கிழக்கில் உல்லாச ஹோட்டல் நிர்மாணத்திற்கு 100 மில். ரூபா

hotel.jpgமட்டக்களப்பில் 100 மில்லியன் ரூபா செலவில் உல்லாச பயணிகள் ஹோட்டலை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தில் முதலீட்டுச் சபை கைச்சாத்திட்டுள்ளது. லியேரா பீச் ஹோட்டல் கம்பனிக்கும் முதலீட்டுச் சபைக்கும் இடையே இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கு இணங்க அனைத்து வசதிகளுடன் கூடிய 30 அறைகள் கொண்ட மூன்று நட்சத்திர ஹோட்டல் மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

ஆயுர்வேதக் குளியல் உட்பட, ஜிம்னாசியம் மற்றும் ரெனிஸ் மைதானம் உள்ளடங்கலாக இந்த உல்லாச ஹோட்டல் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தொழில் அபிவிருத்தி முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதலீட்டுச் சபை கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், மீன்பிடி, விவசாயம் என்பவற்றை ஊக்குவிக்கவும் ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். விசேடமாக சுற்றுலா கைத்தொழிலை கிழக்கில் முன்னெடுப்பதற்கான அங்கீகாரத்தை அமைச்சு ஏற்கனவே வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உல்லாச ஹோட்டல் நிர்மாண வேலைகள் இந்த மாதத்தில் ஆரம்பித்து இவ்வருடம் முடிவடைவதற்குள் நிறைவடையவுள்ளதாகவும்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

2 Comments

 • anathi
  anathi

  இந்த உல்லாச விடுதிகளில் உழைத்துக் களைத்த கிழக்கு மாகாண மக்களா ஓய்வெடுப்பார்கள்?
  சமையல், துப்பரவு பணி ,விபச்சாரம் இவைதான் அந்த மக்களுக்கு பரிசாக ,வாழும் வழியாக கொடுக்கப்படும்!

  Reply
 • Rohan
  Rohan

  But, some of the Bentota customers will keep going to Bentota. Rising stars would have their fun in far away places!

  Reply