞ்ஞானம், தர்க்கம், நீதி நியாயம் நேர்மை மட்டும் தான். இப்படியாகப் பட்ட ஒருவரை யாழ் பல்கலையின் தலைமையதிகாரியாக வைத்து விட்டால், அங்கு மீண்டும் கல்வி என்னும் வற்றாத நதி கரை புரண்டோடத் தொடங்கிவிடும்… அதில் எள்ளளவும் ஐயமில்லை…

  S. குகனேசனின் (Dean, Faculty of Applied Science, Vavuniya Campus) பாசையில் சொல்லப் போனால்: “உந்த மனுசன் ஹூல் வி.சியாக வந்திச்சிதெண்டால் புவனேஸ்வரி லோகனாதன், மங்களேஸ்வரன், நந்தகுமாரன், சண்முகலிங்கன், ஞானகுமாரன், இளங்குமரன் முதலாயவர்கள் ‘தலையில் ஓங்கிப் போடப் படுவார்கள்’…அவர்களுக்கு அங்கும் இங்கும் அசைய முடியாத இறுதி ஆப்புக்கள் காத்திரமாக வைக்கப்படும்”… இது யாழ்பல்கலைக்கு நல்லதுதானே? ஆனால், ‘பேரினவாத சக்திகளின் பார்வையில்’ சன்முகலிங்கனை மீண்டும் கொண்டுவருவது தான் உசிதமென்று தென்படும்… அப்போதுதானே கெட்டுக் குட்டிச் சுவராக போன இந்த நிறுவனத்தை மேலும் தூள் தூளாக அடித்து நொறுக்கலாம்! ஆக மொத்தத்தில் பேராசிரியர் ஹூல் ஒருநாளும் பேரினவாத சக்திகளின் கருவியாக பயன்படுத்தப்பட முடியாதவர் என மேல்மட்டங்கள் உணர்ந்துதான் இன்னமும் சண்முகலிங்கத்தை கதிரையில் குந்த வைத்திருக்கின்றன…

  இவ்வளவுமிருக்க ‘பழைய மாணவன்’என்கின்ற பெயரில் முன்பு இருதடவைகள் ஒழுங்காகத் தட்டச்சிடப் படாத தமிழில் கருத்தை தாங்களோ (வேறொருவரோ?) கருத்தை தெரிவித்திருந்தார்கள்/இருந்தீர்கள்…

  தங்கள் பின்னூட்டத்தின் உள்ளார்த்தமான நோக்கு இரு விடயங்களை நோக்கிச் சார்ந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது:
  1. பம்பைமடு நோக்கிய வவுனியா வளாகத்தின் மாற்றுகை
  2. மங்களேஸ்வரன், கோப்பெருந்தேவி, ஜெயசீலன் குழுபால் தாங்கள் கொண்டிருக்கும் பற்று.

  பம்பைமடு விவகாரத்தை பெரிய விடயமாக ஊதிப் பெருப்பித்து பகிஷ்கரிப்புக்கள் வீண் அட்டூழியங்ளை கட்டவிழ்த்து விட்ட மங்களேஸ்வரன் குழுவைப் பற்றி ஏற்கனெவே நிறையச் சொல்லப்பட்டிருக்கின்றது. அதாவது, அடிப்படையில் – தமது நிலைபேறை உறுதிப்படுத்துவதற்கும் தம் காலை ஊன்றவும் அடிப்படையில் ஒருவித கல்வித் தகுதிகளும் ஆய்வுப் பின்னணிகளும் இல்லாத இவர்கள் காட்டிய படம்தான் பம்பை மடு விவகாரம்.

  தங்களைப் போன்ற இளைய சமுதாயத்தை இவர்கள் திசைதிருப்பி விட்டதுதான் கவலைக்கிடமான விடயம்… கிணற்றுத் தவளை போலத் தாங்களும் “நான் இன்று நல்ல நிலைமையில் இருக்கின்றேன்” என்று முன்பொருமுறை சொல்லியிருந்தீர்கள்… கேட்க விரும்புகின்றேன்… ஐயா பழையமாணவரே, ‘நல்ல நிலைமை’ என்றால் என்ன?

  மங்களேஸ்வரனைப் போலவும் குகனேசனைப் போலவும் பிறருக்கு வால் பிடித்துக் வாழ்கையை ஓட்டிச் செல்வதா?

  எனது அனுபவத்தில் வவுனியா வளாகத்தில் நான் பெற்ற வியாபாரக் கற்கைப் பட்டம் எனக்கு ஒன்றுமே நல்லது செய்யவில்லை. அதன்பின் நான் கஸ்டங்களுக்கு மத்தியில் வேலை செய்து கொண்டே வெளிவாரியாக கற்று சி.ஐ.எம் பட்டயக் கற்கை நெறியை (Chartered Instituteof Marketting, UK) முடித்த பிற்பாடே ஓரளவுக்கு ‘அப்பாடா” என்று பெருமூச்சு விட்டு நிம்மதியாக இருக்கக் கூடிய தொழிலொன்றுக்குள் புக முடிந்தது. நான் இன்னமும் நல்ல நிலைக்கு வரவில்லை.வாழ்க்கையிலும் தொழில்நீதியிலும் முன்னேற இன்னமும் எவ்வளவோ படிகள் இருக்கின்றது. தொடர்ந்தும் முயற்சி செய்தபடிதான் இருக்கின்றேன்.

  உண்மையில் மங்களேஸ்வரன் தனது கல்வி புகட்டலில் ஒழுங்காக இருந்திருந்தாரானல், என் போன்ற மாணவர்களுக்கு நல்லதொரு முன்னேற்றப்பாதையை காட்டியிருப்பார். அப்படி நடந்ததா? அதுதான் இல்லையே! கோப்பெருந்தேவி மிஸ் அவர்களின் கற்பித்தல் திறமை பழையதாகப் போன காகிதங்களில் உள்ள நோட்ஸினை வாசிப்பதுடன் முடிந்துவிடும் என்பதும், அதில் உள்ள விடயங்களைக் கூட விளங்கப்படுத்த முடியாத மூளைசாலிதான் இந்தப் பெண்மணி என்பதும் அனைவரும் அறிந்ததே.

  இன்று ஜெயசீலன் திறந்த பல்கலைக்கு வெளிவாரி விரிவுரையாளராக சமூகவியல் பட்ட நெறிக்கு தொடர்பாடல் மற்றும் தகவல் பரிவர்த்தனை தொடர்பாக விரிவுரை எடுக்கின்றாராம்… ஒன்றுமே விளங்குவதில்லையாம் என்று எனது நண்பர்கள் கூறுகின்றார்கள். ஜெயசீலனுக்கும் தொலைத்தொடர்புக்கும் உள்ள சம்பந்தம் முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் உள்ள சம்பந்தத்தை விடவும் தூரமானது அல்லவா?

  ஏன் இந்தப் பேர்வழிகள் எல்லாருமே சமூகத்தை சீரழித்து மற்றவர் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்து தாம் மட்டும் நன்றாக வாழ வேண்டும் என்று நினைக்கின்றார்களோ? மன்னார் மண்ணிலிருந்து பல்கலைக்கழகக் கல்வி பற்றிய பலகனவுகளுடன் வந்த எனக்கு பம்பைமடு விவகாரமும் பகிஸ்கரிப்புக்களும் அருவருப்பை மட்டுமே தந்தன… ஏன் ஐயா பழையமாணாவரே, புல்லுருவிகளுக்கும் அவர்கள் கோரிக்கைக்களுக்கும் வக்காலத்து வாங்குகின்றீர்கள்?

  தெருவிளக்கில் படித்துத்தான் ஆபிரகாம் லிங்கன் முன்னேறினார்… நமக்கு கட்டடங்கள் தேவையில்லை தரமான கல்வி புகட்டலும் நல்ல ஆய்வு நெறிகாட்டலுமே தேவை – அதனை மங்களேஸ்வரனோ, சீனாவில் கலாநிதிப்பட்டம் வாங்கி வந்த புஸ்பநாதனோ உங்களுக்கு தந்திருக்கின்றார்களா?

  ஆய்வு, கல்வியாளர்களின் அறிவார்த்தமான சுதந்திரம், தர்க்கம் என்கின்ற விடயங்கள் ஒன்று பற்றியுமே தெளிவில்லாத கிணற்றுத்தவளைத் தனமான கோரிக்கைகளுடன் இருக்காதீர்கள்.

  பம்பைமடுவிற்கு நகர்தல் என்பது புவனேஸ்வரி லோகனாதனின் பத்மனாதன் கொன்ஸ்ரக்ஸன்ஸுக்கு மேலும் வியாபாரத்தை பெருக்குவதற்கான வழி என்பது உங்களுக்கு விளங்க வேண்டும். வவுனியா கம்பஸ்ஸின் எல்லாக் கொண்றாக்டுகளுமே அவர் கையில்தான் என்பது எல்லாரும் அறிந்த விடயம். ஆக மொத்தத்தில், அடிப்படையில் பம்பைமடு கோரிக்கையை புவனேஸ்வரி லோகனாதன்தான் தூண்டியிருக்க வேண்டும் என்பது உங்களுக்கு விளங்கிவிட வேண்டும்.

  அவர்களுக்கு வருமானம், இலாபம் காணுவதற்கு என்பதற்காக மாணவர்களை பலிக்கடாவாக்குவது ஒன்றும் புதிய விடயமில்லையே! ஏன் இந்த உள்ளார்த்தமான தந்திரங்கள் உங்களுக்கு விளங்கவில்லை நண்பனே?

  தோழரே, //” naangal engalaal mudinthathai seythu ullom.
  ungal nambikaiyai kaapathuveergal ena nambukirom”//
  என்று சொல்வதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்? பம்பைமடு பகிஸ்பரிப்பு மற்றும் வன்முறைகளுக்காக மங்களேஸ்வரன் குழுவின் கைப்பாவைகளாக இயங்கினீர்கள் என்பதனையா? உங்களைச் சொல்லிக் குற்றமில்லை நண்பனே! உங்களுக்குக் காட்டப்பட்ட உலகம் அவ்வளவேதான்… இதற்கும் சேர்த்துத்தான் சண்முகலிங்கன்/ம் முதல் புவனேஸ்வரி லோகனாதன் வரையிலானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

  இந்த தேசம்நெற் இணைய ஊடகம் வாயிலாக நாங்கள் அனைவரும் முன்னெடுத்திருக்கின்ற மாபெரும் போராட்டம்தான் தமிழ் கூறும் சமூகத்தின் முதலாவது விழிப்புணர்வுப் போராட்டம்! உண்மையும் அதுதான்! அதற்குள் தாங்களும் சேர்ந்து கொள்வதானால் சீரிய சிந்தனைகளுடன் கரம் கோர்த்துத் தோள் கொடுங்கள் தோழர் பழையமாணவன் அவர்களே! அதுவும் ‘பழையமாணவன்’ என்பது உண்மையிலேயே பழையமாணவனாக இருக்கின்ற பட்சத்தில்தான் சாத்தியமாகும்… ஆனால் நீங்கள் சண்முகலிங்கத்தினதோ, ஜெயசீலனினதோ, மங்களேஸ்வரனினதோ ‘புனைபெயராக’ இருக்கின்ற பட்சத்தில்?

  ‘பழையமாணவன்’ என்கின்ற பெயரும் நீங்கள் முன்வைக்கின்ற விடயங்களும் அப்படியே அச்சடித்தாற்போல் கோப்பெருந்தேவி கலைநாதன் (செல்வி. குமாரசாமி) அவர்களின் அரசியல் தந்திரங்கள் போல் இருக்கின்றது… அது ஏன் பழையமாணவன் அவர்களே?

  Reply
 • ram
  ram

  If hool’s appointment is conformed as a V C for the Jaffna University,I think is an opportunity to se some how an academic community. He has potencial to change the community gradually. Shanmugalingan & Balasundarampillal should be chase from the Jajjna uni.

