விசுவமடு- சுதந்திரபுரம் இடைத்தங்கல் முகாமுக்குள் தற்கொலைத் குண்டுத்தாக்குதல்: 30 பேர் பலி- 64 க்கு மேல் காயம்

vishwamadu_bomb-01.jpgமுல்லைத்தீவு விஸ்வமடு வடக்கு சுந்தரபுரம் பகுதியிலுள்ள இடைத்தங்கல் முகாமில் இன்று முற்பகல் 11. 30 மணியளவில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில்  30 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 64 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

தாக்குதலில்  20 படையினரும் 10 பொதுமக்களுமாக 30 பேர்  பலியாகியுள்ளனர். மேலும்  24 படையினரும், 40 பொதுமக்களுமாக  64  பேர் காயமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தற்கொலைக் குண்டு தாக்குதலினையடுத்து குறித்த பகுதியில் பதற்றம் நிலவுவதாகவும், பாதுகாப்பு படையினர் சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொள்வதாகவும் தெரியவருகிறது. 

சம்பவ இடத்திற்கு மருத்துவ உதவிக்குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களுள் பெரும்பாலும்   சிறுவர்களும், பெண்களும் அடங்குகின்றனர்.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வரும் பொதுமக்களுடன் சேர்ந்து வந்த பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரே இடைத்தங்கல் முகாமில் வைத்து குண்டினை வெடிக்க வைத்துள்ளதாகத் தெரியவருகிறது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வரும் மக்களைச் சோதனைக்குட்படுத்தும் இடத்திலேயே இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.

ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் விடுதலைப் புலிகள் நடத்தியுள்ள முதல் பெரிய மனித வெடிகுண்டுத் தாக்குதல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டில் இராணுவப் பேச்சாளர்

udaya_nanayakkara_.jpgசிவிலியன்களை இலக்குவைத்து புலிகளால் நடத்தப்பட்ட இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று(09) பிற்பகல் பெளத்தாலோக மாவத்தையிலுள்ள இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் இராணுவப் பேச்சாளர் மேலும் தகவல் தருகையில், புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்களை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி வருமாறு ஜனாதிபதியும், அரசாங்கமும் விடுத்த அறிவித்தலையடுத்து சிவிலியன்கள் வேகமாக வரத் தொடங்கினர். கடந்த சில தினங்களாக நாளொன்றுக்கு சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட சிவிலியன்கள் வந்த வண்ணமிருந்தனர். இந்த அடிப்படையில் நேற்றுக் காலையும், முல்லைத்தீவு சுதந்திரபுர பிரதேசத்தை நோக்கி சுமார் ஐயாயிரம் பொதுமக்கள் வருகை தந்தனர்.

இவ்வாறு வருபவர்களை வரவேற்கவென சுதந்திரபுரத்தில் பாதுகாப்புப் படையினரால் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் சகலரையும் சோதனையிடுவதற்கும், பதிவு செய்துகொள்வதற்கும் என இரு வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கும் சின்னஞ் சிறார்களுக்கும் என தனியான வரிசை ஒன்றும், ஆண்களுக்கு தனியான வரிசை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மக்களை வரவேற்க காத்திருக்கும் படையினர் நிராயுத பாணிகளாகவே கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

புலிகளின் பிடியிலிருந்து தப்பிவரும் பலர் பல நாட்களாக உண்ணாதவர்களாகவும், சில சந்தர்ப்பங்களில் தண்ணீர் கூட குடித்திருக்காதவர்களுமாகவே உள்ளனர். எனவே அவர்களை வரவேற்று சோதனைக்கு உட்படுத்திய பின்னர் அவர்களுக்குத் தேவையான ஆகாரங்கள் கொடுக்கப்படும். அதன் பின்னர் அவர்களின் தகவல் பதிவுசெய்த பிறகு பஸ் வண்டிகள் மூலம் நலன்புரி முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர்.

இந்த அடிப்படையில் நேற்றுக்காலை 5000 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். இவர்களுடன் இணைந்து தஞ்சமடையும் சிவிலியன் போன்றே பெண் தற்கொலை குண்டுதாரியும் வருகை தந்துள்ளார். பெண்களை சோதனையிடும் வரிசையில் வந்த அவரை இராணுவத்தின் பெண் வீரர் ஒருவர் சோதனையிட முற்பட்டபோதே தற்கொலை குண்டுதாரி தன்னிடமிருந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளார் என்றார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த அப்பாவி தமிழர்கள் ஹெலிகொப்டர் மூலம் உடனடியாக கொண்டு வரப்பட்டு அநுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply to BC Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

65 Comments

  • mutugan
    mutugan

    அவர்களுக்கு( புலிகளுக்கு) பைத்தியம் உச்சத்தில் வந்து நிற்கிறது. தமிழர்கள் பாம்புக்கு பால் ஊற்றி வளர்ப்பது போல் புலிக்கு பொன்னும் பொருளுமாய் அள்ளிக் கொடுத்தோம். படித்த படிப்பை எல்லாம் புலியின் நாச வேலைகளுக்கு உரமாக்கினோம். மிருகங்ஙளை போலவே இரத்தவாடையிலும் அவலக் குரல் கேட்டும் மகிழிந்திருந்தோம். அவை தொடர வேண்டும் என்றுதானே ஊர்வலங்கள் போகின்றோம். புலி ஆதரவாளர்களுக்கு இப்ப சந்தோசமாயிருக்கும். தலைவர் வழியில், நெறியில் போராட்டம் தொடர்கிறது!

    Reply
  • accu
    accu

    முருகன், நீங்கள் கூறியது நூறு வீதம் உண்மை! புலிகள் ஜென்மத்துக்கும் திருந்தப்போவதில்லை. தமது அழிவுக்கு முன் பெருந்தொகையான் மக்களை அழிக்கப்போகிறார்கள்.மூர்க்கனும் முதளையும் கொண்டது விடா.

    Reply
  • palli
    palli

    அந்த போராட்டமே புலிக்கு திரும்பவும் ஆப்பு வைத்து விட்டதால் சிலரது இல்லத்தில் சோககீதம். பலரது வீட்டில் ஏமாற்றம்.

    Reply
  • padamman
    padamman

    தாங்கள் பயங்கரவாதிகள் என்பதை மிண்டும் ஒரு முறை நிறுவித்துள்ளார்கள். இங்கு ஊர்வலம் போனவர்கள் கொடி பிடித்தவர்கள் எல்லோரும் இப்போ என்ன சொல்லப்போகின்றர்கள்? இவர்களை இலங்கை அரசு தற்கொலையாளி மூலம் கொலை செய்தர்கள் என்று இனியும் கவனயீர்ப்பு நடத்துங்கள்.

    Reply
  • CHOKKALINGAM
    CHOKKALINGAM

    SO U DECIDED THIS ALL DONE BY LTTE?
    WHYCANT THE GOVERNMENT SET UP SOME IDPS FORSFULLY?
    DONT THINK ALWAYS AGAINS PULI.
    ANY SINGLE TAMILAN DIDNT GO RALLEYS IN SRILANKA BUT WE DID FOR OUR BLOODS, I THINK YOU MAY NOT FROM ORIGINAL “MARATHATHAMILAN”

    Reply
  • SUDA
    SUDA

    புலிகளின் அராஜகத்துக்கு அளவே இல்லையா? பிரபாகரனதும் அடியாட்களதும் பேயாட்டத்துக்கு மக்களை எப்படியெல்லாம் பலியெடுக்கிறார்கள். தமிழ் நாட்டிலே குமுறியழுது படம் காட்டும் வை.கோக்களும் புலம்பெயர் தேசங்களில் உண்டியல் நிரப்பும் ஆசாமிகளும் என்ன சொல்லப் போகிறார்கள்?
    உயிரைக் கையிலே பிடித்துக் கொண்டு தப்பி வந்த அந்த குழந்தைகளும் பெண்களும் வயோதிபர்களும் அந்தக் கையவர்களுக்கு (புலி) செய்த குற்றம்தான் என்ன?

    அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும். மனுநீதி தவறிய மிருகங்களுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டிய நாள் நெருங்கி விட்டது. புலம்பெயர் தளத்தில் இன்னும் அந்த மிருகங்களுக்காய் வக்காளத்து வாங்கும் கனவான்களுக்கும் இந்தப் பலி பாவத்தில் பங்கு உண்டு. இறைவா அக்கிரமக்காரர்களுக்கான தண்டனையை கண் முன்னாலேயே காட்டி விடுவாயாக. அப்போதும் இனிவரும் தலைமுறையாவது அதைச் செய்யாமல் இருக்கும்.

    Reply
  • Mr. Cool
    Mr. Cool

    இது Thatstamil இதழில் வெளிவந்த பின்னூட்டம். இத்தகவல் புறந்தள்ளக் கூடிய தகவலாக எனக்குப் படவில்லை. அதனால் தான் இதை இங்கே இணைக்கின்றேன்

    புலிகளால் மனிதக்கேடயங்களாக பாவிக்கப்பட்ட மக்கள் புலிகளின் பிடியை தகர்த்தெறிந்து கொண்டு பாதுகாப்பு தேடி அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் வரும் நிலையில், தாம் தனிமைப்பட்டு விடுவோம் தங்களை இராணுவம் இலகுவாக அழித்துவிடும் என்ற அச்சத்திலேயே புலிகளின் பிடியை உடைத்துக்கொண்டு வெளியேறும் தமிழ்மக்கள் மீதே புலிகள் தமது கொலைவெறியை காண்பித்துள்ளனர்

    2…..
    ஒப்பீட்டளவில் அந்த புலிகளோடு உள்ள மக்களுக்கு ஏற்படுகின்ற இன்னல்கள் இல்லைதானே… அதையாவது புலிகள் உணர்ந்து தங்கள் பிடியில் உள்ள மக்களை வெளியேற்றி படைக்கு படையாக நின்று போரிடலாம் தானே..

    அதுதானே உண்மையான வீரமும் கூட….

    அதைச் செய்து அந்த மக்களை அங்கிருந்து வெளியெற்ற புலிகள் கட்டாயம் உதவி செய்யவேண்டும். பல அழிவுகள் நடந்தேறிவிட்டது. அந்த சாதாரண மக்கள் ஆகக்கூடியது இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மக்களோடு ஒப்பீட்டளவில் இன்னல்களை குறைத்து வாழ புலிகள் கட்டாயம் அந்த மக்களை வெளியேற்ற வேண்டும்

    Reply
  • palan
    palan

    …. LTTE has once again shown its true colours and stripes. Dears Thol. Thirumavalavan, Pala Nedumaran, Vaiko, Kanimozhli see what has ur LTTE done!.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    எவ்வளவோ கொடுமைகளையும் கொடுரங்களையும் முப்பது வருடங்களாகப் புலிகள் செய்தார்கள். இனியும் செய்வார்கள். இந்த சில வாரங்களில் புலிகள் அம்பலப்பட்டதை போல் வேறு எந்தகாலத்திலும் அம்பலப்பட்டதில்லை. விசாயிகளின் தாய்போல்யிருந்த குளத்தை உடைத்தார்கள். மக்களை ஓட்டிவிரட்டி குறுகியஇடத்தில் அடைத்துவைத்து அவலப்படுத்தி கொடுமை புரிந்தார்கள். இறுதியில் ஓர்யிருயிராணுவத்தை கொல்வதற்கு உயிரை காப்பாற்ற வந்தமக்களின் உயிரை பலி எடுக்கிறார்கள். இனியும் வகை தொகையாக எடுப்பார்கள்.புலம்பெயர் தமிழருக்காவது கொஞ்சம் விவஸ்தை வேண்டாமா ?
    யாருக்காக ?ஊர்வலம். யாருக்காக? ஆர்ப்பாட்டம்.இனியாவது கோஷத்தை மாற்றிப் போடலாமே !பிரபாகரனே நாட்டை விட்டு ஓடு ! புலிகளே !! பிடியுள்ளமக்களை விடு!!!.

    Reply
  • Kathr
    Kathr

    Dear Friends,LTTE is a Mafia type Criminal movement.If any one …………..is expect to rehabilate it or try to change its attitude is impossible.Not only that the …………..rulling class have been able to decide the destination of the poor Srilankan tamil people up to now.But infuture they have lost that capacity and they cant control the tamil people any more. It is a good start for the future of Srilankan tamils and particularly srilankan people.

    Reply
  • Nathan
    Nathan

    தொடரும் மனித அவலம்….
    இன்று தொடர்ச்சியாக மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்¨.

    பாதுகாப்பு வலயத்தினுள் வந்தவர்கள் வடிகட்டி காணாமல் போகின்றனர். புலிகளின் குடியிருப்பு என்ற போர்வையில் வெளிநாட்டின் தொடர்பு கொண்டவர்களின் வசதியான வீடுகளும் தாக்கப்படுகின்றன. கொல்லப்பட்ட நபர்கள் ஆங்காங்கே புதைக்கப்படுகின்றனர். காயப்பட்டவர்கள் தனித்தே வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர். அரசின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வெள்ளைக் கொடியுடன் வருபவர்களையே அரசபடை சுட்டிருக்கின்றது.

    இவைகள் வெறும் தரவுகள் அல்ல மாறாக ஒரு கிராம மக்கள் எதிர்கொள்ளும் அவலம். புலிகளைக் கொல்கின்றோம் எனக்கூறிக் கொண்டு இனவழிப்பை மேற்கொள்கின்றது சிறிலங்கா பாசீச அரசு.

    தமது உறவுகளை அடைக்கலம் கொடுத்த வீடுகூட இனவெறி அரசின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றது. ஆக பெரிய வீடுகள் வைத்திருப்பதும் புலிகள் எனக் கூறப்படுகின்றது. இதனை எம்மவர்களும் புலிகள் இலங்குதான் தாக்கப்பட்டதாக பிரச்சாரம் செய்கின்றனர்.

    அரசபடையின் யுத்த தந்திரம், புலியெதிர்ப்பாளர்களின் அரசியல் தந்திரம், புலிகளின் யுத்த தந்திரம் இவைகள் மக்களை காவு கொள்வதில் தான் முடிகின்றது.

    மீண்டும் வலியுறுத்துவோம், யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்து, நிவாரணம் வழங்கு, படைகளை முடிக்கு, புலிகளே மக்கள் குடியிருப்புகளை விட்டு உங்களால் முடிந்த முறைகளில் போராடுங்கள்.

    Reply
  • Jenita
    Jenita

    புலிகளால் மனிதக்கேடயங்களாக பாவிக்கப்பட்ட மக்கள் புலிகளின் பிடியை தகர்த்தெறிந்து கொண்டு பாதுகாப்பு தேடி அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் வரும் நிலையில் தாம் தனிமைப்பட்டு விடுவோம் தங்களை இராணுவம் இலகுவாக அழித்துவிடும் என்ற அச்சத்திலேயே புலிகளின் பிடியை உடைத்துக்கொண்டு வெளியேறும் தமிழ்மக்கள் மீதே புலிகள் தமது கொலைவெறியை காண்பித்துள்ளனர்> இதுதான் உண்மை. ஐயா அம்மா தாய் தகப்பன்மாரோ இனியும் புலிகள் கொடி பணியாரம் எண்டு கதைக்காதேங்கோ. என்ர கிராமத்தில் இருந்தே 120குடும்பங்களை இந்த புலிக் கொலைகாரரால் நாச்சிக்குடாவிலிருந்து பலாத்காரமாகக் கடத்திக்கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். அதில் பலரை இந்த நரபலிப்போர் பலி வாங்கி விட்டது. இந்த மனித வெடிகுண்டு சம்பவத்தில் எனது சொந்தங்கள் மட்டும் 4பேர் பலியாகியுள்ளனர். இது புலிகளால் திட்டமிட்டு அப்பாவிப் பொதுமக்கள் மீது நடாத்தப்பட்ட நரபலி வேட்டை. எந்தப் புலியாவது ஏதாவது நியாயம் சொல்ல விரும்பினால் எனது மெயிலுக்கு கதையுங்கோ. இங்கயிருந்து கொண்டு சும்மா வெட்டி வீரம் கதைக்க வேணாம். நானொரு பெண். நான் துணிந்து இலங்கைக்கு வரத் தயார். இங்கு கொடி பிடிக்கும் கடுதாசிப்புலி யாராவது தயாராயிருந்தால் வாருங்கோ மக்களுக்கு நல்லது நடக்குமெண்டால் அங்க போய்க் கொடி பிடிப்பம். யாரப்பா தயாராயிருக்கிறியள். jenita.arulappu@rocketmail.com

    Reply
  • thurai
    thurai

    புலிகளின் ஈழவிடுதலைப் போர்,
    பணம் கொடுத்து, கொடிபிடித்து,
    தெருவில் படையெடுத்து,தம்பியின் புகழ் பாடும்
    தரணியெங்கும் வாழ் தலையற்ற தமிழரிற்கே.
    ஈழத்தமிழரிற்கல்ல.

    துரை

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    புலிகளின் நரைவேட்டைகளைப் பார்த்த பின்னும் புலிகளுக்கு வக்காலத்து வாங்கும் நாதன் போன்றோரும் இருக்கத் தானே செய்கின்றார்கள். புலிகளின் நரவேட்டையை ஐ.நா அமைப்பு மற்றும் அமெரிக்கத் தூதுவர் கண்டித்ததை கண்டிக்கும் தமிழர் அமைப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. இப்படிப்பட்டவர்கள் இருக்கும் வரை புலிகளின் நரவேட்டையும் குறையப் போவதில்லை.

    புலிகளுக்குத் தோல்விப்பயம் வந்துவிட்டது. அதனால் மனநோயாளர்கள் போல் என்ன செய்கின்றோம் என்று கூட யோசிக்காமல் எதையாவது செய்கின்றார்கள். புலிகள் மக்களைக் கேடயமாக பாவிக்கவில்லையென கோசம் போடுபவர்களுக்கு எனியாவது உண்மைகள் மண்டையில் ஏறுமா??

    Reply
  • SUDA
    SUDA

    திரு. சொக்கலிங்கம்!
    உம்மிட கருத்துப்படி அங்க புலியின் பிடியிலிருந்து தப்பியோடுபவர்களும் அவர்களுக்கெதிரான புலியின் அராஜகத்துக்கெதிராக பிண்ணோட்டம் செய்பவர்களும் உண்மையான மறத்தமிழன் இல்லை. நீர் இங்க சொகுசா இருந்து கொண்டு புலிக்கொடி பிடித்து விட்டதால் மறத்தமிழனாகி விட்டீர் போல? நீர் உண்மையான மறத்திழனாயிருந்தால் அங்க போய் அப்பாவி சனத்த வதைக்காம பாயும் புலியா மாறி சிங்கள இராணுவத்த அடிச்சு விரட்டும். அப்ப நம்புறன் நீர் உண்மையான மறத்தமிழன்தானென்று. இங்க இருந்து கொண்டு அப்பாவி சனங்களின்ர வேதனை புரியாம வீர வசனம் பேசாதேயும். உம்மிட குடும்ப உறவுகள் அங்க இப்ப இருக்குமாயிருந்தா உமக்கு விளங்கும் எங்களின்ர வேதனை. நான் நினைக்கிறன் நீர் மொத்தமா குடும்பத்தோட மேலை நாடு வந்திட்டீர் போல. அதாலதான் ஒரு சேஞ்சுக்காக குடும்பத்தோட வெளியில போய் காலாற நடந்து கொடி பிடிச்சுப்போட்டு அத ஒரு சாதனையா கதைக்கிறீர்.

    நண்பர் சந்திரன் ராஜா!
    அவர்கள் தப்பியோடி வந்த சனத்தோட சனமா வந்து இந்த தாக்குதல நடத்தினது ஓரிரு இராணுவத்த கொல்ற நோக்கில் அல்ல. தங்களின்ர கட்டுப்பாட்டில இருந்து எந்த தமிழ் மகனும் தப்பி வராமல் இருப்பதற்கு ஒரு எச்சரிக்கையாத்தான் இதச் செய்திருக்கிறாங்கள். இப்படியே போனால் தாங்கள் நிரந்தரமா தனிமைப்படுத்தப்பட்டு விடுவம் என்டு பயம் அவையளுக்கு.

    Reply
  • RAHU
    RAHU

    //அரசபடையின் யுத்த தந்திரம், புலியெதிர்ப்பாளர்களின் அரசியல் தந்திரம், புலிகளின் யுத்த தந்திரம் இவைகள் மக்களை காவு கொள்வதில் தான் முடிகின்றது// நாதன்.

    ரஜனிகாந் மாதிரி பெரிய தத்துவம் ஒன்றச் சொல்லிப்போட்டார். உந்தப் புலியின்ர யுத்த தந்திரத்தப் பார்த்தா உடம்பெல்லாம் புல்லரிக்குதப்பா.

    நண்பர் சொக்கலிங்கம்! நீர் மறத்தமிழன் என்று காட்ட விரும்பினா அந்தப்பிள்ள ஜெனிட்டா அங்க போக ஆயத்தமா இருக்குதாம். நீரும் போய் இராணுவத்துக்கெதிரா உம்மிட வித்தையக் காட்டும். சும்மா இங்க இருந்து கொண்டு கொடி ஊர்வலம் என்டு வாய்வித்த காட்டவேண்டாம்..

    Reply
  • Kathir
    Kathir

    Dear Friends and Comrades ,Please come out and speak for the people and in favour of the people.We know two types of political thinking are existing in the world, one is for the mojority of the people and other one is against the people. LTTE is always a fascist and anti people and its activities are ….. rulling class.
    It has suppressed the democracy and pluralism within the Tamil masses.Now it is our duty to fight for the fundamental rights of the Tamil masses.I like to convey my heartfelt condolences to com.Janita and I appreciate her courage to condem the attrocities of reactionary LTTE.

    Reply
  • Kullan
    Kullan

    மறத்தமிழன் குறைத்தமிழன்…. என்று கதைப்பதை விட்டுவிட்டு. எவன் தமிழனைக்கொன்றாலும் துரோகிதான். புலிகள் தான் உண்மையில் தமிழர்களின் துரோகிகள். புலிகளுக்கு நிலம்மட்டும்தான் முக்கியம். மக்கள் அல்ல. ஆகவே இவர்கள் மாவியாக்கள்தான் கொள்ளைக்காரர்கள்தான். தமிழர்களுக்காகப் போராடுகிறோம் என்று சொல்பவர்கள் என்று தமிழர்களைக் கொல்லாமல் இருந்தார்கள்.

    சிலவேளைகளில் நாம் எதியான சிங்களவரை போற்றவேண்டியுள்ளது. அவர்கள் வீரர்கள்தான் நிமிர்ந்து முன்வருகிறார்கள். மக்களுக்குள் என்றும் மறைந்ததில்லை. என்று எத்தனை தடவை புலிகள் நெஞ்சை நிமிர்த்தி முன்நின்று போராடினார்கள். அடிப்பதும் ஒழிப்பதுமாகத்தானே இருந்தார்கள். புலிகளைக் காத்ததோ எமாந்து அப்பாவித் தமிழ்சனமே தவிர புலிகள் என்றும் தமிழ் மக்களைக் காத்ததும் இல்லை காக்கப்போவதும் இல்லை. தமிழனின் தலைவிதி யாருக்கடியில் அடிமையாக இருப்பது என்பதான். வானவேடிக்கைகாட்டி வளர்ந்தது தான் புலிஇயக்கம். மக்கள் என்று தாயார்படுத்தப்பட்டார்கள்? பாலஸ்தீனத்துப் பிறந்தகுழந்தை கூட கல்லெடுத்து எறியும் அளவுக்கு விடுதலை உணர்வு வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இன்றும் எம்மக்கள் அரசப்பக்க போகிறார்கள் தற்கொலைத்தாக்கல் செய்து புலிகள் கொன்றிருக்கிறார்கள் என்றால். விடுதலை புலிகளுக்கே தவிர மக்களுக்கல்ல. இந்தத் தற்கொலை நிகழ்விலிருந்து கூட தலையற்ற தமிழர் இன்னும் புலிகளைப் புரிந்து கொள்ளவில்லை என்றால் இன்றில் இருந்து இன்று வரைமட்டுமல்ல தொடர்ந்து புலிகளால் சவாவுங்கள். 500 ஆண்டுகளுக்கு மேல் அடிமையாகவும் பக்திவாதத்திலும் வாழந்த இனத்தை ஒருநாளில் நாம் எப்படித் திருந்த முடியும். தமிழனுக்கு அழிவு என்றும் புலிகளால்தான். அரசு வென்றாலும் சரி புலிகள் வென்றார்லும் சரி நல்ல தலைமை வரும்வரை தமிழர் என்றும் அடிமைதான்.

    Reply
  • rAMESH
    rAMESH

    Mr.CHOKKALINGAM,
    Thank you very much, for inside information Sir. How come we could not think that these things has been carried out by SLA it self and lost its 20 own buddies. I think its enough is enough. You have your freedom to say what ever you want to say and we have our freedom to believe whatever we want to believe. Now have a good day sir.
    Ramesh

    Reply
  • rAMESH
    rAMESH

    Suda, (நண்பர் சந்திரன் ராஜா!
    அவர்கள் தப்பியோடி வந்த சனத்தோட சனமா வந்து இந்த தாக்குதல நடத்தினது ஓரிரு இராணுவத்த கொல்ற நோக்கில் அல்ல. தங்களின்ர கட்டுப்பாட்டில இருந்து எந்த தமிழ் மகனும் தப்பி வராமல் இருப்பதற்கு ஒரு எச்சரிக்கையாத்தான் இதச் செய்திருக்கிறாங்கள். இப்படியே போனால் தாங்கள் நிரந்தரமா தனிமைப்படுத்தப்பட்டு விடுவம் என்டு பயம் அவையளுக்கு.)
    You are 100% correct. This is show that LTTE will never allow people to leave. People will never learn too.

    Reply
  • அருட்செல்வன்
    அருட்செல்வன்

    விசுவமடுவில் பொதுமக்கள் மத்தியில் புலிகள் மேற் கொண்ட தற்கொலைத் தாக்குதலை அமெரிக்கா வன்மையாகக் கண்டித்துள்ளதோடு சிவிலியன்கள் சுதந்திரமாக நடமாடுவதற்குப் புலிகள் அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளது.

