பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் அறிக்கைக்கு பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம்

BTF Banner._._._._._.

அண்மைய இலங்கை நிலவரம் தொடர்பாக ஜனவரி 21ல் பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைப்பு விவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையை பிரித்தானிய தமிழர் பேரவை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. பிரித்தானிய வெளிவிககார மற்றும் பொதுநலவாய விவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையையும் பிரித்தானிய தமிழர் ஒன்றியத்தின் அறிக்கையையும் கீழே காணலாம்.
._._._._._.

அண்மைய இலங்கை நிலவரம் தொடர்பாக ஜனவரி 21ல் பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைப்பு விவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கை :
._._._._._.

பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுண் அண்மைய இலங்கை நிலவரம் தொடர்பாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு உத்தியோகபூர்வமான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து உள்ளார். அதனைக் குறிப்பிட்டு பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைப்பு விவகார அமைச்சர் டேவிட் மிலபான்ட் ஜனவரி 21 எழுத்து மூலமான அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அவ்வறிக்கையின் தொகுப்பு இங்கு தமிழில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. குறிப்பு: நேரடி மொழிபெயர்ப்பல்ல.

Sri Lanka Written Ministerial Statement (21/01/2009) Written Ministerial Statement by the Secretary of State for Foreign & Commonwealth Affairs on Sri Lanka, 21 January 2009.
http://www.fco.gov.uk/en/newsroom/latest-news/?view=PressS&id=12533815

._._._._._.

கடந்த 26 ஆண்டுகளில் 70,000 உயிர்கள் பறிக்கப்பட்ட நிலையில் உள்ள இலங்கையில் பிரித்தானிய அரசாங்கம் சமாதானத்தை முன்னெடுப்பதில் கரிசனையாக இருந்து வருகிறது. நாங்கள் தற்போது ஒரு முக்கிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

2002 யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஜனவரி 2008ல் முடிவுக்கு கொண்டு வந்த இலங்கை அரசு எல்ரிரிஈ யை இராணுவ ரீதியில் வெற்றிகொள்வதை கொள்கையாகக் கொண்டு உள்ளது. அண்மைக் காலத்தில் எல்ரிரிஈ யின் நிர்வாகத் தலைநகரமான கிளிநொச்சியைக் கைப்பற்றியது மற்றும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் எல்ரிரிஈயின் சில பகுதிகளைக் கைப்பற்றியது உட்பட இலங்கை அரசாங்கம் குறிப்பிடத்தக்க இராணுவ வெற்றிகளைப் பெற்று உள்ளது. இந்த வெற்றிகள் அரசியல் தீர்வை நோக்கி முன்னேற வேண்டியதன் அவசியத்தையும் அவசரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எல்ரிரிஈ ஒரு தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு. அதற்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஜனநாயகப் பொறுப்பு இல்லை. கடந்த மூன்று சகாப்தங்களாக அனைத்து சமூகங்களைச் சார்ந்த இலங்கை மக்களுக்கு எதிராகவும் பயங்கரவாதத்தை மேற்கொண்டதற்கு எல்ரிரிஈயே பொறுப்பு.

2006ல் மீண்டும் யுத்த முனைப்புகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் ஆயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்டு உள்ளது. இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்பதை நாங்கள் விளங்கிக்கொள்கிறோம். அதேசமயம் தனது மக்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கும் அவர்களுடைய அரசியல் நியாயங்களை சரியான வகையில் வெளிப்படுத்தும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு உண்டு. நிரந்தரமான சமாதானம், இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களினதும் – சிங்களம் தமிழ் முஸ்லீம் என அனைவரையும் உள்ளகப்படுத்தும் அரசியல் செயற்பாடு அவசியம். அதுவே எங்களுடைய நிலைப்பாடாக தொடர்ந்தும் இருந்து வருகிறது. நாங்கள் இந்த மோதல் முற்றுப் பெறுவதைப் பார்க்க வேண்டும். நிரந்தரமான அரசியல் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும். இந்த நோக்கத்திற்காக நாங்கள் இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும் சகல சமூகங்களுடனும் தொடர்புகளை வைத்திருப்போம் அவர்களுக்கு ஆதரவளிப்போம்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித அவலச் சூழல் – அதிகரித்துவரும் உள் இடப்பெயர்கள் பற்றி நாங்கள் மிகவும் கரிசனையாக உள்ளோம். இதுபற்றி கடந்த செப்ரம்பரில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச லண்டன் வந்திருந்த போது என்னுடைய நண்பர் மதிப்பிற்குரிய பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுன் பேசியிருந்தார். உள்ளக இடப்பெயர்வு தொடர்பாக உயர்மட்டத்தில் எங்கள் கரிசனையை வெளிப்படுத்தி இருக்கிறோம். மோதல் இடம்பெறுகின்ற பகுதிகளில் 200 000 – 300 000 வரையான உள்ளிடம் பெயர்ந்தவர்கள் சிக்குண்டு உள்ளதாக ஐநா மதிப்பிட்டு உள்ளது. மனிதாபிமான உதவிகள் அனுப்பப்பட்ட போதும் அவை போதக் கூடியவை அல்ல என நம்பகரமான அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இலங்கை இராணுவத்தின் வெற்றிகள் உள்ளிடம் பெயர்ந்தவர்களை மிகவும் குறுகிய ஒரு பிரதேசத்திற்கள் தள்ளுகின்றது. இந்த நிலை இன்னும் மோசமானால் மனித வலமும் மோசமடையும்.

கடந்த செப்ரம்பரில் Department for International Development (DFID)  எடுத்த தீர்மானங்களின் தொடர்ச்சியாக DFID மனிதாபிமான பணி நிபுணர்கள் குழு இன்னும் சில வாரங்களில் இலங்கைக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை மதிப்பிட உள்ளது. மேலும் அவர்கள் வடக்கில் இடம்பெயர்ந்தவர்களின் மனிதாபிமானப் பணிகளுக்கு வழங்கப்பட்ட 2.5 மில்லியன் பவுண்கள் எவ்வாறு விநியோகிக்கப்பட்டு உள்ளது என்பது பற்றியும் அறிக்கை வழங்குவார்கள். குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பு, அவர்களின் சுதந்திரமான நடமாட்டம், மனிதாபிமான உதவிகளைப் பெறுவது விடயங்களில் களத்தில் உள்ள சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புபட்டு அங்குள்ள அனைத்து தரப்பினரும் சர்வதேச மனிதாபிமான விதிகைளக் கடைப்பிடிக்க வேண்டும். மோதல் இடம்பெறும் இடங்களில் இருந்து பொது மக்கள் தப்பிக் கொள்வதற்கான பாதுகாப்பான வழியை அனைத்து தரப்பினரும் உறுதிப்படுத்த வேண்டும். பாதுகாப்பான மனிதாபிமான வலயம் உருவாக்கப்பட வேண்டும். இடம்பெயர்ந்தவர்களுடைய மனிதாபிமான தேவைகள் பற்றிய சுயாதீன மதிப்பீடு ஒன்று அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறான ஒரு மதிப்பீடு தான் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு செய்யக் கூடிய அனைத்தும் செய்யப்பட்டு உள்ளது என்பதனை வெளிப்படுத்தும். நாங்கள் தொடர்ந்தும் இந்த விடயங்களுக்கு அழுத்தம் கொடுப்போம்.

இலங்கையின் ஊடக சுதந்திரத்தின் மீது அதன் உயர்மட்டத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான தாக்குதல்கள் அண்மைய வாரங்களில் இடம்பெற்று உள்ளதைக் காண்கிறோம். நாங்கள் இவ்வாறான தாக்குதல்களை கண்டிக்கிறோம். குறிப்பாக ஜனவரி 8ல் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டது. இது தொடர்பாக உடனடியாக முழுமையான சுயாதீனமான விசாரணையை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு இலங்கை அதிகாரிகளுக்கு உண்டு. அதற்கு பொறுப்பானவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படுவதில் ஏற்படும் அசிரத்தை உடனடி நடவடிக்கை அவசியம் என்பதை வலியுறுத்துகிறது.