  Reply
 • Kanthan
  Kanthan

  “இன்று ஜெயசீலன் திறந்த பல்கலைக்கு வெளிவாரி விரிவுரையாளராக சமூகவியல் பட்ட நெறிக்கு தொடர்பாடல் மற்றும் தகவல் பரிவர்த்தனை தொடர்பாக விரிவுரை எடுக்கின்றாராம்… ”

  This is the point of departure of Prof Hoole. Since, as everybody know the fact (one or two commenters also indicated) that;

  “தகுதியற்றவர்கள் தமக்கு தகுதியற்ற பாடங்களை கற்பிப்பதையும் பாடவிதானம் தயாரிப்பதையும் நிறுத்த வேண்டும்”

  “தகுதியற்றவர்கள் வினாத்தாள் தயாரிப்பதையும் வினாத்தாள்கள் மதிப்பிடுவதையும் நிறுத்தவேண்டும்”

  These are the reasons for the University ruined and this has been generalized by Jeyabalan as :

  “சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே!”

  and subsequent arguments on this issue. Hence, the duty of Prof Hoole is to weed-out these irregularities first, that is, ensure the quality of our education which was destroyed by Balasuntharampillai.

  Reply
 • அப்பாவி
  அப்பாவி

  usha -thanusan on December 17, 2010 1:40 pm நீங்கள் சொன்னவை வவுனியா வளாகத்திற்க்கும் சாலப் பொருந்தும். உதாரணமாக, திருமதி புவனேஸ்வரி லோகநாதன் ஒர் Agriculture Science Graduate ஆனால் இவர் கற்பிப்பது Environmental Science அதிலும் இவர் கற்பிக்கும் ஒரு பாடம் Research Methodology. இதில் உள்ள முரண் நகை என்னவென்றால், இவ்ருக்கு எவ்வித ஆராச்சி பின்னணியும் கிடையாது என்பதுதான்.

  மேலும் ஜெயசீலன் தொடர்பாக சர்ச்சையும் உருவாகி உள்ளது. இவர் ஒர் ஆங்கில (English as a Secondary Language)விரிவுரையாளர். அப்படி இருக்கும் போது இவர் எவ்வாறு சமூகவியல் பாடநெறிகளை கற்பிக்கின்றார் என்று தெரியவில்லை. இது சண்முகலிங்கன் சமூகவியல் பாடநெறிகளை கற்பித்தலுக்கு ஒப்பானதுதான்.

  மேற்கூறிய விடையங்கள் யாவுமே வவுனியா வளகத்தில் உள்ள Quality தொடர்பான மிகமோசமான நிலையை சுட்டி நிற்கின்றது என்பதற்க்கு வேறு உதாரணம் தேவை இல்லை.

  இவற்றை விட Special Degree மாணவ்ர்களிற்க்கு ஆராச்சி பின்னணி உடையவர்கள் மட்டுமே விரிவுரை எடுக்க வேண்டும் என்பது எழுதப்பட்ட விதி. ஆனால், Applied Science பீடம் முழுவதுமே தகுதிகாண் நிலையில் உள்ள விரிவுரையாளர்களால் அல்லது போதிய ஆராச்சி பின்னணி அற்ற விரிவுரையாளர்களால் Special Degree இற்கான பாடங்கள் போதிக்க படுகின்றது. இது மாணவர்களின் கல்வியை பாழடிக்கும் செயலே. இந்த விதியை முதல் முதலில் மீறியது இராசேந்திரா பீடாதிபதியாக இருந்தபோது தான். இது அவரின் தனிப்பட்ட நலனிற்க்காக செய்யப்பட்ட விடையம் என்பது அனைவரும் அறிந்த விடையம்.

  இத்தகைய கல்வியை பாழடிக்கும் விடையங்கள் தொடர்பாக பேராசிரியர் கூல் தகுந்தநடவடிக்கை எடுப்பார் என மாணவர்களின் கல்வியில் அக்கறை உள்ளோர் எதிர் பார்கின்றனர்.

  Reply
 • thenupiriyan
  thenupiriyan

  யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்? இன்னும் இறுதி முடிவில்லை. அங்கஜன் போராசிரியர் கூலுக்கு ஆதரவாக நிற்கின்றார். அமைச்சர் டக்ளஸ் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்திற்கு ஆதரவாக உள்ளார். இவரின் ஆதரவால்தான் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்திற்கு 14 வாக்குகள் விழுந்தன. அங்கஜன் டக்ளஸ் ஆகிய இருவரினதும் வற்புறுத்தல் காரணமாக ஜனாதிபதி இறுதி முடிவு எடுக்கமுடியாமல் தவிக்கின்றார்.

  கடந்த யாழ் மாநகர சபைத் தேர்தலிலும் மேயரைத் தெரிந்தெடுப்பதற்கு டக்ளசிற்கும் ரிசாட் பதியுதீனுக்குமிடையில் இவ்வாறான இழுபறி நடந்தது நினைவுகூரத்தக்கது. உதவி மேயர் பதவியை விட்டுக்கொடுத்து மேயர் பதவியைக் காப்பாற்றி போட்டியில் டக்ளஸ் வெற்றி பெற்றார். துணைவேந்தர் தேர்தலில் வெற்றி டக்ளசிற்கா அங்கஜனுக்கா?

  Reply
 • சாணக்கியன்
  சாணக்கியன்

  திருமதி கோப்பெருந்தேவி கலைநாதன் (செல்வி. குமாரசாமி) மற்றும் திருமதி ஜானகி தெவரூபன் அவர்கள்து ஆய்வுகள் தொடர்பான குளறுபடிகள், வவுனியா வளாகத்தின் ஆய்வு மாகாநாட்டில் (2009) வெளி கொண்டு வரப்பட்டிருந்தன.

  இதில் உள்ள விடையம் யாதெனில், இவர்கள் இருவருமே அந் நிறுவனத்தில் சிரேட்ட விரிவுரையாளர் தரதில் உள்ளவர்கள் என்பதுதான். அப்படியாயின், இவர்கள் மாணவர்களின் ஆய்வுகளிற்க்கு எவ்வாறு வளிகாட்டுவார்கள் என்பதுதான் கேள்வி. இத்தகைய நிறுவனத்தின் எதிர்காலம் என்ன?

  Reply
 • அப்பாவி
  அப்பாவி

  //திருமதி கோப்பெருந்தேவி கலைநாதன் (செல்வி. குமாரசாமி) மற்றும் திருமதி ஜானகி தெவரூபன் அவர்கள்து ஆய்வுகள் தொடர்பான குளறுபடிகள், வவுனியா வளாகத்தின் ஆய்வு மாகாநாட்டில் (2009) வெளி கொண்டு வரப்பட்டிருந்தன. இவர்கள் மாணவர்களின் ஆய்வுகளிற்க்கு எவ்வாறு வளிகாட்டுவார்கள் என்பதுதான் கேள்வி. இத்தகைய நிறுவனத்தின் எதிர்காலம் என்ன?//சாணக்கியன் on December 20, 2010 1:09 pm

  நண்பர் சாணக்கியன் அவர்களே, இவர்கள் இருவருமே தம் தலைவியும் ஒப்பற்ற மாபெரும் நிழலுலகப் புள்ளியுமான புவனேஸ்வரி லோகனாதன் அவர்களின் வழியில் மாணவர்களுக்கு காடைத்தனத்தையும், அட்டூழியத்தையும், களவாணித்தனத்தை மட்டுமே புகட்டுவார்கள்… கடைசியில் எல்லாரும் சேர்ந்து புவனேஸ்வரி லோகனாதனின் கொந்துறாத்துக் கம்பனியில் சீமெந்து குழைக்கத்தான் லாயக்காவார்கள்!

  புவனேஸ்வரியின் கெட்டித்தனம் என்னவென்றால் சண்முகலிங்கன் இருந்தாலும், குமாரவடிவேல் இருந்தாலும் வேறெந்தத் துணைவேந்தர் பதவியிலிருந்தாலும்… அவர்கள் எல்லாரையும் தம் வழிக்குக் கொணர்ந்து தன் காரியத்தை செவ்வனே செய்து கொண்டு போதல்தான்.

  வவுனியா வளாகத்துக்கு முதல்வராக இருந்த எஸ். ராஜதுரைக்கு ஃபிரிஜ், டி.வி என்று சகல சம்பத்துக்களையும் கையூட்டாகக் கொடுத்து பம்பைமடு கொந்துறாத்துக்களின் அடுத்த கட்டத்தையும் தம்வசமாக்கிக் கொண்டவர் புவனேஸ்வரி.

