Tuesday, January 25, 2022

கருணா – பிள்ளையான் இணைவு

karuna.jpgதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் அதன் பிரதித்தலைவரான கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும்,  அதன் முன்னாள’ தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்குமிடையே கடந்த சில காலமாக நலவிய பனிப்போருக்கு முற்றுப்புள்ளி வைத்து இருவரும் ஒன்று சேர்ந்து இயங்கத் தீர்மானித்துள்ளனர். கருணா அணிக்கும் பிள்ளையான் அணிக்குமிடையே கடந்த சில தினங்களாக நடைபெற்ற பல சுற்றுப்பேச்சு வார்த்தைகளின் பின் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த நன்மையைக் கருத்திற் கொண்டு இரு தரப்பினரும் இணங்கி செயற்படுவதற்கு இணக்கம் கண்டுள்ளனர் என இலங்கையிலிருந்து வெளிவரும் நவமணி பத்திரிகை பிரதான செய்தியில் குறிப்பிட்டிருந்தது.

அச்செய்தியில் மேலும் காணப்படுவதாவது,  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பதவியை  பாராளுமன்ற உறுப்பினர் கருணாவும், கட்சியின் செயலாளர் பதவியை முதலமைச்சர் பிள்ளையானும் பெறுப்பேற்கவுள்ளதாகத் தெரிகிறது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் தலைவராக இருந்த கருணா பிரித்தானியா சென்று கைது செய்யப்பட்டதையடுத்து பிள்ளையானும் அண்மையில் கொல்லப்பட்ட ரகுவும் கட்சியின் பிரதானிகளானார்கள். கருணா நாடு திரும்பிய பின் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடு மும்முரமடைந்து கட்சி இரண்டு கூறாக பிரியும் நிலை உருவானது. தமிழ் மக்கள் விடுதலை கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை அமைப்பதற்கு கருணா அணியினர் தயாராகினர்.

ரீ.வீ.என்.பி. கட்சி பிளவுபடுவது கிழக்கு மாகாண தமிழ் மக்களது எதிர்காலத்திற்கு பாதிப்பாக அமையும் என்பதில் அக்கறை கொண்ட சில சக்திகள் முயற்சி செய்து இரு தரப்பினரையும் சமரசப்படுத்தியுள்ளனர். இரு தரப்பினரதும் இணக்கப்பாடு பற்றி கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனுடன் நவமணி தொடர்பு கொண்டு கேட்டபோது தமிழ் மக்களின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு தாம் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் கருணாவுக்கு தலைமைப் பதவியை வழங்க இணங்கியதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக எதிர்வரும் 10ம் திகதி செய்தியாளர் மகாநாடு ஒன்றை நடாத்தி அறிவிக்கவுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

5 Comments

 • Constantine
  Constantine

  WATCH THIS SPACE

  Reply
 • மாற்றுகருத்துதோழர்
  மாற்றுகருத்துதோழர்

  பிரிப்பதும் நானே இணைபதும் நானே கலியுகசிங்கள கண்ணன்- ராஐபக்சா சகோதரர்கள்.

  Reply
 • palli
  palli

  அப்போ இதுவரை பிரிவு என்பதும். அதனால் பல கொலை என்பதும்.உன்மை என்பதை கருனாவும் பிள்ளையானும் ஏற்றுகொண்டு விட்டனரா??

  கருனாவுக்காக சில வரிகள்.
  மகிந்தாவின் துணை இருக்கும் கருணாவே..
  உமக்கு அம்மான் பட்டம் வைத்தவன்
  யார் சொல்லு அப்பனே..
  அரசோடு உறவாடும் ஆணவமா..
  இல்லை
  ராணுவத்தின் துணை இருக்கும் திமிர்குணமா..
  பிறப்புக்கு தகுந்தாபோல் மாறி விடு..
  அந்த
  கிழக்கு மக்களையும் வாழ விடு..
  கொலையதனை நிறுத்தி விட்டு
  ஓடி விடு..
  கிழக்கினை குழந்தையிடம் விட்டு விடு..
  வாழ விடு மக்களை வாழ விடு..
  மாறி விடு மனிதனாய் மாறி விடு..
  ஓடி விடு நாட்டை விட்டு ஓடி விடு..
  கருணா ஓடி விடு..
  குழந்தையை ஆழ விடு.

  நீங்கழும் உங்க கொலைகழும்..
  சாமத்து பல்லி..

  Reply
 • ashroffali
  ashroffali

  கருணா அம்மானையும் முதலமைச்சர் பிள்ளையானையும் பிரிக்க முற்பட்டவர்கள் இதன் மூலம் தோல்வி கண்டுள்ளனர். கிழக்குக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களும் இதன் மூலம் நன்மையடையப் போகின்றனர். உண்மையில் கிழக்கின் நவோதயத்துக்கு இது ஒரு புதுயுகமாக அமையப் போகின்றது. பாராட்டுக்கள்.

  மற்றபடி கருணா அம்மானும் பிள்ளையானும் கருத்து முரண்பாட்டுடன் இருந்தார்களே தவிர ஒரு போதும் ஒருவரையொருவர் அழித்துக் கொள்ளவோ அடுத்தவரை ஆதரிப்பவரை படுகொலை செய்யவோ ஒருபோதும் முயன்றதில்லை. அவ்வாறான போலிப் பிரச்சாரமொன்றை புலிகளும் அவர்களின் ஆதரிப்பவர்களும் தான் மேற்கொண்டு வந்தார்கள். மேலும் அவர்களுக்கிடையிலான கருத்து முரண்பாட்டை தீர்த்து வைப்பதில் அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்ததே தவிர எதுவும் நடக்கவில்லை.

  Reply
 • palli
  palli

  //மற்றபடி கருணா அம்மானும் பிள்ளையானும் கருத்து முரண்பாட்டுடன் இருந்தார்களே தவிர ஒரு போதும் ஒருவரையொருவர் அழித்துக் கொள்ளவோ அடுத்தவரை ஆதரிப்பவரை படுகொலை செய்யவோ ஒருபோதும் முயன்றதில்லை//

  அப்பிடீங்களா சாமி???? இப்படி புண்ணாக்குதனமான பேச்சுதான் புலி வளர காரனம். புலம் பெயர் நாட்டில் இருந்து சில பிரமுகர்கள் கிழக்கை கிழிக்க சென்று. இன்று அம்மனுக்கு பயந்து .புலம் பெயர்ந்த நாட்டில் கூட தலைமறைவு வாழ்க்கை நடத்துகிறார்கள். எல்லாம் அந்த கிருஸ்னபகாவாநுக்கே வெளிச்சம். ஜயா பழம் மட்டும்தான் பல்லி தரும். உரித்து தர வேறு சில பின்னோட்டம் வரலாம்.காத்து இருந்து பார்ப்போம்.

  பல்லி.

  Reply