மூத்த அரசியல்வாதி க.பொ.இரத்தினம் காலமானார்.

மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான க.பொ.இரத்தினம் நேற்று திங்கள் கிழமை தனது 96 வது வயதில் காலமானார். நேற்று மாலை 5 மணியளவில் கொழும்பில் வைத்து இவர் காலமானார். இவரது உடல் தற்போது பொறளை மலர்ச்சாலையில் உறவினர், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

வேலணையைப் பிறப்பிடமாக் கொண்ட திரு. க.பொ. இரத்தினம் ஆரம்பத்தில் ஆசிரியராகவும், ஆசிரியர் கலாசாலை வரிவுரையாளராகவும் பணியாற்றினார். பின்னர் மலேசியப் பல்கலைக்கழகத்தில் தனிநாயகம் அடிகளோடு இணைந்து பணிபுரிந்தார். 1960 முதல் தமிழரசுக் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். 1965 ஆம் ஆண்டு கிளிநொச்சித் தொகுதியிலும், 1970, 1977ஆம் ஆண்டுகளில் ஊர்காவற்றுறைத் தொகுதயிலும் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அரசியல்வாதியாகவும், ஒரு தமிழறிஞராகவும் இவர் தனது ஆற்றலை வெளிப்படுத்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply to நந்தா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

 

31 Comments

 • information
  information

  பேச்சு- தமிழ், மூச்சு-குறள், பணி- அரசியல்

  பண்டிதர் கா.பொ.வின் வாழ்க்கை இலட்சியம் ( ஐ.தி.சம்பந்தன்)

  ஈழத் தமிழர் வரலாற்றில் திருக்குறளால் உலகத் தமிழ் அறிஞர்களின் பாராட்டைப்பெற்ற பேரறிஞர் பண்டிதர் கா.பொ.இரத்தினம் அவர்கள் தமது 96வது வயதில் 21-12-10 அன்று கொழும்பில் காலமானார். அன்னாரின் மறைவினால் உலகத்தமிழ் அறிஞர்கள் ஆழ்ந்த கவலையில் உள்ளனர்.

  அரசியில் துறையில் ஈடுபட்ட பண்டிதர் அவர்கள் 18 ஆண்டு காலமாக நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்து ஈழத்தமிழர்களின் விடுதலைக்கு அரும்பணியாற்றி வந்தார். அவருடைய இழப்பு ஈழத் தமிழர்களுக்கு பேரிழப்பு.

  “எல்லாம் தமிழ்” என்ற இயக்கத்தை நடத்தி தமிழ் மக்களிடையே தமிழ் உணர்வை ஏற்படுத்திய தமிழப்பற்றாளர் பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்கள் தமிழீழம் யாழ் மாவட்டத்தில் வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

  1914 ம் ஆண்டுபிறந்த இவர் மாணவர் பருவத்திலேயே- 1930 திலிருந்து திருக்குறளில் ஈடுபாடு கொண்டிருந்தார். திருக்குறளே இவரை உலகத்தமிழ் அறிஞர் என்ற நிலைக்கு உயர்த்தியது.

  நாவலர் வழிவந்த இலக்கிய கலாநிதி பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களின் வழிகாட்டலில் பண்டிதரானார்.. பின்னர் பி.ஏ.(ஆனர்ஸ்) எம்.ஏ. பி.ஓ.எல் ஆகிய பட்டங்களைப் பெற்றுக்கொண்டார். நிறைவான கல்வித் தகைமைகளைப் பெற்றுக்கொண்ட பண்டிதர் அவர்கள் கொழும்பு அரசினர் ஆசிரியா கலாசாலை விரிவுரையாளராகவும், இலங்கை அரசின் மொழித் திணைக்கழத்தின் தமிழ் ஆராய்சித்துறைத் தலைவராகவும், மலேசியா; பல்கலைக் கழகத்தின் இந்தியத்துறை விரிவுரையாளராகவும், பின்னர் அரசியலில் 18 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி வந்தார்.

  தமிழ் மறைக்காவலர், பண்டிதர் கா.பொ. இரத்தினம் அவர்கள் ஏறத்தாள அறுபது ஆண்டுகள் திருக்குறளையே “பேச்சு மூச்சாக”க் கொண்டிருந்தவர்.

  1952ல் “ தமிழ் மறைக் கழகம்” என்ற அமைப்பை உருவாக்கி ஆற்றி வந்துள்ள பணி திருக்குறளின் வரலாற்றிலன்றி தமிழ் வரலாற்றிலும் சாதனையாகக் கொள்ளத்தக்கது.

  அதற்காக அனைத்துதலக தமிழ் அறிஞருலகம் உரிய கௌரவமளித்துள்ளது. தமிழ்மறைக் கழகம் ஆரம்பித்த 30 ஆண்டு காலத்தில் 25 திருக்குறள் மாநாடுகளை நடத்தி சாதனை படைத்தார்.

  திருவள்ளுவர் திருநாளை தமிழினைப் பேசும் மக்கள் வாழும் நாடுகளில் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்து வெற்றி கண்டவர். திருக்குறளை எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்க வழிசெய்தவர். உலகரீதியாக திருக்குறளின் முக்கியத்துவத்தைப் பிரசாரம் செய்து வந்தமை, இத்தகைய திருக்குறள் பணிக்காக அவர்பெற்ற விருதுகளும் பாராட்டுகளும் பல.

  திருக்குறள் செல்வர், தமிழ்மறைக் காவலர், குறள் ஆய்வுச் செம்மல். குறள்நெறிச் செம்மல், திருக்குறள் செம்மல், திருக்குறள் காவலர், திருவள்ளுவர் சீர்பரவுவார் என்பன குறிப்பிடத்தக்கன. மேலும் தமிழ்ப் பணிக்காக செந்தமிழ்க் கலைமணி, தமிழ்ச் சான்றோர், உலகத் தமிழிச் செம்மல் ஆகிய விருதுகள் பெற்றுள்ளார்.

  இலக்கியப் பணியால் உலகத்தமிழ் அறிஞர்களின் நன்மதிப்பைப்பெற்ற பண்டிதர். இரத்தினம் அவர்கள் 1965ல் தந்தை செல்வா தலைமையிலான இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியில் இணைந்து கிளிநொச்சித் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக அரசியலில் பிரவேசித்தார். தந்தை செல்வாவின் நன்மதிப்பைப் பெற்ற இவர் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து 18 ஆண்டுகள் பணியாற்றி வந்தார் இவர் கிளிநொச்சி ஊர்காவற்றுறை ஆகிய தொகுதிகளைப் பிரதிநிதித்துவப் படுத்தியிருந்தார். தமது தொகுதிப் பணிகளை கவனிப்பதில் சாதனையாளராக விளங்கினார்.

  நாடாளுமன்றத்தில் திருக்குறள் கருத்துக்களை ஒலிக்கவைத்தவர். திருக்குளிலுள்ள அரசியல் கோட்பாடுகளை மேற்கோள்காட்டி வள்ளுவர் காட்டிய நீதி வழி ஆட்சிசெய்ய வேண்டுமென சிங்கள அரசிற்கு அறிவுரை புகட்டியவர்.

