வன்னிப்பகுதியிலுள்ள மக்கள் வவுனியாவுக்கு வரும்பட்சத்தில் சகல அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். – அமீர் அலி

ameerali.jpgஅரச கட்டுப்பாடற்ற வன்னிப்பகுதியிலுள்ள மக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதியான வவுனியாவுக்கு வரும்பட்சத்தில் தேவையான நடவடிக்கையெடுக்கப்படும். இவர்களுக்கென இராமநாதன் சுதந்திரபுரம், அருணாச்சலம் விடுதலைபுரம் மற்றும் கதிர்காமர் எழுச்சிக்கிராமம் ஆகிய மீள் குடியேற்ற கிராமங்கள் உருவாக்கப்படவுள்ளது.  இக்கிராமங்கள் ஒவ்வொன்றிலும் 8000 வீடுகள் அமைக்கப்படவுள்ளதுடன் பாடசாலை, வீதி, குடிநீர் மற்றும் மின்சாரவசதி உட்பட சகல அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.  தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அனர்த்த சேவைகள் அமைச்சர் அமீர் அலி பேசுகையில் கூறியதாவது;

அவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதுடன் மருத்துவ வசதியும் செய்து கொடுக்கப்படவுள்ளது. ஊடகங்கள் எண்ணிக்கையையே பார்க்கின்றது. அரசு தரமான தேவையை அம்மக்களுக்கு வழங்க காத்திருப்பதை மறந்துவிடுகின்றது. இது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்றது. நாம் மக்களுக்கு செய்யவேண்டியதை எந்தவித தாமதமுமின்றி உடனடியாக நிறைவேற்றுவோம். இதற்கு தன்னார்வ மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவவேண்டும். சகல மனிதாபிமான சேவைகளையும் அரசு உறுதியாக செய்ய காத்திருக்கிறது என்றார்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    உண்மையில் அரசு தமிழ்மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்று நினைத்தால் அரச கட்டுப்பாடற்ற பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டுக்குள் வரும் மக்களுக்கு ஐ.நா, செஞ்சிலுவைச்சங்கம் போன்ற அரசு சார்பற்ற அமைப்புக்களினூடாக தேவையயான உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும். இதன் மூலம் தான் தமிழ் மக்களின் நம்பிக்கையையும் அரசு பெற முடியும்.

    Reply