Friday, September 17, 2021

இலங்கை அரசும் புலிகளும் 200 000 – 300 000 தமிழர்களை ‘guinea pigs’ ஆக நடத்துகின்றனர் – பொறுப்பற்றவர்களின் யுத்தம் : த ஜெயபாலன்

Wanni Childஇப்போதுள்ள நிலையில் யுத்தத்தில் சிக்குண்ட தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் :
1. யுத்தம் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அல்லது
2. அரச படைகளும் புலிகளும் குறைந்த பட்சம் சில தினங்களுக்காவது யுத்தத்தைத் தவிர்த்து மக்கள் பாதுகாப்பாக பாதுகாப்பு வலயங்களுக்கு செல்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
3. பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதல் நடத்துவதை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
4. பாதுகாப்பு வலயங்களை சர்வதேச மனிதாபிமான அமைப்புகளின் பொறுப்பில் விடவேண்டும்.
5. விடுதலைப் புலிகளும் பாதுகாப்பு வலயங்களுக்கு மக்கள் செல்வதை அனுமதிக்க வேண்டும்.
6. பாதுகாப்பு வலயங்களுக்கு செல்வதற்கான பாதுகாப்பான வழியை புலிகளும் அரச படைகளும் ஏற்படுத்த வேண்டும்.

கட்டுரைக்கான சில ஆதாரக் குறிப்புகள்:

._._._._._.

“வன்னி வாழ் மக்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் எனக் குற்றம் சாட்டும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள், வன்னிக்கு வந்து நிலைமையை நேரடியாகப் பார்க்க வேண்டும் என நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்” 

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், 27 ஜனவரி 2009
– – – – –

”சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு வன்னியில் நடத்தி வரும் மனிதப் பேரவலத்தைக் கண்டித்தும் அனைத்துலகத்திற்கு உணர்த்தும் வகையிலும் லண்டனில் நாளை மறுநாள் சனிக்கிழமை நடைபெறவுள்ள மாபெரும் ஊர்வலத்தில் லண்டன் வாழ் அனைத்துத் தமிழ் மக்களும் கலந்து கொண்டு பேரெழுச்சியைக் காட்ட வேண்டும்”

எஸ்.ஜெயானந்தமூர்த்தி, TNA MP, 28 ஜனவரி 2009

2002 நிலைமை வந்ததன் பின்னரே பேச்சுவார்த்தை! நிச்சயமாக தனி அரசு தான் தீர்வு!!! – ரிஎன்ஏ எம்பி ஜெயானந்தமூர்த்தியுடன் நேர்காணல் : த ஜெயபாலன் )
– – – – –

Liberation Tigers of Tamileelam (LTTE)’s Political Office on Wednesday categorically denied a news originated in Colombo government’s media, the Daily News, and was highlighted in the International media that LTTE prevented UN convoy transporting injured patients from Mullaiththeevu district to Vavuniyaa hospital. Director of LTTE’s Peace Secretariat S. Puleedevan described the news as mischievous. “In fact, the LTTE has been repeatedly urging the ICRC to facilitate unhindered transportation of injured civilians who need urgent attention and also for the provision of medical facilities locally,” Mr. Puleedevan told TamilNet Wednesday night.

TamilNet, 28 January 2009
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28187
– – – – –

Amnesty has received information that the LTTE have, in at least one instance, prevented injured civilians from moving to safer areas or accessing medical care, an act that could constitute a war crime… A convoy of 24 vehicles, arranged by the Red Cross and the UN to transport up to 300 wounded people, including 50 children, was stopped from leaving the area by the LTTE… The government had declared ’safe zones’ to allow civilians to seek shelter, but information made available to Amnesty International indicates that several civilians in the so-called safe zone have been killed or sustained injuries as a result of artillery bombardment.

Yolanda Foster, Amnesty International’s Sri Lanka researcher, 29 January 2009
http://www.amnesty.org.uk/news_details.asp?NewsID=18045
– – – – –

The United Nations in Sri Lanka will attempt for the second time in three days to help evacuate by convoy hundreds of critically wounded civilians from the war-torn north of the country, including at least 50 seriously injured children. The convoy has been trapped for days in the town which lies just across the lines of confrontation in Tamil Tiger-controlled territory. If permission is granted by the Liberation Tigers of Tamil Eelam and, if a lull in fighting permits, the United Nations convoy will cross the frontline at midday Thursday. The injured will then be transported to Ministry of Health hospitals in Vavuniya to help treat their injuries and wounds.

Marie Okabe, Deputy Spokesperson for the Secretary-General, 28 January 2009
http://www.un.org//News/briefings/docs/2009/db090128.doc.htm
– – – – –

The Sri Lankan government and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) should take immediate steps to allow thousands of civilians trapped in a shrinking conflict zone safe passage and to ensure that they receive desperately needed humanitarian aid, Human Rights Watch said today. Intense fighting between the Sri Lankan army and the separatist LTTE has caught an estimated 250,000 civilians in deadly crossfire, and in the past week civilian casualties have risen dramatically.

The government-ordered September 2008 withdrawal of all UN and nongovernmental humanitarian organizations (with the exception of the ICRC and Caritas) from the Vanni plunged the region into a serious humanitarian crisis, with acute shortages of food, shelter, medicine, and other humanitarian supplies. The humanitarian crisis was documented by Human Rights Watch in its December 2008 report, “Besieged, Displaced, and Detained.” A companion report, “Trapped and Mistreated,” focused on LTTE abuses against the civilian population in the Vanni.

Brad Adams, Asia director at Human Rights Watch. January 28, 2009
http://www.hrw.org/en/news/2009/01/28/sri-lanka-urgent-action-needed-prevent-civilian-deaths
– – – – –

The Office of the Resident Coordinator in Sri Lanka has issued its strongest possible protest to the Liberation Tigers of Tamil Eelam, or LTTE, for their refusal to allow UN national staff and dependents to return from the Vanni region with the present UN convoy. The staff were part of a UN convoy which travelled to the Vanni on 16 January, delivering urgent food and emergency supplies to displaced populations trapped in the midst of fighting in the Vanni. Due to fighting between the LTTE and Government forces, the convoy has only been able to move safely today. The UN calls on the LTTE to meet their responsibilities and immediately permit all UN staff and dependents to freely move from this area, as its denial of safe passage is a clear abrogation of their responsibility under international humanitarian law.

Michèle Montas, Spokesperson for the Secretary-General. 22 january 2009
http://www.un.org//News/briefings/docs/2009/db090122.doc.htm

குறிப்பு: யுத்தப் பகுதியில் காயமடைந்த பொது மக்கள் (50 வரையான சிறார்கள் உட்பட) அப்பகுதியில் இருந்து ஐநா வாகனங்களில் வெளியே கொண்டுவரப்பட்டு உள்ளதாக ஐநா பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச அழுத்தங்களை அடுத்து இன்று (ஜனவரி 29) காயப்பட்டவர்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த நான்கு வாரங்களில் மட்டும் 220 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் நூற்றுக் கணக்காணவர்கள் காயப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
._._._._._.