  நாடாளு மன்றத்தில் கேள்வி கேட்பதில் மன்னனாக விளங்கினார். தமது நாடாளுமன்றக் காலத்தில் சுமார் 500க்கு மேற்பட்ட கேள்விகள் கேட்டு அரசாங்கத்தைக் கதிகலங்க வைத்தவர். கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளித்தே ஆகவேண்டும்; அது நடாளுமன்ற நிலையச் சட்டத்தின் விதி.. இதைச்சரியாகப் பயன் படுத்தினார்.

  அரசாங்கம் திட்டமிட்டு தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளும் பாகுபாடுகள் தமிழ் அரச ஊழியர்களுக்கு இழைக்கபடும் அநிPதிகள் பண்டிதர் ஐயாவின் துணிச்சலான கேள்வி ஊடாக வெளிக்கொணர முடிந்தது. நாடாளுமன்றத்திற்கு ஊடாக தமிழர்களுக்கு நன்மை பயக்கக் கூடிய பணிகளைச் செயவதில் அப்பதவியைச் சரியாகப் பயன்படுத்தி வந்தார்.

  தமிழ் அரச ஊழியர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக போராடிவந்த எமது தமிழ்த் தொழிற் சங்கக் கூட்டணிக்கு பண்டிதர் ஐயாவின் கேள்வி பதிலால் கிடைத்த விடைகள் பெரும் உதவியாகவிருந்தது. அவர்போன்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருந்தால் இன்றைய இனவாத அரசு மறைத்து வரும் பல தகவல்களை சந்திக்கு கொண்டு வந்திருக்கலாம். சில வருடங்களுக்கு முன் பண்டிதர் ஐயா அவர்களை கொழுப்பில் சந்தித்தபோது “ தன்னைப்போல் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கும் வல்லமை படைத்தவர்கள் எவரும் இன்று நாடாளுமன்றத்தில் இல்லையே” என்று கவலைப்பட்டதை நினைவு கூருவது இங்கு பொருத்தமானதே.

  இவ்வாறு நாடாளு மன்றத்திலும் காத்திரமான பணியாற்றி வந்த பண்டிதர் அவர்கள் 1983 இனக்கலவரத்தை அடுத்து ஜே.ஆர்.ஜெயவர்தனா அரசின் 6வது திருத்தச்சட்டத்தால் நாடாளுமன்ற பதவியை இழந்த பின் மானங்கெட்ட அரசியல் வேண்டாமென்று தன்மானத்துடன் இந்தியா சென்று சிலகாலம் அங்கு வாழ்ந்து வந்தார்.

  தமிழ் இளைஞர்கள் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வருவதற்கு வழிவிட்டு தமது அரசியல் நடவடிக்கைகளை நிறுத்தியிருப்தாகத் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

  தமிழகத்தில் வாழ்ந்து வந்த காலத்தில் அரசியல் பேராட்டவரலாற்றை ஆவணப்படுத்தி சில நூல்கள் வெளியிட்டிருந்தார். அன்னார் மறைந்தாலும் இவர் ஆற்றிய பணிகள் பற்றிய வலராறு பதியப்பட்டுள்ளது.

  அவர் வெளியிட்டுள்ள நூல்கள்; அடிமைச்சாசனம், இருபத்திநான்கு மணிநேரத்தில்; தமிழ் ஈழம், இலங்கையில் இன்பத் தமிழ். காவிய மணம், தடுப்புக்காவலில் பத்து நாட்கள், தமிழ் உணர்ச்சி, தனி ஆட்சி, நூற்றாண்டுகளில் தமிழ், பச்சைமண்ணும் சுட்ட மண்ணும், நினைவுத் திரைகள் என்பன வரலாற்று ஏடுகள்.

  பேரறிஞர் பண்டிதர் கா.பொ .இரத்தினம் அவர்களின் மறைவு ஈழத்தமிழர்களுக்கு மட்டுமன்றி உலகத் தமிழ் அறிஞர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும்.

  Reply
 • kovai
  kovai

  எனக்குத் தெரிந்த, முதல் அரசியல் பேர்வழி. ஒரு தமிழ் அறிஞர். நாடாளுமன்றத்தை பெருமைப்பட வைத்தவர். சட்டம் படித்து, டாக்டர் பட்டம் எடுத்து அரசியல் நடத்திய தமிழ் அரசியலில், இவர் வித்தியாசமானவர். இவர் தமிழ்ப்படுத்திய சொற்கள் பல இன்னமும் நிலைப்பட்டு நிற்கின்றன.
  உதாரணம்: இலாகா=திணைக்களம்.
  வாழ்வளித்தவர், நம் வாழ்வழிந்த போது இறந்து போனார்.

  Reply
 • பல்லி
  பல்லி

  “எல்லாம் தமிழ்” என்ற இயக்கத்தை நடத்தி தமிழ் மக்களிடையே தமிழ் உணர்வை ஏற்படுத்திய தமிழ்ப்பற்றாளர் பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்கள் மறைவு தமிழ்மக்களுக்கு ஒரு பேரிழப்பே, அவரது மறைவால் கலங்கி நிற்கும் அவரது குடும்பத்துக்கும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் பல்லி குடும்ப கண்ணீர் துளிகள்;

  பல்லி குடும்பம்;

  Reply
 • Kulan
  Kulan

  கூட்டணியில் இருந்த கூத்தர்களுள் அடக்கமாகவும் நிதானமாகவும் இருந்தவர் கா.பொ.இரத்தினம். இவர் கூத்தணிக்கு வெளியில் தமிழுக்குச் செய்த சேவை அழப்பரியது. சேருமிடத்தைப் பொறுத்தே செயற்பாடும் என்பதால் அச்சேர்க்கையை விட்டு வெளியே வந்து அவர் செய்த பெருமை மிகு சேவைகளை மேலே உள்ள எழுத்துக்களில் காணலாம். தமிழ் உள்ளவரைதான் தமிழன் ஆதனால் கா.பொ வின் இறுதிவரையிலான செயற்பாடுகள் எம்மினத்தின் வாழ்வும் வளமுமாகி உள்ளது. அன்னாரின் பிரிவு என்றும் எமக்கு இழப்பே.

  Reply
 • Deva
  Deva

  இறந்தவரை பற்றி தவறாக கதைப்பது நாகரீகம் அல்ல. இவரை எதிர்த்து வாக்களித்த பரித்தியடைப்பு, மெலிஞ்சிமுனை, கெட்டில், ஊர்கவதுரை நடுப்பகுதி, கரம்பொன் கிழக்கு, போன்ற பகுதிகளுக்கு அபிவிருத்தி நிதியை நிறுத்தியவர் இந்த கனவான். ஏன் கோடைகாலத்தில் அரசினால் வழங்கிய குடி தண்ணீரை கூட இந்த பிரதேசங்களுக்கு நிறுத்தியவர் இவர். காரணம் இவருக்கு எதிராக மக்கள் நவரத்னாதிர்ற்கு வாகளிததனால் ஆகும். மேலும் சாதி அடிபடையில் பதிவிகளை தக்க வைக்க அயராது உழைத்தவர். இன்று யாழ் பல்கலைகழகத்தில் இருக்கும் ஒரு நபருக்கு எந்தவித தகுதியும் இல்லாமல் இவரது சதியை சேர்ந்ததாலும், வேலனயான் என்ற காரணத்தாலும் பதவி வாங்கி கொடுத்தவர். சாதி சண்டை நடக்கும் பொது தனது சாதிக்கு சார்பாக போலீஸ்களை ஏவிவிட்டு ஒடுக்கப்பட்வர்களை மேலும் ஒடுக்கியவர். தீவகத்தை இரண்டாக்கி அநைத்து அரச நிறுவனங்களும் ஊர்காவதுரையில் இருந்து வேலணையில் நிறுவியவர். எங்கள் பலர் உடம்பில் இவரால் பட்ட வதை இன்றும் தழும்பாக இருக்கிறது

  Reply
 • kovai
  kovai

  ஐம்பது வருடங்களுக்கு மேலாக அடைகாத்து, நாகரீகமற்ற விடையம் என தெரிந்து கொண்டு, அநாகரீகமாக நீங்களே நடந்து கொள்கிற போது, அதிகாரத்திலும், ஆளுமையிலும் உயர்பவர்கள், எப்படி நடந்து கொள்வார்கள் என்பதற்கு விளக்கம் தேவையா? தேவா!
  இறந்தவர்களுக்கெதிராகப் போராடுவதைவிட, கேவலமாக இருப்பவர்களுக்கு எதிராகவும், அவர்தம் இருப்புகளுக்கு எதிராகவும் போராடுவதில்தான் வாழ்வில் அர்த்தம் இருக்கும்.

  Reply
 • நந்தா
  நந்தா

  தமிழ் ஈழத்துக்கும், திருக்குறளுக்கும் என்ன சம்பந்தம் என்று நானறியேன்.

  தேவாவின் கருத்துக்கள் சரியானவை என்பது பலருக்குத் தெரியும். சிங்கள அரசு என்று சத்தமிட்ட இந்த தமிழ் அரசியல்வாதிகள் சிங்கள அரசு கொடுத்தவற்றையே தமிழர்களுக்குக் கொடுக்க விடாது தடுத்துத் தாண்டவமாடியவர்கள்.

  சிங்கள அரசுகள் கொடுத்த மக்கள் பணத்தை தங்கள் உற்றார், உறவினர்களுக்குக் கொடுத்து மகிழ்ந்தவர்கள்.

  தன்னுடைய கட்சிக்காரனான ஆலால சுந்தரத்துக்கு வாக்களிக்கதே ஆனந்தசங்கரிக்கு வாக்களியுங்கள் என்று தனது கட்சிக்காரனுக்கே தலயில் கொள்ளி சொருகிய பெருமையும் இந்த கா.பொ.இரத்தினத்துக்கு உண்டு.

  வரலாற்று அடிப்படையில் தீவுப்பகுதிகள் குடியிருப்புக்களாக மாறியது போர்த்துகீசரின் வருகையின் பின்னரே ஆகும். இவர்கள் எப்படி “உயர் சாதியாகினார்கள்” என்பது இன்னமும் ஆராயப்பட வேண்டியதே.

  யாழ்ப்பாணத்தில் இந்த தீவுப்பகுதி வாசிகளைப் பற்றி பல பழமொழிகள் உண்டு. அவற்றை மெய்ப்பிக்கும் வகையில் வெளினாடுகளில் தீவார்களின் புலி வேஷத்தை காணலாம்!

  Reply
 • Thalaphathy
  Thalaphathy

  திரு. நந்தா அவர்களே!

  உங்கள் ஆயிரமாண்டு குடும்ப பாரம்பரியத்துக்குரிய நிலங்களில் முக்கால்வாசி நிலங்கள் இன்று தீவக சைவர்களுக்குதான் சொந்தம் என்பது, உங்களுக்கு விளங்குமோ!

  Reply
 • நந்தா
  நந்தா

  கள்ள உறுதி கதைகள் இப்பொழுது புரிகிறது. அது மாத்திரமல்ல. சிங்களவர்கள் தமிழர்களை “வந்தான் வரத்தான்” என்பதும் கோம்லான்ட் என்ற கதை படு கப்சா என்பதும் உண்மை என்பதை தளபதி புட்டு வைத்தமைக்கு நன்றி!

  Reply
 • Thalaphathy
  Thalaphathy

  திரு. நந்தா அவர்களே!

  போர்த்துக்கீசர் யாழ்ப்பாணக் கோட்டையை கட்டமுன்னரே எனது முன்னேர்கள், சுண்ணாம்பும் சக்கரையும் சேர்ந்த கலவைவியால் கட்டப்பட்ட வீடும், கோவிலும் நான் பிறந்த மண்ணில் இன்றும் ஆதாரங்களாக இருக்கின்றன. நீங்கள் பார்த்து வரலாற்றை புரிந்துகொள்ள வேண்டுமா? – உங்களுக்கு எங்கள் அடையாளங்களைக் காட்டத்தாயார்.

  “சிலப்பதிகாரத்தின்” தொடர் வரலாறான “மணிமேகலையில்” குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் எல்லாம் அப்படியானால் கட்டுக்கதைகளோ? மணிமேகலை எந்த நூற்றாண்டுச் சம்பவங்களை விபரிக்கிறது? நயினாதீவில் நாகவிகாரையை உருவாக்கியது யார்? “கோவலனுக்கும் – மாதவிக்கும்” பிறந்த மணிமேகலை “தமிழிச்சியா” அல்லது நீங்கள் எழுதியவைகளா? மணிமேகலையின் இறுதிக்காலங்கள் எவ்வாறு விபரிக்கப்படுகின்றது?

  Reply
 • nanee
  nanee

  எந்த ஒரு தமிழனுமே சுத்தமாக வாழ்ந்ததில்லை. பதவி கிடைத்ததும் துஸ்பிரயோகம் செய்வதும் அடுத்தமுறை அந்த சீட்டை தான் பெற்றுக்கொள்வதுதான் அவன் முதல் நோக்கம். தமிழ் நாடாக இருந்தாலென்ன தமிழீழமாக இருந்தாலென்ன இதுவே விதி. மிகவும் பின் தங்கிய நாகரீகமடையாத பிற்போக்கான எமது இனத்தில் வேறெதை எதிர் பார்க்க முடியும். பிழை நடக்கும் போது பேசாதிருந்து விட்டு பின்னர் வந்து அதற்கு ஒரு விளக்கம் கொடுப்பான்.

  Reply
 • Deva
  Deva

  கோவை,
  ஓம், எல்லா “அதிகாரத்திலும், ஆளுமையிலும் உயர்பவர்கள், ” எங்க எல்லாற்ற தலையிலும் மிளகாய் அரைபார்கள், எங்களை அடக்கி ஒடுக்குவார்கள், நாங்கள் வாய் மூடி இருக்க வேண்டும். அவர்கள் சாகும் போது உங்களை போன்றவர்கள் சூட்டும் புகழ் மாலைக்கு நாங்களும் தலை ஆட்டவேண்டும். இப்படி எதிர்பார்ப்பது தான் யாழ்-மேலாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு. புகையிலை கண்டுக்கு புல்ளுப்புகுங்க வந்த பெண்ணை கா.போ வின் சாதியான் பாலியல் பலாத்காரம் செய்த வேளை அதற்கு நியாயம் கேட்டதனால், கா.போ வின் நேரடி தலையீட்டால் நான் உட்பட 7 போர் கைதாகி ஊர்காவற்றுறை போலீஸ் இல் 3 நாட்கள் தடுத்து வைகப்பட்டு, அங்கு அடித்து சல்லடை ஆக்கப்பட்டோம். சில வருடங்களில் பின் அப்பெண்னின் தம்பி, எனது மைத்துனன், புலியுடன் இணைந்து பலாத்காரம் செய்தவனை கொலை செய்தான்.
  எழுபது வரை கரம்பொன் வேளாள கிறிஸ்தவர்களின் கடுப்பாட்டில் இருந்த தீவகத்தை, இந்து வேளாள கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர் கா.போ ரத்னம். kayts st . அந்தோணியார் கல்லூரியை தேசிய பாடசாலையாக அறிவிகப்படவிருந்த வேளையில் அதை நிறுத்தி; வேலணை மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக பிரகடனப்படிதியவர். இப்படி இவர் பற்றிய பல நேரடி அனுபவங்களை இனால் எழுத முடியும். ஒதுகப்பட்ட இளஞ்சர்கள் பலர் பிர்காலத்தில் EPRLF இயகதிர்ற்கு போவதற்கு வளிவகுதவர்களில் தீவகத்தை பொறுத்த அளவில் கா.போ. ரத்னமும் ஒருவர். அந்த காலத்தில் EPRLF மட்டுமே சாதிக்கெதிரான அரசியல் செயர்பாடுகளில் தீவகத்தில் ஈடுபட்டது.
  இன்று எல்லோரும் பிரபாகரனின் தலையிலேயே எல்லா தவறுகளையும் சுமத்துகிறார்கள். ஆனால் அவரின் தவறுகளுக்கு அடித்தளம் இட்டவர்களே கா. பொ.ரத்னம் போன்ற கூட்டணி தலைவர்களே.

  Reply
 • நந்தா
  நந்தா

  தளபதியின் கப்சா அருமை. சக்கரையும் சுண்ணாம்பும் சேர்த்து வீடு கட்டுவது பிரிட்டிஷ் காலத்தில் தெரிந்தெடுக்கப்பட்ட வழியாக இருந்துள்ளது.

  சைமன் காசிசெட்டியின் 1830 ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பில் யாழ் மாவட்டத்தில் எத்தனை கல்வீடுகள் இருந்துள்ளன என்ற தகவல்கள் உண்டு.1830 ஆம் ஆண்டில் கல் வீடுகளே தீவுப்பகுதியில் இருக்கவில்லை. அப்படியிருக்க இந்த தளபதி எப்படி போர்த்துகீசர் வர முன்னர் வீடு கட்டினார் என்பது புரியவில்லை!

  மணிபல்லவம் எது என்று இன்று வரை யாரும் கண்டு பிடிக்கவில்லை. கல்கி எழுதிய கதையைத் தொடர்ந்து நயினாதீவு ஆட்கள் மணிபல்லவம் என்பது தங்களுடைய நயினா தீவு என்று பேசத் தொடங்கினார்கள். இந்த “நயினா” எப்படி வந்தது. தமிழர்கள் எப்பொழுது “நயினா” ஆகினார்கள்?

  பூனைக் கண்களுடனும், செம்பாட்டுத் தோலுடனும் திரியும் தீவார்கள் யார்? ஒரு புங்குடுதீவு ஆள் தன்னை வெள்ளான் என்று பெருமையாக சொன்னர். அவரது நிறத்தில் இந்தியாவிலோ இலங்கையிலோ வெள்ளாளர் இருக்க நியாயம் கிடையாது.தங்களுடைய நிறம் “வெள்ளையாக” உள்ளதினால் வெள்ளாளர் ஆகிவிட்டார்களோ?

  தமிழர்களின் இந்த பொய்களும் பித்தலாட்டங்களும் தமிழர்களை ஒரு விசித்திர பிராணிகளாக்கியுள்ளன.

  அனலதீவு என்பது போர்த்துகீச தளபதி ஒருவனின் வைப்பாட்டியின் தீவாக இருந்துள்ளது. அவன் கேரளாவிலிருந்து அந்த வைப்பாட்டிக்குத் துணையாக பலரைக் கொண்டு வந்து குடியமர்த்தியுள்ளான். அதனால் அங்கு “பூனைக் கண்கள்” தாராளமாக உள்ளன. அவர்களில் பலர் “உயர்” சாதி என்று மானம் கெட்டு தங்களைக் கூறுகிறார்கள்.

  கண்ணகி கோவலன் கதை பற்றி பேசுபவர்கள் அதை எழுதியவன் ஒரு மலையாளி என்பதை மறைத்து “தமிழ்” என்கிறார்கள்.

  சிலப்பதிகாரத்தின் தொன்மையை நிரூபிக்க இருக்கும் ஒரே ஒரு ஆதாரம் “மகாவம்சம்” மாத்திரமே என்பது தமிழ் விண்ணஙளுக்குத் தெரியாது.

  தேச வழமை சட்டத்தின் பிரகாரம் தீவார்கள் யாழ் மெயின்லான்டில் காணிகள் வாங்க முடியாது. இனி வருங்காலங்களில் காணி வழக்குகள் யாழ்நீதி மன்றத்தை முன்னர் போல நிறைக்கும்.

  Reply
 • நந்தா
  நந்தா

  1986 ஆம் ஆண்டு ஒரு ஈ பீ ஆர் எல் எப் நண்பனின் தந்தையின் மரணத்தில் பங்கு பற்ற வேலணக்குச் சென்ரிருந்த பொழுது சுடலையில் கீழ் சாதிக்கென்றொரு பகுதி இருந்ததை அவதானித்தேன்.

  எனது நண்பனிடம் கேட்ட பொழுது அங்கு வெள்ளாளர் என்ற சாதி இருக்காது. ஆனால் வெள்ளையர்களின் ஆட்சியில் பணம் சம்பாதித்த கத்தோலிக்கர்கள் தங்களை உயர் சாதி என்று சொல்லிக் கொள்ள மற்றவர்களும் பணம் வந்தவுடன் அந்த வெள்ளாளப் பிரவாகத்தில் புகுந்து கொண்டனர் என்று சொன்னார். அது உண்மை என்றே நம்புகிறேன். ஏனென்றால் தீவுப்பகுதிகளில் விவசாயம் (வெள்ளாளர்களின் சாதித் தொழில்) செய்து வாழ்வதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடையாது.

  சிங்களப் பகுதிகளுக்கு சென்று வியாபாரம் செய்து நாலு காசு பிடிபட்டவுடன் “வெள்ளாளன்” ஆகியவர்கள்தான் இவர்கள். பிரபாகரனின் மனைவி குடும்பத்தில் அசல் “போர்த்துகீச” முகங்களை இன்றும் தாராளமாகக் காணலாம்!

  சிங்களவர்களிடையே அப்படி கலந்து பிறந்தவர்கள் தங்களை “பறங்கிகள்” என்று நேர்மையாகக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் யாழ்ப்பாணிகள் சட்டென்று வெள்ளம் மறித்து வேளாண்மை செய்த பரம்பரை என்று புழுகி தமிழர்களின் மானத்தை வாங்கிறார்கள்.

  Reply
 • thurai
  thurai

  //சிங்களவர்களிடையே அப்படி கலந்து பிறந்தவர்கள் தங்களை “பறங்கிகள்” என்று நேர்மையாகக் குறிப்பிடுகிறார்கள்.//நந்தா
  தமிழரிடையேயும் கலந்து பிறந்த பறங்கிகள் உண்டு.

  //சுடலையில் கீழ் சாதிக்கென்றொரு பகுதி இருந்ததை அவதானித்தேன்.//நந்தா
  இந்துக்கள்தான் அநேகமாக தகனம் செய்யுமிடத்தில் கூட சாதிப்பாகுபாடு காட்டுகின்றார்கள். கிறிஸ்தவர்கள் ஒருவர் தாட்ட இடத்தில் இன்னொருவரை யாரும் தாழ்ப்பது கிடையாது.

  //ஒரு புங்குடுதீவு ஆள் தன்னை வெள்ளான் என்று பெருமையாக சொன்னர். அவரது நிறத்தில் இந்தியாவிலோ இலங்கையிலோ வெள்ளாளர் இருக்க நியாயம் கிடையாது.தங்களுடைய நிறம் “வெள்ளையாக” உள்ளதினால் வெள்ளாளர் ஆகிவிட்டார்களோ//நந்தா
  பேசும்மொழி, வாழும்நாடு, இரண்டுமே ஒரு இனத்தின் அடையாளங்களாகின்றன. இதில் முஸ்ல்லிம்கள் விதிவிலக்காக உள்ளனர். சாதியென்பது எந்தவிதத்திலும் அறியமுடியாததொன்று. கறுப்பர், வெள்ளையர் என்பது அறியக்கூடிய பாகுபாடு.
  சரி இலங்கையில் வெள்ளார் இப்போ புலம்பெயர் நாடுகளிலும் வெள்ளாளர்தானா? அவர்கள் தங்களை எவ்வாறு மேம்பட்டவர்களாக கருதுகின்றார்கள்? இவர்கள் தங்களை தமிழரில் முதன்மை தங்கிய இனமாக கருதினால் இவர்கள் முஸ்லிம்களையும் ஓர் தனித்துவமான இனமாகவே ஏற்கவேண்டும்.-துரை

  Reply
 • Deva
  Deva

  தீவகத்தில் வேளாள கிறித்தவர்களின், (குறிப்பாக கரம்பொன் ) பின்னணி கேரளாவுடன் தொடர்புள்ளது. போத்துகீசரின் ஆட்சியிலும், பின்பு டச்சு காரர் காலத்திலும் குதிரைகளை கவனிக்கவும், இறைச்சிக்காக பன்றி லயன்களை கவனிக்கவும் கேரலாவில் இருந்து ஊர்கவதுரைக்கு வந்தரே பின்னாளில் கரம்பொன் “வேளாள” கிறித்தவர்கள் ஆவார்கள். இவர்கள் இங்கு வரும் போதே கிறிஸ்தவர்களாகவே இருந்தார்கள். ஊரகாவதுறையின் இயற்பெயர் ஊறா – துறை அதாவது ஊறா என்றால் பன்றி. நந்தா, இந்த கேரளதவர்கள் போர்த்துகீசர்களுடனும், டச்சு காரர்களுடனும் காலத்தவர்கள். இவர்கள் கடந்த சில பத்து வருடங்களின் பின்பே உள்ளநாட்டு மக்களுடன் திருமணம் செய்தார்கள். இவர்களுக்கும் வேளாண்மைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .
  இவர்களை போன்று சுத்திகரிப்பு தொழிலுக்கு கேரளத்தில் இருந்து வந்தவர்கள் “பறையர்” அல்லது “சக்கிலியர்” என அளைகப்படார்கள். இவர்களில் பலர் இன்றும் நெடும் தீவிலும் ஊர்கவதுரயிலும் சிவிகின்றனர்.
  நீங்கள் பிரபாகரனின் மனைவியின் குடும்பைதை போர்த்துகீசர்களுடன் தொடர்புபடுத்துவது தவறு. புங்குடு தீவை சேர்த்த இவர்களில் பாரம்பரியம் இந்திய வன்னிய சாதியுடன் தொடர்புள்ளது. இவர்களும் பின்னணில் வேளாளர் ஆனார்கள் .
  நந்தா, இனியாவது மதங்களை அடிபடையாக வைத்து பிரச்சனைகளை அணுக வேண்டாம் என தயவுடன் கேட்டு கொள்கிறேன். நீங்கள் மேலே சொல்லிய சுடுகாடு வேலணை மேற்கில் உள்ளது. இன்றும் அதே நிலைதான்.

  Reply
 • Thalaphathy
  Thalaphathy

  திரு. நந்தா அவர்களே!
  உங்கள் திரிபு வாதம் அருமையிலும் அருமை. நயினாதீவு என்பது நாகர்தீவு என்பதிலிருந்து பேச்சு வழக்காக மாறியது. நாகர் என்பவர்கள் நாகத்தை(பாம்பு) வழிபடும் இலங்கையின் பூர்வீகக இனத்தவர்கள் அவர்களுடைய மொழி தமிழ். பின்நாட்களில் இவர்களில் ஒருபகுதியினர் பெளத்தமதத்திற்கு மாறி விகாரைகளை அமைத்து அவற்றில் நாகத்தின் சிற்பங்களையும் சேர்த்திருந்தனர், அதனால் தான் நாகர் பிரதேசங்களில் இருந்த விகாரைகளை “நாகர்விகாரை” என அழைக்கப்பட்டன. இவர்களினால்த்தான் யாழ்ப்பாணத்திலும், கந்தரோடையிலும், தற்போதைய நயினாதீவாகிய நாகர்தீவிலும் விகாரைகள் வந்தன.

  Reply
 • பல்லி
  பல்லி

  //உங்கள் திரிபு வாதம் அருமையிலும் அருமை. நயினாதீவு என்பது நாகர்தீவு என்பதிலிருந்து பேச்சு வழக்காக மாறியது. நாகர் என்பவர்கள் நாகத்தை(பாம்பு) வழிபடும் இலங்கையின் பூர்வீகக இனத்தவர்கள் அவர்களுடைய மொழி தமிழ். பின்நாட்களில் இவர்களில் ஒருபகுதியினர் பெளத்தமதத்திற்கு மாறி விகாரைகளை அமைத்து அவற்றில் நாகத்தின் சிற்பங்களையும் சேர்த்திருந்தனர், அதனால் தான் நாகர் பிரதேசங்களில் இருந்த விகாரைகளை “நாகர்விகாரை” என அழைக்கப்பட்டன. இவர்களினால்த்தான் யாழ்ப்பாணத்திலும், கந்தரோடையிலும், தற்போதைய நயினாதீவாகிய நாகர்தீவிலும் விகாரைகள் வந்தன.//
  இதை நான் சில காலங்களுக்கு முன்பு சந்தித்த ஒரு நெடும்தீவை சேர்ந்த நண்பர்(வயதானவர்) சொன்னார், இந்த தகவல் உன்மையாகவே இருக்கும் என்பதுதான் பல்லியின் கருத்தும்; யாரும் நிலந்தரமானவர்கள் அல்ல; ஏதோ ஒரு வழிதோன்றல் இருக்கவே செய்யும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்; ஆனால் தீவுபகுதி மக்கள் (அன்றய) தம் வழிதோன்றலை தெரிந்து வைத்திருந்தனர் என்பது பலர் போல் பல்லியும் அறிந்தேன்,

  Reply
 • நந்தா
  நந்தா

  “நயினா” என்பது இன்றும் தெலுங்கர்களிடம் வழக்கிலிருக்கும் வார்த்தை. யாழ் மெயின் லான்டில் “நயினார்” என்பது தாழ்த்தப்படவர்கள் உயர் சாதிகளை அழைக்கும் வார்த்தை.

  போர்த்துகீசர் காலத்தில் ஆளரவம் இல்லாத பரட்டைக் காடுகளாக மாத்திரம் தீவுப் பகுதி இருந்துள்ளது. அது அவர்களின் தகவல்களில் காணப்படுகிறது.

  “நாகதீப” என்பது யாழ்ப்பாணம் முழுவதையும் குறிப்பதாக சிங்கள நூல்கள் சொல்லுகின்றன. சிங்கள நூல்கள் தவிர யாழ்ப்பாணம் பற்றிக் குறிப்பிடும் எந்த புராதன நூல்களும் இருப்பதாகத் தெரியவில்லை. கிடைக்கும் நூலான “யாழ்ப்பாண வைபவ மாலை” (ஒல்லந்தர் காலத்தில் எழுதப்பட்டது) சரியான தகவல்களைத் தருவதாக இல்லை.

  “நாகர்” என்பவர்கள் யாரென்றே தெரியவில்லை. இந்தியாவிலுள்ள நாகாலாந்தில் உள்ளவர்கள் தங்களை நாகர்கள் என்று கூறுகிறார்கள். அனால் அவர்கள் யாரும் தமிழர்களைப் போல உடலமைப்போ நிறமோ இல்லாதவர்கள். அவர்கள் “சீனர்களை” போல இருக்கிறார்கள். எனவே நிஸ்தாரின் “பாரசீகர்” கதைகளைப் போல இந்த கலப்பு வர்க்கமும் “தமிழ் வெள்ளாளர்” என்றும் நாகர் என்றும் கப்சா விடுகிறது.

  மலையாளத்து போர்த்துக்கீச அடிமைகளின் பிரதான இருப்பிடங்கள் தீவுப் பகுதிகள் என்பது சரித்திரம் படிப்பவனுக்குப் புரியும். அதனால்த்தால் கிறிஸ்தவர்கள் தமிழரின் வரலாற்றைப் போர்த்துக்கீசர் காலத்திலிருந்து ஆரம்பிக்கின்றனர்.

  வைபவ மாலையும் யாரோ ஒரு மன்னனிடம் கிடைத்த இடம் என்று சொல்லுகிறது. இன்றும் சிங்களத்திலேயே குடானாட்டின் அந்தப் பகுதி “வலிகாமம்” என்ற பெயருடன் விளங்கிறது. யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான ஊர்ப்பெயர்கள் சிங்களப் பெயர்களாக இருக்கின்றன.

  ஒரு முறை “சரசாலை” என்றால் என்ன என்பதற்கு சரஸ்வதிக்கு ஆலையம் இருந்த இடம் அது என்றும் இந்துத் தமிழர்களின் புராதன இடம் என்றும் எனக்கு “தமிழ்” வரலாறு சொன்ன ஒருவரிடம் “அப்போ மீசாலை என்பது மீசைக்கு ஆலையம் இருந்த இடமோ” என்று நான் கேட்டவுடன் ஓட்டம் பிடித்தவரை இன்னமும் நான் சந்திக்கவில்லை.

  நாகர்களின் மொழி தமிழ் என்பதற்கு எந்த சான்றும் யாரும் வெளிக் கொணரவில்லை. நாக வழிபாடு இந்துக்களின் ஒரு வழிபாடு. அது இந்தியா முழுவதும் இன்றும் காணப்படுகிறது.

  “நா” என்று தொடங்கும் நாகர், நயினார், நளவர், நம்பூதிரி எல்லாம் ஒன்றுதான் என்று கதை சொல்லி யாரை ஏமாற்றுகிறார்கள்?

  முதலில் கண்ணுக்குத் தெரியும் “பூனைக்கண்” ,”செம்பாட்டுதோல்” ஆகியவற்றுக்கு விளக்கம் காண முயற்சிக்காமல் அல்லது அது பற்றி உண்மை வெளிவந்தால் சகல தீவார வெள்ளாளக் கதைகளும் கோவிந்தா ஆகிவிடும் என்று ஒளித்தோடுபவர்கள் நாகர் புலுடாக்களை யாருக்கு விடுகிறீர்கள்?

  Reply
 • நந்தா
  நந்தா

  தேவா:
  மதம் எப்பொழுதும் சரித்திரத்தின் அடிப்படையாகவே இருக்கிறது. மொழி சம்பந்தப்பட்ட அரசியல் பழைய காலத்தில் கிடையாது.”வன்னியர்” என்பது பாளி மொழியில் காட்டு வாசிகள் என்பதுதான் அர்த்தம்.

  வவுனியாவும் அதன் பெருநிலப் பரப்புக்களும் வன்னி என்று சிங்கள மன்னர் காலத்திலேயே குறிப்பிடப்படுகின்றன. வவுனியா நிக்கவரட்டிய, புத்தளம், திருமலை ஆகிய பிரதேசங்கள் “வன்னி” என்று கூறப்படுகிறது.

  வன்னி என்பது “வன” என்ற பாளி மொழியிலிருந்து வந்த வார்த்தை. வனம் என்பது தமிழாக்கம். காடு என்பதே அர்த்தம்.

  தமிழ்நாட்டில் வன்னியர்கள் என்பவர்கள் ஆயிரக் கணக்கான வருடங்களாக விவசாய அடிமைகளாகவே இருந்துள்ளனர். இப்பொழுதும் இருக்கின்றனர். அவர்கள் பல்லவர் காலத்தில் கன்னடப் பகுதிகளிலிருந்து குடியேற்றம் செய்யப்பட்டதாகவெ வரலாறு கூறுகிறது.

  1947 க்குப் பின்னர் வன்னிப் பகுதிகளில் குடியேறிய தீவார்கள் “வன்னியர்கள்” என்பது படு தமாஷ். பிரபாகரனின் மனைவி குடும்பமும் அப்படியானதே.
  மலையாளிகள் போர்த்துக்கீசரின் அடிமைகளாக யாழ்ப்பாணத்தில் குடியமர்த்தப் பட்டிருக்கிறார்கள்.

  யாழ் அரசுடன் போர்த்துகீசர் யுத்தம் செய்ய 4000 லஸ்காரின்(கூலிப்படைகள்) களைக் கொண்டு வந்ததாக போர்க்துகீச தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் வாரிசுகள் இன்று 2000 ஆண்டு வரலாறு என்று காதில் பூ சுற்றப் புறப்பட்டிருக்கிறார்கள்.

  தீவார்கள் மாத்திரமல்ல வல்வெட்டித்துறைக் கரையாரும் தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதனைக் காட்ட கோவியர்களை அடிமைகளாக வைத்திருந்துள்ளனர். தீவுப் பகுதிகளில் கோவியர்கள் சென்றது அப்படியான ஒரு சமீபத்து வரலாறே!

  வெள்ளாளர்கள் அல்லதவர்கள் அதிகாரத்திலிருந்தவர்களின் உதவியுடன் சில்லறை சம்பாத்தித்து “வெள்ளாளர்” ஆகி விட்டனர். ஆனால் ஆயிரக் கணக்கான வருடங்களாக விவசாயமே செய்து வரும் பள்ளர்கள் இன்னமும் வெள்ளாளர் ஆகாமல் கீழ்சாதி என்ற முத்திரையுடன் இருப்பது எப்படி?

  தீவார்கள் வெள்ளாளர் என்றால் அவர்களைவிட தங்களை வெள்ளாளர் என்று அழைக்க பள்ளர்களுக்குப் பலநூறு மடங்கு உரிமையும் வரலாறும் உண்டு.

  தமிழ் பேசுபவர்களின்(முஸ்லிம்கள் உட்பட) சுத்து மாத்துக்களும் அவற்றை நிலை நிறுத்த மேலும் கட்டவிழ்த்துவிடும் சுத்துமாத்துக்களும்தான் இன்றைய தமிழர்களின் பாரிய பிரச்சனை.

  காசு பணம் வந்தவுடன் “உயர் சாதி” என்று கப்சா விடுவதை நிறுத்தினால் தமிழர்களுக்கு அமைதி கிடைக்கும்.

  Reply
 • rohan
  rohan

  //இறைச்சிக்காக பன்றி லயன்களை கவனிக்கவும் கேரலாவில் இருந்து ஊர்கவதுரைக்கு வந்தரே பின்னாளில் கரம்பொன் “வேளாள” கிறித்தவர்கள் ஆவார்கள். இவர்கள் இங்கு வரும் போதே கிறிஸ்தவர்களாகவே இருந்தார்கள். ஊரகாவதுறையின் இயற்பெயர் ஊறா – துறை அதாவது ஊறா என்றால் பன்றி. நந்தா, இந்த கேரளதவர்கள் போர்த்துகீசர்களுடனும், டச்சு காரர்களுடனும் காலத்தவர்கள். இவர்கள் கடந்த சில பத்து வருடங்களின் பின்பே உள்ளநாட்டு மக்களுடன் திருமணம் செய்தார்கள். //
  போர்த்துகீசர் காலத்தில் ஏன் சிங்கள வார்த்தையை உபயோகித்தார்கள்?

  நந்தா //“நாகதீப” என்பது யாழ்ப்பாணம் முழுவதையும் குறிப்பதாக சிங்கள நூல்கள் சொல்லுகின்றன. //
  எந்த நூல்கள்?

  Reply
 • பல்லி
  பல்லி

  நந்தா உங்கள் வாதம் அல்லது கருத்துக்கள் பலரை காயபடுத்துகிறது என்பதை புரிந்து கொ(ள்)ல்லுங்கள்
  நட்புடன் பல்லி;

  Reply
 • BC
  BC

  //துரை – சாதியென்பது எந்தவிதத்திலும் அறியமுடியாததொன்று. கறுப்பர், வெள்ளையர் என்பது அறியக்கூடிய பாகுபாடு. //
  உண்மை தான். இல்லாத ஒன்றை எப்படி கண்டுபிடிப்பது.

  //பேசும்மொழி, வாழும்நாடு, இரண்டுமே ஒரு இனத்தின் அடையாளங்களாகின்றன.//
  அந்த இனத்தவர் முஸ்லிம் மதம் அல்லது எந்த மதத்தை பின்பற்றினாலும் அல்லது மத நம்பிக்கையற்றவராயினும் அந்த இனத்தை சேர்ந்தவரே.

  Reply
 • நந்தா
  நந்தா

  – Nagadipa or Naka-Diva Was The Ancient Name of The Jaffna Peninsula –
  Nagadipa or Naka-diva was the ancient name of the Jaffna peninsula. It is first mentioned in the Pali chronicles of Ceylon in connection with the story of the Buddha’s second visit to Sri Lanka in the 6th century B.C. According to the Mahavamsa (ch.1.vv 44-70) the Buddha during this visit pacified two Naga kings of Nagadipa who were arrayed in battle over a gem-set throne. Today the Jaffna peninsula is inhabited mainly by the Tamils. It is therefore assumed by some Tamil scholars that this was so from earliest time and the Naga kings of Nagadipa mentioned in the Mahavamsa too have been Tamils. They have also taken this as evidence for the existence of an independent Tamil kingdom in the Jaffna peninsula from pre-Christian era.

  Reply
 • நந்தா
  நந்தா

  எனது எழுத்துக்கள் வாதங்களுமல்ல, கருத்துக்களுமல்ல.நடை முறையிலும் வரலாற்றிலும் உள்ளவற்றை, படித்தவற்றை எழுதுகிறேன்.

  கள்ளனைக் கள்ளன் என்றால் மனம் நோகும் என்றால் கள்ளன் என்ற வார்த்தையை தமிழ் மொழியிலிருந்து அகற்ற வேண்டி ஏற்படும்!

  தமிழ் என்ற “பொதுமை”யின் கீழ் சகலதையும் அள்ளி மூடுவது சமூகநலனுக்குக் குந்தகம் விளைவிக்கும் என்பதே என் கருத்து.

  Reply
 • Thalaphathy
  Thalaphathy

  The Naga people (Naga meaning Snake or Serpent)[2] were the aboriginal inhabitants of Sri Lanka who existed in 6 BCE to 3 CE in the Western and Northern part of Sri Lanka, mostly along the coast. They are said to have lived among the Yakkha, Raksha and Deva according to the Mahavamsa. They may have been snake-worshippers (Cobra) and dravidian.[3] Some scholars suggest that there were tamil speaking based on Ptolemy’s description of the Naga people.[4] However, this view is not accepted by many. Nagas may well be the same Nāga as mentioned in the Mahabharata which also mentions other tribes in Sri Lanka along with the Naga.[citation needed] Their name could also be due to their head covering being the shape of a hydra-headed cobra.[5] The Jaffna peninsula was referred to as Nagadipa (“Island of Serpents”) for many centuries.[6] H. Parker, a British historian and author of “Ancient Ceylon” considers the Naga to be an offshoot of the Nayars of South India.[7]

  -http://en.wikipedia.org/wiki/Naga_people_of_Sri_Lanka

  Reply
 • பல்லி
  பல்லி

  //:தமிழ் என்ற “பொதுமை”யின் கீழ் சகலதையும் அள்ளி மூடுவது சமூகநலனுக்குக் குந்தகம் விளைவிக்கும் என்பதே என் கருத்து.//

  உங்களுடன் வாதம் செய்யவே பயமாக உள்ளது; அதனால்தான் நான் பல இடங்களில் உங்களுடன் வாதத்துக்கு இப்போது வருவதில்லை; காரனம் நீங்கள் பிரச்சனையை விட்டு சாதி, சமயம்; மதம், வருகை; வழிதோன்றல், இந்தியா கேரளா, அது இது என புது புது விடயங்களை சொல்வதால் அதுக்கு பதில் சொல்ல நாமும் முற்பட்டால் அது ஒரு எழுத்து போரை உருவாக்கும், தீவகம்; தமிழர்கள் இது போதுமே இதன்பின் ஏன் எதுக்கு வருகைகள், இறுதியில் ஈழ தமிழர் யார்?? அல்லது ஈழதமிழர் இவர்களே என ஒரு கட்டுரை எழுதுங்கள் இது வாதமல்ல நட்புடன் பல்லியின் கருத்து;

  Reply
 • நந்தா
  நந்தா

  வீகிபீடியா தரும் தகவல்கள் “சரித்திர” சான்றுகள் என்று யாரும் ஏற்றுக் கொள்வதில்லை

  மகாவம்சம் தரும் தகவல்களும், மகாவம்சமும் உலகரீதியில் சரித்திர சான்றுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. மகாவம்சதின் சில கதைகள் இந்து புராணக் கதைகளை ஒத்துள்ளன.மகாவம்சம் மாத்திரமே இலங்கயில் தமிழர்களின் இருப்பின் தொன்மையை சான்றாகத் தருகின்றது. இந்தியாவில் எந்த புத்தகமும் இவ்வளவு பழமை வாய்ந்த சான்றைத் தரவில்லை.

