“தமிழ் மொழி அறிவிப்புக்கள் தொடர்பிலும் அதீத கவனம் செலுத்துங்கள்”- சுகாதார அமைச்சரிடம் ஹரிணி அமரசூரிய வேண்டுகோள் !

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான அறிவிப்புகளும் விழிப்புணர்வுகளும் தமிழ் மொழி ரீதியான அறிவிப்புகள் மிகவும் குறைவாக உள்ளன. இது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டும்.” என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று (23.10.2020)  இடம்பெற்ற கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும்போதே இதனை வலியுறுத்தியுள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

“கொரோனாவுடனேயே நாம் அனைவரும் வாழவேண்டிய சூழல் உள்ளது. இது எமது நாட்டில் மாத்திரம் ஏற்பட்டுள்ள தொற்று நோய் அல்ல. பூகோள ரீதியான தொற்றுநோயாகும். சரியான தகவல்கள் இந்த வைரஸ் தொடர்பில் வைத்திய நிபுணர்களிடமும் இல்லை. வரலாற்றில் எந்தவொரு சுகாதார அமைச்சருக்கும் இல்லாத சவால் தற்போதைய சுகாதார அமைச்சருக்கு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குரல்களுக்கும் செவி கொடுக்க வேண்டும். தனிமைப்படுத்தல் நிலையங்கள் காணப்படும் மோசமான நிலைமை காரணமாக அங்கு செல்ல மக்கள் அஞ்சுகின்றனர். கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் இரண்டாம் நபர்கள் தொடர்பில் சமூகத்தில் பீதியொன்று ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இவர்களை குற்றவாளிகள் போன்று பார்க்கின்றனர்.

சுகாதார அறிவித்தல்கள் மூன்று மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும். தமிழ்மொழி ரீதியான அறிவிப்புகள் மிகவும் கொரோனா தொற்று தொடர்பில் வெளியிடப்படும் அறிவிப்புகள் மற்றும் விழிப்புணர்வுகள் பெரும்பாலும் சிங்கள, ஆங்கில மொழிகளில் மாத்திரமே வெளியிடப்படுகின்றன.

தமிழ் மொழி ரீதியான அறிவிப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. அதன் காரணமாக தமிழ் மொழி ரீதியான அறிவிப்புகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” – எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *