வலிகாமம் கிழக்கு இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக டக்ளஸ் நடவடிக்கை

daglas.jpgவலிகாமம் வட பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் வலிகாமம் கிழக்குப் பகுதியில் வாழ்ந்துவரும் பொதுமக்கள் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விசேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து தங்களது தேவைகள் தொடர்பில் கலந்துரையாடினர். இதன் பிரகாரம் தங்களுக்கு இடம்பெயர்ந்தோருக்கான நிவாரணம் மட்டுமே வழங்கப்பட்டுவருவதாகவும் இது தமக்கு போதாமல் இருப்பதால் இதனை கூட்டித்தரும்படியும் கோரிக்கை விடுத்தனர்.

யாழ்.குடாநாட்டில் வழங்கப்படும் நிவாரணங்கள் மக்களுக்குப் போதுமானதாக இல்லை என்பதால் இவ்விடயம் குறித்து வெகுவிரைவில் மாற்றங்கள் ஏற்படவிருப்பதாகவும் இதற்கான நடவடிக்கைகளைத் தான் மேற்கொண்டுவருவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். தங்களது கிராமசேவையாளரை மாற்றித்தரும்படி இம்மக்கள் விடுத்த கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ள அமைச்சர், தெல்லிப்பழை கிராம சேவையாளரை இரு தடவைகள் இம்மக்கள் வாழும் பகுதியில் உள்ள நலன்புரி நிலையத்தில் பணியாற்ற நடவடிக்கை எடுக்கும்படி விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உரிய ஏற்பாடு செய்துதருவதாகவும் தெரிவித்தார்.

தங்களது பதிவுகளை மாற்றித்தரும்படி இவர்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்கியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கோப்பாய் பிரதேச செயலாளருக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பணித்ததுடன் அண்மைக்கால வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு உரியமுறையில் நிவாரணங்கள் கிடைக்கப்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் பிரதேச செயலாளரிடமிருந்தும் அப்பகுதி கிராமசேவையாளரிடமிருந்தும் அறிக்கை கோரியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன், இம்மக்கள் வாழும் பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகமொன்றை அமைக்குமாறு இம்மக்கள் விடுத்த கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இவ்விடயம் தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  இச்சந்திப்பின்போது கோப்பாய் பிரதேச செயலாளர் உட்பட வலி. வடக்கு மற்றும் கிழக்கு கிராமசேவையாளர்களும் கலந்துகொண்டதாகவும் சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply to msri Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

 

3 Comments

 • rooto
  rooto

  உங்கள் சேவை எங்களுக்கும், நாட்டுக்கும், அனைவருக்கும் தேவை!! தொடரட்டும் தலைவா உங்கள் சேவை!!!

  Reply
 • Thaksan
  Thaksan

  அண்ணை கவனம். புலி இன்னும் முற்றாக அழியேல்லை. அவைக்கு உங்களில் எவ்வளவு பாசம் எண்டது தெரியும் தானே. அன்ரன் பாலா சொன்னவர்தானே: டக்கிளசை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க எங்கட பெடியளுக்கு சரியான ஆசையெண்டு. சனத்தக்கு செய்யுங்கோ. இண்டைக்கு உங்களவிட்டா யார் இருக்கிறது அவைக்கு.

  Reply
 • msri
  msri

  வடபிரதேசத்தில் இருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட முஐPலீம் மக்களை மீளக்குடியமர்த்துவது பற்றியும் யோசித்திருக்கலாமே! ஏன் அவர்களும் தமிழ்பேசும் மக்களின் ஓர் அங்கமாக தெரியவில்லையோ? சிங்களப் பேரினவாதத்திற்கும் மகிந்தாவிற்கும் பாதபூசை செய்வோருக்கு இது ஓர் பிரச்சினையாகத் தெரியாது!

  Reply