முல்லைத்தீவு முற்றுப் புள்ளியல்ல! புலிகளின் புதிய அத்தியாயம்! : த ஜெயபாலன்

Mahinda RajapaksaPirabaharan_Eelamபுலிகளின் கோட்டையாக விளங்கிய கடைசி நகரான முல்லைத்தீவு நேற்று (ஜனவரி 25) கைப்பற்றப்பட்டதாக இராணுவத் தளபதி சரத்பொன்சேகா உத்தியோகபூர்வமாக அறிவித்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆயுட்காலக் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட வே பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையிலான யுத்தம் சில மாதங்களுக்கு முன்வரை சற்றும் எதிர்பாராத புதிய திருப்பு முனையில் வந்து நிற்கின்றது. இலங்கை அரச படைகள் புலிகளின் ஒவ்வொரு கட்டுப்பாட்டுப் பகுதியையும் தம்வசப்படுத்துவதை நேரடியாக அஞ்சல் செய்து வர கிறிக்கட் ஆட்டத்தில் ஓட்டங்களை குவிக்கும் குதுகலத்தைப் போல தெற்கில் ஜனாதிபதி மகிந்தவின் ஆளும்கட்சி பட்டாசுகள் கொழுத்தி குதூகலித்தது. புலம்பெயர் நாடுகளில் உள்ள புலியெதிர்பாளர்களும் மகிந்த அரசின் வெற்றிக் களிப்பில் தங்களை இணைத்துக் கொண்டனர். புலம்பெயர் நாடுகளிலுள்ள புலி ஆதரவாளர்களோ பணம் கட்டிய குதிரை (புலி) பின்வாங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் செய்வதறியாது குழம்பிப் போயுள்ளனர்.

இதுவரை இராணுவம் கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் பிரதேசங்களில் இருந்த மக்கள் விரும்பியோ விரும்பாமலோ புலிகளுடைய திசையிலேயே செல்ல வேண்டியதாயிற்று. ‘Trapped and Mistreated : LTTE Abuses Against Civilians in the Vanni’ என்ற தலைப்பில் நியுயோர்க்கை தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு யுத்தத்தில் பின்னடையும் விடுதலைப் புலிகள் வன்னி மக்களை ஆபத்தான யுத்த சூழலுக்குள் பலாத்காரமாக தடுத்து வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளது. ‘In research conducted by Human Rights Watch in Sri Lanka from October through December 2008 — including 35 interviews with eyewitnesses and humanitarian aid workers working in the north — we found extensive evidence of ongoing LTTE forced recruitment of civilians, widespread use of abusive forced labor, and improper and unjustified restrictions on civilians’ freedom of movement.” என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ஜனவரி 9ல் வெளியிட்ட 21 பக்க அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

ஜனவரி 21ல் முல்லைத்தீவில் உள்ள தேவிபுரம் உடையார்கட்டு சுகந்திரபுரம் சுகந்திரபுரம் கொலனி சுகந்திரபுரம் மத்தி கைவேலி வடக்கு இருட்டு மடு போன்ற இடங்களை பாதுகாப்பு வலயங்களாக இலங்கை அரச படைகள் அறிவித்து இருந்தன. அடுத்த 48 மணி நேரத்தில் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு விடுத்த அறிக்கையில் யுத்த பிரதேசங்களில் இருந்து தப்பி வரும் தமிழ் மக்களுக்காக அமைக்கப்பட்ட நலவாழ்வு நிலையங்களை சிறைக் கூடங்களை இயக்குவது போல் இலங்கை இராணுவத்தினர் நடத்துவதாக குற்றம்சாட்டியுள்ளது. அரசாங்கம் யுஎன் மற்றும் சர்வதேச உதிவி அமைப்புகளை வெளியேற்றியதால் யுத்த பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட உதவியே கிடைப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆசிய பிரிவு இயக்குநர் பிராட் அடம்ஸ் தெரிவித்து உள்ளார்.

எந்த மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுக்கப் போவதாக கூறி ஏட்டிக்குப் போட்டியாக இந்த யுத்தத்தை நடத்துகிறார்களோ அந்த மக்கள் பற்றி இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் கவனத்தில் கொள்ளவில்லை. தொடர்ச்சியான யுத்த சூழலுக்குள் 200000 – 300000 மக்கள் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். தற்போது அவ்வளவு மக்களும் ஒரு குறுகிய பிரதேசத்தினுள் செறிவாகிப் போயுள்ளனர். 200000 – 300000 வைத்துக் கொண்டு புலியும் – சிங்கமும் யுத்தத்தில் இறங்கி உள்ளனர். கடந்த நான்கு வாரங்களாக இப்பிரதேசத்தில் இடம்பெறும் தாக்குதல்களால் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இம்மக்கள் மத்தியில் இந்த யுத்தத்தை நடத்துவது மிகப்பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

”As the LTTE has lost ground to advancing government forces, civilians have been squeezed into a shrinking conflict zone. The encroaching fighting has placed their lives increasingly in danger. Many spend their day under the constant sound of nearby small-arms fire, shelling, and bombing. Because of a near total government ban on access by humanitarian agencies and the media, the suffering of the civilian population of the Vanni receives scant attention outside Sri Lanka.” என மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு இம்மக்களின் வாழ்நிலையை விபரித்து உள்ளது.

இந்த 200000 – 300000 மக்கள் பற்றிய கவனத்திலும் பார்க்க இந்த யுத்தத்தின் வெற்றி தோல்வி பற்றிய ஆராய்ச்சிகளும் கல்மடு குளக்கட்டு உடைப்பின் இராணுவ முக்கியத்துவமும் பற்றியே கவனம் உள்ளது.

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுவதாகப் புறப்பட்ட புலிகள், தங்களது பாதுகாப்பு அரணாக வன்னி மக்களை பயன்படுத்த முனைகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முற்றாக மறுத்துவிட முடியாது. மக்களது இழப்புகளை அரசியலாக்கும் புலிகளின் மூன்றாம்தர அரசியல் பிரச்சாரம் ஒன்றும் புதிய விடயமல்ல. அதேசமயம் அந்த மக்கள் இலங்கை இராணுவத்தினர் மீது கொண்டுள்ள அச்சமும் கடந்தகால நிகழ்வுகளும் ‘தெரியாத பேயிலும் பார்க்க தெரிந்த பேய் மேலானது’ என்று எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கும். மேலும் இந்த மக்கள் நீண்ட காலம் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தவர்கள். விரும்பியோ விரும்பாமலோ அவர்களுடன் தொடர்புபட்டவர்கள். அவர்களுடைய உறவுகள் கட்டாய இராணுவப் பயிற்சி கட்டாய உழைப்பு ஆகியவற்றில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பார்கள். இவற்றை அரசபடைகள் எவ்வாறு கையாள்வார்கள் என்ற அச்சம் நியாயமானது.

மேலும் பரிதவிக்கும் மக்களை போரில் ஈடுபட்டு இருக்கும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் விடுவது மனிதாபிமானமற்ற செயல். சர்வதேச உதவி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பு வலயங்கள் உருவாக்கப்பட்டால் அவற்றை நோக்கி மக்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும். இராணுவக் கட்டுப்பாட்டில் மக்களுக்கான பாதுகாப்பு வலயங்கள் அமைப்பதென்பது யதார்த்தமற்றது.

எந்தவொரு இராணுவ வெற்றியும் நிரந்தரமானதல்ல. இது புலிகளும் இலங்கை இராணுவமும் உணர மறுக்கின்ற உண்மை. இன்று இராணுவத்தின் கை ஓங்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் கடைசிக் கோட்டையான முல்லைத் தீவையும் கைப்பற்றியது விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கைகளுக்கு வைக்கப்பட்ட முற்றுப் புள்ளியல்ல. விடுதலைப் புலிகளால் அதன் முளையிலேயே அழிக்கப்பட்ட இயக்கங்கள் இரு சகாப்தங்களைக் கடந்தும் இன்றுவரை இயங்குகின்றன. அப்படி இருக்கையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் புலிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட முடியாது.

புலிகளுக்கும் இலங்கை அரச படைகளுக்குமான இந்த யுத்தத்தில் இலங்கை அரச படைகளை மரபுவழி இராணுவமாக புலிகளால் எதிர்கொள்ள முடியவில்லை என்பது உண்மையே. ஹமாஸ் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளால் இஸ்ரேலை எதிர்கொள்ள முடியவில்லை. தலிபானால் அமெரிக்க மற்றும் நேசநாட்டு படைகளை எதிர்கொள்ள முடியவில்லை. அதேசமயம் இஸ்ரேலாலும் அமெரிக்காவாலும் யுத்தத்தை வெல்லவும் முடியவில்லை. இதுவே இலங்கைக்கும் பொருந்தும். இன்னுமொரு ஆப்கானிஸ்தானையும் இன்னுமொரு ஈராக்கையும் இலங்கையில் உருவாக்கும் இராணுவ பலம் புலிகளுக்கு நிச்சயம் உண்டு. புலிகள் புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பிக்கத் தயாராகிவிட்டார்கள் என்பதனையே இந்த யுத்தத்தின் போக்கு காட்டுகிறது.

ரெலோ அழிக்கபட்டபோதும் சரி கருணா குழு அழிக்கப்பட்ட போதும் சரி அவ்வமைப்புகளின் வேறு  வேறு மட்டத் தலைமைகள் அழிக்கப்பட்டன. கட்டளைக் கட்டமைப்பு தகர்க்கப்பட்ட அவற்றின் உறுப்பினர்கள் சிதறி வெளியேறினர். உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டனர். ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இலங்கை அரசாங்கத்தின் இந்த விடுதலைப் புலிகளை அழிக்கும் யுத்தத்தில் இவையெதுவுமே நடைபெறவில்லை. இலங்கை அரச படைகளுக்கும் புலிகளுக்குமான இந்த யுத்தம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயெ இடம்பெற்று உள்ளது. யுத்தத்தின் பிற்பகுதிகளில் அங்குமிங்குமாக சிறு தாக்குதல்களே இடம்பெற்று இருந்தது. புலிகள் ஒவ்வொரு பிரதேசமாக மிகவும் நிதானமாக தங்கள் ஆயுத தளபாடங்களுடன் திட்டமிட்ட முறையில் பின்வாங்கி உள்ளனர். தமது பக்கத்தில் ஏற்படக் கூடிய உயிரிழப்புகளையும் தவிர்த்து உள்ளனர். குறிப்பிட்டு சொல்லக் கூடிய வகையில் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் தளபதிகள் யாரும் உயிரிழக்கவும் இல்லை. சரணடையவும் இல்லை. புலிகளின் பங்கர்களைத் தவிர ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்படவும் இல்லை. புலிகளின் கட்டளை அமைப்பு சீர்குலையவும் இல்லை. நிதானமாக தங்களின் ஆயுத தளபாடங்களுடன் பின் வாங்கி உள்ளனர். இலங்கை அரசாங்கம் புலிகளிடம் இருந்த கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை புலிகள் பின்வாங்கிச் செல்ல தன் வசப்படுத்தி உள்ளது. புலிகளின் இறுக்கமான கட்டமைப்பில் இந்த யுத்தம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கொள்ள முடியாது.

புலிகளின் மற்றுமொரு உறங்கு நிலைக் காலமாக இது அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த உறக்கம் இலங்கையின் வனப் பிரதேசங்களிலோ பணத்தால் எதனையும் வாங்கும் ஒரு நாட்டிலோ அல்லது சர்வதேச நாடுகளின் கொடிகள் பறக்கும் புலிகளின் கப்பல்களில் சர்வதேச கடலிலோ அல்லது இவை எல்லாவற்றிலுமாகவோ இருக்கலாம். இந்த உறங்கு காலத்தின் காலம் வே பிரபாகரனுக்கே வெளிச்சம். இந்த உறங்கு காலம் சில வாரங்களாகவோ அல்லது சில மாதங்களாகவோ இருக்கலாம். ஆனால் புலிகள் தங்கள் இருப்பை தெரியப்படுத்துவார்கள்.

புலிகள் தமிழ் மக்களது அரசியல் உரிமையை வென்றெடுக்கும் அரசியல் பலத்தை என்றைக்குமே கொண்டிருக்கவில்லை. அவர்களுடைய வரட்டுத்தனமான இராணுவப் போக்குக்கு கிடைத்த மிகப்பெரும் அடி இந்த யுத்தம். ஆனால் இந்த இராணுவக் கண்ணோட்டத்திற்கு வெளியே வரக்கூடிய ஆற்றல் வே பிரபாகரனுக்கு உண்டா என்பது சந்தேகமே. அப்படி ஒன்று நடந்தால் அது ‘தொப்பிக்குள் இருந்து முயல்’ எடுப்பதற்கு ஒத்ததாக இருக்கும்.

இந்த யுத்தத்தில் தீவிர ஆர்வம்காட்டும் ஜனாதிபதி மகிந்த நாட்டின் இந்நிலைக்கு காரணமான இன முரண்பாட்டிற்கான அரசியல் தீர்வு பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. தன்னிடம் சரணாகதி அடைந்துள்ள கிழக்கின் முதல்வரையே ஜனாதிபதியால் திருப்திப்படுத்த முடியவில்லை. அப்படி இருக்கையில் இந்த யுத்தத்தால புலிகளை வென்று தமிழ் மக்களுக்கு ஜனநாயகக் காற்றை சுவாசிக்க வைக்கப் போவதாகக் கூறும் வாய்ச்சவடால்கள் தமிழ் மக்களிடம் செல்லாது. புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் உண்மையிலேயே வெல்வதாக இருந்தால் முதல் தமிழ் மக்களின் உள்ளங்களை வெற்றி கொள்ள வேண்டும். அதற்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதனைச் செய்யாத வரை அது புலிகளுக்கு விளைநிலமாகவே இருக்கும்.

Related Articles:

தவறிப் போகும் பிரபாவின் தலைமை : த ஜெயபாலன்

2008ல் சொல்ல என்ன இருக்கிறது? : த ஜெயபாலன்

யுத்தத்தை நிறுத்துங்கள்!! வன்னி மக்களை விடுவியுங்கள்!!! – ஈஸ்ற்ஹாம் பிரதான வீதியில் ‘வேட்டையாடு விளையாடு’ : த ஜெயபாலன்

விடுதலைப் புலிகள் செலுத்தும் யுத்தத்தின் விலை : த ஜெயபாலன்

Show More
Leave a Reply to chandran.raja Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

29 Comments

  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    “புலிகள் தமிழ் மக்களது அரசியல் உரிமையை வென்றெடுக்கும் அரசியல் பலத்தை என்றைக்குமே கொண்டிருக்கவில்லை.”
    புலியெதிர்ப்பு மனநிலையிலிருந்து பார்ப்பவருக்கு இது யதார்த்தமாக தெரியலாம் ஆனால் இது முழு உண்மையல்ல. புலிகள் அரசியல் ரீதியாக இயங்கமுற்பட்ட போது சிங்களம் மாத்திரமில்லை தமிழர் விடுதலையை எதிர்க்கும் மேற்குலகு இந்தியா என அனைவருமே புலிகளையும் தமிழர்களின் உரிமை போரையும் அழிக்கதான் முற்பட்டார்கள். இதனால் புலிகள் அரசியல் உரிமையை வென்றெடுக்கும் முயற்சி சர்வதேச அளவில் திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்டது.

    உலகின் பெரிய ஐனநாயகநாடென பீற்றி கொள்ளும் இந்தியாவிலேயே. கர்நாடகவும் கேராளவும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்க வேணும் அதை மத்தியரசு உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்கவேணுமென உச்சநீதிமன்ற தீர்ப்பிருந்தும் இன்றுவரை தமிழர்கள் என்ற ஒற்றை காரணத்திற்காக அது நடைமுறைபடுத்ததாது இழுத்தடிக்கப்படுகிறது. ஒரு மாநிலஅரசின் கையேறுநிலையே இப்படியிருக்கும் போது ஒரு சிறுபான்மை இனத்தின் பிரிவினை கோரிக்கையை இலங்கைதீவில் தமது நலம் சார்ந்து சர்வதேச அளவில் எதிர்க்கும் போது “அரசியல் உரிமையை வென்றெடுக்கும் அரசியல் பலத்தை என்றைக்குமே கொண்டிருக்கவில்லை”. என புலியின் மீது குற்றம் சொல்வது எவ்வளவு பொருத்தப்பாடனாது!

    Reply
  • ராபின் மெய்யன்
    ராபின் மெய்யன்

    புலிகள் அரசியல் ரீதியாக என்றுமே இயங்க முற்பட்டதில்லை. அர்சியல் பற்றிய தெளிவு அவர்களுடைய அரசியல் ஆலோசகர், திருவாளர் தேசத்தின் குரலுக்கே இருந்தது கிடையாது. ஆயுதப் போராட்டத்தால் தமது அரசியல் இலக்குகளை அடைவதற்கான வழியில் ஒரு கட்டத்திற்கு மேல் செல்ல முடியாது என்பதை உணரக்கூடிய அறிவு கூட அவர்களிடம் இருக்கவில்லை. தனிநபர் கொலைகள் தமக்கு நன்மையைவிடத் தீமையையே அதிகம் தருகிறது என்பதை உணர முடியாத கொலை வெறியில் மயஙிக் கிடக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியிருந்ததெல்லாம் கொலையும் குரூரமுமே. அதை தமிழ் பேசும் மக்கள் நன்றாக உணர்ந்து விட்டார்கள்.

    Reply
  • vanthiyadevan
    vanthiyadevan

    mr jeyabalan you are absolutely right except
    புலிகளின் மற்றுமொரு உறங்கு நிலைக் காலமாக இது அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த உறக்கம் இலங்கையின் வனப் பிரதேசங்களிலோ பணத்தால் எதனையும் வாங்கும் ஒரு நாட்டிலோ அல்லது சர்வதேச நாடுகளின் கொடிகள் பறக்கும் புலிகளின் கப்பல்களில் சர்வதேச கடலிலோ அல்லது இவை எல்லாவற்றிலுமாகவோ இருக்கலாம். இந்த உறங்கு காலத்தின் காலம் வே பிரபாகரனுக்கே வெளிச்சம்.
    because not only one force against ltte like before
    now ltte been stamped as terriost worldwide

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    100 civilians feared killed, countless wounded, artillery barrage on ‘Saftey zone’
    [TamilNet, Monday, 26 January 2009, 09:06 GMT]
    More than one hundred civilians were killed and hundreds of wounded patients were helpless without medical attendance as Sri Lanka Army (SLA) was continuously engaged in one of the most inhumane artillery barrage on civilian populated ‘safety zone’ in Udaiyaarkaddu Monday morning. All the civilians were remaining under the bunkers for more than 5 hours, according to initial reports from the medical sources in Udaiyaarkaddu. The makeshift hospital at Udaiyaarkaddu was on total disarray as 10 patients were killed and four ambulances damaged. The doctors have called for the ICRC, which is also helpless under the bunkers, the reports said.

    The medical authorities have contacted the ICRC outside the region and urged to send in medical help as soon as possible and to put an end to the carnage inside the civilian safety zone.