  வவு/குடியிருப்பு பகுதியில் அரச வைத்தியசாலை நிலத்தை வளைத்து மூன்று மாடியெழுப்பிய இவர் தற்போது தன் தம்பி நித்தியானந்தத்துக்கும் நவீன மாளிகை ஒன்று கட்டுகின்றார். எல்லாமே யாழ் பல்கலையிடமிருந்து கொந்துறாத்து என்ற பெயரில் களவாடிய பணம் செய்யும் வேலை.

  Reply
 • mathan
  mathan

  யாழ். பல்கலைக்கழகத்தில் எவன் ஒருவன் மாணவர்களின் கல்வியை சீர் குலைக்கின்றானே அவன் விரிவுரையாளராகவாம். அவர்களுக்கு அடிப்படை தகுதி அது மட்டும் தான். இவர்கள் வாசையில் குதிரை கயேந்திரன் தம்பியும் புவியியல் துறை விரிவுரையாளவலருமான ரவீந்திரனும் மாணவர்களின் கல்வியை சீர் குலைதார் விரிவுரையாளரானார், புலிகளுக்கு தங்கவாள் பரிசளிதடதுடன் பல ஊர்வலங்கள் நடத்தி மாணவர்களின் கல்வியை சீர் குலை கறுப்பு புலி என புலிகளால் பட்டம் பெற்றவரும் முன்னால் மாணவசங்கத்தலைவவரும் ஆகிய முனி மெய்யியள் துறைக்கு விரிவுரையாளராகினார். இதன் பின்னனிதான் என்ன? அரசியல் பலமா?காசு பலமா? புலிபலமா?தெரிந்தால் நானும் கற்பதை நிறுத்திவிட்டு இவர்கள் பாதையை பின்பற்றலாம் என நினைக்கிறேன்.

  Reply
 • thenupiriyan
  thenupiriyan

  //யாழ். பல்கலைக்கழகத்தில் எவன் ஒருவன் மாணவர்களின் கல்வியை சீர் குலைக்கின்றானே அவன் விரிவுரையாளராகவாம். //
  இது நீங்கள் குறிப்பிட்டுள்ள இரண்டு விரிவுரையாளர்களுக்கு மட்டும் பொருந்துமா? அல்லது அனைத்து விரிவுரையாளர்களும் இவ்வாறுதான் பதவிக்கு வந்தவர்களா?

  Reply
 • இராஜதுரை
  இராஜதுரை

  விவாத மன்றத்துக்கு எனது பணிவான வணக்கங்கள்.

  ஐரோப்பாவில் வழமைக்கு மாறான கடுங்குளிர், இலங்கையின் வடகிழக்கில் மழை, வெள்ளம் என்று எதிர்பாராத காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டு – உலக வெப்பமாதலின் எதிர் வினை விளைவுகளால் இந்த 2010 மார்கழியில் அனைவரும் நடுங்கிக் கொண்டிருக்கும் வேளையில், உலகத்தின் ரட்சகன் யேசுவின் பிறந்தநாளுக்கு 48 மணித்தியாலங்களுக்கும் குறைவாக உள்ள இத்தருணத்தில் – யாழ் பல்கலைக்கழகத்தை இரட்சிக்கப் போகும் தன்னலமற்ற நேர்மையான நிர்வாகி யாராகவிருக்கும் (?) என்கின்ற கேள்விதான் உள்ளத்தை நிரப்பிக் கிடக்கின்றது.

  தமிழ் பேசும் சமூகத்தின் தனிப்பெரும் அடையாளமாக விளங்க வேண்டிய பனைசூழ் வடக்கின் யாழ் பல்கலைக்கழகம் இன்று சிதிலமாகித் தன் நிலை குலைந்து நலிந்து போயிருக்கிறது. இது நமது சமூகத்தின் நேர்வழிப் பரிணாம வளர்ச்சிக்கு நல்லதல்ல.