இலங்கை அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான யுத்த பிரதேசத்தின் எல்லைகள் குறுகிக் குறுகி தற்போது சில பத்து மைல்களுக்குள் யுத்தம் குறுக்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள மிகப்பெரிய ஆபத்து இந்த குறுகிய சுற்றளவுக்குள் 200 000 – 300 000 பொதுமக்கள் அகப்பட்டு உள்ளனர். புலிகள் வடக்கு கிழக்கின் நிலப் பிரதேசங்களை பெரும்பாலும் முழுமையாக இழந்த நிலையில் இந்த சில பத்து மைல் சுற்றளவுக்குள் இலங்கை அரச படைகளும் புலிகளும் யுத்தத்தைத் தொடர்கின்றனர்.

வடக்கு கிழக்கின் பெரும்பாலான பகுதிகளை போர்த்தந்திரத்துடன் மெது மெதுவாக தங்கள் ஆயுத தளபாடங்களுடன் நிதானமாக பின்வாங்கிய புலிகள் தற்போது மிகக் குறுகிய மக்கள் செறிவான பகுதியில் ‘போர்த் தந்திரத்துடன்’ யுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். ( முல்லைத்தீவு முற்றுப் புள்ளியல்ல! புலிகளின் புதிய அத்தியாயம்! : த ஜெயபாலன் )

இலங்கை அரசு யுத்தத்தில் காட்டும் வேகத்தில் தமிழ் மக்களின் மனித அவலம் பற்றி அக்கறை கொள்ள மறுக்கிறது. புலிகளுக்கு எதிரான தாக்குதலைத் தொடர முன் யுத்தத்தில் அகப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தத் தவறியுள்ளது. பாதுகாப்பு வலயத்தை அறிவித்த இலங்கை அரசு அப்பகுதிகளை சர்வதேச உரிமை அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட வில்லை. மேலும் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலேயே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. 200 000 – 300 000 மக்கள் உள்ள பகுதியில் ஒரு நாட்டின் சட்டபூர்வமான அரசு யுதத்தை முடக்கி விட்டிருப்பது அந்த மக்களை (human guinea pigs) பரிசோதணைக் கூட விலங்குகளாக்கி உள்ளனர்.

‘வன்னி மக்களும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைப்பேன்’ என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் ‘எமது பாதுகாப்பில் வாழ்வதை விரும்பியே கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெயர்ந்து மக்கள் எம்முடன் வருகின்றனர்’ என்று புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா நடேசனும் வாய்த் தர்க்கம் புரிகின்றனர். யுத்தத்தில் அகப்பட்டுள்ள மக்களின் நிலைபற்றி எவ்வித உறுத்தலும் இன்றி அந்த மக்களை யுத்த பிரதேசத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கம் இன்றி வெறும் வார்த்தை ஜாலங்களும் மறுப்புகளும் மட்டுமே இரு தரப்பில் இருந்தும் வந்து உள்ளது. ( தொடரும் யுத்தமும் வன்னி மக்களின் ஏக்கமும் : த ஜெயபாலன் )

இலங்கை அரசுக்கு வேண்டியது விடுதலைப் புலிகளின் முழுநிலப்பரப்பையும் கைப்பற்றி அரச கட்டுப்பாட்டுக்குள் அவை வந்துவிட்டது என்ற செய்தி. அந்தச் செய்தி சுதந்திர தினத்திற்கு முன்னதாகவே வந்துவிட வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது. புலிகளைப் பொறுத்தவரை தங்களுடைய சகல பிரதேசங்களையும் இழந்தவர்கள் இந்த மக்களை வைத்துக் கொண்டு ‘ஒரு யுத்த நிறுத்தம்’, ‘ஒரு யுத்த பேரம்’ நடத்தி ‘வீழ்ந்தும் பிரபாவின் மீசையில் மண்படவில்லை’ என்று எழும்புவதற்கான ஒரு வாய்ப்பு. இந்த பொறுப்பற்ற யுத்தத்தில் ஈடுபட்டவர்களின் நலன்களுக்கு 200 000 – 300 000 மக்கள் பணயம் வைக்கப்பட்டு உள்ளனர். இதில் இருதரப்பினருமே குற்றவாளிகள் தான்.

இலங்கை அரசு சட்ட ரீதியான ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்ற அடிப்படையில் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புடையது. புலிகளைப் பயங்கரவாதிகள் என்று குற்றம்சாட்டும் அரசு, தான் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடாமல் சர்வதேச விழுமியங்களுக்கு அமைய செயற்பட வேண்டும். ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் அவர் அனைத்து ஜனநாயக விழுமியங்களையும் மீறி ‘அரசியல் தாதா’வாகவே செயற்படுகிறார். புலிகளின் இறுதிக் கோட்டையான முல்லைத் தீவையும் கைப்பற்றி தன்னை ஒரு துட்டகைமுனுவாக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முற்பட்டு உள்ளார்.

புலிகளைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று தங்களைத் தாங்களே பிரகடனப்படுத்தி ஈழத் தமிழர்களை ஆள்வதற்கான உரிமை தங்களுக்கு மட்டுமே உண்டென்று மார் தட்டியவர்கள். அப்படியானால் இலங்கை அரசிலும் பார்க்க ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு அவர்களுடையது. ஆனால் இன்று அந்த மக்களைப் பணயம் வைத்து தங்களது மீசையில் மண்படவில்லை என்று காட்ட முற்பட்டு உள்ளனர். தமது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிலப்பரப்பில் இருந்தும் பின்வாங்கிய புலிகள் மக்கள் செறிந்துள்ள பகுதிகளுக்குள் பின்வாங்காமல் நின்று தாக்குவதோ அல்லது பதில் தாக்குதல் நடத்துவதோ எந்த விதத்திலும் அந்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாது. ‘சிங்கள அரசு தமிழ் மக்களை நரபலி செய்கிறது’ என்று முன்னாள் கூட்டணித் தலைவர்கள் மேடையில் பேசுவது போல ஐபிசியில் செய்தி வாசிக்கவே இந்த தாக்குதல்கள் உதவும். இழப்புகளை அரசியலாக்கும் மூன்றாம்தர அரசியலே தற்போது புலிகளின் கடைசி ஆயுதமாக மாறி உள்ளது. ( தவறிப் போகும் பிரபாவின் தலைமை : த ஜெயபாலன் )

இந்த யுத்த பிரதேசத்திற்குள் சிக்குண்ட ஒவ்வொரு பொதுமகனதும் பொது மகளதும் இழப்புக்கும் அவலத்திற்கும் இலங்கை அரசபடைகளும் புலிகளுமே பொறுப்பு. யார் எங்கிருந்து தாக்குதல் நடத்துகிறார்கள். யார் பதில் தாக்குதல் நடத்துகிறார்கள் என்ற விசாரணை இரண்டாம் பட்சமானது. யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினருமே இடையில் சிக்குண்ட மக்கள் பற்றி எவ்வித அக்கறையும் கொண்டிருக்கவில்லை என்பது சுயாதீன அமைப்புகளின் அறிக்கைகளில் இருந்து தெரியவருகிறது. சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் அறிக்கைகள் இரு தரப்பினரதும் பொறுப்பற்ற நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி உள்ளன.

