Friday, October 22, 2021

லண்டன் ஆர்ப்பாட்ட ஊர்வலம் – ஒரு நோக்கு : ரி சோதிலிங்கம்

Protest_UKலண்டன் புலம்பெயர் வாழ்வில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்களில் முன் மாதிரியாகவும் தமிழர்களை ஒன்று சேர்க்கும் பக்குவத்துடனும் BTF-TYO வினால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட ஊர்வலம் நடந்தேறியது. இந்த ஊர்வலத்தில் 50000 – 100000 பேர் வரை கலந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஊர்வலம் கடந்த காலங்களில் புலிகளை முதன்மைப்படுத்தி செய்ய்பபட்ட  நிகழ்வுகள் போலல்லாது பொதுவான வாசக – கோசங்களுடன் நடைபெற்ற போதிலும் புலிகள் தரப்பினர் ஏற்படுத்தும் தவறுகளையோ மனித உரிமை மீறல்களையோ வெளிப்படுத்தி இருந்திருக்கவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்து மக்களை வெளியேற்ற ஜ நா மற்றும் சர்வதேச அமைப்புக்களின் வேண்டுகொள்களை பிரதிபலித்தோ இருக்கவில்லை என்பதும் குறிப்பிட்டேயாக வேண்டும்.

கடந்த கால ஈழப் போராட்ட வரலாற்றில் ஏற்பட்ட பல அரசியற் தவறுகளை, சந்தர்ப்பம் கிடைக்கும் போது அவற்றை  புலிகள் தமிழர்கள் பிரதேச சுயாட்ச்சியை  ஏறப்படுத்தும் மைல்கற்களாக பயன்படுத்தாமல் போனது பற்றி பலரிடமும் விமர்சனங்கள் உள்ள போதிலும் நேரிடையாக இன்று வரை புலிசார்பு ஊடகங்கள் அதனை வெளிப்படுத்தவில்லை. இதை ஒரு சுய விமர்சனமாகக் கூட பார்க்கப்படவில்லை என்பது பலரின் ஆதங்கமாக உள்ளது.

இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் அரசுக்கெதிரான கோசங்களும் யுத்த நிறுத்தம் கோரிய கோசங்களும் இந்திய ஆதரவு கோசங்களும் முன்வைக்கப்பட்ட அதேவேளை புலிகளின் தவறுகள் எதுவும் சுட்டிக்காட்டப் படவில்லை.

கடந்த சில வாரங்களாக ஜரோப்பாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் எடுத்து வரப்பட்ட புலிக் கொடி, பிரபாகரனின் படம் போன்றவைகள் இம்முறை லண்டன் ஊர்வலத்தில் முன்வைக்கப்படாமல் இருந்தது மிகவும் வரவேற்க்கத்தக்கதே. இது எதிர்காலதில் சரியான வழிவகைகளை தேட உதவி செய்யும்.

லண்டன் ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்ட பல முக்கிய பதாகைகளில் யுத்தத்தை நிறுத்து; தமிழர்களை கொல்லாதே; பேச்சு வார்த்ததையை ஆரம்பி போன்ற கோசங்களுடன் இந்தியாவே தமிழர்கள் உனது நண்பன் என்ற பதாகை தாங்கப்பட்டதும் குறிப்பிட்டாக வேண்டும். இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இந்திய இராணுவத்துடன் ஏற்படுத்தப்பட்ட முறுகல் முற்றி சமாதானப் படை கொடூரப்படையாகியது. இன்று இலங்கைத் தமிழர்கள் இந்தியாவின் எதிரி அல்ல என்ற பதாகையுடன் நிற்கின்றனர்.

இதே போல BBC க்கு எமது போராட்டத்தில் அக்கறை செலுத்தும் படியான பதாகைகள் தாங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கதே. ஆர்பபாட்டங்களில் ஆளும் அரசகளுக்கு எதிராக பதாகைகள் வருவது வழமையே ஆனால் கடந்த வாரம் BTF-TYO வினர் பிபிசி அலுவலகத்திற்கு எதிரான ஓர் ஆர்ப்பாட்டத்தை செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொது ஊடகங்கள் தமிழர் போராட்டங்களை பாராமுகமாக இருப்பதற்கான காரணங்களை அறிந்து அவற்றின் ஊடாக அந்த ஊடகங்களின்  கவனத்தை ஈர்ப்பதே சரியானது. அதைவிடத்து அந்த BBC க்கு எதிராக போர்க்கொடி ஏந்தி பலவந்தமாக பாடம் கற்பிக்கும் தன்மைக்கு எப்படியான பதில் கிடைக்கும் என இனிவரும் காலங்களில் அறிந்து கொள்ளலாம்.

BTF ன் முக்கிய உறுப்பினர் சுரேந்திரன் SKY ற்கு கருத்தப்பரிமாறிய போது  தமிழர்களின் பிரதிநிதி புலிகள் என்றும் புலிகளுடன் அரசு யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தை செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தார். இதன் மூலம் BTF தமிழர்களின் ஏகபோக பிரதிநிதி புலிகள் மட்டுமே என்ற கருத்தை வெளிப்படுத்துவதாகவே தெரிகிறது. கடந்த சில வருடங்களாக இலங்கையில் வட – கிழக்கு பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை BTF சுரேந்திரன் புரிந்து கொள்ள தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது.

ஏதிர்பார்த்ததைவிட மிக அதிகமானோர் ஊர்வலத்திற்கு வந்திருந்ததாலும், லண்டன் பொலீசாரின் இக்கட்டான நிலைமைகளினாலும், ஊர்வலத்தில் பங்கு பற்றிய ஒரு பகுதியினர்க்கு சில அசௌகரியங்கள் ஏற்பட்டதும் அந்த குளிரிலும் அந்த அசௌகரியங்களை தமிழர்கள் பொறுமையாக ஒத்தழைத்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

ஊர்வலத்தின் இறுதியில் 5000 பேர் வரையிலானவர்கள் பாராளுமன்றதின் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன்  பாராளுமன்றத்தில் மகஜர் கையளித்தனர். கையளிக்கப்பட்ட மகஜருக்கு பதில் ஓரிரு தினங்களில் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரம் 4ம் திகதி இலஙகையின் சுதந்திர தின நாளை கரி நாளாக அறிவித்து போரட்டம் ஒன்றை BTF-TYO ஒழுங்கு செய்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

13 Comments

 • chandran.raja
  chandran.raja

  அப்பசிறகு இலங்கைப்படத்தை இந்த ஊர்வலக்காரர் இன்னும் கைவிடவில்லை.
  ஈழக்கோரிக்கையும் தமிழரின் பிரதிநிதிகள் புலிகள்தான் என்று கூறுவதும் யாருக்காக?
  இலங்கையில் வாழும் தமிழருக்கா? புலம்பெயர் உலகில் வாழும் தமிழருக்கா??
  புலம்பெயர் தமிழருக்காக இருந்தால் நியாயமானதே. அது ஈழத்தமிழருக்காக இருந்தால்…..?

  Reply
 • palli
  palli

  நாமும் வரவேற்க்கிறோம். ஆனால் இதில்கூட புலியை மக்களை வெளியேறவிடு; அல்லது மக்கள் இருக்கும் இடத்தில் இருந்து தாக்குதல் தொடுக்காதே என சில வாசகங்கள் சேர்த்திருக்கலாமோ என பல்லியின் ஆதங்கம். புலி கொடி இல்லை; புலி படம் இல்லை, தலைபடம் கூட இல்லை வரவேற்க்கலாம், ஆனால் அவர்கள் வைத்திருந்த கொடியின் கலருக்கு நேற்று ஒரு தேச வாசகர் அர்த்தம் கேட்டிருந்தார். அதுக்கு எந்த விளக்கமும் இல்லையா?? அதுகூட மறைமுகமாக புலியை சந்தோசபடுத்த நடக்கும் நிகழ்வா?? எந்த ஒரு எழுச்சியையும் பல நாட்டு அரசியல் (நம்நாடல்ல) அவதானிகள் அவதானிப்பார்கள் அல்லவா? அரசு செய்யும் தவறை எப்படி சுட்டிகாட்ட முனைகிறோமோ அதேபோல் புலிசெய்யும் தவறையும் உலகிற்க்கு சுட்டிகாட்ட வேண்டியது புலம் பெயர் தமிழர் கடமை. மக்களை காப்பாற்ற ஒரே வழி. எமது நிலை மக்களுக்காக; எதை செய்தாலும் அதை மக்களின் பிரதநிதிகளின் மூலம் செய்வதே சிறந்தது. (அதுக்காக புலிகளோ அல்லது மாற்று அமைப்புகளோ மக்களின் பிரதநிதிகள் என நம்பவேண்டாம்.) மக்களோடு மக்களாய் சேர்ந்திருக்கும் கல்விமான்களே மக்களது பிரதநிதி.
  பல்லி.