  பேராசிரியர் ஹூலுக்கு யாழ் பல்கலையின் உயர் நிர்வாகப்பதவியான துணைவேந்தர் ஆசனம் கிட்ட வேண்டும் என்பதற்காக தேசம்நெற்றும் அதன் பின்னூட்டாளர்களும் முன்னெடுத்த எழுத்துப் போராட்டம், துணைவேந்தர் தேர்தலின் பிற்பாடு வெற்றியில் முடியுமா (?) என்கின்ற கேள்வி அனைவரையும் சிந்திக்க வைத்திருக்கின்ற இப்பொழுதில் சில அரசியல் யுக்திகள் பற்றி முன்னெச்செரிக்கையாக இருத்தல் நலம் என்று இம்மன்றத்தை வேண்டிக் கொள்கின்றேன்.

  பேரினவாத சக்திகள் எவ்வாறு ஹூலை விடுத்து சண்முகலிங்கன் பக்கம் நோக்கிச் சார எத்தனிப்பார்கள் என்பதனை முதிர்ச்சியான அலசல் பார்வை கொண்டு யோகநாதன் குரூஸ் அழகாக நிரற்படுத்தியுள்ளார். அஃதாவது,
  1. பேராசிரியர் ஹூல் துணைவேந்தர் பதவியேற்றால், நியாமான முறையில் கல்வி மறுமலர்ச்சி ஏற்படும். இந்த மாற்றப் போக்கின் போது யாழ் பல்கலையின் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்துக் கொழுத்த பாலசுந்தரம்பிள்ளை, சண்முகலிங்கன், மோகனதாஸ் முதல் எஸ். குகனேசன் மற்றும் புவனேஸ்வரி லோகனாதன் வரையில் களையெடுக்கப்படுவர், ஒரங்கட்டப்படுவர்.
  2. ஆனால், இத்தகையவர்கள் யாழ் பல்கலையினுள் இருந்தால் தான் தமிழ் பேசும் சமூகத்தின் ஏகோபித்த தனிப்பெரும் அடையாளமாக அப்பல்கலைக்கழகம் மலர்வது தடைப்படும். இதனை பேரினவாத அரசியல் சாணக்கியர்கள் நன்கு அறிவார்கள்.
  3. எனவே, ‘பேரினவாத சக்திகளின் பார்வையில்’ சண்முகலிங்கனை மீண்டும் துணைவேந்தர் ஆசனத்தை நோக்கிக் கொண்டுவருவது தான் உசிதமென்று தென்படும்… அப்போதுதானே கெட்டுக் குட்டிச் சுவராக போன இந்த நிறுவனத்தை மேலும் தூள் தூளாக அடித்து நொறுக்கலாம்!
  4. இந்தச் செயற்பாட்டுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் பலவழிகளில் வவுனியாவளாகத்தின் புவனேஸ்வரி லோகநாதன் முதல் ஓய்வுபெற்றாலும் அதிகார ஆசைவிட்டுப் போகாத மோகனதாஸ் மற்றும் பாலசுந்தரம்பிள்ளை ஆகிய பழம் ஊழற்பெருச்சாளிகளும் பேரினவாத சக்திகளை மறைமுகமாக தூண்டி விடுவர்.
  5. ஆக மொத்தத்தில் பேராசிரியர் ஹூல் ஒருநாளும் பேரினவாத சக்திகளின் கருவியாக பயன்படுத்தப்பட முடியாதவர் என மேல்மட்டங்கள் உணர்ந்துதான் திட்டவட்டமான முடிவினை எடுக்காது இன்னமும் சண்முகலிங்கத்தை பதில் துணைவேந்தராக கதிரையில் மீண்டும் (தற்காலிகமாகவேனும்) அமர வைத்திருக்கின்றன…

  தர்க்க ரீதியில் நோக்கலாயின், மேற்படி விளக்கம் ஏற்புடையதே.

  அப்படியானதொரு செயற்பாடுதான் நடந்தேறும் என்றால் தேசம்நெற்றின் மிகநீண்டதான இந்த எழுத்துப் போராட்டம் வீணடிக்கப்பட்டு விடும். ஆனாலும் எமது எழுதுகோல்களும் கணினி விசைப்பலகைகளும் ஒருநாளும் ஓயாது – இந்தப் போராட்டத்தை அதன் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல நேரிடும். அது நிச்சயம்! இதற்கு வழிகோலிவிட்ட நண்பர் திரு. த. ஜெயபாலனுக்கு மிக்க நன்றிகள்.