    Reply
  • a.vijayakumar
    a.vijayakumar

    சொகுசு பங்களாவில் வெள்ளையன் காசிலும் வசூலித்த காசிலும் வாழும் சொக்கலிங்கம் அண்ணாச்சி இந்த சூசைட்டு குழந்தையுடன் உங்க கவுரம் போயாச்சு. தமிழீழம் கேட்கும் உமக்கு தமிழே எழுத முடியவில்லை. நீர் உண்மையான தமிழனாக இருந்தால் ஜெனிட்டா அருளப்பு என்ற அந்த தாயின் காலடி மண்ணெடுத்து கும்பிடுங்கள். இத்துடனாவது அந்த வன்னி மக்களின் வேதனை ஒழியட்டும். இன்னும் உங்களுடைய குசும்பு குறையவில்லை. இறைவா! என்ன கூத்து இது ? ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் பட்ட காலிலேயே …….ஐயகோ !!

    Reply
  • Agathy
    Agathy

    1983 ம் ஆண்டு புலிகள் என்ன செய்தார்களோ அதனைத்தான் இப்பவும் செய்து கொண்டிருக்கின்றார்கள். இனி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்ற மக்களை குறிப்பாக பெண்களை இராணுவத்தினர் எப்படிச் சோதனை செய்வார்கள் ? பின்னர் மனித உரிமை மீறுகிறார்கள் என மீண்டும் கொடியைப் பிடிக்கவேண்டியதுதான். இது வரை புலம் பெயர் மக்கள் செய்த மனிதச் சங்கிலி கவனயீர்ப்பு அனைத்தினையும் ஒரு தற்கொலை குண்டுதாரியினால் புலிகள் அழித்து அந்த அனுதாபத்தினை கெடுத்து விட்டார்கள். அதற்குள் புலிக் கொடி பிரபாகரனின் படம் கொண்டு சென்று ஆர்பாட்டம் செய்யவேண்டுமாம். கெடு குடி சொல் கேளாது.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    // புலிகளே மக்கள் குடியிருப்பை விட்டு உங்களால் முடிந்தமுறையில் போராடுங்கள்// நாதன்.
    இவர்கள் என்றுமே மக்களை பிரதிநிதிப்படுத்தியவர்கள் அல்ல. அவர்கள் வேலைத்திட்டம் தமிழ்மக்களுக்கு மட்டுமல்ல மனிதகுலத்திற்கோ அனுவளவும் உதவாதவை. ஏதாவது சொல்லிக்கேட்பார்கள் என்பது முட்டாள்தனம் அறியாமை. இவர்கள்அன்பில்லிருந்து தோன்றியவர்கள் அல்ல வெறிகுணத்தில்லிருந்து தோன்றியவர்கள். இத்தலைமைகள் முற்றுமுழுதாக அழிக்கப்பட வேண்டியவர்கள். விதிவசமாக இணைந்தவர்கள் சமூகநன்மை கருதி கண்காணிப்பில் வைத்து பராமரிக்கவேண்டியவர்கள்.

    // நிரந்தரமாக தனிமைப்பட்டு விடுவோம் என்று பயம் // சுடா ரமேஸ்
    உங்கள் கருத்தே முழுமையானதும் நியாமானதும். தவறை சுட்டிக்காட்டியதிற்கு நன்றி.

    Reply
  • Kullan
    Kullan

    இன்றும் புலிகளினதும் அவர்கள் வால்களினதும் பரப்புரைகளில் இன்றும் மக்கள் மயங்கிப் போவார்களானால் இவர்களை மாதிரி முட்டாள்கள் யாரும் இருக்க இயலாது. சரித்திரத்தைப் புரட்டிப்பாருங்கள் புலிகளின் விசித்திரம் தெரியும். மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் போராடுபவர்கள் புலிகள் என்றால் மற்ற இயக்கங்களுடன் இணைந்து மக்களின் அழிவுகளைக் குறைந்து வெற்றியை இலகுவாக்கப் போராடியிருக்கலாம். அழிக்கப்பட்ட ஒவ்வொரு இயக்கமும் புலிகளால்தான் அழிக்கப்பட்டது.செத்த இளையவர்கள் சிங்களவர்களோ ஆமியோ அல்ல தமிழர் இளையவர்கள் தான் தமிழர்கள் போர் போர் என்று பெருந்தொகையில் அழிக்கப்பட்டார்கள். புலிகள் தமிழர்களைக் காக்கிறார்களா? அழிக்கிறார்களா? சிந்தியுங்கள். ஆமி பலாலியை விட்டு வரும்போது புலிகள் தமக்கு பணமும் பவுணு திரட்டிக்கொண்டிருந்தார்கள். ஓடுங்கள் என்று கூறிவிட்டு தாமும் ஓடினார்கள். போன இடத்திலாவது வாழவிட்டீர்களா? தடிக்குக்காசு ஓலைக்குக் காசு என்று பிடுங்கிக்கொண்டுதானே இருந்தார்கள் வெளிநாட்டு எமது பணங்கள் ரி ஆர் ஓ கொண்டுவந்தாலும் கூட. புலிகள் மாவியாக்களா? விடுதலை போராளிகளா?

    மக்களுக்காகப் போராடுகிறோம் பாதுகாக்கிறோம் என்பவர்கள் எப்போ மக்களைப் பாதுகாத்தீர்கள். அடித்துவிட்டு மக்களுக்குள் ஒழிந்தீர்கள் செத்துக் தொலைந்தது மக்கள் தான். மக்களைப் பாதுகாக்கிறீர்களா? கொல்கிறீர்களா? இன்றும் தமிழ்மக்களை விஸ்வமடுவில் கொன்றிருக்கிறீர்கள். புலிகளே!எதிரியைக் குறைசொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? எம்மைக் கொல்வதற்கும் போராடுவதற்கும் யார் அனுமதி தந்தது? த.வி.கூட்டணிக்கு தான் மக்கள் அனுமதி கிடைத்ததே தவிர புலிகளுக்கல்ல.

    புலிகளின் வளர்ச்சியையும் வரலாற்றையும் எடுத்து நோக்கினால் புலிகள் தாம் வாழ்வதற்காகவும் தம்மைப்பாதுகாத்துக் கொள்வதற்காகவும் எதையும் செய்வார்கள் என்பது விஸ்வமடு தற்கொலைத்தாக்குதலில் இருந்து கூடப்புரியவில்லை என்றால் தமிழன் அழிவதைத்தவிர வேறு வழியில்லை. இதற்காக மற்ற இயக்கங்கள் மகிழ்வுற வேண்டாம். நீங்களும் ஒரே குட்டை மட்டைகள் தான்.

    போராட்டம் போராட்டம் என்று நாம் கொடுத்த சாவுக்கள் போதும். சிங்களதுவேசிகளிடம் இருந்து நாட்டைப் பிடுங்கு புலி அரக்கர்களிடம் கொடுக்க மக்கள் தயாராக இல்லை. கொன்றது போதும் மக்களை வாழவிடுங்கள். எமக்கு அரசும் வேண்டாம் ஆட்சியும் வேண்டாம். இன்று அரசு நாளை வேலுப்பிள்ளையின் மகனா? அரசுக்குக் கீழ் மக்கள் சிலவேளை போராடலாம் வேலுப்பிள்ளையின் மகனிடம் எதுவும் நடக்காது. தமிழர் ஆயுள்கால அடிமைகள்தான். ஆயுதமனநோயும் கொலைவெறியும் கொண்டவர்களிடம் விடுதலை மக்கள் என்று கதைப்பதே முட்டாள்தனமாகும். மக்கள் மனங்களை வெல்லாத புரட்சிக்காக மக்களைத் தயார்படுத்தாத புலியியக்கத்தை ஆதரிக்கும் வெறும் மனிதக்கும்பல்களே! நீங்கள் இலங்கையில் நடக்கும் வானவேடிக்கைகளைப் பார்க்க மட்டுமே சரியானவர்கள். சே கியூபா சீனப்புரட்சிகளை வாசித்துப்பாருங்கள் இடதுசாரிகளைக் காட்டி வளர்ந்த பலிமாவியாக்களைப் புரியும். புரட்சிகள் உலகில் மக்களுக்காகவே இருந்தன. மண் என்பது ஒரு வெறும் பக்கக்காரணியே. யெனிற்றாபோல் எத்தனை பேர் தயார். முடிந்தால் யெனிட்டாவுக்கு மின்னஞ்சல் அனுப்புக.

    Reply
  • accu
    accu

    இங்கே இன்னமும் புலிக்கு வக்காலத்து வங்குபவர் விடுதலை என்னும் பெயரில் உலகளாவிய ரீதியில் நடந்துகொண்டிருக்கும் மிக லாபகரமான வியாபாரத்தின் பங்குதாரிகளே அன்றி வேறு யாரும் அல்ல. இதுதான் இவர்களின் பிழைப்பு. எனவே இப்படித்தான் எழுதுவார்கள். அங்கே கொடும் புலிகளிடமிருந்து மக்களை மீட்பதற்காக தமது உயிர்களை தியாகம் செய்யும் சிங்கள இராணுவச் சிப்பாய்கள்தான் என்னைப் பொறுத்தவரை உண்மையான் மாவீரர்கள்.

    Reply
  • mutugan
    mutugan

    அரசுக்குக் கீழ் மக்கள் சிலவேளை போராடலாம் வேலுப்பிள்ளையின் மகனிடம் எதுவும் நடக்காது”

    அரசுக்குக் கீழ்தான் ஏராளமான விடுதலை அமைப்புக்கள் எழுச்சி பெற்றன. வேலுப்பிள்ளையின் மகனின் கீழ் அனைத்தும் அழிந்தன.எங்க புலிகளுக்கு சொல்லிப்பாருங்கள்.

    Reply
  • palli
    palli

    ஏன் எமது இன(தமிழ்) பெண்பிள்ளைகளையும் சிறுவர்களையும் கொண்டு குவிக்கிறாய் என மகிந்தாவை ஆத்திரமாக கேக்க வேண்டும் போல்உள்ளது. ஆனால் எமது செய்யும் குரங்குதனத்தால் .அவர்கள் (ராணுவம்) கேக்குகிறார்கள் குழந்தை; பெண்கள்; வயோதிபர்கள், கற்பனிபெண்கள் இப்படி புதிது புதிதாக புலிகள் கரும்புலியாய் வருவாதால்(மே த கு அனுப்பி)நாம் யாரைதான், நம்புவது என தெரியாமல் திண்டாடுகிறோம்; சிலரை பாவமென விட்டால் அவர்கள் குண்டுதாரிகளாக மாறி விடுவது தொடர்வதால்…. நாமும் ஒரு குத்துமதிப்பான கொலைகளை செய்யவேண்டாமா என கேட்டால் எம்மால்(தமிழரால்) என்ன பதில் சொல்ல முடியும்.

    இந்த கொழுப்பேறிய புலிகள் இப்போதுதானே கிளினொச்சி ஆள்நடமாட்டம் இல்லாத இடம் அங்கு போய் குதியன் குத்தலாமே. ஏன் யாணையை கண்ட நாய் குலைத்து கொண்டு மனிதரிடம் ஓடிவந்து மனிதரையும் யாணையிடம் காட்டி கொடுப்பது போல் மக்கள் மத்தியில் நின்று மல்லுகட்டுறியள். சில வேளை புலிகளின் பாஸையில் இதுதான் மக்கள் போராட்டமோ?? புலிகள் இரவோடு இரவாக கிளினொச்சி வந்து விட்டால் மக்கள் விடியுமுன் யாழ் சென்றுவிட மாட்டார்களா??

    பணம் வேண்ட வரும் சில்லறை புலிகளிடம் இந்த விடயத்தை பல்லி சொன்னதாக சொல்லாமல் (எல்லாம் ஒரு பாதுகா…) நீங்களாய் கேளுக்கோ… அதுக்கும் எதாவது பாணுக்கை பண்ணியை வைத்து சான்விச்சாய் தருவார்கள். எமனின் சிறியதாய் பிள்ளைகள் அல்லவா அவர்கள்.

    Reply
  • அருட்செல்வன்
    அருட்செல்வன்

    விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து இன்று காலை தப்பி வந்த பொது மக்கள் மீது புலிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 பேர் கொல்லப்பட்டதாகவும் 69 பேர் காயமடைந்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

    காயமடைந்தவர்களில் 31 ஆண்களும் 27 பெண்களும் 11 சிறுவர்களும் உள்ளதாக படையினர் அறிவித்துள்ளனர். இவர்களில் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளவர்கள் விமானம் மூலம் அநுராதபுரம் மற்றும் வவுனியா ஆஸ்பத்திரிகளுக்கு உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை 6.00 மணிக்கும் 7.00 மணிக்கும் இடையில் 400 பொது மக்கள் முல்லைத்தீவு விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து உடையார் கட்டுக்குளம் பிரதேசத்துக்குத் தப்பி வந்து படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களைப் பின்தொடர்ந்து வந்தே புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்;.

    விடுவிக்கப்படாத பிரதேசங்களிலிருந்து தப்பி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இன்று பிற்பகல் 1.30 மணிவரை 1057 பேர் தப்பிவந்து படையினாரிடம் தஞ்சமடைந்துள்ளதாகவம் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று 6599 பேர் தப்பி வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Reply
  • சிறீ ரெலோ ஊடகப்பிரிவு
    சிறீ ரெலோ ஊடகப்பிரிவு

    பாசிசப்புலிகள் தமது சுய நலத்துக்காக மீண்டும் மக்களை படுகொலை செய்து, அரசியல் லாபம் தேடும் படுபாதகச் செயலை சுந்தரபுரத்து இடைத்தங்கல் முகாமிலே அரங்கேற்றியிருக்கிறார்கள். இந்தக் கொடூரச் செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். மனிதாபிமானமற்ற இச்செயலை, நாகாரிகமுள்ள அனைவரும் கண்டிக்க வேண்டுகிறோம். தங்களின் பாதுகாப்பிற்காக அப்பாவி மக்களை கேடயமாகப் பயன்படுத்தும் பயங்கரவாதத்தோடு மட்டும் நின்றுவிடாமல், தமது பிடியில் இருந்து தப்பிச்செல்லும் மக்களையும் படுகொலை செய்யும் கேவலமான இவர்களா தமிழ் மக்களை காப்பாற்றப் போகிறார்கள்? இவர்களா தமிழ் மக்களின் பிரதிநிதிகள்?

    சுந்தரபுரத்திலே, உயிரை மட்டும் கைகளில் பிடித்துக்கொண்டு அரசாங்கத்தின் முகாமிலே தங்கியிருந்த அப்பாவி மக்களையும், அவர்களைப் பாதுகாத்து நின்ற இராணுவத்தினரையும் குறி வைத்து நடத்தப் பட்ட இந்த தற்கொலை தாக்குதலை மனித நேயமுள்ள யாருமே மன்னிக்க மாட்டார்கள். இதை நியாப்படுத்த முயற்சிக்கும் அனைவரும் மனிதாபிமானம் அற்றவர்கள். மக்கள் யாரோடு இருப்பது, யாரைத் தலைவராக்குவது என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, ஆயுதம் தாங்கிய ஒரே காரணத்துக்காக ஆயுததாரிகள் தீர்மானிக்க முடியாது. ஆனால் துரதிஷ்ட வசமாக, தமிழ் மக்கள் யாரை நம்பினார்களோ, அவர்களே அந்த மக்களை அடிமைகளை விடக் கேவலமாக நடத்துகின்ற வரலாற்றைக் கண்டும், வாய் மூடி மௌனமாக இருக்கும் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள், அந்தக் கொடியவர்களின் பிரச்சாரங்களுக்கு துணைபோவதுடன், அவர்களின் அழிவு முயர்சிகளுக்கு நிதியுதவி வழங்குவதும், இதை தட்டிக் கேட்பவரை துரோகிகளாக வர்ணிப்பதும் மனவேதனை அளிக்கும் செயல்களாகும்.

    -அன்று போராட்டதிற்கு புது வடிவம் கொடுத்த எமது தோழர்களையும் தலைவரையும் புலிகள் வாகனத்தோடு வைத்தும், டயர் போட்டும், உயிரோடும் கொளுத்தி நூற்றுக் கணக்கில் கொடூரமாகப் படுகொலை செய்தார்கள். அதை நியாப்படுத்தினார்கள். மக்கள் தட்டிக் கேட்கவில்லை…!

    -மற்ற இயக்கங்களைப் படுகொலை செய்தார்கள்-நியாப்படுத்தினார்கள். மக்கள் தட்டிக் கேட்கவில்லை..!!

    எமக்கு ஆதரவாக வந்த இந்திய அரசை எக்காரணமும் இன்றிப் பகைத்தார்கள்-நியாப்படுத்தினார்கள். மக்கள் தட்டிக் கேட்கவில்லை…!!!

    பின்னர் மக்களையே அடிமகைளாக்கினார்கள்- பணயம் வைத்தர்கள், சுட்டுக் கொலை செய்தர்கள், கப்பம் வசூலித்தார்கள், கட்டாயமாக சிறுவர்களையும், இளைஞர்களையும் தம்மோடு இணைத்தார்கள், பலிக்கடாக்கள் ஆக்கினார்கள்- நியாப்படுத்தினார்கள். மக்கள் தட்டிக் கேட்கவே இல்லை…!!!!

    மேலாக, புலிகள் இயக்கத்தில்நியாத்தை தட்டிக் கேட்ட தமது உறுப்பினர்களை காலத்துக்குக் காலம் நூற்றுக் கணக்கில் படுகொலை செய்தார்கள். துரோகிகள் என்றார்கள். மக்கள் தட்டிக் கேட்கவே இல்லை…!!!!!

    மக்களால் தெரிவு செய்யப் பட்ட அரசியல் தலைவர்களயும் கொலை செய்தார்கள். மக்கள் தட்டிக் கேட்கவும் இல்லை. புலிகள் காரணம் கூறவும் இல்லை.

    இன்று வன்னி மக்களை கேடயமாக்கினார்கள். எவரும் கேட்கவில்லை. அதை விடக்கொடுமை புலம் பெயர் மக்கள் இதை ஆதாரித்ததுதான்.
    ஆனால் தமது மக்களையே தற்கொலை குண்டுதாரியால் கொலை செய்யத் தொடங்கியுள்ளார்கள்.

    மக்களே இனிமேலும்மெளனிகளாக இருக்காதீர்கள்.

    உங்களையும் உறவுகளையும் கொலை செய்யும் உரிமையை யார் இவர்களுக்கு கொடுத்தது?

    எம்மக்களின் தலைவிதியை இந்த நயவஞ்சகர்களிடம் ஓப்படைக்கதீர்கள்.

    தம்மைத் தாமே தமிழ் மக்களின் பிரதிநிதியாகக் கூறிக்கொண்டு, தமக்கு தாமே தேசியத் தலைவர் போன்ற பட்டங்களையும் வழங்கிக் கொண்டிருக்கும் இவர்கள் ஒரு மன நோயாளிகள்.

    இவர்களுக்கு இனிமேலும் வக்காலத்து வாங்கும் அனைவருமே தமிழினத்தின் துரோகிகள்தான். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இக்கொடூரச்செயலை நியாப்படுத்தியதோடு நிற்காமல், கண்டனம் தொரிவித்தவர்களையும் விமர்சித்திருப்பது மிகக் கேவலமான பச்சோந்தித்தனம். துரோகத்தின் உச்சக்கட்டம்.

    மக்களே..! இப்படியான துரோகிகளை இனம் கண்டு ஒதுக்குங்கள். எம்து மக்களை இவ்வளவு காலமும் அழிவுப் பாதையில் இட்டுச்சென்ற புலிகள், இன்று எம்மினத்தை அழிப்பதை தட்டிக் கேளுங்கள். இவர்களிடம் நியாயம் பேசுவது சாத்தானிடம் வேதம் ஓதுவது போன்றதே. நியாயத்திற்கான எமது அரசியல் முயற்சிகளுக்கும், வேலைத்திட்டங்களுக்கும் ஆதரவு தாருங்கள். எம்மோடு அணி திரளுங்கள் என்று அறை கூவல் விடுக்கிறோம்.

    சிறீ ரெலோ ஊடகப்பிரிவு

    Reply
  • mutugan
    mutugan

    விடுதலைப் புலிகள் தற்போது பொதுமக்களை தமது கட்டுப்பாட்டிலிருந்து சிறிது சிறிதாக விடுவித்து வருவதாகவும் அவ்வாறு வெளியேறும் மக்களோடு மக்களாக கலந்து விடுவதற்காகவே அவர்கள் திட்டமிட்டு நடப்பதாகவும் புலம் பெயர் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்னும் என்னென்ன நாச வேலைகளுக்கு மக்கள் முகம் கொடுக்கப் போகிறார்களோ தெரியவில்லை.

    Reply
  • lavan
    lavan

    கடசித்தமிழன்(பிரபாகரன்) இருக்கும் வரை சண்டை நடக்கும்.இது புலிகள் அடிக்கடி சொல்லும் வார்த்தை அழிவு இல்லாமல் தமிழ்ஈழம் எடுக்க முடியாது இதுவும் புலிகள் சொல்லுவதுதான் இப்படியே எல்லோரையும் அழித்து தமிழ்ஈழம் காண்பது தான் தேயும் தலையின் கனவு இந்த கனவை நிரைவேற்ற புலம்பெயர் பிரித்தானியதமிழர் கனேடியதமிழர் சுவிஸ்தமிழர் இப்படி எல்லாதமிழரும்(புலி) சேர்ந்து கனவுகாண்கின்றர்கள்.

    Reply
  • RAHU
    RAHU

    //இந்த கொழுப்பேறிய புலிகள் இப்போதுதானே கிளினொச்சி ஆள்நடமாட்டம் இல்லாத இடம் அங்கு போய் குதியன் குத்தலாமே. ஏன் யாணையை கண்ட நாய் குலைத்து கொண்டு மனிதரிடம் ஓடிவந்து மனிதரையும் யாணையிடம் காட்டி கொடுப்பது போல் மக்கள் மத்தியில் நின்று மல்லுகட்டுறியள். சில வேளை புலிகளின் பாஸையில் இதுதான் மக்கள் போராட்டமோ??// பல்லி

    நன்றி பல்லி. உமது கருத்து நகைச்சுவை உணர்வுடன் இருந்தாலும் யதார்த்தமாக உள்ளது.

    Reply
  • ஜெனிற்ரா
    ஜெனிற்ரா

    அன்பிற்கினிய பின்னூட்ட நண்பர்களே!நேற்றைய எனது குறிப்பில் எனது மின்னஞ்சல் முகவரியையும் இணைத்திருந்தேன். உங்களில் பல நண்பர்கள் எமது கிராமத்து மக்களின் இழப்பின் துயரங்களைப் பகிர்ந்து கொண்டதில் மனமதுக்கு ஒரு ஆறுதலாகவும்; இன்னமும் மனிதநேயம் மரணித்து விடவில்லை என்ற நம்பிக்கையும் வந்தது என்னவோ உண்மைதான். அதேவேளை சில அருவருப்பான மெயில்களும் வந்தன இன்று காலை. அவற்றை அனுப்பிவைத்த நண்பர்கள்மீது கோபமோ வெறுப்போ வரவில்லை. மாறாக பரிதாபம்தான் ஏற்பட்டது. மனித நேயத்தின்; மனித நாகரீகத்தின் கடைசித்துளிகூட இவர்களிடம் காய்ந்து கட்டியாகி விட்டதா என்ற ஆதங்கம்தான் எழுந்தது. நான் எனது மெயில் முகவரியைக் குறிப்பிட்டதன் நோக்கம் அறிவுள்ள தேசம் வாசகர்கள் புரிந்திருப்பீர்கள். இப்படியான சில மட்டதான மெயில்கள் வந்ததையிட்டு நான் துவண்டு விடவில்லை. என் குடும்பத்தினர் எல்லோரும் பார்த்தபின்புதான் அவற்றை அழித்தேன். ஏன் சட்ட நடவடிக்கை எடுத்திருக்கலாமேயென்று நீங்கள் கேட்கலாம். சரி. எடுக்கலாம்தான். எடுத்து…. அதற்கப்புறம்…? மொத்தத் தமிழினத்தின் தலையிலுமே இடி விழப்போகிறதாம் இதிற்போய் இந்தச் சில்லறைத் தனத்திற்கெல்லாம் சட்டமாவது சரித்திரமாவது. அன்பிற்குரிய சகோதரரர்களே! இறுதியாக ஒன்றை தட்டும் சொல்லிவிட விரும்புகின்றேன். நமது தேசத்தின் விடுதலைப் போருக்காக ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டிலுமிருந்து அர்ப்பணிப்புக்களும் இழப்புக்களும் நிச்சயம் ஏற்பட்டுத்தான் இருக்கின்றன என்பதை நாம் யாரும் மறுக்க முடியாது. அந்த வகையில் எனது குடும்பத்திலிருந்தும் நான்கு சகோதரர்கள் வெவ்வேறு விடுதலை அமைப்புகளில் (புலிகளில் ஒரு சகோதரி உட்பட) பங்கு கொண்டு தொலைந்து போனவர்கள்தான். மூன்று சகோதரர்கள் சகோதர இயக்கப் படுகொலைக்குப் பலியாகிப் போனவர்கள்தான். இதையெல்லாம் ஏன் சொல்கிறேனென்றால் 86ம் ஆண்டு முதற்கொண்டு இந்தப் போராட்டம் ஏற்படுத்திய காயங்களும் வேதனைகளும் எமது குடும்பத்திற்கு தந்த மனச்சோர்வைப்போல் பல்லாயிரம் குடும்பங்களும் அனுபவித்திருக்கும். தயவு செய்து நீங்களும் காயப்பட்ட அந்த மனித மனங்களை வக்கிர எழுத்துக்களாலும் சீண்டாதீர்கள். இதற்குமேல் தொடர்ந்து இவை தொடர்பாக நான் எழுதவது முறையல்ல என்றே நினைக்கிறேன். வேறெப்போதாவது ஒரு பயனுள்ள விவாதங்கள் தொடருமிடத்தில் சந்திப்போம்.

    -ஜெனிற்ரா-

    Reply
  • Nathan
    Nathan

    விடப்பட்ட பின்னூட்டங்கள் சில கருத்துக்களை வலிமையாக தாங்கி வந்திருக்கின்றன.

    அதாவது பாசீசத்தை ஏற்றுக் கொள் என்பதாகும். வெளிப்படுகின்ற பாசீசம் என்பது பலவகைப்படுகின்றது.
    அரசபயங்காரவாதம்
    புலிகளின் பாசீசம்
    மற்றும் மாற்று இயக்கங்களின் மக்கள் வீரோத நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதாகும்.

    இன்று சிறிலங்கா அரசின் பாசீச நடவடிக்கை என்பது தமிழ் மக்களை புலிகளிடம் இருந்து மீட்பதாக் கூறிக் கொண்டு தனது பாசீசத்தை தொடர்கின்றது. தான் தொடர்ந்திருக்கும் யுத்தத்தை விமர்சிப்பவர்கள் எல்லோரையுமே புலி முத்திரை குத்துகின்றது. 11/9 பின்னரான பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் புரிவதாக கூறிக் கொள்கின்ற இவர்கள் ஏகாதிப்பத்திய பித்தலாட்டத்தை தனது பாசீச நலனுக்காக தமிழ்மக்கள் மீதான இனவழிப்பை பயங்காரவாதத்திற்கு எதிரான போர் என்ற மாயைக்குள் வைத்திருக்க விடாப்பிடியாக செயற்படுகின்றது. சிறிலங்கா அரசு பாசீசத்திற்கு எதிராக சிறு குரல்களைக் கூட புலியைப் பாதுகாப்பதாக கூறுகின்றது. (இவர்களைப் போலவே)

    தமிழ் புலியெதிர்ப்பாளர்களைப் பொறுத்தவரை அரசு என்னசெய்கின்றதோ அவற்றை கண்மூடித்தனமாக புலிகளுக்கு எதிரான யுத்தமாக பிரஸ்தாபிக்கின்றனர். அங்கு மக்கள் படும் துன்பங்களை இட்டு எவ்வித மனவுறுத்தல்கள் இல்லாமலே அரச பாசீசத்தை வரவேற்கின்றனர். தமிழ் புலியெதிர்ப்பாளர்களும் அரசைப் போலவே புலிமுத்திரை குத்துகின்றனர்.

    இதே போல புலிகளின் பாசீசத்தை விமர்சித்தால் அரசகைக்கூலிகள் என புலிகளும் முத்திரை குத்துகின்றனர்.

    இவ்வாறு முத்திரை குத்துபவர்கள் மக்களுக்கான தேவை இருக்கின்றது என்பதை எவரும் ஏற்கத்தயாராக இல்லை.

    நாம் வலியுறுத்துவது அனைத்து விதமான பாசீச சக்திகளிடத்தில் இருந்து விடுதலையாகும்.
    இங்கு புலிகளின் அதிகார வர்க்கம் அழிவது பற்றிய பிரச்சனை அல்ல. புலிகளின் அடிமட்டப் போராளிகள் அழிவது பற்றிய பிரச்சனை மற்றையது
    பொதுமக்களின் அழிவைப் பாதுகாப்பது. அடுத்ததாக தமிழ் மக்களுக்கான உரிமையை எதிரிகளிடம் சோரம் போகாது எவ்வித விட்டுக் கொடுப்புக்கும் இடம் கொடாது சுயநிர்ணய உரிமைக்காக போராட்டத்தை அனைத்து தேசிய இனங்களின் ஐக்கியத்துடன் தொடர்வதாகும்.

    // புலிகளே மக்கள் குடியிருப்பை விட்டு உங்களால் முடிந்தமுறையில் போராடுங்கள்// இதில் என்ன தவறிருக்கின்றது? அரசின் தகவலின் படி 900 குறைவான போராளிகளே களத்தில் இருப்பதாக கூறுகின்றது. அப்படியாயின் மற்றைய போராளிகள் எங்கே?
    அரசிற்கே தெரிந்து விட்டது புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் புலிகளின் தலைமைத்துவம் மற்றும் பெரும்பான்மையான போராளிகள் இல்லை என்பதை. இதிலிருந்து தெரிவது என்ன புலிகள் தலைமை தம்மை பாதுகாத்துக் கொள்வார்கள். ஆனால் அப்பகுதியில் வாழும் மக்கள் நிலைதான் என்ன? அப்படி இடைத்தங்கல் முகாமிக்கு வந்தாலும் அங்கு நடப்பது என்ன?

    Reply
  • santhanam
    santhanam

    மனிதத்தை காப்பாற்றுங்கள் உலக போரட்ட நகர்வுகளை வைத்து எமது மக்களை பகடகாய்களாக பாவியாதீர்கள் மக்களை சுதந்திர நகர்வுக்கு விடவும் இதற்கு புலம் பெயர்ந்த தமிழர் அனைவரும் ஆர்பட்டம் செய்யவும்.இல்லையேல் பேர் அழிவு முல்லைத்தீவில் உள்ள மக்களிற்கு ஏற்படும் உடனே தடுக்கவும்.

    Reply
  • nagan
    nagan

    ஐயா தா.பாண்டியன் அவர்களே
    ஐயா வைக்கோ அவர்களே
    ஐயா ராமதாசு அவர்களே
    ஐயா திருமாவளவன் அவர்களே
    தங்களுக்கு இன்னுமா தெரியவில்லை ஈழத்தில் நடப்பது
    இன்னும் ஏன் வாய் மூடி மெளனியாக இருக்கிறீர்கள் உங்கள் பொன்னான வாயால் உங்கள் தமிழீழத் தலைவர்களுக்கு கூறுங்கள் பாவம் எமது அப்பாவித் தமிழ்மக்களை விட்டுவிடுங்கள். புலம்பெயர்ந்த நாங்கள் உங்களுக்கு பணம் பொன் பொருள் எல்லாம் தருகிறோம். இன்னும் என்வெல்லாமோ தருகிறோம். எமது மக்களை மட்டும் விட்டுவிட சொல்லுங்கள். தமிழனை தமிழன் கொல்லுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும் நீங்கள் யாருக்காக போராட்டங்கள் நடத்துகிறீர்கள். சிந்தியுங்கள் தலைவர்களே சிந்தியுங்கள்

    Reply
  • mutugan
    mutugan

    சிறீ ரெலோவினரே தாஸ் குழுவினரின் சதிக் கொலைகளுக்கு ஒரு நியாயமும் சொல்லாமல் இப்ப வந்து யாருக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறீர்கள்?

    Reply
  • Nathan
    Nathan

    மேல் தரப்பட்ட செய்தியின் உண்மை நிலை என்ன? இதில் எவ்வளவு உண்மை இருக்கின்றது. கூற வருவது ஒன்றுதான் அனைத்துவகை பாசீச சக்திகளையும் நம்ப முடியாது என்பதேயாகும்.

    Reply
  • SUDA
    SUDA

    சகோதரி ஜெனிற்றா!
    நான் எனது பின்னோட்டங்களைவைக்கும்போது நான் ஒரு மனிதன் என்ற யதார்த்தத்தில் நின்று சிந்தித்த பிறகுதான் என் பதிவுகளை வைக்கின்றேன். இனம், ஜாதி, மதம், பிரதேசம், அரசியல் இவற்றின் பெயரால் எனது சிந்தனைகளை நான் மாசுபடுத்திக் கொள்வதில்லை. தேசத்தில் பின்னோட்டம் வைக்கும் பெரும்பாலான ஏனைய சகோதரர்களும் அப்படித்தான்.

    மனிதனாக இருந்து சிந்திப்பவர்களால் மாத்திரம்தான் மனித விழுமிய வரைமுறைகளுக்குள் நின்று சிந்தித்து நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை முன்வைக்க முடியும். மற்றையவர்களிடம் நாம் இதனை எதிர்பார்க்க முடியாது. அவ்வாறு எதிர்பார்த்தால் நாம்தான் முட்டாள்கள். எனவே இனவெறி பிரதேசவெறி இயக்கவெறி இவைகளால் இதயமும் மூளையும் மாசுபட்டுப் போனவர்களின் வதைச்சொற்கள் நியாயத்தைச் சொல்வதிலிருந்தும் உம்மைத் தடுத்துவிட வேண்டாம்.

    நாம் மனிதர்கள். எமது மனித மொழிக்கும் பேச்சுக்கும் தடை கிடையாது. அதை அடக்கும் சக்தி எதற்கும் யாருக்கும் கிடையாது. ஏன்? வேட்டுப்பற்களுக்கும் கோரப்பற்களுக்கும் கூட.

    மனிதனின் தாகம்
    தடையில்லா தேசம்

    Reply
  • jeyasuthan
    jeyasuthan

    திட்டமிட்ட அடிப்படையில் ஸ்ரீலங்கா அரசால் பரப்பப்படும் பொய் பிரச்சாரங்கள்!

    நேற்று : விஸ்வமடுவில் குண்டு வெடிப்பு மக்கள் இறப்பு

    இன்று : புலிகள் சுட்டு மக்கள் இறப்பு

    நாளை : ??? வேறு விதமாக மக்கள் கொல்லப்பட்டாலும் அதிர்ச்சியானதல்ல??

    நேற்றைய குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 28பேர் பலியானதாக ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டது. இதில் 20 ஸ்ரீலங்கா இராணுவத்தினரும் 8 பொதுமக்களும் இறந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் எந்தவொரு சுகந்திர ஊடகத்தினையோ அந்த இடத்திற்கு அனுமதிக்கவில்லை ஆனால் வழமைபோல் பாதுகாப்பு அமைச்சின் செய்திகளையே அடிப்படையாக கொண்டு செய்திகள் வெளியிட்டது சர்வதேச செய்தி நிறுவனங்கள். சர்வதேச செய்தி ஊடகங்களுக்கும் வேறு வழியில்லை சுகந்திரமாக செய்திகள் பெறவும் முடியாது அப்படிப் பெறமுடிந்தாலும் சொல்ல முடியாது. புலிப்பட்டம் சூட்டி விடுவார்கள். தற்பொழுது சில செய்திகள் வெளியாகியுள்ளன என்னவெனில் குண்டு வெடிப்;பையடுத்து பயத்தில் இரணுவம் சுட்டதிலேயே பெருமளவானோர் இறந்ததாக அச்சம்பவ இடத்திலிருந்து தப்பிய சிலர் ழூலமாக தெரியவருகின்றது? அத்துடன் இன்னுமொருவிடயத்தைக் கவனிக்க வேண்டும் வைத்தியசாலை வட்டாரம் எவையும் இந்ந எண்ணிக்கையை உறுதிசெய்யவில்லை?

    சரி அப்படி தான் 20 இராணுவத்தினர் இறந்து இருந்தால் ஏன் ஒருவரை சோதனை செய்ய இவ்வளவு பேர்?

    அத்துடன் 20 இராணுவத்தினர் இறந்து இருந்தால் ஏன் வழமைபோல் மறைத்திருக்கலாமே? அப்படியானால் வேறு இடங்களில் இறப்பதில்லையோ? ஏன் சொன்னது எண்ணிக்கையை?

    மருந்து அனுப்பவே மறுக்கும் அரசு விமானமுலம் காயப்பட்டவர்களை அகற்றியதாக அறிவித்தது. ஏன்?

    இப்படி பலகேள்விகளுக்க விடைகாண வேண்டு;ம்?

    இந்த சம்பவத்தினை சர்வதேசத்ததை நம்பவைத்த ஸ்ரீலங்கா அரசு இன்று மீண்டும் நாடகமாடியது. ஏனவே நாளையும் செய்தால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

    Reply
  • BC
    BC

    //Jeyasuthan- திட்டமிட்ட அடிப்படையில் ஸ்ரீலங்கா அரசால் பரப்பப்படும் பொய் பிரச்சாரங்கள்! //
    ஆம். தீபம், GTV செய்திகளை மட்டும் நம்புங்கோ. தொடர்ந்தும் அழிவுக்கு பண உதவியும் செய்து புலிக் கொடியுடன் ஊர்வலத்துக்கும் வாங்கோ .

    Reply
  • chandran.raja
    chandran.raja

    ஜெயசுதன் இப்படியான சந்தேகங்கள் புலம்பெயர்தமிழருக்கு கூடாப்பிறந்தவை. இந்த சந்தேகங்கள் அறிவாளிகளையும் விட்டுவைக்கவில்லை. சாதாரணமக்கள் எம்மாத்திரம். ஒரு சிலருக்கு இப்படியான சந்தேகங்கள் தொழிலும் கூட. நீங்கள் எழுதியதை நீங்களே திருப்பிபடிக்கும் காலம் சமீபிக்கப்படும் போது நீங்கள் எதிரிக்கு காய்உறுட்டி வெற்றிகண்டதையிட்டு மகிழ்சிகொள்வீர்களா? தமிழ் இனத்தின் எதிரி இவ்வளவு காலவரை எம்மினத்தில்லேயே உள்ளான் என்பதை விரைவில் கண்டுகொள்வீர்கள்.

    Reply
  • accu
    accu

    ஜெயசுதன் நீங்கள் சொன்னதெல்லாம் உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள மக்களை வெளியேற விடவில்லை [விரும்பியவர்களை] என்பதையும் மறுக்கிறீர்களா? ஆம் என்று சொல்லி உங்கள் பாவக்கணக்கை கூட்டாதீர்கள். அல்லது புலிகளின் ஆட்சி நடக்கும் இடத்தில் அவர்களின் சட்டங்களுக்கு அமைவாகத்தானே மக்கள் நடக்கவேண்டுமென்று பசப்புக் கதை சொல்லாதீர்கள். வன்னியில் நடக்கும் கொடுமைகளுக்கு விடிவு விரைவில் வரும் அப்போ பல உண்மைகளும் வெளிவரும். நிச்சயம் உங்களுக்கும் உறைக்கும் [மனச்சாட்சி] நன்றி.

    Reply
  • mutugan
    mutugan

    தீபம் ரிவிக்கு முன்னாலும் போராட்டங்கள் தேவை.

    Reply
  • jeyasuthan
    jeyasuthan

    என்னிடம் கேள்வி கேட்டவர்கள் எல்லோருக்கும், சிறிலங்கா அரசாங்கம் ஒவ்வொருநாளும் சொல்லும் பொய்களுக்கு உங்கள் ஒருவர் தரப்பிலிருந்தும் பதில் இல்லை. புலிகள் பொய் சொல்வதாக மட்டும் ஆராய்சி செய்வதில் அதிகம்நேரம் செலவிடுகிறீர்கள்.

    ஒரு மாதத்துக்கு முன் குப்பி, தகடு,நெஞ்சில் துப்பாக்கி ரவை தாங்கியுடன் மூவரை வைத்து சரணடைந்ததாக பிரச்சாரம் செய்த சிறிலங்கா அரசின் பிரச்சாரத்தை வவுனியாநீதி மன்றமும், அவர்களின் வெளிநாட்டிலுள்ள உறவினர்களும் பார்த்து அதிர்ந்த போது அரசின் இத்தகைய பிரச்சாரங்கள் பிசுபிசுத்தன. எப்படி குப்பியை கழுத்தில் வைத்தபடி பேட்டி எடுப்பார்கள்? புலி எண்டு காட்ட எத்தனை நாடகங்கள்? புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு தாக்கிவிட்டு முன்னர் வானிலிருந்து எடுத்த கோப்பு காட்சியை கனகச்சிதமாக காட்டிய போதும், புலிகள் கிளாஸ்ரர் குண்டு அடிப்பதாக பல மாதங்களுக்கு முன்னர் சொன்ன போது எவரும் ஏறு எடுத்தும் பார்க்கவில்லை.அதனைநேரடியாக ஜ.சி.ஆர்.சியும் , ஜ.நாவும் சொன்னால் தான் உலகம்நம்ப தலைப்பட்டது.

    நீங்கள் எல்லாம் சிறிலங்கா அரசாங்கம் ஒத்துக்கொண்டால் தான் நம்புவீர்கள் எனத்தெரியும். புலிகள் ஒருவரையும் விடவில்லையென்றால் எப்படி ஆரம்பத்தில் ஆயிரக்கணக்கானவர்களும், இப்போது பத்தாயிரத்தையும் தாண்டி மக்கள் வந்தனர்? புலிகள் தங்களது முகாம்களையோ, தம்து பொருDகளையோ, உடைக்காமல், எரிக்காமல், அந்தப்படி விட்டு விட்டு போகும் போது அதுக்கே நேரமில்லாமல் ஓடும் போது எப்படி பொதுமக்களை விடாமல் வைத்திருக்க சென்றி போட்டிருக்க முடியும்? வன்னியில் இப்போது வெளியேறுபவர்கள் கூட வெளியேற நினைக்கவில்லை. அரசாங்கமே எல்லோரையும் கொல்லப்போவதாக அறிவித்த பின்னர் யார்தான் தொடர்ந்தும் இருப்பார்கள் அது கூட இந்த மக்கள் வெளியேற்றத்துக்கு காரணம்.
    அதைவிட இந்தியா அனுப்பிய அரசி மட்டுமே உணவாக கஞ்சி மட்டும் குடிக்க கூடியநிலையில் மக்கள் எப்படி தொடர்ந்து அங்கு இருப்பார்கள். ஆரம்பத்தில் கத்தரிக்காயும், ப்யிற்றங்காயும் மட்டும் கால் கிலோ 300ரூபாவுக்கு இருந்தது இப்போது அதுவுமில்லை. இப்போது அரசியை மட்டும் வைத்து எப்படி உயிர்வாழ முடியும்.

    பசி வந்திட பத்தும் பறந்து போகும் எனச்சொன்னது பலித்துவிட்டது. விடுதலையை விட உயிர்வாழதலும், உயிரும் மக்களுக்கு தேவைப்படுகிறது. அதுதான் நடப்பது நடக்கட்டும் என்று மக்கள் வெளீயேறத்தொடங்கி விட்டனர். புலியில் கோபப்படும் தாங்கள் எல்லோரும் மக்களை கேடயமாக பாவிப்பதாக சொல்லும் தாங்கள் எல்லா வாய்ச்சவுடால்களும், சிலநாட்களுக்கு முன்னர் கெல உறுமய பேச்சாளர், ஊடகத்துறை அமைச்சர், ஏன் கோத்தபாயவும் கூட வன்னியில் இருக்கும் எல்லோரும் பொதுமக்களில்லை. எல்லோரும் பயங்கரவாதிகள், பிரபாகரனை காப்பாற்றுவதற்காக இருப்பவர்கள், பங்கர் வெட்டிக்கொடுத்தவர்கள் என சொன்ன போது நீங்கள் எல்லோரும் மப்பில் இருந்தீர்களா? அல்லது சுயநினைவில்லாமல் இருந்திர்களா? அப்போது வந்திருக்க வேண்டும் இந்த கோபம் ஏன் வராமல் போனது?

    சும்மா புலி எதிர்ப்பை காட்டி மக்களை கரிசனை எனச்சொல்லி சிறிலங்காவுக்கு வக்காலத்து வாங்குபவர்களே புலி எதிர்ப்புக்கு வெளியே வந்து மக்கள் நலன் பற்றி சிந்தியுங்கள். எது சரி? எது பிழை என்பது பற்றி விவாதியுங்கள்?

    இப்போது தான் 4வருடங்கள் கழிந்து 8மாதம் பதவி ஏற்ற பின்னர் பிள்ளையானுக்கே சிவபெருமான் சிவராத்திரி காட்டியிருக்கிறார். உங்களுக்கு இன்னும் கொஞ்சக்காலம் எடுக்கும். தேவைப்பட்டால் சின்னமாஸ்டர், ஞானோதயம் பெற்றுக்கொள்ளலாம். அவரிடம் உங்கள் உளவளத்துணையை விரைவில் பெற்றுக்கொள்வீர்கள்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    அது மட்டுமல்ல ஜி தொலைக்காட்சிக்கு முன்னாலும் தேவை. அவசியமும் கூட. நல்லெண்ன சிந்தனையுள்ள புலம்பெயர் உறவுகளின் உடனடிக் கடமை.

    Reply
  • palli
    palli

    ஜெயசுதன் உங்களுடைய பின்னோட்டம் மிகவும் அருமை. தொடருங்கள். ஆனாலும் தங்களது பின்னோட்டத்துக்கு ஏதாவது பல்லியும் எழுத வேண்டும். நேரம் போதாமையால் சாமத்து பல்லி தொடரும். இருப்பினும் தங்களுடைய ஏக்கத்தை சற்றேனும் குறைக்க சில வரிகள்.

    //இப்போது தான் 4வருடங்கள் கழிந்து 8மாதம் பதவி ஏற்ற பின்னர் பிள்ளையானுக்கே சிவபெருமான் சிவராத்திரி காட்டியிருக்கிறார்//
    குட்டிபுலி குழந்தயானுக்கே நாலுவருடம் ஆயின் (ஜெயசுதன் கணக்குதான்) வயோதிப புலி பொட்டர்; பிரபா, கபிலன், நடேசர், இளம் வளுதி;
    இவர்களிடம் சிவராத்திரிக்கு சிவ சிவபெருமான் வர எம்முட்டு காலம் சாமியோ. அப்ப மகிந்தா சொலுவதுபோல் புலி திருந்தாது என்பது உன்மையா. தேவையில்லாமல் எழுதினால் சேதாரம் எழுதுபவர்களுக்கல்ல புலிகளுக்கே.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    /நேற்றைய குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 28பேர் பலியானதாக ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டது. இதில் 20 ஸ்ரீலங்கா இராணுவத்தினரும் 8 பொதுமக்களும் இறந்ததாக சொல்லப்பட்டது.சரி அப்படி தான் 20 இராணுவத்தினர் இறந்து இருந்தால் ஏன் ஒருவரை சோதனை செய்ய இவ்வளவு பேர்? , எப்படி குப்பியை கழுத்தில் வைத்தபடி பேட்டி எடுப்பார்கள்? /-jeyasuthan

    ஏனுங்க உங்க அறியாமைகளை இப்படி வெளிக்காட்டுறீங்க. ஒரு தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடிக்க வைத்தால் அது என்ன 10 செ.மீற்றர் சுற்றளவையா பாதிப்பிற்குள்ளாக்கும். ஐ.நா அமைப்பு, செஞ்சிலுவைச்சங்கம் போன்றன காயப்பட்ட மக்களை மீட்கச் சென்றபோது புலிகள் மக்களை வெளியேற விடாது தடுத்தார்கள். இதனை ஐ.நா, செஞ்சிலுவைச்சங்கம் அறிக்கையாக வெளிக் கொணர்ந்ததும், புலிகள் பின்பு 226 பேரை வெளியேற அனுமதித்து அவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதையும் கூட அரசாங்கத்தின் சதிச்செயல் என்பீர்கள் போலுள்ளது.

    மேலும் நீங்கள் அல்ஜசீரா தொலைக்காட்சி பார்த்தரதில்லையா?? அதில் சமீபத்தில் வெளியான பெண்புலிகளின் பேட்டியின் போது அவர்கள் கழுத்தில் கொழுவியிருந்த சயனைட் குப்பிகளை வெளியே எடுத்துக் காட்டியவாறே பேட்டியளித்திருந்தனர். ஒன்று மட்டும் நன்கு புரிகின்றது. உங்களுக்குள்ள அடிப்படைப் பிரைச்சினையே நீங்கள் புலிகள் ஊடகங்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் ஊடகங்களை மட்டுமே பார்க்கின்றீர்கள். அதனால் உலகில் என்ன நடக்கின்றதென்ற உண்மைகளை உங்களால் உணரவோ, புரியவோ முடியவில்லை. எனிமேலாவது ஏனைய ஊடகங்களையும் பார்த்து உண்மைகளைப் புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.

    Reply
  • mutugan
    mutugan

    நேரடியாக ஜ.சி.ஆர்.சியும், ஜ.நாவும் சொன்னால் தான் உலகம்நம்ப தலைப்பட்டது.
    ஓமோம்.அப்ப கொத்தணிக் குண்டு….?

    Reply
  • mutugan
    mutugan

    இவ்வளவு சொல்லுறீகளே ஜெயசுதன் அதே இனவாதத்திற்கெதிராக எழுச்சியடைந்த ஒப்பற்ற மனிதர்களையெல்லாம் கொன்று புசித்து இன்றைக்கு நட்டாற்றில் விட்டு ஓடிப் போனவனைப் பற்றி இன்னுமா விளங்கவில்லை. யார் அழுதாலும் கதறினாலும் வன்னி மக்கள் பெரும்பகுதி அழியப் போவது உம்மைப் போன்ற புலிக்கு காவடி எடுத்தவர்களால் தான். அந்தப் பாவங்களை மனித குலம் வாழும் வரை நீரும் உமது தலைவனும் சுமந்தேயாக வேண்டும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இன்னும் புலிப்புராணம் பாடிக் கொண்டிருப்போரே எங்கள் மக்களுக்காக குரல் கொடுக்க எந்த புத்திமான்களை புலிகள் விட்டு வைத்தார்கள். இன்று உலக நாடுகளை எவ்விதத்தில் திரும்ப வைக்கலாமென்ற உண்மை தெரிந்த பலரை அன்றே புலிகள் போட்டுத் தள்ளி விட்டார்கள். மீதமிருந்தோரை மிரட்டியே நாட்டை விட்டே வெளியேற்றினார்கள். இதனால் இன்று எமது நிலையை நீங்கள் யாராவது எண்ணிப் பார்த்தீர்களா?? இன்று எமக்காக குரல் கொடுக்க தமிழ்நாட்டிலுள்ள எமது சரித்திரத்தையே சரியாக அறியாத சிலரிடம் கையேந்த வேணடிய சூழ்நிலை. இவர்களால் எமக்கு விடிவைப் பெற்றுத் தர முடியுமா??

    Reply
  • ramesh
    ramesh

    /பசி வந்திட பத்தும் பறந்து போகும் எனச்சொன்னது பலித்துவிட்டது. விடுதலையை விட உயிர்வாழ்தலும் உயிரும் மக்களுக்கு தேவைப்படுகிறது. அதுதான் நடப்பது நடக்கட்டும் என்று மக்கள் வெளீயேறத் தொடங்கி விட்டனர்./
    ஜெயசுதன் உண்மை நிலையை எழுதியமைக்கு நன்றி. இப்ப இருக்கும் நிலை கனகாலம் தொடருமாயின் இருப்பிலிருக்கும் உணவு முடிய புலிகளுக்கும் பசிக்கும் தானே. அந்த நேரம் அவையும் வெளியேறத் தொடங்குவினம்.பிறகு பேச்சுவார்த்தையை தொடங்கலாம்.

    Reply
  • mutugan
    mutugan

    தீபத்தின் திண்ணையில் நயினார் மென்று விழுங்கி என்ன சொல்ல வருகிறார் என்றே தெரியவில்லை. அரசியல் கனக்க என்னத்தை கதைக்கிறது என்கிறார். வெள்ளைக்காரனுக்கு மடடுமா மனித உரிமை என்கிறார். யுத்தம் வேறு அரசியல் வேறு என்கிறார். மக்களின் படுகொலைகளை அரசியலாக்கப்படாதாம்.யுத்தமே அரசியலின் விளைவு என்ற அரிச்சுவடியே அவருக்கு புரியவில்லை.