  தமிழ்- சிங்கள பிரிவினையின் சூத்திரதாரிகளான கிறிஸ்தவர்கள் மகாவம்சத்தைப் புறந்தள்ளி துவேஷ அரசியலை ஆரம்பித்த நோக்கம் மத ரீதியாக 99% உடன்பாடுள்ள இந்துக்களும், பவுத்தர்களும் ஒற்றுமை பேணக் கூடாது என்பதுவே. அதில் அவர்கள் கணிசமான அளவு வெற்றி கண்டு இலங்கயை சின்னாபின்னப் படுத்துகின்றனர்.

  இதனால்த்தான் இந்த ஈழக் கும்பல்கள் மகாவம்சத்தை “பொய்” என்று நிராகரித்துவிட்டு போர்த்துக்கீசர் காலத்திலிருந்து சரித்திரம் பேச ஆரம்பிக்கிறார்கள். சிங்களப் பகுதியிலும் அதுவே கதை. சிங்களவர் ஆரியர், தமிழர் திராவிடர் என்று யாரோ பறங்கியர்கள் எழுதியதை இரு கூட்டமும் தாவிப் பிடித்துக் கொண்டு சன்னதம் ஆடுகின்றனர். இப்பொழுது நாகர்கள் என்றும் அதுவும் தமிழர்கள் என்றும் கதை சொல்லுகிறார்கள். ஆனால் இந்த தமிழர்களுக்கு சேர, சோழ, பாண்டிய என்ற சொற்களின் தமிழர்த்தம் இதுவரயில் தெரியவில்லை.

  சிங்களவர்களும் தங்களுக்கும், தமிழர்களுக்கும் சம்பந்தமே கிடையாது என்று சாதிக்க முனைகிறார்கள். மாகவம்சத்தின்படியோ அல்லது வேறெந்த சரித்திர அடிப்படையிலோ இலங்கை தமிழகம் அல்லது தென்னிந்தியா தவிர இந்தியாவின் வேறெந்த பகுதியுடனும் அரசியல், திருமண,வர்த்தகத் தொடர்புகள் வைத்திருந்தமைக்குச் சான்றுகள் கிடையாது.

  பழைய காலத்து வரலாற்றுச் சான்றுகளை தற்காலத்து அரசியலுக்கு உபயோகிக்க முயலுபவர்கள் பழைய காலத்தில் “மொழி” அடிப்படையில் யுத்தம் நடந்துள்ளதா என்பதை ஆராய்வதில்லை. தமிழர்கள் சிங்களவராகியுள்ளனர். சிங்களவர் தமிழராகியுள்ளனர். யாழ்ப்பாணத்துக் குடியேற்றங்களுக்கு முன்னரே தமிழ்நாட்டு கரையோர மக்கள் இலங்கயின் பல கடற்கரைப் பகுதிகளிலும் குடியேறியுள்ளனர்.

  வடமேல் மாகாணம் அதற்கு ஒரு உதாரணம். அவர்கள் கத்தொலிக்கர்களாகி இப்பொழுது சிங்களவர்களாகியுள்ளனர். மதம் மாறாமல் இருந்த இந்துக்கள் இன்னமும் தமிழர்களாகவே முன்னேஸ்வரம், உடப்பு, மருதங்குளம், புத்தளம், ஆகிய பகுதிகளில் வாழ்கின்றனர். 1933 ஆம் ஆண்டு சிலாபம் கத்தொலிக்க பிஷப் எட்மன்ட் பீரிஸ் சகல தமிழ் மொழி மூலமான பாடசாலைகளையும் சிங்கள மொழி மூலமான பாடசாலைகள் ஆக்கியதைப் பற்றி யாழ் கிறிஸ்த கத்தொலிக்க தமிழ் வித்துவான்கள் வாய் திறப்பதில்லை.

  யாழ்ப்பாணத்தில் காணப்படும் சிங்கள ஊர்ப் பெயர்கள் போலவே வடமேல் மாகாணத்தில் சுத்தமான தமிழ் பெயர்களுடன் ஊர்பெயர்கள் உள்ளது பற்றி யாழ்ப்பாணத்தவர்கள் அலட்டிக் கொளவதில்லை. ஏனென்றால் அந்த முன்னேஸ்வரம் தமிழர்களுக்குப் பின்னர் வந்தவர்களான யாழ்ப்பாணத்தவர்களுக்கு அவர்கள் அன்னியமாகவே தென்படுகிறார்கள்.

  அடுத்ததாக அந்த வடமேல் மாகாணத்து பாரம்பரிய தமிழர்கள் மேல் யாழ்ப்பாணத்தவர்கள் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதும் துவேஷ அரசியலுக்கு அவர்களால் பயனில்லை என்பதும் காரணங்கள்.

  தற்போதுள்ள அரசியல் களத்தில் அந்த தமிழர்கள் யாழ்ப்பாணத்தவர்களை விட்டுத் தூரவே விலகுவார்கள் என்பது மாத்திரமல்ல சிங்களவர்களாகுவதில் உள்ள நன்மைகளையே சிந்திப்பார்கள். யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய நகரங்கள் போர்த்துக்கீசர் வருகையின் பின்னர் உருவாகிய நகரங்கள். அங்கு வாழ்பவர்கள் பாஷையை வைத்து சரித்திரம் பார்க்கிறார்கள்.

  உண்மையில் பெரும்பாலனவர்கள் கேராளாவிலிருந்து போர்த்துகீசரால் இரண்டு நகரங்களுக்கும் இறக்குமதி செய்யப்பட்டவர்களின் பரம்பரைகள் என்பதுதான் சாத்தியமான கருத்து.

  Reply
 • indiani
  indiani

  நன்றி நந்தா இந்த அடிப்படையில் தமிழர் சிங்களவர்களின் உறவுப்பாலம் மீள அமைக்கப்படல் வேண்டும் இதற்காக அத்திவாரங்கள் இடப்பட்டுள்ளன இவை மிக விரைவில் வெளிவரும்.

  Reply
 • rohan
  rohan

  //According to the Mahavamsa (ch.1.vv 44-70) the Buddha during this visit pacified two Naga kings of Nagadipa who were arrayed in battle over a gem-set throne. //

  புத்தர் இலங்கைக்கு வந்தது சரித்திரமா அல்லது உபகதையா?

  Reply
 • நந்தா
  நந்தா

  புத்தர்கள் என்பது தமிழர்களால் பவுத்த துறவிகளைக் குறிக்க பாவிக்கப்பட்ட வார்த்தை. அதனை கவுதம புத்தர் ஆக்கியது தகராறுதான். சிங்களவர்களும் அப்படியே பிடித்துக் கொண்டது இன்னொரு தகராறு!

  Reply