இதற்கிடையே புலம்பெயர் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில் திரண்டு இலங்கை அரசின் மீது தங்களது ஆக்ரோசமான கண்டனத்தை தெரிவித்து உள்ளனர். அவர்களுடைய கோபம் நியாயமானது. அது இலங்கை அரசுக்கு எதிராக அமைந்ததிலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.

ஆனால் இந்த எதிர்ப்புகளை ஒழுங்கு செய்பவர்கள் விடுதலைப் புலிகளாக அல்லது பெரும்பாலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதராவனவர்களாக இருப்பதாலேயே அந்த எதிர்ப்பு பலமிழந்து போய்விடுகிறது. அந்த எதிர்ப் நடவடிக்கைகளின் போது வைக்கப்படும் கோசங்கள் மக்கள் நலன்சார்ந்ததாக இல்லாமல் புலிகளின் நலன் சார்ந்ததாகவே அமைந்துவிடுகிறது. புலிக் கொடியும் வே பிரபாகரனின் உருவப்படத்தையும் தூக்கிச் சென்று மனித உரிமைகள் பற்றி கதைக்கின்ற அளவுக்கு வே பிரபாகரனினதோ புலிகளினதோ மனித உரிமைப் பார்வை ஒன்றும் மெச்சத்தக்கது அல்ல. ‘புலிகளும் தமிழ் மக்களும் வேறு வேறல்ல. புலிகள் தான் தமிழ் மக்கள். தமிழ் மக்கள் தான் புலிகள்’ என்று கதையளப்பது யுத்தத்தில் சிக்கியுள்ள தமிழ் மக்களை ஆபத்தில் தள்ளவே வழிவகுக்கும்.

லண்டனில் ஜனவரி 31 அன்று பிரித்தானிய தமிழர் பேரவை STOP SRI LANKA’S GENOCIDE OF TAMILS என்ற தலைப்பில் மாபெரும் ஊர்வலம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஜனவரி 31 மதியம் ஒரு மணிக்கு மில்பாங்கில் ஆரம்பிக்கும் ஊர்வலம் ரெம்பிள் பலசில் முடிவடைகிறது. ‘We shall gather to fight for our rights’  என்று இந்த எதிர்ப்பு ஊர்வலத்திற்கு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்தள்ளது. ஜனவரி 27 அன்று பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் லோட் மலோச் பிறவுண் வெளியுறவுச் செயலர் மில்பாங்க் ஆகியோருடன் பிரித்தானியன தமிழர் பேரவையினர் ஒரு சந்திப்பை நடத்தி இருந்தனர். அச்சந்திப்பும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. பிரித்தானிய அரசு இலங்கை அரசின் செயற்பாடுகளைக் கண்டிக்க தயாராக இருக்கவில்லை. வெளியுறவு அமைச்சகம் ஜனவரி 21ல் வெளியிட்ட அறிக்கை தொடர்பாகவும் பிரித்தானிய தமிழர் பேரவை அதிருப்தியைத் தெரிவித்து இருந்தது. ( பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் அறிக்கைக்கு பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம் )

Protest_Swissபிரித்தானிய தமிழர் பேரவை தமிழ் மக்களின் சுயாதீனக் குரலாக அல்லாமல் புலிகளின் குரலாகச் செயற்படுகிறது என்ற குற்றச்சாட்டு அது ஆரம்பிக்கப்பட்டது முதல் இருந்து வருகிறது. ( பிரித்தானிய தமிழ் போறமும் அதன் அரசியலும் : த ஜெயபாலன் ) இலங்கை அரசுக்கு குறையாத வகையில் விடுதலைப் புலிகளும் மனித உரிமை மீறல் செய்துள்ள நிலையில் சுயாதீனமாக அல்லாமல் புலிகள் சார்ந்து இயங்கும் எந்த அமைப்பினதும் நியாயத்தன்மை அடிபட்டுப் போவது இது முதற்தடவையல்ல. இந்தப் பாடத்தை புலம்பெயர் தமிழ் அமைப்புகள் விளங்கிக்கொள்வதாக இல்லை. (  ”புலிகளுக்கும் தமிழீழம் வேணும். பிரிஎப் க்கும் தமிழீழம் வேணும். ஆனால் புலிகளின் மெதடோலஜியை பிரிஎப் சஸ்கிறைப் பண்ணவில்லை” சுரேன் சுரேந்திரனுடன் நேர்காணல் : த ஜெயபாலன்)

காசாவில் இஸரேல் குண்டுகளைப் பொழிந்து பாலஸ்தீனியர்களைக் கொன்றொழித்த போது யாரும் ஹமாஸின் தடையை நீக்கச் சொல்லிக் கேட்கவில்லை. ஹமாஸ் தலைவர்களின் படத்தையும் ஹமாஸின் கொடியையும் தாங்கி ஊர்வலம் செய்யவில்லை. இஸ்ரேலுக்கு எதிராக ஊர்வலத்தில் பாலஸ்தீனியர்கள் மட்டும் பங்கெடுக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்பு ஊர்வலத்தை ஏற்பாடு செய்தவர்கள் பாலஸ்தீனியர்கள் அல்ல.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் முதலில் தங்களது புலிவாலாத் தனங்களை கைவிட்டு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக மட்டும் போராடுவதன் மூலமே தமிழ் மக்களின் அடிப்படை நியாயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர முடியும்.  (  காஸாவில் இருந்து கிளிநொச்சிவரை புரிந்துகொள்ளாத பாடம் : த ஜெயபாலன் )

மேலும் இன்று யுத்தமுனையில் தமிழ் மக்கள் சந்திக்கும் அவலத்திற்கு புலிகளுக்கும் சம பொறுப்பு உண்டு. அப்படி இருக்கையில் புலிக்கொடியையும் பிரபாகரனின் உருவப்படத்தையும் தாங்கிச் சென்று தமிழ் மக்களுக்கு நியாயம் கேட்க முடியாது.

இப்போதுள்ள நிலையில் யுத்தத்தில் சிக்குண்ட தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால்
1. யுத்தம் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அல்லது
2. அரச படைகளும் புலிகளும் குறைந்த பட்சம் சில தினங்களுக்காவது யுத்தத்தைத் தவிர்த்து மக்கள் பாதுகாப்பாக பாதுகாப்பு வலயங்களுக்கு செல்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
3. பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதல் நடத்துவதை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
4. பாதுகாப்பு வலயங்களை சர்வதேச மனிதாபிமான அமைப்புகளின் பொறுப்பில் விடவேண்டும்.
5. விடுதலைப் புலிகளும் பாதுகாப்பு வலயங்களுக்கு மக்கள் செல்வதை அனுமதிக்க வேண்டும்.
6. பாதுகாப்பு வலயங்களுக்கு செல்வதற்கான பாதுகாப்பான வழியை புலிகளும் அரச படைகளும் ஏற்படுத்த வேண்டும்.

மக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உருப்படியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்காமல் அறிக்கைவிடுவதும் பதிலறிக்கை விடுவதும் மறுப்பறிக்கை விடுவதும் பொறுப்பற்ற தன்மையின் வெளிப்பாடே.

Show More
Leave a Reply to chandran.raja Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

 

18 Comments

 • புரியாதவன்
  புரியாதவன்

  “அசாசினேஷஙளுக்கு” பலமாத செயல்பாடுகளுக்கான,”பலமான பாதாள கட்டமைப்பு” தேவை.”உறங்கு நிலை” என்பது அரசியல் கட்டமைப்புக்கு சாத்தியப்படாது,ஏற்கனவே இருந்த பாதாள கட்டமைப்பை அரசியலுக்கு விரிவுப் படுத்தியப் பின்பு,அரசியல் சரிவராத பட்சத்தில்,மீண்டும் அதற்குள் சுருக்கிக் கொள்ள முடியும்.
  Mumbai underworld.
  Hasan Ali Khan is a 53-year-old stud-farm owner and an alleged underground multi-billionaire worth USD 8-9 billion, according to police-authorities. Officers in investigating agencies in India claimed that this stud farm owner could be the latest unknown multi-billionaire on the block.The reluctance of these top Swiss banks mentioned above to help Indian investigators is slowing the unravelling of an intricate multinational trail of money transfers—across Switzerland, New York, the British Virgin Islands and Pune—between an Indian horse owner and a fugitive Saudi arms dealer, according to officials in the Enforcement Directorate, the government body that investigates economic crimes. Investigators from the ED, who recently claim to have found $8 billion in the Swiss bank accounts of Hasan Ali Khan, say they now have evidence of a $300 million transfer to him (via a Chase Manhattan bank account in New York) from billionaire Saudi arms dealer Adnan Khashoggi, whose arms supplies to Tamil terrorists, the LTTE, were revealed during an investigation into the 1991 assassination of Rajiv Gandhi.

  The first mafia element was Ayub Lala who was the first president of Pakhtuk Jirga E Hind, an association of Afghani Pathan in Mumbai. Prior to 1940, there were around 13,000 Pathan in Mumbai and they were mainly suppliers of commodities and services to the British. During World War II, these Pathan were instrumental in setting up several red-light districts for British military men. Indians were not allowed to enter some of the prostitute houses that only catered for whites. It was at that time that Pukhtun Jirga E Hind was formed under the leadership of Ayub Lala who was known as Ayub Baba. During his tenure he was the Don. He had gone to Kashmir for tour and there he found a young boy aged around 6 years working as a coolie. Ayub Lala brought this boy to Mumbai and he was named a Kashmiri Lala. Kashmiri rose to such heights that he became to be known as Kashmiri Lala.After Haji talab Hussein was arrested by customs, the Arabs contacted Haji Mastan and Mastan rose to heights as smuggler and later DON in mumbai. While Karim lala and haji Mastan set their empires in south Mumbai, Varadrajan Mudaliyar set up his kingdom at wadala stealing the goods from railway wagons. man power and protection men were provided to haji mastan and Varadrajan Mudaliyar by Chandrakant Alias babya Khopade who was the chief of the Golden gang in Mumbai.

  Reply
 • vanthiyadevan
  vanthiyadevan

  2. அரச படைகளும் புலிகளும் குறைந்த பட்சம் சில தினங்களுக்காவது யுத்தத்தைத் தவிர்த்து மக்கள் பாதுகாப்பாக பாதுகாப்பு வலயங்களுக்கு செல்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
  48 hour ceasefire been called by mahinda now

  Reply
 • chandran.raja
  chandran.raja

  இந்த நாற்பத்திஎட்டு மணித்தியாலத்திலும் புலிகள் தம்பிடியில்லிருந்து மக்களை விடுவிப்பார்கள் என்பதற்கு புலிகளின் வரலாற்றில் எந்த தடையத்தையும் கண்டுபிடிக்க முடியாது.

  பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரே புலிகளுக்கும் புலித்தலைமை பிரபாகரனுக்கும் பாதுகாப்பு. சர்வதேசமும்- இலங்கையரசும் இது வியத்தில்கூடிய கவனம் எடுத்து நிதானமாக செயல்படுவதே புத்திசாலித்தனமான காரியமாகும்.

  Reply
 • puvanan
  puvanan

  பத்திரிகையாளர் மாநாட்டில் திரு திரு வென்று முழிக்கும் போதே இந்த ஆள் தமிழரை எங்கே கொண்டு வந்து விடுவார் என்பது தெரிந்துதானே.

  புலி மக்களுக்காக இரங்கும் என்றால் சூரியன் மேற்கில் தான் உதிக்கும்.

  Reply
 • பகீ
  பகீ

  வந்தியதேவன், “…48 hour ceasefire been called by mahinda now…”
  இல்லை cesefire இல்லை காலக்கெடு விதிக்கப்பட்டிருக்கிறது. அவர் cesefire என்று எங்கும் சொல்லவில்லை.

  President Mahinda Rajapaksa urged the LTTE today to allow free movement of civilians to ensure their safety and security within the next 48 hours.

  Reply
 • பகீ
  பகீ

  “…காசாவில் இஸரேல் குண்டுகளைப் பொழிந்து பாலஸ்தீனியர்களைக் கொன்றொழித்த போது யாரும் ஹமாஸின் தடையை நீக்கச் சொல்லிக் கேட்கவில்லை. ஹமாஸ் தலைவர்களின் படத்தையும் ஹமாஸின் கொடியையும் தாங்கி ஊர்வலம் செய்யவில்லை. இஸ்ரேலுக்கு எதிராக ஊர்வலத்தில் பாலஸ்தீனியர்கள் மட்டும் பங்கெடுக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்பு ஊர்வலத்தை ஏற்பாடு செய்தவர்கள் பாலஸ்தீனியர்கள் அல்ல….”

  ஜெயபாலன், உங்கள் கருத்து ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாயினும் பல தவறுகள் உள்ளன. இன்று வந்த செய்தியைப் படியுங்கள்.

  ”Evidence is emerging of a wave of reprisal attacks and killings inside Gaza that have left dozens dead and more wounded in the wake of Israel’s war.

  Among the dead are Palestinians suspected of collaborating with the Israeli military. ”
  http://www.guardian.co.uk/world/2009/jan/30/hamas-reprisal-attacks

  பாலஸ்தீனியர்கள் பற்றி 1983 கதை அளக்க வேண்டாம்.

  மற்றையது பாலஸ்தீனர் ஒருவரோ அன்றி யூதர் ஒருவரோ தமக்குள் பிரச்சினை வந்தவுடன் எதிர்தரப்பு கொடியை போர்த்தி குளிர்காய்வதில்லை. (உ+ம்: ஐரோப்பிய புளொட் அமைப்பாளர் ஸ்ரீலங்கா கொடியை போர்த்தி ஊர்வலம் செய்தமை) பாலஸ்தீன அமைப்புக்குள் நடந்த உட்கொலைகள், களையெடுப்புகள் சொல்லி மாளாதவை என்பது ஸ்ரீலங்காவை விட்டும் மாற்று இயக்க பிரச்சாரபீரங்கிகளை விட்டு தூரம் வந்த போதும் தான் விளங்கியது. இவர்கள் காட்சி மாறும் வேகத்தைப்பார்த்தால் அதற்கென்றே தயாராக நின்றவர்கள் போல் தோன்றுகிறது.
  தேவை எனில் கேளுங்கள் பரிஸ் தெருக்களில் நடந்த சுடுபாடுகளில் இருந்து இன்று ஹமாஸ் செய்யும் ‘களயெடுப்புகள்’ வரை சொல்கிறேன்!

  நான் அதுபற்றி பேச விளைவதில்லை.ஏனெனில் நான் பாலஸ்தீன விடுதலையின் தீவிர ஆதரவாளன். உண்மையான் ஆதரவாளன். அவர்களின் பிரச்சினையை சொல்லி நான் ‘ஜனநாயக நடுநிலமை’யில் இஸ்ரேலிய குளிர்காய நினைக்க மாடேன்!

  Reply
 • vanthiyadevan
  vanthiyadevan

  பாலஸ்தீனர் ஒருவரோ அன்றி யூதர் ஒருவரோ தமக்குள் பிரச்சினை வந்தவுடன் எதிர்தரப்பு கொடியை போர்த்தி குளிர்காய்வதில்லை. (உ+ம்: ஐரோப்பிய புளொட் அமைப்பாளர் ஸ்ரீலங்கா கொடியை போர்த்தி ஊர்வலம் செய்தமை)
  this the jaffna mentality
  even if they live in europe for years

  Reply
 • thamba
  thamba

  பகீ அவர்களே புளொட் அமைப்பாளரோ அல்லது முன்னைய புலி தற்போதய புலியின் புதிய எதிர்ப்பாளர்களோ இப்போது அரசாங்கத்தின் கொடியை தூக்கிக் கொண்டு போகவில்லை. அவர்கள் தங்கள் நாட்டு கொடியையே எடுத்துச் சென்றார்கள். சிங்கக் கொடி ஒன்றே இலங்கையர்களின் இறையாண்மையுள்ள கொடி –

  ஈழம் என்பது என்ன? புலிகள் கூறும் தமிழ் ஈழம் தனி அரசு என்பது என்ன? என்று யாரும் எப்பவும் மக்களுக்கு திட்டவட்டமாக தெரிவிக்காத நிலையிலேயே போராட்டம் 4 ஆமிக்காரங்களை கொலை செய்வதன் மூலம் போராட்டத்தை தொடங்கலாம் என்றே ஆரம்பிக்கப்பட்டது.

  புளொட் ஜக்கிய இலங்கைக்குள் ஈழம் என்ற கரத்தை தமது புளொட் வானொலியில் பேசியதை கேட்ட ஞாபகம் உண்டா?

  இன்றைக்கு காயப்பட்டவர்களுக்கு மருந்தும் அனைத்து தமிழர்க்கு உணவும் சிங்களம்தான் வழங்க வேண்டும். வெளியேற விரும்புபவர்களை தடுக்காதீர்கள்.

  Reply
 • ashroffali
  ashroffali

  மாவிலாறு யுத்தம் புலிகளால் வலிந்து ஆரம்பிக்கப்பட்ட ஒரு யுத்தமாகும். அதன் போது அதுவரை மக்கள் படை என்ற பெயரில் ஒளிந்து கொண்டு கோழைத்தனமாக நிராயுதபாணிகளான படைவீரர்களைக் கொலைசெய்வதில் புலிகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும் பொறுமை காத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொறுமையை புலிகள் அநியாயமாகச் சீண்டிப் பார்த்தனர்.இராணுவத் தளபதியை இலக்கு வைத்து கர்ப்பிணிப் பெண்ணொருத்தி மூலமாக தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டு படையினரின் பொறுமையை அநியாயமாக வம்புக்கு இழுத்தார்கள். அப்போதே துள்ளுகிற கழுதை பொதி சுமக்கப் போகின்றது என்பதாக என்னிடம் பேசிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கூட்டமைப்பு “தொடர்புள்ள” பாராளுமன்ற உறுப்பினர் புலிகள் தொடர்பில் சாபம் விட்டார்.இலங்கையின் மூத்த தமிழ் அரசியல் வாதிகளில் ஒருவரான அவரது சாபம் எந்தளவுக்கு நிதர்சனமாகிக் கொண்டிருக்கின்றது என்பதை இன்று நினைத்துப் பார்க்கையில் வியப்பாக இருக்கின்றது.

  மாவிலாறு அணைக்கட்டை மூடி புலிகள் போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. அப்பிரதேசத்தின் பல இளம் பெண்களின் கற்பைச் சூறையாடுவது முதற் கொண்டு மேய்ச்சலுக்குச் சென்ற பல வயோதிபப்பெண்களையும் தங்கள் விகாரமான பாலியல் இச்சைகளுக்காக பலி கொண்டிருந்தார்கள். இங்கு நான் குறிப்பிட்ட விடயம் பாலியல் பலாத்காரம் என்றாலும் மனித இனம் அருவெறுக்கத்தக்கதான விகாரமான பாலியல் சேஷ்டைகளே அக்காலத்தில் புலிகளால் அரங்கேற்றப்பட்டிருந்தன. மாவிலாறு அணைக்கட்டினைத் தோண்டி புலிகள் அமைத்திருந்த பங்கருக்குள் செதுக்கியிருந்த மண் திட்டிலான கட்டிலில் குதறப்பட்ட பெண்களின் கண்ணீர் மாவிலாற்றுத் தண்ணீரை விடவும் வலிதாக வழிந்தோடியிருக்கும். அந்தளவுக்கு அங்கு புலிகள் தங்கள் காமவெறியாட்டங்களை அரங்கேற்றியிருந்தார்கள். அதிலும் அக்காலத்தில் புலிகளின் திருமலை அரசியல் பொறுப்பாளரான எழிலன் குளக்கட்டின் மீது மூட்டிய நெருப்பில் வாட்டிய வேட்டை இறைச்சியை சுவைத்தபடி நிலவொளியை ரசித்தபடி பாழ்படுத்திய பெண்களின் /அதிலும் புலி உறுப்பினர்களான பெண்களின் எண்ணிக்கை வகைதொகையற்றது. அதற்காகவே அவர் மாவிலாற்று அணைக்கட்டுக்கு அடிக்கடி வந்து போவாராம். ஏனெனில் யாருமற்ற பிரதேசத்தில் அமைதியான இரவில் அவரது களியாட்டங்களை அரங்கேற்றினால் யாருக்கும் தெரியப் போவதில்லை என்ற எண்ணம் தான்.

  இப்படியாக தொடங்கிய புலிகளின் மாவிலாற்று போர் அவர்கள் தங்களை மறந்து காமக்களியாட்டத்தில் மூழ்கியிருந்த ஒரு அதிகாலை வேளையை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட ஒரு கமாண்டோ வீரரால் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டு அணையின் துருசு வெடி வைத்து தகர்க்கப்பட்டது.அத்தோடு புலிகளின் வாய்ப்பேச்சும் காமக்களியாட்ட அரங்கேற்றங்களும் மாவிலாற்று அணை நீரில் அள்ளுப்பட்டுப் போயின. அன்று தொடங்கிய பின்வாங்கல் இன்று வரை தொடர்கின்றது. அவ்வாறான அனைத்துப் பின் வாங்கல்களின் போதும் பெண்களின் சாபம் தான் புலிகளை அழித்துள்ளது. அழிவுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

  வெருகல் /கதிரவெளி /வாகரை என புலிகள் தலைதெறிக்க ஓடிய சம்பவங்களில் எல்லாம் சிற்சில பெண்களின் பங்ளிப்பும் பாதிப்புகளும் மறைபொருளாகப் பதியப்பட்டே இருக்கின்றன. அவற்றை வெளிப்படுத்தி அந்தப் பெண்களின் குடும்பங்களை அவமானப்படுத்தவோ குடும்ப வாழ்க்கையை குலைக்கவோ நான் விரும்பாத காரணத்தால் இதற்கு மேல் விளக்கமாக விவரிக்க விரும்பவில்லை.

  அதன் பின் சொர்ணம் பேசில் புலிகளின் தளபதி சொர்ணம் போட்ட ஆட்டம் தாங்காமல் தப்பி வந்த ஒரு புலி உறுப்பினரின் வழிகாட்டலில் மலைக்குகையில் அமைக்கப்பட்டிருந்த சொர்ணம் பேஸ் விமானக் குண்டு வீச்சில் தகர்க்கப்பட்டது.அத்தோடு புலிகள் தொப்பிகலைக்குள் மட்டும் முடக்கப்பட்டார்கள்.

  உண்மையில் புலிகள் தொப்பிகலையில் அமைத்திருந்த அரண் வலுவானதாகவே அமைந்திருந்தது.அங்கு வலுக்கட்டாயப் பயிற்சிக்காக கடத்தி வரப்பட்ட பெண்கள் சீரழிக்கப்பட்ட அவலம் தொடரவே செய்தது. அது தான் அவர்களின் வலுவான அரண் இலகுவாக தகர்க்கப்பட வாய்ப்பாக அமைந்தது.இரவு நேரங்களில் அந்த சிறுமிகள் மற்றும் யுவதிகளுடன் நள்ளிரவு வேளைகளில் புலி உறுப்பினர்கள் வெறியாட்டம் போடுவது தெரிய வந்த காரணத்தால் தான் நள்ளிரவு வேளையை வாய்ப்பாகப் பயன்படுத்தி கமாண்டோ மற்றும் விசேட படையணி வீரர்கள் புலிகளின் எல்லைகளை ஊடறுத்து முன்னகர முடிந்தது. தொப்பிகலை மீட்கப்பட்ட பின்பு அங்கிருந்து கைப்பற்றப்பட்ட நீலப் படச்சுருள்களும்/ சீடிக்களும் மற்றும் அதற்கான பிளேயர்களும் ஊடகங்கள் வாயிலாக இராணுவத்தினரால் பகிரங்கப்படுத்தப்பட்ட போதும் பெண்களின் மானத்துடன் விளையாட இராணுவம் விரும்பாத காரணத்தால் தான் புலிகளின் காமக்களியாட்டங்கள் பற்றிய தகவல்கள் பரவ விடாது தடுக்கப்பட்டன. எந்த இனமாக இருந்தாலும் பெண்களின் மானம் முக்கியமானது என்பதே இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட கடுமையான அறிவுறுத்தல்களில் ஒன்றாக இருந்தது. அதன் காரணமாக புலிகளின் காமக் களியாட்டங்களை வெளிப்படுத்தி அதனுடன் தொடர்புபட்ட பெண்களின் வாழ்க்கையில் பிரச்சினைகளையேற்படுத்த இராணுவம் விரும்பவில்லை. அரசாங்கமும் அதற்கான முயற்சிகளை முன்னெடுக்கவில்லை. தொப்பிகலையில் வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்த ஒரு யுவதி இப்போதைக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு திருமலை நகரை அண்மித்த பிரதேசமொன்றில் இயல்பு வாழ்க்கையைக் கழித்துக் கொண்டுள்ளார்.உயர்தரம் வரை படித்திருந்த அவர் புலிகளால் பலவந்தமாக கடத்திச்செல்லப்பட்டு கட்டாயப் பயிற்சியளிக்கப்பட்டவர். புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்பு இப்போதைக்கு அவர் அரச நிறுவனமொன்றில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றுகின்றார். புலிகளின் முகாம்களில் நடைபெற்ற பாலியல் கொடூரங்களை வெளிப்படுத்த அவர் என்றைக்கும் தயாராகவே இருக்கின்றார்.மேலதிக விபரங்கள் தேவைப்பட்டவர்கள் என்னைத் தொடர்பு கொண்டால் அவரைத் தொடர்பு கொள்ள வைப்பேன். ஆனால் எந்தக் காரணம் கொண்டும் அவரது புகைப்படம்/ஒளிப்படம் எடுக்க முடியாது.

  இப்படியாக புலிகள் தங்கள் மக்களுக்கே விளைவித்த சொல்லொணாத் துன்பங்கள் தான் இன்று அவர்களது தொடர் தோல்விகளுக்கான காரணமாக அமைந்துள்ளது. ஆயினும் இன்று வரை அதனை அவர்கள் உணர்ந்து கொண்டதாக இல்லை.மக்களின் துன்பங்களை கண்டு இன்பமடையும் குரூர மனப்பாங்கு அவர்களிடம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வந்தது.அந்த மனப்பாங்கு தான் இன்று வரை மக்களை வதைத்து தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியை கைக்கொள்ள வைத்துள்ளது.

  இப்போதைய நிலையில் புலிகள் தங்கள் இருப்புக்காக சுமார் இரண்டரை இலட்சம் மக்களை பலி கொடுக்க துணிந்துள்ளார்கள். இந்த நிலையிலும் அப்பாவி மக்கள் மீதான கரிசனை காரணமாகவே ஜனாதிபதி அவர்கள் 48 மணி நேர காலக்கெடு விதித்து மக்கள் வெளியேறுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளார். இந்த நிலையிலும் புலிகள் அந்த மக்களை வெளியேற விடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றனர்.ஏனெனில் வெறும் பற்றைக் காடுகளும் பொட்டல் வெளிகளும் நிறைந்த விடுவிக்கப்படாத பிரதேசத்தில் புலிகளுக்கு இருக்கும் ஒரே அரண் அந்த மக்கள் மட்டும் தான். அதையும் இழந்து மரணப் புதைகுழியை தாங்களாகவே தோண்டிக் கொள்ள புலிகள் விரும்ப மாட்டார்கள். அதுதான் யதார்த்தம். ஆனால் எந்தக் கட்டத்திலும் அரசாங்கம் அந்த மக்களுக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கத் தயாராகவே இருக்கின்றது. இடம்பெயர்ந்த மக்கள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது கிடுகுகளை அனுப்ப நடவடிக்கை எடுத்தது. நாள் தவறாமல் உணவு லொறிகளை அனுப்பி வருகின்றது. அங்கிருக்கும் சுகாதார அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க தேவையான மருந்து வகைகளை அனுப்பி வருகின்றது. இவ்வாறாக அந்த மக்களின் அனைத்து அத்தியாவசிய தேவைகளும் அரசாங்கத்தால் நிறைவேற்றப்படுகின்றன. அரசாங்கத்தின் மனிதாபிமான நல்லெண்ணம் எந்தளவுக்கு என்றால் மோதலின் ஆரம்ப கட்டத்தில் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட புலிகளின் ஊடகப் பொறுப்பாளர் தயா மாஸ்டருக்கு சிகிச்சை தேவைப்பட்ட கட்டத்தில் கொழும்பு வந்து சிகிச்சை பெற்றுச் செல்வதற்கான ஒழுங்குகளையும் பாதுகாப்பையும் அரசாங்கம் செய்து கொடுத்திருந்தது.ஆக புலிகளின் ஒரு உயர்மட்ட உறுப்பினர் விடயத்திலேயே கருணை காட்டிய ஜனாதிபதி அவர்கள் சாதாரண சிவிலியன்கள் விடயத்தில் கருணை காட்டாமல் இருக்கப் போவதில்லை. அதுதான் யதார்த்தம்.

  //மக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உருப்படியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்காமல் அறிக்கைவிடுவதும் பதிலறிக்கை விடுவதும் மறுப்பறிக்கை விடுவதும் பொறுப்பற்ற தன்மையின் வெளிப்பாடே//

  மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நிலையில் புலிகள் தொடர்ந்தும் அந்த மக்களை வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப் போகின்றார்களா? மக்கள் சுய விருப்பில் தங்களுடன் தங்கியிருப்பதாக வாதிடப் போகின்றார்களா?

  அப்படியே வைத்துக் கொண்டால் புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்த இல்லையென்றால் கிளிநொச்சி அல்லது பரந்தன் போன்ற மக்கள் இல்லாத இடங்களில் புலிகள் இராணுவத்துடன் மோதி தங்கள் வீரத்தை வெளிக்காட்டலாமே?

  ஆனால் ஒன்றில் தாங்கள் முற்றாக அழியும் வரை அல்லது தாங்கள் மீண்டும் கொரில்லா அமைப்பாக உருமாற்றம் பெறும் வரை புலிகள் அந்த மக்களை வெளியே விடமாட்டார்கள். அதுதான் யதார்த்தம்.

  Reply
 • virutha
  virutha

  when i have choice about safety. i will choose tigers they are better than srilankan army. so people move with tigers. that’s all. some …….brains doesnt understand the factor

  Reply
 • damilan
  damilan

  பாதுகாப்பு வலயம் பற்றி அரசு அறிவித்தவுடன் பாதுகாப்பு வலயத்திற்குள்ளாகவே சண்டை நடப்பது போலவும் அங்கு சென்ற மக்களே ராணுவத்தின் செல்வீச்சுக்கு பலியானதாவும் புலி ஆதரவு இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டன. இதன் நோக்கமும் சூழ்ச்சியும்

  1. மக்களை பாதுகாப்பு வலயத்திற்குள் நகரவிடாது தடுப்பது.

  2. மக்கள் நகர்ந்தால் புலிகளை தனியாக அடையாளப்படுத்தி ராணுவம் அடிக்கும்

  3. பாதுகாப்பு வலயத்திற்குள் மக்கள் நகர புலி விரும்பாது இது புலிகளின் தற்கொலைக்குச் சமன்

  4. மக்களின் கவசம் புலிகள் என்று நடேசன் கூறியுள்ளர். அதை நிரூபிக்க நல்ல சந்தர்ப்பம் புலிகளுக்கு பாதுகாப்பு வலயத்திற்குள் மக்களை அனுப்பிவிட்டு புலிகள் முன்னுக்கு நிற்கவேண்டும்.

  5. மக்கள் பாதுகாப்பு பற்றி புலிகள் விரும்பினால் அதை உலகிற்கு அறிவிக்கட்டும் மக்களை நகரச் சொல்லி.

  6. மக்களின் பதுகாப்பு பற்றிய அக்கறை அரசுக்கு இருப்பதால்தான் மக்களை பாதுகாப்பு வலயத்திற்குள் நகரக் கோருகிறது. இதே அக்கறை புலிக்கும் இருக்குமானால் பாதுகாப்பு வலயத்திற்குள் மக்களை நகரக் கோர வேண்டும்.

  7.புலிகள் இனியும் மக்களைத் தடுத்தால் அவர்களே புலிகளின் தடையை உடைத்துக் கொண்டு பாதுகாப்பு வலயத்திற்குள் செல்வார்கள்.

  8.புலிகளை விட்டு மக்கள் சென்றால் புலிகள் கவசம் (மக்கள்) உடையும் கவசம் உடைந்தால் புலிகளின் சுவாசம் நிற்கும்.

  9. இப்போது புலிகளுக்கு இரண்டு பிரச்சிணை 1 ராணுவம் 2 மக்கள் புலிகளின் பிரச்சினை ஒன்று மட்டும்தான் தங்களை பாதுகாகக்க வேண்டும்.

  10. ராணுவத்தை அழித்தால் தங்களைக் காக்கலாம் அது இப்போது முடியும் ?

  11.மக்களைக் கொன்றால் ராணுவத்தின் மீது பலியைப் போட்டு தங்களைக் காக்கலாம்

  12.புலிகள் தங்களைக் காக்க எதையும் செய்வார்கள் இதற்கு கடந்த கால வரலாறுகள் பல உள்ளன.

  13.மக்களை நாங்கள் போகச் சொல்லவில்லை இலங்கை அரசுதான் மக்களை ஒரே இடத்திற்கு அனுப்பி அவர்களை இனப்படுகொலை செய்து விட்டது என உலகிற்கு விளக்குவார்கள்.

  14.இதற்கு ஒரே தீர்வு புலிகளும் மக்களை பாதுகாப்பு வலயத்திற்குள் போகச் சொல்ல வேண்டும்.பாதுகாப்பு வலயத்திற்குள் ராணுவம் நுழையக் கூடாது என்ற நிபந்தனையை விதிக்கலாம்.

  Reply
 • Anonymous
  Anonymous

  /மாவிலாறு அணைக்கட்டை மூடி புலிகள் போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. அப்பிரதேசத்தின் பல இளம் பெண்களின் கற்பைச் சூறையாடுவது முதற் கொண்டு மேய்ச்சலுக்குச் சென்ற பல வயோதிபப்பெண்களையும் தங்கள் விகாரமான பாலியல் இச்சைகளுக்காக பலி கொண்டிருந்தார்கள்./
  இது சிங்கள அரசாங்கத்தின் பொய்ப் பிரச்சாரமாக இருக்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன்.சிங்கள்வர்களைப்பற்றி எனக்கு தெரியும்,நல்லவர்கள் இப்போது தொல்லையிலிருக்கிறார்கள்.மாவிலாறு அணைக்கட்டை மூடியதில் பிண்ணனியில் நின்றவர் “பால்ராஜ்”, அரசியல் ரீதியாக அது ஒரு “பிளண்டர்”. கடவுளே!, கவிஞர் கண்ணதாசன், என் தந்தையுடன் பலமுறை வீட்டிற்கு வந்திருக்கிறார் அவரை என் தந்தையாகவே மதிக்கிறேன், ஆனால் அவர் “கலைஞரை”ப் பற்றி எழுதிய “வனவாசம்” நூலைப் படித்தபோது, என் தலைச் சுற்றியது. தமிழர் என்ற இனக்குழு அடிப்படையில் சில விஷயங்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு, நல்லமனம் படைத்த சிங்களவர்களின், சரியான “தகவல்கள்” தேவை. தினமும் கஷ்டமில்லாமல் சுகமாக காலைக்கடன் கழிப்பதே பேரின்பம் என்று அறிஞர் கூறிய மாதிரி, சாதாரண வாழ்க்கை இந்த உலகத்தில் வாழ்வதே அதிசயம், சாதனை.”sahara knite anal ” ,என்பதை கூகில் சேர்ச்சில் தேடவும், இதை வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொள்ள முடியுமா?, அன்றாடம் சூரியன் உதிப்பதை சலிப்புத்தட்டாமல் பார்த்து, இந்த பூமிப் பந்தில் நாம் ஒட்டிக் கொண்டிருப்பதே சாதனை என்று, கடவுளுக்கு நன்றி சொல்வோமாக!!.

  Reply
 • accu
  accu

  Virutha, Bravo!!! I am pretty sure that your living somewhere very safe.[not in vanni] so it’s easy say anything with your …… mouth.

  Reply
 • vaille
  vaille

  /புலம்பெயர் தமிழ் அமைப்புகள் முதலில் தங்களது புலிவாலாத் தனங்களை கைவிட்டு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக மட்டும் போராடுவதன் மூலமே தமிழ் மக்களின் அடிப்படை நியாயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர முடியும்/

  நாய்வாலை மட்டுமா நிமித்தமுடியாது. புலிவாலையும் நிமித்தமுடியாதே.

  வள்ளி

  Reply
 • chandran.raja
  chandran.raja

  வக்கிரபுத்தியும் வெறிக்குணம் கொண்டபுலிகள் மக்களோடும் நேயாளிகளோடும் என்ன உறவு வைத்திருந்தார்கள் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்.

  அக்டோபர் 21ம் யாழ் மருத்துவமனையில் படுகொலைகள் நிகழ்ந்த தினமாகும். அப்போது புலிகள் அங்கிருந்தார்கள்.புலிகள் வேண்டுமென்று செய்த நாடகமாகவும் இருக்கலாம். அவர்கள் இரண்டுபெரும் பிரிவுகளாக வந்திருந்தார்கள். புலிகளை அந்த இடத்தைவிட்டு வெளியேறுமாறு டாக்டர்கள் மன்றாடியபோது பரவலாக அங்கும் இங்கும் வெடிதீர்த்துவிட்டு உள்ளே சில ஆயுதங்களை விட்டுவைத்த வண்ணம் வெளியேறினார்கள். கிட்டதட்ட ஒரு மணத்தியாலத்தின் பின் இந்தியராணுவம் வந்தபோது எதிர்த்து சுடுவதற்கு அங்கு யாரும் இருக்கவில்லை. திடீரென பெரும் தொகையாக புகுந்த அவர்கள் நோயாளிகளையும்……….அன்றுமாலையும் இரவும் மறுநாள் காலை வரையும் இந்த கொலைவெறி தாக்குதல் நடந்தவண்ணம் இருந்தது.
  பக்கம் 446- முறிந்த பனை-

  இரண்டாவது உதாரணம் விடுதலைப்புலிகள் நகர் சூழல்லில் கெரிலா பாணியில் நடத்திய போர்தாக்குதல் யுக்திகளின் எதிர்வினையாகவும் இருக்கலாம். புலிகள் பொது மக்களை பாதுகாப்பு கவசமாக பயன்படுத்தினார்கள். போராளிகள் மக்கள் செறிந்திருந்த மருத்துவமனைகளில் இருந்தும் கோவில்களிருந்தும் பாடசாலைகளில்லிருந்தும் தாக்குதல் நடத்தி தப்பிக்கொண்டார்கள்.பெண்களும் சிறுவர்களும் இராணுவப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

  பக்கம் 357- முறிந்த பனை-

  Reply
 • damilan
  damilan

  புலிகள் தங்களால் சண்டை பிடிக்க முடியாத போது மூன்று விடயங்களைக் கையாள்வர்
  1. அரசுடன் சமாதானம் பேசுவது.
  2. சிங்கள மக்களைக் கொலை செய்வது
  3. சொந்த மக்களைக் கொல்வது.

  எத்தனையோ முயற்சிகள் பண்ணி சமாதானம் சாpவரவில்லை இப்போதும் அரசியல் தீர்வுபற்றி கதைத்துள்ளார் நடேசன். அப்ப தமிழீழ கோரிக்கையை கைவிட்டு விட்டார்களா? இப்போது புலிகளும் துரோகிகள்தானே. துரோகத்திற்கு தண்டணை புலியின் பாசையில் மரணம் இப்ப இந்தத் தண்டணையை வழங்குவது ராணுவம். தான் போட்ட சட்டத்திற்கு தனக்கே தண்டணை கிடைக்கிறது. ‘அரசன் அன்று கொல்வான் ஆமி நின்று கொல்லும்’

  சிங்கள மக்களை கொலைசெய்வதும் தற்போது நின்று விட்டது அதற்கு காரணம் கடுமையான பாதுகாப்பு முறை. தொடர்சியான செக்கிங்.

  மூன்றாவது வழி சொந்த மக்களை கொல்லுவது புலிகளுக்கு உள்ள ஒரே இறுதியான இலகுவான வழி கடற்த கலங்களில் பலவழிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் மோதல் தவிர்ப்பின் போதே மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக நேற்று அறிவித்துள்ளனர். மக்கள் அவ்வாறு கொல்லப்பட்டிருந்தால் அடித்த செல் புலிகளுடையாதாகத்தான் இருக்கும்.

  ஆக புலிகளின் துருப்புச் சீட்டு மக்களே இனி தெpர்வரும் நாட்களில் அதிகமான மக்கள் கொல்லப்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. இதை வைத்தே புலி தனது காயை நகர்த்தும். பாவம் அப்பாவி மககள் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

  Reply
 • Thaksan
  Thaksan

  You(LTTE) ignored the peoples’ wish when you were in power. But now you are depend on people. That’swhy you dont allow free movements of people. Now you need people for your exist. Sorry dear. you are too late.

  Reply
 • TBC London
  TBC London

  http://tbcuk.com/2009/02/04/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/

  சாத்தான்களின் செவிகளில் மனித உரிமை வேதம் – தங்கள் வேள்விக்கு மக்களை பலியிட சிங்கமும் புலியும் தயார் : த ஜெயபாலன்

  Reply