    வன்னியில் பொதுமக்களுக்கு குண்டு வைத்தது புலியில்லை எனச் சொல்ல படாதபாடுபடுகிறார்.உலக நாடுகள் பார்த்து கொண்டிருக்கிறதாம். உலக நாடுகள் ஒப்பந்தங்களை கொண்டு வந்தபோதும் பேச்சு வார்த்தை சமாதானம் என முண்டியடித்து கொண்டு நின்றபோதும் ஆகாயத்தையா அண்ணாந்து பார்த்து இந்த ஆள் அளந்து கொண்டிருந்தார். ஏன் நயினார் தமிழ் மக்களுக்கு கிடைத்த பொன்னான சந்தர்ப்பங்களை சொல்லி எடுத்துக் காட்டாமல் ……?

    Reply
  • accu
    accu

    நாலு நாளைக்கு முதல்த்தான் சமாதானம், ஒற்றுமை, அரசியல்தீர்வு பற்றிக் கதைத்தவர்களை எல்லாம் ….திட்டிய எங்கள் புலன் பெயர் கூட்டங்கள் இப்ப என்னடாவென்றால் சமாதானம், யுத்தநிறுத்தம், பேச்சுவார்த்தை, அரசியல்தீர்வு என அந்தர்பல்டி அடிச்சாச்சு. வருசம்தோறும் மயானம் கட்டி கூத்தாடிய சாத்தான்களெல்லாம் இப்போ வீதிக்கு வந்தாச்சு வேதமோத. என்னடா புதுமையாய்கிடக்கு என்றுபார்த்தால் எல்லாம் மகிந்தாவின் வேப்பிலை அடி மகிமை. அங்கு சுடலைமாடன், காட்டேரி எல்லாம் கதிகலங்கி ஓட இஙுகு அவர்களை கப்பாற்ற தெருக்கூத்து தொடங்கியாச்சு. இது எதுவுமே மக்களை காப்பாற்றவல்ல. அங்கு சிதறிய குழந்தைகளின் படங்கள்தான் இந்த வியாபாரிகளின் விளம்பரங்கள். தாம் வாழும் நாட்டின் பிரதமரையே தமிழ்ப் பேப்பரில் பார்த்துத்தான் அறியும் எம்மில் பலருக்கு எதை எப்படி விளங்க வைப்பது?

    Reply
  • ashroffali
    ashroffali

    //பாதுகாப்பு வலயத்தினுள் வந்தவர்கள் வடிகட்டி காணாமல் போகின்றனர். புலிகளின் குடியிருப்பு என்ற போர்வையில் வெளிநாட்டின் தொடர்பு கொண்டவர்களின் வசதியான வீடுகளும் தாக்கப்படுகின்றன. கொல்லப்பட்ட நபர்கள் ஆங்காங்கே புதைக்கப்படுகின்றனர். காயப்பட்டவர்கள் தனித்தே வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர். அரசின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வெள்ளைக் கொடியுடன் வருபவர்களையே அரசபடை சுட்டிரு//

    நண்பர் நாதன் புலிக்கு வக்காலத்து வாங்குவதற்காக கண்டபடி உளறிக் கொட்டி அசடு வழியக் கூடாது. அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகை தரும் பொதுமக்களின் எண்ணிக்கையை அரசாங்கம் நாளாந்தம் அறிவித்துக் கொண்டிருக்கின்றது. அதன் பின் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளின் கண்காணிப்பில் தான் நலன்புரி நிலையங்கள் பராமரிக்கப்படுகின்றன. புலிகளின் பிடியிலிருந்து தப்பி வருகின்றவர்கள் தனித்தனியாக பதிவு செய்யப்படுகின்றனர்.இவ்வளவுக்குப் பின்னால் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்படும் மக்கள் காணாமல் போவதான புலிகளின் பொய்ப் பிரச்சாரத்தை நீங்களும் நம்பிக் கொண்டிருந்தால் பரிதாபப்படுவது தவிர வேறு வழியில்லை. அத்தோடு வாதத் திறமை இருப்பதற்காக தர்க்கம் செய்யப் போனால் அவமானப்பட்டு தலைகுனியத்தான் நேரிடும். இனியாவது உண்மை நிலையறிந்து வாதங்களை முன்வையுங்கள்.

    ஜெயசுதன் //என்னவெனில் குண்டு வெடிப்;பையடுத்து பயத்தில் இரணுவம் சுட்டதிலேயே பெருமளவானோர் இறந்ததாக அச்சம்பவ இடத்திலிருந்து தப்பிய சிலர் ழூலமாக தெரியவருகின்றது//

    புலிகளின் பிடியிலிருந்து தப்பி வரும் பொதுமக்களை வரவேற்கும் இராணுவத்தினர் நிராயுதபாணியாக இருக்கையில் இப்படியும் ஒரு பொய்ப்பிரச்சாரம் தேவையா? புலிக்கு வக்காலத்து வாங்குவதற்காக மக்களின் படுகொலையை நியாயப்படுத்த முற்பட வேண்டாம் தோழரே….

    //சரி அப்படி தான் 20 இராணுவத்தினர் இறந்து இருந்தால் ஏன் ஒருவரை சோதனை செய்ய இவ்வளவு பேர்?//

    புலியின் பிடியிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் தப்பி வருகையில் இருபது அல்ல அதற்கும் மேலான இராணுவத்தினர் குறுகிய இடப்பரப்பிற்குள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.அந்த வகையில் தற்கொலையாளி அதி சக்தி வாய்ந்த குண்டை வெடிக்க வைத்த காரணத்தால் தான் சுற்றியிருந்த பலரும் கொல்லப்பட்டார்கள். மற்றபடி ஒருவரை சோதனை செய்ய இருபது பேர் என்று முட்டாள்தனமாக கற்பிதம் செய்து கொள்ள வேண்டாம்.

    //ஒரு மாதத்துக்கு முன் குப்பி தகடு நெஞ்சில் துப்பாக்கி ரவை தாங்கியுடன் மூவரை வைத்து சரணடைந்ததாக பிரச்சாரம் செய்த சிறிலங்கா அரசின் பிரச்சாரத்தை வவுனியாநீதி மன்றமும் அவர்களின் வெளிநாட்டிலுள்ள உறவினர்களும் பார்த்து அதிர்ந்த போது அரசின் இத்தகைய பிரச்சாரங்கள் பிசுபிசுத்தன. எப்படி குப்பியை கழுத்தில் வைத்தபடி பேட்டி எடுப்பார்கள்? புலி எண்டு காட்ட எத்தனை நாடகங்கள்//

    குறித்த புலி உறுப்பினர்கள் உயிர் பிழைக்கும் ஆசையில் சரணடைந்தவர்கள். அவர்களிடம் குப்பியை மட்டுமல்ல அதற்கு மேல் எதை வைத்திருக்க அனுமதித்தாலும் அவர்கள் தற்கொலை செய்து கொள்ளப் போவதோ அல்லது மற்றவர்களைப் படுகொலை செய்யப் போவதோ இல்லை. அதனாற்தான் அப்படி நடந்தது. அது சரி வவுனியா நீதிமன்றம் எப்போது எப்படி அதிர்ந்தது? யார் தகவல் தெரிவித்தார்கள் என்பதையும் நண்பர் கொஞ்சம் அறியத் தந்தால் நன்றாக இருக்கும்.

    //இப்போது பத்தாயிரத்தையும் தாண்டி மக்கள் வந்தனர்? புலிகள் தங்களது முகாம்களையோ தம்து பொருனுகளையோ உடைக்காமல் எரிக்காமல் அந்தப்படி விட்டு விட்டு போகும் போது அதுக்கே நேரமில்லாமல் ஓடும் போது எப்படி பொதுமக்களை விடாமல் வைத்திருக்க சென்றி போட்டிருக்க முடியும்? வன்னியில் இப்போது வெளியேறுபவர்கள் கூட வெளியேற நினைக்கவில்லை. அரசாங்கமே எல்லோரையும் கொல்லப்போவதாக அறிவித்த பின்னர் யார்தான் தொடர்ந்தும் இருப்பார்கள்//

    புலிகள் பொது மக்களை தப்பி வர அனுமதிப்பார்களாக இருந்தால் அந்த மக்கள் கடற் பயணம் மற்றும் ஆபத்தான வழிகளில் தப்பி வர வேண்டிய தேவையிருக்காதே..அத்துடன் பொதுமக்கள் வெளியேற புலிகள் தடை விதிக்காத நிலையில் அந்த மக்கள் அரசாங்கத்துக்குப் பயந்து வெளியேறுவதாக இருந்தால் ஒரே நாளில் அனைத்து மக்களும் வெளியேறி விடுவார்களே? இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு தப்பி வரவேண்டிய தேவையிருக்காதே?

    Reply
  • palli
    palli

    ஜெயசுதன்;.. // அரசாங்கம் ஒவ்வொருநாளும் சொல்லும் பொய்களுக்கு உங்கள் ஒருவர் தரப்பிலிருந்தும் பதில் இல்லை//
    பதில் பலர் சொல்லியுள்ளனர் ஆனால் உமக்கு சாதகமான பதில் இல்லை. அத்துடன் சிறிதேனும் புரிந்துனர்வு தேவை.
    //ஆராய்சி செய்வதில் அதிகம்நேரம் செலவிடுகிறீர்கள்//
    எங்களால் முடியுது செய்கிறோம். எல்லோரும் தங்களை போல் பரபரப்பை படிக்க முடியுமா?.

    //ஒரு மாதத்துக்கு முன் குப்பி, தகடு,நெஞ்சில் துப்பாக்கி ரவை தாங்கியுடன் மூவரை வைத்து சரணடைந்ததாக பிரச்சாரம் செய்த சிறிலங்கா அரசின் பிரச்சாரத்தை வவுனியா நீதிமன்றமும், அவர்களின் வெளிநாட்டிலுள்ள உறவினர்களும் பார்த்து அதிர்ந்த போது//
    அதென்ன வெளிநாட்டு உறவுகள்? ஏன் உள்நாட்டு உறவுகளுக்கு உன்மைதெரிந்து விட்டாதா? அந்த வெளிநாட்டு உறவில் தாங்களும் அடக்கமோ? வவுனியா நீதி மன்றமா? சரியாக பார்க்கவும். வன்னி நீதிமன்றம்தான் அதிர்ச்சியில் மூழ்கியிருக்கும்.

    //புலி எண்டு காட்ட எத்தனை நாடகங்கள்//
    அடடா அனுபவம் பேசுகிறதோ. இப்படிதான் 16வயது ராணுவம் எம்மிடம் உள்ளது என புலம்பெயர் புலிகளை குஸிபடுத்தியது. இப்படியெல்லாம் உள்வீட்டு ரகசியங்களை சொல்லி பொட்டரின் கோபத்துக்கு ஆளாக வேண்டுமா?
    //நீங்கள் எல்லாம் சிறிலங்கா அரசாங்கம் ஒத்துக்கொண்டால் தான் நம்புவீர்கள் எனத்தெரியும்//
    எங்களை நம்புவது இருக்கட்டும். புலி தலை எங்கே என்பதை முதல் தேடுங்கள்.

    //புலிகள் ஒருவரையும் விடவில்லையென்றால் எப்படி ஆரம்பத்தில் ஆயிரக்கணக்கானவர்களும், இப்போது பத்தாயிரத்தையும் தாண்டி மக்கள் வந்தனர்//
    ஆக பத்தாயிரத்துக்கு மேல் மக்கள் புலிகளை அம்போ என விட்டுவிட்டு வந்ததாக அரசு சொல்லும் செய்தியை ஜெயசுதனும் எம்முடன் இனைந்து ஏற்றுகொள்கிறார்.

    //புலி எதிர்ப்புக்கு வெளியே வந்து மக்கள் நலன் பற்றி சிந்தியுங்கள்//
    அந்த சிந்தனைதான் புலி தமிழரைவிட்டு ஒதுங்க வேண்டுமென நாம் கத்துகிறோம். உங்களை போல் மக்களைபற்றி கவலையில்லை. புலி பாய்ந்தால்போதுமென நாமும் சிந்தித்தால்….. போங்க ஜெயசுதன் வெக்கமாய் இருக்கு..
    //விடுதலையை விட உயிர்வாழதலும், உயிரும் மக்களுக்கு தேவைப்படுகிறது. அதுதான் நடப்பது நடக்கட்டும் என்று மக்கள் வெளீயேறத்தொடங்கி விட்டனர்//
    நன்றி உன்மையை ஒத்துகொண்டதுக்கு. தொடங்கிய மக்கள் தொடர வேண்டும் என்பதே பல்லியின் அவா.

    //புலிகள் தங்களது முகாம்களையோ, தம்து பொருDகளையோ, உடைக்காமல், எரிக்காமல், அந்தப்படி விட்டு விட்டு போகும் போது அதுக்கே நேரமில்லாமல் ஓடும் போது எப்படி பொதுமக்களை // மூன்று மாதத்துக்கு மேலாக நடக்கும் சண்டையில் தடையங்களை கூட அழிக்க முடியாத ராணுவ பயிற்ச்சியை தலவரின் மேற்பார்வையில் படித்த வித்தையை எங்குபோய் சொல்லிஅழ. மக்களிடமாவது சொல்லிப்போட்டு ஒடியிருக்கலாம். வரும் போது எமது(புலி) தடயங்களை அழித்துவிட்டு வரும்படி.

    //எல்லோரும் பொதுமக்களில்லை. எல்லோரும் பயங்கரவாதிகள், பிரபாகரனை காப்பாற்றுவதற்காக இருப்பவர்கள், பங்கர் வெட்டிக்கொடுத்தவர்கள் என சொன்ன போது நீங்கள் எல்லோரும் மப்பில் இருந்தீர்களா? //
    கோபம் ..வரட்டும் வரட்டும். அப்படியெல்லாம் உங்களை மாதிரி எல்லோரையும் பெரும்தன்மையாய் நீனைக்கலாமா? டெலோவை புலிகள் அடிக்கும் (அழிக்கும்) போது மக்களை வாய் திறக்க கூடாதென சொன்னதால் இன்றுவரை வாய் மூடிகளாகவே மக்களும் நாமும் இருக்கிறோம். 2009 மாவீரர் உரையில் மக்களெல்லம் வாய்திறந்து கருத்து சொல்லலாம் என ஒருவரி சேர்த்து எழுதிகொடுக்க சொல்லுங்கோ. அதைவிட்டு இப்படியெல்லாம் தமாஸ் பண்ணுவது நல்லாவா இருக்கு.
    தொடரும் பல்லி.

    Reply
  • PLO
    PLO

    இன்று நோர்வேயிலிருந்து வெளியாகும் ஒரு பத்திரிகைத்தகவலின்படி புலிகளால் பொதுமக்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் அதை கண்ணால் கண்ட சாட்சியாக ஒரு கத்தோலிக்க அருட்சகோதரியின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது (மேரி கொலோஸ்ரிகா (74) )

    ஆமி வெருட்டி அப்படி சொல்லவைத்ததாக ஜெயசுதன் சொனாலும் சொல்லுவார்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    தோழி ஜெனிற்ரா! குறுகிய வார்த்தைகளுக்கும் மாபெரும் சக்தியுண்டு என்பதை இரண்டு பின்னோட்டம் மூலமாக நிரூபித்து விட்டிருக்கிறீர்கள். எமது மக்கள் எல்லா வகையான துன்பங்களையும் அனுபவித்துவிட்டார்கள். இதற்கு மேலும் துன்பம் உண்டா? எண்னத் தோன்றுகிறது. யுத்தத்தில் நீண்டகாலமாக சிக்கியுள்ள மக்களை மீட்டாகவேண்டும். யுத்தம் நிறுத்தியாக வேண்டுமென்றால் புலிகளை முற்றுமுழுதாக அழித்தாகவேண்டும் என்பது தான் எனது ஆணித்தரமான கருத்து. உங்களுக்கு மாறுபட்ட கருத்திருக்கலாம். எது எப்படியானாலும் யுத்தம் நிறுத்தியாக வேண்டும். தயவுசெய்து இப்படியான கருத்துகளம் பயன்யுள்ளது என கருதி அடிக்கடி கலந்துகொள்ளுங்கள் “கருத்துக்கள் மக்களைப் பற்றிக்கொண்டால் அது மாபெரும் சக்கியாக உருவெடுக்கும்”
    -கால்மாக்ஸ்-

    Reply
  • mutugan
    mutugan

    மேரி கொலோஸ்ரிகா (74) )ற்கு இனி யார் பாதுகாப்பு? உண்மை சொன்னவர் உயிர் வாழ முடியாதே?

    Reply
  • Jenita
    Jenita

    சந்திரன் ராஜா அவர்களுக்கு வணக்கம். மற்றவர் கருத்தை மதிக்கும் உங்கள் நற்குணத்துக்கு நன்றி!

    ”கொடியவர்கள் இழைக்கும் தீங்குகளிலும் பார்க்க, அவற்றை நல்ல மனிதர்கள் என்போர் அதிர்ச்சியூட்டும் அளவிற்கு மெளனமாய் சகித்துக் கொண்டிருப்பது பற்றியே நாம் இந்தத் தலைமுறையில் வருத்தமுறவேண்டும்” என்ற மார்டின் லூதர் கிங் அவர்களின் வார்த்தைகளும்,
    உன்னுடைய கருத்துக்களின் ஒன்றுடனோடு கூட எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அக்கருத்துக்களைச் சொல்ல உனக்கு இருக்கும் உரிமையை என்னுடைய உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவேன்” என்ற பிரான்ஸ் நாட்டு வால்ட்டயரின் வார்த்தைகளையும் அநேகரைப்போல் நானும் மிக மதிப்பவள். அதேவேளை இன்று நமது நாட்டை எடுத்துக் கொண்டாலுமோ, அல்லது நமது புலம்பெயர் சமூகத்தை எடுத்துக் கொண்டாலுமோ இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் அர்த்தமற்றே போய் விட்ட அவல நிலை. மற்றவர்களின் கருத்தை கேட்க மறுப்பது மட்டுமல்ல, நிராகரிப்பது மட்டுமல்ல மிகவும் வக்கிரத்தோடு அந்நியப்படுத்தி எதிரியாக்குவது மலிந்த சூழல் நம்முடையது.
    நன்றி
    ஜெனிற்ரா-

    Reply
  • padamman
    padamman

    “மற்றவர்களின் கருத்தை கேட்க மறுப்பது மட்டுமல்லை நிராகரிப்பது மட்டுமல்ல மிகவும் வக்கிரத்தோடு அந்நியப்படுத்தி எதிரியாக்குவது”
    அதுமட்டுமல்ல துரோகியாக்குவது சிங்களவனுக்கு பிறந்தவன் மற்றும் என்று என்ன சொல்லமுடியுமோ அத்தனையும் சொல்லி திட்டுவது நேற்று இரவு ஜீரிவியில் கண்ணிர் துளிர்கள் என்ற நிகழ்சியில் ஒருவர் தனது குடும்பத்தில் நான்குபேர் அன்மையில் இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டதகவும் அந்த நேரத்தில் அவர்களை புலிகள் தடுத்து வைத்திருந்ததால் தான் கொல்லப்பட்டதாக கூறினார் அவர்களை வெளியேர விட்டுருந்தால் இன்று அவர்கள் இருந்திருப்பார்கள் என்று அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் இதன்பின் வந்தவர்கள் மூவர் சொன்ன வார்த்தைதான் மேல் கூறியவை இதைகேட்ட தொகுப்பளர் புன்சிரிப்புடன் அவர்களுடன் உரையாடிணார் இப்படிபட்ட நிகழ்ச்சி “கண்ணிர் துளிர்கள்” பொது உடகத்தில் எப்படி கதைப்பது என்று கூடத்தெரியத புலி ஆதரவளர்கள் இவர்கள்.

    Reply
  • Thaksan
    Thaksan

    ஜெனிற்ரா போன்றோரின் கருத்துக்கள் புலம்பெயர்ந்தோர் மத்தியிலும் மனிதம் வாழ்கிறது என்பதை உணர்த்தி நிற்கிறது. சரியோ? பிழையோ? என்னுள் புலம்பெயர்தோர் பற்றிய கருத்தில் அவர்கள் சுயநலமிகள் என்பதே எப்போதும் மேலோங்கியிருந்தது. ஆனால் தற்போது இடம்பெயர்ந்து வவுனியா வரும் மக்களை நேரில் சந்திக்கும்போது அவர்கள் பட்ட துன்பங்களை கேட்கும்போது புலம்பெயர்ந்தோரிலும் இத்தகைய துன்பங்களை அனுபவித்து உயிருக்காக வெளியேறியவர்களின் நிர்கதியை புரிந்துகொள்ள முடிகிறது. எவ்வாறாயினும் புலம்பெயர்ந்தோரில் உண்மையிலேயே இங்கு வாழ்வு சாத்தியமில்லை என்ற நிலையில் சென்றவர்கள் ஒரு 10 வீதம் கூட இருப்பார்களா என்பது சந்தேகமே.

    நான் அறிந்தவரையில் கனகரத்தினம்> தங்கேஸ்வரி தவிர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும்(புலிப் பினாமி) தங்கள் உறவுகளை பதவிகளை பயன்படுத்தியே வெளிநாடுகளில் தஞ்சம் புக வைத்துள்ளார்கள். சுரேஸ் பிரேமச்சந்திரன் கனடாவில் உள்ள தனது மகளுக்கு இந்திய மருத்துவ பல்கலைக் கழகமொன்றில் மருத்தவ பட்டப்படிப்பு பெற அண்மையில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராம்தாஸின் சிபாரிசுடன் இடம் பிடித்துள்ளார் என்ற தகவலை அவரது உறவினர் ஊடாக அறிந்தபோது “புரட்சி” எந்தளவுக்கு ஓங்கியிருக்கு என்று வியப்பாயிருந்தது. தே.தலைவரும் தனது பிள்ளைகளுக்கு ரணிலின் ஆட்சியில் சிறீலங்கா கடவுச்சீட்டு பெற்று ஜரோப்பாவிற்கு அனுப்பி வைத்துவிட்டு இங்க பிள்ளை பிடித்து போராட்டம்(?) நடத்தி விடுதலை பெற்றுத்தர தலைகீழாய் படாதபாடு பட்டார். பாவம் விட்டாலும் பழி விடாதாம். தலைவரை வன்னிச் சனம் தேடுகிறது. தலைவா! கடைசி வந்தும் ஆமியிட்ட பிடிபட்டாலும் வன்னிச் சனத்திட்ட பிடிபட்டுவிடாதையும்……………… . உம்மைப் பிடிக்க இனி பொட்டராலும் முடியாது…

    Reply
  • Nathan
    Nathan

    நண்பர் நாதன் புலிக்கு வக்காலத்து வாங்குவதற்காக கண்டபடி உளறிக் கொட்டி அசடு வழியக் கூடாது. அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகை தரும் பொதுமக்களின் எண்ணிக்கையை .. …ashroffali on February 12, 2009 7:48 am

    புலிமுத்திரை எனக்கு குத்துவதால் எவ்வித நலனும் எனக்கு ஏற்படப்போதில்லை. நான் எழுதியவை எனது உறவினர்களுக்கு என்ற நடந்தது நடந்து கொண்டிருக்கின்றது என்பது பற்றியே. உங்களுக்கு தெரிந்தது போல பாசீசம் மென்மையானது எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு ஒரு வகை பாசீசத்தைப் பற்றித்தான் தெரிகின்றது. ஆனால் நமக்குத் தெரிவது என்னவோ அனைத்துவகை பாசீசத்தை அறிய முடிகின்றது.

    அனைத்து வைக பாசீசத்தை எதிர்ப்பதும் மக்களின் நலன் கொண்டு என்ன கோரிக்கை வைக்கப்பட வேண்டும் என்பது பற்றிய கருத்துக்களைத் தான் கொடுக்கப்படுகின்றது. நாம் பாசீத்தை ஏற்றுக் கொள்ளும் வக்கிரசிந்தனை கொண்டவர்கள் அல்ல.

    Reply
  • damilan
    damilan

    புலிகள் தமது தலைமையைக் காப்பாற்ற எதையும் செய்வார்கள் செய்ய முதலே எல்லாவற்றையும் திட்டமிட்டே செய்வார்கள். குறித்த தினத்தில் தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதன் நோக்கம்

    ராணுவத்தை கொல்வதுடன் தமிழ் மக்களையும் கொலை செய்தமையானது ராணுவப் பகுதிக்கு போகும் பொது மக்களை தாம் கொல்ல தயங்கப் போவதில்லை என்ற செய்தியை சொல்வதும் மற்றைய நாள் சுட்டதன் மூலம் தமது பகுதியில் உள்ள மக்களை போக வேண்டாம் என்று வாயால் சொல்ல முடியாது. ஆகவே தப்பிப் போன மக்களை ராணுவம் சுட்டுக் கொல்கிறது என்று பிரசாரப்படுத்துவதுடன் தப்பிப் போகும் மக்களை ராணுவம் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதும் காரணம்.

    உலகத்தில் எந்த ஒரு இயக்கமும் தமது சொந்த இனத்தை தற்கொலை தாக்குதல் மூலம் கொண்டதாக வரலாறு இருக்காது.இந்தப் பெருமையை புலிகள் வரலாற்றில் பதிவு செய்துள்ளனர்.

    வன்னியில் இருந்து வந்த மக்களை நேரடியாகப் பார்க்கும் போது அவர்களின் தோற்றமும் முகமும் உடைகளும் பரிதாபத்திற்குறியது பார்ப்பதற்கு 30 வருடத்திற்கு முந்தியுள்ளவர்கள் போல் உள்ளனர். மனம் குமுறுகிறது வேதனை அளிக்கிறது கண்ணீர் வருகிறது. என் கேள்வி இதுதான் இதற்குக் காரணம் இலங்கை அரசும் ராணுவமும் மட்டுமா ? புலிகளுக்கு இந்த மக்களின் துயரத்தில் பங்கு இல்லையா ?

    மக்களின் மீது அக்கறை உள்ள இயக்கமாக இருந்திருந்தால் மக்களை ராணுவத்திடம் இருந்த காக்க மக்களுக்கு முன் வந்து தாம் வீரத்தை காட்டி இருக்க வேண்டும். மக்களோடு வந்தா மக்களையும் கொல்வது ?

    புலிகளை மக்கள் நம்பினார்கள் அதனால்தான் அவர்களின் பின்னாலே வந்தார்கள். ஆனால் மக்களை புலிகள் எப்போதும் நம்பவில்லை. அதற்கு சாட்சி பாஸ் முறை ஆள்பிணை என்பன புலிகள் தம்மை நம்பியவர்களுக்கு எல்லாம் கொடுத்த பரிசு என்ன… ? கொலை..கொலை ..கொலை

    Reply