    Thousands of artillery shells have been fired into the safety zone in what was described as the most inhumane genocidal attacks on civilian population.

    Sri Lanka Army (SLA) which wants to see the civilians surrender, by bringing them to their extreme limits, has caused the carnage.

    There is nobody available to help the wounded, according to the initial reports from the medical sources.

    Last Thursday, the Government Agent of Mullaiththteevu Imelda Sukumar, who returned to Vavuniyaa said she cannot function anymore, until the normalcy returns, and said that she had advised her staff to move out from the area.

    Reply
  • ஏகாந்தி
    ஏகாந்தி

    வன்னி இராணுவ நடவடிக்கையில் இதுவரை படையினரால் மீட்கப்பட்ட நிலப் பிரதேசங்களை மீள விடுதலைப்புலிகள் கைப்பற்ற ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லையென உறுதியாகத் தெரிவித்திருக்கும் இராணுவத்தின் 58 ஆவது படையணிக் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் சவீந்திர சில்வா, விடுதலைப்புலிகளிடம் தளபதிகளும் போதியளவு ஆயுத பலமும் இருந்தாலுமே களத்தில் போராட போதுமானளவு போராளிகள் இல்லையென்றும் சுட்டிக் காட்டினார்.

    மன்னார் மடு பிரதேசத்தில் நடவடிக்கைகளை ஆரம்பித்த 57 ஆவது மற்றும் 58 ஆவது படைப் பிரிவினர் பூநகரி, பரந்தன், கிளிநொச்சி, ஆனையிறவு வரையான பிரதேசங்களை மீட்டு தற்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் முல்லைத்தீவுப் பிரதேசத்தை நோக்கி முன்னேறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் 58 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியே பூநகரியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் அந்தப் படையணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு கூறினார்.

    இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கொழும்பிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியாளர்கள் கலந்துகொண்டனர்.

    அத்துடன், வன்னி பிரதேசத்தின் கிழக்கு கரையோரத்தைத் தொட இன்னும் 5 கிலோ மீற்றர் தூரமே இருப்பதாலும் தனது படையணியினர் விடுதலைப் புலிகளின் வசம் எஞ்சியிருக்கும் பிரதேசத்துக்குள் நாளாந்தம் குறைந்த பட்சம் ஒரு கிலோ மீற்றர் தூரம் முன்னேறி வருவதாகவும் பிரிகேடியர் சவீந்திர சில்வா கூறினார்.

    அவர் இதன் போது மேலும் விளக்கமளிக்கையில்;
    “”மேற்குக் கரையோரப் பிரதேசம் முற்றாக எமது படையினரால் மீட்கப்பட்டுள்ளது. கிழக்குக் கரையோரத்தை எட்ட இன்னும் 5 கிலோ மீற்றர் தூரமே இருக்கிறது. வெகு விரைவில் அந்தப் பிரதேசங்களையும் மீட்டு விடுவோம்.

    58 ஆவது படையணியினரால் இவரை 131 கிலோ மீற்றர் தூரம், 1,347 சதுர கிலோ மீற்றர்கள் பரப்பும் கொண்ட பிரதேசம் மீட்கப்பட்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் நோக்கும் போது இராணுவத்தில் 8 பேருக்கு, விடுதலைப் புலிகளில் 92 பேர் என்ற விகிதத்தில் கொல்லப்படுகின்றனர்.

    எமது படையினர் மீட்ட பிரதேசங்களை நாம் ஒரு போதும் புலிகளுக்கு மீளக் கைப்பற்ற இடமளிக்கமாட்டோம். புலிகளுக்கு அது முடியுமானதாகவும் இருக்காது. ஏனெனில், அவர்களிடம் போதியளவு போராளிகள் கிடையாது. புலிகளிடம் போதுமானளவு ஆயுத பலம் இருக்கிறது. தீபன், பானு போன்ற தளபதிகள் இருக்கின்ற போதிலும் ஆயுதங்களுக்கு பின்னாலிருந்து அவற்றை இயக்கி போராட அவர்களிடம் போதிய போராளிகளும் மனோ தைரியமும் கிடையாது.

    எமது படையணியினர் நாளாந்தம் குறைந்தது ஒரு கிலோ மீற்றர் தூரம் முன்னேறி வருகின்றனர்.

    இதேநேரம், வைத்தியசாலைகள் மீது படையினர் தாக்குதல் நடத்துவதில் பொதுமக்கள் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். எமது படையினர் பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்துவதில்லை. எம்மால் அதை நிரூபித்துக் காட்ட முடியும்.

    எனினும், புலிகள் தான் யுத்த சூனியப் பிரதேசத்தில் இருந்து எம்மை நோக்கி தாக்குதல் தொடுக்கின்றனர். எனினும், நாம் பதில் தக்குதல் நடத்தவில்லை. ஏனெனில், பொதுமக்களின் நலனில் எமக்கு அக்கறை இருக்கிறது. புலிகள் மக்களை தப்பி வரவிடாது பிடித்து வைத்து அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

    அத்துடன், விடுதலைப்புலிகளில் அனுபவமிக்க போராளிகள் கொல்லப்பட்டு விட்டமையால் புலிகள் தற்போது பொதுமக்களையே தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால்தான் அவர்களது தாக்குதல் இலக்குகளும் தவறி வருகின்றன.

    விடுதலைப் புலிகளின் 6 விமான ஓடுபாதைகளில் பரந்தன் விமான ஓடுபாதை எம்மால் கைப்பற்றப்பட்டது. இறுதி ஓடுபாதையும் நாம் வரும் வரை எம்மை பார்த்துக் கொண்டிருக்கிறது.

    புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருவதே எமது நடவடிக்கைகளுக்கு சற்று சிக்கலாக இருக்கிறது. எனினும், எம்மால் முடிந்தளவு முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். இழந்த பிரதேசங்களை மீளக் கைப்பற்றுவதற்காக விடுதலைப் புலிகளின் எந்த வகையான எதிர்த் தாக்குதலையும் எதிர்கொண்டு முறியடிக்க நாம் தயாராகவே இருக்கின்றோம்.

    இதேநேரம், பின்புலத்தை விட சிறந்த ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் சிறந்ததொரு இராணுவத் தளபதியின் தலைமைத்துவம் கிடைத்து வருகின்றமையே எமது இந்த வெற்றிகளுக்குக் காரணம்’ என்றார்.

    அத்துடன், இராணுவத்தின் 57 ஆவது படையணி பிரதிக் கட்டளை அதிகாரியான கேணல் அநுர வன்னியாராச்சி கூறுகையில்;

    விடுதலைப்புலிகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களைப் பயன்படுத்தி மண் மேடுகளை மட்டுமே அபிவிருத்தி செய்கின்றனர். எமது 57 ஆவது படையணி சுமார் 1,690 சதுர கிலோ மீற்றர்கள் நிலப்பரப்பை மீட்டுள்ளது. வெறும் 280 சதுரக் கிலோ மீற்றர்கள் பரப்புக்குள் புலிகள் தற்போது முடக்கப்பட்டுள்ளனர்.

    இதேநேரம், புலிகள் அவர்களது விமானங்களை எங்காவது மறைத்து ஒழித்து வைத்திருக்க வேண்டும். தற்போதைய நிலைமையில் அந்த விமானங்களால் புறப்பட முடியாது என்று கூறினார்.

    Reply
  • palli
    palli

    //இந்தியாவிலேயே. கர்நாடகவும் கேராளவும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்க வேணும் அதை மத்தியரசு உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்கவேணுமென உச்சநீதிமன்ற தீர்ப்பிருந்தும் இன்றுவரை தமிழர்கள் என்ற ஒற்றை காரணத்திற்காக அது நடைமுறைபடுத்ததாது இழுத்தடிக்கப்படுகிறது//

    அது சரி ஈழதமிழரை ஈழம் என்னும் பூராடம் காட்டி அழித்தது போதாது என 7கோடி தமிழருக்கு தெரியாத வால்வெள்ளி தோழருக்கு பிடிபட்டு சுட்டி காட்டுகிறார். தமிழ்நாட்டையும் குழப்பி எம்மைபோல் நாடு நாடாய் அகதியாய் அலைய வையுங்கோ. முல்லைதீவில் ஆமிபோட்டுது என நாம் புலம்புகிறோம். தோழர் தமிழ்நாட்டுக்கு தண்ணி வரவில்லை என விம்புகிறார். உங்க தலைவரிடம் சொன்னால் கர்நாடகத்துக்கு போய் அணைகட்டை உடைத்து விடுவாரே அதன்பின் எந்த தண்ணி பிரச்சனையும் இருக்காது. அணை உடைப்பதில் வித்தக வீரரல்லவா புலிகள்.
    பல்லி.

    Reply
  • xavier
    xavier

    now its clear ltte using civilian as human shields i am very dissapointed thier act i am sure many others will agree on this. free inocent people last chance if u think u got any idea. people will remember and never accepted u as before

    Reply
  • damilan
    damilan

    புலிகள் மீண்டும் ஒரு படையணியைக் கட்டி இலங்கை ராணுவத்திற்கு எதிராக போர்புரிய முடியும் என்பது இனி எந்த அளவிற்கு சாத்தியப்படும் என்பது கேள்விக்குறியான விடயமாகும். ஏனெனில் தற்போதைய ராணுவ பாதுகாப்பு முறையை அவதானிக்கும் போது (தற்போது நான் வடக்கில் மன்னாரில் வசிக்கிறேன்)இலங்கை அரசு 2006 ம் ஆண்டில் இருந்தே வடக்கு போர் முனையைத் திறப்பதற்காக பல முன்னேற்பாடுகளை செய்து வந்தது அதில் பல படையணிகளை உருவாக்கியது.
    1. 59 வது படையணி மணலாறுப்பக்கமாகவும்
    2. 57 வது படையணி மடுப்பக்கமாகவும்
    3. 58 வது படையணி உயிலங்குளப்பக்கமாகவும் இறக்கியது. மேற்படி படையணி அணைத்தும் புதிதாக உருவாக்கப்பட்டவை.

    கிழக்கை ராணுவம் பிடித்த கையோடு மன்னாரின் சிலாவத்துறைப் பகுதியையும் கைப்பற்றியது. சிலாவத்துறையைக் கைவிட்டு புலிகள் வன்னிக்குள் பின் வாங்கினர். கிழக்கிலும் சிலாவத்துறையிலும் விட்டு பின் வாங்கிய பிறகு புலிகளின்
    1.ஆளனி குறையவிலை/அழியவில்லை.
    2.ஆயுதங்கள் அழியவிலை
    3.கட்டளை தளபதிகள் இறக்கவில்லை
    4.விமானப்படை பலம்
    5.செல் ரேஞ் இருந்தது (மன்னாரில் 50 ற்கும் குறைவான மீட்டர் தூரத்திலே முன்னனி பாதுகாப்பு வலயம் இருந்தது)
    6.விநியோகம் இருந்தது.
    இவை எல்லாம் இருந்தும் ஏன் புலிகள் வன்னிக்குள் ராணுவம் இறங்க முதல் பாதையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராணுவத்தை தாக்க வில்லை. ?
    இதுவரையில் ஒரு ஊடறுப்புச் சமர் நடைபெறவில்லை ?
    திரு. ஜெயபாலன் கூறிய உறங்கு நிலையில்தான் புலிகள் அப்போதும் இருந்தனரா ?

    புலிகள் சாதாரணமாக பின்வாங்கிச் செல்லவில்லை ராணுவம் வன்னிக்குள் இறங்கி ஒரு சில கிலோ மீட்டர் வரைப்பிடிப்பதற்கே மூன்றுமாதமளவில் சென்றது. நாச்சிக்குடா கிளிநொச்சி போன்ற பகுதிகளுக்காக புலிகள் கடுமையாக போரிட்டனர்.

    ஆக தற்போது உள்ள சூழ்நிலையைப் பார்க்கும் போது மீண்டும் ஒரு தடவை எல்லாமே எ டு ஸட் வரையில் உருவாக்கம் பெற வேண்டும். தற்போதைய இராணுவ நடைமுறைக் கட்டமைப்பை வைத்துப் பார்க்கும் போது புலிகளின் மீள் வருகை என்பது பிரபாகரனின் வார்த்தையில் கூறுவதனால் “பகற்கனவு”. ஆகும். இருப்பினும் தாங்களின் கட்டுரையின் சில பகுதியை வாசிக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கு “கிளுகிளுப்பு” ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

    Reply
  • Anonymous
    Anonymous

    100 civilians feared killed, countless wounded, artillery barrage on ‘Saftey zone’ –TamilNet

    குள உடைப்பின் போது, 1500 ராணுவத்தினர் பலி என்ற புலம்பெயர் புரளியினால், தற்போதைய இந்த அப்பாவி வன்னி மக்களின் கொடூர அவலத்தை பலர் நம்ப மறுப்பதை கண்டு துடிக்கிறேன். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள துடிக்கத்துடிக்க மக்களை இப்படி விடலாமா?, செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஏதாவது ஒரு நாட்டின் படை அங்கு நிறுத்தப்பட வேண்டும்.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    மாற்றுக் கருத்துத் தோழர் //புலிகள் அரசியல் ரீதியாக இயங்கமுற்பட்ட போது சிங்களம் மாத்திரமில்லை தமிழர் விடுதலையை எதிர்க்கும் மேற்குலகு இந்தியா என அனைவருமே புலிகளையும் தமிழர்களின் உரிமை போரையும் அழிக்கதான் முற்பட்டார்கள்.//

    இதற்கான காரணத்தை தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே சுட்டிக் காட்டி உள்ளனர்.

    //தமிழீழம் சாத்தியமில்லை என்பதற்கு 1976ல் நாங்கள் வைத்த காரணம், தமிழ் மக்களுடைய எண்ணிக்கை, அவர்களுடைய பிரதேசம், அவர்களுடைய வாழ்க்கை இவையெல்லாம் சுயமாகப் போராடி தமிழீழத்தை பெறக்கூடிய சூழ்நிலை என்றைக்குமே இருக்கவில்லை. இதையெல்லாமீறி தமிழீழம் அமைக்கப்படுமாக இருந்தால் அமெரிக்காவோ, இந்தியாவோ அல்லது இன்னுமொரு அந்நிய சக்தியின் மூலம்தான் ஒரு ஏகாதிபத்தியத்தினாலயே சாத்தியம். ஆனால் இதே கோரிக்கையை அந்நிய சக்திகள் பயன்படுத்தும்.
    : சி கா செந்திவேல் – பொதுச்செயலாளர் புதிய ஜனநாயகக் கட்சி//

    தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தாங்கள் மட்டும் தான் நடத்துவோம் என்று தங்களை ஏகபிரதிநிதிகளாக்கிய புலியின் மீது குற்றம் சொல்வது தவிர்க்க முடியாதது மாற்றுக்கருத்துத் தோழரே.

    ராபின் மெய்யன் //ஆயுதப் போராட்டத்தால் தமது அரசியல் இலக்குகளை அடைவதற்கான வழியில் ஒரு கட்டத்திற்கு மேல் செல்ல முடியாது என்பதை உணரக்கூடிய அறிவு கூட அவர்களிடம் இருக்கவில்லை.//

    நிச்சயமான உண்மை.

    வந்தியதேவன் //because not only one force against ltte like before, now ltte been stamped as terriost worldwide //
    எத்தனை நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்தாலும் மீண்டும் வந்து கண்ணி வெடி வைப்பதற்கும் தாக்குதல் நடத்துவதற்குமான வல்லமையை புலிகள் இழந்துவிட்டதாக கூற முடியாது.

    xavier / now its clear ltte using civilian as human shields i am very dissapointed thier act i am sure many others will agree on this.//

    புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாக வைத்துள்ளனர் என்பது உண்மை. இவ்வாறான தாக்குதல்களை இந்திய அமைதிப்படை காலத்திலும் விடுதலைப் புலிகள் மேற்கொண்டு உள்ளனர். ஆனால் அரசாங்கம் இதனை ஒரு காரணமாகக் கூறிக்கொண்டு மனித அவலத்தை ஏற்படுத்துவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அரசாங்கம் சர்வதேச உதவி அமைப்பகளை அணுகி மனிதநேய நோக்கோடு செயற்பட வேண்டும். இன்று பல நூறு உயிர்கள் இழக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்துவரும் நாட்கள் மிக மோசமாக அமையலாம் இந்த மனித அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    டமிளன் //புலிகள் மீண்டும் ஒரு படையணியைக் கட்டி இலங்கை ராணுவத்திற்கு எதிராக போர்புரிய முடியும் என்பது இனி எந்த அளவிற்கு சாத்தியப்படும் என்பது கேள்விக்குறியான விடயமாகும்…. தற்போதைய இராணுவ நடைமுறைக் கட்டமைப்பை வைத்துப் பார்க்கும் போது புலிகளின் மீள் வருகை என்பது பிரபாகரனின் வார்த்தையில் கூறுவதனால் “பகற்கனவு”. ஆகும். இருப்பினும் தாங்களின் கட்டுரையின் சில பகுதியை வாசிக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கு “கிளுகிளுப்பு” ஏற்படுவதை தவிர்க்க முடியாது.//

    புலிகள் அமைப்பு ஒரு சிலருடன் கொரில்லா போராட்ட அமைப்பாகவே ஆரம்பித்தது. இன்று அதன் மீதான நம்பிக்கையில் 22000 போராளிகள் தங்கள் உயிரை அர்ப்பணித்து உள்ளனர்.

    புலிகளின் தலைமையின் அரசியல் தவறுகளுககு தமிழ் சமூகம் மதிப்பிட முடியாத விலையைக் கொடுத்து உள்ளது. அப்படிப்பட்ட ஒரு அமைப்பை நிலத்தைக் கைப்பற்றுவதன் மூலம் அழித்தொழிக்க முடியாது. விடுதலைப் புலிகளின் உச்சத் தலைமை அழிக்கப்படாத வரை அவர்கள் தங்கள் இருப்பை எண்பதுகளின் பாணியில் வெளிப்படுத்துவார்கள். இராணுவ முகாம்களைத் தாக்குவார்கள். அதற்கான பலத்தையும் உணர்வையும் அவர்கள் இரவோடு இரவாக இழந்துவிட மாட்டார்கள்.

    ஆனால் இதன் மூலம் தமிழ் மக்களை அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்துவதாகவோ அல்லது தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெறுவார்கள் என்றோ அர்த்தமில்லை. இது அவர்களுடைய இருத்தலை உறுதிப்படுத்தவே பயன்படும்.

    விடுதலைப் புலிகள் இலங்கையில் உள்ள இனவாதம் என்ற நோயின் அறிகுறி வெளிப்பாடு. நோய்க்கான காரணியை தீர்க்காத வரை நோயின் அறிகுறியும் வெளிப்பாடும் இருக்கவே செய்யும்.

    த ஜெயபாலன்

    Reply
  • sun
    sun

    ஜெயபாலன் அண்ணா எனக்கு பதில் அளியுங்கள்;
    //தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தாங்கள் மட்டும் தான் நடத்துவோம் என்று தங்களை ஏகபிரதிநிதிகளாக்கிய புலியின் மீது குற்றம் சொல்வது தவிர்க்க முடியாதது மாற்றுக்கருத்துத் தோழரே.//
    ஏன் புலிகளை தவிர்ந்த மாற்று குழுவினரால் ஒன்றினைந்து ஒரு தமிழீல விடுதலை போராட்டத்தை நடத்த முடியாமல் போனது?
    புலிகள் குறுக்காக நிற்கிறார்க‌ள் என்ற‌ நொண்டிச் சாட்டு சொல்லவார்க‌ள் ஆனால் உண்மையான காரணம் மக்கள் மனத்தில் கூட‌ அவர்க‌ள் இட‌ம் பிடிக்க இல்லை என்பதாகும்.புலிகள் மக்களோடு மக்களாக நின்றார்கள்.

    //புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாக வைத்துள்ளனர் என்பது உண்மை//
    கிளிநொச்சியை ஆமி பிடித்த உட‌ன் ஏன் மக்கள் புலிகளை பின் தொட‌ர்ந்து முல்லைத்தீவு சென்றார்கள்? எதிர் திசையில் சென்றால் வவுனியா ஏன் அவ‌ர்க‌ள் போக இல்லை? அவ்வளவு மக்களும் போக நினைத்திருந்தால் புலிகளால் கட்டுப்படுத்த முடியாது

    //விடுதலைப் புலிகள் இலங்கையில் உள்ள இனவாதம் என்ற நோயின் அறிகுறி வெளிப்பாடு. நோய்க்கான காரணியை தீர்க்காத வரை நோயின் அறிகுறியும் வெளிப்பாடும் இருக்கவே செய்யும்.//
    இதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வாறீங்க? புலிகள் தான் இனவாதிகள் சிங்கள‌ மக்கள் இனவாதிகள் இல்லை,சிங்கள அரசு இனவாதி இல்லை, மாற்று கட்சியினர் இனவாதிகள் இல்லையா?சிங்கள அரசு இனவாத தாக்குதலை மேற் கொள்ளவில்லையா? நீங்கள் உண்மையில் நினைக்கிறீர்களா புலித் தலைமையையும்,புலியையும் அழித்தால் இலங்கை பிரட்சனை தீர்ந்து விடுமா?தயவு செய்து பதில் அளியுங்கள் நன்றி.

    Reply
  • palli
    palli

    புலிகளுக்கு இது முற்று புள்ளி என சொல்ல முடியாதுதான். ஆனால் அவர்களது வளர்ச்சியில் எனி தேக்கநிலை ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை. அவர்களது பலம்;பணமும்; கொலையும்தான். இது இரண்டுமே அவர்களுக்கு கஸ்ரமாகதான் இருக்கும். அதைவிட ஏற்க்கனவே அவர்களிடம் எந்தவிதமான தீர்வும் இல்லாமல் தாமே சண்டியர் என்பதுபோல்தான் அவர்கள் இதுவரை வண்டி ஓட்டினார்கள். எனி அது சாத்தியபடுமா? ஒரு கருணா விட்டு விலகியதுக்கே அவர்கள் அமைப்பு தடம்புரளும் போது அவர்களால் மறைமுக ஜெயிலில் வைத்டிருக்கும் அரசியல் தெரிந்தவர்கள் (யோகி; திலகர்; பத்மன், கரிகாலன்; இளம்வளுதி) புலி பலவீனபடும் போது கண்டிப்பாக வெளியேறுவார்கள். இதுக்கு உதாரணமாக புளொட் அமைப்பை கடந்தகாலத்தில் பார்க்கலாம். மக்களுக்கும் அவர்கள் மீது இருந்த பயம் போய்விடும்.

    இப்போதே புலம்பெயர் நாட்டில் அவர்களால் பணம் சேர்க்க முடியவில்லை. இங்கு வாழும் தமிழரை பொறுத்த மட்டில்(புலிஆதரவாளர்) புலி வெற்றி கொண்டால் வெடி கொழுத்துவதும். தோல்வி கண்டால் மாற்று அமைப்புகளை திட்டுவதும் வாடிக்கையான விடயம். கட்டாயமாக சேர்க்கபட்ட கரும்புலிகள் அவர்களையே தாக்கலாம். எல்லாத்துக்கும் மேலாக புலியின் உளவுபடைக்கும் ராணுவத்துக்கும் (பிரபா; பொட்டர்) உள்ளுக்குள்ளே பிரச்சனைகள் வெடிக்கும். எது எப்படியோ இனி மக்கள் புலியின் கட்டுபாட்டில் இருக்கமாட்டார்கள்.
    பல்லி..

    Reply
  • palli
    palli

    சன் தலையில் அடிபட்டால் தலையில்தான் மருந்து போட வேண்டும். அதை விட்டு தலையில் அடிபட்டதுக்கு உள்ளங்கையில் மருந்து தடவுவது போல் உள்ளது உமது பின்னோட்டம். திரும்பவும் நாலுதரம் ஜெயபாலனின் கட்டுரையை வாசிக்கவும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    முதலில் பத்திரிகைகளிலும், வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும், தம்மைப் பெரிய ஆய்வாளர்ப் புலிகளாக காட்டிக் கொள்ள சிலர் காட்டும் ரோதனைகள் தாங்க முடியலை. பேசாமல் உவர்களை வன்னிக்கு அனுப்பினால்த் தான் உவர்களுக்கு உண்மை தெரிய வரும்.

    வன்னியில் புலிகள் மக்களை கேடயமாக பாவித்து போராடுவதை அரச அதிபரும் கண்டிக்கின்றார், யாழ் ஆயரும் கண்டிக்கின்றார். ஆனால் வன்னிப்புலிகளோ மக்களின் பாதுகாப்பை விட தமது பாதுகாப்பே முக்கியமென எண்ணுகின்றனர். இருக்கும் கொஞ்சநஞ்ச புலிப்போராளிகளிலும் பெரும்பாலோர் புலித்தலைகளைக் காப்பாற்றவே பாவிக்கப் படுகின்றனர். இந்த இலட்சணத்தில் இராணுவத்துடன் போராட போராளிகளுக்கு எங்கே செல்வது. அதனால் திடீர் போராளிகளாக மக்களையே புலிகள் பலிக்கடாக்கள் ஆக்குகின்றார்கள். ஆமாம் இது புலிகளுக்கு முற்றுப் புள்ளியல்ல, நிரந்தரமாக புள்ளி வைக்கும் புதிய அத்தியாயம் தான்.

    Reply
  • sun
    sun

    பல்லி நான் ஜெயபாலன் அண்ணா எழுதிய பின்னோட்டத்தில் இருந்தே கேள்வீகள் கேட்டேன் அதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை அவருக்கு உண்டு. நான் அவரின் கட்டுரை எல்லாம் ஒன்றுக்கு 3 தடவை வாசித்து விட்டு தான் பதில் எழுதினேன்………

    Reply
  • chandran.raja
    chandran.raja

    /புலிகளும் புலித்தலைமையும் அழிக்கப்பட்டால் பிரச்சனை தீர்கப்படுமா?/ எனக்கேட்கிறார்கள்.
    நான் சொல்லுகிறேன் ஆம். இலங்கைவாழ் தமிழ்மக்களின் பிரச்சனை தீர்க்கப்படும். முன்னொரு காலத்தில் இனக் கலவரகாலத்தில் மட்டுமிருந்த
    இடப்பெயர்வு அவலம் முற்றுமுழுதாக நீங்கும். விலைவாசியுர்வு ஒர்ரளவுக்காவது குறையுமென்பதை எதிர்பார்கலாம். போக்குவரத்துகள் ஒழுங்காக நடைபெறும்.

    யாழ்பாணம்- கொழும்பு புகையிரப்பாதைகள் புணரமைக்கப்படும். வடமாகாணத்தில்லுள்ள விவசாயிகள் குதுகலமடைவார்கள் .சிறுவர்களும் சிறுமிகளும் தமது எதிர்காலக்கனவை சுமந்தபடி பாடசாலை போய் வருவர். மீனவர்கள் சுகந்திரமாக ஏலோலம் பாடி ஆழ்கடல் சென்று மீன்பிடிப்பர்.
    வயோதிபர்களும் வேலையில்லாதவர்களும் சந்தி-மடம் போன்ற இடங்களில்லிருந்து சுகந்திரமான கலந்துரையாடலை நடத்துவார். சமூகசத்திகளான தொழில் சங்கங்ககளும் விவசாய சங்கங்களும் புதிய உத்வேகத்துடன் பரவிக் கிளைவிடும். புலம்பெயர் தமிழரை …புதியஇடபெயர்வு…….??

    Reply
  • palli
    palli

    சன் இப்போதுநடக்கும் பிரச்சை அரசுக்கும் புலிக்கும்தானே.அதை சொன்னால் நீங்கள் மற்ற அமைப்பு அப்படி செய்யவில்லையா என கேப்பது சரியானதா? புலிகள் தாம்தான் தனிகாட்டு ராசாவாக இருக்க ஆசைபட்டு எல்லோரையும் கலைத்தனர்.இப்போது சொல்லுகிறார்கள்
    மக்கள்தான் தம்மை போராட வைத்ததாக. எந்த மக்கள் அவர்களை தனியாக போராட சொன்னார்கள் என சொல்லுங்கள்.??

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    சண் // ஏன் புலிகளை தவிர்ந்த மாற்று குழுவினரால் ஒன்றினைந்து ஒரு தமிழீல விடுதலை போராட்டத்தை நடத்த முடியாமல் போனது? //
    புலிகள் இவ்வளவுக்கு சர்வாதிகரத்தன்மையைப் பெறவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பொலிஸ்காரணாக்கியதற்கும் மற்ற இயக்கங்களுக்கும் பொறுப்பு உண்டு. ஆனால் அதற்காக புலிகளின் அடாவடித்தனத்தை குறைத்து மதிப்பிட முடியாது. வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை தங்களது அதிகாரம் மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் பிரபாகரனும் அவரது தலைமையும் மிகவும் கவனமாக இருந்தன. புலிகளிடம் அனுமதி பெறாமல் ஒரு விளைட்டுக் கழகத்தைக் கூட இயக்க முடியாத நிலை இருந்ததை மறந்துவிட முடியாது. அப்படிபட்ட ஒரு அமைப்பு செயற்படும் இடத்தில் சுயாதீன குரல்கள் எப்படி சாத்தியம்? புலிகளுடைய தலைமை விட்ட தவறுகளை மறைக்க டக்ளசையும் கருணாவையும் அழைத்துப் பலனில்லை. ஏனெனில் அவர்களை உத்தமர்கள் என்று தமிழ் மக்களோ நானோ எங்கும் குறிப்பிடவும் இல்லை.

    சண் //கிளிநொச்சியை ஆமி பிடித்த உட‌ன் ஏன் மக்கள் புலிகளை பின் தொட‌ர்ந்து முல்லைத்தீவு சென்றார்கள்? எதிர் திசையில் சென்றால் வவுனியா ஏன் அவ‌ர்க‌ள் போக இல்லை? அவ்வளவு மக்களும் போக நினைத்திருந்தால் புலிகளால் கட்டுப்படுத்த முடியாது.//

    புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறாரகள். மக்களை வெளியேறாமல் தடுக்கிறார்கள். அதே சமயம் இலங்கை இராணுவத்தின் (தெரியாத பேய்) செயற்பாடுகளும் மக்களை பாதுகாப்பு வலயங்களுக்குள் செல்வதைத் தடுக்கிறது. அதனால் தான் தெரியாத பேயிலும் பார்க்க தெரிந்த பேய் மேலானது என்று மக்கள் புலிகளுடன் (தெரிந்த பேய்கள்)நகர்கின்றனர் என்று குறிப்பிட்டு உள்ளேன். அதில் தவறு எதுவும் இல்லை என்றே நினைக்கிறேன்.

    நான் கூறியது. //விடுதலைப் புலிகள் இலங்கையில் உள்ள இனவாதம் என்ற நோயின் அறிகுறி வெளிப்பாடு. நோய்க்கான காரணியை தீர்க்காத வரை நோயின் அறிகுறியும் வெளிப்பாடும் இருக்கவே செய்யும்.//

    சண் கூறியது // இதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வாறீங்க? புலிகள் தான் இனவாதிகள் சிங்கள‌ மக்கள் இனவாதிகள் இல்லை சிங்கள அரசு இனவாதி இல்லை மாற்று கட்சியினர் இனவாதிகள் இல்லையா?சிங்கள அரசு இனவாத தாக்குதலை மேற் கொள்ளவில்லையா? நீங்கள் உண்மையில் நினைக்கிறீர்களா புலித் தலைமையையும்,புலியையும் அழித்தால் இலங்கை பிரட்சனை தீர்ந்து விடுமா?தயவு செய்து பதில் அளியுங்கள் நன்றி.//

    முற்றிலும் தவறாக விளங்கிக் கொண்டு உள்ளீர்கள் சண். இலங்கையில் உள்ள அதாவது சிங்கள பேரினவாதம் என்ற நோயின் வெளிப்பாடு தான் புலிகள் என்று தான எனது கூற்று அமைகிறது. அந்த பேரினவாதப் போக்குக்கு முற்றுப் புள்ளி வைக்காமல் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடையாது. புலிகளை அழிக்க முடியாது. அதனால் தான் முல்லைத் தீவு முற்றுப் புள்ளியல்ல என்று குறிப்பிட்டேன். நான் குறிப்பிட்ட விடயத்தைத் தான் நான் குறிப்பிடவில்லை என்று கூறி நிஙக்ள விளக்கி இருக்கிறீர்கள். ஒரே ஒரு வித்தியாசம் நீங்கள் சிங்கள மக்களையும் இனவாதிகளாகப் பார்க்கிறீர்கள். ஆனால் நான் சிங்கள ஆளும் வர்க்கத்தையே இனவாதிகளாகப் பார்க்கிறேன்.

    தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை வையுங்கள் நட்புடன் விவாதிப்போம்.

    த ஜெயபாலன்.

    Reply
  • sun
    sun

    ஜெயபாலன் அண்ணா நீங்கள் சொன்ன மாதிரி புலிகள் இயக்கம் அதிகாரத்தை தங்கள் கையில் அதிகாரத்தை வைத்திருப்பதற்கான காரணம் போராடவென்று புறப்பட்ட மாற்று இயக்கங்கள் மக்களுக்கு செய்த‌ அநியாயமும் அட்டுழியமும் தான் அதனால் புலிகள் மீது மக்கள் நம்பிக்கை வைக்க தொடங்கினர் இன்னும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

    புலித் தலைமை அழிந்தாலும் புலி அழியாது போராட்டம் தொடரும் ஏனென்றால் புலியை பொறுத்த வரையில் போராட்டம் தலைமையில் மாத்திரம் தங்கி இருக்க இல்லை.ஆனால் மாற்று இயக்கங்களை பொறுத்த வரை தலைமையை அழிந்த உடன் இயக்கமே சிதறி விட்டது கேட்டால் புலி அழித்து விட்டது என்று சொல்வார்கள் ஏன் புலியை இவர்களால் அழிக்க முடியாமல் போனது? அந்த காலத்தில் இந்திய அரசும்,றோவும் புளட்,டெலொ ஆகியவற்றுக்கு தான் தமது ஆதரவை அளித்தது அப்படி இருந்தும் புலிவென்றது ஏனெனில் மக்கள் மனதில் புலி இருந்தது.தற்போது புலிகள் வன்னியை விட்டு பின் வாங்கி ஒடுவதற்கான காரணத்தை ஒரு காலத்தில் தெரிவிப்பார் அல்லது காரணத்தை முன் கூட்டியே தெரிவித்தார்களோ எனக்கு தெரியாது.ஆனாலும் புலிகள் தமது பொறுப்பில் இருந்து ஒரு போதும் பின் வாங்குவது இல்லை……………………

    என்னைப் பொறுத்த வரை சிங்கள அரசு மட்டுமல்ல சிங்கள மக்களும் இனவாதிகள் தான் அண்ணா. இன்று வரைக்கும் 80% சிங்கள மக்கள் போருக்கு ஆதரவு தருகிறார்கள். தாங்கள் ஆளும் வர்க்கம் என்ற எண்ணமே அவர்களிடம் மேலொங்கி உள்ளது. சிங்கள மக்களது ஆதரவு இல்லாமல் அரசினால் வெல்ல முடியாது. தங்களுக்குள் அடிபடும் சிங்கள அரசும், சிங்கள மக்களும் தமிழ் மக்களை எதிர்க்கும் விடயத்தில் மட்டும் ஒன்றாக நிற்கும்.
    அங்கு தான் புலி ஒன்றும் செய்யவிடுதில்லை என்ற நொண்டிச் சாட்டு சொல்வார்கள் ஆனால் புலம் பெயர் நாட்டில் இருந்து கொண்டாவது ஏதாவது மக்களுக்கு செய்யலாமே. எப்ப பார்த்தாலும் புலியை குற்றம் சாட்டுவதை விடுத்து, பழசை கதைத்து கொண்டு இருக்காமல் மக்கள் கொல்லப்படும் இந்த நேரத்தில் ஆவது புதிதாக எல்லோரும் இணைந்து ஏதாவது செய்யலாமே.

    Reply
  • padamman
    padamman

    “மக்கள் கொல்லப்படும் இந்த நேரத்தில் ஆவது புதிதாக எல்லோரும் இணைந்து ஏதாவது செய்யலாமே”/சன்
    இங்கு உள்ள மக்கள் செய்ததை (பணம்) அங்குள்ளவர்கள் (புலி) மக்களுக்கு கஸ்டத்தை தவிர ஒன்றும் செய்யவில்லை.

    Reply
  • PLO
    PLO

    சன்,
    அப்ப நீங்களும் சிங்களவர்கள் செய்த பழசை மறந்துவிட்டு புதிதாக ஏதாவது செய்யலாமே.
    பாதிக்கப்கட்டவர்களுக்கு தான் தெரியும் பாதிப்பின் வேதனை.

    Reply
  • damilan
    damilan

    புலிகளின் போராட்டத்தையோ அவர்களின் போர்திறனையோ கொள்கைக்காக உயிரை தியாகம் செய்த போராளிகளையோ மக்களையோ பல கோடிக்கணக்கான சொத்துக்கள் இழப்பு ஏற்பட்டதையோ வெளிநாடுகளில் இருந்து பல மில்லியன் உதவி செய்தவர்களையோ எந்தக் கேள்வியும் கேட்பதற்கு எனக்கு தகுதி இல்லை. எனது ஆதங்கம் என்னவெனில் மேற்குறித்த இழப்புக்கள் அனைத்தையும் இழந்து கடைசியில் தொடக்கப் புள்ளியிலேயே மீண்டும் வந்து நிற்பதுதான் கவலை தருகிறது.

    புலிகளின் தலை(மை)வர் தன்னை யாருமே விமர்சனம் பண்ண அனுமதித்ததில்லை. அவ்வாறு இயக்கத்திற்குள்ளும் விமர்சனம் பண்ணியவர்களை உயிருடன் விட்டதில்லை. அது மாத்தையாவில் ஆரம்பித்து புலித்தேவன் வரையில் நிற்கிறது. இதில் இருந்த தப்பியவர் கருணா மட்டுமே.

    புலிகளின் தலைவரிடம் சுயமாக பேசுவதற்கோ கருத்துக்களை சொல்வதற்கோ உயர்மட்டத்தில் யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. இருப்பவர்கள் தலைவரின் கட்டளைகளை மட்டுமே கேட்பவர்கள் எதிர் கருத்துச் சொன்னவன் துரோகி/றோ/ தண்டனை கொலை.

    புலிகளின் தலைவர் எடுக்கும் முடிவு எல்லாம் 100 வீதம் சரியாக இருந்திருக்குமா? நாம் வென்றபோது கைதட்டினோம் தோற்கும் போது விமர்சிக்கிறாம். வெல்லும் போது விமர்சித்தவர்கள் துரோகிகள் என்றார் கைதட்டினோம் ஏற்றோம். தோல்வி வரவே கூடாது என்பதற்காக அவர்கள் விமர்சித்தார்கள் அன்று வெற்றியின் போதையில் இருந்தவருக்கு தெரியவில்லை ஆனால் இன்று ……….

    இனவாதத்திற்கு என்ன வரைவிலக்கணம்? எந்த இனத்தில் இனவாதம் அதிகம் உள்ளது? புலிகள் பேசிய இனவாதத்திற்கு வடகிழக்கில் 22 எம்பிக்களைப் பெற முடிந்தது. சிங்களவர்களின் உரிமையை மட்டுமே பேசிய சிங்கள உரிமைக் கட்சிக்கு 8 ஆசனம்தான் கிடைத்தது. ஒப்பீட்டு ரீதியால் எந்த மக்களில் இனவாதிகள் அதிகம் ?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    விழிப்புணர்வு என்றால் இதுவல்லவோ !

    Reply
  • chandran.raja
    chandran.raja

    டமிலன்! நீங்கள் சொல்வது நியாமானதே!! ஜாதிககெல உறுமயவுகும் ஜே.வி.பியும் இனவாதம் கதைப்பதில் புலிகள் என்றுமே குறைந்தவர்கள் அல்ல. அவர்கள் கதைப்பதோடு மட்டும் இன்று வரை நிறுத்திக்கொண்டார்கள். புலிகள் அவர்களையும் மிஞ்சி பலபடிகள் ஏறிவிட்டார்கள்.

    அனுராதபுர -புத்தபிக்குகள் கொலை காத்தான்குடி பள்ளிவாசல் கொலைகள் புலிகளைப்போல மதவெறியர்களும் இனவெறியர்களும் உலகத்திலேயே முதல்மையான வெறியர்கள் என இனம்காட்டுகின்றன. இவற்றிக்கெல்லாம் ஓர்அணியில்லிருந்து புலிகளுக்கெதிராக அதாவது இந்த சமூக-
    விரோதிகளுக்கெதிராக குரல் கொடுத்திருந்தால் வன்னிமக்கள் இவ்வளவு இழப்புகளையும் துன்பங்களையும் சந்தித்திருக்க மாட்டார்கள். பாடங்களை இனிமேலாவது கற்றுக் கொள்வோமா…..?

    Reply
  • santhanam
    santhanam

    எனது வீட்டு முற்றத்தில் எவனாக இருந்தாலும் அவன் கையில் ஆயுதம் இருந்தால் அவனைதான் நான் ஆரிப்பேன். இது தான் தமிழ்மக்களின் நிலை.

    Reply
  • palli
    palli

    //எவனாக இருந்தாலும் அவன் கையில் ஆயுதம் இருந்தால் அவனைதான் நான் ஆரிப்பேன்//
    ராணுவமாக இருந்தாலுமா?? என்ன இது
    வடிவேலு பாணி பேச்சு.

    Reply
  • ashroffali
    ashroffali

    வன்னியின் இன்றைய களநிலவரமானது புலிகளின் ஆளுகையின் முதுகெலும்பு முறிக்கப்பட்ட செய்தியை பட்டவர்த்தனமாக எடுத்தியம்பிக் கொண்டிருக்கின்றது. யார் என்ன சொன்னாலும் புலிகளின் இருப்பு இனி கேள்விக் குறியாகி விட்டதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். அதுதான் யதார்த்தம்.

    மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் இன்னுயிர்களைப் பலிகொடுத்து எதை நாம் சாதித்துள்ளோம் என்று பின்னோக்கிய நினைவுமீட்டல்களின் போது இதயம் கனத்து வெடித்துவிடும் ஒரு வேதனை மேலெழுகின்றது. கண்ணிமைகள் போடும் அணை தாண்டி ஒரு கண்ணீர் ஆறு பெருக்கெடுத்தோடுகின்றது.

    புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக இருந்தவர்கள் மட்டுமே தற்போதைய கணக்குப்படி சுமார் முப்பதாயிரம் வரையில் உயிரிழந்திருக்க ஏனைய இயக்கப் போராளிகள் எத்தனை பேர் என்பது இன்னும் திரட்டப்படாத தகவல்களாக வெளிச்சத்துக்கு வராமல் இருக்கின்றது. அதற்கு மேலாக புலிகளால் படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மலைக்க வைக்கும் அளவுக்கு உள்ளது. அது தொடர்பில் கூட இதுவரை ஒரு உறுதியான ஒரு கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. அதற்கு மேலாக உள்நாட்டில் இடம்பெயர்ந்து அவல வாழ்க்கையை கழித்துக் கொண்டிருப்போர் மற்றும் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து அகதி வாழ்க்கை வாழ்வோர் என்று இன்னும் பல இலட்சம் மக்களின் வாழ்க்கை கண்ணீரும் வேதனையும் கலந்து கழிந்து கொண்டிருக்கின்றது.

    ஒரு காலத்தில் பச்சைப் பசேலென கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்திருந்த பூநகரி உள்ளிட்ட வடக்கின் வயல் வெளிகள் இன்று புதர் மண்டிய பற்றைக் காடுகளாக வரண்டு போய் கிடக்கின்றது. திராட்சையும் வெங்காயமும் கறுத்தக் கொழும்பானுமாய் விளைந்து வளம் கொழித்த பிரதேசங்கள் இன்று முட்புதர்களும் கண்ணி வெடிகளும் விதைக்கப்பட்ட பிரதேசங்களாக ஜனசஞ்சாரமற்று வெறிச்சோடிப் போயுள்ளன. ஆனையிறவின் உப்பளம் அடையாளமே தெரியாமல் அழிக்கப்பட்டு விட்டது. பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மற்றும் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை என்பன இருந்த இடமே தெரியவில்லை.மூன்று தசாப்த கால குறுகிய இடைவெளிக்குள் ஒரு பிரதேசமே தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டுள்ளதைப் போன்ற ஒரு பிரமை ஏற்படுகின்றது. பார்க்கின்ற கண்கள் பனித்து நெஞ்சம் கனத்து கண்ணீர் நம்மையறியாமலேயே வழிந்தோடுகின்றது. வைரம் பாய்ந்த உள்ளமும் முறுக்கேறிய உடம்புமாய் உழைப்பின் இலக்கணமாய் வாழ்ந்து பிரதேசத்தின் செல்வச் செழிப்பையும் செழுமையான வனப்பையும் கட்டியெழுப்புதவற்காய் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்து மறைந்து போன எங்கள் மூதாதையரை நினைக்கும் போது கதறியழ வேண்டும் போல ஒரு கவலை மேலோங்குகின்றது. அவார்களின் கனவுகள் அனைத்தும் இன்று சுக்குநூறாகிப் போய் அவர்களின் உழைப்பில் கட்டியெழுப்பப்பட்ட வளமான பிரதேசம் இன்று வனப்பிழந்து கிடக்கின்றது. கலாவாவியின் தண்ணீர்த் திவலைகளை அள்ளி இதுதான் என் சொத்து என்று பெருமை பேசிய தாதுசேனனை மிஞ்சிய உழைப்பாளிகள் எங்கள் முன்னோர்கள். வரண்ட வடபிரதேசத்தை இலங்கையின் வளம் கொழிக்கும் பூமியாக மாற்றியவர்கள். பொன் கொழிக்கும் பூமியாக்கும் கனவுடன் அல்லும் பகலும் உழைத்து மறைந்து போனவர்கள். அதன் காரணமாக ஒரு காலத்தில் வடக்கின் அறுவடைகள் மேலதிக விளைச்சல்களாக தென்னிலங்கைக்கு அனுப்பப்பட்டு கைநிறைய வருமானம் கிட்டிய வளமான காலத்தை நினைத்தால் இப்போது பெருமூச்சுத் தான் வருகின்றது. எல்லாமே ஒரு கனவு போலத்தான் இருக்கின்றது. அந்த நினைவுகள் கூட கலைந்து போய்க் கொண்டிருக்கின்றது.

    மாட மாளிகைகளும் அரண்மனையையொத்த மாடி வீடுகளுமாய் தலை நிமிர்ந்த அந்தப் பிரதேசம் இன்று வானிலிருந்து பார்க்கும் போது பொட்டல் வெளிகளாயும் ஒற்றைத் தூண்களாயும் காட்சியளிப்பதைக் காணும் போது எனக்குள் ஏற்பட்ட வேதனையை வேறெவரும் அனுபவித்திருப்பரோ நான் அறியேன். ஆனால் உழைக்கும் மக்களின் உறைவிடமாக அடையாளம் காணப்பட்ட அந்த மண் இன்று தலைவிரி கோலமாய் அழுது புலம்பும் அபலையின் நிலையையொத்த பொட்டல் காடாகிப் போயுள்ளது. ஒரு காலத்தில் நாட்டின் தானிய உற்பத்தியின் தன்னிறைவானது வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேச அறுவடைகளில் தான் தங்கியிருந்தது. அவ்வாறாக முழு நாட்டுக்கும் உணவு வழங்கிய மக்கள் இன்று ஒரு நேர உணவுக்கே வழியில்லாமல் அல்லாடுகின்றனர்.பொங்கிப் போட்டு பலரின் பசியாற்றிய அந்த வள்ளல் குணம் மிக்க மாந்தர் இன்று தொய்ந்து போன உடம்பும் தளர்வான நடையுமாய் பசியால் சோர்ந்து நிற்கும் காட்சி கண்டு இதயம் பிழிந்தெடுக்கப்பட்டது போன்று இரத்தக் கண்ணீர் வடிக்கின்றது.

    இந்த துன்பங்களும் துயரங்களும் எதனால் வந்தது? கனவுகளுடன் கட்டியெழுப்பிய பிரதேசத்தைக் கைவிட்டு கண் காணாத தேசத்தில் புலம்பெயர்ந்து வாழும் அவலம் எதனால் எதிர்கொள்ள நேரிட்டது?

    தமிழ் மக்களுக்கென தனியானதோர் தாயகத்தைப் பெற்றுத் தர ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டமே இன்று தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் அனைத்து அவலங்களுக்குமான தொடக்கப்புள்ளியாக அமைந்தது. போராட்டத்தின் இலட்சியம் நியாயமானது. அதன் காரணமாகவே போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் தமிழர் மட்டுமன்றி முஸ்லிம்களும் ஏன் ஒரு சில சிங்களவர்களும் கூடு விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து ஆயுதமேந்தியிருந்தனர்.ஆனாலும் என்றைக்கு மாற்றுக் கருத்துள்ளவர்களும் சக இயக்கங்களும் அழிக்கப்பட்டு தாம் மட்டுமே ஏக பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் என்ற பாசிச சித்தாந்தம் தழைத்தோங்கத் தொடங்கியதோ அன்றைக்குத்தான் தமிழ் மக்களின் தலைவிதி அவல வாழ்க்கையாக ஆரம்பித்தது. ஏனைய இனங்களின் துயரங்களும் ஆரம்பமானது.

    தனியான தாயகம் என்ற இலட்சியத்துக்குப் பதிலாக ஏக பிரதிநிதித்துவம் என்ற வெறிதான் இவ்வளவு அவலங்களுக்கும் ஆரம்பம்.இப்போதைக்கு பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலைதான். இதற்கெல்லாம் காரணம் பிரபாகரனின் அதிகார வெறிதான். தான் மட்டுமே தலைவன் என்ற பாசிச சித்தாந்தம்.

    புலிகள் உண்மையிலேயே தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கலை நாடியிருந்தார்கள் என்றால் அதற்கான எத்தனையோ சந்தர்ப்பங்கள் வாய்த்திருந்தன. திம்புப் பேச்சுவார்த்தை தொடக்கம் இலங்கை- இந்திய ஒப்பந்தம் என அனைத்து நடைமுறைச் சாத்தியமான வழிகளையும் புறம் தள்ளி நடந்த செயற்பாடு புலிகளின் வரலாறாகும். அதன் பின்பு கூட கடந்த சந்திரிக்கா ஆட்சியின் கீழ் கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்களின் பங்களிப்புடன் ஒரு தீர்வுப் பொதி உருவாக்கப்பட்டது. சுதந்திர இலங்கையில் உருவாக்கப்பட்ட தீர்வுப் பொதிகளில் தமிழ் மக்களுக்கு அதி கூடிய அதிகாரப் பரவலாக்கலுக்கான வரைபைக் கொண்டிருந்தது அந்த தீர்வுப் பொதி ஒன்றுதான். அதனைக் கூட புலிகள் நிராகரித்தனர்.அதனைத் தயாரித்த கலாநிதி நீலன் திருச்செல்வத்தையே படுகொலை செய்தனர்.ஆனாலும் பின் வந்த காலமொன்றில் புலிகளே அந்த தீர்வுப் பொதி பற்றி பாராட்டியிருந்தனர்.தூரதிருஷ்டியற்ற தலைமைத்துவம் என்பதற்கான அடைமொழி பிரபாகரனுக்குப் பொருத்தமானதாக அமைய இவ்வாறான தவறுகளே காரணமாக அமைந்தன. இல்லாது போனால் இன்றைக்கு அவர் அதிகாரம் கொண்ட ஒரு அரசியல்வாதியாக வலம் வந்திருக்கலாம். உலக நாடுகளின் துணையுடன் தமிழ் மக்களுக்கான உரிமைகள் அபிவிருத்திகளை அடைந்திருக்கலாம். ஆனால் இனியொருபோதும் அப்படியானதொரு சந்தர்ப்பம் வாய்க்கப் போவதில்லை.நாடி வந்த சந்தர்ப்பங்கள் அனைத்துமே எம்மால் தவறவிடப்பட்டு விட்டன.

    இலங்கையைப் பொறுத்தவரை ஆளும் கட்சியுடன் நல்லுறவான அரசியல் போக்குத்தான் எங்களைப் போன்ற சிறுபான்மைச் சமூகங்களுக்கு என்றும் நன்மை பயக்கும்.அதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக மறைந்த பெருந்தலைவர்களான செளமியமூர்த்தி தொண்டமான் மற்றும் எம்.எச்.எம்.அஷ்ரப் போன்றோரைக் குறிப்பிடலாம். அவர்கள் தங்களுக்குக் கிட்டிய அதிகாரத்தைப் பயன்படுத்தி மலைக்க வைக்கும் சேவைகளை ஆற்றிச் சென்றுள்ளனர்.

    2004ம் ஆண்டின் பொதுத் தேர்தல் அல்லது 2005ம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல் போன்ற சந்தர்ப்பங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் ஆளும் கட்சியை ஆதரித்திருந்தால் இன்றைய அரசாங்கத்தின் மூலமாக இன்னும் எண்ணற்ற பயன்களைப் பெற்றிருக்கலாம்.குறைந்த பட்சம் ஜனாதிபதி நீட்டிய நேசக்கரத்தை பிரபாகரன் பற்றியிருந்தால் இன்றைக்கு தமிழ் மக்கள் இவ்வளவு அவலத்தை எதிர்கொள்ள நேரிட்டிருக்காது.ஆக எங்கள் தலைவர்களாக நாங்கள் ஏற்றுக் கொண்டவர்கள் தான் எங்கள் அவலங்களுக்குக் காரணமாக அமைந்து விட்டார்கள்.

    சிறுபான்மை அரசியல் என்பது ஒரு போதும் சவால் விடும் அரசியலாக இருக்கலாகாது. அரவணைப்பான அரசியல் போக்கே எங்களுக்குச் சாதகமானது. வெத்து வேட்டு சவால் தான் புலிகள் இன்றைக்கு உயிர் தப்பினால் போதும் என்று தலைதெறிக்க ஓட வைத்துள்ளது. எனவே இனியாவது நாம் உண்மையைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக புலிகள் இனி மீண்டு வருவார்கள் என்று எவராவது எதிர்பார்த்தால் அது முட்டாள்தனமாகவே இருக்கும். அப்படியான ஒரு இராணுவ ஆற்றலை புலிகள் இனி ஒரு போதும் எட்டவே முடியாது. அது கனவாகவே இருக்கும்.

    புலிகளைப் பொறுத்தவரை அவர்களின் முதுகெலும்பு முறிக்கப்பட்டு விட்டது. இயக்கத்தின் கட்டமைப்பு சிதைக்கப்பட்டு விட்டது. அதற்கு மேலதிகமாக புலிதேவன் மற்றும் இராசையா இளந்திரையன் சூசை போன்றோர் அண்மைக்கால உட்கருத்து மோதல் காரணமாக புலிகள் இயக்க சிறையில் வாடுகின்றார்கள்.ஆக இனி ஒருபோதும் முன்னயை புலிகள் அமைப்பாக அவர்கள் எழுந்திருக்க முடியாது. எனவே ஜனநாயக அரசியல் தான் எங்களுக்கான எதிர்கால வழிமுறையாக இருக்க வேண்டும்.ஆயுதப் போரட்டம் என்பது எங்கள் கொஞ்ச நஞ்ச உரிமையையும் அழித்து விட்டது.

    ஆனாலும் புலிகளால் அழிக்கப்பட்ட மற்றும் பலி கொடுக்கப்பட்ட இன்னுயிர்களை நினைத்து வேதனையாகத் தான் இருக்கின்றது. அவர்களின் இலட்சியக் கனவுகள் எல்லாம் ஒரு தனி மனிதனின் பேராசை காரணமாக கலைந்து போய்விட்டது. ஆயினும் எங்கள் மக்களின் விடிவுக்காக தங்கள் இன்னுயிரை இழந்த அனைத்து மக்களுக்கும் எனது அஞ்சலிகள்.

    Reply
  • santhanam
    santhanam

    1995 ம் ஆண்டு பி.பிசி தமிழ்ஒசைக்கு யாழ் ஆக்கிரமிப்பின் பின் யாழில் இருந்து ஒரு பொதுமகனின் குரல்தான். வடிவேல் அல்ல பல்லி

    Reply
  • palli
    palli

    //ஆயினும் எங்கள் மக்களின் விடிவுக்காக தங்கள் இன்னுயிரை இழந்த அனைத்து மக்களுக்கும் எனது அஞ்சலிகள்.//
    இதில் மகிந்தாவால் கொல்லபடும்(தற்போது) தமிழரும் அடக்கமோ. அல்லது புலியால் கொல்லபட்டவர்களுக்கு மட்டுமா? பார்த்து மகிந்தா குடும்பம் கோவிக்க போகிறார்கள்.

    Reply