சென்னையில் சிங்கள பிக்குகள்-வக்கீல்கள் மோதல்

சென்னை எழும்பூரில், சிங்களர்களை விமர்சித்துப் பேசிய வக்கீல்களை, இலங்கை புத்த பிக்குகள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை எழும்பூர் கென்னட் லேன் பகுதியில் புத்த மடம் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் இலங்கையிலிருந்து வரும் புத்த பிக்குகள் உள்ளிட்ட சிங்களர்கள் தங்குவது வழக்கம். இந்தத் தெருவில் ஏராளமான சிங்களர்களைக் காண முடியும். இந்த நிலையில் (11) புத்த மடத்திற்கு எதிரே உள்ள ஒரு டாஸ்மாக் மதுக் கடையில், சில வக்கீல்கள் நின்று கொண்டிருந்தனர். அந்த சாலையில் நடமாடிக் கொண்டிருந்த சில புத்த பிக்குகளைப் பார்த்து, தமிழர்களை அங்கு கொன்று குவிக்கிறார்கள். இங்கு சிங்களர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் பார் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து அந்த புத்த பிக்குகள், வக்கீல்களுடன் வாதம் புரிந்தனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் மூண்டது. அப்போது புத்த பிக்குகள், வக்கீல்களை தாக்கியுள்ளனர். பதிலுக்கு லஷ்மன் என்கிற பிக்குவை வக்கீல்கள் சரமாரியாக தாக்கினர். அங்கிருந்தவர்கள் இரு தரப்பினரையும் விலக்கி விட்டனர். பின்னர் இரு தரப்பும் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 

Show More
Leave a Reply to Anonymous Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • ashroffali
    ashroffali

    மதப் பெரியார்களை நிந்தனை செய்வது எவராக இருந்தாலும் கண்டிக்க வேண்டிய விடயமாகும். மேலும் வக்கீல்கள் கூறியிருப்பது போல இலங்கையில் ஒன்றும் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கவில்லை. அப்படியாயின் அதற்கான ஆதாரத்தை எவராவது தருவீர்களா?

    மற்றது அகிம்சையையும் கருணையையும் போதிக்கும் மதத்தின் மதப் பெரியார்களாக இருப்பவர்கள் இப்படி நடந்து கொண்டிருப்பது கேவலத்திலும் கேவலமான விடயமாகும்.கருத்து முரண்பாடுகள் வாதப்பிரதிவாதங்களுக்காக சாதாரண மனிதர்களே அடிதடியில் இறங்குவது தவறு என்று இருக்கும் போது மதப் பெரியார்கள் அப்படி நடந்து கொள்வது மிக மிகத் தவறாகும். இப்படியான நடத்தைகள் அன்பைப் போதிக்கும் பெளத்த மதத்தை அவமானப்படுத்தி விடும். எனக்குத் தெரிந்த வரையில் பெளத்த மதமானது தனது எதிரிகளுக்கும் நேசத்தைக் காட்டும்படியே போதிக்கின்றது. அதைப் பின்பற்றி நடக்க வேண்டியவர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நடக்க வேண்டியவர்கள் இப்படியா நடந்து கொள்வது?

    எப்படியிருந்தாலும் இலங்கையன் என்ற வகையில் குறித்த சம்பவம் தொடர்பில் மிகவும் மனவருத்தப்டுகின்றேன். தமிழக மக்களுடன் நேசமாக இருப்பதே எங்கள் நோக்கம் என்பதையும் வலியுறுத்திப் பதிவு செய்து கொள்கின்றேன்.

    Reply
  • Anonymous
    Anonymous

    தமிழ்நாட்டு வக்கீல்களின் திறமை சட்டக்கல்லூரித் தாக்குதல்களிலேயே தெரிந்தது தானே. இவர்கள் டாஸ்மாக் மதுக் கடையில் வேறு ஏத்திவிட்டு நின்றால் மிகுதியைச் சொல்லவும் வேண்டுமா??

    Reply