ஆட்கடத்தல், காணாமல் போதல், வன்முறை, அவமதித்தல் என்பன இலங்கையில் தொடர்வதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சுயாதீன மனித உரிமைகள் அறிக்கைகளுக்கான உறுதியான பொறிமுறையின்றி இப்பிரச்சினையை மதிப்பிடுவது கடினமானது. மனித உரிமைகளை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது உட்பட மனித உரிமை மீறல்களை கையாள்வதற்கான உறுதியான நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்தும் கோருகிறோம். இந்த முரண்பாட்டை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த இலங்கையில் உள்ள சமூகங்கள் அனைத்தும் அச்சம் இல்லாமல் வாழ்வதற்கான சூழல் ஏற்டுத்தப்பட வேண்டும். எங்களுடைய அழுத்தங்களைத் தொடர்ந்து அயுதக் குழுக்களால் சிறுவர் படையணயில் உள்ளவர்கள் விடுவிக்கப்பட்டதை வரவேற்கிறோம். இவை இன்னும் தொடர வேண்டும்.

என்னுடைய மதிப்பிற்குரிய நண்பர் பிரதமர் கோர்டன் பிரவுண் ஜனாதிபதி ராஜபக்சவுக்கு தன்னுடைய நிலைப்பாட்டை எழுதி உள்ளார்.

(The Secretary of State for Foreign & Commonwealth Affairs on Sri Lanka, 21 January 2009.)

பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்ட அறிக்கை :

இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை தொடர்பாக பிரதமரின் கருத்துக்கு முரண்பாடான வெளிவிவகார அலுவலகத்தின் நிலைப்பாடு:

பிரித்தானிய வெளிவிவகார மற்றும், பொதுநலவாய நாடுகளின் அலுவலகம் 21-01-2009 ஆம் திகதியிட்டு வெளியிட்ட கருத்தை பிரித்தானிய தமிழர் ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கின்றது. வெளிவிகார அலுவலகத்தின் இந்த அறிக்கையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தமிழின படுகொலை தொடர்பான கண்டனம் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த அறிக்கை பிரித்தானிய பிரதமரின் நிலைப்பாட்டுடன் முற்றிலும் முரண்படுவதாக உள்ளதை பிரித்தானிய தமிழர் ஒன்றியம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றது. ஜனவரி 14ஆம் தகதி இடம்பெற்ற பிரதமருடனான கேள்வி நேரத்தின் போது பதிலளித்த பிரதமர் “ஸ்ரீலங்காவில் இடம்பெறும் மோசமான வன்முறைகள் தொடர்பாக (திரு. வாஸ்) அவர்கள் தெரிவித்த கருத்துடன் நான் உடன்படுகின்றேன். அத்துடன் யுத்த நிறுத்தத்தின் தேவைபற்றிய அவரது கருத்துடனும் நான் உடன்படுகின்றேன். ஜனாதிபதி சாக்ரோசியுடனும் சான்சிலர் மேக்லுடனும் பேசும் போது இதுகுறித்தும் பேசவுள்ளேன்” எனத் தெரிவித்த கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட விதமாக வெளிவிவகார அமைச்சின் கருத்து உள்ளது. வெளிவிகார அமைச்சின் அறிக்கையில் யுத்த நிறுத்தம் தொடர்பான கோரிக்கை முற்றாக தவிர்க்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் “ அவர்கள் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக சர்வதேச உதவிகளை பெறுவதில் இருந்து முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளார்கள்…. பாதிக்கபட்ட பிரதேசங்களில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான நிவாரண மற்றும் மருத்துவ உதவிகள் சென்றடைய ஏதுவாக யுத்த நிறுத்தத்தை கொண்டு வருவதற்கான சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” எனத் தெரவிக்கப்பட்ட கருத்துடன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் கருத்து முற்றிலும் முரண்பட்டதாக உள்ளது.

‘ஸ்ரீலங்காவில் இருந்து பயங்கரவாதத்தை இல்லாதொழித்தல்’ என்ற பதத்தை பாவித்து வன்னியில் ஏற்பட்டிருக்கும் பாரிய மனித அவலம் பற்றிய உண்மை நிலவரம் மூடி மறைக்கப்பட்டிருப்பதோடு சில மேற்குலக நாடுகள் ஸ்ரீலங்கா அரசின் இத்தகைய நடவடிக்கைளுக்க இராஜதந்திர பாதுகாப்பு வழங்க முற்படுகின்றன என பிரித்தானிய தமிழர் ஒன்றியத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் இது தொடர்பாக கருத்து தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சின் இந்த அறிக்கை அமெரிக்காவின் புதிய நிர்வாகம் பதவியேற்ற சிலநாட்களில் வெளியாகியிருப்பது தவறான வழிகாட்டுதலை நோக்கமாக கொண்டு வெளியிடப்பட்ட ஒன்றென கருத தோன்றுகின்றது.

பிரித்தானிய தமிழர் பேரவை பிரித்தானியாவில் உள்ள 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் பல நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு குடைஅமைப்பு என்ற வகையில் வெளிவிவகார அமைச்சின் இந்த அறிக்கை தொடர்பாக எமது அமைப்பு மிகுந்த கவனம் செலுத்துகின்றது. வெளிவிவகார அமைச்சின் இந்த நடவடிக்கை உலகெங்கும் உள்ள தமிழர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருப்பதுடன் இந்த விடயம் தொடர்பாக பிரித்தானிய அரசின் நடுநிலைத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கின்றது.

வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் விடுதலைப் புலிகளுக்கு மக்கள் ஆணை இல்லை என்ற கருத்து வெளியிடப்பட்டிருக்கின்றது. 2004ஆம் இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற கொள்கையை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்து போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரு வெற்றியீடடியிருந்ததை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு பிரித்தானிய தமிழர்கள் தாழ்மையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றனர். அத்துடன் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழர் தாயகத்தை (தமிழீம) மீள உருவாக்க மக்கள் ஆணை வழங்கப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற தவறான போர்வைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு அடக்குமுறை அரசுகளுக்கு உதவும் வகையிலான அணுகுமுறையை தவிர்ததுக் கொள்ள வேண்டும் என பிரித்தானிய தமிழர்களான நாம் இந்த அரசிடம் வேண்டிக் கொள்கின்றோம். ஸ்ரீலங்கா அரச படைகளால் கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களினால் கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் தேவிபுரம், வள்ளிபுனம் ஆகிய இடங்களில் 66 இற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா அரசின் அரச பயங்கரவாதத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இன்று பாதுகாப்புப் பிரதேசத்தில் அமைந்திருந்த மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி 5 அப்பாவிப் பொது நோயாளர்களைக் கொன்றிருப்பதோடு 15 நோயாளர்களை காயப்படுத்தியுமுள்ளனர். அத்துடன் அங்கிருந்த மிக முக்கியமான உயிர்காப்புச் சாதனங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

வன்னி மக்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் போரை நிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைக்க ஸ்ரீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவையானது கோருகின்றது. அத்துடன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு தவறான ஆலோசனைகளின் அடிப்படையில் உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்திலான அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்குமாறும் வேண்டுகின்றோம்.

யூலை முற்பகுதியில் பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணல் :

”புலிகளுக்கும் தமிழீழம் வேணும். பிரிஎப் க்கும் தமிழீழம் வேணும். ஆனால் புலிகளின் மெதடோலஜியை பிரிஎப் சஸ்கிறைப் பண்ணவில்லை” சுரேன் சுரேந்திரனுடன் நேர்காணல் : த ஜெயபாலன்

Show More
Leave a Reply to Sinna Siththar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • Poddu
    Poddu

    //ஜனவரி 14ஆம் தகதி இடம்பெற்ற பிரதமருடனான கேள்வி நேரத்தின் போது பதிலளித்த பிரதமர் “ஸ்ரீலங்காவில் இடம்பெறும் மோசமான வன்முறைகள் தொடர்பாக (திரு. வாஸ்) அவர்கள் தெரிவித்த கருத்துடன் நான் உடன்படுகின்றேன்.// பிதித்தானிய தமிழர் பேரவை

    //இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித அவலச் சூழல் – அதிகரித்துவரும் உள் இடப்பெயர்கள் பற்றி நாங்கள் மிகவும் கரிசனையாக உள்ளோம். கடந்த செப்ரம்பரில் Department for International Development (DFID) எடுத்த தீர்மானங்களின் தொடர்ச்சியாக DFID மனிதாபிமான பணி நிபுணர்கள் குழு இன்னும் சில வாரங்களில் இலங்கைக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை மதிப்பிட உள்ளது. மேலும் அவர்கள் வடக்கில் இடம்பெயர்ந்தவர்களின் மனிதாபிமானப் பணிகளுக்கு வழங்கப்பட்ட 2.5 மில்லியன் பவுண்கள் எவ்வாறு விநியோகிக்கப்பட்டு உள்ளது என்பது பற்றியும் அறிக்கை வழங்குவார்கள். குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பு, அவர்களின் சுதந்திரமான நடமாட்டம், மனிதாபிமான உதவிகளைப் பெறுவது விடயங்களில் களத்தில் உள்ள சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புபட்டு அங்குள்ள அனைத்து தரப்பினரும் சர்வதேச மனிதாபிமான விதிகைளக் கடைப்பிடிக்க வேண்டும். மோதல் இடம்பெறும் இடங்களில் இருந்து பொது மக்கள் தப்பிக் கொள்வதற்கான பாதுகாப்பான வழியை அனைத்து தரப்பினரும் உறுதிப்படுத்த வேண்டும். // பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு

    இதில் பிரிஎப் என்ன குறையை கண்டு பிடிச்சு இருக்கு. ரமில் போர் லேபர் எம்பிமார் என்ன சொல்லினம்.

    ஆளுக்கு 200 பவுண் போட்டு பிரித்தானிய பிரதமரின் விருந்தில் கலந்தகொண்ட லண்டன் புலத்து தெமலோக்கள் ஒருக்கா இது பற்றிச் சொல்லுங்கோ. செந்தில் அண்ணா சுரேந்திரன் அண்ணா நீங்கள் தான் கொஞ்சம் விளக்க வேணும்.

    பொட்டு

    Reply
  • indiani
    indiani

    நன்றி தேசம் நெற் எல்லா செய்திகளையும் ஒன்று சேர தந்து உதவியதிற்கு :

    அன்புடன் பிரித்தானிய தமிழ் போரம் சுரேந்திரன் அவர்களக்கு உங்கள் முழு அறிக்கைகள் வெளியீடுகளை வாசிக்கும் போது நீங்கள் புலிகளின் மற்று மொரு அமைப்பாகவே பார்க்கக் கூடியதாக உள்ளது

    நீங்கள் தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் இரகசியப் பிரிவினர் போலவே தோற்றம் அளிக்கிறது நீங்கள் வெளியிடும் அறிக்கைகளை தனித்தனியே வேறு வேறு பக்கங்களில் பார்க்கும் போது தமிழ் மக்கள் இலகுவில் ஏமாந்துவிடக் கூடிய மாதிரியே உள்ளது நீங்கள் புலிஇயக்கத்திலும் அந்த தலைமையிலும் மட்டுமே அக்கறை இருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. தமிழர்களுக்கு புலிகள் அல்லாதவர்களின் அரசியல் நிலைப்பாட்டில் உங்கள் அக்கறையின்மை உங்களை புலிகளின் இரகசிய அமைப்பாகவே தெரிவிக்கிறீர்கள்.

    பிரித்தானி தமிழர் போராம் தமிழர்களுக்காக செயற்ப்படுவதானால் பொது நிலைப்பாட்டில் நின்றிருக்கவேண்டும் நீங்கள் அப்படி அல்ல

    இலங்கையில் இலங்கை அரசின் நிகழ்ச்சிகளையும் அதற்க ஒப்பாக நீங்கள் பேசுவதும் புலிகளை காப்பாற்ற மட்டுமே

    நீங்கள் எப்பவாவது புலிகளை ஏதாவது அரசியல்த்தீர்வை நோக்கி செல்லத் தூண்டியதுண்டா?

    புலிகள் ஏதாவது அரசில் தீர்வை முன்வைப்பார்களா?

    புலிகளை முக்கியமாக பிரபாகரனை பாதுகாக்கும் யுத்தநிறுத்தத்தை மட்டுமே நீங்கள் கேட்கிறீர்கள்?

    நீங்கள் எப்பவாவது வன்னியில் உள்ள தமிழ் மக்களை புலிகள் சுதந்திரமா நடமாட புலிகள் அனுமதிக்கும் படி கேட்டீர்களா?

    இதை நான் திரும்பவும் எழுதவிரும்புகிறேன்.
    நீங்கள் எப்பவாவது வன்னியில் உள்ள தமிழ் மக்களை புலிகள் சுதந்திரமா நடமாட புலிகள் அனுமதிக்கும் படி கேட்டீர்களா?

    அந்த மக்களை புலிகள் கேடயமாக பாவிக்த்தானே பிரித்தானிய தமிழர் அமைப்பு உதவுகிறது எங்கே உங்கள் மனிதாபிமானம் மக்கள் கரிசனை அந்த மக்களை யுத்தத்தின்போத அரச இராணுவம் கொல்கிறது உண்மையே அதை புலிகள் தானே அந்த மக்களை மிக குறுகிய இடத்துக்குள் வைத்து தமத பாதகாப்பிற்காக செயகிறார்கள் இதற்கு உங்கள் கண்டனம் வெளிவரவில்லையே ஏன்? சுரேன் சென் கந்தையா பதில் அளிப்பீர்களா? உங்களால் பதில் தரமுடியாது உங்கள் நோக்கம் மக்கள் அல்ல புலிகளின் தலைவர் உயிர்தான் நோக்கம்

    மக்களக்காக செயற்படும் பிரித்தானிய தமிழ் போரம் மக்களின் சாதாரண வாழ்வு உயிர்வாழ்வ சம்பந்தமாக உங்கள் அக்கறைகளை காட்டுங்கள் அதனுடாக அரசியலை நோக்குங்கள்…. உங்கள் பிள்ளைகள் உறவினர்கள் எல்லோரும் பத்திரமாக ஜரோப்பாவில் பிறைவேற் பள்ளிகளில் படித்து பட்டம் பெற்று புலியின் பெயரால் சேர்த்தும் சேர்த்து வாழப் போகிறார்கள் வன்னியில் இருக்கும் பிள்ளைகள் குழந்தைகளை பிரபாகரனை பாதகாக்க உயிர்ப்பலி கொடுக்கிறீர்கள் மிகவும் அவதானமாக உங்கள் பொதவாழ்க்கைகளை எம்மால் தினம் தினம் பொதுக் கூட்டங்கள் பிறந்தநாள் கழியாட்டங்களில் பலர் பார்த்து கேட்கும் கேள்வியாகும்.

    ஈபிடிபி பயங்கரவாதக் குழுக்களோ! அரச கொலைவெறி இராணுவமோ! அல்லத வேறு எந்த ………..உந்துதல் இல்லாமல் தென்மராட்சியில் மக்கள் செய்த ஊர்வலம். அதில் சுலோகம்.

    பிரபாகரனின் பிள்ளைகள் வெளி நாட்டில் படிப்பு எமது பிள்ளைகள் ஈழத்துக்காக உயிர்துறப்பு ஏன்?

    வெளிநாட்டுத்தமிழர் தமது தமிழ் அடையாளத்துக்காக காசு கொடுத்து ஈழப்போர் தடத்துகிறார்கள் நாங்கள் இங்கே சாப்பிட வழியில்லாமல் சாகிறோம்?

    சாப்பாடா? ஈழமா?

    பிரித்தானிய தமிழ் போரம் சிந்திக்கவும். இன்று புலிகள் சந்திக்கும் இக்கட்டான நிலையை பிரித்தானிய தமிழ் போரமும் சந்திக்கும் சாத்தியங்கள் உருவாகலாம்.

    எது மக்களுக்கானது சிந்தியுங்கள்.

    Reply
  • sinan
    sinan

    வெளிநாட்டில் சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விடும் தமிழ் போரத்துக்கு தேவை தமிழ்ஈழம். வன்னியின் சாப்பாடு இல்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு தேவை ஒரு துண்டு பாண் அதை யார் கொடுத்தாலும் சரி.

    இன்ற சிங்கள இராணுவம் செய்யும் கரிசனையில் ஒருசிறு துளியேனும் புலிகள் கடந்த காலங்களில் காட்டினார்களா இருந்தால் புலிகளின் அல்லது வேறு எந்த இணையத்தளத்தில் இருக்கிறது காட்டுங்கள் நாங்களும் பார்க்க ஆசைப்படுகிறோம் புலிகளின் மக்கள் கஸ்டப்படும் போது காட்டும் கரிசனையை.

    புலிகளின் பங்கர்களும் உள்ளே உள்ள வசதிகளும் மக்கள் மரங்களின் கீழ் படும் அவஸ்த்தைகள் ஒப்பிட்டு பார்க்கிறோம்.

    கண்ணீர் நிவாரண திதி இப்ப எங்கே போயிட்டுது.

    Reply
  • ayalvan
    ayalvan

    “பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகளின் அலுவலகம் 21-01-2009 ஆம் திகதியிட்டு வெளியிட்ட கருத்தை பிரித்தானிய தமிழர் ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கின்றது. வெளிவிகார அலுவலகத்தின் இந்த அறிக்கையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தமிழின படுகொலை தொடர்பான கண்டனம் எதுவும் வெளியிடப்படவில்லை” பிரித்தானியா தமிழர் பேரவை.

    பிரித்தானியா தமிழர் பேரவையாளர்களே! உங்கள் மனச் சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கோ நீங்கள் சொல்லும் தமிழினப் படுகொலைக்கு இலங்கை இராணுவம் மாத்திரம்தானா காரணம்? இல்லை! உண்மை அதுவல்ல!!

    புலிகளுக்கு தாங்கள் யுத்தத்தில் தோற்கடிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கு வெளிநாட்டு அரசாங்கங்களின் உதவி தேவை. அதற்கு அவ் அரசாங்கங்களின் அனுதாபம் தேவை. அதற்கு தமிழின படுகொலை என்ற முத்திரை தேவை. முத்திரை வேண்டுமாயின் இராணுவம் தங்கள் மீது ஏவும் செல்வீச்சில் அடிபட்டு சாவதற்கு அப்பாவி தமிழ் மகன் தேவை. அதற்காகத்தான் அப்பாவி மக்களை தாங்கள் விரும்பும் இடங்களுக்கு நகர விடாமல் புலி தடுத்து வைத்திருக்கின்றது. அதன் மூலம் புலி அப்பாவி தமிழ் மக்களை தமக்கு மனித கேடயமாகவும் தமது பிரசாரத்துக்கு தேவையான துரும்பாகவுமே பயன்படுத்துகிறது.

    தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருப்பது 70களிலோ அல்லது 80களிலோ அல்ல. எந்த ஒரு அனர்த்தத்திற்கும் அதற்குரிய மூலத்தை ஆராய்ந்து பார்க்கும் திறன் தற்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லா மனிதர்களிடமும் இருக்கின்றது. ஆனால் தம் விழிகளுக்குள் தாம் விரும்பும் நிறங்களை மறைத்து வைத்துக்கொண்டு அதன் மூலம் இவ்வுலகத்தை பார்க்க நினைப்பவர்களைத் தவிர.

    Reply
  • Sinna Siththar
    Sinna Siththar

    I am sure BTF’s members are good people whose intentions are honourable and commendable. I am also sure that they are also concerned about the plight of the Tamil people in Sri Lanka. Time and again we have seen new organisations are being created in the UK while pretending to be neutral the sole purpose and practices of such organisations are to appeal to core LTTE supporters or to establish LTTE’s dominance in this country. Most of the former organisations folded because of loss of their credibility. It appears BTF is no different from rest of the LTTE fronts. However, BTF does not represent all Tamils living in this country nor does it speak for all of us

    BTF naively over estimated its member’s ability to overturn British government’s long standing policy on Sri Lanka and its established diplomatic practices. British government always listens to its Tamil citizens’ concerns but always sticks to its position on Sri Lanka. The British establishment allows people to protest and make noises, it does not mean that it will act or react on BTF’s behest. BTF should not falsely believe that just because it made some noises here and there and has had access to top politicians, means that it was going to change British foreign and regional policies particularly the policies towards the LTTE. Therefore, BTF’s outburst on Foreign Office statement yet again clearly demonstrates its immaturity and confirms its inability to understand the whole policy making process of British government.

    British Tamil Forum will never establish itself as a credible organisation representing UK Tamils unless it sincerely believes in fundamentals of human decency, universal human rights, etc. It appears BTF never ever have condemned LTTE’s atrocities towards innocent civilians, including Child conscription, killing of its perceived unarmed enemies, using civilians as human shield, not appealing to LTTE to release all people trapped in Vanni, etc.

    Would BTF unreservedly condemn all atrocities against unarmed innocent civilians irrespective of whom the perpetrators are? If BTF’s core values are synonymous with LTTE’s then be honest and say so openly. By doing so BTF would command respect at least among LTTE supporters. By pretending otherwise, will be seen as a travesty of competing values.

    It is high time BTF came out of its closet and say what it stood for beyond LTTE’s narrowly defined mirage, called The Thamil Eelam?

    Reply