யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தினுடைய காங்கேசன்துறை , கோப்பாய், நல்லூர் மற்றும் பருத்தித்துறை ஆகிய  தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியாகின!

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே பல  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தினுடைய காங்கேசன்துறை , கோப்பாய், நல்லூர் மற்றும் பருத்தித்துறை ஆகிய  தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகள்  வெளியாகியுள்ளன.

காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் கட்சிகள் பெற்ற வாக்கு முடிவுகள்,
இலங்கை தமிழரசு கட்சி – 6849
இலங்கை சுதந்திர கட்சி – 5560
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4645
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 4185
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 2114

 

கோப்பாய் தேர்தல் தொகுதியில் கட்சிகள் பெற்ற வாக்கு முடிவுகள்,

இலங்கை தமிழரசு கட்சி – 9365
இலங்கை சுதந்திர கட்சி – 7188
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 5672
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 4353
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3549

 

நல்லூர் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசு கட்சி – 8423
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 8386
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 3988
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3361
இலங்கை சுதந்திர கட்சி – 2921

 

பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 5803
இலங்கை சுதந்திர கட்சி – 4700
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4158
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3382
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2986

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தினுடைய காங்கேசன்துறை , கோப்பாய், நல்லூர் மற்றும் பருத்தித்துறை ஆகிய  தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகளினுடைய அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சியே முன்னிலை வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *