“தமிழ்-முஸ்லீம் இரு சமூகத்தையும் ஒன்றிணைக்கும் பிள்ளையார் சுழி தான் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி”  – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி

“தமிழ்-முஸ்லீம் இரு சமூகத்தையும் ஒன்றிணைக்கும் பிள்ளையார் சுழி தான் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி”  என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் பேசும் மக்களுக்கான நீதி கோரிய பயணத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் முஸ்லிம் சமூகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த பயணம் எதிர்காலத்தில் ஒற்றுமைப்பட்ட பயணமாக  இருக்க வேண்டும் இந்தப் பயணத்தில் தமிழ்த் தலைவர்கள் மீது முஸ்லீம் தலைவர்கள்  நம்பிக்கை வைக்க வேண்டிய காலகட்டம் வந்துள்ளது.

எனது எதிர்பார்ப்பாகும் இரு சமூகத்தையும் ஒன்றிணைக்கும் பிள்ளையார் சுழி தான் இந்த நிகழ்ச்சி நிரல் எதிர்காலத்தில் சிறுபான்மை சமூகம் தமிழர்கள்-முஸ்லிம்கள் என்று வேறுபடுத்தும் ஆட்சியாளர்களுக்கு துல்லியமாக பதில் சொல்ல வேண்டியுள்ளது இந்த நிலவரத்தை ஏற்படுதோயவர்களும் அவர்கள் தான். அருவருப்பாக இந்த வீதியில் இறங்கி போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளியவர்கள் ஆட்சியாளர்கள் அவர்களது சட்ட திட்டங்கள் காட்டு தர்பார்கள்.   அவர்கள் நினைப்பதுதான் சட்டம். நினைப்பவர்களை  பிடிப்பார்கள். நினைப்பவர்களை விடுதலை செய்யும் அளவிற்க்கு சட்டம் மௌனிதுள்ளது என குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *