சிதைவடைந்த நிலையில் புலிகளின் விமானப் பாகங்கள் கண்டுபிடிப்பு

1801.jpgசிதைவடைந்த நிலையிலுள்ள புலிகளின் விமானம் ஒன்றை இரணைமடுவுக்கு வடக்குப் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். முல்லைத்தீவு, காட்டுப் பகுதிக்குள் படை நடவடிக்கைளை மேற்கொண்டுள்ள இராணுவத்தின் 57வது படைப் பிரிவினர் அங்கிருந்து முன்னேறி மேற்கொண்ட தேடுதலின் போதே படையினர் அந்த விமானத்தை கண்டுபிடித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இரணைமடு குளக்கட்டையும் அதனை அண்மித்த பிரதேசங்களையும் கைப்பற்றிய இராணுவத்தினர் இரணைமடு குளத்திற்கு தென் கிழக்கு பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் ஆறாவது விமான ஓடுபாதை ஒன்றை கடந்த வெள்ளிக்கிழமை படையினர் கைப்பற்றினர். அந்தப் பிரதேசத்தில் முன்னேறி தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதே சிதைந்த விமானம் ஒன்றை படையினர் கண்டு பிடித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகள் இந்த விமானத்தை தமது பயிற்சி நடவடிக்கைகளுக்கு பாவித்திருக்கலாம் என படையினர் சந்தேகிப்பதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர், இந்த விமானம் தொடர்பாக விரிவாக ஆராயும் பொருட்டு விமானப் படையின் நிபுணத்துவம் பெற்ற விசேட குழுவொன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

விமானப் படையினரின் பூரண ஆராய்ச்சிக்குப் பின்னரே மேலதிக தகவல்களை வெளியிட முடியும் என்றும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம்,  கண்டுபிடிக்கப்பட்ட பழுதடைந்த விமான உறுதிப்பாகங்கள் இலங்கை இராணுவத்தின் விமான உறுதிப்பாகங்களாக இருக்கலாம் என்றும் சில இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Show More
Leave a Reply to chandran.raja Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • அருட்செல்வன்
    அருட்செல்வன்

    கிளிநொச்சி, இரணைமடு பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை படையினரால் கண்டு பிடிக்கப்பட்ட விமானங்களின் சிதைவுகள் விடுதலைப் புலிகளுடையவை அல்ல என்றும் அது விமானப்படை விமானத்தினுடையதெனவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை, படையினர் கிளிநொச்சிக்கு தென்கிழக்கே இரணைமடு குளத்தை அண்டிய பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆறாவது விமான ஓடுபாதையைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்திருந்தனர்.

    அந்த ஓடுபாதைக்கு அருகில் புதைந்து கிடந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை படையினர் விமானச் சிதைவுகளை கண்டுபிடித்து மீட்டிருந்தனர்.

    இவை விடுதலைப் புலிகளின் விமானத்தின் சிதைவாயிருக்கலாமென்றும் புலிகள் தங்கள் பயிற்சிக்காக பயன்படுத்திய விமானத்தின் சிதைவாக இவையிருக்கலாமென்றும் படைத்தரப்பு முதலில் கூறியிருந்தது.

    எனினும் அந்தச் சிதைவுகளை தீவிர ஆய்வுக்குட்படுத்தி விமானப்படை பொறியியலாளர்கள், அவை விடுதலைப் புலிகளின் விமானத்தின் சிதைவுகள் அல்ல என்றும் அவை விமானப் படை விமானத்தின் சிதைவுகளென்றும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

    கடந்த பல வருடங்களுக்கு முன்னர் நொருங்கிய விமானத்தின் சிதைவே இவையெனவும் படைத்தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

    Reply
  • Soma
    Soma

    புலிகளாற் கைவிடப்பட்ட நிலையில் ஒரு விமானமாவது சிக்கமாட்டாதா அப்படி மாட்டினால் இராணுவ வெற்றியைக் குறிக்கும் காட்சிப் பொருளாகவாவது வைக்கலாம் என ராணுவத் தரப்பு எதிர்பார்ப்பது தப்பில்லை.

    தலைவர் தப்பி வாழ்வதற்காக குத்தகையாக வாங்கப்பட்ட சிறு தீவொன்றுக்கு அவையிரன்டும் கொண்டு செல்லப்பட்டுவிட்டன. தலைவரின் பொழுது போக்குப் பறப்புக்காக.

    தலைவர் எண்டால் சும்மாவா? சுருட்டினது கொஞ்ச நஞ்சமா? பணம் கொடுத்தவர்கள் தம்மைத் தாமே தண்டிக்கட்டும்!!!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சோமா! நீங்கள் தீவுவாங்கியிருப்பதாக சொல்லுகிறீர். இன்னொருவருடைய செய்தியின் படி 850 ஏக்கர்தொன்றிரி ஒன்பது வருடங்களுக்கு குத்தகைக்கு வாங்கியதாக சொல்லுகிறார்கள். எது எப்படியென்றாலும் இன்னும் சில வாரங்களில் புதுபுது புதினமான செய்திகளை எதிர்பார்கலாம். இலங்கை அரசுக்கு கண்னில் மண்ணை தூவினாலும் சர்வதேசத்திற்கு இலகுவில் தூவ முடியுமா? இனியும் அப்பாவி ஏழை மக்களையும் மக்களின் பிள்ளைகளையும் பலிகொடுக்க வேண்டுமா? சந்தர்பம் சூழ்நிலைகளைச் சொல்லி சரணடைவதால் உயிர்இழப்புகளை தவிர்பதுமல்லாமல் ஒரு புதிய வாழ்கையும் வாழலாம் அல்லவா! அவர்கள் எல்லாம் இளவயதுகாரர்களா? வாழ்வை முடித்துக்கொள்ள.

    Reply
  • palli
    palli

    இதெல்லாம் ராணுவ நடாவெடிக்கையில் சகசம்தானே. இதைபோய் பெரிதுபடுத்தலாமா.–பல்லி

    Reply
  • thampu
    thampu

    என்னது தீவு வாங்கியிருக்கோ?அப்படி தீவுகளும் வாங்கி குடியேறலாமோ?
    கடையில் வாழைப்பழம் வாங்கின மாதிரி சொல்லுகிறீர்கள்.!

    Reply