  நிற்க பேராசிரியர் ஹூல் பதவிக்கு வந்து விட்டாரென்றால் என்ன நடக்கலாம் ?) என்றும் நாம் அலசுதல் அவசியம்…

  பேராசிரியர் ஹூலினால் யாழ் பல்கலைக்கழகத்தை நிச்சயமாக ஒருநாளில் சீர்படுத்த முடியாது. அதற்கு பல காலம் எடுக்கும். சண்முகலிங்கன் தேர்தலில் பெருவெற்றி பெறாவிடினும் அவரினது குழுவின் ஏனைய உறுப்பினர்களான ‘சைவ வேளாண் ஆணாதிக்க புல்லுருவிகள்’ அனைவரும் அவர்களைப் பின்பற்றும் ‘பாவனை பண்ணுபவர்களும்’ யாழ்பல்கலையின் ஏனைய நிர்வாகப்பதவிகளில் வேரோடிப்போய் உறுதியாகத்தான் இருக்கின்றார்கள். உடல் முழுதும் விசம் பரவிக்கிடக்கும் நிலையில் தலைமட்டும் சுத்தமாக இருந்து ஒரு பயனும் இல்லை.

  பேராசிரியர் ஹூலுக்கு யாழ் பல்கலையின் அரசியல் சதுரங்கம் அத்துப்படியாகுமா? அது தெரியவில்லை?!?

  மேலும் சண்முகலிங்கன் பாசறையிலிருந்து கழன்று கொண்டவர்களும் உள்ளேயே ‘புரையோடிப் போன புற்று நோய்’ போன்ற விசமிகளுமான ஒரு கூட்டம் பேராசிரியர் ஹூலின் பக்கம் தம்மை இணைத்துக் கொள்ள எத்தனிக்கும். உதாரணமாக வவுனியா வளாகத்தின் எஸ். குகனேசன் காற்றடிக்கும் பக்கத்துக்கெல்லாம் தலை சாய்த்துச் சாய்ந்தாடக் கூடியவர். இத்தகையவர்கள் ஹூலுடன் தம்மை சேர்த்துக் கொண்டு அவரையே குடைசாய்க்க முயலவும் செய்வார்கள். ஏற்கனவே மரண அச்சுறுத்தல் விடுத்து, பேராசிரியர் ஹூலை அவசரமாக உயிரைக் கையிற்பிடித்தபடி புலம்பெயர வைத்தவர்களுக்கு இது ஒன்றும் புது விடயமல்ல.

  பாரபட்சமற்ற அறிவும் தேடலும் தன்னால் புத்துயிர்ப்பு அடைய வேண்டும் என்கின்ற கல்வியாளனின் ஆக்கபூர்வமான வெறியுடன் யாழ் மண்ணுக்கு வந்திருக்கின்ற பேராசிரியர் ஹூலுக்கு இனிமேல்தான் பல புது அனுபவங்கள் காத்திருக்கின்றன.

  ‘எதிர்பாராரதுதான்’ எதிர்பார்க்கப் பட்டேயாக வேண்டும் என்பதுதான் பிரளயச் சிக்கல் மிகுந்த யாழ் பல்கலையின் நியதி – அது பெருங்காடு, ஒளியே புக முடியாத அடவி, பயங்கரமாக மனித மிருகங்கள் உலாவி வரும் மரண பூமி… காட்டை வெட்டிச் சுத்தப்படுத்தி நாடாக்கி மறுமலர்ச்சி பெறவைக்க மூன்றாண்டுக்கால துணைவேந்தர் பதவி போதுமா பேராசிரியர் ஹூல் அவர்களே? உங்களிடமிருந்து தமிழ் பேசும் சமூகம் நிறையவே எதிர்பார்த்திருக்கின்றது. எங்களை இலவுகாத்த கிளிகளாக மாற்றிவிடுவதற்கு தாங்கள் காரணகார்த்தாவாக மாட்டீர்கள் என நம்புகின்றோம்…

  பேராசிரியரே, உங்களுக்கும் எங்களுக்கும் 2011 இனிய புத்தாண்டாக மலரட்டும். இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்…

  இப்படிக்கு,
  எதிர்காலம் பற்றிய சிறுதுளியளவு நம்பிக்கையுடன்
  இராஜதுரை

  Reply