  Reply
 • rupan
  rupan

  they have done somthing in london what is going to happen next these actions won’t affect in Sri Lanka – the LTTE is a wrong organization nad not know how to lead for its own people what ever you do i don’t thing it will work – many of you live in the olden era and not understand what the world is in now.

  Reply
 • xxD
  xxD

  புலிகள் சுயவிமர்சனம் செய்யப் போவதில்லை. இதேபோல அவர்களின் ஆதவாளர்களும் அரசியல் ரீதியான படிப்பினைகளை பெறப்போவதில்லை.
  புலியெதிர்பாளர்களும் திருந்தப் போவதில்லை.

  யுத்த நிறுத்தம், நிவாரணம், மருத்துவம் மக்களுக்கு செல்லல், பேச்சுவார்த்தையை வலியுறுத்துவது இவைகளே இன்றைய தேவையாகும்.

  Reply
 • palli
  palli

  xxD கலப்படம் இல்லாத உன்மை தங்கள் பின்னோட்டம். புலியெதிப்பாளர்களும் தற்போதைக்கு மக்களின் விரோதிகளே. புலிகளை அழிப்பதில் உள்ள தீவீரம். மக்களை காப்பதில் இல்லை. இதில் பல இனைய தளங்களும் அடங்கும்.

  Reply
 • siva
  siva

  //கடந்த சில வாரங்களாக ஜரோப்பாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் எடுத்து வரப்பட்ட புலிக் கொடி, பிரபாகரனின் படம் போன்றவைகள் இம்முறை லண்டன் ஊர்வலத்தில் முன்வைக்கப்படாமல் இருந்தது மிகவும் வரவேற்க்கத்தக்கதே. இது எதிர்காலதில் சரியான வழிவகைகளை தேட உதவி செய்யும்.//

  இச்செய்தியப் பார்த்ததும் ஆதாரம் இல்லாமல் ஆய்வுகளும் செய்வீர்கள் என்பது தெளிவாக தெரின்றது. பிரபாகரன் படம், புலிக்கொடி என்பனவும் பிடித்து பிரபாகரன் நம் தலைவர், எங்களுக்கு தமிழீழம் வேண்டுமென்ற கோசங்களும் எழுப்பப்பட்டன என்பதே உண்மை. வேண்டுமானால் வீடியோ பிரதி அனுப்பி வைக்கின்றேன்.

  Reply
 • Gnasegaram
  Gnasegaram

  நேற்றய ஆர்ப்பாட்டத்தில் 20 000 பேர் வழைமயான புலிகளின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டதும், மற்ற எல்லோரும் தமிழர்கள் வன்னியில் படும் கஸ்டங்களில உணரச்சி வசப்பட்டு வந்துள்ளவர்களும் ,அதைவிட உப்படியே விட்டால் புலிகளும் பிரபாகரனும் இன்னும் தாங்கள் செய்வது சரி என்று நினைப்பாங்கள்; நாங்கள் போய் செயப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்களும் வந்துள்ளார்கள்.

  IBC radioல் கதைக்கும் போது சிலர் கூறியது தன்னை ஸ்கை பேட்டி கண்டதாயும் பக்கத்தில் நின்றவர் உமது தமிழீழச் சால்வையை தோளில் இருந்து எடுத்துவிட்டு பேட்டி குடும் என்று சொன்தாயும்- தான் எடுக்கவில்லை என்றும் சொன்னார். இது எப்படி புலிகள் அல்லாதவர்கள் அல்லது புலிகளின் கடந்த காலத்தை விமர்சிப்பவர் செயற்படுகிறார் என்று அறியமுடிகிறது.

  புலிகளின் ஆதரவாளர்கள் எமது தலவன் பிரபாகரன் என்று கத்தும் போது BTF உறுப்பினர்கள் அப்படி கத்தக் கூடாது என்று கூறியதும் பலர் கண்ட காட்சி பிபாகரனின் படத்தை தனது பையிலிருந்து எடுத்து பிடிக்க தொடங்கியபோது, பக்கத்தே நின்றவர் நாங்கள் இந்த படத்தில் உள்ளவர்க்காக வரவில்லை உந்தப் படம் தானே பல பிரச்சினைகளை தொடக்குகிறது என்றெல்லாம் பேசியவுடன் அவர் அந்தப் படத்தை உள்ளே வைத்து விட்டார்.

  புலிகளின் கொடியையும் பிரபாகரனின் படத்தையும் கண்ட பலர் பொலீஸ்க்கு உடனேயே அங்கிருந்து தொலைபேசியில் பேசியதும் சிலர் கண்டதுண்டு. பின்னர் இந்த படங்களும் கொடியும் களத்தில் இருந்து நீக்கப்பட்டது . இந்த உதாரணங்கள் புலிகள் சம்பந்தமாக அவர்களின் நிலைப்பாட்டில் எப்போதே மாற்றம் உருவாகியிருக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

  இதே மக்கள் புலிகளை ஆயுதங்களை கீழே வைத்து விட்டு போகும்படி சொல்லும் நிலையும் ஏற்ப்படலாம்.

  கடந்த காலங்களில் நடைபெற்ற கூட்டங்களில் இப்படியாக நடைபெற்றிருந்தால் புலிகளின் ஆதரவாளர்கள் மிரட்டுவார்கள் அடித்திருப்பார்கள். (பல நடந்துள்ளன) இப்படி செய்ய மக்கள் பயப்படுவார்கள் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.

  இந்த ஆர்ப்பாட்டத்திலிருந்து புலிகள் சிலவற்றை படித்திருப்பார்கள் என்றே கருத முடியும்.

  BTF ஏன் இப்படி இவ்வளவு மக்கள் வந்தார்கள் தமது பொறுப்புணர்வு என்ன? இதிலிருந்து தாங்கள் என் மாதிரியான மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டும் அல்லது புலிகளை மாற்ற வேண்டும் என சிந்திப்பார்களா?????

  BTF அடுத்து என்ன செய்ய வேண்டும்???

  இந்த மக்கள் கூட்டத்தினரின் வரவும் ஆர்ப்பாட்டமும் தமிழர்களின் வெற்றியே. இதை புலிகள் தமது புலிகளின் வெற்றி என்று புரட்டி கருத்துக் கொள்வார்கள் என்றால் அவர்கள் மீண்டும் தவறு இழைப்பார்கள் அல்லது இதை வைத்துக் கொண்டு பணம் சேர்க்க வீடுகளுக்கு வருவார்கள் (commission based bussiness)

  நேற்றய ஊர்வலத்தில் பொலீசார் வழி மறித்து கூட்டத்தினரை வேறு பாதையூடாக வரவிட்டபோது (நெருக்கடியை தவிர்ப்பதற்கு) சிலர் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் (IBC 0740 PM செய்தில் பேட்டி கண்டவர் ஜெகன்) அதன்பின்னர் தம்முடன் வந்த பிள்ளைகளையும் பெண்களையும் முன்பாக பொலீசாருடன் முண்ட விட்டதாக அவர் கருத்துப்பட சொன்னார் இச் செயல் மக்களை கேடயமாக பாவிக்கும் வன்னி நிலைமைகளுடன் ஒப்பிடகூடியது.

  அன்ரன் பாலசிங்கம் கூட்டத்தில் ஏதும் ஊத்தையாக பேச அதை ஈழப்போராட்ட ஆதரவாளர்கள் கை தட்டி விசில் அடித்து சிரித்து சத்தம் போட்ட கூட்டங்களில் இருந்த அசட்டையான ஆதரவை விட நேற்று நடந்த ஆர்ப்பாட்டம் புலம் பெயர் மக்களின் உணர்வு பூர்வமான பங்குபற்றுதலை உறுதிபடுத்துகிறது. தம்மை ஏகபோக பிரதிநிதிகள் என்பவர்கள் சிந்திக்க வேண்டும். தம்மை மாற்றிக் கொண்டு புதிய செயற்பாட்டுக்கு அணுகு முறைகளக்கு தயாராகுவார்களா????

  புலிகள் பேச்சு வார்த்ததைக்கு வரமாட்டார்கள் புலிகளுக்கும் அரசியலுக்கும் எட்டாப் பொருத்தம் புலிகள் அரசியல் தீர்வுக்கு தடையாக இருக்கிறார்கள் என்றெல்லாம் கூக்குரலிட்டவர்கள் இப்போ புலிகள் ஓர் இக்கட்டான நிலையில் இருக்கும் போதென்றாலும் அரசியல் தீர்வு ரெடியா? அரசு அரசியல்தீர்வை முன்வைக்க ஆயத்தமா? என்ற கேள்வியும் நேற்று இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்திற்கு வந்திருந்த தமிழர் வெள்ளத்தில் இருந்ததே!!!

  புலிகளை அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் எதிர்த்தவர்களும் மகிந்தாவின் அரசுடன் ஒத்துப் போகிறவர்களும் இன்று புலிகள் உள்ள மிக இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் உங்கள் மகிந்த ஆதரவு தமிழரின் அரசியல் தீர்வை கொண்டுவரமுடியுமா???

  தமிழர்க்கு நிரந்தர அரசியல்த் தீர்வு உடனடியாக முன்வைக்கப்பட வேண்டும்!! இன்றே செய்ய வேண்டும்.

  Reply
 • palli
  palli

  எது எப்படியோ எமக்கும் உனர்வு உள்ளது என்பதை தமிழர் இந்த நிகழ்வில் காட்டியதை மாற்றுகருத்தும் ஏற்று கொண்டதை எண்ணி தமிழர் பெருமைபட வெண்டும்.

  Reply
 • mutugan
  mutugan

  நேற்றைய ஊர்வலத்தில் கலந்து கொண்ட பலர் தாம் சனங்களின் துன்பம் சகிக்க முடியாமலே கலந்து கொண்டதாகவும் தங்களுக்கு சுரேந்திரன் என்ன பேசினார் என்பது தெரியாதெனவும் ஆனால் எங்கள் தலைவர் பிரபாகரன் எமக்கு தமிழ் ஈழமே வேண்டும என கோஸமிட்டதை கேட்க நேர்ந்ததாகவும் அதனால் இனிமேல் இப்படியான ஊர்வலங்களுக்கு போக விருப்பமில்லையெனவும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

  Reply
 • thurai
  thurai

  போரிற்கும், வறுமைக்கும் பயந்து மேற்குலகில் வந்து குடியேறிய ஈழத்தமிழர் நாங்கள்தான் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டியதே இந்த பாரிய ஊர்வலம்.

  ஆயுத பலத்தால் மட்டுமே உலகை வெல்லுவோம் எனப் புறப்பட்டவர்கள், அழுதாவது நமது உறவுகளின் உயிர்களைக் காப்பாற்றுவோம் என உலகின் காலடியில் விழுந்து மண்டியிட்டநாள்.

  துரை

  Reply
 • ranjan
  ranjan

  mutagun,
  நண்பர் அவர்களே ஊர்வலங்களுக்கு போக விருப்பமில்லையென சொன்னலர்களக்கு நான் ஒரு கருத்தை வெளியிட விரும்புகிறேன் நீங்கள் பி ரி எப் கூட்டங்களுக்கு கட்டாயம் பொக வேண்டும் அவர்களுடன் உறுப்பினராக சேர வேண்டும் அங்கே புலிகளின் தலைவர் புலிக் கொடி பற்றி எல்லாம் உங்கள் கரத்துக்களை வைக்க வேண்டும் – ஊர்வலத்தில் பிரபாகரன் தலைவர் என்று சத்தம் போடும் போது அவர் என்ன சேய்தார் என்று திருப்பி கேட்க வேண்டும். அல்லத இவர்கள் பிரபாகரன் எங்கள் தலைவர் இல்லை என்று சத்தம் போட வேண்டும்.

  ஜரோப்பாவில் உங்களுக்குரிய ஜனநாக உரிமைகளை பாவித்தல் அவசியம் இதன் மூலமே ஜனநாயகமும் அபிவிருத்தி பெறும்.

  கூட்டங்களக்கு போகும் போது கமராக்களுடன் பேகவும் படங்கள் எடுக்கவும் கூட்டங்களில் தவறு செய்பவர்களை இது அறிய உதவும்.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  ராஜன் உங்கள் கருத்தை முற்றுமுழுதாக ஆமோதிக்கிறேன். புலம்பெயர் நாட்டில்லுள்ள மக்களை தீபமும் ஜி தொலைக்காட்சியும் புலிகளின் ஏஜன்டின் நேரடிமுகவர்களாக மாறி ஈழமக்களுக்கு மேல்லதிக அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்ற எனது கருத்தையும் எற்றுக் கொள்வீர்களா?

  Reply
 • ranjan
  ranjan

  சிவப்பு மஞ்சள் நிறம் பிரகாசமானது. இது பண்டைய காலத்திலிருந்தே அனைவரும் பாவிக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் அந்த நிறங்களைப் பாவித்தவர்களே அதை எந்தவொரு அர்த்தத்துடனும் பாவித்திருக்க மாட்டார்கள். இலங்கை கொடியிலும் இதே நிறங்கள் உண்டு. த.வி.கூட்டணியினரும் இதே நிறங்களையே பாவிக்கிறார்கள். கவனத்தை ஈர்க்கும் நிறங்களாகவே இவற்றைப் பார்க்கலாம். தமிழரின் வாழ்வில் இந்நிறங்கள் இரண்டறக் கலந்தவை- மஞ்சளும் குங்குமமும்போல்-

  Reply